Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 221

உன் ரகசிய ரசிகை நான் 221

by Layas Tamil Novel
135 views

Epi 221

போதியையும் மாதவியையும் தள்ளிக்கொண்டு அவர்கள் அறைக்குள் வந்த சங்கவி கட்டிலில் போய் அமர்ந்தவள் அவர்கள் இருவரையும் பார்க்க..

சங்கவி எப்படி திடீரென்று தங்கள் அறைக்குள் வந்து அமரவும் புரியாமல் அவளை பார்த்த இருவரும் குழப்பமாக சங்கவியையே பார்க்க…

என்ன ரெண்டு பேரும் அப்படி பாக்குறீங்க இவ எதுக்கு இப்போ இங்கே வந்து இருக்கான்னு தானே யோசிக்கிறீங்க என்றால் சங்கவி.

போதி ஆமாம் என்பது போல தலையாட்ட…

அவன் அருகில் நின்றிருந்த மாதவியை சங்கவி பார்க்க அவள் பார்வையிலே பயந்த மாதவி போதியுடன் நெருங்கி நின்றாள்.

சங்கவியை கண்டு மாதவி பயப்படுவதை கவனித்த போதி இப்போ உனக்கு என்ன வேணும் எதுக்காக இங்கே வந்து இருக்க என்று கேட்டான்.

எனக்கு இவளோட உயிர் வேணும் என்றால் சங்கவி.

சங்கவி இப்படிச் சொன்னதும் அதைக் கேட்ட மாதவிக்கு மேலும் பயம் அதிகரிக்க அன்று அவள் வீட்டில் வைத்து தன்னை கொள்ள நினைத்த சங்கவி மறுபடியும் தன்னை கொள்வதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறார்களோ என்று மாதவி போதியின் பின்னால் சென்று நின்று கொள்ள…

உன்னை பார்த்து பயப்படும் மாதிரியே கண்டு ஏளனமாக சிரித்தவாறு சங்கவி கட்டிலில் இருந்து எழுந்தவள் தன் சேலைக்குள் கையை விட்டு எதையோ எடுக்கப் போக…

அன்றுபோல தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதற்காகத்தான் சங்கவி இங்கே வந்திருக்கிறாள்.

அந்த துப்பாக்கி தான் சேலையில் மறைத்து வைத்திருப்பாள் போல அதை எடுத்துக் கொண்டு வருகிறாளே என்று பயந்தபடி மாதவி போதியை இறுக்கமாக பிடித்து கொள்ள…

போதியும் மாதவி பயப்படுவதில் சற்று கவலை அடைந்தவன் சங்கவி என்னதான் செய்கிறாள் பார்த்துவிடலாம் என்று தைரியமாக அவள் எதிரே நின்று நிமித்திக்கொண்டு வந்து நிற்க…

என்ன போதி உன்னோட புது பொண்டாட்டியோட உயிர் வேணும்னு சொன்னதும் அவளை காப்பாத்த தைரியமா முன்னாடி வந்து நிக்கிறியா? என்று சிரித்த சங்கவி.

பயப்படாதே அவளை எதுவும் செய்ய மாட்டேன் என்றவள் தன் சேலைக்குள் இருந்து கையை வெளியே எடுக்க அதை பார்த்த மாதவி சங்கவி துப்பாக்கி தான் வெளியே எடுக்கிறாள் என்று பயந்து அலறினாள்.

மாதவி அலறியதை பார்த்த சங்கவி அவளைப் பார்த்து சிரித்து பயப்படாதே மாதவி, நீ நினைக்கிற மாதிரி நான் துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு வரல என்று அவள் மனதில் இருப்பதை அப்படியே படிப்பது போல சொன்ன சங்கவி

தன் சேலைக்குள் இருந்து ஒரு டாக்குமெண்டை வெளியே எடுத்து அதை போதியிடம் நீட்டியவள்.

நான் உன்கிட்ட கேட்டது இவளோட உயிரை இல்லை இவளோட உயில்.

டங்க் ஸ்லிப் ஆகி உயிலுக்கு பதிலா உயிர்ன்னு வந்துருச்சு என்று சொல்லி நக்கலாக சிரித்த சங்கவி.

இத்தனை வருஷமா நான் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கின சொத்தை எல்லாம் நேத்து வந்த இவ என்கிட்ட இருந்து அபகரிச்சிட்டு போலாம்னு நினைச்சுட்டு இருக்காளா என்று மாதவியை முறைத்தபடி கூறிய சங்கவி.

நான் இதுவரைக்கும் சேர்த்து வைத்த சொத்துக்களையும், இவ வராம இருந்திருந்தா என்ன என்ன சொத்துக்கள் எல்லாம் நான் அனுபவித்து இருப்பேனோ அதை எல்லாம் இந்த டாக்குமெண்ட்ல ஃபில் பண்ணி இருக்கேன்.

படிச்சு பார்த்து அவளை சைன் போடச் சொல்லு என்றால் சங்கவி.

அவள் சொன்னதை கேட்டு போதி சங்கவியிடம் நீ சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்குறதுல எந்த தப்பும் இல்லை அதை நானே கொடுக்கச் சொல்லி இருப்பேன் ஆனா நியாயமா மாதவிக்கு சேர வேண்டிய சொத்துக்களையும் நீயே எப்படி அனுபவிக்கணும்னு நினைப்ப என்றான் போதி.

இவள் மட்டும் வராமல் இருந்திருந்தால் எனக்கு இப்படி இவகிட்ட கேட்டுட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இருந்திருக்காதே இது எல்லாம் நான் அனுபவிக்க வேண்டிய சொத்துக்கள் ஒழுங்கு மரியாதையா இவள இதுல கையெழுத்து போட சொல்லு என்று சொன்ன சங்கவி மாதவி பக்கம் திரும்பி என்னடி பாத்துட்டு நின்னுட்டு இருக்க வந்து கையெழுத்து போடு என்று மாதவியை மிரட்டினாள்.

தன் முன்னாலேயே மாதவியை மிரட்டிய சங்கவியை பார்த்து உனக்கு எவ்வளவு தைரியமாக இருந்தால் என் முன்னாடியே என் மாதவியை மிரட்டுவ என்றவன்.

தன் கையில் இருந்த டாக்குமெண்ட்டை சங்கவியின் மீது வீசி எறிந்து மாதவி எதிலுமே கையெழுத்து போட மாட்டாள் நீ ஆகுறத பார்த்துக்க என்றான் போதி.

தன் முகத்தின் மீது டாக்குமென்டை வீசவும் ஆத்திரம் அடைந்த சங்கவி மாதவியையும் போதியையும் முறைத்தபடி நின்று இருக்க

கல்யாண மண்டபத்துக்குள் தங்கள் சொந்தங்கள் எல்லாம் வெளியே கூடி இருக்க சங்கவி எவ்வளவு தைரியமாக இந்த அறைக்குள் வந்து தங்களை மிரட்டி டாக்குமெண்டில் கையெழுத்து கேட்பாள் என்று கோபமான போதி.

மாதவியின் முன் சென்று அவளை மறைத்தவாறு நின்றவன் மாதவி எந்த டாக்குமெண்ட்லயும் சைன் போட மாட்டா என்றான்.

அப்போ நீ சைன் போட மாட்ட அப்படித்தானே என்றால் மாதவியை பார்த்து…. மாதவியும் பயந்தவாறே முடியாது என்று தலையை இருபுறமும் ஆட்ட..

சரி உன்னை இப்படி எல்லாம் கேட்டா நீ கையெழுத்து போட மாட்ட… என்றவள்.

தன் மொபைலை எடுத்து அதை ஆன் செய்து அவர்கள் இருவர் முன்பும் நீட்ட…

சங்கவி காட்டிய மொபைலை பார்த்த இருவரும் அப்படியே அதிர்ந்து போய் நின்றனர்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சியாக நிற்பதை பார்த்து சிரித்த சங்கவி என்ன அதிர்ச்சி ஆயிட்டீங்க…. நியாயமா இவன் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே நான் இதை செய்திருக்கணும்.

நான் போனா போகட்டுமே சந்தோஷமா இருக்கட்டும் என்று விட்டு வெச்சா ரொம்ப ஓவராத்தான் போறீங்க… என்று போதியையும் மாதவியையும் பார்த்து பேசியவள்.

இங்க பாரு இத்தனை வருஷமா நீ வளர்ந்த ஆசிரமத்துல இருக்கவங்க எல்லாரும் ஒரே நிமிஷத்துல கூண்டோட கைலாசம் போய்டுவாங்க.

நீ இந்த பத்திரத்தில் கையெழுத்து போடல நான் இங்கிருந்து ஒரே ஒரு குரல் கொடுத்தா போதும் அந்த மொத்த ஆசிரமம் வெடிச்சு தூள் தூள் ஆகிடும் என்றால் சங்கவி.

அவள் சொன்னதை கேட்டு பதறிய மாதவி போதியின் பின்னால் நின்று இருந்தவள் வேகமாக சங்கவியின் முன்பு வந்து ஐயோ…. அக்கா அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.

அவர்கள் எல்லாம் ரொம்ப பாவம் அவங்களுக்கு எதுவும் செய்து விடாதீர்கள் என்று மாதவி சங்கவியின் முன்பு கையெடுத்து கும்பிட்டு கெஞ்ச…

அக்காவா யாருக்கு யாருடைய அக்கா நீயும் நானும் என்ன ஒன்னா பிறந்தவங்களா அக்கா கிக்கான்னு சொன்ன பல்ல பேத்திடுவேன் என்று மாதவியை மிரட்டிய சங்கவி.

இப்படி எதுவும் தெரியாதவள் போல வந்து கெஞ்சுற வேலையெல்லாம் வேற யாராவது கிட்ட வச்சுக்க ஒழுங்கா இந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ணிட்டா அவங்களுக்கு நல்லது.

அப்படி இல்லன்னா அடுத்த நிமிஷம் அந்த ஆசிரமம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று சங்கவி சொல்ல…

ஐயோ அக்கா வேண்டாம் எதுவும் செய்து விடாதீங்க நீங்க எங்க கையெழுத்து போட சொல்றீங்களோ அங்கே நான் கையெழுத்து போடுறேன் என்று சொன்ன மாதவி தரையில் சிதறி கிடந்த டாக்குமெண்ட்களை எடுக்கக் குனிய…

மாதவியை அந்த டாக்குமெண்ட்களை எல்லாம் எடுக்க விடாமல் தடுத்த போதி அவள் கையை பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்தவன்.

நீ கேக்குற மாதிரி எல்லா டாக்குமெண்ட்லயும் மாதவி சைன் பண்ணிட்டா உனக்கு அவளோட சொத்து இல்லாம எப்படி வரும்.

மாதவி மட்டும் சைன் பண்ணிட்டா போதுமா என்னோட அத்தை மாமாவும் சைன் பண்ண வேண்டாமா?

அவங்க கையெழுத்து இல்லாம நீ எப்படி இவ்வளவு சொத்துக்களையும் அனுபவிக்க முடியும். கண்டிப்பா இந்த விஷயம் அவர்களுக்கு தெரிஞ்சா அவங்க ரெண்டு பேரும் கையெழுத்து போடவே மாட்டாங்க என்றான் போதி.

போதி சொன்னதைக் கேட்டு பலமாக சிரித்த சங்கவி.

நீ என்ன என்னை அவ்வளவு லேசுல நினைச்சிட்டியா போதி எனக்கு இந்த அறிவு கூடவா இல்லாம போயிடும் உங்க இத்தனை பேரையும் என் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கணும்னு நினைக்கிறவ நான் அப்படி இருக்கும் போது எதையெதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியாதா என்றவள்.

தன் காலுக்கு கீழே இருந்த ஒரு டாக்குமெண்ட்டை குனிந்து எடுத்து அதை போதியின் முகத்திற்கு நேராக நீட்டி…

மாதவியைக் காட்டி இவளோட அம்மா அப்பா கிட்ட நேத்தே நான் சைன் வாங்கிட்டேன் என்றால் சங்கவி.

அவள் சொன்னதை நம்ப முடியாமல் அவள் நீட்டிய டாக்குமெண்ட்டை வாங்கிப் பார்த்த போதி அதில் வேதாச்சலமும் சிவகாமியும் கூடவே விக்கியும் கையெழுத்து போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனான்.

போதியைப் போலத்தான் மாதவியும் அந்த டாக்குமெண்டில் இருந்த சைனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள்.

ஏய் சும்மா சும்மா ஷாக் ஆகி என்னை கடுப்பேத்தாதீங்க இவங்க மூணு பேரும் எப்படி கையெழுத்து போட்டாங்கன்னு தானே பாக்குறீங்க.

எப்படி மாதவியோட செண்டிமெண்ட் காட்டி அவளை இப்போ கையெழுத்து போட சொல்லி மிரட்டினேனோ அதேபோலத்தான் இவங்க மூணு பேருக்கும் உண்டான சென்டிமென்ட் காட்டி அவங்க மூணு பெருகிட்டயும் கையெழுத்து வாங்கிகிட்டேன் என்றால் சங்கவி.

அவளை புரியாமல் மாதவியும் போதியும் பார்க்க…

என்ன புரியலையா? என்றாள்.

ஆமாம் என்று இருவரும் தலையாட்ட…

மாதவி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன்னோட அண்ணி நிலானி இருக்காளே அவ இப்போ பிரக்னண்டா இருக்கா அது உனக்கு தெரியுமா? என்று கேட்டாள் சங்கவி.

மாதவி பயந்தபடியே இல்லை என்று தலையாட்ட..

அதுதான் விதின்னு சொல்றது.

உன்னோட கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்றதுக்காக நிலானி நேத்து ஷாப்பிங் போயிருந்தாளே அது ஞாபகம் இருக்கா என்று கேட்டாள் சங்கவி.

ஆம் என்று மாதவி சொல்ல..

இந்த மாதிரி சமயத்துல அவ தனியா ஷாப்பிங் வரலாமா அவ வந்தது கூட பரவாயில்லை என் கண்ணுல பட்டுட்டாளே..

உனக்கு தெரியுமா நிலானி கர்ப்பமா இருக்கிறது முதல்ல தெரிஞ்சுக்கிட்டது நான் தான்.

அவ வயித்துல கரு வளர்வது அவளுக்கு கூட தெரியாது. நேத்து ஷாப்பிங் அவ போயிருந்த அதே இடத்துக்குத்தான் நானும் போயிருந்தேன் வேற ஒரு விஷயமா.

ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தவ திடீர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா…

அங்கே ஒரே கூட்டமா கூடிடுச்சு என்னன்னு போய் பார்த்த போது தான் அங்கு நிலானி விழுந்து கிடந்தா. சரி நம்மளுக்கு தெரிஞ்சவளா போயிட்டாளே அப்படியே விட்டுட்டு போறதுக்கு மனசு இல்லையேன்னு அவளை காரில் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போனேன்.

அங்கே ஹாஸ்பிடல்ல அவளை வச்சு செக் பண்ணி பார்த்த போது அவ கர்ப்பமா இருக்குற விஷயமே எனக்கு தெரிய வந்துச்சு.

டாக்டர் வந்து நிலானி கர்ப்பமா இருக்கான்னு சொன்னாரு அப்போ கூட நிலானி மயக்கமா தான் இருந்தா அப்பத்தான் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு உடனே டாக்டர் கிட்ட…

அவ கர்ப்பமாய் இருக்கிற விஷயத்தை அவளுக்கு சொல்ல வேண்டாம் நான் அதை சர்ப்ரைஸா சொல்லிக்கிறேன்னு சொல்லி அவளை அங்கிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வேறொரு இடத்துக்கு அவளை கூட்டிட்டு போய் அடைச்சு வச்சுட்டேன்.

ஷாப்பிங் போன மருமகளை ரொம்ப நேரமா காணோமேன்னு சிவகாமி அவளுக்கு போன் பண்ணாங்க அந்த போன் தான் என்கிட்ட இருந்துச்சு நான்தான் போன் அட்டென்ட் பண்ணி அவங்க மூணு பேரையும் நான் சொல்ற இடத்துக்கு உடனே வரச் சொன்னேன்.

அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் என்ன சரிதானே என்று மாதவியை பார்த்து கேட்க…

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

உங்களை கேட்டா நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.. என்றவள்.

நான் என் மேல கொலை காண்டுல இருக்க ரீடர்ஸ் கிட்டயே கேக்குறேன் என்றவள்

ரீடர்ஸ் பக்கம் திரும்பி ஹலோ ரீடர்ஸ் நீங்க சொல்லுங்க அவங்க மூணு பேரையும் வரவழைத்ததுக்கப்புறம் நான் என்ன செய்திருப்பேன் என்று உங்களுக்கு நல்லா தெரியும்.

எப்படி அவங்க கிட்ட நான் இந்த டாக்குமெண்ட்ல சைன் வாங்கி இருப்பேன்னு உங்களால கணிக்க முடியுது தானே.

அப்படி சரியா கணிச்சு இருந்தீங்கன்னா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..

நான் என்ன சொல்லி அவங்க மூணு பேர் கிட்டயும் கையெழுத்து வாங்கி இருப்பேன்னு…

எனக்கு பினாயில் பாயசம் கொடுக்கறவங்க… என்ன பாம் வச்சு கொல்றேன்னு சொன்னவங்க…. என்ன துப்பாக்கியால சுடுறேன்னு சொன்னவங்க… எனக்கு ஒரு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கணும்னு சொன்னவங்க… இப்படி யாரா இருந்தாலும் என்ன வெறுக்கிறவங்களா இருந்தாலும் பயப்படாம கமெண்ட் பண்ணுங்க என்றால் சங்கவி.

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured