EPISODE 7
தாமரைக்கும், வம்சிக்கும் ஜோசியர் சொன்னது போல பரிகாரம் செய்யவும் இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்து அவர்கள் குலதெய்வம் கோவிலுக்கு இருவரையும் கூட்டிவந்தாயிற்று.
திடீர் என்று மௌலி செய்த செயலால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ததாள் யாருக்கும் தங்கள் சொல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இருவருக்கும் முறைப்படி ஐயரை வைத்து ஹோமம் வளர்த்தி முறையாக திருமணம் செய்ய முடிவெடுத்தவர்கள் அந்த திருமணத்திற்கு முறையாக தன் நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து சிம்பிளாக திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தனர் .
அதனால் அவர்களின் குலதெய்வம் கோவிலில் வம்சியின் கொள்ளு தாத்தா மவுலி அவர் மனைவிகள் செல்வியும், ஷிராவும் வந்திருக்க… மவுலியின் தாத்தா விக்ரமும், மீனுவும் அவர்களுடன் வந்திருந்தனர்.
வீராவுடன் ஒட்டி பிறந்த வினுவும், அவன் மனைவி ஜியாவும், அதன் பிறகு தாமரையின் அம்மா யாராவுடன் ஒட்டி பிறந்த வீணாவும் அவள் கணவன் லோகியும் வந்து இருந்தனர் .
வம்வியின் தந்தையுடன் அவனோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் வீரா. வினு இருவரும் ரெட்டை குழந்தைகள் ,அதன் பிறகு யாரா, வீணா இவர்களும் ஒட்டிப்பிறந்தவர்கள் தான் .
இதோடு தேவ்வின் அம்மா , அப்பா குரு, ப்ரியா. அவனுடன் பிறந்த ரிஷி அவன் மனைவி அன்வியும் வந்திருக்க… அவனுடைய மற்றொரு உடன் பிறந்த சகோதரி அதிதியின் மகன் வம்சிக்கு தான் அவள் மகள் தாமரையை திருமணம் செய்து கொடுக்க போகிறார்கள் .
இந்த திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெறுவதால் இவர்களை மட்டும் அழைத்து இருந்தனர் .
இந்த திருமணத்திற்கு இத்தனை பேர் வந்திருக்க… ஆனால் விஜய் மட்டும் வராமல் பொய்யான காரணம் சொல்லி இந்த திருமணத்திற்கு வராமல் பிசினெஸ் பார்க்க சென்று விட்டான்.
அவனுக்கு தாமரை கால் செய்து எப்படிய்யாவது நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்த சொல்லி அவனிடம் கெஞ்சினாள் .”விஜய் மாமா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க… நம்ம காதலை எல்லார்கிட்டயும் எடுத்து சொல்லி அவங்களுக்கு புரியாவையுங்க ” என்று கெஞ்சினாள் ,
ஆனால் விஜையோ அவளிடம் எதுவும் பேசவே இல்லை . அதன் பிறகு தாமரை எப்போது கால் செய்தாலும் அவள் காலை அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட்டான் .
ஜோசியர் சொன்னது போல தாமரை கழுத்தில் இருந்த தாலியை அவள் கைய்யினாலேயே கழட்டி கோவில் உண்டியலில் போடா சொன்னவர்கள் அவளை அலைதடுஹ சென்று குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்து மாலையும் கழுத்துமாக மணமேடையில் அழைத்து வந்து அமர வைத்து இருந்தனர் ,
அவள் முகத்தில் துளியும் சந்தோசம் இல்லை. எதிர்பாராத விதமாக நடந்த இந்த திருமணம் மீண்டும் அனைவர் முன்னிலையில் அவள் விருப்பம் இல்லாமல் . அவள் விருப்பம்கேட்டறியாமல் வம்சிக்கு திருமணம் செய்து வைக்க இருவர் வீட்டிலும் முடிவெடுத்திவிட… அதை எதிர்க்கும் சக்தி தாமரைக்கு இல்லாமல் போகவே இப்பொது பலிகடா ஆடு போல் கழுத்தில் மாலை அணிந்துகொண்டு வம்சியின் அருகில் அமர்ந்து இருந்தாள்,
இங்கே வம்சியின் நிலையோ வேறுமாதிரியாக இருந்தது . இருவருக்கும் இன்று திருமணம் பேசிமுடித்ததும் அந்த இடைப்பட்ட ஒரு நாளில் தாமரையுடன் பேசி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சித்தான் . அனால் அவன் போன் செய்து அவளிடம் பேச முயற்சிக்கையில் தாமரை போனை எடுக்கவில்லை . அதனால் ஒருவித குழப்பத்தோடு அமர்ந்து இருந்தான் .
மந்திரங்கள் பூஜை எல்லாம் முடிந்து ஐயர் தாலியை எடுத்து வம்சி கையில் கொடுத்து தாமரை கழுத்தில் தாலி கட்ட சொன்னார் . அவர் கொடுத்த தாலியை கையில் வாங்கிய வம்சி தாமரையை பார்த்தான். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருக்க.. அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழல விட்டான் .
அப்போது வீராவின் அருகில் விஜய் நின்று இருப்பதை பார்த்ததும் . இத்தனை நேர இருந்த குழப்பம் , மன நிம்மதி எல்லாம் நீங்கி தன் உடன் ஒட்டி பிறந்த தன் அன்னான் விஜய்யை பார்த்ததும் சந்தோஷமடைந்தவன் . முகம் சிரிப்பை தத்தெடுத்துக்கொண்டது.
ஆனால் அதை கவனிக்கும் நிலையில் விஜய் இப்பொது இல்லை . எந்த திருமணத்தை பார்க்கக்கூடாது என்று பொய் சொல்லி சென்று இருந்தானோ.. அதே திருமணத்தை வந்து பார்த்தே ஆகவேண்டும் என்று் வீரா ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட… வேரு வழி இல்லாமல் இங்கே வந்திருந்தான் .
“என்ன தம்பி அப்படி பாக்குறீங்க… இவ்வளவு நேரம் உங்க முகத்தில் இலலத சிரிப்பு யாரை பார்த்து வந்தது . நேரம் ஆகிட்டே போகுது முதல்ல தாலியை பொண்ணு கழுத்துல கடுங்கோ அப்பறோம் வந்தவாளை எல்லாம் கவனிக்கலாம்” என்று அவனை அவசர படுத்த…
“நான் தூக்கு கயித்தை என் கழுத்தில் வாங்குறதுக்கு இந்த அய்யருக்கு எவ்வளவு அவசரம்” தலை நிமிராமல் தன் நிலை நினைத்து நொந்தது கொண்டு இருந்தாள் தாமரை .
ஐயரே வந்திருக்குறது யாரோ விருந்தாளி கிடையாது . என் கூட ஒட்டி பிறந்த அண்ணன் அவரை பார்த்ததும் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு . அந்த நிம்மதி என் முகத்தில் சிரிப்பை காட்டி இருக்கு ” என்று சொன்னவன் திரும்பி தாமரை கழுத்தில் தாலியை கட்ட … அந்த அழகான தருணத்தை உணரும் நிலையில் இல்லாத தாமரை
வம்சியின் அண்ணன் வந்திருப்பதாக கூறவும் தாமரை ஒருவித எதிர்பார்ப்போடு நிமிர்ந்து விஜய்யை பார்த்தாள் . ஆனால் விஜய்யோ எதுவும் செய்யாமல் கையில் இருந்த அட்சதையை அவர்கள் இருவர் மீதும் இயந்திரத்தனமாக தூவிக்கொண்டு இருந்தான் ,
தன் திருமணத்தை நிறுத்த வர சொன்னாள் இப்படி தாலி கட்டுவதற்கு முன்பே அட்சதை தூவுகிறானே என்று அவனை நொந்து பொய் பார்த்தவளுக்கு அப்போதுதான் தன் கழுத்தில் வம்சி தாலி கட்டுவதையே உணர்ந்தாள் . அதுவும் வம்சியின் நெருக்கத்தை உணர்ந்து தாமரை நிமிர்ந்து பார்க்க அவள் பார்க்கும்போது மூன்று முடிச்சிட்டு மனைவியாகியவன் தாமரையை பார்த்தான்.
அவன் பார்வையை அவள் பார்வை எதிர்கொள்ள … உடனே கண்களை தாழ்த்தி குனிந்து தன் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் தாலியை பார்த்தால் . அதை பார்த்ததும் தாமரை கண்களில் இருந்துஹ் கண்ணீர் அருவி போல ஊற்றெடுத்தது அவள் கன்னம் நனைத்து வலிந்து தாடையில் ஒன்று கூடி சரியாக அவள் கழுத்தில் வம்சி கட்டிய தாலியில் போய் அந்த கண்ணீர் துளிகள் விழுந்து அவளுக்கு அந்த தாலியை மறைத்தது
அவர்கள் தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை தன் கண் முன்னாலேயே தன் தம்பி வம்சி திருமணம் செய்ததை பார்த்து அதற்கு மேல் அங்கே நிக்க முடியாதவன் தன் அருகில் நின்று இருந்த வீராவிடம்
“இப்போ நிம்மதியா உங்களுக்கு. நான் எவ்வ்ளவு முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்னு தெறியுமா . இப்படி என்னை இந்த கல்யாணத்துக்கு உவந்து ஆகணும்னு பிடிவாதம் பண்ணுணிங்கனு வந்தேன் . இப்போ நான் போகலாமா ” என்றான் கடுமையாக .
“என்ன டா அவசரம் கல்யாணத்துக்கு வந்தா மட்டும் போதுமா வேற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இன்னும் நிறைய இருக்கு . அதை பார்க்க வேணாமா .. நீ வந்ததுல இருந்து காலில் சுடுதண்ணி ஊத்தினவன் மாதிரி அவசர படுறியே.. உனக்கு இன்னிக்கு இருக்குற மீட்டிங்கை எல்லாம் நான் அர்ஷ் கிட்டே போன் பண்ணி சொல்லிட்டேன் . நீ அதை பத்தி எதுவும் கவலைப்பட வேண்டாம் . நீ பேசாம அமைதியா எங்க கூட இரு அது போதும் வேற எதுவும் செய்ய வேண்டாம் “என்றான்.
வீரர் இவ்வளவு சொன்ன பிறகும் விஜய்யால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது ” சரிப்பா… நான் எங்கயும் போகல போதுமா “என்றான் கோபமாக.
தாலி கட்டி முடித்ததும் மற்ற சடங்குகள் எல்லாம் முடிக்கப்பட்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்துவர…. அதுவரை பொறுமையாக அவர்களுடன் வந்த விஜய் அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் அதிதியிடம் வந்தவன் “அம்மா நான் ஆபீஸ் கிளம்புறேன். அப்பா நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேங்குறார் . நான் ஆபீஸ் கிளம்புறேன் . அப்பா வந்து ஏதாவது கேட்டாங்கன்னா . நீங்க எதியாவது சொல்லி சமாளிச்சுக்கோங்க “என்றவன் அவன் அரை சென்று பிரெஷ் அஆகிவிட்டு கிளம்பி இருந்தான் .
வம்சியையும், தாமரையையம் அழைத்தது வந்து ஹாலில் அமர வைத்தவர்கள் அவர்கள் இருவருக்கும் பாலும் பழமும் கொண்டுவந்து கொடுத்தது மாற்றி மாற்றி ஊட்டிவிட சொன்னாள் அவர்கள் பாட்டி மீனு .
மீனு கொடுத்த பழத்தை இருவரும் வாங்காமல் அமர்ந்து இருக்க.. “தாமரை இந்தா இதை என் பேரனுக்கு ஊட்டி விடு “என்று அவள் கையில் திணிக்க…
வேறு வழியே இல்லாமல் அந்த பழத்தை வாங்கி வம்சியின் வாய் அருகில் கொண்டு நீட்டினாள் . ஆனால் வம்சியோ வாயை திறக்காமல் அமைதியாக இறுகிய முகத்தோடு அமர்ந்து இருந்தான் .
“டேய் என்ன டா பகலாய் உன் பொண்டாட்டி கூட கனவுல டூயட் படுவது எல்லாம் போதும் முதல்ல வாயை திறந்து அந்த பலத்தை வாங்கு டா… என் பெத்தடி எவ்வளவு நேரம் தான் உனக்காக பழத்தை கையில் பிடிச்சிட்டு இருப்பா ” என்று வம்சியை அதட்ட…
அடுத்த நிமிடம் அவன் வாயை திறந்து தாமரை ஊட்டிய பழத்தை வாங்கிக்கொண்டான். அதே போல வம்சியும் ஒரு பழத்தை எடுத்து தாமரை வாயின் முன்பு வைக்க … அவளோ தன்னுடைய நிலையை நினைத்து நொந்துகொண்டே வம்சி ஊட்டிய பழத்தை வாங்கிக்கொண்டாள்.
மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்தயிருக்க இருவரையும் ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தவர்கள் இரவு உணவை இருவருக்கும் கொடுத்து முடித்துவிட்டு தாமரையின் சித்தப்பாவின் மகள் சின்மயியை வைத்து முதல் இரவுக்கு தயாராக தாமரையை ரெடி பண்ண அனுப்பி இருந்தனர்.
அவளும் கரும சிறத்தையாக தாமரையை அழகாக அலங்காரம் செய்து அதிதி ரூமில் இருந்து வெளியே அழைத்துவர…
அந்த நேரம் ஆஃபிஸில் இருந்து வீட்டிற்க்கு வந்த விஜய் தாமரையின் இந்த கோலம் கண்டு உறைந்தவன் அவளுக்கும் வம்சிக்கும் இன்று முதல் இரவு என்று நினைவிற்கு வர…
அடுத்த நிமிடம் அங்கே நிற்க பிடிக்காமல் வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டான். அதே போல தாமரையும் விஜய்யை பார்த்தவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுகொண்டே அதிதி அறைக்குள் ஓட…
இங்கே என்ன நடக்கிறது என்று அதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
சின்மயியை அனுப்பி தாமரையிடம் பேச செய்தவர்கள் அவள் இந்த திடீர் திருமணத்தால் இப்படி இருக்கிறால் என்று நினைத்து ஆளுக்கு ஒருபுறம் அட்வைஸ் செய்து அவளை சமாதானம் செய்வதாய் நினைத்து ஏதேதோ பேசி வம்சியின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அவன் அறைக்குள் வந்த தாமரை அங்கே கட்டிலில் அமர்ந்து இருந்த வம்சியை பார்த்தாள்.
அவளை பார்த்ததும் எழுந்து அவளிடம் இந்த திருமணம் பற்றி பேச வம்சி வர… அதற்குள்ளாக அவன் முன்னாள் வந்த தாமரை.
“இங்கே பாருங்க வம்சி மாமா. அந்த தாத்தா செய்த வேலையாள தான் நான் உங்களை கல்யாணம் செய்துக்க வேண்டி வந்திருச்சு. மத்தபடி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்று அவனை பார்த்தாள்.
வம்சி அவளையே பார்த்துக்கொண்டு இருக்க… “ என்ன மாமா அப்படி பாக்குறீங்க.. நிஜமாவே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நானும் விஜய் மாமாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்குறோம். என்னையும் என் விஜய் மாமாவையும் பிரிச்சிராதீங்க ப்ளீஸ் “ என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.
தாமரை தன் அண்ணன் விஜய்யை காதலிக்கிறேன் என்று சொன்னது கேட்டு அதிர்ந்த வம்சி அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
