Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 30

என்னை கொண்டாட பிறந்தவனே 30

by Layas Tamil Novel
286 views

EPISODE 30

 ஹனிமூன் கொண்டாட santorino வந்திருந்த தாமரையும் வம்சையும் முதல் இரண்டு நாட்கள் அந்த ஊரையும் அங்கு சுற்றி இருந்த கடற்கரையையும் சுற்றிப் பார்த்தனர்.

 கூகுளில் சர்ச் செய்து அவர்கள் இருக்கும் அந்த இடத்தில் மிக முக்கியமான இடங்களை இதைத் தேடிப் பிடித்து ஒரு இடமும் பாக்கி இல்லாமல் அனைத்தையும் சுற்றிப் பார்த்தால் தாமரை.

 அவளை அழைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றுவதில் வம்சிக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அதிசயித்து அவள் சிறு குழந்தை போல கைத்தட்டி ஆரவாரம் செய்து ரசிப்பதை கண்டு சந்தோஷப்பட்ட படி அவளோடு அவள் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் சென்றான்.

  அம்மு அங்க பாரு அங்க அழகு அழகா பூ எல்லாம் நிறைய பூத்திருக்கு எனக்கு அதிலிருந்து ஒரு பூ பறிச்சு குடு   எந்த பூவை பார்த்தாலும் ரொம்ப அழகா இருக்கு எனக்கு இப்பவே அது வேணும் என்று அடம் பிடித்தால் ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தபோது.

 குட்டிமா என்ன விளையாடுறியா இது நம்ம உன்ன நினைச்சுட்டியா இங்க அவங்க போர்டு போட்டு வச்சிருக்கறத பாத்தியா இல்லையா தள்ளி நின்னு போட்டோ மட்டும் தான் எடுத்துக்கணும் பூவ தொடக்கூடாது பறிக்க கூடாதுன்னு போட்டு இருக்காங்க தெரியல என்றான் வம்சி.

 இதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இப்பவே வேணும் ஒரே ஒரு பூ மட்டும் பறிச்சு கொடு அம்மு ப்ளீஸ்… ப்ளீஸ்… என்று கெஞ்சினால் அவன் கையை பிடித்துக் கொண்டு  

 குட்டிமா அங்க இருக்க பூவ பறிச்சா பைன் போட்டுடுவாங்கடி நம்ம மேல கம்ப்ளைன்ட் பண்ணிடுவாங்க இதெல்லாம் இந்த ஊரோடு ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ ஃபாலோ பண்றாங்க இது எல்லாம் உனக்கு   புரியுதா இல்லையா நான் சொல்றது என்றான் வம்சி.

 முடிவா என்ன சொல்ற அந்த பூவை எனக்கு பரிச்சு தர முடியுமா முடியாதா அவனை முறைத்துக் கொண்டு இடுப்பில் கை வைத்து நின்றபடி..

 முடியாது குட்டிமா பூவ படிச்சு கொடுத்துட்டு அப்புறம் ரெண்டு பேரும் போய் ஜெயில்ல தான் உட்காரனும் பேசாம வா என்று அவளை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல போக அவன் கையை உதறிவிட்டவள்.

 இப்ப நீ இந்த பூவை எனக்கு பொரிச்சு கொடுக்கலைன்னா நான் இந்த இடத்தை விட்டு எங்கேயும் வரமாட்டேன். வேணும்னா நீ கிளம்பி போ நான் இங்கேயேதான் இருப்பேன் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு பென்சில் போய் கையை கட்டிக்கொண்டு கோபமாக அமர்ந்து கொண்டாள்.

 அவள் அருகில் வந்து அமர்ந்தவன் குட்டிமா சொன்னா கேளுமா புரிஞ்சுக்கோ… என்று அவளிடம் சொல்லி புரிய வைக்க முயன்றான்.

 எங்கே அவள் தான் பிடிவாதமாக இருக்கிறாளே வம்சி சொல்வதை காதில் வாங்கவே இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசமாட்டேன் என்று வீம்பாக அமர்ந்திருந்தால்.

 அந்த இடம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. யாருக்கும் தெரியாமல் போய் அங்கிருக்கும் மலர்களில் ஒன்றைக் கூட பறிக்க முடியாது அவ்வளவு கூட்டம் அவ்வளவு பாதுகாப்பும் கூட அங்கு இருந்தது.

நான் ரூமுக்கு போனேன். இப்ப என்கூட வரப்போறியா இல்லையா என்றான் அவளிடம்.

 அவனை பார்க்காமல் இன்னமும் கோபமாக திரும்பி தாமரை அமர்ந்து கொள்ள..

 சரி நீ எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல இங்கேயே உக்காந்துரு ஆனா நான் அதிலிருந்து ஒரு பூ கூட உனக்கு பறிச்சு கொடுக்க மாட்டேன். என்றவன் நான் கிளம்புறேன் என்று அங்கிருந்து நடக்கத் துவங்கினான்.

 நான் எவ்வளவு ஆசையா ஒரே ஒரு பூ தானே வேணும்னு கேட்டேன் ஆனா அத பரிசுத்தர மாட்டேன்னு வீம்பா போறான் பாரு என்று அவனை முறைத்தவள் தன்னை வந்து சமாதானம் செய்து கூட்டி செல்வான் என்று எதிர்பார்க்க ஆனால் வம்சியோ அவளை திரும்பியும் பார்க்காமல் அவளை விட்டு நடந்து சென்றவன் தூரத்தில் நின்றிருந்த டேக்ஸை அழைத்தால் அவர்கள் தங்கி இருந்த ரிசல்ட் செல்ல…

 அவன் செல்வதை பார்த்த தாமரை சொன்னது போலவே தன்னை விட்டு  சென்றாலும் சென்று விடுவான் என நினைத்தவள்  வேகமாக எழுந்து அவன் பின்னால் செல்ல காரும் வந்தது கார் கதவை திறந்து வம்சுக்கு உட்கார போற அவன் கார் கதவை திறந்ததும் அவனை தள்ளிவிட்டு தாமரை உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.

 அதைக் கண்டு சிரித்தவன் தானும் ஏரி பின்னால் அமர்ந்து டாக்ஸி டிரைவர் இடம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 காரில் ஏறியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை தாமரை கோபமாக ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டிருக்க வம்சி அவளை அடிக்கடி திரும்பி பார்ப்பதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தான் ஆனால் அவள் ஒருமுறை கூட வம்ச திரும்பி பார்க்கவில்லை அவ்வளவு கோபம் அவளுக்கு.

 குட்டிமா என் கூட பேச மாட்டியா கோபமா இருக்கியா என்றான் அவளைப் பார்த்து.

 என் கூட பேசாத அம்மு நீ தான் நான் கேட்டதை  தர மாட்டேன்னு சொல்லிட்டியே எதுக்கு என் கூட இப்ப வந்து பேசுற என்றவள்.

 இந்த நேரத்துல இங்க விஜய் மாமா இருந்திருந்தால் நான் கேட்டதும் எனக்கு அங்கு இருக்கிற பூவ பொருச்சு கொடுத்திருப்பாரு அவருக்கு என் மேல அவ்வளவு ஆசை பாசம் இருக்கு ஆனா உனக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்ல ஒரு சின்ன பொண்ணு ஆசையா விரும்பி கேட்டுட்டாலே என்பதற்காகவாவது ஒரு  பூவையாச்சும் பறிச்சு கொடுத்தியா  கொடுத்தியா நீ.. என்று அவனைப் பார்த்தாள்.

 அவள் விஜய் பெயரை இழுத்ததும் வம்சிக்கு கோபம்  வந்துவிட்டது.

 இங்க பாரு விஜய் உனக்கு என்ன செய்வா எப்படி செய்வான்ல எனக்கு தெரியாது நான் இப்படித்தான் அவனையும் என்னையும் கம்பேர் பண்ணி பேசாத நானும் அவனும் ஒன்றாக பிறந்து உங்களை இருக்கலாம் ஆனால் அவனோட கேரக்டர் வேற என்னோட கேரக்டர் வேற என்று கோபமாக சொன்னவன் அதன்பிறகு  தாமரை இடம்  பேசவே இல்லை.

 அவன் கோபமாக இருப்பதை பார்த்து தாமரைக்கு கஷ்டமாகிவிட்டது அவசரப்பட்டு விஜயை இழுத்து வம்சையை கஷ்டப்படுத்தி விட்டோமோ இந்த இரண்டு மூன்று நாட்களில் தனக்கு என்ன தேவை என்று கேட்டு கேட்டு பார்த்து செய்தவனை ஒரு பூவிற்காக கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று தாமரைக்கு தோன்றியது.

 அவளாகவே இறங்கி வந்து அம்மு சாரி என்றால்.

 அதை காதில் வாங்கியும் அவளை திரும்பியும் பார்க்காமல் வெளியே  வெறித்தபடி  அமர்ந்திருந்தால் வம்சி.

 அம்மு ப்ளீஸ் இருக்காதா எனக்கு கஷ்டமா இருக்கு சாரி நான் தெரியாம பேசிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று மீண்டும் தாமரை அவனிடம் கெஞ்ச…

 அதற்கும் அவன் எதுவும் பேசவில்லை அதற்குள் அவர்கள் வரவேண்டிய இடமும் வர காரை விட்டு இறங்கி டிரைவருக்கு பணத்தை கொடுத்தவன் திரும்பி விறு விறுவென தங்கள் அறைக்கு நடக்க தாமரையும் காரில் இருந்து இறங்கி வேகமாக அவன் பின்னால் ஓடினாள்.

 இரவு இருவருக்கும் சாப்பிடுவதற்காக ரூமைக்கே உணவை வரவழைத்து விட்டு உணவு வந்ததும் தான் மட்டும் எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான் வம்சி தாமரையை சாப்பிடு என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

 மதியத்திலிருந்து சாப்பிடாததால் தாமரைக்கு  பசி வயிற்றை கிள்ளியது.

 என்ன அம்மு சாப்பாடு வந்துச்சு நீ மட்டும் சாப்பிட்டு இருக்க என்ன சாப்பிடணும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்குற என்றாள்.

 நான் ஒன்னும் விஜய் இல்ல ஒவ்வொருவனுக்கும் உன்னை தாங்கி பிடித்து இருக்கிறதுக்கு உனக்கு பச்ச போட்டு சாப்பிட இல்லன்னா போய் படுத்து தூங்கு என்றான்.

 தெரியாம விஜய் மாமாவ பத்தி உன்கிட்ட சொல்லிட்டேன் அதுக்காக இப்படியா கோவிச்சுக்க… சாப்பிடுன்னு சொல்றதுக்கு விஜய் மாமா தான் வரணும்னு அவசியம் இல்ல என் மேல அக்கறை இருந்தா என்ன சாப்பிடணும்னு நீயே கூப்பிட்டு இருப்ப இல்ல என்ன விட்டுட்டு சாப்பிட்டு இருக்க மாட்ட இதுதான் உனக்கும் விஜய் மாமாவுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம் என்றவள் கோபமாக எழுந்து சாப்பிடாமல் போய் கட்டிலில் போர்வை போர்த்தி படுத்துக் கொண்டாள்.

 மீண்டும் தன்னை விஜய்யுடன் இணைத்து பேசியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பாதியிலேயே தட்டை வைத்துவிட்டு கை கழுவி விட்டு கோபமாக எழுந்து அறையை விட்டு வெளியே செல்ல…

 கதவு சாற்றும் சத்தம் கேட்டு போர்வையை விலக்கி விட்டு எழுந்து  பார்த்தால். வம்சி அங்கு  இல்லாததை கண்டு அவளுக்கு மேலும் கோபம் வந்தது.

 இப்ப நான் என்ன சொல்லிட்டேன் ரொம்ப தான் பண்றான் இவன். போகட்டும்  என்ன மட்டும்   சாப்பிடுன்னு  ஒரு வார்த்தை கூட சொல்லல  அவனும் பட்டினியாகவே இருக்கட்டும் என்று கோவப்பட்டவள் திரும்பி போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தால்.

 இங்கே அரை கதவை திறந்து கொண்டு கோபமாக வெளியே வந்த வம்சி தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்று தன்னையே நினைத்து நொந்து கொண்டான்.

 தன் கோபத்தை அடக்க முடியாமல் என்ன செய்வது என்று குறுக்கும் நடுக்கம் நடந்தவன் சட்டத்தின் ஃபோனை எடுத்து டயல் செய்தான்.

மறுமுனையில் போனை அட்டென்ட் செய்து ஹலோ என்று குரல் வந்து அடுத்த நொடி 

 யோவ் தாத்தா உன்கிட்ட எனக்கு இப்ப கல்யாணம் வேணும்னு நான் கேட்டேனா இப்படி பிடிக்காதவளை கொண்டு வந்து என் தலையில் கட்டி வைத்துவிட்டு என்னை ஏன் டார்ச்சர் பண்ற… எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறா எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பண்றா…   என்னால தாமரையை  சமாளிக்கவே முடியல என்று பொதுப்படையாக தாமரை மீது குற்றம் சாட்டினாலே ஒழிய அவள் விஜய காதலிப்பதும் அதனால் தனக்கும் தாமரைக்கும்  இடையில் இருக்கும் இடைவெளியை பற்றியும்  கூறவில்லை.

 இப்ப என்னடா ஆயிருச்சு அவ குணத்தை உனக்கு தெரியுமே இன்னைக்கு நேத்தா பாத்துட்டு வரோம். சின்ன வயசுல இருந்து அவ அப்படித்தானே கொஞ்சம் பொறுத்துக்கோ சரியா போயிரும் என்று விக்ரம் தன் பேரனுக்கு ஆறுதல்  சொல்ல  முயன்றார்.

 உனக்கு என்ன உன் பொண்டாட்டி கூட அந்த ஜாலியா இருந்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்க நான் தான் எங்ககிட்ட மாட்டிகிட்டு திங்கடறேன் என்னோட கஷ்டம் என்ன எனக்கு தான் தெரியும் என்றான் அவரிடம்.

 விக்ரமின் போன் ஸ்பீக்கரில் போட்டு இருக்க அவர் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மீனு விக்ரம் கையில் இருந்து போனை வாங்கி இப்ப என்னதான்டா பிரச்சனை எதுக்கு இப்படி தைய தக்கன்னு குதிக்கிற இந்த நேரத்தில் போன் பண்ணி என்று கேட்டார்.

 நீயும் கூடத்தான் இருக்கிறாயா? நீயே கேளு என்றவன் இவர்கள் வெளியே சென்று இருந்த போது தாமரை பூவை கேட்டு அடம்பிடித்ததை பற்றி சொல்லி புழம்பினான் .

 இவ்ளோதானா இதுக்கு ஏன்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற நான் கூட என்னமோ ஏதோ பயந்துட்டேன். எனவே உன் தாத்தா புலம்பிட்டு இருக்காரு அவசரப்பட்டு அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குதா என்று கேட்காமல் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன் அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்களோ என்னவோன்னு தெரியல நீ அதுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு கூப்பிட்டு   இப்போ தாமரை பற்றி கம்பளைண்ட் பண்ற…

 உன் தாத்தாவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் டா அந்த மனுசனுக்கு உடம்பு சரியில்லை எதுவும் என்ன பண்றதுன்னு தெரியாம எப்படியாவது உங்கள் கல்யாணத்தை பார்க்கணும்னு உங்க ரெண்டு பேருக்கும்   கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு என்றார்.

 பாட்டி இப்ப எதுக்காக நீ சம்பந்தமே இல்லாம மன்னிப்பு கேட்கிற.. எனக்கு கல்யாணம் பண்ணி வச்சத பத்தி நான் எந்த கவலையும் படல அத முதல்ல புரிஞ்சுக்கோ அவ பிடிவாதத்தை என்னால தாங்க முடியல அவளை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப டென்ஷனா இருந்துச்சு அதான் என்ன பண்றதுன்னு தெரியாம தாத்தாவுக்கு போன் போட்டு திட்டிட்டேன் சாரி பாட்டி என்றான்.

 டேய் வம்சி நான் சொல்றத நீ கேட்பதானே என்றார் மீனு.

 நீங்க ரெண்டு பேரும் சொல்றத கேட்டதனால் தானே இங்கே வந்து நிற்கிறேன் சொல்லு என்னன்னு என்றான் கடுப்பாக.

 கோபப்படாதடா நான் சொல்றத பொறுமையா கேளு பொண்ணுங்க எதையுமே வெளிப்படையா மனசு தொடர்ந்து சொல்ல மாட்டாங்க அவங்க மனசுல என்ன இருக்குன்னு அந்த கடவுளால கூட கண்டுபிடிக்க முடியாது அவ உன்கிட்ட என்ன கேட்டா ஆசையே ஒரு பூ வேணும் தானே கேட்டா அது அங்கு அவர் சொன்ன இடத்திலிருந்து தான் எடுத்துக் கொடுக்கணுமா என்ன அந்த ஊர்ல வேற எங்கேயுமே பூ இல்லையா அவ கேட்ட பூ எங்க இருக்கோ கேட்டு அதை வாங்கி கொடுத்து இருந்தா இந்த நேரம் உனக்கு இவ்வளவு டென்ஷனை வந்து இருக்காது அவளும்  சந்தோஷப்பட்டு இருப்பாளே என்றார். 

 மீனு சொன்னதை கேட்டதும் அட இது ஏன் எனக்கு தோணாம போச்சு அவ கேட்டது என்ன ஒரு பூ வேணும் தானே கேட்டா என்று யோசித்தவன் சரி பாட்டி நாளைக்கு அவளையே கடைக்கு கூட்டிட்டு போய் அவளுக்கு எந்த பூ வேணுமோ அவளுக்கு பிடிச்சத வாங்கிக்க சொல்றேன் என்றான்.

 சரிடா தேவையில்லாமல் டென்ஷன் ஆகி நீயும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்தாத புரிஞ்சுக்கோ என்றவர் சரி போய் தூங்கு  என்று போனை வைத்தார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured