Home Uncategorizedஜமீனின் சின்ன வீடு Promo-1

ஜமீனின் சின்ன வீடு Promo-1

by Layas Tamil Novel
718 views

Promo -1 ஜமீனின் சின்ன வீடு 

அரண்மனை போன்ற வீடு இல்லை அந்த காலத்து ஜமீன் வீடுகளெல்லாம் அரண்மனையே தான். அந்த அரண்மனைக்குள் இருந்து மாப்பிள்ளை கையை பிடித்து அழைத்து வந்து சீர் செய்ய போடப்பட்டு இருந்த பித்தளை முக்காலியில் அமர வைத்தார் தண்டபாணி.

“என்ன மாமோய்… ரெடியா?” என்றாள் தங்கராசுவின் முறைப்பெண் அவன் தாய் மாமனின் மகள் நித்யா.

“ஏன் டி! உன்ர வயசு என்ன என் மவன் வயசு என்ன… ” என்று அவளை கொமட்டில் குத்திய பவளக்கொடி. “நீ மட்டும் என் மவனுக்கு ஏத்த வயசுல இருந்திருந்தா இந்நேரம் உன்னைய தான் டி கட்டி வெச்சிருப்பேன் அவனுக்கு” என்றார்.

“கிடக்குது அண்ணி! அவ சின்ன புள்ள அவகிட்டே சொன்னா என்ன தெறிய போவுது. வாங்க நாம ஆரம்பிக்கலாம்” என்று அவரை அழைத்தார் பாப்பாத்தி.

“சரி சரி விலகுங்களே… ” என்று கூட்டத்தை விலக்கிவிட்டு தன் மகனை எரித்தார் பவளக்கொடி .

வெள்ளை வேஷ்டியும், கை இல்லாத பனியனும் அணிந்து கம்பீரமாக அமர்ந்து இருந்தான் தங்கராசு. அவன் ஆஜானுபாகுவான உடல் கட்டு அந்த பனியனுக்குள் மறைத்து இருந்தான். தன் மகனை கண்டு பெருமை கொண்டவர் “ம்ம்… ஆரம்பிங்கோ… நேரம் போவுதுல்ல..” என்றார்.

“ஏன் கண்ணு! அந்த பனியன அவுத்து போட்டு உக்காரு அப்போ தான் தண்ணி ஊத்தில மஞ்ச பூச எல்லாம் சரியா இருக்கும்” என்றார் பாப்பாத்தி.

“எதுக்கு அத்த இப்படியே ஊத்த வேண்டியது தானே ” என்றான் தங்கராசு.

“ஏன் பனியனை அவுக்க எங்க மாமனுக்கு அம்புட்டு யோசன.. அப்படி அந்த அழகு மேனிய நாங்க பாத்து கண்ணு போட்டுருவோமா… இல்ல என்ற மாமன் தொந்தியும் தொப்பையுமா இருக்கும்னு எங்ககிட்ட காட்ட வெக்கமா இருக்குதா…” என்று கூட்டத்தில் இருந்து அவன் மற்றொரு முறைப்பெண் ஒருத்தி சத்தமிட…

“அடியே! எவ டி அவ என்ற புள்ள தொந்தியும் , தொப்பையுமா இருக்குன்னு சொல்றவ..   என்ற மவன் தோட்டம் தொரவுக்கு சும்மா சுத்தி பாக்கவா போறான். அவனும் மத்த பயலுவ கூட சேர்ந்து வயல் வரப்புல வேலை பாக்குறான் டி.. ” என்று முணுக்கென்று வந்த கோபத்தை வார்த்தைகளில் காட்டி தன் மகன் பெருமையை சொன்ன பவளக்கொடி வேகமாக வந்து தங்கராசு அணிந்து இருந்த பனியனை தலையோடு கழட்டியவர்

“பாருங்க டி ! பன்னாட்டச்சிங்களா.. என் மவன் சும்மா தேக்கு கட்டையாட்டம் உடம்பை கின்னுன்னு வெச்சிருக்கான். இனிமே எவளாச்சும் என் மவன ரவுசு பண்ணுணிங்க .. அப்பறோம் நா சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்க…” என்றவர் .

“பாப்பாத்தி நீ ஆரம்பி டி.. என் மவனை பார்த்து பூரா புள்ளைகளும் பெருமூச்சு விட்டுட்டு கிடக்காளுக.. கண்ணு போற்றுவளுங்க… சீக்கிரம் ஆவட்டும்” என்றார்.

“ஆமா உன்ற மவனை பாத்து நாங்க பெருமூச்சு விட்டு இனி என்ன ஆவப்போவுது. எனக்கும் கல்யாணம் ஆகி புருஷன் இருக்கான். உன் புள்ளைக்கும் வேற கல்யாணம் ஆகப்  போவுது” என்று ஒருத்தி பெருமூச்சோடு தங்கராசாவுவின் உடற்கட்டை பார்வையாலேயே மேய்ந்த படி குரல் கொடுக்க..

“ஏய் செல்லாயி! இப்பவும் ஒன்னும் கேட்டு போவல .. நீ ஊன்னு மட்டும் சொல்லு உன்னை என் சின்ன வீடா வெச்சுக்கிறேன்” என்று கண்ணடித்தான் தங்கராசு.

“ஆத்தி! மாமோய்! நான் சும்மா எடக்கு மொடக்கா வம்புல பேசுனா.. நீ என்னை சின்ன வீடா வெச்சுக்கறேன்னு சொல்லி என் குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சி வுற்றுவ போலயே.. நா வரல இந்த விளாட்டுக்கு” என்று அவள் பின்வாங்கிக்கொள்ள…

“ஜமீனுக்கு சின்ன வீடு என்ன புதுசா புள்ள .. எனக்கு நிச்சயம் பண்ணினவளை கட்டிக்குறேன், எவளுக்கு என் மேல ஆசை இருக்குன்னு சொல்லுங்களே.. அவளுகளை சின்ன வீடா வெச்சுக்கிறேன். என் உடம்புல அம்புட்டு தேம்பு இருக்கு” தன் கை முஷ்டியை முறுக்கி உடலை நெருக்கி தன் கட்டுடலை காட்டினான் தங்கராசு.

அதை கன கச்சிதமாக போட்டோ பிடித்துக்கொண்டார் போட்டோக்ராபர்.

“ராசா! நீ சும்மா இரு கண்ணு.. ” என்ற கிழவி ” அடியே! சத்த நேரம் உங்க வாயை மூடுங்க டி .. ” என்று ஒரு கிழவி குரல் கொடுத்தவர்

“டேய் நீ ஏன் டா வாயை தொறந்துட்டு நிக்குற…. சாங்கியம் செய்ய ஆரம்பி” என்று அந்த ஊர் சவரத்தொழிலாளியை முன்னுக்கு அழைக்க…

அவர் வேகமாக முன்னே வந்தவர் “அம்மிணிங்க… முதல்ல ஒரு சொம்பு பச்சை தண்ணிய எடுத்து நம்ம ராசாவுக்கு தலையில இருந்து மேலுக்கு முழுக்க ஊத்துங்க” என்று பாப்பாத்தியிடம் சொன்னார்.

அவரும் சொன்னது போலவே சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். வெள்ளை சோற்று உருண்டை ஒன்று , மஞ்சள் சோற்று உருண்டை ஒன்று , சிவப்பு உருண்டை ஒன்றை ஒரு தட்டில் வைத்து பாப்பாத்தியிடம் கொடுத்து “அம்மிணி இதை ராசா தலையை சுத்தி தீட்டு சுத்தி போடுங்க..” என்று நீட்டினார்.

அதை வாங்கி ஒவ்வொரு உருண்டைக்கும் வலது , இடது , நேர்க்கோடாக சுற்றி போட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்தார்.

பின் மஞ்சள் தண்ணீர் ஊற்று என வரிசையாக செய்து கொண்டு இருக்க.. தங்கராசுவின் பின்னால் இருந்து அவன் அக்கா, தங்கைகள் எல்லாம் சேர்ந்து ஒரு வாளியில் வெள்ளை சோரும், தயிரும் கலந்து கொண்டு வந்து பின்னால் இருந்து அவன் மீது ஊற்றி விட்டார்கள்.

“அட பாதகத்திங்களா .. என் ராசாவுக்கு இபப்டியா டி தண்ணி ஊத்துவிங்க… ” என்று எழுந்து வந்த கிழவி அவன் உடலில் ஒட்டி இருந்த சாப்பாட்டை துடைத்து விட…

“அட இரு ஆத்தா.. இன்னிக்கு இதெல்லாம் செஞ்சா தான் உண்டு. நீ போட்டாட்ட கிட ” என்று கிழவியை அதட்டியவர்கள்.

“ஏய்! கொண்டாடி ” என்று சத்தமிட … பின்னால் இருந்து ஒருத்தி கையில் காய்கறிகளை கொண்டு மாலை ஒன்று செய்து , பச்சை மிளகாயில் கம்மல் செய்து, பீர்க்கங்காய் கொண்டு தலைக்கு கிரீடம் செய்து கொண்டு வர அதை வாங்கி தங்கராசுவிற்கு அணிவிக்கப் போக …

அதை அணிவிக்க விடாமல் தங்கராசுவின் சொந்தங்கள் தடுக்க… ஒரே அமர்க்களத்தோடு அமளி துமளியோடு அந்த மாலைகளை அவனுக்கு ஒரு வழியாக அணிவித்து விட்டனர்.

அதன் பின் அனைவரும் அவனோடு சேர்ந்து அனைவரும் போட்டோ எடுத்து மாப்பிள்ளைக்கு தாய்மாமன் புது உடை கொடுக்க அதை சென்று அணிந்து வந்தவனை பிரமித்து பார்த்தவராகள் மனையில் அமர்த்தி உருமாளை கட்டி சீர் செய்து அந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சின்ன வீடு வைத்துக்கொள்கிறேன் என்று அத்தனை பேர் முன்னிலையில் விளையாட்டாக சொன்னவன் பின்னாளில் அது நிஜத்தில் நடக்கும் என்று தெரியாமல் வார்த்தையை சிந்தனைகள் முன் விட்டுவிட்டான்.

அப்படி ஒரு சின்ன வீட்டுக்கு பிறகு தங்கராசுவின் நிலை என்ன?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured