FLING 12
மறுநாள் காலை. நிச்சயதார்த்தம் முடிந்த களைப்புடன், முகேஷ் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். தீரனும் அகலிகாவும் முகேஷின் காரிலேயே பயணிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கார் வந்து நின்றதும் அகலிகா மெதுவாக வந்து பின்னால் ஏறினாள் . அவளது முகம் முழுவதும் சோர்வு படர்ந்திருந்தது கண்கள் லேசாக சிவந்தும் இருந்ததுதீன் வந்துவிடு போனதில் இருந்து அவளுக்கு தூக்கம் தொலைந்து போயிருக்க வேண்டும் . ஒரு பெரிய மாஸ்க் ஒன்றை முகத்தில் அணிந்திருந்தாள். அவளது கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது .
“ஏய் அகலிகா! என்ன இது, சென்னைக்குள்ளே போறதுக்குள்ளே மாஸ்க் போட்டிருக்க? என்ன ஆச்சு உனக்கு ?” என்று அக்கறையுடன் கேட்டான் முகேஷ்.
“எனக்குக் கொஞ்சம் கோல்டு முகேஷ். மத்தவங்களுக்குப் பரவக் கூடாதுன்னுதான் மாஸ்க் போட்டிருக்கேன்,” என்று அகலிகா மெல்லிய குரலில் சொன்னாள், .
ஆனால், காரின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த தீரன், ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தான். அவள் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியுமே. நேற்றிரவு அவன் கோபத்துடன் அவள் உதடுகளில் கொடுத்த முத்தத்தின் காயம் இன்னும் வடியாமல் இருக்க வேண்டும். அவனது முரட்டுத்தனத்தின் தடம் அது. அவளது அந்த அமைதியான வலி அவனுக்கு ஒரு திருப்தியைக் கொடுத்தது.
“டப்ளேட்ஸ் எதுவும் எடுத்துகிட்டியா? இல்ல போற வழியில் டாக்டரை பார்த்துட்டு போலாமா?” என்றான் முகேஷ் அக்கறையாக.
“இல்ல முகேஷ் , வேண்டாம் . நான் டப்ளேட்ஸ் எடுத்துட்டேன் ” என்றாள்.
இவர்கள் பேசுவதை கேட்டபடி அமைதியாக அமர்ந்து இருந்தான் தீரன்.
முகேஷ் வந்து டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் . “மூணு பெரும் ஊருக்கு போனதுமெனக்கு மறக்காம கால் பண்ணனும் ” என்றார் முகேஷின் அம்மா.
“ஓகே ம்மா ! நீங்க சென்னை வர அப்போ மறக்காம சொல்லுங்க, நானா வந்து உங்களை பாக்குறேன்” என்ற தீரன் அவரிடம் விடை பெற கார் கிளம்பி நெடுஞ்சாலையில் விரைந்தது.
தீரன், அகலிகாவைச் சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், அவன் கண்ணாடியின் பிம்பத்தில் அவளைக் கவனித்துக் கொண்டே வந்தான். அவனது மனதில், ‘நீயும் ஒரு ஏமாற்றுகாரிதான். என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருக்க. உன்னை நான் சும்மா விட மாட்டேன்,’ என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருந்தது அவன் மனதில்.
முகேஷ் மட்டுமே வழி நெடுக பேசிக்கொண்டு வந்தான். அவ்வப்போது அவன் கேட்கும் கேள்விகளுக்கு அகலிகா பதில் அளித்தாள். சிறிது நேரத்தில் டயர்டாக இருக்கிறது என்று கண்மூடி படுத்துக்கொண்டாள்.
அவளுக்கு தூக்கம் வரவில்லை , தூங்கவும் முடியவில்லை. தீரன் இருக்கிறான் என்கின்ற நினைப்பே அவளுக்கு தூக்கம் வராமல் போனது.
சென்னை நகரின் எல்லையை கார் நெருங்கியது. “முகேஷ் ஒரு காபி சாப்பிடலாமா?”என்றான் தீரன்.
“ஆமா டா எனக்கும் கொஞ்சம் டையர்டா தான் இருக்கு ” என்றவன் ரியர் மிரரில் தெரிந்த அகலிகாவை பார்த்து “அஹி! உனக்கு என்ன வேணும் சாப்பிட”என்றான்.
யோசித்து யோசித்து தலை வலி தான் வந்திருந்தது அவளுக்கு. தானும் ஒரு காபி குடித்தாள் தேவலாம் என்று தோன்றியது. தவிர அடிவயிறு வேறு முட்டிக்கொண்டு வந்திருக்க , ” எனக்கும் காபி ஓகே முகேஷ்” என்றாள்.
சென்னை புறநகர் பகுதியில் ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட்டை பார்த்து வண்டியை நிறுத்தினான் முகேஷ்.
கார் நின்றதும் இறங்கி பெண்கள் கழிப்பறை நோக்கி சென்றாள் . இவர்கள் இருவரும் ரேடராண்டுக்கு சென்று 3 காபி ஆர்டர் செய்துவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
தீரன் காபியை வேண்டுமென்றே மெல்ல குடித்தான். அகலிகாவின் வருகைக்காக காத்திருந்தது போல..
அவளும் சற்று நேரத்தில் வந்துவிட.. முகேஷ் அருகில் வந்து அமர்ந்தாள்.
வந்தவள் காபியை குடிக்காமல் அமர்ந்து இருக்க…
“என்ன அகலிகா காபி குடிக்கலையா?” என்றான் முகேஷ்.
“காபி கொஞ்சம் சூடா இருக்கு குடிக்கிறேன்” என்றாள். அவளுக்கு முகேஷின் முன் மாஸ்க்கை கழட்ட சங்கடமாக இருந்தது. தனக்கு கோல்ட் என்று பொய் சொல்லி இருக்கிறாளே . இப்போது மாஸ்க்கை கழட்டினாள் அவள் உதட்டில் தீரன் ஏற்படுத்திய காயம் வெளிப்பட்டுவிடுமே… என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்.
“நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்” என்று முகேஷ் எழுந்து செல்ல…
தனியாக தீரனிடம் சிக்கிவிட்டோம் என்று தோன்றியது அவளுக்கு.
“என்ன காயம் பலமா ஆகிருச்சா?” என்றான் காபியை குடித்துக்கொண்டே.
மாஸ்க்கை கழட்டப் போனவள் அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
தீரனோ வேறு பக்கம் பார்த்துக்கொண்டே “சீக்கிரம் காபியை குடி , அப்பறோம் முகேஷ் வந்து உன் லிப்ஸ்ல இருக்க காயத்தை பார்த்துடாப் போறான்” என்றான் நக்கலாக.
அவனை முறைத்துவிட்டு மாஸ்க்கை கழட்டியவள் “நீங்க பண்ணின காரியத்துக்கு பெருமையா சிரிக்குறிங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா? நான் முகேஷோட மனைவி ஆகப்போறவ, என்கிட்டே இப்படி அத்துமீறி நடந்துக்கிறிங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என்றாள் கோபம் தாங்காமல்.
“அத்து மீறுறேனா? நானா? ” என்று சத்தமாக சிரித்தவன்.
“காரியம் முடிஞ்சதும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போன நீ அதை எல்லாம் பத்தி பேசவே கூடாது.” என்று மேஜையில் காபி கப்பை வைத்தவன் சட்டென்று அவள் முகத்திற்கு முன் வந்தவன். “உன்னை எவ்ளோ தேடினேன் தெரியுமா? உன் பிரெண்டோட ID ல இருந்து எனக்கு FLING பண்ணி டேட் பண்ணினதும் இல்லாம , சுத்தமா நீ இருந்த தடமே தெரியாம கிளம்பி போயிட்டே இல்ல.. அது என்ன அர்த்தம். என்னை பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி தெரியுதா?” என்றான்.
“இல்ல.. நீங்க என்ன..”என்று பேச வந்தவள் முகேஷ் அருகில் வந்தது கவனித்ததும். அவசரமாக காபியை எடுத்து குடிப்பது போல பாசாங்கு செய்து. தன் உதட்டை மறைத்துக் கொண்டாள்.
“இன்னும் காபி குடிக்கிறியா நீ?” என்று வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
கப்பை வாயில் இருந்து எடுக்காமல் ஆம் என்று தலையை மட்டும் ஆடியவள் . தீரனை முறைத்தாள்.
அவனோ “நீங்க பேசிட்டு இருங்க நான் பில் பே பண்ணிட்டு வரேன்” என்று எழுந்தான்.
“இரு டா , நான் பே பண்றேன்” என்று முகேஷ் அவன் பின் எழுந்து போக..
அவன் சென்றதும் காபியை குடிக்காமல் வைத்தவள் மாஸ்க்கை அவசரமாக எடுத்து மாட்டிக்கொண்டாள்.
மூவரும் கிளம்பிவிட்டனர்.
காரில் ஏறியதுமே தீரன் தன் மொபைலை எடுத்து, தன் மற்றொரு எண்ணில் இருந்து அகலிகாவின் எண்ணுக்கு மெசேஜ் ஒன்றை டைப் செய்தான். முகேஷ் அவன் அருகில் இருந்ததால், சற்றும் சத்தம் எழுப்பாமல் மிக விரைவாக டைப் செய்தான்.
சென்னை நகரை அடைந்ததும், தீரனை பிக் அப் செய்ய அவன் வீட்டில் இருந்து கார் வந்திருந்தது. அவன் கிளம்புவதற்கு முன், தனது காரில் இருந்து அகலிகாவைப் பார்த்தான்.
அவளை பிக் அப் செய்ய பார்வதி வந்திருக்க… காரில் இருந்து இறங்கிய அகலிகா பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தாள். தீரனின் கண்கள் அவளது மாஸ்க்கின் மீது அழுத்தமாகப் பதிந்தது. அவள் தனது வலியை மறைக்கப் போராடுவது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
தீரன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
முகேஷ் அகலிக்கவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றான். அவன் சென்றதும் “என்ன டி! எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் ஜோடியா கிளம்பி வந்துட்டீங்க ரெண்டு பேரும் ” என்று அவள் தோளில் இடித்தாள் பார்வதி.
“ஹே! சும்மா இரு டி” என்று அவளை அதட்டியவள் வந்து வண்டியை எடு என்று அவளை தள்ளி விட.. பார்வதி வந்து தன் ஸ்கூட்டியை எடுக்க… அவள் பின் ஏறிக்கொண்டாள் அகலிகா. இருவரும் அங்கிருந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர்.
அகலிகா உள்ளே வந்ததும் தன் ஹாண்ட்பேக்கை கழட்டி மேஜையில் போட்டவள் அப்படியே மெத்தையில் சரிந்தாள்,
“ஆமா இது என்ன டி மாஸ்க் , நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் அதை கழட்ட மாட்டேங்குற நீ.. “என்று வந்து அவள் அருகில் அமர்ந்த பார்வதி அகலிகாவின் மாஸ்க்கை கழட்டிவிட..
“ஹே! என்ன டி பண்ற?” என்று அகலிகா தடுப்பதற்க்குள் மாஸ்க் அவள் கையேடு வநதுவிட்டது.
“ஹே! அஹி! என்ன டி உன் லிப்ஸ்ல காயம்!… முகேஷ் நேத்தே மேட்டரை முடிச்சுட்டானா?” என்றாள் ஆச்சர்யமாக அவளை பார்த்து சிரித்துக்கொடேன்.
“ஹே! அதெல்லாம் எதுவும் இல்ல டி.. இது .. இது நானே தெரியாம கடிச்சுக்கிட்டேன்” என்று சமாளிக்க பார்த்தாள்.
“ஹே! அது எப்படி அஹி! நீயே உன் லிப்சை கடிச்சுப்ப..நம்புற மாதிரியா இருக்கு” என்றாள் பார்வதி.
“நீ நம்பி தான் ஆகணும்” என்றவள் அவள் கையில் இருந்த மாஸ்க்கை பிடுங்கினாள்.
“சரி சரி நம்பிட்டேன். என்கிட்டே கூட சொல்ல மாட்டேங்குற பாத்தியா..” என்றாள் .
அப்போது அகலிகாவின் போனில் இருந்து ‘டிங்’ என்று நோட்டிபிகேஷன் சத்தம் ஒலித்தது. ஒரு புதிய எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது.
அவள் அதைத் திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள்.
“உன்னை முதன்முதலில் சந்தித்த அதே ஹோட்டலுக்கு, அதே அறைக்கு (Room Number 1504 ) இன்றிரவு வந்து சேர். இரவு 10:30 மணி.” என்று வந்திருந்தது.
அந்த மெசேஜ் தீரனுடையது என்று அவள் புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. ஏனெனில், அந்த ஹோட்டல், அந்த அறை எண் – இந்த ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது.
இவனுக்கு எப்படி இந்த என் நம்பர் கிடைத்தது என்று யோசித்தவள் “ம்ஹும்.. இவனுக்கு என் நம்பர் எடுப்பது அப்படி என்ன கஷ்டமா?”என்று நினைத்தவள் அவன் அனுப்பிய மெசேஜை மீண்டும் படித்தவள் கோபத்தில் அவள் போனை எடுத்துப் பதில் டைப் செய்தாள்”முடியாது. இனிமேல் உங்களைச் சந்திக்க முடியாது. என்னை விட்டிருங்க மிஸ்டர் தீரன்.” என்று அனுப்பினாள்.
அடுத்த நொடி, அவளது போன் மீண்டும் அதிர்ந்தது. தீரனிடமிருந்து அடுத்த மெசேஜ் வந்தது.
“நீ வரலையின்னாஉன் ரூம் தேடி வருவேன்,இல்ல… முகேஷிடம் நீ யார்னு சொல்வேன் . அவன் என்னோட பிரெண்டாவே இருந்தாலும் , நீ எவ்வளவு கேவலமானவள், ஒரு இரவுக்காக மட்டும் எவனோ ஒருவனுடன் படுத்துவிட்டு, இப்போது முகேஷை ஏமாற்றித் திருமணம் செய்யத் தயாரா இருக்கேன்னு சொல்லுவேன். இப்போ சொல்லு ரூமுக்கு வருவியா? மாட்டியா?” என்று பதில் மெசேஜ் அனுப்பினான்.
இந்த மிரட்டல் அகலிகாவை நிலைகுலையச் செய்தது. அவள் கைகள் நடுங்கின. இந்த ஒரு ரகசியத்தை வைத்துக்கொண்டு அவன் தன்னை மிரட்டுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் உள்ளம் வலித்தது. கண்ணில் நீர் திரண்டது. கோபமும் இயலாமையும் கலந்து, அவள் மீண்டும் போனில் பதில் டைப் செய்தாள்.
“ஏன் இப்படிப் பண்றீங்க? நீங்களும் இதே மாதிரிதானே கமிட்மென்ட் எதுவும் வேண்டாம்னு சொன்னீங்க. அப்புறம் ஏன் என்னை இப்படி டோர்சேர் பண்றீங்க?* எனக்கு விருப்பம் இல்லேன்னா விடவேண்டியது தானே.. ” என்றாள்.
அவளது மெசேஜுக்குப் பதில் வரவில்லை. அமைதி நீடித்தது. அவளுக்குத் தெரியும், அந்த அமைதி அவனது மிரட்டலின் ஆழத்தைக் குறிக்கிறது என்று. அவன் பதில் ஏதும் அனுப்பாத போதே கண்டிப்பாக அவள் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள் என்று புரிந்து போனது அகலிகாவிற்கு.
தீரனின் மிரட்டலுக்கு பயந்து அகலிகா செல்லப்போகிறாளா? பார்க்கலாம்..
