EPISODE-199
உன்னோட கதையை தொடர்ந்து படிச்சு அதுல இருக்குற நிறை குறைகளை தொடர்ந்து எனக்கு கமெண்ட்ல தெரிவிச்சுட்டு வர எல்லா சகோதரிகளுக்கும் நன்றி அதில் குறிப்பாக கீதா மற்றும் பிரீத்தி இவங்க ரெண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து என்னோட கதையில ஒரு கதாபாத்திரமாகவே மாறி இருக்காங்க இந்த நியூ இயர் அவங்களுக்கு சர்ப்ரைஸா என்னோட கதையில சேர்த்து நியூ இயர் ஸ்பெஷலா இது என்னோட இந்த சின்ன கிஃப்ட் கொடுக்கிறேன்.
❤️
அதேபோல இன்னும் சில தோழிகள் சமீபமா என்னோட கதையை ரெகுலரா படிச்சிட்டு எனக்கு கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க அவங்களுக்கும் பியூச்சர்ல இதே போல கிஃப்ட் கொடுத்து நான் சப்ரைஸ் பண்ண போறேன்
❤️
பிளைட்டில் ஏறி எதிலிருந்து நிலானி கீர்த்திகாவிடமும் திராவிடமும் பேசவே இல்லை.
அவளை விட்டுவிட்டு இவர்கள் மட்டும் கிளம்பி திருச்சிக்கு வந்து விட்டார்கள் என்று அவர்கள் மீது மிகவும் கோபமாக இருந்தால் நிலானி.
ராதா தன்னை திருடன் என்று சொல்லி மாட்டி விட்டார் என்று சந்தோஷ் அவள் மீது கோபமாக விக்கியின் அருகில் இருந்த சீட்டில் போய் அமர்ந்து கொண்டான்.
விக்கியும் எப்படியும் நிலானி இப்போதைக்கு சமாதானம் ஆகப் போவதில்லை.
எங்கள் மூவரும் பேசி சமாதானம் ஆகட்டும் நாம் அதுவரை ரெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று விக்கியும் தன் சீட்டில் சாய்ந்து படுத்து உறங்கி விட்டான்.
ஷிவு கர்ப்பமாக இருப்பதாலும் சரியாக தூங்க தூங்காமல் போனதாலும் அவளுக்கு லேசாக வாந்தியும் மயக்கமும் வர அவளை கவனித்துக் கொண்டு ருபேஷ் அவள் அருகிலேயே அமர்ந்து விட்டான்.
அவன் தன்னை கவனிப்பதை ஒருபுறம் பிடித்திருந்தாலும் அதே ரூபேஷிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஷிவு வேண்டுமென்றே அவன் செய்யும் உதவிகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்வதும் ஒரே பேசும் அவளிடம் கெஞ்சி கெஞ்சி ஒவ்வொரு விஷயமாக அவளுக்கு பார்த்து பார்த்து செய்வதுமாக இருவரும் தங்கள் உலகில் இருந்தனர்.
சிவா ப்ளீஸ் டீ சொல்வது கேளு இந்த ஜூஸியாவது கொஞ்சம் குடி அப்போதான் உனக்கு வாந்தி வராது.
ஏற்கனவே நிறைய வாமிட் பண்ணிட்டேன் உனக்கு ரொம்ப டயர்ட் ஆகிடும் இந்த ஜூஸ் குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும் என்று ஷிவுவிடம் அவன் கெஞ்சிக் கொண்டிருக்க…
எனக்கு எதுவும் வேண்டாம் ரூபேஷ் என்னைய இப்படி தொந்தரவு தொந்தரவு செய்ற நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் என் வேலையெல்லாம் எனக்கு பார்த்துக்க தெரியும் நீ ஒன்னும் புதுசா உன்னோட அக்கறையை எனக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றால் ஷிவு.
ஷிவு ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு நான் பண்ணினது தப்புதான் அதுக்காக இப்படி என்ன ரொம்ப ஒதுக்காதடி.
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அதுக்காக நீ எனக்கு என்ன தண்டனை வேணும் கொடு. ஆனா என் கூட பேசாம மட்டும் இருக்காதடி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படியே நான் எது செஞ்சாலும் வேண்டாம் என்று என்னை ஒதுக்காத ப்ளீஸ் என்றான் ரூபேஷ்.
ரூபேஷ் கெஞ்சுவதை பார்த்த ஷிவுவிற்கு அவன் மேல் பாவமாகத்தான் இருந்தது.
அவனை எப்போதும் அவள் மன்னித்து விட்டால் இருந்தும் அவள் தன்னிடம் கெஞ்சுவது அவளுக்கு பிடித்திருக்க வேண்டுமென்றே அவனை தன் பின்னால் அலைய விட்டால் ஷிவு.
டேய் ஒழுங்கா அமைதியா வாய மூடிட்டு வரக்கூடிய இல்லையா ஏற்கனவே நம்மள பத்தி தெரிஞ்ச தினமும் நிறைய எழுதற ஸ்டோரிய படிச்சிட்டு இருக்குற கீதாவும், ப்ரீத்தியும் உன் மேல கொலை காண்டுல இருக்காங்க.
நீ என்ன என் நம்ப வச்சு ஏமாத்துனதுக்கு உனக்கு பினாயில் பாயசம் கொடுக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க கீதாவும், ப்ரீத்தியும்.
உன்ன மன்னிச்சு நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த அப்பவே உன் கிட்ட துடைப்பத்தையும் கரண்டியையும் கொடுத்து வீட்டு வேலை எல்லாமே உன்னைத்தான் பார்க்க சொல்லி அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஐடியா கொடுத்து தான் உன் கூட வாழ அனுப்பிய வச்சாங்க.
நான்தான் போனப் போகுது பாவமே உன்னை இந்த வேலையும் வாங்க கூடாதுன்னு அவங்க கிட்ட சொல்லி சமாதானம் செய்து வச்சிருக்கேன்.
எப்படி மறுபடியும் வந்து என்னை இம்சை பண்ணிக்கிட்டு இருந்தேனா வீட்டுக்கு போனதும் எல்லா வேலையும் மொத்தமா உன்கிட்ட கொடுத்து உன்னையே செய்யச் சொல்லி விடுவேன் என்றாள் ஷிவு.
அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியான ரூபேஷ், ஷிவு… என்ன சொல்ற வீட்டு வேலையை நான் செய்யணுமா என்று கேட்டான்.
ஆமா நீ தான் செய்யணும் வேற யாரு செய்வாங்க இனிதான என்ன கல்யாணம் பண்ணி உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க நான் என்னால எல்லாம் எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்க முடியாது ஒழுங்கா நாடு வீட்டுக்கு போனதிலிருந்து இனிமேல் வீடு துடைக்கிறது பாத்ரூம் கழுவுறது சமையல் செய்து என் துணி எல்லாம் துவைச்சு காயப்போட்டு அயர்ன் பண்ணி எடுத்து வைக்கிறது இந்த மாதிரி எல்லா வேலையும் நீ தான் செய்யணும் என்றால் ஷிவு.
அவன் சொல்வதை கேட்க கேட்க ரூபேஷிற்கு அதிர்ச்சியாக ஷிவுவையே பார்க்க…
அவன் முகம் போன போக்கை பார்த்து ஷிவு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்ன அப்படி முழிக்கிற செய்வியா செய்ய மாட்டியா என்றால் அவனைப் பார்த்து கேட்டாள்.
எப்படி எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொன்னால் அப்புறம் ஆபீசுக்கு யார் போறது என்றான் ரூபேஷ்.
நாங்கல்லாம் வீட்டு வேலையும் செஞ்சுட்டு ஆபீஸுக்கும் போறதில்லையா அது மாதிரி தான் நீயும் வீட்ல இருக்குற எல்லா வேலையும் முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீஸ் கிளம்பு என்றால் ஷிவு.
ஷிவு சொல்வதற்கு மறுத்து பேச முடியாமல் அவளையே பேய் அறைந்தவன் போல ரூபேஷ் பார்த்து கொண்டு இருக்க …
அவன் முகம் போன போக்கை பார்த்த ஷிவுவினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
எங்கே தான் சிரித்து விட்டால் அவனுக்கு தான் அவனை மன்னித்து விட்ட விஷயம் தெரிந்து விடுமோ என்று அவனை பார்க்காமல் வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் ஷிவு.
அவள் சிரிப்பை அடக்க முடியாமல் ரூபேஷை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள..
ஆனால் ரூபேஷ்சோ அவள் சொன்னதைக் கேட்டு தான் அதிர்ச்சியானதை பார்த்து தன்மீது கோபம் கொண்டு ஷிவு முகத்தை திருப்பிக் கொண்டால் என்று நினைத்து விட்டான்.
உடனே சிவாவின் கையைப் பிடித்துக் கொண்டு சிவா கோச்சுக்காதடி நீ சொன்னா எல்லா வேலையும் நான் செய்கிறேன். எனக்கு நீ என்கூட பேசினா மட்டும் போதும் வீடு தொடைக்கணுமா? தொடச்சு தரேன் . வீடு பெருக்கணுமா? பெருக்கி தறேன்.
பாத்திரம் எல்லாம் கழுவி தரணுமா? கழுவி தரேன்.
உன் துணிமணி எல்லாம் துவைத்து தரணுமா அதையும் செய்கிறேன் ஆனால் என் கூட மட்டும் பேசாம இருக்காது என்ன ஒதுக்கி மட்டும் வச்சிராத ஷிவு என்னால அதை தாங்கவே முடியாது என்றான் ரூபஸ் மிகவும் வருந்திய படி.
அவன் மிகவும் கெஞ்சுவதை பார்த்து மனம் இறங்கிய ஷிவு. அவனைப் பார்த்து அப்போ நான் சொல்ற எல்லா வேலையும் வீட்டுக்கு போனதும் நீ மறக்காமல் செஞ்சு கொடுக்கணும் செய்வே தானே என்றால் ஷிவு.
ஷிவு சொன்னதை கேட்டதும் வேகமாக செய்து தருகிறேன் என்று தலையை ஆட்டிய ரூபேஷ் நீ என்ன சொன்னாலும் நான் செஞ்சு தரேன் என்றான்.
சரி நான் நீ என்ன பண்ற என்ன பார்த்துட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கிறேன் என்றால் ஷிவு.
சரி என்றவன் நான்தான் நீ சொன்னதுக்கெல்லாம் இப்போ சரின்னு சொல்லிட்டேனே ப்ளீஸ் ஷிவு இந்த ஜூஸ் மட்டும் குடியேன் என்று அவள் முன்பு ஜூசை நீட்ட..
ஷிவு அவன் முகத்தை பார்க்க… ரூபேஷ் ப்ளீஸ்… என்று பாவமாக கெஞ்சவும்.சரி கொடு உன்ன பார்த்தாலும் பாவமா தான் இருக்கு என்று சொன்னவள் அவன் கையில் இருந்து ஜூசை வாங்கி குடிக்க ஆரம்பித்தால்.
தான் கொடுத்த ஜூசை ஷிவு வாங்கி குடித்ததும் ரூபேஷின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அவனிடம் வாங்கி ஜூசை குடித்த ஷிவு முதல்ல வீட்டுக்கு போனதும் கீத்துவதற்கும் பிரீத்திக்கும் அவங்க சொன்ன மாதிரியே நான் ரூபேஷை ஒரு நாள் ஆச்சும் வேலை வாங்க போறேன்னு சொல்லணும்.
அதுக்கு அவனும் சம்மதிச்சுட்டாங்கிற சந்தோஷமான விஷயத்தை அவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கணும் என்று நினைத்தவாறு ஜூஸ் முழுவதையும் குடித்துவிட்டு டம்ளரைச் ரூபேஷிடம் நீட்ட..
அவள் நீட்டிய டம்பளரை பவ்யமாக வாங்கி வைத்தவன். ஷிவுவை பார்த்து சிரிக்க…
சும்மா என்கிட்ட பல்லை காட்டாத கொஞ்ச நேரம் அமைதியா இரு எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி சீட்டில் சாய்ந்து கண்கள் மூடி தூங்க ஆரம்பித்தால் ஷிவு.
கோபம் தணிந்து தன் மனைவி தான் கொடுத்த ஜூசை குடித்து விட்டால் என்ற சந்தோஷத்தில் அவள் அருகில் அமர்ந்து ரூபேஷ் அவள் தூங்குவதை ரசிக்க ஆரம்பித்தான்.
❤️
ஆதிக்கும் துர்காவும் முதலில் சென்னை வந்துவிட நேராக தன் வீட்டிற்கு சென்றவன் தன் அப்பாவிடம் செண்பகத்தின் மகளைப் பற்றிய விஷயத்தை கூறினான்.
அவன் சொன்ன செய்தி கேட்டு வெங்கடாசலம் அதிர்ந்து போனார். என்னப்பா சொல்ற நீ சொல்றதெல்லாம் உண்மை தானா என்னால நம்பவே முடியலையே இது செண்பகத்துக்கிட்ட சொன்னா அவ எப்படி எடுத்துக்குவான்னு எனக்கு தெரியலையே என்று செண்பகத்தை நினைத்து நினைத்து வருத்தப்பட்டார் வெங்கடாசலம்.
என்னப்பா பண்றது எப்படி இருந்தாலும் அத்தைக்கு இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒரு நாள் உண்மை தெரிஞ்சு தானே ஆகணும் விஷயம் தெரிஞ்ச பிறகு அவங்க கிட்ட நம்ம அத்தையோட பொண்ணு யாருன்னு கண்டுபிடித்ததை அவங்க கிட்ட இருந்து மறைக்கிறது சரியில்லையே என்றான் ஆதி.
நீ சொல்றதும் சரிதான் ஆதி அப்போ நம்ம செண்பகத்தை இப்பவே அடிச்சு விஷயத்தை சொல்லிடலாமா என்றார் வெங்கடாசலம்.
இல்லப்பா வேண்டாம் நம்ம முதல்ல நம்ம சிவகாமி அத்தை கிட்ட நான் போய் அவங்க வீட்ல தான் செண்பகம் அத்தை ஓட பொண்ணு இருக்கிறதா சொல்லி அவங்கள முதல்ல கூட்டிட்டு போவோம் அப்பத்தான் வேதாச்சலம் அங்கிள் கிட்ட நம்மால் பேச முடியும்.
நம்ம சொல்லி வேதாச்சலம் அங்கிள் நம்ப மறுத்தால் கூட சிவகாமி அத்தையை வச்சு அவர்கிட்ட சொல்ல சொல்லுவோம் அப்போதுதான் அவரும் நாம சொல்றத ஒத்துக்குவாரு என்றான் ஆதி.
சரிப்பா நீ சொல்றதும் சரிதான் என்றவர் தன் அறையை விட்டு வெளியே வந்து வீட்டில் உள்ளவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு நம்ம எல்லாம் இப்போ முக்கியமான ஒரு இடத்துக்கு போக போறோம் அங்கு போய் யார் என்ன பேசினாலும் என்ன நடந்துக்கிட்டாலும் நீங்க யாருமே எதுவுமே செய்யக்கூடாது அமைதியா அங்க நடக்கிறது மட்டும் வேடிக்கை பாருங்க போதும் என்றார் வெங்கடாசலம்.
அவர் திடீரென்று இப்படி தங்களை அழைத்து விஷயம் எதுவும் சொல்லாமல் எங்கோ அழைத்துச் செல்வதை பார்த்த மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவருடன் புறப்பட்டனர்.
நான் ஆதிக்கும், துர்காவும், செண்பகம், விசாலாட்சி நால்வரும் ஒரு காரிலும்.
கனகா துரை வெங்கடாசலம் மற்றொரு காரிலும் அவர்களை பின்தொடர்ந்து விக்கியின் வீட்டிற்கு சிவகாமியை காண சென்றனர்.
விக்கியின் வீட்டிற்கு சென்றவர்கள் உள்ளே சிவகாமியை காணச் செல்ல….
சிவகாமி வீட்டில் இல்லை ஆதி வீட்டில் இருப்பவர்களை விசாரிக்க சிவகாமி அதிகாலையே கிளம்பி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்று விட்டார் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று சொன்னார்கள்.
எப்படியும் வேதாச்சலம் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு தான் சிவகாமி சென்றிருக்க வேண்டும் அங்கே சென்று அவரை பார்க்கலாம் என்று நினைத்து விட்டு கோவிலுக்கு செல்ல சிவகாமி அங்கேயும் இல்லை.
அந்தக் கோயிலின் ஐயரை பார்த்து சிவகாமியை பற்றி ஆதி விசாரிக்க…
அவர் காலையில் நேரமே கோவிலுக்கு வந்ததாகவும் நீண்ட நேரம் கோவிலில் அமர்ந்து பிரார்த்தனை செய்தவர் தனக்கு போன் வரவும் பேசிவிட்டு என்னிடம் வந்து ரொம்ப நாள் கழிச்சு என் புருஷன் என்கிட்ட பேசணும்னு சொல்லி இன்னைக்கு தான் போன் பண்ணி இருக்காரு நான் போய் என் புருஷனை பார்த்துட்டு வரேன் என்று என்கிட்ட சந்தோஷமா சொல்லிட்டு அவங்க வீட்டுக்குத் தான் போனாங்க என்றார் ஐயர்.
அவர் சொன்னதை கேட்டதும் வெங்கடாசலத்திடம் வந்த ஆதி அப்பா நமக்கு வேலை சொல்லும் அடிச்சு சிவகாமி அத்தையும் வேதாச்சலம் மாமாவை பார்க்க வீட்டுக்குத்தான் போயிருக்காங்க வாங்க நம்ம அங்கேயே போகலாம் என்றவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வேதாச்சலம் வீட்டிற்கு சென்றான்.
அவர்கள் கார் வேதாச்சலத்தின் வீட்டிற்கு முன்பு வந்து நிற்கவும் சரியாக போதியும் தன்னுடன் சில ஆட்களை அழைத்து சங்கவியின் வீட்டின் முன்பு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
போதியை அங்கு இந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஆதி அதுவும் தன்னுடன் சில பாடி கார்ட்ஸை அழைத்து வந்தவனை பார்த்து.
என்னாச்சு போதி ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்க உனக்கும் வேதாச்சலம் மாமாவும் வீட்டிற்கும் என்ன சம்பந்தம் நீ வந்து இருக்க என்று கேட்டான் ஆதி.
என்னோட காலேஜ்ல நடந்த ஃபங்சன்ல என் கூட ஒரு பொண்ண பார்த்தியே ஞாபகம் இருக்கா ஆதிக்கின் கேட்டான் போதி.
சற்று யோசிக்க ஆதி ஓ நீயும் அந்த பொண்ணு லவ் பண்றீங்க தானே நீ அந்த பொண்ணு கிட்ட பழகுவதை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோணுச்சு அந்த பொண்ண பத்தி கேட்கிறார் என்றான் ஆதி.
ஆமாம் அவளே தான் சங்கவியின் வீட்ல தான் வேலைக்கு இருந்தா… ஏதோ ஒரு விஷயத்தை சொல்லி மிரட்டி என் கூட பேச விடாம அவளை வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அனுப்பாம அந்த சங்கவி வீட்டுக்குள்ளே பூட்டி வச்சிருக்கா..
நேர்ல வந்து அவளை அழைச்சிட்டு போன போது என்கிட்ட துப்பாக்கிய காட்டி மிரட்டி அவளை வெளியே விடாம வீட்டுக்குள்ள வச்சு பூட்டி வச்சுட்டா அந்த சங்கவி என்று சொன்னான் போதி.
என்ன சொல்ற போதி சங்கவி இந்த அளவுக்கு நடந்துக்கிறான்னா அந்த பொண்ணு யாரு? அவளைப் பற்றிய ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சங்கவிக்கு அப்போ தெரிஞ்சிருக்குன்னு தானே அர்த்தம் அதனால்தான் அவளை எங்கேயும் வெளியே விடாம அடிச்சு வச்சிருக்காளா என்று கேட்டான் ஆதி.
ஆமா ஆதி அவளோட அம்மாவ பத்தி விபரம் சங்கவிக்கு தெரியும்னு சொல்லி அதை காரணம் காட்டித்தான் இங்க அடைச்சு வச்சிருக்கா என்று சொன்னன் போதி.
ஆமா நீங்க எல்லாரும் ஏன் சங்கவி வீட்டுக்கு வந்து இருக்கீங்க என்று கேட்டான் போதி.
போதி நான் ஒரு பெண்ணை பற்றி விசாரிக்க எனக்கு உதவி வேணும் உன்கிட்ட கேட்டிருந்தேனே அந்த பொண்ணு இங்கதான் இருக்கா.
அவளை மீட்கறதுக்காக தான் நாங்க எல்லாரும் ஒண்ணா வந்து இருக்கோம் இவங்க தான் என்னோட அத்தை இவங்க பொண்ணு தான் இந்த வீட்ல இருக்காங்க என்று துர்கா சொல்ல…
இந்த வீட்ல நீ தேடிக்கிட்டு இருக்குற பொண்ணு இருக்காளா அதுவும் ஆதி கூட அத்த பொண்ணா என்றவன்.
அந்த பொண்ணு பேரு என்ன என்று கேட்டான் துர்காவிடம்.
அவ பேரு மாதவி போதி என்றாள் துர்கா துர்கா.
அப்போ என்னோட மாதவி தான் இவங்களோட பொண்ணா என்றான் போதி.
என்ன சொல்ற பகுதி உன்னோட மாதவியா எனக்கு எதுவும் புரியல என்றால் துர்கா.
சங்கவி என்னோட காதலிய இங்கே அடச்சி வச்சிருக்கான்னு சொன்னேனே அவதான் மாதவி அதாவது நீங்க உங்க காணாம போன அத்தை பொண்ணு தேடி இங்க வந்து இருக்கீங்களே அந்த பொண்ணு மாதிரி தான் என்னோட காதலி என்னோட காதலி தான் இவங்களோட பொண்ணு என்றான் போதி.
பொறி சொன்னதை கேட்ட அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியானது அப்போ சங்கவிக்கு ஏற்கனவே விஷயம் எல்லாம் தெரிஞ்சிருக்கு அதனால்தான் அவர் மாதவிய அடச்சி வெச்சி இருக்கா என்று சொன்ன வெங்கடாச்சலம் ஆதி சீக்கிரம் வா அந்த சங்கவி மாதவியை எதுவும் செய்யறதுக்குள்ள அவகிட்ட இருந்து மாதவியை காப்பாத்தணும் என்று சொல்லிக்கொண்டு அவர் உள்ளே செல்ல போக…
அப்பா…அவசரப்படாதீங்க நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க போதி ஏற்கனவே சங்கவி கையில துப்பாக்கி வச்சிருக்கான்னு சொன்னான்.
அவ கோபத்துல என்ன செய்வான்னு அவளுக்கே தெரியாது நானும் போதியும் இங்க இருக்க காட்ஸ்க்கு அழைச்சிட்டு முதல்ல உள்ள போறோம்.
நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் உள்ளே வாங்க என்றவன் திரும்பி துர்காவைப் பார்த்து நீ விக்கிக்கு போன் பண்ணி அவன் சென்னை வந்ததும் நேரா அவனை முதல்ல இங்கே வர சொல்லு என்றவன் போதியோடு சங்கவியின் வீட்டிற்குள் சென்றான்.
❤️

1 comment
Ayooo sister vera level intha sangavi evlo tha pattalum thirunthamata🤔😑😒😐