Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 79

உன் ரகசிய ரசிகை நான் 79

by Layas Tamil Novel
359 views

EPISODE 79

துர்காவும், கதிரும் நிலானியைப் பார்த்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று முடிவு செய்து ஹாஸ்பிடல் வர….

அவளை அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த துர்காவும் கதிரும்… அங்கே நிலானியின் சாயலில் சற்று வாடிய முகத்தோடு அமர்ந்து இருந்த மதுவைப் பார்த்துக் கொண்டே உள்ளே வர…

அவர்கள் இருவரையும் பார்த்ததும் எழுந்து நின்ற மது… அவர்களைப் பார்த்து எழுந்து நிற்க… மதுவின் அருகில் வந்த துர்கா.. “நீங்க நிலானியுடைய அக்காவா?” என்றால்.

மதுவும் “ஆமாம்,” என்று தலையை ஆட்டிவிட்டு “நீங்க துர்கா தானே…. நான் உங்க மாடலிங் ஃபோட்டோஸ் வீடியோஸ் எல்லாம் சோஷியல் மீடியாவில் பார்த்தேன். ரொம்ப அழகா… இருக்கீங்க,” என்று சொல்ல…

அப்போது இவர்கள் பேசுவதைக் கேட்டுக் தூக்கத்தில் கண் விழித்த… நிலானி அவள் அருகில் நின்று இருந்த துர்காவைப் பார்த்ததும் “லக்ஷு அக்கா… வந்துட்டீங்களா….” என்று சொல்லிப் பெட்டில் இருந்து எழுந்திருக்கப் போக “ஏய் பேசாம படு. இப்போ எதுக்கு எழுந்திருக்கிற…” என்று சொன்ன துர்கா. நிலானியின் தோளைப் பிடித்து அவளைப் படுக்க வைத்தாள்.

“எப்படி இருக்கே நிலா…. இப்போ வலி எல்லாம் பரவாயில்லையா?” என்று கேட்டாள் துர்கா.

“இன்னும் வலி இருக்கு லக்ஷு அக்கா… மருந்து கொடுத்திருக்காங்க… டாக்டர் என்னை நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டுப் போனதா என் அக்கா சொன்னா…. டாக்டர் வரும்போது நான் மயக்கம் போட்டுக் விழுந்துட்டேன்..” என்றால் நிலானி.

“என்ன சொல்ற நிலா…. என்ன ஆச்சு?” என்று பதட்டமாகத் துர்கா கேட்க… நிலானி காலையில் நடந்ததை மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிக் கொண்டு இருக்க… அப்போது வெளியே சென்று இருந்த விக்கி சரியாக உள்ளே வரவும் நிலானி அழுதுகொண்டுத் தன் அக்காவுக்கு நடந்ததைச் சொல்லிக்கொண்டு இருக்க…

வேகமாக அவள் அருகில் வந்தவன் “இப்போ எதுக்கு நீ தேவையில்லாம அழுதுட்டு இருக்கே… உன்னை டாக்டர் டென்ஷன் ஆகக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க. நீ கொஞ்சம் அமைதியா இரு,” என்று உரிமையுடன் விக்கி நிலானியிடம் பேசியவன் அவள் கண்ணீரைத் துடைக்க…

நிலானி அவனையே அழுது கொண்டு இருந்தவள் விக்கி பேசுவதைக் கேட்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள்.

விக்கி துர்காவையும் கதிரையும் பார்த்து “இது தான் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய்ப் ஃபிரெஷ் ஆகிட்டு வர லட்சணமா….” என்று அவர்கள் இருவரையும் கடிந்து கொள்ள…

“டேய் உனக்கே தெரியும் இன்னும் ரெண்டு நாளில் நீயும் லக்ஷுவும் டென்மார்க் போகணும்னு… உங்க கூடவே லதாவும், விவேக்கும் வராங்க இல்ல… இனிமேல் துர்கா ஃபுல் டைம் மாடல் ஆகிடுவா… அவளுக்கு ஆஃபர் மேல ஆஃபர்ஸ் வந்திருக்கு. லக்ஷு கூட அசிஸ்டென்ட்டா லதாவும் விவேக்கும் போயிடுவாங்க… நீயே டென்மார்க் போயிட்டு வர ஒரு மாசம் ஆகிடும். அப்புறம் நான் மட்டும் இங்கே இருந்து சிரமப்படணுமா என்ன… அதன் இன்னிக்கு இன்டர்வியூன்னு சொல்லி இருந்தேன் இல்லையா… அது எல்லாம் முடிச்சுட்டு வர லேட் ஆகிருச்சு,” என்று கதிர் சொல்ல.

“என்னடா சொல்றே? நான் இல்லாம இன்டர்வியூ எடுத்தியா…. இப்படி நீ மட்டும் பொண்ணுங்களைப் பார்த்து செலக்ட் பண்ணிட்டு எனக்குத் துரோகம் பண்ணிட்டியே படுபாவி…” என்று விக்கி வாயை விட…

கதிர் அவனிடம் சிக்னல் செய்து “பின்னாடி பார்,” என்று தன் கண்களாலேயே சைகை காட்ட… அப்போது தான் நிலானி அங்கு இருப்பதையே உணர்ந்தவன் திரும்பி அசடு வழிந்து கொண்டு நிலானியையும் அவள் அக்காவையும் பார்க்க…

மது அவனைப் பார்த்துச் சிரித்தவள் திரும்பிக் கொள்ள…. நிலானி அவனை முறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளைப் பார்த்து ஈ… என்று பல்லைக் காட்ட… துர்கா விக்கியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “இது எல்லாம் உனக்குத் தேவையா?” என்றால்.

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு மறந்துட்டு எப்பவும் போலப் பேசிட்டேன். இனி அலர்ட் ஆகிக்கிறேன்,” என்று சொன்னவன். மதுவை நிலானிக்கும், கதிருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

பின் காலையில் ரவியால் இங்கு நடந்த விஷயங்களை விக்கி சொல்லிட… மது தன் நிலையை எண்ணி அழ ஆரம்பித்தாள். அவள் அழுவதைப் பார்த்து நிலானியும் அழ….

விக்கி இருவரையும் பார்த்து, “இப்போ ரெண்டு பேரும் அழுதுட்டே இருந்தால்… எல்லாம் சரியாகிவிடுமா? என்ன…” என்று அவர்களை அதட்டியவன், “டாக்டர் நாளை மறுநாள் நிலானியை செக் செய்துவிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு,” என்றான்.

உடனே துர்கா “அப்போ நிலானியை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாமா?” என்றால் துர்கா. விக்கி, “இல்லை லக்ஷு. அம்மா அப்பாவுக்கு எல்லாம் இன்னும் நான் நிலானியை கல்யாணம் செய்தது தெரியாது. அதுவும் இல்லாமல் துரை மாமா குடும்பத்தோட இருக்காரு வீட்ல. ரெண்டு பொண்ணுங்களை வெச்சுட்டு நான் திடீர்னு போய்க் கல்யாணம் பண்ணிட்டேன்னு வந்து நின்னா… சரியா இருக்காது,” என்றான் விக்கி.

“அதனால் தான் நான் வெளியில் வீடு பார்த்துட்டேன்,” என்றான் விக்கி.

“டேய் வெளியில் வீடு பார்த்து நிலானியை அங்கே வெச்சாலும் அவங்களை எப்படி விட்டுட்டு நீ டென்மார்க் போவே? அட்லீஸ்ட் ஆதியிடமாவது சொல்லு,” என்றான் கதிர்.

“நான் நேரில் சென்று அவனிடம் சொல்லிக் கொள்கிறேன்,” என்ற விக்கி. “நிலானியுடைய அக்காவையும் நான் எங்களுடன் இருக்கச் சொல்லிவிட்டேன்,” என்றான்.

அவர் துர்காவைப் பார்த்து, “நான் எப்படியும் வேறு வேலை பார்க்க வேண்டி இருக்கும், அதனால் நான் வெளியில் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு வேலை தேடிக் கொள்கிறேன். இவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக நான் எதற்கு?” என்று சொன்னாள்.

நிலானியும், அவள் வீட்டுக்காரரும் என்னைக் கூடவே தங்கிக்கச் சொல்றாங்க என்று மது வருத்தப்பட.

“அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க வெளியே தங்கி வேலைக்குப் போற இடத்தில் உங்களை மிஸ்டர் ரவி எதுவும் டிஸ்டர்ப் செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம்? அதனால் நீங்க பேசாம விக்கி நிலானி கூடவே இருந்துக்கோங்க… அங்க இருந்தே வேலையும் தேடுங்க,” என்றால் துர்கா..

“நிலானி அக்கா சொன்னா கேளு ப்ளீஸ்,” என்று மதுவின் கை பிடித்துக் கெஞ்ச… சரி என்று தலையை ஆட்டினாள் மது.

“விக்கி வீடு எங்கேடா பாத்திருக்கே?” என்றால் துர்கா. “லக்ஷு… உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆன புதிதில் அப்பா எனக்கும் ஆதிக்கும் கதிருக்கும் என்று தனித்தனியாகச் சொத்துக்கள் கொடுத்தார் இல்லையா….” என்றான் விக்கி.

“ஆமாம்டா.. அதுக்கு என்ன இப்போ?” என்று துர்கா கேட்டாள்.

“எனக்குக் கொடுத்த அப்பார்ட்மெண்டில் தான் நான் ஃபர்ஸ்ட் ஃபுளோரில் இருந்தவர்களைக் காலி செய்யச் சொல்லி வந்துவிட்டேன். அவர்களை நம்ம ஃப்ளாட்டிலேயே அடுத்த ஃபுளோருக்கு ஷிஃப்ட் பண்ணச் சொல்லிட்டேன். நாளைக்கு என்கிட்டே சாவி வந்திரும். அதன் பிறகு என்னென்ன வேலை எல்லாம் இருக்கு என்று பார்த்துச் செய்யச் சொல்லி ஆட்களையும் நியமித்துவிட்டுத் தான் வந்திருகிறேன். நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது எல்லாம் ரெடியாகி விடும்,” என்று விக்கி மூச்சுவிடாமல் சொல்ல.

“அடடடா…. என் அண்ணா அவர் பொண்டாட்டிக்காக எவ்வளவு தூரம் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்,” என்று சொல்லிக்கொண்டே கீர்த்திகா உள்ளே வந்தாள்.

அவள் சொன்னதைக் கேட்ட துர்காவும் “ஆமாம் நீ சரியா தான் சொல்றே கீர்த்து. நான் இவனை இதுவரை இவ்வளவு பொறுப்பாப் பார்த்ததே இல்லை,” என்றால் துர்கா.

“லக்ஷு ரொம்ப ஓவராப் பேசாதடி…” என்றான் விக்கி.

“ஆகா நான் எதுவும் பேசலைடா…” என்ற துர்கா தன் வாயைப் பொத்திக் கொள்வது போலப் பாவனை செய்தாள்.

கதிர் ஓரக் கண்ணால் கீர்த்துவைப் பார்க்க… அவள் அவனைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்று திரும்பிக் கொண்டாள்.

கதிர், “நான் ஒண்ணு கேட்கணும்,” என்றான். பொதுவாக அவனை “என்ன?” என்பது போல எல்லோரும் திரும்பிப் பார்க்க…

துர்காவிடம் “லக்ஷு…. லதா.. விவேக் போஸ்டிங்குக்கு நாம ஆல்ரெடி ஆளுங்களைச் செலக்ட் பண்ணிட்டோம். உன்னோட போஸ்டிங்குக்கு மட்டும் பெண்டிங்கில் இருக்கு இல்லையா?” என்றான்.

“ஆமாம் கதிர். நீதான் சரியான ஆள் கிடைக்கலன்னு சொல்லி வந்தவங்களை எல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டியே,” என்றால்.

“அதே தான் லக்ஷு…. இன்டர்வியூ வந்தவங்க வெறும் ஸ்கில் மட்டும் வெச்சுட்டு வந்தாப் போதாது…. உன்னோட ஜாப் அதையும் தாண்டி ஒரு பொறுப்போடு இருக்கும். அப்படி இருக்கவங்க தான் அந்த ஜாப்க்கு செட் ஆகும்,” என்றான்.

“சரிடா ஓகே… அதை எதுக்கு இப்போ சொல்றே …” என்றாள் துர்கா.

“அது இப்போ நிலானியுடைய அக்கா மது வேலை தேடிட்டு இருக்காங்க தானே… நாம ஏன் அவங்களை உன்னோட போஸ்டிங்கிற்க்கு வேலைக்கு எடுத்துக்கக் கூடாது?” என்று கதிர் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் விக்கியும் துர்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுப் பின் கதிரைப் பார்த்து… “நீ சொல்றது சரிதான் கதிர். நீ சொன்ன மாதிரியே நிலானியுடைய அக்காவை நம்ம ஆஃபீஸ்க்கே வரச் சொல்லிடலாமே,” என்றான் விக்கி.

“நம்ம மூணு பேருமே பேசிட்டு இருக்கோம்…. முதல்ல உன் பொண்டாட்டிகிட்டயும் அவ அக்கா கிட்டயும் அவங்க விருப்பம் என்னன்னு கேளு விக்கி…. அதன் பிறகு மற்றதை எல்லாம் பார்த்துக்கலாம்,” என்றாள் துர்கா.

துர்கா சொல்வதும் சரி தான் என்று யோசித்தவர்கள் திரும்பி முதலில் நிலானியை அனைவரும் பார்க்க… அவள் அவர்கள் அனைவரையும் பார்த்து “எனக்கு ஓகே… நான் எதுவும் சொல்லவில்லை,” என்றாள் அவசரமாக…

உடனே அனைவர் பார்வையும் மதுவிடம் திரும்ப…. அவள், “எனக்கு வரச் சம்மதம் தான் ஆனால்…” என்று நிறுத்த….

“ஆனால்.. என்ன?” என்று அனைவரும் ஒன்று போலக் கேட்க…

விக்கியைப் பார்த்து, “நீங்க இன்னும் ரெண்டு நாளில் டென்மார்க் போய்ட்டால் அப்புறம் நிலானி கூட யாராவது இருக்கணுமே…” என்று சொல்ல…

“அதை பற்றி நீங்க கவலைப் படாதீங்க. நான் ஏற்கனவே ரெண்டு வேலை ஆட்களைப் போட்டிருக்கேன். ஒருத்தர் வீட்டுக்குள்ள எல்லா வேலையும் பார்த்துப்பாங்க…. இன்னொருத்தர் வெளியே கடைக்கு எங்கும் போயிட்டு வர… நீங்க வெளியே எங்கயும் போகணும்னா கூட்டிட்டுப் போகன்னு சேர்த்திருக்கேன்,” என்றான் விக்கி.

“நீங்க மார்னிங் ஒன்பது மணிக்கு போயிட்டுச் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்திடலாம். வீட்டில் வேலை பார்ப்பவர் காலை ஏழு மணிக்கு வந்திருவாங்க… சாயங்காலம் நீங்க வர வரைக்கும் இருந்துட்டு அதுக்கு அப்புறம் தான் போவாங்க.”

“இன்னொரு ஆள் அங்கேயே தான் இருப்பாரு. கார் செட் பக்கத்துல ரூம் இருக்கு. அவர் அங்கே அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன் கூடத் தங்கிப்பாரு,” என்றான் விக்கி.

“இப்போ சொல்லுங்க உங்களுக்கு வேலைக்குப் போக ஓகேவா?” என்றான் விக்கி.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அனைவரும் விக்கியை ஆச்சர்யமாகப் பார்க்க… “என்ன எல்லாரும் அப்படிப் பார்க்கிறீங்க? நான் வருவதற்கு எப்படியும் ஒரு மாசத்துக்கு மேல ஆகுமே அதனால தான் எல்லாமே ஏற்பாடு பண்ணி வெச்சேன்,” என்றான் விக்கி.

“டேய் விக்கி கல்யாணம் ஆகி இன்னும் இருபத்திநாலு மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள என்னடா… இப்படி மாறிட்டே நீ!!!” என்று ஆச்சர்யமாகக் கதிர் கேட்க… மற்றவர்களும் அதையே தான் நினைத்து இருக்க…

“எப்படி மாறிட்டேன்?” என்று திருப்பி விக்கியும் அதே கேள்வியைக் கேட்க… “ஒன்றுமில்லை,” என்று தலையசைத்தான் கதிர்.

மதுவிடம் “ஓகேவா உங்களுக்கு?” என்று விக்கி கேட்க… மது நிலானியைப் பார்க்கவும் “சரின்னு சொல்லு அக்கா…” என்று சொல்ல…

மதுவும் சரி என்று தலையை ஆட்டினாள். கதிர் தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்து நிலானியை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு ஆஃபீஸ் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுத் துர்காவும், கதிரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களுடனே கீர்த்தியும் கிளம்பினாள்.


வெங்கடாச்சலம் சென்றதும் சங்கவியை அழைத்துக் கொண்டு அவளுடன் ஷாப்பிங் சென்றான் ஆதி.

முதலில் ஆடைகள் எடுக்க சங்கவி செல்ல… காரை விட்டு இறங்கிய சங்கவி ஆதியையும் தன்னோடு ஷாப்பிங் வரச் சொல்லி அழைக்க…. “நீயே போயிட்டு வா… எனக்கு முக்கியமான போன் பேச வேண்டி இருக்கு,” என்று சொல்லி அவளைப் போகச் சொல்ல…

சங்கவி எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் நிற்க… “என்ன?” என்று ஆதி அவளைப் பார்க்க… “நீயும் உள்ளே வா ஆதி. எனக்குத் தனியாப் போக ஒரு மாதிரி இருக்கு…. நீ உள்ளே வந்து கூடப் போன் பேசு. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்,” என்றாள் சங்கவி.

டிரைவரிடம் காரைப் பார்க் பண்ணிவிட்டு வெயிட் பண்ணச் சொல்லிவிட்டு சங்கவியுடன் கடைக்குள் சென்றான்.

உள்ளே சென்றதும் கடையில் வேலை செய்யும் பணிப்பெண் வந்து அவர்கள் இருவரையும் வரவேற்றவர் இருவரையும் பார்த்துக் கப்பிள்ஸ் என்று நினைத்துவிட்டு… அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல… அங்கே ஜோடி ஜோடியாக ஆடைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்க… அதைப் பார்த்ததும் புருவம் சுருக்கிய ஆதி சேல்ஸ் கேர்ளைப் பார்த்து “இங்கே எதற்கு அழைத்து வந்தீர்கள்?” என்றான்.

அவன் கடுமையாகப் பேசியதைப் பார்த்த அந்தப் பணிப் பெண் “சார்… நீங்கள் இருவரும் கப்பிள்ஸ் என்று…. நினைத்து….” என்று பயந்து கொண்டே கேட்க….

“வாட் நான் சென்ஸ் இஸ் திஸ்…. ரெண்டு பேர் ஒன்னா வந்தாலே கப்பிள்ஸ் என்று நீங்களாகவே முடிவு செய்துவிடுவீர்களா?” என்றான் ஆதி கோபமாக.

உடனே அந்தப் பெண் ஆதியிடம் உண்மையாகவே மன்னிப்புக் கேட்க… அந்தப் பெண்ணைப் பார்த்து, “இவருக்கு மட்டும் என்ன டிரஸ் வேணுமோ அதைக் கொடுங்க…” என்றவன் சங்கவியை அந்தப் பெண்ணுடன் அனுப்பி வைத்தான்.

சங்கவி சென்றதும் ஆதி நின்று அந்தப் பகுதியைச் சுற்றிலும் நோட்டம் விட்டான். ஆடைகள் எல்லாம் ஜோடி ஜோடியாக இருப்பதைப் பார்த்தவன் துர்காவின் நினைவு வர…. சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டவன் அங்கே நீல நிறத்தில் பனியனும் அதற்கு மேட்ச்சாக வெள்ளை நிறத்தில் பேண்டும் ஆண்கள் அணிவதற்கும், பெண்கள் அணிவதற்கும் தகுந்தாற்போல வடிவமைக்கப்பட்டு இருக்க….

அந்தப் பனியனின் இடது புற மார்பில்… ஒரு பெண் பொம்மை எதிரில் இருப்பவரை முத்தமிடுவது போலவும், அதே போல ஆண் அணியும் பனியனில் ஆண் பொம்மை முத்தம் கொடுப்பது போல இருக்க… அந்த இரு பொம்மைகளின் கைகளில் இதய வடிவில் பலூன் இருப்பது போல இருக்க… அதைப் பார்த்ததும் ஆதிக்குப் பிடித்து விடப் பணிப்பெண்ணை அழைத்து தன்னுடைய அளவையும், துர்காவின் அளவையும் சொல்லி அந்த அளவிற்கு ஆடையைப் பேக் செய்யக் கொடுத்தான்.

பின் அங்கிருந்து வெளியே வந்தவன் கடையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்த ஆதி தன் மொபைலை எடுத்து துர்காவுக்கு கால் செய்தான்.

நிலானியைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் அனைவரிடமும் பேசிவிட்டுச் சாப்பிட்டவள் அப்போது தான் தன் அறைக்கு வந்தவள். அறையைச் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு நீண்ட ஒரு பெருமூச்சை விட்டவள் உடை மாற்றி விட்டு வந்து பெட்டில் படுத்தாள்.

பெட்டில் எப்போதும் படுக்கும் இடத்தில் படுத்த துர்கா திரும்பி ஆதி படுக்கும் இடத்தைப் பார்த்தவள் தன் கையை அந்த இடத்தில் வைத்துத் தொட்டுப் பார்க்க… அவன் தன் அருகில் இருப்பதாக பாவித்துப் பார்த்துக் கொண்டு இருந்த துர்கா.

‘ஏன்டா…என்னை இப்படி கொடுமைப் படுத்துறே….. நீ ஊருக்குப் போன அன்று காலையில் நாம் எல்லாரும் விளையாடிக் கொண்டு இருக்கையில் நீ ஏன் அப்படிச் சொன்னே… நீ சொன்னது எல்லாம் நிஜம் தானா… நான் நீ சொன்னதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது’ என்று புலம்பியவள் அன்று கீர்த்து, ராதா, விக்கி, கதிர் இவர்களுடன் ஆதியும் துர்காவும் விளையாடியது நினைவில் வந்தது.

அப்போது துர்காவின் காதில் ஏதோ கூற அவள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்று இருந்ததும்… அவள் காதில் அன்று ஆதி ஏதோ சொன்னதும் துர்காவின் நினைவில் ஓடியது.

துர்காவுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஆதி. அவன் பின்னால் இருந்த ராதாவையும், கீர்த்தியையும் பிடிப்பதற்காக துர்கா ஆதியைத் தாண்டிச் செல்லப் போக… அவளைப் போக விடாமல் இடையோடு சேர்த்து ஆதி பிடித்துக்கொள்ள… ராதாவும் கீர்த்திகாவும் இதுதான் சமயம் என்று தப்பித்துச் சென்று விட்டனர்.

அவர்கள் சென்றும் கூட துர்கா அவன் பிடியில் இருந்து விலக மனமில்லாமல் அப்படியே உறைந்து போய் நிற்க…

ஆதி துர்காவின் முகத்தருகில் மிகவும் நெருக்கமாகத் தன் முகத்தைக் கொண்டு வந்தவன் “என் கிட்டே இருந்து தப்பித்துப் போகணும் என்று உனக்குத் தோணலையா?” என்றான்.

அவன் அப்படி கேட்டதும் துர்கா “இல்லை…. தோணலை….” என்று தலையை ஆட்டினாள் துர்கா.

“அப்போ நீ என் கிட்டே தோற்றுப் போய் விட்டால் பரவாயில்லையா…” என்றான் ஆதி.

“நீ ஜெயிச்சா… எனக்குச் சந்தோசம் ஆதி,” என்ற துர்கா அமைதியாக அவன் கைப்பிடிக்குள் நிற்க.

மெல்ல அவளைப் பிடித்திருந்த அவன் பிடியைத் தளர்த்தி விட்டு அவளைக் காதருகில் குனிந்து…..

“நான் இப்போ உன்னை இங்கே இருந்து தப்பித்துப் போக விடுகிறேன்…… உனக்கு விருப்பம் இருந்தால் உன்னால் எவ்வளவு தூரம் என்னைப் விட்டுப் போக முடியுமோ அவ்வளவு தூரம் என்னைத் திரும்பிப் பார்க்காமல் போய் விடு…. அப்படி நீ இங்கிருந்து போய்விட்டால் நான் உன் பின்னால் வரவே மாட்டேன்….. இப்போது மட்டும் இல்லை உன் வாழ்க்கையில் நான் வரவே மாட்டேன்.”

“ஆனால் நீ இங்கே இருந்து ஒரு இன்ச் கூட நகராமல் நான் பத்து எண்ணும் வரை இங்கேயே இப்படியே நின்றுவிட்டால்…. அதன் பிறகு உன்னை என்னிடம் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது… நீயே நினைத்தாலும் நான் உன்னை விடமாட்டேன்… நீ என்னை வேண்டாம் என்று வெறுத்துச் சென்றாலும் உன்னை என்னுடன் அடைத்து வைத்து இருப்பேனே ஒழிய… என்னைப் விட்டு உன்னை போகவே விட மாட்டேன்,” என்ற ஆதி. “நீ என்னுடன் ஆயுள் முழுக்க இருக்க வேண்டியது வரும்,” என்ற ஆதி. “நீயே முடிவு செஞ்சுக்கோ….” என்றவன்.

அப்படிச் சொல்லிவிட்டு ஆதி “ஒன்று…. இரண்டு…. மூன்று…” என்று மெதுவாக எண்ண ஆரம்பிக்க… அதன் பிறகு நடந்ததை எல்லாம் நீங்களே படித்தீர்களே ஃபிரெண்ட்ஸ்? ஞாபகம் இருக்கா உங்களுக்கு….

எபிசொட் 60 இல் அப்படி என்ன துர்காவின் காதில் ஆதி சொல்லி இருப்பான் என்று கமெண்டில் கேட்ட சிஸ்டேர்ஸ் (கீது, பாரதி, பவானி, ஜோன்ஸ்) இப்போ என்ன என்று தெரிஞ்சிருச்சா உங்களுக்கு 😃😃 ஹாப்பியா….

ஆதி பத்து எண்ணி முடித்தும் கூட துர்கா அங்கேயே நிற்க… அவளைக் காதில் குனிந்து, “தேங்க்ஸ் பொண்டாட்டி,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

இதை எல்லாம் நினைத்துக் கொண்டேப் படுத்திருந்த துர்காவின் காதில் ஆதி விடுத்த அழைப்பு…. விழவே இல்லை…

கடைசி ரிங் போய்க் கட் ஆகும் நேரம் தான் துர்காவுக்குப் போன் அடிப்பது நினைவிற்கே வர… அவசரமாக காலை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் “ஹலோ….” என்று துர்கா பேச… போனை வைக்கப் போனவன் துர்காவின் குரல் கேட்டதும் “ஹலோ…” என்று ஆதி சொல்ல….

அவன் குரல் கேட்டதும் தான் தன் போனை காதில் இருந்து எடுத்துத் திரையைப் பார்க்க… ஆதியிடம் இருந்து போன் வந்திருக்கிறது என்று உணர்ந்தவள் திரும்பவும் போனை காதில் வைத்து… தயக்கத்துடன் “சொ… சொல்லு ஆதி…” என்றால் துர்கா.

“சும்மா…. சும்மா… தான் கால் பண்ணினேன்,” என்று ஆதியும் தடுமாறிப் பேசினான்.

“ம்ம்ம்… சரி,” என்றாள் துர்கா.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்த ஆதி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…

“என்ன பண்ணிட்டு இருக்கே துர்கா?” என்றான்.

“நான் பெட்டில்… பெட்டில் படுத்திருக்கேன் ஆதி,” என்றால் துர்கா.

“அப்போ தூங்கிவிட்டாயா? நான் கால் பண்ணி உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்ற ஆதி. “நீ தூங்கு லக்ஷு… நான் கட் பண்றேன்,” என்று சொல்ல…

அவன் அப்படிச் சொன்னதும் அவசர அவசரமாக “இல்லை ஆதி. நான் தூங்கலை. சும்மா தான் தூக்கம் வராமல் படுத்திருந்தேன்,” என்றால்.

“ஏன் தூக்கம் வரலையா லக்ஷு… உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று அக்கறையுடன் ஆதி கேட்க….

“இல்லை ஆதி. உடம்புக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு….” என்று இழுத்தவள். சற்று நிறுத்தி…. “மனசு தான்… தூங்க விடவில்லை,” என்றால்.

அவள் சொன்னதைச் சற்று நிதானமாக யோசித்தவன். “உன் மனசு கஷ்டப்பட்டுத் தூங்க விடவில்லையா? இல்லை….. சந்தோஷத்தில் தூங்க விடவில்லையா?” என்றான் ஆதி.

“ரெண்டும் இல்லை ஆதி… குழப்பத்தில் தூங்க விடவில்லை…” என்றால் துர்கா.

“குழப்பமா? அப்படி என்ன குழப்பம் உன் மனதில் இருக்கிறது? என்ன என்று சொல் துர்கா. என்னால் தீர்க்க முடியுமா என்று நான் முயற்சி செய்கிறேன்,” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்ட.. துர்கா… “குழப்பமே உன்னால் தான்,” என்றாள் தயங்கிக் கொண்டே ஆதியிடம்.

அவள் அப்படிச் சொன்னதும் அதிர்ச்சியான ஆதி “என்னாலயா? என்னாலயா உனக்குக் குழப்பமா இருக்கு!!” என்று நம்பாமல் துர்காவிடம் கேட்க…

“ஆமாம் ஆதி. உன்னால தான் நான் குழப்பமா இருக்கேன்,” என்ற துர்கா… “ஏன் ஆதி அப்படி பண்ணினே….” என்றால்.

அவள் சொல்வது புரியாமல் “என்ன லஷு எனக்குப் புரியலை… கொஞ்சம் புரியும்படியாச் சொல்லு லக்ஷு,” என்று ஆதி துர்காவிடம் பதட்டமாகக் கேட்க…

“நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாம கார்டனில் விளையாடும் போது நீ என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா உனக்கு?” என்றால் துர்கா.

“அதுதான் அதுதான் நீ ஏ என்கிட்டே அப்படிச் சொன்னே…” என்று விடாமல் துர்கா கேட்க அமைதியாக இருந்த ஆதி அன்று நடந்ததை தனக்குள் அசை போட்டவன்…. அவன் சொன்னது நினைவில் வர.. கண்கள் பளிச்சிட…… “லக்ஷு… அது..” என்று ஆதி தடுமாற…

“சொல்லு ஆதி. ஞாபகம் வந்திருச்சா உனக்கு…. இப்போதாவது நியாபகம் வந்திச்சா… உனக்கு… சொல்லு ஆதி,” என்றாள் துர்கா குரல் தழுதழுக்க…

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured