FLING 30
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பனிமூட்டமான காலைப் பொழுதில், அந்த விமான நிலையத்தின் புறப்பாடு டிபார்ச்சர் பகுதியில் நான்கு பேர் நின்றிருந்தனர்.
முகேஷ் அகலிகாவின் கைகளைப் பிடித்தபடி ஏதோ சொல்லிக்கொண்டிருக்க அவனை விட்டு விலக முடியாமல் அகலிகா திண்டாடிக்கொண்டிருந்தாள், அவளை போலவே தான் தீரனின் நிலையம் இருந்தது. ரியா தீரனின் கையைப் பிணைத்துக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசுவதில் கவனம் கொள்ளாமல் தீரனின் கண்கள் அகலிகாவையே வட்டமிட்டன.
அவனது தொண்டைக்குள் ஒரு பாரம் ஏறியிருந்தது. எத்தனையோ ரகசியங்களை, எத்தனையோ ஆழமான முத்தங்களை இந்த லண்டனில் அகலிகாவிடம் பகிர்ந்திருந்தான். ஆனால் இப்போது, எல்லோரும் முன்னிலையிலும் அவளிடம் ஒரு அந்நியனைப் போலத்தான் விடைபெற வேண்டியிருந்தது. அகலிகாவிடம் ஒரு வார்த்தை கூடத் தனியாகப் பேச முடியவில்லை என்பது தீரனைப் பித்தாக மாற்றியது.
“பாத்துப்போ அகலிகா… சென்னை போனதும் மொத வேலையா எனக்குப் போன் பண்ணு. ஊர்ல இருந்து என் அம்மாவும், உன் அம்மாவும் உன்னை பார்க்க வருவாங்க,, அவங்களை நம்ம கெஸ்ட் ஹவுசில் தங்க சொல்லி இருக்கேன். நீயும் நேரா அங்க போய்டரியா?” என்றான்.
“இ..இல்ல முகேஷ். நான் என் பிரென்ட் கூடவே இருக்கேன். அவங்க வந்ததும் அவங்களை பொய் மீட் பண்றேன் ” என்றாள். அவளுக்கு முகேஷின் வசதி வாய்ப்பை பயன்படுத்த பிடிக்கவில்லை.
அவளால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இப்பொது இருக்கிறாள். “நீ எதை பத்தியும் யோசிக்காம பிரீயா இரு. ஒரு 1 வீக்ல நான் வந்துருவேன். அதுக்கு பிறகு நம்ம கல்யாணத்துக்கு வேண்டிய அர்ரேஜ்மெண்ட்ஸ் எல்லாம் பாத்துக்கலாம். நீ வந்து மணமேடையில் வந்து என் பக்கத்துல உக்காந்தா மட்டும் போதும் ” என்றவன் அகலிகாவை நெருங்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அந்தக் காட்சியைப் பார்த்த தீரனின் கை விரல்கள் இறுகின. முகேஷ் என்னவோ உண்மையான அன்பை தான் அகலிகாவிடம் காட்டுகிறான். ஆனால் அது தீரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதை தன்னால் தடுக்கவும் முடியாது என்ற நிலையில் அவன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு தான் இருந்தான்.
அவன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேறு பக்கம் திரும்பினான்.
ரியா தீரனை உலுக்கி, “என்ன தீரன்? அகலிகா கிளம்பறா… நீ ஒன்னுமே சொல்லாம நிக்கிற? ” என்றாள்.
தீரன் கஷ்டப்பட்டு ஒரு சிரிப்பை உதிர்த்தான். “
பத்திரமா போய்ட்டு வா அகலிகா. ப்ராஜெக்ட் ரிப்போர்ட்ஸ்ல ஏதாவது டவுட் இருந்தா மெயில் பண்ணு,” என்றான் மிகவும் ஃபார்மலாக.
அகலிகா அவனது கண்களைப் பார்த்தாள். அவன் கண்கள் கெஞ்சின… தவித்தன… கதறின. அவளுக்கும் அவனிடம் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருந்தன. ஆனால் மௌனம் மட்டுமே அவளிடம் மிஞ்சியது. அவளால் தன் மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவனிடம் காட்டவும் விருப்பம் இல்லை அகலிகாவிற்கு.
அப்போது விமான நிலையத்தில் திடீரென்று ஒரு அறிவிப்பு வந்தது. “பயணிகள் கவனத்திற்கு… சிஸ்டம் கோளாறு காரணமாகச் சோதனைகள் தாமதமாகும். அரை மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.” என்று வந்தது.
முகேஷ் அதை கேட்டதும். “ஐயோ! அரை மணி நேரமா? சரி… அகலிகா, நீ இங்கேயே இரு. நான் போய் உனக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றேன்.”என்றவன். “ரியா, நீ என் கூட வரியா? இங்க இருக்குற டூட்டி ஃப்ரீ ஷாப்ல உனக்கு ஏதாவது வேணும்னா பாரு,” என்றான்.
ரியா உற்சாகமாக, “ஓ! கண்டிப்பா முகேஷ்! தீரன், நீ அகலிகா கூட இரு, நாங்க இப்போ வந்திடுவோம்,” என்று சொல்லிவிட்டு முகேஷுடன் ஓடினாள்.
அவர்கள் மறைந்த அந்த நொடி, அந்த பரபரப்பான விமான நிலையத்தில் தீரனும் அகலிகாவும் தனிமையில் விடப்பட்டனர்.
தீரன் ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை. அவன் வேகமாக அகலிகாவின் கையைப் பற்றி இழுத்து, ஒரு பெரிய தூணிற்குப் பின்னால் இருந்த மறைவான இடத்திற்கு அவளை கூட்டிச் சென்றான்.
“தீரன்… என்ன பண்றீங்க? றிய, முகேஷ் வந்துட போறாங்க! நாம இப்படி மறைவா இருக்கறதை அவங்க பாத்துட்டா அவ்ளோதான் !” என்று பதறினாள் அகலிகா.
தீரன் அவளைச் சுவற்றோடு சேர்த்து அணைத்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. “பாக்கட்டும் அகலிகா! எனக்குக் கவலையில்லை. இவ்வளவு நேரம் அவங்க முன்னாடி உன்கிட்டப் பேச முடியாம நரகத்தை அனுபவிச்சேன். நீ நிஜமாவே என்னைத் தனியா விட்டுட்டுப் போறியா?” என்றான் ஏக்கமாக.
அகலிகா கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். “தீரன்… நீங்க தான் என்னை அனுப்பி வைக்கிறீங்க. இப்போ இப்படிப் பேசுறதுல என்ன யூஸ்? இப்படி கிளம்புற என்னை நிறுத்தி இப்படி ஒரு கேள்வி கேக்குறதுல என்ன ஆகிடப்போகுது” என்றாள் விரக்தியாக.
“தெரியும்… நானே தான் உன்னை அனுப்பி வைக்கிறேன். ஏன்னா உன்னோட சந்தோஷம் முக்கியம்னு நினைச்சேன். ஆனா இப்போ நீ போகப் போறேன்னு தெரிஞ்சதும், என் இதயம் சுக்குநூறா உடையுது. உன்னால எப்படி இவ்வளவு அமைதியா இருக்க முடியுது அஹி? முகேஷ் உங்கடை நெருக்கமா பேசுறது அவன் உனக்கு முத்தம் கொடுத்தது என்னால பார்க்க முடியல ” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.
அகலிகா அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். “நான் அமைதியா இருக்கேன்னு யாரு சொன்னா? இங்க பாருங்க… என் கை நடுங்குது. ஒவ்வொரு நிமிஷமும் முகேஷ் கண்ணைப் பார்க்கும்போது அவனுக்கு பெரிய துரோகத்தை செய்துட்டேன்னு என் குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுது டா. ஆனா அதே சமயம், உன் தொடுதல் இல்லாம என்னால இருக்க முடியாதுன்னும் தோணுது. நான் என்ன பண்ணுவேன்?” என்று அழுதாள்.
தீரன் அவளது கண்ணீரைத் துடைத்தான். “அகலிகா… என்னை மன்னிச்சிடு. உன்னை என் மிரட்டலுக்கு கட்டுப்பட வெச்சி தான் இங்க அழைச்சிட்டு வந்தேன். அங்க தான் இது எல்லாம் ஆரம்பிச்சுது. ஆனா… ஆனா நீ இப்போ என் உயிராவே மாறிட்ட. அங்க போனதும் முகேஷ் உன்னைத் தாலி கட்டி கூட்டிட்டுப் போவான். நான் ரியாவுடன் வாழ பழகிக்கணும். ஆனா இது எல்லாம் சரியா வருமான்னு எனக்கு தெரியல அஹி , என் முத்தங்கள் உனக்கு ஞாபகம் வரும்ல? அந்த நினைவோடவே நீ வாழணுமா? என்னாலையும் நமக்குள்ள நடந்த எதையும் மறக்க முடியாது. நான் தப்பு பண்ணிட்டேன் உன்னை இங்க கூட்டிட்டு வந்து பெரிய தப்பு பண்ணிட்டேன். அந்த தப்புக்கான தண்டனையை நீ இப்போ என்னை விட்டு போறதை ஏத்துக்கிறேன் ” என்று தன் மனதில் இருந்ததை அவளிடம் சொன்னான் .
அகலிகா விம்மினாள். “வேற வழி என்ன தீரன்? நீங்க எனக்குப் பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கீங்க. ‘உன் வாழ்க்கையை நீ வாழு’ன்னு சொன்னீங்க. இப்போ ஏன் என் மனசைக் கலைக்கிறீங்க?” என்று அவனை ஏறிட்டாள்.
“ஏன்னா எனக்கு பயமா இருக்கு அகலிகா! நீ போனதுக்கு அப்புறம் நான் எப்படி இந்த லண்டன்ல இருப்பேன்? இந்த அப்பார்ட்மெண்ட், அந்த கிச்சன், அந்த எட்டாவது மாடி… எல்லா இடத்துலயும் உன் வாசனை இருக்கும். நீ இல்லாம அந்த இடங்கள் எல்லாம் எனக்குப் வெறுமையா தான் தெரியும்,” என்றான் தீரன் வருத்தத்துடன்.
அகலிகா அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “தீரன்… இது ஒரு ‘பிளிங்’ ரிலேசென்ஷிப் . இது இங்கேயே முடியணும். அங்க இந்தியாவுல நாம வேற வேற ஆளுங்க. நீங்க ரியாவோட கணவர், நான் முகேஷோட மனைவி. அந்தத் தூரத்தை நாம கடைபிடிச்சே ஆகணும்.” என்றாள் உறுதியாக.
தீரன் அவளது முகத்தை ஏந்தினான். “முடியுமா அகலிகா? ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற இந்தத் தாகத்தோட, நாம வேற ஒருத்தர் கூட வாழ முடியுமா?”என்றான் கேள்வியாக.
“வாழ்ந்து தான் ஆகணும் தீரன். இது நாம செஞ்ச தப்புக்கு நமக்கு கிடைக்கிற தண்டனை,” என்றாள் அகலிகா உறுதியாக.
தீரன் அவளது இதழ்களை ஆழமாக நோக்கினான். “கடைசியா ஒரே ஒரு முறை அகலிகா… இனிமேல் உன்னைத் தொட எனக்கு உரிமை இருக்காது. ஒரு நண்பனா மட்டும் தான் பார்க்க முடியும். அந்த ஒரு முறையாவது எனக்காக…” என்று அவன் பேசும் போதே, அகலிகா அவனைத் தன் பக்கம் இழுத்து அவனது இதழ்களில் முத்தமிட்டாள்.
அந்த முத்தத்தில் பிரிவின் வலி இருந்தது. இதுவரை அவர்கள் பகிர்ந்து கொண்ட காமத்தை விட, இப்போது இருந்த அந்த உணர்ச்சிப் பிணைப்பு மிகவும் ஆழமாக இருந்தது. ஒருவரையொருவர் பிரிய மனமில்லாமல், அந்த மறைவிடத்தில் அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். அகலிகா முதல் முறை அவன் வற்புறுத்தல் இல்லாமல். கடமையே என்று இல்லாமல் அவளாகவே முத்தம் கொடுக்கிறாள்.
“ஐ லவ் யூ அகலிகா… ஆனா இதைச் சொல்றதுக்கு எனக்குத் தகுதி இல்லைன்னு எனக்குத் தெரியும்,” என்று தீரன் முணுமுணுத்தான்.
அகலிகா அவன் கண்களைப் பார்த்தாள். “என்னை மறக்காதீங்க தீரன். அந்த ஒரு ஞாபகம் போதும், நான் மிச்ச காலத்தை ஓட்டிடுவேன்.” என்றாள்.
தூரத்தில் முகேஷ் மற்றும் ரியாவின் குரல் கேட்டது. அகலிகா சட்டென்று தீரனிடம் இருந்து விலகி, தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“அகலிகா! தீரன்! எங்க இருக்கீங்க?” – முகேஷ் தேடி வந்தான்.
அவர்கள் இருவரும் ஒன்றுமே தெரியாதது போலத் தூணிற்குப் பின்னால் இருந்து வெளியே வந்தனர்.
“இங்க தான் முகேஷ்… அகலிகாவுக்குக் கொஞ்சம் ‘ட்ராவல் சிக்னஸ்’ மாதிரி இருந்தது, அதான் இங்க உட்கார வச்சிருந்தேன்,” என்று தீரன் சமாளித்தான்.
முகேஷ் பதறிப்போய் அகலிகா அருகில் வந்தான். “என்ன அகலிகா? உடம்புக்கு என்ன பண்ணுது? வேணும்னா ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிடலாமா?” என்றான்.
அகலிகா தீரனைப் பார்த்தாள். அவன் கண்களில் ஒரு நிமிடம் ‘ஆமாம், கேன்சல் பண்ணிடு’ என்ற ஆசை தெரிந்தது. ஆனால் அகலிகா தலையாட்டினாள். “இல்ல முகேஷ்… இப்போ பரவாயில்லை. நான் கிளம்புறேன்.” என்றாள். இனியும் இந்த பாலும் மனதின் பேச்சை கேட்டு எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்க அவள் விரும்பவில்லை.
இறுதியாக, செக்யூரிட்டி செக் உள்ளே செல்லும் நேரம் வந்தது. அகலிகா தன் பையை எடுத்துக் கொண்டாள்.
முகேஷை ஒருமுறை அணைத்துக் கொண்டாள். ரியாவிற்கு விடை கொடுத்தாள். கடைசியாகத் தீரன் முன்னால் வந்து நின்றாள்.
அவன் கையை நீட்டினான். அவள் அவன் கையைப் பற்றினாள். அந்த நிலையிலும் தீரனின் அந்தச் சிறு தீண்டலில் மின்சாரம் பாய்ந்தது அவளுக்குள். “வெட்கம் கெட்டவளே என்று மனதிற்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்”.
“பத்திரமா போயிட்டு வா… பாரு_1,” என்று தீரன் ரகசியமாகச் சொன்னான்.
அகலிகா ஒரு மெல்லிய புன்னகையுடன், “பாய் தீரன்,” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் உள்ளே நடந்தாள்.
தீரன் அங்கேயே நின்றான். அவள் கூட்டத்திற்குள் மறையும் வரை அவன் கண்கள் அவளையே பின்தொடர்ந்தன.
முகேஷ் தீரனின் தோளில் கை வைத்தான். “என்னடா தீரன்? அகலிகா போனது உனக்கும் வருத்தமா இருக்கா? நீயும் அவளும் லண்டன்ல ஒன்னா வேலை பார்த்தீங்கல்ல, அந்தப் பழக்கம் தான்,” என்றான் வெள்ளந்தியாக.
தீரன் பதில் சொல்லவில்லை. அவனது கையில் இன்னும் அகலிகாவின் ஸ்பரிசம் அப்படியே இருந்தது.
