Home Uncategorizedஅசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 6

அசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 6

by Sinamika Writes
477 views
“ஏய் பம்பரக்குட்டி! இது எல்லாம் டூ மச் டி! நான் பாவம் இல்ல?” என்றான். “டேய் லூசுப் புருஷா! இப்படிக் கையை வெச்சுட்டு எப்படிடா?” என்று அவனைப் பார்த்தாள். “எனக்கு வேணும்... இப்போ!” என்று முரண்டு பிடித்தான். “இங்க பாரு. நான் உனக்கு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்னு சொன்னேனே... அதுக்காகத்தானே நீ இங்க வந்த?” என்றாள். “ம்... ஆமா. அதை கேட்க மறந்துட்டேன். என்ன சர்ப்ரைஸ்? சொல்லு!” என்றான் ஆர்வமாக.

EPISODE 6

  உடைமாற்றிவிட்டு வெளியே வந்த சாத்விகா அவள் முன்பு டிப் தப்பாக தயாராகி அங்கிருந்த சோபாவில் மன்னன் போல கம்பீரமாக அமர்ந்து இருந்த கம்ரத்தமனை பார்த்தாள்.

அவன் முகம் மிகவும் சீரியசாக இருக்க… அவன் எதிரே தன்னையும், ராத்தனையும் மாறி மாறி குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு இருந்த உத்தமனை பார்த்தாள்.

” ரத்தா … இந்த பொண்ணையா நேத்து நைட் தூக்கிட்டு வந்த… ” என்றான்.

அவளை திரும்பி பார்த்தவன் “தெரியல டா…” என்றான்.

அதை கேட்டதும் அதிர்ந்த சாத்விகா ” என்ன சொன்னிங்க… தெரியலையா… மயக்கம் போட்ட என்னை தூக்கிட்டு வந்து .. ராத்திரி… ராத்திரி…. ” என்று பேச முடியாமல் சாத்விகா அழ…

அவள் சொல்ல வந்ததில் ஆர்வம் ஆன உத்தமன் ” ஏன் சொல்லவந்ததை முழுசா சொல்லாம நிப்பாட்டிட … சொல்லுங்க சிஸ்டர் . தூக்கிட்டு வந்து உங்களை ராத்திரி இவன்  என்ன செய்தான்” என்று ஆர்வமாக அவளை பார்த்தான்.

“ஹலோ யாருங்க நீங்க… நீ கேட்டதும் உடனே எல்லாத்தையும் உங்க கிட்டே சொல்லனுமா… அதெல்லாம் முடியாது . நான் எதுவா இருந்தாலும் இந்த தடிமாடு…. ” என்று சொல்லிவிட்டு அவசரப்பட்டு மனதில் தோன்றியதை வாய்விட்டு உளறிவிட்டோமே என்று நாக்கை கடித்தவள் .

தன்னை முறைத்தவனை திரும்பிப்பார்க்காமல் “எதுவா இருந்தாலும் நான் இவர்கிட்டயே பேசிக்கிறேன் ” என்றாள்.

“இங்க பாருங்க … நீங்களும் இவனும் ராத்திரி ரூமுக்குள்ள என்ன பண்ணுணிங்கங்குறது நீங்க சொல்லமையே எனக்கு புரிஞ்சுது … ” என்று சற்று முன்பு சில்க்ஸ்மிதா போல.. இடுப்பில் இந்த பெண் அணிந்து இருந்த சுடிதாரை சுற்றிக்கொண்டு வந்து நின்றவனை நினைத்து பார்த்தவன்.

“எனக்கு அதெல்லாம் இப்போ முக்கியம் இல்லை… நேத்து நைட் உன்னை துரத்திட்டு வந்த அந்த சின்ன பசங்களை பத்தி உனக்கு தெரியுமா ? அவனுங்க எதுக்காக உன்னை துரத்திட்டு வந்தானுங்கன்னு உனக்கு தெரியுமா ?” என்றான்.

” நேத்து நைட் என்னை துரத்திட்டு வந்த அந்த பசங்களை பத்தி உங்களுக்கு எப்படி ??? …” என்று அவனை கேள்வியாக பார்த்தான்.

“அந்த பசங்களை பத்தி எனக்கு மட்டும் இல்லம்மா… மொத்த இந்தியாவுக்கே தெரியும் . உன்னை துரத்திட்டு வந்த அந்த ரௌடிங்க.  இந்த டெல்லியையே கண்ட்ரோல்ல வெச்சிருக்க… பன்வாரோட மகனும் , அந்த ஆள் மகனோட பிரெண்ட்ஸும் தான்.” என்றான்.

“என்ன சார் சொல்றிங்க…. அவன் பாக்க பொருக்கி மாதிரி தான் இருந்தான். ஆனா ஒரு u பெரிய  டானோட மகன்னு எனக்கு தெரியாதே…. ” என்றவள்.

“ஆமா அவனுங்க என்னை துரத்திட்டு வந்தது … அதுவும் அந்த அர்த்த ராத்திரியில் துரத்திட்டு வந்தது  மொத்த இந்தியாவுக்கே தெரியுமா ? அது எப்படி ?” என்றாள் புரியாமல்.

“ம்ம்… உன்னை துரத்திட்டு வந்தது மொத்த இந்தியாவுக்கும் தெரியாது . நீ என்ன சினிமா ஹீரோயினா… உன்னை யாராவது துரத்திட்டு வாரத்துக்கு ” என்று சொல்லி அவளை ஏற இறங்க பார்த்தவன் .

“உன்னை துரத்திட்டு வந்த அந்த ரவுடி பசங்களை அடிச்சு அங்க இருந்த மரத்துல தலைகீழா தொங்கவிட்டு வந்திருக்கான் இவன். அவனுங்களை மரத்துல தொங்கவிட்டுட்டு மயக்கம் போட்டு இருந்த உன்னை கார்ல தூக்கிப்போட்டு இங்கே கூட்டிட்டு வந்திருக்கான். அதை வீடியோ எடுத்து அந்த விடியோவை சோசியல் மீடியாவுல போட்டுட்டான் . ” என்று ரத்தனை பார்த்தான் .

“என்ன!! என்ன … சொல்றிங்க… வீடியோ எடுத்துட்டாங்களா!!! கடவுளே… நேத்து நைட் இவன் என்னை படுத்தின பாட்டை எல்லாமா எடுத்து விடியோவா போடுவாங்க… இனி நான் எப்படி வெளிய தலை காட்டுவேன். நான் எப்படி என் அம்மா , தங்கச்சி முகத்துல முழிப்பேன் ” என்று அழ ஆரம்பித்தாள்.

உத்தமன் சொன்னதை முழுவதும் கேட்காமல் சரியாக  தப்பாக அவன் சொன்னதை புரிந்துகொண்ட அழுபவளை பார்க்க பார்க்க ரத்தனுக்கு ஆத்திரமாக வந்ததது.

“இவளுக்கு புத்தின்னு ஏதாவது இருக்கா ? இல்லையா ? அழகா இருந்தா அறிவு கம்மியா இருக்குன்னு சொல்வாங்களே அது நிஜமா தான் இருக்கும் போல.. ” என்று யோசித்தவன் அவள் தரையில் படுத்து உருண்டு அழ ஆரம்பிக்க… அதை பார்த்ததும் வேகமாக எழுந்தவன் சாத்விகா அருகில் வந்தவன் .

“ஏய்!! இப்போ எதுக்கு தேவை இல்லாம கூப்பாடு போட்டுட்டு இருக்க… முதல்ல இவன் என்ன சொல்றன்னு முழுசா கேட்டுட்டு அப்பறம் அழு .. “” என்று அவளை அதட்ட….

தரையில் புரண்டு கொண்டு இருந்தவள் ரத்தன் அதட்டவும் தன் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு  அவனை பார்க்க….

“என்ன பாக்குற… முதல்ல எழுந்திரு ” என்று மீண்டும் அதட்டவும் .

அவசரமாக தரையில் இருந்து எழுந்தவள் உத்தமனை பார்க்க…

” நீ நினைக்குற மாதிரி எல்லாம் தப்பா எதுவும் வீடியோ வரல…  அந்த சின்ன பசங்களை அடிச்சு மரத்துல தொங்க விட்டதும் , உன்னை கார்ல தொக்கி போட்டு கொண்டு வந்தது மட்டும் தான் விடியோவா எடுத்து போஸ்ட் பண்ணிருக்காங்க… ” என்று நகம் கடித்தவன் .

” அந்த போஸ்ட்டை பார்த்துட்டு நிறைய பத்திரிகைக்காரங்க இந்த ஹோட்டலை சுத்தி இருக்காங்க. ” என்றான்.

“ரிப்போர்ட்டர்ஸ்ஸா !!” என்று சாத்விகா வாயை பிளக்க..

“உத்தமா அந்த பத்திரிக்கைகாரங்களை எல்லாம் ஹோட்டல் கான்பெரன்ஸ் ஹால்ல வெயிட் பண்ண சொல்லு . நான் அவங்களை மீட் பண்ணி பேசுறேன் ” என்றான் ரத்தன்.

“ரத்தா அங்க வந்து நீ என்ன சொல்ல போற… “

“நேத்து பார்ட்டியில் யாரோ நான் சாப்பிட்ட ட்ரிங்க்ஸ்ல போதை மருந்தை கலந்திருக்காங்க. அது தெரியாம நானும் அதை குடிச்சிட்டேன் . அதனால தான் நேத்து என்னையும் அறியாம இத்தனையும் நடந்திருக்கு ” என்று சாத்விகாவை பார்த்தான்.

அவன் எதிரில் நின்று இருந்தவளுக்கு நேற்று அவன் மூச்சு முட்ட குடித்துவிட்டு தன்னோடு இருந்தான் . இவன் சரியான குடிகாரன் முரடன் என்று நினைத்து இருந்தவளுக்கு அவன் சொன்னதை கேட்டதும் தான் உண்மை விளங்கியது . அதே யோசனையோடு அவனையே பார்த்து கொண்டு நின்று இருக்க… உத்தமன் குரல் அவள் கவனத்தை மாற்றியது .

“ஆனா அதை அங்க வந்து சொன்னா போதையில் அந்த சின்ன பசங்களை நீ அடிச்சு தொங்கவிட்டதை கூட விட்டுடுவாங்க… இந்த பொண்ணை ஏன் தூக்கிட்டு வந்தேன்னு கேட்டா என்ன சொல்லுவ… ” என்ற உத்தமன் .

“உன் பேரு என்ன ?” என்றான் மிரட்டுவது போல..

அந்த மிரட்டலுக்கு நான் பயந்தவள் இல்லை  என்பது போல அவன் கேள்விக்கு பதில் பேசாமல் நின்று இருக்க…

“சாத்விகா !! ” என்றான் ரத்தன் .

அவனை ஆச்சர்யமாக பார்த்தனர் உத்தமனும், சாத்விகாவும் .

“அதுக்குள்ள இந்த பொண்ணு பேரை தெரிஞ்சுக்கிட்டானா… ம்ம்ஹும்… நேத்து நைட் முழுக்க  இவ கூட தானே இருந்திருக்கான். அவ பேர் கூட தெரியாமயா இருந்திருக்கும் ” என்று நினைத்துக்கொண்டான்.

சாத்விகாவிற்கோ நேற்று அவளிடம் எந்த சூழ்நிலையில் தன் பெயரை கேட்டான் என்று நினைத்ததும் அவள் முகம் சிவந்துவிட… அதை கவனித்த ரத்தனுக்கு ஒன்றும் பாதியுமாய் நேற்று நடந்தது அவன் நினைவுகளில் வந்து சென்றது . அதை நினைத்ததுமே சாத்விகாவை தான் பார்த்தான் . அவளை பார்த்த அடுத்த நொடி அவன் உடலில் வேதியல் மற்றம் நிகழ… “ச்சே… இந்த போதை மருந்தோட வீரியம் இன்னும் குறையல போல… அதனால தான் இவளை பார்த்ததும் உடம்பு என்ன என்னவோ செய்யுது ” என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான் .

அவன் எதற்காக தலையணையை எடுத்து மடியில் வைக்கிறான் என்று உத்தமனுக்கு புரிந்துவிட… “இந்த சிலுக்கு பையனுக்கு அந்த பொண்ணு மேல இன்டெரெஸ்ட் இருக்கும்போலயே… ” என்று இருவரையும் பார்த்தான்.

“என்ன டா யோசனை போ… பிரஸ் மீட்க்கு ரெடி பண்ணு ” என்றான் ரத்தன் .

“சிலுக்கு!!! …. ” என்றவன் ” கடவுளே!!! மைண்ட் வாய்ஸை வெளியே சொல்லிட்டேனே…” என்று திரு திருவென முழித்தவன் .

“அது… அது வந்து ” என்று ரத்தனை பார்த்தவன் ” ரிப்போர்ட்டர்ஸ்கிட்ட என்ன சொல்லப்போற .. அதுவும் இந்த பொண்ணை பத்தி கேட்டாங்கன்னா நீ என்ன பதில் சொல்ல போறே… ” என்று ஒருவித எதிர்பார்ப்போடு ரத்தனை பார்த்தான் உத்தமன் .

சாத்விகாவும் அதே எதிர்பார்ப்போடு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“நீ யாரு ? எங்கே இருந்து அந்த நேரத்துல வந்து என்னோட வண்டி முன்ன விழுந்த… ” என்றான்.

“சார் நான் தான் நேத்தே சொன்னேனே… சாப்பிட வெளியே வந்த என்னை அந்த பசங்க தொறத்திட்டு வந்தாங்கன்னு… ” என்று அவனை பார்த்தாள்.

“உண்மையாவே அவனுங்க உன்னை துரத்திட்டு தான் வந்தாங்களா? இல்ல.. நீயே ஆளை செட் பண்ணி என்னை ஏமாத்தி உன் வலையில் விழ வைக்க நீயே இப்படி ஒரு நாடகம் ஆடுனியா?” என்று அவளை சந்தேகம் நிறைந்து ஒரு பார்வை பார்த்தான் .

” என்ன சார் இப்படி பேசுறீங்க!! உங்களால நான் என் கற்பை பறிகொடுத்தது நிக்குறேன். என் வாழ்க்கையாவே கேள்விக்குறியாகிட்டு இப்படி என்னை சந்தேகப்பட்டு பேசுறீங்க… இது உங்களுக்கே சரியா படுத்தா சொல்லுங்க…” என்றாள் அடிபட்ட பார்வையோடு…

“சந்தேகம் வராம என்ன பண்ணும். நேத்து நடந்ததெல்லாம் வெச்சு போர்க்குற அப்போ எனக்கு நடந்த சம்பவத்தையும் யோசிக்கும்போது என்னால யாரையும் நம்ப முடியல… அதனால் தான் கேக்குறேன் சொல்லு… நேத்து வந்தவனுங்க நீ செட் பண்ணின ஆளுங்க தானே… அவனுங்களை வெச்சு டிராமா பண்ணி வேணும்னே என் கார் மேல வந்து விழுந்த.. நான் போதையில் இருக்கேன்னு தெரிஞ்சு வேணும்னே என் முன்னாடி மயக்கம் போட்டுவிழுந்த மாதிரி நடிச்சு என்கூட நேத்து நைட் முழுக்க ஒண்ணா இருந்த… நான் உன்னை தூக்கிட்டு வந்ததை வேற ஒரு ஆளை வெச்சு செட் பண்ணி வீடியோ எடுக்க வெச்சு அதை சோசியல் மீடியாவுல நீயே வைரல் ஆக்கிட்டு இப்போ உனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி நின்னுட்டு இருக்க…” என்று கண்ணீரோடு அவன் முன் நின்று இருந்தவளை பார்த்தான் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் சாத்விகாவிடம் பேசினான்.

“சார் !! ” என்று அவனை பார்த்தவள் . “நீங்களா ஒரு கற்பனை பண்ணி கதையை உருவாக்கி பேசுறீங்க… நீங்க சொன்னது எதுமே உண்மை இல்லை. நான் அப்படி பட்ட பொண்ணும் கிடையாது. சொல்லப்போனா உங்களால் நான் தான் ஏமாந்திருக்கேன். உங்களால் என் வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு … அப்டி இருக்க அப்போ நான் எப்படி உங்களை ஏமாத்துவேன் . எனக்கு அதுல என்ன லாபம் இருக்கு ” என்றாள் வழிந்து அவள் கன்னத்தில் ஓடிய கண்ணீரை துடைத்துக்கொண்டே…

“ஏன் லாபம் இல்ல… உன்னை பார்த்தாலே தெரியுது நீ ஒரு மிடில் கிளாஸ்ன்னு. உன்னால சம்பாரிக்க முடியாத பணத்தை நீ இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்து என்னை ஏமாத்தி ப்ளாக் மெயில் பண்ணி என்கிட்டே இருந்து பணத்தை பறிக்கலாம்மே… ” என்றான் அழுது சிவந்திருந்த அவள் கண்களில் தெரிந்த சோகத்தையும் தாண்டி அவள் கண்களில் தெரிந்த போதையை ரசித்தபடியே அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினான்.

“சார் நாங்க ஏழை தான் நீங்க சொன்னதுபோல நான் மிடில் கிளாஸ் ஆளு தான். நீங்க வெச்சிருக்க அளவுக்கு எங்ககிட்ட பணம் இல்லை தான். அதுக்காக மானத்தை வித்துட்டு இப்படி ஒரு காரியத்தை செய்யுற அளவுக்கு கேவலமானவை நான் கிடையாது ” என்று கோபம் பொங்கி எழ பேசியவள்.

“இனியும் இங்கே இருக்குறது எனக்கு தான் கேவலம். இப்போ வரை நீங்க செய்த தப்புக்கு ஒரு வார்த்தை கூட மன்னிப்பு கேட்கல… நீங்க செய்த காரியத்தை நினைச்சு ஒரு துளி வருத்தமும் உங்களுக்கு இல்லை. இப்படி பட்ட உங்களை நம்பி நேத்து நான் உதவி கேட்டது எவ்ளோ பெரிய பாவம்னு நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன் ” என்றவள் அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பினாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured