Episdoe 181
தன் அம்மாவின் மனநிலையைப் புரிந்து, அவருடைய பிரச்சனையைச் சரி செய்ய உதவிய நிலானிக்கு விக்கி ஒரு பரிசு வைத்திருப்பதாகச் சொன்னான்.
அதை நிலானி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் கூட, விக்கி அதைப் நிலானி தனியாக இருக்கும்போது மட்டுமே கொடுப்பேன் என்று சொல்லிவிட்டான். கணவன்-மனைவிக்கு இடையில் நான் வர விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு மது அங்கிருந்து சென்றுவிட்டாள்.
மது சென்றதும், விக்கியிடம் நிலானி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.
ஆனால் விக்கி, நிலானி படித்து முடித்துவிட்டு இரவு தூங்க வரும்போது அவளுக்கு அந்தப் பரிசைக் கொடுப்பதாகச் சொன்னான்.
வேறு வழியில்லாமல், நிலானி தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்கும் அறைக்கு (ஸ்டடி ரூம்) சென்றாள்.
“எனக்கு என்ன பரிசு வாங்கி வச்சிருக்காருன்னு கேட்டா, அதைக் கூட சொல்ல மாட்டேன்னு என்னை இங்கே அனுப்பிட்டார். என்கிட்ட வந்து ‘நிலாக்குட்டி, நிலா’ என்று கொஞ்சிப் பேசட்டும், பிறகு வச்சுக்கிறேன் அவரை,” என்று விக்கியைத் திட்டிக்கொண்டே படிக்க ஆரம்பித்தாள்.
பாடத்தில் மூழ்கிய நிலானிக்கு இரவு நேரம் போனதே தெரியவில்லை.
இரவு 10 மணியைத் தாண்டியும் நிலானி இன்னும் தூங்க வராமல் போகவே, தன் அறையில் இருந்த விக்கி, படிக்கும் அறையை எட்டிப் பார்த்தான்.
அந்த அறையின் விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருந்தது. நிலானி இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று உறுதி செய்த விக்கி, அவளை அழைத்து வருவதற்காக நிலானியின் படிக்கும் அறைக்குச் சென்றான்.
படிக்கும் அறையின் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே பார்த்தால்…
நிலானி தரையில் விரித்திருந்த கம்பளத்தின் (கார்பெட்) மீது புத்தகத்தை வைத்து, குப்புறப் படுத்தவாறு தன் கால்கள் இரண்டையும் ஆட்டிக்கொண்டு படித்துக்கொண்டிருந்தாள்.
விக்கி கதவைத் திறந்து மெதுவாக நிலானியின் பின்னால் வர, அவன் உள்ளே வந்ததை நிலானி கவனிக்கவில்லை.
நிலானி தீவிரமாகப் படித்துக்கொண்டிருக்க, அவள் குப்புறப் படுத்தபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் அணிந்திருந்த இரவு ஆடை (நைட் பேண்ட்) கீழே இறங்கி, அவள் கெண்டைக்கால் முழுவதும் விக்கியின் கண்களில் பட்டது.
மெழுகில் செய்த பொம்மை போல அவள் கால்கள் இரண்டும் பளபளவென இருக்க, அவள் கால்களுக்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்த விக்கி, அவள் பாதங்களையும், வழவழப்பான இரண்டு கால்களையும் ரசித்தபடி…
“என்னதான் என் நிலாக்குட்டி என்னுடன் ஒன்றாக இருக்கும்போது ரசிப்பதைவிட, இப்படி அறையும் குறையுமாய் தெரியுற என் நிலாக்குட்டியின் காலும், அவளுடைய இடுப்பும் ரசிக்கிறப்போ அது ஒரு தனி ஃபீலிங்காகத்தான் இருக்கு,” என்று நினைத்தவன்.
நிலானியின் கால்களுக்கு அருகில் அமர்ந்து, அப்படியே குனிந்து தன் இரண்டு கைகளாலும் ஊன்றி, மெதுமெதுவாகப் படுத்திருந்த நிலானியை ரசித்தவாறே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து, அவளைப் போலவே அவள் அருகில் படுத்தான்.
தீவிரமாகப் புத்தகத்தில் இருந்த வாக்கியத்தைப் படித்துக்கொண்டிருந்த நிலானிக்கு, அவள் கன்னத்தில் சூடாக மூச்சுக் காற்றுப் பட்டது.
திடுக்கிட்டவள் தன் அருகில் திரும்பிப் பார்க்க, அவளைப் போலவே கால்களை ஆட்டிக்கொண்டு, நிலானியின் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி.
அவனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவள், “நீங்கள்தானா? நான் கூட பேயோ பிசாசோன்னு பயந்துபோயிட்டேன்” என்றாள்.
“நான் இருக்கும்போது பேய், பிசாசுகள் எல்லாம் என் நிலானியிடம் நெருங்கவே முடியாது,” என்று சொன்னவன், “நிலாக்குட்டி, தூக்கம் வரலையா? இன்னும் படிச்சுக்கிட்டு இருக்க. மணி பத்துக்கு மேல ஆச்சு” என்றான்.
“இன்னும் கொஞ்சம் பாடம் முடிக்க வேண்டியிருக்கு. உங்களுக்குத் தூக்கம் வந்தால் நீங்க போய் தூங்குங்க. நான் படிச்சு முடிச்சிட்டு வரேன்,” என்றாள் நிலானி.
அவள் அருகில் படுத்திருந்த விக்கி, தன் கையைத் தூக்கி நிலானியின் முதுகில் போட்டவன். அவள் அணிந்திருந்த பனியனுக்குள் கையை விட்டு, அவள் முதுகை தன் விரல்களால் வருடியவாறே கைகளை மேலே கொண்டு சென்றவன், “வா நிலாக்குட்டி” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கெஞ்சினான்.
அவன் செயலால் நெளிந்தவாறே அவனைப் பார்த்தவள், “என்னங்க? என்ன இது? நான் கொஞ்ச நேரம் படிக்கிறேன், இப்படி டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்னை,” என்றவள், தன் முதுகில் இருந்த விக்கியின் கையை எடுக்கச் சொல்ல…
“ம்ஹும்… மாட்டேன்! நீ இப்போ என் கூட வந்து தூங்க வரியா இல்லையா?” என்றான்.
“உங்களுக்குத் தூக்கம் வந்தால் நீங்க போய் தூங்குங்க. நான் படிச்சு முடிச்சிட்டுத்தான் வருவேன்,” என்றவள்.
அவன் எதற்காக அழைக்கிறான் என்று நோக்கம் தெரிந்து, நிலானி வேண்டுமென்றே அவனுடன் செல்லாமல் வெறுப்பேற்ற…
“நீ என்கிட்ட பரிசு கேட்டதும், நான் எப்போ ‘தர மாட்டேன், ராத்திரிதான் தருவேன்னு’ சொன்னேனோ, அதனாலதானே இப்போ என் கூட ரூமுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கிற? எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டியா?” என்றவன்.
அவள் அருகில் படுத்திருந்தவன் எழுந்து, தரையில் படுத்திருந்த நிலானியை அப்படியே தூக்கிக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.
“அவனுக்கு நான் ஏன் அப்படி நடந்துகொள்கிறேன் என்பது தெரிந்துவிட்டது,” என்பதைப் புரிந்துகொண்ட நிலானி.
“அதுதான் தெரியுதே, அப்புறம் எதுக்கு என்னைக் கூட்டிட்டு போறீங்க? இறக்கி விடுங்க! நான் ஒன்னும் ரூமுக்கு வரல,” என்று கோபமாக அவன் கையில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கியவள், படிக்கும் அறையை நோக்கிச் செல்லப் போக…
அவளைத் தன் மீது மோதும் படி நிறுத்தியவன், அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்து, “இப்போ நீ உள்ள வரியா? இல்ல நான் இங்கேயே உன்னை…” என்று சொல்லி பார்வையாலேயே அவள் முகத்திற்குக் கீழே பார்க்க…
அவன் பார்வையில் உடல் கூசிப் போன நிலானி, அவன் மார்பில் அடித்தவள், “வர வர நீங்க ரொம்ப பேட் பாய் ஆகிட்டு வரீங்க” என்றால்.
“மத்தவங்களுக்குத்தான் நான் காமெடிப்பீஸ்; உனக்கு எப்பவுமே நான் பேட் பாய் தாண்டி என் பொண்டாட்டி,” என்று சொன்னவன், நிலானியைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவள் அருகில் தானும் படுத்துக்கொண்டான்.
“ஐயாவுக்கு அவ்வளவு அவசரமோ! என்னைப் படிக்கக் கூட விடாம படுக்கை அறைக்குத் தூக்கிட்டு வந்துட்டீங்க,” என்றால்.
“எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல. என் பொண்டாட்டிதான் நான் அவளுக்கு என்ன பரிசு கொடுப்பேன்னு யோசிச்சிட்டு இருப்பாள் என்றுதான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல. உனக்குப் பரிசு வேண்டாம்ன்னா நீ எழுந்து போய் மெதுவா படிச்சிட்டு வா… எனக்குத் தூக்கம் வருது, நான் தூங்கப் போறேன்,” என்று மேற்கூரையைப் பார்த்தவாறு தலைக்குக் கை கொடுத்துப் படுத்துக்கொண்டான் விக்கி.
“அய்யய்யோ! இவரை நம்ம பின்னாடி அலைய வைக்கலாம்னு பார்த்தா, கடைசியில் நம்மளை இவர் பின்னாடி அலைய வச்சுடுவார் போல இருக்கே,” என்று நினைத்த நிலானி.
திரும்பி விக்கியைப் பார்த்தவாறு படுத்தவள், அவன் மார்பில் இருந்த முடிகளுக்குள் தன் விரலை விட்டு விளையாடிக்கொண்டே… “என்னங்க…” என்றாள்.
“ம்ம்ம்ம்…” என்றான் விக்கி.
“என்ன பரிசுங்க எனக்கு வாங்கி வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள் நிலானி.
“நீதான் உனக்குப் படிக்க நிறைய இருக்குன்னு சொன்னியே, போய் படி. பரிசெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்,” என்றான் விக்கி, அவளைப் பார்க்காமல் கண்களை மூடிப் படுத்தபடி.
தன் முகத்தைப் பார்க்காமல், வேண்டுமென்றே தன்னை அலைக்கழிக்கும் விக்கியைப் பார்த்தவள்.
“நான் உங்களை வெறுப்பேத்த மாதிரி நீங்களும் என்ன வெறுப்பேத்துறீங்களா? இப்போ பாருங்க எப்படி உங்க கையாலேயே அந்தப் பரிசை எனக்குக் கொடுக்க வைக்கிறேன்னு,” என்று நினைத்தவள்.
அவன் மார்பில் இருந்த முடிகளுக்குள் தன் விரல்களை விட்டு விளையாடியவள், தன் விரல்களால் அவன் மார்பில் கோலம் போட…
அவள் சைகையில் விக்கிக்கு குறுகுறுப்பு ஏற்பட…
தன்னிச்சையாகக் கை வளைவுக்குள் படுத்திருந்த நிலானியின் முதுகை விக்கி வருட…
கைகளால் அவன் மார்பில் கோலம் போட்டுக்கொண்டிருந்த நிலானி, நிமிர்ந்து தன் இதழ்களால் அவன் மார்பில் முத்தம் வைத்து கோலம் போட ஆரம்பித்தாள்.
ஏற்கனவே தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நிலானியின் முதுகை வருடிக் கொண்டிருந்த விக்கிக்கு…
அவள் முத்தம் அவனை ஏதோ செய்ய… அவள் முதுகை வருடிக் கொண்டிருந்தவனின் கைகள் மெல்ல மெல்லக் கீழே இறங்கி அவள் இடையைப் பிசைய ஆரம்பித்தது.
கீழிருந்து மேலாக அவன் மார்பில் முத்தம் வைத்துக்கொண்டே வந்தவள், மெல்ல மெல்ல முன்னேறி அவன் முகத்திற்கு வர…
இவ்வளவு நேரம் கண் மூடி, நிலானி முத்தம் தந்ததை ரசித்துக்கொண்டு இருந்தவன், அவள் தன் முகத்திற்கு நேராக வந்ததும் பட்டென்று கண்களைத் திறக்க…
அவன் கண்களும் அவள் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது.
எதுவுமே பேசிக்கொள்ளாமல், பார்வையாலேயே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த…
தன் மீது பாதி உடலைப்போட்டுப் படுத்திருந்த நிலானியை இடையோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன், அவளைக் கீழே தள்ளி, நிலானியின் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி, குனிந்து அவள் இதழைக் கவ்விக் கொண்டான்.
முதலில் தன்னைக் கீழே தள்ளியதும் அதிர்ச்சியானாலும், பின்பு அவன் தந்த முத்தத்தை ரசிக்கத் தொடங்கினாள் நிலானி.
நிலானி எந்த எதிர்ப்பும் காட்டாமல், விக்கி கொடுத்த முத்தத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க ஆரம்பிக்க…
தலைக்கு மேலே தூக்கிப் பிடித்திருந்த நிலானியின் கைகளை, அவளுக்குத் தெரியாமல் மெதுவாகத் தன் பிடியைத் தளர்த்தியவன்.
முத்தம் கொடுத்துக்கொண்டே, படுக்கைக்கு மேலே அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசைப் பிரித்து, அதிலிருந்து அவளுக்காக வாங்கி வந்த பரிசைக் கையில் எடுத்தவன், நிலானிக்கு முத்தம் வைத்தான்.
நிலானியின் இதழில் முத்தம் மட்டும் கொடுத்திருந்தவன், அவள் இதழை விடுத்து, முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே முத்தம் வைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தவன்.
அவள் இடுப்பிற்கு வந்ததும், அவள் அழகிய வயிற்றில் ஆழமாக முத்தம் வைக்க…
நிலானி கண்கள் மயங்கி கட்டிலில் படுத்து இருக்க…
கையில் வைத்திருந்த பரிசைப் பிரித்தான் விக்கி.
அதை எடுத்துப் பார்த்தவன், நேராக நிலானியின் முகத்திற்கு அருகில் தன் கையை உயர்த்திய விக்கி, தன் கைக்குள் இருந்த பொருளை நிலானியின் முகத்தின் மீது உரச விட்டான்.
கண்கள் மூடி மெய்மறந்து படுத்திருந்தவளின் முகத்தில் ஏதோ உரச, திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தாள் நிலானி.
அவள் நெற்றியில் விக்கியின் கையில் இருந்து ஏதோ ஒன்று செயின் போல உரச…
அது என்ன என்று பார்ப்பதற்காக விக்கியின் கையில் இருந்து அந்தப் பரிசுப் பொருளை வாங்க, இத்தனை நேரம் அவள் தலைக்கு மேலே இருந்த தன் கையை உயர்த்தி விக்கியின் கையில் இருந்த அந்தச் செயினை வாங்கப் போக…
“ம்ஹும்…” அவள் கைகளைத் தடுத்தவன், “நான் தான் உனக்கு போட்டு விடுவேன்” என்ற விக்கி, அவள் கைகளை விட்டுவிட்டு…
அவள் நெற்றியில் உரசிக்கொண்டு இருந்த அந்தச் செயினை நெற்றியைத் தாண்டி, உரசிக்கொண்டே அவள் மூக்கு, உதடு என்று கீழே வந்தவன், அவள் சங்கு கழுத்திற்கு வர…
நிலானி அந்தச் செயினை விக்கி கழுத்தில் தான் மாட்டிவிடப் போகிறான் என்று நினைத்து, தன் தலையை லேசாகத் தூக்க…
சிரித்துக்கொண்டே அவள் கழுத்தைத் தாண்டி, செயினை அவள் உடலில் உரசவிட்டபடியே அவள் மார்புகள் என்னும் பெரும் மேடையைக் கடந்து, கஷ்டப்பட்டு அதையும் தாண்டி கீழே இறங்கி வந்தவன்.
அவள் அழகிய வயிற்றில் அந்தச் செயினை வைத்து, அவள் உயிர்ச் சுழியை (தொப்புள்) அந்தச் செயினை வைத்துச் சுற்றி வந்தவன்.
அந்தச் செயினில் இருந்த கொக்கியை இரண்டாகப் பிரித்து, அவள் வயிற்றில் தன் இரண்டு கைகளையும் வைத்தவன்.
நிலானியின் இடையைத் தழுவிக்கொண்டே கீழே சென்று, அவள் முதுகு நோக்கித் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு வந்தவன்.
அந்தக் கொக்கிகள் இரண்டையும் இணைத்து, அவளுக்காக வாங்கி வந்த பரிசை அவள் இடுப்பில் மாட்டிவிட்டான்.
விக்கி நிலானிக்காக இடுப்பில் அணியும் செயினை வாங்கி வந்ததை அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை.
விக்கி நிலானியின் வயிற்றில் இடுப்புச் செயினை மாட்டிவிட்டு, குனிந்து அந்தச் செயினின் மீது தன்னுடைய இதழைச் சேர்த்து ஆழ்ந்த முத்தம் வைத்து, அவள் அழகிய வயிற்றில் தன் உதடுகளைக் குவித்துப் பனியனுக்கு மேல் ஊதியவன்.
அப்படியே நிமிர்ந்து நிலானியைப் பார்க்க…
அவன் வாங்கித் தந்த பரிசை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டு தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள் நிலானி.
அவள் வெட்கப்படுவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே மேலே வந்தவன், நிலானியைத் தூக்கித் தன் மீது போட்டுக்கொண்டு, அவள் முகத்தில் இருந்த கையை விளக்கிவிட்டு.
நிலானியின் சிவந்த முகத்தைப் பார்த்தவன், “என்னுடைய பரிசு உனக்குப் பிடிச்சிருக்கா?” என்றான்.
நிலானி, “ம்ம்ம்… பிடித்திருக்கிறது,” என்று தலையை ஆட்டியவள்.
“ஏங்க, இப்படிப் பரிசு வாங்கி வந்திருக்கீங்க… நான் எப்படி அத்தையிடமும், மதுவிடமும் இந்தப் பரிசைக் காட்டுறது?” என்றாள்.
“ஏன் நிலாக்குட்டி, இந்தப் பரிசுக்கு என்ன குறைச்சல்?” என்றான்.
“குறைச்சல் எல்லாம் எதுவும் இல்லைங்க… ஆனால் ரொம்ப அதிகமாக இருக்கு… நான் படிக்கும் அறைக்கு போனப்போ ராதாவுக்கும் கீர்த்திக்கும் எனக்கு போன் பண்ணி இருந்தாங்க. படிக்கிறதைப் பத்தி சந்தேகம் கேட்டுட்டு, கலந்துரையாடிக் கொண்டிருந்தப்போ, நான் வேற ஆர்வமா நீங்க எனக்குப் பரிசு வாங்கி வச்சிருந்ததை அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டேன். அதுவும் இல்லாம, காலையில நான் வெளியே வந்த முதல் வேலையா மதுவும், அத்தையும் நீங்க என்ன பரிசு எனக்குக் கொடுத்தீங்கன்னு கேட்பாங்க. நான் எப்படிங்க என்னோட இடுப்பில் இருக்கும் செயினைக் காட்டிச் சொல்ல முடியும்?” என்று அவன் மேல் படுத்துக்கொண்டே புலம்ப…
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் பொண்டாட்டிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு என் குட்டி மூளை யோசிச்சு வாங்கிட்டு வந்தேன். நீ எதையாவது சொல்லி உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சமாளிச்சுக்கோ,” என்றவன், தன் மேல் சிணுங்கிக் கொண்டே படுத்திருந்த நிலானியை மெத்தையில் தள்ளி, அவள் அணிந்திருந்த பனியனுக்குள் தான் தலையை நுழைத்து, அவள் மார்பில் முத்தமிட்டபடி, பனியனைக் தாண்டி அவள் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு வந்தவன், அவள் முகத்தைப் பார்க்க…
தன் பனியனுக்குள் இருந்து முகத்தைத் தன் மார்பில் உரசியபடி சேட்டை செய்துகொண்டு இருக்கும் விக்கியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே…
“என்ன பண்ற டா மாமா? முதல்ல என் பனியனுக்குள்ள இருந்து வெளியே வா…”
“ம்ம்ஹும்… முடியாது,” என்றவன் அவள் முகத்தைப் பார்த்து, “நிலாக்குட்டி, ஆரம்பிக்கலாமா?” என்று ஆர்வமாகக் கேட்க…
“போடா… நான் வேண்டாம்னு சொன்னா, என்னை நீ விடவா போற?” என்றவள், அவன் நெற்றியில் முத்தம் வைக்க…
“என் நிலாக்குட்டி ‘ஓகே’ சொல்லிட்டா!” என்று கூறிக்கொண்டே அவள் பனியனுக்குள் இருந்து வேகமாக வெளியே வந்தவன், நிலானி அணிந்திருந்த ஆடைகளைக் கலைந்துவிட்டு அவளைப் பார்க்க…
அவன் பார்வையில் உடல் கூசிய நிலானி, அவனை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டாள்.
அவள் வெட்கத்தில், தன்னை இழுத்துப் போர்வைக்குப் பதிலாகப் போர்த்திக்கொண்டதை உணர்ந்த விக்கி, வேண்டுமென்றே குறும்பாக நிலானியைப் பார்த்துச் சிரித்து, “அவ்வளவு அவசரமா?” என்று கூற…
அவன் தலையில் நறுக்கென்று குட்டியவள், “விளக்கை அணைச்சுடுடா, ப்ளீஸ்” என்று கெஞ்ச…
மயக்கத்தில் நிலானி விக்கியிடம் கெஞ்சும் அழகை ஒரு நிமிடம் ரசித்தவன், பின் எட்டி மேசை விளக்கின் சுவிட்சை (டேபிள் லாப்பை) அணைத்துவிட்டு, தன் நிலாக்குட்டியுடன் ஒரு குட்டிப் பாப்பாவைப் பெற்றெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க

1 comment
Inaki episode super akka 💐💗💝