Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 153

உன் ரகசிய ரசிகை நான் 153

by Layas Tamil Novel
225 views

EPISODE 153

துர்கா உடை மாற்ற ஆதி உதவச் சொல்லவும், அவனை வெளியே செல்லச் சொன்னதால், ஆதி வேண்டுமென்று துர்காவிடம் கோபமாக இருப்பது போல நடிக்க…

ஆதி தன்னிடம் பேசாமல் கோபமாக இருப்பதைப் பார்த்த துர்கா அவனைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆதி துர்காவிடம் இன்னும் கோபித்துக்கொண்டு அவள் அருகில் இருந்து எழுந்து வெளியே செல்வதாகக் கூறப் போக… அவன் கையைப் பிடித்த துர்கா, அவனைத் தன்னருகில் இழுத்து நிறுத்தியவள், அவன் முகத்தைப் பிடித்து அவன் உதடுகளைப் பார்க்க… அவளது இதயம் எக்குத்தப்பாகத் துடிக்க ஆரம்பித்தது.

ஆதி அவ்வளவு நெருக்கமாகத் துர்காவின் முகத்தைப் பார்க்கவும், அவனுடைய இதயமும் அப்படித்தான் துடித்துக் கொண்டிருந்தது.

ஆதி ‘என்ன’ என்று யோசிப்பதற்குள், துர்கா குனிந்து அவன் உதடுகளில் லேசாக முத்தம் வைத்துவிட்டு, அவனை விட்டுப் பிரிந்தவள். அவன் முகத்தைப் பார்த்து, “ப்ளீஸ்… ஆதி, என் கூடப் பேசு! கோபமா இருக்காதே” என்று கெஞ்சினாள்.

சொல்லப்போனால், துர்காவாகவே வந்து ஆதிக்குக் கொடுத்த முதல் முத்தம் இது. அவனுக்கு இந்த முத்தம் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க… அதே அதிர்ச்சியோடு ஆதி துர்காவைப் பார்க்க…

“என்மேல இருந்த கோபம் போயிருச்சா உனக்கு?” என்று கேட்டாள் துர்கா.

அவன் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட வர…

“இன்னும் கோபம் போகலையா? அப்போ நான் இன்னொரு முத்தம் தரட்டுமா? அப்போவாச்சும் என்மேல இருக்கிற கோபம் போய்டுமா?” என்றாள் துர்கா.

துர்காவிடம் இன்னும் முத்தம் வாங்க நினைத்த ஆதி, வேண்டுமென்றே “எனக்கு இன்னும் உன்மேல கோபம் போகலை. இந்த முத்தத்துக்கெல்லாம் நான் சமாதானம் ஆக மாட்டேன்” என்று அவளிடம் போய் கோபம் காட்ட…

மறுபடி அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் வைத்து, “இப்போ?” என்று அவன் கண்களை ஆர்வமாகப் பார்த்தாள்.

ஆதி கண்கள் மூடி துர்கா தந்த முத்தத்தை அனுபவித்துக்கொண்டே, “இல்லை” என்று தலையை ஆட்டினான்.

“இப்பவும் இல்லையா? நீ என்மேல எதுவும் கோபமா இருந்தா, இந்த மாதிரி உனக்கு நான் முத்தம் கொடுத்தா சீக்கிரமா நீ சமாதானம் ஆயிடுவேன்னு கீர்த்திதான் என்கிட்ட சொல்லி கொடுத்தா… ஆனா, நான் உனக்கு ரெண்டு முத்தம் கொடுத்தேன். அப்போ நீ என்மேல கோபமாகத்தான் இருக்க,” என்று துர்கா முகத்தைச் சோகமாக வைத்துக் கொள்ள…

“கீர்த்திகா உன்கிட்ட எப்படி முத்தம் கொடுக்கணும்னு சொல்லி கொடுத்தாளா?” என்றான் ஆதி.

“ம்ஹும்… இல்லையே. முத்தம் கொடுக்கணும்னு மட்டும் தானே சொன்னாள்,” என்றாள் துர்கா.

“இப்படி நீ தப்பு தப்பா முத்தம் கொடுத்தால், எனக்கு உன்மேல இன்னும் கோபம் அதிகமாத்தான் ஆகும்,” என்றான் ஆதி.

“தப்பு தப்பா முத்தம் கொடுத்தாவா? நான் அப்போ உனக்குச் சரியா முத்தம் கொடுக்கலையா?” என்று கேட்டாள் துர்கா.

“நீ சரியா முத்தம் கொடுத்திருந்தா, நீ ஒரு தடவை முத்தம் கொடுக்கும்போது நான் சமாதானமாகி இருப்பேன். வீணா இன்னொரு முத்தத்தை நீ வீணடித்திருக்க வேண்டியது இல்லை,” என்றான் ஆதி குறும்பாக.

அவன் வேண்டுமென்றே துர்காவிடம் முத்தம் வாங்குவதற்காகப் பேசுகிறான் என்று துர்காவிற்குத் தெரியவில்லை. அவன் சொல்வதையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அப்போ, சரியா எப்படி முத்தம் கொடுப்பது என்று நான் கீர்த்தியிடம் கேட்டுட்டு வந்து இன்னொரு வாட்டி உனக்கு முத்தம் கொடுக்கிறேன்,” என்று துர்கா சொல்ல…

“நீ எப்போ போய்க் கீர்த்திகாகிட்ட கேட்டு வர்றது? எனக்கு எப்போ முத்தம் கொடுத்து என்னச் சமாதானப்படுத்துவது? அதுவரைக்கும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நான் ரொம்பக் கோபமா இருக்கேன்,” என்று வேண்டுமென்றே முகத்தை உர் என்று ஆதி வைத்துக்கொள்ள…

“ஆதி, இப்படி எல்லாம் கோபப்படாதே. எனக்கு உன் முகத்தை இப்படிப் பார்த்தால் ரொம்பப் பயமா இருக்கு,” என்று துர்கா முகம் அழுவது போல மாறிவிட…

“துர்கா, நான் சொல்றத முழுசா கேள். ஏன் இப்படிப் பயப்படுற? நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்னு தெரியும்தானே? எதுக்கு இப்படித் தேவையில்லாம என்கிட்டப் பயந்துட்டு இருக்க?” என்ற ஆதி, “நீ கீர்த்திகாகிட்ட போய்ப் முத்தம் எப்படி கொடுக்கணும்னு கேட்டுட்டு வந்து எனக்குக் கொடுக்க லேட் ஆகும்னு தானே சொன்னேன். அதுக்கு என்ன அர்த்தம்? நான் உனக்கு எப்படி முத்தம் கொடுப்பது என்று சொல்லித் தரேன். அதை நீ கத்துக்கிட்டு, திரும்ப நான் இப்படி கோபமாக இருக்கும்போது, நான் சொல்லிக் கொடுத்த மாதிரி நீ எனக்கு முத்தம் கொடுக்கணும். சரியா?” என்றான்.

“நீயே சொல்லிக் கொடுப்பியா? அப்போ உனக்கு எப்படி முத்தம் கொடுக்கணும்னு தெரியுமா?” என்ற துர்கா கண்கள் விரிய ஆதியிடம் கேட்டாள்.

“ஆமாம், நான் தான் உனக்குச் சொல்லிக் கொடுக்கப் போறேன். இதுக்கு முன்னாடி நான் உனக்கு முத்தம் கொடுத்தது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? எனக்கு முத்தம் கொடுக்கத் தெரியுமான்னு கேட்கிற?” என்ற ஆதி.

“தெரியும் ஆனா…. அது மறந்து போச்சு,” என்றாள் துர்கா.

“சரி, நான் உனக்கு எப்படி முத்தம் கொடுக்கிறது என்று சொல்லித் தரேன். அதுக்குப் பிறகு நீ எனக்கு அதே மாதிரி முத்தம் கொடுத்துப் பயிற்சி (Practice) பண்ணிக்கணும், சரியா?” என்றான்.

“ம்ம்ம்ம்…. சரி. நீ கத்துக்கொடு. நான் அதேபோல உன்கிட்டப் பயிற்சி பண்ணிக்கிறேன்,” என்று சொல்லி துர்கா பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரிடம் பாடம் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பது போலக் கட்டிலில் அமர…

‘ஐயோ!!! துர்கு… இப்படி என்ன சொன்னாலும் அப்படியே வெள்ளந்தியாக நம்புறியேடி! உன்னை இப்படிப் பார்க்கிறப்ப எனக்கு ஒருபக்கம் சந்தோஷமாவும் இருக்கு. இன்னொரு பக்கம் இதுவே பழைய துர்காவா இருந்தா நான் இப்படி எல்லாம் பேசினா என்கிட்ட எப்படி நடந்துப்பான்னு பார்க்கணும்னு ஆர்வமாகவும் இருக்கு. சீக்கிரம் உன்னோட பழைய நினைவு எல்லாம் வரணும் துர்கா’ என்று மனதில் நினைத்துக்கொண்டவன்.

“சரி, ரெடியா நீ?” என்றான் ஆதி. “ஓ எஸ்! நான் ரெடி,” என்று சிரித்தபடி மிகவும் ஆர்வமாக ஆதியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் துர்கா.

“சரி, ஒரு நிமிஷம் இரு,” என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தன் அறைக்கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான்.

உள்ளே வந்த ஆதி நேராகத் துர்காவிடம் வந்தவன், அமர்ந்து இருந்தவள் மேல் பாய…

அவன் பாய்ந்த வேகத்தைப் பார்த்த துர்கா பயந்தபடி இமைகள் படபடக்க ஆதியைப் பார்க்க…

துர்காவைக் கட்டிலில் தள்ளி, அவள் கால்களுக்குப் பாதிப்பு வராதவாறு அவள் அருகில் படுத்த ஆதி, மேலும் தாமதிக்காமல் துர்காவின் இதழைத் தன் இதழ்களால் கவ்வினான்.

முதலில் அவன் எப்படி வேகமாக வந்து தன்மீது பாய்ந்ததும் அதிர்ச்சியில் இருந்த துர்காவிற்கு, ஆதி முத்தம் கொடுக்கவும் தான் தனக்கு முத்தம் எப்படி கொடுக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

தன் மீது பாதி உடலைப் போட்டுப் படுத்திருக்கும் ஆதியைப் பார்த்த துர்காவின் கைகள் தன்னிச்சையாக அவன் கழுத்தில் மாலையாகப் போட்டுக் பிடித்துக் கொண்டது.

துர்கா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தன் கழுத்தில் கைகளை மாலையாகப் போட்டு அவன் முத்தத்தை வரவேற்க…

அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்த ஆதி, அவளின் இந்த வரவேற்பு மேலும் அவளோடு தன்னை ஒன்றிக்கொள்ளத் தூண்ட… தன் முதிர்ந்த உணர்ச்சிகளையும் ஒரே முத்தத்தில் அவளிடம் காட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்து, முன்பு போல முதலில் மென்மையாக ஆரம்பித்த அவனது முத்தம், வன்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தது.

துர்காவும், அவன் தீவிரமாகத் தனக்கு முத்தப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள், அவனுக்கு இசைந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

முதலில் பாடம் கற்றுக்கொள்ளும் மாணவி போலப் பொறுமையாக ஆதி முத்தம் கொடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த துர்கா, நேரம் ஆக ஆக அவளுடைய உணர்வுகள் ஆதி தந்த வன்மையான முத்தத்தால் தூண்டப்பட, அவளும் பதிலுக்கு ஆதிக்கு இப்போது முத்தமிட ஆரம்பித்தாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஆதி இன்ப அதிர்ச்சி ஆனவன், தொடர்ந்து துர்காவுக்கு முத்தம் கொடுக்க… துர்கா விடாமல் அவனுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு முத்தம் கொடுக்க, ‘சொல்லிக் கொடுக்கிறேன்’ என்று ஆரம்பித்த அந்த முத்தத்திற்குள்ளே இருவரும் மூழ்கிப் போனார்கள்.

ஒரு கட்டத்தில் இருவருக்குமே மூச்சு விட மிகவும் சிரமமாக இருக்க, துர்காவைப் பிரிய மனம் இல்லாமல் ஆதி அவளை விட்டு விலக…

அவனுக்குத் தீவிரமாக முத்தம் கொடுத்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த துர்கா, ஆதி இப்படித் தன்னிடமிருந்து விலகுகிறான் என்று தெரிந்ததும், பட்டென அவன் சட்டைக்காலரை பிடித்து இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டு அவனுக்கு மீண்டும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஆதிக்கு ‘தனக்குத் தெரிந்த துர்காதானா இது?’ என்று ஆச்சரியமானவன். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் துர்காவுக்குள் ஒன்றிப் போனான்.

இருவரின் உடலும் உரசிக்கொள்ள… காதல் தீ பற்றிக்கொண்டது இருவருக்கும். துர்காவிற்குக் தன் உணர்வுகளை என்னவென்று கணக்கிட முடியவில்லை. ஆனால், இது ஒருவித போதை போல அவளுக்குப் பிடித்துவிட… ஆதியை விடாமல் கட்டிக்கொண்டாள்.

அவள் மேல் படுத்திருந்த ஆதிக்கு முத்தத்திலேயே உச்சம் அடைய, அவன் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அவன் உணர்வுகளுக்கு வேலை கொடுத்துக்கொண்டு இருந்த முத்தம், அவன் கீழ் உறுப்பைத் தூண்டிவிட…

ஆதிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்க, துர்கா தன் உடலில் ஏதோ விசித்திரமாக உரசுவதை உணர்ந்தவள், ஆதிக்கு முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்க்க…

ஆதியோ உணர்ச்சிகளின் பிடியில் அவன் உறுப்பு கிளர்ந்து எழ… கண்கள் மூடி அவள் மேல் படுத்து இருந்தவன், திடீர் என்று கண் விழித்த ஆதி துர்காவைப் பார்க்க… அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஆதி” என்று பயந்தவளாக ஆதியை அழைக்க…

அவன் வேக மூச்சு எடுத்தவனாகத் துர்காவின் கண்களைப் பார்த்துப் பெரிய மூச்சுக்கள் எடுத்துக்கொண்டே, “என்ன துர்கு?” என்றான் அவள் மேல் படுத்தவாறு.

“என்மேல… என்னவோ, என்னவோ…” என்று துர்கா கூற வருவதற்குள். ஆதி தன் ஆண்மை கிளர்ந்து எழுந்து அவனை இம்சிக்கக் காத்திருப்பதை உணர்ந்தவன்.

அவள் மீது இருந்து எழுந்தவன் வேகமாக எழுந்து குளியலறைக்குள் ஓடிவிட்டான்.

துர்காவிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. குளியலறையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

உள்ளே சென்ற ஆதி நீண்ட நேரம் நீர்த் தெளிப்பானின் (Shower) அடியில் நின்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் போராடித் தோற்றான். நீண்ட நேரம் கழித்தே குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துர்கா ஆர்வமாக ஆதியைப் பார்க்க… அவன் குளித்து முடித்து ஈரத் துண்டை (Towel) கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டைப் போட்டுத் தன் தலையைத் துடைத்தவாறு வெளியே வந்தவன் துர்காவைப் பார்க்க…

ஆதியைப் பார்த்த துர்கா, “ஆதி, ஏன் இப்போ நீ குளிச்சிட்டு வந்தே? என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்துச் சிரித்த ஆதி, “எல்லாம் உன்னால தான்” என்று சொல்லிவிட்டு வேகமாக உடை மாற்றும் அறைக்குள் சென்றுவிட்டான்.

அப்புறம் என்ன? வழக்கம் போல நம்ம துர்காவிற்கு இதுவும் ‘ஏன்’ என்று புரியவில்லை. அவ்வளவுதான்.


சிம்லாவில் இருந்து வந்ததுல இருந்து மதுவிடம் பவன் சரியாக முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

அலுவலகத்திற்கு வந்தால் அவள் இருக்கும் பக்கமே தெரிந்தும் கூட வருவதைத் தவிர்த்தான் பவன்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரியா, ‘என்ன நடக்குது இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும்? நானும் ஒரு வாரமாகப் பார்த்துட்டு இருக்கேன். ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையே’ என்று யோசித்தவாறு எழுந்து பவனிடம் வந்தாள்.

வேலை செய்து கொண்டிருந்த பவன் தன் எதிரே யாரும் நிற்பது போல இருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க… அங்கே ரியா இடுப்பில் கை வைத்துக்கொண்டு இவனைப் பார்த்து முறைத்தபடி நின்று இருந்தாள்.

“வா ரியா, ஏன் வந்துட்டு எதுவுமே பேசாமல் நின்னுட்டு இருக்க? நீ வந்தது கூட எனக்குத் தெரியல பாரு,” என்றான் பவன்.

“நீதான் வேலையில ரொம்ப மும்மரமா இருக்கியே. நான் வந்தது மட்டும் தான் தெரியலையா? இல்லை இங்கே யாருமே உனக்குக் கண்ணுக்குத் தெரியலையா?” என்றால் ரியா.

“ஏன் ரியா இப்படிப் பேசுற? என்ன ஆச்சு?” என்றான் பவன்.

தன் தனி அறையில் (Cabin) வேலை பார்த்துக் கொண்டிருந்த கதிர், இவர்கள் இருவரும் வெளியே பேசிக் கொடுப்பதைப் பார்த்தவன், இன்டெர்காமில் அழைத்து பவனையும் ரியாவையும் உள்ளே வரச் சொன்னான்.

கதிரின் அறைக்கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த பவனையும் ரியாவையும் மாறி மாறிப் பார்த்தான் கதிர்.

பின் ரியாவைப் பார்த்து, “ரியா, நீ சொல்லு. இங்கே என்ன பிரச்சினை நடந்துட்டு இருக்கு?” என்று கேட்டான் கதிர்.

“சார் அது வந்து…” என்று ரியா தயக்கமாகக் கதிரைப் பார்க்க…

“சொல்லு ரியா. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். இவன் சிம்லா போயிட்டு வந்ததுல இருந்து சரியில்லை. யார்கிட்டயும் சரியா முகம் கொடுத்துப் பேச மாட்டேங்குறான். சொன்ன வேலையை மட்டும் சரியா செய்யறான். இவன் இப்படி கிடையாதே, எப்பவும் ஒரு மார்க்கமாவே சுத்திக்கிட்டு இருப்பான். இப்போ என்ன ஆச்சு அவனுக்கு?” என்று கேட்டான் கதிர்.

பவனைப் பற்றி ரியாவிடம் கதிர் கேட்டுக்கொண்டிருக்க, தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இல்லை என்பது போலப் பவன் நின்று இருந்தான்.

அப்போது அவர்கள் அறைக்கதவைத் தட்டிக்கொண்டு மது கதிரிடம் வேலை விஷயமாக ஏதோ கேட்க உள்ளே வர… கதிரின் அறைக்குள் ஏற்கனவே பவனும் ரியாவும் நின்றிருப்பதைப் பார்த்த மது, “சாரி சார். நான் வேணா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று சொல்லி வெளியே செல்லப் போக…

“மது, நீங்களும் இருங்க. உங்க கிட்டேயும் நான் பேசணும்,” என்றான் கதிர்.

“நீங்க வெளியே செல்லப் போனா?” மது திரும்பி கதிரைப் பார்க்க… “என்ன ஆச்சு பவனுக்கு? சிம்லா போயிட்டு வந்ததுல இருந்து ஏன் சரியா யாருடனும் பேச மாட்டேங்குறான்? அவனுண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கானே? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.

மது தங்கள் பிரச்சினையை எப்படி கதிரிடம் சொல்வது என்று யோசித்தவள், “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார். நல்லா தானே இருந்தார். ஆனால், இங்கு வந்ததுக்கப்புறம் தான் இப்படி மாறிட்டார்” என்று சொன்னாள்.

“நிஜமாவே உங்களுக்கு என்ன பிரச்சனை இன்னும் தெரியாதா?” என்று கதிர் அவளைக் கூர்ந்து பார்த்து கேட்டான்.

கதிரின் பார்வையைத் தவிர்த்த மது, “இல்லை சார். நிஜமாகவே எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றாள்.

“ஓஹோ! அப்படியா? அப்போ உங்களுக்கும் பவன் ஏன் இப்படி இருக்கான்னு தெரியாது அப்படித்தானே?” என்று கேட்டான் கதிர்.

மது ‘ஆமாம்’ என்று தயக்கமாகத் தலையை ஆட்ட…

‘பவன்! மது இப்போதாவது தங்கள் இருவரும் காதலிப்பதைத் சொல்வாள்’ என்று நினைத்தான். ஆனால், எப்போதும் எதுவும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் போகவே அவனுக்கு மதுவின் மேல் கோபமே வந்துவிட்டது.

“இப்படியே எத்தனை நாளைக்கு மது, எதுவும் தெரியாது என்று நீ சமாளிச்சுட்டு இருக்கப் போற? காலம் முழுக்க நீ இப்படியே இருந்துட்டலாம்னு நினைக்கிறியா? அப்போ நான் உனக்கு வேண்டாம் அப்படின்னு நீ முழுசாவே முடிவு பண்ணிட்டியா? நானும் சிம்லாவில் இருந்து வந்ததுல இருந்து உன்கிட்ட பேசாமல் இருக்கேன். ஏன் பேசலை? எதுக்கு பேசலைன்னு ஒரு தடவை கூட நீ வந்து என்கிட்ட கேட்கவே இல்லை. நான் பேசாமல் போனது ஒரு வகையில உனக்கு நல்லதாப் போயிடுச்சு அப்படித்தானே? ‘இவன் எப்படிப் போனால் என்னங்கிற மாதிரி’ தானே நீ என்னை விட்டுட்ட?” என்று பவன் ஆதங்கமாக மதுவிடம் கேட்க…

மதுவும் கோபமாக நிமிர்ந்து பவனைப் பார்த்து, “நீயும் தாண்டா ராஸ்கல்! ஊரிலிருந்து வந்த பிறகு என்கிட்ட ஒரு தடவை கூட வந்து பேசல. ரெண்டு பேரும் அங்கே தப்பு பண்ணிட்டு வந்திருக்கோமே, ‘இவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா? எதுவும் நினைச்சு எவ்வளவு கஷ்டப்படுறான்னு’ கொஞ்சமாவது என்னைப் பத்தி நீ யோசிச்சியா? உன் வேலை முடிஞ்சதுன்னு தானே போயிட்டே?” என்றால் மது கோபமாக.

“என்ன சொன்னே… என் வேலை முடிஞ்சதுல நான் போயிட்டேன்னா சொல்றியா? நல்லா யோசிச்சு சொல்லு. உனக்கும் எனக்கும் அங்கே இடையில் நடந்த தப்புக்காக நான் தானே உன்கிட்ட வந்து நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். ஆனா அதுக்கு நீ என்ன சொன்ன? ‘எனக்குக் கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. நம்ம ரெண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்துக்கலாம்னு’! இதெல்லாம் நீதானே சொன்ன? என்னமோ நான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொன்ன மாதிரி இல்ல இப்போ நீ பேசுற,” என்றான் பவன்.

“ஆமாம், அப்போ சொன்னேன் தான். அதுக்காக நீ அப்படியே விட்டுடுவியா? திரும்ப வந்து என்கிட்டப் பேச மாட்டியா? ஏன் இப்போ நம்ம ரெண்டு பேரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல ஒண்ணா இருந்தா என்ன பிரச்சனை? யார் வந்து நம்மளை என்ன கேட்கப் போறாங்க?” என்றால் மது மீண்டும்.

பவனும் மதுவும் மாறி மாறி தங்களைக் குறை சொல்லிச் சண்டை போட்டுக்கொண்டிருக்க… இவர்களுக்கு இடையில் நின்றிருந்த ரியாவும், அதை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கதிரும் இங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் வாயடைத்துப்போய் இருவரும் பவனையும், மதுவையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் இடைவிடாமல் சண்டை போட்டுக்கொண்டிருக்க.. கதிர் தன் தொலைபேசியை எடுத்து விக்கிக்கு அழைத்துத் தன் தனி அறைக்கு வரச் சொல்லி, மதுவையும் பவனையும் அவனிடம் மாட்டிவிட்டு, தன் வேலை முடிந்தது என்று அமைதியாக இருந்துவிட்டான்.


போதி இப்போதெல்லாம் அவன் தலைமை அலுவலகத்திற்கு (Head Office) சரியாகச் செல்வதே இல்லை. இப்போது பார்த்தாலும் மருத்துவக் கல்லூரியே கதி என்று இருந்தான்.

தன் அலுவலக வேலைகளை எல்லாம் மித்திரனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தினமும் சரியாக மாதவி வரும் நேரம் பார்த்து இங்கு வந்து விடுவான் போதி.

மாதவியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அவளது பழைய பேராசிரியருக்கு (Professor) அழைத்து அவளைப் பற்றிய விவரங்கள் கேட்க… அவளுக்கு என்று பெற்றோர் யாருமில்லை என்றும், சிறுவயது முதலே அவள் ஆசிரமத்தில் வளர்ந்து வந்ததாகவும், 18 வயதிற்குப் பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து அவளுக்கான வேலையைத் தேடிக்கொண்டு படிக்கவும் செய்து தன் தேவைகளையும் பார்த்துக்கொள்கிறாள் என்று அவளுடைய பேராசிரியர் சொல்வதைக் கேட்டிருந்தான் போதி.

போதிக்கு அவள் மேல் விருப்பம் இருந்தாலும், அதை நேரடியாக மாதவியிடம் சொல்ல அவனுக்குச் சிறு தயக்கம் இருக்கத்தான் செய்தது.

இப்படியே அவளைப் பார்த்துக்கொண்டிருக்கச் சொன்னால், காலம் முழுவதும் அவளை தூர இருந்து பார்த்துத் திருப்தி அடைந்து கொள்வான் போதி. அந்த அளவிற்கு அவள் மேல் காதல் பைத்தியம் ஆகிவிட்டான் போதி.

போதியிடம் கோப்புகளில் (Files) கையெழுத்து வாங்க மித்ரன் அடிக்கடி இங்கே வந்து போய்க் கொண்டிருந்தான்.

இன்றும் அதே போலத்தான் போதியிடம் கையெழுத்து வாங்க வந்திருந்தான் மித்ரன். அலுவலக அறைக்குள் உள்ளே வந்த மித்ரன், “நீ பண்றது எல்லாம் கொஞ்சம் கூடச் சரியில்லை. அங்கே நான் ஒருத்தனே கிடந்து அல்லாடிக்கிட்டு இருக்கேன். நீ இங்கே என்னடான்னா ஜாலியா இங்கேயே இருக்க… அலுவலகம் வராம அந்தப் பொண்ணையே பார்த்துகிட்டு இங்கேயே இருக்க. இதெல்லாம் சரியா சொல்லு,” என்று புலம்பினான் மித்ரன்.

“என்னை என்னடா செய்ய சொல்ற மித்ரா? அந்தப் பொண்ணைப் பார்த்ததிலிருந்து எனக்கு ஒரு வேலையும் சரியா ஓட மாட்டேங்குது. அவளைப் பார்த்தது ஏனோ எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. நான் என்ன பண்ணட்டும்? நீயே சொல்லு,” என்றான் போதி.

“பேசாம நேரா அந்தப் பொண்ணு கிட்ட போய் நீ அவளை காதலிக்கிறேன்னு சொல்லிடு,” என்றான் மித்ரன்.

“அதுக்கு வாய்ப்பே இல்லை மித்ரா. மாதவி நல்லாப் படிச்சு மருத்துவர் ஆகணும்னு வைராக்கியத்தோட இருக்கா. நான் போய் இந்த மாதிரி விஷயத்தைச் சொல்லி மாதவியைத் திசை திருப்ப (Divert) விரும்பல,” என்றான் போதி.

“அப்போ அந்தப் பொண்ணுகிட்ட உன்னோட காதலை நீ சொல்லப் போறது இல்லையா?” என்று கேட்டான் மித்ரன்.

“ம்ஹும்…” என்று தலையை இடவலமாக ஆட்டினான் போதி.

“என்னவோ பண்ணித் தொலை. நீ உன்னோட காதலை அந்தப் பொண்ணு கிட்ட சொல்லப் போறது இல்ல. அப்புறம் எதுக்குத் தேவையில்லாம இங்கே இருந்து நேரத்தை வீணடிச்சுட்டு இருக்க? நீ சீக்கிரமா அலுவலகம் வர வழியப் பாரு. என்னால் எல்லாம் இனிமே தனியா அங்கே வேலை பார்க்க முடியாது. எனக்கு வேலைப்பளு (Workload) ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு,” என்றான் மித்ரன்.

மித்ரன் கொண்டு வந்த கோப்பில் கையெழுத்திட்டபடியே, “பார்க்கலாம்” என்று பதில் அளித்தான் போதி.

கதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க ப்பா.. யாருமே கமெண்ட் பண்ண மாட்டேங்குறீங்க இப்படி பண்ணினா எப்படி அடுத்த ஏபி எழுத, போஸ்ட் பண்ண மனசு வரும். ஒரு மோட்டிவேஷனே இல்ல


You may also like

9 comments

Saranya Arivuselvan November 27, 2025 - 10:15 am

Supper akka romba intresting irukku next epi eppo varum i am waiting dhurka kku eppa akka palasaellam ngabaham varum ❤️❤️❤️🌹🌹🫰🫰🤩🤩🫶🫶😊😊🥺🥺🥺

Reply
Layas Tamil Novel November 27, 2025 - 11:07 am

Thank u ❤️😄 seekirame durgavuku palaiya ninaivugal varum sister

Reply
S joshna November 27, 2025 - 1:09 pm

Iam waiting for next episode 😍

Reply
S.joshna November 27, 2025 - 9:31 pm

Next episode podunga please sis 🥺❤️🌹

Reply
Layas Tamil Novel November 27, 2025 - 11:27 pm

Nalai varum sis

Reply
Layas Tamil Novel November 27, 2025 - 11:26 pm

Thank u seekirame varum sia

Reply
S.joshna November 27, 2025 - 12:34 pm

Durga ku eppo palasula niyabagam varumnu wait panra sister 🎉💕😍

Reply
LATHA November 27, 2025 - 10:44 pm

Aadhi ku treatment Mudinja avan face epdi irukunu pathu Sangavi kadupahanum

Reply
Layas Tamil Novel November 27, 2025 - 11:27 pm

S nadakum

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured