Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 3

என்னை கொண்டாட பிறந்தவனே 3

by Layas Tamil Novel
394 views

EPISODE 3

மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த இனியாவிற்கு தான் இப்பொது எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. அவள் இருந்த இடத்தை பார்த்தால் அது அவளை விற்க ஏற்பாடு செய்த இடமாகவோ… இல்லை அவளை விலைக்கு வாங்கிய அந்த ராகேஷின் இடமாகவோ தெரியாமல் மிகவும் வித்யாசமாக இருந்தது.

ஒன்றும் புரியாமல் தான் படுத்து இருந்த சோபாவில் இருந்து மிகவும் சிரமப்பட்டு இனியா எழ … அவள் எழுந்ததை பார்த்ததும் அவசரமாக அவளிடம் வந்த அர்ஷ் “மெதுவா … மெதுவா எழுந்திருங்க… “என்று அவளை தோள் பிடித்து அமர வைக்க உதவப் போக…

அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் அவனை வெறுப்பாக பார்த்தவள் “என்னை என்ன செஞ்சீங்க… யாரு நீங்க … என்னை எங்கே கொண்டு வந்து மறுபடியும் அடைச்சு வெச்சிருக்கீங்க…” என்றாள் பயந்துகொண்டே…

அவள் பேசுவதை பார்த்தவனுக்கு புரிந்து போனது இந்த பெண் ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இருக்கிறாள் என்று அதனால் தான் தன்னை பார்த்ததும் பயந்து விளங்குகிறாள் என்று உணர்ந்த அர்ஷ் “நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் . பயப்பட வேண்டாம் … நீங்க இங்கையே இருங்க நான் பொய் விஜய்யை வர சொல்றேன் ” என்றவன் அங்கிருந்து வெளியே வந்தவன் .

கண்கள் மூடி தீவிர யோசனையில் அமர்ந்து இருந்த விஜய்யிடம் வந்து அவன் தோளில் காய் வைத்தான் .

அவனை நிமிர்ந்து என்ன என்பது போல பார்த்தான் விஜய் .

“அந்த பொண்ணு எழுந்திருச்சு … எழுந்ததும் என்னை பார்த்து பயந்துட்டா… நீ பொய் பாரு உன்னை பார்த்தா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்கன்னு எனக்கு தோணுது ” என்றான் அர்ஷ் .

“ம்ம்ம்… சரி ” என்றவன் எழுந்து சோம்பல் முறித்தவன் தன் சட்டையை சரி செய்துகொண்டே அந்த பெண் இருந்த அறைக்கு சென்றான்.

அவள் இருந்த அறைக்கதவை விஜய் திறந்து கொண்டே உள்ளே வர… அவன் கதவு திறந்ததும் அந்த கதவின் பின்னால் நின்று இருந்த இனியா தன் கையில் வைத்து இருந்த பூ ஜாடியை கொண்டு விஜய் தலையில் ஓங்கி அடித்தாள்.

“அம்மாஆஆ!!… என்ற அலறலோடு விஜய் தரையில் விழ…

அவன் சத்தம் கேட்டு அந்த அறையை நோக்கி ஓடி வந்த அர்ஷ் தரையில் விஜய் தலையை பிடித்துக்கொண்டு விழுந்து இருப்பதை பார்த்தவன் . அவனை நோக்கி வேகமாக வந்த அர்ஷ் “பாஸ் என்ன ஆச்சு? ஏன் தரையில் விழுந்து இருக்கீங்க…” என்று கேட்டபடி கீழே விழுந்திருந்தவனை காய் கொடுத்து தூக்குவதற்காக அர்ஷ் குனிய…

அவனை பார்த்து வராதே… என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் பின்னாள் ஒளிந்து இருந்த இனியா அர்ஷ்ஷையம் பூஜாடி கொண்டு அவன் தலையில் அடித்து இருந்தாள். “மம்மிஈஈ….” என்று அலறிக்கொண்டு மயங்கி விஜய்யின் மீது விழுந்தான் அர்ஷ்.

விஜய்யின் மெது விழுந்து இருந்த அர்ஷை எழுப்பிவிட அவன் முயன்று கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இருந்து தப்பி செல்ல இது தான் சமயம் என்று அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்த இனியா வெளியே செல்வதற்காக கதவை தேடி வந்தவள் அப்போதுதான் அதை கவனித்தாள் .

தான் இப்பொது இருப்பது ஒரு வீடோ.. ஹோட்டலோ… பங்களாவோ கிடையாது. இப்பொது தான் வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம் அதுவும் விமானத்தில் என்று தெரிந்ததும் இனி தான் தப்பி செல்ல வழியே இல்லையா ? என்று தோன்றியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை

கையில் பிடித்து இருந்த பூஜாடியொடு திரும்பி பார்த்தாள். அவளை நோக்கி அடிபட்ட இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டு அங்கு விஜய் வர…

அவனை பார்த்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் நின்றவள் பிறகு திரும்பி அந்த பிலைட்டின் கதவை நோக்கி சென்றாள்.

என்னவோ இவளுக்கு தான் பெரிய பலசாலி என்று நினைப்பு அவ்வளவு பெரிய பிளைட்டின் கதவை ஒற்றை ஆளாக அவளே சென்று திறந்து பறந்து கொண்டிருக்கும் பிளைட்டிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள அதற்குள் பிளான் வேறு போட்டாகிற்று.

 இனியாவின் அடுத்த மூவை அறிந்து  கொண்ட விஜய்  பின்னால் சென்று அவளை தடுக்காமல் கைகட்டி நின்று இனியா என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்த்தான்.

 அவள் வேகமாக ஃபிளைட்டின் கதவு அருகில் செல்ல  அதை பார்த்து அந்த பிளைட்டில் வேலை செய்து பெண் ஊழியர் இருவர் வேகமாகச் சென்று இனியாவை கதவருகில் செல்ல விடாமல் பிடித்துக் கொள்ள…

 அவர்களிடமிருந்து போராடி தப்பித்தவள் கணப்பொழுதில் பிளைட்டில் கதவு சென்றால் அங்கே சென்றதும் தான் அவளுக்கு உரைத்தது இவ்வளவு பெரிய கதவை எங்கே ஆரம்பித்து எப்படி திறப்பது என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

 செய்து தெரியாது திகட்ட இனியா திரு திருவென்று விழித்துக் கொண்டே திரும்ப அவள் எதிரே விஜய் நின்றிருந்தான்.

 “இப்ப எதுக்கு நீ இப்படி ஓவரா  சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க… போனா போகுதேன்னு அந்த தடியன் கிட்ட இருந்து உன்ன காப்பாற்றி கூட்டிட்டு வந்தா… காப்பாத்துன என்னையும் என்னோட பிஏபியும் அடிச்சு போட்டுட்டு நீ இங்கிருந்து குதிச்சு சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா? உன்னை தூக்கிட்டு வந்த பாவத்துக்கு நான் கோர்ட்டு கேஷ்னு அலையணுமா?” என்றான் கடுகுடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்து 

 அவன் இறுக்கிப் போன முகத்தை பார்த்து இனியாவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. தங்கியபடி அவனை பார்த்தவள் அப்போது தான் விஜய்யை நன்றாக கவனித்தாள். நேற்று காலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சென்ற இனியா விஜய்யின் கார் முன்பு விழுந்தது அவனை அங்கே பார்த்ததும் அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

 “சார்!!! நீங்களா!!! நீங்க தான் என்ன அந்த தடியன் கிட்ட இருந்து காப்பாற்றினீங்களா? ரொம்ப தேங்க்ஸ் சார்… நல்லவேளை பண்ணுங்க நீங்க மட்டும் என்ன அவங்க கிட்ட இருந்து காப்பாத்தாம விட்டிருந்தா இந்த நேரம் நான் எந்த நிலைமையில் இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது” என்றாள் அவன் கையை வந்து பிடித்துக் கொண்டு.

 அவள் அருகில் நின்றிருந்த ஃபிலைட் ஊழியரை பார்த்து உள்ளே அர்ஸ் மயங்கி விழுந்து இருப்பதை கூறி அவனை கவனிக்க சொல்லி அனுப்பி வைத்தவன் 

 தன் கையைப் பிடித்த இனியாவின் கையை தட்டி விட்டவன் “எதுவாயிருந்தாலும் தள்ளி நின்று பேசு இப்படி தொட்டு பேசறது எல்லாம் வேண்டாம்” என்றான்.

 விஜய் தட்டிவிட்டதில் ஏற்கனவே கையில் கட்டு போட்டு இருந்த இனியாவின் காயத்தில் அவன் கை வேகமாக மோதி விட அதில் வலி ஏற்பட்டு  காயமான இடத்தை பிடித்துக் கொண்டே இனியா முகம் சுருங்க அவனைப் பார்த்தாள்.

அப்போது தான் என்ன செய்தோம் என்று புரிந்து கொண்ட விஜய் அவசரமாக இனியாவிடம் வந்தவன். அவள் கையைப் பிடித்துக் கொண்டு “சாரி.. ரியலி சாரி… நான் இந்த காயத்தை மறந்தே போயிட்டேன்’ என்றவன். வலி நிறைந்த அவள் முகத்தை பார்த்து  பரிதாப பட்டவன்.

“ஆமா இந்த காயம் எப்படி உனக்கு ஆச்சு அவங்க உன்ன எதுவும் கொடுமைப்படுத்தினாங்களா அவங்களாலதான் உனக்கு இந்த காயம் ஏற்பட்டுச்சா?” என்றான்.

 சற்று முன்புதான் தான் அவனை தொட்டதற்கு தன்னிடம் கடுமையாக பேசியவன் இப்போது அவனாகவே வந்து தன் கையை வலிய பிடித்துக் கொண்டு அக்கறையாக பேசுவதை பார்த்தது இனியாவிற்கு அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 அவனையே இமைக்காமல் இனியா பார்த்துக் கொண்டே இருக்க “என்ன பார்த்துட்டு இருக்க… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று அவன் பிடித்திருந்த பிடியை இருக்க… தன்னை அறியாமல் இனியாவின் காயத்தில் அழுத்தம் கொடுத்ததே அவள் முகத்தில் எழுந்த உணர்ந்தவன் சட்டென அவள் கையை விட்டுவிட்டு  அவளை விட்டு பின் வாங்கி நின்றான்.

 அவன் பதற்றமும்  உன் மீது விஜய் காட்டிய   அக்கறையும் பார்த்து இனியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது முன் பின் தெரியாத தன்னிடம் எப்படி இவனால் இவ்வளவு அக்கிரையாக நடந்து கொள்ள முடிகிறது தன்னை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களோடு இரவை கழிப்பதற்கும் அவளிடம் அத்துமீறுவதற்குமே    இருக்கிறார்கள் அப்படி இருக்க இவன் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறானே என்று அவளுக்கு தோன்றியது.

 “இந்த காயம் அவங்களால தான் ஆச்சு சார். ஆனால் அவங்க இந்த காயத்தை எனக்கு ஏற்படுத்தல” என்றாள் இனியா 

 அவள் சொன்னது புரியாமல் குழப்பமாக விஜய் இனியாவை பார்க்க…

” என்ன கள்ளச் சந்தையில பல பணம் கொலுத்த மிருகங்களுக்கு இரையாக்குறதுக்காக என் உடம்ப மூலதனமா வச்சு என்னை ஏலத்துல ஒருத்தன் விலைக்கு வாங்கினான்.  என்னை விலக்கி வாங்கினவன்  அவனோட இடத்துக்கு என்ன கூட்டிட்டு போய் அவன் கூட ஒண்ணா இருக்கச்சொல்லி என்ன வற்புறுத்தினான். அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு தெரியாம அங்கே ஃப்ரூட்ஸ் கட் பண்ண வச்சிருந்த கத்தியை எடுத்து நான் என் கையை கிழிச்சிகிட்டேன். அதில் வந்த காயம் தான் சார் இது” என்றாள்.

 “என்னது பொண்ணுங்கள ஏலத்துல எடுக்குறதுக்குன்னு தனியா இங்கே கள்ளச்சந்தை இருக்கா!!! அது எங்க நடக்குது” என்று ஆர்வமாக இனியா சொன்னதே கேட்டுக் கொண்டே அங்கே வந்தான்.

 அவன் ஆர்வமாக கேட்டதை கண்ட இனியாவிற்கு அஸ்மீது கோபம் வந்தது. அவன் மோசமானவன் என்று அவன் பேச்சில் நினைத்துக் கொண்ட இனியா அவனை பார்க்கவே முகம் சுளித்தவள் விஜய் பார்த்து “யாரு சார் இந்த ஆளு இவனை எதுக்கு உங்க கூட வச்சிருக்கீங்க. … இந்த மாதிரி பொண்ணுங்களுக்காக அலையுறவன கூட வச்சுக்கிட்டு இருந்தா உங்களுக்கு தான் கெட்ட பேரு முதல்ல இந்த ஆளை வேலையை விட்டு தூக்குங்க ” என்றாள் உரிமையாக.  

” ஏய் யாருமா நீ…  வந்ததும் வராதுமா என் வேலைக்கு உலை விக்கிறவ நான் ஏதோ சும்மா ஆர்வத்துல கேள்வி கேட்ட உடனே என்ன கெட்டவன்னு முத்திரை குத்தி என் பாஸ்கிட்ட என்னையே என்னையே தப்பா சொல்லி  வேலையை விட்டு தூக்க சொல்றியா நீ… நானும் என் பாசம் எவ்வளவு ரிஸ்க் எடுத்து அந்த தடியன் வளர்ந்தவன்கிட்ட இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்து இருக்கோம் நீ என்னடா என் பாஷை அடிச்சு கீழே தள்ளிட்டு என்ன அடிச்சு மயக்கம் போட வச்சுட்டு தப்பிக்க பாக்குறியா ” என்று அர்ஸ் அவளை நெருங்கினான்.

 அர்ஸ் சொன்னதை கேட்டவள் இவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மிகவும் ரிஸ்க் எடுத்து காப்பாற்றி இருப்பதை உணர்ந்தவள் இருவரையும் பார்த்து மனதார நன்றி கூறினாள்.   

 “நன்றி எல்லாம் நீயே வச்சுக்கம்மா… உன் வீடு எங்கே இருக்கு உன்ன பெத்தவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னு சொல்லு… நாங்க இந்தியா லேண்ட் ஆனதும் தேடி கண்டுபிடித்து முதல் வேலையா உன்னை உன் வீட்டில் சேர்த்து விடுகிறோம்… உன் சவகாசமே வேண்டாம் பார்த்து கொஞ்ச நேரத்திலேயே என்னையும் என் பாசையில் எவ்வளவு பாடுப்படுத்திட்ட நீ என்றான் அர்ஸ் 

 அவர்கள் இனியாவின் குடும்பத்தை பற்றி கேட்டதும் அவள் முகம் வாடிவிட்டது. கண்களில்  நீர் துளிக்க அவர்களை இனியா பார்க்க…. அவள் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து விஜய்க்கு ஏனோ சங்கடமாக இருந்தது அவன் அர்சை ஜாடை காட்டி அவளை சமாதானம் செய்யச் சொல்லி கூறினான்.

 அவ அழுதா இவன் போய் சமாதானம் செய்ய வேண்டியது தானே என்னை ஏன் கோர்த்துவிடுகிறான் என்று நினைத்த அர்ஸ்.

 எதுக்குமா அலற சரி அதெல்லாம் போகட்டும் உன் பேரு என்ன என்றான்.

 அவன் தன் பேரைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே இனியா சார் என்றாள்.

 இனியா என்று விஜய் அவள் பெயரை சொல்லி பார்க்க அர்ஷோ “பேர பாரு இனியா… தனியான்னு என்றவன் உன் அம்மா அப்பா எங்க இருக்கான்னு சொல்லுமா அங்க ஒன்னு அவங்க கிட்ட கொண்டு போய் பத்திரமா சேர்த்துடுவோம் என்றான் 

” சார் அவர்கள் எல்லாம் இருந்திருந்தால் நான் ஏன் இந்த மாதிரி ஒரு இடத்துல அந்த மாதிரி ஆளுங்க கிட்ட வந்து மாட்டியிருப்பேன் எனக்கு யாருமே இல்ல…. என் மேல அக்கறைப்பட்டு கேட்க யாருமே கிடையாது. அதனாலதான் என்ன அப்படி வலுக்கட்டாயமாக கொண்டு போய் அந்த பணக்காரனுக்கு வித்துட்டாங்க என்றாள் மிகவும் சோகமாக  

 வழக்கமான கதைகளை விட இவள் கதை சுவாரசியமாக இருந்தது என்ன என்று அவளை அமர வைத்து அர்ஸ் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருக்க விஜயோ அமைதியாக அவள் பேசியது எல்லாம் உள் வாங்கிக் கொண்டிருந்தான் .

 அவள் கதையை முழுவதும் கூறி முடித்து நிமிர்த்து பார்க்க அர்ச் கன்னத்தில் கை வைத்து சோபாவில்  சாய்ந்து அமர்ந்தபடி உறங்கிக் கொண்டு இருந்தான்.

 அவனைப் பார்த்துவிட்டு சிரித்தவள் திரும்பி விஜய் பார்க்க அவனோ இனியாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின்பு தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.

 அதற்குள்ளாக  விமானம் இந்தியா தரை இறங்கி இருக்க…    “உனக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை நானே ஏற்பாடு செய்தேன் அதுவரை நீ வெளியே எங்கேயும் போட வேண்டாம் உன்ன வலதுசி தேடுறதுக்கும் வாய்ப்பு இருக்கு” என்ற விஜய் உறங்கிக் கொண்டிருந்த அர்ஷை தட்டி எழுப்பியவன்.

“இவங்கள என்னோட கெஸ்ட் ஹவுஸ் கொண்டு போய் தங்க வச்சுரு அங்க இனிமேல் யாரும் எதுக்காகவும் போகக் கூடாது இன்று கட்டளையிட்டவன் தன் வீட்டிற்கு கிளம்பினான் ” அங்கே அவனுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured