EPISODE 83
துர்காவும், விக்கியும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தது போல இருந்த ஃபோட்டோவை ஷிவு சங்கவியின் வாட்ஸாப்பிற்கு அனுப்பி வைக்க… அதைக் ஏதேச்சையாக ஆதி பார்த்துவிட அவள் போனைப் பிடுங்கி அதை பார்த்தவன் அதிர்ந்து போய் அப்படியே நின்றான்.
சங்கவி திடீர் என்று ஆதி அவள் கையில் இருந்து போனைப் பறித்ததும் அதிர்ச்சியானவள் பின்… ‘அப்பாடா… நாம நினைக்காமலேயே போன் அவன் கையில் போய்டுச்சு….’ என்று நினைத்தாள்.
ஆதியிடம் “எதுக்கு என் போனைப் பிடுங்கினே ஆதி கொடு,” என்று அவன் கையில் இருக்கும் தன் போனை அவனிடம் இருந்து வாங்குவது போலப் பாவனை செய்தால்.
“என் போனை அனுமதி இல்லாமல் ஏன் ஆதி வாங்குற… கொடு,” என்று அவனிடம் கோபமாக இருப்பது போலச் சங்கவி கேட்டாள்.
“உன் போனை நான் வேண்டும் என்று வாங்கவில்லை… உன் போனில் எதற்கு என் மனைவியின் ஃபோட்டோ தேவையில்லாமல் இருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் ஃபோட்டோவைச் சிறியதாக்கிப் பார்க்கவும் அந்தப் ஃபோட்டோவில் துர்கா பெட்டில் சாய்ந்து இருக்க… துர்காவின் தோளில் விக்கி இடித்துக்கொண்டு படுத்து இருப்பது போல அந்தப் ஃபோட்டோவில் இருவரும் மிக அருகில் இருப்பதைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போய் இருந்தான்.
அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த ஃபோட்டோவைப் பார்த்ததும் ஷாக்கான ஆதி அதன் பின் எதுவுமே பேசவில்லை… அவன் அமைதியாக இருக்க… சங்கவியும் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டால்.
‘எப்படியோ அவனுக்கு இந்த விஷயம் தெரிந்து போயிற்று’ என்று நினைத்தவள் அமைதியாகி விட்டால். கார் ஆஃபீஸில் வந்து நின்றதும் காரை விட்டு இறங்கிய ஆதி கோபமாகத் தன் கேபினுக்குச் சென்றான்.
ஆதியின் பின்னால் சங்கவியும் அவன் கேபினுக்குள் சென்றால். உள்ளே சென்ற ஆதி கோபமாக இங்கும் அங்கும் தன் கையில் இருந்த போனில் துர்காவின் ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
இங்கே சங்கவி ஆதி கோபமாக இருப்பதைப் பார்த்தவள் மனதுக்குள் குத்தாட்டம் போட்டால்… எப்படியும் நேரம் பார்த்துக் ஆதியிடம் சொல்லணும் என்றிருந்த விஷயம் இன்று அவன் கண்களுக்குத் தானாகவே தெரிந்து விட்டது என்று சந்தோஷத்தில் இருந்தாள்.
தன் கேபினிற்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த ஆதி திடீர் என்று நின்றவன் சங்கவியைப் பார்க்க… இதுவரை மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் அப்படியே ஒன்றும் தெரியாதவள் போல ஆதியை பார்த்தாள்.
“இந்தப் ஃபோட்டோவை உனக்கு எதுக்கு ஷிவு அனுப்பிவைத்தால்?” என்று கேட்டான்.
“இன்னைக்குக் காலைல உன் வீட்லதான் ஷிவு இந்தப் ஃபோட்டோவை எடுத்திருக்கா….. காலையில் பட்டப்பகலில் துர்காவும் விக்கியும் இப்படி ஒரே பெட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஃபோட்டோ எடுத்து உன்கிட்ட சொல்லப் பயந்துகிட்டு எனக்கு அனுப்பி உன்னிடம் சொல்லச் சொன்னாள்.”
“அவளுக்கு விக்கியும் துர்காவும் இப்படி நெருங்கிப் பழகுவது சுத்தமாகவே பிடிக்கவில்லை. உனக்கு அவர்கள் ரெண்டு பேரும் துரோகம் செய்யறாங்க என்று சொல்லி என்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டா ஆதி…..” என்ற சங்கவி ஷிவுவின் மேல் பழியைப் போட்டால்.
‘நாளை சங்கவி சொல்லித் தான் ஷிவு இப்படி எல்லாம் செய்கிறாள் என்று தெரிந்துவிடக் கூடாது…’ தனக்கும் இதற்கும் எதுவும் சம்பந்தமில்லை என்பது போல நின்றிருந்தால்.
“உன்கிட்ட நான் இதை முதலில் சொல்லணும்னு நினைச்சேன் ஆதி. ஆனா ஏற்கனவே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணப்போ நான் ஏதேதோ புரியாமல் பேசி நம்ம கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லிட்டேன்.”
“அதன் பிறகு நீ துர்காவைக் கல்யாணம் பண்ணிட்ட…. இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தப்போ நான் உன்கிட்ட சொல்லலாம்னு நினைத்தேன் ஆதி.”
“ஆனா நான் இதை உன்னிடம் சொன்னால்… துர்கா உன்னைக் கல்யாணம் செய்துகிட்டது எனக்குப் பிடிக்காமல் வேணும்னு சொன்னேன்னு நீ என்னைத் தப்பா எடுத்துக்குவ… அதனால் தான் நான் உன்கிட்ட எதுவுமே சொல்லல ஆதி.”
“எனக்கு இந்த விஷயம் ரொம்ப நாளுக்கு முன்னாடியே தெரியும். நீ இல்லாத போது துர்காவும் விக்கியும் ரொம்ப நெருக்கமாப் பழகிட்டு இருக்காங்க. அவங்க நிறைய பக்கம் ஒண்ணாச் சுத்திட்டு இருக்கிறத என் ஃபிரெண்ட்ஸ் சிலர் கூட இன்கிட்டே சொல்லி இருக்காங்க,” என்றால் சங்கவி.
சங்கவி சொல்வதெல்லாம் கோபத்தோடு கேட்டுக் கொண்டு இருந்த ஆதி…. எதுவும் பேசாமல் அமைதியாக உறைந்து நின்று இருந்தான்.
சற்று நேரத்தில் தன்னை நிதானித்தவன் “சரி இந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் நீ எதுவும் செய்ய வேண்டாம். இதை என்ன பண்ணனும் எனக்குத் தெரியும் நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொன்னவன் ஆத்திரத்தில் அந்தப் ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு மறுபடியும் தன் கையில் இருந்த போனைத் தூக்கிப் போட்டு கீழே வீச அது சுக்கு நூறாக உடைந்து விழுந்தது.
தன் போனைப் போட்டு உடைத்து விட்டான் என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் சங்கவிக்கு துர்கா பற்றிய விபரம் எப்படியோ ஆதிக்குத் தெரிய வந்து விட்டது என்று சந்தோஷப்பட்டால்.
இனி கண்டிப்பாக ஆதி துர்காவுடன் சேரவே மாட்டான் என்று சங்கவிக்குப் புரிந்து விட்டது ஏனென்றால் தன்னைப் ஏமாற்றுபவர்களை, தனக்குத் துரோகம் செய்பவர்களை ஆதி ஒருநாளும் மறப்பதும் இல்லை மன்னிப்பதும் இல்லை என்பது சங்கவிக்கு நன்றாகவே தெரியும்.
ஆதி கோபத்தில் அமர்ந்திருக்க மேலும் துர்கா பற்றிச் சங்கவி ஏதோ கூற வர…. ஆதி சங்கவியைப் பார்த்துக் கோபமாக “நீ வெளியே வெயிட் பண்ணு. உனக்கு என்ன வேலை என்று நான் பிறகு சொல்கிறேன்,” என்று அவளை வெளியேப் போகச் சொல்ல…. அதற்கு மேல் அவனிடம் நின்று பேசப் பயந்து கொண்டு சங்கவி வெளியே வந்து விட்டாள்.
இருவரும் ஆஃபீஸ் வந்ததற்குப் பிறகு மாலை ஆகியும் ஆதி தன் கேபினில் இருந்து வெளியே வரவே இல்லை…. அவன் அறைக்குச் சென்று வந்த ஆஃபீஸ் ஸ்டாஃப்கள் அனைவருமே வெளியில் வரும்போது கலவரம் முகத்துடன் வந்தார்கள். அவர்கள் வந்ததை வைத்துச் சங்கவி ஆதி இன்னும் பயங்கர கோபத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.
அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சங்கவி மாலை போல கேபினை விட்டு வெளியே வந்த ஆதி சங்கவியைத் தாண்டிச் செல்லப் போனவன். பின் நின்று திரும்பிச் சங்கவியை ஒரு கனிவான பார்வை பார்த்து “போகலாமா….” என்று கேட்க சங்கவிக்கு ஆச்சரியமாக இருந்தது ஆதி தன்னிடம் இவ்வளவு சாஃப்டாகப் பேசி இவள் பார்த்ததே இல்லை.
ஆதி “போகலாமா?” என்று கேட்டதும் அவளையும் அறியாமல் வேகமாகத் தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் “ஓகே ஆதி போகலாம்,” என்று சொல்லி அவன் பின்னால் ஓட அவனுடன் சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.
டிரைவரைப் போகச் சொல்லிவிட்டு ஆதி காரை ஓட்டிக்கொண்டு சங்கவியை அழைத்துக்கொண்டு சென்றான்.
அவன் மாளிகைக்குச் செல்லாமல் ஷாப்பிங் செய்வதற்காகச் சங்கவியை அழைத்துக்கொண்டு செல்ல… “ஆதி இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்?” என்று சங்கவி கேட்கவும் காரை விட்டு இறங்கியவன் “வா….” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் முன்னே நடக்க சங்கவி எதுவும் புரியாமல் அவன் பின்னே சென்றால்.
நேராக ஒரு பெரிய பிராண்டெட் ஷோரூமிற்குள் சென்றவன் அங்கே மிகவும் பிரபலமான ஒரு போன் ஷோரூமிற்குச் சென்று…. உள்ளதிலேயே மிகவும் விலையுறந்ததாக போனை வாங்கி அவள் கையில் கொடுத்துவிட்டு “ஒரு கோபத்தில் காலையில் உன் போனை உடைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு,” என்று சொல்லி அவள் கையில் அந்த போனை கொடுத்து அதில் அவளுக்குப் புது சிம் கார்டும் வாங்கிக் கொடுத்தான். “இனிமேல் நீ இந்த நம்பரை தான் யூஸ் பண்ணனும், இதில் மட்டும் தான் என்னுடன் பேசணும்,” என்று சொல்லிவிட்டு முன்னே சென்றான்.
ஆதியிடம் இருந்து இப்படி ஒரு மாறுதல் வரும் என்று அதுவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் வரும் என்று சங்கவி துளியும் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு போனை வாங்கிக் கொடுத்துவிட்டு “போகலாமா?” என்று சொல்ல “சரி” என்று தலை ஆட்டிவிட்டுப் புது போன் கிடைத்த சந்தோஷத்தில் ஆதிக்குப் பின் அவனுடன் மாளிகைக்குச் சென்றாள்.
வீட்டிற்குள் வந்த இருவரும் அவரவர் அறைக்குச் செல்லப் போக…. சங்கவியைப் பார்த்து “நாளை மதியம் நாம பிசினஸ் ட்ரிப்புக்காகச் ஸ்விட்சர்லாந்து போகணும். ரெடியா இரு… உனக்கு ஏற்கனவே திங்ஸ் எல்லாமே இருக்குதான்னு வேற எதுவும் வேணுமா?” என்று கேட்க “இல்லை ஆதி. நீ வாங்கிக் கொடுத்தது எனக்கு நிறைய இருக்கு. அதுவும் இல்லாம உன்னோட கார்டு என்கிட்ட தான் இருக்கு. வேணும்னா நான் எதுன்னாலும் நாளைக்கு வாங்கிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டுச் சந்தோஷமாகத் தன் அறைக்குள் சென்றாள் சங்கவி. அவளை அனுப்பி வைத்துவிட்டுத் தன் அறைக்கு வந்த ஆதி.
சங்கவியின் போனில் பார்த்த ஃபோட்டோவை நினைத்து மிகவும் ஆத்திரம் கொண்டவன் தன் அறைக்குள் வந்ததும் அங்கிருக்கும் பொருட்கள் எல்லாம் தூக்கிப் போட்டு உடைக்க ஆரம்பித்தான்.
அப்படி இருந்தும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை “துர்கா…..” என்று கத்திக்கொண்டே அருகில் இருந்து கண்ணாடியில் ஓங்கிக் குத்த…. கண்ணாடி உடைந்து தூள் தூளாகக் கீழே விழவும் ஆதியின் கை முழுவதும் கண்ணாடிச் சில்லுகள் ஏறி அவன் கையில் இருந்து இரத்தம் பொல பொலவென வழிந்தது.
“ஏன் துர்கா… உனக்கு என்ன ஆச்சு….. ஏன் இப்படிப் பண்ணினே… இவ்வளவு வருஷம் என்னைக் காதலிச்சதா தானே அந்த டைரியில் எழுதி இருந்தே… அப்போ அது எல்லாம் பொய்யா… ஒரு வேலை அதை நான் படிச்சு நீ எழுதுனதை எல்லாம் நான் நம்பணும்ன்னு சொல்லிட்டு அந்த டைரியை என் கண்ணில் படும்படி வெச்சியா துர்கா… நீயும்… நீயும் என்னை ஏமாத்திட்டியே…” என்று கதறினான்.
தன் ரூமுக்குச் செல்ல இருந்த சங்கவி ஆதியின் அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு அவன் அறைக்கு வர…. ஆதி கதறும் சத்தம் கேட்கவும் அப்படியே அவன் அறைக்கு வெளியில் நின்று ஆதி பேசியதை எல்லாம் கேட்டவள்.
அவன் துர்கா அவனுக்குச் செய்த துரோகத்தினால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவள் வேகமாக ஆதியின் அறைக் கதவைத் தட்டி விட்டு “ஆதி நான் உள்ளே வரலாமா?” என்று கேட்கச் சற்று நேரம் அமைதியாகவே இருக்க மீண்டும் சங்கவி கதவைத் தட்டவும் “உள்ளே வா சங்கவி,” என்றான் ஆதி.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற சங்கவி அறைக்குள்ளே பொருட்கள் எல்லாம் சிதறி, கண்ணாடி எல்லாம் உடைத்திருக்க …. ஆதிக்கு எங்கே என்று சங்கவி அறையைச் சுற்றிலும் தன் பார்வையைச் சுழல விட….. அறையின் மூலையில் சோபாவில் அமர்ந்திருக்க… அவன் கையைத் தொங்கப் போட்டு இருக்க அவன் கையில் இருந்து இரத்தம் வேகமாக வழிந்து தரையில் சொட்டிக் கொண்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் சங்கவி பதறிப்போய் அவன் அருகில் சென்று “ஆதி என்ன இப்படிப் பண்ணிட்ட.. வீணா உன்னை நீயே எதுக்காக காயப்படுத்திக்கிற ஆதி.”
“நியாயப்படி பார்த்தால் உனக்குத் துரோகம் பண்ணுனது அந்தத் துர்காவும் விக்கியும் தான்.”
“நீ தண்டிக்கணும்னா உன்னை நீயே தண்டிக்கிறதுல என்ன இருக்கு ஆதி?” என்று சங்கவி அவனிடம் நல்லவள் போலப் பேச.
அவள் சொல்வதைக் கேட்டவன் சற்று யோசித்தவன் ஆம் என்பது போலத் தலையை ஆட்டினான். அவன் கோபம் சற்றும் குறைந்த பாடு இல்லை….. அவனை அப்படிப் பார்க்க சங்கவிக்கு ஏனோ போல இருந்தது.
“ஆதி ஒரு நிமிஷம் இங்கே இரு நான் இப்போ வருகிறேன்,” என்று வேகமாகக் கீழே சென்றவள் வேலையாட்களை ஏவி ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கே என்று கொண்டு வரச் சொல்லி அதை எடுத்து வந்து ஆதியின் கீழ் அமர்ந்து அவன் கையைப் பிடித்து அவன் கையில் இருந்த கண்ணாடிச் சில்லுகளை மெதுவாக எடுத்துவிட்டு அவன் கைக்கு முதலுதவி செய்து கட்டுப் போட்டு விட்டாள் சங்கவி.
அவ்வளவு பதட்டமாகத் தன் கையில் காயம் ஆனதும் இங்கும் எங்கும் ஓடி தனக்குக் கையில் இருந்த காயங்களைச் சுத்தம் செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் சங்கவியையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால் ஆதி.
அவன் கைக்குக் கட்டுப் போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்த சங்கவி… ஆதியைப் பார்த்து “ஆதி நீ இப்படிக் கோபப்படுவதில் எந்த யூஸும் இல்லை…” என்றவள்.
“உனக்குத் துரோகம் செய்த அவங்க ரெண்டு பேரையும் தான் நீ ஏதாவது செய்யணும்,” என்று அவனைத் தூண்டிவிட….
அவளைப் பார்த்த ஆதி “நீ சொல்றதும் சரி தான் சங்கவி. ஆனால் அந்தத் துர்காவிடம் கம்பெனி சார்பில் மாடலிங் செய்ய நிறைய கம்பெனியிடம் காண்ட்ராக்ட் போட்டுப் பெரிய தொகையையும் வாங்கி விட்டேன்.”
“இப்போது அவளை நான் எதுவும் செய்தால் அந்தக் காண்ட்ராக்ட்கள் எல்லாம் துர்கா செய்ய முடியாமல் போனால் அது தனக்கும் என் கம்பெனிக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்,” என்றான் தீவிரமாக.
அவன் இவ்வளவு தூரம் தன்னிடம் இறங்கி வந்து தன்னிடம் இவ்வளவு பேசுவான் என்று சங்கவி எதிர்பார்க்கவே இல்லை.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட சங்கவி… “ஆதி அப்போ இப்போதைக்கு நீ துர்காவிடம் உனக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் நார்மலாக இருக்க முயற்சி செய்,” என்றாள்.
“அப்படி எப்படி என்னால் இருக்க முடியும் சங்கவி?” என்றான். முதன் முறையாக வெகு நாட்கள் கழித்துத் தன்னிடம் நார்மலாகப் பேசும் ஆதியை நினைத்துச் சந்தோஷப்பட்டவள்.
“அந்தக் காண்ட்ராக்ட் எல்லாம் முடிவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கிறது?” என்று கேட்டாள்.
“கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்…” என்றான் ஆதி.
“அப்போ அதுவரை நீ துர்காவிடம் இதுவரை எப்படி நடந்து கொண்டாயோ அதே போல நடந்து கொள்…. அவள் காண்ட்ராக்ட் எல்லாம் முடிந்த பிறகு அந்தத் துர்காவையும், விக்கியையும் உன் வீட்டை விட்டே… துரத்தி விடு,” என்றாள் சங்கவி.
அவள் சொல்வதையெல்லாம் யோசித்தவன் சரி என்று தலையை ஆட்டினான்.
சங்கவி சொன்னதைக் கேட்டு ஆதி சரி என்று சொன்னதும் சங்கவிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
“சரி ஆதி நீ ரெஸ்ட் எடு ஆதி. நான் கீழ போறேன்,” என்று சொல்லிச் செல்லப் போக… அவள் கையை ஆதி பிடித்து நிறுத்த… அதிர்ச்சியில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் சங்கவி.
ஆதி தன் மாஸ்க்கைக் கழட்டிவிட்டுச் சங்கவியைப் பார்க்க…. அவன் முகத்தில் இருந்த கோபங்களைப் பார்த்தவள் முகம் சுழிக்கவும் அதைக் கவனித்த ஆதி.
அவள் கையை விட்டவன் “சாரி சங்கவி. இந்த முகம் பிடிக்காமல் தான் என்னை நீ வேண்டாம் என்று சொல்லி நமக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினே சங்கவி… அதே போலத் தான் துர்காவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை போல.. என் அம்மா அவளை வற்புறுத்தியதனால் தான் துர்கா என்னை வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து இருப்பாள் போல,” என்று வருத்தத்துடன் சொல்ல..
“இல்லை ஆதி. நான் அப்போ உன்னைச் சரியாப் புரிஞ்சுக்காம உன்னை வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா…. நம்ம கல்யாணம் நின்ற பிறகு தான் எனக்கு உன்னோட அருமையே புரிஞ்சுது ஆதி. நியாயப்படி நான் தான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கணும்,” என்றவள் “என்னை மன்னிச்சிரு ஆதி. நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன்,” என்று அவள் சோகமாகச் சொல்ல…
“இல்லை சங்கவி. எந்தப் பொண்ணுக்கும் அவ கட்டிக்கப் போற புருஷன் அழகா இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கும். அந்தத் தகுதி என்கிட்ட இல்லாத அப்போ நான் யாரையும் தப்பு சொல்ல விரும்பலை,” என்றான்.
“ஆதி நான் ஒன்னு சொல்வேன். என்னை நீ தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றாள் தயங்கிய படியே… சங்கவி.
“சொல்லு சங்கவி நான் எதுவும் நினைக்க மாட்டேன். எனக்கு நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே சங்கவி. சொல்லு,” என்றான் ஆதி.
“ஆதி நமக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆன அப்போ ஆண்ட்டி என்கிட்டே நீ ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டால் உனக்கு இந்த நோய் எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னாங்களே… நீ ஏன் ஆதி இப்போ அந்தக் ட்ரீட்மென்ட் எடுத்துக்கக் கூடாது?” என்றாள் சங்கவி.
அவள் சொல்வதை ஒரு நிமிடம் யோசித்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் எழுந்து நின்று சங்கவியின் தோளில் கைவைத்து… “எனக்கு இத்தனை நாளா இது பற்றி யோசிக்கும் சூழல் அமையவே இல்லை சங்கவி.. ரொம்பச் சந்தோஷம் சங்கவி. நீ எனக்குச் செய்திருக்கிறது எவ்வளவு பெரிய உதவி என்று தெரியாது… நீ சொன்னது போல நான் நாளைக்கு நம்ம பிசினஸ் ட்ரிப் போறோம் இல்லையா… அங்கே நியூசிலாந்தில் தான் என்னோட ட்ரீட்மென்ட் எடுக்க நான் ஏற்கனவே அங்கிருக்கும் டாக்டரிடம் இரண்டு வருடங்களுக்கு முன் பேசி வைத்து இருந்தேன்.”
“நாளை காலை முதல் வேலையாக அவரிடம் என்னுடைய ட்ரீட்மென்ட் பற்றிப் பேசிவிட்டுப் பிசினஸ் மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு என்னோட ட்ரீட்மென்ட்டை முடித்த பிறகு திரும்பலாம். அதற்கு நீ எனக்கு உதவி செய்வாயா?” என்று ஆர்வம் பொங்க ஆதி கேட்க…
அவன் குரலில் இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் சங்கவிக்குச் சந்தோஷத்தை அளித்தது. ஆதி ஒரு வழியாகத் தன் பக்கம் வந்துவிட்டான் என்று சந்தோஷப்பட்ட சங்கவி. “நான் இருக்கேன் ஆதி,” என்றாள் சங்கவி.
“ரொம்ப தேங்க்ஸ் சங்கவி… சரி ரொம்ப நேரம் ஆகிருச்சு. நீ போய் உன் ரூமில் படுத்துக்கோ… காலையில் பார்க்கலாம்,” என்று அவளை அனுப்பிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் துர்காவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஆதி துர்காவையும், விக்கியையும் பற்றித் தவறாக நினைத்த விஷயமாக எதுவும் தெரியாமல் ஃபிளைட்டில் ஆதியை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் துர்கா டென்மார்க் நோக்கி விக்கி, லதா, விவேக்குடன் பயணித்துக் கொண்டு இருந்தாள்.
துர்கா டென்மார்க் சென்றாள் ஒரு மாதம் கழித்துத் தான் இந்தியா வருவாள் என்று தெரிந்து கொண்ட போதி…
ஆதியைப் பார்த்து அவன் கம்பெனியின் விளம்பரத்திற்காக துர்காவை நடிக்கச் சம்மதிக்க வைக்கவும், பிசினஸ் டீல் பற்றி ஆதியிடம் நேரில் சந்தித்து அவனுடன் இணைந்து தன் பிசினசைப் பற்றிப் பேசவும் போதி அவர்களுக்கு முன்பாகவே டென்மார்க் வந்துவிட்டவன் ஆதியின் கம்பெனிக்குச் சென்று கொண்டு இருந்தான்.
ஆதியின் ஆஃபீஸின் முன்பு வந்து போதியின் கார் நின்றதும் காரை விட்டு இறங்கிய போதி இறங்கிக் ஆதியின் கம்பெனியைப் பார்த்தவன் ‘நாடு விட்டு நாடு வந்து இவ்வளவு பெரிய கம்பெனியை டென்மார்க்கிலும் நடத்திக் கொண்டு இருக்கிறான்’ என்று ஆதியை நினைத்து வியந்தவன் நம்பர் ஒன் பொசிஷனில் ஆதியின் நிறுவனம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டான் போதி.
ஆதியின் நிறுவனத்தில் ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்ததால். உள்ளே வந்ததும் காத்திருக்காமல் நேராக ஆதியைப் பார்க்கச் சென்றான்.
ஆதிக்கும் போதியின் வருகைக்காகக் காத்திருந்தான். போதி உள்ளே வந்ததும் ஆதி எழுந்து நின்று வரவேற்றவன் தன் எதிரில் இருந்த சேரில் போதியை அமர வைத்தவன்.
“சொல்லுங்க மிஸ்டர் போதி…. என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கீங்க… அப்போ கண்டிப்பா பிசினஸ் விஷயமாகத் தான் இருக்கும்,” என்று நேரடியாகக் கேட்டான் ஆதி.
“பரவாயில்லையே… நேரடியா விஷயத்துக்கு வந்துட்டீங்க மிஸ்டர் ஆதி,” என்ற போதி “நானும் நேரடியாக விஷயத்துக்கு வரேன் மிஸ்டர் ஆதி,” என்றவன்.
“மிஸ்டர் ஆதி நீங்கள் இப்போது தொடங்கி இருக்கும் புது ப்ராஜெக்டில் உங்களுடன் சேர்ந்து எங்களுடைய நிறுவனமும் உங்கள் ப்ராஜெக்டில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
“நாங்கள் இதுவரை பொழுதுபோக்குத் துறையில் மட்டும் தான் எங்கள் தொழிலில் முன்னேறி இருக்கிறோம். எனக்கு உங்களைப் போன்று ஆடைகள் உற்பத்தியிலும் நுழைய வேண்டும் என்று ஆசை நீண்ட நாட்களாக உள்ளது…”
“நான் நினைத்தால் உங்களுக்கு எதிராக இதே துறையில் கால் பதிக்க முடியும். அப்படி செய்து உங்களுடன் நான் உறவைக் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.”
“அதனால் தான் இத்தனை வருடம் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஆனால் தற்போது நடந்த உங்கள் ஆடைகள் சம்மந்தமான மிகப்பெரிய ஃபேஷன் ஷோவைப் பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.”
“எப்படி உங்களால் மட்டும் ஆடைகள் உற்பத்தியில் இருந்து கொண்டு… ஃபேஷன் வேர்ல்டிலும் கால் பதித்து அதை இவ்வளவு தூரம் உலகமே உங்களையும், உங்கள் நிறுவனத்தையும் பார்க்க வைக்க முடிந்தது… அதே போல… உங்கள் மாடல்களின் திறமைகளும் உலகத்திற்குத் தெரியப்படுத்தி இருப்பதும் எனக்கு ஆச்சர்யமே…” என்று துர்காவையும் மனதில் வைத்துக் கொண்டு பேசினான் போதி.
அவன் பேசுவதையெல்லாம் இடையில் எந்தக் கேள்வியும் இல்லாமல் பொறுமையாகக் கேட்ட ஆதி. “நீங்கள் என்னுடைய புதிய ப்ராஜெக்டில் இன்வெஸ்ட் செய்ய வந்து இருப்பது எனக்குச் சந்தோஷமே…”
“நான் இன்று மதியம் ஸ்விட்சர்லாந்து செல்கிறேன் பிசினஸ் ட்ரிப்பிற்காக…. உங்களுக்கு ஓகே என்றால் இன்னும் ஒரு மணி நேரத்தில் நம்முடைய பிசினஸ் டீலிங்கை சைன் செய்து நாம் இருவரும் பார்ட்னராகிவிடலாமா?” என்று ஆதி கேட்க…
இதை எதிர் பார்க்காத போதி… “எனக்கு மிகவும் சந்தோஷம் மிஸ்டர் ஆதி. எனக்கு உங்களுடன் பார்ட்டினரில் இணைவது சந்தோஷமே,” என்றான் போதி.
இருவரும் ஒரு மனதாகச் சம்மதம் தெரிவித்து விட்டுத் தங்கள் பார்ட்னர்ஷிப்பிற்கான பொதுவான விஷயங்களையும் இருவரும் எவ்வளவு தொகை இன்வெஸ்ட்மென்டாக தொகையை இதில் முதலீடு செய்ய வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் தெளிவாகப் பேசிவிட்டு இருவரும் பார்ட்னர்ஷிப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
பின் பொதுப்படையாகப் பேசிக்கொண்ட இருவரும் மிஸ்டர் என்று அழைப்பதில் இருந்து தங்கள் பெயரை உரிமையாக அழைத்துக்கொள்ளும் அளவிற்கு நெருங்கி இருந்தனர்.
ஆதி தான் வாட்சைப் பார்த்துவிட்டு “போதி எனக்கு ஒரு முக்கியமானவங்களை வரவேற்க வேண்டி இருக்கு இஃப் யூ டோன்ட் மைண்ட்… நான் கிளம்பட்டுமா… அவர்களைச் சந்தித்த பிறகு தான் நான் என்னுடைய ட்ரிப்பிற்குச் செல்ல முடியும்,” என்றவன்.
பின் போதியிடம் “நான் இன்று சென்றால் வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிடும். நீ இங்கே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… உன்னுடைய ரூமைக் காலி செய்துவிட்டு வந்து என்னுடைய வீட்டில் தங்கிக்கொள். அங்கே எனக்கு வேண்டியவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்,” என்று ஆதி சொல்ல.
போதி அதை மறுப்பது போல வேண்டாம் என்று சொல்ல…. ஆதி கட்டளையாக போதி இடம் தான் வரும் வரைத் தன் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டான். போதியும் ஆதியின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் “சரி எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் அனைத்தையும் முடித்துக்கொண்டு உன் வீட்டிற்கு இன்று இரவு வந்து விடுகிறேன் ஆதி,” என்றான்.
“ஆதி எனக்கு ஒரு சிறிய விஷயம் உன்னிடம் கேட்க வேண்டும் நீ எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டாய் என்றால் நீ ஏன் முகமூடி அணிந்து இருக்கிறாய்?” என்றான்.
ஆதி சிரித்துக் கொண்டே அவன் கேள்விக்குத் தனக்கு நடந்த விபத்தில் ஏற்பட்ட விளைவினால் இப்படி ஆகிவிட்டது என்று சொன்னான். “கூடிய சீக்கிரமே இந்த மாஸ்க்கிற்கு வேலை இல்லாமல் என்னுடைய உண்மையான முகத்தை அனைவர்க்கும் காட்டும் நேரம் வந்து விட்டது. அதை எதிர் பாருங்கள்,” என்றான் ஆதி.
