Episode 2
பூஜாவும், நிவியும் காலேஜிற்குள் சென்று கொண்டு இருக்க… அவர்கள் இருவரையும் சந்தோசும், குமாரும் வள்ளி மறித்தனர்.
அவர்கள் இருவரை கண்டதும் அப்படியே சட்டென்று நின்றாள் பூஜா, ஆனால் அவர்கள் வருவதை கவனிக்காமல் நிவி குமார் மீது மோதிவிட்டால்.
அதை இருவருமே சற்றும் எதிர்பார்க்க வில்லை.
அவர்கள் இருவரையும் ப்பர்த்துவிட்டு சந்தோஷ் திரும்பி பூஜாவை பார்க்க…
அவளோ அவன்னிடம் இருந்து இரண்டடி தள்ளி நின்றாள்.
” பார்ட்டி ரொம்பபா உஷாரா தான் இருக்கும் போல… ச்சே.. ஜஸ்ட் மிஸ் ” என்று மனதிற்குள் நினைத்தவள் தன் கையை மடக்கி காற்றில் குத்தினான்.
சந்தோஷை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு திரும்பி நிவியையும், குமரேய்யும் பார்த்தால் பூஜா.
தன் மேல் மோதியவளை கீழே விழாமல் குமார் பிடித்துக்கொண்டான். அவனையே இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்த நிவி அவனிடம் இருந்து பிரிந்து செல்லாமல் அப்படியே நிற்க…
அப்போது சட்டென்று நிவியின் கையை பிப்டித்து தன் அருகில் இழுத்து நிற்க வைத்த பூஜா. சந்தோஷை பார்த்து ” ஹலோ இப்படி தான் திடீர்னு வந்து மேல மோதுற மாறி நிப்பிங்களா? ” என்றாள் பூஜா.
” எங்கே மோதுறது.. நீதான் அதுக்குள்ள உஷாரா நின்னுட்டியே…” என்றான் சந்தோஷ்.
” என்ன!!… ” என்று அவனை முறைத்தப்படி அவனிடம் வந்தவள்.
” என்ன.. சொன்ன.. என்ன சொன்ன.. “” என்றாள் கோபமாக.
” உனக்கு என்ன கேட்டுச்சோ அதன் சொன்னேன்.” என்றான் சந்தோஷ்.
” டேய் யாருடா நீ… ஒரு பொண்ணுகிட்டே வந்து இப்படியா பேசுவ.. ” என்றாள் பூஜா.
அவளை ஒருமுறை கீழிருந்து மேலாக பார்த்தவன் ” நீ பொண்ணா? ” என்றான் சந்தோஷ்.
அவன் பேசியதில் ஏற்கனவே கோபமாக இஇருந்த பூஜாவிற்கு மேலும் கோபம் அதிகம் ஆனது.
” ஏய்… என்ன ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க… வழியை விடு ” என்று சந்தோஷற்கும், குமாருக்கும் இடையில் புகுந்து நிவியை இழுத்துக்கொண்டு போக…
” என்ன டா இவ.. நீ இந்த காலேஜ் ஓட டானு… உன்னை போய் மரியாதையை இல்லாம வாடா போடான்னு பேசிட்டு போறா… நீ அவளை என்னன்னு கேட்க மாட்டியா? ” என்று குமார் சந்தோஷய் உசுப்பேற்றினான்.
” அதானே… இருடா இவளை இப்படியே விட்டா நல்லா இருக்காது. இவளை பார்த்தா இன்னிக்கு தான் புதுசா காலேஜ் ஜாயின் பண்ணி இருப்பா போல இருக்கு.. அதன் என்னை பத்தி ஏதும் தெரியாம பேசிட்டு போய்ட்டா. வா போய் அவளை என்னனு கேட்டுட்டு வந்துடலாம் ” என்று குமரை அழைத்துக்கொண்டு ஓடியவன் பூஜா, நிவிக்கு எதிரே மூச்சு வாங்க வந்து நின்றான்.
அவனை பார்த்து எரிச்சல் ஆன பூஜா. ” டேய் உனக்கு இப்போ என்ன டா வேணும். சும்மா வந்து குறுக்க நின்னுட்டு இருக்க.. “” என்றாள் பூஜா எரிச்சலாக.
” ஏய் நான் யாரு தெரியுமா? வந்ததுல இருந்து என்னை டா போட்டு கூப்டுட்டு இருக்க… சீனியர்ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம.. ” என்றான் சந்தோஷ்.
” சீனியர் ஆஹ் இருந்தா டா.. போடக்கூடாதா? அப்படி தான் டா.. போட்டு கூப்பிடுவேன். என்ன டா பண்ணுவ… ” என்றாள் பூஜா திமிராக.
உடனே சந்தோஷ் அருகில் நின்று இருந்த குமார் ” இங்க பாரு மா.. னே பாட்டுக்கு உன் வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்க… இவன் வெறும் சீனியர் கிடையாதுமா… இந்த காலேஜ் ஓட டான் தெரியுமா? ” என்று தன் நண்பனை பற்றி பெருமையாக கூறினான் குமார்.
தக்க சமயத்தில் வந்து தன்னை உயர்த்தி பேசிய குமாரை பார்த்து சந்தோசப்பட்டான் சந்தோஷ்.
” ஓஹோ… இவன் தான் அந்த டானா? ” என்று சந்தோஷை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்தாள் பூஜா.
” என்னமா நீ பேசுறதை பார்த்தா இவனை உன்னக்கு ஏற்கனவே தெறியும் போல இருக்கு… ” என்றான் குமார்.
“ஆமா சீனியர் இந்த டுபாகூர் பத்தி எல்லாமே எனக்கு தெரியும் ” என்றாள் பூஜா.
” ஏய் யாரோ பார்த்து துபாக்கூர்னு சொல்றே.. ” என்று பூஜாவிடம் எகுறினான் சந்தோஷ்.
‘ டேய் சும்மா சவுண்ட் விடாத அடங்கு டா… நீதான் டா டப்பிக்கூரு.. உன்னை பத்தி வெளியே விசாரிச்சிட்டு தான் வந்து இருக்கேன் ” என்றாள் பூஜா.
” அப்படி என்ன மா என் பிரெண்டை பத்தி விசாரிச்சிட்டு வந்தே… வந்ததில் இருந்து அவனை இந்த கிழி கிழிக்குறியே அதுக்கு காரணம் என்னனு தெரிஞ்சுக்கலாமா? ” என்றான் குமார் ஆர்வமாக.
” ம்ம்ம்… சொல்றேன் ப்ரோ… இதோ இவன் இருக்கானே.. காலேஜ்ள ஒரு பொண்ணையும் விட மாட்டானாம். யாரை பார்த்தாலும் உடனே அவங்க கிட்டே போய் லவ் ப்ரோப்போஸ் பண்ணுவானாம். பொண்ணுங்க எல்லாம் இவனை கண்டாலே தெறிச்சு ஓடிருவாங்கலாம். ” என்றாள் பூஜா.
தன்னை பற்றி தவறாக பேசும் பூஜாவை கண்டு கோபம் அடைந்தவன் ” ஏய்… என்னை பத்தி என்ன நினச்சிட்டு இருக்க… என்னை பார்த்தா பொண்ணுங்க பின்னாடி அலையுறவன் மாதிரியா இருக்கு.. ” என்றான் கோபமாக.
” ஆமாம் அதனால தான் என் மேல வந்து விழுற மாதிரி வந்து நின்ன… ” என்றாள் பூஜாவும் விடாமல்.
இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தாள் எங்கே வாய் வார்த்தை அதிகம் ஆகி சண்டை வந்துவிடுமோ.. என்று பயந்த நிவி ” ஏய் பூஜா எதுக்கு டி தேவை இல்லாம பேசி வம்பு வழக்குற… வா போலாம் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.. ” என்றாள்.
” ஆமா.. ஆமா மா.. நீ கிளம்பு பஸ்ட் நாளே கிளாக்கு லேட்டா போனா நல்லா இருக்காது இல்ல… ” என்று குமாரும் பூஜாவை அங்கிருந்து போக சொன்னான்.
” சரி ப்ரோ..நீங்க சொல்றிங்களேன்னு நான் கிளாஸ்க்கு போறேன். எதுக்கும் நீங்க இவனை விட்டு தள்ளியே இருங்க.. அப்பறோம் உங்களையும் யாரும் தப்பா நினைக்க போறாங்க. ” என்றாள் பூஜா.
” ஏய் ரொம்ப ஓவரா பேசுற நீ என்னை பத்தி ஒழுங்கா இங்கே இருந்து போடு எனக்கு வர கோபத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ” என்றான் சந்தோஷ் கோபமாக.
அவன் பேசுவதை சட்டையெ செய்யாமல் குமரிடம் திரும்பி ” ப்ரோ.. நான் போப்பிட்டு வரேன். நான் சொன்னது எல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க சரியா ” என்றுவிட்டு ” ஏய் நிவி வாடி போலாம் ” என்று சந்தோஷை ஒரு அற்ப பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
நிவியும் சந்தோஷை பார்த்து கண்களாலேயே சாரி சொல்லிவிட்டு குமாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து பூஜாவோடு கிளம்பினால்.
பூஜா செல்வதையே கோபமாக சந்தோஷ் பார்த்துக்கொண்டு இருக்க…
“டேய் விடு டா.. அவ ஏதோ தெரிரியாம பேசிட்டு போறா .. பாவம் சின்ன பொண்ணு..” என்று பூஜாவிற்கு குமார் பரிந்து பேச..
“டேய் நீ எனக்கு தான பிரெண்ட் என்னவோ அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க…. அவ என்னை பத்தி தப்பு தப்பா பேசிட்டு இருக்கா… அப்போல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணாம அமைதியா இருந்துட்டு அவ இங்கே இருந்து போன பிறகும் கூட னே அவளுக்கு சப்போர்ட் பனி என்கிட்டே பேசிகிட்டு இருக்க..” என்றான் சந்தோஷ்.
” விடு டா மச்சான் சின்ன பொண்ணு. ” என்றவன்.
” ஆமா நான் உன்கூடவே தான சுத்திட்டு இருக்கேன். எனக்கு தெரியாம எப்போ இருந்து டா நீ பொண்ணுங்க பின்னாடி சுத்த ஆரம்பிச்ச…” என்றான் சந்தோஷை கிண்டல் செய்துகொண்டே..
” டேய் அவ தான் என்னை பத்தி தெரியாம தப்பா பேசிட்டு போறான்னா.. நீயும் என்னை நம்பாம கேக்குறியா.. ” என்று ககுமாரை சந்தோஷ் அடிக்க போக..
” டேய் மச்சான் வேணாம். நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன் ” என்று சந்தோஷடம் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று கூறினான் குமார்.
” எது.. இது கிண்டலுக்கு பேசுறதா… அவ பேசுறதை கூட நான் மன்னிச்சு விட்ருவேன். ஆனா நீ இருக்கியே கூடவே இருந்து எனக்கு சப்போர்ட் பண்ணாம வழுக்கு சப்போர்ட் பண்ணின துரோகி.. உன்னை நான் மங்கவே மாட்டேன் டா… ” என்று சந்தோஷ் குமாரை துரதிக் கொண்டு ஓட..
சந்தோஷ் கையில் மாட்டிக்கொள்ள கூடாது என்று அங்கிருந்து வீகமா ஓடினான் குமார்.
இதை எல்லாம் தூரத்தில் மறைவாக நின்று பார்த்துக்கொண்டு இருந்த பூஜாவும், நிவியும் அங்கிருந்து கிளம்பினர்.
“ஏண்டி அந்த சந்தோஷ்க்காக தான் நீ இந்த காலேஜ்லயே சேர்ந்த.. அவனாவே வந்து உன்கிட்டே பேச வர அப்போ நீ என்னவோ அவனை பிடிக்காத மாதிறி பேசிட்டு வந்துட்ட..” என்றாள் நிவி.
“நான் வேணும்னு தான் டி அவன் கிட்டே பேசினேன். ஸ்கூல் படிக்குற அப்போ அவன் பின்னாடி நான் எத்தனை தடவை போய் இருப்பேன். என்னை ஒரு வாட்டி கூட திரும்பி பார்க்காம அலைய விட்டவன் தானே இவன். இனி பாரு இவனை வெறுப்பேத்தி என் பின்னால இவனை நான் அலையவிடல.. என் பேரு பூஜா இல்லை ” என்றாள்.
” அடிப்பாவி இதுக்கு எதுக்கு டி நீ அவன லவ் பண்ணின… ” என்றாள் நிவி
