Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 219

உன் ரகசிய ரசிகை நான் 219

by Layas Tamil Novel
154 views

Epi 219

ஒரு வழியாக போதிக்கும் மாதவிக்கும் திருமண தேதி வந்துவிட…

அனைத்து சொந்தங்களும் போதியையும் மாதவியையும் வாழ்த்துவதற்காக கூடியிருந்தனர்.

வெங்கடாசலமும் விசாலாட்சியும் மாதவியின் அருகில் மேடையில் நின்று இருக்க…

அவர்கள் இருவருக்கும் பாத பூஜை செய்து மேலும் சில திருமணத்திற்கு உண்டான சடங்குகளை எல்லாம் மாதவி செய்ய போதியும் தன் பெற்றோருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்த பின்னர்.

விக்கி மணப் பெண்ணின் அண்ணன் என்ற முறையில் போதிக்கு தங்க சங்கிலியும் பிரேஸ்லெட்டும் அணிவித்து தன் அன்பை தெரிவித்தான் விக்கி இப்போதைக்கு செய்யும் சம்பிரதங்களை எல்லாம் அவன் அருகில் நின்று பார்த்து வெ வாரு நிலானி இருந்தால்.

ஆதி துர்கா, கதிர் கீர்த்திகா, சந்தோஷ் ராதா, ஷிவு ரூபேஷ் என ஜோடிகள் எல்லாம் தனியாக நிற்க..

வேதாச்சலம் சிவகாமி, வெங்கடாசலம் விசாலாட்சி முத்து அவர் மனைவியுடனும் ரூபேஷ் அம்மா, போதியின் பெற்றோரும் அவன் தங்கை சகோதரன் என அனைவரும் மணமேடையை சுற்றிலும் நின்று இவர்கள் இருவரையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ரூபேஷன் அம்மாவும் செண்பகமும் ஓரமாக அவரது பேசிக் கொண்டு இருக்க…

இவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பதை பார்த்த சங்கவி மட்டும் வயிற்று எரிச்சலாடு ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் சங்கவி.

தன்னை ஒரு பொருட்டாகவே இங்கு யாரும் மதிக்காதது போல சங்கவிக்கு தோன்றியது.

வேதாச்சலமும் சிவகாமியும் சங்கவி திருமணத்திற்கு வந்ததிலிருந்து அவளை விழுந்து விழுந்து கவனிக்கத்தான் செய்தனர்.

அவர்கள் சங்கவியை வேறொருவரின் மகளாக பார்க்காமல் இன்றும் தங்கள் மகள் போல பாவித்து அவளிடம் நெருக்கம் காட்ட…

ஆனால் சங்கவியோ அவர்களிடம் பாராமுகம் காட்டினாள். சங்கவி அவர்களிடம் எப்போதும் போல பேசக்கூட முயலவில்லை.

முகூர்த்தமும் நெருங்கி விட்டதால் சங்கவியிடும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று வேதாச்சலமும் சிவகாமியும் மணமேடைக்கு அருகில் வந்துவிட இப்போது சங்கவி மட்டும் தனித்துவிடப்பட்டது போல அவளுக்கு தோன்றியது.

ஆதி அருகில் நின்றிருந்த துர்காவைப் பார்த்தவள் நான் மட்டும் சற்று அவசரப்படாமல் இருந்திருந்தால் என்றும் ஆதியைத் திருமணம் செய்து கொண்டு இருப்பேன்.

இவள் நிற்கும் இடத்தில் நான் நின்று இருக்க வேண்டும் என்று ஆதி அருகில் நின்றிருந்த துர்காவைப் பொறாமையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தால் சங்கவி.

அனைவரும் திருமண வேலைகளில் பிஸியாகவும் தங்கள் ஜோடிகளுடனும் நண்பர்களுடன் பேசுவதிலும் பிசியாகவும் இருக்க சங்கவியை யாரும் கண்டு கொள்ளவில்லை.

மாதவி வெட்கப்பட்ட படி போதியின் அருகில் அமர்ந்து இருக்க அவளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தபடி போதி ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

போதியின் பாட்டி போதியையும் மாதவியையும் ஜோடியாக பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் நின்றிருந்த போதியின் தங்கை தீபா என்ன பாட்டி உன் பேரனையும் பேத்தியையும் பார்த்து ரசிச்சிட்டு இருக்க போல என்று கேட்டாள்.

ஆமாம் தீபா நீயே பாரு அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்காங்க அவங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் ரொம்ப அம்சமா பொருந்தி இருக்கு இல்ல என்று சரளா கேட்க..

ஆமா பாட்டி அண்ணாவோ அண்ணியோ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்க கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது அவங்க ரெண்டு பேருக்கும் மறக்காம சுத்து போடணும் எனக்கு அவங்களை பார்த்து பொறாமையா இருக்கு என்றால் தீபா.

சரி சரி ரொம்ப பொறாமைப்பட்டு என் பெயரையும் பேத்தியும் பார்த்து கண்ணு வச்சுடாத என்று சரளா தீபாவை கிண்டல் செய்ய…

பாட்டி நானும் உனக்கு ஒரு பேத்தி தான் மறந்துடாதே… தவிர உனக்கு ராவன்னு இன்னொரு பேரு இருக்கான் அதாவது ஞாபகம் இருக்கா என்று கேட்டால் தீபா.

அப்படியா… அப்படி யாரும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலையே என்று சரளா வேண்டுமென்றே தீபாவையும் ராகவையும் தெரியாதது போல பேச..

பாட்டி நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க எப்படியும் நீ வீட்டுக்கு வந்து தான் ஆகணும் ஏதாவது வேணும்னா என்னையும் ராகவையும் தான் நீ உதவிக்கு கூப்பிடனும் அதை ஞாபகத்துல வச்சுக்கோ..

இரு நான் போய் முதல்ல ராகவை இங்கே அழைச்சிட்டு வரேன் அப்போதான் உன் வாயை அடங்கும் என்று சொல்லிவிட்டு தீபா ராகவை தேடிச் செல்ல…

போடி போடி… போய் ராகம் இல்லை அவன் அப்பனை கூட்டிட்டு வந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனக்கு சப்போர்ட் பண்ண என்னோட புதுப்பேத்தி வந்துட்டா என்று சரளா தீபாவை கிண்டல் செய்து அனுப்பி வைத்தார் yin ஷிவுமும் ரூபேஷம் நேரத்திலேயே திருமணத்திற்கு கிளம்பி வந்து விட..

ஒரு முக்கியமான பைலில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று ஷிவுவிற்கு நர்மதா கால் செய்து சொல்ல அவளை தான் இருக்கும் மண்டபத்தின் அட்ரஸ் இருக்கு வரச் சொல்லி இருந்தாள் ஷிவு.

உள்ளே வந்த நர்மதா ஷிவுவை தேடிக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்திருக்க…

திருமனத்திற்கு வந்து உங்க நண்பர்களையும் சொந்தங்களையும் ராகவ தான் கவனித்துக் கொண்டு இருந்தான்.

நீண்ட நேரமாக நர்மதா மண்டபத்திற்குள் இங்கும் பங்கும் அலைந்து கொண்டிருப்பதை பார்த்த ராகவிற்கு அவள் மேல் சந்தேகம் வந்துவிட்டது.

யார் இந்த பெண் இவளை பார்த்தால் திருமணத்திற்கு வந்திருப்பது போல தெரியவில்லை.

கையில் பைலை வைத்துக்கொண்டு இங்குமங்கும் எதற்காக அலைந்து கொண்டிருக்கிறாள்.

ஒருவேளை மண்டபத்தில் இதுவும் திருட வந்திருப்பாளோ என்று யோசித்த படி அவள் அருகே ராகம் நெருங்கி வர…

நானும் எவ்வளவு நேரம் தான் இங்கே அங்கே அங்கேயும் தேடி பார்க்கிறது சிக்கவே மாட்டேன் என்கிறார்களே…

போன் பண்ணுனாலும் இந்த மண்டபத்துக்குள்ள டவர் இல்ல போல இருக்கு காலம் போக மாட்டேங்குது.

நான் வந்த வேலை மட்டும் முடிஞ்சுதுன்னா சத்தமே இல்லாம இங்கிருந்து கிளம்பிடனும் என்று நர்மதா ஷுவுவை மண்டபத்திற்குள் தேடிக் கொண்டிருக்க…

அவள் பேசியதை பின்னால் இருந்து கேட்ட ராகவ் என்ன பேசிட்டு இருக்க வந்த வேலை முடிஞ்சுதுன்னா சத்தியமே இல்லாம கிளம்பிடனும்னு சொல்லிட்டு இருக்கான்னா அப்ப கண்டிப்பா இவர் மண்டபத்துக்குள்ள திருடத்தான் வந்து இருக்கணும்.

எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு பொண்ணு இப்படி தனியா இவ்வளவு பேர் கூடி இருக்கிற இடத்தில திருட வந்திருக்கணும் என்று அவள் மீது கோபம் கொண்ட ராகவ்.

நர்மதாவின் முன்பு கோபமாக வந்து நிற்க…

யாருடா இவன் வழியை மறைச்சிட்டு நிக்கிறது என்பது போல இன்னும் இருந்து நர்மதா ராகவ்வை பார்த்தாள்.

அவளை முறைத்துக் கொண்டிருந்த ராகவ் சற்று யோசிக்காமல் நர்மதாவின் கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றான்.

அவன் தன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றதை நர்மதா எதிர்பார்க்கவில்லை அதிர்ந்தபடியே அவன் பின்னால் செல்ல…

ஒரு வழியாக தன்னை சுதரித்துக்கொண்ட நர்மதா ராகவ் பிடித்திருந்த தன் கையை அவரிடம் இருந்து உதறியவள்.

யார்யா நீ? நீ பாட்டுக்கு வந்து என் கைய புடிச்சு இழுத்துட்டு போற… என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது என்று இடுப்பில் கை வைத்தபடி ராகவிடம் நர்மதா சண்டைக்கு போக…

நான் யாராயிருந்தா உனக்கு என்னடி எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு விசேஷத்திலேயே வந்து திருட பாப்ப என்று நர்மதாவிடம் சண்டைக்குச் செல்ல..

தான் திருட வந்திருக்கிறேன் என்று ராகவ் சொன்னதை கேட்டதும் உச்சபட்ச கோபத்திற்கு சென்று விட்டால் நர்மதா.

சிறிதும் யோசிக்காமல் ராகவன் கன்னத்தில் பளார்… என அறைந்த நர்மதா ஒழுங்கா மரியாதையா பேசு…

யாரை பார்த்து திருடினு சொன்ன நான் திருட வந்தேன்னு உனக்கு எப்படிடா தெரியும் என்றால் ஆவேசமாக.. உன்னை பார்த்தாலே தெரியுது உன் முகத்துல திருடின்னு அப்பட்டமா எழுதி இருக்கே என்றான் ராகவ்.

அவன் சொன்னதை கேட்டதும் நர்மதாவிற்கு கஷ்டமாக போய்விட்டது.

நான் கோபமும் மாத்திரமும் அழுகையாக வர அவள் கண்களில் கண்ணீரோடு என்ன சொன்ன…என்ன சொன்ன…என் முகத்தைப் பார்த்தால் திருடினு எழுதி இருக்குன்னா சொல்ற என்று அவனை மீண்டும் அறையப் போக…

அவள் அறைய வந்த கையைப் பிடித்து ராகவ் சட்டுனு அவளை அறைந்து விட…

ராகவ் தன்னை அடிப்பான் என்று சற்று எதிர் பார்க்காத நர்மதா அதிர்ச்சியில் அவனைப் பார்த்துக் கொண்டு உறைந்து போய் நின்று இருக்க…

நர்மதா வருவதாக சொல்லி நீண்ட நேரம் ஆகியவை ஆகிவிட்டதால் அவளை காணாமல் தேடிக் கொண்டு அங்கே வந்தால் ஷிவு.

நர்மதாவை பார்த்துவிட்டு ஷிவு அவள் அருகில் வர…

அவள் அதிர்ச்சி அடைந்தவள் போல நின்றிருப்பதை பார்த்தவ ஷிவுவுக்கு க எதுவும் புரியாமல் நர்மதாவின் தோலை தொட்டு உளுக்கி ஏய் நர்மதா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா நிக்கிற என்று கேட்டால்.

ஷிவு நர்மதாவை அழைத்ததும் அவளிடம் திரும்பிய நர்மதா தான் கொண்டு வந்திருந்த பைலை கொடுத்துவிட்டு.

மேடம் நீங்க மெதுவா சைன் பண்ணி கொடுத்தா நான் போறேன் என்று நர்மதா உணர்ச்சி துடைக்கப்பட்டவளாக ஷிவுவிடம் பேச…

அவளை புரியாமல் பார்த்தவரே நர்மதா கொடுத்த பைலை வாங்கி அதில் சயின்ஸ் செய்து நர்மதாவிடம் கொடுக்க..

ஓகே மேடம் நான் கிளம்புறேன் என்று அவள் தன் எதிரில் நின்று இருந்து ராகவ்வை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

ஷிவு நர்மதாவிடம் பேசியதும் நர்மதா பைலில் சைன் வாங்கிக் கொண்டு சென்றதையும் பார்த்த ராகவிற்கு தான் அவளை தப்பாக புரிந்து விட்டோம் என்று இப்போதுதான் அவன் மூளைக்கு உரைத்தது.

இப்படி அவசரப்பட்டு ஒரு பொண்ணு பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே என்று மண்டபத்தை விட்டு ஓடும் நர்மதாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் ஷிவுவிடம் திரும்பி என் மேடம் ஒரு நிமிஷம் அவங்க உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டான் நர்மதா சென்ற திசையை காட்டி.

அவ என்னோட பிஏ என்றால் ஷிவு. நீங்கதான் அவங்கள இங்க வர சொல்லி இருந்தீங்களா என்று கேட்டான் ராகவ்.

நான் ஒரு முக்கியமான பைல்ல ஷைன் வாங்கணும்னு சொல்லி இருந்தா அதனால நான் தான் இங்கே வரச் சொன்னேன் என்ற ஷிவு ஆமா நீங்க ஏன் இதையெல்லாம் கேக்குறீங்க என்றால்.

ஷிவுவிடம் நடந்ததை சொன்னால் எப்படியும் தன்னைப் பற்றி தவறாக புரிந்து கொள்வார்கள் என்று நினைத்த ராகவ்.

அவங்க என் கூட படிச்சவங்க தான் நான் போன் நம்பர் கேட்பதற்குள் அவசரமா இங்கிருந்து கிளம்பிட்டாங்க.

விஷ் யூ டோன்ட் மைண்ட் ….அவங்க நம்பரை கொஞ்சம் கொடுக்க முடியுமா?என்றான் ராகவ் தயங்கியபடி.

இதுவே வேறு யாரும் நர்மதாவில் நம்பரை கேட்டிருந்தால் யோசித்து இருப்பாள் ஆனால் அவளிடம் நம்பர் கேட்பது போதியின் தம்பியாயிற்றே.

அதனால் மறுப்பு சொல்ல முடியாமல் அவன் கேட்டதும் நர்மதாவின் நம்பரை அவனுக்கு கொடுத்தாள்.

நம்பர் வாங்கிய ராகவ் உடனே நர்மதாவிற்கு அழைக்க போக.. இப்போது அவனை தேடி வந்த தீபா நாகப்பன் நீ இங்கதான் இருக்கியா உன்னை காணும் நான் மண்டபம் முழுக்க தேடி வந்துட்டேன் என்று அவளிடம் வர…

ஏன்?தீபா எதுக்காக என்ன தேடின எதுவும் முக்கியமான விஷயமா? என்று கேட்டான் ராகவ்.

ஆமா ராகவ் இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் நீ சீக்கிரமா என் கூட வா… என்று அவன் கையைப் பிடித்து தன்னுடன் அழைத்துச் செல்ல அவனை இழுக்க..

ஏய் தீபா ஏன் இப்படி அவசரப்படுத்துற இரு வரேன் என்று சொன்ன ராகவ் நர்மதாவின் நம்பரை தற்போதைக்கு சேவ் செய்துவிட்டு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவள் நம்பரை சேவ் செய்துவிட்டு தீபாவுடன் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured