Home Uncategorizedஅசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 4

அசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 4

by Sinamika Writes
596 views
“ஏய் பம்பரக்குட்டி! இது எல்லாம் டூ மச் டி! நான் பாவம் இல்ல?” என்றான். “டேய் லூசுப் புருஷா! இப்படிக் கையை வெச்சுட்டு எப்படிடா?” என்று அவனைப் பார்த்தாள். “எனக்கு வேணும்... இப்போ!” என்று முரண்டு பிடித்தான். “இங்க பாரு. நான் உனக்கு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்னு சொன்னேனே... அதுக்காகத்தானே நீ இங்க வந்த?” என்றாள். “ம்... ஆமா. அதை கேட்க மறந்துட்டேன். என்ன சர்ப்ரைஸ்? சொல்லு!” என்றான் ஆர்வமாக.

EPISODE 4

“ஓகே சார் ” என்றவன் அவன் முழுவதுமாக குடித்த கிளாஸை கொண்டு வந்து விபீஷ் முன்பு காட்ட…

“குட் .. சொன்ன மாதிரியே செய்துட்டியே ” என்று அவன் சொன்னது போல இன்னோரு பணக்கட்டை தூக்கி பேரர் முன்பு வீசினான்.

தரையில் விழுந்த அந்த பணக்கட்டை கீழே குனிந்து எடுத்தவர் ” என்ன சார் இது மகாலக்ஷ்மியை இப்படி தூக்கி வீசுறீங்களே ” என்று அந்த பணக்கட்டை எடுத்து தன் சட்டைக்குள் சொருகிக்கொண்டவன் அங்கிருந்து கிளம்ப போக…

“ஏய் ஒரு நிமிஷம் . அவன் கூல்ட்ரின்க்சை குடிச்சிட்டு உன்கிட்டே என்னவோ சொன்னானே … என்ன சொன்னான் ” என்றான் விபீஷ் .

“அது ஒன்னும் இல்லை சார். அந்த சார் இப்போ குடிச்ச மாதிரி இன்னொரு கூல்ட்ரின்க்ஸ் வேணும்னு கேட்டார் ” என்றான் .

“ஓ… சாருக்கு ஒன்னு பத்தலையா … சரி நீ போய் இன்னொரு கூல்ட்ரின்க்ஸ் எடுத்துட்டு வா ” என்று அவனை அனுப்பி வைத்தான்.

அந்த பேரர் சென்ற சிறிது நேரத்தில் ரத்தன் குடிக்க கூல்ட்ரின்க்ஸ் எடுத்துக்கொண்டு விபீஷ் டேபிலுக்கு வர….

அதை வாங்கி மீண்டும் ஒரு போதை மாத்திரையை அந்த கூல்ட்ரிங்க்சில் கலந்தவன் “இந்தா இதையும் கொண்டு போய் அவன்கிட்டே குடு ” என்று பேரரை அங்கிருந்து அனுப்பி வைத்த்தான் .

” விபீஷ் நீ ரத்தன் குடுக்குற கிளாஸ் றேன்துளையும் கலந்திருக்குறது அந்த விஷயத்துக்காக வாங்கின டப்ளேட்ஸ் தானே… சாதாரணமா ஒன்னு போட்டாலே…  அந்த விசயத்துல பயங்கரமா இருக்கும்னு சொல்லுவ … ஆனா இவனுக்கு 2 மாத்திரையை போட்டுவிட்டிருக்க… அதை வேற அவன் குடிச்சு எதுவும் ஆகிட போகுதுடா… ” என்றான் அவன் நண்பன் ஒருவன் .

“இத்தனை நேரம் நல்லவன் மாதிரி என் தாத்தாவை ஏமாத்திட்டு சுத்திகிட்டு இருந்தானே … இப்போ டேய் இதை குடிச்சதும் கொஞ்ச நேரத்துல அவனாலேயே அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது . எங்கே இருக்கோம்னு கூட யோசிக்காம இவன் துணியை கழட்டிட்டு அம்மணமா இந்த இடத்தை சுத்தி வரப்போறான். அவன் கண்னு முன்ன பொண்ணுன்னு எழுதி வெச்சிருந்தாலே அது மேல புலி மாதிரி பாய்வான்னா பார்த்துக்கோ… அவன் செய்றதை எல்லாம் பார்த்து என் தாத்தாவுக்கு அவன் மேல வெறுப்பு வரும். அதே போல அவன் செய்ய போறதை ஒன்னுவிடாம போட்டோ எடுத்து அதை ஒரே நாளில் வைரல் ஆகுறதுக்குனே இங்க மீடியா ஆட்களும், அவனோட பேன்ஸும் இங்கே இருக்காங்க ” என்றான் விபீஷ் தன் வஞ்சக புத்தியை கொண்டு கம்ரத்தமனுக்கு எதிராக செய்த சதியை அவர்களிடம் விளக்கி கூறினான் .

“அப்போ ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்னு சொல்லு… உன் தாத்தாகிட்ட அவனுக்கு கெட்ட பேரு … அதே போல மீடியா ஆளுங்க மூலமா இங்கு நடக்குறதை எல்லாம் ஊர்முழுக்க தம்பட்டம் அடிச்சு அவன் மானத்தையும் வாங்க போறே கரெக்ட்டா!” என்றான் .

ஆமாம் என்று தலையை ஆட்டியவன் அடுத்த கிளாஸ் கூல்ட்ரின்க்சையும் குடித்து முடித்திருந்த கம்ரத்தமன் அடுத்து என்ன செய்ய போகிறான் என்று அவனை ஆவலோடு பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஜூஸ் குடித்துவிட்டு சிறிது நேரம் உடலில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மற்றவர்களுடன்  சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தான்.

நேரம் செல்ல செல்ல.. திடீர் என்று ரத்தனின் உடல் வியர்க்க ஆரம்பித்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்தவன் தான் இருந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான்.

அந்த அறை முழுவதும் ஏசி பொறுத்தப்பட்டிருக்க… அப்படி இருந்த அறையில் தனக்கு ஏன் இவ்வளவு வியர்க்கிறது என்று யோசித்தவன் . அந்த இடம் முழுவதும் ஆட்களால் நிறைந்திருக்க அதனால் தான் போதுமான காற்று இல்லாமல் தனக்கு வியர்க்கிறது என்று நினைத்தவன் அந்த பார்ட்டி காலை விட்டு வெளியே சென்றான்.

ரத்தன் என்ன செய்கிறான் என்று அவன் பின்னாலேயே விபீஸும், அவன் நண்பர்களும் அவனுக்கு தெரியாமல் பின்னால் மறைந்து சென்றனர் .

வெளியே வந்த ரத்தன் சிறிதுநேரம் வெளிக்காற்றில் இங்கும் அங்கும் உலாவினான் .  பனி நிறைந்த அந்த டெல்லி குளிரிலும் அவனுக்கு வியர்த்தது. தான் அணிந்து இருந்த  சட்டை   பட்டன்களை கழட்டிவிட்டு காற்றில் இங்கும் அங்கும் நடந்தான். அப்போதும் அவன் உடல் வியர்ப்பது குறையவில்லை. அந்த குளிர்காற்றில் கூட தன் உடல் இப்படி சூடத்தை உணர்ந்தவன் அடுத்து அவன் கண்டா காட்டிச்சி ரத்தனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையெல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த விபீஸும் அவன் நண்பர்களும் ரத்தன் தனக்கு என்ன ஆனது என்று தெரியாமல்  சிரமப்படுவதை ரசித்துக்கொண்டு அங்கு நின்று இருந்தனர்.

“என்ன டா விபீஷ நீ போட்ட மாத்திரை இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கல போல… அவன் பாரு இன்னமும் எந்த ரியாக்சனும் காட்டாம இப்படியும் , அப்படியும் நடந்துட்டு இருக்கான் ” என்றான் அவன் நண்பன் .

“டேய் பொறு டா என்ன அவசரம் . அவன் தான் ஒண்ணுக்கு ரெண்டு மாத்திரை சாப்பிட்டிருக்கானே… ஒரு மாத்திரை போட்டாலே… சும்மா கிண்ணுனு வேலை செய்யும் . இவன் சாப்பிட்ட மாத்திரைக்கு இந்த நேரம் எவளாவது மாட்டினா அவ்ளோ தான் அவ… ” என்றான் விபீஷ் .

அவர்களிடம் பேசிக்கொண்டே ரத்தனை தீவிரமாக கண்காணித்த விபீஷ் ” அங்க பாருங்க டா… என்னவோ அவனுக்கு நான் கொடுத்த மாத்திரையினால எதுவுமே அக்கலைன்னு சொல்லிட்டு இருந்திங்க… ஆனா அங்க பாருங்க …” என்று ரத்தன் இருந்த திசையை பார்த்தான் விபீஷ்.

தன் உடல் சூடு தனியாமல் ஒரு பக்கம் ராத்தனை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்க… மற்றொரு புறம் மாத்திரை அவன் உடலில் வேலை செய்ய துவங்கியது .

அவன் உடல் எல்லாம் முறுக்கேறி ஒரு வித புதிய உணர்வு ரத்தனுக்கு தோன்றியது . அவன் இடுப்புக்கு கீழே வேலை செய்ய்ய ஆரம்பித்தது.

அதை தூரத்தில் இருந்த விபீஷும் கவனித்துவிட்டு…

“டேய் அங்க பாருங்க டா … அவன் பாம்பு படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. இப்போ மட்டும் ஒரு பொண்ணு அவன் முன்னாடி வந்து நிக்கட்டுமே… அவன் பாம்பு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடும் ” என்றான் விபீஷ்.

” டேய் உனக்கு அறிவே இல்ல விபீஷ் ” என்றான் ஒரு நண்பன் .

” ஏன் டா… ” என்றான் புரியாமல் அவனை பார்த்து .

“அவன் பாம்பு படம் எடுத்து ஆடணும்னா யாராவ்து வந்து மகுடி ஊதணுமே… மகுடி ஊதுனா பாம்பு நிக்காம படம் எடுத்து ஆடும் ” என்று மற்றொருவன் ரத்தன் நிலைமையை பார்த்து கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.

இங்கு இவர்கள் மறைந்து இருந்து தன்னை கிண்டல் செய்வது எதுவும் தெரியாமல் தன் நிலையை நினைத்து நொந்து கொண்டு இருந்தான் ரத்தன் .

“ச்செ… என்ன ஆச்சு எனக்கு ? ஏன் உடம்பு இப்படி வேர்க்குது. ஏன் உடம்பெல்லாம் ஏதோ மாதிரி ஆகுது… ” என்று யோசித்தவன் தன் நண்பன் உத்தமனை அழைத்து தன் உடல் நிலை குறித்து அவனிடம் சொல்லி ஏதாவது செய்யலாம் ” என்று யோசித்தவன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்தான் ஆனால் உத்தமன் போனை எடுக்கவில்லை.

“ச்சே… இவனுக்கு இதே தான் வேலை போன் பண்ணினா சீக்கிரம் எடுத்து பேச மாட்டானே…” என்று புலம்பியவன் .

போனை கட் செய்துவிட்டு திரும்ப… ரத்தன் முன்பு ஒரு இளம் பெண் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து எடுப்பான முன்னழகுடன் தன் அங்கங்களை வெளிகாட்டிக்கொண்டு வந்து நின்றாள்.

அவளை சற்றும் எதிர்ப்பராதவன் அவள் மீது மோதிவிட .. இதற்கு தான் காத்திருந்தது போல அந்த பெண் அவன் மேல் வேண்டும் என்றே வந்து விழுந்தாள்.

அவள் உடல் ரத்தன் மீது உரசுவதற்கு முன் அவள் தோள்களில் கைவைத்து விளக்கி நிற்க வைத்தவன் “சாரி …நீங்க வந்ததை நான் கவனிக்கலை ” என்று அங்கிருந்து நகரப்போக…

“ஆனா நான் உங்களில் கவனிச்சிட்டு தானே வந்தேன் ” என்று அவன் அருகில் நெருங்கி  சென்றாள் .

அவள் வேண்டுமென்றே தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தவன் “மேடம் நீங்க எந்த நோக்கத்துல என் பக்கம் நெருங்கி வரிங்கன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் . அதுக்கான ஆள் நான் இல்லை ” என்றவன் அவளை விட்டு விலகி நிற்க…

“நான் எந்த நோக்கத்தில் உன் பக்கத்துல வரேன்னு புரியுது இல்ல டார்லிங்… அப்பறோம் ஏன் என்னை கிட்டே விட மாட்டேங்குற… பாரு உன்னை விட உன் தம்பி என்கிட்டே நெருங்கி வர ரொம்ப ஆர்வமா இருக்கான். எனக்கும் உன்னோட அழகு , கம்பீரம் , உன்னோட ஆண்மை இதை எல்லாம் பார்க்கும்போது போதை மருந்து சாப்பிடாமலேயே போதை ஏறுதே… உனக்கு வேணாம்னா பரவால்ல ஆனா உன் தம்பி பாவம் இல்ல… ” என்று சொல்லி அவள் பார்வை ரத்தனின் இருப்பிற்கு கீழே செல்ல…

அதை உணர்ந்த அடுத்த நொடி தன் கையில் இருந்த விருதை கீழே கொண்டு சென்று தன் சூழ்நிலையை அதை கொண்டு மறைத்தவன் இனியும் இங்கு இருப்பது நியாயம் இல்லை . முதல் வேலையாக இந்த இடத்தை விட்டு கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தவன் . அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் மட மட வென்று பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அதை கண்ட அந்த பெண் “shit .. என்ன இவன் நானே இவ்ளோ தூரம் அவன் வேணும்னு போய் கேட்குறேன் . இப்படி பதி்லே சொல்லாம என்னை கண்டுக்காம போறானே… ” என்று அலுத்துக்கொண்டவள் திரும்பி தூரத்தில் இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை எல்லாம் தன் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த விபீஷ்ஷை பார்த்தாள்.

அவன் அவளை முறைத்துவிட்டு தன்னை நோக்கி வரும்படி சைகை செய்தான்.

அவனிடம் சென்றவளை “உன்னால இந்த சின்ன வேலையை கூட செய்ய முடியலையா?” என்று அவளை கடிந்துகொண்டான்.

“நான் என்ன டார்லிங் பண்ணுவேன் . அவன் எப்படி பேசினாலும் மடிய மாட்டேங்குறானே.. ” என்று அவன் மார்பு ரோமங்களில் தன் விரலால் கோலமிட ஆரம்பிக்க…

” சரி வா… ரொம்ப பீல் பண்ணாத… நீ எதுக்கு பீல் பன்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு என்ன வேணுமோ அதை நான் தரேன் ” என்றவன் அவளால் இடையோடு  இழுத்து அணைத்தான்.

“ம்ப்ச் … உன்கூட தான் நான் அடிக்கடி இருக்கேனே… எனக்கு அவன் தான் வேணும் டார்லிங் எப்படியாவது ஏற்பாடு பண்ணேன். பார்ட்டி சும்மா தல தலன்னு தேக்கு மரம் மாதிரி இருக்கானே… ” என்று ரத்தனை புகழ்ந்து பேசினாள்.

அதை கேட்டதும் கோபப்படுவான் விபீஷ் என்று நினைத்த அவன் நண்பர்கள் அவனை பார்க்க…

அவனோ ” நோ ஒர்ரி பேபி… இப்போ என்ன உனக்கு அவன் தானே வேணும். இன்னொரு நாள் சமயம் பார்த்து இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நான் உனக்கு அமைச்சு தரேன். அப்போ நீ அவனை எங்கயும் போகாம உன் வலையில் சிக்க வெச்சிரு ” என்று கண்ணடித்தான்.

“ஓ! சியூர்… ” என்று அவனை பார்த்து சிரித்த அந்த பெண் விபீஷை இழுத்து அணைத்து அவன் உதட்டில் முத்தமிட துவங்க…

“வாங்க டா நாம போகலாம். இனி இங்கே இருந்தா bf படமெல்லாம் இவங்க ரெண்டு பேரும் நமக்கு இங்கையே பிரீ ஷோ காட்டிடுவாங்க . ” என்று தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

அவர்கள் செல்வதை சட்டை செய்யாதவன் அந்த பெண்ணை முத்தமிட்டபடி தன் கார் இருந்த இடம் நோக்கி சென்றவன் அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

செல்லும் வழியில் தன் நண்பனுக்கு போன் செய்து ராத்தனை follow செய்ய சொன்னவன் அவன் எங்கு செய்கிறான் அவனுக்கு தான் கொடுத்த மருந்தின் விளைவாக என்ன ஆனது . என்று தெரிந்து கொள்ள சொல்லி அனுப்பிவைத்தான்.

இங்க கார் ஒட்டிய படி சென்ற ரத்தன் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டுக்கொண்டு தன் உடலில் எழுந்த உணர்வுகளை எப்படி அடக்குவது என்று தெறியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்க… அப்போது தான் அவன் கார் முன்பு வந்து ஒரு பெண் விழுந்தாள்.

அவளை பார்த்த மறுநொடி அவன் ஹார்மோன்கள் மாத்திரையின் விளைவாலும் , அவள் அழகில் மயங்கியவனாக  காரை விட்டு வெளியே வந்தான்.

“என்ன பாக்குறீங்க… அடுத்தடுத்து என்ன நடந்துச்சுன்னு தான் பஸ்ட் எபிசோடிலேயே போட்டுட்டேனே … மறுபடியும் அதை எழுதணுமா … வேணாம் தானே… என்ன நடந்துச்சுனு தெரியாதவங்க பஸ்ட் எபிசொட் படிச்சிட்டு வந்தா சரியா இருக்கும் “

சரி வாங்க அவங்க பஸ்ட் எபிசொட் படிக்கட்டும். நாம ரத்தணும் , அவன் கிட்டே மாட்டிக்கிட்ட  அந்த பொண்ணும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு பாத்துட்டு வந்துடலாம்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured