Home Uncategorizedஅசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 3

அசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 3

by Sinamika Writes
550 views
“ஏய் பம்பரக்குட்டி! இது எல்லாம் டூ மச் டி! நான் பாவம் இல்ல?” என்றான். “டேய் லூசுப் புருஷா! இப்படிக் கையை வெச்சுட்டு எப்படிடா?” என்று அவனைப் பார்த்தாள். “எனக்கு வேணும்... இப்போ!” என்று முரண்டு பிடித்தான். “இங்க பாரு. நான் உனக்கு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்னு சொன்னேனே... அதுக்காகத்தானே நீ இங்க வந்த?” என்றாள். “ம்... ஆமா. அதை கேட்க மறந்துட்டேன். என்ன சர்ப்ரைஸ்? சொல்லு!” என்றான் ஆர்வமாக.

EPISODE 3

“இந்த வருடத்திற்கான சிறந்த கட்டிடக்கலை நிபுணர் விருதினை பெற்றுக்கொள்ள ரத்தன் ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தின் சிஇஓ மிஸ்டர் கம்ரத்தமன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்”என்று IIA நேஷனல் அவார்ட்  வழங்கும் கட்டிடக்கலையில் .நாட்டிலேயே சிறந்த டிசைனை வடிவமைத்து  அனைவர் கவனத்தையும் எப்போதும் போல தங்கள் ரத்தன் ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தின் பக்கம் திருப்பி இருந்தான் கம்ரத்தமன் .

மேடையில் தன் பெயரை சொல்லி அழைத்ததும் சாம்பல் நிற சட்டைக்கு  மாட்சிங்காக அடர் நீல நிறத்தில் பாண்ட்டும், விலை உயர்ந்த பிராண்டட் ஷர்ட்டிற்கும் மேட்சிங்காக பிரௌன் நிறத்தில் ஷூ அணிந்த கம்ரத்தமன் இருக்கையை விட்டு எழுந்தவன் தன் சட்டையை சரி செய்து கொண்டு மேடையை நோக்கி நடந்து சென்றான் .

தங்கள் குடும்பத்தில் வரும் சொற்ப வருமானத்தைக்  கொண்டு கஷ்ட்டப்பட்டு படித்து பல பணக்கார வீட்டு பிள்ளைகளால் செய்ய முடியாத உயரத்திற்கு தன் சொந்த உழைப்பால் கட்டிடக்கலையில் தனக்கென ஒரு இடத்தை இத்தனை குறுகிய ஆண்டில் பிடித்திருக்கிறான் கம்ரத்தமன் .

பெயருக்கு ஏற்ற வலிமையானவன் உடலில் மட்டும் இல்லை உள்ளத்திலும் தான் .

தன் விருதை வாங்கிக்கொண்டு அளவாக நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தவன் அங்கே முன்வரிசையில் அமர்ந்து இருந்தவர்களை அவன் மேடையில் இருந்து இறங்கியதும் தன் கையில் இருந்த அவார்டை வாங்கி கொண்டு போய் இந்த கட்டிடக்கலை துறையில் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கும் மேலாக கொடிநாட்டிக்கொண்டு இருக்கும் மாடர்ன் ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தை தோற்றுவித்த திரு இந்திரனின் காலடியில் வைத்தவன் சாஸ்ட்டாங்கமாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தனி ஒருவன் பல போராட்டங்களுக்கு பிறகு முன்னேறி இருக்கும் கம்ரத்தமனை தோளை தொட்டு ஆசிர்வதித்த இந்திரன் ” இன்னும் பெரிய உயரத்துக்கு நீ முன்னேறி வருவ ரத்தா எழுந்திரு ” என்றார் .

அவர்முன்பு எழுந்து பவ்வியமாக நின்ற ரத்தன் “ரொம்ப நன்றி சார் ” என்று அடக்கமாக அவரிடம் பேசினான்.

“சரிப்பா… போ… அங்கே பாரு உனக்காக எவ்ளோ பேர் உன்னை பேட்டி எடுக்க காத்திருக்காங்கன்னு . போப்பா… என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும் ” என்றார் இந்திரன் .

“பெரியவரே இவங்க எல்லாரும் இன்னிக்கு நான் பிரபலமா இருக்கேன்னு என்னை சுத்தி வருவாங்க . நாளைக்கே என்னை விட சிறந்தவன் ஒருத்தன் வந்தா என்னை பின்னாடி தள்ளிட்டு அவங்க பின்னாடி போகுற கூட்டம் இது . ஆனா உங்களை போல உண்மையா என் வளர்ச்சியை பாராட்டுறது ரொம்ப சில பேர் தான் . உங்க கூட எனக்கு  கிடைக்குற ஒவ்வொரு நேரமும் என் வாழ்நாளில் எனக்கு கிடைச்ச பொக்கிஷமான நேரங்கள் . அதை நான் யாருக்காகவும் இழக்க தயாரா இல்லை ” என்று அவருடன் பேசுவதற்காக சுற்றி இருந்தவர்களை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இந்திரனிடம் பேசினான்.

“ரத்தா நான் எங்க டா போக போறேன் . போ.. அவங்க எல்லாம் உன்கிட்டே பேசணும்னு தானே வந்திருக்காங்க. அவங்களை காக்க வைக்குறது சரியா இருக்காது . நீ நாளைக்கு ஊருக்கு வந்ததும் என்னை வீட்டில் வந்து பாரு சரியா ” என்று அவனை அனுப்பி வைத்தார் .

“சரிங்க பெரியவரே., நாளைக்கு எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு . அதை முடிச்சிட்டு ஈவினிங் வீட்டுக்கு வரேன் ” என்றான் .

“சரிடா… போ… நாளைக்கு பார்க்கலாம் ” என்றார் .

அவரிடம் விடைபெற்றவன் நேராக அவனுக்காக காத்திருந்த பிரஸ் ஆட்களிடமும். அவன் முன்னேற்றத்தை தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றமாக கருதும் அவனுடைய விசிறிகளிலும் இருக்கும் இடத்திற்கு சென்றவன் அவர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு , சில கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலும் தந்தவன் . அடுத்தது நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு தன் அசிஸ்டன்ட் உத்தமனுடன் வந்தவன் ” சரி ட உத்தமா நீ ரூமுக்கு கிளம்பு உனக்கு வேற காய்ச்சல் அதிகம் ஆகிட்டே இருக்கு… அப்பறோம் எதுவும் சீரியஸ் ஆகிட போகுது. முதல்ல நீ ஹாஸ்பிடல் கிளம்பு  ” என்று அவனை கிளம்ப சொன்னான்.

“டேய் ரத்தா! காய்ச்சல் தானே டா… ஒரு பெக் போட்டா வந்த காய்ச்சல் இருந்த இடம் தெரியாம போய்டும் . இதுக்கு எதுக்கு டா நான் ஹாஸ்பிடல் போகணும் ” என்றான் குளிர்காய்ச்சல் வந்திருந்த உத்தமன் .

“டேய் ரொம்ப பேசாதடா … காய்ச்சலில் உன் குரல் எல்லாம் நடுங்குது பாரு . இந்த பார்ட்டி மட்டும் இல்லையின்னா நானே உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருப்பேன் . ஆனா என்ன செய்றது. இந்த விருது எனக்கு கிடைச்சதுக்காக இந்திரன் ஐயா எனக்காக ஏற்பாடு செய்திருக்க பார்ட்டி இது. இங்கே பல பிரபலமாகன ஆளுங்களை எல்லாம் அவர் இன்வைட் பண்ணி இருக்காரு . நான் இங்க கண்டிப்பா இருந்தே ஆகணும். நான் அமைதியா பேசும்போதே நீ ஒழுங்கா இங்கே இருந்து கிளம்பிடு. இல்லை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” என்றான் சற்று கடுமையான குரலில் .

” சரி சரி டா.. நீ டென்ஷன் ஆகாத இந்த கார் கீ… வரும்போது பார்த்து பத்திரமா ஓட்டிட்டு வா சரியா . முன்ன பின்னே நம்ம ரெண்டு பெரும் அதிகம் சுத்தாத ஊர் இது . பார்ட்டி முடிஞ்சதும் ஊரை சுத்தமா நேரா ரூமுக்கு வந்திரு ” என்று உத்தமன் அங்கிருந்து கிளம்ப போக…

“டேய்… டேய் .. உத்தமா ! நில்லு டா… ” என்று  அவனை நிறுத்தியவன் “கார் சாவியை என்கிட்டே கொடுத்துட்டு இந்த் ராத்திரியில் நீ எங்க போற… ” என்றான் .

” டேய் நான் என்ன சின்ன பையனா .. எனக்கு இந்த டெல்லியை பத்திதான் எதுவும் தெறியாது. ஆனா நாம தங்கி இருக்க ஹோட்டலுக்கு வழி தெரியும். அதுவும் இல்லாம இந்த காய்ச்சலை வெச்சுட்டு நான் என்ன நடந்து போகவா போறேன். ஏற்கனவே கேப் புக் பண்ணிட்டேன் . அது வெளியே தான் வெயிட் பண்ணிட்டு இருக்கு . நீ என்னை பத்தி ஒர்ரி பண்ணிக்காதே . நான் ஹாஸ்பிடல் போயிட்டு அப்பறோம் தான் ரூமுக்கு போவேன். போய்ட்டு உனக்கு கால் இல்ல மெசேஜ் பண்றேன் போதுமா ” என்று  மூச்சு வாங்க பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும் பார்ட்டி ஹாலிற்குள் வர… அவனுக்காக காத்திருந்த இந்திரன் ரத்தனை அழைத்து அங்கே வந்திருந்த பெரிய பெரிய தொழில் வல்லுனர்களிடமும், பிஸினஸிலும் , அரசியலிலும் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் ஜாம்பவான்களிடமும் அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

அவனை தன் சொந்த பேரன் போல தோளில் கைபோட்டு அனைவரிடமும் அழைத்து சென்று அவனை பற்றி பெருமையாக பேசி அறிமுகம் செய்து வைத்தார் .

என்ன டா இன்னும் எதிரி வரலையின்னு தானே நினைச்சீங்க… இதோ நம்ம இந்திரனுடைய பேரன் விபீஷ் தூரத்தில் நின்று இந்திரன் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான்  இருந்தான் .

….

“என்ன விபீஷ் இது உன் தாத்தா அவரோட வாரிசான உன்னை எல்லார்கிட்டயும் அறிமுகம் செய்றதை விட்டுட்டு போயும் போயும் அந்த சித்தாள் மகனை அறிமுகப்படுத்திட்டு இருக்காரு ” என்று அவன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு விபீஷ் வாங்கி கொடுக்கும் ட்ரிங்க்சிற்க்காக அவன் பின்னால் சுற்றும் ஒருவன் விபீஷை ஏற்றிவிட்டுக்கொண்டு இருந்தான்.

” டேய் விபீஷ்கிட்டே போய் இதை கேட்டு என்ன டா பிரயோஜனம் . அபப்டி பேசினா மட்டும் இவன் ரோசப்பட்டு போய் அவன் தாத்தாகிட்ட பேசிடுவானா … அவரே இவன் மேல பயங்கர கடுப்புல இருக்காரு. இந்த நிலைமையில் இவனை போய் வான்டேடா அந்த வயசானவர்கிட்டே மாட்டிக்க சொல்றியா. அப்பறோம் அவர் நம்ம எல்லாரும் பார்ட்டிக்கு வந்திருக்கிறோம்னு கூட பார்க்காம அவரோட சொற்பொழிவை இங்கையே ஸ்டார்ட் பண்ணிடுவாரு ” என்று மற்றொருவன் விபீஷை வெறுப்பேற்றினான்.

அவனை திரும்பி முறைத்தவன் அவர்களை தாண்டி சென்ற பேரரை அழைத்து “இந்த கூல் ட்ரிங்க்ஸ் யாருக்கு ” என்று கேட்டான் .

“சார் இது கம்ரத்தமன் சாருக்கு ” என்றான்.

“ஏன் டா அவன் என்ன டா சின்ன பசங்க மாதிரி கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு இருக்கான் ” என்று ஒருவன் ரத்தனை கிண்டல் செய்ய…

” டேய் கொஞ்சம் பேசாம இருக்கியா நீ… ” என்று அவனை அதட்டியவன் அந்த பேரரிடம் இருந்து கூல்ட்ரின்க்ஸ் ஊற்றி இருந்த கிளாஸை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்து இருந்த விபீஷ் தன் உடல் தேவைக்காக அவன் இன்று சந்திக்கும் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக வாங்கி வைத்து இருந்த உணர்ச்சிகளை தூண்டும் போதை மருந்தை அந்த கூல்ட்ரிங்க்சில் கலந்து அதை அந்த பேரரிடம் கொடுத்து .

“இதை கொண்டு போய் அவன்கிட்டே கொடு ” என்றான்.

அந்த பேரர் விபீஷ் கம்ரத்தமனுக்காக தான் கொண்டு வந்து குளிர்பானத்தில் எதையோ கலப்பதை பார்த்து அதிர்ச்சியானவன் ” இதுல என்னவோ ஒரு மாத்திரையை கலந்திங்களே… என்ன சார் அது ? இதை வேற என்னை கொண்டு போய் அந்த சாருக்கு கொடுக்க சொல்றிங்களே அவருக்கு இதை குடிச்சு எதுவும் ஆச்சுன்னா அப்பறோம் என் வேலை போய்டும் … ” என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே.

தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கற்றை பணத்தை எடுத்து அவன் கையில் வைத்திருந்த ட்ரேயில் தூக்கிப்போட்டவன் “இது உனக்கு தான் . நீ மட்டும் இதை கொண்டு போய் என் தாத்தா கூட ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டு இருக்கானே அவன்கிட்டே கொடுத்து அவன் இதை ஒரு சொட்டு மிச்சம் வைக்காம குடிச்சுட்டானு வை … இதே மாதிரி இன்னொரு கட்டு பணம் உனக்கு கிடைக்கும் . எப்படி வசதி. இதை கொண்டு போய் நீ கொடுக்கிறியா ? இல்ல இங்கே வேலை பாக்குற வேற யாராவதை கூப்பிட்டு இந்த பணத்தை அவங்ககிட்டே கொடுத்து இந்த வேலையை செய்ய சொல்லட்டுமா ?” என்றான் விபீஷ் அந்த பணத்தை அவனிடம் காட்டி அவன் ஆசையை தூண்டி விட்டு .

அவன் முன்னே இருந்த அந்த 500 ருபாய் பணக்கட்டை பார்த்து வாயை பிளந்த அந்த பேரர் “சார் நானே கொண்டு போய் கொடுக்கிறேன் ” என்று அந்த கூல்ட்ரின்க்சை கொண்டுபோய்  ரத்தன் தாகம் எடுக்கிறது குடிக்க எதுவும் இல்லை என்று சுற்றிலும் பார்த்துக்கொண்டு இருக்க… அந்த நேரம் விபீஷ் போதை மருந்தை கலந்து கொடுத்த கூல்ட்ரின்க்சை கொண்டு போய் அந்த பேரர் அவன் முன்பு  நீட்ட ..

“தேங்க்ஸ் ” என்று அந்த கூல்ட்ரின்க்சை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் “ONE  MORE PLEASE ” என்றான் அந்த கிளாஸை பேரரிடம் நீட்டி .

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured