Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 220

உன் ரகசிய ரசிகை நான் 220

by Layas Tamil Novel
105 views

Epi 220

போதியின் அருகில் மேடையில் நின்றிருந்த மித்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவன் வந்ததிலிருந்து மிகவும் அமைதியாக இருப்பதை கவனித்த போதி அவன் கையைப் பிடித்து இழுக்க போதியின் அருகில் அமர்ந்த மித்ரன் என்ன போதி என்று கேட்டான்.

ஏன்டா நானும் வந்ததிலிருந்து உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் ஏன் எதுவுமே பேசாம ஒரு மாதிரி அமைதியாவே இருக்க வழக்கமா நீ இப்படி இருக்கிற ஆள் இல்லையே..

யாரும் பேசவில்லை என்றால் கூட நீயே வாண்டடா போய் வம்பு இழுத்துட்டு வரவன் இன்னைக்கு என்ன இவ்வளவு அமைதியா இருக்க என்று கேட்டான்.

இனிமேல் நான் யார்கிட்டயும் சகஜமா பேசுறதில்லை என்று முடிவு பண்ணிட்டேன் என்றான் மித்ரன்.

ஏன்டா என்ன ஆச்சு என்று கேட்டான் போதி.

உன் காலேஜ் பங்ஷன்ல உன்னோட ஃபேன்ஸ் ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்லி அனுப்பி வைத்து ஞாபகம் இருக்கா என்றான் மித்ரன்.

சிறிது யோசித்த போதி அவங்கள என்னோட பான்ஸ் ப்ரீத்தையும், கீதாவும் தானே அவர்கள் எப்படி நான் மறப்பேன்

அதேதான் நீ எப்படி அவங்கள மறக்க முடியாது அதே போலத்தான் என்னையும் அவங்கள மறக்க முடியாத படி செஞ்சுட்டாங்க அதனாலதான் நான் யார்கிட்டயும் வாயை கொடுக்கிறது இல்லை என்றால் மித்ரன்.

என்னடா சொல்ற கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு எனக்கு எதுவுமே புரியல என்றான் போதி.

எனக்கு ஸ்பெஷலா ஜூஸ் போட்டு வச்சிருக்காங்கன்னு தானே நீ என்ன அனுப்பி வச்ச ஆனா அங்க போனா அவங்க எனக்கு பினாயில் ஜூஸ் போட்டு வச்சிருந்தாங்க தெரியுமா? என்றான் மித்ரன்.

என்னடா சொல்ற பினாயில் ஜூஸா என்று போதி முகத்தை சுளிக்க…

பேர கேட்டதுக்கே இப்படி முகம் சொல்கிறாயே ஆனால் அதை குடிச்ச எனக்கு எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு என்றான் மித்ரன்.

என்னது அத நீ குடிச்சியா என்றான் போதி அதிர்ச்சியாக…

அட உன்னோட ஃபேன்ஸ் ப்ரீத்தியும் கீதாவும் கொடுத்த அந்த பினாயில் ஜூசை குடிச்சிட்டு தான் இத்தனை நாளா நான் எங்கேயும் போகாம வீட்டிலேயே இருந்தேன்.

வெளிய வரவே எனக்கு பயமாயிருக்கு உன்னை பத்தி எதுவும் பேசினா உடனே அவங்க பினாயில் ஜூஸ்ஸ தூக்கிட்டு வந்துடுறாங்க.

அதனாலதான் நான் கொஞ்ச நாள் வெளியே வராம தலைமறைவாகவே இருந்துட்டேன் என்றான் மித்ரன்.

அவனைப் பார்த்து சிரித்த போதி சரி நான் அவங்க கிட்ட இனிமேல் சொல்லி வைக்கிறேன் இந்த மாதிரி எல்லாம் எதுவும் என்னோட பிரண்டு செய்ய வேண்டாம் என்று போதி.

சரி சரி அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் உன் ஆள் பக்கத்துல உக்காந்து உன்ன முறைச்சிகிட்டு இருக்கு பாரு கடைசில உங்களை உன்னையும் அவங்களையும் நான்தான் குறுக்க பேசி இருக்கிறேன் என்று சொல்லி மறுபடியும் தூக்கிட்டு உன்னோட பான்ஸ் வந்துட்டு போறாங்க நான் உன் பக்கத்துலயே நிக்கலப்பா நான் போய் வெளியில தூரமா நின்னுகிறேன் என்று மேடையை விட்டு இறங்கி சென்றான் மித்ரன்.

அவன் செல்வதைப் பார்த்து சிரித்த போதி தன் அருகில் அமர்ந்திருந்த மாதவியை திரும்பி பார்க்க…

அவள் போதியை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.

அவளிடம் மெல்ல குனிந்து என்னாச்சு மாதிரி ஏன் என்ன இப்படி முறைச்சிட்டு இருக்க என்று கேட்டான்.

இங்கே உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகுது நீ எதுக்குடா அவன் கிட்ட வெட்டி கதை பேசிட்டு இருக்க என்று கேட்டால் மாதவி.

ஏய் என்னடி உன் கழுத்துல இன்னும் நான் தாலியை கட்டல அதுக்குள்ள என்ன வாடா போடான்னு பேசுற… என் பிரண்ட மரியாதை இல்லாம பேசுற… எல்லாம் போதாதுன்னு என்ன மிரட்ட வேற செய்யற என்றான் போதி அதிர்ச்சியாக.

தாலி மட்டும் கட்டு இன்னும் இருக்கு உனக்கு என்று மாதவி போதியின் கையை பிடித்து நறுக்கென்று கிள்ளி வைக்க…

அவள் நன்றாக கிள்ளிவிட போதி வலியில் ஷ்…. என்று கத்தி விட்டான்.

உடனே அவர்களை சுற்றி இருந்த அனைவரும் போதியையும் மாதவியையும் பார்க்க…

போதிக்கு அவர்கள் எல்லாரும் தங்களை பார்ப்பதே கவனித்து தர்ம சங்கடமாக போய்விட்டது. தன் அருகில் நின்றவர்களை பார்த்து வழிந்து படி போதி திரும்பி மாதவியை முறைக்க…

என்ன பார்க்கிற ஒழுங்கா திரும்பி உட்காரு என்று அவள் அவனை மிரட்டினால்.

இருடி எப்படியும் இன்னைக்கு நைட் நீ என்கிட்ட தனியாத்தான் மாட்டி ஆகணும் அப்போ வச்சுக்கிறேன் உன்னை என்று மாதவியின் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி போதி கூற…

அவன் சொன்னதை கேட்டதும் மாதவியின் முகம் குப் என்று வியர்த்து சிவந்துவிட்டது.

இவ்வளவு நேரம் போதியை மிரட்டிக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்து விட…

தாலி கற்ற வரைக்கும் இப்படியே அமைதியா இருக்கணும் ஏதாவது பேசினா என்று அவளை வேண்டுமென்றே விரட்டியவன் திரும்பி அமர்ந்து கொள்ள…

இதை கவனித்துக் கொண்டிருந்த துர்கா போதியின் அருகில் வந்து என்ன போதி கல்யாணத்துக்கு முன்னாடியே மாதவியை ரொம்ப மிரட்டுவ போல இருக்கே என்றால்.

துர்காவின் குரல் கேட்டதும் தலையை நிமிர்த்திய மாதவி பாருங்க அக்கா என்ன ரொம்ப மிரட்டறாரு பேசாத அமைதியா உட்காரு அப்படி இப்படின்னு சொல்றாரு என்று போதியை மாதவி துர்காவிடம் மாட்டி விட…

அடிப்பாவி இவ்வளவு நேரமா இவதா என்ன மிரட்டிட்டு இருந்தா ஆனா இப்போ துர்கா வந்ததும் அப்படியே பிளேட்டு மாத்தி போட்டுட்டா பாரு என்று நினைத்த போதி என்ன சொல்வது என்று தெரியாமல் துர்காவைப் பார்க்க..

போதியை முறைத்த துர்கா என்ன போதே கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி மிரட்டுனா அவங்க பயந்துக்க மாட்டாங்களா கொஞ்சம் பொறுமையா பேசி பழகு என்று அவனுக்கு அறிவுரை செய்து விட்டு சென்று ஆதியின் அருகில் நின்று விட்டாள்.

துர்கா சென்றதும் போதி திரும்பி மாதவியை பார்க்க…

அவனைப் பார்த்து கண்ணடித்த மாதவி தங்களை யாரும் கவனிக்கவில்லை என்றதும் தன் இதழ்களை குவித்து காற்றிலேயே போதிக்கு முத்தமிட…

இவ்வளவு நெருக்கத்தில் மாதவியின் இதழை பார்த்த போதிக்கு அப்போதே அவளை முத்தமிட வேண்டும் என்று தோன்ற அதே கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் போதி.

அப்போது ஐயர் பூஜை எல்லாம் முடித்து தாலியை எடுத்து போதியின் முன்பு நீட்டி தம்பி அப்புறம் அவங்கள பாத்துக்கலாம் காலம் முழுக்க அவங்க முகத்தை தானே பார்த்துட்டு இருக்க போறீங்க இந்தாங்க முதல்ல இந்த தாலியை எடுத்து அவங்க கழுத்துல கட்டுங்க என்று அவன் முன்பு தாலியை நீட்ட…

அவரைப் பார்த்து அசட்டு பழைய சிரித்தபடி போதி ஐயர் கொடுத்த தாலியை வாங்கி கடவுளை வேண்டிக் கொண்டு மாதவியின் கழுத்தில் கட்டினான்.

அனைவரும் அட்சதை தூவி போதியையும் மாதவியையும் சந்தோசமாக வாழ்த்தினர்.

இருவருக்கும் தாலி கட்டிய பிறகு அடுத்தடுத்த சடங்குகள் எல்லாம் மண்டபத்திலேயே செய்யப்பட்டு விட…

இவர்கள் இருவரையும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆசீர்வதித்து பரிசுகளும் கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக கிளம்பி விட… முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இப்போது திருமணத்தில் மண்டலத்தில் இருந்தனர்.

போதியையும் மாதவியும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் ஆங்காங்கே கூடி அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மாதவியும், போதியும் மட்டும் மணமகன் அறையில் தனியாக இருந்தனர்.

எப்போது தனியாக வாய்ப்பு கிடைக்கும் மாதவியின் இதழை சுவைக்கலாம் என்று காத்திருந்த போதி…

இதுதான் சமயம் என்று சிறிதும் தாமதிக்காமல் மாதவியின் இதழை சிறை செய்து இருந்தான்.

மாதவியும் போதியின் முத்தத்தில் கரைந்து கொண்டு இருக்க…

அப்போது அவர்கள் அரை கதவை தட்டும் சத்தம் கேட்கவும் முதலில் நிதானித்த மாதவி போதிய பார்த்து யாரோ கதவை தட்டுறாங்க என்று அவனிடம் கூறினால்.

அவளைப் பார்த்து சிரித்த போதே இரு நான் போய் யார் என்று பார்க்கிறேன் என்று கட்டிலில் இருந்து இறங்கிய போதி சென்று தங்கள் இருந்த அறைக் கதவை திறக்க…

அவன் எதிரே சிரித்த முகமாக நின்றிருந்தால் சங்கவி.

அவளை புரியாமல் போதி பார்க்க என்ன போதி அப்படி பார்க்கிறேன் உன்னை தேடி வந்திருக்கிறேன் என்னை உள்ளே வான்னு கூப்பிட மாட்டியா என்றால் சங்கவி .

சங்கவியின் குரலை கேட்டதும் உள்ளே அமர்ந்திருந்த மாதவி எழுந்து போதியின் அருகில் வர…

மாதவியையும் போதியையும் ஒருசேர பார்த்த சங்கவி இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்தவள் .

நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் தனியா பேசணும் என்றால் சங்கவி.

சங்கவி சொன்னதைக் கேட்டு புரியாமல் பார்த்த போதியும் மாதவியும் சங்கவியை குழப்பமாக பார்த்துவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்த்துக் கொள்ள…

அவர்கள் இருவரையும் பிரித்த படி அவர்கள் அறைக்குள் நுழைந்தால் சங்கவி.

தங்களை விளக்கி விட்டு உள்ளே வந்த சங்கவியை புரியாமல் போதியும் மாதவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சங்கவியிடக் வந்து நீ எதுக்கு இப்போ இங்கே வந்து இருக்க…உனக்கு என்ன வேணும் என்று கேட்டான் போதி.

போதியின் அருகில் நின்றிருந்த மாதவியை பார்த்த சங்கவி…

எனக்கு இவ உயிர் வேணும் என்றால் சங்கவி.

சங்கவி சொன்னதை கேட்டு அதிர்ந்தவன்.

தன் அருகில் இருந்த மாதவியை எடுத்து தன் கைக்குள் நிற்க வைத்தவன் என்ன சொன்ன என்று மீண்டும் அவளிடம் கேட்க…

நான் சொன்னது உன் காதுல சரியாக விழலையா? எனக்கு இவளோட உயிர் வேண்டும் என்றால் சங்கவி திமிராக கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி.

இப்படி திடீரென சங்கவி வந்து பேசவும் மாதவிக்கு அன்று அவள் வீட்டில் வைத்து தன்னை கொள்ள நினைத்தது நினைவில் வர மாதிரிக்கு சங்கவியின் மேல் பயம் தொற்றிக் கொண்டது.

அதே பயத்தோடு மாதவி சங்கவியை பார்க்க..

மாதவி தன்னைக் கொண்டு பயந்து நடுங்குவதை ரசித்தவாறே கட்டிலில் இருந்து எழுந்த சங்கவி தன் சேலைக்குள் கை விட…

தன் சேலைக்குள் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை தான் எடுக்கிறாள் என்று பயந்த மாதவி என்ன செய்வது என்று தெரியாமல் தன் அருகில் நின்றிருந்த போதியின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்.

You may also like

1 comment

S joshna December 19, 2025 - 9:18 am

Intha sangavi thirunthamata😒akka next episode podunga 💋🫂👀

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured