EPISODE 28
முகத்தை மறைக்கும் அளவுக்கு பைல்கள் வினோவின் டேபிளின் மீது நிறைந்து இருந்தது .
“அம்மாடியோ!! என்ன இவ்ளோ பைல்ஸ் இருக்கு .. விஜய் மாமா ஆபீஸ் ஒர்க் ஏதோ சும்மா உக்காந்தா இடத்துல நாலு கையெழுத்து போட்டுட்டு வந்துருவோம்ன் நினைச்சேன் . ஆனா நீங்க என்ன இவ்ளோ வேலை குடுக்கிறிங்க எனக்கு ” என்றாள் வினோ .
“வினோ பேசிக் விஷ்யத்த்துல இருந்து ஒர்க் ஸ்டார்ட் பண்ணினா தான் உன்னோட ஆஃபீஸ்ல என்ன வேலை இருக்கு. யார் என்ன வேலை செய்றாங்க. யார்கிட்ட என்ன வேலை வாங்கணும்னு தெரிஞ்சுக்க முடியும். அதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தான் உனக்கு கீழ இருக்கவங்களை உன்னால வேலை வாங்க முடியும். உன்னோட அப்பா உருவாக்கி வெச்ச சாம்ராஜியம்னு நீ வந்து ஜம்முனு உக்காந்தா மட்டும் போதாது . எல்லா விஷயம் தெரிஞ்சுக்கணும். இல்லேன்னா உனக்கு கீழ வேலை பாக்கருவாங்க உன்னை ரொம்ப ஈஸியா ஏமாத்திட்டு போய்டுவாங்க ” என்றான் படு சீரியஸாக .
அவன் பேசியதையில் வாயை திறந்து கேட்டுக்கொண்டு இருந்தவள் தலை தானாக விஜய் சொன்னதை எல்லாம் கேட்டு ஆடியது .
“சரி இன்னிக்கு ஈவினிங் 6 ஓ கிளாக் வரைக்கும் உனக்கு டைம் அதுக்குள்ள இந்த பைல்ஸ் எல்லாம் தரோவா செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் பண்ணனும்” என்றான்.
“விஜய் மாமா.. இருந்தாலும் இவ்ளோ ஒர்க் ஒரு பொண்ணு என்னால எப்படி ஒரே நாள்ல முடியும் ” என்றாள் சற்று தயக்கமாக .
“ஏன் பொண்ணுங்களால இந்த வேலை தான் செய்ய முடியும் , இவ்ளோ தான் செய்யமுடியும்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா? என்ன ?” என்றவன்.
“இந்த உலகத்துல ஆண்களை விட பெண்கள் தான் மிகவும் பலசாலிகள். தைரியசாலிகள் . எவ்ளோ கஷ்டமான வேலையையும் அவங்களால மிக சுலபமா செய்துட்டு முடியும் . ஒரே நேரத்துல பல வேலைகளை தெளிவா எந்த குறையும் இல்லாம மிக சாதாரணமா செய்யக்கூடிய திறமை பெண்கள்கிட்ட ஆண்களை விட அதிகம் இருக்கு.. நம்ம சமூகம் பொண்ணுங்க இந்த வேலை தான் செய்யணும், இதை செய்ய கூடாதுனு ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள அவங்களை அடக்கியே வெச்சிருக்கு .. அந்த வட்டத்துக்குள்ள இருந்துட்டே பெண்களால பல விஷயங்களை சாதிக்குறாங்க..” என்று வினோவை பார்த்தான்.
“விஜய் மாமா நீ பேசுறது கேக்குற அப்போ எவ்ளோ எனெர்ஜியா இருக்கு தெரியுமா? பெண்கள் தானேனு கேவலமா நினைக்குற ஆளுங்க இன்னமும் இந்த காலத்துல இருக்க தான் செய்றாங்க … ஆனா நீ வேற ரகம் விஜய் மாமா… உன்னை கல்யாணம் செய்துக்க போற பொண்ணு ரொம்ப லக்கி ” என்றவள் அவனை பார்க்க…
சொல்வதை சொல்லிவிட்டு அவள் கேபினில் இருந்து கிளம்பி சென்றான். செல்லும் அவனை பார்த்து
“அந்த லக்கி பொண்ணு நானா இருக்கணும்னு நான் அந்த கடவுள்கிட்டே வேண்டிக்கிறேன் ” என்றாள் அவனை பார்த்து சத்தமாக
அதை கேட்டும் கேட்காமலும் அவள் கேபின் கதவை திறந்து கொண்டு வெளியே போயிருந்தான் .
“கொஞ்ச நாள் போகட்டும் விஜய் மாமா அம்மா , அப்பாகிட்டே சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்றேன் “என்றவள் தன் முன் இருந்த கோப்புகளை மலைப்பாக பார்த்தவள் வேறு வழி இல்லாமல் வேலைகளை பார்க்க துவங்கி இருந்தாள் .
தேவ் ரூமிற்கு வந்த விஜய் தேவ்வின் பிஏ சிவாவை அழைத்து பெண்டிங் இருக்கும் கோப்புகளையும், அன்றைக்கான மீட்டிங்கையும் அரேஞ் செய்ய சொல்லிவிட்டு வேளைகளில் மூழ்கினான். இடை இடையில் தன்னுடைய அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டே தேவ் கம்பெனி வேலைகளையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
மாலை 5 மணியை கடந்து இருக்கும் அவன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பி இருந்தான். வினோ இன்னும் அவள் வேளைகளில் தீவிரமாக இருபப்தை அவள் கேபினுக்கு வெளியே இருந்து பார்த்தவன் . சிவாவிடம் 6 மணி ஆனதும் வினோவை வீட்டிற்கு கிளம்ப சொல்லிவிடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினான் விஜய் .
நேராக வீட்டிற்கு தான் வந்திருந்தான் “என்ன விஜய் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே… ” என்று கேட்டபடி வந்த அதிதி . சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன் தலைமுடியை கோதிவிட்டபடி பேசினார்.
அவர் கை விஜய் தலையை கோதியதும் யாருக்கும் தெரியாமல் தாமரையை சந்தித்து இருக்கையில் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டு அவளோடு பேசிய நியாபகங்கள் அவன் மனதில் ஓடியது . இவ்வளவு நேரம் வேலை பளுவில் இருந்தவன் நடந்த அனைத்தையும் மறந்து இருக்க.. அதிதி பாசமாக தன் மகனை கவனிக்க… அது அவனுக்கு தாமரையின் நியாபகத்தை கொண்டு வந்துவிட…
சட்டென்று சோபாவில் இருந்து எழுந்தவன் “அம்மா எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு நான் கிளம்பறேன் ” என்று அங்கிருந்து செல்ல போக…
“டேய்.. டேய்.. எங்க போற இரு டா . வர வர வேலை வேலைன்னு சுத்திக்கிட்டே இருக்கியே தவிர.. உன் உடம்பை பாத்துக்கணும்னு கொஞ்சம் கூட உனக்கு தோணுறதே இல்லையா? இரு டா உன் முகத்தை பார்த்தா காலையில் இருந்து எதையும் சாப்பிட்ட மாதிரி தெரியல, நீ இரு நான் உனக்கு சாப்பிட எடுத்து வைக்குறேன் சாப்பிட்டு போ… ” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமரவைத்தவர். அவனுக்கு உணவை எடுத்து வைத்து சாப்பிட சொன்னார்.
வேண்டா வெறுப்பாக உணவை அள்ளி வாயில் வைத்து குறித்துக்கொண்டு இருந்தவனை பார்த்த அதிதி “டேய் என்ன டா இது சின்ன பிள்ள மாதிரி கொறிச்சுட்டு இருக்க… நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா தானே உடம்பு தெம்பா இருக்கும். ” என்றவர் “நீ கையை எடு நானே உனக்கு ஊட்டி விடறேன் ” என்று தட்டை தன் பக்கம் இழுத்து உணவை பிசைய ஆரம்பித்தார்.
“அம்மா என்ன பண்றீங்க.. கொடுங்க நானே சாப்பிடுகிறேன். நான் என்ன சின்ன பையனா ஊட்டி விட்றேன்னு சொல்றிங்க… ” என்றவன் தட்டை அதிதியிடம் இருந்து வாங்க போக..
“ஏன் டா நீ எனக்கு எப்பவும் சின்ன பிள்ளை தான் . இந்தா சாப்பிடு” என்று சிரித்த முகமாக உணவை எடுத்து அவன் முன்பு நீட்டினார்.
அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் விஜய் “என்ன டா கண்ணா … ” என்றாள் அதிதி இடது கையால் அவன் தலை முடியை வருடிக்கொடுத்து .
“அம்மா!! ” என்று உணர்ச்சி வெள்ளத்தில் அளித்தவன் அடுத்த நொடி அவர் இடையை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
அவன் செயலை கண்டதும் இதயம் கனத்தது அதிதிக்கு விஜய் ஏதோ மனக்குழப்பத்தில் பிரச்சனையில் இருக்கிறான் என்று அவருக்கு நன்கு புரிந்தது.
கையில் எடுத்த உணவை தட்டில் வைத்துவிட்டு அவனை மார்போடு சேர்த்து அணைத்து காட்டிக்கொண்டவர் “விஜய்.. ” என்று பரிவோடு அழைத்தார்.
“அம்மா!! ” என்றான் மீண்டும் இந்த முறை தழுதழுத்த குரலில் அழைத்தான்.
அவர் புடவை தாண்டி விஜய்யின் கண்ணீர் அதிதியின் மார்பை நனைத்தது .
ரத்தத்தை பாலாக்கி தன் உயிரை உருவாக்கி வளர்த்த மகன்களின் ஒருவன் திருமணம் ஆகி அவன் வாழ்க்கையை துவங்கி இருக்க…. விஜய் தொழில் தொழில் என்று சுற்றி திரிகிறான் அவனுக்கு தொழிலை தவிர மற்ற விஷயங்களில் நாட்டம் குறைவு என்று நினைத்திருந்த அதிதிக்கு விஜய்யின் இந்த மௌனம் , அழுகை அவருக்கு அவன் மனநிலையை ஓர் அளவுக்கு புரிந்திருக்க முடிந்தது .
மார்பு முட்டி பால் குடிக்கும் போது உள்ளம் பூரித்து பசியாறும் மகனை பார்த்து சந்தோஷமடைந்த தன் மனநிலைக்கும். தன் மார்பில் முகம் புதைந்திருக்கும் மகனை நினைக்கையில் அதிதியின் இதயம் கனக்க ஆரம்பித்து இருந்தது .
“விஜய் நீ யாரையாவது காதலிக்குறியா? அந்த பொண்ணுக்கும் உனக்கும் எதுவும் பிரச்சனையா ?” என்றார் அவன் தலைமுடியை வருடிக்கொடுத்துக்கொண்டே…
ஆமாம் என்று மட்டும் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
“நீ சதா வேலை வேலைன்னு இருக்கிறதுனால அந்த பொண்ணு கூட பேச .. அவ கூட நேரம் செலவழிக்க மாட்டேங்குறேன்னு உன் கூட சண்டை போட்டாளா?” என்றார்.
இல்லை என்று அதற்கு தலையாட்டினான்.
“அவளுக்கு புடிக்காத விஷயத்தை ஏதாவது நீ செய்துட்டியா? ” என்றார்.
“ம்ஹும்.. ” என்றான்.
“அப்பறோம் என்ன டா பிரச்சனை . ஏன் கொஞ்ச நாளாவே இப்படி இருக்க… ” என்றார்.
அப்படி சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான் விஜய் “என்ன டா அப்படி பாக்குற… உன் முகத்தை வெச்சே நீ எந்த மனநிலையில் இருக்கேன்னு அம்மா தெரிஞ்சுக்குவேன்” என்றவர் .
“சொல்லு டா என்ன தான் பிரச்சனை அந்த பொண்ணுக்கும், உனக்கும் . என்னனு சொல்லு அம்மா கிட்டே.. ” என்றார்.
“அம்மா நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன்னு உனக்கு எப்படி தெரியும் ” என்றான்.
“அம்மாகிட்டே உங்களுக்கு மனசுக்கு நெருக்கமா ஏதாவது பிரச்சனை வரும்போது தானே இப்படி கட்டிபிடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க…இல்லேன்னா இந்த அம்மாவை எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுமா… ” என்றவர் .
“சொல்லு எதாவது பெரிய பிரச்சனையா உனக்கும் அந்த பொண்ணுக்கும், யாருனு சொல்லு நான் வேணும்னா அந்த பொண்ணுகிட்ட பேசிப்பாக்கட்டுமா?… ” என்றார்.
அவன் வேண்டாம் என்று தலையாட்ட…
“அப்பறோம் என்ன பிரச்னைன்னாவது அம்மாகிட்டே சொல்லு.. என்னால முடிஞ்சா உனக்கு ஹெல்ப் பண்றேன் “என்றாள்.
“அம்மா நான் ஒரு பொண்ணை ரொம்ப வருசமா காதலிச்சேன் . அவளுக்கும் வேற ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு ” என்றான்.
அதை கேட்டதும் அவனை விட அதிகம் வருத்தப்பட்டார் அதிதி . அவன் மனநிலை இப்பொது எப்படி இருக்கும் என்று அவரால் உணர முடிந்தது .
“விஜய் .. உனக்கும் அந்த பொண்ணுக்கும் எதுவும் பிரச்சனையா? அதனால் தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டு வேற யாரையோ கன்யானம் செய்துகிட்டாளா ?” என்றாள் சற்று கோபமாக.
தன் மகனை இந்த நிலைக்கு அந்த பெண் தள்ளிவிட்டாளே என்ற வேதனையால் வந்த கோபம் அது.
“இல்ல ம்மா… அவளோடது திடீர் கல்யாணம் அவ குடும்ப சூழ்நிலையால அவளால் அந்த கல்யாணத்தை மறுக்க முடியல.. சொல்லப்போனா அவளுக்கே கல்யாணம்னு தெரியாது ம்மா…” என்றான்.
விஜய்யையும் அவன் காதலித்த அந்த பெண்ணையும் நினைத்து மனம் வருந்தினாள் அதிதி .
“சரி ப்பா.. அந்த பொண்ணோட நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரேன். பாவோம் அவளும் உன்னை மாதிரி நீ அவளை நினைச்சு வருத்தப்பட்ட மாதிரி அவளும் உன்னை நினைச்சு வருத்தப்ட்டுட்டு தானே இருப்பா… ” என்றாள்.
அதை கேட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான் விஜய்.
