EPI 239
ஆதி துர்கா போதி மாதவி அவர்களுடன் ரியா ஸ்ரீ என அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடியாக பிரிந்து டென்மார்க் முழுவதும் சுற்றித்திரிந்தனர்.
துர்காவின் சூட்டிங் நல்லபடியாக முடிந்திருக்க அதில் சற்று நிம்மதி அடைந்த ஆதி, இனி அடுத்தடுத்து துர்காவிற்கு வரப்போகும் வாய்ப்புகளை பற்றி அவளிடம் பேசியவாறு துர்காவின் கைகோர்த்து நடந்து சென்றான்.
துர்கா ஆதியிடம், “ஆதி நம்ம ரெண்டு பேரும் வெளியே ஜாலியா சுத்தி பாக்க தானே வந்தோம் இங்கேயும் வந்து ஏன் ஆபீஸ் விஷயமாவே பேசுற அதெல்லாம் இந்தியா போய் பார்த்துக்கலாம்” என்று அவன் கை பிடித்து இழுத்து “வா அந்த கடைக்கு போகலாம்” என்று சொல்லி அங்கே இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றாள்.
ஆதிக்கு பிடித்த பிளேவரையும் தனக்கு பிடித்த பிளேவரையும் ஆர்டர் செய்தவள் ஆதியைப் பார்க்க…
தன் கன்னத்தில் கை வைத்து துர்காவை ரசித்தபடி அமர்ந்திருந்த ஆதி, “துர்கா உனக்கு எதுவும் இங்கே வாங்கணுமா சொல்லு நான் வாங்கி தரேன்” என்றான் ஆதி.
“எதுக்கு ஆதி திடீர்னு இப்படி கேட்கிறேன் எனக்கு எதுவும் வேண்டாம் நான் எதுவும் வாங்குற மூடுல இல்ல உன் கூட இப்படியே ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணினால் போதும் இந்தியா போயிட்டா நீ ஆபீஸ் ஆபீஸ்ல ரொம்ப பிசியா ஆயிடுவேன் அப்புறம் இந்த மாதிரி சான்ஸ் எனக்கு உன் கூட கிடைக்காது” என்றால் துர்கா.
அவளைப் பார்த்து சிரித்தவன் “என் கூட இருக்க உனக்கு அவ்வளவு பிடிக்குமா” என்றான்.
“என்ன ஆதி இப்படி கேட்டுட்ட உன் கூட இருக்க மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றால் துர்கா சிறிது யோசிக்காமல்.
அவள் கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட ஆதி, “லவ் யூ துர்கா” என்றான்.
துர்கா அவனைப் பார்த்து சிரித்தவள் “ஐ லவ் யூ ஆதி” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் தணிக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க அப்போது அவர்கள் ஆர்டர் செய்திருந்த ஐஸ்கிரீம் கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்தனர்.
இருவரும் அவர்களுக்கு ஆர்டர் செய்திருந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கேயே இருந்து கிளம்பினர்.
ஆதி அவளை அழைத்துக் கொண்டு துர்கா மாடல் ஆக நடித்துக் கொடுத்த நகைக்கடைக்கு துர்காவை அழைத்துச் சென்றான்.
“ஆதி இப்போ எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்த எதுவும் வேலை இருக்கா இங்கே நம்மதான் எல்லா ஒர்க்கும் முடிச்சு கொடுத்துட்டோமே” என்றால்.
அவளைப் பார்த்து சிரித்தவன் “நீ வா வொர்க் இருந்தா தான் இந்த கடைக்கு வரவேண்டும் என்று எழுதி இருக்கா” என்றவன் அவளை கைப்பிடித்து கடைக்குள் அழைத்துச் சென்றான்.
ஆதி வந்ததும் அங்கே இருந்த வேலை பார்க்கும் நபர் அவர்களிடம் வந்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஆதி தன் பாக்கெட்டில் இருந்த காடை எடுத்து அவர்களிடம் நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த அந்த பெண்மணி “ஒன் மினிட் சார்” என்று சொல்லிவிட்டு சென்றவர் கையில் ஒரு பெட்டியுடன் வந்தார்.
அவர் கொண்டு வந்து கொடுத்ததை வாங்கிய ஆதி அதை துர்காவிடம் நீட்டினான்.
“என்ன ஆதி இது எதுவும் சர்ப்ரைஸா” என்று ஆர்வமாக அவன் நீட்டிய பெட்டியை வாங்கி திறந்தவளுக்கு ஆச்சரியமாக போனது.
அவள் சூட்டிங்கில் இருக்கும் பொழுது அந்த தன் காலில் அணிவித்திருந்த வைரச் செயின்கள் இரண்டும் அழகாக இருந்ததை ஆதியிடம் சொன்னது அவன் இப்போது அதே இரண்டு வைரச் செயல்களை தனக்காக வாங்கி பரிசளித்திருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டாள்.
அதை சந்தோஷமாக கையில் எடுத்துப் பார்த்த துர்கா, “ஆதி இது எனக்காக தான் வாங்கினியா” என்றாள். ஆதியும் சிரித்தபடி ஆமாம் என்று தலையாட்ட.
“இந்த ஆதி நீயே எனக்கு இதை போட்டு விடு” என்றாள்.
“சரி கொடு” என்றவன் அவள் நீட்டிய கொலுசை வாங்கி ஒரு காலை ஒட்டி போட்டு மற்றொரு காலை மடக்கி அவள் முன்பு அமர்ந்தவன் துர்கா ஒரு காலை தூக்கி தன் கால் மேல் வைத்து அவள் காலில் கொலுசை மாட்டி விட்டான்.
பிறகு மற்றொரு காலையில் எடுத்து தன் காலின் மீது வைத்து அந்த காலிலும் கொலுசை மாட்டிவிட்டு அழகு பார்த்தவன் அவள் பாதத்தை பிடித்து தூக்கியவன் குனிந்து அவள் பாதத்தில் முத்தம் வைத்து “பிடித்து இருக்கா துர்கா” என்றான்.
“பிடிச்சிருக்கு ஆதி எத்தனை பேர் முன்னாடி கொஞ்சம் கூட கர்வம் காட்டாமல் என் காலை பிடித்து கொலுசு போட்டு விட்டது என் காலுக்கு முத்தம் கொடுத்ததும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி சந்தோஷப்பட்டாள் துர்கா.
“என் பொண்டாட்டி கிட்ட கர்வமா நடந்துக்க என்ன இருக்கு” என்றான்.
“அப்படி இல்ல ஆதி எந்த ஊரு ஆளுமே பொண்டாட்டி காலை பிடிக்க கொஞ்சம் யோசிப்பாங்க அதுவும் இத்தனை பேர் முன்னாடி ஆனா நீ அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்ட மாதிரியே தெரியல. இந்த கடையில் இருக்கிறவங்களுக்கு வேணும்னா நீ சாதாரண ஆளா தெரியலாம். ஆனால் உன் கூடயே இத்தனை வருஷமா இருந்தவளுக்கு தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய பிசினஸ் மேன் என்று. அப்படிப்பட்ட ஜாம்பவான் பொண்டாட்டி கால் பிடிச்சு கொலுசு மாட்டிவிட்டு அவள் பாதத்துல முத்தம் கொடுப்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் என்று உனக்கு தெரியுமா” என்று சொல்லி சிலாகித்தாள் துர்கா.
“எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் பொண்டாட்டி முன்னாடி அவன் சாதாரண மனுஷன் தான்” என்ற ஆதி அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
❤️
இங்கே மாதவியுடன் வெளியே சென்றிருந்த போதி அவள் கேட்ட அனைத்தையும் மறுத்து சொல்லாமல் வாங்கி குவித்து கொண்டு இருந்தான்.
அவர்களுடன் வந்த போதியின் கார்ட்ஸ் மாதவி ஷாப்பிங் செய்த பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு அவர்கள் இருவரின் பின்னால் சென்றனர்.
மாதவி மிகவும் சந்தோசமாக போதியை அழைத்துக் கொண்டு டென்மார்க்கின் கடை தெருக்களில் சுற்றி திரிந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் ஷாப்பிங் மட்டுமே செய்து இருந்தால் மாதவி. அவள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து போதி திருப்திபட்டான். சிறு வயதிலிருந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த மாதவி சின்ன சின்ன சந்தோஷத்தை கூட அனுபவிக்காமல் இருந்தது எல்லாம் அவளுக்கு கொடுக்க வேண்டும் என அவள் கேட்டதை எல்லாம் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொடுத்தான்.
நீண்ட நேரம் நடந்ததில் மாதவிக்கு கால் வலிக்கவே சோர்வானவள் அங்கு வீதிகளில் போடப்பட்டிருந்த இளைப்பாறும் பெஞ்சில் சென்று அமர்ந்தவள், “போதி போதும் நம்ம வீட்டுக்கு போகலாம் என்னால இதுக்கு மேல நடக்க முடியாது கால் எல்லாம் ரொம்ப வலிக்குது” என்றால்.
“நிஜமாத்தான் சொல்றியா இன்னும் நிறைய வாங்கணும்னு நீ லிஸ்ட் போட்டு வச்சிருந்தாயே, அதை எல்லாம் நம்ம வாங்கவே இல்ல பாதி தான் வாங்கி இருக்கோம்” என்று போதி கூற.
“அதெல்லாம் நம்ம இன்னொரு நாள் வாங்கிக்கலாம் போதி ப்ளீஸ் வீட்டுக்கு போகலாம் எனக்கு கால் வலிக்குது” என்றால்.
“சரி” என்றவன் தன் கார்ட்ஸை அழைத்து காரை எடுத்து வரச் சொல்ல சிறிது நேரத்தில் அவர்கள் கார் வந்ததும் காரில் ஏறி அமர்ந்தவர்கள் ஆதியின் வீட்டிற்கு சென்றனர்.
வெளியே சென்று இருந்த யாரும் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை வேலையாட்களைத் தவிர ஆதியின் வீட்டில் யாரும் இல்லாததால் காரை விட்டு மாதவி கீழே இறங்கியதும் சற்றும் தாமதிக்காமல் அவளை கையில் ஏந்தியவன் வீட்டிற்குள் கடகடவென நடந்து சென்றான். அவனுடைய கார்ட்ஸ்கள் போதியைப் பார்த்து தங்கள் பாஸ் அவர் மனைவியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்று சிரித்தவர்கள் அவர்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் வந்தனர்.
“ஐயோ போதி தயவுசெய்து என்னை கீழே இறக்கிவிடு அவங்க எல்லாம் நம்மளை என்ன நினைப்பாங்க” என்று தங்கள் பின்னால் வந்த கார்ட்ஸ்களை மாதவி பார்க்க அவர்கள் அனைவரும் போதியையும் மாதவியையும் பார்த்து தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி சிரித்துக்கொண்டே வருவதை கவனித்தவளுக்கு மேலும் கூச்சம் அதிகமாகிவிட போதியின் மார்பில் முகம் புதைத்தவள் “என்னை கீழே இறக்கி விடுடா ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“அவங்க எல்லாம் நம்ம ஆட்கள் தான் இதையெல்லாம் அவங்க பெருசா எடுத்துக்க மாட்டாங்க நீ பேசாம இரு உனக்கு கால் வலிக்குதுன்னு சொன்ன இல்ல நான் உன்னை தூக்கிட்டு போறேன் பேசாம வா” என்றவன் சென்று தன் அறைக்கு செல்ல போனவன் திரும்பி தன் கார்ட்ஸ்களை பார்த்து “நாங்க இன்னைக்கு எங்கேயும் போகல இங்கே வீட்டிலேயே தான் இருக்க போறோம் நீங்க கிளம்புங்க” என்றான்.
தாங்கள் கொண்டுவந்த பைகளை போதியின் அறையில் வைத்துவிட்டு அவனுடைய கார்ட்ஸ்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்ப, அதுவரை மாதவியை கைகளில் ஏந்தி இருந்தவன் அவர்கள் சென்றதும் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு சென்று அறைக்கதவை சாற்றினான்.
போதி அறைக்கதவை சாற்றியதும் மாதவி அவனைப் பார்த்து “இதுக்குத்தான் என்னை இவ்வளவு அவசரமா உள்ள தூக்கிட்டு வந்தியா உனக்கு எப்பவும் இதே நினைப்பு தானா” என்று அவனை கேட்டாள்.
அவளைப் பார்த்து சிரித்தபடி “பெட்ரூம் கதவை சாத்தினாலே அதுக்குத்தான் நீ நினைக்கிற பாத்தியா இது என்னோட தப்பு இல்ல” என்றவன் பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
“அப்போ இவன் எதுக்காக இந்த நேரத்துல பெட்ரூம் கதவை சாத்தணும்” என்று யோசித்தபடி மாதவி மெத்தையில் படுத்து இருக்க, கையில் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு மாதவியிடம் வந்தான்.
அவனை புரியாமல் பார்க்க “என்ன பார்க்கிற என் பொண்டாட்டி கால் வலிக்குதுன்னு சொன்னா அவ காலுக்கு ஒத்தடம் வச்சு விடத்தான் இது எல்லாம்” என்று சொல்லி மாதவியிடம் தன் கைகளில் இருந்ததை காட்டினான்.
“என்னது நீ என் காலுக்கு ஒத்தடம் கொடுக்க போறியா அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்று சொல்லி அவசரமாக மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் மாதவி.
“ஏன் என் பொண்டாட்டிக்கு நான் ஒத்தடம் கொடுக்கக் கூடாதா நீ பேசாம உன் கால காட்டு நான் பார்த்துக்கிறேன்” தன் கையில் இருந்த சுடுதண்ணீர் பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு மாதவியின் காலை பிடிக்கப் போக…
“எல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ பேசாம இரு” என்று மாதவி போதியை தடுக்க…
“இப்போ காலை நீட்டலன்னா நீ எதுக்காக நான் ரூம் கதவை சாத்தினேன்னு நினைச்சியோ அதை செஞ்சுடுவேன்” என்று போதி சொல்ல, அதில் அதிர்ந்தவள் அவனைப் பார்த்தாள்.
