Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 60

உன் ரகசிய ரசிகை நான் 60

by Layas Tamil Novel
565 views

EPISODE 60

கதிர் கீர்த்திகாவைப் பார்க்க…

விக்கி ராதாவைப் பார்க்க…

துர்கா ஆதியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

மூவரும் நின்றிருந்ததைப் பார்த்த ஆதி, தன் புஜங்களை இருக்கினவன், “லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்!” என்று தன் கைகளை இருபுறமும் விரித்து, கீர்த்திக்கும், ராதாவுக்கும் அரணாக நின்றான்.

விக்கி ஆதியிடம், “டேய் ஆதி, உனக்கு இதெல்லாம் விளையாடிப் பழக்கம் இல்லை. பேசாமல் நீ அந்தப் பக்கம் போயிட்டா உனக்கு நல்லது, இல்லைன்னா உனக்குத் தான் கஷ்டம்” என்று சொல்ல,

அவனை முறைத்த ஆதி, “இட்ஸ் ஓகே விக்கி. அப்படி என்ன பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்ற ஆதி, “என்ன ரூல்ஸ்?” என்றான்.

“நாங்க மூணு பேரும் ஒரு டீம்…

நீங்க மூணு பேரும் ஒரு டீம்…

என்னோட ஆப்போனென்ட் ராதா…

கதிரோட ஆப்போனென்ட் கீர்த்தி…

நீயும் துர்காவும் ஆப்போனென்ட்ஸ்…

நாங்க மூணு பேரும் உங்க மூணு பேரையும் பீட் பண்ணிட்டா, நாங்க என்ன சொன்னாலும் நீங்க மூணு பேரும் கேட்கணும். அதுவும் நாங்க தனித் தனியா எங்க ஆப்போனென்ட் கிட்ட தான் சொல்லுவோம், பொதுவா சொல்ல மாட்டோம்” என்றான் விக்கி.

“நாங்க உங்க மூணு பேர் கையிலயும் மாட்டாம தப்பிச்சுட்டா…” என்று கீர்த்தி கேட்க, “நாங்க சொன்ன இதே ரூல்ஸ் தான் உங்களுக்கும்” என்றான் விக்கி.

“யாரு டீம் அதிகமா பீட் பண்ணுதோ, அவங்க சொல்றது தான் ரூல்ஸ். ஓகேவா?” என்றான்.

“எங்களுக்கு ஓகே” என்றால் ராதா.

அப்போது, “ரெஃப்ரியா நான் வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே கையில் விசிலுடன் அங்கு ஷிவு வந்தாள்.

“அக்கா சூப்பர்! நீ தான் ரெஃப்ரி ஓகேவா. கரெக்டா வாட்ச் பண்ணு” என்று ராதா சொல்லிவிட்டு, “ஆதி மாமா, நாங்க ரெடி” என்று ராதா சொல்ல, “எஸ் மாமா, நானும் ரெடி” என்றால் கீர்த்தி. அவர்கள் இருவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு,

“லெட்ஸ் ப்ளே!” என்ற ஆதி, தன் எதிரே இருந்த மூவரையும் பார்க்க,

விக்கி ராதாவைப் பிடிக்க முன்னே செல்ல, “மாம்ஸ், ஹெல்ப் மீ!” என்று கத்த… ஆதி ராதாவைத் தன் பின்னால் இழுத்து நிற்க வைத்தவன், விக்கியைத் தன் முஷ்டி கொண்டு ஒரு இத்து விட்டான்.

சரியாக விக்கியின் தோளில் தன் முஷ்டி கொண்டு ஆதி இடிக்க… விக்கி ஆதியைப் பின்னால் நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும், அவனால் ஆதியை நகர்த்தவே முடியவில்லை.

இந்த பக்கம் கதிர் கீர்த்திகாவைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் கண்ணடித்து, தன் உதடு குவித்து முத்தமிட்டவன், “வா…” என்று ஏக்கமாக அவள் முகத்தைப் பார்த்து அழைக்க…

அவன் இப்படி அழைத்ததும் கீர்த்திகாவுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. கதிர் சண்டைக்கு வருவது போல விளையாட்டாக அழைத்திருந்தால், அவனுடன் மல்லுக்கு நின்றிருப்பான். ஆனால், அவன் இப்படி காதல் மொழி பேசித் தன்னை அழைத்ததும், கீர்த்திகாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, ‘அவனிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான்’ என்று நினைத்த கீர்த்தி, ஆதிக்குப் பின்னால் நின்று இருந்த ராதாவின் பின்னால் ஒளிந்து கொண்டு, அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் நின்றாள்.

ஆதியைத் தாண்டி கீர்த்தியைப் பிடிக்கணும் என்று ஆதியின் வலது புறம் கதிர் செல்ல, விக்கியைச் சமாளித்துக்கொண்டே ஆதியைப் தன் பின்னால் செல்ல விடாமல் தடுத்தான் ஆதி.

கதிரைச் சமாளித்துக்கொண்டு ஆதி இருந்த வேளையில் கிடைத்த சின்ன கேப்பில், விக்கி அவன் கையைத் தட்டி விட்டு, ராதாவின் அருகில் அவளைப் பிடிக்கச் சென்றுவிட… விக்கி தன் அருகில் வந்ததைப் பார்த்ததும், ராதா அங்கிருந்து விலகி தோட்டத்திற்குள் ஓடினாள்.

அவளைத் துரத்திக்கொண்டு விக்கி ஓட… அவன் கைகளில் சிக்காமல் ராதா ஓட… “தங்கச்சி, அண்ணனை இந்த ஓட்டம் ஓட வைக்குறியே…” என்று கத்திக்கொண்டே… அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

“கேம்னு வந்துட்டா அண்ணா, தங்கச்சி எல்லாம் கிடையாது அண்ணா… முடிஞ்சா என்னைப் பிடிங்க பார்க்கலாம்” என்று அவன் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் தோட்டத்திற்குள் ஓடினாள் ராதா.

கீர்த்திகா ஆதியின் பனியனைப் பிடிச்சுக்கொண்டு, “மாமா… என்னைக் காப்பாத்துங்க மாமா…” என்று கதிரின் கைகளில் சிக்காமல் இங்கும் அங்கும் அவன் பின்னால் ஓட… கதிர் ஆதியைத் தாண்டி கீர்த்திகாவைப் பிடிக்க, ஆதியின் கைக்குள் புகுந்து பின்னால் வந்துவிட… ஆதியின் பனியனைப் பிடிச்சுக்கொண்டு இருந்த கீர்த்தி… கதிர் தன் பக்கத்தில் வந்ததும் ஆதியை விட்டு விட்டு, கதிரின் கைகளில் அகப்படாமல் ஓட…

கதிர் கீர்த்திகாவைப் பிடிக்க அவளைத் துரத்தப் போக, ஆதி எட்டி கதிரைப் பிடித்து, கீர்த்தியின் பின்னால் அவனைப் போக விடாமல் கதிரைப் பிடித்துத் தன் புறம் இழுத்தான்.

இப்போது கீர்த்தியைப் பிடிக்கச் சென்ற கதிர்… ஆதியின் கைகளில் மாட்டிக்கொள்ள… அவனிடம் இருந்து விடுபடக் கதிர் போராட… அவனை விடாமல் பிடித்துக்கொண்டு இருந்த ஆதி… கீர்த்தி அவனிடம் இருந்து தப்பித்து விட்டாளா என்று பார்த்துக்கொண்டு இருக்க…

அப்போது… ஒரு மெல்லிய கரம் ஆதியைப் பின்னால் இருந்து அவன் கையைப் பிடிச்சு இழுக்க… அந்த கரத்தின் ஸ்பரிசத்திலேயே, அந்த கரத்தின் சொந்தக்காரி துர்கா தான் என்று தெரிந்துவிட்டது ஆதிக்கு.

கதிரைப் பிடித்திருந்த கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு துர்காவைப் திரும்பிப் பார்த்தான் ஆதி. காலைச் சூரிய கதிர் அவள் முகத்தில் பட்டு, அவள் நிறத்திற்கு முன்னால் தோற்றுக் கொண்டிருக்க…

அந்தச் சூரிய ஒளியில் அவள் முகம் தங்கமென ஜொலிக்க… லேசாக அவள் முகத்தில் துளிர்த்திருந்த வேர்வைத் துளி அவள் முகத்தில் இருந்து வழிந்து, அவள் தொண்டைக் குழிக்குள் இறங்கி, கழுத்தைத் தாண்டி அவள் சேலைக்குள் ஒளிந்து கொள்ள…

‘அந்த வியர்வைத் துளி நானாக இருக்கக் கூடாதா…’ என்று தன் மனதில் எண்ணம் தோன்ற… தன் தலையைக் குலுக்கிக்கொண்ட ஆதி. துர்கா பிடித்திருந்த கையை அப்படியே வளைத்து, கதிரை விட்டு விட்டு, துர்காவை வளைத்து அவன் கைக்குள் அவள் கழுத்தோடு சேர்த்துப் பிடித்துக்கொள்ள…

தன்னைப் பிடித்திருந்த பிடி தளர்ந்ததை உணர்ந்து கதிர் திரும்பிப் பார்க்க, துர்கா கதிரிடம் கண்ணைக் காட்டி, “போ…” என்று சொல்ல… ஆதி தன்னை விட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கதிர் கீர்த்தியைத் துரத்திக்கொண்டு ஓட…

கதிர் தன்னைத் துரத்திக்கொண்டு வருவதைக் கவனிச்ச கீர்த்தி, தன் ஓட்டத்தை வேகப்படுத்தி அவன் கைகளில் சிக்காமல் ஓடினாள்.

தோட்டத்தைச் சுத்தி ஓடப் போக, அங்கே ராதா விக்கியிடம் சிக்காமல் ஓடிக்கொண்டு இருந்தாள். ‘எங்கே அங்கு சென்றால் விக்கியின் கையில் சிக்கி விடுவோம்’ என்று தோட்டத்திற்குள் ஓடாமல், அங்கிருந்த கார்கள் நின்றிருந்த இடத்தை தாண்டி, வேலையாட்கள் தங்கும் இடத்திற்குள் புகுந்துகொண்டாள்.

அவளைத் துரத்திக்கொண்டு அவள் பின்னே ஓடிய கதிர்… கீர்த்தி அந்த வீடுகளை எல்லாம் தாண்டி, வீட்டின் பின் புறம் ஓடுவதைக் கவனிச்சவன், குறும்பாகச் சிரிச்சுக்கொண்டே அவள் பின்னால் ஓடினான்.

வீட்டின் பின்னால் ஓடிய கீர்த்தி, அங்கு அதற்கு மேல் செல்ல முடியாமல் நின்றுவிட்டாள். அந்த இடத்தை தாண்டி வெளியே செல்ல முடியாதவாறு கேட் மூடப்பட்டு இருக்க, திரும்பி ஓடலாம் என்று திரும்ப… அவள் எதிரே விசமமாகப் புன்னகை செய்துகொண்டு அவள் அருகே வந்தான் கதிர்.

“டேய்… கதிர்… வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே பின்னால் நகர… “எனக்கு வேணும்…” என்று சொன்னவன், ஒரே எட்டில் வேகமாக கீர்த்தியை கேட்டின் மீது சாய்த்து அவளை நெருங்கி நின்றான் கதிர்.

“டேய்… என்னடா பண்ற… என்ன விடு…” என்று அவனைத் தள்ளிவிட, அவன் அசராமல் நின்றவன், மேலும் கீர்த்தியை நெருங்கி அவள் உடலோடு தன் உடலை நெருக்கியவன்.

“இதுக்குத்தானே காத்துட்டு இருந்தேன்” என்றவன், அவன் உடலாலே அவளை நகர விடாமல் அழுத்தி நிறுத்தியவன். அவன் விரலால் அவள் கீழ் இதழைப் பிடித்து இழுத்தவன், குனிந்து அவள் இதழைத் தன் இதழால் வருடியவன்.

“எனக்குக் கிடைச்ச சான்ஸை நான் மிஸ் பண்ணுவேனா?” என்றவன், குனிந்து அவள் இதழைக் கவ்வினான்.

முதலில் அவனைத் தன்னிடம் இருந்து விளக்கப் போராட… அவனை அடித்து ஓய்ந்த கைகளாலே அவன் முத்தத்தில் கரைந்து போய் கதிரை அணைத்துக்கொண்டாள்.

இருவருக்கும் மூச்சுவிடத் திணறும் வரை முத்தமிட்டவன், அவளை விடுவித்துவிட்டு, அவளை அலேக்காகத் தன் கைகளில் தூக்கியவன், “மாட்டிகிட்டியா…” என்று கதிர் கூறிக்கொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

அவனிடம் மாட்டிக்கொண்டோமே… ‘இப்படியே போனால் அவ்வளவுதான்’ என்று நினைத்தவள், சட்டென்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு எட்டி அவன் இதழில் கீர்த்தி முத்தமிட… கீர்த்தியைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டு இருந்தவன்… கீர்த்தி முத்தம் கொடுக்கவும் அப்படியே நின்றுவிட்டான்.

அவனுக்கு முத்தம் கொடுக்கக் கொடுக்க அவன் கரைவதை உணர்ந்த கீர்த்தி, அவன் அசந்த நேரத்தில் அவன் கைகளில் இருந்து துள்ளிக் குதித்து அங்கிருந்து வெளியே ஓடினாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கதிர், ‘அவள் தந்த இதழ் முத்தத்தில் கவிழ்ந்து விட்டேனே’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு, தன் தலையை அழுந்தக் கோதி தன்னை சமன் செய்தவன், அவள் பின்னால் ஓடினான்.

கதிரிடம் இருந்து தப்பித்து வந்த கீர்த்தி வெளியே ஓட… அவளைத் துரத்திக்கொண்டு வெளியே வந்த கதிர் மற்றவர்களைப் பார்க்க… ராதாவைத் துரத்திக்கொண்டு ஓடிய விக்கி, கீழே இருந்த கல்லைக் கவனிக்காமல் தடுக்கி கீழே விழுந்தவன், “அம்மா…” என்று கத்த…

முன்னால் ஓடிக்கொண்டு இருந்த ராதா… விக்கியின் சத்தம் கேட்டுத் திரும்ப, அவன் வலியில் துடிப்பதைப் பார்த்தவள், வேகமா அவன் அருகில், “அச்சோ… அண்ணா… வலிக்குதா? ரொம்ப?” என்று அவன் காலைப் பார்க்க,

அவன் காலில் அடிபட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கவே, அவனைப் புரியாமல் நிமிர்ந்து பார்த்த ராதாவைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தான் விக்கி.

அப்போதுதான் விக்கியின் தந்திரம் புரிந்தது ராதாவுக்கு. அவனைப் பார்த்து, “அண்ணா…” என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடப் போக… அவளை ஓட விடாமல் கையைப் பிடித்து நிறுத்தியவன், “எங்கே ஓடுற தங்கச்சிமா?” என்று அவளை இழுத்துக்கொண்டு ஜெயித்த சந்தோஷத்தில் முன்னாள் நடக்க…

அவன் பின்னால் சிணுங்கிக்கொண்டே வந்தாள் ராதா.

துர்காவை கழுத்தோடு சேர்த்துப் பிடிச்சு இருந்த ஆதி, அவன் மற்றொரு கையை அவள் இடுப்பில் கொடுத்துப் பிடித்திருக்க, அவன் கைகள் அவள் மேல் பட்டதும் அப்படியே உறைந்து நின்று இருந்தாள்.

துர்கா தன்னிடம் இருந்து தப்பிக்க எந்த எதிர் வினையும் காட்டாமல் இருக்க… ஆதி அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிப் பிடித்திருந்தவன், அவள் காதருகில் குனிந்து, “துர்கா…” என்று ஹஸ்கி வாயிஸில் அழைத்தான்.

அவள் எதுவும் பேசாமல் இருக்க, அவள் காது அருகில் வந்து லேசாக ஆதி ஊத… அதில் அவள் உடல் சிலிர்த்துவிட… அவன் இடுப்பில் பிடித்திருந்த கையில் அவள் உடல் சிலிர்த்ததில் அவள் வயிறு உள்வாங்க… அதை உணர்ந்த ஆதி, அவள் சேலையைத் தாண்டி அவள் சருமத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன்.

மறுபடியும் “துர்கா…” என்று அழுத்தமாக அழைக்க… “சொ… சொல்லுங்க ஆதி…” என்றால். “என் கிட்ட இருந்து தப்பிக்கணும்னு உனக்குத் தோணலையா?” என்றான்.

துர்கா அவனுக்கு ஏதோ பதில் சொல்ல… அவள் சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ஆதி, யாருக்கும் கேட்காமல் துர்காவின் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ பேச… துர்காவுக்கு அவன் சொல்லச் சொல்ல அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது…

ஆதி அவள் காதில் மெதுவா ஏதோ யாருக்கும் கேட்காமல் சொல்ல… அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முதலில் தாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டைத் தான் சொல்கிறான் என்று நினைத்தாள்.

ஆனால், கடைசியில் அவன் சொன்ன வரிகளைக் கேட்டதும் துர்காவுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் ஒரு நிமிஷம் எதுவுமே புரியவில்லை… பின் அவன் சொன்னதை உணர்ந்தவள், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

அவன் லேசாகப் பிடியைத் தளர்த்தி இருந்தவன், இப்போது முற்றிலும் அவளை விட்டு விலகிப் பின்னால் தள்ளி நிற்க… அவள் நின்ற இடத்தில் இருந்து அசையாமல் அப்படியே நிற்க…

“நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணுவேன். அதற்குள் நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்துகொள். உன் விருப்பத்திற்கு மாறாக நான் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்றவன்… அவள் பதிலுக்குக் காத்திராமல் எண்ணத் தொடங்கினான்.

ஆதி துர்காவுக்கு மட்டும் கேட்கும்படி “ஒன்று… ரெண்டு… மூன்று… நான்கு… ஐந்து… ஆறு…” என்று ஆதி எண்ண… துர்காவுக்கு இதயத் துடிப்பு அதிகமானது… ஆதியை விட்டு ஒரு அடி போலத் தள்ளித் தனியாக நின்றிருந்த துர்காவைப் பார்த்த விக்கியும், கதிரும் அவளை அங்கிருந்து வரச் சொல்லி அழைக்க… அவர்கள் கூப்பிட்டது அவளுக்குக் கேட்கவே இல்லை… ஆதி கூறியதும், அவன் எண்ணிக்கொண்டிருப்பது மட்டுமே அவள் காதுகளில் கேட்டுக்கொண்டு இருக்க…

ஆதி “எட்டு…” என்று எண்ண, கதிர் வேகமா அவள் அருகில் வந்து துர்காவை ஆதியிடம் இருந்து இழுக்க ஓடி வர…

ஆதி “ஒன்பது…” என்று எண்ண… கதிர் துர்காவின் அருகில் வர… விக்கி, “துர்கா! வா!” என்று கத்திக்கொண்டே ராதாவை இழுத்துக்கொண்டு அவள் அருகில் வர… கதிரும் துர்காவின் அருகில் வந்துவிட்டான்.

ஆதி “பத்து…” என்று எண்ணி முடிக்க… கதிர் துர்காவின் கையைப் பிடிக்கவும் சரியாக இருந்தது…

ஷிவு வாயில் விசிலை வச்சு ஊதுவதற்காகக் காத்திருக்க… தோட்டத்துல வேலை செய்பவர்கள் எல்லாம் இவர்களையே அசையாமல் நின்று பார்த்திருக்க… திக்… திக்… என்று அந்த நிமிஷம் செல்ல…

கீர்த்திகா வந்து கதிரின் கையைப் பிடித்து இழுக்கப் போக… அதற்குள் அவன் கீர்த்தியிடம் இருந்து தாவி துர்காவின் கையைப் பிடித்துவிட்டான்…

ஆதி பத்து எண்ணி முடிக்கும் வரை துர்கா அவன் விட்ட இடத்தில் இருந்து மூச்சுக்காற்று கூட வெளியே விடாமல் நின்றிருக்க… அதைக் கண்ட ஆதியின் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் அளவே இல்லை.

கதிர் துர்காவின் கையைப் பிடித்து இழுத்தவன், அவளை இழுத்துக்கொண்டு ஓடப் போக… துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டு திரும்பியவன், துர்கா அவன் இழுப்பிற்கு வரவில்லை என்று அவன் எடுத்து வைத்த அடுத்த அடியில் புரிந்துகொண்டவன், திரும்பி துர்காவைப் பார்க்க…

பத்து எண்ணி முடித்ததும், ஆதி பின்னால் இருந்து துர்காவின் கையைப் கெட்டியாகப் பிடிச்சுக்கொண்டு அவளைப் போக விடாமல் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

இதைப் பார்த்த கதிர், “ச்சே! துர்கா, எல்லாம் உன்னால தான். உனக்கு சப்போர்ட் பண்ணி விளையாட வந்தா… நீ என் அண்ணாவுக்கு விட்டுக்கொடுத்துட்டு அப்படியே நிக்குறயே…” என்று சலித்துக்கொள்ள…

ஷிவு வாயில் விசில் வச்சு ஊதியவள், நேராக ஆதியிடம் வந்தவள் கைதட்ட… கீர்த்தியும், ராதாவும் அவளுடன் சேர்ந்து கைதட்டிக்கொண்டே… “மாமா… மாமா… மாமா…” என்று கத்திக்கொண்டே அவன் இடம் வர… அவர்கள் மூவரும் ஆதியின் அருகில் வரவும், துர்காவின் கையை விட்டவன் அமைதியாகச் சிரிக்க…

இங்கே துர்காவைப் பிடித்துத் தன் அருகில் இழுத்த கதிர்… அவளைத் திட்ட… அவனுடன் சேர்ந்து விக்கியும் திட்ட… துர்கா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“ஹேய்… எங்க ஆதி மாமா தான் ஜெயிச்சாரு… நீங்க எல்லாம் தோத்தாங்கோலீஸ்…” என்று ராதாவும் மற்றவர்களும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க…

பின் கீர்த்திகா, “ஓகே… நாங்க தான் ஜெயிச்சிருக்கோம். சோ… ரூல்ஸ்க்கு வருவோமா?” என்று கீர்த்தி கூற, அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்த கதிரைப் பார்த்து கண்ணடித்தவள், “ஆதி மாமா, நீங்க தான் நம்ம டீம் ஜெயிக்கக் காரணமா இருந்தீங்க… நீங்க சொல்லுங்க முதல்ல” என்றாள்.

ஆதி அவர்களைப் பார்த்துச் சிரித்தவன், “நான் என்னோட ரூல்ஸை ஏற்கனவே துர்காவிடம் சொல்லிவிட்டேன். இனி நீங்கள் இருவரும் விக்கிக்கும், கதிருக்கும் தனித் தனியாகச் சொல்லிவிடுங்கள்” என்றவன், துர்காவைப் பார்த்துக்கொண்டே உள்ளே போக… அவன் செல்வதையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் துர்கா.

ஆதி துர்காவின் காதில் என்ன சொல்லி இருப்பான் என்று நினைக்கிறீர்கள்?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured