Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 9

என்னை கொண்டாட பிறந்தவனே 9

by Layas Tamil Novel
292 views

EPISODE 9

தாமரை வம்சியின் அறைக்குள் அவன் மனைவியாக முதலிரவுக்கு செல்வதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு அங்கு இருப்புக்  கொள்ள முடியவில்லை அவன்  மனம்  மிகவும் வருத்தப்பட்டது .

அவனால் அங்கு இருக்கவே முடியவில்லை அந்த இரவில்  வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்றால் அவன் வீட்டில்  ஏன் இதற்கு என்று கேள்விகள் எழும்  என பல்லை கடித்துக் கொண்டு  இரவு  முழுவதும் வீட்டிலேயே இருந்துவிட்டான் .

காலையிலிருந்து வீட்டில் ஒரு பரபரப்பு புதுமனை தம்பதிகளுக்கு விருந்து வைக்கிறேன் என்று மொத்த நம்பர் கூட்டத்தையும் வீராவும் அதித்தியும் யாராவும் தேவ்வும்  கூட்டி இருக்க… இங்கிருந்து தப்பித்து விஜயால் வெளியே வரவே முடியவில்லை .

காலையில் வந்திருந்தவர்கள்  மதிய  விருந்தையும் முடித்துவிட்டு  மாலை போல தான் ஒவ்வொருவராக அவர்கள் வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தனர். அதுவரை   வம்சியோடு சேர்த்து அருகருகே நிற்க்க வைக்கப்பட்டிருந்த தாமரையை  விஜய்யால்  பார்க்க முடியவில்லை .

தனியாக தன்னறையில் அவனை நிறுத்தவும் விடவில்லை வந்திருந்தவர்களே கவனிக்க சொல்வதும் வரவேற்கவும் அவனை விழித்து வந்து  ஹாலில் நிற்க வைத்து விட்டான் வீரா  .

ஆபீஸ் விஷயமாக அர்ஷ்  விஜய்க்கு இரண்டு மூன்று முறை கால் செய்தும் கூட  அவனிடம் சரியாக  விஜய்யால்  பேச முடியவில்லை  . ஒரு வழியாக  மூச்சை பிடித்துக் கொண்டிருந்தவன்  சுவாசிக்க நேரம் கிடைத்தது போல மாலை போல ஆபீசை காரணம் காட்டி வீட்டை விட்டு கிளம்பி இருந்தான்  விஜய் .

வீட்டிலிருந்து கிளம்பியவன் நீரே எங்கு செல்வது என்று புரியாமல் முதலில் சென்றவர் அவருடைய ஆபீசுக்கு தான் . அவன் ஆபிஸிற்கு  வந்ததும் அர்ஸ் முக்கியமான பைல்களை உங்களிடம் கொடுத்து அதில் கையொப்பம் வாங்கிக் கொண்டான் அவையெல்லாம் இன்று அனுப்ப வேண்டிய முக்கியமான டாக்குமென்ட்கள்.

தாமரையை விஜய் காதலித்தது அர்ஷுக்கு கூட தெரியாது அதனால அவன் அதை பற்றி எதுவும் அவ்ளோவாக கேட்டுக் கொள்ளவில்லை.

“என்ன விஜய் வீட்ல ஒரே விசேஷம்தான்  அதனாலதான் உன்னை போன்ல கூட வாழ பிடிக்கவே முடியல அவ்வளவு பிஸியா மாப்பிள்ளையும் பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று விவரம் புரியாமல்  அவனிடம் அர்ஷ் கேட்டு வைக்க…

அவனிடம் தன் மனக்குமுறையில் கூட சொல்ல முடியாமல் அவன் கேட்ட கேள்விக்கு பதிலும் கூற முடியாமல் பைலை  வெறித்தபடி   அமர்ந்திருந்தான்  விஜய் .

அது புரியாமல்  அர்ஷ் மேலும் வம்சி பற்றியும் தாமரை பற்றியும் பேசிக் கொண்டிருக்க… அதற்கு மேல் அங்கே இருந்தால் தனக்கு தலையே  வெடித்து விடும்  என்று உணர்ந்த விஜய் அங்கிருந்து கிளம்பினான் .

விஜய் திடீரென்று  கிளம்பிச் செல்ல அவன்  பின்னால்  ஓடிவந்த  அர்ஷ்  “டே அந்த பொண்ணு கூட்டிட்டு வந்து கெஸ்ட் ஹவுஸில் வைத்து இரண்டு நாளைக்கு மேல ஆகுது. நான் இனியவை போய் பார்க்கும் போதெல்லாம் உன்ன பத்தி தான் கேட்டுட்டே இருக்கா.  நீ போய் அவள பாத்துட்டு வந்தா அவளுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் . இனியாவும் தனியாவே அங்கே  என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கா ” என்றான் .

இனியா !! என்று புருவம்  சுருக்கி அர்ஷை திரும்பி பார்த்தவன் அப்போதுதான் துபாயிலிருந்து வரும்போது இனியாவை காப்பாற்றி இங்கே அழைத்து வந்தது அவளை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தது என்று நினைவே அவனுக்கு வந்தது .

தாமரைக்கு  திருமணம் நடந்த பிறகு ஏற்பட்ட டென்ஷனில் இனியாவை மறந்திருந்தான்  விஜய் .

“சரி நான் போய் பார்க்கிறேன்” என்று அங்கிருந்து கிளம்பினான் .

தன் ஆபீஸ்ல இருந்து கிளம்பி பீச் ஹவுஸ்  வரும் வழியில் தான்  இனியா சேதுவிடம் பேசிவிட்டு சிரித்தபடி கடற்கரையை விட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றதை கவனித்தான் .

அவள்  சேதுவிடம்  என்ன பேசினாள்  என்று விஜய்க்கு தெரியாது. ஆனால் அவனிடம் அவள் சிரித்து பேசியது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஏற்கனவே தாமரை மீது அவள் உன்னை திருமணத்தின் மீதும் அதிர்ச்சியில் இருந்த விஜய்க்கு ஏனோ இனியா செய்துவிடும் சிரித்து பேசியது கோபத்தை வரவழைத்தது .

அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தபடி அவர் பின்னால் காரை ஓட்டிக்கொண்டே அவளுக்கு பாதுகாப்பாக இந்த கடற்கரை சாலை முழுவதும் அவள் பின்னால் சென்றான் .

தன் கெஸ்ட் ஹவுஸ்  வாயிலில் அவள் நுழைந்த மறுநொடி காரை விட்டு இறங்கியவன். இனியாவின் முன்பு  கோபமாக வந்து நிற்க …

இங்கே வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விஜய்யை  சந்தித்ததும் சந்தோஷமானவள் அவனை பார்த்து   “சார் வந்துட்டீங்களா ?  ரெண்டு நாளா உங்களை  பார்க்க முடியலைன்னு அண்ணா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். எப்படி இருக்கீங்க சார். ரொம்ப தேங்க்ஸ் என்ன பாதுகாப்பா உங்கள் இடத்தில் தங்க வெச்சதுக்கு ” என்று அதை சிரித்து பேச ..

இனியா சந்தோஷமாக அவனிடம் பேச ஆனால் விஜய் அவள்  பேசியதெல்லாம் காதில் வாங்காதவனாக  அவள் மேல் போர்த்தி இருந்த சேதுவின் சட்டையை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனிக்காத இனியா  “என்ன சார்  நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க எதுவும் பேசாம இப்படி முறைச்சு பார்க்கிறீங்க” என்று சிரித்தபடி பேச ..

அப்போது அவள் கொஞ்சம் எதிர்பாராத நேரத்தில் அவள் மேல் போர்த்தியிருந்த  சேதுவின்  சட்டையை பிடுங்கி தூர வீசியவன் தான் அணிந்திருந்த சட்டையை வேகமாக கழற்றி  அவள் மீது  வீசி “உன்னை யாரு முதல்ல வீட்டு விட்டு வெளியே போக சொன்னது” என்று கோபமாக பேசியவன்  .   இனியாவின்  கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் .

விஜய்யின் இந்த கோபமான முகத்தை பார்த்த இனியாவிற்கு  ஒன்றும் புரியவில்லை அவன் ஏன் ஏன்  இப்படி நடந்து கொள்கிறான் என்று யோசித்தபடியே அவன்  இழுத்த இழுப்பிற்கு அதன் பின்னால் ஓடினாள் . 

வீட்டுக்குள் வந்ததும் அவளை சோபாவில் தள்ளிவிட்ட விஜய்  “யாரை  கேட்டு நீ வீட்டை விட்டு  வெளியே போன… இதுக்காகத்தான் உன்ன கூட்டிட்டு வந்து இங்க பாதுகாப்பா  வச்சிருக்கேனா..  அவனுங்க எல்லாம்  யாருன்னு உனக்கு தெரியுமா? அவங்க எப்படிப்பட்ட ஆளுங்கன்னு  உனக்கு தெரியுமா? நீ என்னவோ அவனை ரொம்ப நாளா தெரிஞ்சவ மாதிரி சிரிச்சு பேசிகிட்டு வர… உன்  மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க… இப்படி ஊர் பெயர் தெரியாத இடத்துக்கு வந்து அந்த ரவுடிங்ககிட்ட போய் நீ சிரிச்சு பேசி பழகுறதா இருந்திருந்தா பேசாம நீ துபாயில் இருந்திருக்கலாமே . உன்ன விலைக்கு வாங்கினவன் கூட சந்தோஷமா கூத்தடிச்சிட்டு கும்மாளம் போட்டுட்டு இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு இங்க வந்து எதுக்கு என் உயிரை எடுக்கிற… இங்க வந்து அவனுங்க உன்ன எதுவும் பண்ணி உனக்கு ஆபத்து வந்துருச்சுன்னா அது என் தலையில தான் வந்து விழும்”  என்று அவளிடம்  கோபமாக விஜய் பேச …

விஜய் தன்னை திட்டியதை கூட இனியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் அவன்  தன்னை ஏலத்தில் விலைக்கு வாங்கியவுடன் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்று அவன் சொன்ன வார்த்தை தான் அவளுக்கு வலித்தது .

“சார் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க… நான் வேணும்னு அவங்க கிட்டே சிரிச்சு பேசல.. “என்று இனியா மேலும் கூற வர..

“இங்க பாரு நீ அவனுங்க கிட்டே வேணும்னு பேசுனியோ.. இல்ல விருப்பப்பட்டு பேசுனியோ இதெல்லாம் எனக்கு முக்கியமே இல்ல… நீ என் வீட்டுல என்னோட பாதுகாப்புல இருக்க… உனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி உன்னை அங்கே தங்க வைக்குற வரைக்கும் நீ அமைதியா இரு அது போதும். அப்பறோம் நீ இங்கே இருந்து வெளியே போய் யார் கூட வேணும்னாலும் சிரிச்சு பேசு .. எங்க வேணும்ன்னாலும்  போ யாரும் உன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க ” என்றான்.

தன்னை காப்பாற்றிய விஜய்யை அவள் மனதில் இதுவரை யாருக்கும் தராத ஒரு அந்தஸ்தை கொடுத்து அவனை உயரத்தில் வைத்து இருந்த இனியாவிற்கு அவன் வாயில் இருந்து வந்த நோகடிக்கும் விஷ வார்த்தைகள் அவளை வருத்தமடைய செய்தது . அவன் மீது அவளுக்கு கோபமும் வரத்தான் செய்தது .

ஆனால் தன் கோபத்தை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை இனியா . அவன் இப்பொது இருக்கும் மனநிலைக்கு அவனிடம் இப்பொது பேசுவது சரி இருக்காது என்று நினைத்தவள் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு அவன் முன்னாள் தல  கவிழ்ந்து கண்களில் வழிந்த நீர் அவள் கட்டிக்கொண்டு இருந்த கைகளில் சொட்டு  சொட்டாக விழுந்து கொண்டு இருக்க… அப்படியே நின்று இருந்தாள்.

இவ்வளவு நேரம் அந்த வீடே அதிரும் படி கத்திக்கொண்டு இருந்த விஜய் இனியா அவன்  பேசியது  எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்று இருப்பதை பார்த்தான் .

வயது  தான் 18 ஐக் கடந்திருந்தது அவளுக்கு. ஆனால் விஜய்யின் மன முதிர்ச்சிக்கும், இனியாவின் வயதிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது . அவனுக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம் இருக்கும் . அவள் இப்படி நிற்பதை பார்த்ததும் இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவன் அப்படியே பனி போல மனம் இளக ஆரம்பித்து இருந்தான்.

தன் தலையை அழுந்த கோதி தன் நிலையை சமன் செய்து கொண்டவன் . அவள் அருகில் வந்து சோபாவில் அமர்ந்தவன் “இனியா ” என்று அழைத்தான்.

அவன் தன் பெயரை கேட்டதும் அமைதியாக அலுத்து கொண்டு இருந்தவளின் அழுகை விசும்பலாக மாற துவங்கியது .

தன்னை சுற்றிலும் அப்போது தான் கவனித்தான் விஜய் . அவன் இவ்வளவு நேரம் இனியாவை திட்டியதை அவளிடம் கடிந்து கொண்டதை எல்லாம் அவன் வீடு வேலையாட்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர். அவன் பார்வை தங்கள் மீது விழவும் அனைவரும் சென்று அவரவர் வேலையை பார்க்க துவங்கினர்.

இனியா இன்னமும் அப்படியே நின்று இருப்பதை பார்த்தவன் “இனியா… “என்று சற்று சத்தமாக அழைத்தான்.

அவன் குரலை கேட்டதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் . கண்கள் இரண்டிலும் குளம் போல நீர் நீங்கி இருக்க.. அதை பார்த்த பிறகு தான் அவள் மனதை காயம் ஆகும் அளவிற்கு தான் அவளை வார்த்தைகளால் வதைத்து இருக்கிறோம் என்று விஜய்க்கு தோன்றியது .

சோபாவில் இருந்து எழுந்து அவள் எதிரே வந்து நின்றவன் “சாரி இனியா நான் ஏதோ டென்ஷன்ல உன்னை இப்டி திட்டிட்டேன் . என்னை மன்னிச்சிரு ” என்றான்.

இப்போதும் இனியா அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக கண்ணீர் வடித்துக்கொண்டு நின்று இருக்க..

“இனியா நான் உன்னை வேணும்னு திட்டல … அவனுங்க எவ்வளவு பெரிய ரௌடிங்க தெரியுமா.. அவங்களால உனக்கு எதுவம் ஆபத்து வந்திருமோன்னு நினைச்சு தான் நான் உன்னை திட்டினேன்.” என்றான்.

“நீங்க பொய் சொல்றிங்க… அவங்கள பார்த்தா அப்படி தெரியல.. நல்லவங் மாதிரி தான் தெரியுது ” என்றாள் வெள்ளந்தியாக .

அதை கேட்ட விஜய்க்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது “ஏய் இடியட் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா… துபாய்யில உன்னை ஏலம் போட்டு வித்தவங்களை அடையாளம் தெரிஜுக்க முடிஞ்ச உன்னால இந்த ரௌடி பசங்களை பத்தி தெரிஞ்சுக்க  முடியல… அங்கே ஏலம் போட்டு வித்தவங்க மாதிரி எல்லாம் இவனுங்க கிடையாது . இவனுங்க எல்லாம் உன்னை பார்த்த மாத்திரத்துலயே தூக்கிட்டு போய்… ” என்று சொல்ல வந்தவன் .

அவன் பேசியதை அரண்ட விழிகளோடு பார்த்துக்கொண்டு இருந்த இனியாவை கண்டு அதற்கு மேல் எதுவும் பேச பிடிக்காதவன் “இங்கே பாரு அவனுங்க நல்லவங்க கிடையாது . இப்போதைக்கு இது தான் உனக்கு புரியவைக்க முடியும்னு நினைக்குறேன் “என்றவன் .

“முதல்ல அழாதே .. ” என்றான்.

அவள் விசும்பல் முன்பை விட இப்பொது அதிகம் ஆகி இருக்க.. “ம்ப்ச் … இப்ப்போ நீ அழுகையை நிறுத்த போறியா? இல்லையா?” என்றான் சற்று அதட்டலாக .

அவன் அதட்டலில் பயந்தவன் வாயை திறந்து சத்தமாக “ங்கே….” என்று அழ ஆரம்பித்தாள் …

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured