EPISODE 1
அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ…
ஆடிரதம் அழைக்குது…
Aய்ய்…
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…
ஆலிலை தவிக்குது…
ஓஓஹோ…
முத்தம் நூறு கேட்டு வாங்கவே…
நாணம் என்னை தடுக்குது…
அட்ரா சக்க…
பித்தம் ஏறி தூண்டில் மீனென…
நூலிடை துடிக்குது…
இது எப்படி இருக்கு…
சுகமான கட்டில் நாடகம்…
நீயும் நானும் ஆடலாம்…
ஆஹா…
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்…
வெட்கமின்றி கூடலாம்…
அப்டி போடு…
உன்னை பார்த்து நான்…
சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா…
கட்டி கொள்ளு ஜோரா…
அடிக்குது குளிரு…
ஆ அது செரி… அது செரி…
துடிக்குது தளிரு…
அது ரொம்ப செரி… ரொம்ப செரி…
என்று அந்த அமைதியான டெல்லி சாலையில் அவசரகதியில் தன் காரை ஹோட்டலுக்கு செலுத்திக்கொண்டு இருந்த கம்ரத்தமனின் காரில் ஓடிக்கொண்டு இருந்தது .
முகமெல்லாம் வியர்த்து வழிந்தது அந்த பனி நிறைந்த குளிர்ந்த இரவில் மான் சிங் சாலையில் ஒரு பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலுக்கு விரைந்துகொண்டு இருந்தான்.
“ச்சே…. என்ன டா இது இந்த மாதிரி நேரத்துல இப்படி ஒரு பாட்டு ஓடணுமா…. ” என்று நொந்து கொண்டு காரில் ஓடிய FM ஐ அனைத்துவிட்டு நிமிர்ந்தவன். தன் கார் முன்னாள் யாரோ வேகமாக ஓடிவருவதை பார்த்ததும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தவும்.
அது க்ரீச்ச்ச்….. என்று அந்த அமைதியான இரவில் பெருத்த சத்தத்தோடு நின்றது . அவன் கார் சரியாக நிற்கவும் ஓடி வந்த பெண் மீது கார் மோதிவிட்டது. மோதிவிட்டது என்று சொல்வதை விட அவன் கார் மீது வந்து அந்த பெண் விழுந்துவிட்டால் என்றே சொல்ல வேண்டும் .
“அம்மாஆஆ….” என்று கத்திக்கொண்டு அந்த பெண் கீழே விழ…
கார் கதவை திறந்து கொண்டு அவசரமாக வெளியே வந்த கம்ரத்தமன் கார் முன்பு மல்லாந்து விழுந்து கிடந்த பெண்ணிற்க்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று வந்து பார்த்தான்.
மல்லாந்து கிடந்தவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான். அவள் உடலில் அடிபட்டத்திற்கான அந்த சுவடும் இல்லை. அதை பார்த்ததும் தான் அப்பாடா என்று இருந்தது அவனுக்கு.
“
“ஐஸே க்யா தேக்ஹ் ரஹீ ஹோ சார் … கர்ப்பய மடட் கரேன் …”[என்ன சார் அப்படி பாக்குறீங்க… ஹெல்ப் பண்ணுங்க] என்று தரையில் விழுந்துகிடந்தவள் ஹிந்தியில் பேசி அவன் முன் கையை நீட்டினாள் .
கம்ரத்தமனுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி புரியும் என்பதால் அவள் பேசிய வார்த்தையில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் புரிந்தது போல இருக்க… அளவுக்கு அதிகமான போதையில் இருந்தவன் கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டு கீழே கிடந்த பெண் கையை நீட்டி பேசுவதை பார்த்து அதைவைத்து புரிந்து கொண்டவன் அவள் கையை பிடித்து மேலே தூங்கிவிட்டான் .
அவள் எழுந்து நிற்க போக… அந்த பெண்ணால் சரியாக காலை ஊன்றி நிற்க முடியவில்லை. முட்டியில் அவள் வந்து காரில் மோதியதில் முட்டியில் அடிபட்டிருக்க வேண்டும் .
“ம்மா…” என்று அவள் முட்டியை பிடித்துக்கொண்டு அவன் காரின் மீது நிற்க முடியாமல் சாய்ந்துகொண்டாள்.
“ஹே… என்ன ஆச்சு… ச்சே… சே… இந்த நேரத்தில் ஹிந்தியும் வர மாட்டேங்குது… ” என்று தலையில் கட்டிக்கொண்டவன் “க்யா ச்சல் ரஹா ஹை…” என்று சரியாக அந்த பெண்ணிடம் கேட்டு வைத்தான்.
“சார் நீங்க தமிழா!!! ” என்று சந்தோசமானவள். “நல்ல வேலை இந்த நேரத்தில் ஒரு தமிழனை பார்த்ததில் சந்தோசப்படறேன் ” என்றாள்.
“ஆமா இப்போ அது ரொம்ப முக்கியம், வேணும்னா நீயும் நானும் தமிழ் வாழ்கன்னு கொடி பிடிச்சு கோசம் போடலாமா?” என்று கடுப்பானவன் .
“ஏய்!! உனக்கு அறிவுன்னு எதாவது இருக்கா… இப்படி தான் வேகமா வந்து என் கார் மேல மோதுவியா? நான் மட்டும் உன்னை பார்த்ததும் பிரேக் போடாம இருந்திருந்தேன்ன்னு வை… இந்த நேரம் என் கார் வந்த ஸ்பீடுக்கு நேரா பறந்துபோய் அந்த எமதர்மனுக்கு வேலை இல்லாம அவன் முன்னாடி போய் விழுந்து இருப்ப தெரியுமா?” என்றான் கடுப்பாக.
“சார்.. சார்… என்னை மன்னிச்சிருங்க. நான் வேணும்னே வந்து உங்க காரில் விழலை . என்னை ரெண்டு மூணு பேர் துரத்திட்டு வந்தாங்க. அவங்ககிட்டே இருந்து தப்பிச்சு வந்த அப்போ தான் உங்க காரை பார்த்தேன் . உங்ககிட்டே ஹெல்ப் கேட்கலாம்னு ஓடி வந்தேன். வந்த வேகத்தில் வந்து கார் மேல ஓடிட்டேன் ” என்றாள்.
“என்ன உன்னை தொறத்திட்டு வந்தார்களா!! ” என்று சாலையில் இருபுறமும் பார்த்தவன்.
“எங்க யாரையும் காணோம்… ” என்றான் போதையில் மங்கலாக தெரிந்த சாலையை வெறித்தபடி .
“சார் நான் நிஜமா தான் சொன்னேன். இந்த வழியா தான் நான் வந்துட்டு இருந்தேன். அப்போ ரெண்டு ரவுடி பசங்க நான் தனியா வரதை பார்த்து என் கையை பிடிச்சு இழுத்தாங்க.. நான் வாங்ககிட்டே இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன் ” என்றாள்.
“ஏன் ம்மா… இந்த நேரத்துல ஒரு பொண்ணு தனியா வரலாமா? வந்தா இப்படி தான் கண்டவன் எல்லாம் வந்தா கையை பிடிச்சு இழுப்பானுங்க… டிவில நியூஸ் எல்லாம் பாக்குறது இல்ல… நீ ” என்றான் .
“என்ன சார்.. பேசுறீங்க… பொண்ணுங்க இந்த நேரத்துல தனியா வரக்கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா … என்ன? நான் பசிக்குதுனு வெளியே எதுவும் சாப்பிட கிடைக்குமான்னு வந்தேன். அப்படி பார்த்தா நீங்க ஆம்பளைங்க எல்லாரும் சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டா பொண்ணுங்க நாங்க தைரியமா எத்தனை மணிக்கு வேணாலும் ரோட்டுல சுத்தலாம் ” என்றாள் அவன் பேசியது கேட்டு கோபமாக .
“ஓஹோ… ” என்று தன் கார் மீது சாய்ந்து நின்று இருந்தவளை ஏற இறங்க பார்த்தவன் .
” சரி கொஞ்சம் தள்ளிபோறியா … நான் கிளம்பனும். அதான் யாரையும் காணோமே… நீ கிளம்பு ” என்று அவளை தன் கார் மீது இருந்து இழுத்துவிட்டான்.
“ஐயோ!! அம்மாஆ… சார் வலிக்குது” என்று நிற்கமுடியாமல் அவன் தோளில் கைவைத்து நிற்கமுடியாமல் தள்ளாடினாள்.
அவள் வலியில் சுணங்குவதை பார்த்து கார் மேல நல்லா மோதிட்டியா நீ… ” என்று அவள் நிற்க முடியாமல் சிரமப்படுவதை பார்த்து கேட்டான்.
“இல்ல சார்… உங்க கார் தான் பலமா வந்து என் கார் மேல மோதிருச்சு ” என்றாள் தன் முட்டியை பிடித்துக்கொண்டு .
அவளை முறைத்தவன் “நீ பேசுற வாய்க்கு நானே உன்னை தொறத்திட்டு வந்தவனுங்க கிட்டே உன்னை பிடிச்சு கொடுத்திருவேன் ” என்றான்.
“சார்!!! ” என்று அதிர்ச்சியாக அந்த பெண் அவனை பார்க்க…
“பயப்படாதே… அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன் உன்னை… ஆமா எங்கே அடிபட்டிருக்கு உனக்கு ” என்று அவள் காலை பார்த்தான் தள்ளாடியபடி அவளோடு சேர்ந்து அவனும் ஆடிக்கொண்டே …
“சார்!!!… ” என்று அவன் தோளை உலுக்கி அழைத்தாள்.
“ப்ச்… என்ன…” என்று சலித்துக்கொண்டே கம்ரத்தமன் அந்த பெண்ணை பார்க்க…
அவள் அதிர்ச்சியாக யாரையோ பார்த்துக்கொண்டு இருந்தாள். உடனே திரும்பி தனக்கு பின்னால் திரும்பி பார்த்தான் . அங்கே பார்ப்பதற்கு அந்த ஊர் புல்லிங்கோ போல மூன்று ஆண்கள் வந்து நின்றார்கள். ஆண்கள் என்று சொல்வதை விட.. 19, 20 வயது கூட நிரம்பி இருக்காத சின்ன பையன்கள் என்றே சொல்லலாம் அப்டி தான் இருந்தார்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளை வைத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்துவந்தனர்.
அவர்களை பார்த்ததும் நிமிர்ந்தவன் “இவனுங்க தான் உன்னை தொறத்திட்டு வந்தவர்களா?” என்றான் .
அவள் பயந்த விழிகளோடு ஆமாம் என்று தலையை ஆட்ட… “இரு நான் பேசுறேன்.. ” என்று அவளை கார் அருகில் நிறுத்தியவன் திரும்பி அந்த பையன்களிடம் செல்ல போக… அதில் ஒருவன் வேகமாக வந்து கம்ரத்தமனை தன் கையில் இருந்த இரும்பு ராடை கொண்டு அவனை அடிக்க போக…
அதை பார்த்ததும் சட்டென்று விலகிவிட்டான் கம்ரத்தமன். அவன் இதை எதிர்பாராதவன் கம்ரத்தமனை தாண்டி நிற்க முடியாமல் போய் காரில் சாய்ந்து இருந்த பெண்ணின் மீது மோத போக… அவனை பார்த்ததும் பயத்தில் அந்த பெண் குனிந்து கொண்டாள்.
அவன் கையில் இருந்த ராட் அந்த பெண்ணின் பின்னந்தலையில் அடித்துவிட… அவள் அப்படியே மயங்கி விழுந்தாள் .
