FLING 13
தீரன், அகலிகாவைச் சந்தித்த அதே ஹோட்டல் அறையில், அதே இடத்தில் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே, சரியாகப் பத்தரை மணிக்கு அவன் அறைக்கதவு லேசாகத் தட்டப்பட்டது. தீரனுக்குத் தெரியும், அகலிகா வந்துவிட்டாள் என்று. அவனது மிரட்டலுக்குப் பயந்து அவள் வந்தேயாக வேண்டும்.
வந்து கதவைத் திறந்தான். மாஸ்க் அணியாமல், சோர்வான முகத்துடன் அகலிகா நின்றிருந்தாள். அவள் கண்களில் கோபமும், பயமும் கலந்திருந்தது. அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு , எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் புன்னகைத்தான்.
அவன் புன்னகையைக் கண்டு அகலிகாவுக்கு கோபம் தான் வந்தது.
“நீ வருவேன்னு எனக்குத் தெரியும்,” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு, திரும்பி அறைக்குள் சென்றான்.
அகலிகா மௌனமாக நின்று இருந்தவள் , அவனது மிரட்டலுக்குக் கட்டுப்பட்டு அறைக்குள் வந்தாள். கதவை மெதுவாகச் சாத்திவிட்டு, தீரனைப் பின் வந்தவள் . அவன் நின்று தன்னை திரும்பி பார்க்கவும். சற்று தடுமாறனாலும் தன்னை சமாளித்துக்கொண்டு
“என்ன வேணும் உங்களுக்கு?” என்று கலங்கிய குரலில் கேட்டாள் அகலிகா. “நான் செய்தது தப்பு தான். அன்னிக்கு நான் உங்க கூட அப்படி இருப்பேன்னு நானே எதிர்பாராதது. அப்போ இருந்த என்னோட மனநிலையில் நீங்க என்னை நெருங்கின அப்போ என்னால நோ சொல்ல முடியல.. ஆனா அது தான் நான் செய்த மிகப்பெரிய தப்பு” என்று தன் நிலையை நொந்து கொண்டவள் அவனைப் பார்த்தாள்.
“ஆனா ஏன் என்கிட்டே சொல்லாம கிளம்பின, உடனே உன் பிரென்ட் அக்கோன்ட்டையும் டீயாக்டிவேட் பண்ணின.. அது தான் அது தான் என்னால தாங்க முடியல, சொல்லப்போனா அது என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிருச்சு டி. என்னை உன் தேவைக்காக யூஸ் பண்ணிட்டு மொத்தமா என்னை தூக்கி போட்டுட்டு போனமாதிரி ஒரு பீலிங் எனக்குள்ள வந்திருச்சு. அதை இப்போ வரை என்னால மறக்க முடியல” என்று கோபக்கனல் தெரிக்க அவள் கண்களை பார்த்தான்.
“இல்ல தீரன்! நான் அப்படி நினைக்கவே இல்ல.. அது நாம ஏற்கனவே பேசினது தானே. நோ ஸ்ட்ரிங் , நோ அட்டாட்டச்மெண்ட் அப்படி தானே பேசினோம். தவிர சும்மா உங்களை நேர்ல மீட் பண்ணி மனசு விட்டு பேசலாம்னு தான் வந்தேன் ஆனா…” என்று தான் செய்த செயலுக்கு நியாயம் கேக்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
‘நோ அட்டாட்டச்மெண்ட் தான் . அதை நானும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும். ஆனா நீ மொத்தமா என்னை தூக்கி போட்டுட்டு போனது என்னால இப்போ வரை ஜீரணிக்க முடியல . என்னோட ஸ்டேட்டஸ் நான் இருக்க இடத்தில இருந்து உனக்காக இறங்கி வந்தேன் டி. ஆனா நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லையே” என்றான் அகலிகா செய்த துரோகத்தை இன்னமும் மறக்க முடியாமல்.
“தீரன்! நான் இவ்ளோ சொல்லியும் நீங்க சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கிங்க. அப்போ நானும் உங்களை சில கேலிகள் கேக்கலாமா?” என்றாள்.
“ம்ம்ம்…” என்றான் வெறுமனே .
“உங்களுக்கும் ரியாவுக்கும் ஆல்ரெடி என்கேஜ்மெண்ட் முடிஞ்சிருச்சு தானே.. அதுவும் நாம மீட் பண்றதுக்கு முன்னாடி சரியா?” என்றாள்.
“ம்ம்ம்… ரைட்” என்றான்.
“அப்போ நீங்க பண்ணினது சரியா சொல்லுங்க, ரியா கூட என்கேஜ்மெண்ட் முடிச்சிட்டு என்கூட FLING பண்ண வந்திங்களே அது என்னவாம்” என்றாள்.
அவள் பார்வை , அவள் கேள்வி இரண்டையும் எதிர்கொள்ள தீரனுக்கு இப்போது தயக்கமாக இருந்தது.
“நீயும் தானே ஒருத்தனை காதலிச்சிட்டு என்கூட FLING பண்ண வந்தே” என்றான் பதிலுக்கு அவளை மடக்குவதாக எண்ணி.
“தப்பு தீரன்! நான் பிரேக் அப் பண்ணிட்டேன். அதை நான் எந்த சூழ்நிலையில உங்ககிட்டே சொன்னேன் நியாபகம் இல்லையா?”என்றாள்.
“சோ வாட்! ” என்று சிம்பிளாக பதில் பேசினான் தீரன்.
அவனது பதிலில் அகலிகாவுக்கு திருப்தி இல்லை தான். ஆனால் என்ன செய்வது அவன் ஆண் ஆகிற்றே அவன் பேச்சு தான் இப்பொது இங்கு எடுப்படுகிறது. தான் இப்பொது அவன் கையில் சிக்கிக்கொண்டு விட்டிருக்கிறோம். இப்பொது விதண்டாவாதம் பண்ணியோ, கோபம் வந்து சண்டை போட்டு எதுவும் ஆகப்போவதில்லை. அபப்டி இருந்தாள் அவள் கேட்ட கேள்விக்கு நேரடியாக தீரன் பதில் சொல்லி இருக்க வேண்டுமே…
தன் கண்களை மூடி மூச்செடுத்தாள்.
அவளை நிமிடத்திற்கு நிமிடம் ரசிக்க தவறாத தீரன் ,அகலிகா கண்கள் மூடிய வேளையில் வழிந்த கண்ணீரையும் கண்டான். அவன் மனம் அவள் வலியில் இருப்பதை உணர்ந்தாலும் அதை புறக்கணித்தான்,
“எனக்கும், முகேஸுக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போகுது. ப்ளீஸ், என்னை விட்டுடுங்க. இனிமே என்னை ஃபாலோ பண்ணாதீங்க. யார்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க,” என்று கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில் பேசினாள்.
தீரன் கண்களில் ஒரு ஏளனச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். “விடுறதா? நீ என்ன நினைச்சு இங்க வந்தே? ஒரு ராத்திரிக்கு மட்டும் விளையாடிட்டுப் போறதுக்கா?” .
“அப்படியெல்லாம் இல்லை! நீங்கதான் எந்தக் கமிட்மென்ட்டும் வேண்டாம்னு சொன்னீங்க! அதனாலதான்…”
“ஆமாம் சொன்னேன். ஆனா, நீ என்னை ஒரு விளையாட்டுப் பொருளா உபயோகிச்சுட்டு, எந்தத் தடயமும் இல்லாம ஓடிப் போனதை என்னால ஏத்துக்க முடியல. இப்போ நான் சொல்றபடிதான் நடக்கணும்,” என்று அதிகாரத்துடன் பேசினான்.
அகலிகாவின் முகம் வெளிறிப் போனது. ” நீங்க உண்மையை முகேஷ்கிட்டச் சொல்லக் கூடாதுன்னா, அதுக்கு என்ன விலை?” என்றாள்.
தீரன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான். அவன் கண்கள் அவளை முழுவதுமாக ஆராய்ந்தன. “சிம்பிள். உங்க கல்யாணம் முடியற வரைக்கும், ராத்திரி மட்டும் நீ என்னோட இருக்கணும். நான் எப்போ கூப்பிட்டாலும், உடனே நீ வரணும். இதுதான் டீல் ,” என்று அழுத்தமாகச் சொன்னான்.
அகலிகாவுக்கு மூச்சு அடைத்தது. “என்ன சொல்றீங்க நீங்க? இது.. இது என்னால முடியாது! இது அநியாயம்! இப்படி செய்தா நான் முகேஷுக்கு துரோகம் பண்ணின மாதிரி ஆகிடும். இது தப்பு தீரன்” என்று அவள் குரல் உயர்ந்தது.
“முடியாதுன்னு சொன்னா, நாளைக்குக் காலையில முகேஷ்கிட்ட, உங்க அப்பா, அம்மா, உன் ஃபிரண்ட் (பார்வதி) கிட்டன்னு எல்லார்கிட்டயும் உண்மை என்னன்னு சொல்வேன். நீ எவ்வளவு கேவலமானவள்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும். அதுக்கு அப்புறம் இந்தத் திருமணமும் நடக்காது. அசிங்கப்பட்டுப் போறது நீதான். இப்போ முடிவு பண்ணு,” என்று அவளை தன் வலிக்கு கொண்டு வர ஆயுதங்களை பிரயோகித்தான் வார்த்தைகளால்.
தீரன் மீது அவனை சந்தித்த போது இருந்த கவர்ச்சியும், ‘ஒருவேளை இவன் நல்லவனாக இருப்பானோ’ என்ற நம்பிக்கையும், அவனது இந்தக் கேவலமான பேச்சைக் கேட்டதும் முற்றிலும் உடைந்து போனது. அவனது இந்தச் செயல், அவினாஷை விடக் கொடூரமானதாகத் தெரிந்தது.
“மாட்டேன்! முடியாது! நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க, இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அவள் கோபமாகத் திரும்பி, அறைக்கதவை நோக்கி நடந்தாள்.
அவள் அறையிலிருந்து வெளியேறத் தயாரானபோது, தீரன் மின்னல் வேகத்தில் அவள் அருகே வந்தான். அவளைப் போக விடாமல், அவளது கையைப் பிடித்து இழுத்துத் தன்னோடு சேர்த்து அனைத்தவன் . மற்றொரு கையால் வேகமாக அறையின் கதவைச் சாத்தினான்.
அவன் அவளை அழுத்தமாகப் பிடித்திருந்தான். அவளது கண்கள் பயத்தில் விரிந்தன.
“நீ என்ன பண்ணுவன்னு பார்ப்போம்!” என்று சீறியவன், அவளது தலையை உறுதியாகப் பிடித்து, தனது முரட்டுத்தனமான உதடுகளை அவளது உதடுகளோடு இணைத்தான்.
நேற்றிரவு முத்தத்தை விட, இப்போது அவனது கோபம் அதிகம் இருந்தது. அது பசி கொண்ட முத்தமாக, அவளது எதிர்ப்புகளை நசுக்கும் ஒரு செயலாக இருந்தது. அகலிகா அவனது பிடியிலிருந்து விலகப் போராடினாள், ஆனால் தீரனின் அணைப்பு இரும்பைப் போல இறுகியிருந்தது.
