Home FULL NOVEL BOOK (FREE)என்னை கொண்டாட பிறந்தவனே PART-2 FULL NOVEL BOOK

என்னை கொண்டாட பிறந்தவனே PART-2 FULL NOVEL BOOK

by Layas Tamil Novel
450 views

ENNAI 2-1

“மல்லிகா அக்கா இன்னும் என்ன செய்றீங்க உள்ள… சீக்கிரம் ஆரத்தி தட்டு எடுத்துட்டு வாங்க. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது” என்று வாசலில் நின்று அர்ஷ் கிச்சனை நோக்கி குரல் கொடுத்தான்.

“இதோ  வந்துட்டேன் தம்பி!!” என முகம் முழுக்க சந்தோஷத்தோடு கையில் ஆர்த்தி தட்டுடன் வேகவேகமாக வாசலுக்கு வந்தவர். அங்கே வாசலில் மாலையில் கழுத்துமாக ஜோடியாக நின்றிருந்த விஜய், இனியா இருவரையும் பார்த்து சந்தோஷப்பட்டவர். வேகமாக வந்து அவர்கள் இருவருக்கும் ஆரத்தி சுற்றி திலகம் இட்டு உள்ளே அழைத்தார்.

இனியாவின் முகம் எந்த ஒரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்ற விஜய்யின் பின்னால் சென்றாள் .

வீட்டிற்குள் வந்த விஜய் கழுத்தில் இருந்து மாலையை கழட்டி சோபாவில் போட்டவனின் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

விஜய்யிடம் என்ன பேசுவது… எப்படி கேட்பது  என்று தெரியாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த  இனியா மாலையை கழட்டி அவன் வைத்திருந்த மாலைக்கு அருகே வைத்துவிட்டு அவள் அறைக்குள் சென்றுவிட… இவர்கள் இருவரின் போக்கையும் பார்த்த அர்ஷிற்கு தான்  ஒன்றும் புரியவில்லை.

” என் ஆள் கூட கல்யாணம் பண்ணிட்டு வந்து இவங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நான் நினைச்சேன். ஆனா  இவன் என்னடா அத்தைபொண்ணு கூட கல்யாணத்தை வெச்சுகிட்டு  இனியாவை கூட்டிட்டு வந்து இவளைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னது மட்டும் இல்லாம இனியா கர்ப்பமா இருக்கான்னு ஒரு குண்டை தூக்கி போட்டதும் இல்லாம…  அத்தன பேர் முன்னாடி ஒத்தக்  கால்ல நின்னு கழுத்துல தாலி  கட்டிட்டான் .”

“மொத்த குடும்பத்தையும் தலை குனிய வச்சுட்டான்னு யாரும் இவனை இவன ஏத்துக்கல… அவங்க மேலையும் தப்பு இருக்கு தானே.. திடீர்னு அவனுக்கு போனை போட்டு நாளைக்கு காலைல உனக்கும் வினோவுக்கும்  குலதெய்வம் கோயில்ல கல்யாணம்னு சொன்னா.. இவன் என்ன பண்ணுவான்.

“இவனுக்கு கல்யாணம் பிடிக்கலையின்னா அதை நேரடியா சொல்ல வேண்டியது தானே… அதுக்காக இப்படியா இனியாவ கூட்டிட்டு வந்து நின்னு அவ கர்ப்பமா இருக்கா.  அவ வயித்துல வளர குழந்தைக்கு நான் தான் காரணம்னு அப்பட்டமா ஒரு பொய் சொல்லி இனியா  கழுத்துல தாலியை கட்டி அவள பொண்டாட்டியா இங்க கூட்டிட்டு வந்துட்டானே!!  இவன என்னன்னு சொல்றது எந்த லிஸ்ட்ல தான் இவன  எடுக்கிறது” என்று அர்ஷ்  தனக்குள்ளேயே யோசித்தபடி விஜய் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தான்.

“தம்பி… சாப்பிட்ட எதுவும் டிபன் ரெடி பண்ணட்டுமா?” என்று  மல்லிகா அங்கு வர… 

“அத முதல்ல செய்யுங்க அக்கா…  இவங்க ரெண்டு பேரும் இன்னும் எதுவும் சாப்பிடல நீங்க சமையல் வேலையை பாருங்க” என்றான் அர்ஷ்.

மல்லிகா தலையாட்டிவிட்டு மலமலவென கிச்சனில் அவருக்கு உதவி செய்பவர்களிடம் காலை டிபன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு அதற்கான வேலைகளில் இறங்கினார்.

“இங்க பாருங்க நம்ம ஐயாவுக்கும், இனியா பாப்பாவுக்கு கல்யாணம் இன்னிக்கு தான் ஆகியிருக்கு. அவங்களுக்கு கல்யாண விருந்து செஞ்சு தடபுடல் ஆக்கிடனும் சரியா.. ” என்று வேலையாட்களிடம் சொல்லி வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.

 விஜய் திடீரென எழுந்தவன் நேராக இனியாவின் அறைக்குள்  சென்று கதவை சாற்றிக் கொண்டான்.

“இது என்னடா  பட்டப்பகல்லையேவா…  இப்படி நான்  இருக்கும் போதே இனியா ரூம்குள்ள போய் கதவை சாத்துவானா… பகல்லையே ஃபஸ்ட் நைட் கொண்டாடுறானா  இருக்கும். ஒருவேள… எல்லார்கிட்டயும் இனியா கர்ப்பமாக இருக்கான்னு பொய் சொல்லி இருக்கானே அதை நிஜமாக்கனும்னு காரியத்துல  இறங்கிட்டானோ”  என்று அங்கேயே அமர்ந்து இனியாவின் அறைக்  கதவை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் தலையை குலுக்கிக் கொண்டு

“இனி எனக்கு இங்க என்ன வேலை..”என்று பெருமூச்சு விட்டவன்  

“மல்லிகா அக்கா… மல்லிகா அக்கா என்ன டிபன் செஞ்சீங்க” என்று கேட்டுக் கொண்டே கிச்சனுக்கு சென்றான்.

இங்கே அறைக்குள் வந்து கதவை சாற்றுவிட்டு இனியாவை பார்க்க அவளோ கட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். விஜய் உள்ளே வந்ததும் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள் 

” விஜய் சார் என்ன வேணும் இங்க பண்றீங்க..” என்றால் அவசரமாக.

 “இரு இரு இனியா… ஏன் இவ்ளோ அவசரமா பேசுற… நான் உன்னை எதுவும் செஞ்சிட மாட்டேன். நான் பண்ணின காரியத்துக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தான் வந்து இருக்கேன். என்ன மன்னிச்சிடு” என்று அவளிடம் வந்தான்.

 “நீங்க எதுக்காக சார் மன்னிப்பு கேட்கணும். உங்ககிட்ட இருந்து நான் உண்மையை மறைக்கலாம்னு   நினைச்சேன். ஆனா அந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது எப்படி சரியா எல்லார்கிட்டயும் நான் கர்ப்பமாக இருக்கிறதா சொன்னிங்க.. நான் கர்ப்பமாக இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்” என்றாள்  குழப்பமாக அவனைப் பார்த்து.

இனியா  சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியான விஜய், “என்ன இனியா  சொல்ற..! அப்போ உண்மையாவே நீ கர்ப்பமா இருக்கியா? என் வீட்ல உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா எதையாவது பேசி கன்வின்ஸ் பண்ணி எனக்கும் வினோவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்கன்னு  தான் உனக்கும் எனக்கும் குழந்தை பிறக்க போகுது நீ கர்ப்பமா இருக்கேன்னு நான் பொய் சொன்னேன். நீயும் நான் சொன்னதை எல்லாம் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாம அமைதியா இருந்ததை பார்த்து . நீ எனூடே சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அமைதியா இருந்துட்டேன்னு நான் நினைச்சேன் . ஆனா நீ… ” என்று அவன் குழப்பமாக அவளை பார்க்க..

 “சார் என்ன விளையாடுறீங்களா..! காலையில அவசரமா போன் போட்டு உடனே கிளம்பி வான்னு எனக்கு கூப்பிட்டீங்க. நான் என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சிட்டு வந்தா வந்ததும் என்னை கூட்டிட்டு போய் எல்லாரும முன்னாடியும் நிக்க வச்சு என்ன கல்யாணம் பண்ணிக்க போறேன். நான் கர்ப்பமா இருக்கேன்னு நீங்க சொன்னப்போ உங்களுக்கு தெரியாம மறைச்சு வச்சிருந்த விஷயம் எப்படி தெரிஞ்சுக்கிட்டிங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படியோ உங்களால தான் நான் கர்ப்பமா இருக்கேன் உங்களுக்கு அது தெரிஞ்சுதே.. அதை நீங்க எல்லார்கிட்டயும் சொல்லி என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டதை நினைச்சு ஒரு பக்கம் சந்தோஷப்பட்டேன்” என்றாள்   இனியா.

 அவள் பேசப்பேச விஜய்யின் முகம் மாறியது “என்ன இனியா சொல்ற  நீ கர்ப்பமா இருக்கியா..? நீ சொல்றது நிஜம் தானா” என்றான் இன்னமும்  நம்ப முடியாமல்.

 “என் வயித்துல வளர உங்க பிள்ளை மேல சத்தியமா சொல்றேன். நான் கர்ப்பமாக இருக்கிறது உண்மைதான் அப்படி உங்களுக்கு இன்னமும் சந்தேகமா இருந்தா டாக்டர்கிட்ட போய் இப்பவே செக்கப் பண்ணிட்டு வந்துடலாம். அப்பவாது நீங்க நம்புவீங்களா நான் சொல்றது உண்மைன்னு… உங்கள சந்திச்ச நாள்ல  இருந்து இப்ப வரைக்கும் உங்ககிட்ட உண்மையை மட்டும் தான் நான் பேசிகிட்டு இருக்கேன். எந்த ஒரு காரணத்துக்காகவும் தேவையில்லாம நான் பொய் சொன்னதில்லை சார் என்னை நம்புங்க” என்றாள்  கண்களில் கண்ணீர் வழிய.

 அவள் சொல்வது கேட்டு விஜய் இன்னமும் நம்ப முடியாமல் நின்று இருக்க… 

 “நான் இவ்வளவு செல்லியும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரல இல்ல சார் ” என்றவள் கண்களை துடித்துக் கொண்டு அவனிடம் வந்தவள் அவன் கைகளைப் பிடித்து இழுத்தவள் “என் கூட ஹாஸ்பிடலுக்கு வாங்க” என்று அறைக்கதவை திறந்து  அவனை இழுத்துக்கொண்டு வெளியே வர..

 “இனியா ஏன் இப்படி எல்லாம் பண்ற… என்னால நம்ப முடியல தான். அதுக்காக நீ என்கிட்ட பொய் சொல்லி நாடகமாட்றேன்னு நான் நினைக்கவே இல்ல. நீ சொல்றத நான் நம்புறேன்” என்று அவளிடம் பேசிக் கொண்டே விஜய் அவள் பின்னால் வர…

“ஏய்!!  முதல்ல என் மாமன் மேல இருந்து கையை எடு டி… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மாமா கைய புடிச்சு இழுத்துட்டு வருவ” என்று அங்கே ஹாலில் கோபமே உருவாக பத்திரகாளியாய் நின்றிருந்த தாமரையை கண்டு அப்படியே நின்றாள்  இனியா.

 கோவிலில் விஜய் தாலி கட்டி தன்னை அழைத்து வரும்போது அவனுக்கு எதிரே அழுத முகத்தோடு நின்றிருந்த தாமரையை பார்த்தது இனியாவிற்கு ஞாபகம் வர விஜய்க்கு வேண்டப்பட்டவளாக இருப்பாள்  நினைத்தவள் அவன் கையை விட்டுவிட்டு புரியாமல் நின்றாள்.

 இங்கே சத்தம் கேட்டு கிச்சனில் மல்லிகாவுடன் பேசிக்கொண்டு இருந்த அர்ஷ் வெளியே வர… அங்கு நடப்பதை அமைதியாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் .

“தாமரை தயவுசெய்து சொல்றத கேளு.. கொஞ்சம் பொறுமையா இரு. இப்ப தேவையில்லாம இங்க வந்து எதுக்கு பிரச்சனை கிரியேட் பண்ணிட்டு இருக்க” என்றான் வம்சி அவளை அங்கிருந்து அழைத்துச் செல்லும் நோக்கத்தில்.

 “அம்மு எல்லாம் தெரிஞ்சும் நீ எப்படி இந்த மாதிரி பேசலாம். நான் இன்னமும் பொறுமையா இருக்கணும்னு நினைச்சுட்டு இருக்கியா? என் வாழ்க்கை மொத்தமும் இப்போ கேள்விக்குறியா நிக்குது. எனக்கு இன்னைக்கு ஒன்னுல ரெண்டு பதில் தெரிஞ்சி ஆகணும்” என்று அவன் கையை உதவியவள் வேகமாக திரும்பி இனியாவிடம் வந்தாள் .

 “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் விஜய் மாமாவ கல்யாணம் பண்ணி இருப்ப.. உனக்கு யாருடி அந்த உரிமையை கொடுத்தது. அவர் எனக்கு சொந்தமாக வேண்டியவர். என் விஜய் மாமாவும், நானும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிச்சோம். நாங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்க போறோம். இப்படி எங்க வாழ்க்கையில தேவையில்லாம கெடுக்க வந்து சீரழிச்சிட்டியே” என்று ஆத்திரம் பொங்க இனியாவை கேள்வி கேட்டவள் இன்னமும் தன் ஆத்திரம் குறையாமல் இனியாவை ஓங்கி அரைந்திருந்தால் தாமரை.

“என்ன டா இது புது ட்விஸ்டு.. எனக்கு தெரியாம எப்போ இவன் தாமரையை லவ் பண்ணினான். ” என்று அர்ஷிற்கு ஆதரயமாக இருந்தது.

” தாமரை  எவ்வளவு தைரியம் இருந்தா என் மனைவியை கை நீட்டி அடிப்ப… யார் உனக்கு அந்த உரிமையை கொடுத்தது. இப்ப எதுக்கு நீ இங்க வந்த… இங்க வந்து எங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சினை பண்ண பாக்குறியா நீ” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாமரையை மனம் நோக பேசினான்  விஜய்.

தனக்கும் இனியாவிற்கும் தான் இனி எதிர்காலம் என்று முடிவான பிறகு இன்னமும் தாமரை தன்னையே நினைத்துக் கொண்டு அவள் வாழ்க்கையை வம்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அவளிடம் வெறுப்பாக நடந்து கொண்டான் விஜய்

விஜய் பேசியதை கேட்ட தாமரை தலையில் இடி விழுந்தது போல அப்படியே தரையில் பொத்தன அமர்ந்தாள்.

 “இங்க பாரு தாமரை வம்சி உன் கழுத்துல எப்போ தாலி கட்டினானோ  அப்போவே நான் உன்னை என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன். இனி உனக்கு என் வாழ்க்கையில இடமில்லை. இன்னமும் என்னை நெனச்சிட்டு உன் வாழ்க்கையை வீண் பண்ணிட்டு இருக்காத..  அவன் கூட நல்ல முறையில் உன் வாழ்க்கையை வாழ பாரு..  எனக்கும் குடும்பம்னு ஆயிடுச்சு. என் வாரிசு இவ வயித்துல வளருது அதை புரிஞ்சுக்கோ முதல்ல” என்று விஜய் தற்போதைய நிலையை தாமரையிடம் எடுத்துக் கூற முயல…

 “விஜய் மாமா என்ன சொல்ற… வம்சி என் கழுத்துல தாலி மட்டும் தான் கட்டி இருக்கான்.  அவனும் நானும் நல்ல நண்பர்களாக தான் இருக்கோமே தவிர அவனை கணவனாகவோ என்னை மனைவியாகவோ நானும் அவனும் நினைச்சதே இல்ல . எப்படியும் இன்னும் கொஞ்சம் நாள்ல எனக்கும் வம்சிக்கும் டைவர்ஸ் கிடைச்சுடும்.

அதுக்கப்புறம் நீங்களும் நானும் கல்யாணம் பண்ணலாம்னு நான் அன்னைக்கே சொன்னேனே… அதை எல்லாம் மறந்துட்டீங்களா? இப்படி எனக்கு துரோகம் பண்ணிட்டு இவ கழுத்துல தாலி கட்டி இருக்கீங்களே  இது உங்களுக்கே நியாயமா இருக்கா..” என்று ஆத்திரம் பொங்க அவனிடம் கேள்வி கேட்டு அழுதால் தாமரை.

“தாமரை… தாமரை… நான் இவ்வளவு சொல்லியும் இன்னுமும் இப்படி பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம். உன் கழுத்துல வம்சி தாலி கட்டி இருக்கான். அவன் தான் உன்னோட புருஷன். அதை முதல்ல நினைப்புல வச்சுக்க. அவன்கூட தான் நீ ஒண்ணா சேர்ந்து வாழனும். அவனை வெச்சிட்டு இப்படி என்கிட்ட பேசுறியே உனக்கு வெக்கமா இல்லையா” என்று விஜய் மேலும் அவளை நோகடிக்க….

 “விஜய்..!!  ஆத்திரத்துல வார்த்தையை கொட்டாத. தாமரை பாவோம் அவ  மனச நோகடிக்காத..  உனக்காகத் தான் அவ வாழ்ந்திட்டு இருக்கா அது உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்ப எப்படி நீ அவளை மனசு நோகம்படியா பேசலாம்” என்று விஜய்யின் சட்டையை பிடித்து கோபமாக கேள்வி கேட்டான் வம்சி.

 “டேய் நிலைமையை புரிஞ்சுதா பேசுறியா நீ..  இப்போ நான் இன்னொருத்திக்கு புருஷன் என்னோட குழந்தை அவ வயித்துல வளருது. இன்னுமும் நான் எப்படி தாமரையை ஏத்துப்பேன்னு நீ நினைக்கிற.”

 “அவ கழுத்துல நீ தான் தாலி கட்டி இருக்க அவளோட புருஷன் நீ தாண்டா..!!  அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற அவகிட்ட அந்த உரிமையை கூட உன்னால எடுக்க முடியலன்னா என்ன அர்த்தம். அவளை மாத்த கொஞ்சமாவது முயற்சி பண்ணனும் அவ உன்னோட பொண்டாட்டி டா”என்று விஜய் வம்சிக்கு எடுத்துக்கூற…

 “போதும் மாமா அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க… வம்சி என் கழுத்துல தாலி கட்டினது தான் உங்களுக்கு பிரச்சனைன்னா, அப்படிப்பட்ட தாலியே எனக்கு வேண்டாம்” என்று சொன்னவள் சிறிதும் யோசிக்காமல் வம்சி  அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி விஜய் மீது வீசி இருந்தாள் .

இதை அங்கிருந்த யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை தாமரை இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று விஜய்யோ, வம்சியையோ முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

அந்த அதிர்ச்சி தாங்காமல் இருவரும் “தாமரை…!! ” என்று ஒரு சேர கோபமாக அவளை அழைத்திருந்தனர்.

ENNAI 2-2

“தாமரை..! ” என்று விஜய், வம்சி இருவரும் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி வீசி இருந்ததில் கோபமாய்  அவள் அருகில் நெருங்கி இருந்தார்கள்.

ஒட்டிப்பிறந்த இருவரின் கோபத்தையும் பார்த்து அரண்டு போனது தாமரை மட்டும் அல்ல.. இனியாவும் , அர்ஷும் தான்.

அவனால் இவர்களுக்கு இடையில் வந்து எதுவும் இந்த சூழலில் பேசமுடியவில்லை .

“தாமரை இப்படி ஒரு காரியத்தை நீ செய்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்கள… நம்ம பாரம்பர்யம் கலாச்சாரத்துக்கு மதிப்பே கொடுத்து தான் இத்தனை நாலா என்னை பிடிக்கலையின்னாலும் நான் கட்டின தாலிக்கு மதிப்பு கொடுத்து அதை வெச்சிருந்தேன்னு நினைச்சேன். ஆனா நீ இன்னிக்கு பண்ணினது  என்னால தங்கிக்கவே முடியல ” என்று அவள் கையை பிடித்து உலுக்கி இருந்தான் வம்சி.

தன் கையை உரிமையாக பிடித்து கேள்வி கேட்ட வம்சியை தாமரை முறைக்க…. எப்போதும் போல அவள் முறைப்பிற்கு கட்டுப்பட்டு அவள் கையை விடவில்லை வம்சி . அதற்கு மாறாக அவள் கையை பிடித்து இழுத்து தன் பக்கம் நிறுத்தியவன் .

“இங்க பாரு தாமரை தாத்தா வற்புறுத்தலுக்காக தான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு எனக்கு தெரியும், ஆனா இந்த கல்யாணத்தை நான் விரும்பி தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் உன்னை பிடிச்சு போய்  தான் நான் உன்கழுத்துல தாலியை கட்டினேன். இத்தனை வருஷமா ஒரு தலையா உன் மேல என்னோட காதலை நான் பொக்கிஷமா பாதுகாத்து வந்துட்டு இருக்கேன். அதை ஒரு நல்ல தருணத்தில் சொல்லி உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு நான் நினைச்சேன். ஆனா சூழ்நிலையால் என்னோட காதலை உன்கிட்டே சொல்லாமலேயே நீ என் மனைவி ஆகிட்ட… எப்போ நீ விஜய்யை காதலிக்குறேன்னு சொன்னியோ அப்போவே என் காதலை  எப்பவும் போல என் மனசுக்குள்ளையே போட்டியும் வெச்சுட்டேன்.” என்றவன்.

விஜய்யை பார்த்து “தாமரையும் நானும் டிவேர்ஸ் அப்ளை பண்ணிட்டோம்னு உன்கிட்டே வந்து நான் சொன்ன அப்போ.. இனிமேல் தாமரையை என்னோட காதலிங்குற ஸ்தானத்துல வெச்சு எப்படி பாக்க முடியும். அவ உன்னோட மனைவி.. என் தம்பியோட மனைவின்னு நீ கண்ணியமா என்கிட்டே சொன்ன அப்போ எனக்கு உன்மேல இருக்க மதிப்பு இன்னமும் கூடிருச்சுடா…  உன்னோட மனசுல தாமரை மேல் இவ்ளோ வருஷம் வெச்சிருந்த காதலை அவளை திரும்ப கல்யாணம் செய்துக்குற வாய்ப்பை உன் கண்ணு முன்னாடி காமிச்சும் நீ அதை வேணாம்னு சொன்ன  அப்போ எனக்கு தாமரையை இந்த ஆறுமாசத்துக்குள்ள அவளோட மனசை எப்படியாவது மாத்தி புரிய வைக்கலாம்னு எனக்கு நம்பிக்கை வந்துச்சு ” என்றவன் .

“தாமரை  இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. உன் கழுத்துல நான் கட்டின தாலி கீழ இறங்கணும்னா அது நான் செத்த பிறகு தான் நடக்கும். ” என்றான்.

“டேய் வம்சி எதுக்காக இப்படி எல்லாம் பேசுற.. தாமரைக்கு அடிமேல் அடி விழுந்துட்டே  இருந்ததா அவ என்ன தான் செய்வா. அதுக்காக இப்படி ஒரு வார்த்தையை நீ சொல்லலாமா ” என்றான் அர்ஷ் அவர்கள் மீது  இருந்த அக்கரையில் .

வம்சி தாமரை முன்பு வந்து நின்றவன் அவளை பார்க்க..

கண்கள் குளமாக இதயம் வறண்டு போய் உயிரற்றவளாய்  நின்று இருந்த தாமரை வம்சியை பார்த்தாள் .

“என்னை மன்னிச்சிரு தாமரை ” என்றவன் அவள் என்ன என்று யூகிப்பதற்குள் திரும்பி விஜய் கையில் இருந்த தாலியை  அவனிடம் இருந்து அதை வேகமாக வாங்கியவன் . வாங்கிய வேகத்தில் தாமரை கழுத்தில் அதை கட்டினான் .

அதை தாமரை சற்றும் எதிர்பார்க்கவில்லை “அம்மு..!! என்ன பண்ணிட்டு இருக்க… எனக்கு விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் இப்படி ஒரு காரியத்தை எப்படி உன்னால எனக்கு செய்ய முடிஞ்சது. விடு அம்மு என்னை… ” என்று அவனை தடுக்க முயற்சிக்க ஆனால்  அதற்குள் வம்சி தாமரை கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான் .

விஜய் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்று இருந்தான். அவர்களுக்கு இடையில் தான் செல்வது அதுவும் இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் இடையில் சென்று பேசுவது சரியாக இருக்காது என்று அமைதியாக நின்று இருந்தான்.

இனியாவோ ஒட்டிப்பிறந்த அண்ணன் , தம்பியை பார்த்து ஒரு புறம் அதிர்ச்சியாக இருந்தாலும். இருவரும் கோபத்திலும் ஒரே மாதிரி இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டாள்.

இப்படி தன் கண் முன்னாள் வம்சி தாமரை கழுத்தில் தாலி கட்டியது அதுவும் அவள் விருப்பம் இல்லாமல் கட்டியதை பார்த்து அவளுக்கு உள்ளுக்குள் சற்று பயமாக தான் இருந்தது .

“ஏன் இப்படி பண்ணின அம்மு.. நான் பாவம் பண்ணினேன். என் வாழ்க்கையை முடிவெடுக்க எனக்கு உரிமை இல்லையா . நீயாவே உன் இஷ்டத்துக்கு எது வேணா பண்ணுவியா ” என்று வம்சியிடம் சண்டையிட்டாள் .

“இங்க பாரு தாமரை உன்னோட வாழ்க்கையை முடிவெடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு . இன்னும் 4 மாசம் இருக்கு நமக்கு டிவேர்ஸ் கிடைக்க.. அதுவரைக்கும் இந்த தாலி உன் கழுத்துல தான் இருக்கும். இருக்கனும்… ” என்று தீர்க்கமாக சொன்ன வம்சி .

“இந்த நாலு மாசத்துக்குள்ள உன்னோட மனசை மாத்தி உன்கூட என் வாழ்க்கையை நான் ஆரம்பிக்க போறேன் ” என்றான்.

“4 மாசம் இல்ல அம்மு 4 ஜென்மம் ஆனாலும் நீ நினைச்சது நடக்காது ” என்றாள் .

“அதையும் தான் பாக்குறேன் .”என்றவன் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல…

“என்னை விடு டா.. டேய் அம்மு… ” என்று வம்சியுடன் செல்ல மறுத்தாள் தாமரை.

அவர் இருவரும் போவதையே நின்று பார்த்துக்கொண்டு இருந்த விஜய் திரும்பி தன் அறைக்கு செல்ல போக… அவன் பின்னால் நின்று இருந்த இனியாவை பார்த்தவன் “உன்கூட கொஞ்சம் பேசணும் நீ வா.. ” என்று முன்னே செல்ல… தயக்கத்தோடு இனியா அவன் பின்னால்  சென்றாள்.

விஜய் அறைக்குள் வந்தவன் தன் சட்டையை கழட்டி கட்டிலில் போட்டவன் . கை  இல்லாத பனியனோடு உள்ளே வந்த இனியாவை  நெருங்கினான்.

திடீர் என விஜய் இப்படி அவளை நோக்கி வரவும் அவளுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

இனியாவை தாண்டி சென்றவன் தன் அறைக்கு வெளியே செல்ல…

அங்கே விஜய்யின் அறை  வாசலுக்கு வெளியே அவனுக்கு தெறியாமல் ஒளிந்து இருந்த அர்ஷின் சட்டையை பிடித்து இழுத்து நிற்க வைத்தவன் “இங்க என்ன டா பண்ற… “என்றான்.

“அது.. அது வந்து… ” என்று அர்ஷ் பேச வராமல் உலர…

“என்னை வேவு பாக்குற அளவுக்கு வந்துட்டியா நீ… ” என்றான் விஜய் கோபமாக.

தன் சட்டை  காலரில் இருந்த விஜய்யின் கையை எடுத்து விட்டவன் “ஆமா இவரு ஜேம்ஸ் பாண்டு… இவருக்கு தெரியாம வேவு பாக்குறாங்க. அப்படி நான் வேவு பாக்க ஆரம்பிச்சு இருந்தா நீ தாமரையை லவ் பண்ணினது எப்போவோ தெரிஞ்சிருக்கும்… சரி அதை விடு.. என் தங்கச்சி இனியா அவ கர்பமா இருக்கிறதாவது எனக்கு தெரிஞ்சிருக்கணுமே..” என்றவன் விஜய்யை மேலும் கீழும் பார்த்துவிட்டு.

“பலே ஆளு தான் டா மாப்பிள்ளை நீ.. ” என்றான்.

“இப்போ என் ரூமுக்கு முன்னாடி நீ என்ன டா பண்ற… ” என்று கை முஷ்டியை முறுக்கிக்கொண்டு அர்ஷை விஜய் நெருங்க..

“டேய் இரு டா.. உடனே அடிக்க கை  ஒங்கிட்ட வந்துருவியே… நான் ஒன்னும் உன்னை வேவு பாக்க  வரல… இனியா உன் ரூமுக்கு தனியா வராலே அவளுக்கு பாதுகாப்பா இருக்கும்னு தான் பின்னாடி வந்தேன் ” என்றான்.

” என் மேல சந்தேகப்படுறியா… நான் அவளை ஏதாவது செஞ்சிடுவேன்னு நினைக்குறியா நீ.. ” என்றான் விஜய்.

“இல்ல சந்தேகமெல்லாம் படல ,, ஆனா கன்பார்மே பண்ணிட்டேன் . இனிமேல் உன்னை நான் நம்புறதாவே இல்ல… உன்கூடவே தான் பாதி நேரம் சுத்துறேன் நான். ஆனா  நீயும் தாமரையும் லவ் பண்ணினதையும் நான் பாக்கல… அதை விட நீ அந்த பச்சை மண்ணை குட்டி பிள்ளையை அம்மாவாக்கினத என்னால நமபவே முடியலை டா… ” என்றான்.

“நீ நம்பனும்னு எந்த அவசியமும் இல்ல.. முதல்ல நீ இடத்தை காலி பண்ணு  நான் இனியாகிட்டே தனியா பேசணும் ” என்று அவன் முதுகில் கை வைத்து தள்ளினார்.

“சரி சரி தள்ளாத போறேன் ” என்று கீழே செல்ல..

அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவன் இனியாவை பார்க்க… அவள் சுடிதார் ஷாலின் நுனியை பிடித்து திருகிக்கொண்டு இருந்தாள் . அதை பார்த்துவிட்டு வந்தவன்.

“உன்கிட்டே நான் மறுபடியும் இப்படி கேக்குறேன்னு நினைக்காத இனியா . உண்மையாவே நீ கர்ப்பமா தான் இருக்கியா ” என்று அவளை பார்க்க..

அவனை வலி நிறைந்த பார்வையோடு பார்த்தாள்  இனியா.

“ஐயோ  இனியா நான் தப்பா  எதுவும் நினைச்சு கேக்கல.. உனக்கு கால் உடைஞ்ச அன்னிக்கு முதல் நாள் நைட் தான் நான் போதையில் உன்கிட்டே தப்பா நடந்துக்கிட்டேன் . அந்த ஒரு தடைவைக்கே.. நீ… ” என்று அவள் வயிற்றை பார்த்தான்.

“சார் !!! அப்போ அன்னிக்கு நைட் நடந்தது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கா..!” என்றாள்  அதிர்ச்சியாக.

“ம்ம்ம்… ” என்று தலையை ஆட்டியவன் அவளை கேள்வியாக பார்க்க…

“சார் இப்படி கேட்டா  நான் என்னனு பதில் சொல்லுவேன் ” என்றாள்  தவிப்பாக.

“வேணும்னா என்னை செக் அப்க்கு ஹாஸ்பிடல்ல  கூட்டிட்டு போங்க… அங்க வெச்சு நான் கர்ப்பமா  இருக்கேனு தெரிஞ்சுக்கோங்க.. அதே போல என் வயித்துல வளர குழந்தை உங்களோடதான்னு சந்தேகமா இருந்தா அதையும் தெரிஞ்சுக்கோங்க ” என்றாள் .

“இனியா உன்னை சந்தேகப்படுற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல.. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. “என்றவன் அவள் அருகில் வந்து இனியாவின் வயிற்றை சுட்டிக்காட்டி “இது என் குழந்தையின்னு நான் நம்புறேன் ” என்றவன் அவளை தாண்டி டவலை எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூம் சென்றான்.

அவன் சென்றதும் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தவள் அவன் அறையில் இருந்து கிளம்பி இருந்தாள் .

இங்கே விஜய் வீட்டில் இருந்து கிளம்பி வந்த வம்சி காரை அவன் வீடு வாசலில் நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட… அவனுடன் வந்த தாமரை காரை விட்டு இறங்கியவள். வம்சி சொன்னதை எல்லாம் நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

ENNAI 2-3

   காரை நிறுத்திவிட்டு வம்சி வீட்டுக்குள் செல்ல அவன் பேசியதெல்லாம் நினைத்து குழப்பமான மனநிலையில் தாமரை உள்ளே நுழைந்தாள்.

 ஹாளுக்கு வந்த வம்சி அங்கே விக்ரம் ,மீனு, வீரா, அதிதி, யாரா, தேவ் , வினோ என அனைவரும் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர்களைப் பார்த்தும் எதுவும் பேசாமல் ஹாலை கடந்து செல்லப்  போக…

“வம்சி இங்க வா..” என்று வீராவின் அதட்டலான குரல் அவனை நிறுத்த…

யோசனையோடு உள்ளே வந்த தாமரையும் விக்ரமின் அதட்டலான குரல் கேட்டு  நிகழ் உலகிற்கு வந்தவள் அங்கு அமர்ந்து இருந்தவர்கள்சி அப்போது தான் பார்த்தாள் .

படிகளில் ஏறச் சென்றவன் வீரா அழைத்ததும் அவன் அருகில் வந்து “சொல்லுங்கப்பா.. ஏன் கூப்பிடுங்க..”  என்றான்.

“இப்படி வந்து உட்காரு உன்கிட்டேயும் தாமரைகிட்டேயும் நாங்க கொஞ்சம் பேசணும்” என்று இறுகிய முகத்தோடு வீரா  கூற.

வம்சிக்கு என்ன பேசப்போகிறார்கள் என்று யோசனையோடு அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

 ” நீ ஏன் தாமரை நின்னுட்டு இருக்க… வா  நீயும் வந்து உட்காரு உன்கிட்ட தான் முக்கியமா நான் பேச வேண்டி இருக்கு” என்று வீரா அவளை அழைக்க

 தயக்கத்தோடு வந்து  வம்சி அமர்ந்திருந்த சோபாவில் அவனை விட்டு சற்று தள்ளி தாமரை அமர்ந்து கொண்டாள்.

“என் பசங்க ரெண்டு பேரையும் நான் நல்ல விதமா தான் வளர்த்தேன். ஒருத்தன் என்னோட அப்பா அம்மாவோட பேச்சுக்கு கட்டுப்பட்டு உன்னை கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான். இன்னொருத்தன் என்னடான்னா  கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பொண்ணு  கூட தாலி கட்டாம குடும்பம் நடத்தி புள்ளையும் கொடுத்துட்டான்.”

“ஒருவேளை எங்களோட நம்பிக்கை பொய்யாகிடுச்சோ.. நாங்க என் பசங்களுக்கு நல்லது சொல்லி வளர்க்கலையோன்னு எங்க மேலையே எங்களுக்கு சந்தேகம் வந்திடுச்சு . விஜய்க்கு விருப்பமில்லாம வினோவ கல்யாணம் பண்ண நினைச்சது எங்க தப்புன்னு அவன் புரிய வச்சிட்டான.”

 “அவன் அப்படி பண்ணினதும் அதை எங்க யாராலயும் தாங்க முடியல … அப்போ உங்க கல்யாணத்தையும் என் அப்பாவோட ஆசைக்காக தானே பண்ணி வெச்சோம். அதனால இப்போ எங்களுக்கு ஒரு சந்தேகம்  உங்க ரெண்டு பேரையும் கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சிட்டோம் . அதுக்கப்புறம் நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? எப்படி இருக்கீங்கன்னு நாங்க சரியா கவனிக்கல”.

“இப்ப கேட்கிறேன் உங்க ரெண்டு பேருக்கும் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா சொல்லுங்க. ஏன்னா நாங்க மறுபடியும் இன்னொரு தப்பான முடிவு எடுத்துட்டோங்குற குற்ற உணர்ச்சியுடன் இருக்க விரும்பல” என்றார்  வீரா.

வம்சியும் தாமரையும் வீரா சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க…

“டேய் என்ன டா பேசாம இருக்க.. அப்பா தான் கேக்குறாருல்ல… வாயை திறந்து பேசுறதுக்கு என்ன டா உனக்கு ” என்று வம்சியை பேச சொன்னார் அதிதி .

 “நான் விஷயத்துக்கு வரேன் மாப்பிள்ளை உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு  தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டிங்களா? கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பிறகு ஒருத்தர புரிஞ்சுக்கணும், பிடிக்கணும் ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை , பாசம் , காதல் இந்த நினைப்போடு தான் பழகுறீங்களா? இல்ல ரெண்டு பேருமே ஒட்டுதல் இல்லாமல் தான் இப்போ வரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கீங்களான்னு  எங்களுக்கு தெரிஞ்சாகணும்” என்றான் தேவ்..

 இப்போதும் இருவரும் பேசாமல் அமர்ந்திருக்க…

“டேய் இந்த தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு காரணம் காட்டித்தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். உனக்கும் , தாமரைக்கும் கல்யாணம் பண்ணினா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பிங்கங்கிற நம்பிக்கையில் தான் உங்க கல்யாணத்தை நடத்தினேன்.”

“அப்போ என் உடம்பு இருந்த கண்டிஷனுக்கு நான் போய் சேர்ந்திடுவேன்னு நினைச்சு தான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சேன். நான் கேட்டுகிட்டே ஒரே காரத்துக்காக நீங்களும்  எந்த மறுப்பும் சொல்லாம கல்யாணம் செய்துக்கிட்டிங்க. அப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் . ஆனா இப்போ  நீங்க இப்படி அமைதியா இருக்குறத பாத்தா எனக்கு தான் குற்ற உணர்ச்சியா இருக்கு. என்னோட சுயநலத்துக்காக உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நான் கெடுத்துட்டேன்னு கஷ்டமா இருக்கு” என்று அவர் மிகவும் மனம் வருத்தி சற்று உணர்ச்சிவசப்பட்டு பேச… அவருக்கு மூச்சுவிட சிரமமாக இருந்தது.

விக்ரமின் இதயத்தை நீவி விட்ட மீனு “ஏன் இப்படி உணர்ச்சிவசப்படறீங்க… உங்க உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது அமைதியா இருங்க ” என்று விக்ரமை சகஜ படுத்த முயன்றார் மீனு.

 அவர் முகம் வாடுவதையும் வலியால் துடிப்பதையும் கண்ட தாமரைக்கு மிகவும் கவலையாக இருந்தது. “என் மனசுல இருக்கறதை   எப்படி இவர்ககிட்டே  எடுத்துச் சொல்றது. விஜய் மாமா தான் என் மனசு முழுவதும் நிறைஞ்சிருக்கார். அதை எப்படி நான் இவங்ககிட்ட சொல்லுவேன்” என்று யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாலள் .

“அப்பா முதல்ல கல்யாணம் பண்ணின அப்போ என்னவோ ரெண்டு பேருக்கும் விருப்பமில்லாம தான் கல்யாணம் நடந்துச்சு. முன்னாடியே எனக்கு  தாமரையும் பிடிக்கும். அதனால தான்  தாத்தா சொன்னதும் சம்மதம் சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா அதுக்கு  முதல்ல இந்த கல்யாணத்தில் தாமரைக்கு விருப்பமா இல்லையான்ற தயக்கம் மட்டுமே எனக்கு இருந்தது ஒழிய தாமரையே கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நான் நினைக்கவே இல்ல. தாமரையம்  இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னதும் முழு மனசோட தான் நான் அவ கூட தாலி கட்டுனேன் .”

“அவளுக்கு இந்த திடீர் கல்யாணம் கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருக்கு. அதனால அவ குழப்பத்துல இருந்து நார்மலான மனநிலைக்கு வரணும்னு நான் அவளுக்காக காத்திருக்கேன். உண்மைய சொல்லப்போனால் எங்க ரெண்டு பேருக்கும் இடையில எதுவுமே நடக்கல. நாங்க ரெண்டு பேரும் எங்க குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கல. ஆனா ஒருத்தரை ஒருத்தர்  புரிஞ்சுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம்” என்று தாமரையை பார்த்தான் .

அவன் பேசியதை கேட்டு தாமரையும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் . இதுதான் சமயம் என்று தன் மனதில் இருப்பதை  தாமரைக்கும், மொத்த குடும்பத்திற்கும் சொல்லிவிட்டானே  என்று தோன்றியது தாமரைக்கு .

“என்னடா சொல்ற! உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவுமே நடக்கலையா? ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்தீங்களே” என்றார் அதித்தி வம்சி சொன்னதை நம்பமுடியாமல்

 “அம்மா ஹனிமூன் போயிட்டு வந்தா கண்டிப்பா குடும்பம் நடத்தியாகணும்னு எதுவும் இருக்கா என்ன. நாங்க ரெண்டு பேரும் அங்க நல்ல ஜாலியா ஊரை சுத்தி  பார்த்தோம். பிரண்ட்ஸா இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கோம். கொஞ்சம் கொஞ்சமா தானே அடுத்தடுத்த கட்டத்துக்கு போக முடியும்.  எடுத்தேன் கவுத்தேன்னு எங்களால எதையும் செய்ய முடியாது அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” என்றான் வம்சி காரராக.

” அம்மா எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க தாமரை பாவம் அவ சின்ன பொண்ணு. எப்படி திடீர்னு இந்த கல்யாணத்தை அவனால ஏத்துக்க முடியும் கொஞ்சம் கொஞ்சமா அவ மனசு மாற வேண்டாமா? அதற்கான நேரம் கொடுக்க வேண்டாமா?” என்றான் 

” சரிதாண்டா நான் உங்கள இப்பவே குடும்ப நடத்தி புள்ள குட்டி குடுங்கன்னு கேட்கலையே. இப்பவும் கேக்குறேன்  ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ்றதில் எந்த பிரச்சனையும் இல்லையே. மன வருத்தம் இல்லாமல் தானே இப்போ ரெண்டு பேரும் இந்த முடிவில் இருக்கீங்க வேற எந்த தவறான முடிவு உங்க ரெண்டு பேருக்கு இடையில இல்ல தானே” என்றான் விக்ரம்.

 “அப்பா நான் சொல்றது இன்னும் நம்ப மாட்டேங்கறீங்களே நீங்க.  கண்டிப்பா இந்த ஜென்மத்துல தாமரை மட்டும்தான் என்னோட மனைவி. அவளுக்கு நான் தான் புருஷன் எங்க ரெண்டு பேருக்கு இடையில எந்த ஒரு காரணத்தாலும் எந்த ஒரு மனக்கசப்போ.. பிரிவோ  வராது போதுமா . அதுக்கு நான் கேரன்டி” என்றவன் அவன் அருகில் அமர்ந்து இவன் பேசுவதை எல்லாம் கேட்டு வாயடைத்து போய்  பார்த்துக்கொண்டு இருந்த தாமரையிடம் திரும்பி “என்ன தாமரை நான் சொன்னது சரி தானே” என்றான் அவளை குறும்பாக பார்த்து.

“அம்மு இன்னும் நாலு மாசத்துல உனக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகப் போகுது . இவங்களுக்கு அந்த விஷயம் எல்லாம்  தெரிஞ்சா  என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாக்குறியா.  அதெல்லாம் விட்டுட்டு நீ ஏதோ உன் மனசுல தோன்றதையெல்லாம் வாய்க்கு வந்தபடி இவங்ககிட்ட சொல்லிட்டு இருக்க. நீ  என்ன வேணா  சொல்லு இந்த ஜென்மமே முடிஞ்சாலும் என் மனசு உன் பக்கம் சாயாது மாறாது” என்று மனதிற்குள் உறுதியாக கூறியவள் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தால்.

“அக்கா ஏன் அமைதியா இருக்க… மாமா தான் கேக்குறாருல்ல பதில் சொல்லு ” என்று தனக்கு திருமணம் நின்ற சோகத்தை மறந்து பேசினாள்  வினோ.

இப்போதும் எதுவும் பேசாமல் தாமரை  அமர்ந்திருப்பதை பார்த்தவர்கள் “இல்ல நீ சும்மா எங்கள சமாளிக்க பேசுறேன்னு நினைக்கிறேன். தாமரையும் நீ சொன்னதுக்கு ஆமான்னு கூட தலையாட்ட மாட்டேங்குறா . அப்போ உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கையை எங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கீங்களா?” என்று மிகுந்த வலியோடு மீனு கேட்க..

“ஐயோ பாட்டி நான் சொல்றத நம்பலயா நீ” என்றவன்  தாமரையின் கையை பிடித்து வேகமாக தன் அருகில் இழுத்து அவளை தன் கைவலைவிற்க்குள் அமர வைத்தவன் . அவர்கள் அனைவர் முன்னிலையும் தாமரையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “எனக்கு தாமரையை ரொம்ப பிடிச்சிருக்கு அவதான் என் பொண்டாட்டி போதுமா? இப்பவாது நம்புறீங்களா?” என்றான் அவள் தோள் மேல் கையை போட்டு .

 வம்சியின் இந்த திடீர் தாக்குதலை தாமரையால் நம்ப முடியவில்லை அவனை அதிர்ந்து உறுத்து விழித்தாள். எதுவுமே அவளால் சொல்லவோ செய்யவும் முடியவில்லை. அவன் செய்ததற்கு வம்சியை ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும் போல தாமரைக்கு கோபம் வந்தது. ஆனால் அவனை இத்தனை பேர் முன்னால் அறைந்தால் தன் குடும்பம் சந்தேகப்படுவது உறுதியாகி விடுமே என்று பல்லை கடித்துக்கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வம்சி தாமரையை முத்தமிட்டதும் அங்கிருந்து அனைவருக்கும் சங்கோஜமாக இருந்தது . ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவர்கள் “சரி சரிடா நம்புறேன் அதுக்காக இப்படித்தான் எல்லாரும் முன்னாடி உன் பொண்டாட்டிக்கு முத்தம் குடுப்பியா பெரியவங்க இருக்காங்கன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்ல உனக்கு” என்றான் விக்ரம்.

அப்பா எல்லாரையும்  நம்ப வைக்க எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல வேற என்ன பண்ண சொல்றீங்க என்ன. அப்படியும் பண்ண கூடாது இப்படியும் பண்ணக்கூடாது நான் என்னதான் செய்யறது” என்று வம்சி பேசிக் கொண்டிருக்க அப்போது “உள்ளே வரலாமா..” என்று வாசலில் நின்று ஒரு குரல் கேட்க….

 அனைவர் கவனமும் வாசல் பக்கம் திரும்பியது. அங்கே நின்று இருந்தவரை பார்த்து தாமரையும் வம்சியும் அதிர்ந்தனர்

 வீராவின் வீட்டு வாசலில் வக்கீல் சிவாச்சலம் சிரித்து முகமாக நின்றிருந்தார் அவரிடம் தான் தாமரையும் வம்சையும் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். அவர் இப்போது இங்கே வந்ததை பார்த்ததும் இருவருக்கும் தங்கள் குடும்பத்திற்கு விஷயம் தெரிந்து விடுமோ என்று அச்சத்தோடு அவரைப் பார்க்க…

 ” சிவாச்சலம் வாடா!! எப்படி இருக்க என்ன இவ்வளவு தூரம். உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சு” என்று தன் நண்பனை ஆர்வமாக எழுந்து வாசல் வரை சென்று வரவேற்றார் வீரா 

ENNAI 2-4

வாசலில் சிவாச்சலம் நின்று இருக்க அவரை பார்த்து வம்சியும், தாமரையும் அதிர்ந்தனர். அவரிடம் தானே  இருவரும் டைவர்ஸ்க்கு அப்ளை செய்திருக்கிறார்கள். இப்போது அவர்  இங்கு வந்திருப்பதை பார்த்து இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இருவரும் விழித்துக்கொண்டு இருக்க…

சிவாசலத்தை வாசலுக்கே சென்று வரவேற்ற வீரா சிவசலத்திடம் உரிமையாக பேசியபடி வீட்டிற்குள் அழைக்க..

அதிலேயே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.

சிவாச்சலம் வரும்போது அவர் பின்னால் தேவ் வீரா இருவருக்கும் பொதுவான நண்பரான முத்துவும் அங்கே வந்தார்.

அவர் உள்ளே வந்ததும் “மன்னிக்கணும் என்னால முகூர்த்தத்துக்கு வர முடியல .பிரயாணம் செய்த களைப்பில் அசந்து தூங்கிட்டேன் . அதனாலதான் வீட்டுக்கே  வந்துட்டேன் மாப்பிள்ளையும் பொண்ணையும் ஆசீர்வாதம் பண்ண” என்று கையில் கிப்டோடு வந்தவர் ஹாலில் நின்றிருந்த வம்சியையும் தாமரையையும் பார்த்து 

 “ஹலோ புதுசா கல்யாணம் ஆனவங்களே பார்த்தாலும் பார்த்தேன் உங்களை மாதிரி ஹனிமூன் லவ்வர்ஸ நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு அன்னியோன்யம்.. அப்படி ஒரு அரவணைப்பு. ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ அக்கறை கொடூரத்தை பார்த்து என் கண்ணே பட்டிருக்கும் ” என்றவர் வீராவிடம் .

” தாமரை உடம்பு சரியில்லாதப்போ வம்சி எவ்வளவு பதறினானு எனக்கு தான் தெரியும். என்னை  ஒரு நிமிஷம் தூங்க விடல கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி அங்கிள்  அவளுக்கு எந்த மாதிரி சாப்பாடு கொடுக்கணும். இந்தியன் ஃபுட் எங்க கிடைக்கும்னு மாறி மாறி எதையாவது கேட்டு என்ன நச்சரிச்சுட்டே இருந்தான் ”   என்று சொல்லி சிரித்தார்.

 அவர் சொன்னதைக் கேட்டு வம்சி காலரை தூக்கி விடுவது போல செய்கை செய்து “எப்படி… எனக்கு  உன் மேல எவ்ளோ லவ் இருக்குன்னு முது அங்கிளுக்கு கூட தெரிஞ்சிருக்கு பாத்தியா” என தாமரை மெதுவாக சொல்ல.. அவனை முறைத்து விட்டு இரண்டு அடி தள்ளி நின்றாள்.

அவளுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல தாமரை பின்னால் தள்ளி நிற்க அவனும் அவள் அருகில் வேண்டுமென்றே சென்று ஒன்றி நின்றான்.

முத்து வம்சையும். தாமரையும் ஹனிமூன் சென்று வந்தார்கள் என்று சொல்வதை கேட்டு அவர்கள் இருவரையும் குழப்பமாக பார்த்த சிவாச்சலம்.

நேராக வம்சியை  பார்த்து “நீங்க ரெண்டு பேரும் தானே ஒரு பத்து இருபது நாளைக்கு முன்னாடி என்கிட்ட டைவர்ஸ் வேணும்னு அப்ளை பண்ண வந்தீங்க. ஆனா இவன் நீங்க ஹனிமூன் போயிட்டு வந்தீங்கன்னு சொல்றானே.. அப்போ ரெண்டு பேரும் மனசு மாறி ஒன்னு சேர்ந்துட்டீங்களா? உங்களுக்கு டைவர்ஸ் அப்ளை பண்ண வேண்டிய அவசியம் இல்லையா?” என்று கேட்க மொத்த குடும்பமும் சிவாச்சலம் சொன்னதை கேட்டு அதிர்ந்தது.

“டேய் சிவா! என்னடா சொல்ற!! என் பையனும், தாமரையும் விவாகரத்து கேட்டு உங்கிட்ட வந்தாங்களா? என்று அதிர்ச்சியாக கேட்டார் தேவ்.

தேவ்  அதிர்ச்சியாவதை கண்டவர். “அப்போ உங்களுக்கு விஷயம் தெரியாதா” உங்களுக்கு தெரியாம தான் இவங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்காங்களா?” என்று முழு உண்மையையும் அத்தனை பேர் முன்னிலையும் போட்டு உடைத்து இருந்தார் சிவாச்சலம்.

 வீராவிற்கும் அதித்திக்கும் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது விஜய் தாங்கள் சொன்ன பெண்ணை கட்டிக் கொள்ளாமல் அவனாக ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டிருக்க வம்சியும்  திருமணம் ஆகி சில மாதங்களே ஆகி இருக்க அதற்கு முன்பாகவே டைவர்ஸ் அப்ளை பண்ணி இருப்பதை கேட்டு மிகவும் அதிர்ந்து போயினர்.

அதே அதிர்ச்சியோடு அதித்தி வம்சின் முன்னால் வந்தவள் அவன் சட்டையை பிடித்து

“சொல்லுடா சிவாச்சலம் அண்ணா சொல்றதெல்லாம் உண்மையா? நீயும் இவளும் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா” என்று கேட்க வம்சி எதுவும் பேசாமல் தலை குனிந்தான் .

அவன் அமைதியை கண்டு நிலவரம் புரிந்த அதிதிக்கு மேலும் கோபம் அதிகமானது. ஆத்திரத்தில் வம்சியின் கன்னத்தில் மாறி மாறி அறைய ஆரம்பித்தார். “ஏண்டா .. ஏண்டா இப்படி பண்ணுன.. உன்னையே நம்பி வந்த தாமரையை எப்படி நீ டைவர்ஸ் பண்றேன்னு ஒத்துக்கிட்ட.. உனக்கு அவளை விவாகரத்து பண்ண எப்படி  மனசு வந்துச்சு ” என்று அவனை அடித்துக்கொண்டே இருக்க.. அதை பார்க்க முடியாமல் குறுக்கே புகுந்த தாமரை அவர் கையைப் பிடித்து தடுத்தவள்.

“அத்தை அம்முவை அடிக்காதீங்க அவனுக்கும் இந்த டைவர்ஸ்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அம்மு என்ன டைவர்ஸ் பண்ண சொல்லி கேட்கல நான் தான் எனக்கு டைவர்ஸ் வேணும்னு அம்முகிட்ட சொன்னேன். அம்மு மேல எந்த தப்பும் கிடையாது அடிக்காதீங்க” என்று அவர் கையை இறுக்க பிடித்துக் கொண்டு தாமரை கூற…

“என்னடி சொன்ன!!… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?..  நீதான் மாப்பிள்ளைகிட்ட டைவர்ஸ் வேணும்னு கேட்டியா? உனக்கு எவ்ளோ  நெஞ்சழுத்தம் இருந்தா எங்க யார்கிட்டேயும் சொல்லாம இப்படி ஒரு காரியத்தை துணிஞ்சு செய்திருப்ப.. உனக்கு யாரு அந்த உரிமையை கொடுத்தது . உன்னோட அப்பா , நான் இருக்க அப்போ இவ்ளோ பெரிய முடிவை எடுக்குற அளவுக்கு நீ பெரிய மனுசி ஆகிட்டியா ?” என்று யாரா தாமரையை வரைந்திருந்தார்.

அதைக் கண்டதும் குறுக்கே பாய்ந்த வம்சி “அத்தை இப்ப எதுக்கு தாமரை அடிச்ச நீ.. ” என்று அவரிடம் கோபமாக பேசியவன் அவளை தன் பின்னால் நிறுத்திவிட்டு.

“திடீர்னு தாத்தாக்கு உடம்பு சரியில்லைன்னு எங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டீங்க. அப்போ இருந்த சூழ்நிலையில நீங்க எல்லாம் வற்புறுத்ததுனால நாங்க ரெண்டு பேருக்கும் வேற வழி தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்குள்ளேயும் ஆசை கனவு இருக்குமா? இல்லையா? அதை நீங்க யாராவது யோசிச்சு பாத்தீங்களா?  தாத்தாவுக்காக தான் நான் தாமரை கழுத்தில் தாலி கட்டுனேன். அவகிட்ட நான்தான் சொன்னேன் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா விலகிப் போகலாம்னு.”

 “நான் அப்படி சொன்னதும் முதல்ல தாமரை ரொம்ப வருத்தப்பட்டா  தாத்தா பாட்டிக்காக தானே நம்ம கல்யாணம் பண்ணினோம் . இப்போ நம்ம வேண்டாம்னு பிரிஞ்சிட்டா  அவங்களுக்கு வருத்தமா இருக்காதான்னு  கேட்டா.  நான் தான் அந்த சூழ்நிலையில தெரியாம நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டோம். அவங்களுக்காக நம்ம வாழ்க்கையை சகிச்சுக்கிட்டு வாழனும்னு எந்த அவசியமும் இல்லை. உனக்கு விருப்பம் இல்லைன்னா என்னை விட்டு விலகி போகலாம்னு சொன்னேன். அவ ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவுக்கு சம்மதிச்சா. இன்னும் நாலு மாசம் இருக்கு எங்களுக்கு டைவர்ஸ் கிடைக்க . அதுவரை இரண்டு பேரும் நண்பர்களா பழகி பார்ப்போம். அதுக்குள்ள ஒத்துப் போச்சுன்னா விவகாரத்தை வாபஸ் வாங்கிட்டு நம்ம வாழ்க்கையை தொடரலாம். அப்படி இல்லன்னா விவாகரத்து வாங்கிட்டு அவங்க அவங்க வழியை பார்த்துட்டு போயிடலாம்னு நான் தான் அவகிட்ட சொன்னேன். தேவையில்லாம தாமரையை யாரும் திட்டவோ அடிக்கவோ வேணாம்  ” என்று கராத்தாக கூறினான் வம்சி.

 வம்சி பேசியதை கேட்டு அவன் தாத்தா விக்ரமிற்கு  மிகவும் கவலை ஆகிவிட்டது தன்னால் தன் பேரன் பேத்தி வாழ்க்கை அழிந்து விட்டது என்று வருத்தப்பட்டவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் சரிய …

 அவர் மனம் வருந்துவதை  பார்த்ததும் வேகமாக விக்ரமிடம் வந்தார் மீனு

 “ஏங்க!! என்னங்க ஆச்சு ?” என்று பதறி அடித்த மீனு விக்ரமின் நெஞ்சை தேய்த்து விட 

 “என் பேரன், பேத்தி  வாழ்க்கையை நானே கிடைத்துட்டேனா மீனு.  விருப்பம் இல்லாம அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பெரிய தப்பை  நான் பண்ணிட்டேனே” என்று மிகவும் நொந்து போய் வம்சியையும் தாமரையையும் பார்த்தார்.

“தாத்தா..!!”  என்று அழுது கொண்டு தாமரை விக்ரமிடம் வந்தவள் “தாத்தா உங்க மேல எந்த தப்பும் இல்ல நீங்க விருப்பப்பட்டதுனால தானே நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாங்க எடுத்த முடிவுக்காக நீங்க எதுக்காக வருத்தப்படுறீங்க. தப்பு எங்க மேல தானே” என்றால்  அவரை சமாதானம் செய்யும் நோக்கோடு.

ஆனால் விக்ரமோ “இல்ல தாமரை எனக்கு உடம்பு சரியில்லைன்னு காரணத்த காட்டி உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் நான் பணயம் வெச்சுட்டேன் “.

“தாத்தா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை” என்று வம்சி அவரை சமாதானம் செய்ய முயன்றான்.

” நீ பேசாதடா எல்லாம் உன்னால தான் நீ தானே தாமரைகிட்ட விவாகரத்து வேணும்னு கேட்ட. எதுக்காக அப்படி சொன்ன ஒரு வேளை அவளுக்கு உன் கூட சேர்ந்து வாழணும் விருப்பம் இருந்திருந்தால் நீ கேட்டிருந்த ஒரே காரணத்துக்காக அவ விருப்பமே இல்லாமல் டைவர்ஸ்க்கு சம்மதித்து இருப்பாலோ  என்னவோ… ” என்றவர் திரும்பி தாமரையை பார்த்து தாமரை நீ சொல்லு உனக்கு வம்சியை பிடிக்குமா? பிடிக்காதா?” என்றார் விக்ரம்.

 “இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்க அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாததுனால தானே நான் கேட்டதும் விவாகரத்து கொடுத்துட்டா” என்று தாமரையை  பேச விடாமல் தடுத்தான் வம்சி.

 “நீ பேசாத இத்தனை குழப்பத்துக்கும் காரணம் நீதான் . கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இரு. என் பேத்திகிட்ட நான் பேசிக்கிறேன்” என்று கோபமாக பேசிய விக்ரம். தாமரையிடம் திரும்பி “சொல்லு தாமரை இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா? உனக்கு வம்சியை  பிடிக்கலையா? சொல்லு “என்று கேட்டார்.

இப்படி திடீரென விக்ரம் கேள்வி கேட்டதும் தாமரைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவள் பதில் சொல்ல முடியாமல் திண்டாட 

“பாருங்க அவளுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தானே அதனால தானே அமைதியா இருக்கா . அதை ஏன்  புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. அவளை ஏன் எல்லாரும் தொந்தரவு பண்றீங்க. தயவு செய்து அவளை ஃப்ரீயா விடுங்க. நான் கேட்டதுனால அவ விவாகரத்து கொடுத்துட்டா. இனி எதையும் மாத்த  முடியாது ” என்றவன் “தாமரை நீ எழுந்திரு யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டியதில்லை இது நம்மளோட வாழ்க்கை சேர்ந்து வாழணுமா .. வேண்டாமான்னு நம்ம தான் முடிவு எடுக்கப் போறோம். நீ பேசாம வா” என்று அவள் கையை பிடித்து மேலே தூக்கினான்.

 “உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாமரையும் நீயும் சந்தோசமா தான் இருக்கீங்கன்னு சொல்லி எங்க எல்லார் முன்னாடியும் அவ கன்னத்துல முத்தம் கொடுத்த.  இப்ப என்னடான்னா அவளை பிடிக்கலன்னு சொல்ற.. நீ தான் டைவர்ஸ் கேட்டேன்னு சொல்ற.. என்னடா நடக்குது இங்க” என்று குழப்பத்தோடு வம்சியை கேட்டார் வீரா.

 “எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் கார்னர் பண்ணா நான் என்ன சொல்லி சமாளிக்கிறது. அதனால தான் தாமரையை  எனக்கு பிடிக்கும்னு உங்க எல்லார்கிட்டயும் சொன்னேன். உங்களை சமாளிக்கிறதுக்கு எனக்கு வேற எந்த வழியும் தெரியல இப்ப என்ன பண்ணனும்ங்கறீங்க” என்று கோபமாக பேசியவன்.

“அதான் உங்களுக்கு தெரிஞ்சு போச்சு எங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. இப்பவாவது எங்களை நிம்மதியா வாழ  விடுங்க ” என்று வம்சி கோபமாக பேச..

அவன் பேசி முடிக்கும் முன்பு அதித்தி வம்சியின் கன்னத்தில் பளார்…!!  என்று அறைந்து இருந்தாள். “என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. எங்களை எல்லாம் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா . உன் இஷ்டத்துக்கு நடிச்சு எங்கள நம்ப வைக்க நாங்க எல்லாரும் முட்டாளா..  தாத்தா சொன்னதுல என்ன தப்பு இருக்கு” 

“ஒருவேளை உண்மையாவே தாமரைக்கு உன்ன பிடிச்சிருக்கோ என்னவோ. அவ மனசுல என்ன இருக்குன்னு எதுவுமே கேட்காம . நீயா எதையாவது சொல்லி அவளை குழப்பி விட்டிருப்ப… நீ  கேட்டதுனால தான் அவ அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்கலாம்” என்றவர் “நீ நகரு அவகிட்ட நான் பேசிக்கிறேன் ” என்று வம்சியை தள்ளிவிட்டு  தாமரை நோக்கி செல்ல..

“அவளுக்கு தான் என்னை பிடிக்காதே.. நீங்க கேட்டா மட்டும் என்ன பிடிக்கும்னா சொல்ல போறா . இதுதான் சமயம்னு என்னை பிடிக்காம தான் டிவேற்சுக்கு சம்மதிச்சேன்னு  சொல்லப்  போறா ” என்று நினைத்தவன் தாமரையை பார்க்க..

அவளோ “ஏன் அம்மு எல்லார் முன்னாடியும் நீதான் என்கிட்டே டிவேர்ஸ் கேட்டேன்னு சொன்ன… எல்லாரும் இப்போ உன்னை குற்றவாளி மாதிரி இல்ல பாக்குறாங்க. நான் விஜய் மாமாவை காதலிச்சதுனால தான  உன்கூட வாழ முடியாதுனு விவாகரத்து கேட்டேன். இப்போ நீ இப்படி சொல்லிட்ட … நீ சொன்னதை கேட்டு எல்லாரும் இப்போ உன்னை வெறுக்குறாங்க. நான் என்ன சொல்வேன் இவங்ககிட்டே.. என்ன சொல்லி இவங்களுக்கு நான் புரியவைப்பேன் ” என்று வலி நிறைந்த பார்வையில் அவனை பார்த்தாள் .

“அவனை ஏன் டி பாக்குற… உன் மனசுல இருக்கறதை ஒடைச்சு சொல்லு… உனக்கு வம்சி கூட சேர்ந்து வாழுறதுல எந்த பிரச்னையும் இல்லையே . அவன் கேட்டதுனால தான் நீ டைவர்ஸுக்கு சம்மதிச்சியா ? சொல்லு தாமரை ஏன் அமைதியா நிக்குற… ” என்று அவள் தோலை பிடித்து அதிதி உலுக்க…

அனைவரம் தாமரை என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டு இருக்க…

அவளோ வாசலை பார்த்த படி ” எனக்கு அம்மு கூட சேர்ந்து வாழுறதுக்கு விருப்பம் தான். எனக்கு இந்த டிவேர்ஸ் வேணாம் ” என்று உரக்க கத்தினாள்.

அவளின் பதிலை கேட்டு அனைவரும் சந்தோசப்பட… ஆனால்  சந்தோசப்பட வேண்டியவன்  அதிர்ச்சியாக தாமரையை பார்த்தான் .

ENNAI 2-5

திடீரென தாமரை வம்சியை பிடிக்கும் அவன் கூட சேர்ந்து வாழ தனக்கு விருப்பமே என்று அனைவரும் முன்னிலையிலும் சொல்லவும். வம்சையைத் தவிர அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

வம்சிக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாக இருந்தது. “எப்படி தாமரை திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தா… அவ மனசுல விஜய் மட்டும் தான் இருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும். அது அவளுக்கும் தெரியுமே… இப்போ என்கூட சேர்ந்து வாழ விருப்பம்னு சொல்லிட்டா …” என்று யோசித்தவாறே தாமரையை பார்த்தான். அவள்  பார்வை எங்கோ நிலைகுத்தி நின்று இருந்தது . அவள் பார்வை சென்றிருந்த திசையை திரும்பிப்  பார்க்க அங்கே வாசலில் விஜய்யும், இனியாவும் கைகோர்த்த படி நின்றிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் வம்சிக்கு புரிந்து விட்டது . விஜய் முன்னால் தான் தோற்றுப் போக தாமரை விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

“வம்சி ! பாரு டா தாமரைக்கு உன் மேல விருப்பம் இல்லாமையா எங்க எல்லார்  முன்னாடி உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்றா .  அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் போல நீ தான் அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்காம விவாகரத்து அது இதுன்னு இவ்வளவு தூரம் கொண்டு போயிட்ட..” என்ற அதிதி

சிவாச்சலத்திடம் திரும்பி “அண்ணா முதல்ல இவங்க ரெண்டு பேரும் டைவர்ஸ கேன்சல் பண்ணுங்க. தாமரையும் , வம்சியும் கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா வாழ்வாங்கன்னு  எனக்கு நம்பிக்கை இருக்கு “என்று கூற..

 “அம்மா!.. கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா. நான் தான் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்றேன்ல  . தாமரை மட்டும் என்கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சா போதுமா. நானும் தானே அவ கூட சேர்ந்து வாழணும் . இப்படி வேற வேற விருப்பம் இருக்குறவங்களை  சேர்த்து வெக்க முடியாது ” என்று கூறினான்.

அவனுக்கு என்ன பதில் சொல்ல போகிறாள் தாமரை என்று அனைவரும் அவளை பார்க்க.. ஆனால் அவள் பார்வையோ வாசல் பக்கம் நிலைகுத்தி இருந்தது . அனைவரின் பார்வையும் வாசல் பக்கம் திரும்ப.. இனியாவின் கையை கோர்த்தபடி நின்று இருந்த விஜய்யை பார்த்ததும் அந்த இடமே அமைதியானது .

இனியாவின் கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கியவன்  அவளை கோவிலிலிருந்து வீட்டுக்கு கூட அழைத்து வராமல் நேராக அவுட் ஹௌஸிற்கு கிளம்பிச் சென்றவன் .இப்போது எதற்காக இங்கே வந்து நிற்கிறான் என்று குழப்பமாக இருந்தது அனைவர்க்கும்.

விஜய்யை பார்த்ததும்  அதிதிக்கு சந்தோஷமானது. அடுத்த கனமே அவன் காலையில் செய்த செயலை நினைத்து கோபம் தலைக்கேறியது.  நேராக வாசளுக்கு வந்த அதித்தி “உன்னை யாருடா இங்க வரச் சொன்னது. எப்போ உன் அப்பா பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினியோ அப்பவே உனக்கும் இந்த வீட்டுக்கும் இருக்கிற உறவு முடிஞ்சு போயிடுச்சு.  எங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டா நாங்க உடனே உன்னை ஏத்துக்கணுமா முதல்ல இங்க இருந்து கிளம்பு” என்று கோபமாக பேசினார் அதிதி.

“நான் இந்த வீட்டை விட்டு போறதுக்கு தயாராத் தான் இருக்கேன். அப்போ நான் இந்த வீட்டை விட்டு  போற மாதிரி இருந்தா வம்சியும் அவன் பொண்டாட்டியும் இந்த வீட்டை விட்டு அனுப்புங்க” என்றான் விஜய்.

“என்ன விஜய் விளையாடுறியா!!..  அவன் என்ன உன்னை மாதிரியா நாங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தாமரையை கல்யாணம் செய்துக்கிட்டான்” என்றான் வீரா.

“சரிப்பா..  நீங்க சொன்ன மாதிரியே உங்க விருப்பம் போல தான் வம்சி தாமரையே கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா உங்க யாருக்கும் தெரியாம அவன் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டேன்னு சொல்றான் அப்போ அதுவும் உங்க விருப்பத்துக்கு எதிரானது தானே” என்ற விஜய்  வம்சியை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.

“நீங்க சொன்னதை நான் எப்படி மறுத்தேனோ அதேதான் வம்சியும் பண்ணி இருக்கான்.  ஆனா நான் நேரடியா சொல்லிட்டேன் அவன் மறைமுகமாக செஞ்சிட்டான் , அப்போ நானும் அவனும் ஒன்னு தானே எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான நியாயம் தானே கிடைக்கணும். அவன் இந்த வீட்ல இருந்தா நானும் , என் பொண்டாட்டியும் இங்கதான் இருப்போம். இல்ல நான் இங்க இருக்க கூடாதுன்னு நீங்க சொன்னா  அவனும், அவன் பொண்டாட்டியும்  இந்த வீட்ல இருக்க கூடாது ” என்று செக் பாயிண்ட் வைத்தான் விஜய்.

அவன் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று அனைவருக்கும் புரிந்து இருந்தும் விஜய் செய்த காரியத்திற்கு எப்படி அவனை ஏற்றுக் கொள்வது என அதிதி குழப்பத்தில் இருக்க 

“எனக்கு ரெண்டு பேரன்களோட வாழ்க்கையும் முக்கியம். விஜய் எப்படியோ அவனுக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டான் அந்த வகையில நான் சந்தோசம் தான் படுறேன். அதே போல வம்சியோட வாழ்க்கையும் நல்லபடியா நடக்கணும்னு எதிர்பார்க்கிறேன்.”

 “என் பேத்தி தாமரை எப்படியாவது வம்சி மனச மாத்திடுவான்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. ரெண்டு பேரன்களும் இனி எங்கேயும் போகப் போறது இல்ல இந்த வீட்ல தான் இருக்க போறாங்க” என்றார் மீனு  தீர்க்கமாக.

“அம்மா புரிஞ்சுதா பேசுறீங்களா விஜய் பண்ணின காரியத்துக்கு அவனை எப்படி மன்னிச்சு வீட்டுக்குள்ள சேர்த்துக்கிறது” என்று வீரா கோபமாக மீனுவிடம் கேட்க.

“டேய் நாங்க இருக்க போறது இன்னும் எத்தனை நாளோ தெரியாது. இப்படி நீங்க எல்லாரும் வீம்பு புடிச்சுகிட்டு இருந்தா எப்படி என் பேரன் பேத்திங்க குடும்பம் குட்டியோட சந்தோசமா வாழ்றதை நாங்க பார்க்க முடியும். அவங்க ரெண்டு பேரும் எங்க கண்ணு முன்னாடி தான் இருப்பாங்க. இதை மாத்த முடியாது” என்றவர் “விஜய் உன் பொண்டாட்டி கூட்டிட்டு நீ வீட்டுக்குள்ள வாடா” என்று வாசலில் நின்று இருந்தவனை அழைத்தார்..

 மீனு சொல்லிவிட்டால் இனி அந்த வீட்டில் மறுத்து பேச யாருக்கும் தைரியம் இல்லை அனைவரும் அமைதியாக நிற்க.. இதுவரை இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்த வினோ “அங்கேயே நில்லுங்க!! உள்ள வராதீங்க!!” என்று அந்த ஹால் அதிர சத்தமிட்டால்.

“ஏ வினோ பாட்டி சொன்னதுக்கு அப்புறம் மறுத்து பேசமா இருக்கோம் நீ எப்படி அவங்கல  எதிர்த்து பேசலாம். அவங்க முடிவுக்கு எதிரா  நிக்கலாம் பேசாம வாய் மூடிட்டு நில்லு” என்று யாரா அவளை பதட்ட…

“அம்மா நீங்க முதல்ல பேசாம இருங்க பாட்டி சொன்னா உடனே அப்படியே செஞ்சுரணுமா..” என்றவள் வேகமாக மீனுமிடம் சென்று “ஏ கிழவி..இவ்வளவு வயசாயிடுச்சு உனக்கு. புதுசா கல்யாணம் ஆகி மொத மொத நம்ம வீட்டுக்குள்ள வராங்க சும்மாவா உள்ள கூப்பிட்ற.. ஆர்த்தி எடுத்து அவங்கள உள்ள கூப்பிடனும்னு தெரியாதா உனக்கு. நீ எல்லாம் என்ன பெரிய மனுஷியோ..” என்று கிழவி போல மீனுவை பார்த்து இடுப்பில் கைவைத்து அவரை அதட்ட…

 அதுவரை அங்கு இறுக்கமாக இருந்த சூழல் வினோ பேசியதை கேட்டு சற்று சகஜமானது மீனு சிரித்துக்கொண்டே “ஆமாண்டி பாட்டி எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு நல்ல வேலை நீ ஞாபகப்படுத்துன நீயே போய் உன் விஜய் மாமாவுக்கு ஆர்த்தி எடுத்துட்டு உள்ள கூட்டிட்டு வா” என்றார் வினோ கிண்ணத்தை இடித்து .

 “ஷ்.. ஆ.. கிழவி வலிக்குது ” என்று கன்னத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே சந்தோஷமாக சிரித்த முகமாக கிச்சனுக்கு சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவள் விஜய் இனியா இருவரையும் சேர்ந்து நிற்க சொல்லி ஆரத்தி எடுத்தாள் .

 வினோ அவர்கள் இருவருக்கும் திலகம் இட இனியாவிற்கு வினோவை பார்க்க பாவமாக இருந்தது. அவளைத்தானே விஜய் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இருந்தது ஆனால் தன்னால் அவள் வாழ்க்கை பறிபோனதே என்று வினோவை நினைத்து இனியா கவலை கொள்ள விஜய்யோ “உனக்கு என் மேல கோபம் இல்லையா வினோ. உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு அதே மேடையில இனியாவை கல்யாணம்  பண்ணிக்கிட்டேன் . அதை நினைச்சு  உனக்கு கொஞ்சம் கூட என் மேல கோபம் இல்லையா?” என்றான்.

” ஐயோ!! விஜய் மாமா எல்லாரும் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னதும் நானும் கல்யாணம் பண்ற ஆர்வத்துல சந்தோசமா சரின்னு சொல்லிட்டேன்”.

” ஆனா நீங்க இவங்கள கல்யாணம் பண்றேன்னு சொன்னப்போ என் மனசுல எந்தவித வருத்தமும் கவலையோ இல்ல உண்மையாவே எனக்கு சந்தோஷமா தான் இருந்தது . நான் அப்படி எதுவும் கவலைப்படல மாமா, உங்களுக்கு இவங்கள பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க  இதுல என்ன இருக்கு . என்ன பாத்து அப்படியா  தெரியுது உங்களுக்கு” என்றாள் .

 “இருந்தாலும் என்னை மன்னிச்சிடு வினு ” என்று அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவன். அவளிடம் மனதார மன்னிப்பு கேட்டான்.

“இட்ஸ் ஓகே மாமா” என்றவள்  இருவருக்கும் ஆரத்தி சுற்றினாள் .

 “வா இனியா ..” என்று இனியாவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து வந்தான் விஜய் இருவரும் வலது காலை  வைத்து உள்ளே வர..  தாமரை தனக்குள் எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு விஜய்யையும் இனியாவையும் மாறி மாறி பார்த்தாள்.

தன் கரத்தை பிடித்து சந்தோசமாக இந்த வீட்டிற்குள் மனைவியாக உரிமையாக அழைத்து வர வேண்டிய இடத்தில் மற்றொத்தட்டி  இருப்பதும் தன் வாழ்க்கை இப்படி போனதையும் நினைத்து ஒரு பக்கம் மிகவும் வருத்தமாக இருந்தது. மற்றொரு பக்கம் அவனுக்காக தானே தான் டைவர்ஸ் செய்வதாக முடிவு எடுத்து இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்க.. ஆனால் அதை எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னை பற்றிய அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் விஜய் இனியாவை திருமணம் செய்தது தாமரைக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை . அவன் உள்ளே வரவும் தாமரை அங்கே நிற்க பிடிக்காமல் கோபமாக தன் அறைக்கு சென்று விட…

 வம்சியிடம் வந்து தேவ்வும் யாராவும் “மாப்பிள்ளை உங்களுக்கு என் பொண்ண புடிக்கலன்னு வெளிப்படையா சொல்லிட்டீங்க இருந்தாலும் அவளோட மனசுக்காக அவ கூட சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க. ” என்று தேவ் கையெடுத்து கும்பிடப்  போக..

” ஐயோ மாமா!!  என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க நான் நடந்ததை சொன்னேன்.  நீங்க எல்லாம் இவ்வளவு வற்புறுத்தி சொல்றதுனால என் மனசு மாத்திக்க நானும் முயற்சி செய்றேன்” என்று தேவ்வை சமாதானம் செய்ய சொன்னவன் உள்ளுக்குள் தாமரை இனி என்ன நினைத்தாலும் தன்னை விட்டு பிரிய முடியாது என்ற சந்தோசத்தில் தேவ்விடம் உறுதி அளித்தான்.

அதுவரை இங்கு நடந்ததற்கு காரணமாக நின்றிருந்த சிவாச்சலமும் எப்படியோ ஒரு வகையில இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன். என்றார்.

“இன்னும் இல்லடா தாமரையும் வம்சியும் டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்காங்களே அத வந்து வாபஸ் வாங்கணும். அப்பதான் எனக்கு அது திருப்தியா இருக்கும்” என வீரா சொல்ல..

“ஆமா வீரா  நீ சொல்றதும் சரிதான் அவங்க ரெண்டு பேரையும் உட்கார வைத்து தெளிவா பேசி நீங்களே என்னோட ஆபிஸ்க்கு அவங்கள கூட்டிட்டு வாங்க டைவர்ஸ் கேன்சல் பண்றதுக்கு உண்டான எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன்” என்றவர் “சரி நான் வந்தது மறந்துட்டேன் என் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கேன். உங்க குடும்பத்தோட எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடனும்” என்று பத்திரிக்கையை கொடுத்துவிட்டு அவர் செல்ல..

முத்துவும் விஜய் வினோவிற்காக வாங்கி வந்த கிஃப்ட்டை விஜய் இனியாவிடம் கொடுத்து திருமணத்திற்காக வாழ்த்து சொல்லி விட்டு அவரும் அங்கிருந்து கிளம்பினார்.

ஹாலில் விஜய் இனியா நின்று இருக்க வினோவை அழைத்துக் கொண்டு தேவ்வும் யாராவும் அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடவும்.  அதித்தியும் அவர்கள் அறைக்கு சென்று விட்டனர். அவர்கள் இருவரும் மட்டும் அங்கே நிற்க… விக்ரமும் மீனுவும் இருவரிடமும் வந்தவர்கள் “இவங்களை நினைச்சு கவலை படாதீங்க.. எல்லாம் சரி ஆகிடும் ” என்று அவர்களுக்கு சமாதானம் சொன்னவர்கள்.

இருவரையும் அழைத்து சென்று பூஜை அறையில் இருந்த விளக்கில் இனியாவை விலக்ட்ரா சொல்லி அவர்கள் இருவரையும் அஆசிர்வதித்தனர் விக்ரமும், மீனுவும்,.

விஜய் இனியாவை அழைத்துக்கொண்டு அவன் ரூமிற்கு சென்றான்.

ENNAI 2-6

“ம்ஹும்… அண்ணனும் தம்பியும் கல்யாணம் பண்ணிட்டு  போய்ட்டானுங்க… எப்போ ஆபீஸ்க்கு வருவானுங்கனே  தெரியாது. இந்த விஜய் கூட சுத்திகிட்டு அவன் பிரச்னையை பார்த்ததுல என் ஆளு கல்யாணத்தையே நான் மறந்துட்டேனே .. இதை எப்படி நான் மறந்தேன். நிலானி கல்யாணம் நடக்குற அன்னிக்கு  தானே விஜய் கல்யாணம் நடந்துச்சு ” என்று பெருமூச்சுவிட்டவன்.

“அங்க நடந்த பிரச்சனையில் நான் எப்படி நிலானி கல்யாணத்தை மறந்தேன் . நான் ஒரு முட்டாள் , விஜய் கூப்பிட்டதும் என்னை பத்தி கொஞ்சமும் யோசிக்காம அவன் கூப்பிட்டதும் போய்ட்டேன். இப்போ நான் தான் அவஸ்தை படுறேன் ” என்று தன்னையே நொந்து கொண்டவன் .

“என் ஆளுக்கு என்ன ஆச்சு? எது ஆச்சுன்னு தெரியாம சுத்திகிட்டு இருக்கேன் . அவ அக்கா வீட்டுக்காரருக்கும் , அவளுக்கும் கல்யாணம்னு சொன்னாளே .. என்ன நடந்துச்சுன்னு  தெரியலையே… என் நிலா எனக்கு இல்லையா ? அவளுக்கு கல்யாணம் நடந்திருக்குமா ? இனி நிலா இல்லாத வாழ்க்கை தானா எனக்கு ” என்று தன் கன்னத்தில் கைவைத்தபடி யோசனையில் சோகத்தில் மூழ்கி இருந்தான் அர்ஷ் .

“MAY  I  COME  IN  SIR … ” என்று அவன் கேபின் கதவை தட்டும் சத்தம் கேட்க…

அதே சோகத்தோடு “YES … ” என்றான் .

அவன் அனுமதி கொடுத்ததும் கதவை திறந்து கொண்டு வந்தவரை பார்த்ததும் சோகத்தில் இருந்தவனது  முகம் பிரகாசமானது . வேகமாக தன் சீட்டில் இருந்து எழுந்தவன் . அவளை பார்த்த சந்தோஷத்தில் மனம் குதூகலித்து பிறந்தாலும் உள்ளுக்குள் நிலானி  வேறு ஒருவருடைய மனைவி என்ற நினைப்பு தோன்றியது .

அந்த நொடியே அவன் முகம் கருத்துவிட்டது, இதயம் கனத்தது. அதை காட்டிக்கொள்ளாமல் சகஜமாக இருக்க அவள் முன் முயன்றவன் . “நிலானி!!! நீயா! … நேத்து தானே உனக்கு கல்யாணம். இன்னிக்கு ஆபீஸ்.. ” என்று புரியாமல் கேட்டான்.

கொண்டு வந்த பைல்களை அவன் டேபிளில் வைத்தவள் “சார் இந்த பைல்ஸ் எல்லாமே நான் செக் பண்ணிட்டேன். விஜய் சார் கையெழுத்து போட்டுட்டா நான் இதை எல்லாம் கஸ்டமருக்கு அனுப்பிடுவேன் ” என்றாள் .

“சரி நான்  சைன்  வாங்கிட்டு சொல்றேன் . நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு. கல்யாணம் ஆன  மறுநாளே உன் புருஷன் உன்னை வேளைக்கு போக சொல்லி அனுப்பி வெச்சுட்டாரா… ” என்று  நினைத்தவன் உள்ளுக்குள் எழுந்த கடுப்பை மறைத்துக்கொண்டு .

“புருஷனா!! ஓ என் அத்தானை  பத்தி கேக்குறீங்களா … ” என்று அவனை பார்த்தாள் .

அவள் பேசியதும் “என்ன இவ  இப்படி கேக்குறா.. ” என்று அவள் முகத்தில் இருந்த தன்  பார்வையை கீழே இறக்கினான். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு இல்லை… அதை பார்த்ததும் வேகமாக தன் பார்வையை வேகமாக கீழே இறக்கி நிலானியின்  கால்களில் மெட்டி இருக்கிறதா என்று பார்த்தான். மருதாணி இட்டு இருந்த கால்களில் அழகாக புது மெட்டி சிறிய முத்து வைத்து மாட்டி இருந்தாள் . அதை பார்த்ததும் அவன் இதயம் சுக்குநூறாக வெடித்துவிடும் போல ஆகிவிட்டது.

“இனி  நிலானி தனக்கு சொந்தம் இல்லை என்று நினைக்கையில் அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .

“சார் நான் கிளம்புறேன் ” என்று நிலானி திரும்பி  செல்ல போக..

“நிலானி நேத்து உனக்கு கல்யாணம் ஆச்சே .. எப்படி கல்யாணம் ஆன  மறுநாளே நீங்க ஆபீஸ் வந்திருக்கீங்க ” என்றான்.

“ஏன் சார் கல்யாணம் செய்துகிட்டா அடுத்த நாள் ஆபீஸ் வரக்கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா ? என்ன ? எனக்கு நிறைய கமிட்மென்ட் இருக்கு , என்னோட கல்யாணத்துக்கு வாங்கின கமிட்மெண்ட்ஸ் எல்லாம் அடைக்கும் அதான் வீட்ல இருந்து என்ன செய்ய போறேன் , அவரும் முக்கியமான ஒர்க் இருக்குனு ஆபீஸ் போய்ட்டார் நான் தனியா தான் வீட்ல இருக்கனும் , வீட்ல சும்மா இருக்குறதுக்கு பேசாம ஆபீஸ் வரலாம்னு வந்துட்டேன்  ” என்று சொன்னாள் .

“இல்ல வரலாம் தான்.. ஆனா உங்க ஹஸ்பெண்ட் நீங்க வேளைக்கு போக உடனே சம்மதிச்சிட்டாரா..” என்றான் அர்ஷ்.

“இல்ல… அவர் வேளைக்கு போனாலும் என்னை வீட்ல தான் இருக்க சொன்னாரு . சார் அவருக்கு என்னை வேளைக்கு அனுப்பவே மனசு இல்லை. கல்யாணம் ஆனதும் வேளைக்கு போய்  தான் ஆகணுமா… ஒரு மாசம் லீவு சொல்லு நம்ம ஹனிமூன் எல்லாம் போய்ட்டு  வந்துட்டு பொறுமையா போய்க்கலாம்னு சொன்னாரு. ஆனா நான் தான் ஆபீஸ் பெண்டிங் ஒர்க் எல்லாம் இருக்கு . அதை எல்லாம் முடிச்சுக்குடுத்துட்டு பொறுமையா ஹனிமூன் போய்க்கலாம்னு சொல்லி அவளை சமாதானம் செய்துட்டு வந்தேன் ” என்றாள் .

“உங்க மேரேஜ் பத்தி அன்னிக்கு சொல்லும்போது விருப்பம் இல்லாத மாதிரி பேசினீங்க… ஆனா இன்னிக்கு நீங்க சொல்றது , நடந்துகிறது எல்லாம் பார்த்தா உங்களுக்கு இந்த கல்யாணம்… ” என்று அர்ஷ் அதற்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்த…

“ஆமா  சார் முதல்ல எனக்கும் பிடிக்காம தான் இந்த கல்யாணத்தை செய்துகிட்டேன் . ஆனா நேத்து நைட் அவர் என்கிட்டே மனசுவிட்டு பேசினார். என் அக்காவை அவரால மறக்கவே முடியாலையின்னு வருத்தப்பட்டார். அவரை அப்படி பாக்கவே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அவர் அப்படி கவலைப்  பட நான் தானே காரணம் . அவர் கவலையெல்லாம் மறந்து சந்தோசமா வாழவேண்டியது என்னோட பொறுப்புன்னு முடிவு பண்ணி அவரை பேசி சமாதானம் செய்தேன் . ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டோம் ” என்று சொல்லி வெட்கப்பட்டாள் .

அவள் சொன்னதை எல்லாம்ம் கேட்டு ஏற்கனவே துவண்டு போய்  இருந்த அர்ஷின் இதயம் மேலும் தளர்ந்து போனது. அவளிடம் எதுவும் பேசாமல் நிலானியையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தான் அர்ஷ் .

அப்போது அவள் மொபைல் போனுக்கு கால் வரவும் அதை எடுத்து பார்த்தவள் “ஓகே சார் அவர் தான் கால் பன்றார். நான் கிளம்பறேன் ” என்றவள் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் “ஹலோ அத்தான்… சொல்லுங்க… என்ன இந்த டைமுக்கு கால் பண்ணிருக்கீங்க.. என்கிட்டே பேசாம ஒரு மணி நேரம் கூட இருக்க முடியலையா உங்களால … கொஞ்ச நேரம் முன்ன தானே என்னை ஆபீசில் கொண்டு வந்து ட்ரோப் பண்ணுணிங்க… ” என்று குழைந்து பேசிக்கொண்டே   அர்ஷின் கேபினை விட்டு வெளியேறி இருந்தாள்.

அவள் சென்றும் கூட இன்னமும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான் அர்ஷ் . இனி நிலானியை தன் காதலியாக நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை தனக்கு வந்துவிட்டது என்று அவன் மனம் வருந்தியது . அவன் மனம் மிகவும் நொறுங்கியது போல உணர்ந்தான் . அவனால் நிலானிக்கு திருமணம் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . அவன் ஓலமிட்டு அழுதது தன் காதல் தோல்வியை நினைத்து . கண்களில்ன் ஓரம் துளிர்த்த நீர்துளியை துடைத்துக்கொண்டே  சென்று சேரில் அமர்ந்தவன் நிலானி கொடுத்த பைலை சரி பார்க்க ஆரம்பித்தான்.

இங்கே அர்ஷ் அறையை விட்டு வெளியே வந்த நிலானி “என்ன அத்தான் நான்  மட்டும் பேசிட்டு இருக்கேன் நீங்க எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க . நான் பேசறதை கேட்க அவ்ளோ ஆசையா உங்களுக்கு  ” என்றாள் .

“ம்ம்… உன் வாய்ஸ் கேட்க அவ்ளோ நாராசமா இருக்கு அதான் போனை வெக்கலாமா ? இல்ல சொல்ல வந்ததை சொல்லிட்டு போனை வெக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் ” என்று அவள் தோழி பேசினாள் .

“ஏய் செல்லம் சாரி டி.. எப்படி இருக்க ? ரொம்ப வருசத்துக்கு அப்பறோம் உன் போனை பார்த்ததும் எனக்கு எவ்ளோ சந்தோசம்  ஆகிருச்சு தெரியுமா . ” என்றாள்  அவ்வளவு மகிழ்ச்சியாக .

“அதனால தான் சம்மந்தமே இல்லாம என்னை அத்தான் அத்தான்னு சொல்லிட்டே இருந்தியா ” என்றாள் .

“ஏய் சாரி டி .. இங்க ஒருத்தரை வெறுப்பேத்த நான் என் புருஷன்கிட்ட பேசுற மாதிரி பேசினேன் ” என்றாள்  நிலானி .

“ஏய் நிலா! என்ன டி சொல்ற! உன் புருஷன்கிட்ட பேசுற மாதிரி பேசுனியா!! அப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சா டி..! ” என்று ஆச்சர்யப்பட்டால் நிலானியின் தோழி .

“இல்ல டி அது ஒரு பெரிய கதை . என் ஆபீஸ்ல  ஒருத்தர் என்னை ஒன்னு சைடா  லவ் பன்றாரு டி. அவரை கொஞ்சம் அலையவிட்டு பாக்க தான் எனக்கு கல்யாணம் ஆனா மாதிரியும் , என் புருஷன்கிட்ட போன்ல பேசறமாதிரியும் பேசி நடிச்சேன் ” என்றாள்  நிலானி.

“என்ன டி சொல்ற.. எனக்கு புரியல ஒரே குழப்பமா இருக்கு ” என்றாள்  மறுமுனையில் இருந்தவள் .

“அதெல்லாம் உன்னை நேர்ல மீட் பண்ற அப்போ விலாவாரியா சொல்ற… நீ எப்போ வந்த என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல… என்னை பார்க்க கூட வரலையே ” என்றாள்  நிலானி .

“அதை சொல்ல தான் டி உனக்கு போன் பண்ணினேன் . நீ எப்போ பிரீனு சொல்லு நம்ம மீட் பண்ணலாம் “என்றாள் .

“ம்ம்… ஏய் நீ இன்னிக்கு ஈவினிங் என் ஆபீஸ்க்கு வந்து என்னை பிக்  அப் பண்ண வரியா ?” என்றாள்  நிலானி.

“ஓகே டி உன் ஆபீஸ் லொகேஷன் எனக்கு ஈவ்னிங் சென்ட் பன்னிரு நான் வந்துடறேன் ” என்று போனை வைத்தாள்  அவள் தோழி .

தனக்கு திருமணம் நின்றுபோன விஷயத்தை அர்ஷ்ஷிடம் கூறமால் வேண்டுமென்றே அவனிடம் பொய் பேசிவிட்டு வந்திருந்தாள்  நிலானி.

அவள் ஏன் அப்படி செய்தாள்  . அர்ஷ் அவளை ஒரு தலையாக காதலிக்கும் விஷயம் தெரிந்தும் அவனிடம் தன் திருமணம் நின்ற செய்தியை சொல்லி இருந்தால் அவன் சந்தோசப்படுவான் என்று தெரிந்திருந்தும் அவனிடம் உண்மையை மறைத்து இருந்தாள் .

“டேய் லூசு … என் கழுத்துல தாலி இல்லையே அதை வெச்சாவது எனக்கு கல்யாணம் ஆகிருக்காதுனு நினைக்க வேணாம். அதை விட்டுட்டு லவ் பெயிலியர் ஆனவன் மாதிரியே மூஞ்சியை வெச்சிட்டு இருக்க.. உன்னை அப்படி பார்த்ததும் தான் எனக்கு பொய் பேசணும்னே தோணிச்சு. சரி கொஞ்ச நாள் உன்னை அலைய விட்டு வேடிக்கை பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ” என்று நினைத்தவள்.

“ஆமா  எனக்கு கல்யாணம் ஆகிருச்சுனு நான் சொன்னதும் நம்பிட்டானே .. எதை வெச்சு நான் சொன்னதை நம்பினான் ” என்று யோசனையிலேயே நடந்தவளுக்கு அப்போது தான் அவள் மெட்டி சத்தம் கேட்டது.

உடனே குனிந்து தன் விரலை பார்த்தவள் அதில் நேற்று அவளுக்கு சீர் செய்கையில் அவள் தாய் மாமன் போட்டு விட்ட  மெட்டி  இன்னும் கழட்டாமல் இருப்பதை கண்டதும் அர்ஷ் தனக்கு திருமணம் ஆனதாக எப்படி நம்பி இருப்பான் என்று புரிந்து போனது .

“இதுவும் நல்லா தான் இருக்கு. கொஞ்ச நாள் இப்படியே இருப்போம் . அப்போ தான் அவனை ஏமாத்த முடியும் ” என்று சிரித்துக்கொண்டே அவள் டேபிளுக்கு சென்றாள் .

….

“நீங்க என்கிட்ட கொடுத்து வேலையை நான் முடிச்சிட்டேன். உங்களுக்கு டீடைல் எல்லாம் வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன் பார்த்துக்கோங்க ” என்று ராகேஷிற்கு கால் வரவும் .

சரி நான் பார்க்கிறேன் என்று போனை வைத்தவன்  தன் மொபைலை எடுத்து வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தான்   அதில்  வந்திருந்த செய்தியை பார்த்தவன் ” சக்சஸ் என்னோட வேலை இவ்வளவு சீக்கிரமா முடியும்ன்னு  நான் நினைக்கவே இல்ல ” என்றவன்   தன் பிஏவை  காரை  எடுக்கச் சொல்லி தனக்கு வந்திருந்த  அட்ரஸை அவனிடம் கூறி அங்கே போகச் சொன்னான் ராகேஷ் .

ராகேஷின் பி ஏ நேராக ஒரு குப்பத்திற்கு முன்பு வந்து நிறுத்தியவன் “சார் நீங்க சொன்ன அட்ரஸ் இங்கதான் இருக்கு” என்றான்.

“ம்ம்.. சரி நீ இங்கேயே வெயிட் பண்ணு”  என்றவன் காரை விட்டு இறங்கி அந்த இடத்தை முகச்சுழிப்போடு பார்த்தவன். தன் மொபைலில் வந்திருந்த  லொகேஷனை பின்தொடர்ந்து ஒரு குடிசை முன்பு வந்து நின்றவன். அந்த  வீட்டுக்  கதவை தட்டினான்

ENNAI 2-7

காலையில் ஆபீஸ் செல்வதற்காக பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தான் வம்சி. அவன் எழுந்ததில் இருந்து தாமரையை அவ்ர்கள் அறையில் பார்க்கவே இல்லை. நேற்றிலிருந்து ரூமுக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் இரவு சாப்பிட கூட வரவில்லை, அவனிடம் முகம் கொடுத்தான் பேசாமல் இரவு முழுவதும் போர்வையை இழுத்து போட்டு படுத்துக்கொண்டு போர்வைக்குள் அழுதுகொண்டே இருந்தாள் . அவளிடம் பேச நினைத்து அறைக்குள் வந்து அவள்  அழுவதை கண்டதும் . தாமரை இருக்கும் மனசிலைக்கு அவளிடம் இப்பொது பேசுவது சரியாக இருங்கத்து என்று அமைதியாக இருந்துவிட்டான் .

ஆபீஸ் கிளம்பி தன் அறையை விட்டு வெளியே வந்த வம்சி சாப்பிட கீழே செல்லப்  போனவன் . விஜய் அறையில் இருந்து தயங்கி தயங்கி வெளியே வந்த இனியாவை பார்த்தான்.

விஜய்யை பார்த்ததும் தயக்கமாக நின்று இருந்த இனியா “விஜய் சார் நீங்க இங்க வந்துட்டீங்களா? நேத்து ஈவினிங் நான் வெளியே போனீங்க இப்போ தான் வரீங்க.. ” என்றவள் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்துவிட்டு .

“சார் நேத்துல இருந்து ரொம்ப பசிக்குது. எனக்கு வெளியே வந்து யார்கிட்ட என்ன கேக்குறதுனு தெரியல.. நல்ல வேலை நீங்க வந்திங்க. எனக்கு சாப்பிட எதுவும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறிங்களா? ” என்று தனக்கு எதிரே இருப்பது வியாஜி இல்லை. உருவத்தில் பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத விஜய்யுடைய தம்பி வம்சி என்று தெரியாமல் தனக்கு பசிக்கிறது என்று அவள் பாவமாக கேட்க..

“ராஸ்கல் கர்பமா இருக்க பொண்ணு சாப்பிட்டாளா? இல்லையான்னு  கூட தெரிஞ்சுக்காம அப்படி எங்க போனான் நைட் . எப்படியோ தாமரையை மறந்துட்டு இந்த பொண்ணை கல்யாணம் செய்துகிட்டான்னு நினைச்சு சந்தோஷப்பட்டா … அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்த அன்னிக்கே பட்டினி போட்டுட்டுட்டானே  ” என்று விஜய்யை உள்ளுக்குள் திட்டியவன் .

“நான் விஜய் இல்ல.. அவன் தம்பி வம்சி ” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வமசி .

“வாங்க நானும் சாப்பிட தான் போறேன் ” என்று அவளையும் சாப்பிட தன்னோடு அழைத்தான்.

“என்னது அவர் தம்பி வம்சியா! ஐயோ .. விஜய் சாருன்னு  நினைச்சு பசிக்குதுனு சொல்லிட்டேன் . இவர் என்ன நினைப்பார் என்னை பத்தி ” என்று உள்ளுக்குள் புலம்பியவள் வம்சியை சங்கடமாக பார்த்துவிட்டு .

“நான் விஜய் சார் வந்ததும் அவர்கூட சாப்பிட்டுக்கிறேன் . நீங்க சாப்பிடுங்க… ” என்றவள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக விஜய் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள் இனியா.

“கடவுளே ! என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்குற.. எனக்கு வேற பசி வயித்தை கிள்ளுது. நான் மட்டும்னா கூட எப்படியாவது என் பசியை பொறுத்துப்பேன் . என் வயித்துல இப்போ குட்டி விஜய் சார் இருக்காரே.. அவருக்கு பசிக்குமே … நான் இப்போ என்ன செய்றது ” என்று தன் வயிற்றை தடவிக்கொண்டே கட்டிலில் சென்று உடலை குறுக்கிக்கொண்டு படுத்துவிட்டாள் .

இங்கே கீழே வந்த வம்சி நேராக ஹாலுக்கு வந்தவன் அவன் தாத்தாவும், பாட்டியும் டிவியில் ஏதோ நியூஸ் பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வந்தான்.

அவனை இருவரும் திரும்பி பார்த்துவிட்டு வம்சியை சட்டை செய்யாமல் திரும்பவும்  நியூஸ்சில்  கவனமாக இருக்க… அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆப் செய்தான்.

“டேய் இப்போ எதுக்கு டிவியை ஆப் பண்ணின . ரெண்டு பெரும் நியூஸ் பாக்குறோம்னு தெரியலையா உனக்கு . அந்த ரிமோட்டை கொடு.. ” என்று வீக்கம் வம்சியிடம் கோபமாக பேச…

“ஓஹோ… ரெண்டு பேரும் என் மேல கோபமா இருக்கீங்களா.. அதான் என்கிட்டே பேசாம முகத்தை திருப்பிக்கிட்டிங்களா ?” என்றான் சிரித்துக்கொண்டே.

“நாங்க ஏன்ப்பா உன்கிட்டே கோச்சுக்கணும் . இவ்ளோ நாளா  எங்க பேரனும் பேத்தியும், எங்க மேல பாசம் இருக்கறதுனால தான் நாங்க சொன்னதும் கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு நினைச்சு சந்தோசப்ட்டுட்டு இருந்தோம். இப்போ தான் எல்லாமே தெரிஞ்சுபோயிருச்சே.. அப்பறோம் எதுக்கு உன்கிட்டே நாங்க பேசணும். ஏதோ எங்க காலம் வரைக்கும் ரெண்டு பேரும் யாருக்கும் தொந்தரவு இல்லாம இருந்துகிறோமே… ” என்று மீனு அவனை பார்க்காமலேயே பேசினார்.

அவரிடம் வந்து அமர்ந்தவன் “பாட்டி  என்னை மன்னிச்சிரு .. நான் உங்க பேச்சை கேட்காம எல்லாம் இல்ல… உங்க மேல பாசம் இருந்ததுனால தான தாமரையை கல்யாணம் செய்துகிட்டேன் ” என்றான்.

“கல்யாணம் மட்டும் பண்ணிட்டிகிட்டா போதுமா டா… அவ கூட சேர்ந்து சந்தோசமா வாழ வேண்டாமா? ” என்றார் விக்ரம் கோபமாக .

“இப்போ என்ன உனக்கு நான் தாமரை கூட சேர்ந்து வாழனும் அவ்ளோ தானே .. எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான் யோசிச்சு சொல்றேன் ” என்றான் தாமரையை மனது மாற்ற தனக்கு அவகாசம் வேண்டும் என்று அவர்களிடம் காட்டிக்கொள்ளாமல் பொதுவாக கூறினான்.

“நீ எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ… ஆனா என்னிக்கு தாமரையும், நீயும் சந்தோசமா வாழ ஆரம்பிக்குறதை நாங்க ரெண்டு பேரும் கண்ணார பார்த்து நம்புறோமோ அப்போ தான் நாங்க ரெண்டு பெரும் உன்கூட பேசுவோம் ” என்ற மீனு அவன் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி டிவியை ஆன் செய்தார்.

“சரி சரி என்கூட பேசுறது எல்லாம் இருக்கட்டும். இந்த நியூஸ் வ்ல்லம் தெரிஞ்சு வெச்சு என்ன செய்ய போறீங்க. வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம ” என்றான்.

வம்சி பேசியதை காதில் வாங்கியும் அமைதியாக இருவரும் இருக்க…

“ஓஹோ… என்னனு கூட கேட்க முடியாதோ  உங்க ரெண்டு பேராலையும்  ” என்றவன்.

“சரி எனக்கு என்ன… உங்க பேரன் விஜய் இருக்கானே அவன் பொண்டாட்டி நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்காங்க .. அவனும் ரூம்ல இல்ல போல… அந்த பொண்ணுக்கு நம்ம வீட்ல இருக்கவங்க எல்லாம் புதுசா இருக்கோம்னு கேட்க தங்கிட்டு ரூம்குல்லையே இருக்காங்க” என்று இருவரையும் பார்த்தான்.

அவன் சொன்னதும் “என்ன டா சொல்ற.. என் பேத்தி சாப்பிடாம இருக்காளா .. அவ சாப்பிட்டு ரூம்க்கு போயிருப்பானு இல்ல நினைச்சேன். பாவோம் அவ மாசமா வேற இருக்காளே… ” என்று மீனு எழுந்து நேராக டைனிங் டேபிளுக்கு செல்ல…

அவர் பின்னால் வந்த வம்சி அங்கே தட்டில் உணவு எடுத்துவைத்துக்கொண்டு இருந்த தாமரையை பார்த்தான். காலையில் இருந்து அவள் தரிசனம் கிடைக்காமல் இருந்தவனுக்கு அவளை பார்த்ததும் முகம் மலர்ந்தது .

நேராக வந்து சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தவன் “என்ன தாமரை இன்னிக்கு ஸ்பெஷல் ” என்று சாப்பிட தயாராக அவள் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த உணவுகளை பார்த்தான்.

“என்ன இன்னிக்கு  காலையிலையை நான் வெஜ் செய்திருக்கிங்க.. எதுவும் ஸ்பெஷல்லா ” என்று அவள் பறி மாறி முடித்ததும் அந்த தட்டை தனக்கு வைப்பாள் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்க…

“பாட்டி நான் விஜய் மாமா ரூம்ல இருக்க அந்த பொண்ணுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன் . நீங்க உங்க பேரனுக்கு பரிமாருங்க.. ” என்று உணவை எடுத்துக்கொண்டு தாமரை மேலே செல்ல…

“என்ன பாட்டி உன் பேத்தி இப்படி  இருக்கா… அவ புருஷன் நான் இருக்க அப்போ என்னை கவனிக்காம போறா.. ” என்றான்.

“ம்ம்ம்.. நீ தான் அவளை புடிக்கலையின்னு சொல்லிட்டே இல்ல ..அப்பறோம் என்ன டா புருஷன் கிருஷன்னு சொல்லிட்டு .. உன்மேல அவளுக்கு கோபம் இருக்கும்ல அதான் உனக்கு சாப்பாடு போடாம போறா… ” என்றார் மீனு.

“சரி விடு அவ போகட்டும் . எனக்கு ரொம்ப பசிக்குது நீ எனக்கு சாப்பாடு போடு ” என்றான்.

“ஏன் உனக்கு கை  இருக்குல்ல நீயே எடுத்து போட்டு சாப்பிடு.. நீ பண்ணின காரியத்துக்கு உன்னை வீட்டுக்குள்ளையே வெச்சிருக்க கூடாது ” என்று சொல்லிவிட்டு ஹாலிற்கு செல்ல,,

“அட கிழவி .. !!” என்று அவரையே பார்த்தவன் கிச்சனில் இருந்து வெளியே வந்த அதிதியை பார்த்து .

“ம்மா,… குட் மார்னிங் …” என்றவன் “ஆபீஸ்க்கு டைம் ஆச்சு சாப்பாடு வைக்குறிங்களா ” என்றான் வம்சி.

அவன் பேசியது கேட்டும் எதுவும் பேசாமல் நேராக ஹாளுக்கு சென்ற அதிதி .

“ஓஹோ… எல்லாரும் என் மேல கோபமா இருக்கீங்களா? பரவால்ல.. கொஞ்ச நாள் தானே .. அப்பறோம் எல்லாம் சரியாகிடும் ” என்றவன் உணவை எடுத்து போட்டு சாப்பிட்டு முடித்தவன் ஆபீஸ் கிளம்பினான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் அவர்கள் வீடு வாட்ச்மேன் வந்து “மேடம் யாரோ விஜய் சார் வைஃபை பார்க்கணும்னு வந்திருக்காங்க  உள்ளே வரச்சொல்லட்டுமா  ” என்றார்.

அதிதி விக்ரமையும் மீனவையும் பார்த்தவள்  இனியாவிற்கு வேண்டியவர்கள் தான்  அவளை பார்க்க இங்கே வந்திருக்கிறார்கள் என்று நினைத்தவள் சரி வரச் சொல்லுங்க  என்று அவரை அனுப்பிவிட்டு மிஸ்டர் நான் போய் அந்த பொண்ண  கீழ வரச் சொல்றேன் என்று அதித்தி மேலே செல்ல போக …

தாமரை முன்னே வர கையில் தட்டோடு இனியா தயங்கியபடி அவள் பின்னால்  படிகளை இறங்கி வந்தாள்.

அந்த பொண்ணு தேடி யாரோ நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க தாமரை அதை அவர்கிட்ட சொல்லிடு என்று அதுக்கே கிச்சனுக்கு செல்ல போக அதற்குள்ளாக இனியாவே தேடி வந்தவர்கள் அவர்கள் வீட்டிற்குள் நுழையவும் படிகளை இறங்கியவள் யார் தன்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று யோசனையோடு வாசலை பார்க்க அங்கே ராகேஷ் உள்ளே நுழைய ..  அவனைப் பார்த்ததும்  தான் இருக்கும் இடம் இவனுக்கு எப்படி தெரியும் என்று  பயத்தில் கையில் இருந்த தட்டை அப்படியே கீழே போட்டு இருந்தாள் .

அவள் பயந்து தட்டை கீழே போட்டதும் அனைவரையும் கவனமும் இனியாவின் மீதுதான் இருந்தது .

வேகமாக சோபாவில் இருந்து எழுந்து வந்த மீனு இனியாவை பார்த்து “என்னம்மா என்ன ஆச்சு? தலை ஏதும் சுத்துதா?  கீழ விழுந்துட போற” என்றவர் “தாமர.. அந்த பொண்ணு பிடி எங்காவது கீழே விழப்போகுது” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. இனியா அப்படியே மயங்கி சரிந்தவள் கீழே விழப்போக அவளை கண்டதும் ஓடிப்போய் தாமரை இனியாவை கை தாங்கலாக பிடித்துக் கொண்டாள்.

“ஐயோ இனியா பார்த்து உன் வயிற்றில் இருக்க நம்ம குழந்தைக்கும்,  உனக்கும்  ஏதாவது ஆகிடப்  போகுது” என்று கத்திக் கொண்டே  வேகமாக உள்ளே ஓடிவந்த ராகேஷ் தாமரை பிடித்துக் கொண்டிருந்த இனியாவை  தன் பக்கம் இழுத்து அவளை தாங்கிப் பிடித்திருந்தான்.

இனியாவின் வயிற்றில் வளர்வது ராகேஷின் குழந்தை என்று சொல்லி அவன்  பதறி  அடித்து  இனியாவை தாங்கிப் பிடித்ததை பார்த்ததும் .

விஜய்யின் மொத்த வீட்டு ஆட்களுக்கும் அவன் சொன்னது கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவர்களை எல்லாம் விட தாமரை தான் மிகவும் அதிர்ச்சியில் இருந்தாள்

ENNAI 2-8

“ரொம்ப பசிக்குதே.. என் வயித்துல இருக்கவன் வேற ரொம்ப படுத்துறானே என்னை.. ” என்று கட்டிலில் பிரண்டு படுத்த இனியா

“பேசாம வெட்கத்தை விட்டு சாப்பாடு வேணும்னு கேட்டுடலாமா ?” என்று நினைத்தவள் எழுந்து கதவு வரை வந்த இனியா இருமானதாக கதவருகே வருவதும் , பின்பு உள்ளே திரும்பி நடப்பதுமாக இருக்க..

அப்போது உணவு கொண்டு வந்த தாமரை விஜய்யின் அறைக்கதவை தட்டினாள் .

கதவு தட்டவும் விஜய் தான் வந்திருப்பானோ என்று நினைத்து வேகமாக சென்று கதவை திறந்தவள் அங்கே கையில் உணவை வைத்துக்கொண்டு தாமரை நின்று இருக்க அவளை பார்த்ததும் தயங்கியவள் “வ..வாங்க .. உள்ளே வாங்க ” என்றாள் .

“நீ பசியோட இருக்கேன்னு அம்மு சொல்லிட்டு இருந்தான் . ” என்று கொண்டு வந்த உணவை அவர்கள் அறைக்குள் கொண்டு வைத்தாள்  தாமரை.

உள்ளே வந்தவள் அப்போது தான் கவனித்தாள் .நேற்று இங்கு வரும்போது இனியா எந்த உடை அணிந்து இருந்தாளோ  அதையே தான் இப்போதும் அணிந்து இருந்தாள்

“நீ இன்னும் குளிக்கலையா ? டிரஸ் கூட மாத்தாம இருக்க.. ” என்றவள் உரிமையாக விஜய்யின் அறைக்குள் வந்து அவனுடைய கப்போர்டை திறந்து பார்த்தாள் .

“அது.. நேத்து சார் என்னை அவசரமா இங்க கூட்டிட்டு வந்துட்டாரு. நான் எந்த ட்ரெஸ்ஸும் எடுத்துட்டு வரல.. ” என்றவள்.

“போட்டுக்க வேற டிரஸ் எடுத்துட்டு வரலையே அதான் நான் இன்னும் குளிக்கல ” என்றாள்  தயக்கமாக.

“சரி பரவால்ல.. பிரஷ்  பண்ணிட்ட  தானே.. ” என்றாள்  தாமரை .

“ம்ம்… அதெல்லாம் எழுந்ததும் பிருஹ பண்ணிட்டேன் . பாத்ரூம்ல  தேடி பார்த்தேன் புது பருச் இருந்துச்சு அதுலையே விலகிட்டேன் ” என்றாள்  வேகமாக.

“சரி நீ சாப்பிடு ” என்று திரும்பி தாமரை செல்லப்  போக..

“ஒரு நிமிஷம் ” என்றாள்  இனியா .

கேள்வியாக தாமரை திரும்பி இனியவை பார்க்க..

“என்னை மன்னிச்சிருங்க.. நான் பிளான் எதுவும் பண்ணி விஜய் சாரை  கல்யாணம் செய்துக்கல .. இது தெரியாம .. ” என்று இனியா தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்ல முற்பட..

” அதெல்லாம் முடிஞ்சு போன கதை . . நானும் என் விஜய் மாமாவும் இந்த ஜென்மத்துல சேரக்கூடாதுன்னு  அந்த கடவுள் ஏற்கனவே முடிவு பண்ணி தான் எங்க ரெண்டு போரையும் பிரிச்சிருக்கான். இதுல உன் தப்பு எதுவுமே இல்ல.. நீ இப்படி எல்லாம் யோசிச்சுட்டு இருக்க வேண்டியது இல்லை. ” என்ற தாமரை .

“நீ என்னை விட வயசுல சின்ன பொண்ணா இருக்கிறதுனால தான் நான் உன்னை நீ வா.. பேசுறேன் . உனக்கு அது பிடிக்கலையினா சொல்லு நான் மாத்திக்கிறேன் ” என்றாள்  இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு தாமரை .

“ச்சே ..சே.. அதெல்லாம் எதுவும் இல்ல.. நீங்க என்னை அப்படியே கூப்பிடுங்க.. அப்போ நானும் உங்களை.. ” என்று இனியா சொல்லி முடிக்கும் முன் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள்  தாமரை.

“ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்… நானும் உங்களை நீங்க வாங்கன்னு மட்டும் கூப்பிடாம  அக்கான்னு  கூப்பிடலாமான்னு கேட்க வந்தேன் ” என்று அவசரமாக சொன்னாள் .

” சரி கூப்பிட்டுக்கோ.. நீயும் வினோ மாதிரி தான் இருக்க.. ” என்றாள்  தாமரை.

“வினோ… ” என்று இனியா தாமரையை பார்க்க…

“விஜய் மாமா உனக்கு பதிலா கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியவ .. என்னோட தங்கை ” என்றாள் .

அதை கேட்டதும் ” ஒரே குடும்பத்துல இருக்க ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையில் நான் குறுக்க புகுந்திருக்கேனா.. ” என்று தன்னையே நினைத்து வருந்தினாள் இனியா.

அவள் முகத்தில் தெரிந்த உணர்வை வைத்து புரிந்துகொண்ட தாமரை “இனி நீ வருத்தப்பட்டு எதுவும் ஆகப்போறது இல்ல… சாப்பிடு ” என்று மேஜையில் வைத்து இருந்த உணவை கண்களாலேயே இனியாவிடம் சுட்டிக்காட்டிவிட்டு செல்ல போக…

“அக்கா ஒரு நிமிஷம் ” என்று மீண்டும் தாமரையை அழைத்தாள்  இனியா.

இவ்வ்ளவு நேரம் பொறுமையாக இனியாவிடம் பேசிக்கொண்டு இருந்த தாமரைக்கு ஏனோ பொறுமை இழந்தது . ‘ என்ன… ” என்றாள்  அழுத்தமாக திரும்பி இனியாவை  பார்த்து.

“அக்கா ரூம்ல தண்ணி இல்ல… நேத்து நைட்ல  இருந்து தண்ணி குடிக்கல.. ” என்றாள்  தன் உதடுகளை ஈரம் செய்து .

“ஏன் நைட் உன் ரூம்ல தண்ணி எடுத்து வெச்சிட்டு தூங்க வேண்டியது தானே ” என்றாள்  தாமரை.

“இல்ல க்கா… விஜய் சார் வருவாருனு வெயிட் பண்ணிட்டு அப்படியே தூங்கிட்டேன் ” என்றாள் .

“விஜய் மாமா ஆபீஸ் விஷயமா கிளம்பி போயிருப்பாங்க.. வெளியே போனவங்க எப்போ  வருவாங்கனு பாத்துட்டு இருந்தா நீ மூணு நாள் ஆனாலும் இந்த ரூமுக்குள்ள தான் இருக்கனும். உனக்கு வேணும்ங்குறதை நீ தான் பார்த்துக்கணும். எப்பவும் இன்னோருத்தரை எதிர்பார்த்தது இருக்காத  சரியா ” என்று கராராக பேசிய தாமரை .

கொண்டு வநத உணவை கையில் எடுத்தவள் ” நீ என்கூட வா . முதல்ல இந்த வீட்ல எது எது எங்க இருக்குன்னு பாரு. அப்பறோம் உனக்கு என்ன வேணுமோ யாரையும் கேட்காம நீயே செய்துக்க ” என்று தாமரை முன்னே நடக்க..

“என்ன இந்த அக்கா இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்காங்க . விஜய் சார் எப்படி இவங்கள லவ் பண்ணினாரு ” என்று யோசித்தபடி தாமரையின் பின்னால்  டீச்சரிடம் படம் கற்றுக்கொள்ளும் LKG  மனைவி போல பின்னால்  சென்றாள்.

இங்கே… சேது கொடுத்த தகவலின் படி இனியாவை விஜய் திருமணம் செய்துகொண்ட செய்தி கேட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்று இருந்தான் ராகேஷ்.

மேலும் விஜய் வீட்டில் அவன் இனியாவை திருமணம் செய்துகொண்டது அவன் வீட்டில் எல்லோருக்கும் விஜய் மீது கோபம் என்றும். இனியாவை அவனுக்கு எப்படி தெரியும், எப்படி காதலித்தான் என்ற விசயமும் அவர்களில் யாருக்கும் தெரியாது என்று தெரிந்து கொண்டவனுக்கு  அடுத்து சேது சொன்னதை கேட்டு தான் பேரதிர்ச்சியானது.

“என்ன டா சேது சொல்ற! இனியா கர்பமா இருக்காளா!! அந்த விஜய் அன்னிக்கு அவ்ளோ ஒழுக்கமா என்கிட்டே பேசினான். அவளை பத்திரமா பாத்துப்பேன். அவ என்கிட்டே பாதுகாப்பா இருப்பான்னு சொல்லிட்டு வேலியே  பயிரை மேய்ந்த கதையா இப்போ அவளை அவனே கர்ப்பம் ஆகிட்டானா!! ” என்று தனக்கு கிடைக்க வேண்டிய இனியாவை விஜய் உரிமையாக்கிக்  கொண்டதை ராகேஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அதே கோபத்தில் இனியாவை பற்றிய மற்ற விபரங்களை கேட்டுத்தெரிந்து கொண்டவன் நேராக அவள் பாட்டியும், அவளும் இத்தனை நாள் வசித்து வந்த குப்பத்திற்கு சென்று இனியாவின் பாட்டியை நேராக சந்தித்து அவரிடம் இனியாவை பற்றி சொல்லி நேராக விஜய் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

“அக்கா நீங்க எப்பவுமே இப்படி தான் ஸ்ட்ரிக்டா இருப்பிங்களா .. ஏன் இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்கீங்க நீங்க, இப்படி எல்லாம் இருந்தா உடம்பு கெட்டுப்போய்டும். முகம் எப்பவும் உர்ருன்னே இருக்குமே.. ” என்று தாமரையிடம் கேள்வி கேட்டுக்கொண்டே அவள் பின்னால் படிகளில் சிறுபிள்ளை போல இறங்கி வந்தாள் .

“ஏய்.. ஏய்… இப்படி எல்லாம் வேகமா இறங்காத . உன் வயித்துல  விஜய் மாமா குழந்தை இருக்குல்ல.. ஜாக்கிரதையா பொறுமையா வா.. ” என்று இனியாவை அதட்டிவிட்டு அவள் மெதுவாக நடந்து வருகிறாளா என்பதை உறுதி செய்தவள் திரும்பி படிகளில் இறங்கினாள் .

அப்போது தான் அவர்கள் வீட்டு காவலாளி இனியாவை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு செல்ல.. அவனை சென்று சிறிது நேரத்தில் ராகேஷ் விஜய் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான்.

அவனை பார்த்ததும் “ஐயோ ! இவனா! இவனுக்கு எப்படி விஜய் சார் வீடு தெரியும் .இவன் எதுக்கு இங்க வந்தான் ” என்று யோசித்துகொன்டே இனியா கீழே வர…

ராகேஷும் இனியாவை பார்த்துவிட்டு அவளிடம் வர… நேற்றிலிருந்து சாப்பிடாமல் இருதத்திலும், திடீர் என்று ராகேஷை பார்த்த அதிர்ச்சியில் தலை சுற்றி அப்படியே கீழே சரியாப்போன இனியாவை மீனுவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த தாமரை கையில் இருந்த தட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு இனியாவை விழாமல் பிடித்துக்கொள்ள…

“இனியா பார்த்து நம்ம குழந்தையும், நீயும் பத்திரம் ” என்று அவளை நோக்கி ஓடி வந்தவன் தாமரை கையில் இருந்த இனியாவை அவன் கைவளைவிற்குள் இழுத்து பிடித்துக்கொண்டான்.

அப்போது தான் கெஸ்ட் ஹவுசில் இருந்து இரவெல்லாம் தூங்காமல் குடித்துவிட்டு வந்த விஜய் அவன் வீட்டிற்குள் வரும்போது ராகேஷின் கார் நிற்பதை கண்டவன் வேகமாக காரை பார்க் செய்துவிட்டு உள்ளே வந்தவன் இனியா மயங்கி தாமரை கையில் இருக்க.. ராகேஷ் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஆத்திரம் வந்தவனாக வேகமாக வீட்டிற்குள் வந்தவன் “ராகேஷ்!!! இனியா மேல இருந்து உன் கையை எடு.. ” என்று கத்திக்கொண்டே  அவனிடம் வர…

“என்ன விஜய் நீ விளையாடுறியா இனியா மயங்கி விழுந்திருக்கா  அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். நீ பொறுப்பில்லாம பேசுற.. ” என்று இனியாவை தூக்கப்போனான் ராகேஷ் .

அவன் கையில் இருந்த இனியாவை தன் பக்கம் இழுத்த விஜய் அவளை கையில் ஏந்தியவன் கீழே இறங்கி வந்து மீனுவின் அறையில் அவளை படுக்க வைத்துவிட்டு “பாட்டி இனியாவுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க.. ” என்று வெளியே வந்தவன் .

நேராக ராகேஷிடம் வந்தவன் “உன்னை யாரு இங்கே வர சொன்னது. நீ எதுக்கு டா இங்க வந்த ” என்றான் கோபமாக.

“நான் இனியாவை பார்க்க வந்தேன் ” என்றான்.

“அதெல்லாம் இருக்கட்டும் நீங்க ரெண்டு பேரும் அப்ரோம் பேசுங்க.. இனியா மயங்கி விழும்போது நீ அவ வயித்துல வளரது நம்ம குழந்தையின்னு சொன்னியே.. அவ இந்த வீடு மருமக.. என் பையனை  கல்யாணம் செய்திருக்கா.. நீ எப்படி அந்த வார்த்த்தையை சொல்லலாம் ” என்றார் அதிதி.

“உங்க பையனை வேணும்னா இனியா கல்யாணம் செய்திருக்கலாம் . ஆனா இனியா என்னோட காதலி நானும் அவளும் கல்யாணத்துக்கு முன்னமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு போய்  கணவன் , மனைவியாவே வாழ்ந்துட்டோம். ஆனா உங்க பையன் எங்களுக்கு இடையில் வந்து இனியாவை துபாயில் இருந்து எனக்கு தெரியாம அவளை இங்க தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்துகிட்டான் ” என்று ராகேஷ் கூறி முடிக்கும்னும் விஜய்யின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .

“என்ன டா ராஸ்கல் சொன்ன…  இனியாவை பத்தி அதுவும் ஒரு பெண்ணை பத்தி இப்படி தப்ப பேசுறது உனக்கே அசிங்கமா இல்ல.. அம்மா இவன் ஒரு கேடு கெட்டவன் . இவன் இனியாவை பத்தி சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. அவ அப்படி பட்ட பொண்ணு இல்ல.. ” என்று விஜய் மீண்டும் ராகேஷை அடிக்க போக..

” அந்த தம்பி சொல்றது எல்லாம் உண்மை தான். அந்த தம்பி பொய் சொல்லல ” என்று இனியாவின் பாட்டி மரகதம்

அவர் குரலை கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க.. இனியாவின் பாட்டி ராகேஷின் பியேவுடன் உள்ளே வந்தார்.

“நீங்க.. ” என்று விஜய் அவரை யார் என்று தெரியாமல் கேட்க.

“நான் இனியாவோட பாட்டி மரகதம் ” என்று மிகவும் தயக்கத்தோடு விஜய்யிடம் வந்தார்.

இனியாவை துபையில் இருந்து அழைத்து வரும்போது அவள் பாட்டியை பற்றி சொல்லி இருப்பது விஜய்க்கு நினைவில் வர.. அவரிடம் வேகமாக சென்றவன் .

“இனியாவை பத்தி நல்லா தெரிஞ்ச நீங்களே இந்த ராகேஷ் சொல்ற பொய்யை எப்படி உண்மையின்னு சொல்றிங்க ” என்றான் விஜய்.

“என் பேத்தி யாரையோ காதலிக்குறதாவும், அவனை கூட்டிட்டு இந்த ஊரைவிட்டே போயிட்டான்னு  அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் பேசினாங்க. ஆனா அப்போ நான் அதை எல்லாம் நம்பள.. என் பேத்தியை யாரோ ஏமாத்தி இருகாங்க. அவ அப்படி எல்லாம் என்னை தனியா விட்டுட்டு போற ஆள் இல்ல.. அவ இல்லேன்னா நான் இலேன்னு அவளுக்கு நல்லாவே தெரியும் . எப்படியும் என்னை தேடி என் பேத்தி திரும்ப வந்திருவான்னு நான் என் உசுரை கையில் அப்புடுச்சு வெச்சிருந்தேன் . அது வீண் போகல.. நேத்து இந்த தம்பி என் வீட்டுக்கு வந்து என்கிட்டே இந்த் போட்டோவை காட்டின அப்பறோம் தான் நான் அந்த தம்பி சொன்னதையே நம்பினேன் .” என்று தன் சேலையில் சுற்றி வைத்து இருந்த போட்டிவை எடுத்து விஜய் முன்பு நீட்ட…

அதை வேகமாக வாங்கி பார்த்த விஜய் பாட்டி கொடுத்த போட்டோவில் இனியா மெத்தையில் படுத்திருக்க அவள் அருகே ராகேஷும் படுத்து இருந்தான். அதை பார்த்ததும் விஜய்க்கு என்ன பேசவைத்து என்றே தோன்றவில்லை. அமைதியாக நின்று இருக்க..

“என்ன விஜய் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தியே இப்போ என்ன பதில் சொல்ல போற.. சொல்லு . என் இனியாவை நீ மிரட்டி கல்யாணம் செய்திட்டு வந்திருப்ப.. அவ பாவம் நீ விட்டுரு அவளை.. தயவு செய்து என் இனியாவை என்கூடவே அனுப்பி வெச்சிரு ” என்று ராகேஷ் அப்பட்டமாக நடிக்க..

அவன் நடிப்பது தெரியாமல் அவன் பேசியதை எல்லாம் உண்மை என்று அங்கிருந்த அனைவரும் நம்பினர் .

அடுத்து என்னவாகும் இனியாவை ராகேஷ் தன்னோடு அழைத்து செல்வானா ?

விஜய்யும், அவன் வீட்டு ஆட்களும் இனியாவை  எந்த மனநிலையில் பார்ப்பார்கள்

பொறுத்திருங்கள்

ENNAI 2-9

இனியாவுடன் தான் பெட்டில்  அருகருகே இருந்த போட்டோவை காட்டி மொத்த குடும்பத்தையும் பேசமுடியாமல் செய்திருந்தான் ராகேஷ் .

போதாக்குறைக்கு இனியாவின் பாட்டி இடம் இவர்கள இருவரும் காதலர்களாக இருந்தார் என்று அதே போட்டோவை காட்டி நம்ப வைத்து இருக்க .. அவன் பேச்சை நம்பி விஜய்யின் வீட்டில் வந்து அவரும் ராகேஷிற்கு ஆதரவாக பேசினார்.

“டேய் விஜய் என்ன டா இது .. இவர் சொல்றது எல்லாம் உண்மையா ? அந்த பொண்ணை விருப்பம் இல்லாம தான் கல்யாணம் செய்துக்கிட்டயா ?” என்று அதிதி அவனிடம் பேச..

“அம்மா.. நீங்களும் அவன் சொன்னதை நம்பி என்கிட்டே கேக்குறீங்க . நான் அந்த மாதிரி எல்லாம் ஒரு விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்தி தாலி கட்டுறவன் கிடையாது . அதுவும் இல்லாம இவன் சொல்றது எல்லாமே பொய் . இனியா வயித்துல வளருறது என்னோட குழந்தை தான் ” என்று சொன்னான் விஜய்.

“சரி டா நீ சொல்றது உண்மையின்னே  வெச்சுப்போம் . என்கிட்டே கொஞ்ச நாள் முன்ன நீ விரும்பின  பொண்ணு வேற ஒருத்தனை கல்யாணம் செய்துகிட்டான்னு எவ்ளோ வருத்தப்பட்ட.. நீ சொல்லி ஒரே வாரத்துல தான் நான் உனக்கு கல்யாண  ஏற்ப்பாட்டை செய்தேன். அப்போ அதுக்குள்ள இந்த பொண்ணை நீ காதலிக்கிறேன்னு சொன்ன . அவ கர்பமா இருக்கா அதுக்கு நான் தான் காரணம்னு சொல்றதை நம்புறதா வேண்டாமான்னு எனக்கு புரியல டா ” என்றார்.

“அம்மா உங்க கிட்டே நான் என்ன சொல்லி புரியவைப்பேன் . நான் ஒரு பொண்ணை காதலிச்சது உண்மை தான் ” என்றவன் அவன் அருகில் நின்று இருந்த தாமரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு .

“அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் நடந்திருச்சு. அந்த சோகத்துல நான் கொஞ்ச நாள் நம்ம வீட்டுக்கு வராம இருந்தேன் அது உங்களுக்கு நியாபகம் இருக்கா ” என்றான் அதிதியை பார்த்து.

“ஆமா  டா ஏதோ ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி பாதி நேரம் நீ வீட்டுக்கே வரல ” என்றார்.

“நான் இங்க வராத நேரம் எல்லாம் ஆபீஸ்க்கே போகல . பாதி நேரம் நான்  நம்ம  அவுட் ஹவுசில் தான் இருந்தேன். அங்க தான் இனியாவும்..” என்று மேல சொல்ல விஜய் தயங்க.

“விஜய் என்ன டா சொல்ல வர நீ… நீ காதலிச்ச பொண்ணை மறக்குறதுக்காக இந்த பொண்ணை கூட்டி வந்து குடும்பம் நடத்துனேன்னு  சொல்லபோறியா ” என்றார் அதிர்ச்சியாக அதிதி.

“அதிதி என்ன இப்படி எல்லாம் பேசுற.. நம்ம விஜய்யை பத்தி உனக்கு தெரியாதா அவன் தெரிஞ்சும் இப்படி ஒரு காரியத்தை பண்ணுறவன் கிடையாது . பாத்து பேசும்மா … ” என்று விக்ரம் விஜய்க்கு பரிந்து பேச..

“ஐயோ  ! மாமா!! நான் என்ன தான் செய்வேன் . இப்படி யாரோ ஒருத்தர் வந்து நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தவ மேல களங்கம் ஏற்படுத்துறான். இவன் அதை பார்த்துட்டு சும்மா இருக்கான்னா என்ன அர்த்தம். இந்த தம்பி சொன்னது எல்லாம் உண்மையின்னு தான் அர்த்தம். அவன் காட்டின போட்டோவும் உண்மையா தான் இருக்கும் ” என்றாள்  அதிதி .

“பாத்தியா விஜய் உன் அம்மாவுக்கே நான் சொல்றது உண்மையின்னு தோனிக்கு. சொல்லு அவங்ககிட்டே என்ன சொல்ல போற.. இப்பவாவது என் இனியாவை என்னோட அனுப்பி வெச்சிரு ” என்றான்.

“டேய் ராகேஷ் ஒழுங்கா மரியாதையா இங்கே இருந்து போய்ட்டு இல்லேன்னா நான் என்ன செய்வேன்னு எங்கே தெரியாது.” என்று  அவன் சட்டையை பிடித்தான் விஜய்.

“இப்போ என்ன  விஜய் நான் இங்கே இருந்து கிளம்பனும் அதானே .. போறேன் ” என்று தன் சட்டையில் இருந்த விஜய்யின் கையை பிரித்துவிட ராகேஷ்.

“நான் இங்கே இருந்து போகணும்னா என் இனியா இல்லாம போக மாட்டேன் ” என்றவன் .

“என்ன பாட்டி  நடக்குறதை எல்லாம் பாத்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்க. உங்க பேத்தியை இவன் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி இங்க கூட்டி வந்திருக்கான். நீங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ” என்று அவரை தூண்டி விட்டான் ராகேஷ்.

“இங்க பாருங்க தம்பி என் பேத்தியை தயவு செய்து எங்க கூட அனுப்பி வெச்சிருங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும். இப்படி கட்டாயப்படுத்தி என் பேதியை கல்யாணம் செய்துட்டு வந்து என்ன சாதிச்சீங்க ” என்று அவர் விஜய்யிடம் நியாயம் கேட்க.

“பாட்டி  இனியாவை நான் எங்கையும் அனுப்புறதா இல்ல.. அவ என்னோட மனைவி. இவனை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. இவனை நம்பி இனியாவை அனுப்பிவைக்க என்னால முடியாது. ” என்றான் விடாப்பிடியாக.

“ஏன் விட முடியாது.. இல்ல ஏன் விட முடியாதுன்னு சொல்ற… நானும் இனியாவும் குடும்பம் நடத்தினத்துக்கு ஆதாரம் இருக்கு. அதை நீயே உன் ரெண்டு கண்ணாளையும் பார்த்த தானே.. அப்பறோம் என்ன வேணும் உனக்கு ” என்று விஜய்யிடம் பொய்யை தைரியமாக ராகேஷ் கூற.

” டேய் இனியா அப்படி பட்ட பொண்ணு கிடையாது. அவளை பத்தி இன்னொரு வார்த்தை பேசுன .. ” என்று ராகேஷை மீண்டும் அடிக்க விஜய் கையை ஓங்க..

“விஜய் மாமா! நிறுத்துங்க.. அவன் இவ்ளோ தூரம் கையில் ஆதாரத்தை வெச்சிட்டு பேசிட்டு இருக்கான். ஆனா அது இல்லேனு மட்டும் சொல்றிங்களே.. அப்போ இனியாவை எப்படி உங்களுக்கு தெறியும். எப்போ இருந்து அவளுக்கும் உங்களுக்கும் பழக்கம். அவளும் நீங்களும் உண்மையாவே காதலிக்குறிங்களா??… சொல்லுங்க.. இப்படி கண்டவன் எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள அவனது உங்களையும், உங்க பொண்டாட்டியையும் பேசுறதை என்னால பார்க்க முடியல.. எனக்கு உங்களை பத்தி நல்லாவே தெரியும் . நீங்க அபப்டி ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறுஞ் ஆள் இல்லை. அதை இங்க இருக்க யார் நம்பளையினாலும் நான் நம்ப மாட்டேன். எனக்கு உங்களை பத்தி நல்லாவே தெரியும் ” என்றாள்  கோபம் போங்க தாமரை.

தன் வீட்டில் இருப்பவர்கள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை விட தாமரை தன்னை நம்புவதை கண்டு விஜய்க்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால்  இவர்களிடம் இனியாவை பெண்களை விற்கும் கள்ளச்சந்தையில் இருந்து ராகேஷ் விலைக்கு வாங்கி இருக்கிறான்.அவனிடம் இருந்து இனியாவை காப்பற்றி கூட்டி வந்து பாதுகாப்பு கொடுத்த நானே.. அவளை கர்ப்பமாகிவிட்டேன் என்று எப்படி சொல்வது.

அதை கூட சொல்லிவிடலாம். இனியாவை ஏலத்தில் ராகேஷ் வாங்கிய விஷயம் தன் குடும்பத்திற்கோ , இனியாவின் பாட்டிக்கோ தெரிந்தாள்  என்ன ஆகும். அவர்கள் இனியாவின் நடத்தையை சந்தேகம் கொள்ள மாட்டார்களா.. அப்படி ஒரு எண்ணம் இவர்கள் மனதில் தோன்றிவிட்டாள் இனியாவின் மீதிருக்கும் இவர்கள் பார்வை அவளை காயப்படுத்தும் அல்லவா என பலவித யோசனை விஜய்க்கு தோன்றியது.

என்ன ஆனாலும் சரி யார் என்ன நினைத்தாலும் சரி இனியாவை பற்றி யாரிடமும் தான் கூறப்போவது இல்லை. இனியாவை யாரும் காயப்படுத்தவும் விடப்போவதுமில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டவன்.

“டேய் நீ முதல்ல இங்க இருந்து போ.. ” என்று ராகேஷின் மார்பில் கை  வைத்து அவனை  வெளியே தள்ளினால் .

“முடியாது விஜய் எனக்கு நியாயம் கிடைக்காம நான் இங்க இருந்து போறதா இல்லை..” என்று அழுத்தமாக விஜய்யை பார்த்தவன் .

“என்ன விஜய் இனியாவை என்கிட்டே இருந்து விலைக்கு வாங்கி வந்தேன்னு நான் உன் வீட்டு ஆளுங்க கிட்டே சொல்லட்டுமா நீ கொடுத்த ப்ளாண்ட் செக் கூட என்கிட்டே பத்திரமா இருக்கு ” என்பர் விஜய் காதில் கிசுகிசுத்து ராகேஷ் .

தன் பாக்கெட்டில் இருந்த எம்ப்தி செக்கை லேசாக விஜய்யிடம் மேலே தூக்கி காட்டியவன் “பரவால்ல விஜய் நீ உன்னை நம்பி வந்த பொண்ணை எவ்ளோ நல்லா பத்துக்கணும்னு நீ நினைக்குற.. உன் பேர் கெட்டு  போனாலும் பரவாயில்ல… இனியாவோட பேர் கெடக்கூடாதுனு நீ பாக்குறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு ” விஜய்யை பார்த்தான்.

அவனை தள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்த விஜய் ” இங்க  பாரு அதான் இனியாவுக்காக நீ செலவழிச்சு பணத்தை விட அதிக பணம் நான் உனக்கு தாரேன்னு சொல்லி அந்த செக்கை உன்கிட்டே கொடுத்திருக்கேன். அப்ரோமும் ஏண்டா வந்த அவ வாழ்க்கையில விளையாடுற.. வேணும்னா உனக்கு வேற பணம் எதுவும் வேணும்னா சொல்லு நான் தரேன் . பிரச்சனை பண்ணாம ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்ட்டு ” என்று ராகேஷை தனியே அழைத்து சென்று பேசினான் .

“ம்ஹும்.. முடியாது விஜய் . இன்னிக்கு நான் இனியாவை என்கூட கூட்டிட்டு போகாம இங்க இருந்து நகர போறது இல்ல.. நீ மட்டும் அவளை அனுபவிச்சு அவ வயித்துல புள்ளையே கொடுத்துட்ட… உன் அளவுக்கு பெருந்தன்மை எனக்கு கிடையாது . என்கூட ஒரு நைட் ஒரே நைட் மட்டும் அவளை அனுப்பி வெச்சிரு . அவளை ஆசை தீர ஒரு முறை அனுபவிச்சிட்டேன்னா அப்பறோம் நான் உங்க ரெண்டு பேர் வழியிலையும் வரமாட்டேன். ரொம்ப சிம்பிளா  சொல்லனும்னா உன் பொண்டாட்டியை நான் ஒரு நைட் பொண்டாட்டியா வெச்சுக்கறேன்னு சொல்றேன் . டீல் ஓகேவா  ” என்று சிறிதும் யோசிக்காமல் எரிந்துகொண்டு இருந்த விஜய்யின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டான் ராகேஷ்.

“என்ன டா சொன்ன..!!! ” என்று ஆத்திரத்தில் விஜய் ராகேஷை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

ஆபீஸ் போய்க்கொண்டு இருந்த வம்சிக்கு மீனு கால் செய்து உடனே கிளம்பி வீட்டிற்கு வர சொல்லி இருக்க.. அந்த நேரம் காரில் வீட்டிற்கு வந்த வம்சி , விஜய் யாரையோ போட்டு அடிப்பதை பார்த்ததும் வேகமாக காரை விட்டு இறங்கியவன் வீட்டிற்குள் ஒட்டி வந்து விஜய்யை பிடித்து நிறுத்தியவன் .

“விஜய் என்ன டா ஆச்சு ? எதுக்கு இந்த ஆளை போட்டு இப்படி அடிக்குற.. ” என்று கேட்டான் வம்சி.

விஜய்யுடன் ஒட்டிப்பிறந்த வம்சியை பார்த்ததும் ராகேஷிற்கும் , அவன் பிஏ , இனியாவின் பாடி மூவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இருவரும் ஒருவரை போலவே இருப்பது சினிமாவில் மட்டுமே பார்த்தது போல அவர்கள் முகம் காட்டியது.

” டேய் அவனை அடிடா.. ” என்றான் விஜய் .

“விஜய் என்ன டா என்ன சொல்ற.. ” என்று வம்சி இங்கு என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று புரியாமல் கேட்டான் .

” நான் சொல்றதை நீ கேட்ப்பேன்னா  காரணம் கேட்காம இவனை அடிச்சி நம்ம வீட்டை விட்டு துரத்து டா..” என்றான் விஜய் இன்னமும் கோபம் குறையாமல்.

விஜய் சொன்ன அடுத்த நொடி வம்சி ஏன்? என்ன ? என்று காரணம் கேட்காமல் திரும்பி ராகேஷிடம் செல்ல…

வம்சி வருவதை பார்த்து அரண்டு போன ராகேஷ் “குமார்.. ” என்று தன் பியேவை அழைத்தான். அதுவரை அவன் அடிவாங்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த குமார் வம்சியின் குறுக்கே புகுந்து “சார் வேண்டாம் சொன்னா கேளுங்க… ” என்று வம்சியை சமாதானம் செய்ய முயல..

“நீ யார் டா இப்படி ஒருத்தன் கூட இருக்க…  வழியை விடு ” என்று குமாரை தள்ளிவிட்டு ராகேஷின் சட்டை கலரை பிடித்து சுவற்றோடு தள்ளி நிப்பாட்டியவன் அவனை அப்படியே அவன் கழுத்தை நெரித்துக்கொண்டே ஒற்றை கையால் அவனை அபப்டியே மேலே தூக்கினான் .

ராகேஷ்  வம்சியை எதிர்க்க முடியாமல் திணற..

“பொதும் நிறுத்துங்க… ” என்று இனியாவின் குரல் ராகேஷை அடிக்க ஓங்கிய வம்சியின் கை  அபப்டியே நின்றது

ENNAI 2-10

ராகேஷ் ஏன் இப்படி என் வாழ்க்கையில விளையாடுற.. என்னை நிம்மதியாவே இருக்க  விட மாட்டியா .. உன்னால நான் பட்ட கஷ்டம் போதாதா ..இங்கயும் வந்து என்  நிம்மதியை கெடுக்க போறியா ” என்று இனியா சோர்ந்து போய்  அவனை நோக்கி நடந்து வந்தாள் .

அவள் குறுக்கே வந்த விஜய் ” இனியா நீ ஏன் வந்த..  உள்ள போ.. இவன்கிட்டே பேசினா அப்பறோம் உனக்கு டென்ஷன் தான் ஆகும் ” என்று இனியா எங்கே உண்மையை சொல்லிவிடுவாளோ என்று அவளை தடுக்க முயற்சித்தான்.

“விஜய் சார் என்னை தடுக்காதீங்க .. எவ்ளோ நாளைக்கு இவனுக்கு பயந்துட்டு நான் இருக்கிறது . எப்போ இவன் என்ன தேடி உங்க வீட்டுக்கே வந்தானோ அதுக்கு அப்புறம் இவனுக்கு பயந்து  ஒளிஞ்சிக்கிறதுல  எந்த அர்த்தமும் இல்லை. இதுக்கு மேல நான் எங்க போய் ஒழிய முடியும் யோசிச்சு பாருங்க” என்று நேராக ராகேஷின் முன்பு போய் நின்றவள்.

” நீ சொன்னது எல்லாம் உண்மைதான்” என்று அவனைப் பார்த்தாள்.

இனியா அப்படி சொன்னதை  யாராலும் நம்ப முடியவில்லை. ஏதோ பிரச்சினை தான் ஏற்படுத்த ராகேஷ் வந்திருக்கிறான் என்று நினைத்தார்களே ஒழிய ராகேஷ் சொல்வது உண்மையாக இருக்காது என அவர்களின் உள் மனது சொல்லியது .

ஆனால் இனியாவே அவள் வாயால் ராகேஷிடம் அவன் சொன்னது உண்மைதான் என்று சொல்லவும் அவர்கள் நம்பிக்கை பொய்த்துப் போவது போல தோன்றியது.

“இனியா நான் சொல்றதை கேளு நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன். நீ முதல்ல இங்க வா” என்று அவள் கை பிடித்து தன் பக்கம் இழுத்த விஜய்.  “வம்சி !! அவன அடிச்சு துரத்துன்னு சொன்னேனா இல்லையா உன்கிட்ட .. நீ அவனை நம்ம வீட்டுக்குள்ள நிக்க வெச்சு வேடிக்கை பாத்துட்டு இருக்க..” என்று சிங்கம் போல விஜய் கர்ஜிக்க. அடுத்த நொடி ராகேஷின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே இழுத்து செல்ல போனான் வம்சி …

“ஒரு நிமிஷம் இருங்க நான் சொல்றத முதல்ல கேட்டுட்டு அப்புறம் அவனை அடிச்சு துரத்தினாலும் சரி,  இல்ல கொன்னு போட்டாலும் சரி. நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றாள்  இனியா.

அவள் அப்படிச் சொன்னதும் வம்சி ராகேஷை விட்டவன் இனியாவே திரும்பிப் பார்க்க “விஜய் சார் தயவு செய்து என்னை பேச விடுங்க. அவனை இங்கிருந்து துரத்தி விட்டுட்டா பிரச்சனை முடிஞ்சிடுமா. திரும்பவும் ஏதாவது ஒரு வழியில வந்து பிரச்சனை கொடுத்துக்கிட்டே தான் இருப்பான்.  நான் மட்டும் இதுல பாதிக்கப்பட்டா பரவாயில்லை. இப்போ என் கழுத்துல தாலி கட்டி எனக்கு உறவாய் இருக்கிற நீங்களும் சேர்ந்து இதில் பாதிக்கப்படுவீங்க. உங்க குடும்பமும் கூட தான். ஒரே நாளுல வாங்க எவ்வளவு பிரச்சனையை தான் தாங்குவாங்க. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே  ஆகணும் . தயவு செய்து  என்ன பேச விடுங்க சார் ”  என்று இனியா சொல்லவும்.

 அவளையே ஆழமாக பார்த்த விஜய் அவளை பிடித்திருந்த பிடியை தளரவிட்டான் .

அதிலேயே விஜய் தனக்கு சம்மதம் தெரிவித்து விட்டான் என்று புரிந்து கொண்ட இனியா லேசாக விஜய்யை பார்த்து முறுவலித்தவள் திரும்பி ராகேஷை பார்த்தாள் .

அவன் எதுவும் பேசாமல் நின்று இருக்க “ஏன் ராகேஷ்  அமைதியா இருக்க நான் தான் நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு சொன்னே.  உனக்கு கண்டிப்பா நான் சொன்னதை கேட்டு சந்தோஷமா இருந்திருக்குமே” என்றாள்.

“அ… அது… எனக்கு.  எனக்கு சந்தோசம் தான். நீ உண்மையை ஒத்துக்கிட்டதக்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். இனிமேல் உனக்கு இங்க வேலை இல்லையே பேசாம என்கூட நீ கிளம்பி வந்துடு. வா…” என்று அவளை தன்னோடு ராகேஷ் அழைக்க…

 “வரேன் ராகேஷ் ஆனா  அதுக்கு முன்ன நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு” என்றாள் இனியா.

“என கேட்கணும் சீக்கிரமா கேளு ” என்று அவளை அவசரப்படுத்தினான் ராகேஷ் .

“நானும் நீயும் காதலிச்சிட்டு இருந்தோம்னு சொன்னியே எங்க? எப்போ? நீ என்னை முதன் முதலா பார்த்த.. என்கிட்ட எப்ப உன் காதலை நீ சொன்ன… அது உனக்கு ஞாபகம் இருக்கா அதை சொல்லு” என்றாள்  இனியா.

 “அது… அது வந்து.. அது… நான் உன்னை முதல்ல…” என்று ராகேஷ் பேச தடுமாற..

 “ஏன் ராகேஷ் உனக்கு ஞாபகம் வரலையா? நான் சொல்லட்டுமா?” என்றவள்.

அவள் பாட்டியிடம் திரும்பி “ பாட்டி நம்ம குப்பத்து பக்கத்துல இருக்கிற கவர்ன்மென்ட் ஸ்கூல்ல பிளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன் அப்போ சாயங்காலம் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குதுன்னு சொல்லி தினமும் போவேனே அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றாள் .

 “அது எப்படி எனக்கு தெரியாமல் போயிடும் இனியா. நம்ம ஏரியாவிலேயே நல்லா  பிடிக்கிற பொண்ணு நீ மட்டும் தானே. அங்க இருக்குற எத்தனை பேருக்கு டியூஷன் சொல்லி கொடுத்துட்டு நீயும் படிச்சுட்டு இருந்த. திடீர்னு டியூஷன் சொல்லிக் கொடுக்குறதை நிப்பாட்டிட்ட.. காரணம் கேட்டதுக்கு  உனக்கு பரீட்சை பக்கத்துல வந்துருச்சு உன்னால படிக்க முடியாதுன்னு சொல்லி  ஸ்பெஷல் கிளாஸ் போக ஆரம்பிச்ச அது நல்லா ஞாபகம் இருக்கு” என்றார் மரகதம்.

“ ஆமா பாட்டி நான் ஸ்பெஷல் கிளாஸ்க்கு போறேன்னு உன்கிட்ட பொய் சொல்லிட்டு. நான் லவ் பண்ணவன  மீட் பண்ண போனேன் . தினமும் சாயங்காலம் 6:00 மணிக்கு நானும் அவனும் நம்ம குப்பத்தை தாண்டி இருக்கிற  பார்க்ல தான் மீட் பண்ணுவோம்.கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்.” 

“நான் காதலிச்சவன் உண்மையாவே என் மேல காதலும். அன்பும் இருக்கிற மாதிரி என்கிட்ட நடிச்சிருக்கான். ஆனா அது தெரியாம அவனை நம்பி அவன் கூட நான் உன்கிட்ட கூட சொல்லாம நம்ம வீட்டை விட்டு போயிட்டேன். அவன் கூட போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.அவன் எப்பேர்பட்டவன்னு. அப்போ தெரிஞ்சு நான் என்ன செய்றது .  அவன் என்னை காதலிச்சு ஏமாத்தி பொண்ணுங்களை எல்லாம் விக்கிற இடத்துக்கு என்ன கூட்டிட்டு போய் வெறும் ₹5000 பணத்துக்காக என்ன வித்துட்டான்” என்று இனியா சொல்லி முடிக்க…

இனியா அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் மரகதத்தின் பார்வை ராகேஷின் மீது விழுந்திருந்தது .

“ அடப்பாவி சண்டாளா!!  என் பேத்தியை காதலிச்சு ஏமாத்தி அவளை கூட்டிட்டு போய்  எங்கேயோ வித்துட்டு. இங்க வந்து என்கிட்ட அவளை காதலிச்சேன்னு நாடகம் ஆடுறியா? ஏன்டா பொய் சொன்ன… என் பேத்தி வாழ்க்கையை சீரழிக்க பாத்தியா நீ.. உனக்கு எப்படி இந்த சின்ன பொண்ணை கூட்டிட்டு போய்  அந்த மாதிரி ஒரு இடத்துல விக்கிரத்துக்கு மனசு வந்துச்சு.. ” என்று ராகேஷின் சட்டையை பிடித்து மரகதம் உழுக்க.

 “ஏய் கிழவி முதல்ல கையை எடு… நான் போட்டிருக்கிற கோட் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா? கேவலம் குப்பத்தில் இருக்கிற பொம்பள வந்து நீ என்ன தொட்டு பேசுறியா” என்று அவரை தன்னிடம் இருந்து விலக்கி விட்டவன்.

“இவள வெறும் ₹5,000 காசுக்கு விக்கிரவன் மாதிரியா என்ன பார்த்தா தெரியுது. என்னோட ஸ்டேட்டஸுக்கு 5000 எல்லாம் என் கால தூசுக்கு சமானம். அவ சொன்னாலே 5000 ரூபாய்க்கு ஒரு இடத்தில கொண்டு போய் இவள வித்துட்டாங்கன்னு. அதே இடத்துல இருந்து இவளை நான் முழுசா  பத்து கோடி பணம் கொடுத்து ஏலத்துல எடுத்து இருக்கேன். அதை தெரிஞ்சுக்கோ முதல்ல” என்று ராகேஷ் இப்போது உண்மையை உளறி விட.

 இனியாவையும் விஜய்யையும் தவிர்த்து அங்கிருந்து மற்றவர்கள் ராகேஷ் சொன்னதே கேட்டு அதிர்ந்தனர்.  வம்சி திரும்பி விஜய்யை பார்க்க விஜய்யோ அமைதியாக இனியாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“கேட்டுச்சா பாட்டி.. அவன் இப்ப என்ன சொன்னான்னு கேட்டுச்சா…  நீ அவன சட்டையை புடிச்சதுக்கு அவனுடைய தகுதி அந்தஸ்துன்னு பேசுறானே. அப்படி இருக்கிற இவன் என்ன காதலிச்சு இருப்பான்னு நீ நினைக்கிறியா. அதுக்கு வாய்ப்பே இல்ல அவன் இப்ப சொன்னான்  பாத்தியா அதுதான் உண்மை” என்றவள்.

“நான் காதலிச்சது வேற ஒருத்தனை அவன் தான் என்ன வித்தது. அவன் வித்த இடத்தில இருந்துதான் இவன் என்ன பேரம் பேசி 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்துக்கு எடுத்தான்”

“என்னை வித்த இடத்துல இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச்சு போறப்ப தான் முதல் முதலா நான் விஜய் சார பார்த்தேன். அவர் கார் முன்னாடி போய் நான் விழுந்தப்போ அவர் என்ன காப்பாத்த தான் நினைச்சாரு.”

“ஆனா என் காணோம்னு துரத்தி துரத்திட்டு வந்த  ரவுடிங்க   இவரை அடிச்சு போட்டுட்டு என்ன  தூக்கிட்டு போயிட்டாங்க. தூக்கிட்டு போய் மறுபடியும் ஏலத்துல வச்சு என்ன இந்த ராகேஷுக்கு வித்துட்டாங்க. இவன் என்ன கூட்டிட்டு போய் அவனோட இடத்துல அடச்சு வச்சிருந்தான். அங்கிருந்து நான் தப்பிச்சு போயிடக்கூடாதுனு எனக்கு போதை ஊசி போட்டு என்னை மயக்கத்திலேயே வெச்சிருந்தான் ” என்றவள் மேலும் சொல்ல வாய் எடுக்க.. 

“அதான் உண்மை எல்லாம் தெரிஞ்சிருச்சு.  என் கூட கூட்டிட்டு போய் வச்சு தான் நான் உனக்கு போதை ஊசி போட்டேன்னு நீயே சொல்லிட்ட… நீ போதையில் இருக்கும் போது தான் நான் உன்  கூட ஒண்ணா இருந்தேன். அப்போ எடுத்த போட்டோ தான் இது. இதுக்கு என்ன பதில் சொல்ற” என்று ராகேஷ் கூற..

 அவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுவான் என்று இனியா எதிர் பார்க்கவே இல்லை.. அதை நம்ப மறுத்தவள்  “இல்ல… இல்ல… நீ பொய் சொல்ற.. நீ சொல்ற மாதிரி எதுவுமே நடக்கல. எனக்கு தெரியும்” என்று தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூற முயற்சித்தாள் .

“நீயே போதையில் இருந்த உனக்கு என்ன நடந்துச்சுன்னு எப்படி நியாபகம் இருக்கும்.  அப்புறம் எப்படி எதுவுமே நடக்கலைன்னு நீ அடிச்சு சொல்ற..  நான் சொல்றது தான் உண்மை. அப்படி இருக்கறதுனால தானே இந்த போட்டோவை என்னால எடுக்க முடிஞ்சது. இல்லைன்னா இந்த போட்டோவை நான் எப்படி எடுத்து இருக்க முடியும் ” என்று அவளை யோசிக்க விடாமல் மீண்டும் பேசினான்  ராகேஷ்.

“இல்ல எனக்கு மயக்கம் தெளிஞ்சதும் நான் அந்த இடத்தை விட்டு தப்பிச்சு வந்துட்டேன். நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல” என்று இனியா அழுத படி அவனிடம் பேச..

ENNAI 2-11

“நீ மயக்கம் தெளிஞ்சதும் தப்பிச்சு வந்தது என்னவோ உண்மை தான். ஆனா அதுக்கு முன்னாடி நடந்தது உனக்கு எப்படி தெரியும். உனக்கு தான் எதுவுமே ஞாபகம் இல்லையே” என்று ராகேஷ் மீண்டும் அவளை கார்னர் செய்ய…

“ஐயோ கடவுளே!!  நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன். இங்க இருக்கிறவங்க எல்லாரும் என்ன பத்தி என்ன நினைப்பாங்க. நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. இவன் என்னை எதுவும் செய்திருக்க வாய்ப்பே இல்லை. நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்” என்று இனியா தலையில் அடித்துக் கொண்டு அப்படியே தரையில் அமர…

அவளை அப்படி பார்க்க எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. மரகதம் வந்து இனியாவின் கையைப் பிடித்துக் கொண்டு “அழாத இனியா யார் நம்புறாங்களோ இல்லையோ  நான் உன்னை நம்புறேன். இவன் நல்லவன் இல்லைன்னு எனக்கு இப்ப புரிஞ்சுச்சு. இவன் பேச்சை நம்பி இவன் கூட வந்து இப்ப உன்னோட வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே” என்று அவளோடு சேர்ந்து மரகதமும் அழ தொடங்கினார்.

இருவரும் ஆறுதல் சொல்ல கூட முடியாமல் அழுவதை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்ன சொல்வது என்று விஜய் குடும்பத்திற்கு எதுவும் தோன்றவும் இல்லை.

“கடவுளே உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா.. அப்படி இருந்திருந்தா என்னை இப்படி எத்தனை பேர் முன்னாடி கூனி குறுக வச்சிருகப்பியா? என்னோட நியாயத்தை நான் நிரூபிக்கவே முடியாதா? நான் சுத்தமானவன்னு எப்படி நிரூபிப்பேன். என்ன நம்பி ஒருத்தர் என் கழுத்துல தாலி கட்டி இருக்கார். அவர்கிட்ட நான் உண்மையானவை , களங்கம் இல்லாதவன்னு சொல்லுவேன் . அவரோட குழந்தை தான் என் வயித்துல வளருதுன்னு நான் எப்படி நிரூபிப்பேன். என்ன பத்தி விஜய் சார் என்ன நினைப்பார் . அவரோட குடும்பம் என்னை எப்படி பார்க்கும்”

“ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படியே மறுபடி மறுபடி சோதனையா கொடுத்துட்டு இருக்க எனக்கு ஒரு விடிவு காலமே கிடையாதா” என்று மீண்டும் இனியா தலையில் அடித்துக் கொண்டு அழ…

 “நீ எவ்வளவு கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்தி கதறினாலும் உனக்கு யாரும் சப்போர்ட் பண்ணி இங்க வர மாட்டாங்க. இவ்வளவு அழுகுறியே இந்த வீட்ல யாராவது ஒருத்தர் உண்மையா உன்ன நம்பி இருந்தா உனக்காக அவங்க பேசியிருக்கனுமே அங்க பாரு யாருமே வாயை திறக்கலை அப்படியே நின்ன இடத்துல உன்ன பார்த்துட்டு இருக்காங்க” என்று ராகேஷ் விஜய்யின் குடும்பம் மொத்தத்தையும் குற்றம் சொல்ல…

“ராகேஷ் வார்த்தையை அளந்து பேசு எங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியும்” என்றான் விஜய் அவனிடம் கோபமாக ..

 “நீ இப்படி  கோபமா பேசினா நடந்தது இல்லைன்னு ஆயிடுமா விஜய். இப்ப புரிஞ்சுக்கோ அவளுக்கே என்ன நடந்ததுன்னு ஞாபகம் இல்லாத போது நான் சொல்றதுதான் உண்மை. அதைத் தான் நீங்க எல்லாரும் நம்பி ஆகணும்” என்ற ராகேஷ் தரையில் இருந்தவள்  கையைப் பிடித்து மேலே தூக்கியவன். “ஒழுங்கா மரியாதையா என்கூட கிளம்பி வந்துடு நீ எனக்கு தான் சொந்தம்” என்று அவளை தன்னோடு இழுத்துச் செல்ல முயன்றான்.

“இல்ல நான் வரல. நான் எங்கேயும் வரல .. நீ பொய் சொல்ற உன்னை நான் நம்ப மாட்டேன். நீ என்னை அடையுறதுக்காக இப்படி எல்லாம் பொய் பேசி நாடகம் ஆடுற” என்றவள் விஜய் இடம் திரும்பி.

” விஜய் சார் அவன் என்ன இழுத்துட்டு போறான் நீங்க பாத்துட்டு நிக்கிறீங்களே. நான் உங்க பொண்டாட்டி தானே நீங்க தானே என் கழுத்துல தாலி கட்டுனீங்க இப்படி பார்த்துட்டே நின்னுட்டு இருக்கீங்க. உங்களை நம்பி வந்ததுக்கு நீங்க எனக்கு செய்ற பரிகாரம் இதுதானா” என்று இனியா அவனைப் பார்த்து கேட்டாள்

அவள் அப்படிச் சொன்ன மறுகணம் “இல்ல இனியா உன்னை நான் அப்படியே விட்டுட்டு போறவன் கிடையாது.  அது உனக்கு நல்லாவே தெரியும் . அப்படி நான் விட்டிருந்தா உன்ன துபாய்லயே விட்டுட்டு இங்க வந்திருக்க முடியும். அப்படி நான் வந்திருந்தா இந்த நேரம் நான் காதலிச்ச பொண்ண கல்யாணம் செய்து இருப்பேன் உன்னை காப்பாத்தணும்னு நினைச்சு தான் நான் அவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன் அவள் அவளை பிடித்திருந்த ராகேஷ் கையைத் தட்டி விட்டு இனியாவை தன் பக்கம் இழுத்தான்.

“என்ன விளையாட்டுறீங்களா நான் தான் எல்லாமே ஆதாரத்தோட நிரூபிச்சிட்டேனே.. இனி பேசறதுக்கு எதுவும் இல்ல இப்ப எதுக்குடா இனியாவை என் பக்கம் இழுக்கிற இந்த நீ எழுதி கொடுத்த பிளான் செக் அவளை எனக்கு குடுத்துட்டேன் நீ கொடுத்த பணத்தை நீயே வச்சுக்கோ எனக்கு இவ தான் வேணும்” என்று ராகேஷ் விடாப் பிடியாக இனியவை தன்னோடு அழைத்துச் செல்ல பிடிவாதமாக நிற்க..

“தாமரை!!” என்று விஜய் அழைக்க.. வேகமாக அவனிடம் ஓடி வந்தவள் “சொல்லு மாமா!!” என்று நின்றாள்.

 “இனியாவ உள்ள கூட்டிட்டு போ..” என்று இனியாவை தாமரையிடம் ஒப்படைத்தவன் கை சட்டையை சுருட்டி விட்டு ராகேஷை நோக்கி செல்ல…

 “வேண்டாம் விஜய் அண்ணனும் தம்பியும் மாறி மாறி என் மேல கை வச்சிட்டு இருக்கீங்க. இதுக்கெல்லாம் நீங்க அனுபவிச்சு ஆகணும் . தேவையில்லாம என் மேல கை வைக்காத நான் எல்லாமே ஆதாரத்தோட நிரூபிச்சிட்டேன். என்னால இனியாவ இங்க இருந்து தூக்கிட்டு போக முடியும். இப்படி தேவையில்லாம என் மேல கைய வச்சு வீணா என் பகையை சம்பாதிக்காத” என்று ராகேஷ் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு விஜய்யிடம் பேச…

” என்னடா விட்டா பேசிக்கிட்டே இருக்க .. நான் ஒருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது நீ என்னை தாண்டி இனியாவா தூக்கிட்டு போயிடுவியா … என்ன மீறி என் பொண்டாட்டிய இங்கிருந்து உன்னால தூக்கிட்டு போக முடியுமாடா” என்று ஆக்ரோஷமான  விஜய்  அவன் மார்பில் ஓங்கி உதைக்க ..

விஜய் உதைத்ததில் ராகேஷ் சுருண்டு போய் தரையில் விழுந்தான் . 

“வேணாம் விஜய் நீ தேவையில்லாம என் மேல கையை வெக்குற.. நான் அப்படி என்ன பெருசா சொல்லிட்டேன் . நான் தான் அவளை முதல்ல விலை கொடுத்து வாங்கினேன். அப்போ அவ எனக்கு தானே சொந்தம். எனக்கு சொந்தமாள நீ கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தி அவ வயித்துல புள்ளையையும் கொடுத்துட்டு உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உரிமை கொண்டாடுவ.. இதை எல்லாம் நான் பார்த்துட்டு நான் சும்மா போக முடியுமா ” என்று மேலும் பேசி விஜய்யின் கோபத்தை தூண்டி இருந்தான் ராகேஷ்.

ஆனால் அதிலும் ஒரு நன்மை இருந்தது. விஜய்யை கோபமூட்டுகிறேன் என்று நினைத்து விஜய்யால் தான் இனியா கர்ப்பாமாகி இருக்கிறாள் என்று அவன் உண்மையை சொல்லிவிட.. அதை கேட்டதும் தாமரையின் கையை தட்டிவிட்டு விஜய்யிடம் ஒட்டி வந்தவள் அவன் கையை பிடித்துக்கொண்டு “விஜய் சார் இவன் இப்போ சொன்னதை நீங்க கேட்டிங்களா! ” என்றாள்  முகம் முழுவதும் சந்தோசமாக.

ராகேஷ் மீதிருந்த கோபத்தில் அவன் சொன்னதை விஜய் சரியாக கவனிக்கவில்லை . இனியாவை அவன் புரியாமல் பார்க்க…

“விஜய் சார் என் கூட குடும்பம் நடத்தி என் வயித்துல பிள்ளையை கொடுத்தீங்கன்னு சொன்னான் . அதை நீங்க கவனிக்கலையா !” என்றாள்  முகம் முழுவதும் சந்தோஷமாக .

சற்று முன்பு அவள் அழுது , புலம்பியதை பார்த்த விஜய்க்கு உள்ளுக்குள் எழுந்த கோபம் , ஆத்திரம் என எழுந்த உணர்வுகள் எல்லாம் இப்பொது இனியாவின் இந்த சந்தோசமான முகம் அவன் மனதை அமைதி படுத்தியது . தன் கையை பிடித்து இருந்தவளை பார்த்து மெல்ல சிரித்தவன் .

“அவன் என்ன சொன்னாலும் யார் உன்னை என்ன சொன்னாலும்   சரி எனக்கு தெரியும் . நான் போதையில் இருந்திருந்தாலும் எனக்கு எல்லாமே நியாபகம் இருக்கு இனியா ” என்று அவன் சொன்ன அந்த வார்த்தை அவளுக்கு நிம்மதியை தந்தது .

“நீ என்னை முடிச்சதும் நான் பதட்டத்துல சொன்னதை  நீங்க உங்களுக்கு சாதகமா எடுத்துக்குவீங்களா .. அதெல்லாம் இல்ல… இனியாவும் நானும் ஒண்ணா இருந்தது தான் உண்மை . அதனால தான் அவ வயித்துல என் குழந்தை வளருது ” என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க..

“இவன … ” என்று மீண்டும் கோபத்தோடு “எவ்ளோ அடிச்சாலும் உனக்கு புத்தியே வராதா டா… ” என்று விஜய் ராகேஷை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வர..

அப்போது ஒரு கை  ராகேஷின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .

கன்னத்தில் கை  வைத்த படி அதிர்ச்சியில் ராகேஷ் தன்னை அடுத்தவனை பார்த்தான்.

“என்ன பாக்குற.. நானும் உன்கிட்டே வேலை செய்த பாவத்துக்கு நீ செய்யுற தப்பை  எல்லாம் பாத்து அமைதியா இருந்தா. நீ ரொம்ப ஓவரா  போற.. அந்த பொண்ணை பாரு ரொம்ப சின்ன பொண்ணு . ஸ்கூல் முடிச்சு வெளி உலகம் என்னனு கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க வேண்டிய வயசுல.. உன்னை மாதிரியே ஒரு கேடு கெட்டவன்கிட்டே மாட்டிகிட்டு அது வாழ்க்கை அழிய இருந்துச்சு. இந்த பொண்ணை தூக்கிட்டு வந்து நீ அவளுக்கு போதை ஊசி போட்டுட்டு அவளை அடைச்சு இருந்த அப்போ  நானும் அங்க தானே இருந்தேன்” என்றான் ராகேஷின் பிஏ குமார்.

“டேய் குமார் உனக்கு எதுவும் தெரியாது நீ பேசாம இரு…” என்று ராகேஷ் குமாரை அதட்ட..

” டேய் வாயை மூடு டா.. உனக்கு தான் எதுவும் தெரியாது . அதை முதல்ல தெரிஞ்சுக்க.. போதையில் இருந்த இந்த சின்ன பொண்ணுகிட்ட நீ தான் தப்பா நடந்துக்க பார்த்த… அந்த நேரத்துல உன் அப்பா உனக்கு கால் பண்ணினதுனால இந்த பொண்ணு தப்பிச்சிது . இல்லேன்னா  இந்த பொண்ணு வாழ்க்கை என்னிக்கோ நாசமாகிருக்கும். உன் பிரெண்ட்ஸ் கிட்டே நீ இந்த பொண்ணை ஏழாம் எடுத்ததை காட்டி பெருமை படுக்கணும்னு தான் மயக்கத்துல இருந்த இந்த பொண்ணு கூட பக்கத்துல படுத்து  செல்பி எடுத்துகிட்ட” என்று குமார் ராகேஷை பார்த்தான்.

“உனக்கு எப்படி டா இதெல்லாம் தெரியும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்ற.. ” என்றான் ராகேஷ் .

“இந்த பொண்ணை காப்பாத்தனும்னு நீ வரதுக்கு முன்னையே நான் அந்த ரூமுக்குள்ள  வந்துட்டேன். உள்ள வந்ததும் இந்த பொண்ணை எழுப்பிவிட எவ்ளோ முயற்சி பண்ணுனேன் ஆனா இந்த பொண்ணு கண்ணு முழிக்கவே இல்ல . அந்த நேரம் நீ உள்ளே வரவும் அந்த ரூம்ல இருந்த பெரிய கப் போர்டுக்கு பின்னாடி நான் ஒளிஞ்சிருந்தேன். அங்க இருந்து தான் நீ பண்றதை எல்லாம் நான்  பார்த்தேன் ” என்றவன் இனியாவை பார்த்து.

“உனக்கு மயக்கம் தெளிய வைக்க அங்க இருக்க டாக்டர்கிட்டே கேட்டு அவங்க கொடுத்த மருந்தை வாங்கிட்டு வந்து நான் தான் யாருக்கும் தெரியாம உனக்கு கொடுத்தேன் . உனக்கு கொஞ்சம் கொஞ்சமா மயக்கம் தெளிய ஆரம்பிச்சதும் அங்க இருந்து நீ தப்பிக்க முயற்சி பண்ணின.. அது முடியாம போகவும் பழம் நறுக்க  வெச்சிருந்த கத்தியை வெச்சு உன் கையை கட் பண்ணிட்ட… அதை பார்த்ததும் நான் எங்க ஆளுங்களை வெச்சு உன்னை ஹாஸ்பிடல்ல  அட்மிட் பண்ண வெச்சேன் . நல்ல வேலை இவர் உன்னை அங்க வெச்சு பார்த்து இவன்கிட்டேயும், இவன் ஆளுங்க கிட்டேயும் இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டாரு ” என்று குமார் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் .

ENNAI 2-12

குமார் சொன்னதை எல்லாம் கேட்டு அவனிடம் வந்த இனியா “அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி … உங்களால் தான் நான் இவன்கிட்டே இருந்து தப்பிச்சிருக்கேன்., இதுக்கு நான் என்ன செய்தலும் போதாது. ரொம்ப நன்றி ” என்று இனியா குமாரின் காலில் விழப்போக ..

காலில் விழுந்த இனியாவை தூக்கிவிட்ட  குமார் “என்ன இது என் கால்ல விழந்துட்டு ” என்று சொல்லிக்கொண்டு இருக்க…

இத்தனை நாள் தன் கூடவே இருந்து தனக்கு துரோகம் இழைத்த குமாரையும், தான் அடைய நினைத்த இனியாவையும் பார்க்க பார்க்க ராகேஷிற்கு ஆத்திரம் தான் அதிகம் ஆனது .

“டேய் துரோகி .. என்கூடவே இருந்துட்டு என்னை ஏமாத்திட்டியே… ” என்று குமாரை அடிக்க துவங்க…

“ராகேஷ் என்ன பண்ற அவரை விடு.. ” என்று இனியா குமாருக்காக குறுக்கே புகுந்து இருவரையும் பிரித்துவிட முயன்றாள் .

“ஏய்.. என்ன டி எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா … எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது ” என்று ஆத்திரம் போங்க பேசிய ராகேஷ் இனியாவின் வயிற்றில் ஓங்கி உதைத்தனவன் அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்து இருந்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் ராகேஷ் செய்த செயலால் இனியா ரத்த வெள்ளத்தில் தரையில் சுருண்டு விழுந்து இருந்தாள்.

இனியா !!! என்று விஜய்யும், மற்றவர்களும் அவளிடம் ஓட ..

அவளை அடித்துவிட்டு ராகேஷ் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான் . அவனை குமார் ஓடிச்சென்று பிடித்துக்கொள்ள…

வேகமாக இனியாவிடம் வந்த விஜய் அவள் தூக்கி தன் மடியில் போட …

முகம் முழுவதும் ரத்தம் வழிய அவனை பார்த்தவள் “விஜய்.. விஜய் சார்ர்… கு .. குழந்தை…. ” என்று அவள் தன் வயிற்றை இருக்க பிடித்துக்கொண்டு வலியோடு அவனை பார்க்க…

அவள் அணிந்து இருந்த உடையில் கால்களுக்கு கீழே என்று ரத்தம் வழிந்தது.

அதை பார்த்ததும் பதறிய மீனு ” டேய் விஜய் முதல்ல உன் பொண்டாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.. .” என்றார்.

“விஜய் அவங்கள தூக்கிட்டு வா நான் காரை எடுக்கிறேன் ” என்று வம்சி ஓடி சென்று காரை ஸ்டார்ட் செய்தான் …

அவன் பின்னால்  இனியாவை அவசரமாக தூக்கிக்கொண்டு சென்ற விஜய்  குமாரின் பிடியில் இருந்த ராகேஷை பார்த்து ” என் குழந்தைக்கும், இனியாவுக்கும் எதவும் ஆகிடக் கூடாதுன்னு   அந்த கடவுளை வேண்டிக்கோ… ” என்றவன் குமாரை பார்த்து “நான் சொல்ற வரைக்கும் அவன் இங்க இருந்து எங்கையும் போக கூடாது” என்று சொல்லிவிட்டு வேகமாக காரில் இனியவை படுக்க வைத்துவிட்டு உள்ளே சென்று அமர .

தாமரை வந்து காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள் .

அவளை பார்த்துவிட்டு காரை கிளப்பி இருந்தான் வம்சி. 

நேராக காரை கொண்டு வந்து சிட்டியின் பிரபலமான ஹோச்பிடலின் முன்பு நிறுத்தி இருந்தான்  வம்சி . கார் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்த தாமரை ஓடிச்சென்று விஜய் இருந்த கதவை திறந்துவிட… வெளியே வந்த விஜய் தாமரையை கையில் ஏந்தித்திக்கொண்டு உள்ளே சென்றான்.

அங்கே விஜய்யின் அத்தை வீணா அவசரமாக ஓட்டிவந்தவள் “டேய் விஜய் என்ன டா .. திடீர்னு எனக்கு போன் பண்ணி நான் ஹாஸ்பிடல்ல இருக்கேனான்னு கேட்ட… ” என்றவப்படி அவன் கையில் ரத்த வெள்ளத்தில் இடுந்த இனியாவை பார்த்தார்.

“டேய் விஜய் இது தான் நீ கல்யாணம் பண்ணி இருக்க பொண்ணா “என்றபடி அவன் பின்னால் அவரும் ஓடினார்.

“ஆமா  அத்தை அதை எல்லாம் அப்பறோம் சொல்றேன் . இவ தலையில் அடிபட்டு ரத்தம் நிறைய போகுது . அப்பறோம்… அப்பறோம்… ” என்று மூச்சு வாங்க அவன் உள்ளே செல்ல அதற்குள்ளாக ஸ்ட்ரெச்சருடன் ஹாஸ்பிடல் ஊழியர் அவர்களிடம் வர.. இனியாவை அதில் படுக்க வைத்தவன் . வீணாவை பார்த்து “அத்தை இனியா கர்பமா இருக்கா… ” என்றான்.

“என்ன டா சொல்ற… உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆச்சுன்னு கேள்வி பட்டேன்  . அதுக்குள்ள… ” என்று ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் மாட்டி இனியவன் உடல்நிலை பற்றி பரிசோதித்துக்கொண்டே கேட்டார்.

“அதை எல்லாம் அப்பறோம் சொல்றேன் அத்தை அவ வயித்துல பலமா அடி பட்டிருச்சு.. அவளுக்கும், குழந்தைக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல.. நீ கொஞ்சம் அவளுக்கு சீக்கிரம்  டிரீட்மென்ட்டை ஆரம்பிக்குறியா மத்ததை எல்லாம் நான் பொறுமையா சொல்றேன் ” என்று அவரை இனியாவை முதலில் கவனி என்று சொல்லாமல் சொன்னான்.

“அப்பனும் , மகனும் காரியத்துல மட்டும் கண்ணா இருங்க  டா… “என்றவர் .

“நர்ஸ் இவங்களை எமெர்ஜெண்சி வார்டுக்கு கூட்டிட்டு வாங்க ” என்று சொல்ல… இனியாவை முதலில் எமெர்ஜென்சி வார்டுக்கு அழைத்து சென்று அவளை பரிசோதித்தவர் . வேகமாக ஆபரேஷன் தியேட்டரை தயார் செய்ய சொல்லிவிட்டு முன்னே செல்ல… இனியாவுடன் நர்ஸ்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றனர்.

அவர்கள் பின்னால் விஜய், வம்சி ,   தாமரை ஸ்ட்ரெச்சரில் இருந்த இனியாவை முகத்தை தொட்டு பார்ப்பதும் அவள் தலையை தடவி பார்ப்பதும் கையைப் பிடிப்பதுமாக  விஜய் பதட்டமாக   அவளுக்கு என்ன ஆனதோ  என்று அவள் பின்னாலேயே ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தவன்.  அவளோடு சேர்ந்து விஜய்யும்  உள்ளே செல்ல முயற்சிக்க…  வம்சி விஜய்யை  பிடித்து தடுத்தவன்.” டேய் என்னடா பண்ற வெயிட் பண்ணு அவசரப்படாதே… ஆப்ரேஷன் ரூமுக்குள்ள டாக்டர் சொல்லாம யாருக்கு போக முடியாது கொஞ்ச நேரம் பொறுமையா இரு ” என்று விஜய்யை பிடித்துக் கொள்ள இனியாவை அழைத்து  கொண்டு உள்ளே சென்றனர்  நர்சுகள் .

“டேய் பாவம்டா அவ அந்த ராகேஷ்கிட்ட இருந்து காப்பாத்தி இனியாவை  நான் கூட்டிட்டு வரப்போ அவ எவ்வளவு பயந்து இருந்தா தெரியுமா. நான்தான் அவளுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினேன் அவள  நார்மல் ஆக்கின இனியா  என்ன நம்பி தான்டா வந்தா..  ஆனா அவ வாழ்க்கை இப்போ நாசமாகுறதுக்கு நானே காரணம் ஆயிட்டேன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு ”   என்று இனியாவின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டான் விஜய்.

“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற அவங்களுக்கு எதுவும் ஆகாது நீ முதல்ல பொலம்புறது நிறுத்து” என்றான்  வம்சி.

“இல்லடா அவளை பாதுகாப்பா அந்த ஆபீஸ்கிட்ட இருந்து மறைச்சு வைக்கிறேன் என்று சொல்லி நான் தான் நம்ம கெஸ்ட்  ஹவுஸில் அவளை தங்க  வெச்சிருந்தேன்.  உனக்கும் தாமரைக்கும் கல்யாணம் நடந்தது என்னால தாங்கிக்கவே முடியல … தினமும் வீட்டுக்கு வரும்போது உன்னோட மனைவியா தாமரையை நம்ம வீட்டில் பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப வலிச்சது டா அதனால தான் அங்க வரத தவிர்த்திட்டு  நான் கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் தங்கி இருந்தேன் .” என்றவன் தாமரையை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு வம்சியிடம்.

“ஒரு நாள்  ரொம்ப விரக்தி அதிகமாகி  தாமரையை  பிரிஞ்ச வலி தாங்கிக்க முடியாமல் அதிகமா குடிச்சிட்டேன் டா ..  அப்படி குடிச்சது  தான் நான் செஞ்ச பெரிய தப்பு. நான் மட்டும் அன்னிக்கு நிதானமா இருந்திருந்தா இனியாகிட்ட  குடிபோதையில்   தப்பா நடந்திருக்க மாட்டேன். பாவம் அந்த சின்ன பொண்ணு என்ன தடுக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா .  ஆனா  மறுநாள் காலையில நான் போதை தெளிஞ்சு எழுந்தபோ … எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல அது அவளுக்கு தெரிஞ்சதுமே அவளோட வாழ்க்கையில நான் விளையாடினதை என்கிட்ட இருந்து மறைச்சுட்டா .”

“முதல்ல எனக்குமே அவ கிட்ட நான் தப்பா நடந்துகிட்டது ஞாபகம் இல்ல கொஞ்ச நாள்  ஏதோ சரி இல்லை என்று மட்டும் என் மனசுல பட்டுட்டே இருந்துச்சு. ஒருநாள் மறுபடியும் அதிக போதையில் நான் கெஸ்ட் ஹவுஸ்க்கு போனேன் . திடீர்னு எனக்கு இனியாகிட்ட நான் தப்பா நடந்துகிட்டு அந்த ராத்திரி பற்றிய நினைவு வந்தப்போ என்னால அதை தாங்கிக்கவே முடியல அதை நீயா கிட்ட எப்படி கேட்கிறது என்ன செய்றதுன்னு   நான் குழம்பி போயிருந்தேன்”

“மல்லிகா அக்கா ஒரு நாள் போன் பண்ணி  இனியா   திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்னு எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. நானும் அவசர அவசரமா கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் இனியாவை  கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போனேன். அங்கே அவளை செக் பண்ண டாக்டர் தான் இனியா  கர்ப்பமா இருக்குற விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இனி என்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு நான் ரொம்ப குழம்பி போயிருந்தேன்.”

“ஆனா விஷயம் என்னன்னா இனியாவுக்கு அவ கர்ப்பமாக இருக்கிற விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. ஆனா அதை என்கிட்ட இருந்து மறைச்சிருக்கா எனக்கு  ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கிறதுனால  இனியா என்னால கர்ப்பமான விஷயத்தை என்கிட்ட இருந்து ” 

“நான்  மட்டும் அன்னிக்கு   அவகிட்ட தப்பா நடக்காம இருந்திருந்தா. அவளோட வாழ்க்கையே வேற மாதிரி மாறி இருக்கும் இல்லையா. அவளுக்கு நான் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்போ அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறா. இந்த சின்ன வயசுல அவளுக்கு  இவ்வளவு கஷ்டம்  வரணுமா நீயே சொல்லு டா…” என்று இனியாவின்  நிலை நினைத்து  மிகவும் வருந்தினான் விஜய் .

அதுவரை அவன் பேசியது எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றிருந்த தாமரை “விஜய் மாமா இப்ப எதுக்காக நீ இவ்வளவு வருத்தப்படுற.. இனியாவுக்கு எதுவும் ஆகாது அவளுக்கும் அவ வயிற்றில் இருக்க உன்னோட குழந்தைக்கும் எதுவும் ஆகாது. அவ நல்லபடியா வந்துருவா.. முதல்ல அந்த நம்பிக்கையை மனசுல வச்சுக்கோ.  சொல்லப்போனால் இனியாவை நீ கல்யாணம் செய்துட்டு அவளுக்கு நல்லது தான் செய்திருக்க. அவ வாழ்க்கையை நீ காப்பாற்றி இருக்க. இன்னிக்கி நம்ம வீட்டுக்கு வந்து அந்த ராகேஷ் அவளை எவ்வளவு  கஷ்டப்படுத்திட்டான் பாவம் அந்த பொண்ணு அவங்க கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுவதை விட  உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு  அவ நல்லபடியா தான் இருப்பா மாமா ” என்றவள்.

“நீ இனிமேல் என்ன நினைச்சு வருத்தப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை நடந்தது நடந்துருச்சு உனக்கும் எனக்கும் ஒரு வாழ்க்கையை தனியாக அமைந்துடுச்சு. இனி அவங்க அவங்க  வழியில் வாழ்வதுதான் எல்லாருக்கும் நல்லது. இனிமேலும் என்ன நினைச்சு உன்னை நீயே வருத்திக்காத மாமா. உனக்காக இப்போ ஒருத்தி வந்து இருக்கா அந்த பொண்ண நான் நல்லபடியா பாத்துக்க. அவ கூட சந்தோஷமா வாழ்ற வழியை பாரு முதல்ல” என்ற வார்த்தை தாமரை வாயில் இருந்து வர.. அதை கேட்ட விஜய், வம்சி தாமரை வாயில் இருந்து தான் இப்படி ஒரு வார்த்தை வந்ததா என்று நம்ப முடியாமல் அவளை பார்த்தனர்.

ENNAI 2-13

“இப்படி மனசு உடைஞ்சு வருத்தப்படுற என் விஜய் மாமா அப்படிப்பட்டவர் கிடையாது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி தாண்டி வரது தான் என் விஜய் மாமாவோட குணமே. இனியாவுக்கு எதுவும் ஆகாது நான் சொல்றேன் கேட்டுக்கோ  இனியாவும் அவ வயித்துல இருக்க குழந்தையும் நல்லபடியா வருவாங்க” என்று விஜய்க்கு ஆறுதல் கூறினாள்  தாமரை.

என் விஜய் மாமா என் விஜய் மாமா என்று வார்த்தைக்கு வார்த்தை தாமரை விஜய் இடம் பேசுவதை கேட்டுக்கொண்டு வம்சி இறுகிய  முகத்தோடு நின்றிருந்தான். இந்த நிலையில் யாரை என்ன சொல்வது அவர்களுடைய சூழ்நிலை தான்  அவனுக்கு நன்றாக புரியுமே அதனால் அவன் அமைதி காத்தான்.

“என்ன தாமரை இப்போதான் அவங்கவங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கணும்னு சொன்ன. ஆனா உன் வாயிலிருந்து இன்னும் என்னை  என் விஜய் மாமா!! என் விஜய மாமான்னு சொல்ற… இங்கே  உன் புருஷன் இருக்கான்  அது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?  என்ன தான் அவன் உனக்கு சப்போர்ட்டா இருந்தாலும். அவனோட மனைவி அவன் கண்ணு முன்னாடியே வேற ஒருத்தர உரிமை கொண்டாடுவது அவனால் எப்படி தாங்கிக்க முடியும். அதைப்பற்றி யோசிச்சியா” என்றான்  அந்த நிலையிலும் கூட அவள் பேசுவதை சுட்டிக்காட்டி .

“மாமா என்ன இப்படி சொல்லிட்ட நான் சின்ன வயசுல இருந்து உன்ன பார்த்து பார்த்து வளர்ந்தவ நீ எப்பவுமே என்  விஜய் மாமா தான் .  நான் யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன் இத்தனை நாள் விஜய் மாமான்னு நான் சொன்னது உன்னை மனசார காதலிச்ச உரிமையில் தான்.”

“ஆனா எப்போ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட இனியாவுக்காக இவ்வளவு தூரம் துடிச்சு போயிட்டியோ. அப்பவே உன் மனசுல எனக்கு இருந்த இடம் காணாமல் போயிடுச்சுன்னு தெரிஞ்சுகிட்டேன். இனியும் நான் பழசை  நினைச்சு  வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன் மாமா” என்றாள் .

தாமரை இப்படி ஒரு வார்த்தையை சொன்னதுமே விஜய் அவளை  பார்க்கும்போது அவன் மனம் ஏனோ சற்று வலிக்கத் தான் செய்தது தன்னை நம்பி வந்த இரண்டு பெண்களும் தன்னால் கஷ்டப்படுவதை  அவனால் மாற்ற முடியாதே .

ஆனால் வம்சிக்கோ தாமரை வாயில் இருந்து வந்த  வார்த்தைகள் அவன் காதில் தேன் போல பாய்ந்தது. உண்மையாகவே அவள் சொன்ன செய்தி அவனுக்கு சந்தோஷமான ஒன்றுதான்.

” நீ உண்மைய தான் சொல்றியா தாமரை உன் மனசுல இருந்து என்ன  தூக்கி எறிஞ்சிட்டியா?” என்றான்  விஜய்.

“அது எப்படி மாமா என்னால முடியும் ஆனால் பழைய தாமரையா உன்ன என்னோட விஜய் மாமாவ நினைக்கல . அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் . நீ இப்போ வேற ஒருத்தியோட புருஷன் அந்த இடத்துல தான் நான் உன்னை வச்சு பார்க்கிறேன்.   நீ என்னோட நிஜ மாமா என் அத்தை பையன் எப்பவுமே அந்த உரிமையை மட்டும்  நான் எங்கேயும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் ” என்று வம்சியை ஓரக்கண்ணால் பார்த்து கூறினாள்.

“ஏய் நானும் உன் அத்தை பையன் தாண்டி எனக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா…  இருக்கட்டும் உனக்கு ஒரு நாள் irukku  ” என்று மனதிற்குள் அவளை பேசியவன் அமைதியாக நின்று இருந்தான் .

” நீ சொல்றதெல்லாம் உண்மையா இருந்தா அப்போ நீ வம்சிய டைவர்ஸ் பண்ணக்கூடாது அவன் கூட சந்தோஷமாக வாழனும் .  நீ சந்தோஷமா இருந்தா… உன் வாழ்க்கை சந்தோஷமா இருந்தா கண்டிப்பா நானும் இனியா  கூட சந்தோஷமா என் வாழ்க்கையை ஆரம்பிப்பேன்” என்றான்  விஜய்.

விஜய்யை தேற்றுவதற்க்காக அவனை சமாதானம் செய்வதற்காக தாமரை பேசினாலும் அவள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மைதான். ஆனால் அவள் மனதில் நினைத்தது விஜய்  இனியா சந்தோஷமாக வாழ வேண்டும். வம்சியை டைவர்ஸ் செய்து விட்டு அவன் வாழ்க்கையை விட்டு தான் விலகிக் கொண்டு. அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க இடம் தர வேண்டும் என்று நினைத்து தான் தாமரை விஜய் இடம் அப்படி கூறினாள்.  ஆனால் விஜய் அவளை இதுதான் சமயம் என்று கார்னர் செய்திருக்க… பதில் பேச முடியாமல் திணறினால் தாமரை .

” என்ன தாமரை எதுவும் பேச மாட்டேங்குற அப்போ இவ்வளவு நேரம் நீ சொன்னதெல்லாம் பொய்தானே. என்னை  சமாதானம் செய்யணும்னு தானே இப்படி சொன்ன… அப்போ இன்னுமும் நீ என்னதான் உன் மனசுல நெனச்சிட்டு இருக்க . அப்படித்தானே  என்ன நெனச்சிட்டு உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்குவ அந்த வலியோடு நான் காலம் முழுக்க இருக்கணும் அதுதான் உன்னோட ஆசை” என்று அவளிடம் கோபமாக கேட்டான் விஜய் .

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல மாமா நான் உண்மையாவே என் மனசுல இருந்து தான் அந்த வார்த்தைகளை சொன்னேன் நிஜமாவே நான் சொன்னதெல்லாம் உண்மைதான் மாமா என்ன  நம்பு” என்றாள் .

“நீ சொன்னதெல்லாம் உண்மையா இருந்தா அப்போ நீ வம்சி கூட சேர்ந்து நீ சந்தோசமா உன் வாழ்க்கையை வாழ்வேனு எனக்கு இப்பவே சத்தியம் பண்ணி குடு ” என்று அவள் முன்பு கையை நீட்டினான் விஜய்.

விஜய் வார்த்தைக்கு மதிப்பளித்து வம்சியுடன் சேர்ந்து வள வேண்டுமா ? இல்லை தன்னால் விஜய்யை நினைத்த மனதில் வேறு யாரையும் நினைக்க முடியாது என்று சொல்லிவிட முடியுமா ? என்று யோசித்தபடி அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்  தாமரை .

வம்சியோ தாமரை சொல்லப் போகும் பதிலுக்காக லப் … டப் .. என துடித்த இதயத்தில் கை  வைத்து அதை சமாதானம் செய்ய முயன்றான்.

எங்கே அவன் பேச்சை அவன் இதயம் கூட கேட்பதாய்  இல்லை . தாறுமாக துடித்துக்கொண்டு இருந்தது. அது போகும் வேகத்திற்கு அவன் தான் இப்போது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகா வேண்டும் போல இருக்குமோ… என்றாகி விட்டது அவனுக்கு.

முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைக்க கூட மறந்தவனாய்  தாமரையை பார்த்துக்கொண்டு இருந்தான் வம்சி.

“என்ன தாமரை.. வம்சியம், நீயும் ஒண்ணா சேர்ந்து வாழனும், ரெண்டு பெரும் டைவர்சை  வாபஸ் வாங்கிட்டு ஒண்ணா சேர்ந்து வாழனும். நான் சொன்னதை செய்யுறேன்னு சாத்தியம் பண்ணு  ” என்றான் மீண்டும்.

“விஜய் மாமா… முதல்ல இனியாவுக்கு ஆபரேஷன் முடியட்டும் இப்போ இது ரொம்ப முக்கியமா . அதை எல்லாம் அப்பறோம் பாத்துக்கலாம் ” என்று விஜய் கேள்வியை தட்டி கழிக்கும் எண்ணத்தோடு பேசினாள்  தாமரை. அது அவனுக்கும் புரிந்தது .

“இனியாவுக்கு எதுவும் ஆகாது தாமரை. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு ” என்று மீண்டும் அவளை விஜய் வற்புறுத்த..

“விஜய் குட்டிமாவை ஏன் போர்ஸ் பண்ற.. இப்போதைக்கு இதை பத்தி பேசவேணாமே… ” என்றான் வம்சி .

அவனை திரும்பி பார்த்த விஜய் “டேய் நான் எதுக்காக கேக்குறேன்னு உனக்குமா புரியல.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிடுச்சு. என்னை நம்பி வந்த பொண்ணை இனி நான் தான் பாத்துக்கணும். அது என்னோட பொறுப்பு இல்லையா. அதுக்காக என்னையே நினைச்சு வாழ்க்கையை வீணாக்க நான் தாமரையை விட மாட்டேன் . வழக்கமா சொல்றது தான் . நம்ம காதலிக்குறவங்களை விட.. நம்மளை காதலிக்குறவங்க காதல் தான் சந்தோசமா இருக்கும் ” என்றவன் திரும்பி தாமரை பார்த்தான்.

அவளுக்கோ பதில் பேசவே வரவில்லை… அமைதியாகவே தாமரை நின்று இருக்க…

“ஏன் டா இவ்ளோ பெரிய பிரச்சனையை நடந்திருக்கு. எங்களுக்கு ஒரு போன் போட்டு கூட உங்களால விஷயத்தை  சொல்ல முடியாதா ” என்று அங்கு கேட்டுக்கொண்டே வீரா வர. அவனோடு சேர்ந்து தேவ், யாரா, அதிதி, விக்ரம், மீனு , இனியாவின் பாட்டி  மரகதம் என மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலில் கூடிவிட்டது .

“அம்மா ! அந்த ராகேஷை தனியா விட்டுட்டு வந்திருக்கீங்க.. ” என்று பதட்டமானான் விஜய் .

“டேய் அந்த குமார் அவனுக்கு காவலுக்கு தான் வெச்சிட்டு வந்திருக்கேன் . நீ பதறாத ” என்றார் அதிதி.

“அம்மா அவன் அந்த ராகேஷோட பிஏ , அவனை எப்படி நம்பி விட்டுட்டு வந்திங்க” என்றான் வம்சி .

“டேய் அவன் தானே நடந்த உண்மையை சொன்னான். அவன் ராகேஷுக்கு சாதகமா நிக்காத போதே அது தெரிஞ்சிருச்சே.. அதெல்லாம் எதுவும் செய்ய மாட்டான் . நீங்க ரெண்டு பேரும்  கொஞ்சம் அமைதியா இருங்க ” என்றவர்.

“இனியாவுக்கு ஆபரேஷன் பண்ணற அளவுக்கு காயம் அதிகமாகிருச்சா விஜய். குழந்தைக்கு எதுவும் ஆபத்து இல்லையே ” என்று விசாரித்தார் அதிதி.

“அம்மா இன்னும் அத்தை வெளியே வரல.. அவங்க வந்தா  தான் தெரியும் ” என்றான்.

“ஏன் டா இங்க கொண்டு வந்து இனியாவை அட்மிட் பண்ணின .. ” என்றான் வீரா .

“அப்பா இப்போ அதுவா முக்கியம் வேற எங்கையும் அண்ணியை கூட்டிட்டு போய் இருந்தா எமெர்ஜென்சின்னு  அட்மிட் பண்ண ஆயிரம் கேள்வி கேப்பாங்க . அவங்களுக்கு இருக்க கண்டிஷனுக்கு அத்தைகிட்டே கூட்டிட்டு வந்தா சரியா  இருக்கும்னு  நான் தான் அவங்களை இங்க அழைச்சிட்டு வந்தேன் ” என்றான் வம்சி.

“அதுக்கு இல்ல டா.. உன் அத்தையை பத்தி தான் தெரியுமே அதான் ” என்பர் வீரா தயங்க .

“ஏங்க இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு வீணாகிட்டே பேசாமயே இருப்பிங்க . நம்ம புள்ளைங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு . நாளைக்கே ஏதாவது விசேஷம்னு வெச்சா  எல்லா சொந்தத்தையும் கூப்பிடுவோமா இல்லையா ? அப்போ எப்படியும் வீணாவையும் கூப்பிடனும் தானே ” என்று அதிதி .

“என்ன அத்தை உங்க பெண்ணுக்காக நான் பேசிட்டு இருக்கேன் . நீங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் . உங்க புள்ளைகிட்ட பேசுங்க ” என்றாள்  அதிதி.

“நான் என்ன டி சொல்ல போறேன். என் பிள்ளைங்க எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்னு தானே நான் தினமும் அந்த கடவுளை வேண்டிக்குறேன். நான் பெத்த நாலு பேரும்  நல்லா  ஒத்துமையா சந்தோசமா இருந்தா அதை விட எனக்கு என்ன வேணும் ” என்றார் மீனு .

“ஆமாமா ஒத்துமையா இருக்கணும்னு சொல்லிட்டு எனக்கும் , வீராவுக்கும் தனித்தனியா வீடு கட்டி அனுப்பி வெச்சிட்டு வீரா  கூடவே தங்கிக்குறிங்க.. எங்க வீடு பக்கம் எட்டி பாக்குறது கூட இல்ல.. உங்க பேரன்களுக்கு கல்யாணம் ஆனது கூட இன்னிக்கு காலையில் சிவாச்சலம் பத்திரிக்கை வைக்க வந்த அப்போ தான் எங்களுக்கு தெரிஞ்சுது ” என்று கேட்டுக்கொண்டே மீனுவின் மகன் வீராவுடன் ஒட்டிப்பிறந்த வினு வந்தான்,

அவன் குரல் கேட்டு விக்ரம் , மீனு  இருவரும் ஆர்வமாக அவனையும், அவனோடு வந்த அவன் மனைவி ஜியாவையும் பார்த்தார்கள்.

“அத்தை நீங்க பேசிட்டு இருங்க.. வீணா என்னை அவசரமா வர சொன்னா . நான் உள்ள போறேன் ” என்று அவர்களை தாண்டி வேகமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றாள் .

அவள் உள்ளே சென்ற அவசரத்தை பார்த்து இனியாவுக்கு சீரியசாக எதுவும் இருக்குமோ என்று விஜய் பதறினான்.

அனைவரும் அவன் பதட்டத்தை பார்த்த பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அங்கே போட்டு இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர் .

வம்சியுடன் தன்னை சேர்ந்து வாழ சொல்லி விஜய் அவளை சத்தியம் செய்ய சொன்னதை  மறந்துவிட்டான்  என்று தாமரைக்கு நிம்மதியாக இருந்தது . யாராவின் அருகில் போய் அமர்ந்தவள் தன் தாயின் தோளில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள் .

“ஏய் குட்டிமா நீ தோள்  சயா  நான் காத்துட்டு இருக்கேன். நீ என்னை விட்டுட்டு அத்தைகிட்டே போறியே.. ” என்று அவளை பார்த்து ஏங்கியவன்.

“விஜய்கிட்ட இருந்து பதில் சொல்லாம தப்பிச்சுட்டே நீ.. .ஆனா என்கிட்டே இருந்து உன்னால இனி தப்பிக்கவே முடியாது குட்டிமா.. இதுக்கு ஒரு முடிவை சீகிரியாம் எடுத்தாகணும் ” என்று அவளையே பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் ரசித்தபடி நின்று இருந்தான்.

இனியாவுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது அவளுக்கு பிளட் நிறைய லாஸ் ஆகிவிட்டது. உடனே அவளுக்கு ab+ பிளட் வேண்டும் என்று அங்கு வந்த நர்ஸ் கூறிவிட்டு செல்ல..

அதை கேட்டதும் விஜய் நிலைகுழைந்து போனான். இனியாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று கடவுளை மனமார வேண்டியவன். தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனியாவிற்கு ரத்தம் அறிந்து செய்ய செல்ல போக அவனை அழுத்தி நிற்க வைத்து நீங்கையே இரு நான் போய் பிளட் அரேஞ்ச் பண்றேன் என்று வம்சி செல்ல அவனோடு தேவ் சென்றால்.

ENNAI 2-14

ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே பரபரப்பாக விஜய்யின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

ஏபி பாசிடிவ் வகை ரத்தம் சீக்கிரமே ஏற்பாடு செய்யப்பட்டு இனியாவின் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்டிருக்க உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக நர்சுகள் பரபரப்பாக இங்கும் அங்கும் போய் வருவதை பார்த்தும்  விஜய்க்கு மிகவும் பதட்டமானது இனியாவிற்கு என்ன ஆகி இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொண்டிருக்க மரகதம் ஒரு பக்கம் தன் பேத்தியின் நிலையை எண்ணி புலம்பி கொண்டு இருந்தார்.

 “அந்தப் பாவி சண்டாலன்  பேச்சைக் கேட்டு நான் உங்க வீட்டுக்கு வராம இருந்திருந்தா என் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமை ஆகி இருக்குமா..  அவளே எத்தனை கஷ்டப்பட்டு அல்லோல பட்டு இருந்திருப்பா இப்பதான் அவளுக்குனு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.  அது தெரியாம நானே என் பேத்தி வாழ்க்கையை கெடுத்துட்டேனே..  ஆண்டவா!! என் பேத்தி இப்படி கஷ்டப்படுறதை பார்க்கிறதுக்கு தான் என்னை உயிரோட வெச்சிருக்கியா . அவ அம்மா அப்பா இறந்து போனதுக்கு அப்பறோம் இந்த புள்ள படாத கஷ்டம் இல்லை. அதை எல்லாம் தாண்டி இவளுக்கு இப்போ தான் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. அதையும் நான் கெடுத்துட்டேனே” என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் அழ…

அவர் புலம்புவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு இனியாவின் கஷ்டங்கள் அவள் பட்ட துயரங்களை அவனால் உணர முடிந்தது.

இந்த சின்ன வயதில் இத்தனை கஷ்டங்களையும் தாங்கி எப்படி அவள் கடந்து வந்திருக்கிறாள் என்று நினைக்கையில் விஜய்க்கு இனியாவை நினைத்து  பிரம்மிப்பாக இருந்தது. தாய் தந்தை இல்லாமல் வயதான பாட்டியை வைத்துக்கொண்டு ஒற்றைய ஆளாய் இந்த உலகத்தை எதிர்கொள்வது என்பது மிகவும் கொடுமைக்குறியது.

 புலம்பிக் கொண்டிருந்த மரகதத்திடம் வந்த விஜய் அவர் தோளில் கை வைத்து அவரை ஆறுதலாக  பார்த்தவன் . “பாட்டி கவலப்படாதீங்க இனியாவுக்கு எதுவும் ஆகாது. அவ நல்லபடியா வருவா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இனிமேல் இனியாவ பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். அவளை நான் கஷ்டப்படாம எந்த ஒரு விஷயமும் அவளை பாதிக்காமல் என் கைக்குள்ள வச்சு பாத்துக்குவேன். நான் உங்களுக்கு சத்தியம் பண்ணி தரேன் உங்க பேத்தி கண்ணுல இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் வராது அந்த அளவுக்கு அவளை நல்ல முறையில் நான் பார்த்துக்குவேன் என்னை நம்புங்க” என்றான் அவருக்கு நம்பிக்கை வரும்படியான வார்த்தைகள் கூறி.

 அழுது கொண்டிருந்த மரகதம்  விஜய்யின் கையை எடுத்து தன் கைக்குள் பிடித்துக் கொண்டு “தம்பி உங்களைத் தான் மலை போல நம்பி இருக்கென்.  அவ சின்ன வயசுல இருந்து எந்த ஒரு சுகத்தையும் பார்த்து வளராத கஷ்டத்தை மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்துட்டா . இத்தனை வருஷமும் இந்த உயிர புடிச்சு வச்சதுக்கு காரணமே என் பேத்தி தான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துட்டா நான் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்னு நினைச்சு தான் இந்த உயிரை கைல புடிச்சு வச்சுட்டு இருந்தேன் . ஆனா அதுக்குள்ள என் பேத்திக்கு இவ்வளவு கஷ்டம் வரும்னு நான் நினைக்கவே இல்ல” என்று அழுத்தவர்.

“அவளை நல்லபடியா பாத்துக்கோங்க தம்பி எனக்கு இது ஒன்னு மட்டும் செஞ்சு கொடுங்க போதும் வேற எதுவும் வேண்டாம். உங்க அளவுக்கு நாங்க வசதியில்லை உயர்ந்தவங்க இல்ல.. ஆனா என் பேத்தி ரொம்ப நல்ல பொண்ணு யாருக்கும் கெடுதல் நினைக்காது அவ மனசு . யார் என்ன சொன்னாலும் அதை உண்மையின்னு  நம்பிருவா தம்பி அந்த அளவுக்கு அவ வெள்ளந்தி” என்று மரகதம் விஜய்யின் கையை பிடித்து கெஞ்சுவது போல பேச..

அவர் அருகில் இருந்த அதித்தி “இங்க பாருங்க பாட்டி இனிமேல் உங்க பேத்திய பத்தி கவலைப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்ல. அவ இப்போ எங்க வீட்டு மருமக என் மகன் விஜய் ஓட பொண்டாட்டி அவளை கண்ணும் கருத்துமா பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பையனோட பொறுப்பு மட்டும் கிடையாது நாங்களும் தான் அதுக்கு பொறுப்பேற்றுகிறோம். உங்க பேத்தி இனிமேல் எந்த குறையும், கஷ்டமும் ,கவலையும் இல்லாம நிம்மதியா சந்தோசமா இருக்க போறா. நீங்க அதை உங்க கண்ணார பார்க்க தான் போறீங்க. காசு பணம் எல்லாம் எங்களுக்கு பெருசே  கிடையாது ”  என்று அதித்தியும் அவருக்கு ஆறுதல் கூற…

 இனியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக விஜய்யின் அம்மாவும் விஜய்யும் மாறி மாறி மரகதத்திடம் வாக்குறுதி அளிக்க அதைக் கேட்டவருக்கு மனது நிம்மதியானது புலம்புவதை நிறுத்திவிட்டு கண்களை துடைத்தவர் “என் பேத்தி நல்லபடியா குணமாகி வந்தாலே போதும் நீங்க நல்லா பாத்துக் குவிங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. இனி நான் எதை பத்தியும் கவலைப்பட போவதில்லை” என்று அவர் கூற அப்போதுதான் விஜய்க்கு மனது சற்று லேசானது.

 ஆபரேஷன் தியேட்டர் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அனைவர்  கவனமும் அங்கே திரும்ப கதவை திறந்து கொண்டு வீணாவும் ஜீயாவும் வெளியே வந்தனர்.

 அத்தை! சித்தி !  என்று வீணா ஜியாவிடம் சென்றவன் “இனியா எப்படி இருக்கா..? அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. குழந்தை எப்படி இருக்கு” என்றான்.

“குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்ல விஜய் .  அவ வயித்துல அடிபட்டதுல லேசா ரத்தம் கசிஞ்சிருக்கு. மத்தபடி பயப்படுறதுக்கு எதுவும் இல்ல. ஆனா இனியாவுக்கு தான்….” என்று வீணா மேலும் சொல்லாமல் நிறுத்த…

“என்ன அத்த..  இனியாவுக்கு என்ன ஆச்சு! அவளுக்கு எதுவும் பிரச்சனையா?” என்று விஜய் பதற…

 “இல்லடா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவ சின்ன பொண்ணு தலையில் அடிபட்டதுல ரத்தம் அதிகமா வெளியேறி இருக்கு.. அதனால அவ உடம்பும் இப்போ  ரொம்ப வீக் ஆயிடுச்சு. அதுவும் இல்லாம  அவ கீழ வேகமா மோதி விழுந்ததுல அவளோட வலது தோள்பட்டை டிஸ்லோகேட் ஆயிடுச்சு அத சரி செஞ்சு ட்ரீட்மெண்ட் பண்ணி இருக்கோம். அவ ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு ரொம்ப கேர்புல்லா இருக்கனும். உடம்பு வீக்னஸ் , தோள்பட்டையில் வேற கட்டு போட்டிருக்கு . இந்த நிலையில் அவ கர்ப்பமா வேற இருக்கா. குழந்தைக்கு எந்த  ஆபத்தும் இல்லாம நாங்க காப்பாத்திட்டோம் . ஆனா ஒரு மூணு மாசம் அவ ரொம்ப கேர்புல்லா இருக்கனும். ” என்றார் வீணா.

இனியாவுக்கு எதுவும் இல்லை அவள் நலமாக இருக்கிறாள், குழந்தை நல்ல முறையில் இருக்கிறது  என்ற செய்தியே விஜய்க்கு பெருத்த நிம்மதியை தந்தது.

“அத்தை அவளை நான் கவனமா பாத்துக்குறேன் . நீங்க அதை பத்தி ஒர்ரி பண்ண வேணாம். இனியா இங்க இருக்க வரைக்கும் அவளுக்கு டிரீட்மென்ட்  மட்டும் சரியா செய்துடுங்க அது போதும் ” என்றான் விஜய்.

“டேய் என்ன டா இப்படி சொல்லிட்ட … அப்படி கவனிக்காம விட்டுடுவோமா நாங்க ரெண்டு ரெண்டு பேரும் ” என்று அவன் தோளில் அடித்தாள் ஜியா.

“இல்ல சித்தி நான் அப்படி சொல்லல.. ” என்று விஜய் கூற..

“நீ எதுவும் சொல்ல வேணடாம் என் மருமகளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும் ” என்றவர் . “அண்ணனும் தம்பியும் யார் கிட்டேயும் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டீங்க.. சொந்தம்னு நாங்க எல்லாரும் இருக்குறது உங்களுக்கு எல்லாம் மறந்து போயிருச்சா என்ன?” என்று வீராவையும், அதிதியையும்  பார்த்தாள்  ஜியா.

“ஆமா  டி நீ அவங்க கூட நல்ல முறையில் இருந்தும் உனக்கு விஷயத்தை இவங்க சொல்லல.. அப்பறோம் என்னையம், என் புருஷனையும் இவங்களுக்கு எப்படி நியாபகம் இருக்கும் . எங்க என் கூட பேசி பழைய படி நான் குடும்பத்துக்குள்ள நெருங்கி வந்துட்டா அவங்க புள்ளைக்கு என் பொண்ணை கட்டி கொடுக்க சொல்லி கேட்டுடுவேன்னு என்னை தள்ளொளியே வெச்சிட்டாங்க போல ” என்று வீணா  தன் பங்கிற்கு புலம்பினாள்.

“ஐயோ ! என்ன டி விட்டா  ரெண்டு பேரும்  என்னையும் என் புருஷனையும் கூண்டுல ஏத்தி கேள்வி கேப்பிங்க போல.. எங்களுக்கு எல்லா சொந்தமும் வேணும். இப்போ என்ன கேட்டு போயிருச்சு என் மருமகள் டிஸ்சார்ஜ் ஆகி என்னிக்கு வீடு வராலோ அன்னிக்கே நம்ம சொந்தபந்தம் எல்லாரையும் வீட்டுக்கு அழைச்சி விருந்தே  செய்துடலாம் ” என்ற அதிதி வீணாவையும், ஜியாவையும் கட்டிக்கொண்டாள் .

வீராவுக்கு வீணாவின் மீது கோபம் இருந்தாலும் இனியும் அந்த கோபம் தேவை இல்லை என்று முடிவெடுத்தவனாக ” வீணா லோகியையும் ,  பசங்களையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க ” என்று பேச..

“அப்பாடா என் அண்ணனுக்கு வையை திறந்து பேச இவ்ளோ நேரம் ஆகியிருக்கு ” என்று சிரித்த வீணா.

“நீ சொல்லிட்டே இல்ல இனியா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர அப்போ மொத்த குடும்பமும் உங்க வீட்ல இருக்கும் கவலை படாத  அண்ணா ” என்றவள் “இது எல்லாம் விஜய்யால் தான் நடந்தது . அவன் பொண்டாட்டி வந்த நேரம் எல்லாரும் திரும்ப ஒன்னு சேர்ந்துட்டோம் ” என்றவர் திரும்பி விஜய்யை பார்க்க..

விஜய் அங்கு இல்லை “டேய் வம்சி எங்க டா உன் ட்வின்னு ” என்றார் வீணா.

“ஆமா உங்களுக்கு பேச ஆள் கிடைச்சா போதும் . மத்தது எல்லாம் மறந்திரும் . அவன் அப்போவே அவன் பொண்டாட்டியை பார்க்க போய்ட்டான்” என்றான் வம்சி பெருமூச்சு விட்டபடி.

“ஏன் டா அவன் பொண்டாட்டியை பார்க்க அவன் போறான் உனக்கு என்ன வந்துச்சு . அதான் உன் பொண்டாட்டி இங்க தான் இருக்கா நீயும் அவளை பார்க்க வேண்டியது தானே ” என்று வீணா வம்சியை பிடித்து தாமரை மீது லேசாக தள்ளி விட..

இது தான் சமயம் என்று தாமரை மீது போய்  விழுவது போல் விழுந்து அவளை கட்டிக்கொண்டான் .

அனைவரும் அதை பார்த்து சிரிக்க..  தாமரைக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை . தன்  மேல் விழுந்தவன் காதில் “டேய் அம்மு.. வீணா சித்தி லேசா தள்ளினதும் நீ வேணும்னு வந்து என் மேல விழறியா .. ஒழுங்கா போய்ட்டு ” என்று அவனை எச்சரிக்க …

“அட என்ன தாமரை எல்லாரும் இருக்காங்க இல்ல என்னை விடு.. என்ன தான் உனக்கு என்னை பிடிக்கும்னாலும் , இப்படி வேணாம்னு நான் தள்ளி இருக்க அப்போ என்னை விடாம கட்டிக்கிட்டா என்ன அர்த்தம்” என்று அவள் கையை வம்சி பிடித்துக்கொண்டு தாமரை அவனை விடாமல் இருப்பது போல பேசினான்.

அதை கேட்டு தாமரை அவனை முறைக்க…

“என்ன டி சொல்றான் இவன். வேணாம்னு தள்ளி இருக்கானா.. ஏனாம் ” என்று அதிதியிடம் ஜியா கேட்க அந்த கதை தானே வாங்க சொல்றேன் ” என்று அவர்களை அழைத்துக்கொண்டு  அதிதி அங்கிருந்து சென்றார்.

“டேய் என் பேத்தியை ரொம்ப தான் படுத்துற டா நீ,.. உங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ்க்கு  வழியே கிடையாது . உனக்கும் வேற வழி  இல்லை என் பேத்தி கூட நீ குடும்பம் நடத்தி தான் ஆகணும் ” என்ற மீனு .

“அவ கையை விடு டா.. என்னவோ தாமரையை பிடிக்காத மாதிரியே பேச வேண்டியது . ஆனா அவளை பாக்கும்போது எல்லாம் அவ்ளோ லவ் இருக்கு இந்த கண்ணுல . இந்த கிழவிக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காத ” என்று அவன் பிடியில் இருந்த தாமரையை தன் பக்கம் இழுத்துக்  கொள்ள…

“பரவல்லையே பாட்டி சரியா தான் சொல்லுது… ம்… அனுபவம் … ” என்று உதட்டை சுழித்தவன் .

அவனிடம் இருந்து தாமரையை மீனு இழுக்க.. அவள் கையை தடவிக்கொண்டே அவளை விட மனமில்லாமல் தாமரையை ஏக்கமாக பார்த்தான். தாமரையோ வம்சியின் இந்த திடீர் தாக்குதலை சமாளிக்க தெரியாமல் திண்டாடியவள் வேகமாக அவனைவிட்டு விலகி மீனுவின் பின்னால் சென்றாள் .

இங்கே உள்ளே வந்த விஜய் மயக்கத்தில் இருந்த இனியாவை பார்த்துவிட்டு அங்கிருந்த நர்ஸிடம் இனியாவின் மயக்கம் எப்போது தெளியும் என்று கேட்டான் .

அவள் எப்படியும் 2 மணி நேரம் கழித்து  தான் கண்விழிப்பாள் என்று சொன்னதும் .அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தவன் .

தாமரையை சைட் அடித்துக்கொண்டு இருந்த வம்சியிடம் வந்து “டேய் வீட்டுக்கு போகலாம் வா.. அந்த ராகேஷ் வீட்ல தானே இருக்கான்” என்றவன். இனியாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனையும், அவளை காதலித்து கள்ள சந்தையில் இனியாவை விற்றவனையும் பழி  தீர்க்கும் எண்ணத்தோடு கெட்டவன்.

“நீ அயனுக்கு  போன் பண்ணி அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு ” என்று தன் சட்டையை சுருட்டி விட்டுக்கொண்டே முன்னே நடக்க அவன் பின்னால் அயனுக்கு போன் செய்தபடி சென்றான் வம்சி .

ENNAI 2-15

சட்டை பட்டனை கழட்டி விட்டபடி கம்பீரமாக சாய்ந்து அமர்ந்திருந்த விஜய்.

தனக்கு எதிரே தரையில் முட்டிக்கால் போட்டு கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு அமர்ந்திருந்த ராகேஷ்ஷை பார்த்தவன்.

“இங்க பாரு உன் வாயிலிருந்து எப்படி உண்மையை வர வைக்கனும்னு எனக்கு தெரியும். ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா உன் உடம்புல உயிராவது மிஞ்சும் இல்ல இந்த வீட்டை விட்டு நீ வெளிய போவ ஆனா டெட்  பாடியா தான் போவ  என்று விஜய் மிகவும் கூலாக பேசினான் .

” எனக்கு என்ன தெரியுமோ அதை தான் உன்கிட்டே சொன்னேன். சாத்தியமா எனக்கு அதுக்கு மேல எதுவும் எனக்கு தெரியாது ” என்றவன் “அது இன்டர்நேஷனல் இல்லீகல் பிசினஸ். அங்கே யார் யார் என்ன வேலை செய்றாங்க யாருக்கு என்ன பொறுப்புங்கிறது எனக்கு தெரியாது. நான் சும்மா அங்க போவேன் அங்கே ஏலத்துல வர எந்த பொண்ணு எனக்கு பிடிக்குதோ அது எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு அந்த பொண்ணுக்கு காசு கொடுத்து விலைக்கு வாங்கிடுவேன். நான் துபாயில் இருக்கிறவரை அவங்க எல்லாமே எனக்கு கம்பெனி கொடுப்பாங்க அவ்வளவுதான் எனக்கு தெரியும். மத்தபடி இனியாவ அங்க கொண்டுவந்து யார் வித்தது .. அவளை யார் வாங்கினான்னு எனக்கு இந்த விஷயம் எல்லாம் சுத்தமா தெரியாது” என்று தனக்கு தெரிந்த உண்மையை ராகேஷ் விஜய்யிடம் கூறினான்.

 “நீ சொல்றதெல்லாம் உண்மை தான்னு நான் எப்படி நம்ப முடியும். நீயே ஒரு பிராடு .. பொறுக்கி உன்கிட்ட நான் உண்மைய எதிர்பார்க்க முடியாது” என்றவன் சோபாவில் இருந்து வேகமாக எழுந்து வந்து ராகேஷின் நெஞ்சில் ஓங்கி உதைத்தான்.

அம்மா!!  என்று அலறிக்கொண்டு முட்டி போட்டிருந்தவன் அப்படியே பின்னால் சரிய அவனை வேகமாக வந்து தூக்கிவிட்ட குமார் “சார் இவன் சொல்றது உண்மைதான் இவனுக்கு பொண்ணுங்கள அங்க போய் விலைக்கு வாங்கி அவங்க கூட உல்லாசமா இருக்க மட்டும் தான் தெரியும். மத்த விபரம் எதுவுமே தெரியாது உங்களுக்கு விபரம் தெரியனும்னா  இனியாவை  இவன் விலைக்கு வாங்குன இடத்துல தான் கேட்டு தெரிஞ்சுக்கணும். அங்க தேவான்னு ஒருத்தன் இருப்பான் அவன்கிட்ட கேட்டா தான் எல்லா விஷயமும் தெரியவரும். அந்த இடத்தையே இவனோட கண்ட்ரோல்ல தான் வச்சிருக்கான். ஆனா அவனை அவ்வளவு லேசுல யாராலும் நெருங்க முடியாது” என்றான்.

“அதை நான்  பார்த்துக்கிறேன் அந்த தேவா ஆள் எப்படி இருப்பான். அவன பத்தி ஏதாவது டீடைல்ஸ் உனக்கு தெரியுமா குமார்” என்றான் விஜய்.


“அவன பத்தின எந்த டீடெயிலும் எனக்கு தெரியாது சார். அவனை நான் ஒரு ரெண்டு மூணு முறை ராகேஷோட அந்த  இதுக்கு போன அப்போ பாத்திருக்கேன் அவ்ளோதான் ” என்றவன். “அப்புறம் இங்கே ஒருத்தன் இருக்கான் ராகேஷோட அல்லக்கை பேரு  சேது. அவனுக்கும் அந்த தேவாவுக்கும் கனெக்ஷன் இருக்கு அவன் இங்க இருக்கிற பொண்ணுங்ககிட்ட நல்லவன் மாதிரி பேசி  அவங்கள காதலிக்கிற மாதிரி நடிச்சு  பொண்ணுங்கள ஏமாத்தி அந்த தேவாவுக்கு இவன் தான் விக்குறான் , ஒருவேளை அவன்கிட்ட  விசாரிச்சா கூட இனியாவை யார் காதலிச்சானு தெரிஞ்சுக்கலாம் தானே” என்று தனக்குத் தெரிந்ததை விஜய் இடம் கூறினான்.

“கரெக்ட் ஆனா இனியா என்கிட்ட சொன்னது வரைக்கும் இனியாவை காதலிச்சவன் அவளை இங்கிருந்து கூட்டிட்டு நேரா துபாய் தான் போயிருக்கான். அங்க வச்சு தான் அவளை வித்து இருக்கான். அது மட்டும் தெரியும் அப்படி அவன் விக்கிறதா இருந்தா இங்கேயே இந்த சேது கிட்டயே வைத்திருப்பான் தானே” என்றான்.

“ஆமா விஜய் நீ சொல்றதும் சரிதான் வெறும் ஐயாயிரத்துக்காக அவ்வளவு செலவு பண்ணி அவன் எதுக்காக துபாய் வரைக்கும் போகணும். அவன் போயிட்டு வர ஃப்ளைட் சார்ஜ் கூட அதுக்கு கட்டுபடியாகாதே ஒருவேளை அண்ணிக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ ஆனா தெரியாது விஷயம் ஏதாவது இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான் வம்சி.

வம்சி பேசுவதை கேட்டவர் விஜய் அவனை  பார்க்க “ஏன் விஜய் அப்படி பார்க்கிற” என்றான் வம்சி புரியாமல் .

 “நீ அண்ணின்னு யார சொன்ன” என்றான் விஜய்.

 “தெரியாத மாதிரியே நடிக்காத..  இனியாவை தான் சொல்றேன். அவங்க உன்னோட வைஃப் தானே அப்போ நான் அவங்கள அண்ணின்னு முறையா  தானே கூப்பிடனும்” என்றான் வம்சி.

 லேசாக சிரித்து விஜய் “எனக்கு தெரியும் நீ என்ன  சொல்லபோறேனு தெரிஞ்சுக்க கேட்டேன்” என்றவன் குமாரிடம்  திரும்பி. 

“இன்னைக்கு நைட் நம்ம ரெண்டு பேரும் துபாய் கிளம்பறோம். உனக்கு வேணும்கிற திங்ஸ் பேக் பண்ணிட்டு நேரா ஏர்போர்ட்டுக்கு வந்துரு மத்தத நேர்ல பாக்கும்போது சொல்றேன் நீ இப்போ கிளம்பலாம்” என்றான் அதிகாரமாக.

“சார் நான் இவனோட பிஏ இவனை உங்ககிட்ட நான் காட்டிக் கொடுத்துட்டேங்கறதுக்காக என்ன நம்பி உங்க வேலைக்காக அவ்வளவு தூரம் எப்படி கூட்டிட்டு போக முடிவு பண்ணுவீங்க” என்றான் குமார்.

நீ சொன்ன காரணத்துக்காக நான் உன்னை என்கொடுங் வர சொல்லல.. சரியான நேரத்துல நீ இனியா பேரை காப்பாத்தி இருக்க.. அந்த ஒரு ரீசன்  தான் ” என்றான் சிம்பிளாக .

“வம்சி நான் இன்னிக்கு நைட் துபாய் கிளம்பறேன்  .இனியாவை இந்த நிலைகு  கொண்டு வந்தவனை ஒரு வழி பண்ணனும் . அதே போல சேதுவை நீ பாலோ பண்ணு அவன் என்ன செய்றான். யாரை பாக்குறான்னு கவனி அவங்கடை இருந்துன் ஏதாவது நியூஸ் நமக்கு கிடைக்கு ” என்றான்.

“ஓகே விஜய் நான் பாத்துக்கிறேன் ” என்றான் வம்சி.

 அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே  உள்ளே வந்த அயன் ஹாலில் உடல் முழுவதும் காயங்களோடு தரையில் விழுந்திருந்த  ராகேஷை     பார்த்தவனுக்கு ஏதோ விபரீதம் என்பது மட்டும் புரிந்திருந்தது.

“சொல்லுங்கடா இவனை எந்த செக்க்ஷன்ல பிடிச்சு உள்ள போடணும். இது மேல என்ன எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணனும்” என்றான் அயன்.

 “நீ இருக்கிற எந்த கேஸை வேணும்னா இவன் தலையில் கட்டு. ஆனா இவன் இன்னும் நாலு ,அஞ்சு வருஷத்துக்கு ஜெயில்லையே கலி திங்கணும்” என்று அயன்  தோளில் கை போட்ட படி பேசினான் வம்சி .

 “டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. தேவையில்லாம என் மேல எந்த கேசும் போட முடியாது அது தெரியும் தானே. என் அப்பா எவ்ளோ பெரிய பிசினஸ் மேன்  அவரை பத்தி உனக்கு நல்லாவே தெறியும் விஜய். வீணா என்ன வம்புல மாட்டி விட்டா  அவர் சும்மா இருப்பாருனு நினைக்குறியா  nee” என்று தன் அப்பாவை வைத்து தப்பிக்க நினைத்தான் ராகேஷ்.

“உன் அப்பாவுக்கு மட்டும் நீ பண்ணின விஷயம் தெரிஞ்சா அவரே உன்னை உள்ளே தள்ளி கலி திங்க வெச்சிருவாரு ” என்ற குமார் விஜய்யிடம்

 அப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு என்றான் விஜய்.

“சார் இவனோட அப்பா மும்பையில் இருக்க அவரோட பிசினஸை பார்க்க சொல்லி ரொம்ப நாளா இவன்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்காரு. அவருக்கு உடம்பு கொஞ்சம் இப்போ சரி இல்லை. அவரால முடியாம இந்த வயசுலயும் அவர் சென்னையில் இருக்க பிஸினஸையும் , மும்பைல இருக்க வேலையையும் கவனிக்குறாரு. ஆனா  இவன் தான் அவர் சம்பாதிச்சு வச்ச காசு எல்லாம் ஊதாரித்தனமா இப்படி செலவு பண்ணிட்டு திரிறான். வேணும்னா இப்படி பண்ணுங்க அவன மும்பைல போயி அவங்க அப்பா பிசினஸ் ஒழுங்கா பார்க்க சொல்லுங்க. முடிஞ்சா இவன மும்பையிலே செட்டிலாக சொல்லிடுங்க சென்னை பக்கமே வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லி அனுப்பி வைங்க” என்றான் குமார்.

குமார் சொன்னது கேட்டதும் ராகேஷ் திரும்பி அவனை முறைக்க…

 “என்ன முறைக்கிற உன்கிட்ட இத்தனை வருஷம் கைநீட்டி சம்பளம் வாங்கினதுக்கு என்னால உன்னை இந்த அளவுக்கு தான் காப்பாத்த முடியுதுன்னு நெனச்சு சந்தோஷப்படு. பாவம் வயசான உன் அப்பா எவ்வளவு பிசினஸ் தான் மெயின்டைன் பண்ணுவாரு உனக்கு என்ன குறைச்சல். சும்மா வெட்டியா அவர் சம்பாதிக்கிற காசை செலவழிச்சுட்டு ஊற சுத்திட்டு தானே இருக்க. போய் ஒழுங்கா அவருக்கு உதவியா இரு இப்படிப்பட்ட ஒரு அப்பா கடைக்கு நீ கொடுத்து வச்சிருக்க. ஆனா அவருக்கு இப்படி ஒரு பையன்” என்று ராகேஷை  கேவலமாக வறுத்தெடுத்தான் குமார்.

“எல்லாம் ஏன் நேரம்டா புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு இனி நான் என்ன பண்ண முடியும். இப்போதைக்கு இவன்கிட்ட இருந்து தப்பிச்சு போனா போதும்.  இவன் சொன்ன மாதிரி என்னால வருஷக்கணக்கா ஜெயில்ல  களி திங்க முடியாது. அதுக்கு பேசாம போய் அப்பா பிசினஸ் ஒழுங்கா பார்த்துகிட்டு இருக்கிறதே பெட்டர்” என்று மனதிற்குள் நினைத்த ராகேஷ்.

“குமார் சொல்ற மாதிரியே நான் கிளம்பி மும்பைக்கு போயிடுறேன். அங்க போய் என்னோட அப்பா பிசினஸ் பாத்துக்குறேன். இந்த பக்கம் நான் வரவே மாட்டேன்” என்றான் ராகேஷ்

“நம்பலாமா உன்னை..” என்றான்  விஜய்.

“சத்தியமா  விஜய் இந்த சென்னை பக்கமே நான் தலைவெச்சு கூட படுக்க மாட்டேன் . இங்க இருக்கிற பிசினஸை நான் வேற யாராவது வச்சு பார்த்துக்கிறேன் . நான் என் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு மும்பையிலேயே முடிஞ்சா செட்டில் ஆகிடறேன்” என்று உறுதி அளித்தான் ராகேஷ். 

“சரி நீ கிளம்பு.. நான் நைட் துபாய் கிளம்ப ஏர்போர்ட் வரும்போது நீ மும்பையை விட்டு கிளம்பி இருக்கணும் ஞாபகம் வச்சுக்கோ” என்று விஜய்  கூற..

இவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அவன் சொன்னதற்கு வேகவேகமாக தலையாட்டிவிட்டு அங்கிருந்து முதல் ஆளாக ராகேஷ் கிளம்பி இருக்க…

“அயன் அவன நீ பாலோ பண்ணு மும்பையில் உன் டிபார்ட்மெண்ட்ல தெரிஞ்சவங்கள வச்சு இவன கண்காணிக்க சொல்லு. கொஞ்ச நாள் இவன பாலோ பண்ண சொல்லு” என்றான் விஜய்.

“சரிடா நான் பாத்துக்கிறேன்” என்றவன். “என்னடா பிரச்சனை எந்த நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் விஷயத்தை சொல்லாம ஆளாளுக்கு அவனை மிரட்டிட்டு இருக்கீங்க. ஆமா இது யார் புதுசா” என்றான் குமாரை காட்டி.

 “நான் போற வழியில சொல்றேன் என் கூட கிளம்பி வா” என்று அயனை தன்னோடு  அழைத்துக் கொண்டு இனியாவை பார்க்க ஹாஸ்பிடல் விரைந்தான் விஜய். 

விஜய்யும், அயனும் அங்கிருந்து கிளம்ப குமாரும் துபாய் செல்வதற்காக பேக் செய்ய வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

வம்சி மட்டும் வீட்டில் இருக்க “சரி வந்ததே வந்தோம்  குளிச்சிட்டு ஹாஸ்பிடல் போகலாம்”  என்று நினைத்தவன் கெஸ்ட் ஹவுசில்  இருந்த வேலையாட்களை வீட்டிற்கு வரச் சொல்லி ஹாஸ்பிடலில் இருப்பவர்களுக்கு எதுவும் வேண்டுமா என கால் செய்து கேட்டு அதை செய்து வைக்க சொன்னான் தான் ஹாஸ்பிடல் கிளம்பும்போது கொண்டு செல்வதற்காக.

பின் தன் அறைக்கு சென்று  குளித்து விட்டு ஈர டவலை கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த வம்சி. 

அவன் அறையில் கபோர்டிரிலிருந்து துணியை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டிருந்த தாமரையை பார்த்தான். ஹாஸ்பிடலில் இனியாவுடன் தங்குவதற்காக அவள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் 

 அவள் வம்சி வந்ததை கவனிக்கவில்லை.. கபோர்டுக்கு மேலே உயரத்தில் பெட்ஷீட் மடித்து வைத்திருக்க அதை எடுப்பதற்காக தாமரை போராடிக் கொண்டிருக்க..  அவள் பின்னால் வந்த வம்சி தாமரையை உரசிக்கொண்டு அவளைத் தாண்டி எட்டி கைநீட்டி அந்த பெட்ஷீட்டை எடுத்து அவள் கையில் கொடுக்க…

அதை கையில் வாங்கிய தாமரை தனக்கு பின்னால் நின்று இருந்த வம்சியை திரும்பிப் பார்த்தாள் .

“ஒய் குட்டிம்மா !!  டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டு எங்க கிளம்பிட்ட…” என்றான் அவளை நெருங்கி…

அவன் இப்படி நெருங்கி வருவதை கண்டு எரிச்சலான தாமரை “ம்ம்… இந்த வீட்டை விட்டு மொத்தமா போலாம்னு தான் என்னோட டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கேன். நீ பேசினது நீ இப்போ என்கிட்டே நடந்துக்குறது எதுவுமே எனக்கு பிடிக்கல.. இங்கே இருக்குறது சரி இல்லேன்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன்” என்று அவனை வெறுப்பேற்ற…

ஆனால் வம்சியோ அதை உண்மை என்று நம்பியவன். “நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் இந்த வீட்டு விட்டு போறேன் என் வாழ்க்கையை விட்டு போறேன்னு பேச்சுக்கு இடம் கிடையாது. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம வீட்டை விட்டு கிளம்புறேன்னு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே சொல்லுவ… ” என்று அவளை கபோர்ட்டில் அழுத்தி நிற்க வைத்து தாமரை அருகில் நெருங்கி வந்தவன்.

“இனி உன்கிட்ட பேச்சு கிடையாது ஒன்லி ஆக்சன் தான். இத்தனை நாள் நான் பொறுமையா இருந்துட்டேன். இனிமேல் என்னோட முக்கிய வேலையே உன்னை என் பக்கம் இழுக்குறது தான்” என்றவன் தாமரை அவன் சொன்னதை கேட்டு என்ன என்று யோசிப்பதற்குள் அடுத்த நிமிடம் குனிந்து தாமரையின் செவ்விதழை தன் இதழுக்குள் சிறை பிடித்து இருந்தான் வம்சி.

ENNAI 2-16

 ஹாஸ்பிடலுக்கு துணிகளை பேக் செய்து கொண்டு இருந்த தாமரையிடம் வம்சி நெருங்கி வர அதை பிடிக்காமல் அவனிடம் தான் வீட்டை விட்டு கிளம்புவதாக பொய் கூறினாள்  தாமரை .

அதைக் கேட்டு கோபம் கொண்ட வம்சி தாமரையை பிடித்து அவள் வேண்டாம் என மறுக்க மறுக்க அவள் இதழில் முத்தம் வைத்திருந்தான்.

ம்ம் …ம்ம்ம்ம் .. என்று அவனிடமிருந்து போராடிய தாமரை வம்சையின் மார்பில் கை வைத்து அவனை தன்னிடம் இருந்து வேகமாக விலக்கிவிட்டு வம்சியின் எச்சில் படிந்த தன் உதட்டை அழுந்த துடைத்தவள் .

வேக மூச்சு எடுத்தவளாக அவனை பார்த்தவள் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு கம்போர்ட்டில்  இடித்துக்கொண்டு பின்னால் சென்று நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“அம்மு என்ன காரியம் பண்ணிட்ட நீ!!  என் மனசு முழுக்க விஜய் மாமா தான் இருக்காரு அது உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் நீ இப்படி ஒரு கேவலமான விஷயத்தை செய்வேன்னு நான்  எதிர்பார்க்கவே இல்ல ”  என்று கண்களில் கண்ணீரோடு கோபம் கொண்டவளாக அவனைப் பார்த்தாள்.

“இங்க பாரு தாமரை உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. நீயும் நானும் சந்தோசமா சேர்ந்து வாழணும்னு நான் ஆசைப்படுறேன். நான் மட்டுமில்ல நம்ம மொத்த குடும்பமும் ஆசைப்படுது. இன்னமும் நீ விஜய்யையே மனசுல நினைச்சிட்டு இருக்கிறது எந்த விதத்தில் நியாயம். அவன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான் அவளுக்காக இப்ப தன்னை முழுசா மாத்திக்கிட்டேன் அதை நீயம்  பார்த்த தானே. ஹாஸ்பிடல்ல  வெச்சு விஜய் அவனை மறந்துட்டு நீ சந்தோசமா என்கூட சேர்ந்து வாழணும்னு விஜய் உன்கிட்டே சொன்னதை நீ மறந்துட்டியா” என்றான் வம்சி.

“அவர் அப்படி கேட்டா நானும் சரின்னு சம்மதிக்கணுமா ? அது முடியாது. என் மனசு முழுக்க விஜய் மாமா தான் நிறைஞ்சி இருக்காரு. அவர் எந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா என்னால அவரை என் மனசுல இருந்து தூக்கி எரிய முடியாது . தயவு செய்து புரிஞ்சுக்க அம்மு. இனிமேல் இந்த மாதிரி ஒரு தப்ப பண்ணாத” என்றாள் .

 “நான் ஒன்னும் விஜய் காதலிச்ச பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலையே நான் தொட்டு தாலி கட்டுன என்னோட பொண்டாட்டிக்கு தானே முத்தம் கொடுத்தேன். அந்த உரிமை எனக்கு இருக்கு தாமரை” என்ற  வம்சி.

“இங்கு பார் தாமரை நீ எப்படி விஜய் மட்டும் தான் மனசுல நினைச்சுட்டு அவனோட நெனப்புல தான் இருப்பேன்னு சொல்றியோ. அதே போல தான் நானும் உன் மேல பல வருஷமா இருக்க என்னோட காதல உடனே நீ சொன்ன வார்த்தைக்காக என்னால மாத்திக்க முடியாது. உனக்காக நான் காத்துட்டு தான் இருப்பேன். இது என்னோட உரிமை அந்த உரிமையை உன்கிட்ட காட்ட தான் இந்த முத்தம். இனி மறுபடியும் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் . என் வாழ்க்கை விட்டு வெளியே போறேன்னு சொன்னா அப்புறம் நடக்கிறது வேறயா இருக்கும். அத புரிஞ்சுக்கோ முதல்ல ” என்றான்.

வம்சி சொன்னதை கேட்ட  தாமரை “சரியா நாலு மாசம் நமக்கு விவாகரத்து கிடைச்சுடும் . அந்த நாலு மாசமோ நீ என்ன செஞ்சாலும் என் மனசு கறையப்போறதில்லை. நாலு மாசமோ நான்கு வருஷமோ எவ்வளவு நாள் ஆனாலும் என் மனசுல என் விஜய் மாமா மட்டும் தான் இருக்காரு. அத நினைப்புல வச்சுக்க.. நமக்கு டைவர்ஸ் கிடைக்கிற அன்னைக்கு நீ வேண்டாம்னு உன் முகத்துக்கு நேரா சொல்லிட்டு நான் போகத்தான் போறேன் இதையும் நீ உன் மனசுல குறிச்சு வச்சுக்கோ அம்மு” என்றாள் .

 “ஓஹோ!! அப்படியா அப்போ நானும் பாக்குறேன் நீ ஜெயிக்கிறியா இல்ல நான் ஜெயிக்கிறேனான்னு” என்றான் வம்சி.

“அப்போ இந்த நாலு மாசமும் என்கிட்ட கூட நீ நெருங்கி வரக்கூடாது அதை முதல்ல நினைப்புல வச்சுக்கோ. இந்த மாதிரி என்னோட விருப்பம் இல்லாம என்ன தொடவோ  என்ன சீண்டி பார்க்கிற வேலையெல்லாம் இருக்கக்கூடாது” என்றாள் .

“அப்போ நாலு மாசத்துக்கு பிறகு நான் ஜெயிச்சிட்டேன்னா நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் கிடைக்குமா?” என்றான்  குறும்பாக அவளை பார்த்து.

“இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது முதல்ல வழியை விடு எல்லாரும் எனக்காக காத்துட்டு இருப்பாங்க” என்று தாமரை வம்சியை தள்ளி விட்டு செல்ல போக..

தாமரையின் கையைப் பிடித்து நிப்பாட்டியவன் “யார் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றான் புருவம் சுருங்க..

” ஹாஸ்பிடல் இருக்கவங்களுக்கு நான் டிரஸ் எல்லாம் எடுத்துட்டுவரேன்னு சொல்லி தான் கிளம்பி வந்தேன். அதுக்கு தான் நேரம் ஆச்சு விடு என்ன” என்று கையை உதறினால்.

 “ஓ அப்போ நீ ட்ரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வச்சது ஹாஸ்பிடல் போகத்தானா!!  அப்புறம் ஏன் என்கிட்ட பொய் சொன்ன” என்றான் வம்சி .

“நீ என்கிட்ட நடந்துக்கிட்டது எனக்கு பிடிக்கல… அதனால தான் அப்படி சொன்னேன் . ஆனா  அந்த பொய்யே  எனக்கு வினையாகும்னு நான் நினைக்கல ” என்றவள் அவன் கையை உதறிவிட்டு அங்கிருந்து செல்ல ..

“ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு குட்டிமா ஹாஸ்பிடல் இருக்கறவங்களுக்கு டிபன் செய்ய சொல்லி இருக்கேன். நானும் ரெடி ஆயிட்டு வந்துடறேன் ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம்” என்றான் அவள் சென்ற திசையை பார்த்து சத்தமாக

” நீ எப்பவோ கிளம்பி வா நான் முதல்ல கிளம்புறேன் இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு தான் டேஞ்சர்” என்று படிகளில் திரும்பி கடகடவென இறங்கி சென்றாள்.

தான் வந்த காரிலேயே ஹாஸ்பிடலில் இருப்பவர்களுக்கு தேவையான உடைகளையும் கிச்சனில் செய்து முடித்திருந்த உணவுப் பொருட்களையும் வாங்கிய தாமரை  ஹாஸ்பிடல் கிளம்பி இருந்தாள் .

 “ம்ஹும் என் குட்டிமாவுக்கு முத்தம் கொடுத்ததும் சும்மா ஜிவுன்னு கிக் ஏறுதே … இனி எப்போ இந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமோ தெரியலையே.. ” என்று பெருமூச்சுவிட்டவன். அவசரமாக உடைமாற்றி விட்டு கீழே வந்தவன் அங்கே தாமரை காணாமல் நேராக கிடச்சனுக்கு வந்தவன் கிச்சனை கிளீன் செய்து கொண்டு இருந்தவரிடம் வந்து சரோஜாக்கா தாமரை எங்கே?” என்றான்  ஆர்வமாக

 “தம்பி பாப்பா ஹாஸ்பிடல் நேரம் ஆயிடுச்சுன்னு சீக்கிரமாவே கிளம்பி போயிடுச்சு” என்றார் சரோஜா.

 “அதுக்குள்ள கிளம்பிட்டாளா இருக்கட்டும்” என்று நினைத்தவன் கார் சாவியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினான்.

 இங்கே இனியாவின் கையைப் பிடித்து படி கட்டிலின் அருகில் சேரில் அமர்ந்திருந்தான் விஜய் அவள் கண் விழிக்க வேண்டும் என்று காத்திருந்தான்.

 நீண்ட நேரத்திற்குப் பிறகு லேசாக முனகிய சத்தத்தோடு இனியா  மிகவும் சிரமப்பட்டு மெதுவாக கண்களை திறந்தாள்.

 அவள் முகம் வலியில்  சுருங்குவதை கண்டதுமே இனியாவின் வலி உணர்ந்தவன் எ

அவசரமாக எழுந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டே இனியா!! என்று முதன் முறையாக  உரிமையாக இனியாவின் பெயரை அழைத்தான். 

லேசாக கண்களைத் திறந்த இனியா தன் எதிரே விஜய் இருப்பதை பார்த்ததும் சட்டென்று பதட்டமானவள் வேகமாக அவன் கையை பிடித்துக் கொண்டு “விஜய் சார்! விஜய் சார்!!…  என் குழந்தை…” என்று தன் வயிற்றை தொட்டுப் பார்த்தபடி பதட்டமாக அவனிடம் கேட்டபடி கட்டில் இருந்து வேகமாக எழ முயற்சி செய்தாள்  .

“இனியா! என்ன பண்ற உனக்கு தலையில ஆபரேஷன் பண்ணி இருக்கு. நீ இப்படி எல்லாம் எழுதிக்க கூடாது முதல்ல படு” என்று அவள் தோளை  பிடித்து கட்டிலில் மெல்ல படுக்க வைத்தான்.

“விஜய் சார்.. விஜய் சார்.. என் குழந்தைக்கு என் குழந்தைக்கு…” என்று இனியா மீண்டும் தன் வயிற்றை தொட்டு பதட்டமாக அவனை பார்க்க..

“இனியா பதட்டப்படாத நீ பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகல.. நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகல. நீ ஃப்ரீயா இரு நீ இப்படி பதட்டப்பட்டா  குழந்தைக்கு  நல்லதில்ல” என்று அவளிடம் நம்ம குழந்தை என்று இருவரின் பந்தத்தையும் உறுதிப்படுத்த விஜய் கூற…

அவன் வாயில் இருந்து வந்த அந்த வார்த்தைகளை கேட்டு இனியாவால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வலிந்தது. அவன் கையில இருக்க பற்றி கொண்டு “சார்! அப்போ நீங்க… இது நம்ம குழந்தை…” என்று அவள் உணர்ச்சி பொங்க அழுதபடி விஜய்யை பார்த்தாள்.

“இனியா அந்த ராகேஷ் இல்ல.. வேற யார் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் .எனக்கு தெரியும் இது என்னோட குழந்தை நம்ம குழந்தை நான் நம்புறேன் இனியா” என்றான் விஜய்யும் உணர்ச்சி பொங்க.

விஜய்யின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்த இனியா அவன் கைகளை விட்டுவிட்டு நடக்கத்தோடு அவள் இரு கைகளையும் கூப்பி விஜய்யை  பார்த்து தன் வயிற்றில் இருக்கும் குழந்தை விஜய்யுடையது தான் என்று நம்பியதற்கு நன்றி கூற..

“ஏய் இனியா.. என்ன இது ஏன் இப்படி எல்லாம் பண்ற” என்று அவள் கையை பிடித்துக்கொண்ட விஜய் “டாக்டர் உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. குழந்தை நல்லா இருக்கு ஆனா நீ நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தா தான் குழந்தையும் நல்லா வளரும்.  அதனால இனிமேல் எத பத்தியும் யோசிக்காம நேரத்துக்கு சரியா சாப்பிடு உடம்ப நல்லா பாத்துக்கோ நீயும் குழந்தையும் எப்பவும் ஹெல்தியா சந்தோசமா இருக்கணும் புரியுதா” என்றான்.

சரி என்று இனியா தலையாட்ட…

“இனியா இந்த மாதிரி ஒரு நேரத்துல நான் கேட்கிறேனு  என்ன தப்பா எடுத்துக்காத . ஆனா எனக்கு இப்போ ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும். அது உன்னோட நல்லதுக்காக தான் அதை நீ புரிஞ்சுக்கோ” என்றவன் இனியாவிடம் எப்படிக் கேட்பது என்று யோசனையோடு அவளை பார்த்தான்.

“என்ன சார் சொல்லுங்க” என்றாள்  இனியா.

 “உன்னை காதலிச்சு ஏமாத்தி துபாயில் கொண்டு போய் வித்தானே.. அவன் பேர் என்ன” என்றான் நேரடியாக.

விஜய் இந்த கேள்வியை கேட்டதும் இனியா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் .

“தயவுசெய்து உன் மனசுல எந்த ஒரு தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திகாத இனியா. உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டவனை  நான் ஏதாவது செய்தாகணும். அதுக்காக தான் அவன பத்தின விவரம் கேட்கிறேன். எனக்கு அவன் பேரு அவனோட சில டீடெயில்ஸ் மட்டும் வேணும் அது மட்டும் சொல்லு போதும் மத்தத நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

 “சார் இப்போ எதுக்கு சார் அவன பத்தி எல்லாம்…  அதான் எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு இனி தேவை இல்லாம அவன பத்தி தெரிஞ்சிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க.  வேண்டாமே விடுங்க சார்.. அவன் நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் கிடையாது ரொம்ப மோசமானவன் அவன்கிட்ட இருந்து  நீங்க தயவுசெய்து ஒதுங்கியே  இருங்க” என்றாள்  இனியா நடுக்கத்தோடு.

“இங்க பாரு இனியா அவன் எப்பேர்பட்ட ஆளா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா உன்னை இந்த நிலைமைக்கு ஆளாகியவனை . நான் சும்மா விடப்  போறதில்ல. நீ இப்போ அவனை பத்தி டீடெயில்ஸ் சொல்ல போறியா இல்ல நானே தெரிஞ்சுக்கட்டுமா” என்றான் சற்று கோபமாக .

இனியா அவளை ஏமாற்றபின் யார் என்று கூறத் தயங்க.

“சரி விடு நான் பாத்துக்குறேன் நீ கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடு. நான் கொஞ்சம் வெளியே முக்கியமான வேலையா போறேன் . எப்போ வருவேன்னு எனக்கு தெரியாது அதுவரை என் வீட்டில் இருக்கிறவங்க உன்னை எந்த குறையும் இல்லாம பாத்துக்கோங்க நீயும் உன் உடம்ப பத்திரமா பாத்துக்கோ” என்று  அங்கிருந்து எழுந்து செல்ல போக  .

அவன் கையை பிடித்துக் கொண்ட இனியா “சார் சொன்னா கேளுங்க சார் இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க. அந்த செல்வா சாதாரண ஆள் கிடையாது. எங்க பேட்டையிலேயே பெரிய ரவுடி அவன் கொலை கொள்ளை எதுக்குமே அஞ்சாதவன் அவனை பார்க்க போய் உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் நானும் என் குழந்தையும்” என்று இனியா  அழ…

“இங்க பாரு இனியா  எனக்கு எதுவும் ஆகாது. நீயும் நம்ம குழந்தையும் பத்திரமா இருப்பீங்க. அவன பத்தி விபரம் சொல்லிட்ட இல்ல இனி நான் பாத்துக்குறேன். நான் வரவரைக்கும் நீ கவனமா இரு தனியா எங்கேயும் போகாத. எங்க போற மாதிரி இருந்தாலும் என் வீட்டில் இருக்கிறவங்களை  துணைக்கு கூட்டிட்டு போ சரியா. உன் பாட்டியும் இங்கதான் இருக்காங்க அவங்கள நல்லபடியா கவனிச்சுக்கோ” என்றவன் அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவன் குனிந்து முதல் முறையாக இனியாவின் நெற்றியில் முத்தம் வைத்தான். 

விஜய் முத்தம் வைக்க அதை கண்கள் மூடி ஏற்றுக்கொண்ட இனியாவின் கண்களில் ஓரம் கண்ணீர் துளி கசிந்தது.

அதை பார்த்தவன் இனியாவின் முகத்தை கையில் ஏந்தி அவளை பார்த்தவன் “இதுவே நீ அழறது கடைசியா இருக்கனும், இனிமேல் நீ அழக்கூடாது ” என்றவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்ட விஜய் “கவனமா இரு இனியா.. நம் குழந்தை பத்திரம் எல்லா பிரச்சினையும் முடிச்சிட்டு வந்த பிறகு நீயும் நானும் சந்தோசமான ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் “என்றவன் அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அங்கே தாமரையம், அவன் குடும்பமும் நின்றிருப்பதை பார்த்தவன் “நான் ஒரு முக்கியமான விஷயமா துபாய் வர போக வேண்டி இருக்கு என் வேலையெல்லாம் முடிச்சிட்டு வர வரைக்கும் இனியாவையும் அவ வயித்துல இருக்க என் குழந்தையையும் பத்திரமா பாத்துக்கோங்க. அவங்க பாட்டியையும் பத்திரமா பாத்துக்கங்க” என்றவன் .

வீட்டில் இருப்பவர்கள் அடுத்து கேள்வி கேட்கும் முன் அங்கிருந்து கிளம்பி  வெளியே வர வம்சி  அப்போது தான் உள்ளே வந்தான். அவனிடம் தான் கிளம்புவதாக கண்ணைக் காட்டி விட்டு மற்றவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு விஜய் ஹாஸ்பிட்டலில் இருந்து நேராக ஏர்போர்ட் கிளம்பி இருந்தான் 

ENNAI 2-17

இனியாவிற்கு  ராகேஷினால் ஆபத்து ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதும் பதறி  அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் வந்திருந்தான் அர்ஷ்.

அவனைப் பார்த்ததும்  லேசாக  புன்னகைத்த இனியா “அண்ணா இப்பதான் என்ன பார்க்க உங்களுக்கு நேரம் கிடைச்சுதா…  நான் அடிபட்டு ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கேன். அதைக் கேள்விப்பட்டது  உடனே நீங்க தானே  என்னை வந்து  முதலில் பார்த்திருக்கணும்” என்று அவனை   பொறுமையாக கேட்டாள்   இனியா .

“என்ன  இனியா இப்படி கேட்டுட்ட எனக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா நான் எப்பவும் ஹாஸ்பிடல் வந்திருப்பேனே பெயருக்கு தான் அண்ணன் தம்பிக்கு  பிஏ வா வேலை பார்க்கிறேன். மத்தபடி இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு கண்டதுக்கெல்லாம் அண்ணன் தம்பியும் போன் பண்ணி என்ன டார்ச்சர் பண்ணுவாங்க உனக்கு இப்படி ஆனத என்கிட்ட ரெண்டு பேருமே சொல்லல . யாரோ மூணாவது மனுஷன் விஷயத்த சொல்லி அதை கேள்விப்பட்டு நான் கிளம்பி வரவேண்டியதா இருக்கு” என்று அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து  இனியாவிற்கு ஜூஸ் போடுவதற்காக ஆரஞ்சு பழத்தை  உறித்துக் கொண்டு அவ்வப்போது தாமரையை சைட் அடித்துக் கொண்டிருந்த வம்சியை பார்த்து முறைத்தபடி சொன்னான் அர்ஷ .

“அப்போ  இருந்த டென்ஷன்ல உன்கிட்ட போன் பண்ணி சொல்லணும்னு எனக்கு தோணவே இல்ல டா.. அதான் வந்துட்டியே அப்புறம் என்ன முறைப்பு” என்று அர்ஷை திரும்பியும் பார்க்காமல் வம்சி கூற .

“தோணாதுடா  உனக்கு எதுவுமே தோணாது ஏதாவது வேலை இருக்குன்னு எனக்கு கால் பண்ணுங்க.. “என்றவன்  “நான் இனிமே உங்க கால அட்டென்ட் பண்ண போறது இல்ல நான் உண்டு என் வேலை உண்டுன்னு  ஆபீஸ்ல ஒரு மூலையில வேலை பார்க்கிறேன். உங்க ரெண்டு பேருக்கும் பேசாம வேற ஒரு அசிஸ்டன்ட் சேர்த்துக்கோங்க என்ன ஆள் விடுங்கடா சாமி” என்று கையெடுத்து கும்பிட்டான் அர்ஷ் .

” எந்த பிரச்சினையும் இல்ல உனக்கு வேலை செய்ய சிரமமா இருந்தா சொல்லு  ஆல்ரெடி  ராகேஷ் கூட இருந்தானே குமார் அவனை விஜய்  துபாய்ல இருக்கிற வேலையை பார்க்க  கூட்டிட்டு போய் இருக்கான். அவன் இப்போதைக்கு டெம்பரவரியா தான் நம்ம கிட்ட வேலை பார்க்கிறான் . நீ உன்னோட வேலையிலிருந்து விலகிக்கிறேன்னு  உறுதியாக சொல்றியா .  அப்போ அந்த குமாரையே  உன்னோட போஸ்டிங்கில் சேர்த்து விடலாம் எப்படி ஐடியா.. ஓகே தானே!” என்று வம்சி வேண்டுமென்றே அர்ஷை மேலும் கடுப்பேற்ற..

“அஹ் … அடப்பாவிகளா சும்மா ஒரு பேச்சுக்கு எனக்கு வேலை வேண்டாம்னு சொன்னா… நீ  உடனே என்னை துரத்தி விட்டுட்டு வேற ஆளை சேர்க்க ரெடி ஆயிட்டீங்களா நடக்காதுடா நடக்காது. நான் இருக்கிற வரைக்கும் உங்க அண்ணனுக்கு நான் தான் பி ஏ. அதை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்”  என்றான் அர்ஷ் .

“அப்புறம் என்ன பொத்திகிட்டு போய் வேலையை பாரு” என்று சைகையால் அவனை அடக்கினான்  வம்சி .

” ஆனா  உண்ணா கைய தூக்கிய வாய அடைச்சிடுங்க டா .. ” என்று பொறுமியா அர்ஷ் .

தாமரையையும் இனியாவையும் மாற்றி மாற்றி பார்த்தவன் “என்ன தாமரை ரெண்டு நாள் முன்ன தான் . விஜய் ஓட கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து இனியா கூட சண்டை போட்டுட்டு போன. இப்ப என்னடான்னா இனியாவை நீ விழுந்து விழுந்து கவனிக்கிறியே.. நீ பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீயும் இனியாவும் ராசியாகிட்டீங்களா  ”  என்று அவள் வாயை கிளறினான்.

அவனை  திரும்பி முறைத்த தாமரை கையில் ஜூசரை வைத்துக்கொண்டு நின்றிருந்தவள் வம்சியை பார்த்து “எவ்வளவு நேரம் தான் அந்த நாலு ஆரஞ்சு பழத்தை உரிச்சிட்டு இருப்ப..  சீக்கிரம் குடு ஜூஸ் போடணும்” என்று  வம்சியை அதட்டினாள்.

அவள் கேட்டதும் குறித்து வைத்திருந்த ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொண்டு  தாமரையிடம் சென்றவன் அவளை  இடித்துக் கொண்டு நின்றான்.

வம்சி இடித்ததும் வேகமாக அவனை விட்டு தள்ளி நின்றவள் “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது”  என்று முறைத்து விட்டு அவன் கையில் இருந்த தட்டை   வெடிக்கென்று பிடுங்கியவள் அதிலிருந்து ஆரஞ்சு எடுத்து ஜூஸ் போட ஆரம்பித்தாள்.

என்ன சொன்ன எனக்கு ஒண்ணுமே புரியலையே என்று மீண்டும் அவள் அருகில் நெருங்கி வந்தவன் தாமரையே உரசிக் கொண்டு கையை நீட்டி தட்டில் இருந்த ஆரஞ்சு  சுலையை எடுத்து ஒன்று வாயில் போட்டவன் “ச்சே … இந்த ஆரஞ்சு ருசிஎ இல்லை. நான் வீட்டில் சாப்பிட்ட ஆரஞ்சு டெஸ்ட் தான் இன்னமும் என்னோட வாயில ஒட்டிக்கிட்டே இருக்கு. அதுக்கு அப்புறம் எதை சாப்பிட்டாலும் எனக்கு அந்த ருசியை பிடிக்க மாட்டேங்குது” என்று வீட்டில் வைத்து தாமரையை வம்படியாக முத்தம் வைத்ததை சுட்டிக்காட்டி வம்சி பேச ..

அவன் பேசியதை கேட்டு நான் தாமரை  வம்சியை திரும்பிப் பார்க்க ..

அவனும் தாமரை பார்த்ததும் தன் உதட்டை கட்டை விரலால் துடைத்து அதற்கு முத்தமிட்டவன் “ஏன் தாமரை நீயும் தானே அந்த ஆரஞ்சு சாப்பிட்ட.. எவ்வளவு டேஸ்டா இருந்துச்சு .  உனக்கு வேணும்னா சொல்லு மறுபடியும் அதே ஆரஞ்ச உனக்கு நான் தரேன்” என்று அவளை பார்த்து வம்சி கண்ணடிக்க..

“டேய் அம்மு வர வர  உன்னோட லொள்ளுத்தனம்  முடியல .. என் உதட்டை ஆரஞ்சு மாதிரி இருக்கு அது அவ்வளவு டேஸ்டா இருக்குன்னு சொல்றியா உனக்கு ரொம்ப தாண்ட திமிரு”என்று நினைத்துக் கொண்டவள்.

“ச்சி!! அந்த ஆரஞ்சு பழமா! அது எனக்கு பிடிக்கவே இல்லை. உவ்வாக்…  கெட்டுப் போன மாதிரி இருந்துச்சு அந்தப் பழம் . அதை எவனது சாப்பிடுவானா அதை போய் நீ சாப்பிட்டு ஆஹா ஓஹோன்னு புகழ்ற எனக்கு அது வேண்டாம் நீயே வச்சுக்கோ உன் ஆரஞ்சு பழத்தை ” என்று அவனைப் போலவே  தாமரையும்   இனியாவிற்கும்  அர்ஷிற்கும் புரியாதவாறு அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

“அடிப்பாவி நான் கொடுத்த முத்தம் உனக்கு வாந்தி வர மாதிரி இருக்கா.. அழுகின பழம் மாதிரி இருக்குன்னு நான் கொடுத்த முத்தத்தை  இவ்வளவு கேவலப்படுத்தி சொல்ற..  கொழுப்பு தாண்டி உனக்கு உன்னை எல்லாம் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா”  என்று தாமரையை மனதிற்குள் திட்டியபடி கையில் இருந்த ஆரஞ்சு பழத்தை வாயில் போட்டு தாமரையின் இதழை கடிப்பது போல சைகை செய்து கடித்து விழுங்கினான் .

“அந்த பழம் அழுகி இருக்கா இல்லையான்னு இங்க எடுத்துட்டு வந்து இருந்தா நான் பார்த்து சொல்லி இருப்பேன். நீ வேற அந்த குழம்பு ரொம்ப ருசியா இருக்குதுன்னு சொன்ன… ஏன்டா அப்போ வீட்டுல இருந்து அந்த ஆரஞ்ச நீ எடுத்துட்டு வந்திருக்க வேண்டியதுதானே எதுக்கு தேவையில்லாம ருசி இல்லாத பழத்தை வாங்கி பணத்தை வேஸ்ட் பண்ற” என்றான் அர்ஷ் .

“டேய் அங்கே இருந்தது ஒரே ஒரு ஆரஞ்சு பழம் தான் அதையே எத்தனை பேருக்கு கொடுக்கிறது.  நான் அந்த  ருசியான பழத்தை  தாமரைக்கு கொடுத்துட்டேன். இனி வேணும்னாலும் அது தாமரைக்கு மட்டும் தான் கிடைக்கும் வேற யாருக்கும் கிடைக்காது” என்று தாமரை பேசியதில் கடுப்பான வம்சி  பாத்ரூமுக்குள் சென்று கை கழுவு சென்றான் .

வம்சி கடுப்பாக செல்வதை கண்டு உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்த தாமரை “இனி இந்த மாதிரி அம்மு என்ன பேசினாலும் பதிலுக்கு பதில் அப்பவே பேசிடனும் அப்பதான் என்கிட்ட அம்மு மறுபடியும் வம்புக்கு வரமாட்டான்” என்று நினைத்தபடி ஜூசை முழுவதுமாக பிழிந்து அதை அர்ச்சிடம் நீட்டியவள்.

“அண்ணா இதுல கொஞ்சமா சுகர் போட்டு கலந்து இனியாவுக்கு குடுங்க நான் கையெல்லாம் ஜூஸா இருக்கு வாஷ் பண்ணிட்டு வந்துடறேன் என்று பாத்ரூம் நோக்கி சென்றான்.

தாமரை  கொடுத்த ஜூசை வாங்கி அங்கே இருந்து சர்க்கரையை கொஞ்சம் அதில் போட்டு ஸ்பூனை வைத்து கலக்கியவன் இனியாவிற்கு கொடுத்து அதை குடிக்க சொல்ல..

இங்கே தாமரை கை கழுவுவதற்காக பாத்ரூம் வரை வந்தவள். பாத்ரூமுக்குள் வம்சி கை கழுவுவதை பார்த்துவிட்டு அவன் வெளியே அவன் வருவதற்காக  அங்கேயே நின்று கொண்டாள் . அதை  வாஷ்பேஷனில் இருந்த கண்ணாடி வழியாக பார்த்து வம்சி ” ஓஹோ மேடம் நான் உள்ள இருந்தா நீங்க வர மாட்டீங்களா அப்போ ஒரே ரூம்ல தான் நம்ம இருக்க போறோம் அப்ப என்ன செய்வா இவ”  என்று யோசித்தவன்.

“ம்கூம்… ”  என்று தொண்டையை  சேமிய படியே பாத்ரூமை  விட்டு வெளியே வர அவன் வந்ததும் வேகமாக வம்சியை  தாண்டி பாத்ரூமுக்குள் நுழைந்த தாமரை கதவை சாற்றிக் கொண்டாள்.

அதையெல்லாம் வம்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எப்படியும் தாமரை மனது மாற நாட்கள் பிடிக்கும் என்று அவனுக்கும் தெரியும் தானே .

இனியாவுக்கு ஜூசை கொடுத்த அர்ஷ்  “நீ சொன்ன மாதிரி  இந்த ஆரஞ்சு அவ்வளவு ருசியா இல்ல டா.. இனியா ரொம்ப கஷ்டப்பட்டு தான் நான் கொடுத்த ஜூஸ் குடிச்சா. நீ இனியாவ பார்த்துக்கோ நான் போய் அவளுக்கு ஜூஸ் போட நல்ல பழமா பார்த்து வாங்கிட்டு வரேன்”  என்று இனியாவிற்காக பழம் வாங்க அர்ஷ் சென்றுவிட.

இந்த ரூமில் இனியாவும் வம்சம் மட்டும் இருக்கு அவனை தயங்கி படி பார்த்த இனியா ” எனக்காக  இத்தனை பேர் இருக்கணுமா யாரோ ஒருத்தர் ஹாஸ்பிட்டல் இருந்தா போதாதா சார்” என்றாள்.

“இதுல என்ன இருக்கு அண்ணி உங்கள பாக்குறது தவிர எங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு” என்றான்   வம்சி .

அவன் அண்ணி என்று கூப்பிட்டதும் இனியா அவனை வித்தியாசமாக பார்க்க அவளிடம் என்ன என்று கேட்கப் போனவன் அவர்கள் அரைக்கடவு தட்டப்படவும் சென்று கதவை திறக்க அங்கே நர்ஸ் இனியாவை பரிசோதிப்பதற்காக செய்வதற்காக நின்று இருந்தார்.

அவருக்கு வம்சி வழி விட உள்ளே வந்தவர் “சார் கொஞ்சம் ஹாட் வாட்டர் புடிச்சு தரீங்களா  இவங்களுக்கு  முகத்தை தொடச்சி விடனும் ” அந்த ஃப்ளாஷ்க்ல இருக்கான்னு பாருங்க அப்படி இல்லன்னா நான் பிடிச்சிட்டு வரேன்” என்றவன் பாத்ரூம் தாமரை வெளியே வரச் சொல்லி கதவைத் திட்டினான் .

நர்ஸ் பிளாஸ்க்கில்   தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க அதில் சுடு தண்ணீர் இருக்கவும் “சார் இதுல இருக்கு நான் இதையே  யூஸ் பண்ணிக்கிறேன். நீங்க கொண்டு வர வேண்டாம் ”  என்றார்.

அதற்குள் தாமரையில் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வர…

அவளை வெளியே வரவிடாமல் கதவின் குறுக்கே கைவைத்து தடுத்த வம்சி திரும்பி நர்ஸையும், இனியாவையும் பார்த்தான்.

இனியா கண்கள் மூடி அமர்ந்து இருக்க… நர்ஸ்  சுடுதண்ணீரை கொண்டு அவள் முகத்தை துடைத்துக்கொண்டு இருந்தார்.

அவர் வேளையில் மும்முரமாக இருக்க.. தாமரையையும், வம்சியையும் அவர் கவனிக்க வில்லை.

அதை ஒரு வாய்ப்பாக நினைத்த வம்சி தாமரையை வெளியே வரவிடாமல் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் பாத்ரூம் கதவை சுற்றிவிட்டு தாமரையை நெருங்கினான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத தாமரை “அம்மு… என்ன பண்ற… இப்போ எதுக்கு நீ உள்ள வந்த முதல்ல இங்க இருந்து வெளியே போ… இல்ல என்னை வெளிய போக விடு… ” என்று அவனை தாண்டி தாமரை செல்லப்போக…

அவள் கையை வளைத்து பிடித்து நிப்பாட்டியவன் “என்ன சொன்ன.. என்னோட முத்தம் அழுகின பழம்  மாதிரி இருக்கா… ” என்றான்.

“ஆமா எனக்கு நீ கொடுத்த  முத்தம் பிடிக்கல அதனால் தான் அப்படி சொன்னேன் ” என்றாள்  அவளும் விடாமல் அவனை வெறுப்பேற்றி..

“ஓஹோ… அப்போ அந்த அழுகின முத்தத்தை இனிமேல் நீ அடிக்கடி ருசிக்க வேண்டி வரும் . ” என்றவன் அடுத்த நொடி தாமரையை சுவற்றில் தள்ளி அவள் இதழை சிறை செய்து இருந்தான்.

ENNAI 2-18

“என்ன விஜய் இப்படி பண்ணிட்ட நீ.. எனக்கு பதிலா யாரையோ துபாய்க்கு உன்கூட வேலை பார்க்க கூப்டு போயிருக்கியாமா .. ஏன் டா இப்படி எனக்கு துரோகம் பண்ணின ” என்று காதலனிடம் நியாயம் கேட்கும் காதலி போல விஜய்க்கு போன் செய்து பொங்கிக்கொண்டு இருந்தான் அர்ஷ்.

“டேய் நான் இங்க வந்திருக்க வேலையே வேற டா.. உனக்கு என்ன சொல்லி புரிய வெக்குறது. நான் இனியா விஷயமா இங்க வந்திருக்கேன் டா ” என்றான் விஜய்.

“என்னது ! இனியா விஷயமா போயிருக்கியா! அப்போ கண்டிப்பா அவளோட அண்ணங்குற உரிமையிலயாவது என்னை உன்கூட கூட்டிட்டு போயிருக்கன்னா என்னை எந்த இடத்துல நீ வெச்சிருக்கேன்னு எனக்கு புரிஞ்சு போயிருச்சு டா புரிஞ்சு போயிருச்சு.. இதுக்கு மேல நான் இங்க இருந்தா சரியா இருக்காது. நான் உடனே கிளம்பி துபாய்க்கு வரேன். எவன் வந்து என் வேலையை கெடுக்கிறான்னு நானும் பாக்குறேன் நீ போனை வை அடுத்த பிலைட்ல நான் கிளம்பி துபாய் வரேன் ” என்று கோபமாக போனை வைத்தான்.

“டேய்..டேய்… சொன்னா கேளு… ” என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே போனை வைத்திருந்தான் அர்ஷ் .

“இவனுக்கு அறிவே கிடையாது சொல்றதை எதையுமே முழுசா கேக்குறது இல்ல… இவனா போன் பண்ணினான் , இவானா கேள்வி கேட்டான், இவனா சண்டை போட்டான் போனை வெச்சுட்டான். இடியட் ” என்று புலம்பிய விஜய் .

ஸ்பீக்கரில் இருந்த போனை கட்  செய்துவிட்டு அருகில் அர்ஷ் பேசியதை எல்லாம் இவ்ளோ நேரம் கேட்டுக்கொண்டு இருந்த குமாரை பார்த்தான் விஜய் .

வெளியே கிளம்பி கொண்டு இருந்த விஜய் குமாரிடம் என்ன செய்யலாம், எங்கே போகலாம் என்று பேசிக்கொண்டு இருக்க. அப்போது அர்ஷ் போன் செய்யவும் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு பேச.. போன் ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் அர்ஷ் பொங்கிவிட்டு போனை வைத்து இருந்தான்.

குமார் அர்ஷ் பேசியதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் விஜய்யை பார்த்து லேசாக சிரித்தவன் தேவா பற்றி அவன் சேகரித்த தகவல்களை பற்றி தனக்கு தெரிந்தது என்று அனைத்தையும் சொல்லி இருந்தான்.

“ஓகே குமார் அப்போ அடுத்து என்ன செய்யலாம்னு சொல்றேன் .அதுக்கு முன்ன நாம இப்போ செல்வாவை மீட் பண்ண போறோம். அவன் துபாய் வந்தாச்சு ” என்றவன் தன் கூலர்ஸை  எடுத்து போட்டுக்கொண்டே அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து கிளம்பி இருந்தனர்.

இங்கே இந்தியாவில் விஜய்யிடம் போன் பேசிவிட்டு துபாய் செல்வதற்காக கிளம்பிக்கொண்டு இருந்தான் அர்ஷ். அவனிடம் ஒரு டாக்குமென்டில் இருந்த சந்தேகத்தை கேட்பதற்காக கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தாள்  நிலானி.

அவளை பார்த்ததும் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தவன் “சொல்லுங்க மிச்செஸ் நிலானி ” என்றான் சோகமாக.

அவன் சமீபமாக நிலானியை மிஸ்ஸஸ் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்க.. அதை கேட்கும்போதெல்லாம் அர்ஷை ரொம்பவும் அலைய விடுகிறோமோ என்று நிலானிக்கு அவ்வப்போது தோன்றும். இருந்தாலும் அவள் சொன்ன பொய்யை எப்படி அர்ஷ்ஷிடம் சொல்வது என்று தயக்கத்தால் அப்படியே  விட்டிருந்தாள்.

“சார் என்னை சும்மா பேர் மட்டும் சொல்லி கூப்பிடுங்கன்னு  சொன்னா  அதை செய்யாம எப்போ பாரு என்னை மிச்செஸ்னு சொல்லி கூப்பிடறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. ” என்றாள்  நிலானி சற்று கோபமாக.

அதை கேட்டவன்  “கல்யாணம் ஆனவங்களை  முறையா மரியாதையா கூப்பிடறது தானே சரியா இருக்கும் ” என்றான்.

“டேய் முட்டாள் எனக்கு கல்யாணம் ஆகல டா.. ஏதோ அன்னிக்கு நான் உன்னை வெறுப்பேத்த பேசினது . இப்போ நீ என்னை இப்படி கூப்பிடறதை கேக்குற அப்போ எல்லாம் எனக்கு கடுப்பாகுது டா.. ” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவள் .

“எப்படியோ கூப்பிடுங்க… “என்று சலித்துக்கொண்டவள் .

“இந்த டாக்குமெண்டை கொஞ்சம் சரி பார்த்து சொல்லுங்க சார் . இதுல சில டௌப்ட்ஸ்  இருக்கு ” என்று தான் கொண்டு வந்த பைலை அவன் முன் டேபிளில் வைத்தாள் ,

“எதுவா இருந்தாலும் நீங்களே செக் பண்ணிடுங்க .. நான் இப்போ அவசரமா துபாய் கிளம்பிட்டு இருக்கேன் ” என்றவன் கார் கீயை எடுத்துக் கொண்டு அவன் கேபினை விட்டு கிளம்ப சென்றான்.

“என்ன துபாய் போறானா!! ” என்று திடீர் என்று அர்ஷ் கிளம்பவும் நிலானிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது .

‘துபாய்கா  எதுக்கு போறீங்க.. நீங்க கொஞ்சமும் பொறுப்பில்லாம  கிளம்பி போய்ட்டா அப்பறோம் விஜய் சார் உங்களை நம்பி கொடுத்துட்டு போன வேலை எல்லாம் யார் பார்ப்பாங்க ” என்று அவனை எப்படியாவது துபாய்  செல்லாமல் தடுக்கலாம் என்று நினைத்து அர்ஷ்ஷிடம் பேசினாள் ..

“நான் போகலையினா என் வேலையை வேற ஒருத்தன் பறிச்சிட்டு போயிடுவான். எனக்கு பேச நேரம் இல்ல.. நான் கிளம்பறேன். எதுவா இருந்தாலும் நான் வந்து பாத்துக்கிறேன் ” என்று கதவை திறக்க…

அப்போது வெளியே இருந்து கதவை திறந்துகொண்டு அர்ஷ் கேபினுக்குள் வந்தாள்  வினோ.

அவளை பார்த்ததும் “வா வினோ .. என்ன இவ்ளோ தூரம் .. எதுவும் முக்கியமான விஷயமா ” என்றான் அர்ஷ்.

“ஆமா  அண்ணா என் பிரெண்டை பார்க்க வந்தேன் . அவ இங்கே இருக்கான்னு சொன்னாங்க அதான் நானே வந்துட்டேன். சாரி நான் உங்க பெர்மிஸ்ஸின் இல்லாம இங்க வந்ததுக்கு ” என்று அர்ஷின் அறைக்குள் தான் அவன் அனுமதி இல்லாமல் வந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள் .

“அட என்ன வினோ இது இதுக்கெல்லாம் சாரி கேட்டுட்டு, இது உன் ஆபீஸ் நீ எப்போ வேணாம் வரலாம் ” என்றவன் “ஆமா  உன் பிரெண்ட்  யாரோ இங்க இருக்கான்னு சொன்னியே யாரு அது…” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்க…

“ஏய் வினோ நீ வரேன்னு எனக்கு ஒரு போன் பண்ணி இருந்தா நானே வந்திருப்பேனே… நீ எதுக்கு இவ்ளோ தூரம் வர.. “என்று வினோவிடம் வந்து நிலானி.

“சரி வா டி” என்று வினோவை கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவள் “சார் அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கார். நம்ம வெளியே போய்  பேசலாம் வா..” என்று வினோவை வெளியே அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தாள் .

அர்ஷும் அவனுக்கு பிளிக்ட் லேட்டாகிவிடும் என்பதால். நிலானி  வினோவை அவசர படுத்துவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

“ஏய் இரு டி நான் இவ்ளோ தூரம் வந்ததே வந்தேன். ஒரு விஷயத்தை கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ” என்று நிலானியை பிடித்து தடுத்தாள் வினோ .

“அய்யய்யோ இது நடக்கக்கூடாதுனு பயந்தானோ அது நடந்திருக்கு போலையே … ” என்று நிலானி பதற..

நிலானியின் பதட்டமான முகத்தை கவனித்த அர்ஷ் “என்ன ஆச்சு இவளுக்கு வினோவை பார்த்து ஏன் இவ்ளோ பதட்டமாகுறா.. ” என்று யோசித்தான்.

நிலானி வினோவை பார்த்து பதட்ட பட காரணம் இருக்கிறதே..

வினோவிடம் தான் அன்று ஒரு நாள் அர்ஷின் கேபினில் இருக்கும்போது தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லி தன் தோழி இடம் பேசினாலே.. அந்த தோழி வேறு யாரும் இல்லை வினோ தான். அன்று இருவரும் மாலை சந்திப்பதாக இருக்க.. நிலானியின் அப்பா அவளுக்கு போன் செய்த்து சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பி வர சொல்ல நிலானி அன்று வினோவிடம் கரணம் சொல்லிவிட்டு இனொரு நாள் இருவரும் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டாள் .

அதன் பின் வினோவும் பிஸி ஆகிவிட.. இன்று நிலானியை சந்தித்தே ஆகா வேண்டும் , அவளிடம் இது தன்னுடைய மாமா ஆபீஸ் தான் என்று சர்ப்ரைஸாக சொல்ல தான் வினோ இங்கு வந்தாள் .

இப்பொது வினோ வந்ததும். தான் அர்ஷ்ஷிடம் பொய் சொன்னது தெரிந்துவிடுமோ என்று பயந்தவள் . அவளை பேசவிடாமல் அங்கிருந்து வெளியே இழுத்துச்செல்ல முயல…

“அர்ஷ் அண்ணா உங்ககிட்டே ஒன்னு கேட்கணும். இது நம்ம மூணு பேருக்கு மட்டும் தெரியுற விஷயம் யாருகிட்டேயும் நீங்க சொல்ல கூடாது சரியா ?” என்றாள்  வினோ.

“நான் கண்டிப்பா யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் . ஏன் தெரியுமா.. ஏன்னா நீ இன்னும் விஷயத்தையே சொல்லலையே .. அப்பறோம் எப்படி நான் வெளிய சொல்வேன் ” என்று அர்ஷ் சிரிக்க..

“ஐயோ.. நான் ஒரு லூசு.. .விஷயத்தை சொல்லாம எப்படி பேசுறேன் பாருங்க…” என்று நடிகை ஊர்வசி போல பேசினாள் .

“சரியா சொல்லிட்டே  வினோ நீ… “என்று அர்ஷ் சிரிக்க…

அவனை முறைத்தவள் “அண்ணா இவ  என்னோட பிரெண்ட்  நிலானி. நானும் இவளும் காலேஜ் மெட்ஸ் … இவ  இங்க வேலை பாக்குற விஷயம் நான் ஊருக்கு வந்த பிறகு இவ  கூட பேசும்போது தான் தெரிஞ்சுது. அதான் வந்ததே வந்தோம் உங்க கிட்டே ஒரு விஷயத்தை பேசி தெரிஞ்சுக்கலாம் ” என்றாள்  வினோ.

“நிலானி உன்னோட பிரெண்டுன்னு  எனக்கு முன்னாடியே தெரியாம போயிருச்சே.. தெரிஞ்சிருந்தா என் நிலா எனக்கு எப்பவோ கிடைச்சிருப்பாளே … ” என்று ஆதங்கப்பட்ட  அர்ஷ்

“என்ன விஷயம் ம்மா… ” என்று அவளையும், நிலானியையும் பார்த்தான்.

“அண்ணா அது வந்து… ” என்று வினோ ஆரம்பிக்க…

“ஏய் அவருக்கு பிலைட்டுக்கு  டைம் ஆச்சு.. நீ பேசாம வா எதுவா இருந்தாலும் இன்னொரு நாள் பேசிக்கலாம் ” என்று துபாய் செல்கிறானே  என்று ஏக்கப்பட்ட நிலானி  இப்பொது அர்ஷிற்கு உண்மை தெரிந்தாள்  தன்னை என்ன நினைப்பானோ என்று நினைத்து அவன் இப்பொதே  இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எண்ணினாள்.

“எனக்கு எந்த அவசரமும் இல்ல வினோ.. பிலைட்டுக்கு இன்னும் டைம் நிறைய இருக்கு.. நீ விஷயம் என்னனு சொல்லு.. உன் பிரென்ட் பதறுறதை பார்த்தா ஏதோ விஷயம் பெருசா இருக்கும் போலையே … “என்றான் நிலானியை பார்த்துக்கொண்டே..

தான் வசமாக மாட்டிக்கொண்டோமோ .. என்று பதட்டத்தில் தன் கைகளை நிலானி பிசைந்து கொண்டு இருக்க…

“ஆமா ண்ணா  பெரிய விஷயம்னு தான் நினைக்குறேன்” என்று வினோவும் நிலானியை பார்த்தவள். அவள் எதுவும் சொல்லாதே என்று கண்களால் ஜாடை செய்வதை அலட்சியம் செய்யாமல்.

“அர்ஷ் அண்ணா நிலானியை யாரோ ஒரு மெண்டல் உருகி உருகி காதலிக்குறான் .அதுவும் உங்க ஆஃபீசில” என்றாள் .

“மென்டலா !! அது யாரு!! இந்த ஆஃபீஸ்ல  நிலானியை என்னை தவிர வேற யாரு உருகி உருகி லவ் பண்ண முடியும் ” என்று யோசித்தவனுக்கு அந்த மெண்டல் தான் என்று சற்று தாமதமாக  தான் அவனுக்கு புரிந்தது வினோ சொன்ன அந்த மெண்டல் தான் தான் என்று.

அடுத்த நொடி அவன் நிலானியை பார்க்க…

அவளோ மிகவும் சங்கடமான ஒரு சூழ்நிலையில் தான் மாட்டிகொண்டோமே  என்று அவனை பார்க்க முடியாமல் திரும்பிக்கொண்டவள்.

“என்ன டி அந்த பக்கம் திருப்பிட்ட.. உன்னை காதலிக்குற  அந்த மெண்டல் யாருன்னு அண்ணாகிட்டே சொல்லு… ” என்று நிலானியின் முகத்தை  பிடித்து அர்ஷை பார்க்கும்படி திருப்பினாள் .

அவனோ நிலானியை ஒரு வித எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

ENNAI 2-19

“ஏய் வினோ சும்மா இருக்க மாட்டியா நீ .. முதல்ல வா நீ வெளிய போலாம் . இதை பத்தி எல்லாம் இவர்கிட்டே பேச வேணாம். ” என்று வினோவின் கையை பிடித்து இழுத்தாள்.

“ஏன் பேச கூடாது.. இல்ல ஏன் பேசக்கூடாதுன்னு கேக்குறேன். இந்த ஆபீஸ் இப்போ என்னோட கண்ட்ரோல்ல  இருக்கு… எனக்கு இங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சாகணும்” என்றவன்.

“நீ சொல்லு ம்மா… அந்த மெண்டல் யாரு? அவனை பத்தி உனக்கு என்ன தெரியணும் ” என்றான் அர்ஷ் நிலானியை முறைத்துக்கொண்டே .

“ஆஹ்… அப்படி கேளுங்க அண்ணா… இவளை ஒரு மெண்டல் உருகி உருகி லவ் பண்ணிட்டு  இருக்குறை விஷயம் இவளுக்கும் தெரியும். அப்போ இவ என்ன செய்திருக்கணும் … ” என்று வினோ கேள்வி கேட்க…

“வினோ!! வேணாம் டி..ப்ளீஸ்… ” என்று நிலானி வினோவின் வாயை தன் கையை கொண்டு மூடி அவளை பேசவிடாமல் செய்தாள் .

“நிலானி என்ன இது அவங்க பேசும்போது இப்படி பிஹேவ் பண்றிங்க… எனக்கு உங்க நடவடிக்கை மேல சந்தேகமா இருக்கு.. நீங்க முதல்ல வினோவை பேசவிடுங்க… அந்த மெண்டலை  பத்தி நான் தெரிஞ்சுக்கணும் ” என்று அவளை அதட்டினான் .

நிலானி கையை தன் வாயில் இருந்து எடுத்துவிட்டு வினோ அவள் கைகளை நேரத்து பிடித்துக்கொண்டவள் .

“அண்ணா இவளுக்கு கொஞ்ச நாள் முன்ன மேரேஜ் நின்னு போயிருச்சு அந்த விஷயம் உங்களுக்கு எப்படியும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்” என்றவள் .

நிலானியை பார்க்க..

அவளோ தயக்கத்தோடு அர்ஷை பார்த்துக்கொண்டு இருந்தாள் .

“அடிப்பாவி!! அப்போ உனக்கு கல்யாணம் ஆகலையா!! அப்போ என்கிட்டே சொன்னது … நீ மெட்டி போட்டிருக்கிறது எல்லாம் பொய்யா… ” என்று நினைத்தவன் நிலானியின்  காலில் இருந்த மெட்டியை பார்க்க..

நிலானி பூமிக்குள் தோண்டி தலையை புதைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அர்ஷை எதிர் கொள்ள முடியாமல்  .

அர்ஷ் நிலானியை பாதத்தை கவனிப்பதை கண்டா வினோ.  “ம்ம்ம்.. இதை கேளுங்க அண்ணா… இவளுக்கு கல்யாணம் நினைத்தை மறைச்சு. அவ அக்கா வீட்டுக்காரர் கூட சந்தோசமா வாழுறதா  அந்த மெண்டல் பையன்கிட்டே பொய்யை சொல்லிட்டு . அந்த மெண்டல் இவ  சொன்னதை நம்பனும்னு காலுல மெட்டியை மாட்டிகிட்டு சுத்துறா… அவன் பாவம் டி.. அவனை ரொம்ப கஷ்டப்படுத்தாத… பேசாம உண்மையை சொல்லுன்னு சொன்னா… இவ சொல்லாம அந்த மெண்டலை  அலைய விட்றா அண்ணா… ” என்றவள் நிலானியை பிடித்துக்கொண்டே..

“நீங்களே சொல்லுங்க அந்த மெண்டல் பாவமா? இல்லையா ? ” என்றாள்  அவனிடமே..

“ஆமா  வினோ.. அந்த மெண்டல் நிஜமாவே பாவம் தான். அவனுக்குன்னு ஒரு சொந்தம் வேணும்னு முதல் முதலா அவன் வாழ்க்கையில் ஆசைப்பட்ட விஷயத்தை அவனுக்கு தெரியாம மறைச்சு … அவனை இவ்ளோ நாள் ஏமாத்தி இருக்காங்க உன்னோட  பிரென்ட். அது  தெரியாம அவன் சரியா சாப்பிடாம.. தூங்காம..எவ்ளோ கஷ்டப்படறான் தெரியுமா.. அந்த மெண்டல் பாவம் தான் வினோ ” என்று வலி நிறைந்த முகத்தோடு நிலானியை பார்த்தான்.

அவள் தன்னை இப்படி ஏமாற்றிவிட்டாளே  என்று எண்ணி வந்த மன  வலி அது.

“அண்ணா நீங்க சொல்றது எல்லாம் பார்த்தா அந்த மெண்டல் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போலையே .. ” என்று ஆரவமானவள்.

“சொல்லுங்க அண்ணா அந்த மெண்டல் யாருனு தயவு செய்து சொல்லுங்க… எனக்கு யாருனு தெரியணும் . நானே போய்  அவன்கிட்டே இவளுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்லி அவனுக்கு இந்த ஹாப்பியான விஷயத்தை சொல்ல போறேன் ” என்றாள் .

“நீ தான் அந்த மெண்டல்க்கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியே ம்மா… ஆனா அந்த மெண்டலுக்கு இது ஹாப்பியான விஷயமா இப்போ தெரியல.. அவனுக்கு அவன் உருகி உருகி காதலிச்ச பொண்ணு இப்படி ஏமாத்தினத்தை நினைச்சு வருத்தமா தான் இருக்கு ” என்றான் நிலானியை பார்த்துக்கொண்டே.

 “நான் எப்போ சொன்னேன்… ” என்று யோசித்த வினோவுக்கு அந்த மெண்டல் வேறு யாரும் இல்லை அது அர்ஷ் தான் என்று புரிந்ததும் நிலானியை பார்க்க..

அவளோ அர்ஷ் பேசிய வார்த்தைகளை கேட்டு அவன் வலியை  உணர்ந்தவளாக கண்களில் கண்ணீரோடு அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

அர்ஷும் ,நிலானியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் நின்று இருக்க…

“ம்ஹும்.. எப்படியோ விஷயம் தெரிஞ்சிருச்சு. இனி இவங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினா சரியா இருக்கும் ” என்று நினைத்தவள்.

“நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்னு சொல்வாங்க… நான் வந்த வேலை முடிஞ்சுது ” என்று சொன்னவள் “நாராயண!! நாராயண!! ” என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறி இருந்தாள்

 வினோவை மனதிற்குள் அர்ச்சித்துக்கொண்டே அர்ஷை ஒருவித தயக்கத்தோடு திருப்பி பார்த்தாள்  நிலானி.

எப்போதும் அவள் பார்வைக்காக ஏங்கும்  அர்ஷ் இன்று நிலானியின் பார்வை அவன் மீது விழுந்ததும் சட்டென தன்  முகத்தை திருப்பிக்கொண்டான்.

“ஐயோ !…  என் பேபிமாவுக்கு கோபம் வந்திருச்சு போலையே . இப்போ என்ன சொல்லி நான் இவரை சமளிக்குறது ” என்று யோசனையோடு அவனை நெருங்கியவள்.

“ச .. சார்… ” என்று அழைத்தாள்  தயக்கமாக.

அர்ஷ் நிலானி அழைத்தும் காதில் வாங்காமல் அபப்டியே நின்று இருந்தவன்.

“என்ன சொல்ல வரீங்க மிச்செஸ்… சாரி மிஸ் நிலானி. இந்த மெண்டல் என்ன சொன்னாலும் நம்பிருவான். இவன் ஒரு கேனையன் எவ்ளோ நாளைக்கு இவனை ஏமாத்த முடியுமோ அவ்ளோ ஏமாத்தலாம்னு கணக்கு போட்டு என்கிட்டே பொய் சொல்லிட்டீங்க .. நீங்க நினைச்சதையும் இவ்ளோ நாள் நடத்திக்காட்டி இருக்கீங்க.. இனியும் நான் நீங்க சொல்ற எதையும் நம்புறதா இல்ல… ” என்றவன் நிலானியை ஒரு  முறை நிமிர்ந்து பார்த்தவன் .

“நான் கிளம்பறேன் ” என்று விறுவிறுவென அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக…

“சார் ஒரு நிமிஷம் நில்லுங்க.. நான் சொல்றதை கேட்டுட்டு போங்க.. ” என்று ஓடி வந்து அவனை வெளியே செல்லவிடாமல் வழி மறித்து நின்றாள் நிலானி.

“நான் தான் இனிமேல் நீங்க சொல்ற எதையுமே நம்புறதா இல்லேன்னு சொன்னேனே.. பார்ப்போம் ஏன் வீணா உங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க.. வழியை விடுங்க முதல்ல… ” என்றான்.

“சார் நீங்க எங்க வேணா போங்க நான் உங்களை தடுக்கல .. ஆனா நான் என்ன சொல்ல வரேன்ன்னு மட்டும் கேட்டுட்டு போங்க ” என்றவள்.

“எனக்கு கல்யாணம் நினைந்து உங்ககிட்டே தான் முதல்ல சொல்லணும்னு வந்தேன். ஆனா நீங்க அந்த சமயத்துல என்னக்கு கல்யாணம் அங்கிருச்சுன்னு நினைச்சு சோகமா இருந்தது.. என் கால்ல  இருந்த மெட்டியை பார்த்து எனக்கு கல்யாணம் நடந்திருச்சுனு நினைச்சு பீல் பண்ணினதை எல்லாம் பார்த்த்ட்ட அப்போ . எனக்காக நான் கிடைக்கலயின்னு நீங்க வருத்தப்பட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு.. சரி கொஞ்ச நாள் எனக்கு கல்யாணம் ஆனது மாதிரியே  மெயின்டைன்  பண்ணுவோம். அப்பறோம் நேரம் வர அப்போ உண்மையை சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா நானா எனக்கு கல்யாணம் ஆகலயின்னு சொல்றதுக்குள்ள வினோ வந்து மொத்தத்தையும் போட்டு ஒடைச்சிட்டா… ” என்று தலையை கவிழ்ந்த படி தன் மனதில் இருபப்தை பேசியவள்

“உங்களுக்கு எப்படி என்னை பிடிக்குமோ..அதே போல எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் சார்.. எனக்காக ஏங்குறது.. என்னை எப்பவும் வம்பிழுத்துகிட்டே இருக்குறது. எனக்கு ஏதாவது கஷடம்னா நீங்க  துடிச்சு போறது இதை எல்லாம் பாக்குற அப்போ அப்பவே நான் உங்களை விரும்புறதை  உங்க கிட்டே சொல்லணும்னு நினைச்சிருக்கேன். ஆனா உங்க வசதிக்கும் , படிப்புக்கும், அந்தஸ்துக்கும் நான் பொருத்தமானவளா இருப்பேனான்னு ஒரு சந்தேகம் எனக்குள்ள இருந்ததே இருக்கு.. அதான் என் மனசுல உள்ளதை உங்ககிட்டே சொல்லல.. என்னை மன்னிச்சிருங்க சார் ” என்று அர்ஷை கண்களில் தேங்கிய கண்ணீரோடு பார்த்தாள்.

“அவ்ளோ தானே .. நீங்க நினைச்சதை எல்லாம் பேசி முடிச்சுட்டீங்க தானே.. அப்போ நான் போகலாமா?” என்று இதுவரை நிலானி பேசியது எதுவும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல அர்ஷ் நடந்து கொள்ள…

தான் இவ்வ்ளவு பேசியும் அர்ஷ் துளியும் தன் மேல் இருந்த கோபத்தை மறந்து இறங்கி வராததை கண்டு வருந்தியவள் “இல்ல சார் ..” என்று தலையை ஆட்டியவள் அவனுக்கு வழியை விட்டு விலகி நிற்க…

“ஓகே ” என்றவன் திரும்பி விறு விறுவென்று அவன் அறையை விட்டு வெளியேரி இருந்தான்.

நிலானிக்கோ அர்ஷின் இந்த ஒதுக்கம் அதிக வலியை தந்தது. அதை உணர்ந்தவளுக்கு தான் விளையாட்டாக செய்த செயல் அர்ஷை எவ்வ்ளவு பாதித்திருக்கும் என்று உணர்நதவள் தனக்கு இது தேவை தான் என்று தன் மனதை கல்லாக்கிக்கொண்டு அர்ஷின் அறையை விட்டு வெளியேறினாள் .

இங்கே துபாயில் …

“சொல்லு டா இது தான் உன்னோட வேலையா.. உன்னை நம்பி காதலிக்கருங் பொண்ணுங்களை எல்லாம் நம்ப வெச்சு அவங்களை உன்கூட கூட்டிட்டு வந்து அவங்க வாழ்க்கையை பணையம் வெச்சு காசு சம்பாரிக்குறியா..  உன்னை நம்பி தன்னோட சொந்த பந்தங்கள் , குடும்பமனு எல்லாரையும் விட்டுட்டு வந்தவங்க நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சு பாத்திரூபியா நீ… ” என்று தரையில் கை  கால்கள் கட்டப்பட்டு விழுந்து கிடந்த செல்வாவின் நெஞ்சில் தன் ஷூ  காலை வைத்து அழுத்திக்கொண்டே கேட்டான் விஜய்.

“சார்… வலிக்குது.. ஆ… அம்மா…. ” என்று அலறிய செல்வா.

“சார் யார் நீங்க நான் இந்த வேலை செய்றது யாருக்குமே தெரியாதே.. உங்களுக்கு.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது.. ” என்றான் செல்வா வழியில் துடித்துக்கொண்டே..

“ம்ம்… எனக்கு எப்படி தெரியம்னு தானே கேட்ட.. உனக்கு இனியா நியாபகம் இருக்கா.. “என்றான் விஜய் கண்கள் சிவக்க..

“இனியா… !.. எந்த இனியா “என்று யோசித்தவனுக்கு.

“ஓ.. அந்த குத்துல இருந்துச்சே.. அந்த சின்னப்பொண்ணா …அங்க மரத்தடியில இட்லி விக்குமே  மரகதம் அதோட பேத்தி தானே.. எனக்கு நல்லாவே தெரியுமே… அத்த எப்படி மறக்க முடியும். நான் வித்த பீஸுலையே ஒர்த் பீஸ் அந்த இனியா தானே… எந்த இடீத்தையும் தூக்கிட்டு வந்து இங்க வித்தா மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு ஒரு 50000 துல இருந்து, 1 லட்சம் வரைக்கும் தான் கிடைக்கும்” என்றவன் .

தரையில் படுத்திருந்தவன்  விஜய்யை ஏளனமாக  பார்ததுவிட்டு.

“அந்த ஐட்டத்துக்கு  ஏவ்லோ காசு கொடுத்து வாங்குனாங்கன்னு தெரியுமா… கிட்டத்தட்ட 25 லட்சம் நான் வாங்கிட்டேன் . அத்த எப்படி பாஸ் நான் மறக்க போறேன்.. “என்று தெனாவெட்டாக பேசினான் செல்வா.

அவன் இனியாவை ஐட்டம்  என்று சொன்னதும் விஜய்க்கு கோபம் தலைக்கு ஏறியது . அதே கோபத்தோடு “யாரை பத்தி என்ன வார்த்தை டா சொல்லுற.. என் இனியா உனக்கு ஐட்டமா … அவளை பத்தி உனக்கு என்ன டா தெரியும். அவ சின்ன பொண்ணு டா.. அவளுக்கு எதுவும் தெரியாது.. அப்பாவிப்பொண்ணு.. இந்த இடத்துல அவ இங்கே இருந்திருந்தாலும். நான் உன்னை அடிக்குறதை பார்த்துட்டு ஓடி வந்து  உன்னை அடிக்க வேண்டாம்னு உனக்காக வருத்தப்படுவா டா…. அப்படிப்பட்டவளை உனக்கு ஏமாத்த மனசு வந்துச்சு…” என்று மீண்டும் செல்வத்தின் மார்பில் காலை வைத்து அழுத்தியவன் .

“குமார் இவரை ஹியூமன் டிராபிக் நடக்குற இடத்துக்கு பார்ஸல் பண்ணிடு… இவனை நான் எங்கயும் இதுக்கு அப்பறோம் பார்க்கவே கூடாது . இவனோட உடம்புல இருக்குற பார்ட்ஸ் எல்லாம் உடல் உறுப்பு தானத்தில் அவர்களுக்கு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருப்பாங்க இல்ல… அவங்களுக்கு போய் சேரும்படி பார்த்துக்கோ.. அப்படி தவிக்குறவங்ககிட்டே இஇருந்து எதையும் வாங்க வேண்டாம் என்று கூறிவிட்டு திரும்பி செல்ல…

“விஜய் .. விஜய் சார் என்னை மன்னிச்சிருங்க… நான் இனிமேல் இந்த மாதிரி காரியத்தை செய்ய மாட்டேன் ” என்று விஜய்யின் காலை பிடித்து கெஞ்சினான் செல்வா.

“ம்ஹும்.. அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல.. விஜய் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தான்.

அவன் அடுத்த டார்கெட்டை நோக்கி

ENNAI 2-20

“என்ன இனியா இப்போ எப்படி இருக்கு ” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் வீணா.

அவரை பார்த்தவளுக்கு வீணா  அணிந்திருந்த உடையை வைத்து தனக்கு   மருத்துவம் பார்த்தவராக இருக்கும் என்று வீணாவை நினைத்துக்கொண்டாள்.

வீணா  வரவும் அவர் பின்னாலேயே ஜியாவும் வந்தார். “என்ன மருமகளே ! இப்போ எப்படி இருக்கு உடம்பு. உன் புருஷன் அதான் என் பிள்ளை விஜய் வேற அவன் வர வரைக்கும் உன்னை கண்ணும் கருத்துமா கிட்டே இருந்து பார்த்துக்க சொல்லி இருக்கான். அவன் எங்களுக்கு ஆர்டர் போட்டுட்டு போற அளவுக்கு உன்னை அவ்ளோ பிடிக்குமா அவனுக்கு  ” என்று வந்து அவள் அருகில் நின்றவர் தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்க்க துவங்கினார்.

ஜியாவையும் டாக்டர் என்று அடையாளம் கண்டுகொண்ட இனியா “என்ன மருமகளா! நானா! .. விஜய் சாரை  பத்தி வேற பேசுறாங்க . அவரை இவங்க மகன்னு சொல்ராங்க . அப்போ விஜய் சாரோட அப்பாவுக்கு ரெண்டு மனைவிங்களா!.. அது எப்படி நான் அங்க போனதுல இருந்து இவங்களை விஜய் சார் வீட்லையே மாம் பார்க்கலையே ” என்று யோசித்தபடி திரும்பி ஜியாவை பார்த்தவள் “ஒரு வேலை ரெண்டு பொண்டாட்டிங்களையும் பக்கத்துல வெச்சு சமாளிக்க முடியலையின்னு தனித்  தனியா வீடு பார்த்து வெச்சுட்டாரோ.. ” என்று யோசித்தாள் .

“என்ன இனியா ரொம்ப யோசிக்குற.. இவங்க யாருன்னு உனக்கு தெரியாதில்ல இவங்க தான் விஜய் மாமாவோட  சித்தி… ஜியா, இவங்க விஜய் மாமாவோட அத்தை வீணா .  ” என்றாள்  தாமரை.

அவளுக்கு இப்பொது இனியாவின் மீது கோபமோ , வெறுப்போ சுத்தமாக இல்லை. மரகதம் சொன்னதை வைத்து இனியா எவ்வளவு கஷ்டத்தை கடந்து வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட பின்பும், அவளை எந்த சூழ்நிலையில் விஜய் இந்தியா  அழைத்து வந்ததையும் தெரிந்ததால் இருந்து தாமரையின் மனம் மாறி இருந்தது.

தவிர இப்பொது அவள் விஜய்யின் மனைவி , விஜய்யும் இனியாவை முழுமனதோடு தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு இன்னமும் தான் விஜய் மீது உரிமை கொண்டாடுவது சரியாக இருக்காது என்று தன் மனதை  மாற்றிக்கொண்டால் . இனியாவையும் ஹாஸ்பிடலில்  வைத்து தாமரை தான் முழு நேரமும் கவனித்துக்கொள்கிறாள்.

“சரிங்க அக்கா ” என்ற இனியா .”ஆமா  விஜய் சார் அப்பாவோட ரெண்டாவது மனைவி அவருக்கு சித்தி முறை தானே வேணும் ” என்று நினைத்துக்  கொண்டாள்

“என்ன டி நீ … வந்ததும் வரத்துமா இனியாவை அதிகாரம் பண்ணுற.. இந்த அதிகாரத்தை எல்லாம் என்னோட அண்ணன் கிட்டே மட்டும் வெச்சுக்கோ சரியா ” என்று ஜியாவிடம் வம்பு பேசினார் வீணா.

“போடி.. என் புருஷனை எனக்கு எப்படி வெச்சுக்கணும்னு தெரியும் . வந்துட்டா என் புருஷனை பத்தி பேச.. அவன் எப்பவும் என் கைக்குள்ள அதான் தெரிஞ்சுக்கோ.. ” என்று ஜியாவும் வம்புக்கு வீம்பாக பேச..

“அடேங்கப்பா இந்த வயசுலயே இந்த அம்மா விஜய் சார் அப்பாவை கைக்குள்ள வெச்சிருக்காமா  அதை எப்படி பெருமையா பேசுறாங்க பாரு ” என்று ஜியாவை மேலும்  கீழும் அளந்தவள் . “இருந்தாலும் விஜய் சார் அம்மாவை விட இவங்க கொஞ்சம் அழகுல கம்மி தான். அவங்களை விட்டுட்டு இவருக்கு எப்படி இந்த அம்மாவோட கல்யாணம் ஆச்சு ” என்று யோசித்தவள்.

” ஒரு பழமொழி சொல்வாங்களே… கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒன்னை வெச்சுப்பாங்கன்னு . அது விஜய் சார் அப்பா விசயத்துல சரியா போயிருச்சு ” என்று நினைத்துக்கொண்டான் .

“என்னம்மா இனியா நாங்க எல்லாரும் பேசிட்டு இருக்கோம் நீ எதுவுமே பேச மாட்டேங்குற ” என்றாள் ஜியா அவள் கண்ணடை முழுவதும் அவிழ்த்துவிட்டு

” நீ வந்ததுல இருந்து அவளை மிரட்டுற மாதிரியே பேசிட்டு இருந்தா அந்த பொண்ணு எப்படி பேசும் . நீ நகரு நான் செக் பண்றேன் ” என்று ஜியாவை இழுத்து பின்னால்  தள்ளிய வீணா இனியாவிற்கு தலையில் போட்டிருந்த தையல் எப்படி இருக்கிறது என்று சரி பார்த்தாள் ,

இந்த பக்கம் ஜியா இனியாவின் உடல் நிலையையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியமும் எப்படி இருக்கிறது என்று சரி பார்த்தார்.

“பேபி நார்மலா இருக்கு. நீ தான் ரொம்ப வீக்கா இருக்க.. இப்போ உன் வயித்துல இருக்குற குழந்தைக்கும் சேர்த்து நீ நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கனும். உனக்கு கை  சரியாக எப்படியும் 2, 3 மாசத்துக்கு மேல ஆகும் . அதுவரை நீ கொஞ்சம் கவனமா இருக்கனும் சரியா ” என்றார் ஜியா அதையும் அதட்டலாக.

அவர் சொன்னதை கேட்டு இனியாவும் சிறு பிள்ளை போல் தலையை ஆட்டி வைத்தாள் .

“தாமரை என்ன நீ மட்டும் தனியா இருக்க .. எங்க வம்சியை காணோம். இங்க வந்ததில் இருந்து பாக்குறேன் உன் புருஷன் உன் பின்னாடியே குட்டி போட்ட நாய் மாதிரி சுத்திட்டு இருக்கான் ” என்றார் வீணா .

“ஆமா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம நாய் மாதிரி என் பின்னாலேயே சுத்திட்டு இருக்கான்.. இவன் பண்ணுறதை எல்லாம் என்னால் பொருத்துக்கவே முடியலை. இதுக்கு முன்னாடி ஏதாவது செய்தாகணும் ” என்று தாமரை நினைத்துக்கொண்டு இருக்க ..

“என்ன அத்தை யாரோ என்னை நாயின்னு சொன்ன மாதிரி இருந்துது.. ” என்று அங்கு வந்தான் வம்சி .

அவன் குரல் கேட்டதும் “கடவுளே! வந்து தொலைஞ்சிட்டான். நேத்தே நான் இவன்கிட்டே தெளிவா சொல்லிட்டேன். இனிமேல் ஹாஸ்பிடல் வரவே கூடாதுனு  சொல்லி தானே அனுப்பினேன். அவனை அடிச்சும் திருந்த மாட்டேங்குறானே.. ” என்று கோபத்தோடு திரும்பி வம்சியை பார்த்தாள்  தாமரை .

அவனை பார்த்ததும் அதிர்ந்தே போனாள் . அவளை போல தான் மற்றவர்களும் வம்சியை பார்த்து அதிர்ந்தனர் .

“டேய் வம்சி! என்ன டா இது உன் கன்னம் இப்படி வீங்கிருக்கு என்ன ஆச்சு?” என்று வீணா வம்சியிடம் செல்ல…

ஜியாவும் அவன் வீங்கிய கன்னத்தை பார்த்து அதிர்ந்தார்.

“என்ன டா என்ன ஆச்சு ” என்று அவன் கன்னத்தை ஆராய்ந்தார் வீணா.

“ஷ்!! அத்தை எரியுது தொடாத ” என்றான்.

“என்ன டா எரியுதா! என்ன டா ஆச்சு வா.. நாம போய் உனக்கு என்ன  ஆச்சுன்னு செக் பண்ணலாம்”  என்று அவன் கையை பிடித்து அழைத்தார் வீணா.

” நான் செக் பண்ணி மருந்து வாங்கிட்டு தான் வந்திருக்கேன் . இங்க பாருங்க ” என்று மாத்திரையையும், டொக்டர் கொடுத்த சீட்டையும் நீட்டினான்.

அதை வாங்கி பார்த்த ஜியா “என்ன டா இது எங்கையாவது போய்  விழுந்துட்டியா.. வீக்கம் குறைய, வலி தெரியாம இருக்க மருந்து கொடுத்திருக்காங்க ” என்றார் .

“ஆமா அத்தை நேத்து பாத்ரூமில் வழுக்கிருச்சு.. விழாம இருக்க முயற்சி பண்ணினேன். ஆனா முடியல ” என்றவன் தாமரையை பார்த்தான்.

அவன் பார்வை  சென்ற திசையை மற்றவர்கள்  கவனிக்கவில்லை. ஆனால்  தாமரையும், அவளோடு சேர்ந்து வம்சியை இனியாவும் கவனித்துவிட்டாள்.

தாமரையை இனியா திரும்பி பார்க்க.. தாமரை வம்சியை பதட்டமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்ன டா இது இந்த வயசுல போய் கீழே விழுந்துட்டேன் . கவனிக்கலன்னு சொல்லிட்டு இருக்க..”என்று வம்சியை கன்னத்தை வருடியவர்.

தாமரையிடம் திரும்பி “கொஞ்சம் இவனை கவனிச்சுக்க ம்மா… எப்பவும் இப்படி கவனம் இல்லாம இருக்கான். இவனை வெச்சுட்டு என்ன செய்றது” என்று வருத்தம் தெரிவித்தவர் .

“என்னை கவனிக்க அவளுக்கு எங்க நேரம் இருக்கு…” என்று வம்சி பெருமூச்சு விட..

“அவ்ளோ தான நான் நல்லா கவனிச்சிக்கிறேன்” என்றவள்.

“அத்தை இனியாவுக்கு எப்படி இருக்கு… ” என்று பேச்சை திசை திருப்பினாள் .

“அதான் சொன்னேனே தாமரை உடம்பு வீக்கா இருக்கு.. நல்ல சத்துள்ள ஆகாரமா  சாப்பிடணும் . அதே போல கை அடிபட்டிருக்குள்ள அது சரியாக கொஞ்சம் மாசம் ஆகும் ” என்றார் ஜியா.

“அப்பறோம் நாளைக்கு இனியாவோட ஷோல்டரை ஒரு முறை ஸ்கேன் பண்ணி பாத்திருவோம் . அதுல எந்த பிரச்னையும் இல்லேன்னா ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் ” என்றார்.

“சரி சித்தி நாளை நீ அண்ணிக்கு  செக் பண்ணிட்டு சொல்லு ” என்றான்.

வீணாவும், ஜியாவும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட வம்சி தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்து தன் வேலையை பார்க்க  ஆரம்பித்தான்.

தாமரை நின்ற இடத்திலேயே அவனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவள் சென்று இனியாவிடம் போய்  அவளுக்கு எதுவும் வேண்டுமா எனக்கேட்டு அதை செய்து கொடுத்தாள்.

“ஒய் பொண்டாட்டி நேத்து உனக்கு முத்தம் கொடுத்தேன்னு என் கன்னத்தை பழுக்க வெச்சிட்டு உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி உன் வேலையை பார்த்துட்டு இருக்கியா” என்று வேலை செய்து கொண்டு இருந்தாலும் வம்சியின் மனம் முழுவதும் தாமரையை பற்றிய எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருந்தது.

இங்கே தாமரையோ “ஐயோ !! பாவம் அம்மு அவனை நான் ரொம்ப வேகமா அறைச்சுட்டேன் போல .. கன்னம் இப்படி வீங்கிருக்கு அவனுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் போல… ” என்று யோசித்துக்கொண்டு இருந்தவள்.

“ஆமா வீங்கட்டும் வீங்கட்டும் எனக்கு விருப்பம் இல்லாம அவன் முத்தம் கொடுத்தான் இல்ல.. அதுக்கு அவன் வாயை உடைச்சிருக்கணும்., பாவமேன்னு ஒரு அறையோட விட்டுட்டேன் ” என்று அவள் மனது தாமரைக்கு வம்சியின் மீது சாப்ட்  கார்னெர் ஏற்பட… அதை அவள் மனம் ஒத்துக்கொள்ள விடாமல் அவளை தடுத்தது.

அடுத்த நாள் காலை வழக்கம் போல ஆபீஸ் கிளம்பிக்கொண்டு இருந்தாள்  நிலானி . எப்போதும் ஆபீஸ் கிளம்புபவளுக்கு ஒரு சந்தோசம் குதூகலம் இருக்கும். ஆனால்  இன்று வேளைக்கு செல்லவே அவளுக்கு மனம் வரவில்லை. அர்ஷ் தான் ஆபீசில் இல்லையே அவன் கிளம்பி துபாய் சென்றுவிட இங்கே நிலானிக்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது.

அர்ஷை சமாதானம் செய்ய வாய்ப்பே கொடுக்காமல் சென்றுவிட்டான்.

“ஏய் நிலானி நிலானி… இங்க வா டி.. உன்னை பார்க்க யார் வந்திருக்கான்னு வந்து பாரு ” என்று அவள் அம்மா நித்யா அழைத்தார்.

“இரும்மா வரேன்.. ” என்று அலுத்துக்கொண்டே தலையை பின்னிக்கொண்டு தன்னை பார்க்க யார் வந்திருக்கிறார்கள் என்று வந்து பார்த்தவள் அங்கே அவள் அக்கா கணவர் ரவி வந்திருந்தார்.

“மாமா! வாங்க !.. ” என்று அவரை கண்டு சிரித்த முகமாக வந்தாள் .

ஆனால்  அவள் முகத்தில் இருந்த சிரிப்பும், சந்தோஷமும் ரவியின் முகத்தில் இல்லை.

அதை கொண்ட  நிலானியின் அப்பா நீலகேசி “என்ன ஆச்சு மாப்பிள்ளை ஏன் முகம் வாடிப்போய் இருக்கு . ஏதாவது பிரச்சனையா ?” என்றார் அக்கறையாக.

நித்யாவும் ரவி என்ன சொல்வான் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

“மாமா… அது… வந்து… ” என்று ரவி பேசத் தயங்க.

“என்ன மாப்ள என்னவோ சொல்ல வரீங்க ஆனா சொல்லாம தயங்குறீங்க. என்ன ஆச்சு சொல்லுங்க ” என்றார்.

“மாமா எனக்கும், நிலானிக்கும் கல்யாணம் வரை போய்  நின்னுபோயிருச்சு இல்ல.. என் அம்மா என் கூட பேசவே இல்ல.. சாப்பிட்டு 4 நாள் ஆகிடுச்சு. நான் நிலானியை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு எப்போ கூட்டிட்டு வரனோ அப்போ தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருக்குறாங்க மாமா.. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல… அதனால… ” என்று ரவி தயங்க.

” இதுக்கு தான் அப்போவே சொன்னேன் . நிலானியை நீங்களே கல்யாணம் செய்துக்கோங்கன்னு . நாங்க எவ்ளோ சொன்னோம் நீங்க தான் அவளை அந்த மாதிரி பாக்கல .. அது இதுன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டீங்க.. இப்பவும் ஒன்னும் கெட்டப்போகல.. நாளைக்கே நம்ம குலதெய்வம் கோவில்ல வெச்சு உங்களுக்கும் , நிலானிக்கும் கல்யாணம் வெச்சிடலாம் ” என்றார்.

“மாமா இருந்தாலும் நிலானியை ஒரு வார்த்தை கேட்கலாம் “என்று ரவி நிலானியை பார்க்க…

“அட என்ன மாப்பிள்ளை ஏற்கனவே நிலானி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி தானே எல்லா ஏற்படும் செய்தோம் . இந்த கொஞ்ச நாள்ல அது எல்லாம் மாறிடுமா . நீங்க கவலை படமா போங்க மாப்பிள்ளை . நான் கோவில் ஐயர் கிட்டே பேசி கல்யாணத்துக்கு எல்லா ஏற்படும் செய்ய சொல்றேன்” என்றார்.

ENNAI 2-21

“டேய் அவளை பிடிச்சு கட்டிவைக்க சொன்னா அவளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா?” என்று தன் கர்டஷிடம் சத்தமிட்டுக்கொண்டு இருந்தான் தேவா .

“இல்ல தல.. அந்த குட்டிக்கு மயக்கமருந்து கொடுத்து தான் இருந்தேன் . எப்படி தெரிஞ்சுது எப்போ தெளிஞ்சுதுனு எனக்கு தெரியல… நான் நம்ம இடத்துக்கு போய்ட்டு  வந்து பார்த்தேன் அந்த குட்டியை காணோம். அதான் நம்ம பசங்களை விட்டு அந்த புதுசா வந்த குட்டியை தேட சொல்லிருக்கேன். எப்படியும் பிடிச்சிட்டு வந்துருவாங்க . நீ கவலை படத்தை தல.. ” என்றான் தேவாவின் கையால் உதயா .

” நம்மகிட்டே வர குட்டிங்க ஒவ்வொண்ணும் பல ராகம் , அந்த ரகத்துக்கு ஏத்த மாதிரி சிலதுங்க ஆயிரத்துக்கும் போகும், சிலது லட்சத்துலையும் புரளும்… ஆனா இப்போ கூட்டிட்டு வந்திருக்க பொண்ணு எப்படினு உனக்கே நல்லா தெறியும். சும்மா மேக் அப் எதுவும் இல்லாம அழுக்கா  வந்த போட்டோவை பார்த்துட்டே அந்த பொண்ணை நான் நீன்னு போட்டி போட்டுட்டு ஏலம் எடுக்க அட்வான்ஸ் புக் பண்ணிட்டு இருக்கானுங்க. அப்படி இருக்க அப்போ நீ என்ன டா இவ்ளோ அசால்ட்டா இருக்க… பலகோடி விலைக்கு போற பொண்ணு டா அவ … அவளை அசால்ட்டா ஹாண்டில் பண்ணாதேன்னு சொல்லிருக்கேனா? இல்லையா? ” என்று உதையவை பார்த்தான் தேவா.

தேவா பணம்.. பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று வெறியோடு திரிபவனுக்கு கையில் கிடைத்த பொக்கிஷம் இப்படி நழுவ விட்டு இருக்கிறானே  என்ற ஆத்திரம் வர.. உதையாவிடம் கத்தியவன் . எழுந்த வந்து அவன் கன்னத்தில் ஒன்று வைத்து.

“நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது. அவ பிரெஷ் பீஸ் டா நானே அவளை பார்த்துட்டு எதுவும் பண்ணாம கண்ட்ரோலா இருக்கேன் தெரியுமா … நீ என்ன பண்ணுவியோ தெரியாது இன்னும் 1 மணி நேரத்துல அந்த பொண்ணு என் கைக்கு வந்தாகணும். ” என்றவன் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு செல்லப்போக…

“நீ பீல் பயந்த தல.. நான் அந்த குட்டியை கண்டுபிடிச்சதும் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ” என்று தன் கன்னத்தை தேய்த்துவிட்டபடி சொன்னான் உதயா.

வெளியே செல்லப்போன தேவா திரும்ப வந்தவன் உதையாவை மீண்டும் ஒரு அரை விட்டவன் “இன்னிக்கு என்ன கிழமையின்னு தெரியுமா உனக்கு ” என்றான் கோபமாக.

உதயா கன்னத்தை  தேய்த்த படி “அதை அடிக்காம கேக்கலாம்ல ப்பா … வலிக்குது ” என்றவன் “ம்ம்ம் …இன்னிக்கு வெள்ளிக்கிழமை … ” என்று சொன்னவன் அடுத்த கணம் தான் என்ன செய்தோம் என்று புரிந்தவனாக .

“சாரி தல மறந்துட்டேன் ” என்று அசடு வழிந்தவன் .

“நீ இன்னிக்கு அம்மாவை பார்க்க போகணும்ல.. ” என்றான்.

“ம்ம்ம்.. அதை எப்பவுமே நீ மறக்க கூடாது. நான் அம்மா கூட இருக்கும்போது நீயோ .. நம்ம ஆளுங்க யாருமே எனக்கு போன் பண்ண கூடாதுனு சொல்லியும் . நீ மறந்துட்டு எனக்கு கால் பன்றேன்னு சொன்னே இல்ல அதுக்கு தான் இந்த அடி .. ” என்றவன்.

“அந்த பிரெஷ் பீஸ் கைல கிடைச்சதும் ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பு போதும் ” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

தேவாவுக்கு அவன் அம்மா என்றால் கொள்ளை பிரியம் . அவருக்காக அவன் தன் உயிரை கொடுக்க சொன்னாலும் யோசிக்காமல் அடுத்த நிமிடமே தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பாசம் வைத்திருக்கிறான் அவன் அம்மாவின் மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் தேவா .  அவர் தான் அவனுக்கு எல்லாமே.. அவருக்கு தெரியாமல் .அவரிடம் கேட்காமல் தேவா எதுவுமே செய்ய மாட்டான். ஆனால்  ஒன்றை தவிர.. அது தேவா தற்போது பெண்களை ஏலம் விட்டு பணம் சம்பாரிக்கும் தொழில் செய்கிறான் என்பதே. அவன் அம்மாவை பொறுத்த வரை தேவா பல பிசினஸ்கள்  செய்கிறான் என்பது மட்டுமே..

……

நிலானியோ ரவியும், தன் தந்தையும் பேசியதை கேட்டவளுக்கு விக்கித்துப்போனது. இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு தெரியவில்லை. அதற்கு மேல் நிலானி பேச எதுவுமே இல்லை இனி அவள் வாழ்க்கை அவ்வளவு தான் .

ரவி சந்தோசமாக அவன் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல கிளம்பி இருக்க…

“நிலானி நீ உன் ஆபீஸ்க்கு போன் போட்டு ஒரு 10 நாள் லீவு சொல்லிடு மா… கல்யாணம் முடிஞ்சதும் எப்போ போகலாம்னு நீயும் , மாப்பிள்ளையும் பேசி முடிவெடுத்துக்கோங்க ” என்றவர் .

“நித்யா  நீ கிளம்பு ஒரு எட்டு போய்  உன் அக்காவீட்லையும், என் தம்பி வீட்ளையும் விஷயத்தை சொல்லி அவங்களை நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லிட்டு வரலாம் ” என்று கிளம்ப நிதவ்யாவும் அவருடன் கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் முதல் வேலையாக நிலானி அர்ஷிற்கு தான் கால் செய்தாள் . அவனுக்கு லைன் போகவே இல்லை.. நான்கைந்து முறை முயன்றும் போன் போகாமல் ஆறாவது முறை அர்ஷ் போன் லைன் சென்றது. ஆனால்  அவன் நிலானியின் காலை எடுக்கவே இல்லை.

நிலானியும் விடாமல் அர்ஷிற்கு கால் செய்தவள் “ச்சே … போனை கூட எடுக்காம என்ன செய்றார் . இப்போ நான் என்ன செய்வேன் நேத்து தான் என் மனசுல இருக்றவதை இவர்கிட்டே சொன்னேன். ஆனா இன்னிக்கு இப்படி நடக்கும்னு நான் எதிர்பாக்கலையே இப்போ நான் செய்வேன்” என்று  புலம்பிய நிலானி.

அர்ஷ் போன் எடுக்காததால் அவனுக்கு மெசேஜ் அனுப்பி விபரத்தை கூறியவள் இந்த மெசேஜை பார்த்த உடன் அவளுக்கு கால் செய்ய சொல்லி அனுப்பி இருந்தாள் .

….

“அர்ஷ் நீ ராகேஷை கண்காணிச்சிட்டு தானே இருக்க.. உன்கிட்டே நான் கொடுத்தது அந்த வேலை மட்டும் தான் . அதை ஒழுங்கா பாத்துக்காம எதுக்கு நீ ஆசை விட்டு கிளம்பின.. ” என்றான் விஜய்.

“அதெல்லாம் அயன் அவனோட இன்ப்ளுயென்ஸ் உஸ் பண்ணி மும்பையில் இருக்க போலீக்கிட்டே ராகேஷை கண்காணிக்க சொல்லிட்டான். நானும் நம்ம பம்பாய் ஆபீஸ்ல  இருக்கவங்ககிட்டே ராகேஷை கிளோஸா  வாட்ச் பண்ணி சொல்லிருக்கேன். உன்னோட எந்த வேலையும் நிக்காது போதுமா ” என்று விஜய்யின் பின்னால் பணிவாக நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த குமாரை பார்த்தான்.

“இது தான் குமாரா .. ” என்றான் விஜய்யிடம் .

ஆமாம்  என்று விஜய் தலையை  ஆட்ட…

“அந்த ராகேஷே உனக்கு நல்ல சம்பளம் தந்துட்டு தானே இருந்திருப்பான். அதை விட்டுட்டு எதுக்கு இப்படி என் வேளைக்கு உலை வெக்க வந்திருக்க நீ ” என்றான் .

“நான் யாரோட வேளைக்கும் பங்கம் விளைவிக்க வரல.. விஜய் சார் எனக்கு கொடுத்த வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிருவேன் . நீங்க கவலை பட வேண்டாம் ” என்றான் குமார் .

“சொன்ன மாதிரி நடந்துக்கிட்டா சரி… ” என்று வெடுக்கென்று பேசிய அர்ஷ் திரும்பி விஜய்யிடம் ஏதோ பேச வர… அப்போது அர்ஷின் போனிற்கு அழைப்பு வந்தது . அதுவும் நிலானியிடம் இருந்து . அதை பார்த்ததும் போனை சைலண்டில் போட்டவன் விஜய்யிடம் பேச வர… கால் கட்  ஆனதும் அடுத்த 2 நிமிடத்தில் நிலானியிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“ஒன்னு மினிட் விஜய் ” என்று தன் மொபைலை ஆன் செய்து பார்த்தான்.

தன் கையில் இருந்த மொபைலில் நிலானி அனுப்பிய மெஸேஜை  பார்த்தான் .

“அர்ஷ் என்னை மன்னிச்சுடு நான் பொய் சொன்னதுக்காக உங்ககிட்டே மன்னிப்பு கேக்கறேன். எனக்கும் என் அக்கா வீட்டுக்காரருக்கு மறுபடியும் கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க . நாளைக்கு காலையில் என் குலதெய்வம் கோவில்ல வெச்சு எங்க ரெண்டு பெருகும் கல்யாணம். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. தயவு செய்து இந்த மெசேஜை நீங்க பார்த்ததும் எனக்கு கால் பண்ணுங்க ” என்று அனுப்பி இருந்தாள் .

அதை பார்த்துவிட்டு எதுவும் யோசிக்காமல் நிமிர்ந்தவன் “சொல்லு டா …” என்றான் விஜய்யிடம்.

“நான் சொல்றது இருக்கட்டும் ஏன் உன் முகம் டல்லா  இருக்கு . என்ன ஆச்சு ? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றான் விஜய் அர்ஷின் சோகமான முகத்தை பார்த்து .

“ஒண்ணுமில்ல டா.. கொஞ்சம் அலைச்சல் அதனால தான் முகம் அப்படி இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் ” என்று மழுப்பினான் அர்ஷ்.

“சரி அப்போ ஒன்னு பண்ணு  நீ நல்லா  தூங்கி ரெஸ்ட் எடு . எனக்கு ஒரு அர்ஜென்ட் ஒர்க் இருக்கு நான் முடிச்சிட்டு வந்து உன்னை பார்க்கிறேன் ” என்றவன் “போலாமா குமார் ” என்று கேட்டுக்கொண்டே எழுந்தவன் “அர்ஷ் நல்ல ரெஸ்ட் எடு நாம அப்பறோம் பாக்கலாம் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப.

குமாரும் அர்ஷை ஒரு பார்வை பார்த்தவன் லேசாக அர்ஷை பார்த்து சிரித்தவன் “take   care  bro …” என்றவன் விஜய்யின் பின்னால் கிளம்பி இருந்தான்.

“take  care  bro … ” என்று குமார் மாதிரியே பேசி பழிப்பு காட்டியவன் . எழுந்து சென்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவன் . நிஜமாவே முகம் டல்லா தான் இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுப்போம்” என்று நேராக பெட் ரூம் சென்றவன் அப்படியே படுக்கையில் பொத்தென்று விழுந்தான்.

…..

அர்ஷிடம் பேசிவிட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை குமாரிடம் சொல்லிவிட்டு பின் சீட்டில் அமர்ந்த விஜய் தான் இங்கு வந்து 4, 5 நாட்கள் ஆகிவிட்டது வந்ததில் இருந்து இனியாவிடம்  பேசவே இல்லையே என்று அவனுக்கு தோன்றியது.

உடனே மொபைலை எடுத்த விஜய் முதலில் இனியாவுக்கு கால் செய்ய போனான் . பிறகு ஏதோ ஒரு தயக்கம் அவனுள் ஏற்பட்டது. முன்பு இனியாவின் மீது இருக்கும் அக்கரையில் அவளிடம் நினைத்த பொது சாதாரணமாக கால் செய்து விஜய்யால் பேச முடிந்தது.

ஆனால்  இப்பொது இனியா அவன் மனைவி .. அவனில் பாதி .. அவன் குழந்தையை கருவில் சுமப்பவள் . அவளை அந்த இடத்தில் வைத்து சாதாரணமாக விஜய்க்கு பேச ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

இனி அவள் தான் எல்லாமே .. அவள் மட்டும் தான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்து இனியாவை சந்தோசமாக வாழ  வைப்பேன் என்று மரகத்திடம் வாக்கு கொடுத்திருக்கிறான் தான்.

அவளிடம் உரிமையாக பேச விஜய்க்கு யோசனைய்யாக இருந்தது. இனியினாவை நினைக்கும்போது எல்லாம் கூடவே தாமரையும் அவன் நினைவில் வந்துவிடுகிறாள்.

என்னதான் அவள் இப்பொது வம்சியின் மனைவியாக இருந்தாலும். தாமரையை தன்னை மறக்க சொல்லி வற்புறுத்தினாலும் விஜய்யின் மனதில் இருந்து தாமரையுடன் பழகிய நினைவுகள் இன்னும் அவனால் மறக்க முடியவில்லை .

இந்த யோசனைகள் எல்லாம் விஜய்யின் மனதில் ஓடிக்கொண்டு இருக்க…  அவன் மொபைல் ரிங் ஆனது.

தன் என்ன ஓட்டத்தில் இருந்து வெளிவந்தவன்  மொபைல் திரையை பார்க்க.. ஒரு புதிய எண்ணில் இருந்து விஜய்க்கு வீடியோ கால் அழைப்பு வந்திருந்தது . யாராக இருக்கும் என்று யோசனையோடு காலை அட்டென்ட் செய்தவனுக்கு திரையில் இனியா தெரிய.. அவளை புரியாமல் பார்த்தவன்

“இனியா.. என்ன இது புது நம்பர்ல  இருந்து கால் பண்ணிருக்க… யாரோட நம்பர் இது ” என்று கேட்டான்.

இனியா முகம் முழுவதும் வியர்த்து போய்  இருக்க பயந்த படியே… “வி…விஜய் சார்.. ” என்று அவள் பேச வர…

அவளிடம் இருந்த மொபைலை வாங்கி அதில் தன் முகத்தை காட்டி “என்ன விஜய் சார் எப்படி இருக்கிங்கோ … ” என்றவனை பார்த்ததும் விஜய்க்கு அதிர்ச்சியானது 

ENNAI 2-21

“டேய் அவளை பிடிச்சு கட்டிவைக்க சொன்னா அவளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா?” என்று தன் கர்டஷிடம் சத்தமிட்டுக்கொண்டு இருந்தான் தேவா .

“இல்ல தல.. அந்த குட்டிக்கு மயக்கமருந்து கொடுத்து தான் இருந்தேன் . எப்படி தெரிஞ்சுது எப்போ தெளிஞ்சுதுனு எனக்கு தெரியல… நான் நம்ம இடத்துக்கு போய்ட்டு  வந்து பார்த்தேன் அந்த குட்டியை காணோம். அதான் நம்ம பசங்களை விட்டு அந்த புதுசா வந்த குட்டியை தேட சொல்லிருக்கேன். எப்படியும் பிடிச்சிட்டு வந்துருவாங்க . நீ கவலை படத்தை தல.. ” என்றான் தேவாவின் கையால் உதயா .

” நம்மகிட்டே வர குட்டிங்க ஒவ்வொண்ணும் பல ராகம் , அந்த ரகத்துக்கு ஏத்த மாதிரி சிலதுங்க ஆயிரத்துக்கும் போகும், சிலது லட்சத்துலையும் புரளும்… ஆனா இப்போ கூட்டிட்டு வந்திருக்க பொண்ணு எப்படினு உனக்கே நல்லா தெறியும். சும்மா மேக் அப் எதுவும் இல்லாம அழுக்கா  வந்த போட்டோவை பார்த்துட்டே அந்த பொண்ணை நான் நீன்னு போட்டி போட்டுட்டு ஏலம் எடுக்க அட்வான்ஸ் புக் பண்ணிட்டு இருக்கானுங்க. அப்படி இருக்க அப்போ நீ என்ன டா இவ்ளோ அசால்ட்டா இருக்க… பலகோடி விலைக்கு போற பொண்ணு டா அவ … அவளை அசால்ட்டா ஹாண்டில் பண்ணாதேன்னு சொல்லிருக்கேனா? இல்லையா? ” என்று உதையவை பார்த்தான் தேவா.

தேவா பணம்.. பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று வெறியோடு திரிபவனுக்கு கையில் கிடைத்த பொக்கிஷம் இப்படி நழுவ விட்டு இருக்கிறானே  என்ற ஆத்திரம் வர.. உதையாவிடம் கத்தியவன் . எழுந்த வந்து அவன் கன்னத்தில் ஒன்று வைத்து.

“நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது. அவ பிரெஷ் பீஸ் டா நானே அவளை பார்த்துட்டு எதுவும் பண்ணாம கண்ட்ரோலா இருக்கேன் தெரியுமா … நீ என்ன பண்ணுவியோ தெரியாது இன்னும் 1 மணி நேரத்துல அந்த பொண்ணு என் கைக்கு வந்தாகணும். ” என்றவன் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு செல்லப்போக…

“நீ பீல் பயந்த தல.. நான் அந்த குட்டியை கண்டுபிடிச்சதும் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ” என்று தன் கன்னத்தை தேய்த்துவிட்டபடி சொன்னான் உதயா.

வெளியே செல்லப்போன தேவா திரும்ப வந்தவன் உதையாவை மீண்டும் ஒரு அரை விட்டவன் “இன்னிக்கு என்ன கிழமையின்னு தெரியுமா உனக்கு ” என்றான் கோபமாக.

உதயா கன்னத்தை  தேய்த்த படி “அதை அடிக்காம கேக்கலாம்ல ப்பா … வலிக்குது ” என்றவன் “ம்ம்ம் …இன்னிக்கு வெள்ளிக்கிழமை … ” என்று சொன்னவன் அடுத்த கணம் தான் என்ன செய்தோம் என்று புரிந்தவனாக .

“சாரி தல மறந்துட்டேன் ” என்று அசடு வழிந்தவன் .

“நீ இன்னிக்கு அம்மாவை பார்க்க போகணும்ல.. ” என்றான்.

“ம்ம்ம்.. அதை எப்பவுமே நீ மறக்க கூடாது. நான் அம்மா கூட இருக்கும்போது நீயோ .. நம்ம ஆளுங்க யாருமே எனக்கு போன் பண்ண கூடாதுனு சொல்லியும் . நீ மறந்துட்டு எனக்கு கால் பன்றேன்னு சொன்னே இல்ல அதுக்கு தான் இந்த அடி .. ” என்றவன்.

“அந்த பிரெஷ் பீஸ் கைல கிடைச்சதும் ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பு போதும் ” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

தேவாவுக்கு அவன் அம்மா என்றால் கொள்ளை பிரியம் . அவருக்காக அவன் தன் உயிரை கொடுக்க சொன்னாலும் யோசிக்காமல் அடுத்த நிமிடமே தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பாசம் வைத்திருக்கிறான் அவன் அம்மாவின் மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் தேவா .  அவர் தான் அவனுக்கு எல்லாமே.. அவருக்கு தெரியாமல் .அவரிடம் கேட்காமல் தேவா எதுவுமே செய்ய மாட்டான். ஆனால்  ஒன்றை தவிர.. அது தேவா தற்போது பெண்களை ஏலம் விட்டு பணம் சம்பாரிக்கும் தொழில் செய்கிறான் என்பதே. அவன் அம்மாவை பொறுத்த வரை தேவா பல பிசினஸ்கள்  செய்கிறான் என்பது மட்டுமே..

……

நிலானியோ ரவியும், தன் தந்தையும் பேசியதை கேட்டவளுக்கு விக்கித்துப்போனது. இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு தெரியவில்லை. அதற்கு மேல் நிலானி பேச எதுவுமே இல்லை இனி அவள் வாழ்க்கை அவ்வளவு தான் .

ரவி சந்தோசமாக அவன் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல கிளம்பி இருக்க…

“நிலானி நீ உன் ஆபீஸ்க்கு போன் போட்டு ஒரு 10 நாள் லீவு சொல்லிடு மா… கல்யாணம் முடிஞ்சதும் எப்போ போகலாம்னு நீயும் , மாப்பிள்ளையும் பேசி முடிவெடுத்துக்கோங்க ” என்றவர் .

“நித்யா  நீ கிளம்பு ஒரு எட்டு போய்  உன் அக்காவீட்லையும், என் தம்பி வீட்ளையும் விஷயத்தை சொல்லி அவங்களை நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லிட்டு வரலாம் ” என்று கிளம்ப நிதவ்யாவும் அவருடன் கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் முதல் வேலையாக நிலானி அர்ஷிற்கு தான் கால் செய்தாள் . அவனுக்கு லைன் போகவே இல்லை.. நான்கைந்து முறை முயன்றும் போன் போகாமல் ஆறாவது முறை அர்ஷ் போன் லைன் சென்றது. ஆனால்  அவன் நிலானியின் காலை எடுக்கவே இல்லை.

நிலானியும் விடாமல் அர்ஷிற்கு கால் செய்தவள் “ச்சே … போனை கூட எடுக்காம என்ன செய்றார் . இப்போ நான் என்ன செய்வேன் நேத்து தான் என் மனசுல இருக்றவதை இவர்கிட்டே சொன்னேன். ஆனா இன்னிக்கு இப்படி நடக்கும்னு நான் எதிர்பாக்கலையே இப்போ நான் செய்வேன்” என்று  புலம்பிய நிலானி.

அர்ஷ் போன் எடுக்காததால் அவனுக்கு மெசேஜ் அனுப்பி விபரத்தை கூறியவள் இந்த மெசேஜை பார்த்த உடன் அவளுக்கு கால் செய்ய சொல்லி அனுப்பி இருந்தாள் .

….

“அர்ஷ் நீ ராகேஷை கண்காணிச்சிட்டு தானே இருக்க.. உன்கிட்டே நான் கொடுத்தது அந்த வேலை மட்டும் தான் . அதை ஒழுங்கா பாத்துக்காம எதுக்கு நீ ஆசை விட்டு கிளம்பின.. ” என்றான் விஜய்.

“அதெல்லாம் அயன் அவனோட இன்ப்ளுயென்ஸ் உஸ் பண்ணி மும்பையில் இருக்க போலீக்கிட்டே ராகேஷை கண்காணிக்க சொல்லிட்டான். நானும் நம்ம பம்பாய் ஆபீஸ்ல  இருக்கவங்ககிட்டே ராகேஷை கிளோஸா  வாட்ச் பண்ணி சொல்லிருக்கேன். உன்னோட எந்த வேலையும் நிக்காது போதுமா ” என்று விஜய்யின் பின்னால் பணிவாக நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த குமாரை பார்த்தான்.

“இது தான் குமாரா .. ” என்றான் விஜய்யிடம் .

ஆமாம்  என்று விஜய் தலையை  ஆட்ட…

“அந்த ராகேஷே உனக்கு நல்ல சம்பளம் தந்துட்டு தானே இருந்திருப்பான். அதை விட்டுட்டு எதுக்கு இப்படி என் வேளைக்கு உலை வெக்க வந்திருக்க நீ ” என்றான் .

“நான் யாரோட வேளைக்கும் பங்கம் விளைவிக்க வரல.. விஜய் சார் எனக்கு கொடுத்த வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிருவேன் . நீங்க கவலை பட வேண்டாம் ” என்றான் குமார் .

“சொன்ன மாதிரி நடந்துக்கிட்டா சரி… ” என்று வெடுக்கென்று பேசிய அர்ஷ் திரும்பி விஜய்யிடம் ஏதோ பேச வர… அப்போது அர்ஷின் போனிற்கு அழைப்பு வந்தது . அதுவும் நிலானியிடம் இருந்து . அதை பார்த்ததும் போனை சைலண்டில் போட்டவன் விஜய்யிடம் பேச வர… கால் கட்  ஆனதும் அடுத்த 2 நிமிடத்தில் நிலானியிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“ஒன்னு மினிட் விஜய் ” என்று தன் மொபைலை ஆன் செய்து பார்த்தான்.

தன் கையில் இருந்த மொபைலில் நிலானி அனுப்பிய மெஸேஜை  பார்த்தான் .

“அர்ஷ் என்னை மன்னிச்சுடு நான் பொய் சொன்னதுக்காக உங்ககிட்டே மன்னிப்பு கேக்கறேன். எனக்கும் என் அக்கா வீட்டுக்காரருக்கு மறுபடியும் கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க . நாளைக்கு காலையில் என் குலதெய்வம் கோவில்ல வெச்சு எங்க ரெண்டு பெருகும் கல்யாணம். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. தயவு செய்து இந்த மெசேஜை நீங்க பார்த்ததும் எனக்கு கால் பண்ணுங்க ” என்று அனுப்பி இருந்தாள் .

அதை பார்த்துவிட்டு எதுவும் யோசிக்காமல் நிமிர்ந்தவன் “சொல்லு டா …” என்றான் விஜய்யிடம்.

“நான் சொல்றது இருக்கட்டும் ஏன் உன் முகம் டல்லா  இருக்கு . என்ன ஆச்சு ? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றான் விஜய் அர்ஷின் சோகமான முகத்தை பார்த்து .

“ஒண்ணுமில்ல டா.. கொஞ்சம் அலைச்சல் அதனால தான் முகம் அப்படி இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் ” என்று மழுப்பினான் அர்ஷ்.

“சரி அப்போ ஒன்னு பண்ணு  நீ நல்லா  தூங்கி ரெஸ்ட் எடு . எனக்கு ஒரு அர்ஜென்ட் ஒர்க் இருக்கு நான் முடிச்சிட்டு வந்து உன்னை பார்க்கிறேன் ” என்றவன் “போலாமா குமார் ” என்று கேட்டுக்கொண்டே எழுந்தவன் “அர்ஷ் நல்ல ரெஸ்ட் எடு நாம அப்பறோம் பாக்கலாம் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப.

குமாரும் அர்ஷை ஒரு பார்வை பார்த்தவன் லேசாக அர்ஷை பார்த்து சிரித்தவன் “take   care  bro …” என்றவன் விஜய்யின் பின்னால் கிளம்பி இருந்தான்.

“take  care  bro … ” என்று குமார் மாதிரியே பேசி பழிப்பு காட்டியவன் . எழுந்து சென்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவன் . நிஜமாவே முகம் டல்லா தான் இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுப்போம்” என்று நேராக பெட் ரூம் சென்றவன் அப்படியே படுக்கையில் பொத்தென்று விழுந்தான்.

…..

அர்ஷிடம் பேசிவிட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை குமாரிடம் சொல்லிவிட்டு பின் சீட்டில் அமர்ந்த விஜய் தான் இங்கு வந்து 4, 5 நாட்கள் ஆகிவிட்டது வந்ததில் இருந்து இனியாவிடம்  பேசவே இல்லையே என்று அவனுக்கு தோன்றியது.

உடனே மொபைலை எடுத்த விஜய் முதலில் இனியாவுக்கு கால் செய்ய போனான் . பிறகு ஏதோ ஒரு தயக்கம் அவனுள் ஏற்பட்டது. முன்பு இனியாவின் மீது இருக்கும் அக்கரையில் அவளிடம் நினைத்த பொது சாதாரணமாக கால் செய்து விஜய்யால் பேச முடிந்தது.

ஆனால்  இப்பொது இனியா அவன் மனைவி .. அவனில் பாதி .. அவன் குழந்தையை கருவில் சுமப்பவள் . அவளை அந்த இடத்தில் வைத்து சாதாரணமாக விஜய்க்கு பேச ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

இனி அவள் தான் எல்லாமே .. அவள் மட்டும் தான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்து இனியாவை சந்தோசமாக வாழ  வைப்பேன் என்று மரகத்திடம் வாக்கு கொடுத்திருக்கிறான் தான்.

அவளிடம் உரிமையாக பேச விஜய்க்கு யோசனைய்யாக இருந்தது. இனியினாவை நினைக்கும்போது எல்லாம் கூடவே தாமரையும் அவன் நினைவில் வந்துவிடுகிறாள்.

என்னதான் அவள் இப்பொது வம்சியின் மனைவியாக இருந்தாலும். தாமரையை தன்னை மறக்க சொல்லி வற்புறுத்தினாலும் விஜய்யின் மனதில் இருந்து தாமரையுடன் பழகிய நினைவுகள் இன்னும் அவனால் மறக்க முடியவில்லை .

இந்த யோசனைகள் எல்லாம் விஜய்யின் மனதில் ஓடிக்கொண்டு இருக்க…  அவன் மொபைல் ரிங் ஆனது.

தன் என்ன ஓட்டத்தில் இருந்து வெளிவந்தவன்  மொபைல் திரையை பார்க்க.. ஒரு புதிய எண்ணில் இருந்து விஜய்க்கு வீடியோ கால் அழைப்பு வந்திருந்தது . யாராக இருக்கும் என்று யோசனையோடு காலை அட்டென்ட் செய்தவனுக்கு திரையில் இனியா தெரிய.. அவளை புரியாமல் பார்த்தவன்

“இனியா.. என்ன இது புது நம்பர்ல  இருந்து கால் பண்ணிருக்க… யாரோட நம்பர் இது ” என்று கேட்டான்.

இனியா முகம் முழுவதும் வியர்த்து போய்  இருக்க பயந்த படியே… “வி…விஜய் சார்.. ” என்று அவள் பேச வர…

அவளிடம் இருந்த மொபைலை வாங்கி அதில் தன் முகத்தை காட்டி “என்ன விஜய் சார் எப்படி இருக்கிங்கோ … ” என்றவனை பார்த்ததும் விஜய்க்கு அதிர்ச்சியானது 

ENNAI 2-22

“அட என்ன ம்மா நீ இப்படி திக்குற.. நான் இன்டர்நேஷனல் கால் பண்ணிருக்கேன் . எவ்ளோ காசு போகும் தெரியுமா .. ” என்று போனை இனியாவிடம் இருந்து வாங்கி அதில் தன் முகத்தை காட்டி ..

“ஹெலோ!! வணக்கம் விஜய் சார்.. எப்படி இருக்கீங்க..” என்று கேட்டான் திரையில் தெரிந்தவன்.

அவனை எங்கோ பார்த்தது போல விஜய்க்கு தோன்ற… யோசனையோடு போனில் தெரிந்தவரிடம்  “ஏய் யார் நீ… நீ ஹோச்பிடல்ல என்ன பண்ற.. ” என்றான் கோபமாக .

“என்ன சார் என்னை தெரியலையா உங்களுக்கு ” என்று சத்தமாக சிரித்தவன் .

“என்னை தெரியாம தான் உங்க ஆளுங்களை வெச்சு என்னை தூக்க சொன்னிங்க.. ” என்றான்.

“இவனை நான் ஆள் வைத்து தூக்க சொன்னேனா… யார் இவன் ” என்று யோசித்த விஜய் சமீபமாக இனியா விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை தானே கவனிக்க சொல்லி தன் ஆட்களிடம் கூறி இருந்தான்  என்று யோசித்த விஜய் .

இனியா விஷயத்தில் சம்பத்தை பட்டவர்களை பற்றி யோசித்தவனுக்கு திரையில் தெரிந்தவனை இப்பொது அடையாளம் தெரிந்துவிட்டது.

“நீ தான் சேதுவா !” என்றான் விஜய்.

“சூப்பர் சார் கண்டுபிடிச்சுட்டீங்க.. ” என்றவன்.

“உங்க வைஃப் அதான் இனியா இவங்க விஷயமா ஏதோ பேசணும்னு சொன்னிங்கலாமே .. அதான் உங்களுக்கு ஏன் சிரமம்னு நானே நேரா வந்துட்டேன் “என்றவன் தன் மொபைலை திருப்பி பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த இனியாவையும், அவள் அருகில் இருந்த தாமரையையும் காட்டி.

“இங்க வந்த இவங்க ரெண்டு பேரும் தான் இருக்காங்க .. நீங்க துபாய் போயிருக்கறதா சொன்னாங்க .. அதான் வீடியோ கால் பண்ணிட்டேன் ” என்று சிரித்து  பேசியவனை கண்டு கோபம் கொண்டான் விஜய் .

 விஜய் மாமா இதை யார் என்று தெரியவில்லை கதவை திறந்து உள்ளே வந்தவன் வந்ததும் உங்களை தான் கேட்டேன் இவன பார்த்தாலே எங்களுக்கு பயமா இருக்கு அம்மு வேற இந்த நேரத்தில் ஆபீஸ்ல வேலை இருக்குன்னு போயிருச்சு உங்க பேரு யாருமே இல்ல நானும் இனியா மட்டும் தான் தனியா இருக்கோம் என்று தூரத்தில் இருந்து தாமரை வீடியோ கால் தெரிந்து விஜய் பார்த்து பயத்தோடு பேச…

வீடியோ காலில் இருந்தவனை யார் என்று அடையாளம் கண்டு கொள்ள அவனால் முடியவில்லை . விஜய் பேசுவதை எல்லாம் காரின் முன் சீட்டில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த குமார் விஜய்யை பார்க்க.

விஜய் குமாரிடம் “கால் வம்சி…” என்று மட்டும் சொன்னவன் .

உடனே குமார் தன் மொபைலில் எடுத்து வம்சிக்கு கால் செய்தான்.

இங்கே விஜய்யுடன் வீடியோ காலில் இருந்தவன் “சார் கொஞ்சம் பொறுங்க எதுக்காக இப்படி அவசரப்படுறீங்க… நீங்க நினைக்கிற மாதிரி இவங்கள நான் எதுவும் பண்ணிட மாட்டேன். நான் உங்கள பாத்து நேர்ல மன்னிப்பு கேட்டுட்டு போகத்தான்  வந்தேன்” என்றான் 

“மன்னிப்பு!!…” என்று விஜய் அவனைப் பார்க்க

“என்ன சார் என்ன டா திடீர்னு எவனோ ஒருத்தன் உள்ளவர வந்து என்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு சொல்றானே… யார் இவன்னு யோசிக்கிறீங்க தானே முதல்ல நான் என்னை உங்ககிட்ட அறிமுகப்படுத்துகிறேன். என் பேரு சேது. ராகேஷ் சார் ஓட ரைட் ஹேண்ட்னு கூட என்ன சொல்லலாம்” என்று அவன் சொல்ல..

அவன் சொன்ன அடுத்த நிமிடமே விஜய்க்கு சேர்த்து நினைவிற்கு வந்தது இனியாவை கெஸ்ட் ஹவுஸில் வைத்திருக்கும் தங்க வைத்திருக்கும் போது அவள் பீச்சில் சேதுவை  சந்தித்து விஜய்க்கு நினைவில் வர… விஜய்யின் முகம் சற்று மாறியது.

“ராஸ்கல் நீ இங்கதான் இருக்கியா இன்னும் கொஞ்ச நேரத்துல என் தம்பி அங்க வந்துருவான் தைரியமானவனா இருந்தா முதல்ல என்கிட்ட நேருக்கு நேரா மோதிப் பேசிப்  பாரு டா… அது என்னடா பொண்ணுங்ககிட்ட யாரும் இல்லாத நேரம் வந்து பேசிட்டு இருக்க.. ” என்று விஜய் சீர 

 “சார் நான் தான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்னு சொல்ற அப்புறம் மறுபடியும் இப்படி பேசினா என்ன அர்த்தம். ஆனானப்பட்ட  ராக்கி சாரையே இருந்த இடம் தெரியாம மும்பைக்கு பொட்டியைக் கட்டி அனுப்பிட்டீங்க. அப்புறம் நான் எல்லாம் எம்மாத்திரம் உங்களுக்கு. அதனால் தான் போலீஸ்கிட்ட போய் சரண் அடையுற மாதிரி நானே உங்ககிட்ட வந்து சரணடைந்து இருக்கேன்.உங்க பின்னாடி நான் பாலோ பண்ணி வந்திருக்கேன் . ஆனா இந்த மேடம் இருந்த இடம் எனக்கு சரியா பிடிபடவே இல்லை” என்று இனியாவை போனில் காட்டியவன் பின்.

“ராகேஷ் சொன்னதை கேட்டு நானாசெய்த வேலை அவ்வளவுதான்  மத்தபடிக்கு எதுவுமே கிடையாது என்ன விட்ருங்கன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என்றான்.

“அப்போ உனக்கு இனியாவ பத்தி எதுவும் தெரியாதா?” என்றான் விஜய்.

“தெரியும் சார் ஒருமுறை பீச்சில் வைத்து இந்த பொண்ணு  தனியா இருக்கிறதை பார்த்தேன். நான் தான் பத்திரமா போக சொல்லி என் சட்டையை கூட அந்த பொண்ணுக்கு போர்த்திவிட்டு அனுப்பிவிட்டேன். நீ வேணும்னா இந்த பொண்ணு கிட்டே கேட்டு பாருங்க” என்றான்.

அது தனக்கே தெரியும் என்று நினைத்த விஜய் “அதை விடு அதை தவிர வேற எந்த விஷயமும் இனியாவை  பற்றி உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்றான்.

“இவங்களை பத்தி எனக்கு சத்தியமாக தெரியாது சார் நான் யார் மேல சத்தியம் பண்ணட்டு சொல்லுங்க” என்று சேது பேச..

“சரி இனிமேல் தேவையில்லாம இனியா விஷயத்துல தலையிடுற  வேலை வச்சுக்காத. அப்படி எதுவும் நீ எங்க லைன்ல கிராஸ் பண்றேன்னு தெரிஞ்சுச்சு’ அப்பறோம்  நீ இருக்கிற இடம் தெரியாம பண்ணிடுவேன். ராகேஷ்க்காவது உயிர் பிச்சை கொடுத்து அவன ஊரை விட்டு ஊரு அனுப்பி வச்சிருக்கேன். உன்ன மொத்தமா மேல தூக்கிருவேன் ஜாக்கிரதை” என்றான் விஜய்.

“ஹலோ சார்… யார்கிட்ட என்ன பேசுறீங்க… ” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசிய சேது .

“இந்த மெரட்டலுக்கு  நான் பயப்படுற ஆள் கிடையாது. என் மேல தப்பு இருந்தா தப்பு இருக்குன்னு நெஞ்ச நிமித்துகிறவன் இந்த சேது. சம்பந்தமே இல்லாம நான் எதிலும் இன்வால் ஆக மாட்டேன். ராகேஷ் சார் சொன்ன வேலையைத் தான் நான் செய்தேன். மற்றபடி நான் வேற எந்த வேலைக்கும் போகல அதனால … உங்கள் குடும்பத்தை பாருங்க எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நான் இந்த சைடு வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போக வந்தேன்”

“என்னவோ என்னை ரொம்ப மோசமானவன் மாதிரி இல்ல பேசுறீங்க நீங்க” என்று நல்லவன் போல பேசியவன். “சரி சார் நான் கிளம்புறேன் எனக்கு நிறைய வேலை இருக்கு. இந்த ராகேஷ் சார் வேற மும்பை போய் செட்டில் ஆயிட்டாரு இனி அடுத்து நான் என்ன பண்றதுன்னு யோசிக்கணும்” என்று சொல்லிவிட்டு வீடியோ காலில் விஜய்யிடம் பேசியவன் போனை கட் செய்தான்.

போனை வைத்துவிட்டு இனியாவிடமும் தாமரையிடமும் வந்தவன்” இங்க பாருங்க நான் உங்களை எதுவுமே செய்யல விஜய் சார் பேசும்போது எதுவும் நான் உங்கள் கொடுமைப்படுத்தின மாதிரி இல்ல ரெண்டு பேரும் முகத்தை வெச்சிட்டு இருந்திங்க.., என்ன பாத்தா என்ன அவ்வளவு டெரராவா  இருக்கு” என்று அவர்களை நோக்கி வர..

“டேய் எதுவா இருந்தாலும் நீ அங்கேயே இருந்து பேசு கிட்ட வராத” என்று அவனை ஒரு மார்க்கமாக பார்க்க தாமரை “அதான் விஜய் மாமாகிட்ட எல்லாமே சொல்லி முடிச்சிட்டே இல்ல…  முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்று அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

 “சரி மேடம் ரொம்ப பேசாதீங்க கிளம்பிட்டேன். இனியாவை தூக்க சொன்னதுக்கு உன்னை தூக்க சொல்லி ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கும். உன்னை கடத்திட்டு போய்  ஆள் இல்லாத காட்டுக்குள்ள கொண்டு போய்  விட்டிருக்கும் உன்னை” என்றவன்.

இனியாவை பார்த்து “உன்ன பத்தி தான் அந்த ராகேஷ் சொல்லி இருந்தான்னு எனக்கு தெரிஞ்சிருந்தா நான் அப்போவே முடியாதுன்னு சொல்லி இருப்பேன். எனக்கு ஏதோ ஒரு பீலிங் தோனிச்சு அதனால்தான் அன்னைக்கு என் பசங்க உன்னை கிண்டல் பண்ணின அப்போ  கூட அவனுங்களை அடக்கி உன்ன அங்க இருந்து அனுப்பி வச்சேன். நான் அவ்வளவு மோசம் இல்லை சரியா” என்றவன் .

தன் பாக்கெட்டில் கையை விட… “டேய்.. டேய். என்ன டா எடுக்குற .. பாக்கெட்ல கத்தி எதுவும் வெச்சிருக்கியா… ” என்று தாமரை பயந்து பேச…

“அட… இரும்மா .. யாரும்மா நீ.. ரொம்ப ஓவர் சீனா இருக்கு உன்னோட…” என்றவன் இனியாவை பார்த்து .

“இதை எப்படி கூட வச்சு இருக்க.. சரியான தொடை நடுங்கியா இருக்கு…  ” என்று தாமரையை நக்கல் செய்தவன் தன்  இருந்து விசிட்டிங்  கார்டு ஒன்றை எடுத்தவன்

“இனியா இதுதான் என்னோட விசிட்டிங் கார்டு உனக்கு பிரச்சனை ஏதாவது வந்துச்சுன்னா…  இல்ல வேற எதுவும் வேணும்னாலும் நீ யோசிக்காம எனக்கு எந்த நேரமா இருந்தாலும் கால் பண்ணு . உன் கால் வந்த உடனே வந்து நிப்பான் இந்த சேது சரியா…” என்றான்.

இனியாவும் மென்மையாக சிரித்தவள் “சரின்னா… ” என்று அவன் கொடுத்த கார்டை வாங்கி பத்திரப்படுத்தினாள் .

தாமரை பார்த்து “இதோ உன் பக்கத்தில் இருக்கே… இது பார்க்க பயந்தாங்கோலி மாதிரி இருந்தாலும் சரியான உசார் பார்ட்டி மாதிரி தான் தோணுது. இதனால் ஏதாவது பிரச்சனையினாலும் சொல்லு போட்டு தள்ளிடுவோம்” என்று சேது கூற..

“அய்யய்யோ இல்ல அவங்க அப்படிப்பட்டவங்க எல்லாம் கிடையாது. தாமரை அக்கா ரொம்ப நல்லவங்க” என்று அருகில் இருந்து தாமரையும் கையை பிடித்துக் கொண்டு இனியா பேச.

“சரி ஓகே.. உனக்காக இந்த தொடை நடுங்கியை  விட்டுடறேன்” என்று தாமரையை பார்த்து சிரிக்க..

அவனை முறைத்த தாமரை “இனியா இவன்கிட்டே எல்லாம் நீ பேச்சு வெச்சுகாதா சரியா” என்றாள் .

“ஆமா ,, ஆமா  என்கூட எலாம் பேச்சு வெச்சிட்டா அப்பறோம் என்னை மாதிரியே நீயும் ரௌடி ஆகிடுவா பாரு… போம்மா அங்கிட்டு…” என்று இனியவை பார்த்து “நான் வரட்டா ம்மா…” என்று அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும் தான் தாமரைக்கு அப்பாடா என்று இருந்தது .

அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே வம்சி  அங்கு வந்தவன் “நீங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்கீங்க அவன் எங்க? போயிட்டானா? ராஸ்கல் யாரும் இல்லாத நேரம் வந்து பிரச்சனை பண்ணிட்டானா… ” என்று அறைக்குள்ளே இங்குமங்கும் சேதுவை தேடினான் 

“அவன் போய் ரொம்ப நேரம் ஆச்சு. நாள் எல்லாம் இங்கேயே டேரா போட்டு இருக்க வேண்டியது இந்த மாதிரி நேரத்துல எங்கேயாவது கிளம்பி போய்ட வேண்டியது. உன்னை நம்பி விஜய் மாமா வேலைய குடுத்துட்டு போயிருக்காரு. அவர சொல்லணும்” என்று தாமரை வம்சியை நக்கள் செய்ய அவளை திரும்பி முறைத்தவன்.

“அவன் இப்படி திடீர்னு  வருவான் எனக் எப்படி தெரியும். நான் இங்கே தானே இருந்து வேலை பார்க்கிறேன் சொன்னேன். நீதானே எப்பபாரு உன் பின்னாடியே இருக்க .. ஆபீஸ்ல போய் ஏதாவது வேலை பார்க்கலாமேன்னு என்னை தொரத்திவிட்ட செய்றதையும் செஞ்சுட்டு இப்ப என்னையவே பேசுறியா நீ” என்று வம்சி  தாமரையிடம் வம்புக்கு செல்ல.. 

வம்சி சொன்னதும் பதில் சொல்ல தெரியாமல் விழித்தவள் “அது… எப்ப பாரு இங்கேயே உட்கார்ந்து என்னை குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்காதா.. அதனால் தான் உன்னை கிளம்பி போகச் சொன்னேன். அந்த ரவுடி இப்படி வருவான்னு எனக்கு என்ன தெரியும்.” என்றவள்.

“வந்ததே வந்த போ போய் பேசாம ஓரமா அந்த கட்டில் உட்கார்ந்து உன் வேலையை பாரு” என்று தாமரை வம்சியை  அடக்கினான்.

ENNAI 2-23

“இந்த விஜய்யும் வம்சியும் இருக்காங்களே ரெண்டு பேரும் ஒரே மாதிரி ஒன்னா ஒட்டிப் பிறந்தவர்கள் . அவன் எங்கேயோ இருந்து எனக்கு போன் பண்ணி உடனே இனியாவ டிஸ்சார்ஜ் பண்ணனும்னு சொல்றான். இவன் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை இன்னும் டிஸ்டர்ப் சம்மரி ரெடி பண்ணலையா? என்னத்த பண்றேன்னு என்ன பாடா படுத்துற “என்று வீணா புலம்பிக் கொண்டே இனியாவை டிஸ்டர்ப் செய்வதற்கான சம்மரியை தயார் செய்து கொண்டிருந்தார்.

“அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு அவசரப்படுத்தறாங்கன்னா ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். நீ சம்மரி ரெடி பண்ணு நான் போய் இனியாவுக்கு கட்டு மாத்தி போட்டுட்டு அவளோட ஹெல்த் கண்டிஷனையும் ஒரு முறை செக் பண்ணிட்டு வந்துடறேன்” என்று  வீணாவிடம் சொல்லிவிட்டு ஜியா இனியாவின் அழைக்க சென்றாள்.

வம்சி யாரிடமோ போன் பேசிக் கொண்டிருக்க தாமரை இனியாவின் திங்க்ஸ்களை வீட்டிற்கு செல்வதற்காக எடுத்து பேக் செய்து கொண்டு இருந்தாள்.  “ஏன் இப்படி எல்லாரும் அவ்ளோ அவசரமா  கிளம்புறீங்க. அப்படி என்ன ஆச்சு எங்க ட்ரீட்மென்ட் எதுவும் சரியில்லையா? அதனால தான் சீக்கிரமா இங்கிருந்து போகணும்னு அவசரப் படுறீங்களா  அண்ணனும் தம்பியும்” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல சித்தி ரொம்ப நாளா ஹாஸ்பிடல்ல இருக்கிறதுக்கு அண்ணிக்கு பிடிக்கல. அவங்க தான் வீட்டுக்கு போகணும்னு சொன்னாங்க அதனால தான் அண்ணாவும் நானும் அவசரபடுத்துறோம். வேற எதுவும் இல்லை” என்று சேது வந்து சென்றதை பற்றி சொல்லாமல் மழுப்பினான்..

“ஏன் இனியா உனக்கு ஹாஸ்பிடல் வாடை பிடிக்காதா அதனால தான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும்னு சொல்றியா” என்று ஜியா இனியாவிடம் வர அவள் திருத் திருவென விழித்துக் கொண்டே ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்.

“சரி நீ வேற பிரக்னண்டா இருக்க.. இந்த டைம்ல ஹாஸ்பிடல்  ஸ்மெல் எல்லாம் கொஞ்சம் பிடிக்காத மாதிரி தான் இருக்கும். அதுவும் நல்லதுக்கு தான்” என்று அவள் தலையில் கட்டி இருந்த கட்டை பிரித்து காயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தவர்.

இனியாவின் தலையில் இருந்த கட்டிற்க்கு தன் கூட வந்த நர்ஸிடம் சொல்லி  ட்ரெஸ்ஸிங் செய்ய சொன்னார். பின்பு அவள் வலது தோள் பட்டையின் நிலை எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஆராய்ந்துவிட்டு “சரி வீணா இன்னும் கொஞ்ச நேரத்துல சம்மரி  ரெடி பண்ணிடுவா. நான் அதை வீட்டுக்கு கொடுத்து அனுப்புறேன் வேற எந்த பிராசஸும் பண்ண வேண்டாம்.  நீங்க கிளம்புறதுன்னா கிளம்பிக்கோங்க” என்றார்.

“அப்படியா அப்போ நாங்க முன்னாடியே கிளம்புறோம்” என்று தியா சொன்னதுமே சரியென கிளம்பினான்  வம்சி.

மூவரும் திங்க்சை பேக் செய்து கிளம்ப சரியாக வீணாவும் அங்கே வந்தார். கிளம்பியாச்சா சரி டா என்றவாறு “தாமரை இதுல இனியா மூன்று வேலையும் சாப்பிட மாத்திரையும் சத்துக்கு டானிக் வச்சிருக்கேன். அதுவும் இல்லாம அவளுக்கு அந்த சோல்டர்ல கட்டு போட்டு இருக்கில்லையா ரொம்ப அசையக் கூடாது . அதை கவனமா பாத்துக்க சொல்லு” என்றவர்.

இனியாவிடம் திரும்பி “உடம்ப பத்திரமா பாத்துக்கோ இந்த சமயத்துல நீ ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும். தன் வயித்துல ஏற்கனவே அடிபட்டு இருக்கு அதனால ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் சரியா” என்றார்

“சரிங்க..” என்று இனியா பதில் சொல்ல

“என்ன இன்னும் வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்க.. அம்மானு உரிமையா கூப்பிடு நான் உனக்கு அம்மா முறை தான் வேணும்” என்றார் வீணா.

இனியா சிரித்துக் கொண்டே “சரிம்மா நான் உடம்ப பத்தரமா பாத்துக்குறேன்” என்றான்.

“செக்கப்புக்கு எப்ப வரணும்னு எல்லா டேட்டையும் இந்த பைல மென்ஷன் பண்ணியிருக்கு அந்த டேட்டுக்கு தவறாமல் நீயும் விஜய்யும் ஹாஸ்பிடலுக்கு வந்துடனும் சரியா” என்றார் வீணா.

“சரி மா வந்துடறோம்” என்று அவர் கொடுத்த பைலை வாங்கப் போக அதை வாங்கி தாமரை வைத்துக்கொண்டு “வேண்டாம் நானே எடுத்துட்டு வரேன்” என்றாள் .

“பாருடா வீணா சொன்னதும்  இனியா உடனே அவளை அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா நீயும்தான் இருக்கியே நான் உன்கிட்ட எவ்வளவு முறை சொன்னேன் என்னை சித்தின்னு  கூப்பிடாத அம்மான்னு கூப்பிடுன்னு… ஆனா நீ தான் எனக்கு பழகிடுச்சு சித்தி நான் அப்படித்தான் கூப்பிடுவேன்னு என்னை சித்தியாவே தள்ளி வச்சிருக்க” என்று ஜியா தன் உரிமையை அவனிடம் எடுத்து கூறினார்.

அதை கேட்ட இனியா “அதெப்படி அவர் அவங்க அம்மாவை தானே அம்மான்னு கூப்பிடுவார். இவங்க சித்தி தானே அதுவும் விஜய் சார் அப்பாவோட ரெண்டாவது மனைவி தானே..” என்று நினைத்த இனியா

“ஐயோ சித்தி சின்ன வயசுல இருந்து கூப்பிட்டு  பழகிட்டேன். திடீர்னு என்னை அம்மான்னு கூப்பிடுங்கன்னு  சொன்னா  நான் என்ன செய்யறது”என்றவன் .

“சரி விடு நான் ட்ரை பண்றேன் சரியா. எங்களுக்கு நேரமாச்சு நாங்க கிளம்பறோம்” என்று தாமரையையும் வம்சியையும் அழைத்துக் கொண்டு இருவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து மூவரும் கிளம்பினர்.

இங்கே நிலானி கைகளை பிசைந்து கொண்டு இங்கும் அங்கும்  நடந்து கொண்டிருந்தாள்.

நேற்று அவள் அனுப்பிய மெசேஜை அர்ஷ் பார்த்து இருந்தான். ஆனால் அவளுக்கு கால் செய்யவோ அல்லது ரிப்ளை செய்யவோ இல்லை. இருந்தும் நிலானி மறுபடியும் அர்ஷிற்கு நான்கைந்து முறை கால் செய்து விட்டாள்.

ஆனால் அவன் ஒரு முறை கூட நிலானியின் அழைப்பை எடுக்கவே இல்லை. அவன் தன் மீது மிகவும் கோபமாக இருக்கிறான் என்று அதிலிருந்து புரிந்து கொண்ட நிலானி ஒருவேளை தான் மெசேஜ் அனுப்பியது மீண்டும் பொய்யாக இருக்குமோ என நினைத்து போனை அட்டென்ட் செய்யாமல் இருக்கிறானா என்று யோசித்தவள்.

“நான் பொய் மட்டும் தான் பேசுவேன்னு முடிவு பண்ணிட்டானோ. இப்ப என்ன பண்றது இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கும் ரவி மாமாவுக்கும் கல்யாணம் ஆகப் போகுது நான் எங்க வீட்ல என்னன்னு சொல்லி சமாளிப்பேன். இவனுக்கு என்ன தான் அபப்டி என் மேல கோபம் நான் பொய் சொன்னேன் தான் அதுக்காக நான் அனுப்பின மெசஜை பார்த்தும் கூட என்கிட்டே பேசாம இருந்தாஎன்ன அர்த்தம். என் மெசேஜை பார்த்து ஏதாவது பேசினாவாவது நான் என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியாவாவது எனக்கு கிடைக்குமே” என்று யோசித்தவளுக்கு வினோதினியின் நினைப்பு வந்தது.

.

சட்டுனு தன் மொபைலை எடுத்தவள் வினோவிற்கு கால் செய்தாள். அவள் கால் செய்த இரண்டு மூன்று ரிங்கிலேயே வினோ காலை அட்டென்ட் செய்து “சொல்லு டி… என்ன இவ்வளவு காலையிலேயே கூப்பிட்டிருக்க” என்று தூக்க கலக்கத்தில் எழுந்த படி வினோ பேசினாள்.

“ஏய் வினோ  எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். நான் அர்ஷுக்கு கால் பண்ணிட்டேன். அவரு எடுக்கவே மாட்டேங்குறாரு இங்கே ஒரு பிரச்சினை அது அவர்கிட்ட எடுத்துச் சொல்லி புரிய வைக்கணும். நான் போன் பண்ணி பார்த்தேன் அவன் எடுக்க மாட்டேங்கறான் டி…  ப்ளீஸ் நீயாவது அவருக்கு போன் பண்ணி விபரத்தை சொல்றியா” என்றவள்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளுக்கும், அவள் அக்கா வீட்டுக்காரருக்கும் திருமண நடக்கப் போவதை விளக்கி அவளிடம் கூறிவிட்டு “உன்னைத் தாண்டி மலை போல நம்பி இருக்கேன் தயவு செய்து எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும். அதுக்கு அர்ஷ் வந்தா தான் சரியா இருக்கும். ப்ளீஸ் டி சொல்லிடு அவர் உங்ககிட்ட பேசினா திரும்பவும் என்கிட்ட கால் பண்ணி விபரத்தை சொல்ல முடியுமா” என்றாள்.

“கண்டிப்பா சொல்றேண் டி ” என்ற வினோ.

“ஏன் நிலா உங்க வீட்டில் இப்படி பண்றாங்க. நேத்து தான் வந்து பேசுனாங்கன்னா உடனே இன்னைக்கு கல்யாணம் ஆகனுமா.” என்று வருத்தப்பட்டவள்

“சரி நான் முதல்ல அர்ஷ்கிட்ட பேசுறேன் பேசிட்டு உனக்கு கால் பண்றேன். ஓகே வா” என்று மெத்தையில் இருந்து எழுந்தவள் காலை கட் செய்துவிட்டு அர்ஷுக்கு டயல் செய்தாள். ஆனால் வினோதினியின் காலையும் எடுக்கவில்லை.

“இப்போ என்ன செய்றது , இந்த அர்ஷுக்கு என்ன ஆச்சு ஏன் போனை எடுக்க மாட்டேங்குறாரு.. ” என்று யோசித்தவள் கிளம்பி நேராக கீழே வந்தவள் யாராவிடம் தான் வெளியே பிரெண்ட்ஸை பார்ப்பதற்க்காக கிளம்புவதாகக் கூறியவள்.

தன் வீட்டில் இருந்து நேராக நிலானியின் திருமணம் நடந்த இடத்திற்க்கு செல்லலாம் . அங்கே போய்  எப்படியாவது நிலானியின் திருமணத்தை நிறுத்த தானால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தபடி காரை ஓடினாள்.

இங்கே நிலானியை அழைத்துக்கொண்டு அவள் அம்மாவின் அண்ணன்  மனைவி அங்கு வந்தவர் .

“நிலானி ரெடி ஆகிட்டியா… போலாமா” என்று சிரித்தபடி உள்ளே வந்தார்.

அவர் வந்ததும் நிலானிக்கு மேலும் பயம் தொற்றிக்கொண்டது. அவள் பதட்டமாக இருக்க… நிலானியை அழைத்துக்கொண்டு அவர் அங்கிருந்து நடந்தார்.

இங்கே மணமேடையில் ரவி அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான்.

நிலானி தன் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் இதயம் அவள் எதிரே வந்து விழுந்துவிடும் போல மிக வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது.

அப்போது அங்கு வந்து சேர்ந்த வினோ மணமேடைக்கு சென்று கொண்டு இருந்த நிலானியை பார்த்தவள் காரை நிறுத்திவிட்டு வேகமாக நிலானியிடம் சென்றாள் . வினோவை பார்த்ததும் நிலானிக்கு சந்தோசம் ஆனது. அவளால் தன் திருமணம் நிற்கும் என்று நம்பிக்கை வந்ததால் கிடைத்த நிம்மதி.

“யாரும்மா இது உன்னோட பிரெண்டா ” என்று நிலானியின் அத்தை கேட்டார்.

“ஆமா அத்தை ” என்று நிலானி தலையை ஆட்டினாள்.

“சரிம்மா… அப்போ நீ நிலாவை கூட்டிட்டு வரியா ம்மா.. நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்” என்று அவர் செல்ல…

அடுத்த நொடி வினோவிடம் திரும்பிய நிலானி.

“ஏய் வினோ அர்ஷ்கிட்டே பேசினியா … அவர் எங்க காணோம் ” என்று வினோவை தானே அர்ஷ் வருகிறானா என்று பார்த்தாள் .

ஆனால் அவள் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அர்ஷ் இல்லை.

“இல்ல டி நிலா நீ சொன்னதுல இருந்து இப்போவாரை நானும் திரும்ப திரும்ப போன் பண்ணிட்டே இருந்தேன் . ஆனா  அர்ஷ் அண்ணா ஒரு காலை கூட அட்டென்ட் பண்ணல . எனக்கு என்ன செய்துன்னு தெரியல டி . . சரின்னு விஜய் மாமா ஆபீஸ்க்கு கால் பண்ணி கேட்டேன். அண்ணா இங்க இல்ல… துபாய் போய்ட்டாருன்னு சொன்னாங்க டி.. ” என்றாள் .

“ஆமா  டி நீ ஆபீஸ்ல இருந்து கிளம்பியதும் எங்கடை கோவிச்சிட்டு அர்ஷும் கிளம்பி போய்ட்டான்.” என்றாள் சோகமாக.

“இப்போ என்ன டி பண்றது. நீ உன் வீட்ல சொல்ல வேண்டியது தானே உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லேன்னு ” என்றாள்  வினோ .

“இல்ல டி முதல் முறை எனக்கும் ரவி மாமாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடந்த அப்போவே நான் சொல்லி இருக்கனும். அப்போ என் வீட்ல இருந்த சூழ்நிலையே வேற…  அதனால என்னால அப்போ இந்த கல்யாணத்தை எதிர்க்க முடியலை. ஆனா இப்போ… என் காதலை நான் அர்ஷிக்கிட்டே சொல்லிட்டேன். ஆனா அவன் எந்த பதிலும் சொல்லாம போய்ட்டான். என் வீட்ல திடீர்னு போய்  நான் வேற ஒருத்தரை லவ் பன்றேன்னு சொல்ல முடியலை ” என்றாள்  நிலானி .

அதற்குள் மணவறையும் வந்துவிட… நிலானி மணவறை  வந்தவள் ரவியின் அருகில் அமராமல் அப்படியே நின்றுவிட்டாள் .

“ஏன்மா நின்னுட்டே ” என்று நிலானியின் அம்மா அவளை பிடித்து ரவியின் அருகில் அமர வைத்தார்.

ஐயர் மந்திரங்கள் ஒத்திக்கொண்டு இருக்க.. நிலானியோ வினோவை  சோக முகமாக பார்த்தாள்.

“கடவுளே! எப்படியாவது அன்னிக்கு மாதிரியே இப்போவும் என்னோட கல்யாணம் நின்னு போகணும் . நீ தான் என்னை  காப்பாத்தணும். அப்போதான் நான் நினைச்ச மாதிரி என் அர்ஷையே நான் கல்யாணம் பண்ணிக்கணும் ” என்று கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்டு சென்றாள் .

ENNAI 2-24

நிலானியின் நிலையை கண்டு வினோவிற்கு பாவமாக இருந்தது “ஏன் இந்த அர்ஷ் காலை எடுக்கவே இல்லை” என்று அவளுக்கு அர்ஷின் மீது கோபம் தான் வந்தது.

ரவி நிலானி இருவரிடமும்  அய்யர் கையில் அச்சதையை கொடுத்து கண்ண மூடி நல்லா அந்த கடவுளை சேவிச்சுக்கோங்க ரெண்டு பேரும் . இந்த திருமண வாழ்க்கை உங்க ரெண்டு பேருக்குமே நல்லபடியா அமையனும்னு வேண்டிக்கோங்க… என்றவர் நிலானியை  பார்த்து “எந்த குறையும் இல்லாம உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கணும்னு வேண்டிக்கோங்க” என்று அவர் கூற..

அவர் கொடுத்த அட்சதையை  விருப்பம் இல்லாமல் கையில் வாங்கிக் கொண்டவள். “கடவுளே! எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுடனும், ஏற்கனவே நடந்த மாதிரியே கடைசி நிமிஷத்துலயாவது ரவி மாமா இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடனும். எப்படியாவது அவர் மனச மாத்திடு” என்று ஆண்டவனிடம் மனம் உருகி ப்ரார்த்தித்துக்கொண்டு இருந்தாள்..

“அட என்ன இவ்ளோ நேரம் பிராத்தனை பண்ணிட்டு இருக்கீங்க… போதும்மா விட்டா நாள் பூரா கடவுளை சேவிச்சிட்டு இருப்பீங்க போல இருக்கு… நீங்க மனம் உருகி பிரார்த்தனை செய்றதை  பார்த்தா அந்த கடவுளே இறங்கி உன் பக்கத்துல வந்து உட்கார்ந்துடுவார் போல கண்ண திறங்கோ” என்று ஐயர் நிலானியை கிண்டல் செய்து அவளை கண்ணை திறக்கச் சொல்ல…

“ரெண்டு பேரும் கடவுளை நல்லா சேவிச்சுட்டீங்களா கையில இருக்குற அட்சதைய இதோ இங்க இருக்கே மஞ்சள் பிள்ளையார் அவர் மேல போடுங்க” என்று ஐயர் கூற..

இருவரும் கையில் இருந்த அட்சதையை பிள்ளையாரின் மீது போட்டுவிட்டு அமர்ந்திருக்க…

“மாப்பிள்ளை உங்க கைய குடுங்க” என்று மாப்பிள்ளையின் கையை பிடித்துக் கொண்டவர். “பொண்ணு நீங்களும் உங்க கைய குடுங்க” என்று மாப்பிள்ளையின் கைக்குள் நிலானியின் கையை வைத்து அவள் கையில் பூஜை செய்த கங்கணத்தை கட்டிவிட…

அவர் கங்கணம் கட்டி முடித்ததும் அதற்கு பொட்டிட்டு நிலானி கையை எடுக்கப் போக அப்போது அவள் கையை விடாமல் ரவி இருக்க பிடித்துக் பிடித்துக்கொண்டு இருந்தான்.

அதை சிறிதும் எதிர்பார்க்காத நிலானி “என்ன ஆச்சு ரவி மாமாவுக்கு… ஏன் என் கையை விடமாட்டேங்குறாரு…” என்று ரவியிடம் இருந்து தன் கையை விளக்க முயற்சித்தாள்.

ஆனால் அவள் கையை விடாமல் ரவி இறுக்கமாக பிடித்துக் கொள்ள அதை பார்த்த ஐயர் “பிள்ளையாண்டா பொண்ணு எங்க ஓடியா போகப்போகுது. உங்களை விட்டு இங்கதான இருக்க போறா கைய விடுங்கோ கல்யாணம் நடக்கணுமா? வேணாமா?” என்று அவர் மாப்பிள்ளையை செல்லமாக கண்டிக்க…

“என் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தானே நான் நிலானி கையை பிடித்து இருக்கேன். என் பொண்டாட்டி கைய நான் புடிச்சா உங்களுக்கு என்ன வலிக்குது” என்ற குரல் நிலானியின் காதில் விழ…

சட்டென்று தன் கையை பிடித்திருந்தவனை திரும்பிப் பார்த்தாள் நிலானி அங்கே அவளை சிரித்து முகமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அர்ஸ்.

அவனை பார்த்ததும் நிலானிக்கு  தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை நிஜமாகவே தன்னருகில் அர்ஷ தான் அமர்ந்திருக்கிறானா என்று அவனையே கண்களில் கண்ணீர் வழிய அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவனை பார்த்ததில் நிலானிக்கு பேச்சு எழவில்லை அவளிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை.

“என்ன ஐயரே பாத்துட்டு இருக்கீங்க முகூர்த்த நேரம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு தாலியை எடுத்து மாப்பிள்ளை கைல குடுங்க” என்று நிலானி என் அப்பா ஐயரிடம்  கூற…

அவர் சொன்னதை நம்ப முடியாமல் நிலானியின் திரும்பி அவள் அப்பாவை பார்க்க அவர் சிரித்துக் கொண்டே “என்னமா பாக்குற இந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் மாப்பிள்ளை செய்தது தான். நம்ம வீட்டுக்கு வந்து உன்னை அவர் காதலிக்கிறேன்னு  விஷயத்தை எடுத்துச் சொல்லி உனக்கும் அவருக்கும் கல்யாணம் செய்து வைக்க சொல்லி கேட்டுக்கிட்டார்.”

“எங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல அவர் எப்படியோ பேசி என்னையும் உன் அம்மாவையும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாரு .அதுக்கு பிறகு மற்ற ஏற்பாடு எல்லாம் அவரோடது தான்” என்று கூற..

அர்ஷின் பின்னால் நின்றிருந்த ரவியும் “நான் கூட இந்த மாதிரி ஐடியா எல்லாம் வேண்டாம் நிலானி ரொம்ப வருத்தப்படுவான்னு சொன்னேன். ஆனா அவருதான் உங்க மச்சினிச்சி என்னை  ஏமாற்றினா தானே…  அதுக்கு அவளுக்கு நான் ஒரு சின்ன பனிஷ்மென்ட் கொடுக்கணும். அதனால நீங்கதான் இந்த கல்யாண மாப்பிள்ளை. தாலி கட்டுறதுக்கு முன்னாடி வரைக்கும் அவ நீங்க தான் கல்யாண மாப்பிள்ளையின்னு  நம்பனும் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்கன்னு என்கிட்ட ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டாரு நானும் வேற வழி இல்ல மட்டும் அவரோட சேர்ந்து இந்த நாடகத்தை ஆடினேன் என்ன மன்னிச்சிடு நிலானி”  என்றார் ரவி.

அனைவரும் அர்ஸுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை நினைத்து நிலானிக்கு கோபம் தான் வந்தது . “ஆக மொத்தம் எல்லாரும் ஒன்னா சேர்ந்து என்னை  ஏமாத்திட்டீங்க இல்ல” என்று அழுது கொண்டே தன் குடும்பத்தை நிலானி பார்க்க…

 “ஏய் நிலா ! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சத்தியமா எனக்கு இப்பதான் தெரியும் . அர்ஷ் அண்ணா தான் மாப்பிள்ளைன்னு அவரு என்கிட்ட கூட சொல்லல” என்று பின் வாங்கினாள்.

 “சரி உங்க சண்டை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க முதல்ல உங்க கல்யாணம் நடக்கட்டும் முகூர்த்த நேரம் முடிய போகுது” என்று ஐயர் தாலியை எடுத்து அர்ஷிடம் நீட்ட..  அதை வாங்கியவன் நிலானின் முகத்திற்கு நேரே கொண்டு வந்து அவள்  விழிகளை நேருக்கு நேராக பார்த்து சிரித்தவன் “கட்டவா ” என்று உரிமையாக கேட்க நிலானியும் அழுத விழிகளோடு மெல்ல சிரித்தவள் அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்ல அடுத்த நிமிடம் அவருக்கு கழுத்தில் மூன்று முடிச்சுட்டு இருந்தான் அர்ஷ்.

தன் அம்மாவை பார்க்க வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த தேவாவிற்கு போன் வந்தது உதயா தான் அழைத்து இருந்தான்.

“சொல்லு டா…  ” என்றான் தேவா இருக்கமான குரலில் .

“தல.. ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு… ” என்று உதயா கூற..

“என்ன டா… என்ன ஆச்சு சீக்கிரம் என்னனு சொல்லித்தொலை நான் வீட்டு பக்கம் வந்துட்டேன்” என்றான்.

“அது வந்து .. நம்மகிட்டே இருந்து தப்பிச்சு போனாலே அந்த பார்வதி அவளை கண்டுபிடிச்சு நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்தோம் . ஆனா… ” என்று உதயா நிறுத்த…

“ஆனா என்ன டா அதான் அவளை தூக்கிட்டு வந்தாச்சு இல்ல.. அப்பறோம் என்ன பிரச்சனை ” என்றான் கோபமாக.

“அவ .. அவ.. எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு மறுபடியும் இங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டா… ” என்று ஒரு வழியாக விஷயத்தை சொல்லி முடித்து இருந்தான்.

காரை ஒட்டிக்கொண்டு இருந்த தேவா சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் “உன்னை எல்லாம் என் கூட வேலைக்கு வச்சிருக்கேன் பாத்தியா என் புத்திய செருப்பால அடிக்கணும். ஒரு வேலையும் உன்னால முழுசா செய்ய முடியாம நீ எல்லாம் எதுக்குடா உயிரோட இருக்க.. எங்கேயாவது போய் செத்து தொல…”என்று உதயாவை வறுத்தெடுத்த தேவா .

“என் அம்மாவை பாத்துட்டு நைட்  நம்ம இடத்துக்கு வருவேன். நான் வரும்போது அந்த பார்வதி அங்கு இருக்கணும் அப்படி அவளை அவள் மட்டும்  அங்க  இல்ல நீங்க யாருமே உயிரோடு இருக்க முடியாது” என்று ஆத்திரத்தின் உச்சத்தில் பேசிவிட்டு போனை வைத்தவன் காரை எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்கு கிளம்பினான்

“ராஸ்கல்.. இடியட்ஸ் இவங்க எல்லாம் ஒரு வேலைக்கும் லாயக்கில்லை இவனுங்கள வச்சுக்கிட்டு இப்படி ஒரு பிசினஸ வேற நான் பண்ணிட்டு இருக்கேன். இவனுங்க தினம் தினம் எனக்கு டென்ஷன் தான் கொடுக்கிறானுங்க…” என்று புலம்பேபடியே அவன் அம்மாவின் வீட்டின்  முன்பு காரை  நிறுத்த..

அவனுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த தேவாவின் அம்மா பூங்கொடி தன் மகனை பார்த்ததும் ஆசையாக காரை  நோக்கி சென்றார்.

பூங்கொடி வருவதை பார்த்த தேவா இவ்வளவு நேரம் தனக்கு இருந்த மொத்த டென்ஷனையும் மறந்துவிட்டு கார்  கதவை திறந்து கொண்டு நேராக அவன் அம்மாவிடம் வந்தவன் அவரை கட்டிக்கொண்டு “என்ன அம்மா நீங்க எவ்ளோ முறை சொல்லிருக்கேன் எனக்காக வெளியே ரொம்ப நேரம் வெயிட் பண்ணாதிங்கன்னு..

“நான் தான் சொன்ன நேரத்துக்கு வந்துருவேன் இல்ல… உங்களை யார் எனக்காக வெயிட் பண்ண சொன்னது. நான் சொல்றதை மட்டும் நீங்க கேட்கவே மாட்டேங்கிறீங்க” என்று செல்லமாக அவரிடம் கோவித்துக் கொண்டவன். அவர் தோளில் கையை போட்டபடி பேசிக் கொண்டே திரும்பியவன் அப்போதுதான்  அங்கே அவன் காரிக்கு முன்பு வேறு ஒரு கார் பார்க் செய்து இருப்பதை கண்டான் .

அதை பார்த்தவன் அம்மா இது யாரோட கார்  யார் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க என்றான்  சற்று தீவிரமாக.

தன் தோளில் இருந்த  தேவாவின் கையை எடுத்து விட்டவர் “என் கூட பேசாதடா நான் உன் மேல ரொம்ப கோபமா இருக்கேன். நீ இப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு நான் துளியும் நினைக்கவே இல்ல. நீயும் நானும் அம்மா புள்ள மாதிரி நடந்துக்கிட்டோம். ஒரு பிரண்ட்ஸ் மாதிரி தானே ரெண்டு பேரும் இருக்கோம் நீ எதையுமே என்கிட்ட இருந்து மறைச்சதே இல்லையே ஆனால் அம்மாகிட்ட இருந்து ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டியே .. ஏன்  என்கிட்ட இருந்து இப்படி ஒரு விஷயத்தை மறைச்சே”  என்று அவர் தேவாவிடம் கோபப்பட..

தேவாவிற்கு அவர் பேசியதை கண்டு  அதிர்ச்சியானது , தான் செய்து வரும் கள்ளத்தொழில் தன் அம்மாவிற்கு தெரிந்து விட்டதோ அதை தெரிந்து பிறகுதான் தன்னிடம் இப்படி கோபித்துக் கொள்கிறாரோ என்று  பதைப்பதை போடு  பூங்கொடியை  தேவா பார்க்க ..

“என்னடா அப்படி முழிக்கிற என்னடா அம்மாவுக்கு தெரியாம இத்தனை நாளா செய்து செய்திட்டு வந்த காரியம் எனக்கு தெரிஞ்சிருச்சுன்னு தானே நீ பயப்படுற” என்றார்.

“அம்மா.. அம்மா… அது வந்து நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்று என் தேவா அவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க..

“போதும்டா நீ எதுவும் பேச வேண்டாம் இதுவரை எங்கிட்ட இருந்து மறைச்சதெல்லாம் போதும் ” என்றவர்  அவனை திரும்பியும்  பார்க்காமல் வீட்டிற்குள் நுழைய ..

தேவாவிற்கு அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவே மிகவும்  உறுத்தலாக இருந்தது.  தன்னைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்ட அம்மா அடுத்து என்ன செய்வாரோ என்ன சொல்வாரோ என்ற பயத்தோடு முகம் வேர்த்து இருக்க  அதை துடைத்தபடி வீட்டுக்குள்  நுழைந்தான்.

வீட்டுக்குள் வந்தவன் கண்ணில் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் நடு நாயகமாக கம்பீரமாக அமர்ந்திருந்த விஜய்யை பார்த்தான். கம்பீரமாக அமர்ந்திருந்த விஜய் வாடா தேவா  உன்ன பாக்க  எவ்வளவு நேரம் தான் நான் வெயிட் பண்றது உள்ள வா என்று உரிமையாக விஜய் பேசவும் .

அவனைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் “யார் இவன் என்ன ரொம்ப தெரிஞ்சவன் போல பேசுறானே என்று கூறவும் சுருக்கி படி  விஜய்யையும் அவன் பின்னால் நின்று இருந்தால் குமாரையும் பார்த்தபடி  உள்ளே வந்தவன்.

“ஹலோ யார் நீங்க எப்படி என் வீட்டுக்குள்ள முதல்ல உங்களை யார் உள்ள விட்டது” என்று கேட்டுக் கொண்டே தேவா வர ..

“டேய் தேவா என்னடா நீ என்னதான் என் மேல கோவமா இருந்தாலும் அதுக்காக  என்ன தெரியாதவங்க மாதிரியே நடிக்கிறாயே சரி விடு என்ன தான் தெரியல பரவாயில்லை  இதோ இங்கே இருக்கிற இவங்கள கூடவா உனக்கு தெரியல என்று விஜய் தனக்கு இடது பக்கம் இருந்த சோபாவை நோக்கி கையை நீட்ட ..

அவனுக்கு இடது புறத்தில் இருந்த சோபாவில் விஜய்யை  பார்த்தபடி ஒரு பெண் அமர்ந்திருக்க அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற யோசனையோடு உள்ளே வந்தவன். அங்கே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சியானான் அவனைப் போலவே சோபாவில் அமர்ந்திருந்த பெண்ணும் தேவாவை பார்த்ததும்  அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டாள்.

தேவாவை பார்த்து பயந்தபடி நின்று இருந்தது பார்வதி உதயாவை ஏமாற்றிவிட்டு தப்பி வந்த பார்வதி தான் அங்கே அவன் வீட்டில் நின்று இருந்தாள்.

“ஏய்! நீயா? நீ எப்படி இங்க..” என்று அவன் கேட்டுக்கொண்டே வேகமாக பார்வதியை நோக்கி வர பார்வதி அவனைக் கண்டு பயந்தவள் நேராக விஜய்யிடம் சென்று அண்ணா எனக்கு பயமா இருக்கு தயவுசெய்து என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க என்று விஜய் கையை பிடித்து கெஞ்சிக் கொண்டு  நின்று இருக்க …

” டேய் தேவா அங்கேயே நில்லுடா  அந்த பொண்ணு உன்ன பார்த்தாலே பயப்படுது  பண்றது எல்லாம் பண்ணிட்டு அவளை எதுக்காக மிரட்டுற … சொல்லு அந்த பொண்ணு ஏன் உன்ன பார்த்து பயப்படுற உனக்கு அவளுக்கு என்ன சம்பந்தம் எனக்கு இப்பவே எல்லா விஷயமும் தெரிந்தாக வேண்டும்” என்று மிகவும் கோபமாக தேவாவை பார்த்தார்  பூங்கொடி

ENNAI 2-25

 “டேய் தேவா இப்ப எதுக்குடா அந்த பொண்ணை அதட்டுற… பாவம் உன்ன பார்த்தாலே அந்த பொண்ணு பயப்படுது” என்று பூங்கொடியிடம் வந்த பார்வதி . விஜய்யின் கையை பிடித்திருந்தவளின் பிரித்து தன் கைக்குள் வைத்து அவள் கையை ஆதரவாக பற்றிகொண்டவர்.

“சொல்லு டா என்கிட்ட வேற எதையும் மறைக்குறியா… உன்ன பார்த்தாலே இவ பயப்படுறா … எத்தன நாளா இது நடக்குது. எனக்கு தெரியாம இன்னும் என்னவெல்லாம் செய்து வெச்சிருக்க…” என்று கோபமாக பார்வதி தேவாவை சத்தமிட்டு கொண்டிருந்தார்.

தன் அம்மாவிற்கு தான் செய்யும் இல்லீகள் தொழில் தெரிந்துவிட்டதோ .. அதனால் தான் அவர் தன்னிடம் இப்படி கோபித்துக்கொள்கிறாரோ..  என்று யோசனையோடு பார்வதியை பார்த்தவன் .

“அ .. அம்மா… அது.. நான்…  இந்த பொண்ணு… ” என்று தேவா பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் திணறினான்.

“என்ன டா பாதி வார்த்தை தான் வெளிய வருது… அப்போ நீ செய்றது தப்புன்னு உனக்கு நல்லாவே தெரியும் . தெரிஞ்சிருந்தும் அதை நீ சரி பண்ணனும்னு நினைக்கல அப்படி தானே… ” என்று பார்வதி தேவாவை அதட்ட…

“அது அம்மா.. நான் வந்து.. இந்த பொண்ணை … கடத்தி… ” என்று தேவா சொல்லி முடிக்கவில்லை.

அவன் பேசி முடிக்கும் முன் தேவாவின் கன்னத்தை பார்வதியின் கை பதம் பார்த்திருந்து .

அதை சற்றும் எதிர் பார்க்கவில்லை தேவா.. பார்வதியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்திக்கொண்டான் தேவா.

இத்தனை ஆண்டுகளில் பார்வதி ஒரு முறை கூட அதேவாவை கை  நீட்டி அடித்ததில்லை . அதட்டி ஒரு வார்த்தை பேசியதில்லை.. ஆனால்  இன்று அவர் தன்னை பற்றி தெரிந்ததும் நடந்து கொள்ளும் விதம் கண்டு தன்னை நினைத்து தனக்கே அருவருப்பாக தோன்றியது தேவாவிற்கு.

“என்ன டா என்னை நேருக்கு நேரா பார்க்க முடியலையா… உன்னக்கு உள்ளுக்குள்ள உறுத்துதா.. ஏன் இந்த பொண்ணை கடத்தி வந்து காசுக்காக விக்க நினைச்ச நீ உன் வீட்லயும் நானும் ஒருத்தி இருக்கேனே அதை மறந்துட்டியா.. நானும் ஒரூ பொண்ணு தங்குறதை நீ மறந்துட்டியா… ” என்று அவர் வார்த்தைகளால்  தேவாவின் மனதை கிழித்துக்கொண்டு இருந்தார்.

அவர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்த தேவா “அம்மாஆ… என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. நீங்க என்னோட தெய்வம் ம்மா.. ஏன் இந்த மாதிரி பேசி என்னை காயப்படுத்துறீங்க… ” என்று தேவா கதற…

“ஏன் டா… நான் சொன்ன அந்த வார்த்தையையே உன்னால தாங்க முடியலையே.. இந்த பொண்ணை பெத்து வளர்த்தவங்களோட நிலையை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திருக்கியா நீ.. இந்த பொண்ணு மனசுக்குள்ள எவ்ளோ போராட்டம் நடந்திட்டு இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா நீ.. உன்கிட்டே இருந்து தப்பிக்க அந்த பொண்னு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும் . அவளோட மானத்தை காப்பாத்த இந்த பொண்ணு எவ்ளோ போராடி இருக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கை உங்களுக்கு எல்லாம் கிள்ளுக்கீரையா போய்டுச்சா.. அவ அனுமதி இல்லாம அவ விரல் நகத்தை கூட இங்க எந்த ஆம்பளைக்கும் உரிமை கிடையாது. அது அவ கட்டின புருஷனா இருந்தாலும் சரி… இல்ல அவ காதலிச்ச பையனா இருந்தாலும் சரி. அதுவே தப்புன்னு நினைக்குற பொண்ணுங்களும் இருக்காங்க தேவா… ” என்று கதறியவர்.

“ஏன் டா.. ஏன் டா.. இப்படி பண்ணின… உன்னை நான் நல்லவிதமான தானே வளர்த்தினேன். எதுக்காக இப்படி ஒரு கேவலமான காரியத்தை நீ செய்த.. உன்னால எப்படி இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்துட்டு என் முனியாண்டி வந்து நிக்க முடியுது . எனக்கு உன் மூஞ்சியிலையே முழிக்க வேணாம். நீ இங்க இருந்து முதல்ல போ.. ” என்றார்.

“அம்மாஆ! அப்படி எல்லாம் சொல்லாதீங்க .. இந்த உலகம் நீங்களும் நானும் அப்பா இல்லாம அனாதையா நின்ன அப்போ நம்ம ரெண்டு போரையும் எவ்ளோ கஷ்டப்படுத்திச்சு… நமக்கான ஒரு இடம் இல்லாம.. நம்மள மதிக்காம நம்ம சொந்தங்களே நம்ம ரெண்டு போரையும் ஒதுக்கி வெச்சுதே. அதையெல்லாம் மறந்துட்டீங்களா ம்மா..  அவங்க முன்னாடி உங்களை அந்தஸ்தா வாழ வைக்கணும்னு தான் நான் இந்த தொழிலையே செய்ய ஆரம்பிச்சேன். இந்த பங்களா , காசு பணம் இது எல்லாம் வந்த பிறகு தானே இந்த உலகமே நம்மள மதிச்சுது . ” என்று தேவா பேச..

“என்னடா பேசுற.. அப்போ இந்த மாதிரி பொண்ணுங்களை கடத்தி வந்து வேற எவனுக்கோ  காசுக்கு விக்குறவனும் , விபச்சாரம் செய்யுற பொண்ணுகளை கூட்டி கொடுக்குறவனுக்கும் என்னடா வித்தியாசம். என் வயித்துல பொறந்துட்டு உன்னால எப்படி இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சுது. உன்னை பெத்ததுக்கு நான் வெட்கப்படுறேன் டா… உன்னையா நான் 10 மாசம் சுமந்து பெத்தேன் ” என்று சொல்லி தன் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார் பார்வதி.

அதை பார்த்ததும் பூங்கொடி அவரிடம் ஓடி வந்து அவர் கையை பிடித்து தடுத்த்து நிப்பாட்டியவள் “அம்மா நீங்க எதுக்காக உங்களையே  கஷ்டப்படுத்திக்கிறீங்க.. நீங்க எந்த தப்பும் பண்ணலையே.. தப்பு பண்ணினவர் தானே தண்டனையை அனுபவிக்கனும். என்னோட இந்த பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வரும்னு நம்பி தான் நான் இந்த அண்ணாவை நம்பி இங்க வந்தேன். நீங்க இப்படி கதறி அழுறதை பார்க்க என்னால முடியல.. நீங்க கஷ்டப்படுறதை பார்க்க எனக்கு வலிக்குது ம்மா.. இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன் . நான் தப்பு பண்ணிட்டேன் அம்மா தப்பு பண்ணிட்டேன் ” என்று பார்வதியின் கையை பிடித்த்துக்கொண்டு அழுத்தவள் அவருக்கு  ஆறுதல் சொல்ல முற்பட்டாள்  பூங்கொடி .

“பூங்கொடி நீ எந்த தப்பும் பண்ணல.. உன்னை மாதிரி , என் மனைவி இனியா மாதிரி வேற யாரும் பாதிச்சிர கூடாதுனு தான் நான் இவனோட அம்மாவையே பார்க்க வந்தேன். என்னால இந்த விஷயத்தை தனியாவே டீல் பண்ண முடியும். தேவாவை இருக்குற இடம் தெரியாம செய்திருக்க முடியும். ஆனா…” என்று தேவாவை திரும்பி பார்த்த விஜய்.

“இவனை நம்பி இவனோட அம்மா இருக்கவும் தான் இந்த விஷயத்தை பெருசு பண்ணாம நேரா உன்னை அழைச்சிட்டு இவர்கிட்டே வந்துட்டேன். யார் எடுத்து சொன்னாலும். யார் தண்டனை கொடுத்தாலும் இவன் மதிக்க போறதில்லையின்னு நான் தேவாவை விசாரிக்கும்போதே தெரிஞ்சுகிட்டேன். அவன் கட்டுப்படற ஒரே ஆள் இவனோட அம்மா தான் அதனால தான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்தேன் . இவன் அம்மாவுக்கும் விஷயம் தெரிஞ்சிருச்சு . இனி என்ன செய்யணும்னு தேவாவோட அம்மா தான் சொல்லணும் ” என்றான்.

விஜய் பேசியதை எல்லாம் கேட்ட பார்வதி “தம்பி இந்த பொண்ணு மாதிரியே உங்க மனைவியையும் இவன் கடத்தி வந்து விக்க பார்த்தானா!! ” என்று அதிர்ச்சியாக கேட்டார்.

விஜய் அமைதியாக நிற்க… “ஆமாம் அம்மா.. இவரோட மனைவியை உங்க மகன்கிட்ட ஒருத்தன் காசுக்காக வித்துட்டான். உங்க பொண்ணை 10 கோடிக்கு வேற ஒருத்தனுக்கு வித்துட்டான் உங்க பையன். அவன்கிட்டே இருந்து எங்க பாஸ் தான் காப்பாத்தினார். இப்ப அவங்களையே கல்யாணமும் செய்துகிட்டாரு. இவர் மனைவிக்கு நடந்தது போல இனி எந்த பெண்ணுக்கும் நடக்கூடாதுனு தான் இந்த மாதிரி வேலை செய்றவங்களை தேடி கண்டுபிடிச்சு இந்த தொழிலை அடியோடு நிறுத்தணும்னு முயற்சி பங்கிட்டு இருக்காரு” என்று விஜய்யை பற்றி குமார் பெருமையாக சொன்னான்.

“தம்பி உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ப்பா… உங்களை நம்பி வந்த பொண்ணுக்கு நடந்தது போல வேற எந்த பொண்ணுக்கும் நடக்கூடாதுனு இவ்ளோ ரிஸ்க் எடுத்து இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. ஆனா என் வயித்துல பொறந்தவனை பார்த்தீங்களா எப்படி ஒரு காரியத்தை செய்திருக்கான். உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்திருக்காங்க . ஆனா நான் தான் என் புள்ளைய நல்லவனா வளர்க்க தவறிட்டேன் ” என்று தேவாவை வெறுப்பு உமிழும் பார்வையோடு பார்த்தார்.

அவர் பார்வையை எதிர் கொள்ள தேவாவிற்கு வலித்தது.

“அம்மா!!!” என்று ஓடி வந்து அவர் காலை கட்டிக்கொண்டு அழுதான்.

அவன் வந்து காலை பிடித்ததும் தன் காலை உதறிவிட்டு தள்ளி நின்றவர்.

“இனிமேல் என்னை அம்மான்னு கூப்பிடாதே .. இந்த paavapatta panaththula sambarichathu தானே இந்த veedu காசு பணம் எல்லாமே.. எனக்கு இந்த பாவப்பட்ட பணம் வேண்டாம். நீயும் வேண்டாம்” என்றவர்.

“ஆமாடி நீ எந்த ஊரு ” என்றார்.

“நான் காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில இருக்க ஒரு சின்ன கிராமத்துல இருக்கேன் ம்மா ” என்றாள் .

“அங்க உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா ” என்றார்.

அவர் பேசுவதை கேட்டுவிட்டு.. “அம்மா என்ன செய்யிறீங்க.. ” என்று தேவா எழுந்து அவரிடம் வர..

அவனை சட்டை செய்யாமல் “நீ சொல்லும்மா… ” என்றார்.

“இல்ல.. நான் சின்ன வயசுலயே என் அம்மா, அப்பாவை இழந்துட்டேன். அந்த ஊர்க்கறவங்க தான் என்னை வளர்த்தாங்க. எனக்குன்னு யாருமே இல்ல…  நான் இங்க வேளைக்கு வந்தா காசு நிறைய சம்பாரிக்கலாம்னு ஒரு ஏஜென்ட் வந்து என்கிட்டே சொன்னாரு அவரை நம்பி தான் இங்க வந்தேன். ஆனா அவன் என்னை உங்க புள்ளைகிட்ட… ” என்று தேவாவை பூங்கொடி பார்க்க…

அவளை எரித்துவிடுவது போல தேவா பார்த்தான். அதை கண்டு பூங்கொடி பயந்தவள்  “அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. என்னை எப்படியாவது என் ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க.. நான் அங்க போய்  பத்து பாத்திரம் தேய்ச்சாவது பொழைச்சுக்குறேன், ” என்று பூங்கொடி அழ..

“நீ என் கூட இந்தியா வரியா. சென்னையில என் புருஷன் சம்பாரிச்சு வெச்ச ஒரு வீடு இருக்கு. அங்க போய்  நீயும் நானும் ஏதாவது வேலை செய்து பொழைச்சுக்கலாம்” என்றார் பார்வதி.

“அம்மா.. தயவு செய்து என்னை விட்டு போகாதீங்க.. நான் பண்ணின காரியத்துக்கு மன்னிப்பு கேட்க கூட அருகதை இல்லாதவனா நான் ஆகிட்டேன். இனிமேல் நான் இந்த தொழிலை செய்யமாட்டேன் . என்னை நம்புங்க அம்மா. உங்க கூட நானும் இந்தியா வரேன்” என்றான்.

“எதுக்கு டா நீ என்கூட வரணும். அங்கையும் வந்து இங்க செய்துட்டு இருக்க தொழிலை செய்யலாம்னு நினைக்குறியா ” என்று அவர் பேச..

“ஐயோ ! அம்மா !! என்னை புரிஞ்சுக்கோங்க.. நான் பணிந்து பெரிய தப்பு தான் . இதுக்கு நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். நீங்க என்ன செய்ய சொன்னாலும் செய்றேன். என்னை நம்புங்க ” என்று அவர் காலில் விழுந்து அலுத்து கரைந்தான்.

“அம்மா தேவா தான் இவ்ளோ தூரம் கெஞ்சுறானே.. அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பாருங்க…  எப்பவும் கண்ணீர் விட்டு மனசு இறங்கு வந்து மன்னிப்பு கேக்குறவங்களை உதாசீனப்படுத்தக்கூடாது . அவங்க திருந்த அவங்க வாழ்க்கையை மாத்தி அமைச்சுக்க அவங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கணும். அதுவும் நீங்க தேவாவோட அம்மா.. நீங்க மன்னிச்சாலே உங்க மகனோட பாவோம் கரைஞ்சு போய்டும்” என்று தேவாவை மன்னித்து அவனுக்கு ஒரு வாய்ப்பு தர சொல்லி விஜய் எடுத்து கூறினான்.

விஜய்யை பார்த்தவர் குனிந்து தன் காலை பிடித்துக்கொண்டு இருந்த தேவாவை பார்த்தார்.

“பாத்தியா டா.. இந்த புள்ளைய..  உன்னால அவர் மனைவி கஷ்டப்பட்டதை எல்லாம் மறந்து உனக்காக என்கிட்டே பேசுறாரு. நீயும் இப்படி தானே டா இருந்த.. அடுத்தவங்க கஷ்டப்படுறதை பார்க்க முடியாம அவங்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வியே .. அந்த தேவா எங்க டா… என் பழைய தேவா எங்க டா . நான் அவனை திரும்ப பார்க்க முடியாதா… ” என்று அவர் அழ …

தன் தாயை இப்படி கண்ணீர் சிந்த வைத்துவிட்டோமே என்று தன்னையே நினைத்து வெட்கப்பட்டவன் “அம்மா.. என்னை மன்னிச்சிரு .. நான் தப்பானவன் தான் கேடுகெட்டவன் தான். என்னால எத்தனையோ பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.. அவங்க பாவம் எல்லாம் என்னை சும்மா விடாது. நான் எல்லாம் உயிரோட இருக்கவே லாயக்கு இல்லை… ” என்று எழுந்தவன் தன்னை சுற்றிலும்  பார்த்தான்.

இத்தனை நாள்  தன்னிடம் வேலை பார்த்தவர்கள் தன்னை மரியாதையோடு பார்த்ததையும். இப்பொது தன்னை அவர்கள் பார்க்கும் விதத்தையும் கண்டவனுக்கு தன்னை அபப்டியே எங்கேயாவது ஒலித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

இனியும் தான் உயிரோடு இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் வேகமாக டினிக் டேபிலு சென்றவன் அங்கே பழம்  நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டு “அம்மா.. என்னை மன்னிச்சிரு.. நான் இனிமேல் உயிரோட இருக்கவே லாயக்கு இல்லாதவன் ” என்று தன் கழுத்தை அறுக்க முயற்சிக்க..

அதற்குள் வந்து விஜய் தேவாவின் கையை பிடித்துக்கொள்ள…

“டேய் தேவா என்ன காரியம் டா செய்ய பாக்குற… .” என்று பார்வதி அப்படியே மயங்கி தரையில் சரிந்தார்.

அவர் அருகில் நின்று இருந்த பூங்கொடி “அம்மாஆ!.. ” என்று ஓடிச்சென்று அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்துக்கொண்டாள்.

தேவா பார்வதியிடம் ஓடி வந்தவன் அவர் பேச்சு மூச்சில்லாமல் பார்வதி மடியில் விழுந்து கிடப்பதை பார்த்தவன் “அம்மா… அம்மா… என்னை பாரும்மா..  என்னை மன்னிச்சிரு.. என்கூட பேசுமா… ” என்று கதறி அழுதான்.

ENNAI 2-26

மயக்கம் தெளிந்த பார்வதி கண்களை மெல்ல திறக்க அவர் கண் விழித்ததை பார்த்ததும் சேரில் அவர் அருகில் அமர்ந்திருந்த தேவா அவசரமாக எழுந்து அவர் அருகில் வந்தவன்  “அம்மா… அம்மா.. எப்படி இருக்க உனக்கு எதுவும் இல்லை கொஞ்ச நேரத்துல என்ன பயமுறுத்துட்டியேம்மா”என்று அழுத்தவன்.

“ஏம்மா இப்படி மயங்கி விழுந்த உன்ன தான் டாக்டர் டென்ஷன் ஆக கூடாதுன்னு சொல்லி இருக்காரு” என்று தேவா பதற..

தேவா மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து சந்தோஷப்பட்டாலும் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்தது  தெரிந்த பிறகு அவன் மீது அவருக்கு வெறுப்பு தான் வந்தது. அவனை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் பார்வதி.

அவரிடம் வந்த விஜய்  “அம்மா உங்க கோபம் நியாயம் ஆனது தான். இந்த விஷயத்தை நானே டீல் பண்ணி உங்க மகனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனா அவனுக்கு அது பெரிய விஷயமா தெரியாது. தேவா செய்த தப்பை அவன்  உணரணும்னு தான் உங்ககிட்டே நான் விஷயத்தை நேரடியா வந்து சொன்னேன்.” என்றவன்.

“சட்டப்படி தேவாவுக்கு தண்டனை வாங்கி தரதுனால அவன் திருந்தி வாழ்திருவானு எனக்கு நம்பிக்கை இல்ல.. அவனுக்கு நீங்க கொடுக்கிற தண்டனை தான் அவனை ஒரு நல்ல மனுசனா மாத்தும். அவனுக்கு தான் செய்தது எவ்ளோ பெரிய தப்புன்னு புரிய அவரும் . கண்டிப்பா தேவாவோட தவறை அவன் இந்நேரம் உணர்ந்திருப்பான்னு நான் நம்புறேன் ” என்று தேவாவை பார்த்தான் விஜய் .

“நீங்க உங்க மகனை நம்புங்க அவன மன்னிச்சு ஏத்துக்கோங்க. அவன் இனிமேல் திருந்தி வாழ்வன்னு நான் நம்புறேன் ”  என்று தேவாவிற்காக விஜய் பார்வதியிடம் பேசினான்.

தேவாவிற்க்கோ விஜய்யின் மீது கோபம் தான் வந்தது நடந்த இத்தனைக்கும் முக்கிய காரணமே அவன் தானே அவனோடு கூட்டு சேர்ந்து இந்த பூங்கொடியும் தன்னை அம்மாவிடம் போட்டு கொடுத்து விட்டாளே என்று கோபம் ஒரு பக்கம்

இருந்தாலும் தன் அம்மாவின் இந்த நிலைமைக்கு காரணம் தான் செய்து தொழிலால்  தானே இத்தனை வினையும் வந்தது. அவன் அம்மாவின் உடல்நிலையம்  இவ்வளவு மோசமானது என்று நினைத்தவன். இனி தெரியாமல் கூட இப்படி ஒரு தவறான தொழிலையோ எந்த ஒரு தவறான காரியத்தையோ  செய்யக்கூடாது என்று முடிவு எடுத்தவன்.

“அம்மா என்னை நம்புங்க நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போறதில்ல..  நீங்க நான் ரெண்டு பேருமே கிளம்பி சென்னை போயிடலாம். அங்கே நான் புதுசா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி அது நல்ல முறையில் போட்டு இருக்கு. நம்ம அங்க போய்டலாம் இனிமேல் இந்த மாதிரி ஒரு கேவலமான செயலை நான் செய்யவே மாட்டேன் ” என்றார் 

“அப்போ இந்த ஊரை விட்டு போயிடலாம்னு சொல்றியா..  அப்ப இனிமேல் என் பழைய தேவாவ நான் பார்க்க முடியுமா” என்றார்.

“கண்டிப்பா மா நான் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு முன்னேறி காட்டுறேன் . நான் தப்பான வழியில் சேர்த்த இந்த சொத்து எனக்கு வேண்டாம். எல்லாத்தையும் நான் இந்த ஊர்ல இருக்கிற டிரஸ்க்கு எழுதி வெச்சிடறேன். நான் இங்கே வந்த போது கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச காசுல  இந்தியாவுல என்னோட பிரண்டு கூட சேர்ந்து இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். அந்த பிசினசை  நான் முழு நேரமும் பார்க்கலாம்னு நினைக்கிறேன். என்னை நம்புங்க…  கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்” என்றான்.

“அப்போ இனிமேல் எந்த ஊர் பக்கமே நீ தல வெச்சும் படுக்கக் கூடாது உனக்கும் நீ செய்துட்டு இருந்த வேலைக்கும்  எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் இதை செய்ய மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு” என்றார்.

அவர் கேட்டதும் சிறிதும் யோசிக்காமல் பார்வதியின் கையைப் பிடித்து “உங்களுக்கு உடம்பு சரியானதும் நம்ம ரெண்டு பேரும் சென்னைக்கு போயிடலாம். இனிமேல் மறந்தும் கூட நான் இந்த பக்கம் வரமாட்டேன். என்ன நம்புங்க இது உங்க மேல சத்தியம்” என்றான்.

அவன் சத்தியம் செய்ததில் சந்தோஷமானார் பார்வதி விஜய்யிடம் திரும்பி “தம்பி நல்ல நேரத்தில் என் பையனோட வாழ்க்கைய திசை திருப்பி விட்டுருக்கீங்க.   உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்” என்றவர்.

ஆமா தம்பி பூங்கொடி எங்கே..” என்று அந்த அறையில் தேடியவர்.

அவள் அந்த அறையின் மூலையில் ஓரமாக நின்று இங்கு நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள் .

அவளை பார்த்ததும் “பூங்கொடி இங்கே வா..” என்று அழைத்தார் அவள் தேவாவை பார்த்து தயங்கிய படியே பார்வதியிடம் வர..

“நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா மறுக்காமல் செய்வியா” என்றார்.

“என்னம்மா இப்படி கேக்குறீங்க என் வாழ்க்கையை விஜய் சார் காப்பாற்றி கொடுத்தார். அதேபோல நீங்க எனக்கு ஆதரவா உங்க பையனுக்கு எதிரா நின்னீங்க இப்படிப்பட்டவங்க எனக்கு நல்லது தான் நினைப்பீங்க. நீங்க என்னனாலும் என்கிட்ட கேளுங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்” என்றாள் .

“அப்போ இங்க வா..” என்றவர் பூங்கொடியை தன் பக்கம் இழுத்து அவள் கையைப் பிடித்து  தேவாவின் கைக்குள் வைத்தவர்.

“என் மகனை நீ கல்யாணம் செய்துக்கணும்” என்றார் இதை தேவாவோ பூங்கொடியோ எதிர்பார்க்கவில்லை. இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் திரும்பி பார்க்க..

ஒரு கணம் இருவரின் பார்வையும் மோதிக் கொண்டன … தேவாவை எதிர்கொள்ள முடியாமல் பூங்கொடி  சட்டென பார்வையை தாழ்த்திக் கொண்டாள் .

பூங்கொடி அமைதியாக நிற்க “என்ன பூங்கொடி  என் பையன கல்யாணம் பண்ண தயக்கமா இருக்கா.. அவன் என்ன தொழில் செய்துட்டு இருந்தான் எப்படிப்பட்டவன்னு  உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கிறப்போ அவனுக்கு போய் உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நினைக்கிறியா” என்றார் பார்வதி வருத்தமாக.

“அச்ச்ச்சோ அப்படி இல்லம்மா.. எனக்கு இவரை பாக்குற அப்போ பயமா இருக்கு.. இவரை எப்படி நான் கல்யாணம் செய்த்துக்குவேன்” என்று பூங்கொடி தேவாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“அவனை பார்த்து நீ எதுக்கு பயப்படற.. அவன் செய்த காரியத்துக்கு என் புள்ளை தான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்.” என்றவர் .

“டேய் தேவா என்ன டா பாத்துட்டு இருக்க… பூங்கொடி கால்ல விழுந்து நீ அவளுக்கு செஞ்ச காரியத்துக்காக மன்னிப்பு கேளு.. ” என்று அவர் அதட்ட..

இதை சற்றும் எதிர்பார்க்கத்தவன் “அம்மா! என்ன இது… நான்  எப்படி இவ கால்ல … ” என்று பூங்கொடியை அப்படிய்யே பார்வையால் பஸ்பமாக்குவது போல பார்த்தான் தேவா.

அதை கண்டு பூங்கொடி பயந்தவள் “அம்மா! என்ன இது .. இதெல்லாம் எதுவும் வேணாம்” என்று பதறினாள்.

“அப்போ நீ என் பையன மன்னிக்கனும்னு நினைச்சா அவனை  கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லு..” என்றார் பார்வதி.

“அம்மா என்ன இது .. ஏன் இப்படி பண்றீங்க.. ” என்று தன்னை இப்படி ஒரு நிலைக்கு தள்ளிய பூங்கொடியை பார்க்க பார்க்க தேவாவிற்கு கோபம் தான் அதிகம் ஆனது.

தன் அம்மாவை வைத்தே இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தன்னை தள்ளியவளை நினைத்து ஒருவித வெறுப்பு அவள் மேல் சூழ்ந்து அவனுக்கு.

“என்ன பூங்கொடி யோசிக்குற… அவனுக்கு வேற ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்றது விட அவன பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சுகிட்ட  நீயே கல்யாணம் பண்ணினா சரியா இருக்கும்னு எனக்கு தோணுது” என்று கூற..

பூங்கொடி தயக்கமாக தேவாவை பார்த்தாள். தேவாவோ அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“அம்மா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. நான் எதுக்காக இவளை கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம். எனக்கு நீங்க மட்டும் போதும் நம்ம ரெண்டு பேரும் சென்னைக்கு போகலாம். நான் ஏன் இப்படி தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்” என்று பூங்கொடியை திருமணம் செய்து கொள்ள தேவா மறுக்க..

“டேய் நீ பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம்  பண்ண வேண்டாமா.. அதுக்கு தான் சொல்றேன். நான் சொன்னதை நீ கேட்டுத் தான் ஆகணும். சென்னை போனதும் முதல் வேலையா உனக்கும் பூங்கொடிக்கும் கல்யாணம். இதுக்கு மேல எதுவும் பேசாத” என்று அவர் கராராக கூறிவிட…

இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை பூங்கொடி அமைதியாக நின்று இருக்க “பூங்கொடி நீ தான் என் வீட்டு மருமக நீ முடியாதுன்னு சொன்னாலும். நான் உன்னை விடப்  போறதா இல்ல… என் மகனுக்கு நீ தான் சரியான ஜோடி” என்றார்.

“அம்மா நீங்க சரியான முடிவு தான் எடுத்திருக்கீங்க. உங்க மகனுக்கு பொறுப்பு வரணும்னா கண்டிப்பா அவருக்கு கல்யாணம் செய்து வைக்கிறது தான்  சரி” என்றான்  குமார்.

அவன் பேச்சை  கேட்டு திரும்பி தேவா குமாரை முறைக்க சட்டென அவன் பக்கம் இருந்த தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அதான் வந்த வேலை முடிஞ்சுது இல்ல… இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் இங்க என்ன வேலை முதலில் இங்க இருந்து கிளம்பி போங்க” என்று கோபமாக விஜய், குமார் இருவரையும் பார்த்து தேவா சத்தமிட..

“டேய் என்னடா பழக்கம் இது அவங்க இல்லைன்னா எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரிஞ்சிருக்காது. நான் என் பையன் ஏதோ பெரிய பிசினஸ் பண்ணிட்டு இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான்னு மட்டும் தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அவங்க சொன்னதுனால தானே உண்மை என்னன்னு எனக்கு தெரிய வந்துச்சு. விஜய் தம்பி நல்லது தான் பண்ணி இருக்கு. அதனால தான் நீ இப்போ அந்த தொழிலை மொத்தமா விட்டுட்டு என்கூட சென்னை வரேன்னு சொல்லி இருக்க அதை ஞாபகத்துல வச்சுக்க” என்றவர்.

“விஜய் தம்பி என் பையனுக்கு சென்னையில கல்யாணம் செய்யும் போது நீங்களும் உங்க மனைவியும் கண்டிப்பா வரணும்” என்றார் பார்வதி.

“நிச்சயமா வருமா நீங்க இப்போ நல்லா ரெஸ்ட் எடுங்க” என்றவன்.

“தன் விசிட்டிங் கார்டை பூங்கொடியிடம் நீட்டி நீங்க இந்தியா வரும்போது எனக்கு கால் பண்ணுங்க. எந்த உதவி வேணும்னாலும் தயங்காம என்ன கேளுங்க” என்றவன்.

தேவாவை பார்த்து “நீயும் தான் உனக்கு எப்போ என்ன வேணும்னாலும், உன்னோட பிசினஸ் டெவலப்மெண்ட்டுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம எனக்கு நீ கால் பண்ணு” என்றான் விஜய்.

“அப்படி ஒரு அவசியமும் எனக்கு கிடையாது எனக்கு என்னை  பாத்துக்க தெரியும் முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்பலாம்” என்றான் முகத்தில் அடித்தார் போல..

தேவா  தன் மீது கோபப்படுவது நியாயம் தான் என்று இதை அமைதியாக எடுத்துக்கொண்டான் விஜய்.

“சரிமா நான் வந்த வேலை  முடிஞ்சிடுச்சு. நானும் சென்னை தான் கிளம்ப போறேன். நீங்க அங்க வந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்றவன். பூங்கொடியிடமும் பார்வதி இடமும் சொல்லிக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் தனது பிரைவேட் ஜெட்டில் இந்தியாவுக்கு கிளம்பி இருந்தான்   இனி இனியாவின் வாழ்வில் எந்த ஒரு கஷ்ட்டமான  சூழ்நிலையும் வராது . அவள் சந்தோசமாக இனி வாழலாம் என்று அவளிடம் நம்பிக்கை வார்த்தை சொல்ல ஆவலாக கிளம்பி இருந்தான்.

உண்மையில் இப்பொது விஜய்யின் மனதில் தாமரையை பற்றிய சிந்தனைகள் எழுவதில்லை.. அனுதினமும் இனியாவும், அவள் வயிற்றில் வளரும் தன் குலமந்தியின் நினைப்பும் தான் அவன் மனதை நிறைத்திருந்தது. அதே  ஆர்வத்தோடு கிளம்பி இருந்தான் இந்தியாவுக்கு.

ENNAI 2-27

“என்ன இனியா இது இப்படி எதை குடுத்தாலும் சாப்பிட பிடிக்கலையின்னா என்ன செய்றது . ஏற்கனவே உனக்கு உடம்பு வேற ரொம்ப வீக்கா இருக்கு. நல்லா சாப்பிட்டா தானே நீயும்  வயித்துல  இருக்க குழந்தையும் ஆரோக்கியமா இருக்க முடியும் ” என்று கையில் உணவை வைத்துக்கொண்டு இனியாவை சாப்பிட வைக்க போராடிக்கொண்டு இருந்தார்.

“அத்த .. எனக்கு வேணாம். ஏற்கனவே நான் சாப்பிட்டதே நிறைய இருக்கு.. இதுல இப்போ இந்த fruits  எல்லாம் கொடுத்து சாப்பிட சொல்றிங்க.. என்னால முடியாது. அப்பறோம் நைட் எனக்கு சரியா தூக்கமும் வராது … ” என்று அதிதி கொடுத்த பழங்களை  வேண்டாம் என்று அவரிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

“அத்த நீங்க இவ்ளோ பழத்தை  கொடுத்தா அவ எப்படி சாப்பிடுவா… இப்போ தானே டின்னை முடிச்சா.. அதுவுமில்லாம நைட் டைமில் fruits  சாப்பிட கூடாது” என்று இனியா கையில் இருந்த பழத்தட்டை  வாங்கிவிட்டு thn கையில் கொண்டு வந்த பால் டம்பளரை இனியாவின் கையில் திணித்த தாமரை .

“இனியா நீ இந்த பாலை மட்டும் குடிச்சிரு.. இதுல குங்குமப்பூ பானக்கற்கண்டு எல்லாம் போட்டு காய்ச்சி இருக்கேன்.  நைட் டைம்ல குடிச்சிட்டு படுத்தா சீகிரியாம் ஜீரணமும் ஆகிடும், தூக்கமும் உனக்கு நல்லா வரும் ” என்று அவளை குடிக்க சொன்னாள்  தாமரை.

“தமர  அக்கா.. அவங்க பழத்தை சாப்பிட சொல்லி கம்பெல்  பண்றங்கன்னா நீங்க பாலை குடிக்க சொல்லி கம்பெல்  பண்றீங்க.. எதுவுமே எனக்கு இப்போ வேணாம். நான் ஏற்கனவே சாப்பிட்டதை எப்படி ஜீரணம் செய்றதுன்னு தெரியாம இருக்கேன்” என்று அவள் கொடுத்த பாலை திருப்பி தாமரையிடம் நீட்ட…

“இனியா சொன்னா கேளு பேசாம நான் குடுத்த பாலை குடிச்சிரு.. ” என்று தாமரை இனியாவை அதட்ட…

“அவ தான் பாலை  வேணாம்னு சொல்றா இல்ல தமர விடு.. ” என்ற அதிதி.

“நீ இந்த பழத்தை கொஞ்சமா சாப்பிடு ” என்று அவளிடம் தாமரை கையில் இருந்த பழ  தட்டை வாங்கி இனியாவின் முன்பு நீட்ட..

அவர்கள் இருவரையும் செய்வதறியாது பார்த்துக்கொண்டு இருந்த இனியா .

“எனக்கு பால், பழம்  எதுவம் வேணாம் சொன்னா  கேளுங்க… பாட்டி  நீயாவது இவங்க கிட்டே சொல்லேன்” என்று மரகதத்திடம் கூறினாள் .

“இப்படி என் பேத்தியை மாத்தி மாத்தி தாங்குறவங்களை  நான் எப்படி வேணாம்னு சொல்லுவேன். இத்தனை  வருசமா நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வந்திருக்கு இனியா. எனக்கு இதை எல்லாம் பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு.. ” என்று அவர் தன் பேத்தியின் வாழ்க்கை மாறிவிட்டதை  நினைத்து சந்தோசமானவர்  “கொஞ்சமா பழத்தை  சாப்பிட்டுட்டு அப்டியே அந்த பாலையும் குடிச்சிரு மா … ” என்றார்.

“பாட்டி!! நீயுமா!!” என்று இனியா அலுத்துக்கொள்ள…

“இனியாவை யாரும் கம்பெல் பண்ணாதீங்க.. அவளுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்யட்டும்” என்று அறை வாசலில் கைகளை கட்டிக்கொண்டு இனியாவை தன் குடும்பம் மொத்தமும் தன் மனைவியை தங்குவதை பார்த்து சந்தோசத்தோடு நின்றிருந்தான் விஜய்.

விஜய்யின் குரலை கேட்டதும் மொத்த பேரும் திரும்பி வாசலை பார்க்க… “என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க..” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்தான்.

விஜய்யை பார்த்ததும் முதலில் சந்தோசமான தாமரை “விஜய் மாமா! எப்போ வந்திங்க… யார்கிட்டேயும் ஊருக்கு வரேன்னு சொல்லவே இல்ல நீங்க… ” என்று மிகவும் மகிழ்ச்சியாக அவனிடம் பேச ஆர்வமாக ஓட எத்தனித்த தன் கால்களை சுற்றி இருந்த தன் குடும்பத்தை எண்ணியும், இனி விஜய் தனக்கானவன் இல்லை என்ற எண்ணத்திலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றாள்.

அதை இனியாவும் கவனிக்க தவறவில்லை.. ஆனால் தாமரையின் பேச்சை அவள் தவறாகவும் நினைக்கவில்லை.

தாமரையை பார்த்தபடி உள்ளே வந்தவன் “நான் இந்தியா கிளம்பினதை உங்ககிட்டே சொல்லிட்டா.. இனியாவுக்கும் நான் வரது  தெரிஞ்சிரும் . அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் உங்க யார்கிட்டேயும் நான் சொல்லாம கிளம்பி வந்தேன் ” என்று தாமரையிடம் தான் இப்பொது இனியாவின் கணவன். இனி தன் வாழ்வில்  அவளுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி இருந்தான் விஜய்.

அவன் பதிலை புரிந்து கொண்டவள் “இனியா நீ இந்த  பாலை குடிச்சிரு.. நான் தூங்க போறேன் ” என்று வாடிய முகத்தோடு விஜய்யின் அறையை விட்டு கிளம்பி இருந்தாள் .

மரகதமும் “நான் மாத்திரை போடணும் தம்பி மறந்துட்டேன். நீங்க இப்போ தான் வந்திருக்கீங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று நாசுக்காக கிளம்ப…

“விஜய் சாப்பிட எதுவும் குடுத்து விடட்டுமா டா.. மணி வேற 10 ஆச்சு நீ சாப்டியா? ” என்றார் அக்கறையோடு.

“இல்லமா எனக்கு எதும் வேணாம். அதான் இங்க FRUITS , பால் எல்லாம் இருக்கு இல்ல இதுவே கொஞ்சம் சாப்பிட்டுகிறேன்” என்றான் விஜய்.

“சரி டா இவளையும் கொஞ்சம் சாப்பிட வெச்சிரு.. ” என்று கிளம்பியவர் அவர்கள் அறைக்கதவை சாற்றி விட்டு சென்றார்.

அவர் சென்றதும் விஜய் டேபிளில்  இருந்த பாலும், பழமும் இருப்பதை பார்த்தான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த இனியாவையும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்ற… தன் எண்ணத்தை நினைத்து ஆச்சர்யபப்ட்டவன் அதை புறந்தள்ளிவிட்டு .

“என்ன இனியா இதுல எதுவும் சாப்பிடறியா  நீ… ” என்று அவளை நோக்கி நடந்து வந்தான்.

யாரும் இல்லா இந்த அறைக்குள் விஜய்யுடன் தான் மட்டும் தனியாக  இருக்கவும் இனியாவுக்கு சற்று பதற்றம் ஆனது. அவன் அருகில் வரவும் அந்த பதற்றம் மேலும் அதிகம் ஆனது .

அவசரமாக கட்டிலில் இருந்து இனியா எழுந்திருக்க… கையில் இருக்கும் கட்டை மறந்து கையை கட்டிலில் இடித்துக்கொண்டாள் “ஷ்… அம்மாஆ!! ” என்று வலியில்  இனியா அலறியபடி எழுந்தவள் நிற்க முடியாமல் தடுமாற…

“ஏய்! ஏய்! பாத்து இனியா இது… ” என்று அவள் அருகில் வந்து அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி தாங்கி பிடித்தவன் .

“இப்போ எதுக்கு நீ எழுந்த… ” என்றான்

அவன் தோளில்  சாய்ந்து அவனை பார்த்துக்கொண்டு இருந்த இனியாவை பார்த்து.

அவனை அவ்வளவு அருகில் பார்த்தவளுக்கு இதயம் படபடவென துடித்தது. அவள் இமைகள் படபடக்க விஜய்யை பார்த்துக்கொண்டு இருந்தாள் .

இனியாவை தாங்கிய படி அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன். “இப்படி பட படன்னு இருக்காத .. கொஞ்சம் பொறுமையா நிதானமா இருக்க ட்ரை பண்ணு இனியா ஏற்கனவே உனக்கு அடி  பட்டு இருக்குல்ல… ” என்றவன் அவளை அமரவைத்துவிட்டு அடிபட்ட அவள் கரத்தை மெல்ல எடுத்து அவள் அருகில் அமர்ந்து கொண்டு கையில் காயம் எதுவும் ஆனதா என்று பார்த்தான்.

விஜய் தன் கையை தொட்டு தடவி ஆராயவும் இனியாவுக்கு கூச்சமாக இருந்தது. அவள் நெளிந்து கொண்டே.. “சார் நானே பாத்துக்கிறேன். அடி பெருசா எதுவும் ஆகல… ” என்று அவன் கைக்குள் இருந்த தன் கையை மெல்ல எடுத்துக்கொள்ள..

இனியா முகத்தை பார்த்தவன் அவள் கூச்சப்படுவதை உணர்ந்து மெல்ல சிரித்தான்.

“பால் சூடா இருக்கு.. அறிடப்போகுது நீ குடிச்சிரு ” என்று பால் டம்பளரை எடுத்து அவள் கையில் கொடுக்க போனவன்.

இனியாவின் வலது கையை பார்த்தவன் அதில் கட்டு போட்டிருக்க… அவள் வாய் அருகே பாலை கொண்டு போனவன் குடிக்க சொன்னான் .

“சார் இல்ல எனக்கு வேணாம்  “என்றாள்.

“ஏன் நான் குடுத்தா குடிக்க மாட்டியா… ” என்றான் விஜய் .

“இல்ல சார் அப்படி.. இல்ல… ” என்று அவள் தயங்க…

“உனக்கு தான் கையில கட்டு போட்டிருக்கே.. நானே குடுக்கிறேன் நீ குடி… ” என்றான்.

“இல்ல சார் நான் நைட் நிறைய சாப்பிட்டேன். அதனால  தான் அவங்க சாப்பிட சொன்ன அப்பாவும் நான் வேணாம்னு சொன்னேன் . நீங்க தான் எதுவும் சாப்பிடலையே.. பேசாம இந்த FRUITS , பால் ரெண்டையும் நீங்களே சாப்பிடுங்களே … ” என்றாள்.

“நான் போன வேலை முடிஞ்சதும் முதல் வேலையா  உன்னை பார்த்து இனி எந்த பிரச்னையும் உனக்கு இல்லேன்னு சொல்லாம்னு கிளம்பி வந்துட்டேன். ஆனா இப்போ பசிக்குது தான் ஆனா ரொம்ப இல்ல.. எனக்கு இவ்ளோ வேணாம் ” என்றான்.

“சார் அப்போ நீங்க.. அந்த செல்வாவை பார்த்திங்களா.. அவனால உங்களுக்கு எந்த  பிரச்சனையும் வரலையே.. ” என்று அவனை ஆராய்ந்தபடி கேட்டாள்.

“எனக்கு எதுக்குவம் ஆகல.. அதை பத்தி அப்பறோம் பேசிக்கலாம். ” என்றவன் அவன் கையில் இருந்த பாலை  அவள் வாய் அருகில் கொண்டு சென்றவன் “நீ கொஞ்சம் பாலை குடிச்சிட்டு பழத்தையும்  சாப்பிடு , நானும் உன்னோட சேர்ந்து சாப்பிடறேன் ” என்றான்.

“சார் எனக்கு வேணாம் வயிறு புல்லா இருக்கு.. ” என்று இனியா மறுக்க…

“நான் கொடுத்தாலும் சாப்பிட மாட்டியா.. ” என்று அக்கறை கலந்த ஏக்கத்தோடு அவளிடம் விஜய் கேட்க…

அதற்கு மேல் மறுக்காமல் அவன் கொடுத்த பாலை கொஞ்சமாக குடித்துவிட்டு “போதும் சார்” என்றாள் .

“இன்னும் கொஞ்சம் ” என்று விஜய் முகத்தை சுருக்கி அவளிடம் கெஞ்சுவது போல  கேட்க..

அவன் அழகு முகத்தை  பார்த்து கியூட்டாக அவளிடம் கெஞ்சுபனை விழி இமைக்காமல் பார்த்தாள் .

“குடி இனி… ” என்று அவள் பெயரை சுருக்கி செல்லமாக விஜய் கூப்பிட..

அதை கேட்டு அவள் உள்ளத்தில் சந்தோசம் பெருக்கெடுத்தது. அதே சந்தோசத்தோடு அவன் நீட்டிய பாலை மீண்டும் கொஞ்சம் குடித்துவிட்டு “வேணாம் சார் போதும்.. எனக்கு இந்த ஸ்மெல் வாமிட் வர மாதிரி இருக்கு..” என்றாள்  கெஞ்சும் குரலில்.

அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் மிச்சம் இருந்த பாலை விஜய் குடிக்க… “சார்!! அது எச்சி… ” என்று அவள் கூறி முடிக்கும் முன் பாலை முழுவதும் குடித்துவிட்டு அவளை பார்த்தவன் “என்ன இனி சொன்ன…  ” என்றான் .

“ம்ஹும்.. ஒண்ணுமில்ல சார்.. ” என்று அவனை பார்த்தாள்.

“சரி இரு நான் போய் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வரேன் வந்து FRUITS  சாப்டுக்கலாம்” என்று எழுந்தவன் தன் கோட்டை கழட்டி சேரின் மீது வைத்தவன் சட்டையை கழட்டிக்கொண்டே  பாத்ரூம் நோக்கி நடந்தான்.

சட்டையை கழட்டிவிட்டு வெற்று  உடம்போடு விஜய் பாத்ரூமிற்குள் நுழைய கட்டிலில் அமர்ந்தபடி அவன் பரந்த முதுகை ரசித்தபடி அமர்ந்து இருந்தவளுக்கு அவன் தரிசனம் மறையவும் ஏக்கமானது  மீண்டும் ஒரு முறை அவனை அப்படி பார்க்க மாட்டோமா என்று அவள் மனம் ஏங்கியது . அந்த பரந்த முதுகில் தன்னை உப்பு மூட்டை தூக்கி சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள் .

அதை நினைக்கும்போதே அவ்வளவு பரவசமாக இருந்தது இனியாவிற்கு.. அதே நினைப்பில் சிரித்த முகமாக அமர்ந்து இருந்தவளிடம் “இந்த FRUITS  கொஞ்சம் சாப்பிடறியா ” என்று ஒரு கையில் தட்டை எடுத்துக்கொண்டு மறு  கையால் தலையை துவட்டிக்கொண்டு அவளை நோக்கி வந்தவனை பார்த்து இனியாவுக்கு மூச்சே நின்று போனது.

ENNAI 2-28

கையில் பழத்தட்டுடன் இனியாவின் முன்பு நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு இதயம் ஒரு நொடி நின்று மீண்டும் துடித்தது.

ஒரு குட்டி ட்ராவ்ர் அணிந்துகொண்டு சட்டை இல்லாமல் தொழில் துண்டை போட்டுக்கொண்டு அந்த துண்டில் தலையை துவட்டியவாறே “இனி இந்த fruits  கொஞ்சம் சாப்பிட்டுக்கோ.. ” என்று அவள் முன்பு வந்து நின்றான் விஜய் .

அவனை அப்படி நெருக்கத்தில் பார்த்தவள் சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக்கொண்டு “சார் எனக்கு வேணாம் நான் ஏற்கனவே நிறைய சாப்பிட்டேன் ” என்றாள் .

“கொஞ்சமா சாப்டுக்கோ இனி ” என்றவன் முட்டிகால் இட்டு  அப்படியே நகர்ந்து வந்து இனியாவின் முன்பு அமர்ந்தவன் பழத்தில் குதி வைத்திருந்த போர்க்கை எடுத்து அதில் ஒரு பழத்தை  எடுத்து இனியாவின் வாய் அருகில் கொண்டு சென்றவன் “ம்ம்… சாப்பிடு.. ” என்றான் .

மெல்ல கண்களை உயர்த்தி அவனை பார்த்தவள் “ச… சார்.. எனக்கு.. வேணாம்” என்று அவள் எச்சில் விழுங்க…

“ஏன் இனி வேணாமா? ” என்று அவளை பார்த்தான்.

“ம்ஹும்..வே… வேணாம் சார்..” என்று அவள் பேச தடுமாற…

அவள் தடுமாற்றத்தை கவனித்தவன் “என்ன ஆச்சு இனியா ஒரு மாதிரி பதட்டமா  இருக்க.. உடம்புக்கு எதுவும் பண்ணுதா ” என்றான் பழத்தட்டை  மெத்தையில் வைத்துவிட்டு அவளை ஆராய்ந்தபடி கேட்டான்.

“ம்ம்.. ஆமா  சார் ” என்றாள்  இனியா தயங்கியபடியே.

“ஏன் இனி  என்ன ஆச்சு.. ” என்றவன் இனியாவின் நெற்றியில் கைவைத்து தொட்டு பார்த்தவன் அவளுக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்பதை கண்டு நிம்மதி அடைந்தவன்.

“உடம்பு நல்லா தானே இருக்கு.. அப்புறம் ஏன் நீ பதட்டமா இருக்க.. ” என்றான் விஜய் கவலையாக.

“அது.. அது வந்து … ” என்று இனியா கைகளை பிசைந்தபடி அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் .

“நீங்க.. நீங்க இப்படி அறையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு வந்து என் பக்கத்துல உக்காந்ததும் தான் எனக்கு இந்த பதட்டம் வந்து தொத்திக்குச்சு.. உங்களை இப்படி பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு ” என்றாள்  இனியா..

அவன் கட்டுமஸ்தான உடலை அவனுக்கு தெரியாமல் ரசித்தபடி .

அவள் சொன்னதும் தன்னை ஒரு முறை குனிந்து பார்த்த விஜய் .

“இது நான் எப்பவும் ரூமில் இருக்க அப்போ இப்படி தான் இருப்பேன். நீ என்ன என்னை பார்த்து அறையும் குறையுமா வந்திருக்கேன்னு சொல்ற.. ” என்று சிரித்தான்.

“நான்.. நான் .. உங்கள… ” என்று இனியா அவனை நிமிர்ந்து பார்த்தவள் விஜய்யின் கண்களை நேருக்கு நேராக  சந்திக்க முடியாமல் சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக்கொண்டவள்.

“எனக்கு உங்களை இப்படி பாக்க ஒரு மாதிரியா இருக்கு.. நான் உங்களை இப்படி இதுக்கு முன்ன பார்த்ததே இல்ல . அதான் … ” என்று இனியா நிறுத்த..

“ஓ! சாரி இனியா . நான் பழக்கதோஷத்துல குளிச்சிட்டு அப்படியே வந்துட்டேன். இரு நான் போய்  டீ ஷர்ட் போட்டுட்டு வரேன் ” என்று மெத்தையில் இருந்து விஜய் எழுந்திருக்க போக..

“சார்! இல்ல பரவால்ல இருக்கட்டும் ” என்று அவசரமாக அவனை தடுத்தாள்.

“ஏன் இனி ” என்று விஜய் இனியாவை புரியாமல் பார்க்க…

“எப்படியும் நீங்களும் நானும் தான் இந்த ரூம்ல இருக்க போறோம். அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல சார் . நான் பழகிக்கிறேன் ” என்றாள்.

“இல்ல வேணாம் . உனக்கு என்னை இப்படி பார்க்க கூச்சமா இருக்கும் . நீ சொன்னது தான் கரெக்ட் நான் ஒரு பொண்ணு இருக்குற ரூமுக்குள்ள இப்படி அறையும் குறையுமா இருந்தா சரியா இருக்காது ” என்று எழுந்திருக்க போக…

“சார்.. நான் தான் சொல்றேனே.. இப்படியே  இருங்க.. உங்களை இப்படி பாக்க எனக்கு ஒன்னும் கூச்சமா இல்ல… நீங்க… உங்க சிக்ஸ் பேக் பாக்க நல்லா தான் இருக்கு. அப்பறோம் நான் யாரோ பொண்ணு கிடையாது. உங்க பொண்டாட்டி தானே.. அப்போ என் முன்னாடி நீங்க எப்படி வேணா இருக்கலாம் நான் இனி எதுவும் சொல்ல மாட்டேன் ” என்று அவன் கையை பிடித்து நிப்பாட்டினாள்.

அவள் சொன்னதை ஆச்சர்யமாக கேட்டவன் இனியா  இப்படி மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறியதை கேட்டு மெல்ல சிரித்தவன் . “பரவால்லையே  நல்லா  பேசுற நீ… ” என்று அவள் அருகில் அமர்ந்தவன்.

“சரி இந்த பழத்தை கொஞ்சமா சாப்பிடு” என்று ஒரு பழத்துண்டை எடுத்து அவள் முன் நீட்ட…

வெட்கபட்டுக்கொண்டே விஜய் நீட்டிய பழத்தை சாப்பிட வாயை திறந்தவள் அந்த பழத்தின் வாசம் பிடிக்காமல் குமட்டிக்கொண்டு வர..  அவசரமாக பெட்டை  விட்டு எழுந்தவள் பாத்ரூமை நோக்கி ஓடினாள்.

அவள் அவசரமாக ஓடுவதை பார்த்தவன் “ஏய்! இனி!… ஏன் இவ்ளோ வேகமா ஓடுற… வயித்துல குழந்தை இருக்குல்ல… ” என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னால் சென்றவன் இனியா பாத்ரூமில் இருந்த வாஷ் பேசினில் வொமிட் செய்து கொண்டு இருப்பதை பார்த்ததும் வேகமாக அவள் அருகில் வந்து இனியாவின் தலையை பிடித்துக்கொண்டு நின்றான்.

“சார்… பரவால்ல விடுங்க நான் பார்த்துகிறேன் ” என்றவள் அடுத்து பேச முடியாமல் உவெக்… உவெக்… என்று என்று மீண்டும் வாந்தி எடுக்க துவங்க…

“என்ன இனி இது நீ சாப்பிட்டது மொத்தமும் வெளிய வந்திருச்சு போல… இரு நான் என் சித்திக்கு கால் பண்ணி வர சொல்றேன் ” என்று அவசரமாக விஜய் செல்ல போக,..

தண்ணீரை பிடித்து முகத்தை துடைத்துக்கொண்டே அவன் கையை ஒரு கையால் பிடித்து நிறுத்தியவள் நிமிர்ந்து “சார் இது ஒன்னும் இல்ல.. இப்படி தான் அடிக்கடி வாந்தி வரும் எனக்கு. இந்த மாதிரி சமயத்துல இது எல்லாம் சகஜம் தான் . இதுக்கு ஏன் அவங்களை தொந்தரவு செயிரிங்க.. கொஞ்ச நேரத்துல தானாவே சரி ஆகிடும்” என்றவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.

அவள் பின்னால்  பதட்டமாக வந்தவன் “இனியா இப்போ எப்படி இருக்கு பார்வல்ல தானே.. மறுபடியும் வாந்தி வர மாதிரி இருக்கா.. ” என்றான் கவலையாக.

“இல்ல சார் எனக்கு  அந்த friut ஸ்மெல் ஆகல .. அதனால தான் நீங்க அந்த பழத்தை  கொண்டு வந்ததுமே எனக்கு வொமிட் வந்திருச்சு ” என்றவள் மெல்ல நடந்து வந்து மெத்தையில் அமர்ந்தாள்.

வேகமாக கட்டிலில் அவளுக்கு அருகில் இருந்த பழத்தட்டை  கட்டிலில் இருந்து எடுத்தவன் அதை இனியாவின் பார்வையில் படாமல் தள்ளி வைத்தவன் .” இனியா ஏதாவது வேணுமா? எப்படி இருக்கு ” என்றான்.

“இல்ல சார் எதுவும் வேண்டாம் கொஞ்ச நேரம் இப்படியே உக்கார்ந்தா சரியாகிட்டும். எக்கி வாந்தி எடுத்துல கால் ரொம்ப வலிக்குது “என்று தன் காலை தூக்கி கட்டிலில் போட்டவள் அப்படியே சாய்ந்து அமர்ந்து கொள்ள..

“கால் ரொம்ப வலிக்குதா ! நீ வொமிட் தானே செஞ்ச.. அதுக்கு கால் வலிக்குமா ” என்றான் புரியாமல் .

“ஆமா  சார் எனக்கு வொமிட் பண்ணும்போது எல்லாம் கால் , தொடை எல்லாம் ரொம்ப வலி எடுத்துக்கும். இந்த மாதிரி நேரத்துல இப்படி சாஞ்சு உக்காந்திருந்தாலே  கொஞ்ச. வலி கம்மியாகும் ” என்று  சாய்ந்து அமர…

“ஒரு நிமிஷம் இரு இனி… ” என்றவன் தலையணை ஒன்றை எடுத்து அவள் முதுகில் பின்னால் வைத்து சாய்ந்து கொள்ள வசதி செய்தவன் .

“இனி நீ காலை நீட்டு .. ” என்று அவள் மடக்கி வைத்திருந்த காலை பிடித்து வெளியே இழுத்தான்.

“சார்! என்ன பண்றீங்க.. நீங்க போய்  என் காலை தொடரிங்க …  விடுங்க சார் ” என்று அவன் கையை தட்டிவிட்டாள் .

“அதென்ன நீங்க… கொஞ்ச நேரம் முன்ன தானே நீ என் பொண்டாட்டின்னு உரிமையா சொன்ன… அப்போ நான் யாரு உனக்கு ” என்றான் அவளை மிரட்டும் தோரணையில் .

“பு… புருஷன்… ” என்றாள் அவன் அதட்டலில் .

“ம்ம்… அப்போ நான் உன் காலை பிடிக்கலாம் தப்பே இல்ல.. ” என்றவன் அவள் காலை பிடித்து நீட்டி அமர வைத்தவன் சிறிதும் யோசிக்காமல் இனியாவின் பிஞ்சு கால்களை பூப்போல பிடித்துவிட ஆரம்பித்தான்.

அவள் சார் என்று விஜய்யை தடுக்க முயல..

“ம்ம்ம்… பேசாம அமைதியா உக்காரு” என்று இனியாவை அதட்டியவன்  அவள் கால்களை அமுக்கி விட துவங்கினான் 

விஜய் தன் காலை அமுக்கிவிடவும் முதல்ல இனியாவிற்கு ஒரு மாதிரி இருந்தாலும் சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் விஜய்யை ரசிக்கத்துவங்கினாள் .

“இனி இப்போ உனக்கு வலி எப்படி இருக்கு…  இன்னும் அமுக்கி விடவா … இல்ல போதுமா ” என்று விஜய் கேட்டான்.

வலி மட்டுப்பட்டது போல உணர்ந்தவள் போதும் என்று சொல்ல வந்தவள் “இல்ல சார் ரொம்ப வலிக்குது ” என்று வேண்டுமென்றே முகத்தை வலிப்பது போல வைத்துக்கொண்டு நடித்தாள் .

அவள் முகம் சுருங்குவதை பார்த்தவன் “இனி நீ அப்படியே படுத்துக்க… உனக்கு நான் அமுக்கி விட்றேன்” என்றான்.

“இல்ல சார் பரவால்ல… இப்படியே உக்காந்துக்கிறேன்” என்றாள்.

“இல்ல நீ படுத்துக்க.. தூக்கம் வந்தா கூட தூங்கு இனி.. நான் அமுக்கிவிடறேன்” என்று அவளை வற்புறுத்தவும்.

வேறு வழி இல்லாமல் இனியா கட்டிலில் படுத்துக்கொள்ள அவளுக்கு மார்பை வரை போர்த்தி விட்டவன் இனியாவின் கால்களை பிடித்துவிட துவங்கினான். விஜய்யை ரசித்தபடி படுத்திருந்தவள் அவளையும் அறியாமல் தூங்கி விடவும். இனியா தூங்கவும் அவள் போர்வையை சரி செய்தவன் இனியாவின் அருகில் படுத்தவன் அவளை சிலநிமிடம் பார்த்தவன் மென்மையாக சிரித்துவிட்டு படுத்து உறங்கினான்.

இங்கே பார்வதியை ஹாஸ்பிடலில் இருந்து இரண்டு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து அவரோடு சேர்ந்து பூங்கொடி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

இன்னும் இரண்டு தினங்களில் இந்தியா போயே  ஆகவேண்டும் என்று பார்வதி கறாராக சொல்லிவிட .. அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவதாக கூறி தேவா வெளியே சென்றிருந்தான்.

பார்வதியை வெற்றிக்கு அழைத்து வந்ததில் இருந்து அவருக்கு என்ன தேவை என்று கேட்டு கேட்டு செய்து கொடுத்தாள் பூங்கொடி. அவள் சிறிதும் ஓய்வு எடுப்பது போல அவருக்கு தோன்றவில்லை . அவர் உடைகளை எடுத்து கப்போர்டில் அடுக்கிக்கொண்டு இருந்த பூங்கொடியை அழைத்தவர்.

“பூங்கொடி போம்மா.. பக்கத்து ரூம் பிரீயா தான் இருக்கு . நீ ரெண்டு நாளா சரியா தூங்கவும் இல்ல… என்னோட சேலையும், நீ போட்டிருந்த தாவணியையும் மாத்தி மாத்தி துவைச்சு கட்டிட்டு இருக்க… போய்  குளிச்சிட்டு அந்த ரூம் கப்போர்டுல நைட்டி இருக்கும் அதை போட்டுக்க… அதுக்குள்ள ஆளுங்க சமைச்சு வெச்சிருவாங்க. நீ வந்ததும் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்” என்று பூங்கொடியை பக்கத்து அறைக்கு அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன அறைக்கு வந்த பூங்கொடி அந்த அறையை ஒரு முறை நோட்டமிட்டவள் கப்போர்டாய் திறந்து டவலை எடுத்துக்கொண்டு ஒரு நைட்டியை எடுத்து பெட்டின் மேல் போட்டவள் குளிக்க சென்றாள்.

ஹாஸ்பிடல் பாத்ரூமில் ஒருவித அசௌகரியத்தோடு  குளித்தவளுக்கு இங்க குளிக்கும்போது சற்று புத்துணர்ச்சியாக இருந்தது. நன்றாக சுடுநீரில் குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவளுக்கு அங்கே அவள் போட்டுவிட்டு குளிக்க சென்றிருந்த அறைக்குள் கட்டிலில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு படுத்திருந்த தேவாவை பார்த்ததும் அதிர்ந்தாள்.

ENNAI 2-29

இப்போது தான் பார்வதி தேவாவிற்கும், பூங்கொடிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்க… தன் தாய் ஹாஸ்பிடலில் இருந்த இந்த சில நாட்களில் பூங்கொடி அவரை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதை கண்டு அவள் மீது இருந்த தன் பார்வை மாறி இருந்தது தேவாவிற்கு .

வீட்டிற்குள் வந்தவன் கண்கள் முதலில் பூங்கொடியை தான் தேடியது. அவள் ஹாலில் இல்லாதது கண்டு முகம் வாடியவன். அவன் வீட்டில் வேலை செய்பவரிடம் தன் தாயை பற்றி விசாரிக்க.. அவர் ஓய்வெடுப்பதாக கூறவும் அவன் கண்கள் பூங்கொடி வேறு இடத்தில எங்கும் இருக்கிறாளா என்று யோசனையில் அவன் வீட்டை அலசுவதை பார்த்த வேலையாள். அவன் மனதில் இருப்பதை படித்தவர் போல…

“அம்மாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு அந்த பொண்ணு அம்மா ரூம் பக்கத்துல இருக்க ரூம்ல கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க போயிருக்காங்க ” என்றார்.

அவர் சொன்ன அடுத்த நொடி மாடியை நோக்கி அவன் கால்கள் விரைந்து வந்து நேராக பூங்கொடி இருந்த அறைக்கு முன்பு வந்து நின்றது.

சிறிதும் யோசிக்காமல் பூட்டி இருந்த கதவை மற்றொறு சாவி கொண்டு திறந்தவன் உள் பக்கம் தாளிட்டவன் பூங்கொடியை தேடியவன் பாத்ரூமிற்குள் தண்ணீர் சத்தம் கேட்கவும் அவள் குளிப்பதை உணர்ந்தவன் நேராக கட்டிலில் சென்று படுத்துகொண்டான்.

பூட்டி இருந்த அறைக்குள் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு கட்டிலில் படுத்திருந்தவனை குளித்துவிட்டு துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த பூங்கொடி பார்த்து அதிர்ந்து நின்றாள்.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலைக்கு கையை முட்டுக்கொடுத்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவன் முன் துண்டை கட்டிக்கொண்டு நின்றிருக்க அவள் அழகு வனப்பை கண்டு ஒரு நிமிடம் மெய் மறந்தவன் பின் தலையை குலுக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தவன் .

“ஹே! பியூட்டி  வந்துட்டியா .. எவ்ளோ நேரம் குளிப்ப… நீ  ” என்று எழுந்து வந்தவன் .

பூங்கொடியை அப்படியே தன் கையில் ஏந்தி கட்டிலை நோக்கி நடக்க…

தேவாவின் இந்த திடீர் செயலால் அதிரிச்சி அடைந்தவள் அவன் கையில் இருந்து இறங்க முயற்சிக்க… அவளை பிடித்திருந்த பிடியை இருக்கியவன்

வெறும் டவலுடன் தன் கையில் பூவை போல இருந்தவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “ப்பா… இதே சோப்பை தான் நான் தினமும் போட்டு குளிக்குறேன் . ஆனா இந்த மாதிரி ஒரு ஸ்மெல் என் உடம்புல அடிக்கலையே..” என்றவன் அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு பூங்கொடியின் அருகில் படுத்துக்கொள்ள…

அதில் பதறிய பூங்கொடி அவரசமாக கட்டிலைவிட்டு எழுந்து செல்ல முயன்றாள்.

“பியூட்டி எங்க போற நீ .. இங்க வா ” என்று அவள் கையை பிடித்து இழுக்க.. அவள் கையோடு  சேர்ந்து பூங்கொடி அணிந்து இருந்த டவல் தேவாவின் கையில் வந்துவிட்டது. இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

இருவருக்குமே இது அதிர்ச்சி தான். பூங்கொடியை முதன் முதலில் பார்த்த உடனேயே அவள் மீது தனக்கு ஆர்வம் தோன்றியது என்னவோ உண்மை தான். இருந்தாலும் அவன் செய்து வந்த தொழில் காரணமாக பூங்கொடியை வாட்டிவிட நினைக்காமல் அவளை அன்று பூத்த பூவை போல விட்டு வைத்திருந்தான்.

அப்படி இருந்தவன் இன்று பூங்கொடியின் முல்லைக்கொடி உடலை பார்த்தவன் கண்கள் அவள் உடலை ஆசையாக அவனையும் அறியாமல் தழுவிக்கொண்டது.

பூங்கொடிக்கோ.. அவன் பார்வை சென்ற இடம் எல்லாம் கூச்சம் பற்றிக்கொள்ள… தன்னை ஒளித்துக்கொள்ள வழி  தெரியாமல் தன் முன் நின்று இருந்தவனை இழுத்து அவனையே தன்னை மறைக்க எண்ணி கட்டிகொண்டாள்.

இது தேவாவிற்கு மேலும் இன்ப அதிர்ச்சி தான்.

தேவாவின் சட்டையை தாண்டி அவள் ஈர உடல் நனைத்து அவன் மார்பில் அவள் மார்பு உரச… அடுத்த கணம் அவளை சட்டென்று இருக்கி அணைத்துக்கொண்டான்.

அவள் முதுகில் தேவாவின் கைகள் மேலும் கீழும் அலைபாய… அவனை கட்டிக்கொண்டு இருந்த பூங்கொடி அவனை விட்டு விலகநினைத்தும் அது முடியாமல் அவனோடு ஒன்று நின்று இருந்தவள்.

“ஏன் இப்படி இருக்கீங்க… நீங்க… ” என்றாள் மென்மையான குரலில்,

அவள் சொல்வது புரியாமல் அவள் முகத்தில் உரசிக்கொண்டு இருந்த தன் முகத்தை பிரித்து அவளை குழப்பமாக பார்க்க…

அவ்வளவு நெருக்கத்தில் தேவாவின் முகத்தை பார்த்தவளுக்கு முகம் சிவந்து மேலும் கூச்சம் தொற்றிக்கொள்ள… அவளாகவே சென்று அவன் முகத்தை தன்னோடு இழுத்து ஒட்டிக்கொண்டவள்.

“உங்களுக்கும் , எனக்கும் உங்க அம்மா தான் கல்யாணம் செய்து வெக்குறேன்னு சொல்லிட்டாங்களே… அதுக்குள்ள நீங்க இப்படி அவசர படறது  கொஞ்சமும் சரி இல்லை ” என்றாள்.

“எப்படி அவசரப்பட்டேன் ” என்று மீண்டும் முகத்தை அவள் புறம் திருப்ப…

அவன் முகத்தை தன் கழுத்தோடு சேர்த்து அணைத்து பிடித்தவள்.

“இப்படி நான் குளிக்கும்போது உள்ளே வந்து என்கிட்டே நீங்க இப்படி நடந்துகிறது” என்றாள்.

“உன்னை பார்த்து சும்மா பேசிட்டு போலாம்னு தான்  உள்ள வந்தேன். நீ குளிச்சிட்டு இருந்த.. அதனால நீ வர வர வெயிட் பண்ணலாம்னு படுத்துட்டேன் அவ்ளோ தான். ஆனா இப்போ நடந்தது எல்லாம் நான் வேணும்னு செய்யல… உன் கையை தான் பிடிச்சு இழுக்க நினைச்சேன் . ஆனா என் கையோட நீ கட்டி இருந்த டவல்  வந்திருச்சு. நான் என்ன செய்வேன். இதுல என் தப்பு எதுவும் இல்ல.. இப்படி தான் குளிச்சிட்டு துண்டை கட்டிக்கிட்டு வெளிய வருவியா நீ… உன்னை அப்படி பார்த்ததும் இவ்ளோ நாளா நான் கண்ட்ரோல்ல  வெச்சிருந்த என் பீலிங்ஸ்க்கு உயிர் வந்திருச்சு.. what  can  i do …” என்று அவள் கழுத்து வளைவில் குளித்த சோப்பின் மனம் தாண்டி வந்த பூங்கொடியின் உடல் வாசனையை உள்ளே இழுத்துக்கொண்டே கேட்டான்.

தேவாவின் சூடான மூச்சுக்காற்று அவள் உடலில் மயிர்கூச்செரிய… “நீ… நீங்க சொல்றது எல்லாம் நம்புற மாதிரி எனக்கு தோணல.. தயவு செஞ்சு வெளிய போறிங்களா…” என்றாள் .

“நீ என்னை இப்படி கட்டிக்கிட்டு இருந்தா இன்னும் கொஞ்ச நேரத்துல உன்கூட நான் பஸ்ட் நைட் கொண்டாட ஸ்டார்ட் பண்ணிடுவேன். என்னை நீ கடிக்காம இருந்திருந்தா நானே இந்த நேரம் ரூமை விட்டு வெளிய போய்யிருந்திருப்பேன். SO, THE FAULT IS YOUR’S… ” என்றான் .

அப்படி தேவா சொன்னதும் சட்டென்று அவனை விட்டு பிரிந்தவள் தான் பிறந்த மேனியாய் மீண்டும் அவன் முன் நிற்பதை உணர்ந்ததும் தேவாவை நிமிர்ந்து பார்த்தாள் அவன் கண்களில் தெரிந்த மின்னல் வெட்டு.. அவன் முகத்தில் தெரிந்த குரும்பை கண்டு மீண்டும் அவன் உடலோடு தன் உடலை ஒட்டிக்கொண்ட பூங்கொடி .

“நீங்க இப்படி  என்னை பார்த்துட்டே இருந்தா நான் என்ன பண்ணுவேன். ப்ளீஸ் கொஞ்சம் கண்ணை மூடிக்கோங்க… ” என்றாள்.

“நான் ஏன் கண்ணை மூடனும். இப்படி ஒரு அம்சமான பியூட்டி பிகர் என் கண்ணு முன்னாடி மொத்த அழகையும் காட்டிட்டு இருக்க அப்போ Why should I close my eyes?” என்றான் .

“ப்ளீஸ்ங்க.. ஏன் இப்படி என்னை படுத்துறீங்க… தயவு செய்து கண்ணை மூடுங்க… ” என்று அவள் கெஞ்ச…

அவள் கெஞ்சலை ரசித்து சிரித்தவன் “அப்போ என் பீலிங்க்கு ஏதாவது தீனி போடு நான் கண்ணை மூடிக்கிறேன் ” என்றான்.

“தீனி… ” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பூங்கொடி பார்க்க…

அவள் நிமிர்ந்ததும் அவன் மார்போடு அழுத்தி ததும்பி இருந்த அவள் அழகை பார்வையால் பருகியவன் அவள் கண்களை ஏக்கமாக பார்த்து …. “எப்படியும் நமக்கு கல்யாணம் முடிஞ்ச அப்பறோம் தான் எல்லாம் நடக்க போகுது . BUT அதுக்குள்ளையே நான் உன்னை முழுசா பாத்துட்டேன் . SO , நான் பார்த்ததை ஏன் வேஸ்ட் பண்ணனும். அதனால….” என்று அவன் பார்வை மீண்டும் அவள் கழுத்திற்கு கீழே செல்ல..

சட்டென்று அவனை தள்ளிவிட்டவள் நொடிப்பொழுதில் கீழே கிடந்த துண்டை எடுத்து தன்னை சுற்றிக்கொண்டு வேகமாக பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள் .

அவள் செய்யலை கண்டு சிரித்தவன் “ம்ஹும்.. சும்மா சொல்ல கூடாது செம்ம பிகர் இவளுக்கு.. ” என்று பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு தலையை அழுந்த கோதியவன் அவள் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

வெளியே கதவு சாற்றும் சத்தம் கேட்டதும் பாத்ரூமிற்குள் இருந்து தலையை நீட்டி பார்த்து தேவா அங்கில்லாததை உறுதி செய்தவள் வேகமாக வந்து அங்கே இருந்த நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டாள் .

சில நாட்களாக தாமரையின் முகம் வாடி இருப்பதை கண்டு தாள முடியாமல் அதிதி யாராவிற்கு போன் செய்து இருந்தார்.

“சொல்லு டி என் அண்ணன் பொண்டாட்டி… என்ன மணி 10 ஆக போகுது இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணி இருக்க…” என்று கிண்டல் செய்தார் யாரா.

“உனக்கு என்ன டி உன் பொண்ணை கட்டிக்கொடுத்ததோட  உன் கடமை முடிஞ்சுதுன்னு நீயும், என் அண்ணனும் அங்க நிம்மதியா இருக்கீங்க… ஆனா இங்க என் புள்ள உன் பொண்ணு கூட சந்தோசமா வாழலையேன்னு வருத்தத்துல இருக்கேன் ” என்றார் அதிதி.

“நீ மதும் சோகமா நான் சந்தோசமா இருக்கேன்னு நீயா நினைச்சுக்க.. எனக்கும் என் பொண்ணு மேல அக்கறை இருக்கு டி… நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன செய்றது. உன் மகன் அதான் என் மாப்ள … அவரில்ல என் பொண்ணு கூட சேர்ந்து வாழனும். அவரில்ல மனசு வெக்கணும் “என்றார்.

“அதுக்கு தான் என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிக்குறேன் டி… இங்க தாமரையும் பாவம் அவ முகமே சரி இல்ல.. எதையோ பறிகொடுத்தவ மாதிரி எப்பவும் இருக்கா… வீட்ல இத்தனை  வேலைக்காரங்க இருந்தும் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யுறா .. நான் என்னனு செய்வேன் நீயே சொல்லு ” என்று தாமரையை நினைத்து மிகவும் மனம் வருந்தி பேசிக்கொண்டு இருந்தார்.

“வம்சி ஏன் டி இப்படி இருக்கான். அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு பொண்டாட்டியா வந்திருக்கா.. அவளை எவ்ளோ சந்தோசமா பாத்துக்கலாம். அவகூட சேர்ந்து அழகா ஒரு வாழ்க்கையை அவனால வாழ முடியலையே டி.. அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ” என்று புலம்பிக்கொண்டு இருக்க…

“அவ்ளோ கஷ்டப்பட்டு தாமரை நிம்மதி இல்லாம இந்த வீட்ல இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. நான் இப்பவே அவளை அத்தை வீட்ல கொண்டு விட்டுட்டு வரேன் ” என்று வம்சி விறு விறுவென மடியேறி தன் அறைக்கு  செல்ல..

அவன் வந்தது பேசியது எதுவும் தெரியாமல் அதிதி அதிரிச்சியாக தன் எதிரே இருந்த மீனுவை பார்த்தவள் “ஏன் அத்த நீங்க இவ்ளோ நேரம் இங்க தானே இருந்திங்க.. அவன் வந்ததை என்கிட்டே சொல்ல வேணாமா .. பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு ” என்று அதிதி புலம்பியவர்.

“ஏய் யாரா நான் அப்பறோம் பேசுறேன் டி வம்சி கோபமா பேசிட்டு போறான். நான் என்னனு பேசிட்டு உனக்கு கால் பண்றேன் ” என்றார்.

“என்ன டி மாப்ள என் பொண்ணை இங்க கூப்டு வந்து விட்றேன்னு சொல்றாரு.. என் பொண்ணு பாவம் டி… ” என்று யாரா பதறி அழ …

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீ இரு நான் உனக்கு அப்பறோம் கால் பண்றேன்” என்று போனை வைத்துவிட்டு திரும்ப…

தாமரை கையை பிடித்து தன்னோடு இழுத்துக்கொண்டு வேகமாக பாடுகளில் இறங்கியவன் வீட்டை விட்டு வெளியே செல்ல.. அதிதியும் , மீனுவும் செய்வதறியாது திகைத்தவர்கள். வம்சியை தடுத்து நிறுத்த அவன் பின்னே ஓடினார்கள்.

ENNAI 2-30

 அர்ஸுக்கும் நிலானிக்கும் திருமணம் நடந்த அன்று இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் நான் செய்யலாம் என்று நிலானியின் பெற்றோர் ஜோசியரை பார்க்க சென்றிருந்தனர் கூடவே அர்சின் அம்மாவும் சென்றிருந்தார்.

 இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோசியர் இவர்கள் இருவருக்கும் 15 நாட்கள் கழித்து சாந்தி முகூர்த்தத்தை நடத்தி வைக்க சொல்லி விட்டார் அப்போதுதான் இவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் அதற்கு முன்பு அவசரப்பட்டு எந்த ஏற்பாடும் செய்து விடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி இருந்தார்.

 இதன் காரணமாக நிலானி அவள் பெற்றோர் வீட்டிலும் அர்ஸ் தன் வீட்டிலும் பிரிந்து இருந்தார்கள் 

 காலையில் நிலாணியை ஆபீஸிற்கு அழைத்து வந்துவிட்டு மாலையில் தன்னோடு அழைத்துச் சென்று விடுவார் அவளின் அப்பா.

இதனால் இவர்கள் இருவருக்கும் சந்தித்துக் கொள்ள விஜய்யின் ஆபீஸ் மட்டுமே தோதுவாக இருந்தது.

 கிட்டத்தட்ட திருமணம் முடிந்து பத்து நாட்களுக்கு மேலானது இருவருக்கும் ஆனால் இருவராலும் பார்க்கவும் பேசவும் மட்டுமே முடிந்ததே ஒழிய அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு சிறு வாய்ப்பு கூட இருவருக்கும் கிடைக்கவில்லை.

 “என்னடா கொடுமை இது கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு சொல்வாங்களே அது இதுதானா… என் நிலா குட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால ஒரு கிஸ் கூட கொடுக்க முடியலையே..  நான் இதுக்குத் தான் இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணினேனா..  இப்படி இந்த ஜோசியர் எனக்கு ஆப்பு வெப்பான்னு தெரிந்திருஞ்சிருதா நானும் அவங்க கூட போய் அந்த ஜோசியர்கிட்டே எதையாவது சொல்லி சீக்கிரமா பர்ஸ்ட் நைட் நடந்த ஏற்பாடு பண்ணி இருப்பேனே.. “ என்று தன் கேபினில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அர்ஷ்.

 அவன் புலம்புவதை   கேட்டபடி உள்ளே வந்த நிலானி “நீங்க  என் அப்பா கூட போய் என்னதான் பேசியிருந்தாலும் அதுக்கு அந்த ஜோசியர் சத்தியமா சம்மதிச்சிருக்க  மாட்டார்.  ஏன்னா அவர் என் அப்பாவோட க்ளோஸ்  ஃப்ரெண்ட்,  எங்க குடும்பம் மொத்தமும் அவர்கிட்ட தான் ஜோசியம் பார்த்துட்டு வரோம் என்று சிரித்தபடி உள்ளே வந்தாள்.

நிலானியை பார்த்த அடுத்த நொடி வேகமாக அவளிடம் ஓடி வந்தவன் அவளை இருக்க கட்டி அணைத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நிலானியை தீவிரமாக முத்தமிட துவங்கியிருந்தான்.

 இதை அவளும் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளுக்கும் இந்த முத்தம் தேவைப்படுவதாக இருக்க நிலையின் கைகள் அர்ஷின் தோளை மாலையாக வளைத்து நின்றது .

 இருவரும் தங்களை மறந்து முத்தமிட்டுக கொண்டிருக்க… 

 அப்போது அவர்கள் அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த விஜய் அங்கே அவர்கள் இருவரும் தங்கள் இருக்கும் இடத்தை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவன்.

 “டேய் ஹர்ஷ் என்னடா இது!” என்று திரும்பி நின்று கத்தினான் விஜய்.

 விஜய்யின் குரலை கேட்டதும் அவசரமாக இருவரும் பிரிந்து நின்றவர்கள்.

விஜய்யை பார்க்க கூச்சப்பட்டுகொண்டு நிலானி அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அர்ஷின் கேபின் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட..

“அடி பாவி! இப்படி இவன்கிட்ட தனியா என்ன மாட்டிவிட்டுட்டு ஓடிட்டாலே”  என்று வாசல் கதவை பார்த்துக்கொண்டு அர்ஸ் நின்று இருக்க..

“டேய் இது என்ன ஆபிசா இல்ல உன் வீட்டு பெட்ரூமா ரெண்டு பேரும் இங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்று குரலை உயர்த்தினான்.

அர்ஸ் தலையை சொரிந்து கொண்டு தன் ஷூவால் தரையில் கோலம் போட்டு படி  விஜய்யை பார்க்க…

 “நெக்ஸ்ட் வீக் நடக்கப் போற  காம்பெடிஷன்க்கு என்னென்ன ரெடி பண்ணி வச்சிருக்க.. அந்த பைலை எடுத்துட்டு என் கேபினுக்கு வந்து தொலை.. “ என்று அவனை பார்க்காமல் திரும்பி சென்றான் விஜய்.

“ இத சொல்லத்தான் என்  கேபினுக்கு வந்தியாடா நீ…  ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா என் நிலானி கூட இன்னும் கொஞ்சம் நேரம் ரொமான்ஸ் பண்ணிட்டு அப்புறம்  வந்திருப்பேனே.. இப்படி கரடி மாதிரி எனக்கு கிடைச்ச ஒரு சான்சையும் கெடுத்துட்டு கிளம்பிட்டியேடா” என்று விஜய்யை திட்டிக் கொண்டே அவன் கேட்ட பைலை எடுத்துக்கொண்டு விஜய் கேபினை நோக்கி சென்றான்.

இங்கே…

வம்சி தாமரையின் கையைப் பிடித்து இழுத்துப் படி வீட்டை விட்டு வெளியே கிளம்ப அவனை தடுத்து நிறுத்த எண்ணி அதிதியும் மீனுவும் அவன் பின்னால் சென்றனர்.

 “டேய் வம்சி பொறுடா…  எதுக்குடா இப்படி அவளை வீட்டிலிருந்து கூட்டிட்டு போற… அவ இந்த வீட்டு மருமகடா…  நாங்க சொல்றத கேளு இப்படி எல்லாம் பண்ணாத..  இது பாவம்” என்று கத்திக்கொண்டே அதிதி வம்சின் பின்னால் ஓடினார்.

 “நீங்க இப்ப தானே ஆத்தை கிட்ட போன்ல பேசினீங்க..   தாமரை ரொம்ப சோகமா இருக்கா அவ முகத்தை பார்க்கவே சரியில்ல. அவ சந்தோஷமாவே இல்லைன்னு சொன்னீங்க தானே” என்று நின்று திரும்பி அதித்தியை  பார்த்தவன்.

“அவ சந்தோஷமா இருக்கணும்னா என் கூட இருந்தா நடக்காது. அவ வீட்ல இருந்தாளாவது  சந்தோசமா இருக்கட்டும் என்னால யார் சந்தோசமும் கெட வேண்டாம். நீங்க இதுல தலையிடாதீங்க” என்றவன் வேகமாக காரை நோக்கி தாமரையோடு சென்றான்.

 “டேய் ஏன்டா இப்படி எல்லாம் பண்ற நீ அவளை நல்லா பாத்துக்க வேன்னு தானே உனக்கு தாமரையை கல்யாணம் பண்ணி வச்சோம்  இப்படி பாதியிலேயே  வாழா வெட்டியா வீட்டுக்கு அனுப்புறதுக்கா நாங்க இவ்வளவு பாடுபட்டோம்   கொஞ்சம் யோசிச்சு நிதானமா முடிவெடுடா இப்படி அவசரப்பட்டு எதையும் செய்யாத” என்று பேசியபடி மீனு பின்னால் வர..

 “இங்க பாரு பாட்டி இதுல நீ தலையிடாதே இது எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை பிரச்சனை.  இதை நாங்களே பேசி முடிவு பண்ணிக்கிறோம். இதுக்குள்ள யாரும் வராதீங்க” என்றவன்.

“ நீ கார்ல ஏறு தாமரை நான் உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடுறேன்’ என்று சொல்லி கார் கதவை திறக்க..

“ தாமரை எங்கேயும் வரமாட்டா.. அவ இங்க தான் இருக்க போறா” என்று வம்சியின் முன்னால் வந்து நின்றான் விஜய். 

விஜய்யை பார்த்ததும் தாமரை தலை குனிந்து நின்றாள் தன்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

இருந்தும் வம்சியின்  முடிவுக்கு அவள் கட்டுப்பட்டு தான் அங்கே அவனோடு தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தால். எப்படியாவது தனக்கும் வம்சிக்கும் இடையில் இருக்கும் உறவு முறிந்து விட வேண்டும் என்ற எண்ணம் தாமரைக்கு.  

 தாமரை தலை கவர்ந்து நிற்பதை பார்த்த விஜய் தன்னால்தான் தாமரை இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்ற குற்ற உணர்வு அவனை உள்ளுக்குள் அரித்தது.

 அவளை எப்படியாவது வம்சியுடன் சேர்ந்து வாழ வைத்து விட வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு வம்சியின் முன்னே வந்து நின்றவன்.

“அவ இந்த வீட்ல உன் பொண்டாட்டியா உன் கூட தான் இருக்க போறா. உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ போறா.. “ என்றான் விஜய்.

 “விஜய் இதுல நீ தலையிடாதே இது எனக்கும் தாமரைக்கும் இடையே இருக்க விஷயம். அவ இங்க இருந்தா நிச்சயமா  தாமரையாள  சந்தோஷமா இருக்க முடியாது. அது உனக்கும் நல்லாவே தெரியும். தெரிந்திருந்தும் நீயேன் எங்கள சேர்ந்து வாழ சொல்லி கட்டாயப்படுத்துற” என்றான் வம்சி.

 “டேய் உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் நீ முதல்ல என்கூட வா மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று வம்சியின் கையை பிடித்து விஜய் அழைக்க..

 நான் எங்கேயும் வரல விஜய் நீ எதுவும் என்கிட்ட பேச வேண்டிய அவசியமில்லை நான் முடிவு எடுத்துட்டேன் அது யார் நினைச்சாலும் மாற்ற முடியாது என்றான்.

 “வம்சி! உனக்கு தாமரையே ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். அத நீயே என்கிட்ட சொல்லி இருக்க இப்ப என்னடா வந்துச்சு உனக்கு. இத்தனை நாள் பொறுத்த இன்னும் கொஞ்ச நாள் உன்னால பொறுமையா இருக்க முடியாதா? நான் சொல்றது கொஞ்சம் கேளு.. என் கூட நீ வா.. “ என்று விஜய் மீண்டும் வஞ்சியை அழைக்க .

 இவ்வளவு நேரம் இங்கு நடப்பதெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருந்த தாமரையை இதற்கு மேலும் தான் அமைதியாக இருந்தால் எதுவும் வரப்போவதில்லை என்று புரிந்து கொண்டவள்.

“அவரை ஏன் தடுக்குறீங்க விஜய் மாமா! எப்படியும் நான் இந்த வீட்டை விட்டு ஒரு நாள் போகத்தான் போறேன். அது இப்பவே போனதா இருக்கட்டுமே..  நீங்க இதுல தலையிட வேண்டாம் என் வாழ்க்கையை என்னால பாத்துக்க முடியும். எனக்காக யாரும் எதையும் யோசிக்க வேண்டாம்” என்றாள்.

 “தாமரை என்னடி!! நீயே இப்படி பேசுற உனக்கு வம்சி கூட சேர்ந்து வாழ சம்மதம்னு நீ  எங்ககிட்ட சொன்னியே இப்போ இப்படி பேசினா என்னடி அர்த்தம். நாங்க சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு.. ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிரிஞ்சு போறேன்னு சொன்னா  நாங்க என்னதான் பண்றது” என்று அதிதி தாமரையின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க..

 அதற்குள் வெளியே சென்றிருந்த வீராவும் விக்ரமும் அங்கு வந்துவிட இங்கே நடப்பதை பார்த்துவிட்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு தாமரையையும் வம்சியையும் பிரிந்து செல்ல அனுமதிக்க முடியாது என்று அவர்களை தங்களோடு இருக்க நிர்பந்திக்க…

 “ஐயோ எல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா…  நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையா இருக்கிறது.  மனசுல ஒருத்தரை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தருக்கு கழுத்தை நீட்டி அவர் கட்டின தாலியை கழுத்துல சுமந்துகிட்டு என்னால இந்த வீட்டுல நிம்மதியா வாழ முடியாது” என்று பொறுமை இழந்து கத்திய தாமரை.

தாமரை எதுவும் பேசி விடுவாளோ என்று பதட்டமான வம்சி “தாமரை நீ எதுவும் சொல்ல வேண்டாம் இவங்க யாருகிட்டயும் நீ விளக்கம் சொல்லனும்னு அவசியம் இல்ல. உனக்கு எங்கே இருக்க விருப்பமோ அங்கேயே இருக்கலாம் வா நம்ம கிளம்பலாம்” என்று வம்சி அங்கிருந்து கிளம்ப போக..

“ ஒரு நிமிஷம் இரு டா வம்சி…” என்று அவனைத் தடுத்து நிறுத்திய வீரா நேராக தாமரையிடம் வந்தவன்.

“என்ன தாமரை சொன்ன!!  மனசுல ஒருத்தனை நினைச்சுகிட்டு என் புள்ள கட்டின தாலிய கழுத்துல சுமந்துட்டு இருக்கேன்னா… அப்போ அன்னைக்கு எங்ககிட்ட நீ சொன்னதெல்லாம் பொய்யா? என்றான்” அவளை நம்ப முடியாமல் பார்த்து.

“ ஆமா மாமா நீங்க எல்லாரும் என்ன நினைச்சு ரொம்ப வருத்தப்படுகிறீர்கள் என்று தான் நான் இன்னைக்கு போய் சொன்னேன் உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லை. நான் விஜய் மாமாவ தான் காதலிச்சேன். நானும் அவரும் தான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்துச்சு ஆனால் அதுக்குள்ள இங்க நடந்ததே வேற ” என்று இவ்வளவு நாள் தன் மனதில் பூட்டி வைத்திருந்த ரகசியத்தை அனைவரும் முன்னிலையிலும் தாமரை போட்டு உடைத்தாள்.

அவள் சொன்னதை கேட்டு அங்கிருந்து அனைவரும் தலையிலும் இடியே விழுந்தது போல இருந்தது.

தன் மூத்த மகனும், தாமரையும் காதலித்து விட்டு..  தாங்கள் கட்டாயப்படுத்தியதன் காரணமாக  இளைய மகனை திருமணம் செய்து இந்த வீட்டிற்கு மருமகளாக அழைத்து வந்திருக்கும் தாமரையை அனைவரும் செய்வதரியாது பார்த்தனர் .

ENNAI 2-30

 அர்ஸுக்கும் நிலானிக்கும் திருமணம் நடந்த அன்று இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் நான் செய்யலாம் என்று நிலானியின் பெற்றோர் ஜோசியரை பார்க்க சென்றிருந்தனர் கூடவே அர்சின் அம்மாவும் சென்றிருந்தார்.

 இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோசியர் இவர்கள் இருவருக்கும் 15 நாட்கள் கழித்து சாந்தி முகூர்த்தத்தை நடத்தி வைக்க சொல்லி விட்டார் அப்போதுதான் இவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் அதற்கு முன்பு அவசரப்பட்டு எந்த ஏற்பாடும் செய்து விடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி இருந்தார்.

 இதன் காரணமாக நிலானி அவள் பெற்றோர் வீட்டிலும் அர்ஸ் தன் வீட்டிலும் பிரிந்து இருந்தார்கள் 

 காலையில் நிலாணியை ஆபீஸிற்கு அழைத்து வந்துவிட்டு மாலையில் தன்னோடு அழைத்துச் சென்று விடுவார் அவளின் அப்பா.

இதனால் இவர்கள் இருவருக்கும் சந்தித்துக் கொள்ள விஜய்யின் ஆபீஸ் மட்டுமே தோதுவாக இருந்தது.

 கிட்டத்தட்ட திருமணம் முடிந்து பத்து நாட்களுக்கு மேலானது இருவருக்கும் ஆனால் இருவராலும் பார்க்கவும் பேசவும் மட்டுமே முடிந்ததே ஒழிய அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு சிறு வாய்ப்பு கூட இருவருக்கும் கிடைக்கவில்லை.

 “என்னடா கொடுமை இது கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு சொல்வாங்களே அது இதுதானா… என் நிலா குட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால ஒரு கிஸ் கூட கொடுக்க முடியலையே..  நான் இதுக்குத் தான் இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணினேனா..  இப்படி இந்த ஜோசியர் எனக்கு ஆப்பு வெப்பான்னு தெரிந்திருஞ்சிருதா நானும் அவங்க கூட போய் அந்த ஜோசியர்கிட்டே எதையாவது சொல்லி சீக்கிரமா பர்ஸ்ட் நைட் நடந்த ஏற்பாடு பண்ணி இருப்பேனே.. “ என்று தன் கேபினில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அர்ஷ்.

 அவன் புலம்புவதை   கேட்டபடி உள்ளே வந்த நிலானி “நீங்க  என் அப்பா கூட போய் என்னதான் பேசியிருந்தாலும் அதுக்கு அந்த ஜோசியர் சத்தியமா சம்மதிச்சிருக்க  மாட்டார்.  ஏன்னா அவர் என் அப்பாவோட க்ளோஸ்  ஃப்ரெண்ட்,  எங்க குடும்பம் மொத்தமும் அவர்கிட்ட தான் ஜோசியம் பார்த்துட்டு வரோம் என்று சிரித்தபடி உள்ளே வந்தாள்.

நிலானியை பார்த்த அடுத்த நொடி வேகமாக அவளிடம் ஓடி வந்தவன் அவளை இருக்க கட்டி அணைத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நிலானியை தீவிரமாக முத்தமிட துவங்கியிருந்தான்.

 இதை அவளும் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளுக்கும் இந்த முத்தம் தேவைப்படுவதாக இருக்க நிலையின் கைகள் அர்ஷின் தோளை மாலையாக வளைத்து நின்றது .

 இருவரும் தங்களை மறந்து முத்தமிட்டுக கொண்டிருக்க… 

 அப்போது அவர்கள் அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த விஜய் அங்கே அவர்கள் இருவரும் தங்கள் இருக்கும் இடத்தை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவன்.

 “டேய் ஹர்ஷ் என்னடா இது!” என்று திரும்பி நின்று கத்தினான் விஜய்.

 விஜய்யின் குரலை கேட்டதும் அவசரமாக இருவரும் பிரிந்து நின்றவர்கள்.

விஜய்யை பார்க்க கூச்சப்பட்டுகொண்டு நிலானி அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அர்ஷின் கேபின் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட..

“அடி பாவி! இப்படி இவன்கிட்ட தனியா என்ன மாட்டிவிட்டுட்டு ஓடிட்டாலே”  என்று வாசல் கதவை பார்த்துக்கொண்டு அர்ஸ் நின்று இருக்க..

“டேய் இது என்ன ஆபிசா இல்ல உன் வீட்டு பெட்ரூமா ரெண்டு பேரும் இங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்று குரலை உயர்த்தினான்.

அர்ஸ் தலையை சொரிந்து கொண்டு தன் ஷூவால் தரையில் கோலம் போட்டு படி  விஜய்யை பார்க்க…

 “நெக்ஸ்ட் வீக் நடக்கப் போற  காம்பெடிஷன்க்கு என்னென்ன ரெடி பண்ணி வச்சிருக்க.. அந்த பைலை எடுத்துட்டு என் கேபினுக்கு வந்து தொலை.. “ என்று அவனை பார்க்காமல் திரும்பி சென்றான் விஜய்.

“ இத சொல்லத்தான் என்  கேபினுக்கு வந்தியாடா நீ…  ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா என் நிலானி கூட இன்னும் கொஞ்சம் நேரம் ரொமான்ஸ் பண்ணிட்டு அப்புறம்  வந்திருப்பேனே.. இப்படி கரடி மாதிரி எனக்கு கிடைச்ச ஒரு சான்சையும் கெடுத்துட்டு கிளம்பிட்டியேடா” என்று விஜய்யை திட்டிக் கொண்டே அவன் கேட்ட பைலை எடுத்துக்கொண்டு விஜய் கேபினை நோக்கி சென்றான்.

இங்கே…

வம்சி தாமரையின் கையைப் பிடித்து இழுத்துப் படி வீட்டை விட்டு வெளியே கிளம்ப அவனை தடுத்து நிறுத்த எண்ணி அதிதியும் மீனுவும் அவன் பின்னால் சென்றனர்.

 “டேய் வம்சி பொறுடா…  எதுக்குடா இப்படி அவளை வீட்டிலிருந்து கூட்டிட்டு போற… அவ இந்த வீட்டு மருமகடா…  நாங்க சொல்றத கேளு இப்படி எல்லாம் பண்ணாத..  இது பாவம்” என்று கத்திக்கொண்டே அதிதி வம்சின் பின்னால் ஓடினார்.

 “நீங்க இப்ப தானே ஆத்தை கிட்ட போன்ல பேசினீங்க..   தாமரை ரொம்ப சோகமா இருக்கா அவ முகத்தை பார்க்கவே சரியில்ல. அவ சந்தோஷமாவே இல்லைன்னு சொன்னீங்க தானே” என்று நின்று திரும்பி அதித்தியை  பார்த்தவன்.

“அவ சந்தோஷமா இருக்கணும்னா என் கூட இருந்தா நடக்காது. அவ வீட்ல இருந்தாளாவது  சந்தோசமா இருக்கட்டும் என்னால யார் சந்தோசமும் கெட வேண்டாம். நீங்க இதுல தலையிடாதீங்க” என்றவன் வேகமாக காரை நோக்கி தாமரையோடு சென்றான்.

 “டேய் ஏன்டா இப்படி எல்லாம் பண்ற நீ அவளை நல்லா பாத்துக்க வேன்னு தானே உனக்கு தாமரையை கல்யாணம் பண்ணி வச்சோம்  இப்படி பாதியிலேயே  வாழா வெட்டியா வீட்டுக்கு அனுப்புறதுக்கா நாங்க இவ்வளவு பாடுபட்டோம்   கொஞ்சம் யோசிச்சு நிதானமா முடிவெடுடா இப்படி அவசரப்பட்டு எதையும் செய்யாத” என்று பேசியபடி மீனு பின்னால் வர..

 “இங்க பாரு பாட்டி இதுல நீ தலையிடாதே இது எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை பிரச்சனை.  இதை நாங்களே பேசி முடிவு பண்ணிக்கிறோம். இதுக்குள்ள யாரும் வராதீங்க” என்றவன்.

“ நீ கார்ல ஏறு தாமரை நான் உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடுறேன்’ என்று சொல்லி கார் கதவை திறக்க..

“ தாமரை எங்கேயும் வரமாட்டா.. அவ இங்க தான் இருக்க போறா” என்று வம்சியின் முன்னால் வந்து நின்றான் விஜய். 

விஜய்யை பார்த்ததும் தாமரை தலை குனிந்து நின்றாள் தன்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

இருந்தும் வம்சியின்  முடிவுக்கு அவள் கட்டுப்பட்டு தான் அங்கே அவனோடு தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தால். எப்படியாவது தனக்கும் வம்சிக்கும் இடையில் இருக்கும் உறவு முறிந்து விட வேண்டும் என்ற எண்ணம் தாமரைக்கு.  

 தாமரை தலை கவர்ந்து நிற்பதை பார்த்த விஜய் தன்னால்தான் தாமரை இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்ற குற்ற உணர்வு அவனை உள்ளுக்குள் அரித்தது.

 அவளை எப்படியாவது வம்சியுடன் சேர்ந்து வாழ வைத்து விட வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு வம்சியின் முன்னே வந்து நின்றவன்.

“அவ இந்த வீட்ல உன் பொண்டாட்டியா உன் கூட தான் இருக்க போறா. உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ போறா.. “ என்றான் விஜய்.

 “விஜய் இதுல நீ தலையிடாதே இது எனக்கும் தாமரைக்கும் இடையே இருக்க விஷயம். அவ இங்க இருந்தா நிச்சயமா  தாமரையாள  சந்தோஷமா இருக்க முடியாது. அது உனக்கும் நல்லாவே தெரியும். தெரிந்திருந்தும் நீயேன் எங்கள சேர்ந்து வாழ சொல்லி கட்டாயப்படுத்துற” என்றான் வம்சி.

 “டேய் உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் நீ முதல்ல என்கூட வா மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று வம்சியின் கையை பிடித்து விஜய் அழைக்க..

 நான் எங்கேயும் வரல விஜய் நீ எதுவும் என்கிட்ட பேச வேண்டிய அவசியமில்லை நான் முடிவு எடுத்துட்டேன் அது யார் நினைச்சாலும் மாற்ற முடியாது என்றான்.

 “வம்சி! உனக்கு தாமரையே ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். அத நீயே என்கிட்ட சொல்லி இருக்க இப்ப என்னடா வந்துச்சு உனக்கு. இத்தனை நாள் பொறுத்த இன்னும் கொஞ்ச நாள் உன்னால பொறுமையா இருக்க முடியாதா? நான் சொல்றது கொஞ்சம் கேளு.. என் கூட நீ வா.. “ என்று விஜய் மீண்டும் வஞ்சியை அழைக்க .

 இவ்வளவு நேரம் இங்கு நடப்பதெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருந்த தாமரையை இதற்கு மேலும் தான் அமைதியாக இருந்தால் எதுவும் வரப்போவதில்லை என்று புரிந்து கொண்டவள்.

“அவரை ஏன் தடுக்குறீங்க விஜய் மாமா! எப்படியும் நான் இந்த வீட்டை விட்டு ஒரு நாள் போகத்தான் போறேன். அது இப்பவே போனதா இருக்கட்டுமே..  நீங்க இதுல தலையிட வேண்டாம் என் வாழ்க்கையை என்னால பாத்துக்க முடியும். எனக்காக யாரும் எதையும் யோசிக்க வேண்டாம்” என்றாள்.

 “தாமரை என்னடி!! நீயே இப்படி பேசுற உனக்கு வம்சி கூட சேர்ந்து வாழ சம்மதம்னு நீ  எங்ககிட்ட சொன்னியே இப்போ இப்படி பேசினா என்னடி அர்த்தம். நாங்க சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு.. ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிரிஞ்சு போறேன்னு சொன்னா  நாங்க என்னதான் பண்றது” என்று அதிதி தாமரையின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க..

 அதற்குள் வெளியே சென்றிருந்த வீராவும் விக்ரமும் அங்கு வந்துவிட இங்கே நடப்பதை பார்த்துவிட்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு தாமரையையும் வம்சியையும் பிரிந்து செல்ல அனுமதிக்க முடியாது என்று அவர்களை தங்களோடு இருக்க நிர்பந்திக்க…

 “ஐயோ எல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா…  நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையா இருக்கிறது.  மனசுல ஒருத்தரை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தருக்கு கழுத்தை நீட்டி அவர் கட்டின தாலியை கழுத்துல சுமந்துகிட்டு என்னால இந்த வீட்டுல நிம்மதியா வாழ முடியாது” என்று பொறுமை இழந்து கத்திய தாமரை.

தாமரை எதுவும் பேசி விடுவாளோ என்று பதட்டமான வம்சி “தாமரை நீ எதுவும் சொல்ல வேண்டாம் இவங்க யாருகிட்டயும் நீ விளக்கம் சொல்லனும்னு அவசியம் இல்ல. உனக்கு எங்கே இருக்க விருப்பமோ அங்கேயே இருக்கலாம் வா நம்ம கிளம்பலாம்” என்று வம்சி அங்கிருந்து கிளம்ப போக..

“ ஒரு நிமிஷம் இரு டா வம்சி…” என்று அவனைத் தடுத்து நிறுத்திய வீரா நேராக தாமரையிடம் வந்தவன்.

“என்ன தாமரை சொன்ன!!  மனசுல ஒருத்தனை நினைச்சுகிட்டு என் புள்ள கட்டின தாலிய கழுத்துல சுமந்துட்டு இருக்கேன்னா… அப்போ அன்னைக்கு எங்ககிட்ட நீ சொன்னதெல்லாம் பொய்யா? என்றான்” அவளை நம்ப முடியாமல் பார்த்து.

“ ஆமா மாமா நீங்க எல்லாரும் என்ன நினைச்சு ரொம்ப வருத்தப்படுகிறீர்கள் என்று தான் நான் இன்னைக்கு போய் சொன்னேன் உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லை. நான் விஜய் மாமாவ தான் காதலிச்சேன். நானும் அவரும் தான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்துச்சு ஆனால் அதுக்குள்ள இங்க நடந்ததே வேற ” என்று இவ்வளவு நாள் தன் மனதில் பூட்டி வைத்திருந்த ரகசியத்தை அனைவரும் முன்னிலையிலும் தாமரை போட்டு உடைத்தாள்.

அவள் சொன்னதை கேட்டு அங்கிருந்து அனைவரும் தலையிலும் இடியே விழுந்தது போல இருந்தது.

தன் மூத்த மகனும், தாமரையும் காதலித்து விட்டு..  தாங்கள் கட்டாயப்படுத்தியதன் காரணமாக  இளைய மகனை திருமணம் செய்து இந்த வீட்டிற்கு மருமகளாக அழைத்து வந்திருக்கும் தாமரையை அனைவரும் செய்வதரியாது பார்த்தனர் .

ENNAI 2-31

“எப்படி தாமர எப்படி உன்னால மட்டும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல  சாதாரணமா இருக்கும் முடிஞ்சது. டேய் விஜய் உன் பொண்ணையும் சேர்த்துதாண்டா கேட்கிறேன் நீ காதலிச்ச பொண்ணு உன் தம்பிகையே கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்ல இருக்குறப்போ உன்னால எப்படி எல்லாம் கடந்து வர முடிஞ்சது” என்று மிகவும் பரிதவிப்போடு அதிதி விஜய்யையும், தாமரையையும் கேள்வி கேட்டார்.

 இருவரும் பேசாமல் நின்று இருக்க…

 இங்கு நடந்திருந்ததை சுருக்கமாக யாராவிடமும் தேவ்விடமும் சொல்லி இருக்க… அவர்களும் அங்கு வந்து விட..

 யாராவோ தாமரையிடம் வந்தவர்.

“ உன்ன கல்யாணம் செய்துக்க சொல்லி நானும் அதிதியும் அவ்வளவு வற்புறுத்தினோமே அப்பவாவது நீயும் விஜய்யும் கல்யாணம் பண்றது எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் எல்லார்கிட்டயும் சொல்லி புரிய வெச்சிருப்பேனே. இப்படி எங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் ஏன் உங்க வாழ்க்கைய கஷ்டப்படுத்திக்கிட்டீங்க.. இந்த பாவம் எங்களை சும்மா விடுமா!!” என்று அழுத்தார்.

அவர் அழுவதை பார்க்க வினோவிற்கு கஷ்டமாக இருந்தது. அவரை எப்படி தேற்றுவது  என்று அவளுக்கு தெரியவில்லை.

 “பெரியவங்க நாங்க தான் ஏதோ முட்டாள் தனமா இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டோம். நீங்களாவது உங்க மனசுல இருக்குறத எங்ககிட்ட சொல்லியிருந்தா இவ்வளவு கஷ்டம் யாருக்கும் வந்திருக்காது இல்லையா” என்றார் விஜய்யை பார்த்து.

 “மாமா! ஏன் எல்லாரும் உங்க மேல தப்பை போட்டுக்கிறீங்க…  இதுல  யாரு தப்பும் கிடையாது. கடந்த எதுக்குமே நீங்க காரணம் இல்ல இது எல்லாம் ஒரு சூழ்நிலை… எங்களோடு விதின்னு கூட சொல்லலாம். என்னையும் தாமரையையும் பிரிச்சிடுச்சு இனி அத பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. நான் அதை கடந்து வந்துட்டேன்” என்றான்.

“விஜய் என்னடா இப்படி பேசுற உன்னால இந்த விஷயத்தை அவ்வளவு லேசுல கடந்து வர  முடிஞ்சுதா?” என்றான் வீரா தன் மகனின் மனவலியை ஓரளவு உணர்ந்து கொண்டவனாக.

 “அப்பா! ஆரம்பத்துல எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. நீங்க வம்சியையும் தாமரையும் ஜோடியா சேர்த்து வச்சு பேசுறப்போ.. அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வெளிய அனுப்புறப்போ.. அவங்க ரெண்டு பேருக்கும் ஹனிமூன் ஏற்பாடு செஞ்சு வெளிநாடு அனுப்புறப்போ. என் கண்ணு முன்னாடியே நான் காதலிச்ச பொண்ணு என் தம்பி மனைவியா அவன் கூட வெளியே போகிறப்போ என் மனசு ரொம்ப பாரமா இருந்தது”  என்றவன் தாமரையை பார்த்தான். 

தன்னைப் போலவே இதயம் கணக்கு வழியில் துடித்திருந்ததை சொன்ன விஜய்யை பார்த்த தாமரை மேலும் பல தொடங்கி இருந்தால் அவளால் விஜய்யின் வழியை உணர முடிந்தது.

 தாமரை அழுவதை பார்க்க இனியாவால் முடியவில்லை. அவள் அருகில் வந்து தாமரையை தன் தோளோடு சாய்த்துக் கொண்டவள். “அக்கா அழாதீங்க..… தயவு செய்து அழாதிங்க அக்கா..” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.

விஜய்யும், தாமரையும் காதலித்து இருக்கிறார்கள் என்று  தெரிந்து இருந்தும் அழுது கொண்டிருந்த தாமரையை தேற்றும் இனியாவை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

“நான் இங்க இருந்தா தான் என்னை பார்க்கிறப்ப எல்லாம் தாமரைக்கு என் கூட பேசி பழகின நாட்கள் நினைவு வரும்னு தான் நம்ம வீட்டுக்கு வரதையே  குறைச்சிட்டேன்” என்றவன் இனியாவை பார்த்தான்.

இனியா விஜயையே பார்க்க… இங்கே வா என்பது போல அவளைப் பார்த்து தலையை ஆட்ட…

தாமரை அருகில் நின்றிருந்த இனியா வேகமாக ஓடி சென்று விஜய் அருகில் நின்று கொண்டாள்.

இனியாவின் தோளில் கை போட்டவன் அவளை தன் கைவலைவிற்குள் நிற்க வைத்து அனைவரையும் பார்த்தவன்.

“நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் அதிகமா இருந்தேன்” என்றவன் இனியாவை எங்கு சந்தித்தான் எப்படி அவளை தன்னோடு அழைத்து வந்தான் என்ற விபரங்களை கூறியவன்.

“தாமரையை பிரிந்த சோகத்துல நான் அதிகமா குடிக்க ஆரம்பிச்சிருந்தேன். என்னையும் அறியாமல் நான் அதிகமா குடிச்சதனாலதான் இனியா இந்த நிலைமைக்கு ஆளானா…

அவ வயித்துல வளர்ர குழந்தைக்கு  காரணம் நான் தாமரை மேல இருந்த காதலை மறக்க முடியாமல் குடிச்சதுதான்”என்றவன்.

“இதுக்கு பிறகும் நான் தாமரையே நினைச்சு என்னை நானே வருத்திக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லைன்னு முடிவு பண்ணி தான் நான் இனியாவை கல்யாணம் செய்தேன்”

“என்னை நம்பி இருக்க இனியாவ நான் நல்லபடியா பாத்துக்கணும்னு. நான் முடிவு பண்ணிட்டேன் இனிமேல் தாமரைக்கான இடம் என் மனசுல கிடையாது. அதை அவ புரிஞ்சுக்குவான்னு தான் நினைச்சேன். ஆனா இப்பவும் என்னையே நினைச்சுட்டு அவளை வருத்திக்கிட்டு… அவளையே காதலிக்குற வம்சி காதலை எதுக்காம.. அவன்கூட வாழ முயற்சி பண்ணாம வீட்டுக்கு கிளம்பிட்டா… இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு.. “ என்று தன் கோபத்தை, ஆற்றமையை அடக்க முடியாமல் அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் ஓங்கி குத்திவிட..

கண்ணாடி உடைந்து அவன் கையில் ஏறி ரத்தம் வழியத்துவங்க..

அதை பார்த்து பதறிய தாமரை விஜய்யை நோக்கி செல்ல போக.. அதற்கு முன்பாக இனியா வேகமாக விஜய் அருகில் சென்றவள் அவன் கையை தன் சேலை தலைப்பிற்குள் வைத்து அழுத்தி பிடித்தவள்.

“விஜய் சார்”! என்ன இப்படி பண்ணிட்டீங்க…பாருங்க உங்க கைல ரத்தம் எப்படி வழியுது” என்று இனியா பதற…

அதை பார்த்த தாமரை அப்படியே நின்றாள்.

 மொத்த குடும்பமும் விஜய்யின் இந்த செயலை பார்த்து பதறியது.

“என்னடா இப்படி பண்ணிட்ட..” என்று வம்சி விஜய்யை அழைத்து வந்து சோபாவில் அமர வைக்க..

அதற்குள் வினோ ஓடிச் சென்று வீட்டில் இருந்து பஸ்ட் எய்ட் கிட்டை எடுத்து வந்து வம்சியிடம் நீட்டினாள்.

அதை வாங்கியவன் விஜய்யின் கையில் கண்ணாடி சில் எதுவும் ஏறி இருக்கிறதா என்று பார்த்தவன் நல்ல வேலையாக அவன் கையில் கண்ணாடி  எதுவும் ஏறாமல் இருக்க… கையில் vailindha ரத்தத்தை துடைத்து  கட்டு போட்டு விட்டவன். 

“விஜய் நடந்த இத்தனைக்கும் காரணம் நான் தான். என்னோட உடம்பு பிரச்சனையை காரணம் காட்டி  உன்னையும்,  தாமரையையும்  நான் படிச்சிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சுடுடா…” என்று தாமரை வம்சி விஜய் மூவரையும் பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்டார் விக்ரம்.

“ஐயோ தாத்தா! என்ன இது நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு   கேக்குறீங்க.  உங்க மேல எந்த தப்பும் இல்லை..  தயவு செய்து இப்படி பண்ணாதீங்க” என்று விக்ரமின் கையை பிடித்து கீழே இறக்கிய தாமரை அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.

தாமரை அழுவதை பார்க்க வம்சியால் முடியவில்லை. அவள் இவ்வளவு சிரமப்படுவதை பார்த்தவன்.

தேவ், யாரா இருவரையும் பார்த்து “ ரெண்டு பேரையும் நான் கெஞ்சி கேட்டுக்குறேன்  தயவுசெய்து   தாமரையை உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க.,  தாமரை விஜய்யை தான் காதலிக்கிறேன் சொன்ன அப்போவே எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து  வெச்சி இருக்கணும்” என்றவன்.

“நான் அப்படி  பண்ணாம போனதுக்கு என்னோட சுயநலம்தான் காரணம். தாமரை மேல நான் வச்சிருந்த என்னோட காதலும் அதுக்கு ஒரு வகையில காரணம் ஆயிடுச்சு. எப்படியாவது தாமரை கிட்ட பேசி அவ மனச மாத்திடலாம்னு நான் நினைச்சுட்டேன் ஆனா அவ தினம் தினம் அவளோட காதல நினைச்சு கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியல…” என்றவன் நேராக தாமரையிடம் வந்து அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தவன்.

“மாமா இந்தாங்க தாமரையை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. அவ அங்கையாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பா. இங்க என் மனைவியா அவ தினம் தினம்  கஷ்டப்படுறதை விட உங்க வீட்ல உங்க பொண்ணா இருக்கிறது சந்தோஷம்னு நான் நினைக்கிறேன்” என்றான் வம்சி.

‘வம்சியின் இந்த பேச்சிலேயே தாமரை மீது அவள் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான். அவள் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறான். அவன் காதல் எந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறது என்பதை மொத்த குடும்பமும் அவன் பேசியதை வைத்தே புரிந்து கொண்டது.

 தாமரைக்கும் அவன் தன் மீது வைத்திருக்கும் காதல் புரியாமல் இல்லை. அதை என்றோ உணர்ந்து இருந்தாள். ஆனால் வம்சியின் இந்த சுயநலமற்ற காதலுக்கு ஏற்றவள் தான் இல்லை என்பதை அவள் மனம் ஆணித்தனமாக நம்பியது.

 தாமரை கையை தேவ்விடம் பிடித்துக் கொடுத்த வம்சி அவளை வலி மிகுந்த பார்வை பார்த்தவன் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிவிட.. 

வம்சி இப்படி கனத்த இதயத்தோடு வீட்டை விட்டு வெளியேறியதை பார்க்க தாமரை மிகவும் வேதனைப்பட்டாள். ஆனால் என்ன செய்வது தன் விதி இப்படி இருக்கிறது என்று அவளையே நொந்து கொண்டவள்.

“அப்பா வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று தேவ்வை அழைத்தாள்.

“தாமரை நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு…” என்ற தேவ்.

தன் மகள் தோளில் கையை போட்டு அவளை அதரவாக அணைத்துக் கொண்டவர்.

“அது உன் வீடு தான் நீ எப்ப வேணா  நம்ம வீட்டுக்கு வரலாம் போகலாம். ஆனா அப்படி நீ அந்த வீட்டுக்குள்ள வரதா இருந்தா உன் புருஷனோட தான் வரணும்” என்றார்.

இத்தனை விஷயமும் தெரிந்து பின்பு தன் அப்பா இப்படி பேசுவதை நம்ப முடியாமல் எனக்கு ஆதரவாக பேச வேண்டிய தன் தந்தை பேசுவதை கேட்டவள்   அவரை விட்டு விலகி தேவ்வை பார்க்க..

 “ என்னம்மா அப்படி பாக்குற இந்த சமயத்துல எல்லா அப்பா அம்மாவும் பொண்ணுக்கு ஆறுதலாக இருப்பாங்க கண்டிப்பா நானும் உனக்கு ஆறுதலாவும் துணையாகவும் இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.  நீ விஜய் மேல இருக்கிற காதல்ல வம்சி உன் மேல வச்சிருக்கற காதுல புரிஞ்சுக்க தவறிட்ட…”

“ உன்னோட மனசுல விஜய் தான் இருக்கான்னு தெரிஞ்சும் கூட உன் மனச மாத்த வம்சி போராடுறான். அது உனக்கு புரியலையா? அவனோட காதல உனக்கு புரிய வைக்க முயற்சி பண்றது உனக்கு தெரியலையா தாமரை.  இதுக்கு அப்புறமும் உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்க போறியா?”

“நீயும் தாமரையும் டைவர்ஸ் வாங்க இன்னும் ஒரு மாசம் இருக்கு.  இந்த ஒரு மாசத்துக்குள்ள உன் மனசு வம்சிக்காக.. அவன் உன் மேல வெச்சிருக்க காதலுக்காக இறங்கி வருதான்னு முயற்சி செஞ்சு பாரு”

“அப்படியும் உன்னால  உன் காதலை மறக்க முடியலன்னா… நீ கோர்ட்ல டைவர்ஸ் வாங்கிட்டு என்னோட பொண்ணா நம்ம வீட்டுக்கு வா.. அதுவரை நீ இங்க தான் இருக்கணும்” என்றவன் யாரா வினோ இருவரையும் பார்த்தவன்.

“ரெண்டு பேரும் கிளம்புங்க வீட்டுக்கு போகலாம்” என அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். 

 தேவ் கிளம்பிய அடுத்த நொடி சோபாவில் இருந்து எழுந்த விஜய் இனியாவின் கையைப் பிடித்து தாமரை முன்பு அழைத்து வந்தவன்.

“தாமரை நீ என்ன பண்ணுனாலும் நடந்ததை மாற்ற முடியாது. இதுக்கு மேல இதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. உன் மனசுல இருக்குற காதல அழிச்சிடுன்னு சொல்லல.. அத மறக்க சொல்றேன். உனக்கான   அழகான ஒரு வாழ்க்கை காத்துட்டு இருக்கு. அந்த வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துட்டு வாழ முயற்சி பண்ணு. நீ எப்போ வம்சி கூட சந்தோஷமா சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டேன்னு நான் கேள்விப்படறேனோ… அதுவரை இனியாவும் இந்த வீட்டுக்குள்ள வரமாட்டோம்” என்றவன்.

 தன் அம்மா அப்பாவையும் பார்த்து “நானும்,இனியாவும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறோம். எங்கள பாக்கணும்னு நினைச்சா நீங்க அங்க வாங்க.  நாங்க இனிமேல் இந்த வீட்டு பக்கம் வரமாட்டோம்” என்றவன். இனியாவின் பாட்டி மரகதத்தையும் தன்னோடு அழைத்துக் கொண்டு  கெஸ்ட் ஹவுசிற்க்கு கிளம்பினான்.

இப்படி தன் இரு மகன்களின் வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்து அதிதி கவலைப்பட..

அவரை ஆறுதலாக தாங்கிப்பிடித்து தன்னோடு அறைக்கு அழைத்துச் சென்றார் வீரா.

விக்ரமும் மீனுவும் தங்கள் பேரன், பேத்தி வாழ்க்கை தங்களால் வீணாகிவிட்டதே என்று நினைத்து கவலையில் வீட்டிற்குள் இருக்க பிடிக்காமல் இருவரும் வெளியே கார்டனுக்கு சென்று விட..

இங்கே ஹாலில் தாமரை மட்டும் தன்னந்தனியாக நின்றிருந்தவள் விஜய் பேசியது.. வம்சி பேசியது… தன் அப்பா பேசியது என அனைத்தையும் நினைத்தவள்.

விஜய்யை மறக்க முடியாத தன்னால் எப்படி வம்சியை கணவனாக ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து வாழ முடியாது  என்று நினைத்தவள்.

இனி தான் உயிரோடு இருந்து யாரையும் கஷ்டப்படுத்த விரும்பாதவள். தன் உயிரை மாய்த்துக்கொள்ள அந்த வீட்டை விட்டு தன்னந்தனியாக வெளியேறி இருந்தாள். 

அவள் வெளியே சென்றது யாரும் இப்போது இருக்கும் மனநிலையில் கவனிக்கவும் இல்லை.

Ennai 2-32

தன் வீட்டில் இருந்து இனியாவே அழைத்துக் கொண்டு நேராக கெஸ்ட் ஹவுஸிற்கு வந்திருந்தான் விஜய்.

 அவளை கெஸ்ட் ஹவுஸ் வாசலில் இறக்கி விட்டவன்.” நீ உள்ள போ இனியா நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றான்.

 அவனை எங்கே போகிறான் என்று கேட்க அவளுக்கு மனம் வரவில்லை விஜயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை இனியா கனித்திருக்க மறுப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாக விஜய்க்கு தலையாட்டியவள் தன்னோடு மரகதத்தையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.

இனியா உள்ளே வந்ததை பார்த்த மல்லிகா அவளை வாசல் வந்து அழைத்து வந்தவர் “பாப்பா என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு. ஏன் ஐயா உன்னை கொண்டு வந்து விட்டதும் கிளம்பி போயிட்டாரு எதுவும் பிரச்சனையா?” என்றாள் எதுவும் புரியாமல்.

 “பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லக்கா.. அவர் கொஞ்சம் வேலையா வெளிய போய் இருக்காரு. கொஞ்ச நேரத்துல வந்துருவாரு” என்றவள்.

“ மல்லிகா அக்கா பாட்டி இன்னும் எதுவும் சாப்பிடல  நைட் டிபன் எதுவும் செய்து இருக்கீங்களா  அவங்களுக்கு கொடுக்க” என்றாள்

 “மாவு இருக்கு பாப்பா சட்னி அரைச்சு வச்சிருக்கேன். நான் வேணா பாட்டிக்கு தோசை ஊத்தி கொடுக்கிறேன். நீங்களும் சாப்பிடுறீங்களா உங்களுக்கு தோசை ஊத்தவா” எனக் கேட்டாற்.

“ இல்லக்கா எனக்கு பசிக்கல நீங்க பாட்டிக்கு மட்டும் கொடுங்க” என்றவள் 

நேராக கெஸ்ட் ஹவுஸில் அவளுக்காக இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்..

மரகதத்திற்கு தோசை ஊத்தி கொடுத்துவிட்டு அவர் தங்க கீழேயே இருந்த ஒரு அறையை சரி செய்து அவரை அங்கே உறங்கச் சொல்லிவிட்டு தன்னரைக்குச் சென்று மல்லிகா உறங்கி விட்டார்.

 இங்கே தன் அறைக்குள் உறக்கம் வராமல் முன்னும் பின்னும் புரண்டு படுத்துக் கொண்டிருந்த இனியா ஒரு பக்கம் பசி வயிற்றை கிள்ளினாலும் சாப்பிட மனம் இல்லாமல் விஜய்யின் நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.

 நீண்ட நேரம் உறக்கம் வராமல் விஜய் பற்றியே கவலையில் படுத்து இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போயிருந்தாள்

….

 வீட்டை விட்டு கிளம்பி இருந்த தாமரை தான் வாழ்வதற்கு இந்த உலகத்தில் எந்த ஒரு காரணமும் இல்லை என்று நினைத்தவள். கால் போன போக்கில் நடந்து பீச்சுக்கு வந்திருந்தாள்.

 ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளையும், தன் மனதில் எழுந்த எண்ணங்களையும் தொடர்பு படுத்தி பார்த்தால் இரண்டும் அமைதி இல்லாமல் செல்வதற்கு இலக்கு இல்லாமல் கரையை கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

 பொங்கி வரும் கடல் அலைகளைப் போல தன் உணர்ச்சிகளை தன் சோகங்களை மனதிற்குள் அடக்கி வைத்திருந்த தாமரை அதை இதற்கு மேலும் அதனை மனதிற்குள்ளேயே வைத்து அழ முடியாமல் வாய் விட்டு கதறி அழத்து துவங்கியிருந்தாள்.

“ கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலையில் கொடுத்துட்டேன் நான் என்ன பண்ணினேன் நீ விஜய் மாமாவை காதலிச்சது தவிர. ஏன் இங்க ரெண்டு பேரையும் பிரிச்சு இப்படி எங்க வாழ்க்கையில விளையாடின அப்படி நான் என்ன பண்ணிட்டேன்” என்று சொல்லி கடல் கரை மணலில் மண்டியிட்டு துக்கம் தாங்காமல் ஓவென்று கதறி அழுதாள்.

 எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது  

 அழுது கரைந்த அவள் கண்ணீர் துளிகள் கன்னங்களில் காய்ந்து போயிருந்தது நெஞ்சை பிடித்துக் கொண்டு முட்டிக்காலிட்டு அமர்ந்திருந்தவள் இதயத்தை கல்லாக்கி விட்டு எழுந்து நின்றாள் நடைப்பயணமாக கடல் அலைகளை நோக்கி மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்க தொடங்கினாள்.

 கடற்கரையின் காற்று அவள் மெல்லிய உடலை நடந்து வந்த எதிர்பக்கத்திற்கு தள்ளிச்செல்ல..

 அந்த காற்று கூட தாமரையின் உயிரை மாற்றிக் கொள்வதை ஏற்க முடியாமல் அவளை பின்னுக்கு தள்ளிக் கொண்டு செல்வது போல இருந்தது அந்த காட்சி.

 அவள் பாதங்களை நினைத்துக் கொண்டிருந்த கடலலை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து இப்போது அவள் இடைவரை படரத் துவங்கியது.

 கரைக்கு அடித்துச் செல்ல ஒரு அலை தாமரையை  இரண்டு அடி பின்னே தள்ளிச் சென்றால் கரையைத் தொட்டு திரும்பி வந்த கடலலை அவளை சிறு அடி மட்டுமே தன்னுள் அவளை அழைத்துச் செல்ல முயன்று  கொண்டு இருந்தது.

 இடைக்கு மேலே சென்று கடல் அலை அவள் மார்பை தொட்டு தடவி அதை தாண்டி மேலே செல்ல அதற்கு மேல் நடக்க முடியாமல் காலிடரி தண்ணீருக்குள் மூழ்கத் துவங்கினாள் தாமரை.

 தண்ணீருக்குள் மூழ்கிய தாமரை மூச்சு விட சிரமப்பட்டால் தண்ணீர் அவள் நாசிக்குள் நுழைந்து அவளை மூச்சு விட முடியாமல் தடுத்து நிறுத்தி இருந்தது.

 இரண்டு மூன்று முறை தண்ணீருக்குள்ளும் வெளியேயும் வந்து சென்ற தாமரை மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் மூழ்க அவளை தண்ணீர் உள்ளே இழுத்துச் சென்றது .

…..

 நள்ளிரவை கடந்திருக்க விஜய்யின் கார் வந்து கெஸ்ட் ஹவுஸ் இன் வாசல் முன்பு நின்றது. 

 கார் க்ரிச்சிட்டு சத்தமிட அந்த சத்தத்தை கேட்டு தூக்கத்தில் இருந்த இனியா கண் விழித்தாள்.

 விஜய் வந்துவிட்டதை உணர்ந்தவள் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வர… வீட்டின் வாசல் கதவை திறந்து கொண்டு விஜய் உள்ளே நுழைந்தான்.

 “விஜய் சார் வந்துட்டீங்களா ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு எங்க போயிருந்தீங்க” என்று கேட்டுக் கொண்டே அவனை நோக்கி நடந்து வந்த இனியா.

 விஜய்யிடம் ஏதோ வித்தியாசத்தை கண்டவளாக நின்று அவனைப் பார்த்தாள் .

 விஜய் தள்ளாடியபடியே அந்த ஹாலில் இருந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியில் நடந்து வந்தான்.

 அவன் தள்ளாட்டத்தை கண்டதுமே விஜய் கொடுத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட இனியா.

இத்தனை நாட்கள் கழித்து  மீண்டும் குடித்து விட்டு வந்திருக்கும் விதியை பார்த்தவளுக்கு அவன் எதற்காக கொடுத்திருக்கிறான் என்பது புரிந்தது.

 இன்று நடந்த விஷயத்தினால் தான் விஜய் இப்படி கொடுத்து வந்திருக்கிறான் என்பதை யோசித்துப் படி அவனை பார்க்க தட்டு தடுமாறு நடந்து வந்த விஜய் கால்கள் பின்னி தடுமாறி கீழே விழப்போக பதறி கொண்டு ஓடிப் போய் இனியா அவனை விழாமல் பிடித்துக் கொண்டாள்.

 “சார் பார்த்து வாங்க கீழ விழ போறீங்க.. “ என்று அவனைத் தாங்கிப் பிடித்தவள்.

“ என்ன சார் இது இவ்வளவு குடிச்சு இருக்கீங்க. உங்க உடம்பை என்ன ஆகிறது” என்று கேட்டுக்கொண்டே அவன் கையை தன் தோளை வளைத்துப் போட்டவள். அவன் இடையில் கை கொடுத்து பிடித்தபடி விஜய்யோடு மெல்ல நடந்தால்..

 “நான் குடிக்கணும்னு நினைக்கல இனியா ஆனா மனசு ரொம்ப வலிக்குது. என்னால அந்த வழியை தாங்கிக்க முடியல. அதனால தான் வேற வழியில்லாமல் குடிச்சிட்டேன் “ என்று அவள் மீது தன் பாரத்தை மொத்தமாக போட்டபடி நடந்தான்.

 இனியா அவன் பாரம் தாங்க முடியாமல் அவனை சிரமப்பட்டு தாங்கிப் பிடித்தவள். விஜய் பேசியதை நினைத்து வருத்தப்பட்டால் அவன் மனம் எவ்வளவு வலிக்கும் எவ்வளவு கஷ்டப்படுவான் என்று யோசிக்கப்படியே படிகளில் ஏறி சென்றாள்.

 மேலே இருந்த விஜய்யின் பெட்ரூமிற்கு அழைத்து வந்தவள் கட்டிலில் விஜய் அமர வைத்து விட்டு. “சார் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் போய் உங்களுக்கு சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து இனியா செல்ல போக..

“ ப்ளீஸ் இனி  என்ன விட்டுட்டு எங்கேயும் போகாத… எனக்கு தனியா இருந்தா ஏதேதோ தோணுது என்னால முடியல “ என்றவன் அவள் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன்.

 அவனை நெருங்கி  நின்றிருந்த இனியாவின் இடையோடு சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டே இனியாவின் மார்பில் முகம் புதைத்தான்.

 இனியா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் அமைதியாக அப்படியே நின்று இருக்க… மெல்ல அவன் தலை முடியை தன் விரல்களால் வருடி கொடுத்தவள்.

“ சார் உங்களோட கஷ்டம் எனக்கு புரியுது. ஆனா என்ன செய்யறது நடக்கிற எதுவுமே நம்ம கைல இல்லையே.  இனியும் அதையே நினைச்சுட்டு நீங்க வருத்தப்பட்டு இருந்தா என்ன பண்ண முடியும் சார்” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

 விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் மார்பில் முகம் புதைத்திருக்க திடீரென அவள் மார்பில் சூடாக ஈரம் படர்வதை உணர்ந்தவள்   சட்டென குனிந்து விஜயை பார்த்தாள்.

விஜய்யின் உடல் குலுங்கியது அவள் மார்பில் முகம் புதைத்திருந்த விஜய் அழுது கொண்டிருந்தான். அழுத அவன் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் தான் அவள் மார்பை நனைத்திருந்தது.

 இதை சற்றும் இனிய எதிர்பார்க்கவில்லை இதனால் வரை கம்பீரமாக எதற்கும் தலை வணங்காதவனாக எப்போதும் மெடுக்கோடு இருக்கும் விஜய் என்று தலை கவிழ்ந்து தன் மார்பின் முகம் புதிது அழுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை விஜய்யின் மனவலி இனியாவை தாக்குவதைப் போல அவள் உணர்ந்தாள்.

  விஜய்யின் முகத்தை கையில் ஏந்திய இனியா அவன் முகம் பார்க்க கண்கள் இரண்டும் சிவந்து கண்ணீர் துளிகள் அவன் முகத்தில் வழிந்து இருக்க..

 அதைப் பார்த்தவள் இதயம் பதறியது தன்னை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்தவனே இந்த ஒரு சூழ்நிலைக்கு ஆளாக தான் ஒரு காரணம் என்று நினைக்கையில்.

 அவள் மன வேதனை இன்னும் அதிகமானது.  தன் கட்டை விரல்களால் விஜய்யின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை  துடைத்து விட்டவள் குனிந்து அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு.

 “சார் என்ன மன்னிச்சிடுங்க என்னாலதானே நீங்களும் தாமரை அக்காவும் கல்யாணம் செய்துக்க முடியாமல் போயிடுச்சு. நான் மட்டும் அன்னைக்கு உங்க காருக்கு குறுக்க வந்து விழாமல் இருந்திருந்தா. உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது இல்ல. உங்களோட நிலைமைக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன் மன்னிச்சிடுங்க சார்” என்று  அவள் அழ.. 

 இனியா அழுகையை பார்த்தவன் தன் மனதில் இருந்த சோகத்தை அவளிடம் கூறி இனியாவையும்  கஷ்டப்படுத்தி விட்டோமே என்று நினைத்தவன்.

“நீ அழாதே உன்னால தான் இதெல்லாம் நடந்ததுனு நீ நினைக்கிறது தப்பு. அதுக்கும் நடந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்.

 இனியாவின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தவன் “இனி நான் உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்குவா.. எனக்கு என்னவோ போல இருக்கு” என்று ஏக்கமாக அவள் முகத்தை பார்த்தான் .

விஜய் கேட்ட அடுத்த நொடி எழுந்து கட்டிலில் சாய்ந்து நன்றாக அமர்ந்தவள் “வாங்க சார் வந்து படுத்துக்கோங்க” என்று இருக்கையையும் நீட்டி அவனை தன் மடியில் படுத்து உறங்க வரவேற்றாள்.

 தன் தாயைப் போல அரவணைக்க காத்திருக்கும் இனியாவை பாசம் பொங்க பார்த்தவன் அடுத்த நொடி அவள் தாய்மடியில் தஞ்சம் புகுந்திருந்தான் விஜய்.

 கண்கள் மூடி அவள் எடையை கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்ட விஜய்யின் தலைமுடியை தன் வெண்டைக்காய் பிஞ்சு விரல்களால் கோதி விட்டு அவனை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

 நீண்ட நேரம் கழித்து தான் விஜய் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் தலையை கட்டிலில் சாய்த்தபடி இனியாவும் அமர்ந்தபடியே உறங்கி விட்டாள். 

Ennai 2-33

 “அக்கா!! அக்கா!! கண்ணு முழிச்சு பாருங்க. நான் யாருன்னு தெரியுதா ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுனீங்க” என்று ஒரு அழுகுரல் கேட்டு மயக்கத்தில் இருந்து மெல்ல கண்விழித்தாள் தாமரை.

 கட்டிலில் தாமரை படுத்திருக்க 

… அவள் முன்பு மிகவும் பதட்டமாக அழுது படி முட்டிகாலிட்டு அமர்ந்திருந்தாள் இனியா.

 இனியாவை பார்த்த தாமரைக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை திருப்பி தான் இருந்த இடத்தை சுற்றியும் பார்த்தவள்  தான் எப்படி இங்கே வந்தோம் அதுவும் விஜய் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு என்று யோசித்தபடி கட்டிலில் இருந்து எழுந்தாள்.

 கீழே முட்டிகாலிட்டு அமர்ந்திருந்த இனியா தாமரை எழுந்திருப்பதை பார்த்து பதற்றமாக எழுந்தவள் “அக்கா மெல்ல பார்த்து” என்று தாமரையை மெல்ல பிடித்து கட்டிலில் சாய்பாபா அமர வைத்தாள்.

 “அப்பாடா ஒரு வழியா கண்ணு முழிச்சிட்டியா! நல்ல வேலை உன்னை நான் வந்து பார்த்தேன். Bஇதே வேற யாராவது பார்த்திருந்தா உன் கையில கழுத்தில் இருக்கிறது எல்லாத்தையும் உருவிட்டு அப்படியே தண்ணில எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு விட்டு இருப்பானுங்க. ஏதோ நானா இருக்கங்காட்டி உன்ன காப்பாத்தி விஜய் சார் கிட்ட கூட்டிட்டு வந்து விட்டேன்” என்று சேது தாமரை இடம்  பேசினான்.

 அவனை குழப்பமாக பார்த்தவள் நீ நீங்க என்ன பண்ற என்று புரியாமல் கேட்டால்  

 “ஏன் கேட்க மாட்ட இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா அப்படியே அந்த கடலுக்குள்ள மூழ்கி போயிருப்ப.  நான் என் பசங்க கூட ஜாலியா இருக்கலாம்னு பீச் பக்கம் வந்தா ஒரு புள்ள கையும் காலையும் ஆட்டி தண்ணிக்குள்ள  மூழ்கிக் இருந்துச்சு. யார் என்னன்னு தெரியல யாரோ என்னவோன்னு தண்ணிக்குள்ள குதிச்சு உன்னை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வந்தேன்”

“ காப்பாத்தி கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அது நீன்னு   தெரிஞ்சது. அட இது நம்ம ஆஸ்பத்திரியில் பார்த்த பொன்னாச்சின்னு உன்ன நீங்க கூட்டிட்டு வந்தேன்”  என்றான் சேது.

 “தாமரையே பத்திரமா காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் இந்த இதை வச்சுக்கோ” என்று கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விஜய் சேதுவின் கையில் திணித்தான்.

 “அட என்ன சார் நீ இதுக்கு போய் காசு இல்லாம கொடுக்கிற முதல் காசு வாங்குறேன்” என்று சிரித்தவன்.

“ ஏம்மா உனக்கு என்னதான் பிரச்சனை அப்படி என்ன ஆச்சு உனக்கு கடல் விழுந்து சாகுற அளவுக்கு” என்று தாமரையே கேட்டான் சேது.

 அவள் எதுவும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க…

“ம்ஹும்… இது நான் பேசினா பதில் சொல்லாதன்னு நினைக்கிறேன் ஏற்கனவே விடியப் போகுது நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் எனக்கு வேலை நிறைய கிடக்கு” என்றவன்  

“சார் நீயே இது கிட்ட பேசிக்கோ நான் கிளம்புறேன்” என்று விஜய் கொடுத்த பணத்தை அவன் கையிலே திணித்துவிட்டு அங்கிருந்து சேது கிளம்பினான்.

 அவன் கிளம்பி அடுத்த நொடி கையில் இருந்து பணத்தை கீழே விட்டெறிந்தவன் தாமரையை நோக்கி வேகமாக வந்த விஜய் தாமரையின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

இப்படி தாமரையை அடித்துவிட்ட விஜய்யை அதிர்ச்சியாக பார்த்தாள் இனியா.

 “ஏண்டி இப்படி ஒரு காரியத்தை பண்ணுன நீ செத்துப்போயிட்டா எல்லாமே சரியா போயிடும்னு நினைக்கிறியா. அப்படி நீ நெனச்ச மாதிரி நான் யோசிச்சு இருந்தா என்னைக்கோ நான் இந்த உலகத்தை விட்டு போயிருக்கணும்” என்று அவளைப் பார்க்க..

“ விஜய் சார் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றாள் இனியா.

“ என்னை என்ன செய்ய சொல்ற இனியா. இவளுக்கு மட்டும் தான் என்னை பிரிஞ்சதுனால மனசு வலிக்குமா..  ஏன் நான் இல்ல இவளை பிரிஞ்சு நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு தானே தெரியும்.  இவ செத்துப் போயிட்டா அந்த வலி போயிடும்னு நினைக்கிறாளா..  அப்போ நானும் செத்துப் போகிறேன் எனக்கும் அந்த வலி போயிருந்தானே”  என்றான்.

 எனவே இரவு அதிகம் குடித்ததில் விஜய்க்கு தலை விண்ணென்று வழித்துக் கொண்டிருக்க தாமரையின் இந்த முடிவைக் கண்டு அவன் தலைவலி அதிகமானது தலையை பிடித்துக் கொண்டு அம்மா என்று அலறியபடி தரையில் அமர்ந்தவன்.

“ ஏன் இப்படி பண்ணின நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ முடியலைன்னா என்னடி பண்ண முடியும். உன்ன நம்பி ஒருத்தன் இருக்கான் அவனை பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா”

“ நமக்கு இருக்கிற அதே வலி தானே அவன் மனசிலும் இருக்கும். அவன் கட்டண தாலிய கழுத்துல சுமந்துட்டு நீ என்ன மனசுல நெனச்சுக்கிட்டு வாழுறத நினைக்கும் போது வம்சி எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பான். அதை கொஞ்சமாவது நீ யோசித்து பார்த்தியா” என்று அவளை பார்க்க…

 விஜய் பேசியதை கேட்டு தலை கவிழ்ந்த படி தாமரை அமர்ந்திருக்க..அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் மடியை நனைத்து கொண்டிருந்தது 

 “அழு அழு இன்னும் நல்லா அழு இப்படி அழுகிகிட்டு நீ என்ன சாதிக்க போற. அழுதாலோ இல்ல சாகத் துணிஞ்சிட்டாலோ எல்லாம் சரியா போயிடும்னு நினைக்கிறியா? ஏன் இப்படி ஒரு தப்பான முடிவை எடுத்த தாமரை இத நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை”.

“எப்பவுமே உன்ன பத்தி மட்டும்தான் யோசிப்பியா உன்னை சுத்தி இருக்கிறவங்களோட மனச கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டியா நீ..”  என்று தாமரை செய்த காரியத்திற்காக அவளை வார்த்தைகளால் வதைத்தான் விஜய்.

 “விஜய் மாமா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க நான் அவ்வளவு சுயநலமானவன் கிடையாது. நான் இருக்கிறதுனால யாருக்குமே நிம்மதி இல்லை… நான் செத்தாலாவது நீங்க எல்லாரும் நிம்மதியா இருப்பிங்கன்னு தான்  இந்த முடிவை எடுத்தேன்” என்று தயங்கி தயங்கி தாமரை விஜய்யிடம் பேச 

 அவள் பேசியதை கேட்டவன் “நீ தான் அப்படி நினைச்சுட்டு இருக்க ஆனா உனக்காக இங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாத்தியா உன் அம்மா அப்பாவ யோசிச்சியா வினோவை யோசிச்சியா உன் மனசு எப்படியாவது மாத்தி உன் கூட சந்தோஷமா வாழனும்னு நெனச்சு உனக்காக காத்துட்டு இருக்குற வம்சி பத்தி கொஞ்சமாவது நீ யோசிச்சு பாத்தியா என்னையே நினைச்சுட்டு நீ உன் வாழ்க்கையை அழிச்சுக்கிறது இல்லாம உன்னை சுத்தி இருக்கிறவங்களோட வாழ்க்கையும் அழிக்க பாக்குறியே இது சரியா” என்றான் விஜய் 

 விஜய் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் தாமரை குறுகிப் போய் அமர்ந்திருக்க…

 “விஜய் தாமரையை பேசுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? அவளை எதுக்காக இப்படி வார்த்தைகளால் காயப்படுத்துற” என்று கேட்டுக் கொண்டே கோபமாக அந்த அறைக்குள் நுழைந்தான் வம்சி.

 என்னை என்னடா பண்ண சொல்ற இது கிட்ட நான் எப்படி எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும் இப்படி ஒரு முடிவுக்கு தாமரை போவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று விஜய் வம்சிடம் நியாயத்தைக் கூற…

“அதுக்காக அவளை இப்படித்தான் கஷ்டப்படுத்துவியா என் மனைவியை கஷ்டப்படுத்துற உரிமையை உனக்கு யார் கொடுத்தது. நீயும் தாமரையும் ஒருத்தர ஒருத்தர காதலிச்சு இருக்கலாம். ஆனா அவ இப்ப என்னோட மனைவி என் மனைவிய அதட்டவோ.. அதிகாரம் பண்ணுவோ இங்க யாருக்கும் உரிமை கிடையாது “ என்றான்.

 “பாத்தியா தாமரை இத்தனை வருஷத்துல என்னோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து எப்பவும் நான் சொன்ன பேச்சை கேட்கிற வம்சி இன்னிக்கு உனக்காக என்ன எதிர்த்து பேசுறான் உனக்கு சப்போர்ட் பண்ணி நிற்கிறான் அவனோட மனச கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என்றவன்.

“ இனிமேல் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கணும்னு நீ கனவுளையும் நினைக்காத. அப்படி ஒரு முடிவ நீ எடுக்கிறேன்னு எனக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நான் இந்த உலகத்தை விட்டு போயிடுவேன்” என்றான் விஜய்.

 விஜய் பேசிய வார்த்தையை கேட்டு மூவரும் அதிர்ந்து அவனை பார்க்க 

“இதுதான் என்னோட முடிவு. உன்னை இப்படி ஒரு முடிவெடுக்க ஆளாக்கினது நான் தானே. அப்போ அந்த தண்டனை எனக்கு தானே கிடைக்கணும்.  இனிமேல் இந்த மாதிரி முடிவெடுக்கறதுக்கு முன்னாடி நான் சொன்னத மனசுல வச்சுட்டு அதுக்கப்புறம் நீ என்ன வேணா செய்துக்கோ” என்று கோபமாக அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் விஜய்.

விஜய்யின் இந்த ஆதங்கமும் கோபமும் இனியா இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள். அவன் மனதில் இருக்கும் வேதனையை அவளால் உணரும் முடிந்தது தாமரையை பற்றியும் இனியாவால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் அவள் தான் என்ன செய்வாள் விதி இவர்கள் நால்வர் வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

 கோபமாக செல்லவும் அவன் பின்னால் தாமரையும் சென்றுவிட அந்த அறையில் தாமரையும் வம்சியும் மட்டுமே இருந்தனர்.

 வம்சி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க எழுந்து அவன் அருகில் வந்தவள் அந்த ஏசி அறையில் அவள் ஈரம் உடல் நடுங்கியது கைகளை குறிக்க கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தவள்.

“ஏன் அம்மு நீ மட்டும் எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க. நீயும் என்னை ஏதாவது சொல்லித்திட்டேன் உங்க எல்லாரையும் நோகடிச்சுட்டு இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருக்கேன்னு என்ன நினைச்சு எனக்கே கஷ்டமா இருக்கு. உன் பங்குக்கு நீயும் ஏதாவது சொல்லி திட்டு அம்மு அப்பவாவது உன் பாரம் கொஞ்சம் குறையும்.  என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா உன் வாழ்க்கையை நீயே கெடுத்துட்ட” என்று அவனிடம் ஆற்றாமையோடு பேசினாள் தாமரை.

 விரக்தியாக அவளைப் பார்த்த வம்சி “நான் திட்றதால எல்லாம் மாறிடப் போகுதா தாமரை தயவு செய்து இப்படி ஒரு முடிவை மட்டும் எடுத்துடாத. என்னால அதை தாங்கிக்கவே முடியாது. என்ன மறுபடி மறுபடி கஷ்டப்படுத்த நினைக்காத ப்ளீஸ்.. “ என்று அவளை கை கூப்பி கும்பிட்டு வம்சி கெஞ்சி கேட்க.

 “அம்மு! ஏன் இப்படி எல்லாம் பேசுற இனிமே நான் இந்த மாதிரி ஒரு தப்பான முடிவு எடுக்க மாட்டேன்.என்ன மன்னிச்சிடுமோ ப்ளீஸ்” என்று தாமரை  கூப்பிய  அவன் கையை  பற்றிய தாமரை தன் தலையை சாய்த்துக் கொண்டு அழ ..

 “தாமரை இனிமேல் என்ன காதலிக்க சொல்லி என் கூட சேர்ந்து வாழ சொல்லி நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்.  நானும் சேர்ந்துதானே  உன்னை இப்படி ஒரு முடிவெடுக்க வச்சுட்டேன் இனிமேல் நான் உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். நீ என் கண்ணு முன்னாடி இருந்தா மட்டும் போதும் உன்னை பார்த்துட்டு நான் என் ஆயுளை கழிச்சிடுவேன் தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி முடிவை எடுத்துடாத ப்ளீஸ் ” என்றவன்

 “வீட்டில் எல்லாரும் உன்னை காணும்னு தேடிட்டு இருக்காங்க நீ கிளம்பி வா போகலாம்” என்று திரும்பி அந்த அறையை விட்டு வெளியே செல்ல..

 தன்னை பார்த்துக் கொண்டே மட்டும் இருந்தால் போதும் எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று சொன்ன வம்சியை இன்று வித்தியாசமாக பார்த்தால் தாமரை தன்மீது இவ்வளவு பாசமும் அன்பும் வைத்திருக்கும் வம்சியையும் சேர்த்து தான் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி அவன் பின்னால் அமைதியாக சென்றாள்.

 வம்சி காரை ஸ்டார்ட் செய்ய அவன் சீட்டு இருக்கு அருகில் இருந்து சீட்டு வந்து முறை அமர்ந்ததும் காரை அங்கிருந்து கிளப்பி இருந்தான்.

 அவர்கள் இருவரும் கிளம்பி செல்வதை இனியாவின் அருகில் இருந்த ஜன்னல் வழியே விஜய் பார்த்துக் கொண்டிருக்க…

 அவன் பின்னால் நின்றிருந்த இனியா “சார் இனிமேல் தாமரை அக்காவ பத்தி கவலைப்படாதீங்க. கண்டிப்பா அவங்க இந்த மாதிரி எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டாங்க” என்று விஜய்க்கு ஆறுதல் கூற முயன்றாள்.

 இங்கு இத்தனை நடந்த பின்னும் தன்னை சமாதானப்படுத்த முயன்று கொண்ட இனியாவை திரும்ப பார்த்த விஜய்.

“உனக்கு என் மேல கோபமே வரலையா இனியா உன் முன்னாடியே நான் காதலிச்ச பொண்ணு கிட்ட உரிமையா பேசுறேன் அவ கூட சண்டை போடுறேன் அதையெல்லாம் பார்க்க உனக்கு கஷ்டமா இல்லையா?” என்றான்.

 அவன் முகத்தைப் பார்த்து மெல்ல சிரித்து இனியா “உங்க வலிக்கு முன்னாடி என்னோட வலியெல்லாம் பெருசே கிடையாது சார் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது” என்று அவனை பார்த்தாள்.

தன்னை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கும் இனியாவை ஆச்சரியமாக பார்த்தவன் தன் கைகளை நீட்டி “இங்கே வா!” என்று இனியாவை அழைத்தான்.

“சார்!!!” என்று இனியா அவனை ஏக்கமாக பார்க்க..

“இனி இந்த இடம் உனக்கு மட்டும் தான் இனியா. இனி நீ மட்டும் தான் என் மனசுல நிறைந்திருக்க போற.. அது நான் உனக்கு உணர்த்துறேன்” என்று எட்டி அவள் கை பிடித்து தன்னருகே இழுத்தவன் உரிமையாக இனியாவை கட்டிக் கொண்டான்.

 விஜய்யின் இந்த வார்த்தை இனியாவின் மனதை நனைத்திருக்க அவனை ஆசையோடு தழுவிக் கொண்டாள் 

Ennai 2-34

விஜய் வீட்டிலிருந்து தாமரையை அழைத்து வந்த வம்சி நேராக அவளை அழைத்துக் கொண்டு நேராக தேவ் யாரா  வீட்டின் முன்பு வந்து நின்றான்.

கேள்வியாக தாமரை வம்சி பார்க்க “நான் உன்னை இங்கே நிரந்தரமா விட்டுட்டு போகல என்னதான் நான் கோவத்துல பேசினாலும் உன்னை விட்டுக் கொடுக்க என் மனசு இடம் தர மாட்டேங்குது தாமரை” என்றவன்

“கொஞ்ச நாள் நீ இங்க இரு. அது உன்னோட வீடு தாமரை எப்ப வேணா நீ அங்கு வரலாம்” என்றவன்.

 வம்சி பேசியதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக தலையாட்டியபடி காரில் இருந்து கீழே இறங்கிய தாமரை உள்ளே செல்லப் போனவள் திரும்பி அவனை பார்த்தாள்.

“என்ன குட்டிமா எதுவும் வேணுமா?” என்றான் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து.

ஆமாம் என்று தாமரை தலையாட்ட காரை ஆப் செய்து விட்டு இறங்கி வந்தவன்.

“ என்ன வேணும் தாமரை உடம்பு எதுவும் முடியலையா? நீ வேற முழுக்க நனைஞ்சி இருக்க காய்ச்சல் எதுவும் அடிக்கிற மாதிரி இருக்கா?” என்று பதட்டத்தில் தாமரையின் உடல்நிலை  குறித்து கவலை கொண்டவனாக  அவள் நெற்றியில் கை வைக்கப் போனவன்  அவளை தொடாமல் அப்படியே நிறுத்தினான்.

 அவளைத் தொட்டு பேசக்கூடாது என்று தாமரை அன்று சொன்ன வார்த்தையை இப்போது நினைவில் வர கையை மடக்கிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்திய வம்சி “என்னாச்சு தாமரை என்னன்னு சொல்லு” என்றான்.

 “அப்பா இந்த வீட்டுக்கு நான் வரணும்னா உன் கூட ஒண்ணா சேர்ந்து தான் வரணும்னு சொல்லி இருக்காரு. நான் இங்கே தனியா வரதா இருந்தா உனக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆன பிறகு தான் வரணும் அப்படின்னு சொல்லிட்டாரு இப்போ நான் எப்படி இங்கே…” என்றாள் தயக்கமாக.

திருமணமான ஒரு பெண்ணின் நிலையை இன்று தான் முதல் முறை உணர்ந்தாள். கட்டியவனோடும் சேர்ந்து வாழ மனம் வராமலும்.. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் அவள் பிறந்த வீட்டிற்கு செல்ல முடியாமலும் இப்படி அந்தரத்தில் ஊஞ்சலாடும் தன் நிலையை நினைத்து நொந்து கொண்டவாறு வம்சியை பார்த்தாள்.

வம்சியுடன் தான் தாமரை இருக்கிறாள் என்ற வம்சிக்கு விஜய் அவளைப் பற்றி விவரம் சொல்லியதுமே மற்றவர்களுக்கு அந்த செய்தியை சொல்லி இருந்தால் வம்சி.

அப்போதுதான் கதிரவன் தன் ஒளிக்கட்டுகளை மெல்ல மெல்ல படர விட்டு  இந்த உலகிற்கு உயிரூட்டும் கொடுக்க வந்து கொண்டிருந்தான்.

 “தாமரை இப்பவும் அதுவும் இந்த நேரத்துல உன்கிட்ட இப்படி கேட்கிறேன்னு நீ நினைக்காத. என்னடா இவன் இப்படி சுயநலமா இருக்கான்னு உனக்கு தோணலாம் இருந்தாலும் என் மனசு கேட்கல” என்றவன்.

தாமரையின் கண்களை ஒரு பரிதவிப்போடு பார்த்தவன்.

“தயவுசெய்து என் கூட நம்ம வீட்டுக்கு வந்துடு தாமர ப்ளீஸ்.. எனக்கு உன்ன பக்கத்துல வச்சு பாத்துட்டு இருந்தா மட்டும் போதும் வேற எதுவும் வேணாம். இனிமேல் நான் உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன் இது உன் மேல சத்தியம்” என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான். 

தான் வம்சியை எவ்வளவு காயப்படுத்தினாலும் திரும்பத் திரும்ப தன்னிடம் வந்து இறங்கி பேசுபவனை  யாரிடமும் தன்னை  விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க நினைப்பவனை தள்ளி வைக்க தாமரைக்கு மனது வரவில்லை.

எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தவள். வம்சியை  தாண்டி சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

 தான் கேட்டுக் கொண்டதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் காரில் ஏறியவில்லை பார்த்து சந்தோசப்பட்டவன் வேகமாக காரில் ஏறி ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

தூக்கம் கலைந்து தலைவலியோடு எழுந்த விஜய் அவன் அருகில் உடலைக் குறுக்கிக் கொண்டு படித்திருந்த இனியாவை பார்த்தான்.

அவன் கைக்குள் உடலை குறுக்கி விஜய்க்கு முதுகு காட்டி படுத்திருந்தாள். எழுந்து அவள் முகத்தை குனிந்து பார்த்தான். அமைதியாக அவள் உறங்கிக்கொண்டு இருக்க அதை கலைக்க விரும்பாமல்

 நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் குளிர் எடுக்கும் போல அதனால்தான் உடலைக் குறித்துக் கொண்டிருக்கிறாள் என்று அருகில் இருந்த போர்வையை எடுத்து அவளுக்கு இதமாக போர்த்திவிட்டு பாத்ரூம் சென்று பிரஷர்பானவன் இன்னமும் தலைவலிக்க தலையைப் பிடித்துக் கொண்டே வெளியே வந்தான்.

அங்கே மரகதமும், மல்லிகாவும் கிச்சனில் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க காபி கேட்பதற்காக நேராக கிச்சனுக்கு சென்றான்.

 அவனைப் பார்த்ததும் மரகதம் தம்பி எந்திரிச்சிட்டிங்களா வாங்க உங்களுக்காக தான் கசாயம் வச்சிருக்க இது குடிங்க முதல்ல என்று அடுப்பில் இருந்த கசாயத்தை ஒரு கிளாஸில் வடிகட்டி சூடாக அவனிடம் நீட்டினார்.

அதைப் பார்த்தவன் “பாட்டி கசாயமா.. எதுக்கு? “ என்று புரியாமல் கேட்க.

“என்ன தம்பி நீங்க உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியலையா தல வலியோட தானே எழுந்து வந்து இருக்கீங்க. நைட்டு நான் உங்களை கவனிச்சேன்” என்று தயக்கமாக அவனைப் பார்த்தவர்.

“நேத்து நடந்ததெல்லாம் நானும் மல்லிகாவும் கேட்டுட்டு தான் இருந்தோம்.  வெளியே வந்து வீனா உங்கள சங்கடப் படுத்தக் கூடாதுன்னு தான் ரூமுக்குள்ளயே ரெண்டு பேரும் இருந்துட்டோம்” என்றவர்.

“ நீங்க நைட்டு ரொம்ப அதிகமா குடிச்சு இருந்தீங்க அப்பவே தலைவலிக்குதுன்னு தலய பிடிச்சுட்டு நீங்க சிரமப்பட்டதை நான் கவனிச்சேன்  அதான் எப்படியும் தலைவலி குறைந்து இருக்காதுன்னு தான் உங்களுக்காக கசாயம் போட்டு வச்சேன்” என்று அக்கரையாக அவனிடம் நீ கசாயத்தை குடிக்க சொன்னார்.

“ சாரி பாட்டி நேத்து இருந்த டென்ஷன்ல கொஞ்சம் அளவுக்கு அதிகமாக குடிச்சிட்டேன். இனிமேல் இது மாதிரி நடக்காம நான் பாத்துக்குறேன் என்ன மன்னிச்சிடுங்க” என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் மன்னிப்பு கேட்டவன்.

 கசாயத்தை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் சோபாவில் அமர்ந்தவன் அவர் கொடுத்த கசாயத்தை மெல்ல மெல்ல குடிக்க ஆரம்பித்தான்.

அவன் தலைவலிக்கு இந்த சூடான கசாயம் இதமாக இருந்தது. மெல்ல மெல்ல தலைவலி குறைந்தது போல தோன்ற மனதும் லேசாக இருப்பதைப் போல உணர்ந்தான். அமைதியாக கசாய்த்து குடித்து முடித்துவிட்டு அங்கிருந்த நாளிதழை எடுத்து புரட்டத் துவங்கினான்.

 அப்போது இனியாவின் அறைக்குள் இருந்து ஏதோ பொருள் கீழே விழும் சத்தம் கேட்கவும். கையில் இருந்த பேப்பரை அப்படியே போட்டுவிட்டு அவசரமாக எழுந்து அறைக்குள் ஓடினான்.

உள்ளே வந்து பார்த்தவன் இனியா அவசரமாக பாத்ரூமிற்குள் ஓடுவதை பார்த்தவன் அவள் பின்னல் வேகமாக வர பாத்ரூமுக்குள் சென்ற இனியா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

உவேக்… உவேக்… ஹ…ஹ… என்று வாந்தி எடுத்ததில் முடியாமல் மூச்சு வாங்கிக்கொண்டு கைகளை வாஷ்பேஷனில் ஊற்றி படி நின்றிருந்தால் இனியா அவள் பின்னால் வந்த விஜய் இனியாவின் பின்னால் ஆதரவாக நின்றவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த அவள் சோர்ந்த முகத்தை பார்த்தவன்.

“முடியலையா..” என்றான் இனியாவும் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட.. வாஷ்பேசனில் தண்ணீரை  திறந்து விட்டு அவள் வாந்தி எடுத்ததை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தவன். தன் கைகளை நினைத்து இனியாவின் முகத்தை துடைத்து விட்டான்..

 பின் அருகில் இருந்த டவலை எடுத்து அவள் முகத்தில் இருந்த ஈரத்தை ஒற்றி எடுத்தவன் தன் மீது இனியாவை சாய்த்துக்கொண்டு பெட்டிற்கு  அழைத்துவந்து அவளை படுக்க வைத்தவன் .

“இப்போ எப்படி இருக்கு இனியா தண்ணி குடிக்கிறியா ? சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரட்டுமா?” என்றான் .

“சுடுதண்ணி வேணும் சார் , வொமிட் பண்ணினதுல தொண்டை எரியுது ” என்றாள்.

“சரி இரு நான் போய் எடுத்துட்டு வரேன் ” என்று வெளியே வந்தவன் நேராக கிச்சனுக்கு சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்து தண்ணீர் ஊற்றி சுட வைத்தான்.

“தம்பி பாப்பாவுக்கா.. ” என்றார் மல்லிகா .

“ஆமா க்கா.. வொமிட் பண்ணிட்டா ஒரு மாதிரி இருக்குன்னு சுடுதண்ணி கேட்டா.. ” என்றான்.

“நீங்க பாப்பா பக்கத்துல இருங்க தம்பி நான் எடுத்துட்டு வரேன். நேத்து நைட்டில் இருந்து இனியா பாப்பா எதுவுமே சாப்பிடல.. அதனால கூட வாந்தி வந்திருக்கலாம் . வெறும் வயித்தோட இருக்குல்ல.. ” என்றார்.

“நேத்துல இருந்து இனியா சாப்பிடலையா ” என்றான்.

“ஆமா தம்பி நீங்க இறக்கிவிட்டு கிளம்பியதும் ரூமுக்குள்ள போனது தான். திரும்ப நீங்க நைட் வந்த அப்போ தான் வெளிய வந்துச்சு ” என்றார்.

அதற்குள் தண்ணீர் கொதித்து விட.. அதை ஒரு பிளாஸ்கில் ஊற்றியவன் “அக்கா நான் இதை எடுத்துட்டு போறேன். நீங்க இனியா சாப்பிட எதுவும் சீக்கிரம் செய்து எடுத்துட்டு வாங்க ” என்றவன் பிளாஸ்கையும் ஒரு கப்பையும் எடுத்துக்கொண்டு பெட் ரூமிற்கு சென்றான்.

உள்ளே வந்த விஜய் இனியாவை காணாமல் பாத்ரூம் பக்கம் பார்க்க… பாத்ரூமின் வாயிலில் இனியா மயங்கி தரையில் விழுந்து கிடந்தாள் .

அவள் வலது கையில் போட்டிருந்த கட்டில் அடிபட்டிருக்க வேண்டும் அதில் இருந்து ரத்தம் வெளியேறி இனியாவின் கட்டை நனைத்து இருந்தது. அதை பார்த்தவன் “இனியாஆ!…” என்று ஓடி வந்து அவளை தூக்கியவன் மெத்தையில் வந்து படுக்க வைத்துவிட்டு தன் சித்தி ஜியாவுக்கு கால் செய்தான்.

“வர வர இந்த விஜய்க்கும், வம்சிக்கும் பொறுப்பே இல்ல… ரெண்டு பேருக்கும்  கல்யாணம் ஆன நாள்ல  இருந்து ஆபீஸ் பக்கமே வரமாட்டேங்குறாங்க.. அப்படியே வந்தாலும் பாதியில போய்ட வேண்டியது ” என்று புலம்பிக்கொண்டே ஆபீஸ் வேலைகளை செய்துகொண்டு இருந்தான் அர்ஷ் .

“may i come  in  sir ” என்று ஒரு புதிய குரல் ஒன்று கேட்க..

யாரது என்று நிமிர்ந்து பார்த்தான் .

அங்கே 20 வயது நிரம்பிய ஒரு அழகான பெண் நின்று இருக்க அந்த பெண்ணை பார்த்ததும் அர்ஷின் முகம் பிரகாசமானது . அவளை பார்த்து சிரித்துக்கொண்டே எழுந்து கதவருகே வந்தவன் “அடடே ! யசோதா ” என்று ஆர்வமாக அவள் பெயரை அழைக்க..

யசோதாவின் பின்னால் நின்று இருந்த நிலானி இப்படி இந்த பெண்ணை பார்த்ததும் வாயை பிளந்து கொண்டு வந்து பேசியவனை அதுவும் பெயரை சொல்லி அழைத்தவனை கண்டு கோபம் கொண்டவள் அர்ஷை முறைத்தாள் .

“அர்ஷ்  எப்படி இருக்கீங்க.. ” என்றபடி யசோதா உள்ளே வர…

அவளை பார்த்த சந்தோசத்தில் யசோதாவின் பின்னே இவனை முறைத்துக்கொண்டு இருந்த நிலானியை கவனிக்க மறந்துவிட்டான் .

“நான் நல்லா இருக்கேன் டா… நீ எப்படி இருக்க.. என்ன இந்த பக்கம் ” என்றான்.

“சும்மா தான் போர் அடிச்சுது அதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்  ” என்றாள்.

“இல்லையே! நீயாவது காரணம் இல்லாம  இந்த பக்கம் வரதாவது ” என்று அவளை மேலும் கீழும் பார்த்தவன் “உண்மையை சொல்லு எதுக்கு வந்த.. ” என்றான் சிரித்துக்கொண்டே.

ஹாஹாஹா! என்று சிரித்தவள் “கண்டுபிடிச்சுட்டீங்களா! ” என்று முனி லாரன்ஸ் மாதிரி பேசியவள் “உங்க கம்பெனிக்கு அஸ்சிஸ்டனட் ஒர்க் இருக்கறதா நியூஸ் பேப்பர்ல ஆட் பார்த்தேன் . அதான் நேர்ல பார்த்து அந்த வேலை இன்னும் காலியா இருக்கான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன் ” என்றாள் .

“ஆமா அந்த ஆட் குடுத்து 1 வரம் இருக்குமே… ” என்று யோசித்தவன் “ஆமா யாருக்கு அந்த வேலை . உன் பிரெண்ட்ஸ் யாருக்காவது வேலை வேணுமா ” என்றான்.

“இல்ல அர்ஷ் எனக்கு தான் ” என்றாள் .

“உனக்கா! ” என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவன் “உங்க அம்மா பெரிய gynecologist , உன் அப்பா ஒரு ஸ்டுடியோவை வெச்சு அதை நடத்திட்டு வராரு… அப்படி பட்டவங்களுக்கு பிறந்துட்டு. அங்க போய் பிசினஸை பாக்குறதை விட்டுட்டு இங்க வேளைக்கு வரேன்னு வந்து நிக்குற.. ” என்றான் .

“ஐயோ ! அர்ஷ்.. அதை ஏன் கேக்குறீங்க… என் அண்ணன் லக்ஷித் அப்பாவோட பிசினஸை பாத்துகிறான். எனக்கு ஹாஸ்பிடல்னாளே அலர்ஜி . அப்பறோம் நான் எப்படி அம்மாவோட ஹாஸ்பிடல் மேனேஜ் பண்றது . அதான் அப்பாகிட்டே எனக்கு ஒரு பிசினஸ் வெச்சு தர சொல்லி கேட்டேன் .அவர் எடுத்ததும் பிசினஸ் வெச்சு தரமுடியாது , நீ முதல்ல பிசினஸ் பத்தின விஷயங்களை கத்துக்க அதுக்கு அப்பறோம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு. அப்போ நான் ஜாப் போலாம்னு முடிவு பண்ணி ஆட்ஸ் பார்த்து அப்ளை பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் உங்க ஆபீஸ்ல வேகென்ட் இருக்கறதை பார்த்தேன். அதான் நேரலையே கிளம்பி வந்துட்டேன்” என்றாள் .

“அப்போ ஓரி முடிவோட தான் இங்க வந்திருக்கேன்னு சொல்லு.. “என்றான்.

“ம்ம்… ” என்று சிரித்துக்கொண்டே தோள்களை குலுக்கினாள் யசோதா.

“சரி உன்னோட resume குடுத்துட்டு போ.. நான் எங்க பாஸ் ரெண்டு பேர்கிட்டேயும் பேசிட்டு உனக்கு கால் பண்றேன் ” என்றான்.

தான் கொண்டு வந்திருந்த பைலை அவனிடம் குடுத்துவிட்டு “சீக்கிரம் பேசிட்டு சொல்லு அர்ஷ் ” என்றவள் அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட..

இவ்வளவு நேரம் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த நிலானி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அர்ஷை முறைத்தவள் “இன்னிக்கு பஸ்ட் நைட் கான்செல்” என்றவள் வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டு வெளியே சென்றாள் .

“அய்யய்யோ! இவ எப்போ வந்தா நிலா வந்தது தெரியாம நான் யசோ கிட்டே கொஞ்சம் உரிமையை வேற பேசிட்டேனே … கடவுளே! ஏற்கனவே 10 நாளுக்கு மேல எங்க முதல் இரவை தள்ளி வெச்ச.. இப்போ இந்த யசோ ரூபத்துல வந்து எனக்கு ஆப்பு வெச்சுட்டியே .. ” என்று புலம்பினான்.

 ENNAI 2-35

மிகவும் சோர்ந்து போய் கட்டிட படுத்து இருந்த இனியவை பரிசோதித்தவர், “ டேய் உன் பொண்டாட்டி எப்படி இருக்கா என்னன்னு பாக்காம அப்படி என்னடா  உனக்கு வேலை வேண்டி இருக்கு. இவ ரொம்ப வீக்கா இருக்கான்னு சொல்லித்தானே நான் ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணுனேன். அவளை சரியா கவனிக்கிறதே இல்லையா நீ” என்று ஜியா விஜய்யை கடிந்து கொண்டாள்.

விஜய் என்ன பேசுவது என்று தெரியாமல் ஜியாவை பார்க்க…

“என்னடா முழிக்கிற  நான் எழுதி கொடுக்கிற. மருந்து எல்லாம் அவளுக்கு வாங்கி கொடு. மூன்று வேலையும் நல்ல சத்தான ஆகாரமா கொடு அவளுக்கு என்ன பிடிக்கும் அதெல்லாம் கேட்டு செய்து கொடு. கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் வேலைய தள்ளி போடு முதல்ல இவளை பாரு இவ வீக்கா  இருந்தா அவ வயித்துல வளர குழந்தையும் வீக்காகவும் உனக்கு தெரியாதா” என்று மீண்டும் அவனை திட்டியவர் இனியாவிடம் சில அறிவுரைகளை கூறிவிட்டு ஹாஸ்பிடலுக்கு நேரமானதாள் அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

 அவர் சென்றதும் விஜய் திரும்பி இனியாவே பார்க்க அவள் சோர்வோடும் விஜய்க்கு தன்னால் தான் அவன் சித்தியுடன் திட்டு கெடுத்தது என்று ஒரு சங்கடத்தோடும் அவனை தயக்கமாக பார்த்தால்.

 “ஏன் இனியா உன்னத்தான் வேலைக்கு சரியா சாப்பிடணும்னு சொல்லி இருக்கேன்னே அதைவிட உனக்கு வேற என்ன வேலை வேண்டி இருக்கு” என்று அவளை திட்டுவது போல பேசினான்.

விஜய் இப்படி பேசியதும் ஏற்கனவே சோர்ந்து இருந்த இனியாவின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. “ நான் என்ன வேணும்னா சாப்பிட மாட்டேன்னு சொல்றேன் என்னால சாப்பிடவே முடிய மாட்டேங்குது சாப்பாட முகத்துக்கிட்ட கொண்டு போனாலே அந்த ஸ்மெல்லு எனக்கு பிடிக்க மாட்டேங்குது. வாந்தி வந்துடுது நான் என்ன பண்ணுவேன். ஏதோ நான் வேணும்னு சாப்பிடாத மாதிரி என்னை திட்டுகிறீர்கள்” என்று கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை கட்டுப்படுத்தியவாறு விஜய்யிடம் கேட்டால்.

“ அதுக்காக இப்படி சாப்பிடாமயே இருந்தா என்ன செய்றது உடம்பு ரொம்ப வீக்கா ஆயிடுச்சா இல்லையா பாரு.  நீ மயக்கம் போட்டு விழுந்தப்ப நான் கூட இருந்தேன் யாரும் இல்லாதபோ இப்படி ஏதாவது மயக்கம் போட்டு விழுந்து உனக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தால் நான் என்ன செய்றது” என்று விஜய் அக்கரையாக அவளிடம் பேச.

 “சாரி விஜய் சார் இனிமேல் நேரத்துக்கு சாப்பிட ட்ரை பண்றேன்” என்று தலை கவிழ்ந்தபடி இனியா அமர்ந்திருக்க.

 அப்போதும் மல்லிகா சுட சுட இட்லியும் மல்லி சட்னியும் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தவர் “இனியா  இந்தா சாப்பிடு” என்று அவள் முன்பு தட்டை நீட்டினார்.

 ஆவி பறக்க மல்லிகா கொண்டு வந்த  இட்லியின் வாசனை இனியாவின் மூக்கை துலைக்க அடுத்த நொடி அவள் வயிற்றைப் பிரட்டிக்கொண்டு குமட்ட வாந்தி வருவது போல அவளுக்கு தோன்ற வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து பாத்ரூமிற்கு ஓடினாள்.

 அதை பார்த்ததும் அவள் பின்னால் ஓடிய விஜய் பாத்ரூமிற்குள் வாந்தி எடுத்துக் கொண்டுள்ள இனியாவை பார்த்தான்.

 இனியா வாந்தி எடுக்காமல் தலையையும் இடுப்பையும் பிடித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

“ ஏன் இனியா  வாந்தி வருதா இன்னமும்” என விஜய் கேட்க.

“ இல்ல சார் வாந்தி வர மாதிரியே இருக்கு ஆனா வாந்தி எடுத்தா வெறும் தண்ணி தான் வருது” என்று இனியா மெல்ல பாத்ரூமில் இருந்து வெளியே நடந்து வந்தாள்.

 வந்தவள் மல்லிகை கையில் இட்லி வைத்துக்கொண்டு நின்று இருக்க அதை பார்த்ததும் மீண்டும் தனக்கு வயிற்றைப் பிரட்டுவது போல இருக்க திரும்பி பாத்ரூமுக்குள் செல்ல போக..

 “ஒரு நிமிஷம் இரு இனியா” என்றவன் 

“மல்லிகா அக்கா நீங்க இந்த தட்டு எடுத்துட்டு கார்டனுக்கு போங்க நான் அங்க இனியாவை கூட்டிட்டு வரேன்” என்றான்.

“ ஏன் தம்பி” என்றார் மல்லிகா

“இந்த ரூம்குள்ளயே அடைந்திருக்கிறது இனியாவுக்கு ஏதோ மாதிரி இருக்கு. அதான் அவளுக்கு வயிற்றுப் பெரட்டிக் கொண்டே இருக்கு கொஞ்சம் வெளிய காத்தோட்டமா இருக்கட்டும் நீங்க போங்க நான் வரேன்” என்றவன்.

 மல்லிகா அங்கிருந்து சென்றதும் “இனியா வா.. நம்ம வெளியே போகலாம் கொஞ்ச நேரம் கார்டன்ல ரிலாக்ஸா இருந்துட்டு  அதுக்கப்புறம் சாப்பிடு” என்று அவளை கையை பிடித்து அழைத்துச் செல்ல..

அவள் பின்னால் மிகவும் சோர்வாக இனியா மெல்ல நடந்து செல்ல.. அவளை திரும்பிப் பார்த்தவன் ஒரு நொடியும் தாமதிக்காமல் இனியாவை தன் கைகளில் ஏந்தி கொண்டு பெட் ரூமை விட்டு  வெளியே வந்தான்.

 “சார் எதுக்கு தூக்கிட்டு போறீங்க நான் நடந்து வருவேன் இறக்கி விடுங்க” என்று அவன் கைகளில் இருந்தவள் விஜய்யை பார்க்க..

 “நீ ரொம்ப டயர்டா இருக்க நான் உன்னை தூக்கிட்டு போறேன் பேசாம இரு” என்று ஹாலை தாண்டி வாசலுக்கு சென்றான்.

 “சார் எதுக்கு உங்களுக்கு சிரமம் நானே நடந்து வரேன்னு என்னை இறக்கி விடுங்களேன்” என்று அவன் கைக்குள் இருந்து இனியா நெளிந்து கொண்டே அவனை பார்க்க…

“ இதில் என்ன சிரமம் இருக்கு என் பொண்டாட்டிய நான் தூக்கிட்டு போறேன். அதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உனக்கு நான் தூக்கிட்டு போறது பிடிக்கலைன்னா சொல்லு உன்னை இறக்கி விடுறேன். நீ மெதுவா நடந்து வா” என்று அவளை கீழே இறக்கி விடப் போக.

 சட்டென தன் கைகளை விஜய்யின் கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டவள் “எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நீங்க தூக்கிட்டு போங்க இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று எங்கே விஜய் தன்னை கீழே இறக்கி விடுவானோ என்று அவன் கழுத்தை இறுக்க கட்டிக்கொண்டு அவன் மார்போடு ஒன்றி இருந்தால் இனியா.

 அவள் செயலைக் கண்டு சிரித்தவன் வாசலை தாண்டி கார்டனுக்கு வர அங்கே இருந்த பெஞ்சில் இனியாவிற்கு கொண்டு வந்த உணவை வைத்துவிட்டு இவர்கள் இருவரையும் பார்த்து வெட்கப்படும்படி மல்லிகா உள்ளே ஓடிவிட…

 இனியாவை தூக்கி வந்தவன் அந்த மேதையில் அமர வைத்துவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான்.

 அந்த உணவை பார்த்ததும் மீண்டும் இனியாவிற்கு வயிற்றைப் பிரட்ட..

 அதை கவனித்த விஜய் “இங்க பாரு நீ சாப்பாட்டைப் பத்தியே நினைக்க வேண்டாம். இத திரும்பி பார்க்காத நான் உன்கிட்ட பேசிகிட்டு உனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஊட்டி விடுறேன். நீ சாப்பிடு உனக்கு கண்டிப்பா வாந்தி வராது சரியா.. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா அப்புறம் உனக்கு என்னதான் சாப்பிட கொடுக்கிறது உடம்ப கவனிக்கணும் இல்ல” என்று சற்று அதற்கான குரலில் விஜய் பேச..

“ விஜய் சார்!  நீங்க எனக்கு ஊட்டி விட போறீங்களா!” என்று ஆச்சரியமாக இனியா வாயைத் திறந்து கொண்டு அவனைப் பார்க்க..

 அவள் வாய் திறந்த நேரம் ஒரு இட்லியை விட்டு சட்னி தொட்டு அவள் வாயில் திணித்துவிட்டு சிரித்த விஜய் “ஏன் நான் ஊட்டி விட மாட்டேனா?” என்றான்.

 அவன் செயலில் மேலும் அதிர்ந்தவள் வாயில் வைத்த இட்லியை அவனைப் பார்த்துக் கொண்டே மென்று விழுங்கினாள்.

 “சரி இனியா இதுவரைக்கும் நான்  உன்ன பத்தி எதுவுமே கேட்டதில்லை நீயும் என்கிட்ட சொன்னதில்ல. இனி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த வாழ்க்கை முழுக்க பயணிக்க போறோம். உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது இதெல்லாம் நான் தெரிஞ்சுக்கணும்” என்று பேசியபடி அடுத்த வாய் உணவை அவளுக்கு ஊட்டி விட்டான்.

 வாயில் உணவை மென்று கொண்டே “இப்படி கேட்டா நான் என்னன்னு சார் சொல்றது. நீங்க ஏதாவது கேளுங்க அதுக்கு நான் பதில் சொல்றேன்” என்றாள்.

 “ஓ நீ அப்படி சொல்றியா ..  சரி நானே கேட்கிறேன் இந்தா” என்று மற்றொரு வாயை அவளுக்கு ஊட்டி விட்டபடி யோசித்தவன்.

 உனக்கு என்ன எல்லாம் சாப்பிட பிடிக்கும் இனிப்பு பிடிக்குமா? காரம் பிடிக்குமா?” என்றான்.

 “என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க இனியான்னு பேர் வச்சுட்டு எனக்கு இனிப்பு பிடிக்காமல் போகுமா..” என்றவள்.

“ எனக்கு எல்லா சுவிட்சும் பிடிக்கும் இனிப்புன்னு பேர எழுதி வச்சிருந்தாலே அதை சாப்பிடுவேன். அந்த அளவுக்கு எனக்கு ஸ்வீட்ஸ்னா ரொம்ப இஷ்டம்” என்று சிரித்தவள் “காரமும் பிடிக்கும் அது மூட பொருத்து” என்றால்.

 “ஓஹோ காரம் சாப்பிடுவதற்கு ஒரு மூடா! அது என்ன? சொல்லு பாக்கலாம்” என்றான்.

 “அப்படி ஒன்னும் பெருசா இல்ல சார் நல்லா ஜாலியா இருக்கும்போது முறுக்கும் லட்டு சாப்பிடுவேன். இதுவே கோபமா இருந்ததுனா தட்டு முருக்கு வாங்கி அதை போட்டு கையிலேயே புடிச்சு கூட கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் வெங்காயம் தக்காளியும் போட்டு கலக்கி காரம் அதிகமா போட்டு சாப்பிடுவேன் இதுவே மழை வருதுன்னு வச்சுக்கோங்க ஒரு டம்ளர் டீ அதுகூட காரபூந்தி சாப்பிடுவேன். “ என்றாள்.

“ அது என்ன லட்டு முறுக்கு இது என்ன காம்பினேஷன்” என்றான்.

 “அது சொன்னா புரியாது சார் ஒரு நாள் நீங்க சாப்பிட்டு பாருங்க தெரியும்” என்றால்.

 அவள் சொல்லுவதைக் கேட்டு சிரித்தபடியே அடுத்தடுத்த கேள்விகள் விஜய் கேட்க அவன் கேட்டதற்கெல்லாம் இனியாவின் பாணியிலேயே துடுக்கு  தனமாகவும் குறும்பாவும் பதில் சொல்லியபடி அவன் ஊட்டி விட்ட நான்கு இட்லிகளையும் சாப்பிட்டு விட அதன் பிறகு மல்லிகா கொண்டு வந்த ஆப்பிள் ஜூஸையும் முழுவதுமாக குடித்து முடித்தாள்.

 அவள் முழுவதுமாக சாப்பிட்டு முடித்த பிறகு “சரி இங்க லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. உள்ள போலாமா?” என்றான்.

 “போலாம் சார்..” என்று இனியா பென்சில் இருந்து எழுந்திருக்க.. விஜயும் எழுந்து முன்னே நடந்தான்.

 அதைப் பார்த்து இனியா “ம்ஹும்… வரும்போது மட்டும் நான் சாப்பிடலைன்னு என்னை தூக்கிட்டு வந்தாரு. இப்ப நான் சாப்பிட்டு முடித்தது வேலை முடிஞ்சதும். எனக்கு என்னனு என்னை அப்படியே விட்டுட்டு போறாரு” என்று முணுமுணுத்த படி அவன் பின்னால் சிணுங்கிக் கொண்டே இனியா நடக்க..          

 அவள் முணுமுணுத்துக் கொண்டு வந்தது விஜயின் காதில் அப்பட்டமாக விழுந்துவிட அவள் முன்னால் நடந்து கொண்டு இருந்தவன் நின்று திரும்பி இனியாவை பார்த்தான்.

 விஜய் திடீரென்று நிற்கவும் திடுக்கிட்டு  நின்ற இனியா. “என்ன திடீர்னு நின்னுட்டாரு நான் பேசுனது ஒருவேளை அவர் காதுல விழுந்திருச்சோ” என்று இனியா திடுதிருவென விழிக்க..

 “என்னடா நாம பேசுனது காதுல விழுந்துடுச்சான்னு யோசிக்கிறியா? “ என்று அவள் அருகில் விஜய் வர.. 

 “அய்யய்யோ! சரியா சொல்லிட்டாரு… இப்ப என்ன பண்றது” என இனியா கைகளை பிசைந்து கொண்டு நிற்க..

 “எனக்கு என்னன்னு அப்படியே விட்டுட்டு போற ஆள் நான் கிடையாது. என்கிட்ட எதையும் கேட்கவோ பேசவோ தயக்கமே இல்லாம நீ பேசலாம். இப்படி உனக்கு நீயே பேசிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை” என்றவன் அடுத்த நொடி இனியாவை கையில் ஏந்தியபடி வீட்டிற்குள் நடக்க தொடங்கினான்.

 இனியாவிற்க்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. விஜய் தன்னிடம் உரிமை எடுத்துக்கொண்டு தான் பேசியதை கேட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தன்னை தூக்கி செல்பவனை கண்டு சந்தோசப்பட்டாள்.

அவளை ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தவன் “நீ கொஞ்ச நேரம் ரிலாக்ஸா டிவி பாரு நான் குளிச்சிட்டு ஆபீஸ் கிளம்புறேன். உனக்கு எதுவும் வேணும்னா மல்லிகா அக்கா கிட்ட கேளு இல்லன்னா எனக்கு போன் பண்ணி சொல்லு நான் வரும்போது வாங்கிட்டு வரேன்” என்றவன் பெட்ரூம் இருக்கு செல்ல போக..

“என்ன விஜய் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க போல…” என்று ஒரு குரல் வாசலில் இருந்து வந்த குரலை கேட்டு விஜய் திரும்பி பார்க்க…

இனியாவும் வாசல் பக்கம் பார்த்தவள் அங்கு நின்று இருந்தவனை பார்த்து அதிர்ந்தவள் வேகமாக எழுந்து சென்று விஜய்யின் பின்னால் பயந்து நின்றாள். 

ENNAI 2-36

“எப்படி ப்பா… இருக்க.. ” என்று பார்வதி விஜய்யின் நலம் விசாரிக்க.

“நல்லா இருக்கேன் ம்மா.. நீங்க எப்போ இந்தியா வந்திங்க. எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே நீங்க ” என்றான் விஜய்.

“நான் துபாய்ல இருந்து கிளம்பும்போதே இவன்கிட்டே சொன்னேன். உனக்கு கால் பண்ணி விபரம் சொல்லலாம்னு. இவன் தான் அதெல்லாம் எதுவும் வேணாம் இந்தியாவுல எனக்கு ஆளுங்க இருக்காங்க . யாரோட உதவியும் தேவையில்லேன்னு உனக்கு கால் பண்ண விபரம் சொல்ல மாட்டேன்னுட்டான் ” என்றவர் தேவாவை பார்த்துவிட்டு .

“நாளைக்கு மறுநாள் இவனுக்கும் , பூங்கொடிக்கும் காளிகாம்பாள் சன்னதியில் கல்யாணம் செய்யலாம்னு ஜோசியரை பார்த்து பேசி முடிவு பண்ணி ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு . உன்கிட்டே விபரத்தை கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம்னு இவனையும் கூட வர சொன்னா , இவன் புதுசா ஆபீஸ் ஓபன் பண்ணின வேளையில் பிசி ஆகிட்டான். பூங்கொடி தான் தினமும் என்கிட்டே சொல்லிட்டே இருப்பா.. விஜய் அண்ணாவை கூப்பிடனும் மறந்துராதீங்கன்னு… இன்னிக்கு விட்டா உன்னை எப்போ வந்து பாக்கருதுன்னு  ஒரே முடிவா உன்னை பாக்கணும்னு நின்னுட்டேன் “

“நீ எங்களை கூப்டு போறியா ? இல்ல,, நாங்களே விஜய் இருக்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு போய்க்கட்டுமான்னு பிடிவாதமா இருந்ததுனால அவனே எங்களை கூப்டு வந்துட்டான் ” என்று சிரித்தார் .

அவர் பேசியதை கேட்டு சிரித்தவன் அவர் எதிரில் இருந்த சோபாவில் அமர போக..

தேவா இவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவனை கண்டு பயந்தவளாய் விஜய்யின் சட்டையை இறுக  பிடித்துக்கொண்டு நின்று இருந்த இனியா விஜய் சோபாவில் அமரவும் , அவனை இடித்துக்கொண்டு அவனோடு ஒட்டி அமர்ந்து இருந்தாள்.

அவளை திரும்பி பார்த்த விஜய் அவன் சட்டையை பிடித்து இருந்த இனியாவின் கையை பிரித்து தன் இடது கை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களோடு விரல்கள் கோர்த்து பிடித்தவன் . அவள் கையை தட்டி குடுத்து “நீ இவரை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்ல… ” என்றான்.

“இல்ல சார்.. இவரை இவரை யாருன்னு உங்களுக்கு தெரியாது. இவர் தான் என்னை .. என்னை .. ” என்று பயத்தில் இனியா பேச்சு வராமல் திக்கத்  துவங்க…

இனியா பயப்படுவதை பார்த்து பூங்கொடி தேவாவை ஓரக்கண்ணால் பார்த்தாள் . அவள் பார்வையில் இருந்த அர்த்ததை புரிந்து கொண்டவனாய்

“நீங்க இவ்ளோ பயப்பட வேண்டிய அவசியம் இல்ல… நான் அந்த மாதிரி வேலை செய்றதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. நானும் என் அம்மாவும் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆகிட்டோம். இங்க நானும் என் பிரெண்டும் சேர்ந்து புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கோம் ” என்று தன்னிலை விளக்கம் கொடுத்து இனியாவின் பயத்தை போக்க நினைத்தான் தேவா.

அவன் என்ன தான் சமாதானம் செய்ய நினைத்தாலும் அவள் பயம் குறைந்தபாடாக இல்லை. அதை கவனித்த பார்வதி “அம்மாடி இனியா இங்க வா… ” என்று அவளை அழைத்தார்.

இனியா தயங்கிய படி விஜய்யை பார்க்க.. “போ… ” என்று தலையை ஆட்டினான் .

இனியா எழுந்து அவரிடம் செல்ல…

அவள் கையை பிடித்துக்கொண்டு “உன்னை என் புல்லை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கான். அது நீ அவனை பார்த்து பயப்படறதுலையே தெரியுது . அவன் உன்னை கஷ்டப்படுத்தினத்துக்கு நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன் ” என்று கையெடுத்து கும்பிட்டு இனியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

அவர் கையை பிடித்து அவசரமாக தடுத்த இனியா “அம்மா! என்ன இது.. நீங்க என்கிட்டே..” என்று இனியா பதற..

“உன்கிட்டே மட்டும் இல்லம்மா.. என் பையனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க யாரை பார்த்தாலும் அவங்ககிட்டே நான் மன்னிப்பு கேட்டு . என் பையனை அவங்களை மன்னிக்க சொல்லி கேட்டுக்குவேன். பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க. இவன் எத்தனை பொண்ணுங்களோட சாபத்தை சேர்த்து வெச்சிருக்கானோ எனக்கு தெரியல.. அந்த பொண்ணுங்களை எல்லாம் மனசுல நினைச்சிட்டு உன்கிட்டே நான் மன்னிப்பு கேக்குறேன் . தயவு செய்து என் பையனை மன்னிச்சிரு ம்மா… “என்று கண்ணீர் மல்க இனியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

அவர் அழுவதை பார்த்து தேவாவிற்கு தான் செய்த செயல் தன் தாயை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று எண்ணி தன்னையே நொந்து கொண்டவன் .

“அம்மா எனக்காக நீங்க யாருகிட்டேயும் மன்னிப்பு கேட்க வேணாம். நான் செஞ்ச பாவத்துக்கு நானே பிராயச்சித்தம் தேடுறேன் ” என்று எழுந்து இனியாவின் முன்பு வந்தவன் .

“என்னை மன்னிச்சுடு இனியா… ” என்று வேகமாக அவள் காலில் விழுப்போனவனை  தடுத்து பிடித்தான் விஜய்.

“நீ உன் தவறை உணர்த்து இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே போதும். இதெல்லாம் வேண்டாம் ” என்றான்.

விஜய்யின் இந்த மனதை கண்டு தேவாவிற்கு ஆச்சர்யமானது.

 விஜய்யின் கையைப் பிடித்துக் கொண்ட தேவா “என்னை மன்னிச்சிடு  விஜய் நீ செஞ்ச விஷயம் என் வாழ்க்கையில எனக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்து இருக்கு. இவ்வளவு நாள் நான் செய்த முட்டாள் தனத்துக்கு விடுவு காலம் வந்துருச்சுன்னு தான் சொல்லணும்” என்றான்.

“ அதெல்லாம் போகட்டும் தேவா இப்போ அடுத்து நீ என்ன செய்றதாயிருக்க. உன் பிரண்டு கூட சேர்ந்து ஏதோ பிசினஸ் இங்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்னு சொன்னியே உனக்கு எதுவும் ஹெல்ப் வேணுமா? எதுவா இருந்தாலும் தயங்காம என்கிட்ட கேளு என்னால முடிஞ்ச உதவியை நான் உனக்கு செய்றேன்” என்றான் விஜய்.

“ என் பிரண்டும் நானும் சேர்ந்து இங்க பர்னிச்சர் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் வெளிநாடுகளில் புதுசா மார்க்கெட்டுக்கு வர பர்னிச்சர்ஸ் இங்கே இருக்குமதி செய்து அதை எங்க கம்பெனி மூலமா தமிழ்நாடு ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணலாம்னு முடிவெடுத்து இருக்கோம் “

“என்னோட மேரேஜ் முடிஞ்சு ஒன் வீக் கழிச்சு நானும் என் பிரண்டு தமிழ்நாடு ஃபுல்லா இருக்கிற பர்னிச்சர்ஸ் அசோசியேஷன் இருக்கிற மெம்பர்ஸ்ச கூப்பிட்டு மீட்டிங் போட்டு அவங்க கிட்ட எங்க பிசினஸ் பத்தி ப்ரோமோட் பண்ண போறோம்” என்றான்.

“சூப்பர் நல்ல பிசினஸ் தான் நீ செலக்ட் பண்ணி இருக்க இப்போ வெளிநாட்டில் இருக்கிற ஃபர்னிசஸ்க்கு இங்க டிமாண்ட் அதிகம் நீ உன்னோட பிசினஸ் ஸ்டார்ட் பண்ண பிறகு என்கிட்ட சொல்லு என்னால நான் ஆனா உதவியும் செய்கிறேன் தவிர நாங்களும் எங்க வீட்டுக்கு ஃபர்னிச்சர்ஸ் எல்லாம் மாற்ற வேண்டி இருக்கு” என்றான்.

“கண்டிப்பா சொல்றேன் விஜய்” என்றான் தேவா. 

இவர்கள் இருவரும் மற்ற விஷயங்களை பேச பிறகு அங்கேயே காலை உணவை முடித்து விட்டு தான் விஜய் அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்தான்.

*****

ஒரு வழியாக அர்ஷிற்கும், நிலானிக்கும் இன்று முதல் இரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நிலானியின் வீட்டில் தான் இருவருக்கும் முதல் இரவு என்று இரு வீட்டினரும் பேசி முடிவு செய்திருக்க.. ஆபீசில் இருந்து வேலையை முடித்துவிட்டு மாலை  6 மணிக்கே வந்துவிட்டான் அர்ஷ்.

நிலானியை அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வர சொல்லிவிட்டார் அவள் அம்மா.

அர்ஷ் தன் காரை நிலானியின் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே வர..

“அடடே! வாங்க மாப்பிள என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க.. ” என்று சிரித்தபடி நிலானியின் அப்பா வாசலுக்கு வந்து அர்ஷை வரவேற்றார்.

“வேலை சீக்கிரம் முடிஞ்சிருச்சு மாமா.. அதான் அங்க சும்மா டைமை ஏன் வேஸ்ட் பண்ணனும்னு கிளம்பி வந்துட்டேன் ” என்று சமாளித்தான் அர்ஷ்.

இன்று தனக்கும், நிலானிக்கும் முதல் இரவு ஆயிற்றே.. தான் ஆஃபிஸில் வேலை செய்து என்ன செய்வது . நிலானி வேறு அவனிடம் சண்டையிட்டுவிட்டு கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை காணாமல் அர்ஷிற்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போது மணி ஆகும் என்று வாட்சையே பார்த்துக்கொண்டு இருந்தவன் நேர்மை ஆனதும் கிளம்பி வந்து இருந்தான்.

ஹாலில் அர்ஷை அமர சொல்லிவிட்டு தனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று நிலானியின் அப்பா வெளியே கிளம்பி விட்டார்.

கிச்சனில் இருந்த அவள் அம்மா வெளியே வந்தவர் “மாப்பிள போய் கை கால் கழுவிட்டு வாங்க , நான் காபி போட்டு வைக்கிறேன் ” என்று அவனை நிலானியின் ரூமை காட்டி போக சொன்னவர்.

“நிலா! நிலா! மாப்பிளை வந்துட்டாரு பாரு.. இன்னும் என்ன டி தூக்கம் எழுந்து வா,,” என்று அவள் ரூமை நோக்கி சத்தமிட்டவர்

“மதியம் சாப்டுட்டு கொஞ்ச நேரம் தூங்குறேன்னு போய் படுத்துட்டா.. நீங்க போங்க மாப்பிளை அப்படியே அவளை எழுப்பி அனுப்பிவிடுங்க.. ” என்று அவர் சொல்ல…

இதுக்கு தான் காத்திருந்தேன் என்பது போல அவர் சொன்ன அடுத்த நொடி நிலானியின் அறைக்கு சென்றுவிட்டான். அதை கண்டு சிரித்துவிட்டு அவர் கிச்சனுக்குள் செல்ல,,

நிலானியின் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அங்கே கட்டிலில் படுத்திருந்தவளை பார்த்தான்.

அசந்து தூங்கிக்கொண்டு இருந்தாள் நிலானி.

நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு ஒருக்களித்து உறங்கிக்கொண்டு இருந்த நிலானியை பார்த்தவன் அவள் அறைக்கதவை மெல்ல சத்தமின்றி சாத்திவிட்டு உள்ளே வந்தவன் . மெல்ல கட்டிலில் ஏறி அவள் அருகில் அவளை போலவே ஒருக்களித்து படுத்தவன் தன் கையை நிலானியின் இடையை சுற்றி வளைத்து அவளை அணைத்துக்கொண்டான் .

அவன் வந்தது தெரியாமல் இன்னும் தூக்கத்தில் இருந்த நிலானியை தலையில் கை வைத்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் இடையில் இருந்த கையை கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல மேலே கொண்டு சென்றான்.

“நிலா செல்லம் என்ன டி இந்த நேரத்துல தூக்கிகிட்டு இருக்க.. உனக்காக உன் மாமன் வந்திருக்கேன் இன்னிக்கு நமக்கு பஸ்ட் நைட் டி.. எழுந்திரு டி.. ” என்று அவள் காதில் மெல்ல கூறினான்.

அவன் மூச்சு காற்று குறுகுறுப்பை ஏற்படுத்த காதை தேய்த்துவிட்டுக் கொண்டு திரும்பி படுத்தாள்.

அப்படி அவள் திரும்பி படுக்க.. அவள் இடையை தாண்டி மேலே கொண்டு வந்த அவன் கை இப்பொது அவள் மார்புக்கு மிக அருகில் இருந்தது.

அவன் கைகள் அவள் பெருத்த தினவெடுத்த அங்கங்களை ஸ்பரிசிக்க பரபரத்தது. தூக்கத்தில் மேலும் கீழும் அவள் அங்கங்கள் அசைந்தாட.. அதை ஏக்கமாக பார்த்தபடியே தன் கையை மேலும் கொண்டு சென்றவன் அவள் இரு மாங்கனிகளை தொட்டு தடவ தயாரானது.

அவன் கை அவள் உடலை தீண்டுவதை நிறுத்திவிட்டு நேராக மேலே செல்ல… தூங்குவது போல இவ்வளவு நேரம் படுத்திருந்த நிலானி சட்டென்று அவன் கையை பிடித்துக்கொண்டு அவனை பார்த்தாள்.

“ச்சே.. நீ தூங்கலையா டி… ” என்று கை  வரை வந்த விருந்து எட்டாமல் போன ஏமாற்றத்தோடு அவளை பார்த்தான்.

“ம்ம்ம்.. நீங்க காரை கொண்டு வந்து நிறுத்துனதுமே நான் முழிச்சுட்டேன். அப்போவே எழுந்து வந்திருப்பேன். ஆனா நீங்க ஆபீஸ்ல அந்த யசோதாகிட்டே வழிஞ்சு பேசுனது நியாபகம் வந்துசச்சு .அதான் வெளிய வராம இங்கையே இருந்துட்டேன் ” என்றாள்  கோபமாக.

“ஏய் அவ நம்ம விஜய்யோட சிஸ்டர் டி.. நாங்க எல்லாம் ஒண்ணா விளையாடி இருக்கோம். சின்ன வயசுல இருந்து எனக்கு அவளை தெரியும் . ரொம்ப நாளுக்கு பிறகு அவளை பார்த்ததும் பழைய நியாபகத்துல கொஞ்சம் சிரிச்சு பேசிட்டேன் அதுக்கு போய் கோவிச்சுக்கிற… செல்லம் ” என்று குழைந்தவன் அவள் இடையில் கையை போட …

“கையை எடுடா.. என்ன பழைய நியாபகம். அப்போ நீயும் அவளும்…” என்று சந்தேகமாக அவனை பார்த்தாள் நிலானி.

“ஏய்! ஏய்! எதுக்கு இப்போ என்னை அப்படி பாக்குற.. நீ நினைக்குற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. விஜய்யோட சிஸ்டர் எனக்கும் சிஸ்டர் தான். நீ என்ன இப்படி எல்லாம் யோசிக்குற…” என்று எழுந்து அமர்ந்து அவளை பார்த்தான்.

அவனை சந்தேகமாக பார்த்தவள் “உண்மையை தான் சொல்றியா?” என்றாள்.

“ஏய் உன் மேல சத்தியம் டி…” என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.

அவன் அப்படி செய்ததும் தான் நிலாவின் முகம் சற்று நார்மல் ஆனது.

“ஓய் … ஓய் .. நிலா குட்டி.. ” என்று அவளை கட்டிக்கொண்டான்.

“ஐயோ ! என்ன  அர்ஷ் இது .. அம்மா வந்திற போறாங்க.. ” என்று சினுங்கினாள் .

“வந்தா என்ன என் பொண்டாட்டியை நான் கட்டிப்பிடிப்பேன்.. முத்தம் குடுப்பேன்.. என்ன வேணா  செய்வேன்” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“ஆஹ்.. விட்டா நைட் நடக்க வேண்டிய நம்ம பஸ்ட் நைட்டை இப்பவே நடத்திருவிங்க போல இருக்கு.. ” என்று அர்ஷை தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து இறங்கி பெட் ரூம் கதவை திறக்க போனாள்.

“நடத்த தான் பாக்குறேன். நீ தான் ஒத்துழைக்க மாட்டேங்குறியே …” என்று கட்டிலில் இருந்து இறங்கி வர..

கதவை திறந்தவள் “இன்னும் கொஞ்ச நேரம் தான் டா… அதுவரை அமைதியா இரு.. ” என்றவள் காற்றில் அவனுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு வெளியே ஓடிவிட…

“ஐயோ! கொல்லுறாளே… இந்த மணி வேற வேகமா நகர மாட்டேங்குது… இன்னும் எவ்ளோ நேரம் என் நிலா குட்டிக்காக காத்திருக்கிறது… ” என்று அவர்களுக்கு நடக்கவிருக்கும் முதல் இரவை பற்றி நினைத்துகொன்டே வந்து கட்டிலில் படுத்து கனவு காண ஆரம்பித்தான்.

ENNAI 2-37

 காலையில் தாமரையை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு சென்றவன் தான் இரவு 11 ஆகியும் வீட்டிற்கு வரவில்லை வம்சி .

அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்று உறங்கிவிட..

தூக்கம் வராமல் பால்கனியில் அமர்ந்து வானில் தெரிந்த நிலவை விரித்துகொண்டு இருந்தாள்.

அவள் மனதில் ஆறாத வலியாகி போய் இருந்ததும் விஜய்க்கும், அவளுக்கும் இடையில் இருந்த காதல்.

அந்த காதல் இப்பொது மண்ணோடு மண்ணாகி போய்விட்டது.

கண்களில் வலிந்து கொண்டு இருந்த கண்ணீரை கூட துடைக்க மனமில்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அப்போது வாசல் கேட் வெளியே வந்து நின்றது வம்சியின் கார். அதை யதேச்சையாக பார்த்தவள் காரை கேட்டிலேயே நிறுத்திவிட்டு கதவை திறந்து கொண்டு கீழே இறங்கியவனை பார்த்தாள்.

கால்கள் தள்ளாட.. ஒரு நிலையில் இல்லாமல் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே நடந்தான்.

அதை பார்த்ததும் சட்டென்று சேரில் இருந்து எழுந்தவள் பால்கனியின் விளிம்பில் வந்து நின்று பார்த்தாள் . அவளுக்கு அது வம்சி தானா என்று சந்தேகம் எழுந்தது. அதனால் தான் அங்கு வந்து பார்த்தாள்.

வம்சி காரை பார்த்ததும் வாட்ச்மென் வேகமாக வாசல் கேட்டை திறந்து விட.. தள்ளாடிக்கொண்டே  வந்தவன். அவர் மேல் விழுவது போல சென்றான்.

வாட்ச்மென் வேகமாக வந்து வம்சியை பிடிக்க போக..

அவரை கையை நீட்டி நிறுத்தியவன் “அண்ணா நான் ஸ்டெடியா தான் இருக்கேன். காரை உள்ள நிறுத்திருங்க,” என்று தாலாட்டிக்கொண்டே உள்ளே நடந்தான்.

அவன் தள்ளாடியபடி நடந்து வந்ததை பார்த்த தாமரை வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவள் படிகளில் இறங்கி வாசலுக்கு ஓடினாள், வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வம்சி தள்ளாடி நடந்து வர அவனிடம் ஓடி வந்தவள் .

“அம்மு! நீ குடிச்சிருக்கியா? ஏன் அம்மு இப்படி பண்ற.. நம்ம வீட்ல இருக்கவங்க யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க. ” என்று கவலையாக அவனை கேட்டாள்.

தாமரை பேசியது காதில் விழுந்தாலும் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அவளை தாண்டி நடந்து சென்றான்,

“அம்மு! ” என்று அவன் முன் ஓடி வந்து நின்றவள் “ஏன் அம்மு இப்படி பண்ணின.. ” என்று அவள் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க..

“ம்ச்.. இப்போ என்ன தாமரை உனக்கு பிரச்சனை வழியை விடு.. ” என்று முகம் கொடுத்ததும் சரியாக பேசாதவன் அவளை தாண்டி வம்சி செல்ல…

வம்சி குடித்து வந்திருப்பது ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் . இந்த அலட்சியம் அவளை ஏதோ செய்தது . தன்னை தாண்டி சென்றவனை தாமரை பார்த்துக்கொண்டு இருக்க..

மாடிப்படியில் ஏறிக்கொண்டு இருந்த வம்சி கால் இடறி விழப்போக .. அதை பார்த்தவள் ஓடி வந்து அவனை விழாமல் தாங்கி பிடித்தாள்.

பழைய வம்சியாக இருந்திருந்தாள் தாமரை அவனை தாங்கி பிடித்ததும் இது தான் வாய்ப்பு என்று அவளை இருக்க பிடித்துக்கொண்டு வேண்டுமென்றே எதுவும் நாடகம் ஆடி இருப்பான்.

ஆனால் இப்பொது நடந்த கதையே வேறு தாமரை வம்சியை பிடிக்கவும் வெடுக்கென அவள் கையை தட்டிவிட்டவன் “தாமரை நான் கீழ விழுந்து எனக்கு எதுவும் அடிபட்டாலும் பரவாயில்ல .. நீ தயவு செய்து என்னை தொடாத . நான் உன்கிட்டே செய்து கொடுத்த சத்தியத்தை என்னால காப்பாத்த முடியும் . ஆனா இப்படி நீ என்னை  தொடுறது எனக்கு பிடிக்கல…” என்று தாமரையை பார்த்தவன்.

“நீ இப்படி என்கிட்டே வந்தா நான் செய்து கொடுத்த சத்தியத்தை என்னால காப்பாத்த முடியாது. அதனால் தயவு செய்து என்னை விட்டு விலகியே இரு.. நான் சொன்னது போல உனக்கு பாதுகாப்பா இந்த வீட்ல இருப்பேனே ஒழிய.. உன்கிட்டே நான் நெருங்கி வர மாட்டேன்” என்றவன் திரும்பி மாடிப்படி கைப்பிடியை பிடித்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே மேலே சென்றான்.

அவன் பேசியதை கேட்டு எதுவும் மறுத்து பேச முடியாதவளாய் நின்று இருந்தாள்.

வம்சி ஒவ்வொரு படியாக தள்ளாடிக்கொன்டே ஏற… அவன் கால் இடறி விழுவது போல வருவதை பார்த்துவிட்டு தாமரை பதறிக்கொண்டு அவனிடம் செல்ல.. அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டு மேலே ஏறியவன் தங்கள் அறைக்கு செல்லாமல் . அவர்கள் அறைக்கு நேர் எதிரே இருந்த மற்றொரு அறைக்கு சென்றான்.

அதை பார்த்த தாமரை “அம்மு ! ஏன் அந்த ரூம்க்கு போற.. அது கெஸ்ட் யாரும் வந்தா தங்குற ரூம் ” என்றாள்.

“யாராவது வரும்போது பாத்துக்கிறேன். இனிமேல் நான் இங்க தான் இருக்க போறேன்” என்று திரும்பி உள்ளே செல்ல போனான்.

“அம்மு என்ன இது ? ஏன் இப்படி எல்லாம் பண்ணுற.. வீட்ல இருக்கவங்க எல்லாம் நீ இந்த ரூம்ல இருக்கறதை பார்த்தா என்ன நினைப்பாங்க. அவங்க நம்ம தனி தனியா இருக்கறதை பார்த்தா கஷ்டப்பட மாட்டாங்களா ” என்று அவனை பார்த்தாள்.

அவளை விரக்தி நிறைந்த ஒரு பார்வை பார்த்தவன் “நீயும் , நானும் அந்த ரூம்ல இருந்தா உனக்கு தான் என்கூட ஒரே ரூம்ல இருக்குறது கஷ்டமா இருக்கும். என்னால நீ கஷ்டப்படுறதை பார்க்க முடியாது. நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு தான் உனக்கு என்னை பிடிக்காதுன்னு நல்லாவே தெறியுமே அப்பறோம் என்ன.. நான் இங்கையே இருந்துக்கிறேன் . நீ போய் எந்த கஷ்டமும் இல்லாம நிம்மதியா தூங்கு” என்றான்.

“ஐயோ! அம்மு! என்ன இப்படி எல்லாம் பேசுற.. என் வீட்டுக்கு போக இருந்த என்னை இங்க கூப்டு வந்தது நீ தானே.. ஆனா கூப்டு வந்துட்டு இப்படி தனியா ரூம்ல போய் படுத்தா என்ன அர்த்தம் . நமக்குள்ள இருக்குறது எல்லாம் நம்ம ரூமுக்குள்ள அந்த நாலு சுவத்துக்குள்ள இருக்கட்டும். வெளிய இருக்கவர்களுக்கு அது எதுவும் தெரிய வேணாம்” என்றாள்.

“அது இந்த வீட்டை விட்டு வெளிய இருக்கவங்களுக்கு மட்டும் நாம ஒண்ணா சந்தோசமா இருக்குற மாதிரி கட்டிக்கிட்டா போதும் தாமரை.. ஆனா நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு இல்ல… ” என்று அந்த அறைக்குள் சென்று கதவை சார்த்திக்கொண்டான்.

அவனிடம் எவ்வளவு பேசியும் வம்சி இறங்கி வராமல் போகவே வேறு வழி இல்லாம தங்கள் அறைக்கு சென்றாள் தாமரை.

அவள் அங்கிருந்து சென்றதை உள்ளே இருந்த வம்சி தாமரையின் கொலுசு சத்தத்தை வைத்தே தெரிந்து கொண்டவன் . கதவில் சாய்ந்து நின்றவன் “என்ன மன்னிச்சிரு தாமரை . உன்னை மறக்க முடியாம தான் நான் இப்படி குடிச்சிருக்கேன். என்ன குடிச்சும் உன்ன பத்தின நினைப்பை என் மனசுல இருந்து எடுக்க முடியல.. நீயும் நானும் ஒரே ரூம்ல இருந்தா என்னால நான் உனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்த முடியாம போய்டும்” என்று நினைத்தவன்.

“உன்னை பார்க்குற அப்போ எல்லாம் என்னை என்னால கட்டுப்படுத்திக்க முடியல குட்டிமா… நான் என்ன தான் செய்வேன்” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு கதவில் சோகமாக சாய்ந்த படி நின்று இருந்தான்.

பின் தன் டையை கழட்டிவிட்டு பெட்டிற்கு வந்தவன் சட்டை பட்டன்களை அவிழ்த்தவன் சட்டையை கழட்ட கூட மனம் வராமல் அப்படியே கட்டிலில் படுத்துவிட்டான்.

தாமரையை பற்றிய நினைவுகளோடு படுத்திருந்தவன் அவனையும் அறியாமல் தூங்கி இருந்தான்.

******

இங்கே புதுமாப்பிள்ளை தயாராக முதல் இரவுக்காக காத்திருந்தான் அர்ஷ்.

“என்ன என் நிலாக்குட்டியை இன்னும் காணோம். சாப்பிடும்போது அவ என் பக்கத்துல  வந்து உக்காருவான்னு பார்த்தா எதிர்ல போய் உக்காந்துட்டா.. அவகூட பேசிட்டே சாப்பிடலாம்னு நினைச்சேன் . அதுக்கும் வழி இல்லாம அவ அக்கா மாமியார் வந்து அவங்க பக்கத்துல நிலாவை உக்கார வெச்சுட்டாங்க.. என் பொண்டாட்டி கூட என்னை பேசக்கூட விடமாட்டேங்குறாங்க.. ” என்று புலம்பியவன்.

வாட்சில் மணியை பார்த்தான் மணி 10 ஐ காட்டியது.

“இன்னும் என்ன பண்றா இவ.. ” என்று வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அருகில் இருந்த பழத்தட்டில் இருந்த திராட்சையை  எடுத்து சுவைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஆர்வமாக கட்டிலில் இருந்து எழுந்தவன் வாசலை பார்க்க.. கையில் பால் செம்புடன் அழகாக அலங்கரிக்கப்பட்ட பதுமையாய்  உள்ளே நுழைந்தாள் நிலா.

“நிலாக்குட்டி வந்துட்டியா.. “என்று எழுந்து வேகமாக அவளிடம் வந்தவன் கையில் இருந்த பால் செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு  நிலாவை அப்படியே கைகளில் ஏந்தியவன் நேராக கட்டிலுக்கு சென்று அவளை மெத்தையில் படுக்க வைத்தான்.

“ஏங்க! ஏங்க! என்ன செயிரிங்க .. விடுங்க ” என்று அவசரமாக எழுந்தவள் .

வாட்சை காட்டி “இன்னும் அரை மணி நேரம் கழிச்சு தான் எல்லாமே  அதுவரை ரெண்டு பேரும்  கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்ங்க.. பால் வேற சூடா இருக்கு… அதையும் குடிக்கணும்ல.. நான் உங்க கால்ல  விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும். இதெல்லாம் இருக்கு…  நீங்க என்ன இவ்ளோ அவசர படுறிங்க… ” என்று  அவனை பார்த்தாள்.

“பால் தானே குடிச்சுக்கலாம். என்னால் இனி 1 நிமிஷம் கூட பொறுத்துக்க முடியாது.” என்று நின்று இருந்தவளை இழுத்து அணைத்து அவள் இதழை முத்தமிட துவங்கி இருந்தான்.

நிலாவுக்கும் அவனை தடுக்க மனம் வரவில்லை. ஏற்கனவே திருமணம் ஆன நாளில் இருந்து அவனை தள்ளி வைத்தாகிற்று இன்னும் அவனை தவிக்க விட அவளுக்கு விருப்பம் இல்லை..

அர்ஷ் முத்தம் கொடுக்க கொடுக்க நிலா அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

அதை அவள் சம்மதமாக எடுத்துக்கொண்டவன் அடுத்த கட்ட வேளைக்கு தயாரானான்.

நிலாவை இடையில் கைகொடுத்து தூக்கியவன் அவளை முத்தமிட்டுக்கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்தவன் . நிலாவை மடியில் அமர்த்தி அவள் இடையில் சேலைக்குள் கை நுழைத்து அவள் உடலை தழுவ துவங்கினான்.

ஒரு பக்கம் முத்தம் கொடுத்து அவளை திணற வைத்தவன் . மறுபக்கம் அவள் உடலை தன் கைகளால் தழுவி அவளை நெளிய வைத்தான். இதை சமாளிக்க தெரியாமல் நிலா நெளிந்து கொண்டே முனக…

அவள் முனகல் மேலும் அர்ஷை தூண்டி இருந்தது.

நிலாவிடம் இருந்து பிரிந்து அவளை பார்த்தவன் “நிலா குட்டி.. என்னை என்னவோ செய்ற டி நீ.. ” என்று மடியில் இருந்தவளை கட்டிலில் தள்ளி அவள் அருகில் படுத்துக்கொண்டு மீண்டும் முத்தமிட ஆரம்பித்தான்.

அவன் கைகள் அவள் உடலில் இங்கும் அங்கும் அலைபாய்ந்தது. அவனை தடுக்க மறந்தவளாய் முத்தத்தில் மயங்கி இருந்தாள் நிலானி.

சற்று நேரத்தில் அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்து இருந்தவன் அவள் அங்க வனப்பை ஆசையாக ரசிக்க துவங்க… அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அர்ஷின் சட்டையை பிடித்து இழுத்து அணைத்தவள் “என்ன டா இப்படி பாக்குற.. எனக்கு கூச்சமா இருக்கு…” என்று சிணுங்கினாள்.

“முத முதலா என் நிலாவை முழுசா பாக்குறேன்… இந்த மொமெண்ட்டை நான் மிஸ் பண்ணுவேனா டி செல்ல குட்டி” என்று அவள் வெற்று முதுகை தழுவியவன் மெல்ல நிலாவோடு கட்டிலில் சாய்ந்தான்.

அவன் கைகள் பின் இருந்து முன்னோக்கி நகர.. அடுத்து என்ன செய்ய்ய போகிறான் என்று புரிந்து கொண்ட நிலா அர்ஷின் கையை பிடித்து அவனை முன்னேற விடாமல் தடுத்தாள்.

“என்ன நிலா.. ” என்று அவளை கிறக்கமாக பார்த்தான்.

“ப்ளீஸ்.. டா.. ” என்று நிலா சிணுங்க …

“ம்ஹும்… ” என்றவன் அவள் கையை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டவன் எழுந்து அவளை ஆசையாக பார்த்துக்கொண்டே தன் ஆடைகளை கலைந்தவன் 

மெத்தையில் படுத்திருந்தவள் பாதங்களில் இருந்து தன் முத்தத்தை துவங்கியவன் நிலாவின் உடலில் ஒரு இடம் விடாமல் முத்த மழை பொழிந்தவன் மேலேறி வந்து அவள் இதழில் முத்தம் வைத்துக்கொண்டே மெல்ல நிலாவின் மீது படரத் துவங்கினான்.

இருவரும் மோகத்தின் உசத்தில் இருந்தனர். எங்கு ஆரம்பித்து என்ன செய்வது எங்கு முடிப்பது என்று தெரியாமல் கட்டில் பாடங்களை இருவரும் ஒரு சேர கற்றுக்கொள்ள துவங்கினர்.

கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள் ஆசை தீர தழுவிக்கொண்டு கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தனர்.

அவள் இதழில் முத்தம் வைத்து கொண்டு இருந்தவனை பிரிந்து அவனை பார்த்தவள் தன் தேவையை அவனுக்கு பார்வையால் உணர்த்தினாள். அவள் பார்வையால் கேட்டதை தன் செயலால் பூர்த்தி செய்ய ஆயத்தமானான்.

அவள் கால்களுக்கு இடையில் தன்னை நுழைத்தவன் நிலாவின் கண்களை பார்த்துக்கொண்டே அவளிடம் புதையலை தேட துவங்கினான். முதல் முறை அவளால் சமாளிக்க முடியவில்லை. தன் இதழ் கடித்து பொறுத்துக்கொண்டவள் மெல்ல மெல்ல அவன் ஆட்டுவிக்கும் பாம்பாக அவனுக்கு தகுந்த தன்னை இசைந்து கொடுத்தாள்.

மெல்ல அவள் கால்களை தூக்கி தன் இடுப்பை சுற்றி போட்டுக்கொண்டவன் “நிலாஆ… லவ் யூ டி… ” என்று மோக வார்த்தைகளால் அவளை பார்த்துக்கொண்டே செயலில் தீவிரமாக.

முதலில் சமாளிக்க தெரியாமல் திணறியவள் நேரம் செல்ல செல்ல அவனுக்கு கட்டிலில் ஈடு கொடுக்க துவங்கினாள் .

“லவ் யூ டாஆ.. ” என்று அவள் கண்கள் மேல் நோக்கி செல்ல,,

அர்ஷ் தந்த சுகத்தை அனுபவித்து அனுபவம் தந்தாள் அவனுக்கு.

இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல் காந்தம் போல இரவு முழுவதும் ஒட்டிக்கொண்டு கட்டிலில் சாகசம் செய்ய துவங்கினர்.

ENNAI 2-38

விஜய்யையும், இனியாவையும் அன்று மாலை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார் வீரா.

வம்சியையும் ஆஃபிஸில் இருந்து சீக்கிரமே வரும்படி கூறி இருக்க.. அனைவரும் வீரா சொன்ன நேரத்திற்கு ஆஜர் ஆகி இருந்தனர்.

“என்ன விஷயம் ப்பா.. ஏன் எங்கள வர சொன்னிங்க” என்றான் விஜய்.

“இரு டா என்ன அவசரம் ஒரு 10 நிமிஷம் பொறு” என்றார் வீரா.

இனியா, தாமரை இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க…

அதிதி இனியாவிடம் வந்தவர் “இனியா உனக்கு கெஸ்ட் ஹவுஸ் சௌகர்யமா இருக்கா? சொல்ல சொல்ல கேட்காம உன் புருஷன் உன்னை அங்க கூப்டு போய்ட்டான். ” என்றார்.

“நான் முன்னமே அங்க தானே அத்தை இருந்தேன் அதனால எனக்கு எதும் பிரச்சனை இல்ல ” என்றாள் இனியா .

“என்னவோ போ.. இவ்ளோ பெரிய வீடு அரண்மனை மாதிரி இருந்து என்ன செய்றது . நீங்க ரெண்டு பேரும்  எங்களை எல்லாம் விட்டுட்டு அங்க போய் இருக்குறது எனக்கு துளியும் இஷ்டம் இல்ல..” என்று வருத்தப்பட்டார் அவர்.

அதை கேட்டுக்கொண்டு எழுந்து வந்த விஜய் ” நான் இங்க வரதுக்கு இப்போ கூட ரெடியா தான் இருக்கேன். ஆனா நான் எதிர்பார்க்குறது நடந்தா தான் இங்க வருவேன் அதுவரை நானும் , இனியாவும் கெஸ்ட் ஹவுசில் தான் இருப்போம் ” என்றவன் இனியாவுக்கு எதிரே இருந்த தாமரையை பார்த்து கூறினான்.

அவன் எதற்காக இப்படி சொல்கிறான் என்று அனைவர்க்கும் புரிந்தது.

இப்பொது அனைவர் பார்வையும் தாமைரையின் மீது பதிய அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதாக தோன்றவே… “என்னையே ஏன் எல்லாரும்  பாக்குறீங்க. என்னால் தான் விஜய் மாமா வீட்டை விட்டு போனாரு தான் . அவர் நினைக்குறது எல்லாம் எப்போ நடக்கும்னு எனக்கு தெரியாது . அப்படி ஒரு விஷயம் நடக்குமான்னு கூட எனக்கு தெரியல.. என்னை பத்தி கவலை படுறதை விட்டுட்டு . இனியாவை அழைச்சிட்டு இங்க வர பாருங்க. அவ கர்ப்பமா இருக்கா இந்த நேரத்துல அவ கூட எப்பவும் யாராவது இருக்கனும்” என்றாள் அக்கறையாக.

“நான் சொன்னா  சொன்னது தான் . எப்போ நீயும் , வம்சியும் சேர்ந்து சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிக்குறீங்கன்னு  நான் உணருறேனோ அப்போ தான் நாநும், என் இனியாவும் இங்க வருவோம் ” என்று என் இனியா என்னும் வார்த்தையை மட்டும் அழுத்தம் கூட்டி சொல்லி இருந்தான்.

அதை தாமரையும் கவனிக்க தான் செய்தாள்.

“இங்க பாரு விஜய் போதும் நீ பேசுனது எல்லாம். தாமரையை என்கூட சேர்ந்து  வாழ சொல்லி அவளை வற்புறுத்துறதை எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா. இது அவ வாழ்க்கை அவளுக்கு என்ன தோணுதோ அவ முடிவெடுக்கட்டும். இனிமேல் தாமரையை என்கூட சேர்ந்து வாழ சொல்லி யாரும் வற்புறுத்தினா நானும் விஜய் மாதிரி தாமரையை கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போய்டுவேன்” என்று தாமரைக்கு பரிந்து பேசிக்கொண்டு அங்கே வந்தான் வம்சி.

“டேய் என்ன டா பேசுற… நாங்க உன் நல்லதுக்கு தான் பேசிட்டு இருக்கோம். நீ என்ன இப்படி வீட்டை விட்டு போறேன்னு சொல்ற.. என் பேரனும் , பேத்தியும் சந்தோசமா வாழணும் அதை நான் என் ரெண்டு கண்ணால பார்க்கணும்னு காத்துட்டு இருக்கேன் டா ” என்று விக்ரம் கூற…

அவரை முறைத்தவன் “அப்பா இப்போ எதுக்கு எல்லாரையும் வர சொன்னிங்க.. என்ன விஷயம்னு சொல்லுங்க.. இந்த தாத்தா பழைய பஞ்சாங்கத்தை பாட ஆரம்பிச்சுட்டாரு” என்று வீராவிடம் சென்றான்.

விக்ரமிற்கு வம்சி தன்னிடம் சரியாக பேசாதது கண்டு கவலையாக இருக்க… மீனு அவரை சமாதானம் செய்து அமரவைத்தார்.

“வம்சி நம்ம சொந்தங்கள் மொத்தமும் என் மேலையு, உன் அம்மா மேலையும் பயங்கர கோபத்துல இருக்காங்க” என்றார்.

“ஏன் என்னவா அவங்களுக்கு” என்றான் விஜய்.

“எல்லாம் உங்க ரெண்டு பேரால தான் ” என்றார் அதிதி.

“என்ன ம்மா.. நாங்க என்ன பண்ணினோம்” என்றான் விஜய்.

“உங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் ஆனதை நானும் , உன் அப்பாவும் யாருக்குமே சொல்லல… ஹோச்பிடல்ல கூட நீ பார்த்த தானே.. ஜியாவும், வீணாவும் எப்படி சண்டைக்கு வந்தாங்கன்னு. அதான் அவங்க எல்லாரையும் முறையா கூப்டு ஒரு சின்ன ரிசெப்ட்சன்  மாதிரி வெச்சுடலாம்னு நானும் உன் அப்பாவும் முடிவு பண்ணிருக்கோம் ” என்றார் அதிதி.

 இன்னமும் விஜய் பற்றிய நினைவுகளில் இருந்து முழுவதுமாக வரமுடியாத சூழ்நிலையில் எப்படி வம்சியின் மனைவியாக ரிசெப்ஷனில் நிற்பது என்று நினைக்கையிலேயே தாமரையின் முகம் வாடிவிட்டது .

“அம்மா என்ன விளையிடுறீங்களா? சும்மா ஏதாவது செய்து எல்லாரையும் கஷ்டப்படுத்தனும்னு நினைக்கிறீங்களா? நான் இதுக்கு  சம்மதிக்கிறதா இல்ல.. எனக்கும் தாமரைக்கும் இடையில இருக்குற விஷயம் உங்க எல்லாருக்குமே தெரியும். அப்படி இருக்கிறப்ப அவ எந்த மாதிரி மனநிலையில் இருப்பான்னு உங்களுக்கு தெரியுமா? அவளால எப்படி வந்து அதுவும் என் கூட ஜோடி போட்டுட்டு எப்படி நிக்க முடியும். அதை கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா? ஏன்? எல்லாரும் சேர்ந்து அவளை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கீங்க” என்றான் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் பார்த்து.

“வம்சி, இப்படியே எத்தனை நாளைக்கு தான்டா நீங்க ரெண்டு பேரும் இருப்பீங்க. உங்களுக்குள்ள ஒரு நல்ல மாற்றம் வரணும்னுதான இதையெல்லாம் நாங்கள் செய்றோம். அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற” என்றார் வீரா.

“எங்களுக்குள்ள மாற்றம்  தானா வரணும் ப்பா…  நீங்களா கட்டாயப்படுத்தி அதை கொண்டு வரக்கூடாது. தயவு செய்து இந்த மாதிரி விஷயத்தை செஞ்சு அவளை கஷ்டப்படுத்துறத நிறுத்துங்க” என்று கையெடுத்து கும்பிட்டான்.

“வம்சி கொஞ்சம் பொறுமையா அப்பா சொல்றது கேளுடா” என்ற அதித்தி.

“விஜய் நீ என்ன சொல்ற? இந்த ரிசப்ஷன் வைக்கிறதுக்கு உனக்கு உடன்பாடு இருக்கா? இல்லையா? நீயும் உன் மனசுல இருக்குறத வெளிப்படையா சொல்லிடு. நாளைக்கு எல்லாரையும் கூப்பிட்டு வச்சு விசேஷம் வைக்கிறப்போ எல்லார் முன்னாடியும் ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை தலை குனிய வச்சுடாதீங்க” என்றார்.

“ அத்தை நீங்க ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யுங்க. எனக்கு இதுல முழு சம்மதம்” என்று அவர் முன்பு வந்து நின்றாள் தாமரை.

“ தாமரை என்ன விளையாடுறியா? இப்படி மத்தவர்களுக்காக உன்னை வருத்திகிட்டு தான் இந்த விசேஷம் நடக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. நீ பேசாம இரு நான் இவங்க கிட்ட பேசிக்கிறேன்” என்று அவளுக்கு முன்னே வந்தான்.

“ இல்லமோ இதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.  முறையா நம்ம கல்யாணம் நடந்திருந்தா ஊரைக் கூட்டி தட புடலா நடந்திருக்கணுமே. அதுதான் இல்ல atleast தாத்தா பாட்டி ஆசைப் படியாவது இந்த ரிசப்ஷன நடத்திடலாமே” என்றாள். 

“அவங்க ஆசைப்படுறாங்க இவங்க ஆசைப்படுறாங்கறது எல்லாம் இங்க முக்கியம் இல்ல. இன்னும் பத்து நாள்ல உனக்கும் எனக்கும் டைவர்ஸ்க்கு ஹியரிங் வரப்போகுது. ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு ரிசப்ஷன்ல போய் எந்த முகத்தை வைத்து நிக்கிறது. நீயே சொல்லு உன்னால தான் என்ன முழுசா ஏத்துக்கிட்டு ரிசப்ஷன்ல  என் கூட ஜோடியா நிக்க முடியுமா? சொல்லு தாமரை” என்றான் வம்சி.

 அவனின் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தாமரை தலை கவிழ்ந்து நிற்க..

“பாரு உன்னாலயும் பதில் சொல்ல முடியல. இப்ப சொல்லு இந்த ரிசப்ஷன் ரொம்ப அவசியமா?” என்றான்.

“டேய் எங்களால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம். ஏதோ வயசான காலத்துல என் பேரன் பேத்திகளை குடும்பம் குழந்தையுமா சந்தோஷமா பாக்கணும்னு நெனச்சு நாங்க பண்ணி வச்ச விஷயம். இன்னிக்கி இவ்வளவு தூரம் பிரச்சனையில் வந்து இருக்கும்னு எதிர்பார்க்கல” என்ற விக்ரம்.

தாமரை, வம்சி இருவரையும் பார்த்து “இன்னும் பத்து நாள்ல டைவர்ஸ் ஹியரிங் வரும்னு சொன்ன இல்லையா.. அதுவரை டைம் எடுத்துக்கலாம். டைவர்ஸ் கோர்ட்டுக்கு வர அன்னைக்கு தாமரை என்ன முடிவெடுக்கிறான்னு தெரியட்டும் அதுக்கப்புறம் மத்தத பேசிக்கலாம்.”என்று  தாமரையை பார்த்தார் .

அவளோ  அமைதியாக  நின்று  இருக்க .. “என்ன தாமரை அமைதியா இருக்க? நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அதுக்கு பிறகு நீ உன் முடிவை பொறுமையா யோசிச்சு சொல்லு. உன்னை யாரும் கஷ்டப்படுத்தல, அவசர படுத்தல. நீ என்ன முடிவெடுத்தாலும் நாங்க எல்லாரும் அதுக்கு கட்டுப்படறோம்” என்றவர் 

“ இந்த விஷயத்தை பற்றி யாரும் பேச வேண்டாம். கோர்ட்ல அவ டைவர்ஸ் வேணும் உன்ன விட்டு பிரிஞ்சு போறேன்னு சொன்ன தாராளமா நீ தாமரைக்கு டைவர்ஸ் கொடுத்து அவளை அவ வீட்டுக்கே அனுப்பி வச்சிடு vamsi, அப்படி இல்ல அவ மனசு மாரி டைவர்ஸ் வேணாம்னு சொல்லிட்டா அடுத்த நாலே ரிசப்ஷனுக்கு நான் ஏற்பாடு செஞ்சுருவேன். யாரையும் கேட்க மாட்டேன்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு வா மீனு”  தன் மனைவியை அழைத்தவர் விருட்டென்று தன் அறைக்கு சென்றுவிட..

தாமரை வம்சியை பார்த்தாள்.

 தாமரை தன்னை பார்க்க வருவது தெரிந்தது, சட்டென்று தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்ட வம்சி .

“அப்பா , பேசுறதெல்லாம் பேசியாச்சே நான் கிளம்பட்டுமா? எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்றான்.

“சரி டா நீ கிளம்பு இனி எதுவா இருந்தாலும் உன்னோட டிவேர்ஸ்க்கு பிறகு முடிவெடுத்துக்கலாம்” என்றார் வீராவும்.

வம்சி அங்கிருந்து கிளம்ப போக…

“வம்சி ஒரு நிமிஷம் ” என்று அவனை நிப்பாட்டியவன்

“நாளைக்கு காலையில் என்னோட பிரெண்ட் தேவாவுக்கு நம்ம காளிகாம்பாள் கோவில்ல கல்யாணம்.  அவனுக்கு இங்க சொந்தம்னு யாரும் இல்ல… அவன் கல்யாணத்துக்கு நம்ம எல்லாரும் குடும்பமா போகணும், அவனுக்கு நம்ம குடும்பமா முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்றான்.

இதற்கு மற்றவர்கள் சம்மதிக்க “அதான் எல்லாரும் வரேன்னு சொல்லிட்டாங்களே நீங்க எல்லாரும் போய்ட்டு  வாங்க. நான் வரல.. எனக்கு வேலை இருக்கு” என்றான் வம்சி.

“ஆபீஸ் வேலை தானே அதை அர்ஷ் பாத்துக்குவான். நான் அவன்கிட்டே பேசிக்கிறேன். நீயும் , தாமரையும் நாளைக்கு காலையில் கல்யாணத்துக்கு வந்திருங்க.. வரும்போது ரெண்டு பேரும் தேவா கல்யாணம் செய்துக்க போற பொண்ணுக்கும் கிப்ட் வாங்கிட்டு வாங்க” என்றான் விஜய்.

” ஏன் குறிப்பா கல்யாண பொண்ணுக்கு கிப்ட் வாங்கிட்டு வர சொல்ற.. உன்னோட பிரென்ட் அந்த தேவா தானே..” என்றான் வம்சி.

“தேவா என் பிரெண்ட் மாதிரின்னா , அந்த பொண்ணு நமக்கு சிஸ்டர் மாதிரி. அவளுக்கு சொந்தபந்தம்னு யாரும் கிடையாது. ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து நம்ம ரெண்டு பேரும் ஏதாவது செய்யணும்னு நான் நினைக்குறேன்” என்றான் விஜய்.

அவன் இப்படி சொன்னதும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நாளை இருவரும் வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் வம்சி ,

“இனி! நம்ம போகலாமா? ” என்று விஜய் இனியாவை அழைக்க..

“டேய் இப்போ தானே வந்திருக்கா .. நீ ஆபீஸ் தானே போற.. போய் அந்த வேலையை பாரு. ஈவினிங் வந்து அவளை அழைச்சிட்டு போ…” என்றார் அதிதி.

“இல்லம்மா.. அவ சரியா சாப்பிடறது இல்ல. உடம்பு ரொம்ப வீக்கா இருக்கா. சித்தி வீட்டுக்கு வந்து செக் பண்ணி பார்த்துட்டு இனியாவை பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லி இருக்காங்க. நான் கொஞ்ச நாள் ஆபீஸ் வரமாட்டேன்னு ஏற்கனவே அப்பாகிட்டேயும், வம்சிகிட்டேயும்  சொல்லிட்டேன். நாங்க கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு ” என்றவன்

“போலாமா?” என்றான் இனியாவை பார்த்து.

அவன் அழைத்த அடுத்த நொடி குடுகுடுவென்று வேகமாக நடந்து சென்று அவன் அருகில் சென்ற இனியா “போலாம் சார் ” என்றாள்.

அதை பார்த்த அதிதி “அது சரி நீயே அவளை விட்டுட்டு போறேன்னு சொன்னாலும் அவ உன்கூட வரணும்னு நினைச்சிருப்பா போல.. நீ கூப்பிட்டதும் எவ்ளோ வேகமா வந்து நிக்குறா..” என்று சந்தோசமாக சொன்னார் .

விஜய் சிரித்துவிட்டு “கிளம்புறேன் ம்மா.. காலையில் எல்லாரும் வந்திருங்க ” என்றவன் .

“தாமரை நீயும் , வம்சியும் கண்டிப்பா வரணும் ” என்றவன் அவளிடம் இயல்பாக பேசிவிட்டு சென்றான்.

விஜய் மனதில் இருந்து தன்னை சுத்தமாக அழித்துவிட்டான் என்று அவனின் இந்த பேச்சிலேயே கண்டுகொண்ட தாமரைக்கு மனது கனத்தது.

ENNAI 2-39

“சார் சொன்ன கேளுங்க ஆல்ரெடி மூணு தோசை சாப்டுட்டேன். இனி என் வயித்துல இடம் இல்ல ” என்று விஜய்யிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் இனியா.

“இங்க பாரு இனி , இப்படி அடம் பிடிச்சு சாப்பிட மாட்டேன்னு சொன்ன என்ன அர்த்தம். என் சித்தி வந்து என்னை எவ்ளோ திட்டினாங்க அதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த . இன்னும் ஒரு தோசை அப்பறோம் , இந்த பிரூட்ஸ் தூங்க போகும்போது கொஞ்சம் பால் அவ்ளோதான் நான் உன்னை அதுக்கு அப்பறோம் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்” என்று கையில் தட்டை வைத்துக் கொண்டு அவளிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் விஜய்.

“சார்! என்ன நீங்க என்னால  இதையே சாப்பிட முடியாலையினு சொல்லிட்டு இருக்கேன். நீங்க இன்னும் அதை சாப்பிடு , இதை சாப்பிடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க… முடியாது முடியாது.. ” என்று அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் சோபாவிற்கு குறுக்கும் நெடுக்கும் அவனிடம் சிக்கிவிடாமல் நடந்துகொண்டு இருந்தாள்.

“ஏன் இனி இவ்ளோ சேட்டை பண்ற நீ கொஞ்சமா சாப்பிடலாம் வா.. முடியாதுனு சொல்லாத. அப்பறோம் உன் வயித்துல இருக்க குட்டி இனி என்ன செய்வா அவளுக்கு பசிக்கும் இல்ல…” என்று அவளை பிடிப்பதற்காக ஒரு கையில் தட்டையும் , மற்றொரு கையில் தோசையை பிய்த்து வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தான்.

விஜய் இனியாவிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க… அதையெல்லாம் கிச்சனில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த மல்லிகாவும், இனியாவின் பாட்டியும் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

“என் பேத்தி விஜய் தம்பியை ரொம்ப படுத்திட்டு இருக்கா.. இவளை சாப்பிட வைக்க எவ்ளோ போராடிட்டு இருக்கு ” என்றவர்.

“இரு இப்போ நான் போய் அவளை சாப்பிட வெச்சிட்டு வரேன்” என்றவர் கிச்சனில் இருந்து ஹாலுக்கு வந்தவர்.

“ஏய் இனியா இப்போ நீ சாப்பிட போறியா? இல்லையா?” என்று கையில் பருப்பு கடையும் மத்தை வைத்துக்கொண்டு அங்கு வந்து நிற்க…

அதுவரை இங்கும் , அங்கும் ஓடித்திரிந்தவள் தன் பாட்டி கையில் இருந்த மத்தை பார்த்ததும்.

“பாட்டி நான் சாப்பிடுகிறேன் நீ கிட்ட வராத ” என்று அப்படியே பொட்டிப்பாம்பாய் அடங்கி நின்றாள்.

இதை சற்றும் எதிர்ப்பாராத விஜய் “என்ன பாட்டி இது நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம ஆடம் பண்ணிட்டு இருந்தா இப்போ உங்களை பார்த்ததும் அப்படியே அமைதியாகிட்டா ” என்றான் ஆச்சர்யமாக.

“தம்பி இவளை இப்படி எல்லாம் மானே , தேனேனு கொஞ்சிகிட்டு இருந்தா இப்படி தான் வீம்பு பிடிப்பா… அதுக்கு தான் நான் இந்த பருப்பு மத்தை காட்டி பயமுறுத்தி வெச்சிருக்கேன். இதுல ஒரு அடி விட்டேனேன்னு வைங்க சொன்ன பேச்சு கேட்டுட்டு வந்து நிப்பா..” என்று இனியாவை நோக்கி அந்த மத்தை காட்டி மிரட்ட…

அதை பார்த்து பயந்தவள் “சார்! நான் சாப்பிடுகிறேன். நீங்க என்ன கொடுத்தாலும் சாப்ட்டுக்குவேன். என் பாட்டியை மட்டும் என்னை அடிக்க வேணாம்னு சொல்லுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

“தம்பி அவ தான் சொல்றா இல்ல.. அவளுக்கு கொடுங்க இன்னும் 5 நிமிசத்துல மொத்தத்தையும் சாப்பிடுவா பாருங்க..” என்று அவர் சொல்லவும் விஜய் தட்டில் இருந்த தோசையை பிய்த்து இனியாவுக்கு ஊட்டிவிட.. அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

அதன் பிறகு இரண்டு தோசையும், ஒரு பௌல் நிரைய பலன்களையும் சாப்பிட்டு இருந்தாள்.

அவளை இப்படி ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்திராத விஜய்க்கு உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளுக்கு ஊட்டி முடித்தவன் .

“நீ ரூமுக்கு போ.. நான் பாலை எடுத்துட்டு வரேன்” என்றான்.

“அதை ஏன் தம்பி ரூமுக்கு எடுத்துட்டு போறீங்க.. நீங்க ரூமுக்கு போங்க இவகிட்டே உங்களுக்கும் சேர்த்து நான் கொடுத்து விடறேன்” என்றார் .

“பாட்டி இனியாவுக்கு ஏன் வீண் சிரமம். அவ இந்த நேரத்துல இப்படி எந்த வேலையும் செய்ய வேணாம். நானே எடுத்துட்டு போறேன் இல்லேன்னா மல்லிகா அக்காகிட்ட கொடுத்துவிட சொல்றேன்” என்றான் விஜய்.

“அதெல்லாம் எதுவும் வேணாம். உங்க பொண்டாட்டியை இப்படி உள்ளங்கையில் வெச்சு தாங்கிட்டு இருந்தா அப்பறோம் பிரசவ சமயத்துல இவளுக்கு தான் சிரமம். ” என்றவர்.

“உங்க பொண்டாட்டி நல்லபடியா புள்ள பெத்து கொடுக்குமா? வேணாமா?” என்றார் விஜய்யிடம் .

அவன் ஆமாம் என்று தலையை ஆட்ட..

“அப்போ நீங்க போங்க அவ உங்களுக்கும் சேர்ந்து எடுத்துட்டு வருவா..” என்று விஜய்யை அவன் அறைக்கு செல்ல சொல்ல…

அவனும் வேறு வழி இல்லாமல் இனியாவை பார்த்தபடி சென்றான்.

அவன் செல்வதை பார்த்தவள் .

“சார் இப்படி என் பாட்டிக்கிழவி கிட்டே என்னை தனியா மாட்டிவிட்டுட்டு போறிங்களே.. இந்த கிழவி என்னை வேலை வாங்கியே கொன்னுரும்” என்று புலம்பினாள்.

அவள் புலம்பல் விஜய் காதுக்கு சென்றதோ என்னவோ அவள் பாட்டிக்கு தான் கேட்டது.

“ஏய் இனியா நான் உன்னை வேணும்னு தான் இருக்க சொன்னேன் . நீ முதல்ல என் கூட வா..” என்பர் அவளை கையை பிடித்து கிச்சனுக்கு அழைத்து சென்றவர்.

“மல்லிகா நான் சொன்னது எல்லாம் சேர்ந்து பாலை காய்ச்சிட்டியா?” என்றார்.

“எல்லாம் காய்ச்சியாச்சு பாட்டி ” என்று மல்லிகா வெட்கப்புன்னகை சிந்த..

“இப்போ எதுக்கு பாட்டி அந்த அக்கா ஒரு மார்க்கமா சிரிக்குறாங்க . என்ன ஆச்சு ?” என்றாள்  புரியாமல்.

“உனக்கு என்ன தான் சொல்லி புரிய வெக்குறது ” என்று அலுத்துக்கொண்டவர்.

“நீ இன்னும் சின்ன புல்லை மாதிரி இருக்கணுமா சொல்லு. ஒரு குழந்தைக்கு நீ அம்மா ஆக போற.. அப்போ நீ கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்க வேண்டாமா? நீ இப்படி இருந்தா விஜய் தம்பி உன்னை பத்தி என்ன நினைக்கும் ” என்றார்.

“நான் பொறுப்பா இருக்கலாம்னு தான் நினைக்கிறேன் பாட்டி . ஆனா என்ன செய்றதுன்னு தான் எனக்கு தெரியல.. அவர் என்னை ஏதாவது தப்பா நினைச்சிருப்பாரா.. ” என்று புலம்பினாள்.

“அது எனக்கு தெரியாது “” என்று முறுக்கிக்கொண்டு நின்றார்.

“சொல்லு பாட்டி ” என்று அவரிடம் சிணுங்கியவள் கையை [பிடித்து நிறுத்தியவர்.

“நீ முதல்ல உனக்கு கல்யாணம் ஆகிருச்சு . விஜய் தம்பி உன் புருஷன்னு நினைச்சு அவர்கூட பேசி பழகு. நீ கொஞ்சமாச்சும் கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி நடந்துக்கிறியா?” என்றார்.

“ஏய் கிழவி நான் அதெல்லாம் சரியா தான் இருக்கேன். எனக்கு என்ன ” என்றாள் இனியா.

“ஐயோ இவளுக்கு எண்ணத்தை சொல்லி நான் புரிய வைப்பேன் ” என்று தலையில் அடித்துக்கொண்டவர் .

“மல்லிகா இதை எல்லாம் நான் எப்படி இவகிட்டே சொல்லுவேன். நீதான் கொஞ்சம் இவளுக்கு சொல்லி புரியவைக்கணும் ” என்றவர்.

“நான் ரூமுக்கு போறேன் . நீ இவளுக்கு விபரத்தை சொல்லி அந்த பாலை இவ கைல கொடுத்து ரூமுக்கு அனுப்பி வை ” என்று சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் இனியாவை கையை பிடித்து அழைத்து வந்த மல்லிகா “இனியா நீ எதும் தெரியாத புள்ளையா இருக்க.. நான் சொல்றத கவனமா கேளு அப்பத்தான் விஜய் தம்பி மனசுல நீ நிரந்தரமா இடம் பிடிக்க முடியும்” என்றார்.

 “ஏன்கா இப்ப என்ன ஆச்சு? அவர் என்கிட்ட நல்லபடியா தானே பேசி பழகுறாரு” என்றாள்.

“தம்பி உன்கிட்ட நல்லபடியா தான் பேசி பழகுது. உன்ன நல்லா தான் பார்த்துக்குது அது மட்டும் போதுமா? நீயும் தம்பியும் சந்தோசமா வாழ்க்கையை வாழ வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ரெண்டு பேரும் இருப்பீங்க. அதை கொஞ்சமாவது நீ யோசிச்சு பார்த்தியா?” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் மல்லிகா என்ன சொல்ல வருகிறார் என்று இனியாவிற்கு புரிந்துவிட..

“அக்கா என்ன நீங்க இப்போ இது ரொம்ப முக்கியமா? போங்க நீங்க.. பால கொடுங்க நான் ரூமுக்கு போறேன். சார் தூங்காம முழிச்சிட்டு இருப்பாரு” என்றாள்.

“ ஏய் உன் மனச தொட்டு சொல்லு உனக்கு தம்பி கூட சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பு இருக்கா? இல்லையா?” என்று அவளை கையைப் பிடித்து அதற்றினார் மல்லிகா.

“ இருக்குதான் க்கா.. ஆனா அது எப்படி?..”என்று அவள் பேச தயங்க..

 “அதுக்குத்தான் நான் சொல்றதை கேக்கணும்ங்குறது முதல்ல இந்த பால புடி” என்றவர் அவள் கையில் பால் டம்ளரை கொடுத்துவிட்டு. ஃப்ரிட்ஜில் இருந்து  பூவை எடுத்து வந்தவர்.

 இனியாவின் தலையில் வைத்து விட்டு “ இனிமேல் நீ  தலையில பூ வச்சுக்கணும். தம்பிகிட்ட நல்லா சிரிச்சு பேசி சந்தோஷமா பழகணும். அவர்கிட்ட உரிமையா பேசி பழகு அப்போதான் அவருக்கும் உன்கிட்ட உரிமை எடுத்துக்க முடியும்” என்றார்.

“அக்கா  நான் ஏற்கனவே அவர்கிட்ட அப்படித்தானே பேசி பழகுறேன்” என்றாள் இனியா.

“எது.. சார் சார்னு சின்ன பிள்ளையாட்டம் அவர்கிட்ட பேசி பழகுறியே அதுவா? அது தான் இல்ல… நீ கொஞ்சமாவது கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி நடந்துக்க யோசி. அவர எப்படி உன் கைக்குள்ள வெச்சுக்கணும்னு யோசிச்சு பாரு எல்லாம் தானா புரியும்” என்றார்  

“ அவரை ஏங்கா நான் கைக்குள்ள போட்டுக்கணும் அவரு என்கிட்ட நல்லா தானே பேசி பழகுறார் என்றாள் இனியா மீண்டும்.

“ தம்பி உன்கிட்ட இப்ப இருக்கிற மாதிரியே எப்பவும் இருக்கணுமா? வேண்டாமா? உனக்கு” என்றார் மல்லிகா.

“ம்ம்.. ஆமா..” என்று தலையை ஆட்டினாள்.

“இங்க பாரு தம்பி மனசுல இன்னும் தாமரை மேல பாசம் இருக்கு. அதை நான் தப்புன்னு சொல்லல. ஆனா  அவர் வாழ்க்கையில் நீ அவருக்கு பொண்டாட்டியா வந்துட்ட. அப்போ அவர் மேல உனக்கு தான் முழு உரிமையும் இருக்கு. தாமரை எப்படி இப்ப கூட விஜய் மாமா! விஜய் மாமான்னு உரிமையா பேசுறா. அந்த மாதிரி நீ விஜய் தம்பியை சார்னு கூப்பிடாம உரிமையா ஏதாவது சொல்லிக் கூப்பிட்டு பேசி பழகணும்  அப்பதான் அவரு மொத்தத்தையும் உன் மேல காட்டுவாரு, அத புரிஞ்சுக்கோ” என்றார்.

மல்லிகா சொன்னது அனைத்தும் புரிந்தவளாக “சரிக்கா நீங்க சொன்னது புரிஞ்சிடுச்சு. ஆனா இப்போ நான் அவர்கிட்ட உரிமையா பேசி பழகப் போய் அவரும் என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா நான் என்ன பண்றது?” என்றாள்.

“அது தானே இனியா வேணும் தம்பி உன்கிட்ட உரிமையா இன்னும் அதிகமா பேசி பழகுனா தானே. உங்களுக்குள்ள ஒரு அண்ணியோண்யம் இருக்கும்   அதை நீ தக்க வச்சுக்கணும் அதுதான் உன்னோட புத்திசாலித்தனம்” என்றார்.

அக்கா அதெல்லாம் சரிதான்.  ஆனா இப்போ நான் வேற கர்ப்பமா இருக்கேன். இந்த நேரத்தில் எப்படி?” என்று அவள் தலையை சொரிந்து கொண்டு மல்லிகாவை பார்க்க..

“ஏன் இந்த நேரத்துக்கு என்ன? வயித்துல குழந்தை இருந்தா புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னா சந்தோசமா   இருக்க கூடாதுன்னு யார் சொன்னது. அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல நீ தம்பிகிட்ட உரிமையா பேசி பழகு மத்ததெல்லாம் தம்பியே பார்த்துக்கும். நல்லா ஞாபகம் வச்சுக்கோ உடனே இது எல்லாத்தையும் செய்யணும்னு அவசியம் இல்ல. ஆனால் எப்பவும் இத மனசுல வச்சுக்கிட்டு நீ விஜய் தம்பிக்கோட பேசி பழகு அதை புரிஞ்சுக்கோ சரிya” என்று அவளை விஜய் அறைக்கு அனுப்பி வைத்தார்.

அதே யோசனையோடு  பால் டம்ளர்களுடன் படி ஏறி  பெட் ரூம் வரை வந்தவள். உள்ளே செல்ல யோசித்தபடி நின்று இருக்க..

இனியாவை காணாமல் கதவை திறந்து கொண்டு  வெளியே வந்த விஜய் இனியா அங்கு இருப்பதை பார்த்து “என்ன இனியா உள்ள வராம இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? வா..” என்று அவள் கையில் இருந்து ட்ரேயை வாங்கிக் கொண்டு இனியாவே தோளில் கை போட்டு தன் மீது லேசாக சாய்த்துவாறு  அறைக்குள் சென்றான். 

ENNAI 2-40

என்ன இனியா, ரொம்ப நேரமா உன் பாட்டியும், மல்லிகா அக்காவும் உன் கிட்ட ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்?” என்றான் விஜய்.

“அது… அது வந்து சார்” என்று அவள் விஜய்யை தயக்கத்தோடு பார்க்க..

 “என்னை இனியா, என்ன ஆச்சு? உன் பாட்டி மறுபடி உன்னை எதுவும் மிரட்டுனாங்களா? எதுவும் திட்டுனாங்களா?” என்றான் அக்கறையாக.

“இல்ல இல்ல சார் அப்படியெல்லாம் எதுவும் சொல்லல” என்றாள் இனியா.

 “அப்புறம் ஏன் என்கிட்ட சொல்ல யோசிக்கிற. நான் தான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்னே என்ன விஷயமா இருந்தாலும், எப்படிப்பட்ட விஷயமா இருந்தாலும்.. என்கிட்ட தயக்கம் இல்லாம தைரியமா பேசனும்னு சொல்லி இருக்கேன். ஆனா நீ இப்படி ஒரு சின்ன விஷயத்தை கூட என்கிட்ட சொல்ல யோசிச்சா அப்புறம் எப்படி நமக்குள் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்” என்றான் விஜய்.

“இதைத்தான் இதையே தான் என் பாட்டியும், மல்லிகா அக்காவும் எங்கிட்ட சொன்னாங்க” என்றாள் இனியா.

 “எது?” என்றான்

“நான் உங்ககிட்ட இன்னும் சின்ன புள்ள மாதிரி பேசி பழகுறேனாம்.. உங்கள சார் சார்னு மூணாவது மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பேசுறனாம்.. உங்ககிட்ட பொண்டாட்டின்னு உரிமையா எடுத்துக்கிறது இல்லையாம்.. நீங்களும் நானும் அன்னியோன்யமா இருக்கணுமாம்.. நான் விளையாட்டுத்தனமா இருக்கிறேன். எனக்கு பொறுப்பு வரணும். நீ சின்ன புள்ள கிடையாது நீயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகப்  போற குடும்ப பொறுப்பு எல்லாம் எப்படின்னு தெரிஞ்சுக்கணும்” என்று விஜய் கேட்டதும்  ஒவ்வொரு விரலாக நீட்டி அதை தொட்டு வரிசையாக சொல்லிக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு .

ஸ்கூலில்  மிரட்டிய வாத்தியாரை பற்றி வீட்டில் வந்து கம்ப்ளைன்ட் செய்யும் சிறு குழந்தை போல விஜய்யிடம்  ஒன்று விடாமல் அனைத்தையும் கூறிக் கொண்டிருக்க அதையெல்லாம் சிரித்தபடி ரசித்து கேட்டுக் கொண்டிருந்த விஜய் அடுத்து அவள் சொன்னதை கேட்டதும் அவன் மனது இனியாவின் மீது மேலும் சாய்ந்தது. 

“உங்க கூட சந்தோசமா இருக்கணுமாம்… உங்களை சந்தோஷமா நான் பாத்துக்கணுமாம்… உங்களுக்கு என்ன வேணுமோ அதை பார்த்து பார்த்து செய்யனுமாம்.. அப்புறம் ஒரு பொண்டாட்டி புருஷனுக்கு கொடுக்க வேண்டிய விஷயத்தை கொடுக்கணுமாம்… உங்களை நான் வளச்சி என் கைக்குள்ள போட்டுக்கணும்னு…” என்று சொல்லிவிட்டவள்.

சட்டென  நாக்கை கடித்துக் கொண்டு விஜய்யை பார்த்தாள்.

விஜய் கையை கட்டிக்கொண்டு “ம்ம்… சொல்லு இனி.. ஏன் நிறுத்திட்ட.. இப்போதான் இன்டர்ஸ்டிங்கா இருக்கு..” என்றான்.

“ஐயோ! அறிவு கெட்டவளே இந்த விஷயத்தை எல்லாமாடி இவர்கிட்ட சொல்லுவ.. பாரு அவரு நான் பேசறதை எல்லாம் கேட்டுட்டு இன்டெரெஸ்ட்டா வேற இருக்குன்னு சொல்லறாரு ” என்று தன்னைத் தானே திட்டியபடி      …

அவள் நாக்கை கடித்து விட்டதை கண்டு ரசித்தவன் “என்ன இனியா அமைதியாகிட்ட… எனக்கு சரியா கேட்கல மறுபடியும் சொல்லு” என்று தன் முகத்தை அவள் அருகில் கொண்டு சென்றான்.

விஜய் நெருங்கி வரவும் பின்னால் தன் முகத்தை நகர்த்தியவள்ஒரு வித கூச்சத்தோடு “இல்ல சார், அவங்க என்ன சொன்னாங்கன்னு நீங்க கேட்டீங்களா… ஒரு ப்ளோல எல்லாத்தையுமே சொல்லிட்டேன். நான் ஒரு லூசு எத சொல்லணும் எத சொல்ல கூடாதுன்னு எனக்கு தெரியல” என்று தலையில் அடித்துக் கொண்ட இனியாவின் கையைப் பிடித்து இழுத்து பின்னால் சரிந்து படுத்தவன்.

அவளை தன் மேல் போட்டுகொண்டு  இனியாவை இடையோடு கட்டிக்கொண்டு “இதையெல்லாம் மத்தவங்க சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கணுமா? உனக்கா இதெல்லாம் தோண வேண்டாமா?” என்று மென்மையாக அவளை ரசித்தபடி கேட்டான் .

 “சார்!..” என்று அதிர்ச்சியில் விழிவிரிய விஜய்யை பார்க்க அவள் நெற்றியில் முட்டிய விஜய் “மக்கு நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி டி… அது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? சரி நீயா என்கிட்ட நெருங்கி பேசுவேன்னு  நானும் பார்க்கிறேன். ஆனா நீ அவங்க சொன்ன மாதிரி சின்ன பொண்ணு மாதிரி தான் நடந்துக்கிற” என்று சிரித்தான்.

“ஏன் எல்லாரும் என்னை சின்ன பொண்ணு.. சின்ன பொண்ணுனு  சொல்றீங்க. அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும். இனிமேல்  என்னை யாரும் அப்படி சொல்லாதீங்க” என்று அவன் அணிந்திருந்த டி ஷர்டை விரல்களால் கோலமிட்ட படியே சொன்னவள்.

“தாமரை அக்காவ நெனச்சு நீங்க வருத்தமா இருப்பீங்க. உங்ககிட்ட நான் எப்படி…” என்று அவன் டி-ஷர்ட்டில் கோலம் இட்டபடியே கண்களை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

“இங்க பாரு நான் தாமரைகிட்ட சொன்னத தான் உன்கிட்டயும் சொல்றேன்.  எனக்குன்னு குடும்பம் ஆயிடுச்சு இனி என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. தாமரையோட வாழ்க்கைய அவ பாத்துக்குவா. நான் இனிமேல் அத பத்தி நினைக்க போறதில்லை அவ மேல எனக்கு அக்கறை இருக்கு அதை நான் மறுக்கல… ஆனா அது காதல் இல்ல அத புரிஞ்சுக்கோ இனி தாமரையை பற்றி யோசிச்சிட்டு என்கிட்ட இருந்து விலகி நிற்கனும்னு நீ நினைக்காத சரியா” என்றான் அவள் மோவாயில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி.

இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டது அவனை வெட்கத்தோடு இனியா பார்க்க…

விஜய்யும் “அப்போ நீ சின்ன பொண்ணு இல்ல அப்படித் தானே” என்றான் அவள் ஆமாம் என்று பூம்பூம் மாடு போல தலையாட்ட…

சிரித்துகொண்டே “நீ கர்ப்பமா இருக்க இந்த நேரத்துல நம்ம ஒண்ணா இருக்கிறது உனக்கு சரியா வருமா? பேசாம குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் மத்ததெல்லாம் வச்சுக்கலாமா?” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் “இல்ல.. இல்ல.. அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொன்னேன். நான் மல்லிகா அக்காகிட்ட ஏற்கனவே கேட்டுட்டேன்” என்று ஆர்வம் மிகுதியில் இனியா சொல்லிவிட…

அவளை ஆச்சரியமாக பார்த்த விஜய் “அப்போ எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு தான் ரூமுக்குள்ள வர யோசிச்சிட்டு வெளியே நின்னுட்டு இருந்தியா?” என்று சிரித்தான்.

“அது… அது வந்து சார்” என்றவள் “அப்படி எல்லாம் எதுவும் இல்லை நம்ம ரூமுக்குள்ள வரதுக்கு நான் ஏன் யோசிக்கணும். நான் அப்போதான் வந்து நின்னேன் நீங்க கதவை திறந்து வெளியே வந்துட்டீங்க..” என்றாள்.

“ஓஹோ! அப்படியா? அப்போ எந்த பிரச்சினையும் இல்ல.. அப்படித்தானே” என்றான்.

தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு அவன் முகத்தை பார்க்க முடியாமல் பார்வையை இனியா தாழ்த்திக் கொள்ள…

அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன் தன் மேல் படுத்திருந்தவளை மேலும் இறுக்கி அணைக்க…

இனியாவிற்கு முகமெல்லாம் அந்த அமைப்பிலேயே சிவந்துவிட்டது. அவள் உடல் எல்லாம் மின்சாரம் பாய்வது போல விஜய்யின் இந்த நெருக்கம்  அவளை ஏதோ செய்தது.

அவள் இதயம் வேகமாக துடிக்க அவன் அணைத்ததில் இனியாவின் இதயத் துடிப்பை விஜய்யால் உணர முடிந்தது.

“ஏன் உன் ஹார்ட் இவ்வளவு ஃபாஸ்ட்டா துடிக்குது? பயமா இருக்கா உனக்கு?” என்றான்.

 “பயமா? அதெல்லாம் இல்ல சார் நீங்க என்னை  இப்படி இறுக்கி கட்டிப்பிடிச்சுட்டு  இருக்கிறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அதைத்தான் என் ஹார்ட் இப்படி வேகமா துடிச்சு உங்ககிட்ட காட்டி கொடுத்துடுச்சு.. வெக்கங்கெட்ட ஹார்ட்” என்று சொன்னவளை பார்த்து..

“உன்ன மாதிரியே உன் ஹார்ட்டும் ரொம்ப வெட்கப்படும் போல..” என்றவன் அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்தான்.

முத்தமிட்டு அடுத்து முன்னேற எத்தனித்த விஜய் இனியாவை ஒரு வித ஆர்வத்தோடு பார்த்து அவள் இதழை நெருங்கினான்.

அவளும் அதை எதிர்பார்த்தவள் போல விஜய்யின் நெருக்கத்தில் அவன் சூடான மூச்சுக்காற்றை மெல்ல கண் மூடி தன்னுள் நிறைத்துக் கொண்டு அவன் முத்தத்திற்காக இனியா முகத்தை லேசாக உயர்த்தி அவனிடம் காட்ட விஜய் அவள் இதழை உரசியவன், இனியாவின் மூக்கு நுனியில் உரசினாள்.

அப்போது திடீரென்று விஜய்யின் போன்  அடிக்கவும் அமைதியாக இருந்த அறையில் இருவரின் கவனத்தையும் சிதறவிட்டிருந்தது அந்த போன் மணி.

 சட்டென்று விஜய்யின் மேலிருந்து இறங்கியவள் போர்வையை எடுத்து தலை வரை போர்த்திக் கொண்டாள்  வெட்கம் தாளாத  இனியா  

 அவளைப் பார்த்து சிரித்தவாறு  போனை எடுத்துப் பார்க்க தேவா தான்  அழைத்திருந்தான்.” இந்த நேரத்தில் எதுக்கு கால் பண்றேன்” என்று யோசனையோடு போனை அட்டென்ட் செய்தவன் “சொல்லு தேவா” என்றான்.

“விஜய் ஒரு சின்ன பிரச்சனை இந்த நேரத்தில் எனக்கு யார்கிட்ட ஹெல்ப் கேக்குறதுன்னு தெரியல. அதான் உனக்கு கால் பண்ணேன்” என்றான்.

“சொல்லு தேவா, என்ன ஆச்சு?” என்றபடி  எழுந்த விஜய் தேவா போனில் சொன்னதை கேட்டவன்.

“தேவா ஒன் மினிட்” என்ற விஜய் 

முழுவதும் போர்த்தி இருந்த போர்வையை விளக்கியவன்.  “இனி!  நீ இந்த பால குடிச்சிட்டு தூங்கு..” என்று பால் டம்பளரை அவளிடம் எடுத்து கொடுத்தவன் அவளை குடிக்க சொன்னவன்.

“எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.  நான் லேட்டா தான் வருவேன்” என்று சொன்னவன் 

இனியாவின்  இதழில் அழுத்த முத்தம் வைத்து பிரிந்தவன் “நல்லா தூங்கு… காலையில் நேரமே எழுந்திருக்கணும்ல..” என்று அவள் தலைமுடியை கலைத்துவிட்டு சிரித்தவாறு வெளியே வந்தான்.

இப்படி பச்சக்கின்று முத்தம் வைத்து சிரித்துச் சென்றவனை அதிர்ச்சியாக பார்த்தபடி படுத்திருந்தாள் இனியா.

 தேவாவுடன் பேசியவாறு மல்லிகாவிடம் சொல்லிவிட்டு  காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

வழக்கம்போல இன்றும் மூச்சு முட்ட குடித்துவிட்டு மிகவும் தாமதமாக வீட்டுக்குள் நுழைந்தான் வம்சி.

அவனுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்த தாமரை அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து சென்றவள். “இன்னிக்கும் குடிச்சிட்டு வந்து இருக்க.. ஏண்டா இப்படி பண்ற” என்று அவனை கடிந்து கொண்டவாரே கையைப் பிடித்து டைனிங் டேபிளுக்கு அழைத்துச் செல்ல…

அவள் கையை உதறிய வம்சி “இப்ப எதுக்கு என்கிட்ட இவ்வளவு அக்கறையா இருக்கிற மாதிரி நடிக்கிற உனக்கு தான் என்ன பிடிக்கலைன்னு ஆயிடுச்சு. நான் எவ்ளோ லேட்டா வந்தா உனக்கு என்ன பேசாம போ… என்ன கடுப்பு ஏத்தாத” என்றான் கோபமாக.

“ஏன் அம்மு இப்படி பேசுற நீ என்னால் தானே இப்படி குடிச்சிட்டு உன் உடம்பை கெடுத்துக்குற…” என்று போதையில் தள்ளாடி நடந்தவனை விழாமல் ஓடிச் சென்று பிடித்தவாறு கேட்டாள் தாமரை.

“ஆமாடி உன்னால தான் குடிச்சேன். என்னை பிடிக்காதவளை கல்யாணம் பண்ணி கஷ்டப்படுத்தி என் கூட வச்சுட்டு இருக்கேன்னு நினைச்சேன் கவலைல குடிச்சேன். நீ நினைச்ச மாதிரி உனக்கு ஒரு வாழ்க்கை அமையல உன் காதல் தோல்வியை நினைச்சு குடிச்சேன். என்னடி பண்ண சொல்ற” என்றான் மேலும் கோபமாக…

இப்போது தான் கஷ்டப்படுவதை நினைத்து  வருத்திக் கொள்ளும் வம்சியை பார்த்து தாமரைக்கு  இதயம் கனத்தது. தன்னால் இப்படி அவன் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்வது தாமரைக்கு மேலும் கஷ்டத்தை தான் கொடுத்தது.

“அம்மு… அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் . நீ அதை நினைச்சு கவலை பட்டா மட்டும் சரியாகிடுமா? முதல்ல நீ என்னை பத்தி நினைச்சு கவல படறதை நிறுத்து” என்று அவன் முன் அழுதாள்.

அதை கேட்டவன் “எப்படி டி.. எப்படி டி என்னால உன்னை நினைக்காம இருக்க முடியும், நீ கஷடப்படறதை பாத்துட்டு என்னால எப்படி டி சும்மா இருக்க முடியும். நீ தான் டி எனக்கு எல்லாமே.. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.. ” என்று உள்ளம் வெடித்து பேசியவன் தாமரையின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்.

” நீ என் பொக்கிஷம் டி… உன்னை இப்படி நானே கஷ்டப்பட வெச்சுட்டேனே…” என்றவன்.

“நான் என்ன பண்ணினாலும் நீ என் வழிக்கு இனிமேல் வராத ” என்று அவளை விட்டு விலகியவன் மேலே சென்றவன் .

அங்கே இருந்த வேறு ரூமில் வழக்கம் போல போய் படுத்துகொண்டான்.

தாமரையும் என்ன செய்வது என்று தெரியாமல் ரூமுக்கு சென்றுவிட..

இதையெல்லாம் ரூமுக்குள் இருந்து கேட்ட விக்ரமும், மீனுவும் வம்சி , தாமரை இருவரும் வருந்துவதை நினைத்து கவலை பட்டவர்கள் எப்படியாவது இருவரையும் சந்தோசமாக வாழ வைத்துவிடவேண்டும் என்று நினைத்தனர்.



ENNAI 41

ஒரு சின்ன ரீகேப்: கதை எழுதி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது, இல்லையா?

விஜய் தாமரையிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லிவிட்டான், இனி அவனது மனதில் அவளைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லை என்றும், அவனுக்கு என்று ஒரு குடும்பம் உருவாகிவிட்டது என்றும் தெளிவுபடுத்திவிட்டான்.

அதன்பிறகுதான், சொன்னது போலவே, இனியாவும் அவனும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

தாமரை தன் வீட்டிற்குப் போகும் எண்ணத்தை வம்சி கேட்டுக்கொண்டதால் கைவிட்டாள்.

ஆனால், இங்கு வந்ததிலிருந்து வம்சி அவளுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. அவளால் வம்சையை மறக்க முடியவில்லை, அவள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவனாலேயும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், இப்போது அவன் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்திருக்கிறான். அது எங்கே கொண்டுபோய் முடியப்போகிறதோ! இதற்கு இடையில், துபாயிலிருந்து தேவா, தன் குடும்பத்துடன் இந்தியா வந்து செட்டில் ஆகிவிட்டான்.

அவனுக்கு இன்று திருமணம். அந்தத் திருமணத்திற்காகத்தான் எல்லோரும் இப்போ ரெடி ஆகிக்கொண்டிருக்கிறார்கள். வாங்க, கதைக்குள் போகலாம்.

முக்கியமான வேலை இருப்பதாக  சென்றுவிட, நீண்ட நேரம் விஜய் தந்து போன இதழ் முத்தத்தை நினைத்து, உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நினைத்து சந்தோஷப்பட்டவள், அவளையும் அறியாமல் தூங்கிவிட்டிருந்தாள் இனியா.

“இனி, இனியா எழுந்திரு” என்று அவள் தலையை வருடி கொடுத்துவிட்டு, அருகில் படுத்திருந்த விஜய் அவளை எழுப்பினான்.

உறங்கிக் கொண்டிருந்தவள், தூக்கத்தைக் கலைக்கும் விதமாக வந்த விஜயின் குரலைக் கேட்டாள்.

“ம்ஹும்… என்ன சார் இது? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே” என்று திரும்பிப் படுத்தவள், அவன் மார்பில் முகம் புதைத்து, அவன் இடையில் கையை போட்டுப் படுத்துக்கொண்டாள்.

அதை ரசித்தவன், “மத்த நாளா இருந்தா எவ்வளவு நேரம் வேணுமோ நீ தூங்கட்டும்னு விட்டிருப்பேன். ஆனா, இன்னைக்கு தேவா-பூங்கொடி கல்யாணம் இருக்குல்ல, அதுக்குப் போக வேண்டாமா? எழுந்திரு, இனி” என்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

விஜய் மார்பில் முகம் புதைத்தவள், சட்டென்று கண் திறந்து தலையை நிமிர்த்தி விஜயைப் பார்த்தாள். தலைக்குத் தன் கையை முட்டுக்கொடுத்துப் படுத்தபடி அவளை ரசித்துக் கொண்டிருந்த விஜயைப் பார்த்ததும் அவள் கண்கள் அகல விரிய, அவனை விட்டு விலகப் போனாள்.

“எதுக்கு என்னைப் பார்த்ததும் இவ்வளவு அவசரமாகத் தள்ளிப் போற?” என்று அவளைப் பிடித்துக்கொண்டான்.

“என்ன சார்? தூக்கக் கலக்கத்துல உங்களைக் கட்டிப்பிடிச்சு விட்டேன்” என்று அவன் முகத்தைப் பார்க்காமலேயே இனியா கூறினாள்.

“அதனால் என்ன? நான்தானே?” என்று சிரித்தவன், “சரி, எழுந்து சீக்கிரம் போய் குளிச்சு ரெடியாகிட்டு, நான் உனக்காக வாங்கி வெச்சிருக்கிற புடவையைக் கட்டிட்டு வா. டைம் ஆச்சு” என்று எழுந்தான்.

அடிபட்ட கையிலிருந்த கட்டைச் சரிசெய்தபடி எழுந்தவள், “சரி சார், நான் ரெடியாகிறேன். எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்றீங்களா?” என்றாள்.

“என்ன?” என்றான்

“ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் நான் தலைக்குக் குளிக்கவே இல்ல. காயம் இருக்கிறதுனால, தலைக்கு குளிக்க வேண்டாம்னு பாட்டி சொல்லிடுச்சு. இன்னைக்குக் கல்யாணத்துக்கு வேற போறோம், தலைக்குக் குளிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றாள்.

“சரி குளி. இதுல நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?” என்றான்.

“அஹா… இல்ல இல்ல. நீங்க போய் கொஞ்சம் மல்லிகா அக்காவ வரச் சொன்னீங்கன்னா, அந்த அக்காவுக்கு எனக்குத் தலை குளிக்க ஹெல்ப் பண்ணச் சொல்லுவேன். அப்படியே நீங்க வாங்கிக் கொடுத்த புடவையையும் அந்த அக்காவையே கட்டிவிடச் சொல்லி சீக்கிரம் ரெடியாகிடுவேன்” என்றாள்.

“அப்படியா? சரி ஓகே. நீ வெயிட் பண்ணு. நான் கீழே போய் மல்லிகா அக்காவ வரச் சொல்றேன்” என்று எழுந்து வெளியே செல்ல கதவைத் திறந்தவன், இனியாவைத் திரும்பிப் பார்த்து, “ஆமா, உனக்குத் தலை குளிக்க, புடவை கட்டிவிட மல்லிகா அக்கா தான் வரணுமா? ஏன் நான் ஹெல்ப் பண்ணக் கூடாதா?” என்றான். திறக்கப் போன கதவைப் பூட்டிவிட்டு.

அவள் அதிர்ந்து விஜயைப் பார்த்தாள்.

“எதுக்கு இப்ப இவ்வளவு ஷாக் ஆகுற? தலைக்குத்தானே குளிச்சு விடணும்? வா, நான் உனக்குக் குளிப்பாட்டி விட்டு, சேலை கட்டிவிடுகிறேன்” என்றான்.

“ஐயோ நீங்களா? வேணாம் வேணாம். நீங்க மல்லிகா அக்காவையே வரச் சொல்லிடுங்க. ப்ளீஸ்” என்றாள்.

“ஏய், இப்ப எதுக்கு இவ்வளவு பதற்றம்? நான் தானே? நான் உனக்குத் தலைக்குக் குளிக்க ஹெல்ப் பண்ணக் கூடாதா? நீ சேரி கட்ட நான் ஹெல்ப் பண்ண மாட்டேனா? எனக்கு சேரி எல்லாம் நல்லாவே கட்டத் தெரியும்” என்றான்.

“ஐயோ சார், சொன்னா புரிஞ்சுக்கோங்க. நீங்க எப்படி எனக்குக் குளிச்சு, சேலை…” என்று அவள் என்ன சொல்லி விஜய்க்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் திணறினாள்.

“நான் எப்படி செய்றேன்னு நீ மட்டும் பாரு. நீ முதல்ல வா, வந்து குளி” என்று அவள் கை பிடித்து பாத்ரூம் நோக்கி அழைத்துச் செல்ல,

“ஐயோ சார், ஏன் இப்படி பண்றீங்க? நீங்க இப்படி எல்லாம் பண்ணா எனக்கு வெட்கம் வெட்கமா வருது. தலைக்கு மட்டும் தானே? ப்ளீஸ் மல்லிகா அக்காவ வரச் சொல்லுங்க” என்றாள்.

“மல்லிகா அக்காவை வரச் சொல்ல முடியாது. டைம் வேற ஆயிடுச்சு. இப்ப நீ வரியா இல்ல உன்னைத் தூக்கிட்டுப் போய் குளிக்க வைக்கட்டுமா?” என்று விஜய் தடாலடியாகப் பழக்கத்தையே மாற்றி இனியாவிடம் வர,

“சார்” என்று பதறி இனியா பின்னே செல்ல, “நானும் பார்த்துட்டே இருக்கேன். என்னமோ என்னைப் பார்த்து அப்படிப் பதட்டப்படுற? அவ்வளவு பயப்படுற? உன்னை நான் என்ன செஞ்சுடப் போறேன்? நீ வா” என்று அவள் கைப்பிடித்துத் தன் பக்கம் இழுக்க, 

அவன் இழுத்த வேகத்தில் விஜய் மீது மோதி நின்றாள் இனியா.

இதயம் படபடக்க, விழிகள் பட்டாம்பூச்சியைப் போலச் சிறகடிக்க, தலை நிமிர்த்தி அவனைச் சங்கடமாகப் பார்த்தாள்

. “சார், ப்ளீஸ். உங்க முன்னாடி அதுவும் நீங்க எனக்குக் குளிச்சு விடறது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்று நெளித்தாள்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்கு? அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ வா” என்று அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி பாத்ரூம் நோக்கி அழைத்துச் செல்ல,

“ஐயோ, டேய் லூசு விஜய், நான் எதுக்கு சொல்றேன்னு புரியலையா உனக்கு? இன்னும் நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாவே வாழ ஆரம்பிக்கல. ஒரே ஒரு தடவை, அதுவும் இருட்டுல நமக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சுருச்சு.

அதுக்கப்புறம் நமக்குள் எதுவும் இல்ல… அப்படி இருக்க நீ இப்படி திடீர்னு என்னை குளிச்சு விடுறேன்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்? உன் முன்னாடி எப்படி நான் டிரஸ் இல்லாம… அறிவு இல்ல உனக்கு?” என்று படபடவெனப் பதட்டத்தில் தன் மனதில் நினைத்ததைப் பேசிவிட்டாள் இனியா.

தன்னை ‘டேய்’ என்று சொன்னது மட்டும் போதாது, ‘லூசு விஜய்’ என்று சொன்னவளை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விஜய்.

அவன் அதிர்ச்சியைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் உரைத்தது, பதட்டத்தில் மனதில் உள்ளதை அப்படியே அவனிடம் பேசிவிட்டோம் என்று. அவள் அதை பதட்டத்தோடு விஜயைப் பார்த்து, “ஐயோ, சாரி சார். ஏதோ தெரியாம உங்களை அப்படிப் பேசிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ்” என்றவள், அருகில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு, “நான் உடம்புக்குக் குளிச்சிட்டு வரேன். மல்லிகா அக்காவும் வேண்டாம். நீங்களும் எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம்” என்று பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைச் சாத்தப் போனாள்.

கதவின் குறுக்கே கையை வைத்து அவளை பாத்ரூம் கதவைச் சாத்த விடாமல் தடுத்த விஜய், “இப்ப கொஞ்சம் முன்ன என்ன சொல்லித் திட்டுன? லூசு விஜயா? நான் உனக்கு லூசா?” என்றான்.

“சார், அதான் சொன்னேனே, தெரியாமப் பேசிட்டேனு. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. நீங்க கல்யாணத்துக்கு டைம் ஆச்சுன்னு சொன்னீங்க இல்ல? கைய எடுங்க. நான் சீக்கிரம் குளிச்சிட்டு வந்துடுறேன். ரெண்டு பேரும் கிளம்பி போகலாம்” என்று மீண்டும் இனியா கதவைச் சாத்தப் போக,

“என்ன? மரியாதை இல்லாம பேசிட்டு, சாரி சொன்னா அப்படியே விட்டுடுவேன்னு நினைக்கிறியா? அதெல்லாம் முடியாது” என்று பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், கதவை அடைக்க,

பயத்தில் எச்சில் விழுங்கிய இனியா அவனை மிரண்டு மிரண்டு பார்த்தாள்.

“என்ன அப்படிப் பாக்குற?” என்று தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டைக் கழட்டியபடி இனியாவிடம் நெருங்க,

இனியாவுக்கு இதயம் படபடப்பில் வெளியே வந்து விழுந்துவிடும் போல ஆகிவிட்டது. வெற்று உடலில் அவனைப் பார்த்தவள் எச்சில் விழுங்கினாள்.

“ஏய், இப்ப எதுக்கு முகத்தை இப்படி வெச்சிருக்க? நான் சும்மா கிண்டலுக்குத்தான் உன்னை மிரட்டுற மாதிரி பேசினேன்” என்றவன், “நீ இப்படியே இரு. நான் உனக்கு ஹேர் வாஷ் மட்டும் பண்ணி விட்டுட்டுப் போயிடுறேன், ஓகேவா? நீ குளிச்சு ரெடியாகி வா. அதுக்கப்புறம் சேரி கட்டிக்கலாம்” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் விஜய்யையே பார்த்துக் கொண்டிருக்க,

“ம்ப்ச்… ஏய் இனியா, நான் சீரியஸாவே விளையாட்டுக்குத்தாண்டி பேசினேன். இப்படி சொன்னது எனக்குக் கோபம் இல்ல. உண்மையாவே சந்தோஷமா தான் இருக்கு” என்றவன், “நீ வா” என்று அவள் கைப்பிடித்து அழைத்தவன், பாத்ரூமிற்குள் இருந்த ஸ்டூலை இழுத்து சவருக்கு அடியில் போட்டான்.

இனியாவின் தோள்களைப் பிடித்து அதில் அமர வைத்தவன், அவள் பின்னால் வந்து பின்னிருந்த முடிக்கட்டறைகளை அவிழ்த்து விட்டான். சவரில் சுடுதண்ணீர் அளவை பார்த்தவன், கை பொறுக்கும் சூட்டில் இருப்பதை உறுதி செய்த பின்பு,

“இனி, தலையை மட்டும் லேசா பின்னால சாய்ஞ்ச மாதிரி உட்காரு. நான் உனக்கு இப்படியே ஹேர் வாஷ் பண்ணி விடுறேன்” என்றான்.

‘எனக்குத் தலைக்குக் குளிச்சு விடத்தான் டி-ஷர்ட்டைக் கழட்டினாரா? நான் கூட என்னவோ நெனச்சு பாத்துட்டேன்’ என்று பெருமூச்சு விட்டவள், அவன் சொன்னது போலத் தலையைப் பின்னால் சரிய, சவரில் அவள் கூந்தலை ஈரஞ் செய்து நன்கு கழுவி விட்டவன், பின்பு ஷாம்பு எடுத்து நுரை பொங்க கைகளில் தேய்த்து அவள் தலையில் மசாஜ் செய்வது போல அழுத்தித் தேய்த்து விட்டான்.

தீவிரமாக அவள் தலையைத் தேய்த்து விட்டுக் கொண்டிருக்க, அவன் செய்வதை ரசித்து படி இனியா தலைகீழாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளால் நீண்ட நேரம் அப்படி உட்கார முடியவில்லை. இடுப்பு லேசாக வலிக்கவும், இப்படியும் அப்படியும் என அவள் ஆடிக்கொண்டே சிரமப்படுவதைக் கவனித்த விஜய்,

“ஏன் இனி, முதுகு வலிக்குதா?” என்றான்.

“ஆமா சார். ரொம்ப நேரமா தலையை இப்படி வெச்சிருக்கேன்னு அதான் முதுகு, இடுப்பு எல்லாம் வலிக்குது” என்றாள்.

“ஒரு டூ மினிட்ஸ் பொறுத்துக்கோ. சீக்கிரம் ஹேர் வாஷ் பண்ணி விட்டுவிடுகிறேன்” என்று அவசர அவசரமாக அவள் தலைமுடியைத் தேய்த்து விட்டவன், பின்பு சவரைத் திறந்து விட்டு அவள் தலையிலிருந்த நுரை முழுவதும் போகும்படி நன்கு அலசி விட்டான்.

சுத்தமாகத் தலையை அலசி முடித்த பின்பு, அருகில் இருந்த டவலைக் கொண்டு அவள் கூந்தலை அள்ளி முடிந்து தலைக்கு மேலே போட்டு விட்டவன், “சரி, நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா” என்று பாத்ரூம் கதவைச் சாற்றிவிட்டு வெளியேறினான்.

இவ்வளவு நேரம் தனக்கு ஈகோ பார்க்காமல் பணிவிடை செய்த விஜய்யைப் பார்த்தபோது, இனியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவனை நினைத்துக் கொண்டே குளித்துவிட்டு, ஹேங்கரில் மாட்டி இருந்த நைட்டியை எடுத்து மாட்டியபடி வெளியே வந்தாள்.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், கட்டிலில் அமர்ந்திருந்தவன், வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்து அப்படியே உறைந்து போய் நின்றான்.

ENNAI 2-42

இனியா குளிச்சிட்டியா என்று அவன் நிமிர்ந்து பார்க்க… அங்கே டவலைக் கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்த்து நெளிந்து நின்றாள்.

அவன் கழற்றிப் போட்டிருந்த டி-ஷர்ட்டைப் போட்டிருந்தாள். அது இடையைத் தாண்டி இருக்க, இடையில் டவலை வேஷ்டி போலக் கட்டியிருந்தாள். அது முட்டியைத் தாண்டி வந்திருக்க, அவளின் இந்தத் தோற்றம்கூட விஜய்யின் பார்வைக்கு ரசனையாகத் தெரிந்தது.

அவளை ரசித்துக்கொண்டே நெருங்கி வந்தவன், “என்ன இனி, கோலம் இது?” என்று சிரித்தான்.

“வெறும் டவல்தான் பாத்ரூமில் இருந்துச்சு. உங்களோட டிரஸ் எடுத்துத் தரச் சொல்லிக் கூப்பிடலாம்னு நினைச்சேன். அப்புறம் உங்க டீ-ஷர்ட்டைப் பார்த்தேன். சரி, போட்டுட்டு வந்துடலாம். ஏற்கெனவே கல்யாணத்துக்குப் போக லேட் ஆச்சுன்னு சொன்னீங்களே, அதான்” என்றாள்.

இனியாவைத் தழுவிக்கொள்ள விஜய்யின் கை பரபரத்தது. அவளை முழு மனதாகத் தன் மனைவியாகப் பாவித்ததால்தான் அவனுக்கு இந்த உணர்வுகள் தோன்ற ஆரம்பித்திருக்க, அவனுக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இருந்தும் தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு, “நான் மல்லிகா அக்காவ வரச் சொல்லியிருக்கேன். நீ புடவை கட்டி ரெடியாகிவிடு. நான் போய்க் குளிச்சிட்டு வரேன்” என்று அவள் கையில் இருந்த டவலை வாங்கப் போக,

“ஐயோ சார், இது நான் குளிச்ச துண்டு. ஈரமாகிடுச்சு. உங்களுக்கு வேற டவல் பாத்ரூமில் இருக்கு” என்றாள்.

“ஏன், நீ தொட்டு இன்னும் தூண்டிலை நான் தொட்டாக் கூடாதா? பரவாயில்லை, கொடு” என்று சிரித்துக்கொண்டே அவளிடமிருந்து டவலை வாங்கியவன் குளிக்கச் செல்ல,

“ஆ”வென வாயைப் பிளந்துகொண்டு பாத்ரூம் கதவையே வெறித்துக்கொண்டிருந்தாள் இனியா.

‘இந்த விஜய் சாருக்கு என்ன ஆச்சு? நேத்துல இருந்து இவர் சரியே இல்லை. எனக்குத்தான் இவர் பண்றதெல்லாம் பார்த்தா பக்குன்னு இருக்கு’ என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்போது, “இனி பாப்பா” என்று அவர்கள் அறைக் கதவை மல்லிகா தட்டும் சத்தம் கேட்கவும், வந்து கதவைத் திறந்துவிட்டவள், “அக்கா, எனக்கு புடவை கட்ட கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்றாள்.

“வா பாப்பா” என்று அவர் அழைத்துச் சென்றவர், இனியாவிற்கு உடை மாற்ற உதவி, அவளுக்குச் சேலையும் கட்டிவிட்டவர், திருப்தியாக அவளைப் பார்த்து, “ரொம்ப அழகா இருக்க பாப்பா. தம்பி வந்ததும் ரெண்டு பேரும் கிளம்பிக் கீழ வாங்க. நான் பூ வாங்கி வச்சிருக்கேன், வச்சுக்கோ, இன்னும் அழகா இருப்ப” என்றபடி அவர் வெளியேறினார்.

விஜய்யும் குளித்து முடித்து வெளியே வந்தவன், அவள் வாங்கி கொடுத்த அடர் வயலட் நிற பட்டுச் சேலையில் அழகாக இருந்த இந்தச் சின்னப் பெண்ணைப் பார்த்ததும் அப்படியே மெய்மறந்து நின்றான்.

அவளை நோக்கி விஜய்யின் கால்கள் தானாகச் சென்றன. கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த இனியா, அதன் வழியே பின்னால் விஜய் வருவதைப் பார்த்ததும் திரும்பி, “சார், இந்தச் சேலை எனக்கு நல்லா இருக்கா?” என அவள் கேட்கும்முன்…

“இனியா, யூ ஆர் லுகிங் கார்ட்ஜியஸ் இன் திஸ் சாரீ” என்று தோள்களைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன், அவள் நெற்றியில் அழுத்த முத்தம் வைத்துச் சந்தோஷமாகச் சொன்னான்.

இன்று மட்டுமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அவளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தான் விஜய். அதிலிருந்து அவன் மனதாரத் தன்னை மனைவியாக, அதுவும் முழு மனதோடு, ஏற்றுக்கொண்டான் என்பதை உணர்ந்தவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிய, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹே இனி, இப்ப எதுக்கு அழற? நீ அழகா இருக்கேன்னுதானே சொன்னேன்” என்றான்.

“சார், நீங்க என்கிட்ட இப்படி எல்லாம் நடந்துகிறது நிஜம்தானா? உண்மையாவே உங்க மனசுல நான் வந்துட்டேனா?” என்றாள் தழுதழுத்த குரலில்.

அவள் ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று விஜய்க்கும் புரிந்தது. ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சியை எப்படி அவளால் தாங்கிக்கொள்ள முடியும்? சிறு பெண்தானே அவளும்? இப்போதான் 18-ஐத் தொட்டிருக்கிறாள்.

அவளைத் தோளோடு அணைத்தவன், இனியாவைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, “இனிமேல் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்காத. இப்ப எப்படி இருக்கேனோ, நான் சாகுற வரைக்கும் உன்கிட்ட இதேபோலதான் நடந்துக்குவேன். என் மனைவியா, என் மனசுக்குள்ள உன்னை மட்டும்தான் வச்சிருக்கேன் இனி” என்றான்.

அவளும் தலை நிமிர்த்தி விஜய்யைப் பார்க்க, விஜய்யும் குனிந்து அவளைப் பார்த்து, “என்ன?” என்றால், “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றாள்

“நான் மட்டும் உன்னை என் மனசுல நினைச்சா போதுமா? ஆனா நீதான் எனக்கு உன் மனசுல இடமே கொடுக்க மாட்டேங்குற” என்றான் சிரித்துக்கொண்டே.

“என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க? என் மனசு முழுக்க நீங்க மட்டும்தான் இருக்கீங்க” என்றவளைப் பார்த்தவன்,

“அப்படியா? எங்க காட்டு, நான் பார்க்கிறேன்” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் விஜய்யின் நோக்கம் புரிந்தவள், “ஐயோ சார்” என்று அவன் மார்பில் அடித்தவள், “போங்க சார், நீங்க ரொம்ப மோசம்” என்று அவனைவிட்டு விலக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன் இனியாவின் முகத்தைக் கைகளில் ஏந்தி அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு விடுவித்தவன்,

“நான் இன்னும் உன்கிட்ட மோசமானவனா நடக்கவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே எனக்கு இந்த பட்டத்தைக் கொடுத்துட்டியேடி?” என்றவன், அவள் முகம் மேலும் வெட்கத்தில் சிவப்பதை ரசித்தபடி, “சரி, உன்னை இப்படியே பார்த்துட்டு இருந்தா நேரம் ஆயிடும். நீ கிளம்பு, நான் ரெடியாகிட்டு வரேன்” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டுச் சிரித்தவாறே உடை மாற்றச் சென்றான்.

“அம்மு… அம்மு… கொஞ்சம் எழுந்திரு” என்று அவனை எழுப்பிக்கொண்டிருந்தாள் தாமரை.

“என்ன குட்டிமா? தூக்கம் வருது” என்று புரண்டு படுத்த வம்சியை இடையில் கை வைத்து முறைத்தவள், “இன்னைக்கு விஜய் மாமாவோட ஃப்ரெண்ட்… அது, அன்னைக்கு வந்தாங்களே ஒரு அம்மா, அவங்க பையன் தேவாவுக்குக் கல்யாணம், மறந்துடுச்சா? எல்லாரும் குளிச்சு கிளம்பியாச்சு. நீ மட்டும்தான் கிளம்ப வேண்டியது” என்று அவன் முதுகில் அடித்தாள்.

“இப்பதான் தூங்குன மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்டி” என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“ம்ம்… வீட்டுக்கு வந்தது நடுராத்திரியில. அப்புறம் சீக்கிரம் தெரியாம என்ன பண்ணும்?” என்று நினைத்தவள்,

 “கல்யாணம் முடிச்சுட்டு வந்தாலும்கூட கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. இப்ப முதல்ல எழுந்திரு” என்று குனிந்து அவன் முதுகில் அடிக்கப்போக,

சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்து மெத்தையில் சரித்த வம்சி, அவன் அருகில் படுத்திருந்தவளை இடை மேல் கையைப் போட்டுக் கட்டிக்கொண்டே, “பேசாம இரு குட்டிமா, கொஞ்ச நேரம் தூங்குறேனே” என்றவன், அவள் தோள்களை உரசிக்கொண்டு முகம் புதைத்துப் படுத்துக்கொண்டான்.

இதை தாமரை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் உறைந்து படுத்திருந்தாள். அவள் தோளில் முகம் புதைத்து படுத்திருந்த அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

தலையை லேசாகத் தூக்கி, தன் இடைமேல் கைகளைப் போட்டு அழுத்தி இருக்கும் அவன் கைகளையும் பார்த்தாள்.

உள்ளுக்குள் எரிந்தணலாய்க் கொழுந்துவிட்டு எரிந்தது. விஜய்யை நினைத்திருந்த மனதில் வேறு யாரையும் வைத்துப் பார்க்கும் நிலைக்கு அவள் இன்னும் வரவில்லை.

இப்படி இருக்க, இவ்வளவு நாள் தன்னிடம் ஒதுங்கிக்காட்டி இருந்த வம்சி இன்று இப்படி நடந்துகொண்டது அவளுக்குப் புரியாத ஒன்றாக இருந்தது.

சட்டென அவன் கை விலக்கிவிட்டுக் கட்டிலிலிருந்து எழுந்தவள், “அம்மு, நீ கிளம்பி சீக்கிரம் வா. எல்லாரும் ரெடியாகிட்டாங்க” என்று அவசரமாக அங்கிருந்து செல்லப்போக…

முன்னே சென்ற வேகத்தில் பின்னே இழுக்கப்பட்டு வம்சியின் மீது “பொத்தென” கட்டிலில் விழுந்தாள்.

அவள் விழுந்ததும் முழுவதும் தூக்கம் கலந்தவனாக அப்படியே தலையை நிமிர்த்திப் பார்த்தவன், தன் மேல் விழுந்திருந்த தாமரையைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது. எதுவுமே பேசவில்லை. இருவரும் அமைதியாக அப்படியேப் பார்த்துக்கொண்டிருக்க…

அப்போது அவர்கள் இருந்த அறைக் கதவு தட்டப்படவும், அதில் சுயம்பு வந்த தாமரை அவசரமாக வம்சி மீது எழுந்திருக்கப்போக, மீண்டும் அதே எழுந்த வேகத்தில் அவள் இழுக்கப்படவும், அப்போது தன்னை நிலைப்படுத்திக்கொண்டு திரும்பிப் பார்க்க, அவள் புடவைத் தலைப்பு அவனிடம் மாட்டிக்கொண்டிருந்தது.

அதை பார்த்துவிட்டு தாமரை வம்சியைப் பார்க்க, அவனும் குனிந்து பார்த்தான். தாமரையின் முந்தானையின் மேல் வம்சி படுத்திருந்தான்.

வேகமாக அவள் புடவைத் தலைப்பை எடுத்துவிட்டவன், கட்டிலில் எழுந்திருந்து, “ஏய், நான் எதுவும் பண்ணலடி. இது எப்படி இங்கே மாட்டிக்கிச்சுன்னு எனக்குத் தெரியல” என்று வம்சி பதற…

“நீ எதுவும் பண்ணலேன்னு எனக்கும் தெரியும்” என்றவள், “கீழ போறேன். உனக்கு நம்ம ரூம்ல டிரஸ் எடுத்து வச்சிருக்கேன். குளிச்சிட்டு அதை போட்டுட்டு சீக்கிரம் வந்துடு. மறந்துடாத” என்று அவனைத் திரும்பியும் பார்க்காமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வர, அங்கே அவர்கள் வீட்டுப் பணிப்பெண் விஜயா நின்றிருந்தாள்.

தாமரை வெளியே வந்ததும், “பாப்பா, எல்லாம் ரெடி. உங்களையும் ஐயாவையும் அம்மா அழைச்சிட்டு வரச் சொன்னாங்க” என்றாள்.

“சரி, நீ போ. நான் வரேன்” என்று விஜயாவை அனுப்பிவிட்டு, தாமரையும் அவள் பின்னால் சென்றாள்.

இங்கே இன்னும் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்த வம்சி, தாமரையின் புடவைத் தலைப்பு எப்படித் தனக்குக் கீழே வந்தது என்று யோசிக்க, அவன் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் படுக்கவைத்துக் கொண்டது நினைவில் வர…

‘கடவுளே, என்ன இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கேன்? என்னால அவளுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்று சொல்லிட்டு, நானே அவளைக் கஷ்டப்படுத்திட்டேனே. எல்லாம் இந்தக் குடியினால வந்தது. இதைக் குடிச்சா என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது’ என்று குலைந்து கொண்டவன், ‘இனிமேல் குடிக்கவே கூடாது’ என்று எண்ணியபடி எழுந்து அறைக்குச் சென்று குளித்து, உடை மாற்றி கீழே வந்தான்.

கையில் கார் சாவியுடன் வந்தவன், “அம்மா, போலாமா? நான் ரெடி. எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி உள்ளே வந்தவன், அங்கே மணமகன், மணமகள் கோலத்தில் தேவாவும், தேன்மொழியும் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவர்களுக்கு அருகில் விக்ரம், மீனாவைப் பார்வதி பேசிக்கொண்டிருந்தனர்.

‘இவங்க இன்னும் இங்கே இருக்காங்க? இவங்களுக்குத்தானே இன்னைக்குக் கல்யாணம்? ஒருவேளை கல்யாணம் முடிச்சு நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்களோ?’ என்றவன் பூங்கொடி கழுத்தைப் பார்த்தான்.

 அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு இல்லை.

எதுவும் புரியவில்லை. அவன் குழப்பமான முகத்தைப் பார்த்தபடி உள்ளே நுழைந்த விஜய் நேராக பார்வதியிடம் வந்தவன்,

 “அம்மா, எல்லாம் தயாரா இருக்கு. போலாம்” என்றான்.

” என் விஜய் இவங்க இந்த நேரம் கோயில்ல இருந்திருக்கணும். ஏன் நம்ம வீட்ல இருக்காங்க? ” என்றான் வம்சி புரியாமல்.

 “காளிகாம்பாள் கோவில்ல தான் இவங்க ரெண்டு பேர் கல்யாணமும் வெக்கறதா இருந்துச்சு. ஒரு சின்ன பிரச்சனைனால கல்யாணத்தை அங்க வைக்க முடியாமல் போயிடுச்சு” என்றான் விஜய்.

” பிரச்சினையா? என்ன? ” என்றான் வம்சி.

“ரொம்ப பெரிய பிரச்சினையெல்லாம் இல்ல. அத பத்தி அப்புறம் பேசிக்கலாமே இப்போ முகூர்த்தத்திற்கு நேரம் ஆயிடுச்சு இவங்க கல்யாணத்த நடத்த வேண்டாமா? நம்ம அப்புறம் பேசிக்கலாம்” என்றவன்.

தேவா, பூங்கொடி இருவரையும் பார்த்து “போலாமா?” என்றான்.

அவர்களும் சரி என்று வெளியே வர அவர்களோடு வம்சியும் வந்தான் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்து அவர்கள் வீட்டில் திடீரென்று மேளதாளம் முழங்க அந்த சத்தத்தை கேட்டு வம்சி திரும்பிப் பார்த்தான்.

அவர்கள் வீட்டு கார்டனில் அழகாக ஒரு  மணமேடை அமைக்கப்பட்டு அங்கே விஜயின் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது. உறவுகள் இல்லை என்று சொன்ன தேவா,பூங்கொடிக்கு தன் மொத்த உறவையும் வரவழைத்து ஒரு சர்ப்ரைஸும் கொடுத்திருந்தான் விஜய்

தாமரை இனியா இருவரும் பூங்கொடியை மணமேடைக்கு அழைத்துச் செல்ல விஜய் தேவாவோடு மணமேடை ஏறினான். வம்சியும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

 ஐயர் மற்ற சடங்குகளை எல்லாம் செய்துவிட்டு தாலியை எடுத்தவர் “வீட்ல பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க அவங்க ஆசிர்வாதம் பண்ணி தாலியை கொடுக்கட்டும்” என்றதும் விக்ரம் மீனு இருவரையும் அழைத்த விஜய் அவர்களிடம் தாலியை கொடுத்து ஆசீர்வதித்து தேவா கையில் கொடுக்கச் சொன்னான்.

 மீனு தாலியை கையில் வாங்கி கண்கள் மூடி மனதாரப் பிரார்த்தித்தவள் விக்ரமுடன் சேர்ந்து அந்த தாலியை தேவா கையில் கொடுக்க அதை பார்த்த பார்வதி மன நிறைவோடு நின்றிருக்க அவன் அம்மாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உங்களுடைய கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் தேவா.

ENNAI 2- 43

“ஏன் ம்மா ! இவங்க ரெண்டு பேரோட கல்யாணமும் காளிகாம்பாள் கோவில்ல தானே நடக்குறதா இருந்துச்சு. அப்பறோம் ஏன் இவங்க கல்யாணத்தை நம்ம வீட்ல நடத்தினாங்க ” என்றான் வம்சி புரியாமல் .

“டேய்! இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு தான் ஆகணுமா?” என்றார் அதிதி.

“ம்மா… நான் என்ன இப்போ பெருசா கேட்டுட்டேன்னு நீங்க சலிச்சுக்கிறிங்க.. நம்ம வீட்ல இவங்க கல்யாணம் ஏன் நடந்துச்சுன்னு தானே கேட்டேன்” என்றான்.

“டேய்! போடா..” என்று அவர் அங்கிருந்து சென்றுவிட…

அவனுக்கு இப்பொது காரணம் தெரிந்தாக வேண்டும். சுற்றிலும் பார்த்தான். அங்கே தாமரையும், இனியாவும் பேசிக்கொண்டு இருக்க… அவர்களோடு மற்ற சொந்தங்களும் சிறிது பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த இனியா எழுந்து கிச்சனுக்கு தண்ணீர் குடிக்க செல்ல.. அவனை தாண்டி சென்றவேளை “ஒரு நிமிஷம் இனியா” என்று நிறுத்தினான்.

“சொல்லுங்க சார்! ” என்றாள் சிரித்தமுகமாக.

“சாரா! விஜய்யை தான் சாருன்னு இன்னமும் கூப்டு இருக்க.. என்னையும் அப்படியே கூப்டு பழகிக்காத சரியா” என்று சிரித்தவன். “நான் உனக்கு மாமா முறிய வேணும். நீ அந்த முறை சொல்லியும் கூப்பிடலாம் இல்ல.. வம்சின்னு என் பேரை சொல்லியும் கூப்பிடலாம்” என்றான்.

“சரிங்க வம்சி மாமா! ” என்று அவன் சொன்னதும் மறுப்பு இல்லாமல் பேசியவளை பார்த்து சிரித்தவன்.

“குட்!” என்றான்.

“எதுவும் வேணுமா வம்சி மாமா! ” என்றாள்.

“இல்ல எனக்கு எதுவும் வேணாம்” என்றவன். “ஆமா இவங்க கல்யாணத்தை ஏன் நம்ம வீட்ல வெச்சாங்க. எனக்கு கரணம் தெரியாலையின்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு” என்றான்,

அவன் கேட்டதும் சங்கடமாக நெளிந்தவள் “அது.. அது வந்துங்க மாமா..” என்று நெளிய…

“ஹே! நான் எதுவும் கேட்க கூடாததை கேட்டுடேனா? எல்லாரும் ஏன் இப்படி தெறிச்சு ஓடுறிங்க.. சொல்லக்கூடாத விஷயமா இருந்தா வேணாம். நான் எதுவும் கேட்கல ” என்றான்.

“ஐயோ! அதெல்லாம் சொல்லக்கூடாத விஷயம் இல்ல…” என்று சிரித்தவள்.

“அவங்க கோவிலுக்கு போக முடியாது. அவங்களுக்கு நேத்து நைட் பீரியட்ஸ் வந்திருச்சு. அதான் கோவில்ல கல்யாணத்தை நடத்தமா நம்ம வீட்டுல வெச்சாங்க” என்று சிரித்தாள்.

“அட இது தான் விஷயமா? ” என்று சிரித்தான்,

இனியாவும் சிரித்தவள் “நான் தண்ணி குடிக்க போறேன். உங்களுக்கு வேணுமா?” என்றாள்.

“இல்ல இனியா! வேணாம்” என்றான்.

“சரி” என்று தலையை ஆட்டிவிட்டு அவள் கிட்சன் சென்றுவிட..

தன் பின்னந்தலையை தட்டிக்கொண்டவன் “அப்படி அந்த விஷத்தை தெரிஞ்சே ஆகணுமா டா உனக்கு” என்று நினைத்தவன் அங்கே அமர்ந்து இருந்த தேவாவையும், பூங்கொடியையும் பார்த்தான். “ம்ஹும்.. ” என்று பெருமூச்சொன்றை உதிர்த்தவன் தன் கார் கீயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கிளம்பி இருந்தான்.

தேவாவோ உள்ளுக்குள் தனக்கும் பூங்கொடிக்கும் இன்று முதல் இரவு நடக்காது என்று தெரிந்ததில் இருந்து உள்ளுக்குள் பொருமிக்கொண்டு இருந்தான் .

“ம்ஹும்.. எனக்கு குடுத்து வெச்சது அவ்ளோதான் போல இருக்கு, டிரஸ் இல்லாம இவளை எப்போ பார்த்தேனோ அப்போ இருந்து இவளை பார்க்குற அப்போ எல்லாம் எனக்கு என்னென்னவோ ஆகுது. இவ்ளோ நாள் கண்ட்ரோலா இருந்துட்டேன். கல்யாணம் ஆனதும் எல்லாம் பாத்துக்கலாம்னு. ஆனா இன்னும் 3 நாள் பொறுத்திருக்கணும் போலையே ” என்று ஏக்கமாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

வீராவும்,விக்ரமும் பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் வந்த விஜய் “இவங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்து கொடுங்க. எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு நான் போயிடு வரேன்” என்றான்.

“என்னப்பா நீ அவங்க எல்லாரும் உனக்கு வேண்டியவங்க தானே… நீ இப்படி ஆபீஸ்க்கு போனா எப்படி டா.. ” என்றார் விக்ரம்.

“தாத்தா! எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏற்கனவே விஜய் எங்களுக்காக அவன் வேலையை விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணிருக்கான் . எதுவும் முக்கியமான வேலையா இருக்கும் போயிட்டு வரட்டும் .” என்றான் தேவா,

அவனிடம் சிரித்தவன் “நீங்க பேசிட்டு இருங்க நான் போய்ட்டு வந்துறேன்.” என்று கிளம்பியவன் நேராக இனியாவை தேடிக்கொண்டு கிட்சனுக்கே வந்தான்.

அவனை பார்த்ததும் “என்ன சார்! கிளம்பிட்டீங்களா?” என்றாள்.

“ம்ம்ம்.. ஆமா இனி” என்றவன் “வம்சியை முறை சொல்லி மாமான்னு கூப்பிட்ற , ஆனா என்னை இன்னும் சாருன்னு தான் கூப்பிட்ற நீ..” என்றான் சிரித்துக்கொண்டே.

“ஐயோ! சார் அவரை நான் அப்டி கூப்பிட்டது உங்களுக்கு எப்படி தெரியும்” என்றாள் இனியா ஆச்சர்யமாக.

“நீ தான் உன் புருஷனை கவனிக்கல.. ஆனா அவன் நீ போற வர இடம் எல்லாம் உன்னையே தான் பாத்துட்டு இருந்தான். அவனுக்கு எங்க நீ இந்த குட்டியூண்டு குடத்துக்குள்ள காணாம போய்டுவியோன்னு பயம் வந்திருச்சு  என்று சொல்லி சிரித்தார் ஜியா.

அதை கேட்டு இனியா வெட்கப்பட… அவள் வெட்கப்படும் அழகை ரசித்த விஜய். “இனி நான் கிளம்புறேன். நீ நேரத்துக்கு சாப்டுட்டு டேப்ளெட்ஸ் போட்டுக்கோ” என்று அவள் தலையை வருடிக்கொடுத்து சொன்னவன் கிளம்பி இருந்தான்.

அதையெல்லாம் அவர்களோடு அமர்ந்து இருந்த தாமரை பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவள் பார்வை அழுத்தமாக இனியாவின் மீது படிந்திருந்தது. அது அவள் இடம் இன்று அங்கே யாரோ இருக்கிறார்கள் என்ற ஏக்கம் அவளுக்குள் எழுந்தது .

எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாலும் தாமரை மட்டும் உள்ளுக்குள் இன்னமும் ஆறாத வடுவாக விஜய்யின் நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தாள் . 

அவள் முகத்தை வைத்தே அதை கண்டுகொண்ட இனியா நேராக எழுந்து தாமரையிடம் சென்றாள்.

“அக்கா! எனக்கு பசிக்குது. தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு, நீங்களும் வரிங்களா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

விஜய் பற்றிய யோசனையில் உழன்று கொண்டு இருந்தவள் பசிக்கிறது என்று வயிற்றை தடவிக்கொண்டு இருந்தவளை பார்த்ததும் அனைத்தையும் மறந்தவளாக “என்ன நீ இவ்ளோ நேரமா சாப்பிடாம என்ன பண்ற , வா முதல்ல சாப்பிட போகலாம்” என்று இனியாவை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றாள்.

இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட சாப்பிட இனியாவிற்கு வாந்தி வந்துவிட,.. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவள் எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

தாமரையும் அவளுடன் பின்னே சென்றவள் இனியாவை பார்த்துக்கொண்டாள்,

முகத்தை கழுவிக்கொண்டு மிகவும் சோர்வுடன் வந்தவளை பார்க்கவே தாமரைக்கு பாவமாக இருந்தது.

அவளை கைத்தாங்கலாக அழைத்துவந்தவள் “இனியா நீ மேல வா வந்து விஜய் மாமா ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு , நான் போய் உனக்கு ஜூஸ் எடுத்து வரேன். உனக்கு டையர்டா இருக்கும்” என்றவள்.

அங்கே அரட்டை அடித்துக்கொண்டு இருந்த வினோவை அழைத்தாள்.

“என்ன அக்கா! ” என்று சிரித்தமுகமாக வந்தவள் அங்கே இனியா இருப்பதை பார்த்ததும் முகம் மாறியது,

“அக்கா! சொல்லு எதுக்கு என்னை கூப்பிட்ட.. ” என்றாள் இனியாவை முறைத்துக்கொண்டே.

“வினோ! நீ கொஞ்சம் இனியாவை விஜய் மாமா ரூம்க்கு கூப்டு போ, நான் இனியா குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்றாள்.

“ஏன் அவங்க ரூமுக்கு போக அவங்களுக்கு வழி  தெரியாதா , இவங்களை கொண்டு போய் விட ஒரு ஆள் தனியா வேணுமா” என்றாள் முகத்தில் அடித்தாற்போல..

“ஏய்! என்ன டி இது . உன்னை போய் கூப்பிட்டேன் பாரு என்னை சொல்லணும்” என்று சலித்துக்கொண்டவள். “நீ எதுவும் செய்யவேண்டாம். நானே போய்க்கிறேன்” என்று தாமரை அங்கிருந்து செல்லப்போக..

“அக்கா! இவளால் தானே உன் வாழ்க்கை கெட்டு போயிருச்சு. இவளுக்கு போய் நீ ஹெல்ப் பண்ணிட்டு இருக்க.. ” என்றாள்.

“ஹே! வினோ! பார்த்து பேசு டி. அவ கர்ப்பமா இருக்கா. இனியாவை இந்த நேரத்துல இந்த மாதிரி எல்லாம் பேசுறதை நிறுத்து” என்று அதட்டியவள்.

“நான் விஜய் மாமாவை கல்யாணம் பண்ணிக்காததுக்கும், இனியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீ தேவையில்லாம பேசி அவளை மட்டும் நோகடிக்கல, நான் மறக்கணும்னு நினைக்குற விஷயத்தை நீங்க எல்லாரும் பேசி. பேசி எனக்கு நியாபக படுத்துறீங்க” என்றாள்.

இப்போதுதான் தாமரையின் மனதை வினோவால் புரிந்து கொள்ள முடிந்தது. அவசரப்பட்டு இப்படி பேசி விட்டோமே என்று வருத்தப்பட்டவள் 

“அக்கா!” என்று பாவமாக அழைத்தாள்

“ நீ ஏதும் பேச வேணாம், என் தங்கச்சி தானா நீ. எப்படி உன்னால ஒருத்தவங்களை இப்படி வார்த்தைகளாள காயப்படுத் முடியுது “ என்று திட்டிவிட்டு நீ வா இனியா என்று அவளை அழைத்தாள் 

“நீங்க வாங்க நான் உங்கள ரூம்க்கு கூப்டு போறேன் “ என்று இனியாவின் கை பிடித்து தன்னோடு அழைத்தாள் வினோ.

அவளை பார்த்து சிரித்த தாமரை “சரி நீ கூட போ.. நான் உனக்கு ஜூஸ் போட்டு கொண்டு வரேன் “ என்று இனியாவை அவளுடன் அனுப்பி வைத்தவள் கிட்சன் செல்ல..

சற்று டையார்டாக படியேறிய இனியா கொஞ்சம் கூச்சமும், சங்கடமும்மாக வினோவை பார்த்தாள்.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக “சாரி இனியா நான் வேணும்னு அப்படி பேசல, என் அக்கா எப்பவும் விஜய் மாமாவையே நினைச்சிட்டு அவ வாழ்க்கையை வீண் பண்ணிக்கிறா. இன்னும் ரெண்டு நாள்ல இவங்க டைவர்ஸ் கேஸ் வர கோர்ட்ல ஹரிக்கு வரப்போகுது அங்கு வந்து என்ன சொல்லுவாளோ அவ வாழ்க்கை என்னாகும் என்று ஒரு பதட்டத்துல அப்படி பேசிட்டேன்” என்றாள் தயங்கிய படி 

 உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் அந்த கவலை இருக்கு தாமரை அக்காவை எப்பவும் சோகமான முகத்தோடு பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு தெரிஞ்சும் தெரியாம நானும் ஒரு காரணமாயிட்டேன் இதை எப்படியாவது சரி பண்ணனும் என்றாள்.

நீங்களும் நானும் அவள பத்தி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் நீங்களும் பார்த்துட்டு தானே இருக்கீங்க தாமரை ஒரு பக்கம் இருக்கா வம்சி மாமா இன்னொரு பக்கம் இருக்காரு அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லைன்னு எல்லாருக்குமே தெரியும் இருந்தும் என்ன பண்றதுன்னு யாரும் எதுவும் கேட்காமல் அப்படியே விடுறாங்க என்று வருத்தப்பட்டாள்.

 எனக்கு என்னவோ தாமரை அக்கா வம்சி மாமாவை டைவர்ஸ் பண்ண மாட்டாங்கன்னு தோணுது அவங்க கண்டிப்பா கோர்ட்ல விவாகரத்து வேண்டாம் என்று தான் சொல்ல போறாங்க நீங்க வேணா பாருங்க என்றாள் வினோவிடம் 

அப்படி நடந்தா சந்தோசம் தான் என்று விஜய் அறைக்கு இனியாவை அழைத்து வந்து கட்டில் அமர வைத்தாள்.

எனக்கும் உங்களுக்கும் ரெண்டு மூணு வயசு தான் வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறேன். என்ன இனியானு பேர் சொல்லியே கூப்பிடுங்களேன் என்றாள்.

அப்போ நீங்களும் என்ன பேர் சொல்லி கூப்பிடறதா இருந்தா நானும் உங்களை பெயர் சொல்லி கூப்பிடுறேன் இல்லனா வாங்க போங்கன்னு மரியாதை தான் பேசுவேன் என்றாள் வினோ சிரித்துக் கொண்டே 

 இனிய சிரித்துக் கொண்டே சரி இனிமேல் உன் பேரை சொல்லியே கூப்பிடுறேன் வினோ ஓகேவா  என்றாள் 

 சரி இனியா என்றாள் வினோவும்.

 இருவரும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் நண்பர்கள் போல பேச ஆரம்பித்திருந்தனர்.

ENNAI 2-44

இரவு உணவை முடித்துவிட்டு தேவாவையும், பூங்கொடியையும் வழி அனுப்ப குடும்பமே தயார் ஆனது.

“பூங்கொடி இங்க வாம்மா..” என்று அவளை தன் அருகில் அழைத்த மீனு “இதை வாங்கிக்கம்மா ” என்று அவள் கையில் ஒரு தாம்பூலத்தட்டை நீட்டியவர் “ஒரு நிமிஷம் இரு ” என்றவர் தேவாவை தேடினார்.

அவன் விஜய், வம்சியுடன் மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான்.

“தம்பி தேவா! இங்க வா, அவங்க கிட்டே அப்படி என்னதான் பேசுவியோ தெரியல . உனக்கு தான் கல்யாணம் ஆகி அழகா ஒருத்தி வந்துட்டாளே வந்து அவகூட கொஞ்ச நேரம் பேசவேண்டியது தானே ” என்று அவனை அழைத்தார்.

“பாட்டிம்மா! அவ கூட வீட்டுக்கு போன அப்பறோம் பேசிட்டு தானே இருக்கப்  போறேன்” என்று மீனுவின் அருகில் நின்று இருந்த பூங்கொடியை பார்த்தான்   .

“நீ எங்க இருந்தாலும் அங்கே உன் பொண்டாட்டி இருந்தா எப்பவும் உன் கவனம் அவ மேல தான் இருக்கனும் அதை முதல்ல தெரிஞ்சுக்க.. எத்தனை பேரு அவளை சுத்தி இருந்தாலும் அவ நினைப்பு எப்பவும் உன்னையே தான் சுத்தி சுத்தி வரும் அதை தெரிஞ்சுக்கோ முதல்ல” என்றவர்.

“ரெண்டு பெரும் சேர்ந்து நின்னு இதை வாங்கிக்கோங்க” என்று தாம்பூல தட்டை அவர்கள் முன் நீட்டினார்.

இருவரும் சேர்ந்து அதை வாங்கினார்கள்.

“ரெண்டு பேரும் சந்தோசமா உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும். என்ன நடந்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும், ரெண்டு பேரும் உக்காந்து பேசி அப்போவே தீர்த்துக்கோங்க சரியா” என்றார்.

“சரிங்க பாட்டி” என்று பூங்கொடி தலையை ஆட்ட..

“தேவா, பூங்கொடி இந்தாங்க இது என்னோட சின்ன கிப்ட்” என்று வம்சி ஒரு பெரிய பையை நீட்டினான்.

“என்ன வம்சி சின்ன கிப்ட்னு சொன்ன.. ஆனா இவ்ளோ பெரிய பையை கொடுக்குற..” என்றான் தேவா.

“ஓ! சாரி நான் கிப்ட்டை மாத்தி கொடுத்துட்டேன் ” என்றவன் தேவா கையில் இருந்த பையை வாங்கியவன் அவன் கையில் இருந்த ஒரு சிறிய பெட்டியை தேவாவிடமும், அந்த பெரிய பையை பூங்கொடியிடமும் நீட்டினான்.

“அண்ணா! என்ன இது ” என்று விழித்தாள் பூங்கொடி .

“இந்த அண்ணாவோட சின்ன பரிசு வீட்டுக்கு போய் பொறுமையா திறந்து பாரு பூங்கொடி” என்றான் உரிமையாக.

பூங்கொடி தேவாவை பார்க்க…

“தேவாவை ஏன் பாக்குற? என் தங்கச்சிக்காக நான் கொடுக்குற சீர்வரிசை இது. இதை வேணாம்னு இங்க யாரும் சொல்ல முடியாது புரிஞ்சுக்கோ” என்றான் .

தன்னை தங்கச்சி என்று உரிமை கொண்டாடுபவனை பார்த்து நெகிழ்ந்து போனாள் பூங்கொடி. சொந்தம் என்று யாரும் இல்லாத தனக்கு ஒரு சொந்தம் கிடைத்த சந்தோஷம் அவளுக்கு சிரித்துக்கொண்டே “தேங்க்ஸ் அண்ணா!” என்றாள் அந்த பையை ஆசையாக வாங்கிக்கொண்டே.

வாங்கி வந்த பரிசுப்பொருட்களை தேவா , பூங்கொடியிடம் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

அவர்கள் கிளம்பியதும் வம்சியும் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அவன் இவ்வளவு நேரம் பொறுமை காத்ததே பெரிய விஷயம். நேராக கிளம்பி பாருக்கு சென்றுவிட்டான்.

அது தெரிந்தும் தாமரை அவனை தடுக்கவில்லை. தடுத்தாலும் அவன் கேட்பதாக இல்லையே.

விஜய்யும் , இனியாவுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

காரில் கிளம்பியதில் இருந்து நெளிந்துகொண்டே அமர்ந்து இருந்தாள் இனியா.

அதை கவனித்தவன் “ஏன் இனியா! ஏன் நெளிஞ்சுட்டே இருக்க? என்ன ஆச்சு? “என்றான்.

“ஒண்ணுமில்ல சார் கொஞ்சம் சரியா உக்கார முடியல இடுப்பு வலிக்குது” என்றாள்.

அவள் அப்படி சொன்ன அடுத்த நொடி காரை சாலையோரம் நிறுத்தியவன் சீதபேலட்டை  கழட்டிவிட்டு அவள் பக்கம் திரும்பியவன். “நீ காலையில் இருந்து சரியா ரெஸ்ட் எடுக்கல இல்ல அதான் உனக்கு இப்படி இருக்கு ” என்றவன். “ஒரு நிமிஷம் இரு நான் உனக்கு சீட் அட்ஜஸ்ட் பண்ணி விடறேன்” என்று அவள் பக்கம் குனிந்து சீட்டை தளர்த்த அது அப்படியே படுக்கை போல சாய்ந்து கொண்டது. அதை எதிர்பாராத இனியா வேகமாக பின்னால் சாய்ப்போனவள் பயத்தில் அவள் முன் குனிந்து இருந்த விஜய்யின் சட்டையை இருக்க பிடித்துக்கொண்டாள்.

அவளோடு சேர்ந்து விஜய்யும் அவள் மீது சாய்ந்து இருந்தான்.

இதை இருவருமே சற்றும் எதிர்பார்க்க வில்லை. “இனியா! உனக்கு ஏதும் ஆகளையே நான் அவசரப்பட்டுட்டேன்” என்று பதறிய விஜய் அவளை பார்க்க..

“இல்ல சார் நான் தான் பயத்துல உங்க சட்டையை பிடிச்சு இழுத்துட்டேன்” என்றவள் இன்னமும் பயத்தில் அவன் சட்டையை விடாமல் பிடித்து இருந்தாள் .

“என்ன பயம் நான் இருக்கும்போது ” என்றவன் அவள் படபடத்த விழிகளை பார்த்தான்

அவளும் விஜய்யின் விழிகளை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இருவரின் முகமும் நெருக்கத்தில் இருந்தது. விஜய்யின் மூச்சுக் காற்று அவள் முகத்தில் படர்ந்தது, காருக்குள் இருவரின் மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. இனியாவுக்கு பதட்டத்தில் நெஞ்சுக்குழி மேலே ஏறி இறங்க…

அவள் மேல் படுத்திருந்தவன் மார்பை உரசியது அவள் நெஞ்சுக்குழி.

இனியாவின் இதயம் தட்.. தட்… என்று வேகமாக துடிக்க அதையும் சேர்த்தே உணர்ந்தான் விஜய்.

இருவரும் அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தனர். 

ச.. சார்… என்றாள் இனியா.

ம்ம்.. என்றான்.

இப்படியே எவ்ளோ நேரம் பாத்துட்டு இருப்பிங்க.. வீட்டுக்கு போக வேண்டாமா என்றாள் அவன் நெருக்கத்தை தாங்க முடியாமல் வியர்த்துக்கொட்டிய முகத்தை துடைக்க கூட தோன்றமல் கேட்டாள்.

அவள் கேட்டதும் தான் கார் சாலையின் ஓரத்தில் நிற்பதை உணர்ந்தவன். அவசரமாக எழுந்தவன் சாரி இனி என்றவன் காரை ஸ்டார்ட் செய்து கிளப்பி இருந்தான்.

ம்க்கும்.. இவ்ளோ நேரம் என்னை குரு குறுன்னு பாத்துட்டு இருந்ததுக்கு ஒரு முத்தம் கொடுத்திருக்கலாம் என்று அவள் புலம்ப.

அது விஜய் காதில் நன்றாகவே விழுந்தது ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் வண்டியை வீட்டிற்கு கிளப்பியவன். வீடு வந்ததும் காரை போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டு.

இனி நீ அப்படியே இரு நான் சீட்டை எடுத்து விடுறேன் அப்பறோம் இறங்கிக்கோ என்று காரை விட்டு இறங்கி அவள் பக்கம் வந்து கதவை திறந்தவன். குனிந்து சீட்டை சரி செய்வான் என்று அவனையே பார்த்துக்கொண்டு இருக்க..

ஆனால் விஜய்யோ இனியாவை கைகளில் ஏந்திக்கொண்டு வீட்டிக்குள் வந்தவன் பெட் ரூம் சென்றான்.

மல்லிகாவும், மரகதமும் இந்த காட்சியை பார்த்துவிட்டு. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 என்ன சார் நீங்க மாடி வர என்னை தூக்கிட்டு வந்துட்டீங்க ஹால்ல மல்லிகா அக்காவும் பாட்டியும் நம்ம ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்து சிரிச்சாங்க என்று அவனை பார்க்காமலேயே இனியா கேட்டாள்

 அவங்க பாத்தா என்ன பிரச்சனை என்றவாரு அவளை இறக்கிவிட்டான்.

இல்ல சார் அவங்க எதும் நினைச்ச்… என்று அவள் முடிக்கும் முன் இனியாவை கதவில் தள்ளி அழுத்தி பிடித்திருந்தவன் இனியாவின் இதழை தன் இதழால் சிறை செய்திருந்தான்.

அதில் இனியா அதிர்ந்து விழிக்க.. அவள் விழிகளில் தன் விழிகளை கலக்க விட்டவன் தன் முத்தத்தை தீவிர படுத்தினான்.  

ENNAI 2- 45

 வேகம் மூச்சு எடுத்தவளாக நெஞ்சை பிடித்துக் கொண்டு விஜய்யை பார்த்தபடி நின்று இருந்தாள் இனியா 

 அவளைப் போலவே மூச்சு எடுத்தவனாக இனியாவை பார்த்து படி நின்றிருந்தவன்.

 முத்தம் போதுமா இல்ல இன்னும் வேணுமா என்றான் கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டே 

 சார் என்று அவள் வெட்கத்தோடு விஜய்யை பார்க்க 

காருக்குள்ள என்ன சொன்ன அவ்ளோ நேரம் குறுகுறுன்னு பார்த்திருந்ததுக்கு ஒரு முத்தம் கொடுத்து இருக்கலாம்னு சொன்ன இல்ல. இப்போ நீ சொன்னது போல முத்தம் கொடுத்துட்டேன் ஓகேவா  என்றான் சிரித்துக்கொண்டே

இன்னமும் அவன் தந்த முத்தத்தின் உணர்வு அவள் உள்ளத்திலும், உதடுகளிலும் இருக்க.. அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள் இனியா

அதை ரசித்தவன் என்ன இனி வெட்கமா என்றவன் அவள் தாடையை ஒற்றை விரல் கொண்டு உயர்த்தியவன் அப்போதும் அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு விழி தாழ்த்தி இருந்தவள் முகத்தை ஆராய்ந்தான்

சிவந்து இருந்த கன்னங்கள் துடித்தது. லேசாக தடித்திருந்த உதடுகள் மீண்டும் அந்த முத்தத்திற்காக ஏங்கியத்தை கண்டு மெல்ல அவளிடம் முன்னேறினான்.

இருவரின் நெருக்கமும் இனியாவை ஏதோ செய்ய… விஜய்யின் மூச்சுக்காற்று அவள் முகத்தை உரசவும் கண்களை மேலும் இருக்க மூடிக்கொண்டு தன் சேலையை இருக்க பற்றிக்கொண்டாள் படபடப்பில்.

அதை கண்டதும் ஏன் இனி ரொம்ப பத்தட்டமா இருக்கா என்று அவளை விட்டு வேகமாக விலகினான். எங்கே கற்பவத்தியான அவள் உடலுக்கு எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து.

பதட்டமாக இருந்தாலும் விஜய்யின் நெருக்கத்தை விரும்பிய இனியா அவன் விலகளில் ஏமாந்தவளாய் சலித்துக்கொண்டு இந்த நேரத்துல பதட்டப்படுவியா டி மண்டு.. என்று முனக..

அதே தான் நானும் கேக்குறேன். இந்த நேரத்துல நீ பதட்டப்பட்டா அது உனக்கும், குழந்தைக்கும் எதும் பிரச்சனை வரக்கூடாது இல்லையா என்றான் அக்கறையாக.

ஐயோ சார் நான் அதை சொல்லல நீங்களே இப்போதான் என்கிட்டே கிளோசா இருக்க ட்ரை பண்றீங்க இந்த நேரத்துல போய் நான் இப்படி என்று அவள் சேலை முந்தானையை திருகிக்கொண்டே இழுத்தாள்

நீ ரொம்ப பதட்ட பட்ற இதெல்லாம் இப்போதைக்கு வேணாம். அதுவும் இல்லாம. உனக்கு இப்போதான் 5 மந்த்ஸ் ஆகிருக்கு என்றான்.

அதனால என்ன சார் அதான் எனக்கு எந்த பிரச்னையும் வராதுன்னு மல்லிகா அக்காவும், பாட்டியும் சொன்னாங்களே என்று அவனை நிமிர்ந்து பார்த்து ஆர்வத்தில் பேச

அவள் அப்படி பேசியதும் புருவம் உயர்த்தி அவளை ஆச்சர்யமாக பார்த்தவன் அவள் கையை பற்றி சுண்டி இழுத்தான் 

அதில் அவன் மார்பில் மோதி நின்றவள் தலை தாழ்த்தி இருந்தாலும் விஜய்யின் முகத்தை பார்க்கும் ஆர்வத்தில் விழிகளை மட்டும் உயர்த்தி அவனை பார்க்க..

நல்லாவே பார்த்து சைட் அடிக்கலாம் என்னை இங்க நம்ம ரெண்டு பேரும் தானே இருக்கோம் என்று சிரித்தான் 

உங்களை பார்த்துட்டே இருக்கணும்னு எனக்கு ஆசையா தான் இருக்கு ஆனா என்று இனியா நிறுத்த 

என்ன ஆனா என்றான் 

உங்க முகம் எப்பவாவது தான் சிரிச்ச மாதிரி இருக்கு மீதி நேரம் எல்லாம் உர்ருன்னு இப்படி வெச்சிருக்கீங்க என்று அவள் முகத்தை உர்றேன்று வைத்து புருவம் இடுக்கி விஜய்யை போல முகத்தை வைத்து அவனிடம் காட்டினாள்

அதை பார்த்து ஹஹஹா… என்று சத்தமாக சிரித்தவன் 

என் முகம் என்ன இப்படியா இருக்கு என்றான்

ம்ம்ம் ஆமா சார் என்றாள்

இல்லையே தாமரை எப்பவும் என் முகம் அழகா இருக்குன்னு சொல்லுவாளே  என்று இனியாவிடம் பேசிய சந்தோசத்தில் தாமரையை பற்றி பேசிவிட  அதை பேசிய பின்பு தான் விஜய்யும் உணர்ந்தான்.

இனியா என்ன நினைப்பாளோ என்று அவளை பார்த்தான் விஜய்.

அவளோ ஆமா ஆமா அவங்கள லவ் பண்ணும்போது எப்பவும் சந்தோஷமா இருந்திருப்பீங்க என்னை முதல்ல பார்க்குற அப்போ முகத்தை எப்படி வெச்சிருந்திங்களோ இப்பவும் அதே போல தான் முகத்தை உர்ருன்னு வெச்சிருக்கீங்க அவங்க கூட இருக்க அப்போ இருந்த சந்தோஷம் வேற மாதிரி பீல் இருக்கும் இல்ல சார் என்றாள்

அவள் பேச்சை கேட்டு இவ்வளவு எதார்த்தமாக தன் விஷயத்தை எடுத்து பேசுபவளை மேலும் ஆச்சர்யமாக பார்த்தவன் இனியா நான் யோசிக்காம உன்கிட்டே தாமரையை பத்தி பேசிட்டேன் ஆனா உனக்கு கொஞ்சமும் கோபம் இல்லையா என்றான்

எதுக்கு சார் கோபப்படணும் எனக்கு நீங்க தாமரை அக்காவை காதலிச்சது தான் தெரியுமே நீங்க ரெண்டு பேரும் பிரியுறதுக்கு காரணமா இருந்ததே நான் தான்  நானே உங்களை தப்பா நினைப்பேனா என்றவள் என்கிட்டே தாமரை அக்காவை பத்தி நீங்க என்ன பேசினாலும், எப்போ பேசினாலும் நான் உங்களையோ தாமரை அக்காவையே நான் தப்பவே நினைக்க மாட்டேன் என்றாள்

விஜய்க்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை அவனிடம் பேசிவிட்டு விஜய்யையே பார்த்துக்கொண்டு இருந்தவளை இறுக அணைத்தவன் இனி உண்மையாவே நீ எனக்கு மனைவியா கிடைச்சதுக்கு நான் சந்தோச படறேன் என்றான்

இல்ல சார் நீங்க கிடைச்சதுக்கு நான் தான் குடுத்து வெச்சிருக்கணும் என்று சிரித்தவள் எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்

ஹேய் என்று அவளை கண்டு சிரித்தவன்

அவ்ளோதானா ஒரு முத்தம் மட்டும் போதாதே எனக்கு என்றான்

போங்க சார் நானே ஒரு ஆர்வத்துல உங்களுக்கு முத்தம் கொடுத்துட்டேன் இது எவ்ளோ நாள் பிளான் தெரியுமா என்றாள் அவன் சட்டை பட்டனை திருகிக்கொண்டே

பிளானா என்று சிரித்தான்

ம்ம்ம் ஆமா நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து உங்களை ஒவ்வொரு முறை பாக்குற அப்போவும் எனக்கு உங்களை கட்டிப்பிடிச்சு கன்னத்துல முத்தம் கொடுக்கணும்னு தோணிட்டே இருக்கும் நீங்க அசந்து இருக்கும்போது ஒருவாட்டியாவது ஓடி வந்து முத்தம் கொடுத்துற மாட்டோமான்னு பாத்துட்டே இருப்பேன். நான் நினைக்குற அப்போ எல்லாம் நீங்க உர்ருன்னு முகத்தை வெச்சிருப்பிங்க உங்க கிட்டே வரவே பயமா இருக்கும் என்றாள்

அவ்ளோ பிடிக்குதா எனக்கு முத்தம் குடுக்க என்றான்

ம்ம் பிடிக்கும் என்றாள்

அப்போ இந்த கன்னத்துலையும் ஒன்னு குடு என்றான்

ம்ஹும் என்று வேகமாக தலையை ஆட்டினாள்

ஏன் என்றான்

இல்ல ஒரு மாதிரி வெட்கமா இருக்கு எனக்கு என்றாள்

இப்படி வெட்கப்பட்டுட்டே இருந்தா ரெண்டு பேரும் விடியுற வரைக்கும் இப்படியே மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கணும் என்றான்

அப்போ நான் பேசல என்றாள் குறும்பாக சிறிது

அவள் அப்படி சொன்ன மறு நொடி இனியாவின் தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றவன் அவள் அருகில் வந்து படுத்தான்

இனியா விஜயையே  பார்த்துக்கொண்டு இருக்க பாத்துட்டே இருக்கலாமா என்றான்

ம்ம் சரி என்று சிரித்தவள் எட்டி அவன் நெற்றியில் முத்தமிட

இதுவும் உன் பிளானில் ஒண்ணா என்றான்

ம்ம்..ம்ம்.. என்று தலையை மேலும் கீழும் வேகமா ஆட்டினாள்

எனக்கும் ஒரு பிளான் இருக்கு என்றான்

அவள் என்ன என்பது போல விஜய்யை பார்க்க..

உன் உதட்டுல இருந்து முத்தத்தை ஆரம்பிச்சு உன் பாதம் வரை கொடுக்கணும்னு பிளான் என்றான்

அதை கேட்டு மூச்சை இழுத்து பிடித்தவள் சார் என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து இங்க இருந்து ஆரம்பிக்குறேன் என்றான்

ஐயோ சார் என்று சிணுங்கிக்கொண்டு மேலும் அவன் மார்போடு ஒன்றியவளை இருக்க அணைத்தவன்

ஐயம்  ரியலி லக்கி இனி என்றான்

நானும் தான் சார் என்றாள் அவனை பார்க்காமலேயே

இப்படி வெட்கப்பட்டு எவ்ளோ நேரம் இருப்ப… என்றவன் மார்போடு அணைத்தவளை இடையில் கைகொடுத்து மேலே தன் முகத்தருகே தூக்கியவன் அடுத்து பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் அவள் இதழை தன் இதழில் சுவைக்க துவங்கினான்.

இனியாவின் உணர்வுகள் மொத்தமும் அந்த முத்தத்தில் கிளர்ந்தெழ.. விஜய்யும் அதே நிலையில் தான் இருந்தான்.

அவளிடம் தன் பிளானை சொன்னது போல உதட்டில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பிளானை எக்ஸ்சிக்கியுட் செய்ய ஆரம்பித்தான்

கட்டிலில் அவள் சிணுங்கல்கள் துவங்கியது அதோடு கட்டிலின் க்ரீச் சத்தமும் மெல்ல ஆரம்பித்தது

இனியாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்ன உஷ்ண மூச்செடுத்து பேசமுடியாமல் விஜய் காதருகில் ஸ்…சார் ஹ.. லை … லைட் எரியுது என்றாள்

அவள் முகத்தை ரசித்தவன் ஏன் வேணாமா என்றான் மூச்சு வாங்க

ம்ஹும் என்றாள் தன் முகத்தை மறைக்க முடியாமல் விஜய் பார்வையையும் தவிர்க்க முடியாமல்

அவள் திண்டாட்டத்தை ரசித்தவன் அவளை மேலும் படுத்த விரும்பாமல் எட்டி விளக்கை அணைத்தவன் நிலவொளியின் வெளிச்சத்தில் அவள் முகத்தை ரசித்த படி க்ரீச் சத்தத்தை மீண்டும் மெல்ல ஆரம்பித்தான் . இனியாவின் கர்ப்பத்தை கருத்தில் கொண்டு மிகவும் மென்மையாக ,ஜாக்ரதையாக அவளை கையாண்டான்.

முதல் முறை இருவரும் சுயநினைவில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து  கூடலில் திளைக்க துவங்கினர்

 ENNAI 2-46

காலையில் சிரித்த முகமாக ஆபிஸிற்கு காரில் வந்து இறங்கிய விஜய்யை வாசலில் நின்ற கூர்க்கா சல்லியுட் அடித்த படி ஆச்சர்யமாக அவனை பார்க்க..

அவனோ அதை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அதே சிரித்த முகம் மாறாமல் உள்ளே வந்தவன் தனக்கு வணக்கம் வைத்தவர்களை பார்த்து சிறு தலையசைப்புடன் வந்தவன் லிபிட்டில் ஏறி தன் தளத்திற்கு சென்றான்

அன்றைய வேலைகளை சரி பார்த்துக்கொண்டு இருந்த அர்ஷிஷின் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் குட் மோர்னிங் டா என்ன பண்ணிட்டு இருக்கா என்றான்

கீழே குனிந்து பைலை தேடிக்கொண்டு இருந்த அர்ஷ் தான் கேட்டது விஜய்யின் குரல் தானா என்று யோசித்தவன் மேலே நிமிர்ந்து பார்க்க

அவன் மேஜையில் கைகளை ஊன்றி மெல்லிய புன்னகையோடு நின்று இருந்தவனை அதிசயம் என பார்த்தான் அர்ஷ்

என்ன டா அப்படி பாக்குற என்றான்

ம்ஹும் என்று தலையை ஸ்லொ மோஷனில் இடவலமாக ஆட்டினான் அர்ஷ்

எதையோ தேடிட்டு இருக்க போல என்றவன்

சரி நீ வேலையை முடிச்சிட்டு ஏதாவது பைல்ஸ் இருந்தா எடுத்துட்டு வா நான் சைன் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பனும் என்றவன் தன் கேபினுக்கு சென்றுவிட

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தவன் என்ன டா இது நம்ம விஜய் தானா  இப்படி சிரிச்ச முகமா அவன் இருந்து நான் பார்த்ததே இல்லையே நான் பாக்குறது நிஜம் தானா என்று தன்னையே ஒரு முறை கிள்ளிப்பார்த்தவன் இவன் என்ன ஸ்கூல் பிள்ளை மாதிரி ஆபீஸ் வந்ததும் வீட்டுக்கு போகணும்னு சொல்றான் அபப்டி என்ன நடந்திருக்கு வீட்டுக்கு அவ்ளோ அவசரமா போறதுக்கு என்று யோசித்தபடி விஜய் கேட்ட பைல்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான்

இரவு தாமதமாக தான் விஜய்யும், இனியாவும் தூங்கினர் . இருவரின் கூடலுக்கு பின் இனியா விஜய்யை பார்ப்பதற்க்கே வெட்கப்பட்டாள் அவளை இழுத்து தன் மார்போடு போட்டுக்கொண்டவன். அவன் மார்பில் முகம் புதைத்து உறங்கி இருந்தவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான் விஜய். அவள் மிகவும் வலுவிழந்து சோர்வாக இருப்பதை கண்டதும் மெல்ல இனியாவை கட்டிலில் படுக்க வைத்தவன் ஆடைகளை போட்டுக்கொண்டு கிச்சனுக்கு சென்றவன் இனியா சாப்பிட பிரட் ஆம்லெட்டும் , ஜூஸும் போட்டு எடுத்து வந்தான் அவர்கள் அறைக்கு.

கொண்டு வந்த உணவை மேஜையில் வைத்துவிட்டு இனியாவின் அருகில் வந்தவன் இனி.. இனி.. எழுந்திரு என்றான்

ம்ம்.. என்று திரும்பி படுத்து மீண்டும் உறங்கியவளை கண்டு சிரித்தவன் இனி எழுந்திரு நீ ரொம்ப டயர்டா இருக்க கொஞ்சம் சாப்பிடு என்று அவளை எழுப்ப

சார் எனக்கு தூக்கம் வருது நான் காலையில சாப்பிடுகிறேனே என்று சொன்னாளே ஒழிய எழுந்த பாடில்லை இது சரிவராது என்று கட்டிலில் அமர்ந்தவன் அவளை தூக்கி தன் தோளில் சாயத்து அமரவைத்தவன் உணவை எடுத்து அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்டுவது போல ஊட்டி விட்டான். உடலில் ஆடை இல்லாமல் போர்வையை இருக்க பற்றிக்கொண்டு அவன் கொடுக்க கொடுக்க சாப்பிட்டு முடித்தவளிடம் ஜூஸையும் கொடுத்து குடிக்க வைத்த பின்பு தான் அவளை விட்டான்

வயிறு நிறைந்ததும் மீண்டும் படுத்து உறங்கியவளை பார்த்து தலையசைத்துவிட்டு எழுந்து சென்று கைகழுவி விட்டு வந்தவன் இனியா போர்த்தி இருந்த போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அவளை இழுத்து கை வளைவில் படுக்க வைத்துவிட்டு அவளை கட்டிக்கொண்டு உறங்கியும் போனான்.

விடிகாலை தூக்கம் களைந்து கண் விழித்த விஜய்யின் விழிகள் இனியாவை தான் தேடியது அவள் தலை வரை போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டு இருக்க

சின்ன பொண்ணு மாதிரி தூங்குறாளே என்று சிரித்தவன் அவள் முகத்தில் போர்த்தி இருந்த போர்வையை விளக்கி அவள் முகம் பார்க்க முயல… எங்கே அவள் தான் தூங்குவது போல பாசாங்கு செய்துகொண்டு போர்வையை இருக்க பிடித்துக்கொண்டு படுத்து இருந்தாள்

இனியா நீ தூங்கலையா குளிச்சிட்டு தான் படுத்திருக்கியா என்றான்

அவள் போர்வைக்குள் இருந்து நீங்க எழுந்துகிறதுக்குள்ள நான் ரெடியாகி கீழ போய்டலாம்னு நினைச்சேன் ஆனா நீங்களும் நான் எழுந்துருக்க நேரத்துக்கு எழுந்துட்டீங்க அதான் என்றாள்

ஏன் நான் எழுந்தா என்ன அதுக்கு ஏன் முகத்தை மூடி இருக்க என்றான்

அது .. அது .. எனக்கு உங்களை பார்க்கவே வெட்கமா இருக்கு சார் என்றாள்

வெட்கமா என்று சிரித்தவன் எதுக்கு என்றான்

எதுக்கா போங்க சார் நேத்து நைட் நீங்க நான் நம்ம ரெண்டு பேரும் என்று வார்த்தைகள் வராமல் திணறினாள்

சரி அதுக்காக இப்படி முகத்தை மூடிட்டு இருக்க போறியா என்றான்

ம்ம் என்றாள்

எவ்ளோ நேரம் என்றான்

நீங்க கிளம்பி ஆபீஸ் போற வர என்றாள்

அப்பறோம் திரும்பி வறுவேனே என்றான்

நீங்க வந்தது தெரிஞ்சதும் நான் மறுபடி வந்து போர்த்தி படுத்துக்குவேன் என்றாள்

எப்போ வரை இப்படி என்னை பார்க்காம இருப்ப என்றான்

தெரியல என்றாள்

எனக்கு தெரியுமே என்றான்

தெரியுமா எப்போ என்றாள் போர்வைக்குள் இருந்தபடி ஆர்வமாக

நம்ம ரெண்டு பேரும் நேத்து நைட் செஞ்சதை திரும்ப திரும்ப பண்ணினா உனக்கு என்கிட்டே இருக்க கூச்சம் போய்டும் அப்பறோம் என்னை பார்க்க வெட்கப்ட்டுட்டு இப்படி நீ போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்க வேண்டியதில்லை என்றான்

ஹா சார் போங்க என்று போர்வைக்குள் இருந்தபடி அவள் சிணுங்கினாள்

ஹஹஹா என்று சத்தமாக சிரித்தவன் இப்போ நீ முகத்தை காட்டல  நான் போர்வைக்குள்ள வந்துருவேன் அப்படி வந்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்றான்

சார் என்று அவள் இழுக்க…

அப்போ மே ஐ கம் இன்  என்று  அவள் போர்வையை இழுக்க

சார் வேணாம் ப்ளீஸ்  என்று போர்வையை மேலும் இறுக்கி பிடித்தாள்

சரி போனா போகட்டும் நீ வேற ரொம்ப கெஞ்சுற அதனால என்றான்

அதனால என்று கண்ணை மட்டும் வெளியே தெரியும் அளவுக்கு லேசாக போர்வையை விளக்கி அவனை பார்த்தாள்

அவள் முகத்தருகே குனிந்தவன் போர்வையோடு சேர்த்து அவளை அணைத்தவன் இன்னோரு ரவுண்டு போயிட்டு நான் குளிக்க போறேன் ஓகேவா என்றான்

ஐயோ மோசம் சார் நீங்க போங்க என்று போர்வை போர்த்திக்கொள்ள

சிரித்தபடி கட்டிலை விட்டு இறங்கியவன் நான் குளிக்கப் போறேன் நீ மெதுவா எழுந்து வா என்று பாத்ரூம் கதவை திறந்து உள்ளே சென்று கதைவடைத்தான்

விஜய் சென்ற சிறிது நேரத்தில் போர்வையை விளக்கி விட்டு தலையை தூக்கி பாத் ரூம் பக்கம் பார்த்தாள் கதவு அடைத்து இருக்கவும் அப்பாடா என்று பெருமூச்செடுத்தவள் நிம்மதியாக படுக்க…

யாரை தேடுற இனிக்குட்டி என்று அவள் காதருகே விஜய்யின் குரல் கேட்கவும்  அதிர்ந்து திரும்பியவள் அவள் பக்கம் கையை கட்டிக்கொண்டு நின்று இருந்தவனை பார்த்து விழி விரித்தாள்

முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன் என்ன ஓகேவா என்றான்

அவன் எதற்கு கேட்கிறான் என்று புரிந்ததும் முடியாது போடா என்று மீண்டும் போர்வைக்குள் தஞ்சம் புகுந்தாள்

அதை ரசித்து சிரித்தபடி குளித்து ஆபீஸ் கிளம்பினான்

அர்ஷ்  விஜய் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் இனியாவை நினைத்த படி சிரித்துக்கொண்டு இருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தான் அர்ஷ்

விஜயின் இந்த சந்தோசம் அர்சிற்கு நிம்மதியை தந்தது. அவனை டிஸ்டர்ப் செய்ய பிடிக்காமல் வந்தவழியே சத்தம் இல்லாமல் திரும்பி சென்றான் அர்ஸ்.

ENNAI 2-48

ஹலோ விஜய் சார் இன்று மெசேஜ் அனுப்பி இருந்தாள் இனியா

 பைலை பார்த்துக் கொண்டிருந்தவன் மொபைலில் நோட்டிபிகேஷன் சப்தம் வரவும் எடுத்து பார்க்க இனியாவின் மெசேஜை பார்த்ததும் சிரித்துக் கொண்டே அதை ஓபன் செய்து படித்தவன்

என்ன பண்றீங்க என்று அனுப்பினாள் 

 வொர்க் தான் என்றான் விஜய் 

 வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா மணி ஆச்சு என்றாள் 

 இன்னும் சில பைல்ஸ் பார்க்க வேண்டி இருக்கு அது முடிச்சதும் கிளம்பிடுவேன் என்று அனுப்பினான் 

 சரி அப்போ வேலை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துருங்க பாய் என்று அனுப்பினாள் 

 அவ்ளோதானா உடனே பாய் சொல்லிட்ட என்று பதில் அனுப்பினான் 

 வேற என்ன சொல்லணும் என்றாள்

 உங்களுக்காக காத்துட்டு இருக்கேன் உங்கள பாக்காம என்னால இருக்க முடியல சீக்கிரம் வாங்க அப்படி இப்படி ஏதாவது சொல்லுவேன்னு நினைச்ச நான் அவருக்கு லேட் ஆகும்னு சொன்னதும் பாய் சொல்லிட்டேன் என்று அனுப்பினான் 

 நீங்க இன்னும் வரலைன்னு நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது இதையெல்லாம் எதிர்பார்த்துதான் நான் மெசேஜ் அனுப்பி இருக்கேன்னு உங்களுக்கு புரியலையா என்று அனுப்பி அதனுடைய சிரிக்கும் இமோஜையும்  அனுப்பி இருந்தாள் 

 எனக்கு ஃபர்ஸ்ட் மெசேஜ்லயே புரிஞ்சிடுச்சு என்று அனுப்பியவன் சரி சீக்கிரம் வந்துருவேன் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எங்காவது வெளியே போகலாம் என்று அனுப்பிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்

ஆஃபீஸில் மிகத் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த விஜய்க்கு, அதிதியிடமிருந்து போன் வந்திருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் அழைப்பது கடினம். யோசனையோடு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், “சொல்லுமா, என்ன விஷயம்? திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?” என்றான்.

“ஒண்ணும் இல்லை விஜய், சும்மாதான் கூப்பிட்டேன். என்னப்பா பண்ணிட்டு இருக்க?” என்றார் அதிதி.

பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தவன், “ஃப்ரீதான், சொல்லுங்க” என்றான்.

“நாளைக்கு வம்சி, தாமரை ரெண்டு பேரோட டிவோர்ஸ் கேஸும் கோர்ட்டுக்கு வருதுப்பா. அவங்க ரெண்டு பேரும் என்ன மனநிலையில் இருக்காங்கன்னு எனக்குத் தெரியலை. வம்சி ஒரு பக்கம் தினமும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றான். தாமரை வீட்ல எல்லார் கிட்டயும் நல்லா சகஜமா சிரிச்சுப் பேசிட்டுதான் இருக்கா, ஆனா அவ முகத்துல ஒரு சந்தோஷமே இல்லை. எப்பவும் சோகமா சோகமாவே இருக்கா. அவகிட்ட யார் போய் என்ன சொல்லிப் பேசுறதுன்னு தெரியலை” என்று தாமரையின் மனநிலையை விஜய்க்கு எடுத்துரைத்தார்.

“அம்மா, எனக்கும் நாளைக்கு அவங்க டைவர்ஸ் கேஸ் வருதுன்னு தெரியும். ஆனா நான் வந்து இந்த நேரத்துல தாமரைகிட்ட பேசுறது சரி இருக்காது. அதனாலதான் இதைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் எதுவும் பண்ண முடியாத நிலைமையில இருக்கேன்” என்றான் விஜய்.

“எனக்கும் உன்னோட நிலைமை புரியுதுப்பா. ஆனா, நீ வம்சிகிட்ட கூப்பிட்டுப் பேசலாமே. அவனைத் தாமரைகிட்ட பேசச் சொல்லு. நம்ம குடும்பத்துல யாரும் இதுவரை கோர்ட், கேஸ், டிவோர்ஸ்னு போனதில்லை. தாமரை நல்ல பொண்ணுதான். என்ன பண்றது, போதாத நேரம் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வெச்சுட்டான் அந்த ஆண்டவன். அதுக்காக அவளை ‘எப்படியோ போகட்டும்’னு விட முடியுமா? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் கண்டிப்பாகச் சந்தோஷமா இருப்பாங்க” என்றார் அதிதி.

“சரிமா, நான் வம்சிகிட்ட கூப்பிட்டுப் பேசுறேன். முடிஞ்சா தாமரைகிட்டயும் பேசுறேன்” என்றான் விஜய்.

“அம்மா, எல்லா விஷயமும் தெரிஞ்சும் உன்கிட்ட இதெல்லாம் பேசுறேன்னு என்னை தப்பா எடுத்துக்காதப்பா” என்றார் அதிதி.

“அம்மா, என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் எதுவும் நினைக்கலை. எனக்கும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லா இருக்கும்னுதான் தோணுது. ஆனா அதச் சொல்ற இடத்துல நான் இருக்கேனான்னு எனக்குத் தெரியலம்மா” என்றவன், “நான் பேசிப் பார்க்கிறேன், நீங்க ஃப்ரீயா இருங்க” என்று போனை வைத்தான்.

அதிதி சொன்னதையெல்லாம் யோசித்தபடி எழுந்து தன் அறைக்குள் நடந்தவன், அவன் அறையில் இருந்த ஆளுயர ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போது வம்சியின் கார் அவர்கள் ஆஃபீஸ் முன்பு வந்து நிற்கவும், காரிலிருந்து இறங்கி உள்ளே வந்த வம்சியைப் பார்த்தான். முன்புபோல கம்பீரமாகவும், மிடுக்குடனும் இல்லாமல், துவைந்துபோய் தளர்ந்த நடையோடு உள்ளே மெல்ல நடந்து வந்தான். அந்த நடை, வம்சியின் மனநிலையை விஜய்க்கு உணர்த்தியது.

தன் இன்டர்காமை எடுத்து ரிசப்ஷனுக்கு டயல் செய்தவன், வம்சையைத் தன்னறைக்கு வரச் சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

லிஃப்ட் ஏறி அவன் ஆஃபீஸ் இருந்த தளத்திற்கு வர, அங்கே ரிசப்ஷனில் இருந்த பெண் பவ்யமாக வம்சியின் முன்பு ஓடிவந்து, “குட் மார்னிங் சார்” என்றவள், “விஜய் சார் உங்களை அவர் கேபினுக்கு வரச் சொன்னார்” என்றாள்.

விஜய் அழைத்தான் என்று கேட்டதுமே யோசனையாகப் புருவம் சுருக்கியவன், “ஓகே, யூ மே கோ” என்று அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு, விஜய்யின் கேபின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், “என்ன விஜய், கூப்பிட்டியா?” என்றான்.

“ஆமாம், உன்கிட்ட கொஞ்சம் பேசணும், வா” என்று அழைத்தவன், அங்கிருந்த சோஃபாவைக் காட்டி வம்சியை அமரச் சொன்னான்.

“சொல்லு விஜய்” என்று வந்து அமர்ந்தவனை உற்று கவனித்தான் விஜய்.

“ஏண்டா அப்படி பார்க்கிற? என்னைய இன்னைக்குத்தான் புதுசா பார்க்கிற மாதிரி இல்ல இருக்கு நீ பார்க்கிறது?” என்றான் வம்சி.

“ஆமா, எனக்கு நீ புதுசாதான் தெரியுற. இவ்வளவு நாள் கம்பீரமா இருந்த வம்சி இப்போ நான் பார்க்கிற வம்சி நீ இல்லை. வேலையில ஷார்ப்பா, ஸ்ட்ரிக்ட்டா இருந்த வம்சி இப்போ இல்லை. ஏனோதானோன்னு ஆஃபீஸுக்கு வந்துட்டுப் போற, சில சமயம் வர்றதே இல்லை” என்று வம்சியைப் பார்த்தான் விஜய்.

விஜய் சொல்வது சரிதான் என்பதுபோல வம்சி பதில் ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க, “உன் முகத்துல சந்தோஷத்தைப் பார்த்து நாளாச்சுடா. அதுக்கு நானும் ஒரு காரணம்னு எனக்கு உறுத்துதுடா” என்றான் விஜய்.

“என் மேல ஏன் விஜய் வீணா பழியைப் போட்டுக்குற? நான்தான் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் வந்துட்டேன். என்னால தாமரையோட நிம்மதியே போயிடுச்சு. நான் காதலிச்ச பொண்ணு வேற ஒருத்தனைக் காதலிக்கிறான்னு தெரிஞ்ச அப்பவே என் மனசு உடைஞ்சு போயிடுச்சு” என்று கண்கள் மூடி பெருமூச்சு விட்டவன், “இப்படி அவளைக் கூட்டிட்டு வந்து என்கூட வெச்சு கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்னு எனக்கு வருத்தமா இருக்கு. என்னால எதுவுமே பண்ண முடியலை. தாமரை என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணியிருந்தா கூட அவ மனசை மாத்தி என்னைப் பிடிக்க வெச்சிருப்பேன். ஆனா அவ மனசு முழுக்க நீ இருக்க விஜய். அந்த இடத்தை என்னால எப்படி பூர்த்தி செய்ய முடியும்?” என்றான்.

வம்சியின் ஆதங்கத்தைக் கேட்டு உள்ளம் வலித்தாலும், அவன் சொன்னதற்குப் பதில் பேச முடியாமல் விஜய் அமர்ந்திருக்க, “போதும் அவ பட்ட கஷ்டமெல்லாம். நாளைக்கு டைவோர்ஸ் ஹியரிங் வருது கோர்ட்ல. நான் வந்து தாமரையை விவாகரத்து பண்ண எனக்கு முழுச் சம்மதம்னு சொல்லப்போறேன்” என்றான் வம்சி.

“டேய் வம்சி, தயவுசெய்து அப்படி மட்டும் பண்ணிடாத. நீ இன்னமும் தாமரையைக் காதலிச்சிட்டு இருக்கேன்னு எங்க எல்லாருக்குமே தெரியும். அவசரப்பட்டு அப்படி சொல்லி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. கொஞ்சம் பொறு, நான் தாமரைகிட்ட பேசி புரிய வைக்கிறேன்” என்றான் விஜய்.

“வேணாம் விஜய், அது ‘வேஸ்ட் ஆஃப் த டைம்’. தாமரை அவங்க வீட்லயாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமே. இங்க தினம் தினம் என் பொண்டாட்டியா நம்ம வீட்ல இருந்து சகிச்சுக்கிட்டு இருக்கா. அவளை அப்படி பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. அவ எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா? எவ்வளவு சந்தோஷமா பட்டாம்பூச்சி மாதிரி சுதந்திரமா இருந்தா. நான் அப்படிப்பட்டவளைக் கல்யாணம் பண்ணி ஒரு கூட்டுக்குள்ள அடைச்சு வெச்ச மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது விஜய்” என்றான்.

“வம்சி, இருந்தாலும்…” என்று விஜய் பேச, “விஜய், நீ எங்களைப் பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு உனக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சு. உன்னோட வாழ்க்கையை நீ சந்தோஷமா வாழப் பார். எங்களைப் பத்தி நினைச்சு நீ ஃபீல் பண்ணாத. நான் வரேன்” என்று வம்சி எழுந்து வெளியே செல்லப் போக, “டேய், நில்லுடா!” என்று அந்த அறை அதிரும்படி கத்தினான் விஜய்.

வெளியே செல்லப் போனவன் கதவைச் சாத்திவிட்டு விஜய்யிடம் வந்தவன், “என்னடா? என்ன வேணும் உனக்கு இப்போ?” என்றான் கோபமாக.

“நாளைக்கு விஷயம் நாளைக்குப் பார்த்துக்கலாம். இப்ப நான் கேட்கிற கேள்விக்கு உன் மனசைத் தொட்டு உண்மையா பதில் சொல்லு” என்றான் விஜய்.

“என்ன சொல்லணும்? என்னடா சொல்லணும்? தாமரையை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லணுமா? அவளை நான் மனசாரக் காதலிக்கிறேன்னு சொல்லணுமா?” என்றான் வம்சி.

“அதை நீ சொல்லித்தான் தெரியணும்னு எனக்கு அவசியமில்லைடா. உன் மனசு முழுக்க தாமரை மட்டும்தான் இருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றான் விஜய்.

“அப்புறம் என்னடா நான் சொல்லணும்? என்ன கேட்கணுமோ கேளு” என்று விஜய்யின் சட்டையைப் பிடித்தான் வம்சி.

“ஒருவேளை கோர்ட்ல நீ தாமரை வேண்டாம்னு சொல்லி, ஆனா தாமரை உன் கூட வாழ இஷ்டம்னு சொல்லிட்டா என்னடா பண்ணுவ?” என்றான் விஜய்.

“அது கண்டிப்பா நடக்காது. தாமரை சத்தியமா என் கூட சேர்ந்து வாழ்றேன்னு சொல்ல மாட்டா. ஏன்னா, அவ அந்த அளவுக்கு உன்னைக் காதலிக்கிறா. நான் கட்டின தாலியை வேற வழியே இல்லாமதான்டா இன்னமும் வெச்சிருக்கா. பாவம்டா அவ. போதும், எவ்வளவு கஷ்டம்தான் படுவா? அவ இஷ்டம்போல இருக்கட்டும். நான் அவளை இனி வற்புறுத்தவோ, பிடிக்கவோ விரும்பல” என்றான் வம்சி.

“உனக்கும் தெரியும், கண்டிப்பா தாமரை என் கூட சேர்ந்து வாழ்வேன்னு சொல்ல மாட்டான்னு” என்று கிளம்பினான். அவன் கேபின் கதவைத் திறந்தவன், விஜய்யைத் திரும்பிப் பார்க்காமலேயே, “அப்படி மட்டும் தாமரை கோர்ட்ல என் கூட சேர்ந்து வாழ சம்மதம்னு சொல்லிட்டா, இந்த உலகத்திலேயே பாக்கியசாலி, சந்தோஷமானவன் நானாதான் இருப்பேன். அவளை என் உள்ளங்கையில வெச்சுத் தாங்குவேன்” என்று விறுவிறுவென வெளியேறினான்.

வம்சி சொன்னதைக் கேட்டபடி அப்படியே நின்று இருந்தான் விஜய்.

EPISODE 2-49

வம்சியும் தாமரையும் கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர். இருவரும் ஒரு மௌனத்தில் இருந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை, பேசவும் இல்லை. அவர்கள் பின்னால் வந்த உறவினர்கள் மொத்தமும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தனர்.

விஜய்யும் இனியாவும் கோர்ட்டில் வழக்கு முடிந்ததும் அனைவரும் ஒன்றாக வெளியே வந்தனர். விஜய் இனியாவிடம், “நீ வீட்டுக்குக் கிளம்பு. எப்படியும் வம்சி இன்னும் கொஞ்ச நாள் ஆபீஸ் பக்கம் வர மாட்டான். எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நான் ஆபீஸ் கிளம்புறேன்,” என்றான்.

“சரிங்க சார், நீங்க கிளம்புங்க. நான் ஆட்டோ பிடிச்சுப் போய்க்கிறேன்,” என்றாள் இனியா.

“ஆட்டோவா? நாங்க எதுக்கு இருக்கோம்? டேய் விஜய், நீ வேண்டுமானால் கிளம்பு. நாங்கள் இவளைக் கூப்பிட்டு நம்ம வீட்டுக்குப் போறோம். நீ ஆபீஸ் முடிஞ்சு சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வந்து கூப்பிட்டுக்கோ இவளை,” என்றார் மீனு. இனியாவின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து நிறுத்திவிட்டுச் சொன்னார்.

“இல்லை பாட்டி, அவ மாத்திரைகள் சாப்பிடணும்,” என்றான் விஜய்.

“அதுக்கு என்ன, நம்ம ஆட்களில் யாரையாவது விட்டு எடுத்துட்டு வரச் சொல்லிக்கிறேன். நீ கிளம்புடா,” என்றவர், தூரத்தில் மௌனமாக நின்றிருந்த தாமரையைப் பார்த்தார். “அவ எப்படியும் இனி நம்ம வீட்டுக்கு வரப் போறதில்லை. எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்குடா, தாமரை இல்லாம,” என்று அவளைப் பார்த்து வருத்தப்பட்டவர், “இன்னைக்கு மட்டுமாச்சும் உன் பொண்டாட்டியை கூப்பிட்டுப் போறேண்டா. இனியா இருந்தா ஏதாவது என்கிட்டப் பேசிட்டிருப்பா, மனசு கொஞ்சம் நல்லா இருக்கும்,” என்றார்.

அவர் அப்படிச் சொன்ன பிறகு விஜய்யால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. “சரி பாட்டி, கூப்பிட்டுப் போ. ஆனா, அவளுக்கு நேரத்துக்குச் சாப்பிட ஏதாவது கொடுத்துடு,” என்றவன் இனியாவை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு ஆபீஸ் புறப்பட்டான்.

அதை தூரத்தில் நின்று பார்த்த தாமரைக்கு நெஞ்சம் முழுவதும் வலியோடு விஜய்யைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அவள் அருகில் வந்த வினோ, “அக்கா, வா போலாம்,” என்று அவள் கை பிடித்து அழைத்தாள்.

“உம்,” என்றவள் திரும்பி அவளுடன் செல்ல, தாமரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் வம்சி.

அவன் அருகில் வந்த வீரா, வம்சியின் தோளைத் தொட்டு அவனை கடந்தபோது, அவர் பின்னே அதிதியும் விக்ரம் மீனுவும், அவர்களுடன் இனியாவும் சென்றாள்.

சென்றவள் வம்சியைத் திரும்பிப் பார்த்து வருத்தப்பட்டாள். “பாட்டி, நான் வேணும்னா தாமரை அக்காகிட்டப் பேசிப் பார்க்கட்டுமா? அவங்க என்கிட்ட நல்லா பேசுவாங்க,” என்றாள் இனியா.

“நீ ஒண்ணும் பேச வேண்டாம். அதான் அவ கோர்ட்டுல எல்லாம் சொல்லிட்டாளே, இனி பேசுறதுக்கு ஒண்ணும் இல்லை. முதல்ல நீ வா,” என்று இனியாவின் கையைப் பிடித்து காரில் ஏற்றியவர், “நீங்க முன்னாடி போங்க, நான் வம்சியோட கார்ல வரேன்,” என்று அவர்களை அனுப்பிவிட்டுத் திரும்பி வம்சியைப் பார்த்தார். அவன் சோர்ந்த முகத்தோடு, கோர்ட் வாசலில் வம்சி மட்டும் தனியே நின்றிருந்தான்.

அவன் பின்னால் வந்த தேவ், வம்சியின் தோளை ஆறுதலாகத் தொட்டவர், “சரி மாப்பிள்ளை, அப்போ நாங்க கிளம்புறோம்,” என்றார்.

“சரி மாமா,” என்றான் வம்சி.

அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மீனு, “டேய் வம்சி, இன்னும் எவ்வளவு நேரம் தான் அவளையே பார்த்துட்டு இருப்ப? வந்து வண்டியை எடுடா,” என்று வந்து அவன் காரில் ஏறி அமர்ந்தார்.

அவர் சொல்வதை காதிலேயே வாங்காதவன், தாமரை ஏறிய காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“டேய் உன்னைத்தான்டா, வாடா வந்து வண்டியை எடு. எனக்கு ரொம்பப் பசிக்குது,” என்று மீண்டும் வம்சியை அழைத்தார்.

அவரை முறைத்தவன் டிரைவர் சீட்டில் வந்து ஏறிக்கொண்டே, “என்ன கிழவி? வந்துட்டா? தாமரை கிளம்பின அப்புறம் நாம கிளம்பினால் போதாதா?” என்றான் எரிச்சலாக. இன்று கடைசியாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் பேசினான்.

“என்னடா நீ? உனக்காக காலையில் இருந்து பல்லைக்கூடத் தேய்க்காமல் எல்லோரும் கோர்ட்டுக்குக் கிளம்பி வந்தோம். வந்தாச்சு, எல்லாம் முடிஞ்சாச்சு. இனி என்னடா உனக்கு?” என்றவர், “முதல்ல வண்டியை ஸ்டார்ட் பண்ணு. வீட்டுக்குப் போகலாம். அப்புறம் பசியில நான் மயங்கி விழுந்துட்டா உன் தாத்தாவுக்கு நீதான் பதில் சொல்லணும்,” என்றார்.

“மயக்கம்தானே, பரவாயில்லை. வந்தா மயங்கிடு. நான் தாமரையை ஒருமுறை பார்த்துட்டுதான் வருவேன்,” என்றான் பிடிவாதமாக.

“ஏண்டா, உன் பாட்டிக்கு மயக்கம் வருதுன்னு சொல்றேன். என்னை கவனிக்காமல், உன்னை விட்டுட்டுப் போறவளைப் பத்தி பேசிக்கிட்டு இருக்க. அறிவு கெட்டவனே! இப்போ மட்டும் நீ வண்டியை எடுக்கல…” என்று அவர் மிரட்ட,

“என்ன பண்ணுவ கிழவி? நான் காரை ஸ்டார்ட் பண்ண மாட்டேன். தாமரை இங்க இருந்து கிளம்பட்டும். அதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம்,” என்றான் பிடிவாதமாக.

“ம்ஹும், இது வேலைக்கு ஆகாது,” என்றவர், கார் கதவைத் திறந்து வெளியே இறங்கினார்.

“அடேய் தேவ், ஒரு நிமிஷம் நில்லுடா,” என்று அவர்கள் கார் அருகில் வேகமாகச் சென்றவர், “ஏய் தாமரை, காரை விட்டு கீழே இறங்குடி,” என்றார் மூச்சு வாங்க.

“பாட்டி, என்ன? என்ன ஆச்சு?” என்று பதற்றமாக தாமரையும் மற்றவர்களும் காரை விட்டு கீழே இறங்க,

“ஏன்டி, அதான் எங்களை விட்டுப் பிரிஞ்சு போறதுன்னு முடிவு பண்ணிட்டேல்ல? அப்புறம் அவனை மட்டும் ஏன்டி அம்போன்னு விட்டுட்டுப் போற?” என்றார்.

“பாட்டி, அது… நான் என்ன செய்வேன்?” என்றாள் தாமரை தயக்கத்தோடு.

“நீ எதுவும் செய்ய வேண்டாம். ஒழுங்காக மரியாதையாக அவனை உன் வீட்டுக்குக் கொண்டு வந்து விடச் சொல்லிடு. எனக்கு மயக்கம் வருதுன்னு சொல்றேன். நீ கிளம்பினதும் தான் கிளம்புவேன்னு மயக்கம் வந்தா பரவாயில்லை, பார்த்துக்கலாம்னு சொல்றான். ம்ஹும், அவன் கூட நான் போனா அவ்வளவுதான், என்னைச் சுடுகாட்டுக்குதான் கூப்பிட்டுப் போவான். நீயே அவன் கூட கார்ல வா,” என்றார்.

“பாட்டி, நான் எப்படி?” என்று காருக்குள் பாவமாக அமர்ந்திருந்த வம்சியை தயங்கியபடி பார்த்துக் கேட்டாள்.

“நீ எப்படின்னா என்னடி அர்த்தம்? அதான் கோர்ட்டுல உனக்கும் அவனுக்கும் விவாகரத்து வேண்டாம், ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறேன்னு சொன்னேல்லடி? அப்புறம் என்ன? அவன் கூட ஒண்ணா கார்ல போக இவ்ளோ யோசிக்கிற? வீட்ல இருந்து கிளம்பி அவன் கூடதானே வந்த?” என்றவர், “ஏய் வினோ, தள்ளி உட்காருடி,” என்று அவளைத் தள்ளிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்து கதவைச் சாற்றிவிட்டு, “டேய் வண்டியை எடுடா. அவ வம்சி கூட வந்திடுவா,” என்றார் மீனு.

தேவ் காருக்குள் இருந்து தாமரையைப் பார்த்தான்.

“அவளை ஏன்டா பார்த்துட்டு இருக்க? அதான் அவ புருஷன், என் பேரன் வம்சி இருக்கானே, அவளைப் பத்திரமாக கூப்பிட்டு வருவான். நீ முதல்ல வண்டியை எடு. போற வழியில் என்னை என் வீட்ல இறக்கி விடு,” என்று அவசரப்படுத்தினார்.

“பாட்டி, நானும் உங்க கூடவே வரேனே,” என்று கார் கதவைத் திறக்கப் போனவள் கையைத் தட்டிவிட்டவர், “இங்க பாருடி, இந்தக் கார்ல இடம் இல்லை. எங்க நாலு பேருக்கு மட்டும்தான் இடம் இருக்கு. நீ அவன் கூடவே வா,” என்றார்.

முன் இருக்கையில் தேவ் டிரைவர் சீட்டில் இருந்தார். அவர் அருகில் யாரோ அமர்ந்திருந்தார். அவர் மீனுவின் நோக்கத்தை அறிந்தவர். “தேவ், நீ வண்டியை வீட்டுக்கு விடு. பாட்டி ஒரு முடிவோடதான் இருக்கு,” என்றார்.

மீனுவின் அருகில் அமர்ந்திருந்த வினோ, “ஏன் பாட்டி? அக்கா தான் நம்ம கூட வரேன்னு சொல்லுது இல்ல? கார்ல இவ்ளோ இடம் இருக்கு, இன்னும் ஒரு ஆள் உட்காரலாம்,” என்றாள்.

“ஏய், எனக்கு மயக்கமா வருதுடி. கிறுகிறுன்னு தலையைச் சுத்துது. நான் படுத்துட்டே வரேன். நீ வேணும்னா இறங்கி ஆட்டோ பிடிச்சிட்டு வரியா? இல்லை நான் இப்படியே உன் தோளில் சாய்ஞ்சிட்டு வரட்டுமா?” என்றார்.

‘ஆஹா, கிழவி என்னையும் கார்ல இருந்து இறக்கப் பாக்குது. அக்காவுக்குப் பாவம் பார்த்தா இந்த வெயிலில் என்னை அலைய விட்டுடும் போலையே,’ என்று நினைத்த வினோ, “ஐயோ பாட்டி, உனக்கு மயக்கம் வருதா? வா, வா, வந்து என் தோளில் சாய்ஞ்சுக்க,” என்று மீனுவை இழுத்துத் தோளில் போட்டவள், “அப்பா, போலாம். பாவம், பாட்டிக்கு ஏதும் ஆகப் போகுது,” என்று தேவ்வை அவசரப்படுத்தினாள்.

‘எல்லோரும் தாமரையை கார்ல ஏத்தக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இனி நான் பேசி என்ன ஆகப் போகுது?’ என்று நினைத்த தேவ், “தாமரை, நீ மாப்பிள்ளை கூடவே வந்திருமா,” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

“அப்பா!” என்று அவள் அழைத்தது காற்றோடுதான் போனது. புடவைத் தலைப்பைத் திருகிக்கொண்டே எப்படி வம்சியுடன் காரில் செல்வது என்று தயங்கியபடி அவள் திரும்ப, தாமரை தயக்கத்தோடு நின்று இருப்பதைப் பார்த்தவன், அவளுக்குச் சிரமம் கொடுக்காமல் காரை ‘சடன் பிரேக்’ போட்டு அவள் முன் நிறுத்தினான். வம்சி, “ஏறு குட்டிமா,” என்று அவளுக்குச் சிரித்த முகமாக காருக்குள் இருந்தே அவள் அமரக் கதவைத் திறந்துவிட்டான்.

‘வம்சியுடன் வாழ்க்கை முழுக்கப் பயணம் செய்ய முடிவெடுத்துவிட்டோம். இன்று இந்தக் காரில் பயணம் செய்ய என்ன தயக்கம்?’ என்று யோசித்த தாமரை, ஒருவித சங்கடத்தோடு உள்ளே ஏறி அமர்ந்தவள், “போலாம் அம்மு,” என்றாள் தலையைக் குனிந்துகொண்டு அவனைப் பார்க்காமலேயே.

சந்தோஷமாக காரை ஸ்டார்ட் செய்த வம்சி, “குட்டிமா, நேரா உன் வீட்டுக்குத்தான் போகணுமா?” என்றான் ஏக்கமாக.

அவள் புரியாமல் வம்சியை நிமிர்ந்து பார்க்க, இத்தனை நாள் பொலிவிழந்து இருந்த அவன் முகம், தான் அவனுடன் வாழ சம்மதம் என்று சொன்னதுமே பிரகாசமானதைக் கண்டுகொண்டவள், அதை வெளிக்காட்டாமல், “ஆமா, வீட்டுக்குத்தான் போகணும்,” என்றாள்.

“இல்லை குட்டிமா, நம்ம கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் உன் வீட்டுக்குப் போலாமே,” என்றான் கெஞ்சுதலாக அவளைப் பார்த்து.

அவன் பரிதவிக்கும் விழிகளைக் கண்டவளுக்கு மறுப்புச் சொல்ல மனம் வரவில்லை. “சரி,” என்று தாமரை தலையாட்டி முடித்திருக்கவில்லை, அந்தக் கோர்ட் வளாகத்தில் இருந்து வம்சியின் கார் சீறிப்பாய்ந்தது.

EPISODE 2- 50 FINAL 

குட்டிமா, குட்டிமா என்று குழைந்து தள்ளினான் வம்சி. அவள் விவாகரத்து வேண்டாம் என்று சொன்னதிலிருந்து அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு.

அப்புறம் ஏன்டா கோர்ட் வாசல்ல முகத்தை தூக்கி வெச்சிருந்தேன்னு நீங்க நினைக்கிறது எனக்கு நல்லாவே கேட்குது. அது ஏன் தெரியுமா? வாங்க, என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்.

வம்சி, தாமரை இருவரின் குடும்பமும் தாமரை என்ன சொல்லப் போகிறாள்னு பதட்டத்தோடு அவர்கள் முன் இருந்தவளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க ரெண்டு பேரும். இப்போ அவசரப்பட்டு முடிவெடுத்தது அப்புறம் வருத்தப்படக் கூடாது” என்றார் ஜட்ஜ்.

“இல்லை சார், தாமரை எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்றான் வம்சி.

“அவளே இன்னும் எதுவும் சொல்லல. அதுக்குள்ள இவன் வந்து ஏன் வான்டடா தலையைக் கொடுக்குறேன்னு” என்று மீனு புலம்பினார்.

“ஷ் அமைதியா இரு மீனு. இது கோர்ட்” என்று விக்ரம் அவளை அதட்டினார்.

“என்னப்பா நீ? எல்லாரும் விவாகரத்துக்கு வரும்போது பொண்ணு சொல்றதை பையனோ, பையன் சொல்றதை பொண்ணோ கேட்க மாட்டேன்னு சொல்வாங்க. ஆனா நீ விவாகரத்து ஆகப்போறது தெரிஞ்சும், அந்தப் பொண்ணு என்ன சொன்னாலும் சம்மதம்னு சொல்ற. உன்னைப் பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருக்கு” என்றார்.

வம்சி அமைதியா அவரைப் பார்த்தான். அவன் மனதில், ‘தாமரை மட்டும் டைவர்ஸ் வேணாம்னு சொல்லிட்டா நான் காலம் முழுக்க அவ காலடியிலேயே இருப்பேன்’னு தோன்றியது.

“சரி, சொல்லும்மா. அதான் உன் புருஷன் சொல்லிட்டானே. நீ என்ன முடிவெடுத்தாலும் அவனுக்கு சம்மதம்னு” என்றார்.

அனைவரும் தாமரையின் முடிவு என்னவா இருக்கும்னு அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, அவள் வம்சியை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவனோ ஆயிரம் உணர்வுகளோடு தாமரையைப் பார்த்த்துக்கொண்டு இருந்தான்.

கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தாள் அவள். மனக்கண் முன் எப்போதும் விஜய் தான் வந்து போவான். ஆனா இன்று ஏனோ அவளுக்கு எதுவுமே தோன்றல. யாரும் வரவும் இல்லை.

மெல்ல கண்களைத் திறந்து வம்சியையும் அவள் குடும்பத்தையும் ஒரு முறை திரும்பிப் பார்த்துட்டு, “எனக்கு இவங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“ஏன்ம்மா? என்ன பேசணும்? நீ முடிவெடுத்துட்டியா?” என்றார் ஜட்ஜ்.

“எடுத்துட்டேன் மேடம்” என்றாள்.

“அப்புறம் என்ன? அவங்ககிட்ட பேசணும்?” என்றார்.

“அவ தான் எங்ககிட்ட பேசிட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்றா இல்ல? பேசிட்டு வந்து சொல்லட்டுமே. அதுக்குள்ள நீங்க ஏன் அவளை நோண்டுறீங்க?” என்று பொறுமை இழந்து மீனு எழுந்து ஜட்ஜிடம் பேச,

“ஏம்மா பாட்டி? நான் இப்போ என்ன சொல்லிட்டேன்?” என்று ஜட்ஜ் கோபிக்க,

அவரை இழுத்து தன் அருகில் அமர வைத்த விக்ரம், “பேசாம இருடி” என்று அவளை அதட்டி அமர வைத்தார்.

“தாமரை, நீங்க போய் பொறுமையா உங்க குடும்பத்துக்கிட்ட பேசிட்டு வாங்க” என்று அவளை அனுப்பி வைத்தவர், தனக்கும் பிரேக் வேணும்னு எழுந்து சென்றுவிட்டார்.

தாமரை தயக்கத்தோடு அனைவரையும் பார்க்க, “வா தாமரை” என்று அதிதி அவளை அழைக்க, ஒருவித தயக்கத்தோடு தான் அவர்களிடம் சென்றாள் தாமரை.

“என்ன தாமரை? எங்க கிட்டே என்ன பேசணும்?” என்றார் யாரா.

விஜய்யைப் பார்த்தவள், அவன் அருகில் நின்று இருந்த இனியாவையும் பார்த்தாள். இனியாவுக்கு தாமரை என்ன பேசப்போகிறாள்னு எதிர்பார்ப்பு. விஜய்யோ முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் நின்று இருந்தான்.

“நானும் விஜய் மாமாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினது உங்க எல்லாருக்குமே தெரியும்” என்றாள்.

“அதான் தெரியுமே. அது தெரிஞ்சிருந்தா நான் ஏன் உன்னக்கு வம்சிக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேன்?” என்றார் விக்ரம்.

“சும்மா இருங்க. அவளே ஏதோ சொல்ல வரா. எந்த நேரத்துல என்ன பேசுறீங்க? அதுவும் கோர்ட்ல வெச்சிட்டு” என்று அவரை அதட்டினார் மீனு.

“பாட்டி, விடு தாத்தாவை ஏன் திட்டுற?” என்றவள், “விஜய் மாமா வேற கல்யாணம் பண்ணி மனசை மாத்திக்கிட்டு இனியாவோட வாழ ஆரம்பிச்சுட்டார். ஆனா என்னால இத்தனை நாளா விஜய் மாமாவைப் பத்தின நினைப்பை மறக்க முடியல” என்று வம்சியைப் பார்த்தாள்.

அவள் சொன்னது கேட்டு வலியோடு அவளைப் பார்த்தான் வம்சி.

“சரிடி, எது எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சது தானே? நீ சொல்ல வந்ததை நேரடியா சொல்லு” என்றார் யாரா.

“அம்மா, இப்போ நான் ஏன் இந்த விவாகரத்து வேணும்னு கேட்டேன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அப்படி இருக்க, அப்போ நானும் அம்முவும் அத்தை, மாமா, தாத்தா, பாட்டி கூட மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வாழுறதா இருந்தா, அது எனக்கு ஒரு மாதிரி சங்கோஜமா இருக்கும். என்னால அம்முகூட நார்மலா பேசக் கூட முடியாது” என்றாள்.

“என்னடி சொல்ற? எனக்கு ஏதும் புரியல” என்றார் அதிதியும், மீனுவும்.

“நானும் அம்முவும் தனியா போறோம். நாங்க ஒண்ணா இருக்கிறதைப் பார்க்கும்போது உங்களுக்கு தோணலாம், ‘விஜய் மாமாவைக் காதலிச்ச நான் எப்படி அம்மு கூட சகஜமா இருக்க முடியுது?’னு. நீங்க யோசிக்கலாம். அதனால…” என்று அவள் இழுக்க,

அவள் என்ன சொல்கிறாள்னு யாருக்கும் புரியலனாலும், தாமரை விவாகரத்து வாங்கப்போவது இல்லைனு விஜய்க்குப் புரிஞ்சுட, வம்சியின் கையைப் பற்றி இழுத்தவன், “என்ன? யாருக்கும் ஏதும் புரியலையா?” என்றான்.

“இல்லைடா. இவ என்ன கமல்ஹாசன் படத்துல வர்ற மாதிரி புரியாம பேசுறா?” என்றார் மீனு.

“ஐயோ பாட்டி! தாமரை வம்சி கூட சேர்ந்து வாழணும்னு முடிவெடுத்துட்டா. ஆனா அவளுக்கு உங்க எல்லார் முன்னாடியும் அவன்கூட சகஜமா இருக்க முடியாதுனு சொல்ல வரா” என்றான் மகிழ்ச்சியாக.

“என்னடா சொல்ற? அப்டியா?” என்று ஆச்சர்யமானவர்கள், “ஏண்டி? இதை நேரடியா சொல்ல வேண்டியது தானே?” என்ற மீனு,

“இப்போ நீ அவன்கூட சந்தோஷமா இருக்கணும்னா நாங்க என்னடி பண்ணனும்?” என்றார் மீனு.

தயக்கத்தோடு இன்னும் அதிர்ச்சி மாறாமல் இருந்த வம்சியை ஒருமுறை பார்த்துவிட்டு, “நானும் அம்முவும் நம்ம வீட்டுக்கு வரல. நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் தனியா இருக்கோம்” என்றாள்.

“அவ்ளோ தானே? இருந்துகோ. உனக்கு எப்போ எல்லார் கூடவும் சகஜமா பேச முடியுமோ, அப்போ நம்ம வீட்டுக்கு வந்துடு” என்று வீரா சிரித்தமுகமாக கூற, அனைவர் முகத்திலும் தாமரையின் முடிவில் மகிழ்ச்சி குடிகொண்டது.

ஆனால் வம்சி மட்டும் நம்பமுடியாமல் பேய் அறைந்தவன் போல அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என்னடா பாத்துட்டே இருக்க? அவகிட்ட பேசு” என்று விஜய், தாமரையிடம் வம்சியைத் தள்ளி விட்டான்.

அவளை அதிர்ச்சி மாறாமல் பார்த்தவன், “நிஜமா தான் சொல்றியா குட்டிமா?” என்றான் தாமரையின் கண்களைப் பார்த்து.

அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல், “ஆமாம்” என்று தலையசைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

“ஐயோ குட்டிமாஆஆ… தேங்க் யூடி குட்டிமா” என்று அந்த வளாகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குக் கத்தியவன், அடுத்த நொடி தாமரையைத் தலைக்கு மேலே தூக்கி சுற்ற ஆரம்பித்து இருந்தான்.

எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷம். தாமரைக்கோ என்னவோ போல இருந்தது.

“தம்பி, தம்பி போதும். நீங்க உங்க சந்தோசத்தை வீட்ல போய் கொண்டாடுங்க. முதல்ல வந்து ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டுப் போக சொன்னாங்க ஜட்ஜ் ஐயா” என்று அங்கு வந்தார் கோர்ட் ஊழியர்.

மற்ற ஃபார்மாலிட்டீஸ் முடித்துவிட்டு தான் வம்சியும் தாமரையும் கோர்ட்டை விட்டு கிளம்பி இருந்தனர்.

கோர்ட்டில் இருந்து வெளியே எங்கேயாவது போகலாம்னு தாமரையை வம்சி அழைத்துச் சென்றது, ஊரைச் சுற்றிப் பார்க்கவோ, மனம்விட்டுப் பேசவோ அல்ல. அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் போக வீடு பார்க்கிறதுக்கு தான்.

முதல் வீட்டிற்கு லைத்து செல்லும்போது அதிர்ச்சியா அவனைப் பார்த்தவள், அடுத்தடுத்த வீடுகளை அவன் காண்பிக்கையில், வம்சியின் ஆர்வத்தையும் தனக்காக அவன் மெனக்கெடுவதையும் பார்த்து அசந்து போனாள். அவள் முகத்தில் எழும் உணர்வுகளையும், உதடு சுளிப்பையும், புருவம் சுருங்குவதையும் வெச்சே அந்த வீட்டை ரிஜெக்ட் செய்து இருந்தான்.

இது எப்படியோ விஜய்யின் காதுகளுக்கு எட்டி இருக்க, வம்சிக்கு அழைத்த விஜய், சிட்டியின் பிரதான இடங்கள் சிலதைச் சொல்லி அதில் எது பிடித்திருக்கிறதோ அதை ஓகே செய்ய சொல்லி இருந்தான்.

“அம்மு, முன்ன பார்த்த வீடு எல்லாம் அபார்ட்மென்ட் வீடா இருந்துச்சு. ஆனா இப்போ என்ன வில்லா மாதிரி வீடா காட்டுற?” என்றாள்.

“இது கொஞ்சம் பிரைவசியா இருக்கும் குட்டிமா” என்று அவளை அழைத்துச் சென்றவன், பார்த்த 3வது வீட்டை ஓகே செய்து இருந்தான்.

விஜய் அந்த வீட்டை வாங்கித் தருவதாகக் கூற, ஆனா வம்சியோ தானே அந்த வீட்டை வாங்கி தாமரைக்குப் பரிசளிப்பதாகச் சொல்லிவிட்டான். மறந்தும் கூட விஜய்யின் ஞாபகம் தாமரையை வருத்திவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான் வம்சி.

இரவு நேரம் கழித்துதான் தாமரையை தேவ் வீட்டில் டிராப் செய்தான்.

“குட்டிமா, நம்ம வீட்டுக்கே போலாம்டி” என்று குழைந்தான்.

அவன் இப்படி எல்லாம் நடந்து கொள்வது தாமரைக்கு தான் ஏதோ போல இருந்தது.

“இல்லை. புது வீட்டுக்கு போற வரை நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

அவனும் தேவ் வீட்டில் இரவு தங்கிக்கொள்ளலாம் தான். ஆனா ஒரே நாளில் தாமரையைப் படுத்தியது போதும் என்பர் அமைதியாக வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

சரியாக 48வது நாள் வம்சி, தாமரையின் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தேறியது. விஜய், இனியா, வம்சி, தாமரை, ரிசப்ஷனை கேன்சல் செய்துவிட்டு, கிரகப்பிரவேசத்திற்கு மொத்தமா அனைவரையும் அழைத்து விடலாம்னு முடிவு செய்து, இந்த ஏற்பாடு நடந்தது.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இந்த ஒரு மாதத்தில் தாமரை கொஞ்சம் கூச்சம் தளர்ந்து வம்சியிடம் சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தாள். இரவு உணவு முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டு இருந்தனர். விஜய், இனியாவை அழைத்துக்கொண்டு வம்சி, தாமரை இருவரிடமும் வந்தான்.

அவனைப் பார்த்ததும் முன்பு போல அழத் தோன்றல தாமரைக்கு. மனது மாறியதா? விஜய் மீதான காதலை மறந்ததா? என்று தெரியல. ஆனா அவளால் இதைக் கடந்து வர முடிந்தது.

அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், இனியாவின் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்து நிற்க வைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.

“இனி டைம் ஆச்சு. போலாம். நீ ரெஸ்ட் எடுக்கணும்” என்றான்.

“போலாம் சார்” என்றவள், “சரிக்கா, நாங்க கிளம்பறோம்” என்றாள்.

“வம்சி” என்று அழைத்தான் விஜய்.

“சொல்லுடா” என்றான்.

“உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சினை வந்தா, ‘இன்னும் விஜய்யை மனசுல வெச்சுட்டு தான் பேஸ்ரியா?’னு நீ தாமரைக்கிட்டேயும், ‘இதுவே விஜய்யா இருந்திருந்தா இப்படி இருக்கும்’னு நீ வம்சியையோ பேசிடக் கூடாது. இங்கே ரெண்டு பேருக்கு இடையில் மறந்தும் என்னோட நினைவுகள் எதுவும் இல்லாமப் பார்த்துக்கோங்க” என்றான்.

“என்னடா இப்படி எல்லாம் பேசுற?” என்றான் வம்சி.

“சொல்லத் தோணிச்சுடா” என்றவன், “தாமரை, நீ சந்தோஷமா இருக்கணும்னு நான் என் உயிர் இருக்கிற வரை நினைச்சுட்டே தான் இருப்பேன். இவன் உன்னை ஏதும் சொன்னா உடனே எனக்கு நீ கால் பண்ணு” என்றவன், “நீ கால் பண்ணின அடுத்த நிமிஷம் இங்கே வருவேன். வம்சியோட அண்ணனா, உன்னோட மாமன் பையனா இங்கே வருவேன்” என்றான்.

“அக்கா கூடவே நானும் வருவேன். வம்சி மாமா ஏதாவது உங்களைச் சொன்னா சொல்லுங்க” என்றாள் இனியா.

“எல்லாரும் என்னை வில்லனாவே மாத்திட்டு இருக்கீங்க, புரியுதா?” என்றான் வம்சி.

அதைக்கேட்டு தாமரை சிரித்தாள்.

பின் எல்லோரும் சென்றுவிட, கடைசியாக மீனுவும் விக்ரமும் இவர்களிடம் வந்தவர்கள், “நாங்க தெரிஞ்சோ தெரியாமையோ இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டோம்னு வருத்தப்பட்ட காலம் போய்டுச்சுன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் சந்தோஷமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழனும்” என்றார் விக்ரம்.

“நீங்க ரெண்டு பெரும் எங்களைப் பத்தி கவலையே பட வேணாம். நானும் தாமரையும் சந்தோசமா இருப்போம்” என்றான் வம்சி. தாமரையும் “ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்டினாள்.

“சரிடா. சீக்கிரமே ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசைப் பெத்து கொடுத்துருங்க” என்றார் மீனு.

“நீ இங்கே நின்னு இப்படியே பேசிட்டு இருந்தென்ன அதெல்லாம் எதுவும் வராது” என்றான் நக்கலாக.

அவன் குமட்டில் குத்திய மீனு, “ஐயோ தாமரை! எனக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்குடி” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மீனு நடிக்க,

“உன் நடிப்பை எல்லாம் தாத்தாகிட்டே காட்டு. இப்போ முதல்ல நீ கிளம்பு. இருந்து எங்க டைமை வேஸ்ட் பண்ணாத” என்று அவர்கள் இருவரையும் கார் ஏற்றி வழி அனுப்பிவிட்டு, வேலையாட்களை அடுத்த நாள் வரச் சொன்னவன், கதவைச் சாற்றிவிட்டு உள்ளே வந்தான்.

வந்திருந்த கிஃப்ட்ஸை எடுத்து ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்த தாமரையைப் பார்த்தவன், பின்னிருந்து ஓடிவந்து அவளை இடையோடு கட்டிக்கொண்டான்.

இதைச் சற்றும் எதிர்பாராத தாமரை அதிர்ந்தவள், “அம்மு, என்ன பண்ற? இறக்கி விடு முதல்ல” என்று அவள் கத்தவும், சந்தோஷமாக வந்து அவளை அணைத்தவன் அவள் குரலில் இருந்த கடுமையைக் கண்டு வேகமாக அவளைக் கீழே இறக்கிவிட்டவன், “சாரி தாமரை” என்றான் சோகமாக.

‘ஐயோ முட்டாள்! என்னடி பண்ணிட்டு இருக்க? அம்மு பாவம்! எவ்ளோ ஆசையா வந்து உன்னைக் கட்டிப்பிடிக்கிறான். அதுவும் உன்னோட புருஷன்ற உரிமையில. நீ அவன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறேன்னு சொல்லியும், இத்தனை நாள் கழிச்சு இன்னிக்கு தானே உன்கிட்டே இப்படி நடந்துகிறான்?’

‘அதுக்கு இப்படியா? சொல்லாம கொள்ளாம வந்து கட்டிப்பிடிப்பாங்களா?’

‘ஏண்டி? உன்னை ஆசையா வந்து கட்டிப்பிடிக்கிறான். அப்போ கூட உன்கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு தான் கட்டிப்பிடிக்கணுமா?’ இப்படி அவள் மனம் அவளிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தது.

தாமரையிடம் மன்னிப்பு கேட்டுட்டு, அவள் என்ன சொல்வாளோ என்று அவள் முகத்தைப் பார்த்த வம்சி, இங்கே அவள் தன் மனதோடு போராடிக்கொண்டு இருக்க, அதில் அவள் முகத்தில் எழுந்த உணர்வுகளைப் பார்த்தவன்,

அவளுக்கு டைம் கொடுக்காம அவசரப்பட்டுட்டோமோ என்று நினைத்து வருந்தியவன், “சாரி தாமரை. நான் அவசரப்பட்டுட்டேன். என்னை மன்னிச்சிரு” என்றவன் அங்கிருந்து செல்லப் போக,

“ஐயோ அம்மு! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை” என்றாள் அவசரமாக.

அவள் அப்படி சொன்னதும் திரும்பியவன், “அப்போ ஏன் அப்படி நடந்துகிட்டே?” என்றான்.

“அது நீ திடீர்னு வந்து கட்டிப்பிடிச்சதும் பயந்து போய்ட்டேன். நீ வந்ததை நான் கவனிக்கல அம்மு” என்றாள் சங்கடமாக.

“அப்போ அது தான் பிரச்சினையா? வேற ஏதும் இல்லையே?” என்றான்.

அவள் ‘ம்ஹும்’ இல்லை என்றதும் தான் தாமதம். “அப்போ நான் உன்னைக் கட்டிப்பிடிக்கவா?” என்று அவளை நெருங்கி இருந்தான்.

வம்சியின் இந்தத் தடாலடியில் தாமரை தடுமாற, அவளைப் பார்த்தவன், “என்கூட சேர்ந்து வாழணும்னு தானே டைவர்ஸ் வேணாமான்னு சொன்ன?” என்றான்.

அவள் ‘ஆம்’ என்பது போல அவனைப் பார்க்க, “என்னடி குட்டிமா? பதில் சொல்லேன்டி வாயை திறந்து” என்றான்.

தாமரை அமைதி காக்க, “அப்போ நீ எனக்காக டைவர்ஸ் வேணும்னு சொல்லல. நீ விவாகரத்து வாங்கிட்டுப் போய்ட்டா விஜய் வருத்தப்படுவான்னு தானே டைவர்ஸ் வேணாம்னு சொன்ன?” என்றான் கோபமாக.

“டேய் அம்மு! இப்போ எதுக்குடா விஜய் மாமாவை இதுல உள்ள இழுக்கிற? அவர் போகும்போது என்ன சொல்லிட்டுப் போனாருன்னு உனக்கு மறந்திருச்சா?” என்றாள்.

“அவன் சொன்னது எனக்கு இப்போ தேவையில்லை. இப்போ கூட விஜய் சொல்லிட்டுப் போனது தான் உனக்கு நினைப்புல இருக்கு இல்ல? நான் உன் நினைப்புல கொஞ்சம் கூட இல்லை. அப்படிதானே?” என்று குதித்தான்.

“கடவுளே! அப்படி எல்லாம் இல்லை அம்மு. நீயா ஏன் கற்பனை பண்ணிக்கிற?” என்றாள்.

“நான் கற்பனை பண்ணலடி. நீ தான் நீ தான்! நான் உன் பக்கத்துல வரும்போது எல்லாம் பயந்து விலகிப் போகுற. எதையோ உள்ளுக்குள்ள போட்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறே. இப்படி கஷ்டப்படறதுக்கு நீ பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிருக்கலாம்டி” என்றான் கோபமாக.

“டேய்! மறுபடி டைவர்ஸ் பத்தி பேசுனா அப்புறம் நான் நிஜமாவே உன்னை வேணாம்னு கிளம்பிப் போயிருவேண்டா” என்றாள்.

“போடி போ! உனக்காக நான் எவ்ளோ இறங்கி வரேன். ஆனா நீ என்னைப் பத்தி யோசிக்கக் கூட மாட்டேங்குற” என்றான் கோபம் தணியாமல்.

“ஆமாம்டா! உன்னைப் பத்தி நினைக்காம தான் கோர்ட்ல டைவர்ஸ் வேணாம்னு சொல்லிட்டு வந்தேனா நான்?” என்றவள், “என் மடியில படுத்துட்டு அழுதடா நீ. ‘குட்டிம்மா, என் கூடவே இருடி. என்னை விட்டுப் போயிடாத. தினம் நான் உன் மடியில படுத்துத் தூங்கினா போதும். எனக்கு வேற எதுவும் வேணாம். நான் தினம் தினம் உன் மூஞ்சியில் தான் குளிக்கணும். தூங்குறதுக்கு முன்ன உன்னைப் பாத்துட்டு தான் தூங்கணும்’னு அவ்ளோ சொல்லி அழுது கெஞ்சின. அதனால தான் நான் என் முடிவையே மாத்தினேன்டா” என்று மூச்சு வாங்கப் பேசிட்டு அவனைப் பார்த்தவள்,

“நமக்கு டைவர்ஸ் வாங்குறதுக்கு முந்தின நாள் நைட், உனக்கு நைட் குடிக்க தண்ணி கொண்டு வெச்சுட்டுத் தூங்கப் போலாம்னு உன் ரூமுக்கு வந்தேன். அப்போ நீ என்ன பண்ணினே தெரியுமா?” என்றாள் கோபமாக.

“என்னடி சொல்ற? நானா? நானா இதெல்லாம் பண்ணினேன்? நான் எப்படி உன் மடியில…?” என்றான்.

அவளும் “ஆமாம்” என்று தலையை ஆட்ட, “என்ன சொன்னேன்?” என்றான்.

“என்ன செஞ்சேன்னு கேளுடா” என்று கோபமாகப் படியேறி அவர்கள் அறைக்குச் சென்றாள்.

“ஏய் குட்டிமா! ப்ளீஸ் டி. என்னடி செஞ்சேன்? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லைடி. என்னனு சொல்லு, ப்ளீஸ்” என்று அவள் பின்னாலே கெஞ்சிக்கொண்டு சென்றான்.

“அது எப்படிடா எல்லாரும் தண்ணி முடிச்சதும் நடந்தது எல்லாம் ‘மறந்திருச்சு’னு ஒரே போல சொல்றிங்க?” என்றாள் பெட் ரூம் கதவைத் திறந்து பார்த்து.

“தெரியலடி. அது ரொம்ப முக்கியமா இப்போ?” என்றவன், “ப்ளீஸ்! நான் என்னடி பண்ணுனேன்?” என்றான் பதட்டத்தோடு.

“ம்ம்ம்… என்கிட்டே பேசிட்டே என் பக்கத்துல வந்த” என்றாள்.

“வந்து…?” என்றான் வம்சி ஆர்வமாக.

அவன் ஆர்வத்தைக் கண்டு முறைத்தவள், “சட்டுன்னு என் கால்ல விழுந்துட்டே” என்றாள்.

அதைக்கேட்டு மேலும் அதிர்ச்சி வம்சிக்கு. “என்னடி சொல்ற? நிஜமாவா? எதுக்கு நான் அப்படி செஞ்சேன்?” என்றான் புரியாமல்.

“என் கால்ல விழுந்தது ‘குட்டிமா, ப்ளீஸ். உன்கிட்டே இத்தனை நாள் நான் எதுவும் கேக்கல. என்னோட இந்த ஒரு ஆசையையாவது நீ நிறைவேத்தி வைக்குறியா?’ என்று கெஞ்சின. எனக்கு நீ அப்படி கெஞ்சவும் ஒரு மாதிரி ஆகிருச்சு. என்னனு கேட்டேன். என் கையைப் பிடிச்சு கீழ தரையில் உட்கார வெச்சுட்டு, என் காலைப் பிடிச்சுட்டே என்னைப் பார்த்து, ‘ஒரு முறை ஒரே ஒரு முறை நான் உன் மடியில படுத்துக்கட்டுமா?’னு நீ பாவமா கேட்ட” என்றாள்.

அதைக்கேட்டு வம்சி வாயைப் பிளக்க, “உன்னைக் காதலிச்ச நாள்ல இருந்து உன் மடியில ஒருவடியாச்சும் படுத்துத் தூங்கணும்னு என் ஆசை குட்டிமா’னு சொன்ன” என்றாள்.

“அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றான் நம்பமுடியாமல்.

“அதான் சொன்னேனே. என் மடியில் படுத்துட்டு, ‘என்னை விட்டுப் போயிடாத. எனக்கு நீன்னா அவ்ளோ பிடிக்கும்’ அது இதுன்னு பேசிட்டே இருந்த. ரொம்ப நேரம் நீ புலம்பிட்டே இருந்த. அப்படியே தூங்கிட்ட நீ” என்றாள்.

வம்சி அமைதியாக அவளைப் பார்க்க, “நீ அவ்ளோ பேசினதைக் கேட்டு எனக்கு உன்னை டைவர்ஸ் பண்ண மனசு வரல. நீ பாவம்னு தோணிச்சு. ஆனா இப்போ நீ பேசறதை எல்லாம் பார்த்தா எனக்கு ‘ஏண்டா முடிவை மாத்திட்டோம்?’னு தோணுது” என்றாள் கவலையாக.

“குட்டிம்மா! அப்படி எல்லாம் இல்லைடி. வேணும்னு நான் விஜய்யை இதுல இழுக்கல. நீ அவனை நினைச்சு எனக்காக உன்னை வருத்தப்படுத்திக்கிறதை என்னால பார்க்க முடியல. அதான் அப்படி பேசிட்டேன்” என்றான்.

“நிஜமாவா?” என்றாள்.

அவன் “சத்தியமா” என்றான்.

“அப்போ இனிமேல் நம்ம சண்டைக்குள்ள விஜய் மாமாவை எக்காரணம் கொண்டும் இழுக்கக் கூடாது” என்றாள்.

“சத்தியமா சொல்ல மாட்டேன். அவன் இருக்குற பக்கமே நான் போகக் கூட மாட்டேன்” என்று சத்தியம் செய்யாத குறையாக வம்சி பேசியதும் தான் தாமரைக்கு அப்பாடா என்று இருந்தது.

அவள் மென்மையாக வம்சியைப் பார்க்க, “அப்போ நீ நிஜமாவே நான் கேட்டுக்கிட்டதுனால தான் என் கூட வாழ ஒத்துக்கிட்டியாடி?” என்றான்.

தாமரை “ஆமாம்” என்று தலையை ஆட்ட, “அப்போ நான் ஓகே தானே உனக்கு?” என்று குழைந்தான். அதைப் பார்த்துச் சிரித்தவள், “ம்ம்ம்” என்றாள்.

அவ்வளவுதான்! அவ்வளவே தான்! வம்சிக்குத் தலையும் புரியல, காலும் புரியல. “ஐயோ அம்மு” என்று அவள் கன்னங்களை கைகளில் ஏந்தியவன், “எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமாடி? உண்மையாவே நீ இவ்ளோ தூரம் எனக்காக யோசிச்சிருக்கேன்னு நினைக்குறப்ப, உன் மனசுல நான் இருக்கேன்னு நினைக்குற அப்ப உள்ளுக்குள்ள அவ்ளோ சந்தோசமா இருக்குடி” என்றவன்,

“குட்டிம்மா” என்று அவள் முகத்தை நிமிர்த்தினான். வெட்கம், தயக்கம், கூச்சம், படபடப்பு என்று அனைத்தையும் விழிகளில் தேக்கி வைத்து அவனை ஏறிட்டாள்.

அவள் கண்களைப் பார்த்து, “ஐ லவ் யூடி குட்டிமா” என்றவன், அடுத்த நிமிடம் குனிந்து அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி இருந்தான்.

இதைத் தாமரை எதிர்பார்க்கல. பயத்தில் கைகளை இறுக்க மூடிக்கொண்டாள்.

உடல் நடுங்கியது, படபடவென வந்தது அவளுக்கு.

முத்தம் கொண்டு இருந்தவன், தாமரை வேக வேகமாக மூச்செடுப்பதைப் பார்த்தவன், “குட்டிமா, என்ன ஆச்சு?” என்றான் பதற்றமாக.

அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்னு இருக்க, “சாரிடி குட்டிமா அண்ட் தேங்க்ஸ்” என்றவன் மீண்டும் அவள் இதழில் குடிகொள்ளத் துவங்கினான்.

இதழில் தொடங்கி ஆரம்பித்த அவர்கள் தாம்பத்தியம் அன்று இரவு இருவருக்கும் முதல் இரவாக அரங்கேறியது. வம்சியின் சந்தோஷத்தில் இருந்தே அவன் மனநிலையை உணர்ந்தவள், அவனுக்கு மறுப்பு சொல்லவே இல்லை.

இருவரும் தங்கள் வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தனர் 

என்ன ஃப்ரெண்ட்ஸ்!

ஸ்டோரி படிச்சீங்களா? பிடிச்சிருக்கா? ரெண்டு ஜோடியும் அவங்க வாழ்க்கையைச் சிறப்பா, சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்டாங்க.

எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. விக்ரம், மீனு முதல் தலைமுறை கதை. வீரா, அதிதி இரண்டாம் தலைமுறை கதை. அப்புறம் விஜய், இனியா, வம்சி, தாமரை மூன்றாவது தலைமுறைக் கதை வரை எழுதி முடிச்சிருக்கேன்.

ஒரு பக்கம் வருத்தமா இருக்கு. ஆனா அதே சமயம், இவ்ளோ நாள் நீங்க எல்லாரும் இந்தக் கதைக்குக் கொடுத்து வந்த ஆதரவு எனக்குப் பெரிய பலமா இருக்கு.

இனி அடுத்தடுத்த கதைகளில் உங்களைச் சந்திக்கிறேன்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured