FLING 18
முகேஷ் தீரனிடம் அகலிகா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட.. , அகலிகா மீண்டும் தீரனின் பக்கம் திரும்பினாள். அவளது கட்டுப்பாடு உடைந்தது. அவள் நாற்காலியைப் பிடித்துக்கொண்டாள்.
“தீரன் ஏன் இப்படிப் பண்றீங்க ? இது என்ன நியாயம்? நீங்க என்னை அங்கேயும் வச்சு உங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க தானே கூப்பிடுறீங்க, இல்லையா? ‘Personal Assistant’ னா என்ன அர்த்தம் உங்களுக்கு?” என்று கேட்டாள்.
தீரன் நாற்காலியில் இருந்து எழுந்து, மெதுவாக அவள் அருகில் வந்தான். அவன் கைகள் அவளது தோள்களை லேசாகத் தொட்டன. அந்தத் தொடுகையம், அதில் அவன் காட்டிய அழுத்தமும் அவளை தனக்கு கீழே கட்டுப்பட வைப்பது போல இருந்தது அகலிகாவுக்கு.
“அகலிகா, நிதானமா யோசி. நீ இந்த கேம்மை ஆரம்பிச்சப்போ, அது வெறும் ‘Fling’ மட்டும்தான். என்னோட உணர்வுகளைப் பத்தி நீ கொஞ்சமும் யோசிக்கல. . ஆனா, நீ என்கிட்டே சொல்லாம கொள்ளாம ஓடினப்போதான், இந்த கேம்-ல எனக்கு ‘Challenge’ வந்தது. உன் கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி உன்னோட சில காலம் இருக்கணும். நீதான் எனக்கு வேணும் அகலிகா. நீ என்னோட இருக்கும்போது, உன் குற்ற உணர்ச்சியும் குறையும், ” என்று தீரன் அழுத்தமான, ஆசை கலந்த குரலில் சொன்னான்.
அகலிகா அவனது கையைத் தட்டிவிட்டாள். “நான் பொம்மை இல்லை. நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்க.. நான் அங்க வந்தாலும், உங்க கட்டுப்பாட்டில் இருக்க மாட்டேன். நான் என் வேலைகளை மட்டும் பார்ப்பேன்.” என்றாள் தீர்க்கமாக.
தீரன் சிரித்தான். அவன் சிரிப்பில் அவளைப் பிடித்துவிட்ட சந்தோஷம் இருந்தது.
” பார்ப்போம்! நீ லண்டன்ல இருப்பே. நான் உன் பாஸ்-ஆக இருப்பேன். நான் உன் ‘CEO’ ஆக இருப்பேன். நீ இந்த ‘Project’-க்காகக் காலையில இருந்து சாயங்காலம் வரை வேலை செய்வ. ஆனா, அதுக்கு அப்பறம், ராத்திரி நீ முழுவதுமாக என்னோட ‘Control‘-ல இருக்க போற… என் பேச்சைக் கேட்கலைன்னா, முகேஷ்கிட்ட அவனோட கல்யாணத்தை நீதான் கெடுக்கிறேன்னு அவனுக்குத் தெரிஞ்சா, என்ன ஆகும்? உன் வீட்டுக்கும், முகேஷுக்கும் உண்மை தெரியாமல் இருக்கணும்னா, நீ என் பேச்சைக் கேட்கணும்,” என்று அவன் மிரட்டினான்.
அகலிகாவை சம்மதிக்க வைக்க தீரனுக்கு முகேஷ் தான் ஆயுதமாக பயன்பட்டான். அவனால் அகலிகாவை தன் பக்கம் எளிதில் செய்துகொள்ள முடியும். அவளுக்கும், முகேஷிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்றால் அதை தீரன் எளிதில் செய்திருப்பான். அகலிகாவும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவன் மனதை புரிந்து கொண்டிருப்பாள்.
ஆனால் இப்பொது தான் கதையே வேறு ஆகிவிட்டதே. அவளுக்கும், முகேஷிற்கும் நிச்சயம் ஆனதால் அவளை என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது என்று அவள் பிடிவாதத்தில் இருந்தே தெரிந்து கொண்டான்.
அவளால் அவனது அதிகாரத்தில் இருந்தும், முகேஷுக்குச் செய்த நன்றிக் கடனிலிருந்தும் விடுபட முடியவில்லை. அவள் கண்களை மூடிக்கொண்டாள். ‘லண்டன்… அந்தத் தீரனின் பிடி. இனி என்ன நடக்கப் போகிறது?’ அவள் மனதிற்குள் துயரம் ஊற்றெடுத்தது.
அவள் மௌனத்தை ஒப்புதலாக எடுத்துக் கொண்ட தீரன், சிரித்தபடியே தனது PA ராகேஷிற்கு அழைப்பு விடுத்தான். அவளது மௌனம், அவனது திட்டத்திற்கான ‘அனுமதி’ என்று தீரன் நம்பினான்.
“ராகேஷ்! உடனே அகலிகாவின் லண்டன் பயண ஏற்பாடுகளைச் செய். நாளைக்கே அவ கிளம்பணும். எனக்கும் அவளுக்கும் ஒரே ‘Flight‘. பக்கத்துல பக்கத்துல சீட் இருக்கணும். அவசரமா வேலைய ஆரம்பிக்கணும். இங்கிருந்து ஒரு வாரத்திற்குள்ளேயே நம்ம ‘Project’-ஐத் தொடங்கணும். அவளுக்கு எந்தவிதக் குறையும் இருக்கக் கூடாது. நம்ம ‘Company Guest House’-ல, என் ரூமுக்குப் பக்கத்துல அவளுக்கு ரூம் ஏற்பாடு செய்,” என்று அகலிகாவின் அருகில் நின்றபடியே, அவளுக்குக் கேட்கும் வண்ணம் வேண்டுமென்றே உரத்த குரலில் உத்தரவிட்டான் தீரன்.
அகலிகா தனது தலையெழுத்தைத் தானே மாற்ற முடியாமல், அங்கேயே நின்றிருந்தாள். அவள் இப்போது லண்டனில், தீரனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகப் பணிபுரியப் போகும் ஒரு ‘Personal Assistant’ ஆக, ஒரு சிறைக்குள் செல்லப் போவதை உணர்ந்தாள்.
இனி மாறப்போவது ஒன்றும் இல்லை என்று எழுந்து வெளியே செல்லப்போனாள் . போன் பேசிவிட்டு திரும்பியவன் “நைட் சேம் தடவை, சேம் லொகேஷன் வந்திரு” என்றான்.
அவள் ஒரு நிமிடம் நின்றவள் பின் மீண்டும் கதவை திறந்து கொண்டு வெளியேறி இருந்தாள். அவனை ஒரு பார்வை பார்க்கவில்லை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவள் செய்கையில் தீரனுக்கு கோபம் வந்தாலும் , தன் வலிக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அகலிகாவை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய அகலிகா, தீரனைச் சந்திக்க அவன் தங்கியிருந்த ஆடம்பர ஹோட்டலுக்குச் செல்லவில்லை. அவள் மனதில் கோபமும், எதிர்ப்பும், அதைவிட அதிகமாகக் குற்ற உணர்ச்சியும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அவள் நாளை லண்டன் கிளம்ப வேண்டும். அதற்கு முன் இந்தக் கடைசி இரவை அவனது மிரட்டலுக்குப் பலியாகி அவனுடன் சண்டையிடவும், அழுது கழிக்கவும் அவள் விரும்பவில்லை.
தீரன், அகலிகா இன்று இரவு தன்னைச் சந்திக்க வரமாட்டாள் என்று எதிர்பார்த்தே இருந்தான். ஏனெனில், அவனது மிரட்டலுக்குப் பிறகு அவள் நிச்சயம் ஏதோ ஒரு ‘பிரேக்’ அல்லது வடிகால் தேடுவாள் என்று அவனுக்குத் தெரியும். அவனது கணிப்புத் தவறவில்லை.
மணி 11 -ஐ கடந்தும் அவள் வரவில்லை.
இங்கே அகலிகா பார்வதியுடன் ஒரு பிரபலமான, மங்கிய விளக்கொளியில் ஒளிரும் பப்பிற்குச் சென்றாள். அவள் இதற்கு முன் இவ்வளவு மது அருந்தியதில்லை. ஆனால், இன்று அவளுக்கு அந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை பிடிக்கவில்லை. தீரனின் பிடிவாதம், முகேஷின் பாசம் மற்றும் அவன் தன் குடும்பத்துக்குச் செய்த உதவி, நிச்சயதார்த்தப் பொறுப்பு, லண்டன் பயணம்… இவற்றிலிருந்து தப்பிக்க அகலிகாவிற்கு ஒரு ‘Emergency Exit‘ தேவைப்பட்டது.
“அஹி! என்ன டி இது? நீ இன்னைக்கு ரொம்பவே குடிக்கிற. உன்னோட லிமிட் இது இல்லைன்னு உனக்குத் தெரியும்ல? என்ன ஆச்சு உனக்கு? நாளையிலிருந்து லண்டன் ‘ப்ரொஜெக்ட் ‘ ஆரம்பமாகுதுன்னு சொன்னியே? ‘Chill out, Agalika. You are not a regular drinker’,” என்று பார்வதி எச்சரித்தாள். அவள் முகத்தில் கவலை தெரிந்தது.
அகலிகா வாய்விட்டுச் சிரித்தாள். அந்தக் சிரிப்பில் சந்தோஷம் இல்லை, ஒருவிதக் கொடூரமான விரக்தி இருந்தது. கண்களில் நீர் திரண்டிருந்தது.
அதை பார்த்து பார்வதிக்கு குழப்பம் ஆனது என்ன ஆச்சு இவளுக்கு என்ற ரீதியில் அகலிகாவை பார்த்தாள்.
“லண்டனா? ஹஹஹ! லண்டன்ல ஆரம்பமாகப் போறது என் கேரியர் ப்ராஜெக்ட் இல்லடி, என் கெட்ட காலம் . அதுக்கு நான் முதல்ல இங்க பிராக்டீஸ் எடுக்கணும்ல?” என்றாள். அவளது குரல் தழுதழுத்தது.
பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னடி உளறுகிற? நீ ஏன் இவ்வளவு ‘Tensed’-ஆ இருக்க? முகேஷ் கூட எதுவும் பிரச்சனையா? இல்லன்னா கல்யாண பயமா? உண்மையைச் சொல்லு. உன் ‘Stress Level’ ரொம்ப அதிகமா இருக்கு,” என்று அவள் கைகளைப் பற்றிக் கேட்டாள்.
அப்போதுதான், அகலிகாவின் மனக்கட்டுப்பாடு உடைந்தது. குடிபோதை அவளது மனதில் அழுதிக்கொண்டிருந்த விஷயங்கள், பார்வதியிடம் இருந்து சொல்லாமல் மறைத்த அனைத்தையும் பார்வதியிடம் கொட்ட ஆரம்பித்தாள்.
“நான் முகேஷை ஏமாத்தலடி! என்னைய மிரட்டுறான்! ஆதித்ய தீரன்… அவன்தான் அந்த ‘Fling’ ஆப்ல என்னோட பேசினவன்! அவன் சும்மா டெவலப்பர் இல்லடி, அவன் ‘AD டெக்னாலஜிஸ்’ ஓட CEO! அவன் தான் என்னை லண்டனுக்கு வரச் சொல்லி மிரட்டுறான்!” அவள் மேசையின் மீது முகத்தைப் புதைத்து அழுதாள்.
பார்வதி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் குடிபோதை தலைக்கேறியதால் தான் இவ்வாறு உளறுகிறாளோ என்று முதலில் நினைத்தாள். “என்னது?! அந்த ஆள் தீரனா?! நீ என்னடி சொல்ற? ஏன்டி அப்போவே என்கிட்ட சொல்லல?”
“ஆமா பாரு! அவன் தான். நான் அவனைச் பார்த்ததிலிருந்து அவன் என்னை விட்டுப் போகல. அவன் கல்யாணத்தை வெச்சு என்னை பயமுறுத்துறான் . என் அப்பாக்கு முகேஷ் பண்ணின உதவியைச் சொல்ல முடியாம மாட்டிக்கிட்டேன்! நான் லண்டன் போகலைன்னா, முகேஷ்கிட்ட நான் அவனோட FLING பண்ணினதை சொல்லிடுவேன்னு மிரட்டுறான்! இப்போ இந்த ‘Promotion’-ம் அவனோட வேலைதான். நான் அவனுக்கு ‘Puppet’ மாதிரி . அவன் சொன்னதைக் கேட்டுதான் நான் இன்னைக்கு ‘Yes’ சொன்னேன்,” என்று அழுது கொண்டே எல்லாவற்றையும் சொன்னாள்.
அவள் குற்ற உணர்ச்சியால் மேலும் முனகினாள். “பாரு! என் அப்பாவோட பிஸினெஸ்ல ஒரு வருஷத்துக்கு முன்னாடி பெரிய ‘Crisis‘-ல மாட்டுச்சு. முகேஷ் தான், யாருக்கும் தெரியாம, கோடி ரூபாய் கொடுத்து, அப்பாவோட மானத்தைக் காப்பாத்தினான். அவர் எங்க குடும்பத்துக்கு தெய்வம் மாதிரி. இந்த நிச்சயதார்த்தம் கூட அந்த நன்றிக்காகத் தான் நடந்தது. இந்த உண்மையைத் தீரன் தெரிஞ்சுக்கிட்டா, அவன் முகேஷோட நல்ல மனசை வச்சு, இன்னும் மோசமா என்னை மிரட்டுவான். அதனாலதான் என்னால யார்கிட்டயும் சொல்ல முடியலடி! நான் இப்ப ரொம்ப ‘Stuck‘ ஆகிட்டேன்,” என்று அகலிகா விசும்பினாள்.
“ஏய்! அஹி நீ அந்த நீரை சும்மா மீட் பண்ணிட்டு தானே வந்தே.. அதுக்கு ஏன் அவன் உன்னை பயமுறுத்தணும்” என்றாள்.
அலுத்து கொண்டிருந்த அகலிகா நிமிர்ந்து பார்வதியை பார்த்தாள். “இல்ல டி அதுக்கும் மேலையும் எங்களுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு”என்றாள்.
அதை கேட்டதும் பார்வதி அதிர்ச்சியோடு அகலிகாவை பார்த்தவள் “வாட்! ” என்றாள் நம்பமுடியாமல். பார்வதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் முகம் முழுவதும் அதிர்ச்சி பரவியது. அவள் அகலிகாவைத் தாண்டி, பப்பிற்குள் கண்களைச் சுழற்றினாள்.
“அஹி! நீ சொல்றது ரொம்பப் பெரிய விஷயம்! அவன் உன்னை பிளாக்மெயில் பண்ணினா, போலீஸ்க்குப் போகணும்! ஆனா, உன் கல்யாணம்…” என்று பார்வதி பேச ஆரம்பித்த போது, அவளது பார்வை திடீரென்று உறைந்தது.
