Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 164

உன் ரகசிய ரசிகை நான் 164

by Layas Tamil Novel
149 views

EPISODE 164

கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளை ரசித்துக் கொண்டு இருந்த துர்காவின் முன்னால் தனக்குப் பின்னே யாரோ நிற்கவும், அவர்களின் நிழல் அவளுக்கு முன்னே கடற்கரை மணலில் விழவும். ஆதிதான் பனிக்கூழ் வாங்கிவிட்டு வந்துவிட்டான் என்று நினைத்து துர்கா திரும்பிப் பார்க்க… தன் பின்னால் நின்று இருந்தவரைப் பார்த்து, “நீங்க… நீங்க… சங்கவி தானே?” என்று கேட்டாள் துர்கா.

அவள் பின்னால் இருந்து வில்லத்தனமாகச் சிரித்தவாறு துர்காவுக்கு நேராக வந்து நின்ற சங்கவி, “பரவாயில்லையே, என் பெயரை ஞாபகம் வைத்திருக்க,” என்றால். துர்கா எதுவும் பேசாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு சங்கவியைப் பார்க்க…

சங்கவி வருவதற்கு முன்பாக வரை துர்காவை ஆதி அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தவன், கவனத்தைத் திசை திருப்பவே அந்தக் சிறு குழந்தையிடம் சாக்லேட்டைக் காட்டி ஆதியிடம் பொய் சொல்லச் சொல்லி இருந்தாள் சங்கவி.

“ஏன் குட்டி, அவங்க ரெண்டு பேரையும் உன்னோட அம்மா அப்பா என்று என்கிட்டப் பொய் சொன்ன?” என்று ஆதி கேட்க… “அது… அது… வந்து…. உங்ககிட்ட அவங்க ரெண்டு பேரையும் என்னோட அம்மா அப்பான்னு சொல்லச் சொல்லி…” என்று நிறுத்திய அந்தக் குழந்தை, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்த அந்தக் குழந்தை, தூரத்தில் இருந்த ஒருவரைக் காட்டி, “அவங்க தான் என்கிட்டே சாக்லேட் கொடுத்து இப்படிச் சொல்ல சொன்னாங்க,” என்றது.

“என்கிட்டே யாரு அப்படிப் பொய் சொல்ல சொன்னாங்க?” என்று கேட்ட ஆதி, “அவங்க இப்போ எங்க இருக்காங்க?” என்று அந்தச் சிறுமிடம் கேட்டான்.

“அதோ அங்க நிக்கிறாங்களே, அந்த ஆன்ட்டி தான் சொன்னாங்க,” என்று சங்கவி நின்றிருந்த திசையை அந்தக் குழந்தை காட்டி, மழலை மொழியில், “அவங்க தான் உங்க கிட்டே அப்படிச் சொல்ல சொன்னாங்க,” என்றது. அந்தக் குழந்தை காட்டிய திசையில் ஆதி திரும்பிப் பார்க்க…. சற்று முன்பு அந்தக் குழந்தை ஆதியிடம் சங்கவியைக் காட்டிச் சொல்ல… அவன் திரும்பிப் பார்க்கும் பொழுது சங்கவி அங்கே இல்லை.

அங்கே தான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் தன் உலகமே இருண்டு விட்டது போல உணர்ந்தான். தன் கண் முன்னால் துர்கா கடலுக்குள் விழுந்து நீந்தத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.


அங்கே துர்கா கடல் தண்ணீரில் விழுந்து நீந்தத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் அதிர்ச்சியானவன், ஒரு நொடியும் தாமதிக்காமல் துர்காவை நோக்கி கடற்கரை மணலில் ஓட…. துர்கா தான் கடல் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

துர்காவை நோக்கி ஆதி வேகமாக ஓட, அதற்குள் துர்கா கடல் அலைகளால் இழுக்கப்பட்டுச் சில அடி தூரம் கடலுக்குள் சென்றவள், அவன் கண் முன்னாலேயே கடல் அலைகளோடு சேர்ந்து மறைந்து விட்டாள். ஆதி கடல் அலைகளுக்குள் சென்று துர்காவைத் தேட…. அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை துர்கா காணாமல் போகவே, அப்படியே உறைந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான் ஆதி.

“துர்கா..” என்று கத்திக் கொண்டு ஆதி கடல் அலைகளுக்கு நடுவே நுழைந்து கடலுக்குள் நீச்சல் அடித்து துர்காவைத் தேடிக் கொண்டும், அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே… என்ன செய்வது என்று தெரியாமல் கடற்கரை மணலில் இங்கும் அங்கும் பித்துப் பிடித்தவன் போலத் தேடிக் கொண்டு இருந்தான் ஆதி.

அவன் தேடுவதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தாங்களாகவே முன் வந்து, கடலுக்குள் யாரேனும் சென்று விட்டார்களா என்று தேடத் தொடங்கினார்கள். இவர்களை எல்லாம் பார்த்தவாறு ஆதி மிகவும் பதட்டமாக நின்று இருக்க… நீண்ட நேரமாகியும் துர்கா இருக்கும் இடம் தெரியாமல் ஆதி தவித்துக் கொண்டு இருக்க…

அப்போது அவன் நின்று இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி திடீர் என்று சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு இளைஞர்கள் கையில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு கடலுக்குள் இருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு இருக்க.. அதைக் கேட்டதும் ஆதி வேகமாக அவர்கள் சொன்ன திசையை நோக்கி வேகமாகப் பதட்டத்துடன் ஓடினான்.

அங்கே கடற்கரை மணலில் ஒரு பெண்ணைப் படுக்க வைத்து, சுற்றி நிறைய ஆட்கள் நின்று இருக்க.. அதைப் பார்த்த ஆதியின் இதயம் திக் திக் என்று அடித்துக் கொண்டது. ‘அது துர்காவாகத் தான் இருக்க வேண்டும். அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது,’ என்று கடவுளை வேண்டிக் கொண்டு, ஆதி இதயம் படபடக்கக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள் சென்றவன். மணலில் படுக்க வைக்கப்பட்டிருந்த பெண்ணைப் பார்க்க… அது துர்காவே தான். அதைப் பார்த்ததும் பதறிக் கொண்டு அவள் அருகில் வந்த ஆதி, துர்காவைக் கன்னம் தட்டி எழுப்ப முயற்சிக்க..

துர்கா கண் திறக்காமல் அப்படியே மூச்சு பேச்சின்றி இருந்தால். அவளைத் தூக்கிக் கொண்டு வந்த அந்த இரு இளைஞர்களும் ஆதியிடம், “சார், இவங்க தண்ணி நிறையக் குடிச்சிருப்பாங்க. அவங்க மூச்சு பேச்சில்லாமல் இருக்காங்க. சீக்கிரமா அவங்களை மருத்துவமனைக்கு (Hospital) கூட்டிட்டுப் போகணும் சார்,” என்றான் ஒரு வாலிபன்.

அவனிடம் ஆதி, “முதல் உதவி எதுவும் செய்ய வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

அந்த இளைஞன், “சார், விழுந்த கொஞ்ச நேரம்னா வாயில் வாய் வைத்து உறிஞ்சித் தண்ணீரை எடுக்க முயற்சிக்கலாம், இல்லைன்னா வயிற்றை அமுக்கி முயற்சி பண்ணலாம். இவங்க விழுந்து ரொம்ப நேரமும் ஆகிடுச்சு. அதுவும் இல்லாமத் தண்ணியை நிறையக் குடிச்சுட்டாங்க…. நாம பேசாம மருத்துவமனைக்குப் போறது தான் நல்லது,” என்று அந்த இளைஞன் சொல்ல…

நொடியும் தாமதிக்காமல் ஆதி, துர்காவைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு தன் காரை நோக்கி நடந்தவன், துர்காவைக் கையில் வைத்துக் கொண்டு காரைத் திறக்கப் போக… துர்காவைக் கடலுக்குள் இருந்து தூக்கி வந்த அந்த இளைஞன், “சார், நான் வேணும்னா காரை மருத்துவமனை வரை ஓட்டிட்டு வரட்டுமா?” என்றான்.

“சரி,” என்று தலையை ஆட்டிய ஆதி, தன் வலது புறச் சட்டைப் பையைக் காட்டி, சாவியை எடுக்கச் சொன்னான். ஆதியின் பையிலிருந்து கார் சாவியை எடுத்த அந்த இளைஞன், ஆதிக்குக் கதவைத் திறந்து விட்டு, துர்காவுடன் அவன் உள் ஏறும் வரை பொறுமையாக இருந்தவன், பின் காரை ஸ்டார்ட் செய்து மருத்துவமனை விரைந்தான்.

இங்கு இத்தனை களேபரம் நடந்து கொண்டு இருக்க… இதையெல்லாம் தூரத்தில் இருந்து சங்கவி பனிக்கூழ் சாப்பிட்டுக் கொண்டே… ஆதி துர்காவைக் காணோம் என்று பதறிக் கொண்டு தேடியது… அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தது வரை ரசித்தபடி பனிக்கூழ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள், “ச்சே… இன்னிக்கு அந்தத் துர்கா நூலிழையில் (Just Miss) தப்பிச்சுட்டா…” என்று புலம்பி விட்டுப் பனிக்கூழுக்குக் காசைக் கொடுத்தவள் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

இங்கு துர்காவைக் கொல்ல முயற்சி செய்துவிட்டு வந்த சங்கவி தான், மாதவி போட்டியில் ஜெயித்ததிற்கு அவளுக்குப் பரிசுகள் தந்து மகிழ்ச்சியாக இருந்தால். மாதவியிடம் நல்லவளாக நடந்து கொள்ளும் சங்கவியால் ஏன் துர்காவிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள முடிவதில்லை?


ரியாவின் வீட்டில் இருந்து இன்று பவனின் தங்கை பவித்ராவைப் பெண் பார்க்க கௌதமும் அவர்களுடன் அவர்கள் குடும்பமும் வந்திருந்தனர். ஜெயா தான் அவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதுமே, வீட்டு வேலைகள் எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். அவர்கள் சாப்பிடுவதற்காகப் பலகாரங்களைச் சமைத்து வைத்துவிட்டு, பவித்ராவையும் அழகாகத் தயார் செய்து என ஒரு வேலையும் விடாமல் செய்தாள் ஜெயா.

தன்னை வேலைக்காரியாக எண்ணாமல், தங்கள் வீட்டில் ஒருவராகப் பாவிக்கும் பவனின் வீட்டில் இருப்பவர்களுக்குத் தன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கைம்மாறு செய்ய வேண்டும் என்று அனைத்து வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.

கௌதம் வீட்டில் இருந்து அனைவரும் பவன் இருக்கும் விக்கியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு (Apartment) வந்து விட்டதாக ரியா தொலைபேசியில் (Phone) பவனிடம் கூறினாள். அவர்களைக் கீழேயே சென்று பவன் அழைக்க… பவனின் இந்த மரியாதையைக் காட்டும் விதம் பார்த்த உடனேயே கௌதமின் அப்பாவிற்குப் பிடித்துவிட்டது.

அவர்களை அழைத்துக் கொண்டு முதல் மாடிக்குத் தன் குடியிருப்புக்கு அழைத்து வந்தவன், வாசலில் இவர்களை வரவேற்பதற்காக நின்று இருந்த பவனின் அம்மாவை பவன் கௌதமிற்கும் அவன் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

பின் அனைவரையும் வீட்டிற்குள் அழைத்து அவர்களை அமர வைத்த பவன், தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும். தன் அப்பாவின் தம்பி தங்களிடம் இருந்து சொத்துக்களை எல்லாம் ஏமாற்றிப் பறித்துவிட்டுத் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றியதையும். அந்தச் சொத்துக்கள் மீது இப்போது வழக்கு (Case) நடந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் தாங்கள் இங்கு வாடகைக்குத் தங்கியிருப்பதாகவும், தங்களைப் பற்றிய எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் ஒன்று விடாமல் கூறினான்.

இதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட கௌதமின் பெற்றோர்கள். “எங்களிடம் வந்ததும் இத்தனை விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டனர்.

அதற்கு, “என் தங்கையை நீங்கள் பார்ப்பதற்கு முன்பாகவே எங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி விடுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. அதனால் தான் நான் எதையும் மறைக்காமல் உங்களிடம் கூறி விட்டேன்,” என்றான் பவன்.

“ஆமாம் அப்பா… இவன் எப்போதுமே இப்படித் தான். எதையும் மனதில் வைத்துக் பேசும் பழக்கம் இல்லாதவன். ரொம்ப வெளிப்படையானவன் (Open Type),” என்றால் ரியா.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார். எங்க குடும்பத்துல ஒருத்தராகப் போகிறீர்கள். அப்போ எங்களைப் பற்றிய எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்,” என்றான் பவன். அவன் அம்மாவும் அவன் சொன்னதையே சொல்லி அவர்களிடம் பேசினார்.

கௌதமின் அப்பா பவனிடம், “ஏன் தம்பி, நாங்க இன்னும் உங்க தங்கச்சியைப் பார்க்கவே இல்லை. அதற்குள் நீங்க எப்படி எங்களைக் குடும்பத்துல ஒருத்தரா… ஆகப் போறீங்கன்னு அவ்வளவு உறுதியா சொல்றீங்க?” என்று கேட்டார்.

“இதுல என்ன சார் இருக்கு? என் தங்கையும், உங்க பையனும் ஒருத்தரை ஒருத்தர் இரண்டு வருடங்களாகக் காதல் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க என் தங்கையைப் பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே சார்,” என்றான் பவன்.

பவனுக்குப் பவித்ராவும், கௌதமும் ஒருவரை ஒருவர் விரும்புவது ஏற்கனவே தெரிந்து விட்டதா என்று அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க…. எல்லோரையும் விட ரியாவுக்குத் தான் பவனுக்குத் தான் அண்ணன் காதல் விஷயம் தெரிந்து விட்டதை எண்ணி மிகவும் பயந்து போனாள். எங்கே பவனிடம் இந்த விஷயத்தைத் தான் மறைத்தது தெரிந்து தன்னிடம் பவன் பேசாமல் போய் விடுவானோ என்று பயந்தாள்.

“என்ன சார் எல்லாரும் அப்படிப் பார்க்குறீங்க? இவங்க ரெண்டு பேருடைய காதல் விவகாரம் எனக்கு ஏற்கனவே தெரியும்,” என்றான் பவன்.

ரியா பதட்டமாக அமர்ந்து இருக்க… அப்போது கௌதம் எழுந்து வந்து பவனின் அம்மாவின் அருகில் அமர்ந்தவன். “அம்மா, நானும் பவித்ராவும் ஒருவரை ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேல காதலிச்சிட்டு இருக்கோம். எங்கே எங்க காதலைச் சொன்னால் நீங்களும் பவன் சாரும் எங்க திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல மாட்டேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து தான் எங்க காதலை உங்க ரெண்டு பேர் கிட்டே இருந்தும் மறைச்சிட்டோம். எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிருங்க அம்மா,” என்று கௌதம் பேச…

அப்போது பவித்ராவும் அவள் அம்மாவிடம் வந்து மன்னிப்புக் கேட்க… “ஐயோ!! மாப்பிள்ளை என்ன இது?” என்று பவனின் அம்மா பதட்டம் அடைந்தார்.

“நீங்களும் பவித்ராவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்குற விஷயம் எனக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரியும். நீங்க ரெண்டு பேரும் ஒரு முறை ஒரு திரையரங்குக்குள் (Theatre) இருந்து படம் பார்த்துவிட்டு வந்ததை நான் பார்த்தேன்.”

“எனக்கு அப்போவே என் தங்கையை ஒருவனுடன் சேர்ந்து பார்த்த அன்றைக்கே அவளை அடிக்கணும்னு கோபத்தில தான் நான் அன்றைக்கு வீட்டுக்கு வந்தேன். ஆனா நான் வந்து பவித்ராவை அவள் அறைக்கு (Room) பார்க்கப் போன போது, அவ உங்க கிட்ட என் அண்ணனுக்குக் கல்யாணம் நடந்து அதனால பிறகு என் வீட்டில் சம்மதம் வாங்கிய பிறகு தான் நமக்குத் திருமணம் நடக்கும்.”

“ஒரு வேலை எங்க அண்ணா இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றால், நான் உன்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்று உங்களிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததை அவளுக்குத் தெரியாமல் நான் அவள் அறைக்கு வெளியில் இருந்து கேட்டேன். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். என்று பவித்ராவாக வந்து தன் காதலை என்னிடம் சொல்லிச் சம்மதம் கேட்கிறாளோ அப்போதே நான் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் அவள் காதலுக்குச் சம்மதம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.”

“அதன் பிறகு அவளிடம் நான் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. எனக்குத் தெரியும் என்ற விஷயம் ரியாவுக்கு இன்று வரை தெரியாது,” என்றான் பவன்.

அதைக் கேட்டு, “சாரி ரியா, இவ்வளவு நாள் நான் உன்கிட்ட எதையுமே வெளிப்படையா சொல்லல. என்னை மன்னிச்சிடு. நான் இப்படி உன்கிட்ட எதையும் சொல்லாம விட்டுட்டேன்னு நீ என்கிட்டக் கோச்சுக்காதே,” என்று பவன் மன்னிப்புக் கேட்க…

‘அப்பாடா! நம்ம தான் இவன்கிட்ட மறைச்சோம்னு நினைச்சேன். ஆனா இவன்தான் நம்மகிட்ட மறைச்சிட்டு இருக்கான்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்படியே மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கியா. உண்மையைச் சொல்லி அவன்கிட்ட வாங்கி கட்டிக்காத,’ என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்ட ரியா.

“ஏண்டா, நம்மளெல்லாம் எப்படிப் பழகி இருக்கோம். ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ தான் சொல்லவே இல்ல பாரு. என் அண்ணன் தான் கௌதம்னு உனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ஆனாலும் அதைப்பற்றி நீ என்கிட்டத் தெரிஞ்சுக்காத மாதிரி இவ்வளவு நாளும் பழகிட்டு இருந்திருக்க. அப்படித்தானே? அப்போ நம்ம நட்புக்குள்ள (Friendship) அவ்வளவுதானா?” என்று கோபமாக இருப்பது போல ரியா கேட்க…

“அடப்பாவி…. எப்படிப் பேசுறா பாரேன்,” என்று அவள் அம்மா, அப்பா, கௌதம் என அவள் குடும்பம் மொத்தமும் அவளை வாயைத் திறந்து கொண்டு பார்த்தனர். அவர்களிடம் கண்களாலேயே ஜாடை காட்டி அவர்கள் வாயை அடைக்க… பவனோ அவளிடம் தீவிரமாக (Seriously) மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

பின் ஒரு வழியாக ரியா பெரிய மனது செய்து பவனை மன்னித்தாள். பின் பவித்ராவை வரச் சொல்லி அவளுடன் எதுவும் பேசிவிட்டு, திருமணத்திற்குச் சீக்கிரமாகவே நாள் கொடுத்து விடலாம் என்று பேசியவர்கள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு அனைவரும் சென்றனர்.


அடுத்த நாள் வழக்கம் போல மாதவி கல்லூரிக்குக் கிளம்பி வெளியே வர, அவளை இறக்கி விடுவதற்காகக் காத்திருந்த வேதாச்சலமும், சங்கவியும் அவள் மிகவும் சந்தோஷமாக வருவதைப் பார்த்துப் புன்னகைத்தவர்கள், மாதவியிடம், “என்ன மாதவி, இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்க…” என்று கேட்டார் வேதாச்சலம்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. நான் எப்பவும் போல தான் இருக்கேன்,” என்று சொன்னவள், தன் கையில் கட்டி இருந்த போதி அவளுக்குப் பரிசாகக் கொடுத்த நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்சில் மணியைப் பார்த்துவிட்டு, “சரிப்பா, டைம் ஆகுது. நான் கல்லூரிக்குக் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு…

சங்கவியைப் பார்த்து, “அக்கா, போயிட்டு வரேன். இத பாருங்க,” என்று தன் பையைக் காட்டி, அதில் அவள் கொடுத்த மடிக்கணினியையும், தன் கையில் அவள் கொடுத்த கைப்பேசியையும் காட்டி, “நான் இதை கல்லூரிக்கு எடுத்துட்டுப் போறேன்,” என்று சொல்லிச் சிரிக்க….

“சரி, எடுத்துட்டுப் போ. பத்திரமா வெச்சுக்கோ எல்லா பொருளையும்,” என்றவள், அவள் கையிலிருந்த வாட்சைப் பார்த்து மாதவியின் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தவள், “ஆமாம், இந்த வாட்ச் உனக்கு ஏது? இதை நான் உனக்குப் பரிசளிக்கவில்லையே (Present)?” என்று சங்கவி கேட்க…

‘ஐயோ அக்கா, வேற இந்த வாட்சைப் பார்த்துட்டு இது எதுன்னு கேட்குறாங்களே… இப்போ என்ன சொல்லி நான் சமாளிக்கிறது?’ என்று மாதவி திருதிருவென விழிக்க…

“நான் உனக்குப் பரிசளித்தது மாதிரியே இந்த வாட்சை உனக்கு யாராவது பரிசளித்தார்களா?” என்று சங்கவி அவளுக்கு யோசனையைக் எடுத்துக் கொடுக்க… ‘அப்பாடா! அக்கா ஒரு யோசனை கொடுத்துட்டாங்க,’ என்று சொன்னவள், “அக்கா, இது… இந்த வாட்சை எனக்கு எங்க கல்லூரி முதல்வர் (Principal) பரிசு கொடுத்தாங்க,” என்று சொல்ல…

“யாரு? உன் கூட அலுவலக அறையில் ஒருத்தி இருந்தாளே, பிரின்சிபல் என்று சொல்லிட்டு, அந்தப் பதவிக்கு அவளுக்கும் சம்பந்தமே இல்லாம, அவளா உனக்கு இதைக் கொடுத்தா?” என்று கேட்டாள் சங்கவி.

“அக்கா, அவங்கள அப்படியெல்லாம் சொல்லாதீங்க,” என்றவள். “ஆமாம் அக்கா. அவங்க தான் நேத்து நான் நல்லா பாட்டுப் பாடினேன்னு சொல்லி, அதுக்குப் பரிசா இந்த வாட்சை வெச்சுக்க சொல்லி கொடுத்தாங்க. முதல்ல நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அப்புறம் அவங்க வற்புறுத்தி கேட்டுகிட்டதால் தான் வேற வழியில்லாமல் வாங்கிக்கிட்டேன் அக்கா,” என்றால் மாதவி.

“பரவாயில்லையே, உன் முதல்வருக்கு நல்லத் திறமை உள்ளவங்களைப் பாராட்டிப் பரிசு எல்லாம் கொடுக்கத் தெரியுது,” என்று சங்கவி சொன்னாள்.

“ஆமாம்,” என்று மாதவி தலையை ஆட்டிவள், “சரிக்கா, எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்புறேன்,” என்று சொல்ல, “சரி, பார்த்துப் போ. சாயங்காலம் கல்லூரி முடிஞ்சதும் நேரா வீட்டுக்குத் தான் வரணும். இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டு இருக்கக் கூடாது சரியா?” என்றால் சங்கவி கறாராக (Strictly).

“அதெல்லாம் கல்லூரி முடிஞ்சதும் நான் நேரா வீட்டுக்குத் தான் வருவேன். எங்கேயும் போக மாட்டேன்,” என்று சொன்னாள் மாதவி. அவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு மாதவி கல்லூரிக்குக் கிளம்பினாள்.

கல்லூரி வந்ததும் மாதவி நேராகப் போதி இருக்கும் அலுவலக அறைக்குத் தான் வந்தாள். வந்ததும் தயங்கிப்படியே அலுவலகத்தின் வெளியே நின்று இருக்க, அவளைப் பார்த்த பியூன், “என்னம்மா வேணும்? வந்துட்டு எதுவுமே பேசாமல் நின்னுட்டு இருக்க?” என்று கேட்டார்.

மாதவி தயங்கியபடியே, “சார் வந்துட்டாரா?” என்று கேட்டாள்.

“அவர் வந்து ரொம்ப நேரம் ஆகுது. உனக்கு என்னம்மா வேணும்?” என்றார் பியூன்.

“நான் அவரைப் பார்க்கணும்,” என்று மாதவி சொல்ல… “சரி இருமா, நான் போய் சார் கிட்ட கேட்டுட்டு வரேன்,” என்று சொல்லி அவர் உள்ளே செல்ல..

போதி மாதவியை நினைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு தலைக்குக் கை கொடுத்து அமர்ந்து அவளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்தான். கதவைத் தட்டிவிட்டு பியூன் உள்ளே வர, அவனைப் பார்க்காமலேயே விட்டத்தைப் பார்த்தவாறு, “என்ன சொல்லுங்க,” என்று கேட்க…. “சார், உங்களைப் பார்க்க ஒரு மாணவி வந்திருக்காங்க. ஏதோ உங்க கிட்டப் பேசணும்,” என்று சொல்ல… “சரி, வர சொல்லுங்க,” என்று யார் என்று கூடக் கேட்காமல் போதி அவரை அனுப்பி வைத்தான்.

நேற்றுதான் தன் காதலைப் பாடல் வரிகளால் போதிக்குத் தெரிவித்திருக்க, இன்று அவனைப் பார்க்க அவன் அலுவலகம் வரை வந்தவள், பியூன் வந்து அவளை உள்ளே செல்லச் சொன்னதும் உள்ளே போவதற்குத் தயங்கியபடியே நின்றிருந்தால் மாதவி.

“என்னம்மா நீ இன்னும் உள்ள போகலையா? சீக்கிரம் போய்ச் சாரப் பார்த்துட்டு வா. அவருக்கு எதுவும் வேலை வந்துருச்சுன்னா அப்புறம் அவரைப் பார்க்க முடியாது. போம்மா,” என்று பியூன் அவளை உள்ளே அனுப்ப…

“சரி,” என்று தலையாட்டிய மாதவி, ‘ப்ளீஸ்’ என்று போதியின் அறைக்கு முன் வந்து நின்றவள். கண்களை மூடி ஒரு பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு… போதியின் அலுவலக அறை கதவைத் தட்ட…

மாதவியின் நினைவாக விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்த போதி, பியூன் சொன்ன மாணவிதான் வந்திருக்கிறார் என்று கதவைப் பார்த்து… “எஸ் கம்மின் (Yes, Come in),” என்று போதி சொல்ல… தயங்கியவாறே அவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு மாதவி போதியின் அறைக்குள் வந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured