EPISODE 5
“அம்மா எனக்கு கொஞ்சம் TIREDAH இருக்கு .. குடிக்க எதுவும் கொண்டு வரிங்களா … ” என்று வீராவின் அருகில் சோபாவில் சரிந்தான்.
அப்போது தாமரை அதிதி ரூமிற்குள் இருந்து விஜய்யின் சத்தம் கேட்டு அவனை பார்ப்பதற்காக வெளியே வந்தாள் . அவளை பார்த்ததும் யாரா “ஏய் தாமரை நீ அப்போவே தலை வலிக்குதுன்னு சொன்னியே.. உனக்கும் குடிக்க சூடா எதுவும் எடுத்துட்டு வரட்டுமா ?” என்றாள் யாரா .
யாரா பேசிக்கொண்டு இருந்த திசையை ஆர்வமாக திரும்பி பார்த்த விஜய்க்கு அதிர்ச்சியானது முகமெல்லாம் அழுது வீங்கிப் போய் இருக்க… பாவாடை தாவணியில் விஜய்யை பார்த்தவாறு பொலிவிழந்த முகத்தோடு நடந்து வந்தவளின் கழுத்தில் மின்னிக்கொண்டு இருந்த புதிதாக கட்டி இருந்த மஞ்சள் கயிறை பார்த்தவன் உறைந்து போனான்.
அவன் புரியாமல் தாமரையையும், அவள் கழுத்தில் இருந்த தாலியையும் மாறி மாறி பார்த்தான் . அப்போது தன் ரூமில் இருந்து கீழே வந்த வம்சியை பார்த்து “அடடே !!வாங்க மருமகனே … நீங்களும் வந்துட்டீங்களா … புதுசா கல்யாணம் ஆனதும் ரெட்னு பெரும் வெட்கபட்டுட்டு ஆளுக்கு ஒரு ரூமுக்குள்ள போய் இவ்வளவு நேரம் இருந்துட்டீங்களா ” என்று தன் மாப்பிள்ளையை கேலி செய்ய…
தாமரை கழுத்தில் இருந்த தாலியையும் , அதே போல வம்சியை தேவ் புதிதாக மாப்பிள்ளை என்றும் அவனுக்கு திருமணம் ஆனதயும் சொல்லி கேட்டவனுக்கு ஓரளவுக்கு எல்லாம் புரிந்து போனது .
உலகமே தன் காலடியில் சுழன்று சுக்குநூறாக வெடித்தது போல உணர்ந்தவன் வலி நிறைந்த பார்வையோடு தாமரையை பார்த்தவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
தாமரையும் செல்லும் அவனையே விழிகளில் நீரோடு பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .
தன் ரூமிற்கு வந்த விஜய் இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தான் . உண்மையிலேயே தாமரையை வம்சி திருமணம் செய்துவிட்டானா என்று யோசித்தவன் தன் போனை எடுத்து தாமரைக்கு அழைத்தான் .
ஹாலில் சோபா அருகில் இருக்கியா மனதோடு தாமரை நின்று இருக்க வீராவும், தேவ்வும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டு இருந்தனர்.
“தேவ் எப்படியோ நீயும் நானும் சம்மந்தி ஆகிட்டோம் . நம்ம பசங்களுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் . இவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் ஆனதுனால யாருகிட்டயும் சொல்லமுடியலையே அதனால நம்ம ஜோசியரை இங்கயே வர சொல்லி இவங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் கொடுத்து பார்த்துடலாமே “என்றான்.
“சரி வீரா அப்போ நேரம் கடத்த வேணாம் நாம உடனே நம்ம ஜோசியரை வர சொல்லி பார்த்துடலாம் “என்றான் தேவ் .
வீரா திரும்பி அதிதியை பார்க்க..”ரெண்டு பேர் ஜாதகமும் என்கிட்டே இருக்கு நீங்க ஜோசியரை வர சொல்லிருங்க “என்றாள்.
வீராவும் அவர்கள் குடும்ப ஜோசியரை வீட்டிற்கு வர சொல்லி கால் செய்தான் .
அப்போது “அதி.. ஜோசியர் வரதுக்குள்ள முதல்ல எல்லாரையும் சாப்பிட சொல்லலாம் காலையில் இருந்து யாருமே சாப்பிடல.. “என்றாள் யாரா.
“ஆமா அதி எனக்கும் லைட்டா பசிக்குது “என்ற தேவ். “மாப்பிள்ளை நீங்களும் வாங்க … அம்மா தாமரை வாடா காலையில் இருந்து நீங்களும் எதுமே சாப்பிடல “என்று அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர வைத்தான்.
மற்றவர்களும் சாப்பிட வந்துவிட… அப்போது தாமரையின் போன் அடித்தது . ஹாலில் இருந்த டேபிளில் அவள் போன் இருக்கவும் . அதை எடுக்கும் மனநிலையில் தாமரை இல்லை. முழுவதுமாக ரிங் போய் கால் கட் ஆனது .
“ச்சே… ஏன் தாமரை போனை எடுக்கவே மாட்டேங்குறா… “என்று கோபப்பட்டவன் மீண்டும் அவளுக்கு அழைத்தான்.
மறுபடியும் தாமரையின் போன் அடிக்கவும் “ஏய் தாமரை.. உன்னோட போன் தான் அடிக்குது போல டி.. போ.. போய் யாருனு பாரு “என்றாள்.
யாரா சொன்னதும் தன்னிச்சையாக எழுந்து போனை எடுக்க ஹாலுக்கு சென்றவள் திரையில் விஜய் மாமா என்று வந்ததை பார்த்ததும் அவசரமாக போனை எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைத்தபடியே ஹாலில் இருந்து வெளியே கருடனுக்கு வந்திருந்தாள்.
“ஹ… ஹலோ…”என்று தயங்கிக்கொண்டே தாமரை பேச…
“தாமரை என்ன இது.. உனக்கும் வம்சிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு.. இங்க என்ன தான் நடக்குது . எனக்கு எதுமே புரியல. என்னை காதலிச்சிட்டு உன்னால எப்படி டி என் தம்பியையே கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது “என்றான் .
விஜய் பேசியது கேட்டு மறுநொடி “மா.. மாமா ..”என்று உடைந்து வெடித்து அழுதாள் தாமரை .
“என்னை மன்னிச்சிரு மாமா காலையில் குலதெய்வம் கோவிலில் வெச்சு தாத்தா திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி சீரியஸ் ஆகிட்டாரு. ஹாஸ்பிடல் போகலாம்னு கூப்பிட்டா.. வரமாட்டேன்னு பிடிவாதம் பண்ணி எனக்கும் வம்சிக்கும் கல்யாணம் செய்து அதை பார்த்த பிறகு தான் நான் எங்கயும் வருவேன். இல்ல இங்கயே நான் செத்துப்போறேன்னு சொல்லி எங்க ரெண்டு பேரையும் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வெச்சுட்டாரு மாமா… அந்த மாதிரி ஒரு இக்கட்டான நேரத்துல என்னால எதுமே பண்ண முடியல மாமா… “என்று அழுதாள்.
விஜய் அந்த பக்கம் அவள் வெடித்து அழுவதை கேட்டுக்கொண்டு இதயம் கனக்க நின்று இருந்தான். அவளை சமாதானம் செய்ய முடியாத நிலையில் அவன் இருக்க… இங்கே தாமரை நிற்காமல் அழுது கொண்டிருந்தாள். “ஏன் மாமா நீ கோவிலுக்கு வரல… நீ மட்டும் கோவிலுக்கு வந்திருந்தா இந்த நேரம் நான் உன்னை தான் கல்யாணம் செய்திருப்பேன் மாமா… ஏன் நீ வரல… “என்று அவள் அழ ..
தாமரையிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று இருந்தான் விஜய் .
அவள் அழுதுகொண்டே இருக்க… “தா.. தாமரை.. அழாத … அழாத “என்றவன் அதற்குள் அவன் அறைக்கதவு தட்டப்படவும் “ஒரு நிமிஷம் லைனில் இரு தாமரை “என்றவன் சென்று கதவை திறக்க… “விஜய் வாப்பா எல்லாரும் சாப்பிட உக்கார்ந்துட்டாங்க . நீயும் வந்தேன்னா நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம் “என்று யாரா விஜயை சாப்பிட அழைத்தாள்.
“இல்ல அத்தை எனக்கு பசிக்கல …லைட்டா தலை வலிக்குற மாதிரி இருக்கு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேனே “என்றான்.
” என்ன விஜய் இது வெறும் வயிறா இருந்தாலும் தலை வலிக்க தான் செய்யும் நீ வந்து கொஞ்சம் சாப்பிட்டு வந்து அப்பறோம் ரெஸ்ட் எடு “என்று அவனை வர சொன்னாள்.
எப்படியும் தன்னை சாப்பிட வைக்காமல் யாரா விடமாட்டாள் என்று புரிந்தவன் “சரி அத்தை வரேன் . ஒரு முக்கியமான போன் கால் பேசிட்டு இருக்கேன் . பேசிட்டு 2 மினிட்ஸ்ல் வந்துடறேன் . நீங்க போங்க “என்றான்.
“சரிப்பா சீக்கிரம் பேசிட்டு வந்திரு “என்று யாரா அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் அவசரமாக கதவை சாத்திவிட்டு தாமரையிடம் பேச.. அவள் லைனில் இல்லை . கால் கட் ஆகி இருந்தது . உடனே அவளுக்கு டயல் செய்தான் . ஒரு ரிங் போனதும் கால் கட் ஆனது .
இங்கே போன் பேசிக்கொண்டு இருந்த தாமரையை அழைக்க அதிதி வந்து இருந்ததாள் அவசரமாக காலை கட் செய்துவிட்டு அவளுடன் உள்ளே வந்துவிட்டாள் தாமரை . அவளை அழைத்து வந்த அதிதி வம்சி அருகில் இருந்த சேரில் அவளை அமரவைத்து உணவு பரிமாறினாள்.
அனைவரும் சாப்பிட துவங்க .. அப்போது டைனிங் டேபிளிற்கு விஜய் வந்தான். “வா விஜய் நீயும் வந்து உக்காரு சாப்பிடலாம் “என்று தன் மகனை அழைத்து அமர வைத்தவள் அவனுக்கும் உணவு பரிமாறினாள்.
சேரில் வந்து அமர்ந்த விஜய் டைனிங் டேபிளில் ஜோடியாக அமர்ந்து இருந்த வம்சியையும், தாமரையையும் பார்த்தான் . தாமரையும் விஜய்யை தான் பார்த்தாள்,. அவன் பார்வை அவளிடம் வர.. இருவரின் பார்வையும் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டது . வலி நிறைந்த விஜயின் பார்வையை சந்திக்க முடியாமல் தாமரை தன் பார்வையை தாழ்த்திக்கொள்ள…
விஜயும் அவளிடம் இருந்து தன் பார்வையை விலகிக்கொண்டான். அவன் அருகில் அமர்ந்து இருந்த வீரா “விஜய் நீ போன விஷயம் சக்சஸ்புல்லா முடிஞ்சதுக்கு வாழ்த்துக்கள் ப்பா… நீ இதே போல எல்லா விஷயத்துலயும் ஜெயிக்கணும் அது தான் இந்த அப்பாவோட ஆசை “என்றான்.
வீரா சொன்னதை கேட்டு விரக்தியாக புன்னகைத்த விஜய் சரி என்பது போல தலையை ஆட்டியவன் “பிஸினெஸில் ஜெயித்து என்ன செய்ய்ய போகிறேன் . என் வாழ்க்கையில் தோத்துப்போய் நிற்கிறேனே ” என்னும் ரீதியில் அமர்ந்து இருந்தான்.
“சரி சரி அப்பறோம் பேசிக்கலாம் எல்லாரும் . முதல்ல சாப்பிடுங்க …”என்று அதிதி அனைவரையும் சாப்பிட சொல்ல மற்றவர்கள் சப்பிப்ட்ட துவங்க விஜய்,வம்சி, தாமரை மட்டும் சாப்பிடாமல் அமர்ந்து இருக்க அதை பார்த்த யாரா “என்ன நீங்க மூணு பேரு மட்டும் சாப்பிடாம இருக்கீங்க.. முதல்ல சாப்பிடுங்க.. ஜோசியர் வந்திருவாரு “என்று அவர்களை அவசர படுத்தினாள்.
மூன்று பேரும் எதுவும் சொல்லாமல் பேருக்கு சாப்பிட்டு முடிக்கவும் ஜோசியர் வரவும் சரியாக இருந்தது.
வீராவும், தேவ்வும் சாப்பிட்டு முடித்து ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் ஜோசியரை பார்த்ததும் . டைனிங் டேபிள் பக்கம் திரும்பி “எல்லாரும் சாப்பிட்டாச்சா ஜோசியர் வந்துட்டாரு “என்றான் .
அதிதியும் , யாராவும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் ஒரு ரெண்டு நிமிஷம் வந்துடறோம் என்று அவசர அவசரமாக சாப்பிட துவங்கினர்.
சாப்பிட்டு முடித்ததும் விஜய் எழுந்து தன் ரூமிற்கு செல்ல போக.. “விஜய் நீயும் வாப்பா… நம்ம குடும்பத்துல நடந்த முதல் நல்ல காரியம் வம்சியும், தாமரையும் கல்யாணம் செய்துக்கிட்டது. நம்ம வீட்டுல நடக்குற எல்லா விஷயத்துலயும் மூத்தவனா நீ கலந்துக்கணும் . நியாபடி உனக்கு தான் முதல்ல கல்யாணம் செய்திருக்கும் . மிஸ் ஆகிருச்சு “என்று ஒருத்தப்பட்டான் வீரா.
“இல்ல ப்பா … நீங்கி எல்லாரும் பாருங்க . நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் “என்று தன் கட்டு போட்ட தலையை பிடித்துக்கொண்டு கூற…
அப்போது தான் தாமரையும், வம்சியும் ஹாலிற்கு யாராவுடன் வந்தார்கள் . தாமரை விஜய் தலையில் இருந்த கட்டை அப்போதுதான் கவனித்து இருந்தாள் அதை பார்த்ததும் பதறியவள் நேராக விஜய்யிடம் வந்து “ஐயோ .. மாமா என்ன இது ? உங்க தலையில் கட்டு போட்டிருக்கு… என்ன ஆச்சு உங்களுக்கு “என்று பதற்றமாக அவனிடம் சென்று அவன் தலையில் இருந்த கட்டை தொட்டு பார்த்து கேட்டாள் .
வந்ததில் இருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேசாதவள் இப்பொது விஜய்யின் தலையில் இருந்த கட்டை பார்த்ததும் இவ்வளவு பதட்டப்பட்டுவதை வக்குழி முதற்கொண்டு அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர் . அதை விஜய்யும் கவனித்தவன் “ஒன்னும் இல்லை தாமரை ஒரு சின்ன அச்சிடேன்ட் “என்று தன் தலையில் இருந்த அவள் கையை விளக்கிவிட்டான்.
“என்ன மாமா சொல்றிங்க.. அச்சிடேண்டா !.. எப்போ எப்படி ஆச்சு ? ரொம்ப பெரிய காயமா ? இங்க மட்டும் தான் அடிபட்டிருக்கா இல்லை வேற எங்கயும் அடிபட்டிருக்கா.. “என்று அவனை மேலும் கீழும் பார்த்தவள் . “காலையில் நான் உன்கிட்டே போன் பேசின அப்போ கூட நல்லாதானே மாமா பேசினே… அப்பறோம் எப்படி உனக்கு அச்சிடேன்ட் ஆச்சு . என்கிட்டே போன் பேசும்போது நீ சொல்லவே இல்லை “என்று அவனை மேலும் கீழும் மாறி மாறி பார்த்துக் கொண்டே அவன் கட்டை தொட்டு பார்த்தபடி கேட்டவள் அங்கிருந்த அனைவரும் அவளை கவனிப்பதை மறந்து விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“என்ன தாமரை விஜய் கூட நீ போன் பண்ணி பேசுனியா? எப்போ ? எதுக்கு? ” என்று வீரா அவளிடம் கேட்க.. அப்போது தான் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்றே தாமரைக்கு உரைத்தது . உடனே விஜய் நெற்றியில் இருந்த கையை சட்டென்று விலக்கிவிட்டு அவனை விட்டு தள்ளி நின்றவள் வீர கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திணறியபடி அவனை பார்த்தாள் .
