Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா.. காதல் 16

அஸ்க்..லஸ்கா.. காதல் 16

by Layas Tamil Novel
379 views

EPISODE 17

இலக்கியாவைத் “தான் சொல்வதை எல்லாம் நீ செய்யத்தான் ஆகணும். நீ என்னோட அடிமை” என்று அவளை வார்த்தைகளால் சீண்டியவன். அவளை எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்று தமிழ் இலக்கியாவிடம் திமிராகக் கூறியவன் அங்கிருந்த சோபாவில் போய் அமர்ந்துகொண்டான். 

தமிழின் வார்த்தைகளில் வெகுவாக மனம் நொந்த இலக்கியா கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்க்க… அவன் பார்வை இலக்கியாவைத் தாண்டி அவள் பின்னால் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த அவள் வெற்று முதுகை வெறித்துக்கொண்டிருக்க… தமிழின் பார்வை தன்னைத் தாண்டி வேறு எங்கோ நிலைத்திருப்பதை உணர்ந்த இலக்கியா அவன் பார்வை சென்ற இடத்தைத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் உருவம் கண்ணாடியில் தெரியவும். திரும்பியவள் தன் முதுகு முழுவதும் அந்தக் கண்ணாடியில் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்று உணர்ந்தவள். உடனே தன் கையில் இருந்த துணியைக் கொண்டு தன் வெற்று முதுகை மறைத்துக்கொண்டாள்.

அவள் செய்கையில் இலக்கியாவைப் பார்த்து நக்கலாகச் சிரித்த தமிழ், “ம்ம்ம்… சீக்கிரம் உடைகளைக் கழட்டு” என்றான். 

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள், “என்னை விலைக்கு வாங்கிட்டா, நீங்க சொல்வதை நான் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை,” என்றாள்

“என்னோட காண்ட்ராக்ட்டில் என்ன இருக்கோ அதை எல்லாம் படிச்சுப் பார்த்துட்டுதானே கையெழுத்துப் போட்டே?” “நான் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் நீ கேட்க வேண்டும்,” என்றான் தமிழ்.

“காண்ட்ராக்ட்டில் அந்த மாதிரி எல்லாம் எதுவும் போடலையே,” என்றவள், 

“என்னை இப்படிப் பார்க்கும் உரிமையே உங்களுக்கு யார் கொடுத்தது?” என்றாள் இலக்கியா. 

“யார் கொடுக்கணும்? அந்த உரிமையை நான் விலைக்கு வாங்கிவிட்டேனே!” என்றான் தமிழ் திமிராக.

அவன் தன்னிடம் நடந்துகொள்ளும் தோரணையே இலக்கியாவிற்கு அவன் மேல் வெறுப்பு வந்தது. சற்று முன்பு தன்னை அணைத்து முத்தமிட்டபோதுகூட அவன் ஸ்பரிசத்தில் மயங்கித்தான் போயிருந்தாள். அந்த உணர்வே இன்னும் தன் மனதைவிட்டு அகலாமல் இருக்க… அதற்குள்ளாகத் தன் மற்றொரு முகத்தை அவளிடம் காட்டிக்கொண்டிருக்கிறான். உள்ளுக்குள் வெடித்துக் குமுறும் தன் மனநிலையை வெளிக்காட்டாமல் அவள் அமைதியாக தமிழைப் பார்க்க… 

தமிழோ வேண்டுமென்றே அவளிடம் வம்பு செய்யும் விதமாக மீண்டும் அவளிடம், “ம்ம்ம்… சீக்கிரம். நான் எவ்வளவு நேரமாகக் காத்திருப்பது?” எனக்கு எப்பவும் யாருக்காகவும் காத்திருந்து பழக்கம் கிடையாது,” என்றான். 

“அதற்காக நீங்கள் சொன்னதுக்கு எல்லாம் என்னால் தலையை ஆட்டிட்டு இருக்க முடியாது,” என்றாள் இலக்கியா.

 “ஏய் என்ன கொழுப்பா உனக்கு? நான் எது பேசினாலும் அதை எதிர்த்துப் பேசிட்டே இருக்க!” என்று கோபமாக அவளிடம் எழுந்து வந்தான்.

தன்னை நோக்கி கோபமாக வந்த தமிழைப் பார்த்துப் பயந்த இலக்கியா பின்னால் நகர… 

அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் மோதி நின்றாள். அவளிடம் கோபமாக நெருங்கி வந்த தமிழ் இலக்கியாவின் கழுத்தைப் பிடித்து, “நான் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு எந்த மறுப்பும் பேசாமல் அப்படியே நடந்துக்கணும், புரியுதா?” என்றான். 

தன் பிஞ்சுக் கழுத்தை அவன்  கரம் அழுத்த… வலியில் அவள் முகம் சுருங்கியது. அதைப் பார்த்தவன், அவள் கழுத்திலிருந்து தன் கையைக் விலக்கி, அப்படியே தழுவிக்கொண்டு அவள் கழுத்துக்குப் பின்னால் தன் கையைக் கொண்டுசென்று அவள் முதுகை வருடினான்.

இப்படி திடீரென்று தன்னிடம் அத்துமீறும் தமிழைக் கண்டு அவன் மேல் சில நாட்களாக அவள் வைத்திருந்த மரியாதை எல்லாம் எங்கோ சென்றுவிட்டது. “இவனும் மற்ற ஆண்களைப் போல சராசரியாகத்தான் நடந்துகொள்கிறான்,” என்று அவன் மீது கோபம் கொண்டவள். தன் பலம் கொண்ட மட்டும் தன் மீது அழுத்திக்கொண்டு நின்றிருந்தவனைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளினாள். 

அவள் தள்ளிய வேகத்தில் இலக்கியாவைவிட்டு சற்று விலகி நின்றவன், தன்னையே விலக்கும் அளவுக்கு அவளுக்குத் துணிச்சல் இருக்கிறதா என்று கோபம் கொண்டவன். கோபத்தில் இலக்கியாவின் கன்னத்தில் பலமாக அறைந்திருந்தான். அவன் அறைந்ததில் ஒரு நிமிடம் இலக்கியாவிற்குத் தலை சுற்றிக் கண்கள் எல்லாம் இருட்டுக் கொண்டு வர… தன் பின்னால் இருந்த கண்ணாடியைப் பிடித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்தி நின்றவள் தமிழைப் பார்க்க…

“என்னை நீ ரொம்ப டென்ஷன் பண்ற இலக்கியா… நான் ஏதோ விளையாட்டிற்குத்தான் உன்னிடம் ஆடையைக் கழட்டச் சொல்லி வம்பு செய்தேன்.” “அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் நீ என்னை உதாசீனப்படுத்துகிறாய்.” “நீ எனக்குச் சொந்தம் ஆக இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. நான் ஒன்றும் அவ்வளவு கீழ்த்தரமானவன் கிடையாது.” “உன் வயது, உன் மனநிலை எல்லாம் சரியாக இல்லாதபோது நான் எப்படி உன்னிடம் அத்துமீறுவேன்?” “அப்படி நான் உன்னை எடுத்துக்கொள்ள நினைத்திருந்தால். உன்னிடம் இப்படி நின்று பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.” “எனக்கு வேண்டியதை உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது,” என்றவன் அவள் அருகில் வந்தவன். 

“நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள், உன்னிடம் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை,” என்றவன் மீண்டும் அவள் அருகில் வந்து அவள் பிஞ்சு இதழைத் தன் விரல்களால் பிடித்து நசுக்கியவன்.

 “சீக்கிரம் அனைத்திற்கும் உன்னைத் தயார்படுத்திக்கொள்,” என்றவன் குனிந்து அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன், “வரட்டுமா?” என்று அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றான்.

தமிழையே மிரண்டு பார்த்த இலக்கியா, “இவன் எப்படிப்பட்டவன்?” என்று கணிக்க முடியாமல் திண்டாடினாள். 

“இவன் நல்லவனா? கெட்டவனா?… ஏன் ஒரு நேரம் என்னிடம் பரிவாகப் பேசுகிறான். அவன் அப்படிப் பேசுகையில் என்னால் அவனை உதாசீனப்படுத்த முடியவில்லை.” “அடுத்த நொடியே என்னை துன்புறுத்தவும் செய்கிறானே… இவன் என்ன சைக்கோவா?” என்று தோன்றியது அவளுக்கு. 

இலக்கியா யோசனையில் நின்றிருக்க… வெளியே அவள் இருந்த அறைக் கதவைத் தட்டினாள் அனு. அப்போதுதான் இந்த அறைக்குத் தான் எதற்காக வந்தோம் என்பதே நினைவிற்கு வந்தது இலக்கியாவிற்கு. ஒரு முறை தமிழ் இந்த அறைக்குள் வந்த வழியைப் பார்த்து அவன் இல்லை என்பதை முடிவு செய்தவள். பின் தன் உடையை அவசரமாக மாற்றிக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள்.

வெளியே நின்று இலக்கியாவிற்காகக் காத்திருந்த அனு… இலக்கியா கதவைத் திறந்துகொண்டு அறையைவிட்டு வெளியே வரவும் அவள் அணிந்திருந்த ஆடையைப் பார்த்தவள் அப்படியே உறைந்துபோனாள். 

இலக்கியா தன்னையே பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கும் அனுவின் முகத்திற்கு முன்னால் தன் கையை ஆட்டி, “ஏய் அனு… என்ன ஆச்சு? எதுவும் பேசாமல் அப்படியே நிக்கிறே?” என்றாள். 

அனு இலக்கியாவின் குரலில் நினைவு வந்தவள் போல மீண்டும் இலக்கியாவை ஒரு முறை கீழிருந்து மேலாகப் பார்த்தவள். “இலக்கியா உண்மையாவே உனக்கு இந்த டிரஸ் சூப்பரா இருக்கு… உனக்கே அளவு எடுத்து தைத்தது போல அவ்வளவு அழகா பொருந்தி இருக்கு உனக்கு,” என்றாள் அனு. 

“என் அண்ணா மட்டும் உன்னை இப்போ பார்த்தா ஆறு மாசம் வரை எல்லாம் காத்திருக்க முடியாது, இப்போதே உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்வான்,” என்றாள் அனு.

 “ஆமாம்… ஆமாம்… உன் அண்ணா தானே? கொஞ்சம் விட்டிருந்தால் இந்த நேரத்துக்கு அந்த ரூமுக்குள்ள எனக்குச் சாந்தி முகூர்த்தமே நடத்தி இருப்பான்,” என்று நினைத்துக்கொண்டவள். “நான் போய் இந்த ட்ரெஸ்ஸை மாத்திட்டு வரட்டுமா?” என்றாள் இலக்கியா.

“சரி,” என்ற அனு இலக்கியாவின் முகத்தை அப்போதுதான் பார்த்தாள். அவள் உதடு லேசாகத் தடித்து கன்னம் சிவந்திருந்தது. அதைப் பார்த்தவள், 

“இலக்கியா… என்ன ஆச்சு உனக்கு? உன் உதடு லேசா வீங்கி இருக்கு… கன்னம் யாரோ அடிச்ச மாதிரி சிவந்திருக்கு,” என்றாள். 

அனு சொன்னதும் தான், “ஆஹா… இவள் வேறு இதைப் பார்த்துவிட்டுக் கேள்வி கேட்கிறாளே? என்ன சொல்லிச் சமாளிப்பது?” என்று இலக்கியா யோசித்துக்கொண்டிருக்க…

அப்போது இவர்களுக்காகக் காத்திருந்து பொறுமை இழந்த வினித் அனுவையும், இலக்கியாவையும் தேடிக்கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிட… 

அவனைப் பார்த்த இலக்கியா, “ஐயோ… அண்ணா வேற வராங்களே! அவங்க என் முகத்தை இப்படிப் பார்த்தால் ஏதாவது சொல்வாரே!” என்று நினைத்தவள். அவசரமாக அனுவிடம், “அனு, அங்கே பாரு! அண்ணா லேட் ஆகிருச்சுனு நம்மளத் தேடி இங்கேயே வந்துட்டாரு… நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்,” என்று அனுவிடமும், வினித்திடமும் தன் முகத்தைக் காட்டாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

இலக்கியா உள்ளே செல்ல வினித் அங்கே வரவும் சரியாக இருந்தது. 

அனுவிடம் வந்தவன், “இன்னமுமா வெளியே வராம இருக்கீங்க.” “இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ… ஒரு டிரஸ் எடுக்க வந்துட்டு இவ்வளவு நேரம் பண்ணுவாங்களா?” என்று அவளிடம் சலித்துக்கொண்டவன். 

“என் தங்கச்சியும் மற்ற பொண்ணுங்க மாதிரியே ஒரு ட்ரெஸ்ஸைப் போட்டுப் பார்க்க இவ்வளவு நேரம் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை,” என்றான்.

 “உன் தங்கச்சி மட்டும் இல்லை, உலகத்துல இருக்க எந்தப் பொண்ணை எடுத்துகிட்டாலும் அவங்க இப்படித்தான் இருப்பாங்க.” “என்கூட வந்து இதெல்லாம் பழகி வெச்சுக்கோ. பியூச்சரில் நமக்குக் கல்யாணம் ஆன பிறகு நீ என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போற அப்போ எல்லாம் இப்படித்தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டி வரும்,” என்றாள் அனு.

“அதுக்கு நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டால் தானே?” என்று நினைத்துக்கொண்டே வினித்.

 “இவளிடம் இது பேசினாலும் கடைசியில் கல்யாணத்தில்தான் வந்து நிற்கும்,” என்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல், “நான் காரை எடுத்துட்டு வெளியே வெயிட் பண்றேன். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் பர்ச்சேஸ் முடிச்சிட்டு வெளியே வாங்க,” என்றவன். தன் பாக்கெட்டிலிருந்து தன்னுடைய கார்டை நீட்டி, “அனு எது கேட்டாலும் பொறுமையா அவளுக்கு வாங்கிக் கொடுத்து சீக்கிரம் கூட்டிட்டு வா,” என்றான். 

அவன் கொடுத்த கார்டை வெடுக்கென அவன் கையிலிருந்து பிடுங்கியவள், “பின் நம்பரை அவனிடம் வாங்கிக்கொண்டு நீ கிளம்பு. நாங்க பின்னாலேயே வரோம்,” என்றாள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

“இவள் பார்வையும், சிரிப்பும் சரி இல்லையே,” என்று நினைத்தவன்,

 “சரி, சீக்கிரமா வாங்க. ஏற்கனவே ரொம்ப நேரமாகிருச்சு,” என்றுவிட்டு அங்கிருந்து காரை எடுக்கக் கிளம்பினான். 

வினித் அனுவின் கண்பார்வையில் இருந்து மறையும் வரை அமைதியாக நின்றிருந்தாள். அடுத்த நொடி தன் கையில் இருந்த வினித்தின் கார்டைப் பார்த்தவள். “உன்கூட எத்தனை முறை நான் வெளியே வந்திருக்கிறேன். ஒரு முறையாவது உன்னோட கார்டை எனக்குக் கொடுத்து உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கன்னு சொல்லி இருப்பியாடா?” “இப்போ உன் தங்கச்சிக்கு மட்டும் கார்டை எடுத்து வள்ளல் மாதிரி, ‘என் தங்கச்சி என்ன கேட்டாலும் வாங்கிக் கொடு,’ன்னு உரிமையா சொல்லிவிட்டுப் போறே…” என்றவள். 

“இலக்கியாவிற்கு வாங்கிக் கொடுக்க என் அண்ணா என்னோட அக்கவுண்டிற்கு ஏற்கனவே பணம் அனுப்பி வெச்சிட்டாரு.” “இன்னிக்கு உன்னோட அக்கவுண்டில் இருக்க பணத்தை எல்லாம் காலி ஆக்கலை நான் அனு இல்லை,” என்று அவன் கொடுத்த கார்டிற்கு முத்தம் வைத்தவள். நேராக தனக்கு வேண்டிய உடை, ஹேண்ட்பேக், மேக்கப் பொருட்கள், அது இது என்று வேண்டியது வேண்டாதது எனப் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தாள். 

அதற்குள் உடை மாற்றிவிட்டு வெளியே வந்த இலக்கியா அனுவைத் தேடிக்கொண்டு வர… 

அங்கே இலக்கியாவிற்காக வாங்கிய பொருட்களுக்கு எல்லாம் முன்னமே பணம் செலுத்திவிட்டு… தனக்காக வாங்கிய பொருட்களுக்கு எல்லாம் பில் போட்டவள் அதற்குப் பே பண்ண வினித்தின் கார்டை உபயோகப்படுத்தினாள்.

 பின் இருவரும் கிளம்பி தங்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டுச் சென்றனர்.

இங்கே தாஸ், “இலக்கியா யார்? என்ன? எங்கிருந்து அவள் வந்திருக்கிறாள்? அவளுடைய குடும்பம் எப்படிப்பட்டது?” “அவளுடைய பூர்வீகம் என்ன… தமிழ் ஏன் அவளை ஏலத்தில் எடுத்தான்?” என அனைத்து விஷயங்களையும் இந்த சில நாட்களில் தன் ஆட்கள் மூலம் தேடிக் கண்டுபிடித்து வைத்திருந்தான். 

அதையெல்லாம் பார்த்த தாஸிற்குத் தலையே சுற்றுவது போல இருந்தது. இலக்கியாவைப் பற்றிய விவரங்களை எல்லாம் பார்த்தவன். ” அவளைப் பற்றிக் கேள்விப்பட்டதை எல்லாம் நம்ப முடியாமல் இலக்கியாவைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தான் தாஸ்.”

“தனக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் தமிழுக்குத் தெரிந்திருக்குமா?” “அவன் ஏலத்தில் இலக்கியாவைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தால் அவளை ஏலத்தில் வாங்கி இருப்பானா?” என்று தாஸ் யோசிக்க ஆரம்பித்தான். 

“ஒருவேளை இலக்கியாவைப் பற்றிய உண்மை விவரங்கள் எல்லாம் தமிழுக்குத் தெரிந்திருந்தால், இந்த நேரம் அவளைக் கொன்று போட்டிருப்பானே!” என்று யோசித்தவன்

. “இப்போது இலக்கியா உயிரோடு அவளோடுதான் இருக்கிறாள் என்றால், கண்டிப்பாக இலக்கியாவைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் தமிழுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.” “அப்படி என்றால் தன்னைப் பற்றிய விவரத்தை இலக்கியா முழுவதுமாக தமிழிடம் இதுவரை எதுவும் கூறி இருக்க மாட்டாள்,” என்று புரிந்துகொண்ட தாஸ்.

இலக்கியாவை எப்படியாவது தமிழுக்குத் தெரியாமல் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான். 

தன் பி.ஏ-விடம் சொல்லி இலக்கியாவின் தற்போதைய நடவடிக்கைகளை எல்லாம் தெரிந்துகொள்ள வரச் சொல்லி அனுப்பி வைத்தான். தாஸ் சொன்னது போலவே அவனது பி.ஏ-வும் இலக்கியாவைப் பற்றிய தற்போதைய நடவடிக்கை அனைத்தையும் தனக்குத் தெரிந்தவரை விட்டு வந்தவன், அவள் தமிழின் காலேஜில்தான் தற்போது படிக்கச் சேர்ந்திருக்கிறாள் என்று சொன்னான். 

“இப்போதுதான் காலேஜ் போகிறாளா?” என்று யோசித்தவன், அவள் என்றிலிருந்து காலேஜ் போகிறாள் என்பதைப் பார்த்தவன், இனி தன்னுடைய வேலை இலக்கியாவைக் கண்காணிப்பது மட்டுமே என்று முடிவு எடுத்துக்கொண்டான். அதிலிருந்து இலக்கியா காலேஜ் போகப் போகிறாள், அவள் எந்த நேரத்திற்குக் காலேஜ் முடிந்து வீட்டிற்குச் செல்வாள் என்று இனி அனைத்து விவரங்களையும் பார்த்து சரியான சமயத்தில் அவளைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தமிழை வீழ்த்த இனி தான் ஒன்றும் அதிகமாகச் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. இலக்கியாவை வைத்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த தாஸ். இலக்கியாவை நேரில் சந்தித்தால் என்ன பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இங்கு தன் கார்டில் இருந்த பணத்தில் பாதியைச் செலவு செய்து வந்த அனுவைப் பார்த்து முறைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். தான் வந்த ஒரே நாளில் அனுவுடன் நன்றாகப் பேசிப் பழகினாள் இலக்கியா. வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் இலக்கியாவிடம் இன்னமும் பேச நேரம் கிடைக்கவில்லை. 

அனுவுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே உள்ளே வந்த இலக்கியாவை ஹாலில் இருந்த சோபாவில் கம்பீரமாக அமர்ந்தபடி தன் தாத்தாவுடன் ஏதோ முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருந்த தமிழ். இலக்கியா சிரித்த முகமாக உள்ளே வருவதைப் பார்த்தவன் ஆச்சரியமாக இலக்கியாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

உள்ளே வந்த தன் பேத்தியையும் இலக்கியாவையும் பார்த்துச் சிரித்தபடி அவர்கள் இருவரையும் வரவேற்ற குமரன் இலக்கியாவை அழைத்து தன் அருகில் அமர வைத்தவர். “பரவாயில்லையே இலக்கியா! நீ வந்த ஒரே நாளில் என் பேத்தி கூட நல்லாப் பேசிப் பழகிட்டா. அவ அவ்வளவு சீக்கிரம் யார் கூடயும் இப்படி நெருக்கமாப் பேச மாட்டாளே!” என்று கேட்டார்.

 “இப்படிப் பார்த்ததும் கூட இருந்தவங்களைச் சிரிச்சுப் பேசி மயக்கிய மாதிரிதான் என் புள்ள தமிழ்ளையும் ஏதோ செஞ்சு மயக்கி அவன் கூட வந்துட்டா,” என்று சொல்லிக்கொண்டே கிச்சனிலிருந்து கையில் ஜூஸுடன் வெளியே வந்தார் காவேரி.

இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த இலக்கியா காவேரி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவள் அப்படியே கருகிவிட்டது. இலக்கியாவின் முகம் மாற்றத்தைக் கண்ட தமிழ் அவன் அம்மாவிடம் முறைக்க… அதற்கு மேல் எதுவும் பேசாமல் தான் கொண்டு வந்த ஜூசை அனைவருக்கும் கொடுத்துவிட்டு சோபாவில் இலக்கியாவின் எதிரே அமர்ந்தார். 

இலக்கியாவிற்கு அவர் முன்னால் அமரவே தர்மசங்கடமாக இருந்தது. அவள் நெளிந்துகொண்டு அமர்ந்திருக்க அதைக் கவனித்த தமிழ் அனுவிடம், “இலக்கியாவை அழைத்துக் கொண்டு உள்ளே போ,” என்று சொன்னான். 

“ஏன் தமிழ்? அவங்க ரெண்டு பேரும் இப்போதுதானே வந்தாங்க. கொஞ்ச நேரம் நம்ம கூடப் பேசிட்டு இருக்கட்டும். அதுக்கு பிறகு உள்ளே போகட்டுமே!” என்ற குமரன் இலக்கியாவிடம் திரும்பி.

 “தமிழ் உன்னைப் பற்றிச் சொன்னான் இலக்கியா. நீ வந்ததுல இருந்து அவன்கிட்ட ‘இது வேணும், அது வேணும்’னு எதுவுமே கேட்கவில்லையாமே… ‘என்னைப் படிக்க மட்டும் சேர்த்து விடுங்கள்,’ என்று சொன்னேன்னு இப்போதான் என்கிட்ட சொல்லிக்கொண்டிருந்தான்.” “உனக்குப் படிப்புன்னா அவ்வளவு இஷ்டமா?” என்று கேட்டார் குமரன். 

“ஆமாம்,” என்றுத் தலையாட்டினாள் இலக்கியா. 

“நீ மலேசியாவில் இருக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார்.

 “அங்கே ஒரு ஷாப்பிங் மாலில் பார்ட் டைம் ஜாப் போயிட்டு இருந்தேன் சார்.” “மலேசியாவில் ஷாப்பிங் மால்ல வேலைக்குப் போயிட்டு இருந்தவளுக்கு இங்கே ஷாப்பிங் மாலையே சொந்தமாக வைத்திருக்கிற என் பையன் கிடைச்சிருக்கான்!” என்றார் காவேரி.

“காவேரி!” என்ற ஒற்றை வார்த்தையில் குமரன் தமிழின் அம்மாவை அடக்க… 

“நான்  பேசினால் உங்க யாருக்குமே பொறுக்காது. நான் இங்கே இருந்தால் பேசிட்டு இருப்பேன். உள்ளே போறேன்,” என்று சொல்லிவிட்டு காவேரி எழுந்து கிச்சனுக்குள் சென்றார். 

அப்படிப் பேசியதும் இலக்கியாவிற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தமிழின் வசதி வாய்ப்புகளைப் பார்க்கும்போது அவனுக்கு முன்னால் எல்லாம் தன்னுடைய குடும்பம் ஒன்றுமே இல்லை என்று நினைத்துக்கொண்டாள் இலக்கியா. 

இலக்கியா யோசிப்பதைப் பார்த்த குமரன் இலக்கியாவின் கையைப் பிடித்தவர், “அவர் எப்பவுமே அப்படித்தான்மா… எதையுமே பட்டுன்னு பேசிடுவா.” “நீ அவ பேசுனது எல்லாம் பெருசா எடுத்துக்காத. திடீரென்று தமிழ் உன்னைத் திருமணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும் அவ கொஞ்சம் டென்ஷன்ல இருக்கா, அவ்வளவுதான்.” “போகப் போக எல்லாமே சரியாகிவிடும். நீ எதையும் பெருசா எடுத்துக்காத,” என்று குமரன் இலக்கியாவிற்கு ஆதரவாகப் பேசினார். 

“சரி, நீ சொல்லு… மலேசியாவில் பார்ட் டைம் ஜாப் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்னு சொன்ன…. அந்த வேலை போக மீதி நேரம் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டார். 

“காலையில ஸ்கூல் போய் முடிச்சு வந்த பிறகு சாயங்காலம் வேலைக்குப் போயிடுவேன் சார். அதன் பிறகு வீட்டுக்கு வந்து என் அம்மா கூட வீட்டு வேலையில் உதவி செய்வேன்,” என்றாள். 

“நீ என்ன இன்னும் என்ன சார்னு சொல்லிட்டு இருக்க? உரிமையா தாத்தா என்று கூப்பிடுமா! எப்படியும் நீ என் பேரனைத் தான் திருமணம் பண்ணிக்கப் போறவ. என்னைத்த தாத்தா என்றே கூப்பிடு,” என்றார் குமரன். 

“சரிங்க தாத்தா,” என்று மென்மையாகச் சிரித்தாள் இலக்கியா. 

குமரனிடம் பேசிய நேரத்தில் ஒரு தடவை கூட தமிழ் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. தமிழ் அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சரி, நீ காலேஜுக்குப் போனயே! எந்த டிபார்ட்மென்டில் சேர்ந்திருக்கிறாய்?” என்று கேட்டார் குமரன். 

அவர் கேட்டதும் தமிழும் அதைத்தான் இலக்கியாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தான். 

அவள் படிக்க வேண்டும் என்று சொன்னாளே, “என்ன படிக்கப் போகிறாள்?” என்று ஆர்வத்தினால் அவளிடம் கேட்க இருந்தான். இப்போது குமரனே அந்தக் கேள்வி இலக்கியாவிடம் கேட்டுவிட்டதால் அவள் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று இலக்கியாவையே பார்த்துக் கொண்டிருக்க… 

உடனே குமரன் கேட்ட கேள்விக்கு அனு குறுக்கே வந்து, “தாத்தா, முதல்ல நான் படிச்சிட்டு இருக்க பிசினஸ் மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்டில் தான் இலக்கியாவைச் சேர்த்தேன்.” “ஆனால் அதுக்குள்ள இந்த வினித் இருக்கானே! அவன் தான் இலக்கியாவை வேற டிபார்ட்மென்டில் சேர்த்து விட்டுட்டான்,” என்றாள். 

“அப்படியா? அப்படி என்ன குரூப்பில் வினித் நீ இலக்கியாவை ஜாயின் பண்ணிவிட்ட?” என்று கேட்டார். 

“அதை நான் சொல்வதை விட, இலக்கியா வாயாலேயே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் தாத்தா!” என்றான் வினித். 

குமரன் உடனே இலக்கியாவைப் பார்த்து, “நீயே சொல்லுமா, எந்த டிபார்ட்மென்டில் வினித் உன்னைச் சேர்த்துவிட்டு இருக்கான்?” என்று கேட்க… 

அவள் சிரித்தவரே தான் படிப்பதற்காகச் சேர்ந்திருக்கும் டிபார்ட்மென்டைப் பற்றிச் சொல்லவும், அங்கு இருந்தவர்கள் அவளை ஆச்சரியமாகப் பார்க்க… 

ஆனால் இங்கே ஒருவன் மட்டும் அதிர்ச்சியாக இலக்கியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வேற யாருமில்லை? நம்ம தமிழ் தான் இலக்கியா எந்த டிபார்ட்மென்டில் சேர்ந்திருக்கான்னு கேட்டதும் அதிர்ச்சியாகி அவளைப் பார்த்துட்டு இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured