FLING 19
பார்வதியின் பார்வை, பப்பின் ஒரு இருண்ட மூலையில் இருந்த நபரின் மீது நிலைத்தது. அதுவரை தனது கவலையில் மூழ்கியிருந்த அகலிகா, பார்வதி திடீரென அமைதியானதைக் கண்டு, அகலிகா திரும்பி தனக்கு பின்னால் பார்த்தாள்
அங்கே, ஒரு மேசையின் ஓரத்தில், இருட்டில் மறைந்தபடி உட்கார்ந்து, இவர்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன். அவன் கையில் இருந்த ட்ரிங்க்ஸ் கிளாஸில் பப்பின் வெளிச்சம் லேசாக மின்னியது. அவன் முகத்தில் ஒருவிதக் குரூரமான, ஏளனமான சிரிப்பு படர்ந்திருந்தது. ஒரு பூனை எலியைப் பிடிப்பது போல் இருந்தது அவன் பார்வை.
அகலிகாவும் பார்வதியும் பேசியது அனைத்தையும் இருவருக்கும் தெரியாமல் கேட்டுவிட்டான் தீரன், அகலிகா எதற்கு பயந்தாலோ அது நடந்துவிட்டது.தீரன் தான் Fling-ல் பேசியவன், பிளாக்மெயில் செய்கிறான், முதல் இரவு பற்றி, ஏன் லண்டன் போகிறாள் என்பது என பார்வதியிடம் சொன்ன அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தான் என்பது அவனது அந்த ஏளனச் சிரிப்பிலேயே கண்டுகொண்டாள் அகலிகா.
அகலிகாவுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் குடிபோதை சட்டென்று குறைந்தது போல உணர்ந்தாள். ‘அவன் ஏன் இங்கே வந்தான்? அவன் எப்போது வந்தான்?’ என்ற கேள்விகள் அவளது மனதில் ஓடின.
பார்வதி, அகலிகாவின் கையைப் பிடித்து, “அஹி, நீ எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லிட்டியா? அவன் நாம பேசின எல்லாத்தையும் கேட்டுட்டான் போல இருக்கே? ,” என்று குழப்பத்தில் பேசினாள்.
தீரன் இப்போது மெதுவாக எழுந்து, அவர்களை நோக்கி வந்தான் . அவன் நடையில் ஒருவித அச்சுறுத்தல் இருந்தது. அவனது உடை இப்போது சாதாரண ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டாக இருந்தாலும், அவன் முகத்தில் இருந்த அதிகாரமும், புன்னகையும் அவன் ஒரு CEO என்பதை இருவருக்குமே உணர்த்தியது.
தீரன் அவர்கள் மேசைக்கு அருகில் வந்து நின்றபோது, பப்பிலிருந்த வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்தது.
“என்ன ஆச்சு? நாளைக்கு லண்டனுக்குக் கிளம்பப் போற , இங்க ‘Party’ பண்ணிக்கிட்டு இருக்க? சரி, உங்க ‘Conversation’ ரொம்பவே ‘Interesting’-ஆ இருந்தது. ஆமாம், அகலிகா… நீ முகேஷை ஏமாத்தப் போற விஷயம் எனக்குத் தெரிஞ்சதை, நீ ஏன் உன் ‘Best Friend’-கிட்டச் சொன்ன? என்கிட்ட சொல்லலாம் ஓகே , ஆனா உன் பிரென்ட்கிட்ட சொன்னது தப்பு. இல்லையா, பார்வதி?” என்றான் தீரன், கிண்டலான குரலில்.
அகலிகா கோபத்தில் வெடித்தாள். “நீங்க ஒரு கேவலமான ஆள்! நாங்க பேசினதை ஒட்டுக் கேட்கிற அளவுக்கு உங்களுக்குப் புத்தி போயிருச்சா தீரன்?” என்றாள்.
தீரன் கைகளைத் தட்டிச் சிரித்தான். “ஆமாம், நான் கேவலமான ஆள்தான். ஆனா, உன் ரகசியத்தைக் காப்பாத்த நான் தான் இருக்கேன். என் ‘PA’ இப்போ என் எதிரி ஆகக் கூடாது இல்லையா? இப்போ முடிவு பண்ணு! நாளைக்கு லண்டனுக்குக் கிளம்பப் போறியா? இல்லை இப்போவே முகேஷ்க்குப் போன் பண்ணி, ‘Fling’ ஆப்ல பேசினவ நீதான்னு சொல்லட்டுமா?, அவனுடைய வருங்கால மனைவி ஒரு ராத்திரி என்னோட இருந்தாள்னு சொல்லட்டுமா? அப்புறம் உனக்குக் கிடைச்ச இந்த ‘Promotion’-ஐ கேன்சல் பண்ணட்டுமா?” என்று தனது மொபைலை எடுத்து, முகேஷ் நம்பரை டயல் செய்வது போலக் காட்டினான் தீரன். அகலிகாவின் முகம் பயத்தில் வெளிறிப் போனது. அவள் இந்தச் சந்திப்பினால், தன்னுடன் சேர்த்து பார்வதியையும் ஆபத்தில் சிக்க வைத்துவிட்டதை உணர்ந்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர், தன் குடும்பத்தின் மீதான பயத்தினால் விளைந்த வலியைப் காட்டியது .
அகலிகாவின் நிலைமை இன்னும் மோசமானது. அவள் பார்வதியுடன் பகிர்ந்த ரகசியங்கள் அனைத்தும் இப்போது தீரனின் கையில் ஒரு ஆயுதமாக மாறிவிட்டன. பார்வதி திகைத்துப் போனாள்.
“போதும்! நிறுத்துங்க!” என்று அகலிகா கத்தினாள். “நான் நாளைக்குக் கிளம்புறேன். நான் உங்களுடன் லண்டனுக்கு வரேன். இது எல்லாம் ஏற்கனவே முடிவானது தானே.. மறுபடியும் எதுக்காக அதையே திரும்ப சொல்லி என்னை டென்ஷன் பண்றீங்க தீரன்”என்றாள் ஆதங்கத்தோடு.
“அது நீ ஆபீஸ்ல என்கிட்டே சொன்னது. ஆனா இப்போ உன் பிரென்ட் பார்வதியோட பேசுற அப்போ நீ மனசு மாறிட்டா என்ன செய்றது. அதனால தான் உனக்கு ரிமைண்ட பண்ணினேன்” என்றான் அவள் குடித்த மது கிளாஸை எடுத்து குடித்தபடி.
“எனக்கு எதையும் நீங்க ரிமைண்ட பண்ண வேண்டிய அவசியமில்லை.” என்றவள்
“நீங்க இவ்ளோ கேவலமா நடந்துக்கிறதை பார்த்தாலே எனக்கு உங்க கூட லண்டன் வர பயமா இருக்கு. அங்கேயும் இப்படி நடந்தா, நான் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன்.” என்றாள் தீர்க்கமாக.
தீரன் சிரித்துக்கொண்டே மொபைலை பாக்கெட்டில் வைத்தான். அகலிகாவின் தலையை மெல்லத் வருடிக்கொடுத்து. “நான் சொன்னா நீ கேப்பன்னு எனக்குத் தெரியும், அகலிகா. நீ என் பேச்சைக் கேட்கலைன்னா, உன் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காதுன்னு உனக்குத் தெரியும். இதுதான் உண்மை,” என்றவன், அவளது இந்தச் சரணாகதியைக் கண்டு கர்வத்துடன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒருவித திருப்தியான மகிழ்ச்சி தெரிந்தது.
அவன் கண்களில் ஒருவித அழுத்தம் தெரிந்தது. “அது உன் சாமர்த்தியம். நீ என் ‘PA’. நீ என் பேச்சைக் கேட்டே ஆகணும். இப்பவே கிளம்பு. உனக்கு நான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணியிருக்கேன். நாளைக்கு விடியற்காலையிலேயே ‘Flight’. நீ இங்க பார்வதியோட இருந்தா, அனாவசியமா மறுபடியும் அதிகமா குடிச்சு எல்லாத்தையும் உளறிட்டு இருப்ப,” என்றான்.
அகலிகா அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் குரலில் வெறுப்பு மேலோங்கியது. “உங்களுக்கு என் மேல ஒரு துளி கூட இரக்கம் இல்லையா? வெறும் பிடிவாதமா? நான் யாருன்னு தெரியாம விளையாடிட்டு, இப்போ என் வாழ்க்கையையே நாசம் பண்ணப் பார்க்கிறீங்க. உங்களை நிஜமாவே நான் வெறுக்கிறேன்!” என்றாள்.
தீரன் அவளது உணர்வுகளைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை. “நீ என்னைப் பத்தியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. உன்னோட வெறுப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. அதுவும் ஒரு வகை சந்தோஷம் தானே?” என்றான் சிரித்துக்கொண்டே
“நீங்க என்னை ரூமுக்கு வரச் சொல்ல முடியாது! நான் நாளைக்கு லண்டன் கிளம்பணும்! எனக்கு ரெஸ்ட் தேவைப்படுது.” அகலிகா கோபத்துடன் கத்தினாள்.
“ஆமாம், லண்டன் போறதுக்கு முன்னாடி, இன்னைக்கு ராத்திரி நீ என்னோட இருந்தே ஆகணும். ஆனா, நான் உன்னை என் ரூமுக்கு வரச் சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் உன்னை வற்புறுத்தலை. நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன், அகலிகா. உன் எல்லாப் பிரச்சினைகளையும் மறந்து, ஒரு ‘ஃபிலிங்’ ஆக மட்டும் இந்த ராத்திரியை நம்ம கொண்டாடலாம். உன் இஷ்டம்தான். ஆனா, இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விட்டா, நாளைக்கு லண்டன்ல உனக்கு என்கிட்ட இருந்து எந்தவிதமான ‘Privacy‘-யும் கிடைக்காது. உனக்கு என்ன வேணும்னு முடிவு பண்ணு,” என்று தீரன் இப்போது தன் மிரட்டலை ‘சாய்ஸ்‘ கொடுப்பது போல் மாற்றினான்.
பார்வதி, அந்தச் சூழலில் நிலவிய இறுக்கத்தைக் கண்டு பயந்துபோயிருந்தாலும், தனது நண்பியின் சார்பாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
“சார்! நீங்க பண்றது தப்பு! ஒரு பொண்ணை இப்படி மிரட்டி, அவளை உங்களுடன் இருக்கச் சொல்லி…” என்று பார்வதி பேச ஆரம்பித்தாள். அவளுக்குத் தீரனைப் பார்த்தாலே பயமாக இருந்தது, இருப்பினும் அகலிகாவிற்காகப் பேசினாள்.
தீரன் பார்வதியைப் பார்த்தான். அவனது பார்வை ஊடுருவிச் செல்வது போல இருந்தது. அவன் ஒரு கணம் அமைதியாக நின்றான்.
“நீ யாரு? என் பிசினஸ் மேட்டர்ல தலையிட? நீ உன் வேலையை மட்டும் பார். இல்லன்னா, அகலிகாகூடச் சேர்ந்து நீயும் ஒரு ‘Side Character’-ஆ என் கதையில வர வேண்டி இருக்கும்,” என்று ஆரம்பத்தில் அலட்சியமாகப் பேசினான்.
“நான் அகலிகாவோட ஃபிரண்ட். நீங்க பண்றது அநியாயம்! நான் போலீஸ்க்குப் போவேன்! உங்களோட இந்தப் பிளாக்மெயில் எல்லாம் வெளியே தெரியணும்,” என்று பார்வதி தைரியத்தைக் கூட்டிக் கொண்டு மிரட்டினாள்.
தீரன் ஏளனச் சிரிப்புடன் தனது மொபைலைத் திருப்பி, ஏதோ ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்தான். “போலீஸ்க்குப் போவியா? நீயும் இந்த ‘Fling’ ஆப்ல ‘Fake ID’ வெச்சுக்கிட்டு, ‘Fun’ பண்ணினதை வெச்சு, உன் வீட்ல சொல்லட்டுமா? உன் ப்ரொபைல் பத்தி என்கிட்ட எல்லா ‘Details’-உம் இருக்கு. ‘Paru_1’-ஐ தேடும்போது, அவளோட க்ளோஸ் காண்டாக்ட்ஸ் என் ‘Server’-ல பதிவு ஆச்சு. இப்போ, உன் ‘Privacy’ உன் கையிலதான் இருக்கு. அகலிகாகூடச் சேர்ந்து, நீயும் ‘Trouble’-ல மாட்டிக்காத. ரெண்டு பேரோட ரகசியம் என் கையில இருக்கு,” என்று அவளையும் தன் வலிக்கு கொண்டு வந்துவிட்டான்.
தீரன் இந்த வார்த்தைகளைக் கூறியதும், பார்வதியின் முகம் வெளிறிப்போனது . அவளும் சில மாதங்கள் முன், ஒரு போலியான ஐடி வைத்துக் கொண்டு ‘Fling’ ஆப்பில் உலாவியது உண்மைதான். ஆனால் அதில் இருந்து கொண்டு மற்றவர்கள் ப்ரோபைலை மட்டும் தான் போய் பார்த்தாள். அவளுக்கு fling இல் இருந்து மற்றவர்கள் சேட் அனுப்பியதை தான் எடுத்து வைத்து அதை தன்னோடு இணைத்து பேசினான். தனது தனிப்பட்ட ரகசியத்தை வைத்துத் தீரன் மிரட்டும்போது, அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவள் பயத்தில் உறைந்து போனாள்.
தீரன் மீண்டும் அகலிகாவைப் பார்த்தான். அவனது கண்களில் ஒருவித சவால் இருந்தது. “முடிவு பண்ணியாச்சா, அகலிகா? நான் உன்னை ஹோட்டலுக்கு வரச் சொல்லி மிரட்டல. ஆனா, நீ என்னோட வராத ஒவ்வொரு நிமிஷமும், நாளைக்கு லண்டன்ல உனக்குக் கிடைக்கப்போற ‘Freedom’ குறையும். உன் கையிலதான் உன் சாவியும் இருக்கு,” என்று அவள் மனசாட்சியுடன் ஒரு விளையாட்டை ஆரம்பித்தான்.
அகலிகா அந்தப் பப்பில் நிலவிய சலசலப்பைப் பார்த்தாள். அவள் திரும்பிப் பார்வதியைப் பார்த்தாள். பார்வதியின் பயம் அவளைப் பேச விடவில்லை. அகலிகாவின் மனதில், முகேஷின் கடன், பார்வதியின் ரகசியம், தீரனின் பிடிவாதம் என அனைத்தும் கலந்த ஒரு சுமை அழுத்தியது. வேறு வழியில்லை.
அவள் எந்தவிதமான மறுப்பும் பேசாமல், மெளனமாகத் தலையசைத்தாள். அது சம்மதம் அல்ல; நிர்ப்பந்தத்தின் எதிரொலி.
“குட் கேர்ள்,” என்று தீரன் கிண்டலாகச் சொன்னவன். “ஹோட்டலுக்குக் கிளம்பு. நான் அங்க உனக்காகக் காத்திருக்கேன். உனக்கு ஒரு ‘Choice‘ கொடுக்கிறேன். நீ குளிச்சு, உன்னோட பெர்சனல் உடைகளைப் போட்டு, எனக்காகக் காத்திரு. நீ வராத ஒவ்வொரு நிமிஷமும், நாளைக்கு லண்டன்ல உன் ‘Job Description’ மாறும்.”
