EPISODE 8
“ச்சே.. அந்த ரவுடி பையன் இப்படி என்ன ஏமாத்திட்டானே அவன் சொன்னதை நம்பி அவளுக்கு முத்தம் வேற கொடுத்து தொலைச்சிட்டேனே” என்று கண்ணாடியின் முன்பு என்று வாயை கழுவிக்கொண்டு ராக்கியை திட்டிக் கொண்டிருந்தாள் ரதி.
போட்டிருந்த அவன் சட்டையை கழட்டி பாத்ரூமில் இருந்து ஆங்கரில் மாட்டியவள் ‘ “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே ஏமாத்திருப்ப .. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உன்ன போய் மாடலா வச்சு நான் கதை எழுதணும்னு நெனச்சேன் பாரு என்ன சொல்லணும்” என்று அவன் சட்டையை பார்த்து புலம்பியவள் அதை ராக்கி என நினைத்து அடித்துக் கொண்டே பேசினாள் .
ராக்கி தன்னை ஏமாற்றியதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தாள் பாத்ரூமிற்குள் தன் வாயை திரும்ப திரும்ப கழுவிய படியே.
“சரியான தொடை நடுங்கி அவன் வெளியில ரௌடினு சொல்லி சுத்திட்டு இருக்கான். அந்த சின்ன பாம்பு கூட அவனால சமாளிக்க முடியல .. ஆனா என்கிட்ட அந்த பாம்பு நான் தான் வளர்த்துறேன். அது நான் சொன்னா தான் இங்க இருந்து போகும். அது இதுனு பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தான். அவன் கையில் இருந்த நழுவி அந்த பாம்பு அவன் முகத்துக்கு நேரா வந்ததும் என்ன அப்படியே கீழ போட்டுட்டு அங்கிருந்து பெஞ்சு மேல ஏறி உக்காந்துட்டான் . படுபாவி… படுபாவி.. அங்கிருந்து தப்பிச்சு வரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும், பாம்பு ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம் இந்த ரெண்டும் சேர்ந்து இன்னைக்கு என்ன டார்ச்சர் பண்ணிட்டாங்க” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“ஏய் ரதி என்னடி ஆச்சு வந்ததிலிருந்து பாத்ரூமுக்குள்ளயே ரொம்ப நேரமா இருக்க சீக்கிரம் வெளியே வாடி”என்று வெளியே இருந்தபடி ரதியின் அம்மா கத்திக்கொண்டு இருந்தார் .
“இந்த அம்மா வேற கொஞ்ச நேரம் கூட நம்மள தனியா விட மாட்டேங்குது இப்ப பாரு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கு” என்று புலம்பியவள் மீண்டும் ஒருமுறை பிரஷ் செய்து வாயை கழுவியவள் முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.
“என்னடி ஆச்சு இன்னைக்கு உனக்கு அப்படி என்னதான் பாத்ரூம்குள்ள பண்ணிட்டு இருந்த நீ” என்று அவளை திட்டியவர் நகரு எவ்வளவு நேரம் தான் மனுஷன் ஆத்திரத்தை அடக்கிட்டு இருக்கிறது என்று ரதியை தள்ளிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்று கதவை அடைத்தார்.
“உள்ள என்னமா பண்ணிட்டு இருப்பாங்க… இந்த வீட்ல நிம்மதியா பாத்ரூம் கூட என்னால போக முடியல” என்று புலம்பிய படியே சென்றவள் பெட்ரூம் இருக்கு வந்து உடைமாற்றிவிட்டு கட்டிலில் பொத்தென விழுந்தாள்.
ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வெளியே சென்றிருந்த மாளவிகா அப்போதுதான் வீட்டுக்குள் வந்தவள். ரதி நேரமாக வந்திருப்பதை பார்த்துவிட்டு “அக்கா! என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட… ஒர்க் முடிஞ்சிடுச்சா” என்று கேட்டபடி அவள் அருகில் வந்து படுத்தாள் மாளவிகா .
” எனக்கு என்ன ஒர்க்கு டைம் எதுவும் இருக்கா .. அதெல்லாம் எதுவும் கிடையாது. சும்மா சீக்கிரமே வரணும்னு தோணுச்சு அதான் வந்துட்டேன்” என்று சமாளித்தவள்.
“ஆமா நீ எங்க போயிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சு” என்றாள்.
“நான் ஒரு ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்ன இல்ல அக்கா அந்த விஷயமா தான் என் பிரண்ட்ஸும் நானும் இப்போ ஒரு கம்பெனிக்கு போயிட்டு வந்தோம் அங்க எங்க ப்ராஜெக்ட் செய்யறதுக்கு அவங்க தனியா டைம் ஒதுக்கி கொடுத்து இருக்காங்க. தினமும் ஈவினிங் 4 டு 6 எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருக்காரு அந்த கம்பெனி ஓனர் . இன்னிக்கு தான் பேசிட்டு வந்திருக்கோம் நாளையிலிருந்து வொர்க் ஸ்டார்ட் ஆயிடுமா அக்கா ” என்றாள் மாளவிகா.
“நல்ல நம்பிக்கையான கம்பெனி தானே.. இந்த பேச்சுக்கு முடிய எவ்வளவு நாள் ஆகும்” என்றாள் ரதி
“ப்ராஜெக்ட் வொர்க் முடிக்க ஒரு த்ரீ மன்த்ஸ் போக வேண்டி இருக்கும் அக்கா” என்றாள்.
“சரிடி நல்லபடியா ப்ராஜெக்ட் முடி உனக்கு எதுவும் ஹெல்ப் வேணும்னா என்கிட்ட முன்னயே சொல்லு என்னால முடிஞ்சத நான் உனக்கு செய்றேன்” என்றாள் ரதி.
“சரிக்கா நான் கண்டிப்பா கேட்கிறேன்” என்று போல் நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன் என்று எழுந்து குளிக்க சென்றாள் மாளவிகா.
“ஏய் ரதி அங்கே என்னடி பண்ணிட்டு இருக்க கொஞ்சம் இங்க வா,… வந்து அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்று கிச்சனிலிருந்து குரல் கொடுத்தார் ஷோபனா .
“இதோ வரேன் மா” என்று எழுந்து கிச்சனுக்கு சென்றவள் “இன்னைக்கு என்ன ஸ்பெஷல்” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தாள்.
“நீதானே போன வாரம் சப்பாத்தியும் மட்டன் குழம்பும் கேட்ட… அதான் அப்பாவ மதியம் மட்டன் எடுத்துட்டு வர சொன்னேன். மதியமே குழம்பு வச்சிட்டேன் இப்போ சப்பாத்தி மட்டும் சுட்டுட்டா போதும்” என்று அவள் கையில் பாத்திரத்தை வைத்தவர் அடுப்பை பற்றவைத்து சப்பாத்தி கல்லை வைத்தார்.
பாத்திரத்தை வாங்கி மாவை உருட்டி ரதி சப்பாத்தியை தேய்க்க அவள் அம்மா அதை சுட்டு ஹாட் பாக்ஸில் போட்டார்.
இங்கே ரதி கொடுத்த முத்தத்தில் அவளைப் பற்றிய நினைவுகளோடு வீட்டிற்கு வந்ததிலிருந்து ராக்கியின் நடவடிக்கையை சரியில்லை.
அவன் வீட்டிற்கு வந்ததிலிருந்து ஓவியாவிடம் சரியாக பேசவே இல்லை. வந்ததும் நேராக தன் ரூமுக்கு சென்று படுத்துவன் தான் அறையை விட்டு இரவாகியும் வெளியே வரவே இல்லை .
ஹாலில் அமர்ந்து பரிட்சைக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஓவியா சிறிது நேரம் படிப்பதும் திரும்பி ராக்கி அறையை பார்ப்பதுமாக இருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்து ஓவியா செய்வது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாரிஸ் “ஏன் ஓவியா நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் விடாம படிச்சுக்கிட்டே இருக்கியே உனக்கு இது படிக்க சலுப்பா இல்லையா” என்று கேட்டான்.
“படிக்கிறதுக்கு எதுக்கு சலிப்பு வரணும் எனக்கு பிடிச்சிருக்குற வேலையை தானே நான் செய்கிறேன் அதனால் எனக்கு இது ஒன்னும் கஷ்டமா தெரியல” என்றாள்.
“அது என்னவோ நாள்ல பள்ளிக்கூடம் பக்கம் போறதே… அங்கு போடுற சாப்பாட்டுக்காக தான். போனோமா சாப்பிட்டோமா …வந்தமான்னு இருப்பேன். கிளாஸ் ரூம் பக்கம் கூட போனதில்லை அப்படி என்ன அடிச்சு மிரட்டி ஒரு நாள் கொண்டு போய் கிளாஸ்ல உக்கார வச்சாங்க. ஒரு மணி நேரம் கூட என்னால அங்க உட்கார முடியல. எப்படா வெளியே வருவோம்னு ஆயிடுச்சு. ஆனா நீங்க எல்லாம் எப்படித்தான் தினமும் இதையே செய்றீங்களோ. யாராவது படிக்கிறத பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் மாரிஸ் .
அதைக் கேட்டு சிரித்தவள் “ஏன் மாரிஸ் இன்னிக்கி உங்க ராக்கிக்கு என்ன ஆச்சு வந்ததுல இருந்து ஆளீஸ் சரி இல்லையே எதுவும் பேசல நேரா போய் ரூமுக்குள்ள படுத்ததோட சரி இப்ப வரைக்கும் வெளியவே வரலையே” என்றால் சந்தேகமாக.
” அதை ஏன் கேக்குற ஓவியம் ஏன் காலையில சிவராஜ் அய்யா வீட்ல இருந்து ஒரு முக்கியமான வேலையா கிளம்பி வெளியே வந்தோம் அப்போ ஒரு பொண்ணு யாருக்கும் தெரியாம எங்களை நம்ம காருக்கு பின்னாடி இருந்து நோட்டம் விட்டுச்சு அந்த பொண்ணு ய் நம்ம இடத்தில் வைத்து விசாரிக்க கூட்டிட்டு போயிருந்தோம். ஆரம்பத்துல என்னவோ ராக்கி அந்த பொண்ணு கிட்ட ஸ்டிரிக்ட்டா தான் ராக்கி பேசினான் “
“அப்புறம் எங்கள வெளியே போக சொல்லிட்டு அந்த பொண்ண பத்தி விசாரிக்கிறேன்னு சொல்லி அவ கூட தனியா எதுவோ பேசிட்டு இருந்துச்சு ராக்கி . அவ பேசிட்டு போனதிலிருந்து உன் அண்ணன் சரியே இல்ல என்னவோ விட்டத்தை பார்த்து பார்த்து சிரிக்கிறான். கையை .இரண்டையும் விரிச்சிட்டு காத்துல பறந்து போற மாதிரி நடக்கிறான் உங்களுக்கு ஒண்ணுமே புரியல . அந்த பொண்ணு கிளம்பி போனதும் ராக்கியும் கிளம்பி இங்கே வந்திருச்சு ” என்றான் மாரீஸ் .
” என்ன சொல்ற மாரிஸ் ! ஒரு பொண்ண பார்த்துட்டு வந்ததுல இருந்து என் அண்ணன் இப்படி ஆயிடுச்சா.. என்னால நம்பவே முடியலையே” என்று ஆச்சரியமானவள். உடனே தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நேராக எழுந்து ராக்கி அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல மாரிசும் அவள் பின்னால் சென்றான்.
கதவை திறந்து கொண்டு ஓவியா அறைக்குள் வர ராக்கி விட்டதை பார்த்தபடி படுத்திருந்தவன் முகத்தில் சிரிப்பு குடி கொண்டிருந்தது . அவ்வளவு லேசில் ராக்கி சிரிக்கக் கூடிய ஆள் இல்லை அப்படி இருப்பவள் இன்று இப்படி அவனையும் அறியாமல் சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்க ஓவியாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது .
வேகமாக அவனிடம் வந்தவள் ராக்கி அருகில் அமர்ந்து கொண்டு ” அண்ணா என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கி வந்ததிலிருந்து ஆளே சரியில்ல. மாரிஸ் தான் விஷயத்தை சொன்னான். யார் அந்த பொண்ணு என்கிட்ட கூட சொல்லல பாத்தியா” என்றாள்.
கட்டிலில் படுத்திருந்தவன் நிமிர்ந்து அவன் காலுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மாரீஷை எட்டி உதைத்தவன் “சும்மா இருக்க முடியாதாடா உன்னால.. உன்னை யாரு ஓவியாகிட்ட எல்லாத்தையும் சொல்ல சொன்னது” என்று அவனை திட்ட…
“அண்ணா அவனை ஏன் திட்டுற நான் தான் அவன்கிட்ட கேட்டேன் . நீ வந்ததுல இருந்து ஆளே சரியில்லையே உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டேன். அதனால தான் மாரீஸும் நடந்ததை சொன்னான். எதுக்காக அவனை திட்டுற .. அப்போ எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியக்கூடாது. என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிற அப்படித் தானே சரி போ நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல” என்று கோபித்துக் கொண்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றாள் .
“ஐயோ சாக்கி அதெல்லாம் ஒன்னும் இல்ல உன்கிட்ட சொல்லாம நான் இருப்பேனா எனக்கே என்னன்னு புரியாத அப்போ நான் உன்கிட்ட என்னன்னு சொல்வேன் போகாத…” என்று எழுதவும் அவள் பின்னால் வெளியே வந்தவன் .
“அப்புறம் எதுக்கு நீ மாரீஷை திட்டுற அவன் என்கிட்ட சொன்னதுல என்ன தப்பு இருக்கு” என்று அவனை அதட்டினாள்.
” அவனை நான் திட்டினது தப்புதான் அதுக்காக அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் போதுமா” என்றவன் “நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு ஓவி” என்று ஓவியாவின் பின்பு கெஞ்சிக் கொண்டே நடந்தான் ராக்கி .
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் நான் கேட்காமலே நீயா வந்து என்கிட்ட சொல்லி இருக்கணும் ஆனா நான் கேட்ட பிறகும் நீ மழுப்பின பாத்தியா அப்பவே தெரிஞ்சு போச்சு உனக்கு என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லை. நீ எதையும் சொல்ல வேண்டாம் போ…” என்று அவனிடம் கோபித்துக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் .
