Home COMPLETED NOVELSலப்…டப்… முழு நாவல்

லப்…டப்… முழு நாவல்

by Layas Tamil Novel
205 views

EPISODE – 1

“உன்னை பார்த்த பின்பு நான் ….”  டிவி யி்லிருந்து மிதந்து வந்த பாடல் காலையில் மிதுனை  எழுப்பியது …மனதில் நிறைந்தவளை நினைத்துக்கொண்டே மகிழ்ச்சியாக கண் விழித்தான்…

“அம்மா காபி”  என்றவாறே எழுந்தான் முகம் கழுவ …

“இதோடா மிதுன் ” என்று சிரித்து கொண்டே காபியை நீட்டியவர் ..

“என்னடா இன்னைக்கு எந்திரிக்கும் போதே இவ்ளோ சந்தோசமா  இருக்க ?” என்று கேட்க …

“ஒன்னும் இல்ல சித்ரா ” என்று சிரித்து கொண்டே அம்மாவிடம் சொன்னவன் ..

“நான் குளிச்சிட்டு ஆபீஸ் கிளம்புறேன் ” என்றவாறே பாத்ரூமில் புகுந்து கொண்டான் .

அவன் குளித்து விட்டு வர அவனுக்கு பிடித்த அடை தோசை ரெடியாக இருக்க…

“சூப்பர் சித்ரா”  என்று அம்மாவை கொஞ்சியவன் இரண்டு தோசைகளை விழுங்கி விட்டு …”நான் கிளம்புறேன் ” என்று அம்மாவிடம் சொன்னவன்,

“ப்ளீஸ் சித்ரா பைக் சாவியை எங்க வைச்சேன்னு தெரியல …தேடி எடுத்து கொடேன் “

என்று அம்மாவை கொஞ்சியபடி கெஞ்ச ,

“இன்னும் பொறுப்பு வரமாட்டேங்குதுடா உனக்கு ” என்று செல்லமாக திட்டியவர்,

உள்ளே சென்று ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு கீழே விழுந்து கிடந்த பைக் சாவியை கொண்டு வந்து அவனிடம் நீட்டினார் ..

“என்னோட சித்ரா எப்பவுமே சூப்பர் ” என்று  அம்மாவை செல்லமாக முத்தமிட்டவன்

“வரேன் மா ” என்றவாறு பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

வண்டியை அவன் செலுத்திக்கொண்டிருக்க… அவன் மனம் அவனுக்கு முன்னால் “சீக்கிரம் போடா… சீக்கிரம் போடா ” என்று அவனை இழுத்து கொண்டிருந்தது ..

அவனுக்கும் ஆசை தான் அடுத்த வினாடியே அவள் முன் சென்று நிற்க …என்ன செய்ய …மனித மனதின் ஆசையையும், வேகத்தையும் அவ்வளவு சீக்கிரம் அடைய முடியாது அல்லவா!! ….

இதோ வந்தாச்சு அவன் ஆபீஸ் … வேகமாக வண்டியை பார்க்கிங் செய்தவன் …வேகமாக ஓடி செக்கிங்கில் தன் லேப்டாப் பேக்கை காட்டிவிட்டு லிப்ட் நோக்கி ஓடி

லிப்ட் வரும் வரை பொறுமை இல்லாமல்… படியில் ஓட துவங்கினான் மூன்றாவது ப்ளோருக்கு ….

மூச்சு வாங்க வந்தவன்,  கிளாஸ் டோரை திறந்து உள்ளே நுழைய அவன் நண்பன் ஷியாம்  “என்னடா மச்சி செமயா வாங்க போற போல ”  …என்று கிண்டல் பண்ண “ஜஸ்ட் எ மினிட் டா ,  வந்திர்றேன் ” என்று  அந்த டேபிளை நோக்கி ஓடினான் …ஓட ஓடவே,  அவளிடமிருந்து வந்த அந்த அழகான வாசம் அவனை என்னவோ செய்ய…

அப்படியே வந்து அவள் பின்னால் நின்றான் .

“சாரி ஸ்ருதி …சாரி ஸ்ருதி ” அவள் பின்னால் இருந்து சொல்ல ,

அந்த மல்லிகை கண்கள்  மெல்ல அவனை நோக்கி திரும்ப… அந்த ரோஜா இதழ்கள்

மெல்ல திறந்து …

“யார் நீங்க ?” என்றது .

“ஏய் …சாரி டி …நைட் 11:45 வரைக்கும் முழிச்சிட்டு தாண்டி இருந்தேன் …எப்படி கண் அசந்தேன்னே தெரியல …முழிச்சு பார்த்தா மணி 5.  அப்பறம் உனக்கு போன் பண்ணினேன் ..நீ போன் எடுக்கல …ப்ளீஸ் டி …சாரி டி” என்று கெஞ்ச …

“அதெப்படிங்க சார் 11:45 வரைக்கும் முழிச்சிருந்தீங்க ..ஆனா 12 மணிக்கு தூங்கிட்டிங்க , இத நான் நம்பணும் ” என்று தன் அழகான முகத்தில் கோபம் காட்ட ..

” ப்ளீஸ் டி செல்லம் , ப்ளீஸ் டி …என்னை நம்புடி ” என்று கெஞ்ச …

நமக்கு பிடிச்சவங்க மேல வர்ற கோபம் ரொம்ப நேரம் நிக்காது இல்லையா ….ஆமாங்க ஸ்ருதியோட கோபமும் குறைஞ்சு அவ இப்ப நார்மல் ஆயிட்டா …மிதுனை

பார்த்து ஓகே என்று சிரிக்க …

அவள் சிரித்தாலும் மிதுனுக்கு  அவள் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டோமே என்று உறுத்தியது …

“ஹாப்பி பர்த்டே மை லவ் … அண்ட் ஐ அம் வெரி சாரி”  என்று உள்ளத்திலிருந்து சொல்ல ஸ்ருதி , ” ஓகே டியர் ” என்று பீல் ஆக …

‘போதும் போதும் …சீரியலை நிறுத்துங்க” என்று அவர்கள் நண்பர்கள் கலாய்த்தனர் .

“ஓகே பிரண்ட்ஸ் …இன்னைக்கு லஞ்ச் என்னோடது ” என்ற மிதுன் “ok …we will meet afternoon”  என்று சொல்லி தன் இருக்கைக்கு சென்றான்.

அங்கே அவன் அருகில் வந்த ஹரிஸும் , ஷ்யாமும் “என்னடா மச்சி இப்படி பண்ணிட்ட, ஸ்ருதி ரொம்ப அப்செட் ஆயிட்டா தெரியுமா …அவ உன் மேல உயிரையே வச்சிருக்காடா …நீ என்னடான்னா “….என்று உரிமையுடன் திட்ட …மிதுன் மென்மையாக சிரித்து கொண்டே “விடுங்கடா நான் அவளை சமாதான படுத்திக்கிறேன் ” , ” கொஞ்சம் ஒர்க் இருக்குடா , ஒரு மெயில் அனுப்பனும் urgent ..நாம மதியம் மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

ஹரிஷும் , ஷ்யாமும் இவன திருத்தவே முடியாதுடா என்று கூறி விட்டு அவர்களும் அவர்கள் வேலையே பார்க்க சென்று விட்டனர்.

நேரம் ஓடியது ….

மதியம் மணி ஒன்று ஆனதும் அனைவரும் லஞ்ச்க்கு கிளம்பி மிதுனிடம் …

“எங்கே லஞ்ச் ..”என்று கேட்க ,

“எல்லோரும் PARADISE RESORT கு வந்திருங்க friends ” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 ஸ்ருதி “நானும் உன்கூட வரேன் ” என்று கிளம்ப “சரி வா ” என்று இருவரும் பைக்கில் கிளம்பினர்.

20 நிமிட பயண முடிவில் ரெசார்ட்டை அனைவரும் அடைந்தனர் .

மிதுன் அனைவரிடமும் …”மேல இருக்கிற ஹாலுக்கு போலாம் வாங்க” என்று அழைத்தான் .

அனைவருடனும் ஸ்ருதியும் , மிதுனும் பார்ட்டி ஹாலை அடைந்தனர் .. ஹால்

பூட்டியிருந்தது.

மிதுன் ரிசார்ட் இன்சார்ஜிடம் சாவி கொண்டு வர சொன்னான். 

சிப்பந்தி ஒருவர் சாவி கொண்டு வந்து அறை கதவை திறக்க …

அங்கே …உள்ளே நுழைந்த அனைவரும் அப்படியே விக்கித்து நின்று விட்டனர்…

ஸ்ருதிக்கு அங்கே என்ன நடக்கிறது என்று ஒரு நிமிடம் புரியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

பின்…

சுய நினைவு வந்தவளாக ..அந்த ஹாலை பார்க்க

ஹால் முழுதும் அவளுக்கு பிடித்த பன்னீர் ரோஜா செடிகள் நிறைந்திருந்தது.

 அதிலிருந்து வரும் மெல்லிய வாசனை அனைவரையும் ஏதோ செய்ய, 

ஸ்ருதிக்கு பிடித்த “கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ” பாடல் வயலின் இசையாக வழிந்து கொண்டிருந்தது .

 …ஹாலின் சுவர் முழுதும் ஸ்ருதியின் ஒரு வயது போட்டோ முதல் தற்போது உள்ள போட்டோ வரை இடைவெளி இல்லாமல் நிரம்பி இருந்தது ….அப்போது ஸ்ருதியின் சிறு வயது உயிர் தோழிகள் யமுனாவும் , நிரஞ்சனாவும் சிரித்து கொண்டே வர,

 அவர்களை பார்த்த ஸ்ருதியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய அதிலிருந்து கண்ணீர்  துளி மெல்ல எட்டி பார்க்க , அவர்கள் இருவரும் மிதுனை பார்த்தனர் .

ஸ்ருதிக்கு எல்லாமே புரிந்தது.

ஷ்யாமும், ஹரிஷும் …மிதுனை பார்த்து ..”டேய் மச்சி ..இதெல்லாம் எப்படா பண்ண , எங்களுக்கு தெரியாம …ஓஹோ ..சாருக்கு நைட் புல்லா இந்த வேலை தானா …கலக்கிட்ட டா மச்சி ” என்று தன் நண்பனை பெருமையாக பார்க்க …

நைட் மிதுன் விஷ் பண்ணாததான் அர்த்தம் ஸ்ருதிக்கு புரிந்தது.

அவள் கண்களில் காதலுடன், “என்னை அவ்வளவு பிடிக்குமாடா ” என்று  மிதுனை பார்க்க …அவனும் ஸ்ருதியை பார்த்து சிரித்தான்.

அந்த சிரிப்பு ” என் உயிரே நீ தாண்டி ” என்று சொல்லியது . 

“ஓகே வாங்க , கேக் cut பண்ணலாம் ” என்று குரல் வர அங்கே

ஸ்ருதிக்கு பிடித்த வெல்வெட் கேக் கொண்டு வந்து வைக்க பட்டது.

இனியும் விட்டால் நான் அழுதிருவேன் என்று நினைத்த ஸ்ருதி …வேகமாக கேக் கட் பண்ண சென்றாள் .

அனைவரும் “ஹாப்பி பர்த்டே ஸ்ருதி ” என்று பாட அழகாக கேக் கட் செய்தவள்

மிதுனுக்கு ஊட்ட போக ..அதை வாங்கி மிதுன் ஸ்ருதிக்கு ஊட்ட ….ஓ ……என அனைவரும் சத்தமிட அங்கே அழகான பிறந்த நாள் கொண்டாட பட்டது.

ஸ்ருதிக்கு மிதுனை அப்படியே கட்டி அணைத்து ..அவனுக்குள்ளேயே சென்று விட வேண்டும் போல இருந்தது …

அனைவருக்கும் கேக் வழங்கப்பட , பின்…  வந்தவர்கள் வாழ்த்து கூற … இனிய நினைவுகள் பதிவாகி கொண்டிருந்தது …

“வாங்கப்பா லஞ்ச் ரெடி …சாப்பிட போலாம்” என்று ஹரிஷ் அனைவரையும் அழைக்க ,

அங்கே buffet உணவு வகைகள் ரெடியாக இருக்க …

சிக்கன் வகைகளும் , மட்டன் மற்றும் மீன் வகைகளும் நான் வெஜ் பிரியர்களை இழுக்க ….

ஸ்ருதி தனக்காக ஊரிலிருந்து வந்திருக்கும் யமுனா மற்றும் நிரஞ்சனாவுடன் தன்னையே மறந்து பழைய நினைவுகளில் மூழ்கி போய் பேசி கொண்டிருந்தாள் ..

“ஸ்ருதி …நீ ரொம்ப லக்கி …மிதுன் உன் மேல் காட்டுற அன்பு எங்களையே கொஞ்சம் பொறாமை பட வைக்குது டி “…  என்று யமுனா சொல்ல,

நிரஞ்சனா …”ஆமா டி actuala மிதுன் எங்களை ஒரு மாசத்துக்கு முன்னாடியே காண்டாக்ட் பண்ணினான் … அப்ப இருந்து உன்னோட போட்டோ அப்புறம் உனக்கு என்னென்ன பிடிக்கும் னு எங்களை படுத்தி எடுத்திட்டான் “…என்று சிரித்தாள் …

“anyhow நீ தான் அவனுக்கு எல்லாமே” என்றாள் நிரஞ்சனா .. அப்போது  மிதுன்

“மா disturb பண்ணிட்டேனா ” என்று  கேட்க “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல மிதுன் …நீ எங்களை படுத்தின பாட்டை  தான் சொல்லிட்டு இருந்தோம்” என்று சிரித்து கொண்டே யமுனா சொல்ல …

நிரஞ்சனா மிதுனிடம் ” அதெல்லாம் சரி …எப்ப கல்யாண விருந்து போட போறீங்க ரெண்டு பேரும் ” என்று கேட்க இருவரின் முகமும் கொஞ்சம் கவலையாகி …

“ஸ்ருதியோட அப்பாவை நினைச்சா தான் கொஞ்சம் பயமா  இருக்கு என்றவன் …

ஆனா  சீக்கிரம் உங்களுக்கு விருந்து கிடைக்கும் “…என்று சூழ்நிலையை சகஜமாக்கினான் …

அப்போது அவர்களில் சீனியரான சிவக்குமார் veg fried rice and பன்னீர் சில்லி கொஞ்சம் எடுத்து கொண்டு அப்படியே அவர்களை நோக்கி  வந்தார் ….”மிதுன் நீ என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்திட்ட…இந்த காலத்து பசங்கெல்லாம் லவ்வ அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்..”

“ஆனால் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு உயிரா இருக்கீங்கன்னு நீ செயல்ல காட்டிட்டே .. எந்த காலமா இருந்தாலும் உண்மையான காதல் அதுவா  வாழ்ந்து காட்டும் …உங்க ரெண்டுபேருக்கும் என்னோட மனசு நிறைஞ்ச வாழ்த்துக்கள்டா ” என்று சொல்லி விட்டு நகர… ஸ்ருதி மிதுனை காதலுடன் பார்த்துக்கொண்டே icecream சாப்பிட போக ..அந்த ஐஸ்கிரீம் பௌல் அப்படியே தவறி

அவள் மீது விழ ஸ்ருதியின் சுடி முழுதும் சிந்தி விட்டது …

“பாத்து பாத்து” என்று மிதுன் பதற …ஒன்னும் இல்லடா  ஐஸ்கிரீம் தான் ..வாஷ் பண்ணா போயிட போகுது ….நீ பதறாத ”  என்று நிரஞ்சனா மிதுனை கிண்டல் பண்ணினாள்.

“நீ வா முதல்ல வாஷ் பண்ணிட்டு வருவோம்” என்று ஸ்ருதியை இழுக்க ,

“ஒன்னும் இல்லடா …துடைச்சா போயிடும் விடு” என்று ஸ்ருதி சொல்ல ..

“நீ முதல்ல வா ..”என்று ஸ்ருதியின் கையை பிடித்து கெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்றான் .

அங்கே உள்ளே சென்றதும் , “ஓகே நீ போய் வாஷ் பண்ணிட்டு வா , நான் வெயிட் பண்றேன்” என்று அவளை பாத்ரூம் உள்ளே அனுப்பி விட்டு போனை எடுத்து நோண்டி கொண்டிருந்தான் …

10 நிமிடதிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ருதி …

அப்படியே வந்து மிதுனை பின்னால் கட்டிக்கொண்டாள் ..அவள் கையை பிடித்து

அப்படியே முன்னால் இழுத்தவன் , “என்ன ?” என்று கண்களால் கேட்க , அவள் அதீத

காதலுடன் அவனை பார்த்தாள் . அந்த சூழலும் அவர்களின் நெருக்கமும் எதோ செய்ய ,

ஸ்ருதியை அப்படியே இடுப்போடு இழுத்து மென்மையாக அணைக்க ,

அந்தரங்கங்கள் உரச ….ஹார்மோன்கள் எதோ செய்தது. ….மிதுன் கிறக்கத்தில் அவன் கைகளை முதுகில் ஊர்வலம் நடத்த …அவன் உதடுகள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு அப்படியே கழுத்தில் இறங்கியது …அதே கிறக்கத்தில்  ஸ்ருதியும் மயங்கி கிடைக்க மிதுனின் உதடுகள் கழுத்தில் இருந்து மேலே ஊர்ந்து வந்து வந்து அவளது தேன் உதடுகளை மென்மையாக தொட்டது …மென்மையாக ஆரம்பித்த முத்தம் பின்

கொஞ்சம் ஆழம் தேட ஆரம்பித்தது …இதழ்கள் தேனை பரிமாறி கொண்டிருக்க …அவனது கைகள் ஸ்ருதியின் முதுகிலிருந்து அப்படியே முன்புறம் நகர்ந்தது …

சட்டெனெ நினைவு வந்தவர்களாக இருவரும் சுதாரித்தனர். 

மெதுவாக விலகி …

இப்ப இது போதும் என்பது போல் இருவருமே தலையாட்ட …

ஸ்ருதியின் கை பிடித்து “ சரி சொல்லு…  ஸ்ருதிக்கு இன்னைக்கு என்கிட்ட இருந்து என்ன பிடிக்கும்னு சொல்லுவீங்கலாம்… நான் அத கொடுப்பேனாம்…” என்று மிதுன் சொல்ல,   

“நான் என்ன கேட்டாலும் தருவியா டா..” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் ஸ்ருதி.

“என்ன கேட்டாலும் தருவேன்… என் உயிரையே கேட்டாலும்…” என்று சொல்லி முடிக்க வந்தவன் வாயில் விரல் வைத்து சொல்ல வேண்டாம் தலையை ஆட்டிக்கொண்டே தடுத்தவள்…

“மிதுன்… என்னோட நெற்றியில் நீ அழுத்தமா ஒரு முத்தம் கொடு…  அது போதும் எனக்கு இந்த ஆயுசு முழுக்க…” என்று அவன் கண்களை பார்த்து காதலுடன் சொன்னவளை…

 தன் பக்கத்தில் இழுத்து அணைத்து முத்தம் கொடுக்க சென்ற போது… கதவு தட்டப்பட்டது… “சீக்கிரம் வெளிய வாங்க… இவ்ளோ நேரம் என்ன பண்றீங்க” என்று ஸ்ருதியின் தோழிகள் குரல் கொடுக்க… 

“ம்க்கும்… இதுக்கு கூட விட மாட்டேங்குறாங்களே.. பொருக்காதே இவங்களுக்கு “ என்று சலித்துக்கொண்ட ஸ்ருதி மிதுனிடம் இருந்து விலகி சென்று  முகம் கழுவி விட்டு வெளியே வர … இருவரும் சென்று கதவை திறந்தனர்.

நிரஞ்சனாவும் , யமுனாவும் அவர்களை பார்த்து சிரிக்க …மிதுனும் ,ஸ்ருதியும் அவர்களுக்கு உள்ள உரிமையில் “இதெல்லாம் just normal ” என்பது போல் சாதாரணமாக இருந்தனர் ….

பின் ஒரு வழியாக பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக கிளம்ப ,  உயிர் தோழிகள் இருவரையும் வழி அனுப்பி விட்டு மிதுனும் , ஸ்ருதியும் office கிளம்பினர் ..

office இல்  ஸ்ருதிக்காக அவளது அம்மாவும் அப்பாவும் காத்திருப்பது தெரியாமல் …

EPISODE – 2

ஆபீஸ் வந்ததும் ஸ்ருதியும் , மிதுனும் உள்ளே நுழைய,  அங்கே ஸ்ருதியின் அப்பா சத்தியசீலனும்  அம்மா  சுமதியும்  அமர்ந்திருப்பதைக் கண்டு கொஞ்சம்  அதிர்ச்சியானார்கள் .

பின்பு  சுதாரித்துக் கொண்ட  சுருதி…  அடுத்த கணம்  முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, ” அப்பா  நீங்க எப்ப வந்தீங்க ?.. அம்மா  நல்லா இருக்கீங்களா ?…” என்று கேட்டுக் கொண்டே  அருகில் வர  அப்பா  அம்மா இருவரும்  “இப்பதான் வந்தோம் ” என்று கூறிக் கொண்டே  அருகில்  இருக்கும் மிதுனை  இது “இவன் யார்”  என்று  பார்வையில் கேட்டனர்.

 சுருதி தயங்கிக் கொண்டே,  “இது மிதுன் …என்னுடன்  வேலை பார்க்கிறார்”  என்று சொல்ல சத்தியசீலனுக்கு ஏதோ  நெருடலாக ப்பட்டது .

அதை புரிந்து கொண்ட சுருதி, “அப்பா  என்ன மன்னிச்சிடுங்க …நானே  உங்ககிட்ட  சொல்லலாம்னு  நினைச்சேன் … இனியும்  சொல்லாமல் இருக்க முடியாது …மிதுனை  நான்  விரும்புறேன்”  என்று கூற சத்தியசீலனின்  முகம்  கொஞ்சம் மாறியது .

அவர்  அதிகம் பேசாமல்  சுருதியை பார்த்து , “என் நம்பிக்கைய நீ உடைச்சுட்ட “,

என்றார் கொஞ்சம் சத்தமாக. 

அங்கே  இருந்த சிலர்  அவர்களை கவனிக்க, 

  சுருதி  அப்பாவை பார்த்து ,” அப்பா!   நம்ம கேன்டீன் போய் பேசலாமா ?” என்று கேட்க , “இனி பேச என்னம்மா இருக்கு.. , நீ தான் முடிவு பண்ணிட்டியே ” என்று  சத்தியசீலன் சொல்ல … ஸ்ருதி  “அப்படி எல்லாம் இல்லப்பா நம்ம கொஞ்சம் தனியா பேசலாம் வாங்கப்பா”  என்று  அவரை அழைத்தாள்.

ஒரு அப்பாவாக  பேச வேண்டிய கட்டாயத்தில்  இருந்த சத்தியசீலன்,  ” சரி வா”  என்று  வேகமாக  அவர்களுக்கு முன்னால்  கேண்டீனுக்கு சென்றார் . 

சுருதி  மிதுனை  பார்த்து,   “மிதுன்   10 நிமிடம்  நான் அப்பாவிடம்  பேசிவிட்டு வருகிறேன் ” என்று கூறிவிட்டு  அவள் அம்மாவுடன் கேன்டீனுக்கு  சென்றாள் .

அங்கே சென்றதும் ஸ்ருதி சத்தியசீலனை  ‘அப்பா’ என்று அழைக்க , 

சத்தியசீலன்  மனம் உடைந்தவராக,  “உன்னை நான் எப்படி வளர்த்தேன்…  நீ என்னம்மா பண்ணி வச்சிருக்க …என்று கோவமானார் .

அவளை பார்த்து , “உனக்கு    நான் கத்துக்கொடுத்த  ஒழுக்கம்,  பக்தி  இதெல்லாம் எங்கம்மா போச்சு . உனக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்துச்சு?… நான் இப்போ அந்த பையனை பத்தி பேச விரும்பல … என் பொண்ணு நான் சரியா வளக்கலைன்னு  நினைக்கிறேன் . நம்ம குடும்பத்தோட நிலைமையை  கொஞ்சம் யோசிச்சு பார்த்திருக்கலாம் . 

நமக்கு இருக்கிற மதிப்பும் மரியாதையும்  நீ செஞ்ச காரியத்தால  என்ன ஆகும்னு  யோசிச்சு பாரு .. என் பொண்ண  நான்  நல்லா வளர்த்து இருக்கேன்னு  இவ்ளோ நாள் கர்வத்தோடு இருந்துட்டேன் . அத்தனையும்  நீ ஒடச்சிட்ட .. என்று கூற ,

“அப்பா  நான் உங்க பொண்ணு பா….கண்டிப்பா உங்கள மீறி   எதுவும் பண்ண மாட்டேன் … எனக்கு  மிதுன் மேல கவனம்  வர காரணமே  உங்கள மாதிரியே  அவனும்  என் மேல  பாசத்தையும் அக்கறையும் காட்டினான்” .

 “அதில் இருந்த உண்மை  எனக்கு புரிந்தது பா …சும்மா விளையாட்டுத்தனமா  அவன் என் கூட பழகல …அவன் எங்கிட்ட  உண்மையா இருந்தப்போ  என்னோட மனச  என்னால கட்டுப்படுத்த முடியல … என் மனசு உங்ககிட்ட எதிர்பார்த்த அதே அன்பை  அவன்  கிட்டயும் எதிர்பார்த்தது ….எந்த தவறான நோக்கமும்  இல்லாமல்  அவன் என்னிடம் பழகின விதம் , எதார்த்தமாக நடந்த  சில நிகழ்வுகள்  எங்க ரெண்டு பேருக்குமே  ஒருத்தர  ஒருத்தர்  பிடிச்சிருந்தது”. 

“அதுக்காக  எந்த முடிவும் நாங்களா எடுக்கல …அவனோட அம்மா, அப்பாவும், நீங்களும் அம்மாவும் சம்மதிச்சா மட்டும் தான்…  நாங்க கல்யாணம் என்கிற அடுத்த  ஸ்டெப்க்கு போவோம். இல்லன்னா  மனச கல்லாக்கிக்கிட்டு,…  எனக்கு பிடிக்குதோ  இல்லையோ …. நீங்க எடுக்கிற முடிவுக்கு  நான் சம்மதிப்பேன்”  என்று சொன்னாள் .

ஸ்ருதி  பேசியது   சத்திய சீலனுக்கு  கொஞ்சம் மன நிம்மதி தந்தது … ஆனாலும்  இருதலைக்கொல்லி எறும்பு போல தன் குடும்ப சூழ்நிலை,   உறவினர்கள்…  இத எல்லாம் தாண்டி என்ன செய்ய  முடியும் என்பதனால்  அவர் மகளை நோக்கி ,

“ஒரு  அப்பாவா  மகளுக்கு  பிடிச்சது  செய்யணும்  அப்படிங்கறது தான்  என்னோட ஆசை…

  “ஆனாலும்  உங்களோட வயசு  அனுபவம்  இது எல்லாமே  உங்கள சரியான முடிவு எடுக்க விடுமா?   அப்படிங்கற சந்தேகம் எனக்கு இருக்குமா …இது போக  எங்களுக்கு பின்னால நீ ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்…  அது  ஒரு அப்பாவா அமைத்துக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை…  இதெல்லாம் இருக்கிறப்போ என்னால  ஒரு முடிவை இப்ப சொல்ல முடியல …கொஞ்ச நாள்  போகட்டும்  பிறகு பார்க்கலாம்…  அதுவரைக்கும்  நீ அந்த பையனோட பழகாம  இருக்கிறது  நல்லதுன்னு எனக்கு தோணுது” என்று சொல்ல, 

அப்பாவிற்கு தந்த  வலி  சுருதியை ,  ஏதோ செய்ய  அவளாலும் எந்த முடிவும்  இப்போ எடுக்க முடியவில்லை .  அப்பாவா ஒரு வகையான  உணர்வாக அவர் எனக்குள் இருப்பது போல, மிதுனும் என் மனதுக்குள் ஆழமாக ஊன்றி விட்டான். 

 எல்லா காதலுமே  சினிமா மாதிரியோ  கவிதை மாதிரியோ   அழகாக  செல்வதில்லை … இவர்கள் காதல்  என்னவாகும்…  பார்க்கலாம் .

அப்போது மிதுன் அங்கு வர , சத்தியசீலன்  அவனிடம்  எதுவும் பேசாமல்,   “சுருதி எனக்கு  நாங்க கிளம்புறோம்மா ….”என்று கூறிவிட்டு சுமதியுடன்  நடக்க ஆரம்பித்தார் ..

கார் பார்க்கிக்கு சென்று  காரில் ஏறியதும்  சுமதி அவரைப் பார்க்க,

அவர் உள்ளத்தின்  வலி அவரது   கண்களில்  நீராக வருவதைக் கண்டு , அவரை நோக்கி ..

“நீங்க கஷ்டப் படாதீங்க … நம்ம பொண்ணு  நம்மள மீறி எதுவும் பண்ண மாட்டா  “, என்று சொல்ல,

“அது எனக்கு தெரியும் சுமதி… அதே சமயம்  அவளுக்கு என்ன பிடிக்கும்  அப்படிங்கிறது தெரிஞ்சு  செய்ய வேண்டியது  பெத்தவங்களா நம்மளோட கடமை இல்லையா …”

“இந்த காலத்தில காதல் என்பது சாதாரண விஷயமா இருக்கலாம்.  ..ஆனால் அது சரியா  நேர்கோட்டில் போகுதா?..  அப்படிங்கறத கவனிக்க நமக்கு கொஞ்சம் காலம் தேவை…” 

“கொஞ்ச நாள் ஆகட்டும் … அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்”  என்று கூற …மகள் மீது இருக்கும் நம்பிக்கையில்  அவளை அங்கே விட்டு  அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றனர் .

அந்த ‘நம்பிக்கை’ தான்  சுருதிக்கு  அவர்கள் வைத்திருக்கும்  செக் பாயிண்ட் .

இப்போ  அன்பு தான்  இங்கே போட்டி போடுகிறது .  ஸ்ருதியின் அப்பா,  சுருதி  அப்புறம் மிதுன்  இவங்க மூணு பேருமே  ரொம்ப நேர்மையா  அவங்களோட கடமையை செஞ்சிட்டு இருக்காங்க ….ஆனால் காலத்தின் விளையாட்டு …யாரையுமே விட்டு வைப்பதில்லை .

” ஸ்ருதி…. அப்பா என்ன சொன்னார் ” என்று மிதுன் கேட்டான்.

அங்கே நடந்த உரையாடலை ஸ்ருதி அவனிடம் சொல்ல ,

மிதுன் அவளை நோக்கி , “ஒன்னும் பயப்படாத ஸ்ருதி , நம்ம காதல் மேல எனக்குநம்பிக்கை இருக்கு …கண்டிப்பா அப்பா ஒத்துக்குவார் “, என்று கூறினான்.

“அது எனக்கு தெரியும் மிதுன்,  அவர் எனக்காக எதுவும் செய்வார் …ஆனா அவர் மனநிறைவோட நம்மள சேத்து வைக்கணும் ..அவர் மனசு வலிச்சா என்னால தாங்க முடியாது ” என்று கூறினாள் ஸ்ருதி.

ஏற்கனவே இருவரும் பண்பட்ட மனதுடன் பழகுவதால் , ஸ்ருதியின் அப்பா சொன்ன மாதிரி… மிதுன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கலாம் என்பது பெரிய விஷயமாக ஸ்ருதிக்கு படவில்லை .. மிதுனும் தங்கள் காதல் மீது வைத்திருந்த நம்பிக்கையால் தள்ளி இருப்பதை பெரிதாக நினைக்கவில்லை …உடலுக்கு தானே பிரிவு ….இருவர் உள்ளமும் ஒன்றாக கலந்து வெகுநாள் ஆகிவிட்டதே …

திருச்சியில்…

  அவர்கள் வீட்டை அடைந்ததும்   சத்திய சீலன்  உள்ளே சென்று  அமைதியாக சோபாவில் அமர்ந்தார்.  மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

இங்கே ஹரீஷும்,   ஷியாமு ம் மிதுனிடம் , “என்னடா ஆச்சு … ஸ்ருதி அப்பா என்ன சொன்னாரு”?   என்று கேட்க ,

“அவருக்கு வேற ஒன்னும் கோவம் இல்லை, அவருக்கு என்ன வருத்தம்னா  …  ‘தன் பொண்ணு தன்னை மீறி  எதுவும் செய்ய மாட்டா’ அப்படிங்கற நம்பிக்கையில் இருந்தவருக்கு  இது ஒரு பெரிய ஷாக்கா இருக்கு… ‌ அது ஸ்ருதிக்கு  இப்போ பெரிய சங்கடமா இருக்கு”.  

“என்னன்னா … அவங்க அப்பாவும் அவளும்  ஒருத்தர் மேல ஒருத்தர்  பெரிய பாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் . இப்ப இடையில நான் வந்து தான்  அந்த நம்பிக்கை ஒடைச்சுட்ட மாதிரி எனக்கு பீல் ஆகுது “.

“ஆனா  நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவோம் என்று  நான் நினைச்சு  கூட பார்த்ததில்லை…  அது எப்படி நடந்துச்சுன்னு  இப்பவும் எங்க ரெண்டு பேருக்கும்  தெரியாது” .

“எதோ ஒரு கட்டத்துல மனசு ஒத்து போய் …  அதுக்கப்புறம் எல்லாமே அதுவா நடந்துருச்சு .   சரி விடு வாழ்க்கைன்னா  அப்படித்தான் இருக்கும்  நம்ம நினைச்ச மாதிரி எல்லாமே நடக்காது  …இல்லையாடா மச்சி”  என்றான் .

“நானும் சுருதியும்  கொஞ்ச நாள் இத ஆற போடலாம்னு இருக்கோம் .. அதுக்கப்புறம் பாத்துக்கலாம் …”என்று சொன்னான்.

அப்போது ஹரிஷ் ஷ்யாமை  பார்த்து , “டேய் மாப்ள  உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்ல ,,

உன்னோட ஆளு  இப்பவே ஓகே சொல்லிட்டா…  அவங்க அம்மா அப்பாவும்  ஓகே சொல்லிட்டாங்க இல்ல ” என்று கேட்க ,

“அந்தக் கொடுமையை ஏண்டா கேக்குற , ஆரம்பத்துல லவ் பண்றப்ப  ரொம்ப நல்லா இருந்துச்சு … இப்ப ஏண்டா லவ்  பண்ணினோம்னு  நினைக்க ஆரம்பிச்சுட்டேன்டா …

மாயா ரொம்ப படுத்துறாடா …இப்பவே  வீடு சொத்து கணக்கெல்லாம் கேக்குறா .. கல்யாணம் முடிஞ்சப்புறம்  எங்க அம்மா அப்பா  எங்க கூட இருக்கக் கூடாதாம்  …

அவங்க செலவுக்கு  நான் காசு கொடுக்க கூடாதாம் …எனக்கும் அவங்களுக்கும்  சம்பந்தமே இருக்கக் கூடாது  அப்படிங்கிற மாதிரி  பேசுறடா ….இப்ப பேசி என்ன பண்ண?…  என் லைஃப்க்கு  நானே  எண்டு கார்டு  போட்டுக்கிட்டேன் எல்லாம் விதிடா ” என்று  சீரியஸாக பேச …,

ஹரிஷ் நக்கலாக அவனைப் பார்த்து ,  “அதனால் என்னடா மாப்ள!!  உன்னோட அம்மா அப்பா எல்லாம் கூட இல்லாட்டி என்ன ,, அது தான் உன் ஆளுக்கு  அழகான தங்கச்சி இருக்கால்ல… இப்பவே மாமா மாமான்னு கொஞ்சறால்ல  அப்புறம் என்னடா?” …. என்று கேட்க ,

“டேய் உன்ன கொன்றுவேன் பாத்துக்க … அந்த பேயவே  எப்படி சமாளிக்கிறதுன்னு  தெரியல .. இதுல  பிசாச வேற நீ  சேர்த்து  சொல்றியா …” என்று சீரியஸாக கொந்தளிக்க ஹரிசும் மிதுனும் …”நீதான்டா அவ பின்னாடியே சுத்தின…அவ தான்  வேணும்னு சொல்லிட்டு , இப்போ அனுபவி”   என்று சிரித்தனர்.

“உங்க ரெண்டு பேருக்கும் என் life நக்கலா போச்சுல்ல ”  என்று சோகமாக …

“விட்றா மாப்ள உனக்கு நாங்க எப்பவுமே கூட இருப்போம் ” என்று ஆதரவாக பேச

ஷியாம் கொஞ்சம் அமைதியானான் . 

அங்கே ஸ்ருதிக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது… அன்பால் ஆன கயிறு அவளை இரு பக்கமும் இழுத்துக் கொண்டிருந்தது…. 

EPISODE – 3

இங்கே ஸ்ருதிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ..

 அவளது அப்பாவின் ஞாபகம் அவளை குடைந்து கொண்டே இருந்தது.

விவரம் தெரிந்த நாளில் இருந்து அவள் மேல் அப்பா வைத்திருந்த பாசம், அவளை ஒரு மகாராணி போல் தாங்கி கொண்டிருந்தது ,  அவள் பெரியவள் ஆகும் வரை, ஏன் அதற்கு பிறகும் கூட  வெளியே எங்கு சென்றாலும் தன தோளில் சுமந்து சென்றது ..

தன் பெண் என்று வந்து விட்டால்…

 அவளுக்கு அடுத்து தான் அப்பாவுக்கு எதுவும் என்று அவர் வாழ்ந்தது …

என நினைவலைகள் அவளை வாட்ட …வீட்டுக்கு சென்று அப்பாவை எப்படா பார்ப்போம் என காத்திருந்தவள் …அடுத்து வந்த வார இறுதி நாட்களில் பறந்து கொண்டு வீட்டுக்கு சென்றாள் …

வீட்டின் உள்ளே நுழைந்ததும் …”அப்பா ”  என கத்தி கொண்டே ஓடி சென்று அவரை கட்டிகொண்டாள் …

“வாம்மா வா ” என்று நடந்த அத்தனையும் மறந்து மகளை ஆரத்  தழுவிக்கொண்டார் சத்தியசீலன்  ..

“அப்பா ….மன்னிச்சுடுங்கப்பா …  நான் எப்பவுமே உங்க பொண்ணா தான்  இருப்பேன் பா ” என்று கண்களில் நீரோடு சொல்ல ..

“டேய் விட்ரா …நீ எப்பவும் என் பொண்ணு தாண்டா …  அப்பா உன்னை குழந்தையாவே பாத்துட்டேன்டா …”

“என் பொண்ணு வளந்துட்டாங்கற நினைப்பே  இப்ப தாண்டா வருது ” என்று சிரிக்க ,

“இப்பவும் நான் உங்க குழந்தை தான் பா …” என்று அப்பாவை உட்கார வைத்து அவர் மடியில் படுத்து கொண்டாள் ..

இதையெல்லாம் கவனித்த சுமதி …  ஸ்ருதியிடம் “உங்க அப்பா இன்னும் அவரையே சின்ன பையனா தான் நினைச்சிட்டிருக்கார் …நீ என்னடான்னா அவரை தாத்தாவாக்க

பிளான் பண்றியா ” என்று சிரித்து கொண்டே கேட்க,

அவர் “ஏண்டி புள்ளைகிட்ட என்னடி பேசற ”  என்று பொய்யாக கேட்க ,

அங்கே அவர்கள் மூவருக்குள்ளும் … ஏதோ ஒரு மாதிரி ஒரு புதிய … ‘ஒருவருக்குள் மூவரான’  உணர்வு தோன்றியது .

“ஓகே மா, போய் குளிச்சிட்டு வா சாப்டுட்டு அப்புறம் பேசலாம்” என்று சொல்ல ,

“ஓகே பா 10 minutes , வந்துர்றேன் “, என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றாள்.

சரியாக 25 நிமிடம் கழித்து வந்தவள் ,

 “அம்மா , என்னம்மா  செஞ்சிருக்க சாப்பிட “, என்று கேட்க ,

 “உனக்கு பிடிச்ச சந்தகையும் தேங்காய் பாலும் இருக்கு… கூட அடைதோசை இருக்குடா”,  என்று சொன்னதும், ஸ்ருதிக்கு ‘மிதுனுக்கும் அடை பிடிக்கும்ல’ என்று அவன் ஞாபகம் வந்து சென்றது.

ஸ்ருதிக்கு அன்போடு அம்மா பரிமாற , அப்பா வாஞ்சையுடன் பார்க்க  ஸ்ருதி சாப்பிட்டாள்.

ஸ்ருதி பேச்சை துவக்கினாள் …  “அப்பா “.

” சொல்லும்மா ” என்றார் சத்தியசீலன் ..

“கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா பா ” என்றாள் ..”

“சொல்லுடா செல்லம் …என்ன வேணாலும் சொல்லு …” என்றார் .

“நான் நீங்க வளர்த்த பொண்ணுப்பா,  நான் தவறான ஆளை செலக்ட் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறீங்களாப்பா” என்றாள் .

“மிதுன் ரொம்ப நல்லவன் அப்படீன்னு சினிமா டயலாக் எல்லாம் பேச மாட்டேன்பா .. “

“ஆனா நீங்க என்கிட்டே காட்டின அக்கறைய நான் மிதுன் கிட்ட உணர்ந்தேன் “…

“அப்ப கூட அது காதலா மாறும்னு நினைக்கல … ஆனால் நாள் செல்ல செல்ல எனக்கு அவனை பிடிச்ச மாதிரி அவனுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சது ..”

அது அப்படியே ரெண்டு பேருக்கும் லைப் பார்ட்னர் ஆயிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு …

“அதுக்கப்புறம் அவன் என்மேல காட்டின அன்புல…  எனக்குள்ள முழுசா வந்திட்டான் பா”…

“என் வாழ்க்கை அவனோட தான்னு தோணிருச்சுப்பா …”  அதே நேரம் உங்க சம்மதம் கண்டிப்பா வேணும் பா “…

“ஒருவேளை நீங்க ஒத்துக்கலைன்னா … நான்  கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…  ஏன்னா , அப்படி நான் இன்னொருத்தரை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா நீங்க என்னை வளர்த்தது சரி இல்லைன்னு ஆயிடும் ….”

மனசுல ஒருத்தர நினைச்சதுக்கப்புறம் … மனச மாத்திக்கிட்டு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி என் அப்பா என்னை வளர்க்கல”  இல்லையாப்பா

என்று மூச்சு விடாமல் ஸ்ருதி பேசி முடிக்க ,

சத்யசீலனும், சுமதியும் வாய பிளந்து கொண்டு நம்ம பிள்ளையா இப்படி பேசறது என்று பார்த்தாபடி அமர்ந்து கொண்டிருந்தனர் …  ஒரு பக்கம் அவங்களுக்கு பெருமையாகவும் இருந்தது …

ஸ்ருதியை பார்த்து புன்னகைத்த அவளது அப்பா , “சரிம்மா உன் விருப்பம் தான் எங்க விருப்பம்” ,

“ஆனால் நம்ம விருப்பம் மட்டுமே பத்தாது இல்லையா .. நான் சாமி, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை வைச்சிருக்கிற ஆள், ஏன் உனக்கும் அதுல உண்மை இருக்குன்னு தெரியும் ..” 

“நமக்கு தெரியாத விஷயங்கள் தான் நிறைய உள்ளதே தவிர , நமக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம் பொய்னு எடுத்துக்க முடியாது இல்லையா “.

“உங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பா பொருத்தம் இருக்கும்மா ”  அத நான் நம்புறேன் .

ஆனால் எதுக்கும் நம்ம குடும்ப ஜோதிடரை ஒருமுறை பாத்திட்டு முடிவு பண்ணிக்கலாம் சரியா மா ” என்றார் .

“ஒரு பெண்ணை பெற்றவராக அவருக்குள்ள கவலை நியாயம் தானே ” .

ஸ்ருதி உறுதியாக இருந்தாலும் அவளுக்கும் இதில் நம்பிக்கை உண்டு .. அதனால்

அப்பா சொன்னதற்கு தலையை ஆட்டிக்கொண்டே அவர் மடியில் படுத்து கொண்டாள் .

அப்போது  சத்தியசீலனின் தங்கை  கௌசல்யா  அங்கே வந்தார் .

“அண்ணா அண்ணி நல்லா இருக்கீங்களா?    என்றவாரே  உரிமையுடன் உள்ளே வந்தவரை ,   வாம்மா  கௌசி… என்னம்மா திடீர்னு சொல்லாம கொள்ளாம  வந்திருக்க …” என்று சத்தியசீலன் கேட்க,  

“உங்களுக்கு எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தான் அண்ணா ,  நான் சொல்லாம வந்தேன்  என்று சொன்னாள்  கௌசி .  

அப்போது சுமதி  அங்கே வந்து , “வா கௌசி ,  நீ மட்டும் தான் வந்தியா…  அண்ணன் வரலையா , மனோவும்  ரித்துவும்  எப்படி இருக்காங்க”  என்று கேட்க …. “எல்லோரும் நல்லா இருக்காங்க  அண்ணி” . 

ஸ்ருதியும் அத்தையை பார்த்தவுடன் , “அத்தை எப்படி இருக்கீங்க” என்று அவரை

கட்டி கொள்ள ,

“நல்லா இருக்கேண்டி தங்கம் ,  நீ எப்ப வந்த “, என்று கேட்க ,

“கொஞ்ச நேரம் தான் ஆச்சு அத்தை … மாமா , மனோ , ரீத்து எல்லோரும் எப்படி இருக்காங்க .. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் ” என்று கேட்டாள் .

“இங்க ஒரு கல்யாணம் …அதான் நான் இங்க வந்தேன் .. அவங்கெல்லாம் அங்க இன்னொரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க … இன்னொரு நாள் வரேன்னு உன்கிட்ட சொல்ல சொன்னாங்க ” என்றார் சிரித்து கொண்டே ,

பிறகு மூவரையும் கவனித்தவர் ,  அண்ணனிடம் என்னண்ணா என்று கண்களால் கேட்க ,

அதை புரிந்து கொண்டவர், ஸ்ருதியிடம் திரும்பி , ஸ்ருதிம்மா நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு … tired ஆ இருப்ப” என்று சொல்ல ,

அவள் அத்தையிடம் , அத்தை half an hour என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள் .

“அண்ணா, என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ,  நம்ம ஸ்ருதி மேல எனக்கு உரிமை இல்லயா , அக்கறை இல்லையா “,

“என்னாச்சுண்ணா  நீயும் , அண்ணியும் வேற ஒரு மாதிரி இருக்கீங்க ” என்று கேட்டாள் .

சத்தியசீலன் “கௌசி உன்கிட்ட சொல்லாம என்னம்மா ,  நம்ம ஸ்ருதி அவ வேலை பார்க்கிற இடத்தில ஒரு பையனை விரும்பறாளாம் ,  பையன் நல்ல பையன் தான் ,

ஆனா இந்த விஷயம் திடீர்னு எங்களுக்கு தெரிய வர அது அதிர்ச்சியா இருக்கு அதான்” என்றார் .

கௌசி சிரித்து கொண்டே , “அண்ணா நம்ம ஸ்ருதியை பத்தி எனக்கு நல்லா  தெரியும் , அவ யோசிக்காம எதுவும் செய்ய மாட்டா ,  பொறுப்பானவ , உன் மேல உயிரையே வச்சிருக்கா “

“ஆனா அவ மனசையும் நாம புரிஞ்சுக்கணும் இல்லையா , இந்த காலத்தில் சூழ்நிலை அப்படி இருக்குண்ணா , ஆணும் பொண்ணும் பழக எவ்வளவோ வாய்ப்பு இருக்கு  ,  ஸ்ருதி ஒருத்தனை செலக்ட் பண்ணி இருக்கான்னா யோசிக்காம பண்ணி இருக்க மாட்டா… இல்லையாண்ணா” என்று கேட்டாள் .

ஆமா கௌசி ,  “இந்த வயசுல காதல் வரது இயற்கை தான் “,  “ஆனா பெத்தவங்களா நாம எல்லாத்தையும் யோசிக்க வேண்டியது இருக்கு இல்லையா “.

“குழந்தைங்களோட சந்தோசம் தான் முக்கியம் ,  அதுக்கு மேல என்ன இருக்கு ,

பாக்கலாம் மா , அவங்க ரெண்டு பேர் ஜாதகம் மட்டும் பொருத்தமா இருக்கணும் , எனக்கு அது தான் யோசனையா இருக்கு ,  நம்ம குடும்பத்துக்கு கடவுள் , ஜோதிடம் இதிலெல்லாம் எவ்வளவு நம்பிக்கை இருக்குன்னு உனக்கு தெரியும்ல மா “,

“இதெயெல்லாம் சாக்கா சொல்லி அவ விருப்பத்தை தடை போடா போறதில்ல ..

ஆனா அதுல இருக்கிற உண்மையை நாம புரிஞ்சுக்கணும் ,  பெரியவங்க சும்மா இதை எல்லாம் சொல்லிட்டு போகல ,  நான் ஆண்டவனை வேண்டுகிறதெல்லாம் இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்தனும் , அவங்க நல்லா இருக்கணும் அதான்” என்றார் .

“கவலை படாதாண்ணா , எல்லாம் நல்ல படியா நடக்கும் , எதுவும் கரணம் இல்லாம நடக்கிறதில்ல , நல்லதே நடக்கும் ” என்று கூற ,

கூட பிறந்தவளின் வார்த்தைகள் அவருக்கு தெம்பு தர ,  “சரி கௌசி, எனக்கு உன்கூட பேசினப்புறம் மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கு ” என்றார்.

“சரிண்ணா , “வா!  நாம இப்பவே போய் ஜோதிடரை பாத்துட்டு வந்திறலாம்”,  என்று கிளம்ப…

அதற்குள் சுமதி உணவு ரெடி பண்ணியிருந்தார் .

  “சரி வா சாப்பிடலாம்” என்று அவர் அழைக்க , உள்ளம் சொல்வதை நாம் செய்ய வேண்டுமானால் உடலும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா… அதனால்   அனைவரும் “வயிற்றுக்கும் சிறிது ஈ ”   என்று  வள்ளுவன் சொன்னதை செயல் படுத்த சென்றனர் .

சாப்பிட்டு முடித்தவர்கள் மூவரும் ஜோதிடரை பார்க்க கிளம்பினர் .

பதினைந்து நிமிட பயணத்திற்கு பின் ஜோதிடர் அலுவலகம் அடைந்தவர்கள் ,ஏற்கனவே அங்கே நான்கைந்து பேர் காத்திருக்க ,  அவர்களும் சென்று காத்திருப்பு இருக்கையில் அமர்ந்தனர் .

முப்பது நிமிடம் முடிய… ஜோதிடர் இவர்களை அழைத்தார் ,  “வாங்க! வாங்க! இன்னைக்கு முகூர்த்த நாள் இல்லையா , அதான் கொஞ்சம் கூட்டம் அதிகமாயிருச்சு” , என்றார் .

அதனாலென்னங்க , பரவாயில்ல என்றார் சத்திய சீலன் .

“என்ன விஷயம் சொல்லுங்க ”  ஜோதிடர் .

“நம்ம ஸ்ருதி ஜாதகம் தான் பாக்கணும் “, என்று அந்த குறிப்பை கொடுக்க ,

“பாப்பாவோட ஜாதகமா , ஏற்கனவே பாத்தது தான் , இப்ப கல்யாண விஷயமா வந்திருக்கீங்களா ” என்று கேட்டார் .

மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு “ஆமாம்” என்று தலையாட்ட ,

ஜோதிடர் லேசான புன்னகையுடன் , சத்திய சீலனை நோக்கி ,  “உங்க பொண்ணோட

ஜாதகம் அருமையான ஜாதகம் … என்ன ஒண்ணே ஒண்ணு…  அவ கல்யாணம் மட்டும் அவ விருப்ப படி தான் நடக்கும் … இத நான் முன்னாடியே சொல்லி இருப்பேன் .. எதுக்கும் ஒரு காலம் வரணும் இல்லையா …  முன்னாடி அவ சின்ன பொண்ணு …

அப்பவே உங்ககிட்ட இதெல்லாம் சொல்லி குழப்ப வேண்டாம்னு சொல்லல” .

“இப்ப அதுக்கான நேரம் வந்திருச்சு … நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம் …

கல்யாணம் பண்ணி வைங்க, சந்தோசமா இருப்பாங்க” என்று சொன்னார் .

சத்யசீலனுக்கு மனதில் இருந்த பாரம் இறங்கியது . “ரொம்ப நன்றிங்க ” என்று ஜோதிடரிடம் விடை பெற்று மூவரும் கிளம்பினர் .

“ஆண்டவா ,  அனுமானம் மட்டுமே ஜோதிடருடையது .. நிர்மாணிப்பது நீயல்லவா ..

அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் ”  என்று இறைவனை வேண்டி விட்டு தனது வேலையே தொடர்ந்தார் .

EPISODE – 4

சென்னையில் மிதுனின்  வீட்டில்…

 அவன்  சற்று டல்லாக இருக்க  அவனுடைய அப்பா  பாலு , “என்னடா ஆச்சு , ஏன் சார் இவ்வளவு சோகமா இருக்கீங்க?…” என்று கேட்க ,

“அது ஒன்னும் இல்ல பாலு,   நான் உன்கிட்டயும்  சித்ரா கிட்டயும்  ஒரு விஷயம் சொல்லணும் … என்னை நீங்க ஃப்ரெண்ட் மாதிரி நடத்தினாலும்  இந்த விஷயத்தை சொல்றப்ப  கொஞ்சம் கூச்சமா இருக்கு …  ஆனா  இப்ப சொல்லித்தான் ஆகணும் பாலு” என்று சொல்லிக் கொண்டு  அவன் அம்மாவையும் ,  “சித்ரா இங்க வா !!”  என்றழைக்க ,   அவன் அம்மாவும்  அங்கு வந்து சேர்ந்தார்.

“அப்பா…  என் ஆபீஸ்ல  வேலை செய்ற  சுருதி  உங்களுக்கு தெரியும்ல” , என்று கேட்க  , அவன் அப்பாவுக்கு  அவன் என்ன சொல்ல வருகிறான்  என்று கொஞ்சம் புரிந்தது.

“சொல்லுடா எதுவா இருந்தாலும் சொல்லு ” என்று அவர் சொல்ல ,

” ஆமப்பா , நானும் சுருதியும்  ஒருத்தரை ஒருத்தர்  விரும்புறோம்பா …” என்று சொல்ல ,

“என்னடா சொல்ற  எங்களால நம்பவே முடியல,  உன்ன பத்தி எனக்கு தெரியும் நீ ஏதாவது இந்த மாதிரி  செய்வேன்னு ,  ஆனா  எனக்கு சுருதிய   முன்னாடியே தெரியுமேடா .. அந்த பொண்ணு  லவ் எல்லாம் பண்றாளா?  ”   என்று ஆச்சரியமாக கேட்டார்.

அவர் அம்மாவும்  சிரித்துக் கொண்டே ,  “சரிடா!   இப்ப  நாங்க என்ன பண்ண?.  அவங்க அம்மா அப்பா கிட்ட பேசணும் இல்லையா … பேசலாம்டா ,   அவங்க அம்மா அப்பா ஒத்துக்கிட்டா  மேற்கொண்டு  கல்யாணம் பண்றது பத்தி பேசலாம்…  

இல்லன்னா நீ சோகமா  சீன் எல்லாம் போடக்கூடாது … அப்புறம்  இந்த  ஓடிப்போய் கல்யாணம் பண்ற வேலையெல்லாம்  பண்ண கூடாது .. அவங்க ஒத்துகிட்டா  நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறோம் .   இல்லன்னா  மறந்துட்டு  வேற பொண்ணு பார்த்து  கட்டிக்க”   என்று சொல்ல ..

“ஏம்மா  நல்லாத்தானம்மா பேசிட்டு இருந்த … அப்புறம் திடீர்னு என்ன வேற மாதிரி பேசுற …  நானும் சுருதியும்  உயிருக்கு உயிரா  லவ் பண்றோம் .. அவங்க அப்பா அம்மா  ஒத்துக்கிட்டா  நான் அவளை கல்யாணம் பண்ணிக்குவேன் ..  இல்லன்னா  வேற பொண்னெல்லாம்   என்னால  நினைச்சு கூட  பாக்க முடியாது .   என்று சொன்னான்.

“சரிடா  இப்ப என்ன அதுல என்ன பிரச்சனை”  என்று கேட்டார் அவனது அப்பா.

“பிரச்சனை  என்னென்னா இப்போ அவங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிருச்சு .. அவங்க ரெண்டு பேரும்  திடீர்னு ஒரு நாள் ஆபீஸ் வந்திருந்தாங்க…  அன்னைக்குன்னு பார்த்து  நானும் ஸ்ருதியும்   பைக்ல வெளியில ஒண்ணா போயிட்டு  அப்பதான் நான் ஆபீஸ்க்குள்ள நுழைஞ்சோம் ..   அப்ப  அவங்க எங்கள பார்த்தாங்க..  வேற வழி இல்லாம  நாங்க எங்க காதல அவங்க  கிட்ட சொல்லிட்டோம்”.

“அவங்க அப்பா  கோவிச்சுக்கிட்டு  திருச்சி கிளம்பி போயிட்டாரு .  சுருதி  அதுக்கப்புறம் ஊருக்கு கிளம்பி போனா …  இப்ப என்னன்னா அவங்க அப்பாவுக்கு சுருதி இப்படி பண்ணிட்டா அப்டிங்கறத அவரால நம்ப முடியல , அவருக்கு பெரிய ஷாக்”…  

“ஆனா  அதுக்கப்புறம்  சுருதி மேல வைத்திருந்த  பாசத்தால  அவர்  எங்க காதல புரிஞ்சுகிட்டாரு …”   ஆனா   இப்போ என்னன்னா சுருதி   அப்பா தன் மேல  வெச்சிருந்த   நம்பிக்கையை  உடைத்துவிட்டோமே  அப்படின்னு பீல் பண்றா  …  அதனால  கொஞ்ச நாள் கழிச்சு  அவங்க அப்பா  முழு மனசா  சம்மதிக்கட்டும் அப்புறம்   நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…  அதுவரைக்கும்  நாம காண்டாக்ட் எதுவும் பண்ண வேண்டாம்  அப்படின்னு சொல்லிட்டா” என்று சொல்லி முடித்தான்  .

“அதுக்கு நீ என்னடா சொன்ன ” அவன் அப்பா கேட்க ,

“நானும் சரின்னு சொல்லிட்டேன் பாலு ,  எனக்கும் இப்ப கனடா போற offer வந்திருக்கு பாலு , ரெண்டு வருஷம் கம்பெனில இருந்து என்னை அனுப்பறாங்க,  நானும் போலாம்னு இருக்கேன் .  போயிட்டு வந்து இத பத்தி பேசலாம்னு இருக்கேன்” என்று சொல்ல…

“என்னடா திடீர்னு கனடா போறேன்னு சொல்ற … உன்னை விட்டுட்டு நானும் அப்பாவும் எப்படிடா தனியா இருக்கறது.. வேணும்னா எங்களையும் உன் கூட கூட்டிட்டு போ ” என்று அவன் அம்மா சொல்ல ,

” சித்ரா , அதெல்லாம் உடனே பண்ண முடியாது.. ரெண்டு வருஷம் தானே .. டக்ன்னு போயிடும்” என்று சொல்ல ,

அவன் அப்பா ,  “டேய் மிதுன் நீ போயிட்டு வா” என்று சொன்னார்.

அவன் அம்மா … ” சரி டா எப்ப கிளம்பற?” என்று கேட்க ,

“ஒரு மாசத்துக்குள்ள கிளம்பணும்மா ”  என்று சொன்னான்.

அவன் அம்மாவுக்கு முகம் கவலையாய்  மாற , “சித்ரா ஒன்னும் இல்ல சித்ரா .. நான் சீக்கிரமா போயிடு வந்திர்றேன் ..என்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ,

“சரி,  இப்ப ஹரிஷ் வர சொன்னான் நான் போய் அவனை பாத்துட்டு வந்துர்றேன் “என்று கிளம்பினான் .

ஹரிஷ் வீட்டுக்கு மிதுன் செல்ல அங்கே ஏற்கனவே ஷ்யாமும் இருந்தான் .

மிதுனை பார்த்து , “வாடா மச்சி ” என்று ஹரிஷ் அழைக்க ,

“நீ எப்படா வந்த?”  என்று ஷ்யாமை கேட்ட படி மிதுன் உள்ளே சென்றான் .

” சும்மா தாண்டா … வீட்ல போர் அடிச்சது .. அதான் இங்க வந்தேன்”  என்று சொன்னவன் ,

“ஏன்டா மிதுன் உங்க அம்மா அப்பாகிட்ட சொன்னயாடா , அவங்க என்ன சொன்னாங்க” என்று கேட்டான் ஹரீஷ்.

“எங்க வீட்ல பெருசா யோசிக்கலடா ,  அவங்களுக்கு என் சந்தோசம் தான் முக்கியம் “,

“அதனால உன் விருப்பம்னு சொல்லிட்டாங்க “…  ”  அப்புறம் நான் கனடா போறது தான்

அம்மாவுக்கு  கஷ்டமா இருக்கு .. அவங்களுக்கும் வயசாயிடுச்சு இல்லையா … நான் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க “.

“உங்கள நம்பி தாண்டா நான் கிளம்புறேன் … நீங்க ரெண்டு பேரும் அவங்கள அப்பப்ப போய் பாத்துக்கங்க ” என்று சொன்னான்.

“டேய், இதெல்லாம் சொல்லணுமாடா, நீ தைரியமா போயிட்டு வா ,  நாங்க பாத்துக்கறோம் “, என்று நண்பர்கள் சொன்னார்கள்.

“ஓகே டா மச்சி , இன்னும் பத்து நாள்ல விசா வந்திரும் ,  உடனே கிளம்ப மாதிரி இருக்கும்டா ” என்று கூறியவன்…

“சரி டா , நான் கிளம்புறேன் …  திங்ஸ் எல்லாம் ரெடி பண்ணனும், அப்புறம் நாளைக்கி

நம்ம ஷாப்பிங் போய்ட்டு வந்திரலாம் free பண்ணிக்கங்கடா ”  என்று சொன்னவாறு கிளம்பினான் .

பதினைந்து நாட்கள் கடந்து விட்டது .

மறுநாள் மிதுன் கிளம்ப வேண்டும்.  ஸ்ருதியை அழைத்து, ” நான் கிளம்புறேன் ஸ்ருதி … ரொம்ப முக்கியம்னா call me ” என்று சொல்ல ,

அவனை அவ்வளவு நாட்கள் பிரிவது அவளுக்கு மனதில் எதோ அழுத்தத்தை தர ,

அதை மறைத்து கொண்டு , “ஓகே டா மிதுன் …  take care ” என்று சொன்னவள்…

“மிதுன்”  என்று அழைக்க ,

“சொல்லு ஸ்ருதி ” என்று அவன் சொல்ல…

“இப்ப நீ கிளம்பறப்ப கூட நான் உன்கிட்ட அதிகம் பேசலன்னு ஏதும் நினைக்கிறியா ” என்று கேட்க ,

“ஸ்ருதி உன் மனசும் என் மனசும் எப்பவோ ஒண்ணாயிடுச்சு , நீ எதுவும் தனியா என்கிட்டே சொல்லணும்னு இல்ல “,  “நீ freeya இரு , கண்டிப்பா நாம நல்லா இருப்போம் ” என்று சொன்னான்.

மறுமுனையில் ஸ்ருதி கசிந்த விழிகளோடு “சரிடா bye ” என்று விடை கொடுத்தாள் .

மிதுன் கனடா கிளம்பும் நாள்…

மிதுனை அழைத்து கொண்டு காலையிலேயே அருகில் இருக்கும் கோவிலுக்கு அவனது அம்மாவும் அப்பாவும் சென்றனர் .  ஒருபுறம் மகன் வெளிநாட்டு வேலைக்கு செல்வது பெருமையாக இருந்தாலும் ,  மனம் தைரியத்தை கொஞ்சம் இழந்தது போல் இருந்தது அவனது அப்பாவுக்கு . 

ஆனால் தான் கொஞ்சம் கலங்கினாலும் தன் மனைவி முழுதும் உடைந்து விடுவாள்என்று அவருக்கு தெரியும் .  

அதனால் எதையும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டி கொண்டார் . 

அவர் தைரியமாக இருப்பது போல் நடிப்பது மிதுனின் அம்மாவுக்கு நன்றாக தெரியும் …. இருபத்தேழு வருட வாழ்க்கை  … அத்தனை சுகதுக்கத்தையும் ஒன்றாக அனுபவித்து பழகியவர்கள் …  தன கணவனை பற்றி அவருக்கு தெரியாதா .  உண்மையிலேயே மிதுனின் அப்பா தான் உடைந்து போய் இருக்கிறார்  என்பது சித்ராவுக்கு நன்கு தெரியும் .

அவரும் நடித்தார் தன் கணவருக்கு இணையாக ..

கோவிலில் தெய்வத்தை இருவரும் மனமுருகி வணங்கினர் .. “இறைவா  என் மகனை பத்திரமாக திரும்ப கொண்டு வந்து எங்களிடம் சேர்த்துவிடு” என்று வேண்டி கொண்டனர் .

பின் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர் .

மிதுன் அக்கம்பக்கத்தில் போய் தான் கிளம்புவதை சொல்லி விட்டு , தான் அப்பா அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு வந்தான் .

அவர்கள் அனைவரிடமும் மிதுனின் குடும்பம் நன்றாக பழகி வந்ததால் ,  அவர்கள் அனைவரும் அவனிடம்,  “அவன் அப்பா அம்மாவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் .. நீ  தைரியமாக சென்று வா ” என்று கூறி அனுப்பி வைத்தனர் .

சற்று நேரத்தில் ஹரிஷும் , ஷ்யாமும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“என்னடா ,மச்சி ரெடியா போலாமா ?, பிளைட்டுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு “, என்றான்.

“ஏப்பா , நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரம் வரலாம்ல ” என்று மிதுனின் அம்மா கேட்டார் .

“எங்க ஆண்ட்டி ,  ஷ்யாமுக்கு அவன் வருங்கால wife இடம் இருந்து permission கிடைக்க”, என்று ஹரிஷ் சொல்ல…

ஷியாம் அவனை முறைத்து கொண்டே , “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா  , என் பாடு  இவனுக்கு கிண்டலா போச்சு ” என்று சொன்னான் .

“விடுப்பா , கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் சரியா போய்டும் என்று அம்மா சொல்ல “

” ஆமா  ஆண்ட்டி கண்டிப்பா எல்லாம் போய்டும் ” என்று மீண்டும் ஹரிஷ் இவனை வம்புக்கு இழுக்க ,

“டேய் ” என்று ஷியாம் ஹரிஷை அடிக்க கையை ஓங்கினான் .

“சரி சரி வாங்கப்பா ,  நீங்க ரெண்டு பேரும் எதாவது சாப்புடுறீங்களா ” என்று கேட்க ,

“இல்லம்மா ஏற்கனவே time ஆயிடுச்சு ,  இப்ப கிளம்புனா தான் சரியாய் போய் பிளைட்ட  பிடிக்க முடியும் வாங்க கிளம்புவோம்” என்று கூறினான் ஷியாம் .

அனைவரும் ஏர்போர்ட்டுக்கு கிளம்பினர் .

EPISODE – 5

ஏர்போர்டுக்கு செல்லும் வழியிலேயே அனைவருக்கும் மனம் கனமாகி இருந்தது .

ஒருவருக்கொருவர் அதிகம் பேசி கொள்ளவில்லை .

ஏர்போர்ட்டை அடைந்ததும் அனைவரும் இறங்க… மிதுனின் அம்மாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழுது விட்டார் .  அவர் அழுவதை பார்க்கும் போது

ஷ்யாமுக்கும் ஹரிஷிர்க்குமே மனம் கனமாகி இருக்க, அதை வெளிக்காட்டி கொள்ளாமல் , அம்மா விடுங்கம்மா … மிதுன் வேலைக்கு தான போறான் .. ரெண்டு வருஷம் தானே , டக்குன்னு போயிடும்…

“அவன் கிளம்புறப்போ நீங்க அழுதா அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா . please

கொஞ்சம் control பண்ணுங்கம்மா ”  என்றான் ஹரிஷ் .

அவர் அழுகையை அடக்கி கொண்டு மிதுனை பார்க்க , இப்போது அவன் கண்ணிலும் நீர்த்துளி .   அடக்கிக்கொண்டு மெதுவாக சிரித்து கொண்டே ,

“சித்ரா … ரெண்டே வருஷம் தான சித்ரா ..  இப்பென்ன!..  எல்லா வசதியும் இருக்கு , நினைச்ச நேரத்துல வீடியோ கால் பேசிக்கலாம் . தைரியமா இருக்கணும் ஓகேவா “

என்று சொல்லி விட்டு , அப்பாவை பார்த்து  “அப்பா , வரேன் பா ” என்று கூற ,

அழுகையை கட்டுப்படுத்தி கொண்டவர் தொண்டையில் கண்ணீரை  விழுங்கினார் .

நண்பர்களை தழுவி  “வரேண்டா மச்சி” என்று சொன்னவனை அணைத்த நண்பர்கள் மிதுனின் முதுகில் கைகளால்  தடவி  “நாங்க பாத்துக்குறோம் டா , நீ கவலை படாமல் போய்ட்டு வா”  என்று உணர்த்தினர் .

உள்ளே நுழையும் இடத்தில luggage ஐ கொடுத்து விட்டு,

போர்டிங் பாஸ் வாங்கியவன் , செக்கிங்கில் ஆவணங்களை காட்டி விட்டு உள்ளே சென்றவன் திரும்பி ,  அம்மா அப்பா மற்றும் நண்பர்களை பார்த்து கை அசைத்து விட்டு உள்ளே காத்திருப்பு அறைக்கு சென்று விட்டான் . 

மும்பை சென்று அங்கிருந்து இரண்டு flight மாறி தான் கனடா செல்ல முடியும் .

சற்று நேரத்தில் ஒலிபெருக்கியில் ” மும்பை செல்லும் பயணிகள் தயாராக இருக்கவும் , சில மணி துளிகளில் விமானம்  புறப்படும்  ” என்று அறிவிப்பு வந்தது .

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ,  “பயணிகள் அனைவரும் விமானத்திற்கு அழைக்க படுகிறீர்கள் ” என்று அறிவிப்பு வந்தது .

சிறிய briefcase ஐ எடுத்து கொண்டு பிளைட்டை நோக்கி சென்றான் .

ஸ்டெப்ஸ் ஏறி உள்ளே நுழைந்ததும் ” welcome to indian airlines ” என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் அழகு சிலை ஒன்று வரவேற்றது .

மென்மையாக சிறிது கொண்டே அவனது இருக்கையை காண்பிக்க மிதுன் “thank you ” சொன்னவாறே நகர்ந்தான் .

பிளைட் கிளம்பியது … இரண்டு மணி நேரம் சட்டென்று கரைய மும்பை விமான நிலையம் வந்தது . 

அங்கே இறங்கியவன் கனடா செல்லும் விமானத்திற்காக சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது .

தனது மொபைல் ஐ எடுத்து டயல் செய்தான் .

மறுமுனையில் அப்பா எடுத்தார் .

“அப்பா , மும்பை வந்துட்டேன் பா , கனடா பிலைட்டுக்கு இன்னும் time இருக்கு பா .  அதான் உங்ககிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன் பா ” என்றான்.

“என்னடா மிதுன் first time flight ட்ராவல் , ஒன்னும் சிரமமா இல்லையே ” என்றார்.

அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , flight கிளம்பும் போது  ஒரு மாதிரி இருந்தது . அப்புறம் normal ஆயிடுச்சு பா ” என்றான் .

“எப்படியோ டா மிதுன் நீ நல்ல படியா போய்ட்டு வரணும் ” அது வரைக்கும் எனக்கும் உங்க அம்மாவுக்கும் உயிர் இருக்காது, நீ எல்லாத்துலயும் கவனமா இருக்கணும் சரியா ” என்று சொல்ல ,

“சரிப்பா ” , என்றான் சிரித்து கொண்டே அப்பா இன்னமும் நம்மள சின்ன பையனாவே நினைச்சிட்டு இருக்கார் என்று மனதில் நினைத்துக்கொண்டே.

“சரிப்பா நீங்களே அம்மா கிட்ட சொல்லிடுங்க , நான் மும்பை வந்துட்டேன்னு , இப்ப நான் பேசின அம்மா அழ ஆரம்பிச்சுடுவாங்க … நான் கனடா போய்ட்டு அப்புறம் அங்கே வேற நம்பர் வாங்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன் , போன் வைக்கிறேன் பா “

என்று கூறிவிட்டு போன் ஐ cut செய்தான்.

சில மணி நேர காத்திருப்புக்கு பின் ‘கனடா செல்லும் விமானம் வந்து விட்டதாகவும் , பயணிகள் அனைவரும் தயாராக இருக்கவும்’ என்று  ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிவிப்பு வந்தது .

அடுத்த இருப்பது நிமிடங்களில் கனடா செல்லும் விமானத்தில் மிதுன் அமர்ந்து இருந்தான் .

“நமது விமானத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் , நீங்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி , இப்போது நமது விமானம் கிளம்ப போகிறது , பயணிகள் அனைவரும் தங்கள் சீட்

பெல்ட்டை அணியவும் ” என்று அழகிய மங்கை ஒருத்தி அறிவிப்பு செய்தாள் .

சிலருக்கு பெல்ட் அணிய உதவியும் செய்தார்கள் .

சற்று நேரத்தில் flight கிளம்பியது .

“நமது விமானம் இப்போது மூவாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது , உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் அழைக்கவும் , நாங்கள் காத்திருக்கிறோம் ” என்று அறிவித்தாள் ஒரு ஏர் ஹோஸ்டஸ் .

சிலர் உணவு கேட்க , அவர்களுக்கு தேவையானது கொடுக்கப்பட்டது .

மிது்னிடம் சார் உங்களுக்கு soft or hard drink என்று கேட்க , ‘some juice ப்ளீஸ்’  என்றான் .

yes sir என்று சொன்னவள் ஐந்து நிமிடங்களில் “here is your juice sir” என்று புன்னகையுடன் நின்றாள் .  thanks  என்று புன்னகையுடன் அதை வாங்கி கொண்டான் .

அதன் பின் இரண்டு  மணி நேரம் ஆகியிருக்க ,  விமானதில் எதோ சத்தம் கேட்க , 

விமான பணிப்பெண்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓட ,  “passengers பயப்பட வேண்டாம் , இன்ஜினில் ஒரு சிறு கோளாறு , சீக்கிரம் சரி செய்ய படும் , யாரும் பயப்பட வேண்டாம் , உங்கள் சீட்டுக்கு மேல் பொருத்தி இருக்கும் oxygen மாஸ்க்கை எடுத்து வைத்து கொள்ளுங்கள் ” என்று அறிவிப்பு செய்தார்கள் .

பயணிகள் அனைவரும் பீதியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ,

சில நொடிகளில் விமானம் “தட தட”  என்று ஆட தொடங்கியது . பயணிகள் கத்த தொடங்க … சிலர்  பயத்தில் மயங்கி சரிய ,  விமானத்தின் இறக்கையில் கரும் புகை சூழ்ந்தது.  ஒரே நிமிடம் தான் விமானம் வெடித்து சிதறியது .. அப்படியே இந்திய பெருங் கடலில் விழுந்தது …

மும்பை விமான நிலையம் அதிர்ந்தது .. அதிகாரிகளும் , பணி பெண்களும் அங்கே இங்கே ஓட , பயணிகள் என்னவாயிற்று என்று விசாரிக்க ,

“மும்பையிலிருந்து கனடா புறப்பட்டு சென்ற விமானம் வெடித்து சிதறி விட்டது ”  என்று சொன்னார் ஒரு அதிகாரி .

விமான பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்த பட்டது .

சில நிமிடங்களில் தொலைக்காட்சி்யில் பிரேக்கிங் நியூஸ் இல் செய்தி ஒளிபரப்பாக

மிதுனின் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பரபரப்பாக ,

மிதுனின் வீட்டில் அவனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நியூஸ் தெரிய வர ,

“ஐயோ மிதுனு! “, என்று அவனது அம்மா அப்படியே மயங்கி சரிந்து விழ ,

“ஐயோ! ஐயோ!”  என்று அவனது அப்பா சுவற்றில் தலையை முட்டி கொண்டு அழ,

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர் .

ஹரிஷும் , ஷ்யாமும் பதறி அடித்து கொண்டு மிதுனின் வீட்டுக்கு ஓடி  வர,

டேய் ஹரிஷு கேட்டியாடா , ” மிது நம்மள விட்டு ஒரேயடியா பறந்து போய்ட்டானமடா , என்று கதற நண்பர்களும் “அப்பா ” என்று கட்டிக்கொண்டு அழ பார்த்து கொண்டிருந்தவர்களுக்கும் நெஞ்சம் கனமாகி தன்னை அறியாமல் கண்ணீர் விட்டனர் .

பெண்கள் சிலர் அவனது அம்மாவை தூக்கி மயக்கம் தெளிய வைத்து,  அவரது அழுகையை சமாதான படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்தனர் .

சற்று நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அனைவரும் மிதுன் வீட்டுக்கு வர ,

அதே நேரத்தில் ஸ்ருதி கதறி கொண்டு அங்கே ஓடி வர  அவளது அம்மா அப்பாவும்  

அங்கே வர ,

மிதுனின் அம்மா ஸ்ருதியை பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் …

“எம்மாடி …. நீ இப்படி தான் என் வீட்டுக்கு முதல்ல வரணுமா? அய்யோ” என்று அழ …  ஸ்ருதி அப்படியே விக்கித்து நின்றவளுக்கு அழுகை தொண்டை குழியில் அடைத்து நிற்க அவளால் அழ முடியவில்லை ….  பிரமை பிடித்தவள் போல் , மிதுன் இறந்ததை நம்ப முடியாமல் அப்படியே நின்றாள் .

இந்திய பெருங்கடலில் அத்தனை பேரின் உயிரை குடித்த பிளைட்டின் பாகங்கள் எங்கெங்கோ மிதக்க,  பலரின் உடலும் சிதறி மிதந்து கொண்டிருந்தது .

அங்கே ஒரு தீவு … அந்த தீவின் கரையோரத்தில் சில ஆதிவாசி சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருக்க , 

அவர்களில் ஒருவன் ஒரு மர கிளையை கொண்டுவந்து ,

“டேய், நீ இதில் உட்கார் ” என்றான் எதோ மொழியில் சொல்ல

அவன்  “சரி ” என்று சொல்லி அதன் மீது அமர்ந்து கொண்டான் .

இன்னொருவன் கிளையின் மறு பக்கத்தை பிடித்து இழுத்து கொண்டு ஓடினான் ,

அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டு இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் அந்த கிளை உடைந்து விட்டது.

“சரி வாடா வேறு கிளையை எடுத்து விளையாடலாம் ” என்று இருவரும் கிளையை

தேடி கொண்டு போக ,  அந்த மங்கலான வெளிச்சத்தில் தூரத்தில் ஒடிந்த கிளை ஒன்று கிடந்தது .

அதை பார்த்தவுடன் இருவரும் சந்தோசமாக அதை நோக்கி ஓடினர் .

ஓடி கொண்டிருந்த ஒருவனின் காலில் எதோ இடற , அந்த மாலை நேர மெல்லிய வெளிச்சத்தில் அவன் அதை என்னவென்று பார்க்க , அங்கே மிதுனின் உடல் பெரும் காயங்களுடன் ஒதுங்கி இருந்தது ..

EPISODE – 6

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர் .

ஹரிஷும் , ஷ்யாமும் பதறி அடித்து கொண்டு மிதுனின் வீட்டுக்கு ஓடி  வர,

டேய் ஹரிஷு கேட்டியாடா , ” மிது நம்மள விட்டு ஒரேயடியா பறந்து போய்ட்டானமடா , என்று கதற நண்பர்களும் “அப்பா ” என்று கட்டிக்கொண்டு அழ பார்த்து கொண்டிருந்தவர்களுக்கும் நெஞ்சம் கனமாகி தன்னை அறியாமல் கண்ணீர் விட்டனர் .

பெண்கள் சிலர் அவனது அம்மாவை தூக்கி மயக்கம் தெளிய வைத்து,  அவரது அழுகையை சமாதான படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்தனர் .

சற்று நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அனைவரும் மிதுன் வீட்டுக்கு வர ,

அதே நேரத்தில் ஸ்ருதி கதறி கொண்டு அங்கே ஓடி வர  அவளது அம்மா அப்பாவும்  

அங்கே வர ,

மிதுனின் அம்மா ஸ்ருதியை பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் …

“எம்மாடி …. நீ இப்படி தான் என் வீட்டுக்கு முதல்ல வரணுமா? அய்யோ” என்று அழ …  ஸ்ருதி அப்படியே விக்கித்து நின்றவளுக்கு அழுகை தொண்டை குழியில் அடைத்து நிற்க அவளால் அழ முடியவில்லை ….  பிரமை பிடித்தவள் போல் , மிதுன் இறந்ததை நம்ப முடியாமல் அப்படியே நின்றாள் .

அங்கே …

இந்திய பெருங்கடலில் அத்தனை பேரின் உயிரை குடித்த பிளைட்டின் பாகங்கள் எங்கெங்கோ மிதக்க,  பலரின் உடலும் சிதறி மிதந்து கொண்டிருந்தது .

அங்கே இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் …

 ஒரு தீவு … அந்த தீவின் கரையோரத்தில் சில ஆதிவாசி சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருக்க , 

அவர்களில் ஒருவன் ஒரு மர கிளையை கொண்டுவந்து ,

“டேய், நீ இதில் உட்கார் ” என்றான் எதோ மொழியில் சொல்ல

அவன்  “சரி ” என்று சொல்லி அதன் மீது அமர்ந்து கொண்டான் .

இன்னொருவன் கிளையின் மறு பக்கத்தை பிடித்து இழுத்து கொண்டு ஓடினான் ,

அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டு இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் அந்த கிளை உடைந்து விட்டது.

“சரி வாடா வேறு கிளையை எடுத்து விளையாடலாம் ” என்று இருவரும் கிளையை

தேடி கொண்டு போக ,  அந்த மங்கலான வெளிச்சத்தில் தூரத்தில் ஒடிந்த கிளை ஒன்று கிடந்தது .

அதை பார்த்தவுடன் இருவரும் சந்தோசமாக அதை நோக்கி ஓடினர் .

ஓடி கொண்டிருந்த ஒருவனின் காலில் எதோ இடற , அந்த மாலை நேர மெல்லிய வெளிச்சத்தில் அவன் அதை என்னவென்று பார்க்க , அங்கே மிதுனின் உடல் பெரும் காயங்களுடன் ஒதுங்கி இருந்தது .

ஆம் மிதுனின் உடல் ஒரு தீவில் ஒதுங்கி இருந்தது .  அந்த தீவின் பெயர் சென்டினல் தீவு.

நண்பர்களே, இங்கே சென்டினல் தீவை பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் .

இங்கே கதைக்கு தேவை படுவதால் அதை பற்றி சிறு விளக்கம் . கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டுகிறேன் .

சென்டினல் தீவு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பகுதி .  அறுபது கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது . அந்த மான் நிகோபார் தீவின் ஒரு பகுதி .  அங்கு வாழும் மக்கள் சென்டினலீஸ் என்று அழைக்க படுவர். 

இவர்கள் வேறு மக்களை ஏற்று கொள்வதில்லை .  அவர்களின் தீவின் உள்ளே யாரையும்  அனுமதிக்க மாட்டார்கள் . சற்று ஆபத்தானவர்களும் கூட.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க மத பிரச்சாரகர் ஒருவர் அங்கு செல்ல முயன்ற போது சென்டினலீஸ் மக்களால் கொல்ல பட்டார் .

அவர்கள் வெளி மக்களால் தங்களுக்கு ஆபத்து எனவும் , வெளி மக்களால் தங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்றும் நம்புகின்றனர் . 

அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதும் இந்திய அரசால் சட்ட விரோதமாக கருதப்படுகிறது . வெளி தொடர்பு அற்ற ஒரு ஆபத்தான தீவு தான் சென்டினல் தீவு .

நமது கதைக்கு இந்த அளவு சென்டினல் தீவை பற்றி புரிதல் இருந்தால் போதும் .

ஆகையால் நாம் கதையை தொடருவோம் .

மிதுனை பார்த்த சிறுவர்கள் பயந்து கொண்டே அவனது அருகில் நெருங்கி பார்க்க ,

காயத்தின் வலியால் அவன் அனத்தி கொண்டிருந்தான் .   சிறுவர்கள் உடனே தீவுக்குள் ஓடி சென்று , அங்கே இருந்த பெரியவர்களிடம் ,  அங்கே கடற்கரையில் ஒருவன் காயங்களுடன் விழுந்து கிடப்பதை கூறினார்.

“டேய் பந்தத்தை பற்ற வைத்து எடுத்து வா  ” என்று சத்தமிட

சிறிது நேரத்தில் ஒருவன் தீ முழங்கும் ஒரு பந்தத்தை எடுத்து வந்தான் .

“அதை என் கையில் கொடு ” என்று தோற்றத்தில் கரடு முரடாக இருந்த ஒருவன் வாங்கினான் .

சிறுவர்களை நோக்கி ,  ” எங்கடா பாத்தீங்க , எங்களை அங்க கூட்டிட்டு போங்கடா “

என்று உறும ,

சிறுவர்கள் முன்னே நடக்க ,  பந்தம் ஏந்தி நடந்து வந்தவனுடன் இன்னும் சிலர்

வந்தனர் .  அனைவரும் கொஞ்சம் பயங்கரமான தோற்றத்துடனே இருந்தனர் .

சற்று தூர நடைக்கு பின் சிறுவர்கள் மிதுனை காட்ட ,

அருகில் சென்று தான் வைத்திருந்த கட்டையால் அவனை நகர்த்தியவர்கள் ,

அவர்களில் ஒருவன் “இவன் உயிரோடு தாண்டா இருக்கிறான் ” என்று தன கர கர குரலில் சொல்ல ,

“இவனை இப்போதே கொன்று விடலாம் , இவனால் நமக்கு  ஆபத்து தான்” என்று ஒருவன்  கூறினான் .

அப்போது அவர்களில் வயதான ஒருவர் ,  “டேய் பசங்களா , இன்னைக்கு அதி காலையில தூரமா எதோ வெடிச்ச சத்தம் கேட்டுச்சுடா என்று சொன்னவர் , இப்ப தாண்டா  எனக்கு என்னன்னு புரியுது என்று நிறுத்தியவர் …  அங்க பாத்தியா!!” என்று அவர் கடலை சுட்டி காட்ட,  அங்கே வெடித்த  விமானத்தின் எதோ ஒரு பகுதி மிதந்து கொண்டிருந்தது .

“இவன் இந்த விமானம் வெடிச்சதுல கடல்ல விழுந்து இங்க ஒதுங்கி இருக்கான் ” ,

“இவன் வேற எந்த நோக்கமும் இல்லாம தவறி போய் நம்ம தீவுல ஒதுங்கி இருக்கான் ”  , அதனால இவனை கொல்ல வேண்டாம் ” என்று சொன்னார் .

சென்டினல் மக்கள் பெரியவர்களின் வார்த்தையில் பொருள் இருக்கும் என்று முழுமையாக நம்புபவர்கள் .  அதனால் பெரியவரை பார்த்து , ” சரி இப்ப இவனை என்ன செய்யலாம் ” என்று கேட்க ,

முதலில் அவனுக்கு காயத்துக்கு மருந்து போடுவோம் , பிறகு மற்றதை பார்த்து கொள்ளலாம் என்று பெரியவர் சொன்னார் .

பின் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அவனை தூக்கி கொண்டு அவர்களது இருப்பிடம் நோக்கி சென்றனர் .

சென்றவர்கள் மிதுனை ஒரு குடிசைக்கு கொண்டு சென்று அங்கே இருந்த கயிற்று கட்டிலில் படுக்க வைத்தனர் .  அப்போதும் அவன் வலியால் அனத்தி கொண்டு தான் இருந்தான் .

“டேய் போய் மருத்துவரை கூட்டிட்டு  வா ”  என்று ஒரு பெரியவர் சொன்னார் .

“ஆகட்டும் , நான் போறேன்” என்று பற்களின் கறை தெரிய சொன்னவின் ‘தட  தட’ என்று வெளியே ஓடிச் சென்று கொஞ்சம் தொலைவில் இருந்து ஒரு பெரியவரை அழைத்து  வந்தான்.

அந்த குடிசைக்குள் நுழைந்த மருத்துவர் ,

“ஏப்பா , இப்படி கூட்டமா நிக்கறீங்க ,  காத்து வர இடம் விடுங்கப்பா ” என்று சொல்லி்க் கொண்டே வந்தவர் ,

“என்னப்பா இப்படி காயம் பட்டிருக்கு , எங்க இருந்து வந்தவன் இவன் ” என்று அங்கிருந்த பெரியவரிடம் கேட்டார் .

“நேத்து காலையில விமானம் ஒண்ணு வெடிச்சு கடலுக்குள்ள விழுந்திருக்கு ,  அதுல வந்தவனா இருப்பான் இவன் ,  கடலம்மா இவன நம்ம கிட்ட கொண்டு வந்து சேத்து விட்டிருக்கா ” என்றவர் ,

“ஏப்பா மருத்துவரே இவன காப்பாத்திரலாமா” என்று கேட்டார் .

EPISODE – 7

“காயமெல்லாம் கொஞ்சம் ஆழமா தான் இருக்கு ,  மருந்து போடுவோம் , அப்புறம் மேல இருக்கிறவன் விட்ட வழி ” என்று சொன்னவர் ,  “இருங்கப்பா நான் போய் மருந்து கொண்டு வரேன்”  என்று கூறிவிட்டு எழுந்து காட்டு பக்கம் செல்ல , கூடவே இரண்டு பேர் அவருடன் சென்றனர் .

சிறிது நேரம் கழித்து சில  பச்சிலைகளை கொண்டு வந்தார் . 

 அதை அரைத்து எடுத்து வர சொன்னவர் ,  அரைத்து வந்ததும்  அதன் சாறை எடுத்து

மிதுனின் காயங்களின் மீது பூசினார் .   சாறு காயத்தின் மீது பட்டதும் , எரிச்சல் தாங்க முடியாமல் மிதுன் சத்தமாக முனகினான் .  ஆனாலும் அவனால் கண்களை திறக்க முடியவில்லை . 

வேறு ஒரு மருந்து சாறை எடுத்து ,  ஒரு மூங்கில் குழாயை மிதுனின் வாயில் வைத்து

மறு முனையில் சாறை ஊற்றி அவனை விழுங்க வைத்தார் .

“சரிப்பா  ,  இவனுக்கு இப்ப வலி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடும் ,  நல்லா தூங்குவான் , நான் அப்புறம் வந்து பாக்குறேன் ”  என்று சொல்லி விட்டு கிளம்பினார். . 

காட்சி சாலையில்  வேடிக்கை பார்ப்பது போல் அங்கிருந்த குழந்தைகளும் , “பெண்களும் அவனை பார்த்து கொண்டிருந்தனர் .   “சரி எல்லோரும் கிளம்புங்கப்பா , யாரோ ரெண்டு பேர் மட்டும் இங்க இருந்து இவனை பாத்துக்கங்கபா ” என்று ஒரு பெரியவர் சொன்னார் .

மிதுன் மயக்கத்தில் இருக்க அங்கே இரண்டு பேர் அவனை பார்த்து கொள்ள ,  அந்த இரவு நடுநிசி தாண்டி சென்று கொண்டிருந்து .

சென்னையில் மிதுனின் வீட்டில் விபத்து பற்றி விசாரிப்பதற்க்காக போலீசார் வந்திருந்தனர் .

மிதுனின் அப்பாவும் , அம்மாவும் எதுவும் பேசும் நிலைமையில் இல்லை .

அவர்கள் அங்கே இருந்த ஹரிஷையும் , ஷ்யாமையும் அழைத்து ,

“ஏப்பா , நீங்க ரெண்டு பேரும் இறந்தவரோட friends ஆ ” என்று கேட்டவர்கள் ,

“மிதுன் என்ன விஷயமாக foreign சென்றான்” என்று கேட்க

“சார், நாங்கெல்லாம் ஒரே ஆஃபீஸ்ல் ஒர்க் பண்றோம் , மிதுனுக்கு அவனோட service

அடிப்படையில canada வில இருக்கிற எங்க கம்பெனியோட head office ல வேலை செய்யுற ஆபர் வந்திச்சு , ரெண்டு வருஷம் அங்க ஒர்க் இருக்கும் , அதுக்கப்புறம் இருக்கிற வாய்ப்ப பொறுத்து அவன் அங்கே continue பண்ணலாம் , இல்லன்னா இங்க வந்திறலாம் ” என்று ஹரிஷ் சொன்னான்

மேலும் சில விவரங்களை கேட்டு அறிந்தவர்கள் ,

“சரிப்பா , ஏர்போர்ட் ஆபீஸ் ல இந்த விபத்து  பத்தி எங்களுக்கு இன்னும் சில தகவல்கள் வேணும் , நாங்க அத வாங்கிட்டு உங்களுக்கு சொல்றோம் , அதுக்கப்புறம் கேஸ் பைல் பண்ணினா தான் உங்களுக்கு வேண்டிய certificates எல்லாம் தர முடியும்” என்று அவர்களிடம் சில ஆறுதல் வார்த்தைகளை கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினர் .

நான்கு நாட்கள் சென்றது .

அங்கே சென்டினல் தீவில்  ஆழ்ந்த மயக்கத்திலிருந்த  மிதுன் மெதுவாக கண்களை திறந்தான் .   சூரிய வெளிச்சம் குடிசைக்குள் விழ , அந்த வெளிச்சம்  சற்று அவனது கண்களை கூசியது .

மெல்ல மெல்ல கண்களை திறந்தவன் , சுற்றிலும் பார்த்தான் .

அங்கே இலை , தழைகளை அணிந்த ஆண்களும் , பெண்களும் , குழந்தைகளும் இவனையே உற்று பார்த்து கொண்டிருந்தனர் .   சட்டென பயந்து அதிர்ச்சியாகி எழ முயன்றவன் ,  கை கால்களில் இருந்த காயங்களால்  எழ முடியாமல் தடுமாறினான் .

அப்போது அங்கே இருந்த முதியவர் ,  தன் கருகரு பற்களை காட்டி அவனை பார்த்து சிரித்தார் .  அவர் மிதுனிடம் சைகையில் ‘பொறு பொறு அவசர படாதே ” என்று சொன்னவர் ,  பயப்பட வேண்டாம் என்று தன் கண்களை மெதுவாக மூடி திறந்து பார்வையால் உணர்த்தினார் .

(இங்கு இருவருக்கும் மொழி பிரச்சனை தான் .   ஆனால் எதோ ஒரு வகையில் அவர்கள் தாங்கள் நினைத்ததை பரிமாறிக்கொண்டார்கள் என்பதை  இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் ).

பின் சுற்றி இருந்தவர்களை பார்த்து, “இவன் உங்களை பார்த்து பயப்படுகிறான் , கொஞ்சம் வெளியே செல்லுங்கள் ” என்று சொன்னார் .

அவர்கள் அனைவரும் செல்ல , ஓரிருவர் மட்டும் உடனிருக்க , மீண்டும் பயப்படாதே என்று சொன்னவர் , இப்ப வலி எப்படி இருக்கு என்று சைகையால் கேட்டார் .

மிதுனுக்கு எதுவும் புரியாததால் பேந்த பேந்த முழித்து கொண்டு ” நான் இப்ப எங்க இருக்கேன் ” என்று தமிழில் கேட்க ,  இப்போது அந்த பெரியவரும் மற்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

” நீ பத்திரமா தான் irukka” என்று சொன்னவர் ,  “நீ யாரு ” என்று கேட்டார் . அப்போது தான் மிதுனுக்கு தான் வந்த விமானம் வெடித்து கடலுக்குள் விழுந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது .

“இது எந்த இடம்  நான் இப்ப எங்க இருக்கேன் ஐயா”  என்று கேட்டால் மிதுன் .

“தம்பி நீ பத்திரமா தான் இருக்க . ரொம்ப பயப்படாத !  நாங்க உன்னை எதுவும் செய்ய   மாட்டோம் .   நீ யாரு எங்கிருந்து வர்றேன்னு  சொல்ல முடியுமா”  அப்படின்னு கேட்டார் அந்த பெரியவர் .

“நான் இந்தியாவிலிருந்து  வருகிறேன் .   வேலைக்காக  கனடா செல்லும்  வழியில்  விமானம் வெடிச்சிருச்சு ஐயா .   நான் இப்ப உயிரோட இருக்கேன்னு  என்னால நம்பவே முடியல  ,  ஆமா  நான் இங்கு எத்தனை நாளா இருக்கேன்  ,  நீங்க எல்லாம் யாரு இது எந்த இடம் ,   கொஞ்சம் சொல்லுங்க ஐயா” , என்று கேட்டான் மிதுன்.

“தம்பி இது சென்டினல் தீவு  நாங்கள்  சென்டினிலையன்ஸ் ”  என்று அந்த பெரியவர் கூறியதும் , மிதுனுக்கு தூக்கி வரி போட்டது .    ‘சென்டினல் தீவா  இது  ரொம்ப ஆபத்தானிடம் ஆயிற்று’ ,  என்று  அவன் சென்டினல் தீவு பற்றி கேள்விப்பட்டதெல்லாம்  நினைவில் வந்து போனது .  அவர்கள் வெளி ஆட்கள் யாரையாவது பார்த்தால்  அவர்களை கொன்று விடுவார்கள்  என்றும் ,   அவர்கள் தீவில்  நுழைந்த யாரும்  உயிருடன் திரும்ப முடியாது  என்றும் கேள்விப்பட்டிருக்கிறான் . 

 அதெல்லாம் நினைவில் வந்து போக  அவன் பயந்தபடி  பீதியுடன் அந்த பெரியவரை பார்க்க ,  அவர் கறை  பற்களை  காட்டி சிரித்துக் கொண்டே ,  ‘எங்கள பத்தி வெளி உலகத்துல அப்படித்தான்டா பேசுகிறார்கள்’ .

” ஆனா நாங்க அவ்வளவு மோசமானவங்க இல்ல “,  எங்களுக்கும் குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் உண்டு ,     எங்களோட பாதுகாப்புக்காக  சில நேரத்துல  அந்த மாதிரி நடந்து இருப்போம் .   ஆனால் அதை வைத்து நாங்க அப்படித்தான்னு   எடை போடக்கூடாது .   உண்மைய சொல்லணும்னா  எங்க உலகத்துல சூதுவாது ஏதும் இல்ல.   ஆனா  உங்கள மாதிரி ஆளுங்கள கண்டா  எங்களுக்கு  தாண்டா பயமா இருக்கு”  என்று கூறி சிரித்தார் .

மிதனுக்கு இன்னும் பயமாகத்தான் இருந்தது .   அது பெரியவருக்கும் புரிந்தது .  போக போக புரிந்து கொள்வான் என்ற  நினைத்தவர் ,  “உனக்கு உடம்பு சரி ஆகிவிடும் தம்பி ,  அப்புறமா  நீ உன் நாட்டுக்கு  போற முயற்சியை  செய்யலாம் ,   நாங்களும் எங்களால  முடிஞ்ச உதவி செய்கிறோம் ,  நீ பயப்படாம இரு ,  இங்கு இருக்கிறத சாப்பிட்டு  நல்லா ரெஸ்ட் எடு .  முடிஞ்சா எந்திரிச்சு நடக்க முயற்சி செய்”  என்று சொன்னவர் ,  அங்கு இருந்த சிலரை பார்த்து  “இவனுக்கு ஏதாவது வேணும்னா செஞ்சு கொடுங்கப்பா”  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் .

இப்போது  இரண்டு  இளைஞர்கள்   அவனைப் பார்த்து  கிண்டலாக சிரித்துக் கொண்டே ,   “டேய்…   மனச கறி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுடா ,  சூப்பரா இருக்கும் தெரியுமா ?  இவனுக்கு சீக்கிரம் காயமெல்லாம் ஆறட்டும் , அப்புறமா  இவனை நாம் வேகவைத்து சாப்பிடலாம்”  என்று கூறினான் .  அந்த சிறுவர்கள் இவனைப் பார்த்து  எச்சில் ஊற…

EPISODE – 8

இப்போது  இரண்டு  இளைஞர்கள்   அவனைப் பார்த்து  கிண்டலாக சிரித்துக் கொண்டே ,   “டேய்…   மனுச கறி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுடா ,  சூப்பரா இருக்கும் தெரியுமா ?  இவனுக்கு சீக்கிரம் காயமெல்லாம் ஆறட்டும் , அப்புறமா  இவனை நாம் வேகவைத்து சாப்பிடலாம்”  என்று கூறினான் .  அந்த இளைஞர்கள்  இவனைப் பார்த்து  எச்சில் ஊற  பேசும் போது  இவனுக்கு  கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது .  

அதில் ஒருவன் சொன்னான்,  “டேய்,    அவனை வேக வைக்கும் போது  அவருடைய கண்ணு ,  காது  இதெல்லாம் எனக்கு தான்டா வேணும்,   செமையா இருக்கும் தெரியுமா சாப்பிட” ,   என்று கூறினான் .   இன்னொருவன்  “டேய்,  எப்பவாவது ஒரு தடவை தான் இந்த மாதிரி மாட்டுது ,   அதனால  நாம ரெண்டு பேரும்  பிரிச்சு சாப்பிட்டுக்குவோம்,   “உனக்கு ஒரு கண்ணு,  எனக்கு ஒரு கண்ணு” ,  “உனக்கு ஒரு காது,  எனக்கு ஒரு காது”  என்று ரைமிங்காக பாட்டு பாடுவது போல சொன்னான்.

அவர்கள் பேசுவதை கேட்டதும்  நடுக்கமாக வந்தது .  அதை பார்த்த சிறுவர்கள்  பெரியவர்கள் பார்த்தால் திட்டுவார்கள் என்று நினைத்து ,    இவனை பார்த்து  “பயப்படாதே,   சும்மா விளையாட்டுக்கு சொன்னோம்” என்று கூறினர் .    அப்போதும்  மிதுனுக்கு  முழுதாக  பயம் போகவில்லை .   

“சரி வாடா விளையாட போலாம்”  என்று சிறுவர்கள் இருவரும்  வெளியே ஓடி விட்டனர் .

அப்போது  அவனுக்கு உதவிக்காக  இரண்டு பேர் அங்கு இருந்தனர்.  அவர்கள் சிரித்துக் கொண்டே  “சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்கப்பா…   பயப்படாத நீ” என்றனர் .

மிதுனுக்கு  தனது அம்மா அப்பா , சுருதி  இவர்களின் நினைவு  வந்தது .    ‘அவர்கள் எப்படி இருக்கிறார்கள் ,    நான் உயிரோடு இருப்பது அவங்களுக்கு தெரியுமா ,    நான் இறந்து விட்டதாக நினைச்சா…  அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க… கடவுளே! அப்படி நினைச்சு   அவங்க ஏதும் பண்ணிக்க கூடாது’

என்று மனசு பலவாறு அடித்துக் கொண்டது.

சுருதியின் வீட்டில் ,

சுருதி இன்னும்  அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல்   பிரமை பிடித்தவள் போலவே இருந்தாள் .   மகளை அந்த நிலையில் பார்க்க முடியாமல் சுருதியின் அம்மா அப்பா இருவரும்  கலங்கி போயிருந்தனர் .

“சுருதி,   நீ இப்படியே இருந்தா  என்னம்மா பண்ண முடியும்,   வாழ்க்கை என்றால் நல்லது கெட்டது எல்லாமே கலந்து தான இருக்கும் ,   கவலை பட்டுட்டே  இருந்தா எல்லாம் சரியா போயிருமா? ,  உன்னோட இடத்தில இருந்து பார்க்கும்போது  உன்னுடைய இழப்பு எவ்வளவு பெருசுன்னு   எனக்கு  புரியுதும்மா,   ஆனா  பெத்தவனா என் பொண்ண இந்த நிலைமையில் என்னால் பார்க்க முடியலைம்மா .   தயவு செஞ்சு  எங்களுக்காக அதை மறந்து  கொஞ்சம் வெளியே வாமா” என்றார்  சத்தியசீலன் .

சுருதி அப்பாவை பார்க்க… அந்தப் பார்வை…  பெற்ற மனசை  எதோ  செய்ய…  அவர் கண்கள் தன்னை அறியாமல் கண்ணீர் சுரந்தது .   “ஐயோ செல்லம்,  உன்ன இப்படி என்னால  பாக்க முடியல டா”  என்று மனசு விட்டு கதறி அழுது  விட்டார்  ஸ்ருதியின்  அப்பா . 

இப்போது ஸ்ருதி  அவள் அப்பாவை பார்த்து,  “அப்பா  அழாதீங்கப்பா ,  நீங்க அழுகிறது  என்னால தாங்க முடியலப்பா,    நான்  இதிலிருந்து வெளியே வர முயற்சி செய்றேன்பா ,  என்னால் முழுசா வெளியே வர முடியுமான்னு தெரியல ,   ஆனா நீங்க சொன்ன மாதிரி  என்ன நடந்தாலும்  ‘life has to go on ‘  இல்லையா அப்பா ,   அதனால  நான் கண்டிப்பா வெளிய வந்துருவேன்  பா,   நீங்க அழுவதை நிறுத்துங்கப்பா ,  என்று அவள் அப்பாவுக்கு  சமாதானம் சொன்னார் .   

அப்பாவுக்கும் மகளுக்கும்  ஜூஸ் எடுத்து வந்தார் சுமதி .   ” இரண்டு பேரும்  இத கொஞ்சம் குடிங்க”,   என்று கொடுக்க  இருவரும் வாங்கிக் கொண்டனர் .   ஜூஸ் குடித்து முடித்ததும்  “சுருதி மா!    நீ குளிச்சிட்டு ரெடியா இரும்மா…  நாம அப்படியே கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்”  என்று சொன்னார் சத்தியசீலன் .

ஏன் எதற்கு என்று கேட்காமல்  சுருதி “சரிப்பா,  நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு  உள்ளே சென்றாள் .

சுருதி குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வர ,  அப்போது அங்கே ஹரிஷும், ஷியாமும்    வந்தனர் .     ஸுருதியின்  அம்மாவும் அப்பாவும்  அவர்களை பார்த்து  “வாங்கப்பா” என்று கூற ,    சுருதி  தன் காய்ந்து போன  கண்களால் அவர்களை பார்த்து வா ஷ்யாம் , வாடா ஹரிஷ் என்று  சொல்லச் சொல்லவே  ,  அடக்க முடியாமல் அவர்களைப் பார்த்து  அழுதுவிட்டாள்.    ஹரிசுக்கும் ஷாமுக்குமே  தங்களது அழுகையை அடக்க முடியவில்லை .     ஆனால்  தாங்கள் அழுதால்   ஸ்ருதி  மிகவும் உடைந்து விடுவாள் என்று புரிந்து கொண்டவர்கள் சுருதிக்கு  ஆறுதல் கூறினர் .

“ஸ்ருதி,   நீ இங்க வந்து  ஒரு மாசமாக போகுது ,  நீ எப்படி இருக்க என்ன பண்றேன்னு பாத்துட்டு போலாம்னு வந்தோம் சுருதி ,   நீ இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க போற,  ஆஃபீஸ்க்கு எப்ப வர போற”  என்று கேட்டேன் ஷ்யாம் .

“நான் இப்ப இருக்கிற நிலைமையில  ஆபீஸ் ஒர்க்  பாக்க முடியாது  ஷ்யாம், அதனால நான் வேலையை விட்டுடலாம்னு  இருக்கேன்”  என்று ஸ்ருதி கூறினாள்.

“அப்படியெல்லாம் டக்குனு முடிவெடுக்க வேண்டாம்  சுருதி ,  அப்படியே நீ வீட்டில் உட்கார்ந்து இருக்க முடியாது .   நீ ஆபீஸ் வந்தேன்னா தான்  கொஞ்சமாவது உன்னோட மனசு மாறும் ,  உன்னோட சிந்தனை வேற பக்கம் போகும் ,  இப்போ நம்ம ஆபீஸ்க்கு வா சுருதி ,   அங்க உனக்கு பிடிக்கலைன்னா  வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் கூட வாங்கிக்கலாம்  அதுக்காக வேலையை விட்டுடாத   ஷ்ருதி” என்றான் ஹரிஷ் .

“சரி ஹரிஷ்! ,   எப்படி இருந்தாலும்  என்னால உடனே அங்க வர முடியாது,  கொஞ்ச நாள் ஆகட்டும்  நான் வரேன்”  என்று சொல்ல ,  

“ஓகே சுருதி ,   நாங்க மேனேஜர் கிட்ட பேசுறோம் ,  நீ கொஞ்ச நாள் கழிச்சு வா ,  சரியா…  தைரியமா இரு சுருதி”  என்று கூறியவர்கள்  “சரி ஸ்ருதி  நாங்கள் கிளம்புறோம்”  என்று கூறிவிட்டு  சுருதியின் அம்மா அப்பாவிடம்  சொல்லிவிட்டு  கிளம்பினர் .

நாட்கள் நகர நகர…  சுருதிக்கு  வீட்டில் இருப்பது மிகவும் அழுத்தத்தை கொடுத்தது .

அவளது அம்மா அப்பாவிற்கும்  அது பெரும் வேதனையாக இருப்பது  அவளுக்கு புரிந்தது .  அதனால் ஆபீஸ்க்கு சென்று விடலாம்  என்று முடிவெடுத்து  அப்பாவிடம் ,

” அப்பா  எனக்கு இங்க இருக்க ரொம்ப டிப்ரசனா இருக்கு ,   அதனால நான் திரும்ப வேலைக்கு  ஜாயின் பண்ணலாம் என்று இருக்கிறேன்”  என்று சொன்னாள் .

சத்தியசீலனுக்கும்  கொஞ்சமாக அவளுக்குள் மாற்றம் வர வேண்டும்,  அவளுக்கு ஒரு ரிலாக்சேஷன்  கண்டிப்பாக தேவை  என்று ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவர்…  சுருதி இப்படி கேட்டதும் , மன பார கொஞ்சம் குறைந்தது போல் உணர்ந்து  அவளிடம் ,

“சரிமா ,  உன்னோட இஷ்டம் தான்  எங்களோடதும் ,   நீ போய் ஒர்க் பண்ணி பாரு  உனக்கும் கொஞ்சம்  ரிலாக்ஸா  இருக்கும் , அப்பாவும் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்துக்கிறோம் ,   எங்களுக்கு நீ மட்டும் தான் டா இருக்க ,  அதை மட்டும் மனசுல வச்சுக்க… 

 என் பொண்ணோட சந்தோசம்  திரும்ப கிடைக்காதா ,   அப்படின்னு   ஏங்குற  ஒரு சாதாரண  மனசுள்ள  அப்பா தாம்மா  நான்.  நாளைக்கு  நானும் வரேன்..  உன்ன கொண்டு போய் விட்டுட்டு  நான் திரும்பி வந்துடறேன் சரியா”   என்று சொல்ல  சுருதி ஒரு வறட்டு  சிரிப்பை  உதிர்த்துவிட்டு  “சரிப்பா  நான் போய் டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன்”  என்று சொல்லிவிட்டு  அவள் அறைக்கு சென்றாள் .

அடுத்த நாள் சென்னையில் ,

IT ஆஃபிஸில் உள்ள cafe வில் ஷ்யாமும் , ஹரிஷும்  tea அருந்தி கொண்டிருந்தனர் … “ப்ரோ என்ன ப்ரோ டீ ரொம்ப தண்ணியா இருக்கு ” என்ற ஹரிஷை டீ கொடுக்கும் ஊழியர் முறைத்து கொண்டே ,  “தண்ணி விக்கிற விலைக்கு டீயில் தண்ணியெல்லாம் ரொம்ப கலக்க முடியாது சார் ,  வேண்ணா சொல்லுங்க … கொஞ்சம் பால் வேணும்னா இன்னும் கலந்து தரேன்” என்று சொன்னான். 

‘எல்லாம் விதி என்ன செய்ய , வீட்ல போடற டீயை பலிச்சவனுக்கெல்லாம் இது தான் சரியான தண்டனை ‘ என்றான் சிரித்து கொண்டே , 

டீ குடித்து விட்டு கொஞ்ச தூரம் சென்றவர்கள் , சற்று தொலைவில் ஸ்ருதியும், அவளது அப்பாவும் வருவதை கண்டு,  வேகமாக அவர்களை நோக்கி சென்றனர் .

“வாங்க அப்பா , ஸ்ருதி எப்ப வந்தீங்க சென்னைக்கு ” என்று ஷியாம் கேட்க ,

“morning தான் ஷியாம் வந்தோம் நானும் அப்பாவும்”,  “room ல things எல்லாம் வச்சிட்டு ஆபீஸ்ல வந்து நாளையிலேர்ந்து டியூட்டிக்கு join பண்றத சொல்லிட்டு போலாம்னு வந்தேன் , அப்பாவும் கூட வரேன்னு வந்திட்டார் ”  என்று சொன்னாள் ஸ்ருதி . 

சத்தியசீலன் ஹரிஷயும், ஷியாமையும் பார்த்து “எப்பா ஸ்ருதியை பாத்துக்கங்கப்பா ” என்று சொல்லும் போதே நாக்கு தழுதழுத்தது .

“அப்பா என்னப்பா இது! …  நீங்க கவலைப்படாம போங்க , நாங்க இவளை பாத்துக்குறோம் ” என்று ஹரிஷ் சொன்னான் .

“சரி வாங்க மேனேஜர் ரூமுக்கு போலாம் ” என்று நால்வரும் மேனேஜர் அறைக்கு சென்றனர் .

ஸ்ருதியை பார்த்தவுடன் அவர் எழுந்து,  வாம்மா ஸ்ருதி … நீ ஆபீஸ்க்கு வந்திருவேன்னு ஹரிஷ் சொன்னான் .  பரவால்ல இவ்ளோ சீக்கிரம் நீ ஆபீஸ்க்கு வந்தது எனக்கு சந்தோஷம்மா ”  என்று கூறியவர் ,

ஸ்ருதியின் அப்பாவை பார்த்து , “sir நீங்க கவலை படாம போங்க , நாங்க எல்லாம் இருக்கோம் , ஸ்ருதியை பாத்துக்குறோம் ” என்று சொல்ல ,

“நீங்கல்லாம் இருக்கீங்க அப்படீங்கிற நம்பிக்கையில தான் சார் நான் ஸ்ருதியை இங்க விட்டுட்டு போறேன் ” என்று கை கூப்பியவர், அதற்கு பிறகு சற்று நேரம் பேசி கொண்டிருந்தார் .

பிறகு “சரி  சார் ,  நாங்க கிளம்பறோம் , ஸ்ருதி போலாமா?”…  என்று கேட்க , அவளும்

மேனேஜரிடம் மறுநாள் வந்து டூட்டிக்கு join பண்ணுவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள் .  ஹரிஷும் ஷ்யாமும் அவர்களை வழி அனுப்பி விட்டு வேலையை தொடர்ந்தனர் .

அங்கே தீவில்,

  மிதுன்   காயங்கள் எல்லாம் ஓரளவுக்கு ஆறி,  அவனுடைய உணவை அவனே  தயார் செய்யும் அளவுக்கு  ரெடியாகி இருந்தான் .   ‘எப்படியும்  உயிர் வாழ்ந்தாக வேண்டும் ,   என்மேல் உயிரே வைத்திருக்கும் என் அம்மா அப்பாவையும் ,  என் ஸ்ருதியையும்  பார்த்து தீர வேண்டும்  என்ற வைராக்கியத்தில் ,   தான் எப்படியும் திரும்பத் தன் நாட்டுக்கு சென்று விடுவோம் ‘ என்ற நம்பிக்கையில்  நாட்களை கடத்திக் கொண்டிருந்தான் .

EPISODE – 9

தீவில் வசிப்பவர்களும்  அவனுக்கு  மிகவும்  உதவியாக இருந்தனர் .    எங்காவது வானில்  பிளைட் பறக்கும் சத்தம் கேட்டால்  மிதுன்  ஓடோடி சென்று  பார்ப்பான் ஏதாவது உதவி கிடைக்குமா என்று ,   அப்படியே விமானம்  அந்த தீவின் மீது பறந்தாலும்  மிகவும் உயரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் பறக்கும் .    அதிலிருந்து உதவி கிடைப்பது  சிரமம் என்று தெரிந்தும்…  அவன் ஒரு முறையும்  எதிர்பார்த்துக் கொண்டே இருப்பான் .  

அன்று காலை விடிந்தது .  காலை உணவுக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் ,  அப்படியே காட்டுக்குள் சென்று  கிழங்குகள் எடுத்து வரலாம் என்று கிளம்பினான் .

கிழங்குகளை எடுத்து வந்தவன் ,   அதை  வேக வைக்க  ,   ஒரு மண் பாத்திரத்தில் எடுத்து  தண்ணீர் ஊற்றினான் .   அப்போது அங்கு  அந்த சேட்டை பிடித்த இரண்டு சிறுவர்களும் வந்தனர்.  வந்தவர்கள்  “அண்ணா என்ன பண்ற அண்ணா”  என்று கேட்க ,  அவன் தான் கொண்டு வந்த கிழங்குகளை காண்பித்து ,    “பசிக்குதுடா…  அதான் இந்த கிழங்கு வேகவைத்து சாப்பிட போறேன்”  என்று சொன்னான் .

“ஆனா உனக்கு அடுப்பு பத்த வைக்க தெரியுமா என்ன” என்று கேட்க ,

“தெரியும்டா  இந்தா சிக்கி முக்கி கல் எடுத்து வச்சிருக்கேன் பாரு ,   அதை வைத்து நான் அடுப்பு பத்த வச்சிக்குவேன்”  என்று சொல்ல  “அதெல்லாம்  பழகிட்டயா  நீ”  என்று அதில் ஒருவன் உரிமையுடன் கேட்டான் .

“ஏண்டா அது என்ன அவ்வளவு கஷ்டமா?…   இப்ப இந்த அடுப்பை பத்த வச்சு காட்றேன் பாரு” ,

என்று அடுப்பில் பாத்திரத்தை வைத்து ,

சில காய்ந்த மர துண்டுகளை அடுப்பில் வைத்தவன்,   குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு  சிக்கி முக்கி கல்லை உரசினான் .    ஆனால் அவ்வளவு சீக்கிரம் அடுப்பு பற்றவில்லை ,   சிறுவர்களில் ஒருவன் கிண்டலாக,  ” அண்ணா  கல்ல கொஞ்சம் தள்ளி வைத்து  தேயிண்னா,   எங்காவது முக்கியமான இடத்தில் அடிபட்ற  போகுது” ,

என்று சொல்ல ,

“புட்றா அவனை” ,  என்று சிரித்துக் கொண்டே  மிதுன் அவர்களை துரத்திக் கொண்டு  வெளியே ஓடினான் .

ஓடிக்கொண்டிருந்தவன்  அப்படியே கடலில் குதித்தான் ….  “தலையை மட்டும் தூக்கி  ஆனா முடிஞ்சா என்னை பிடி பார்க்கலாம்”  என்றான் .

நம்ம ஆளு மிதுன்  சென்னையில ஸ்விம்மிங் பூல்ல  நீச்சல் கத்துக்கிட்டவன் .   நமக்கு நீச்சல் தெரியும்னு தைரியத்துல  அவன புடிக்க கடல்ல  குதிச்சுட்டான் .

குதித்து நீச்சல் அடிக்க முயன்றவனுக்கு  கடலில் நீச்சல் அடிப்பது  அவ்வளவு ஈசியா இருக்கவில்லை .   அடுத்தடுத்து வரும்  சுழிகள்  அவனை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்தது .  

அதற்குள் அந்த சிறுவன்  லாவகமாக நீந்தி கரை  ஏறிவிட்டான்.   மிதுனுக்கு அங்கிருந்து வெளி சிரமமாக இருந்தது …    கொஞ்சம் கொஞ்சமா எழுந்த அலைகள்  அவனே சற்று ஆழத்திற்கு கொண்டு சென்று விட்டது .   அப்போதுதான் அந்த சிறுவர்களுக்கு புரிந்தது அவனால் வெளியே வர முடியவில்லை என்று .

உடனே  அதில் ஒரு சிறுவன் டக் என்று கடலில் குதித்து  நீந்தி அவனை நோக்கி சென்றான் …    ஆனால் கடலின் சீற்றம் கொஞ்சம் அதிகமாக இருக்கவே ஒரு விர்ரென்று சீறி வந்த பெரிய அலை  டக்கென்று  மிதுனை உள்ளெழுத்து சென்று விட்டது .

அப்போது கரையில் இருந்த மற்றொரு சிறுவன்  ஊருக்குள் ஓடி சென்று  சிலர் அழைத்து வந்தான் .      அவர்களின் நன்கு நீச்சல் இருந்த  சிலர் கடல் குறித்து  அவனை மீட்க சென்றனர் .   

ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு கடலின் சில அடிகளில் தவித்துக் கொண்டிருந்த  மிதுனை  கண்டுபிடித்தனர் .    அந்த இடத்தில்  ஜெல்லி மீன்கள் காணப்பட்டன .   அவர்களுக்கு தெரியும் ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு எவ்வளவு  விஷத்தை உள்ளடக்கி இருக்கிறது  என்று.   அதிலும் சில இடங்களில்  பாக்ஸ் ஜெல்லி மீன்  என்ற அளவு விஷம்   கொண்ட மீன்கள் காணப்பட்டன .

 கடல்  தள்ளி இருந்து பார்ப்பதற்கு எவ்வளவு அழகானதோ  உள்ளே சென்று பார்த்தால்   அதைவிட ஆபத்துகளும் நிறைந்தது . 

மிதுனை கண்டுபிடித்த  இடத்திலிருந்து சற்று தொலைவில் கடலின் அடி மட்டம்   கொதித்துக் கொண்டிருந்தது .   அது கடல் அகழி .  இன்னும் சில நிமிடங்கள் விட்டிருந்தால்  மிதுன்  அதில் சிக்கி  இருந்த இடம் தெரியாமல் போய் இருப்பான் .  நல்ல வேலையாக அவனைப் பிடித்து  மீட்டுக் கொண்டு வந்து  கரையில் போட்டனர் .  

அவன் தரையில் கிடக்க  அப்போதுதான்  அவன் தொடைப்பகுதியில்  இது ஒரு கடி வாய் இருந்தது .  அதில்   வீக்கம் இருந்தது .   

அதை பார்த்து ஒரு  பெரியவர் அதிர்ச்சியாகி  “இது… இது…   பாக்ஸ் ஜெல்லி  மீன் கடித்த  வீக்கம்.   உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை  என்றால்  இவன் இறந்து விடுவான் .    உடனே அவனை  வீட்டுக்கு தூக்கிட்டு வாங்க” என்றார் .

விஷயம் கேள்விப்பட்டு மருத்துவர் அங்கு வந்து சேர ,   கடி பட்ட இடத்தை  பார்த்து விட்டு முதலில் விஷம் ஏறாமல் இருக்க   அவன்  காலில் கடிபட்டு இருக்கும் இடத்திற்கு மேல் மர நார்களால்   முடிச்சு போட்டார் .   

சாதாரணமா  நம்ம மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் வந்து  இந்த மாதிரி விஷக்கடிக்கு  என்ன மருந்து யூஸ் பண்ணுவாங்கன்னா…  ஆகாச கருடன்,  அப்ப கோவை,  தலைச்சுருளி வேர்  இது மாதிரி மூலிகைகளை எடுத்து ஒண்ணா அரைச்சு  பயன்படுத்தி அந்த பாதிக்கப்பட்ட  மனிதனை காப்பாத்துவாங்க .

அதே மாதிரி  கடல் பகுதியிலும் தண்ணீர் களி ,   களி முள்ளி   போன்ற  மூலிகை தாவரங்கள் இருக்கும் .  

அது தீவு பகுதி ஆதலால்  இந்த மாதிரி விஷக்கடிகள்  அடிக்கடி  அவங்கள பாதித்திருக்கும் .   அதற்கான மருந்து அவங்க கைவசம் வைத்துக்கொண்டே இருப்பாங்க .     அதனால அவங்க பெருசா  நிலைகுலையாம  டக்குனு சில மூலிகை மருந்துகளை எடுத்து ,

மிதுனுக்கு கடிபட்ட இடத்தில்  கட்டுப்போட்டார் .    சில மூலிகைகளை   காய்ச்சி எடுத்து அதன் சாற்றை  அவனுக்கு வாயில் குடிக்க கொடுத்தனர் .   

“இந்த விஷம் மெது மெதுவாகத்தான் இறங்கும் ,   ஒரு வாரம் கூட ஆகலாம்.

பாவம் இவனுக்கு இங்க வந்து இப்படி எல்லாம் நடக்கணும்னு இருக்கு .   ஆனா பயப்பட ஒன்றும் இல்லை பொழைச்சுக்குவான்”  என்று சொல்லிவிட்டு,

” எப்பா இவனை  கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு  மருத்துவர் சென்று விட்டார் .   

மாதங்கள் வருடங்களை எட்டிக் கொண்டு இருந்தது .

திருச்சியில் சுருதியின் வீட்டில் ,

சுருதியின் அப்பா  சோபாவில் அமர்ந்திருக்க ,  அப்போது  “அண்ணா என்ன பண்றீங்க “என்று கேட்டுக் கொண்டே  உள்ளே வந்தார்  அவரின் தங்கை கவுசியும் , அவரது கணவரும் .

“அடடே !…  வாம்மா… வாம்மா,   மச்சான் வாங்க ! ” என்று அழைத்தவர் ,

“விசேஷம் வச்சிட்டீங்க போல இருக்கு,   ரொம்ப சந்தோசம்மா ,  மாப்பிள்ளை என்ன பண்றாரு,  ரீத்துவுக்கு  மாப்பிள்ளைய  ரொம்ப புடிச்சி இருக்கா? ” என்று கேட்டார் .

“அவளுக்கு பிடிக்காமல் பண்ண முடியுமா மச்சான் , உங்க மருமகள பத்தி உங்களுக்கு தெரியாதா?, கொன்னே போடுவா எங்க எல்லாரையும்  ”   என்றார்  கவுசியன் கணவர் சிரித்துக்கொண்டே .

“சுருதி எப்படிண்ணே இருக்கா ” என்று கேட்க ,

இருக்காம்மா ,  நானும் ஆண்டவனை வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்  அவளுக்கு ஒரு நல்ல வழி காமிக்கணும் அப்படின்னு ,   பார்ப்போம் ஆண்டவன்  அவ  தலையில என்ன  எழுதி இருக்கான்னு  ,  சரி விடுமா அது அப்புறம் பேசிக்கலாம் ,

“கல்யாணம் எப்ப வச்சிருக்கீங்க ”  என்று கேட்டார் .

“ஏங்க அண்ணனுக்கு முதலில் பத்திரிக்கை வைத்துவிடலாம்”  என்று அவள் கணவரிடம் சொல்ல  அவர் கொண்டு வந்த பத்திரிகையை பூ பழங்கள் எல்லாம் வைத்து  அண்ணனிடம் கொடுத்து  “அண்ணே அண்ணி   நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே வந்து  கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்”  என்று சொல்ல

“ஏம்மா இதெல்லாம் சொல்லனுமாமா ,   ரீத்து கல்யாணத்தை ஜாம் ஜாம்னு பண்ணிரலாம்”  என்று சிரித்தவர் “ஏம்மா நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் எப்பமா பத்திரிக்கை கொடுக்க போற”  என்று கேட்க…  அண்ணா அப்படியே ஆரம்பித்து விட வேண்டியதுதானே  உங்களுக்கு தானே முதல்ல கொடுக்கணும்,   அதான் இன்னைக்கு நல்ல நாளா  இருந்ததால  இன்னைக்கு ஆரம்பிச்சாச்சு…  இனி அப்படியே மெது மெதுவா கொடுத்திடலாம் அண்ணா” என்று சொல்ல,

“சரி வாங்க அப்படியே சாப்பிட்டு பேசலாம்”  என்று சுமதி அழைக்க  அனைவரும் உணவு அருந்தி சென்றனர் .   அப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு  “அண்ணா  சுருதி கிட்ட நான் போன் பண்ணி பேசுக்கிறேன்,      இப்ப நாங்க கிளம்பவா  வேலை கொஞ்சம் இருக்கு அண்ணா”  என்று சொல்லிவிட்டு  அங்கு இருந்து கிளம்பினர் .

நாட்கள் நகர்ந்தது ..

ரித்துவின் திருமண நாள் …   மண்டபம் களை  கட்டி இருக்க ,   நண்பர்களும் உறவினர்களும்  ஒருவரை ஒருவர் பார்த்து  சந்தோசத்தை பரிமாறிக் கொண்டிருக்க ,  நாதஸ்வரம் மேளதாளம்  அழகாக வாசிக்கப்பட்டு கொண்டிருக்க ,   மாவிலை தோரணங்களும் வாழை மரங்களும்  அழகாக புன்னகைத்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது ,  

சத்தியசீலனும் சுமதியும்   வந்தவர்களை உபசரித்துக் கொண்டு ,   திருமண வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர் .    ஸ்ருதி  ரீத்துவுடன் அவள் அறையில் இருந்தாள் .

முகூர்த்த நேரம் வந்தது..  ரீத்து அழைத்து வரப்பட்டு   மணவரையில்  அமர வைக்கப்பட்டாள் ,  மேளதாளங்கள் முழங்க ,  அனைவரது ஆசியுடன்  ரித்துவின்  கழுத்தில்  தாலி கட்டினான் அந்த அழகிய ஆண்மகன் .

சடங்குகள் முடிந்து விட்டு  சத்தியசீலனும் சுமதியும்  மண்டபத்தில்  இருந்து இருக்கையில் வந்த அமர்ந்தனர் ..   சத்தியசீலன்  கவலையை  வெளிக்காட்டாமல் இருந்தாலும் ,   மன வலி கண்களில் தெரிந்தது .

அவர் அந்த வலியுடனே சுமதி பார்க்க ,  சுமதி ‘இங்கே எல்லோரும் இருக்காங்க  நம்ம கவலையை  வெளிக்காட்ட வேண்டாம்’  என்று பார்வையிலே சொல்ல ,  கண்களில் வழிந்த நீரை சிரித்துக் கொண்டே துடைத்தார் . 

அதே நேரம் சுருதி அங்க வர ,   அப்பா அம்மாவை பார்த்தவுடன்  அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று  அவளுக்கு புரிந்தது .

தன் மேல் உயிரையே வைத்திருக்கும்  அப்பா அம்மாவை இந்த நிலைமையில் பார்க்கும் போது  தான் அதற்கு காரணம் என்று நினைக்கும் போதும் அவளது மூலையில்  நூறு ஊசிகளை வைத்து  குத்துவது போன்ற குழப்பமான வலி ஏற்பட்டது . 

“அப்பா” என்று அழைக்க , 

” சொல்லுமா”  என்றார்  சத்தியசீலன் .

” என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்கள்ளப்பா” என்று சொல்ல ,

” இல்லடா சாமி ,  என் பொண்ணுக்கு  ஏதாவது ஒரு வழியில்  ஒரு நிம்மதியான சந்தோசம் கிடைச்சிறாதா  அப்படின்னு  தாம்மா  இந்த அப்பா  ஏங்குறேன்” என்றார் .

“நீ பழசை எல்லாம் மறந்துட்டு கல்யாணம் பண்ணிக்க  அப்படின்னு  சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியலம்மா” ,  என்று சொல்ல

ஒரு அப்பாவா  அவர் என்ன எதிர்பார்க்கிறார்  அப்படிங்கிறது ஸ்ருதிக்கு புரியாமல் இல்லை .    தனக்காக  எல்லாரும் கஷ்டப்படுவதை  அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

அவள் அப்பாவிடம் திரும்பி  “அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா  சந்தோசமா இருப்பேன் நீங்க நினைக்கிறீங்களா அப்பா” ,  என்று கேட்க ,

“எனக்கு தெரியலம்மா!.. ஆனா நீ சந்தோசமா இருக்கணும் அதுதான் எனக்கு வேணும்”  என்று அவர் சொல்ல ,

“அப்பா!…  நான் வேணா கல்யாணம் பண்ணிக்கிறேன்,   ஆனா  என்னோட பழைய காதல  மறைச்சு   பண்ண மாட்டேன் .   அது எல்லாத்தையும்  தெரிஞ்சு புரிஞ்சுகிட்ட  ஒருத்தர் கிடைச்சா  பண்ணிக்கிறேன் பா ”  என்று தன் இதயத்தை  கல்லாக்கி கொண்டு    வாயால் மட்டும் சொன்னாள் சுருதி .

EPISODE – 10

அப்போது கௌசி அங்கே வர , அவருக்கு சூழ்நிலை புரிய ,   அவர் சுருதியிடம் 

‘ஏம்மா  ஸ்ருதி எனக்கு கொஞ்சம் காபி வேணும்மா கொண்டு வரியா”  என்று சொல்லி சுருதி அனுப்பி வைத்தார் .

பின் அவளது அண்ணனிடம்  “அண்ணா  …

ரித்துவம் சுருதியும்  எனக்கு ஒன்று தானே ,  சுருதிக்கு  சீக்கிரம் ஒரு நல்லது பண்ணி பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா,  அண்ணா  எனக்கு தோன்றத  நான் சொல்றேன்…  அதுக்கப்புறம் நீ யோசிச்சு  ஒரு முடிவு சொல்லுங்க”  என்றவர் ,  

“நம்ம  மனோவுக்கு  சுருதிய கட்டி வச்சிரலாமா  அண்ணா .    மனோவுக்கும்  சுருதிய  ரொம்ப பிடிக்கும்….  அவனுக்கு  சுருதிக்கு நடந்த பிரச்சனை எல்லாம் தெரியும்  சுருதிக்கு இப்படி நடந்துச்சுன்னு சொல்லிட்டு  அவனுக்கு ரொம்ப வருத்தம் .  அவனுக்கு கட்டி வச்சா  அவங்க ரெண்டு பேரும்  சந்தோஷமா இருப்பாங்கன்னு  எனக்கு தோணுது அண்ணா”….

என்று சொல்ல  சத்தியசீலனுக்கும்  சுமதிக்கும்  கண்களில்  எதோ  வெளிச்சம் தெரிவது போல் இருந்தது .   அவர்கள் மனதில் கொஞ்சம் சந்தோஷம் வர  “சரிமா  நான் ஸ்ருதிகிட்ட இதை பத்தி பேசுறேன் .   அப்புறமா நம்ம முடிவு பண்ணிக்கலாம் ” என்று சொன்னார் .

ரீத்துவின் திருமணம் நல்ல படியாக முடிந்தது ..  அனைவருக்கும் நன்றி சொல்லி தாம்பூல பையை கொடுத்து அனுப்பிவைத்தனர் .

ஸ்ருதியும் அவளது அம்மா அப்பாவுடன் திருச்சியில் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் .

சில நாட்கள் கழித்து , சத்திய சீலன் ஸ்ருதியிடம்

” ஏம்மா , நம்ம மனோவ பத்தி நீ என்ன நினைக்கிற ?” என்று கேட்க , அவனை பத்தி ஏன் அப்பா திடீர்னு கேட்கிறார் என்று யோசித்தவளுக்கு சட்டென விஷயம் புரிந்தது .

“இல்லம்மா , எதுக்கு கேட்கிறேன்னா  அவன நம்ம எல்லோருக்குமே நல்ல தெரியும் ,

உன் மேல ரொம்ப பிரியமா இருப்பான் ,  அவனுக்கு உன்னோட விஷயம் எல்லாம் தெரியும் “

“அதான் உனக்கு விருப்பம்னா நம்ம இத பத்தி பேசலாம்மா” என்றார் .

ஸ்ருதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை .

” அப்பா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ,  உங்க மன வேதனை எனக்கு புரியுது ,  உங்க விருப்ப படி செய்யுங்கப்பா ” என்றாள் .

அப்போது அவரது போனுக்கு அழைப்பு வர , அழைத்து யார் என்று பார்க்க , அவரது தங்கை கௌசி தான் லைனில் வந்தார் .

போனை எடுத்து இவர் பேச, மறுமுனையில் கௌசி ,  “அண்ணா,  மனோ கிட்ட நான் பேசினேன் ,  அவனுக்கு முதல்ல இத நம்ப முடியல ,  ஸ்ருதியை கட்டிக்கிறியான்னு கேட்டதுக்கு அவன் ‘அம்மா ஸ்ருதிக்கு சம்மதம்னா எனக்கு ஓகே தாம்மா ‘ அப்டீன்னு சொன்னான் .   எனக்கு ரொம்ப சந்தோசமா போச்சுண்ணா , அதான் முதல்ல உங்க கிட்ட கூப்டு சொல்லிரலாம்னு கால் பண்ணினேன்” என்றார் .

“ஆண்டவா எனக்கு ஒரு வழிய காமிச்சுட்டியே ”  என்று சத்யசீலனின் கண்கள் ஈரமாக ,

“ரொம்ப நன்றிம்மா” என்று சொல்ல ,

“அண்ணா எண்ணன்னா இப்டி சொல்ற, நான் உன்னோட தங்கச்சினா , உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் தாண்ணா ”  விடுண்ணா .. ஸ்ருதிகிட்ட பேசினயாண்ணா , என்று கேட்க , இப்ப தான்மா அவ கிட்டயும் பேசினேன் .

“அவ உங்க விருப்பம் தான் என் விருப்பம்ப்பா அப்டின்னு சொல்லிட்டா ” என்று சொல்ல ,

“சரிண்ணா, ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண வேலைய ஆரம்பிச்சிரலாம் , இப்ப போன் வைக்கவா ” என்று சொல்லி விட்டு சந்தோசமாக போனை வைத்தார் .

“ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் சத்திய சீலனுக்கும் தெரியும் “, 

ஒருவரை மனதார காதலித்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்பவர்களது வாழ்க்கை ,  “ஒரு அழகான மரம் வெளியே பூத்து  குலுங்குவது போல தெரிந்தாலும் ,  அது வேர் இல்லாத மரம்,   அந்த வேர் இன்னொரு இடத்தில்  ஊன்றி இருக்கிறது என்று” 

அவர்கள் கடமைக்காக வாழ்ந்து தன் வாழ்நாளை முடித்து கொள்கிறார்கள் .

இதெல்லாம் ஒரு அப்பாவாக அவருக்கு தெரிந்தாலும் இப்போது ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் என்று அவரும் விரும்பினார் .

அன்று சென்னையில் வானிலை அறிக்கை மையம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது .  தொலை பேசிகளும் , அலை பேசிகளும் அலறிக் கொண்டே இருந்தது .

ஆம் ,  இந்திய பெருங்கடலில் ஓர் இடத்தில் சுனாமியின் அறிகுறி தெரிந்தது .   அந்த இடத்தில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கி இருந்தது . அதன்  தாக்கம் எங்கு நிகழும் என்று பரபரப்பாக கவனித்து கொண்டிருந்தனர் .  ஆம் , நீங்கள் நினைத்து சரி தான் , அந்த சுனாமி எதை நோக்கி சென்றது என்றால் அது போகும் பாதையை உற்று நோக்கினால் சென்டினல் தீவை தாக்கும் அபாயம் இருக்கிறது .

ஆனால் சென்டினல் தீவை பொறுத்த வரை இது வரை ஏற்பட்ட சுனாமிகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டது இல்லை .  இந்த முறையும் சென்டினல் தீவு தப்பிக்குமா ?  ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு கடலில் சுனாமி வந்தாலும், அது நில பரப்பை தாக்கும் நேரம் அதன் அளவையம் நிலப்பரப்பின் தூரத்தையும் பொறுத்து அமைந்துள்ளது .

அங்கே தீவில் பகல் பொழுதில் அனைவரும் அவரவர் வேலையே பார்த்து கொண்டிருந்தனர் .

மிதுன் அங்கே தானியங்களை பயிரிட கற்று கொண்டிருந்ததால், இப்போது விதைகளை விதைக்கும் வேலையே செய்து கொண்டிருந்தான் .

அப்போது அங்கே மரங்களில் வசித்த பறவைகள் சட சடவென பறக்க ஆரம்பித்தன. கடல் வாழ் உயிரினங்கள் கடலில் அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தன .

இதை பார்த்த மிதுனுக்கு விசித்திரமாக தோன்ற , அங்கு வசிப்பவர்கள் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்தனர் .  அவர்கள் அங்கு மண்டபம் போல் இருந்த இடத்தில் ஒன்று கூடினர் .

தீவின் தலைவர் போல் இருந்த பெரியவருக்கு இது சுனாமிக்கான அறிகுறி என்பது புரிந்தது .  அனைவரையும் முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார் .

“சிறிது உணவு பொருட்களையும் , குழந்தைகளுக்கு வேண்டிய பொருட்களையும் எடுத்து கொண்டு   சீக்கிரமாக குகைக்கு ஒடுங்க”   என்று ஆணையிட , அவர்கள் அனைவரும் இது போன்ற பேரிடர் காலங்களில் பதுங்குவதற்கென்றே குகை போன்ற இருந்த பெரிய இடத்திற்குள் சென்று குகையின் வாசலை  பெரிய கல்லை கொண்டு காற்று கூட புகாதவாறு அடைத்தனர் . 

சற்று நேரம் தான்… பலத்த ஓலத்துடன் சுனாமி அவர்களின் தீவை தாக்கியது ,  சுனாமியின் வேகத்தில்  வாசலில் அடைத்து வைத்திருந்த கல்லே அசைவது போல் இருந்தது .  காற்றின் வேகமும் , கடல்  சீற்றத்தின் சத்தமும் அங்கே பீதியை உண்டாக்கியது .  மிதுனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது .  உறைந்து போய் விட்டான் . அவன் சென்னையில் இருந்த போது வந்த சுனாமியை கரையின் தொலைவில் இருந்து பார்த்தவன்.   ஆனால் கடலுக்கு நடுவில் இருக்கும் தீவில் ஏற்பட்ட சுனாமி அவனை குலை நடுங்க செய்து விட்டது .  

தான் எப்படியும் ஊருக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான் இவ்வளவு நாள் ,  ஆனால் இந்த சுனாமி அந்த நம்பிக்கையை உடைத்து கொண்டிருந்தது .  

சுனாமி ஏற்பட்டால் வெறும் கடல் தண்ணீர் மட்டும் ஊருக்குள் வராது .  அது குழம்பு போன்று பல கலவைகளை சேர்த்து கொண்டே வரும் .  ஆம் ,  இப்போது அந்த குகையின் வாசல் கதவின் இடுக்கில் குழம்பு போன்ற தண்ணீர் சிறிது சிறிதாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தது .

சற்று நேரம் ஆக ஆக உள்ளே வரும் நீரின் அளவு அதிகமானது . பெண்களும் , குழந்தைகளும்  அச்சப்பட ஆரம்பித்தனர் .  அங்கிருந்து பெரியவர்கள்  இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம்  முன்னாடியே பார்த்தவர்கள்…  ஆதலால்  அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் . 

ஆனால் அந்த நம்பிக்கை பொய்யாகி விடுமோ  என்ற அளவில் ,  சுனாமியுடன் மழையும்  சேர்ந்து கொண்டது …   அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகி போனது .  அவர்கள் தங்கி இருந்த குகை  கொஞ்சம்  உயரமாக தான் இருந்தது .

ஆனாலும் கடலின் சீற்றத்தால்  நீரின் வரவு  அதிகமாகிக் கொண்டிருந்தது .   அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை .    மிதுனுக்கு  அவன் அப்பா அம்மா நினைவும்  சுருதி  நினைவும்  வாட்டி எடுக்க  அவர்களை பார்க்காமலே  தான் சென்று விடுவோமோ என்று நினைக்கும் போது  வாழ்வின் அத்தனை அர்த்தங்களும் உடைந்து விழுவது போல் இருந்தது .

‘இறைவா இங்கிருக்கும் யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது’  என்று மனதார இறைவனை வேண்டிக் கொண்டான் .

காரண காரியம் இல்லாமல்  எதுவும் நடப்பதில்லை ,   ஆனால்  இறைவனின் பல விளையாட்டுக்கள்  நமக்கு புரியாமல் போய்விடுகிறது . 

கொஞ்ச நேரத்தில்  குகையின் உள்ளே வரும் தண்ணீரின் அளவு குறைந்தது ,  வெளியே சத்தமும் குறைந்திருந்தது .  ஆனாலும் அவர்கள்  குகையை விட்டு வெளியே வரும் முயற்சியில் இறங்கவில்லை .  ஏனென்றால்  ஒரு சுனாமி ஏற்பட்டால்  அதனைத் தொடர்ந்து  அடுத்தடுத்து வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது .  ஆகையால் அனைவரும் இறைவனை வேண்டிக்கொண்டு  பயந்தபடி உள்ளே இருந்தனர் .

நல்ல வேலையாக அந்த குகையை தடுத்து இருந்த பெரிய கல்  பூச்சிகள், பாம்புகள்  போன்றவை  உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுத்து கொண்டிருந்தது  . 

உள்ளிருந்தவர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டிருக்க ,   அந்த நாள் இரவை  நோக்கி சென்று கொண்டிருந்தது .

சற்று நேரமாக  நேரமாக  குழந்தைகள் கண் அயர  ,   பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  அவர்கள் ஓய்வு எடுக்கும் அளவிற்கு  அங்கு இருந்த ஆண்கள் வழி  ஏற்படுத்தி கொடுத்தனர் .    நல்ல வேலையாக  அதற்கு பிறகு  காற்றோ,  சுனாமியோ அந்த மாதிரி  எந்த அறிகுறியும் இல்லை .

EPISODE – 11

டெல்லியில்…

  பேரிடர் மீட்பு  அலுவலகம்  மிகவும் பரபரப்பாக இருந்தது… இந்த சுனாமி செய்தியை கேட்டு ,

hurry up …hurry up ,    அந்தமான் தீவிலேயும் ,   அதுக்கு பக்கத்துல இருக்கிற சென்டினல் தீவிலேயும்  சுனாமி பயங்கரமா தாக்கிட்டு இருக்கு .  அங்கு நிலவரம் இப்ப என்ன அப்படின்னு  டக்குனு பாருங்க ,  என்று சீப் சொல்ல ,

“சார்  கடலின் சீற்றம் ரொம்ப அதிகமா இருக்கு இப்போ ,    முதல் சுனாமி அந்தமான் தீவு தாக்கிட்டு  நகந்துட்டு இருக்கு .      அடுத்த சுனாமி வருவதற்கான  வாய்ப்புகள் மிக அதிகமா இருக்கு ,    தீவிலிருந்து சரியா 28 கிலோமீட்டர்  தூரத்தில்  கடல்ல ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கு சார் ,  அதோட தாக்கம்  இன்னும் குறைவில்லை . அதனால  அடுத்த சுனாமியும் சீக்கிரம்  அதே இடத்தை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு சார் .   முதல் சுனாமி  கடல் மட்டத்திலிருந்து சுமார்  80 அடி உயரமா வந்திருக்கு சார் .    அடுத்த அலையும் கிட்டத்தட்ட அதிக அளவில் இருக்கும்  அப்படின்னு எதிர்பார்க்கிறேன் சார்”..    என்று  பெரிய  திரையை  அளந்து கொண்டே கணினி பொறியாளர்  கூற ,

“இப்போ  நம்ம மீட்புப் பணியை ஆரம்பிக்கணும் ,    இப்போ  ஹெலிகாப்டரில் அந்த பகுதிக்கு நம்மால  போக முடியுமா” ,   என்று கேட்க ,

அங்கே வேகமாக வந்த மீட்புக் குழுவின் தலைவர்   “அலைகளோட  உயரம் மிக அதிகமா இருக்கு ,   அதுபோக கடலின் சீற்றம்,  காற்றின் வேகம் எல்லாமே  ரொம்ப அதிகமா இருக்கு சார்,     நம்ம உள்ள எப்படி போறது அப்படிங்கறது பாக்கணும் சார்  கிட்டத்தட்ட 150 அடி  உயரத்துல  நம்ம ஹெலிகாப்டரில் பறந்து தான்  அந்த இடத்தில் மீட்பு பணியை தொடங்கணும்..    

நம்ம உடனே  தீவில் இருக்கிற மக்களுக்கு  என்னென்ன பொருள் வேண்டுமோ அதை எல்லாம் ரெடி பண்ணிக்கலாம் சார் .   கடலின் சீற்றம்  கொஞ்சம் கம்மியான  உடனே நாம கிளம்பிடலாம் ,  நான்கு ஹெலிகாப்டர்  ரெடியா இருக்கு சார் ”   என்றார் .

“அந்த தீவுக்கு போறது வேற பெரிய ரிஸ்க்கான காரியம் .   அதனால  சர்வ ஜாக்கிரதையா  நீங்க இயங்கணும்  என்றார் NDRF chief.

‘சட சட’ வென  மீட்பு  பணிக்கான வேலைகள்  நடந்தது .   மீட்பு குழு வீரர்கள்  மின்னல் வேகத்தில்  தயாரானார்கள் .  “சார்  எல்லாம் ரெடி சார்!  உங்க  உத்தரவுக்காக காத்திருக்கிறோம் சார்”  என்றார் chief commander விக்ரம்.

“இன்னும் சரியா அரை மணி நேரத்துல  நீங்க கிளம்பனும் .   அங்க போயி  சூழ்நிலை எப்படி இருக்குன்னு பாத்துட்டு  உணவு அப்புறம் மருந்து பொருட்களை விநியோகம் பண்ணனும்.  சென்டினல் மக்கள்  ஆபத்தானவங்க தான்  ஆனா அவங்க இப்போ  நம்மள தாக்குற நிலைமையில் இருக்க மாட்டாங்க .  கண்டிப்பா நீங்க  அவங்களுக்கு உதவ தான் வரீங்கன்னு  அவங்களுக்கு தெரியும்…  சோ அதனால  நீங்க அவங்களால ஆபத்து வரும்னு யோசிக்க  வேண்டாம் .   இருந்தாலும் ஒரு ஹெலிகாப்டர்ல  நீங்க அவங்களுக்கு  அருகில் சென்று  உணவு பொருட்கள் விநியோகிக்கிறப்போ  இன்னொரு ஹெலிகாப்டர்  உங்களுக்கு எதுவும் ஆபத்தான்னு  சொல்லிட்டு உங்கள் ஃபாலோ பண்ணிட்டு இருப்பாங்க .   அதனால  மீட்பு பணியை நீங்க முழு  கவனமா செய்யுங்க”  என்றார் . 

yes சார் ,   என்று  சல்யூட் அடித்து விட்டு   ஹெலிகாப்டரின்  பைலட்கள்   கிளம்பத்  தயாரானார்கள் .  அந்த அதிகாலை நேரத்தில் …

அடுத்த ஐந்து நிமிடத்தில்  நான்கு ஹெலிகாப்டர்களும்   படபட படபட  வானில் பறக்க ஆரம்பித்தது .

அது அந்தமான் தீவையும்  சென்டினல் தீவையும் நோக்கி வேகமாக இயங்கின .

இரண்டு மணி நேர பயணத்தின் முடிவில் தீவின் அருகில் சென்ற போது ,

சுனாமி தன் கோர விளையாட்டை முடித்திருந்தது ..  ஆனாலும் கடலின் சீற்றம் அதிகமாகவே இருந்தது .

இதற்கிடையே தீவில்…

அடுத்த நாள் காலை  சூரியனின் கதிர்கள்   குகைக்குள் ஊடுருவி வந்தது . ..  அங்கிருந்தவர்களுக்கு மெல்ல ஒரு தைரியம் வந்தது . 

அங்கிருந்த தீவின்  தலைவர் ,  ” டேய் இங்க வாங்கப்பா  … வந்து அப்படியே இந்த கல்ல கொஞ்சம் நகர்த்துங்க பா ,   வெளியே என்ன நடக்குதுன்னு பார்ப்போம் ” என்றார் .

” பொண்ணுங்களா,    குழந்தைகளா நீங்க யாரு வெளியே வரக்கூடாது.   இங்கேயே பத்திரமா இருங்க நாங்க கூப்பிடுற வரைக்கும்  நீங்க எல்லாம் உள்ளே தான் இருக்கணும்”  என்று சொல்லிவிட்டு  அவர்கள் அந்த குகையை மூடி இருந்த  பாறையை நகத்தினர் .

நகர்த்திக் கொண்டு  வெளியே வந்து பார்த்த  ஆண்கள்  அங்கு நடந்திருப்பது எல்லாம் முன்னாடியே எதிர்பார்த்து தான் இருந்தனர் .   அவர்களின் குடிசைகள் ஒன்று கூட மிச்சமில்லை,   பெரிய மரங்கள் மட்டுமே  தாக்கு பிடித்து நின்றிருந்தது …  மற்றபடி அந்த    அந்த தீவு முழுவதும்  சகதியை பரப்பியது போல இருந்தது .  

அந்த தீவில் வசிக்கும்  சிறுஎலிகள் மற்றும் பாம்புகள்  பல இறந்து கிடந்தன ,  சில உயிர்க்காக போராடிக் கொண்டிருந்தன .

அந்த பெரியவர்  “எப்பா  பார்த்து காலை வைங்கப்பா விஷப்பூச்சிகள் எல்லாம் நிறைய இருக்கும்…   கடிச்சுட போகுது …  இங்க இருக்கிற நிலைமையில  வைத்தியம் எல்லாம் நம்ம பாத்துட்டு இருக்க முடியாது .  அதனால் ரொம்ப ஜாக்கிரதையா இருங்கப்பா”  என்று சொல்லிவிட்டு ,

“ஆம்பளைங்க எல்லாம் வாங்கப்பா…  அவங்க அவங்க  இருக்கிற இடத்தையும்  அதை சுத்தி இருக்கிற இடத்தை சுத்தம் பண்ணுங்க பா முதல்ல”  என்றார் . 

அவர்கள் அந்த சகதியை ஓரிடத்தில்  குவிக்கத் தொடங்கினர் ,   உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  நீர் வாழ் உயிரினங்கள்,   பாம்புகள் ஆகியவற்றை  கடலுக்குள்ளே தள்ளிவிட்டனர் .  பல மணி நேர  வேலைக்குப் பிறகு  ஓரளவுக்கு அந்த தீவு  சுத்தமானது . ஆனால்  தங்குவதற்கு குடிசைகள் எதுவும் இல்லை .  அங்கிருந்த பெரிய மரங்களை  பயன்படுத்தி  தங்கலாம் என்று முடிவு எடுத்து ,   அவசர அவசரமாக  சில டெண்டு போன்ற வீடுகளில்  தயார் செய்தனர் .

மிதுனும்  அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தான் .

அந்த சமயத்தில் மீட்பு குழுவினரின் ஹெலிகாப்டர்களும் அங்கு வந்து சேர்ந்தது .

அங்கே,

 மரங்கள் வேரோடு செய்திருக்க , ஆங்காங்கே கடல்வாழ் உயிரினங்களும் ,  சில உயிரினங்களும் , உயிரோடு இருக்கின்றனவா , இல்லை இறந்து கிடக்கின்றனவா என்று தெரியாதவாறு கிடைக்க ,

தொலை நோக்கியை ஜூம் செய்து பார்க்க , அங்கே ஒரு குகை போன்ற அமைப்பு தெரிய , மக்கள் அங்கே பதுங்கி இருக்கலாம் என்று கணித்தவர்கள் ,

ஒலிபெருக்கியை எடுத்து, ” மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் ,  நாங்கள் உங்களுக்கு உதவ தான் வந்திருக்கிறோம் ”  என்று கூறிக்கொண்டே தீவை வட்டமடித்தனர் .

அப்போது தான் தீவு மக்கள் அந்த தீவை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கி இருப்பதை கவனித்தனர் .

அவர்களும் வானில் ஹெலிகாப்டர் வட்டமிடுவதை கவனித்தனர் .   தங்களுக்கு உதவ தான் மீட்பு படையினர் வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது . 

மீட்பு படையினர் தாங்கள் கொண்டு வந்த உதவி பொருட்களை மெதுவாக தீவில் இறக்கினர் . 

அது ஒரு புறம் இருக்க… மிதுனுக்கு உயிரே வந்தது போல் இருந்தது ..  அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தீவின் தலைவர் அவனிடம் ஓடோடி வந்து ,

அவரின் கஷ்டங்களை மறந்து, “டேய் மிதுன்,  ஆண்டவன் கண்ணை தொறந்துட்டான் , நீ அவர்களுடனே கிளம்புற வழிய பார்”  என்று சொல்ல ,   “அய்யா,  கொஞ்ச நாள் பழகினாலும் என்னை உங்கள்ள ஒருத்தனா தான் என்னை பார்த்தீங்க ,   நான் எப்பவுமே உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்” என்றான் கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டே,  பின் “எனக்கு உங்களை போல அருமையான, அன்பான மனிதர்களை அடையாளம் காட்டின ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும் “என்றான் .   “நான் உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் ,  போய்ட்டு வரேன் ” என்று சொன்னவன் ,  

மீட்பு குழுவினருக்கு புரியுமாறு ஆங்கிலத்தில் கத்தினான் ..   அவன் செயல் நடவடிக்கைகள் தீவு மக்களை போல் இல்லாமல் இருக்கவும் ,  NDRF வீரர்கள்  அவன் இந்த தீவை சேர்ந்தவன் அல்ல என்பதை புரிந்து கொண்டனர் .

வீரர்கள் சிலர் கயிறு ஏணி மூலம் தீவுக்கு இறங்கினர் .   இறங்கி அவர்கள் கொண்டு வந்த பொருட்களை கொண்டு தீவு மக்களுக்கு டென்ட்  அமைக்கும் முயற்சியில் இறங்கினர் .  மிதுன் அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் .

அவன் சொன்னதை கேட்டு NDRF வீரர்களுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது .  விமான விபத்தில் இருந்து பிழைத்து மட்டும் இல்லாமல், சென்டினல் மக்கள் அவனை காப்பாற்றியதையும்  கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர் .

“இது மிகவும் ஆச்சர்யம் மிதுன் , சென்தினலிஸ் மக்கள் பற்றி நாங்கள் கேள்வி பட்டிருக்கோம் . இங்கே இருந்து உயிரோட திரும்பி எங்களை மட்டும் இல்ல … உலகத்தையே ஆச்சர்யப்படுத்திட்டீங்க ” என்று ஒரு வீரர் சொல்ல , 

“இவர்கள் ரொம்ப அன்பானவங்க தான் சார் , ஆனால் தங்களோட தனிமையை ரொம்ப விரும்பி வாழறாங்க , அத distrub பண்ணறோம் னு இவங்க நினச்சா தான் நமக்கு ஆபத்து ”  என்று சொன்னான் .

சற்று நேரத்தில் அங்கே ஓரளவு தீவு மக்கள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து தந்து விட்டு அங்கிருந்து கிளம்ப NDRF வீரர்கள் ஆயத்தமானார்கள் .

தீவு மக்கள் அவர்களை நன்றி கூறி வழி அனுப்பினார் .  மிதுனும் தீவு மக்களிடம் நன்றி கூறி விட்டு வீரர்களுடன் கிளம்பினான் .

EPISODE 12

ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பியது .  மிதுனுக்கு மனமெல்லாம் மிகவும் பரவசமாக இருந்தது.   

அவனாலேயே அப்போது   நிகழ்வதை நம்ப முடியவில்லை . தான்  தன் அம்மா அப்பா நண்பர்கள் எல்லாரையும்  பார்க்க போகிறோம் என்று நினைக்கும் போதே  உச்சி முதல் உடல் முழுதும்   மயிர்  சிலிர்த்தது .   அவர்களெல்லாம் தன்னை உயிருடன் பார்த்தால்  எப்படி நடந்து கொள்வார்கள்  என்று நினைக்கும் போது மனம் ஏதோ செய்தது .

அவன்  ஹெலிகாப்டரில் இருந்த ஒரு வீரரிடம்   ‘ சார் உங்க போன் கிடைக்குமா , நான் உயிரோடு இருக்கிறத  எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லணும்…  என்னால தாங்க முடியல சார் !..  உங்க போன் தரீங்களா சார் ப்ளீஸ்” என்று கேட்க ,

மீட்டுப் பணி வீரரான  அவர் ,   எவ்வளவோ  பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர் ,  அந்த வீரர்  சிரித்துக் கொண்டே மிதுனிடம் ,   “தம்பி  கொஞ்சம் பொறுமையா இருங்க , இது சாதாரண விஷயம் இல்லை ,  நீங்க இப்ப போன் பண்ணீங்கன்னா  உங்க அம்மா அப்பா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க  அப்படிங்கறது  தெரியாது  தானே .    இது சந்தோஷமான விஷயம்னாலும்  திடீர்னு  அவங்க இந்த விஷயத்தை கேட்கும்போது அங்க என்ன நடக்கும் அப்படிங்குறத நம்ம யோசிக்கணும் .   அதனால  கொஞ்சம் பொறுமையா இருங்க நம்ம டெல்லி போய் சேர்ந்ததும்  அங்கிருந்து  போன் பண்ணலாம்”  என்று சொல்ல ,  மிதுனுக்கு அது நியாயமாகவே  பட்டது .   அவனும் சிரித்துக் கொண்டே  “சரி சார்”  என்று சொன்னான் .

இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு  ஹெலிகாப்டர் டெல்லி அடைந்தது .    அங்கிருந்தவர்கள் மீட்பு குழுவினரை  வரவேற்று ,   அந்த தீவுகளில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்வதில்  ஆர்வத்துடன் இருந்தனர் .  

அப்போது கூடவே  ஒருவர் வருவதை பார்த்ததும்  அவர்கள் முகத்தில்  கேள்விக்குறியும் ஆச்சரியம் தெரிந்தது .

மிதுன்  அது எல்லாம் பொருட்படுத்தாமல் ,    அந்த வீரரிடம்  போனை வாங்கி  அவன் அப்பா  நம்பருக்கு போன் செய்தான் .

அவன் போனில்  ஒவ்வொரு ரிங்  அடிக்கும் போதும் ,   இங்கே இவன் இதயத்தின் அதிர்வு ஓசை  இவனுக்கே கேட்டது .  சந்தோசமான விஷயம் சொல்லப் போகிறோம் ,    அப்பாவிடம் பேச போகிறோம்.. அம்மாவிடம் பேச போகிறோம்  என்று நினைக்கும் போது  அவனுக்கு  கை கால் இருப்புக் கொள்ளவில்லை .

நொடிகள் கடந்தன ..  அப்பாவின் ஃபோனில்  ரிங் போய்க்கொண்டிருந்தது .  முதல் ரிங் ..  இரண்டாவது ரிங் …  நான்காவது ரிங்கில்  அப்பா போனை எடுத்து ,   போன் நம்பரை பார்க்க  அது ஏதோ தெரியாத நம்பராக இருந்தது .   யார் என்ற கேள்வியோடு  அந்த போனை எடுத்து அவர் காதில்  வைத்து  “ஹலோ” என்றார் .

நண்பர்களே அடுத்த நொடி  எப்படி இருக்கும்  கொஞ்சம் யோசித்து பாருங்கள் . ஆம்

மறுமுனையில்  மிதுன்   “அப்பா ” என்றான் .

அந்த வார்த்தையை கேட்டதும்  அவருக்கு தூக்கி வாரி போட்டது .

ஒன்றும் புரியாதவக  திரும்பவும்  “ஹலோ ” என்று சொல்ல ,

மிதுன் ,”அப்பா…  அப்பா  நான்  தான் மிதுன் பா…, நான் உயிரோடு தான் பா இருக்கிறேன் ” என்று சொல்ல ,  அடுத்த நிமிடம்  சந்தோசத்தில்  அவருக்கு தொண்டை அடைத்து  மூச்சை நின்று விடும் போல் இருந்தது ,

“மிதுனு …  டேய் மிதுனு” என்று அழைத்தவர்  தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனில்  அழ ஆரம்பித்து விட்டார் .

அவருக்கு வார்த்தையே வரவில்லை .   அவனது அம்மா சித்ரா பதறி அடித்துக் கொண்டு  அங்கே ஓடி வந்தார் ,   “என்னங்க என்ன ஆச்சு, என்ன ஆச்சு ”  என்று கேட்க ,   அவர் வார்த்தையே வராமல்,   “அடியே…  நம்ம மிதுன்டி,   நம்ம மிதுன்டி  போன்ல ,

நம்ம மிதுன்  தாண்டி பேசுறன்”   என்று சொல்ல , 

” என்னங்க சொல்றீங்க”  என்று  அவன் அம்மா போனை வாங்கி 

காதில் வைத்து  “ஹலோ” என்று சொல்ல , 

” அம்மா”   என்று மறு முனையில் மிதுன் குரல் கேட்டதும் ,  அந்த வார்த்தை  கேட்டதும்  அவருக்கு மயக்கமே வந்துவிட்டது .

அவனது அப்பா  இதை பார்த்ததும் ,   “ஏய் .. சித்ரா… சித்ரா … எந்திரிடி… எந்திரிடி , , ஒன்னும்  இல்ல, ஒன்னு இல்ல”  என்று அவரை தூக்கி  தன் மடியில் வைத்துக்கொண்டு ,  அந்த போனை தான் வாங்கி பேசினார் .

“டேய் மிதுன்…  சாமி  எங்கடா இருக்க நீ” ,   என்று கேட்டார் .

“அப்பா  நான் பத்திரமா தான் இருக்கேன் .  டெல்லியில் இருக்கிறேன் பா .  நான் வந்துடறேன் பா .   நாளைக்கு  வந்துருவேன்  பா  அங்க”  என்றான் .

“மிதுன்  என்னடா சாமி ஆச்சு ,  எப்படி இருக்க நீ ”     என்று கேட்டார்   அப்பா.   “நான் இப்ப நல்லாத்தான் பா இருக்கேன்… நான் அங்க வந்து எல்லாத்தையும் விவரமா சொல்றேன் உங்களுக்கு.. .    நீங்க   அம்மாகிட்ட குடுங்கப்பா போன”  என்று சொல்ல ,

சித்ரா வாங்கி ஃபோனை காதில் வைத்து ,   “டேய்  மிதுனு …  கண்ணு  என் சாமி,  நீ எங்க  இருக்கன்னு சொல்லுடா,  நாங்க வரோம் டா அங்க …   நீ எங்க இருக்குன்னு சொல்லு நானும்  அப்பாவும் அங்க வரோம்” ,

 என்று சொல்ல  “அம்மா  நான் டெல்லியில் தான் இருக்கிறேன் .     இப்போ உடனே நான்  கிளம்ப முடியாது .   கவர்மெண்ட்ல இருந்து  கொஞ்சம் விசாரிப்பாங்க . .  ஒன்னும் பயப்படாதீங்க  இவ்வளவு நாள் நான் எங்க இருந்தேன்  என்ன நடந்துச்சுன்னு கேட்பாங்க ,   நான் அவங்களுக்கு விவரம் எல்லாம் சொல்லிட்டு ,  விசாரணை முடிஞ்சதும்   அவங்களே என்ன பத்திரமா கொண்டு வந்து  நம்ம வீட்டுல விட்டுருவாங்க  .   நாளைக்கு காலைல நான் அங்கே வந்துருவன் மா …  நீங்க தைரியமா இருங்க நான் சீக்கிரமாக வந்துடறேன்.. .   இப்போ இங்க ஒரே கூட்டமா இருக்கு  நான் போன வக்கிறேன்மா”   என்று  சொல்லி  போனை கட் செய்தான் .

போனை கட் செய்த  மிதுன் ,  எப்படா சுருதிக்கு போன் செய்வோம்  ஸ்ருதியின் குரலை கேட்போம் ,   தான் உயிரோடு இருப்பது தெரிந்தால் தன் உயிருக்கும் மேலான சுருதி  எப்படி பீல் பண்ணுவாள்  என்று நினைக்கும் போது  அவனுக்கு உள்ளுக்குளே ஏதோதோ   செய்தது .

அவன் போனில் சுருதியின்  எண்களை  டயல் செய்தான்…   மிகுந்த எதிர்பார்ப்புடன் .  ஆனால் ,   போன்  பீப் பீப்  பீப்  என்ற சத்தங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தது…  ரிங் சவுண்ட் எதுவும் கேட்கவில்லை .   ஒரு முறை இரு முறை மூன்று முறை முயற்சி செய்து பார்த்தான்  , ரிங் செல்லவில்லை . 

சற்று மனம் தளர்ந்து போனன்  மிதுன் .  சரி தன் நண்பர்கள்  ஹரிஷ் மற்றும் சியாமுடன் பேசலாம் என்று  அவர்களுக்கு போன் செய்தான் .

ஏதோ தெரியாத நம்பரிலிருந்து போன் வருவதை கண்ட சியாம் யார் கேள்விகளை  கண்ணில் வைத்துக் கொண்டு  ஃபோனை எடுத்து, “ஹலோ”  என்றான் . 

மறுமுனையில்  “ஹலோ” என்று மட்டும் சொன்னால் மிதுன் ,  நண்பனிடம் கொஞ்சம் விளையாடலாம் என்று நினைத்து … 

சியாமுக்கு கொஞ்சம்  அந்த குரலை கேட்டதும்  அதிர்ச்சியாக இருந்தது ,   சுதாரித்துக் கொண்டு  மீண்டும் “ஹலோ”  என்றான் .   இப்போது  மிதுன்  தன் குரலை சற்று மாற்றி  “ஹலோ  டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டான் .

சியாம் யார் என்று தெரியாமல், ” யாருங்க நீங்க ? .. யார் பேசுறீங்க?”  என்று கேட்டான் .   “ஏன்டா கொஞ்ச நாள் பார்க்கலைன்னா  மறந்திருப்பீங்களாடா”  என்று  மிதுன் கேட்டான் தன் மாற்றிய குரலில் .

” ஹலோ…  நீங்க யாருன்னு தெரியல எனக்கு  எனக்கு வேலை இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா?”  என்று கொஞ்சம் கடுப்புடன்  ஷாம் கேட்க ,

”  சார்  கடுப்பான என்ன செய்வீங்க ?” என்று கிண்டல் செய்தான்  மிதுன் .

“ஹலோ  நான் சீரியஸா கேட்கிறேன்… கொஞ்சம் யாருன்னு சொன்னீங்கன்னா பெட்டரா இருக்கும்”  அப்படின்னு சியாம்  கேட்க ,

“ஏன் யாருன்னு சொன்னா தான் பேசுவீங்களா சார்?”  என்று திரும்பவும் மிகவும் கடுப்பேற்றினான் .

“இப்ப நீங்க யாருன்னு சொல்ல போறீங்களா,  இல்ல நான் போன வைக்கவா?” , என்று ஷியாம் கேட்க,  பக்கத்துல இந்த ஹரிஷ்  “யார்ரா  மச்சி”  என்று கேட்டான் .

“தெரியல டா”  என்று சொன்னான்  சியாம் .

இப்போது மிதுன், ” ஏன் அந்த வெங்காயம் என்ன சொல்றாரு ” என்று ஹரிசை கேட்க ,

இப்போது  இருவருக்குமே  கோவம் வந்துவிட்டது .

“ஒழுங்கா நீ யாருன்னு சொல்லு  கடுப்பேத்தாத ” என்று  ஷியாம் சொல்ல ,

இப்போது மிதுன் தனது குரலில் ,  “ஏண்டா வெங்காயங்களா  என்னைய எப்படிடா  மறந்தீங்க” என்று கேட்டான் .

இப்பொழுது போனில்  மிதுனின் வாய்ஸ் கேட்ட  ஷாம்,  டேய்  கொஞ்சம் அதிர்ச்சியோடு  “யார் இது” என்று கேட்டான் .  

“டேய் நான் , மிதுன் தாண்டா பேசுறேன் ,  நான்   உயிரோட தான் டா இருக்கேன்”  என்று சொல்ல  நண்பர்கள் இருவருக்கும்  அதிர்ச்சியில் தலையை சுற்றியது .

“டேய் மிதுன் … எங்கடா இருக்க … என்னடா பண்ணிட்டு இருக்க… எங்க இருக்குன்னு சொல்லு முதல்ல…  என்று  கேட்க,   பக்கத்துல இருந்த ஹரிஷ் “அவன் முதலில் எங்க இருக்கான்னு கேளுடா..  நம்ம போலாம் இப்போ”  அப்படின்னு சொல்ல ,

“இருங்கடா!..  இருங்கடா!..   நான் இப்ப டெல்லியில் இருக்கேன் டா ,   அந்த பிளைட்  வெடிச்சதில  நான் கடலில் விழுந்து பக்கத்துல இருந்த தீவில் சிக்கிட்டேன்டா,  அவங்கதான் என்ன பாத்துட்டாங்க…  இப்போ சுனாமி வந்துச்சு இல்ல…  அப்ப அந்த மீட்பு குழு  அங்க வந்துச்சு,   அவங்க கூட நான் இப்ப வந்துட்டேன் .   இங்க கொஞ்சம் பார்மாலிட்டிஸ்ல இருக்கு  அதெல்லாம் முடிச்சுட்டு  நாளைக்கு என்னை அனுப்பிடுவாங்க” ,

என்று சொன்னவன்  “டேய்  ஏன்டா சுருதி போன் எடுக்க மாட்டேங்கற,  சுருதி போன் ரீச் ஆகவே மாட்டேங்குது” ,  என்று கேட்க ஹரிசும் சியாமம் கொஞ்சம் அதிர்ச்சியாக ,

“ஆமாடா மாப்பிள்ளை  நாங்களும் ட்ரை பண்னினோம்,   போன் போகல…  நீ இங்க வா… நமது என்னன்னு பாத்துக்கலாம்”  அப்படின்னு சொல்ல,

” சரிடா மாப்ள.. இங்கே  என்ன விசாரிக்க வந்து இருக்காங்க,  நான் அப்புறமா கூப்பிடுறேன்,   இல்லன்னா காலையில நான் ஊருக்கு வந்துருவேன் ” அப்படின்னு சொல்லிட்டு  போனை கட் பண்ணினான்  மிதுன் .

EPISODE – 13

சென்னையில் மிதுனின் வீடு ,

   மிதுனின் அம்மா அப்பாவுக்கு  அடுத்த நாள் காலை எப்போது விடியும் என்று காத்து கொண்டிருந்தனர் .   அவர்களுக்கு  அந்த ஒவ்வொரு நொடி நகர்வும்  ஒரு கனமாக இருந்தது …  அவர்களுக்கு சுத்தமாக தூக்கம் இல்லை , தூங்க முடியவில்லை.

 எப்படி தூக்கம் வரும் .   

அம்மா அப்பா இருவரையும்   ஓர் உயிர் ஆக்கி  அந்த உயிராக வந்தவன் அல்லவா அவன் ….   அவனை கண்ணால் பருகி  மனதால்  நிறைக்க  அந்த இரண்டு உயிரும்  காத்துக் கொண்டிருந்தது …

ஒரு வழியாக  காலை கதிரவன் தனது கதிர்களை படர விட ஆரம்பித்தான் .    மிதுனின் அம்மா  காலையில்  தடதட வென  எழுந்து,  வாசல் பெருக்கி கோலமிட்டு ஏர்போர்ட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன ஹரிஷுக்கும் ஷ்யாமிற்கும்   காத்திருக்க தொடங்கினர் .    

மிதுன்  11 மணிக்கு  ஏர்போர்ட் வருவதாக  தகவல் வந்தது . 

ஹரிசும்  ஷியாமும்  எட்டு மணிக்கு  மிதுனில் வீட்டுக்கு வந்தனர் .   அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு  ஏர்போர்ட்டுக்கு செல்ல .

“எப்பா  நீங்க ரெண்டு பேரும்  ஏதாவது சாப்பிடுறீங்களா,  அம்மா எதாவது  செஞ்சு தரட்டா பா ” என்று கேட்க ,

“அம்மா  முதல்ல மிதுன் வரட்டும்மா…  அவன பாக்கணும்மா…  அப்புறம் தான்  எங்களுக்கு சாப்பாடு உள்ளே இறங்கும்”  என்று நண்பர்கள் கூறினர் .

மிதுனின்  நண்பர்களை அம்மாவும் அப்பாவும் பெருமையாக பார்த்தனர் .  இந்த நட்பு எப்போதும்  நிலைத்திருக்க வேண்டும் என்று ஆண்டவனை  அந்த நிலையிலும் வேண்டினர் .

“கிளம்பலாமாம்மா…   கிளம்பலாமாப்பா ?”  என்று ஹரிஷ் கேட்க ,   “போலாம்பா  போலாம்”  என்ற அம்மாவும் அப்பாவும்  காரில் அமர ,   ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு  அவர்கள் ஏர்போர்ட் அடைந்தனர் .   அங்கே மிதுனை  பார்ப்பதற்காக மீடியோ காரர்களும்  காத்துக் கொண்டிருந்தனர் .   மிதுன் திரும்பி வருவது ஒரு மிக பெரிய ஆச்சர்யமான செய்தி அல்லவா ,  அதனால் அங்கே கொஞ்சம் கூட்டமாக தான் இருந்தது .

அனைவரின்  கடிகாரமும் மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது போல் அந்த நாள் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.    ஒரு வழியாக  “டெல்லியில் இருந்து சென்னை  வரும்  பிளைட்  இன்னும் பத்து நிமிடங்களில்  தரை  இறங்கும்”  என்று அறிவிப்பு வர ,

அனைவரும் பரபரப்பானார்கள் .

பிளைட் வந்து இறங்கியது .  நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தது .  மிதுனின்  அம்மா அப்பா  நண்பர்கள்   அனைவரது விழிகளும்  விமான நிலையத்தின் வாயிலை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது . 

 வெளியே வருபவர்களை  ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் நால்வரும் ,   திடீரென்று சியாம்   “டேய் அங்க பாருடா மிதுன்  வந்துட்டாண்டா” ,   என்று கத்த என்று பரபரப்பாக அனைவரும் வாசலை நோக்கி ஓடி சென்றனர்  . 

மிதுன் ஓட்டமும் நடையுமாக  வாசலை நோக்கி ஓடிவந்தான் …    வந்தவனை மீடியாக்காரர்கள்  சூழ்ந்து கொள்ள ,   அவர்களிடம்  “ஒரே நிமிடம் நண்பர்களே ,   அம்மா அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்”  என்று அவர்களை நோக்கி ஓடினான் . 

“அம்மா… அப்பா”  என்று அவர்களை நோக்கி,    தாய் பசுவை  நோக்கி  ஓடும்  கன்று குட்டியை போல  ஓடிச் சென்று கட்டிக்கொள்ள , 

அம்மாவும் அப்பாவும்  “டேய் கண்ணு…   என் சாமி… இப்பதாண்டா எங்களுக்கு உயிரே வந்து இருக்கு”  என்று அவனை உச்சிமுகர்ந்து கட்டி கொண்டு முகம் முழுதும் முத்தமிட்டனர்…  அப்பா அம்மா உங்களையெல்லாம் இப்படி பார்ப்பேன்னு நினைச்சு கூட பாக்கல ..  

என்று மிதுனும் அழ ,

அந்த கனமான தருணத்தில்

அங்கே ஒருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை.  

இறந்து போனதாக சொல்லப்பட்ட மகன் உயிரோடு திரும்பி வர ,   அவனை பார்த்த பெற்றவர்கள் சந்தோஷத்தால்  அவனை கட்டிக்கொண்டு அழ ,

அந்த கட்சியை பார்த்தவர்கள் அனைவர் கண்ணிலும் அவர்களை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது .

மிதுன் அப்படியே திரும்பி ஹரிஷயும் , ஷ்யாமையும் பார்த்து “மச்சி”  என்று வர ,  அம்மா அப்பாவை பார்த்துவிட்டு வரட்டும் என்று தள்ளி நின்ற அவர்கள் இருவரும் ,

இப்போது அவனை அப்படியே வாரி அணைத்து கொண்டனர் . 

“டேய் , ஏன்டா இவ்ளோ நாள் எங்களை இப்படி தவிக்க விட்டுட்டு போன ..?”  அவர்களும் அழ , 

“ஆமாடா மச்சி எனக்கு இப்படி போய் இருக்கணும்னு ஆசை பாரு” என்று கண்ணில் கண்ணீருடன் அப்போதும் கிண்டலாக கூற , 

“உனக்கென்னடா ,  நீ எங்கேயோ இருந்த,  நீ போயிட்டேன்னு நினைச்சு நாங்க எல்லோரும் நடை பிணமா தாண்டா இங்க சுத்திட்டு இருந்தோம், தெரியுமாடா ”  என்று

பொய்யாக அவன் நெஞ்சில் குத்த ,

“சரி டா அதான் வந்துட்டேன் ல ”  வாங்க முதல்ல வீட்டுக்கு போலாம் என்று அழைத்தான் .

அதற்குள் மீடியா காரர்கள் இவனுக்காக காத்திருப்பது தெரிய வர , அவர்களிடம் சென்று தனக்கு நடந்ததை விவரமாக கூறி விட்டு ,  அவர்களிடம் விடை பெற்று கொண்டு திரும்பினான் .

இப்போது அம்மா அப்பா, நண்பர்களுடன் காரில் மிதுன் ஏற , கார் வீடு நோக்கி சென்றது .

அவர்கள் வீட்டின் முனையை திரும்பியதும் அந்த தெருவில் இருந்த அனைவரும் அவர்கள் வீட்டுக்கு வெளியே மிதுனுக்காக காத்திருந்தது தெரிந்தது .

வீட்டு வாசலில் கார் நின்றதும் ,  அவர்கள் அனைவரும் மிதுனை சூழ்ந்து கொண்டனர்.

  “தம்பி நல்லா இருக்கியா?  மிதுன் எப்படிப்பா இருக்க? மிதுன்  எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம் பா ”  என்று ஆளாளுக்கு மிதுனிடம் விசாரிக்க ,  

‘எதை எதையோ தேடி ஓடி கொண்டிருக்கிறோம் , சுற்றி இருப்பதை நினைக்காமல் ,  இனிமேல்   தன்னை சுற்றி இருப்பதை இன்னும் நேசிக்க கற்று கொள்ள வேண்டும் ,  இங்கே எத்தனை மனிதர்கள் தான் இங்கு உயிரோடு வந்ததை கண்டு சந்தோசம் கொள்கிறார்கள் ,  இவர்கள் என்ன நமக்கு சொந்தமா பந்தமா ,    அன்பு இல்லாத மனிதன் யாரும் இல்லை ,  அதை வெளிப்படுத்தும் தன்மை தான் ஆளாளுக்கு மாறுகிறது ‘  என்று என்னென்னவோ மனதில் ஓட , 

மிதுன் தன்னை விசாரிப்பவர்களை எல்லாம் அன்போடு பார்த்து, பதில் கூறி விட்டு  வீட்டில் நுழைய போக ,

“மிதுன் இருப்பா ஒரு நிமிஷம்” , என்று பக்கத்துக்கு வீட்டு விஜி அக்கா , வீட்டுக்குள் சென்று ஆரத்தி தட்டு எடுத்து வந்து , அவனை நிற்க வைத்து தலையிலிருந்து கால் வரைக்கும் சுற்றி எடுத்து ,  “என் தம்பி நல்லா இருக்கணும்” என்று அவனுக்கு ஆரத்தி பொட்டு வைத்து விட ,  

மிதுன் “அக்கா”  என்று அவர்களை கட்டிக்கொண்டான் .  “ஒன்னும் இல்லப்பா இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்று அவர் தட்டி கொடுத்தார் .

‘எண்ணங்களும் , நோக்கங்களும் சரியாக இருந்தால் உறவுகளை நாம் தேடி செல்ல வேண்டியத்தில்லை … தானாகவே அமையும்’ இல்லையா நண்பர்களே.

“சரி வாங்கப்பா எல்லோரும் உள்ளே போலாம் ”  என்று மிதுனின் அப்பா அழைக்க , அவர்கள் அனைவரும் உள்ளே சென்றனர் .

உள்ளே சென்ற மிதுனும் நண்பர்களும் பேசி கொண்டிருக்க , அம்மா தன் மகனுக்கு வாய்க்கு ருசியாக சமைக்க சமையல் அறையில் நுழைந்து கொண்டார் .  அப்பாவும் தன் மகனிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்து விட்டு , 

நண்பர்கள் எதாவது பேசி கொள்வர் என்று ,  நாசுக்காக “சித்ரா” ,  என்று அழைத்து கொண்டே சமையல்  அறையில் ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்து சென்று விட்டார் .

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த மிதுன் பேச்சு ஸ்ருதியை பற்றி திரும்பியது .

“டேய் மச்சி ,  ஸ்ருதிக்கு கால் பண்ணினேன் , மொபைல் ரீச் ஆகல ,  நீங்க பேசினீங்களாடா அவ கிட்ட “,  என்று ஹரிஷிடம் கேட்க ,

ஹரிஷும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

பின் “மச்சி ,  வந்ததும் வராததுமா இத சொல்ல வேணும்னு நினைச்சோம் ” என்று ஷியாம் இழுக்க ,

“என்னடா ஆச்சு , சொல்லுங்க ” என்று மிதுன் கொஞ்சம் குழப்பத்துடன் கேட்க ,

“மச்சி , ஸ்ருதிக்கு கல்யாணம் ஆயிடுச்சு டா ,  அவ அத்தை பையனோட ”  என்று சொன்னான் ஹரிஷ் .

மிதுன் அவன் நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல பாரமாக அவர்களை பார்க்க ,

“ஆமாடா மச்சி ,  ஸ்ருதி எங்ககிட்ட போன் பண்ணி… அங்க சூழ்நிலை வேற மாதிரி இருக்கு ,   எங்க அப்பாவுக்காக நான் மனோவை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன் ,   எனக்கு என்ன முடிவெடுக்கறதுன்னே தெரியல ,  யாரோ ஒருத்தருக்காவது நிம்மதியா கொடுப்போம்னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா  சொன்னா , அப்புறம் இனிமே நான் வேலைக்கு வர மாட்டேன் னு சொன்னா டா ”  …  “எங்களால எதுவும் சொல்ல முடியல … ஆனா அவ கல்யாணத்துக்கு போற தைரியமும் எங்களுக்கு இல்ல , அதனால  கல்யாணத்துக்கும் போகல ” என்று சொன்னான் ஹரிஷ் .

வேரில்லாமல் ஒரு மரம் எப்படி நிற்குமோ அது போல… உயிரையே பிரித்து எடுத்து விட்டதை போல மிது்னுக்கு இருந்தது .  

“நீ குழப்பிக்காத டா , அவ நிலைமையில இருந்தா  நாம என்ன செஞ்சிருப்போம் னு கூட தெரியல .  இப்ப நீ தைரியமா இருக்கணும் டா மிதுன் … அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் நீ தான் உயிர் ,  நீ ஸ்ருதியை நினச்சு கஷடப்படாம இரு … ஸ்ருதி விஷயத்தை வெளியில காட்டிகாத …  கஷ்டம் தான் .. ஆனா வேற வழி இல்ல , புரிஞ்சுக்க ” என்று ஷியாம் சொல்ல ,  மிதுனுக்கு அவன் சொன்னது எதுவும் உள்ளே செல்லவில்லை .

ஆனால் அம்மா அப்பாவை கஷ்ட படுத்தி விட கூடாது … இவ்ளோ நாளே ரொம்ப கஷ்ட பட்டுட்டாங்க … என்பது மட்டும் புரிந்தது .

அதற்குள் அம்மா , “சாப்பிட வாங்கப்பா … எல்லாம் ரெடி ஆயிடுச்சு ” என்று அழைக்க ,

எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் , “இதோ வந்தி்ர்றோம் மா ” என்று சொல்லி விட்டு மூவரும் சாப்பிட சென்றனர் .

மிதுனுக்கு பிடித்த அடையும் , சந்தகையும் ரெடியாக இருந்தது .  அனைவருக்கும் சாப்பாடு அம்மா பரிமாறி விட்டு அம்மாவும் அப்பாவும் மிதுனையே பார்த்து கொண்டிருந்தனர் . 

நடந்ததை இப்போது நினைத்தாலும் அம்மாவுக்கு பதறி கொண்டு வந்தது .  ‘என் குல சாமியே என் செல்வத்தை ஏங்க கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேத்துட்ட’  ,    என்று மனம் கலங்கி நினைத்தவர் எதையும் வெளி காட்டாமல் , மிதுன் சாப்பிடுவதையே பார்த்து கொண்டிருந்தார் .

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர் .   நேரம் ஆகிக் கொண்டிருக்கவே ஹரிசும்  ஷியாமும்   , மச்சி நாங்க கிளம்புறோம் .  நாளைக்கு வறோம் என்று சொல்லிவிட்டு வாசல் வரைக்கும் வந்தவர்கள் … மிதுனிடம் …

“டேய்  மச்சி ,  உன்னோட நிலைமை எனக்கு புரியுதுடா ,   நடந்ததுக்கு  யாருமே பொறுப்பேத்துக்க முடியாது …   எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு …   இனி என்ன பண்ண முடியும்”.

“ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க .  அவங்கள பத்தி யோசி .   அவங்களுக்காகவாது நீ நல்லா இருக்கணும் .   இப்ப எதுக்காகவும்  இத பத்தி ரொம்ப யோசிக்க வேண்டாம் .   என்ன நடந்தாலும்  ‘லைஃப் ஹேஸ் டு கோ ஆன்’ இல்லையா ,   எல்லாரும் சொல்ற லைன் தான் இது ….  ஆனால் அதுதாண்டா உண்மை ,  உலகத்துல எவ்வளவு விஷயங்கள் இருக்கு…,    ஸ்ருதியோட இழப்பு உனக்கு  ஈடு செய்ய முடியாத ஒன்று தான் .    ஆனால் அதுக்காக  கவலைப்பட்டுட்டே இருக்க முடியாது இல்லையா “.

“அது மட்டும் இல்லாம   இப்பதான் நீ அங்க இருந்து  பெரிய கண்டத்தில் இருந்து  வெளியில் வந்து இருக்க …   இப்ப இந்த பிரச்சனைய  நினைச்சு  கவலைப்பட வேண்டாம் …”   என்று கூற    மிதுனுக்கும்  அவர்கள் சொல்வதில் உள்ள  நியாயம் புரிந்தது .     ஆனாலும் அறிவு மனசு வேற வேற இல்லையா ….   

“பார்க்கலாம் இந்த காயம் எல்லாம் எப்ப ஆறும்னு  சொல்லிட்டு,

EPISODE – 14

ஆண்டவன் நமக்கு  இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்கான்னு நினைச்சேன் .

இப்ப வெறும்  உயிரியில்லாத ஜடமா மட்டும்தான்  என்னால் உணர முடியுது .  அப்பா அம்மாவுக்கு என்ன விட்டா வேற யாரும் இல்ல,    அதனால இருக்கிற வரைக்கும் அவங்கள  சந்தோஷமா வச்சுக்கணும்”  என்று தோன்றியது மிதுனுக்கு.

” சரி  புரியுதுடா   பாத்துக்கலாம்”  என்று மெல்லிய சிரிப்புடன் அவர்களிடம் கூற ,  அவர்கள் இருவரும்  அவனுக்கு  தெம்பு தெரிவதை பார்த்து  தைரியமானார்கள் .   “சரிடா எனக்கு கிளம்புறோம்…  நீ ரெஸ்ட் எடு… நாளைக்கு மீட் பண்ணலாம்”  என்று சொல்லிவிட்டு  அவர்கள் கிளம்பினார்.

என்னதான் மனதுக்குப் புரிந்தாலும் ,  இதயத்தில் ஏற்பட்ட  அந்த வலி  குறையவில்லை ,    தனக்கே தனக்காக இருந்தது  இப்போது இல்லை  என்று நினைக்கும் போது ,  உயிரையே உருவி  வெளிய எடுத்தது போல் இருந்தது .

ஸ்ருதியின்  நிலைமையும் அப்படித்தான் இருக்கும் ,   தான் இல்லாமல்  அவள் மட்டும் சந்தோஷமாகவா  இருக்கப் போகிறாள்  …  ஆண்டவா  என் சுருதி எப்படி இருக்கிறான்னு  தெரியல …    ஆனா அவ சந்தோசமா இருக்கணும்  அதுதான் இப்ப எனக்கு வேணும்…

‘அவளுக்கு  ஒரு நாள் என்னை பற்றி  உனக்கு தெரியும் போது அவ இல்லாம நான் கஷ்டப்படுறேன்  அப்படிங்கிற உணர்வு அவளுக்கு வரக்கூடாது .   நானும் சந்தோஷமா தான் இருக்கேன்  அப்படிங்கிற மாதிரி தான் அவன் நினைக்கணும் .

நான் உயிரோடு இருக்கும்போது என்ன விட்டுட்டு  தான் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு  சந்தோஷமா இருக்கிறோம் அப்படிங்கிற குற்ற உணர்வு அவளுக்கு வராத மாதிரி  பார்த்துக்க ஆண்டவா .  என்னால  இனிமேலும் அவளுக்கு  எந்த கஷ்டமும் வந்திடக் கூடாது .   அவள நான் மீட் பண்ணாம  இருந்தாலும் பரவால்ல ..  அவ நல்லா இருந்தா போதும் ..   அவ இல்லாம நான் கஷ்டப்படுகிறேன் என்று தெரிஞ்சா  அவன் நொறுங்கி போய்டுவா…  அந்த நிலைமை மட்டும் அவளுக்கு வராமல் பார்த்துக்கொள்  கடவுளே”  என்று மனதார  ஆண்டவனை பிரார்த்தித்தான் .  

அந்த இரவு அப்படியே யோசித்துக் கொண்டே சென்றது அவனுக்கு.

எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை .   அதிகாலை நாலு மணி சுமாருக்கு  திடீரென்று  தூக்கி வாரிபட்டது போல் விழிப்பு வந்தது அவனுக்கு …   ‘தன் ஸ்ருதி  தனக்கு இல்லை’  என்று நினைப்புதான் அவன் திடுக்கென்று  விழித்ததற்கு காரணம்…  மனம் எனும் குதிரை கட்டுக்கடங்காமல்   ஓடிக் கொண்டிருக்க ,    அதற்கு பின் தூக்கம் வரவில்லை மிதுனுக்கு .    

காலை 5 மணி ஆனது .    

மிதுனின் அம்மா  எழுந்தார் …    எழும்போது மனம் நிறைந்து  ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே எழுந்தார் …   ‘என் பிள்ளையை  எனக்கு திருப்பி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஆண்டவா’  என்ற அவரும்  கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே எழுந்தார் .    எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டவர் ,   மிதுனின்   அறைக்கு  சென்று பார்க்க ,   அம்மா வருவது தெரிந்ததும், மிதுன்  தூங்குவது போல் பாசாங்கு செய்தான்.  

அவன் அருகில் சென்ற அம்மா,   அவன் தலையை காய் விரல்களால் கோதி  விட்டு ,   நெற்றியில் முத்தமிட்டார்…  ‘என் சாமி’ என்று சொல்லிக்கொண்டே .  

அவர் கண்களில் வழிந்த நீர் …  அவன் முகத்தில் பட  மிதுன் கண் விழித்தான்,  “அம்மா”  என்றான் .

“ஏன் சாமி ”   என்றார் மிதுனின் அம்மா .

” இன்னும் ஏம்மா  நடந்ததை  நினைச்சுட்டு இருக்க ..  விடுமா நான் தான் வந்துட்டேன் இல்ல ..   இனி எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருமா”  என்று சொல்ல ,

” ஆமாடா!   ஆமாடா கண்ணு ,  இனிமேல் அம்மாவுக்கு என்ன கவலை”  என்று சிரித்துக் கொண்டே ,   “காபி கொண்டு வரட்டா” என்று கேட்டார் . 

“கொண்டு வாம்மா ,   கொண்டு வந்துட்டு என்னை எழுப்புமா நான் படுத்து இருக்கேன்” என்று சொல்லிவிட்டு  மிதுன்  திரும்பவும் கட்டிலில் படித்துக் கொண்டான் . 

“சரி!   நான் காபி போட்டு கொண்டு வந்து உன்னை எழுப்பறேண்டா… நீ படுத்திரு!” என்று கூறிவிட்டு அம்மா சமையல் அறைக்கு  காபி போடச் சென்றார் .

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவர்  மிதுனைப்   பார்க்க  அவன் சற்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது .  

  “ஆம்!!  அம்மாவின்  ஸ்பரிசம்  அவனுக்கு  கொஞ்சம் நிம்மதியை தந்திருந்தது…  அந்த நிம்மதி தந்த உறக்கம் தான்  இப்போது  மிதுன்  தூங்கிக் கொண்டிருந்தான்” .

காலை 9 மணி இருக்கும் …   அருகில் இருந்த போன் அலறியது .  

சத்தம் புதிதாக இருக்க எழுந்து அருகில் பார்க்க ,  அவனுக்காக  அவனது அப்பா  புதிதாக போன் வாங்கி வைத்திருந்தார்… அதே பழைய எண்ணுடன் .    போனை எடுத்து யார் என்று பார்க்க  ஹரிஷ் தான் அழைத்திருந்தான் .

காதில் வைத்து  “ஹலோ” என்றான் மிதுன்.

“என்னடா மச்சி  எழுப்பி விட்டேனா  நான் உன்னைய”  என்றான்  மறுமுனையில் ஹரிஷ் .

“இல்லடா மச்சி காலையில  சீக்கிரமாக எழுந்துட்டேன் ,   அப்புறம் டயர்டா இருந்துச்சுன்னு சொல்லிட்டு திரும்பவும் படுத்திட்டேன்”  என்று சிரித்துக் கொண்டே.

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா மச்சி,    இந்த மாதிரி நம்ம பேசி எவ்வளவு நாளாச்சு  , இதெல்லாம்    நினைச்சு பார்த்தா நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு”…  என்று ஹரிஷ் கூற ,

“எனக்கும்  இன்னும் ஒண்ணுமே புரியல டா  என்ன நடக்குது…  கண்ண மூடி முடிகிறதுக்குள்ள என்னென்னமோ நடந்திருச்சு”  என்ற மிதுனும்  சொல்ல ,

“அப்புறம் ஷியாம் எங்கடா?”  என்று கேட்டான் .   ரெண்டு பேரும் இங்க தான்டா இருக்கோம் ,  இந்த அவன் பக்கத்துல தான் டா இருக்கான்”  என்று கூற ,

” நீ எப்படா  ஆபீஸ் வர” என்று கேட்டான்  சியாம் அவனிடம் .

” ஒரு ரெண்டு  நாள் டா போகட்டும் டா  மச்சி  வரேன்”  என்று சொன்னான் மிதுன் .

” ஓகே டா மச்சி  கொஞ்சம் ஒர்க் இருக்கு நான்  முடிச்சுட்டு அப்புறமா போன் பண்றேன்  “என்று சொல்லி ஃபோனை கட் பண்ணினான்   ஷியாம் .

அப்போது அங்கே வந்த அவர்களின் ப்ராஜெக்ட் மேனேஜர்  சிரித்துக் கொண்டே  “யாருப்பா அது மிதுனா லைன்ல” என்று கேட்க ,

” ஆமா சார்”  என்று ஹரிஷ் சொன்னான்  ,

எப்பப்பா  அவன் ரீஜாயின் பண்ண போறான்” என்று கேட்டார்  மேனேஜர் .

” ரெண்டு நாளா வரேன்னு சொல்லி இருக்கான் சார்”  …  என்று சொன்ன சியாம்  சிரித்துக் கொண்டே  “சார்…  வந்த உடனே அவனுக்கு ஒர்க்  அதிகமாக கொடுத்துடாதீங்க .   கொஞ்ச நாள்  அவன் எங்களுடைய  இந்த ப்ராஜக்ட்லையே ஒர்க் பண்ணட்டும் ..  அப்புறம் பாத்துக்கலாம்”  என்று சொல்ல ,  “ஓகே!…  ஷியாம் இதெல்லாம் சொல்லனுமா”  என்ற மேனேஜர் ,

“ஆமா இப்ப பண்ணிட்டு இருக்கிற ப்ரொஜெக்ட்டோட கிளையன்ட் கிட்ட  உன்னோட நம்பர் கொடுத்திருந்தேன்…  பேசினாரா?”  என்று கேட்டார்.

” ரொம்ப நல்ல கிளையன்ட் சார் ,   நடுராத்திரியில் எழுப்பி  ப்ராஜெக்ட் என்ன ஆச்சுன்னு கேக்குறாரு ..    அப்புறம் தூங்கினப்புறம் கனவுலயும்  வந்து  கேட்கிறார் . 

சில சமயத்துல நான் தூங்குறேன்னா  முழிச்சிருக்கேனான்னு  எனக்கே தெரியல”  என்று சிரிக்க ,

“விடுப்பா இந்த கிளைன்ட்  அப்படித்தான்”  என்றார்  மேனேஜர் .

“என்ன சார் இது  எதுக்குமே திருப்தியாக மாட்டேங்குறாரு ,    அதை சேஞ்ச் பண்ணி கொடு, இதை சேஞ்ச் பண்ணி கொடுன்னு  சொல்லிட்டே இருக்காரு சார்” ,   என்று சொல்ல

” எப்படியோ  டைம் ஓடிட்டே இருக்குனு.. எப்ப முடிக்க போறோம்னே தெரியல இந்த ப்ரொஜெக்ட்டை”   என்றார் மேனேஜர் .

“எனக்கு என்னமோ  ப்ராஜெக்ட் பண்ற மாதிரியே தெரியல சார்…  ஸ்கிரீன் பேக்ரவுண்ட் எல்லாம் அப்படி மாத்து… இப்படி மாத்துன்னு சொல்லிட்டே இருக்காரு சார் ..   எனக்கு என்னமோ  VFX  யூஸ் பண்ணி  படம் எடுக்கிற மாதிரி இருக்கு சார்  இந்த ப்ராஜெக்ட் பண்றது” என்று சொன்னான் .

“சரி சமாளிப்போம்”  என்று மேனேஜர் சொல்லிவிட்டு நகர்ந்தார் .

அப்போது ஹரிஷ் ஷாமிடம்  கிண்டலாக ,     “டேய்   ஷ்யாம்!!! ,   உனக்கு என்னடா  பிரச்சனையே இல்லை ,   எந்த டென்ஷனாலும்  உன்னை கூலாக்குறதுக்கு  உன்னோட மாயா இருக்கா”  ,   அப்படின்னு ஷ்யாமை பார்த்து கண்ணடித்து கொண்டே சொல்ல,  சியாம் அவனைப் பார்த்து  நரநரவென்று பல்லை  கடித்தான் .

அப்போது சரியாக  ஷியாமின் போன் அழைக்க ,  யார் என்று எடுத்து பார்த்தால்  மாயா தான் அழைத்திருந்தாள் .    இவள் கிட்ட பேசாம எஸ்கேப் ஆகவும் முடியாது  என்று தெரிந்த சியாம்  போனை எடுத்து காதில் வைக்க ,   ‘ஹலோ’ என்று கூட சொல்லவில்லை.  

எடுத்த எடுப்பிலேயே மாயா “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா உனக்கு ” என்று கேட்டாள் .

ஷியாம் ‘திரு திரு’ வென   என்று முழித்துக் கொண்டு,  

“இன்னைக்கு என்ன  வெட்னஸ்டே தானே”  என்று கேட்க ,

“ஆமா எனக்கு எனக்கு  வெட்னஸ்டே என்று தெரியாது பாரு…  அதை தெரிஞ்சுக்க தான் போன் பண்ணி உன்கிட்ட கேக்குறேன் நானு”  என்று அவள் கடுப்பாக பேச ,

ஷாமிற்கு என்ன  ரிப்ளை கொடுப்பது என்று தெரியாமல்  ‘திரு திரு’வென   முழித்தான் .

“என்ன திரு திருன்னு முழிக்கிற! ” என்று நேரில் பார்ப்பவள் போல பேசியவள் “ஞாபகம் வரலையா உனக்கு ” என்று கேட்டாள்  மாயா .

ஷியாம் மனதிற்குள்,  “என்ன நாளா இருக்கும் இன்னிக்கி…  ஆக மொத்தம் எனக்கு கெட்ட நாள்னு  மட்டும் தெரியுது”  என்று யோசித்தவன்…  இன்னைக்கு யாரோட பர்த்டேவாவது இருக்குமா  என்று யோசிக்க  அவனுக்கு ஒன்றுமே  தெரிய வரவில்லை .

ஷ்யாம்  மாயாவிடம்  சரண்டர் ஆகி ,   “மாயா கோவிச்சுக்காம  நீயே சொல்லு மாயா”  என்று சொல்ல ,  “உனக்கு என்ன பத்தி ஞாபகம் இருந்தா தானே  எங்க அம்மாவ பத்தியும் ஞாபகம் இருக்கும்”  என்று சொன்னாள்.

   அவனுக்கு அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது… போன வாரமே  மாயா  சொல்லி இருந்தாள் … ‘ இந்த வாரம் அவங்க அம்மாவுக்கு  பர்த்டே வருது…  அதனால  அம்மாவுக்கு சர்ப்ரைஸா  ஒரு ரிங் வாங்கி கொடுக்கணும்’  என்று சொல்லி இருந்தாள் .   

இப்போது  ஷ்யாமிற்கு   சங்கு சத்தம் தான் கேட்டது .

பக்கத்தில் இருந்த ஹரிஷ்  “மச்சி நீ பேசிட்டு இரு”  என்று நைசாக நழுவி விட்டான் .

சியாம்  “சாரி மாயா…  ஒர்க் லோட் அதிகமாக இருந்ததால மறந்துட்டேன் … நான் நேத்து காலைல கூட நினைச்சிட்டு இருந்தேன்…  சாரி மாயா” என்று சொல்ல ,

‘சரி, இப்ப நீ என்ன பண்ற … எங்க அம்மாவ கூப்பிட்டு  விஷ் பண்ணிட்டு ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வா!   ரிங் வாங்கிட்டு  எங்க அம்மாவ போய் பாத்துட்டு வரலாம்”  என்று சொல்ல ,

அவள் என்ன சொன்னாலும் தலையாட்டி பழகிய மண்டை  அது பாட்டுக்கு ஆடியது .

“சரி போன் வைக்கிறேன்”  என்று சொல்லி அவளை கட் பண்ணி விட்டாள் .

EPISODE – 15

இரண்டு மூன்று நாட்கள் ஆனது .  

அன்று காலை  மிதுன்  எழுந்து குளித்து ரெடியாகி  ஆபிஸ் கிளம்ப தயாரானான் .   அம்மாவும் அப்பாவும் அவன் வாழ்க்கை நல்ல படியாக  அமைய வேண்டும்  என்று சிந்தனையுடன்  அவனை ஆபீசுக்கு அனுப்பி விட்டனர் .

20 நிமிடம் பயணத்திற்கு பிறகு  ஆபீஷை அடைத்தவன் ,   அங்கே  பார்க்கிங்கில்  ஹரிஷும் ஷ்யாமும்   காத்திருப்பதை கண்டான் .  

அவர்களும் இவனை பார்த்து சிரித்து விட்டு,  “வாடா மச்சி”  என்றனர் .

மனத்தின் வலி  வெளியே தெரியக்கூடாது  என்று…  புன்னகை முகமூடியை தன் முகத்தில்  அணிந்து கொள்ள  முயற்சி செய்து கொண்டிருந்தான் மிதுன்.  

நண்பர்களுக்கு புரியாதா என்ன ,  இருந்தாலும்  அவர்களாக எதையும் கேட்கவில்லை  அவனிடம் சாதாரணமாகவே பேச வேண்டும் என்று பேசினர் .

‘அந்த ஆபீஸில்  சுருதியின்  நினைவுகள்  அவனை கண்டிப்பாக  டிஸ்டர்ப் பண்ணும்’  என்று உணர்ந்த  ஹரிசும்  ஷியாமும்,  முடிந்த அளவிற்கு  அவனை அந்த நினைவுக்குள் செல்ல விடாதவாறு ஏதாவது பேசிக் கொண்டே வந்தனர் .   

உள்ளே நுழையும் போது என்ட்ரன்ஸ்லேயே  சுருதி இவனைப் பார்த்து  சிரிக்கும் காட்சி வந்து போனது .   செக் அவுட்டில்  என்ட்ரி செய்துவிட்டு  மூவரும்  லிப்ட்டுக்காக காத்திருந்து ,  அவர்களது தளத்திற்கு சென்றனர் .

வெகு நாள் கழித்து மிதுனை பார்த்த அவருடன் பணி செய்யும்  அனைவரும்  அவனிடம் வந்து  நலம் விசாரித்தனர் .    பின்பு  அவன் மேனேஜரை   பார்த்து விட்டு வருவதாக கூறி  அவரது அறைக்கு  சென்றான் .   

மிதுனை  பார்த்ததும்  எழுந்து நின்று கைகுலுக்கியவர் ,   “வா!  மிதுன் …  ஹாப்பி டு  சி யு  அகைன்  ஹியர் ”  என்று  சிரித்தார் .  அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு  தனது  இருக்கையை நோக்கி சென்றவன்  பார்வை தானாக   சுருதி  அமரும்  சீட்டுக்குச் செல்ல…  அங்கே வேறொரு பெண்  அந்த இருக்கையில்  அமர்ந்து

இருந்தார் .   

மனது லேசாக உடைந்து கொண்டிருப்பது  அவனுக்கு புரிந்தது .  

 சுதாரித்துக் கொண்டவன்  ‘வேலையில்  கவனமாக இருக்க வேண்டும்’ என்று  நினைத்துக் கொண்டு  அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான் .

கொஞ்சம் கொஞ்சமாக  வேலையில்  கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் .  என்னதான்  செய்யும் வேலையில் கவனத்தை செலுத்தினாலும்,   அந்த வேலையை  முடிந்த அடுத்த நொடி…  சுருதி  அவன் கண்களை நிறைத்தாள். 

ஸ்ருதி  அவனை அழைப்பது ,   அவள் பேசுவது ,    ‘மிதுன்  கஃபே போலாமா…  லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு’  என்று அவள் சொல்வது… அவள் பேசிய வார்த்தைகளும் அவள் அந்த அலுவலகத்தில் உலாவின  இடங்களும் மிதுனின் மனதை  அமைதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது .

 ஹரிஷும் ஷ்யாமும் அவனை கவனித்துக் கொண்டே  இருந்தனர் .

மாலை 6:00 மணி ஆனது .  வேலை முடித்து  நண்பர்கள் மூவரும் வெளியே வந்தனர்.

மிதுன் கொஞ்சம்  அப்செட் ஆக இருப்பது  ஹரிசிக்கும் ஷியாமுக்கும் புரிந்தது .  இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்  அவனிடம் ,

“மச்சி நைட் டின்னர் வெளியே சாப்பிடலாமா டா இன்னைக்கு”  என்று கேட்க ,

“ஏதோ ஒரு மாதிரி இருக்குடா ,   இன்னைக்கு வேண்டாமே”  என்று சொன்னான்  மிதுன் .

நாம் என்னதான்  அவன் கவனத்தை இது திசை திருப்ப நினைத்தாலும் ,   சில விஷயங்களில்  அவனாகத்  தான் வெளியே வர  வேண்டும்  என்று புரிந்த ஹரிசும்  சியாமும் ,

“ஓகே டா மச்சி இன்னொரு நாள் போலாம் ,   பாய் டா  நாளைக்கு பாக்கலாம்”  என்று சொல்லிவிட்டு  கிளம்பினர் .

மிதுனும் வண்டியை எடுத்துக்கொண்டு  வீட்டிற்கு கிளம்பினான் . வீட்டை அடையும் போது  அவனது அம்மாவும் அப்பாவும்  வாசலிலே அவனுக்காக காத்திருந்தனர் …     அந்த கட்சியை கண்டதும்  அவனுக்கு மனதை ஏதோ செய்தது .  ‘தனக்காகவே  மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்  இரண்டு உயிர்கள் அவர்கள்’  என்பது மனதிற்குள்  அழுத்தமாக தைத்தது .  அவர்கள் முகத்தை பார்க்கும் போது  மிதுனின்   கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது …  

‘தன் கண்ணில் கண்ணீரை பார்த்தால்  அவர்களுக்கு வலிக்கும்’ என்று உணர்ந்தவன்  கண்கலாலேயே  அந்த கண்ணீரை  உறிஞ்சிக் கொண்டான் .  

‘அம்மா… அப்பா’   என்று அழைத்துக் கொண்டே   உள்ளே நுழைந்த மகனைப் பார்க்கையில் ,   அவர்களுக்கு சந்தோஷதுடன்   வலியும் சேர்ந்து வந்தது .

எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல்   “வாப்பா  மிதுன்”  ,  என்றழைத்துக் கொண்டு மூவரும்  வீட்டில் உள்ளே சென்றனர் .

“போப்பா  போய் ப்ரஷ் ஆகிவிட்டு வா ,   அம்மா உனக்கு காபி ஸ்னாக்ஸ் எடுத்து வைக்கிறேன்”  என்று சொன்னார் சித்ரா .

இந்த  காபி ஸ்னாக்ஸ் எடுத்து வைப்பதெல்லாம்  சாதாரண நிகழ்வு தான் …  ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால்  தனக்காக காத்திருக்கும்  உயிர்கள் ,   தனக்கு என்ன தேவை என்று  பார்த்து பார்த்து  செய்யும் உயிர்கள்…   ஆமாம்  வாழ்க்கை  அற்புதமானது தான் .  அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும் ,    அப்போதுதான் மனதில் ஒரு நிறைவு இருக்கும் .  

உண்மையாவே வாழ்க்கையில் ஒரு பொருளை  இழந்து திரும்பப் பெற்றவர்களுக்கு தான்  அதன் அருமையும் ,   வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்  ஆண்டவனால் நமக்கு கொடுத்த பரிசு  என்றும் புரியும் .  

மிதுன்  டிரஸ் மாற்றிக்கொண்டு  ஹாலில் வந்து அமர்ந்தான் .  அவனது அப்பா  அவனிடம் ” ஏப்பா  ஆஃபீஸ்லாம்  எப்படிப்பா போச்சு இன்னைக்கு ”  ? என்று கேட்டார் .

“நல்லாத்தான் பா போச்சு” ,   என்று சொன்னான் .   

“பாலு!…  நீயும் சித்ராவும்  இன்னைக்கு எங்கயும் வெளியில போலையா…  வீட்டிலேயேவா  இருந்திங்க?” ,   என்று  பழையபடி பேச முயற்சித்து பேசினான் .  

“காலையில கோயிலுக்கு போயிட்டு வந்தோம் டா…  அப்புறம் அப்படியே மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு,  உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்”  என்று சொன்னார்  அவனது அப்பா .

அதற்குள்  அவனது அம்மா  ஸ்னாக்ஸும் காபியும் கொண்டுவர ,   மூவரும் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தனர் .    “சித்ரா  நீ  காபியில  என்ன போடுற ?   நீ போடுற காபி ருசி எங்கேயுமே வர மாட்டேங்குது”  என்றான் அம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே….

அவனது அப்பா,   “டேய்  நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு நேரா சொல்லுடா  …”என்று  அவனது அம்மாவை  வம்புக்கு இழுக்க ,

“ஏன் உங்களுக்கு பொறுக்கலையா…  அவன் இப்ப நல்லா இருக்குன்னு தானே சொன்னான் …  உங்களுக்கு புடிக்கலைன்னா  நீங்க குடிக்க வேண்டாம்”  என்று சொல்ல,

“நல்லா இல்லைன்னாலும்  நல்லா இருக்குன்னு நம்பிதாண்டி  இத்தனை வருஷமா குடிச்சிட்டு இருக்கேன்”  என்று கிண்டலாக சொன்னார்  பாலு .

கொஞ்சம் கொஞ்சமாக  அந்த குடும்பம்  மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தது .

ஸ்னாக்ஸை முடித்த  மிதுன் ,   “அம்மா  எனக்கு டயர்டா இருக்கு…  ஏதாவது சீக்கிரமா  டிபன் எதாவது செஞ்சு வை…  நான் சாப்பிட்டு தூங்குகிறேன்” என்று சொல்ல,

   “ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுடா,  டிபன் ரெடி பண்ணிடுவேன்” என்று சொல்லிவிட்டு  சமையலறைக்குச் சென்றார்  அவரது அம்மா .

அப்பாவும் மிதுனும் பேசிக் கொண்டிருக்க ,  சரியாக அரை மணி நேரத்தில்  அவரது அம்மா  நைட் டின்னர்  ரெடி பண்ணி இருந்தார் .

“மிதுன்  அப்பாவை கூட்டிட்டு வாடா சாப்பிடலாம்”  என்று அழைக்க ,   “வாப்பா  சாப்பிட போலாம்” ,    என்றான் மிதுன் .

சாப்பிட அமர்ந்ததும்,    “சித்ரா நீயும் உட்காரு…  மூணு பேரும் சாப்பிடலாம்”  என்று சொல்லி  அம்மாவை அருகில் அமர வைத்தான் மிதுன் .   அம்மாவின்  அருகாமை  அவனுக்கு தேவைப்பட்டது .   அது அம்மாவுக்கும்  புரிந்தது .  

மூவரும் அமர்ந்து  சாப்பிட்டனர் .    பின்  மிதுன்  “அப்பா நான் போய் படுக்கிறேன்”  என்று சொல்லிவிட்டு, 

“அம்மா காலைல என்னை   ஆறு மணிக்கு எழுப்பி விடுமா”  என்று சொல்லிவிட்டு  அவனது  ரூமுக்கு சென்று விட்டான் .

அவர்கள் மூவருக்குமான   இணைப்பு காந்தம் அவர்கள் மூவரின் சிந்தனையும் இன்னும் நெருக்கமாக  இணைத்துக் கொண்டிருந்தது .

ஒரு மாதம் சென்றது .   மிதுன் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான் .  ஆனால் அவன் மனம் அமைதி இல்லாமல் இருந்தது .   என்ன தான்  ஸ்ருதியை மறந்து விட்டு  வேலையில் கவனம் செலுத்தலாம்  என்று இருந்தாலும் ,  அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது .   அலுவலகத்தின் ஒவ்வொரு இடமும் அவர்களின் காதலைச் சொன்னது .   அதனால்  தான் செய்யும் வேலையில்  பிரச்சனைகள் வர க்கூடாது  என்று மிதுன்  நினைத்தான் .  நண்பர்கள் ஹரிஷ்  ஷ்யாமிடம்  இது பற்றி கேட்க ,

அவர்களும்  மீதுன் வேறு இடத்துக்கு  டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்வது ,  அவனுக்கு மன அமைதி  கொடுக்கும்  என்று நம்பினர் . 

அவர்கள் பேசிக் கொண்டிருக்க ,

அப்போது  அங்கே வந்த  அவர்களை மேனேஜர் ,

“என்ன!!  ரொம்ப முக்கியமா என்னமோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல ” என்று கேட்டார் .

ஷியாம்  அவரிடம்,  “ஆமா சார்!..  மிதுனை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம் ,   அவனுக்கு  வேற பிரான்ச்சில் ஏதும் டிரான்ஸ்பர் கிடைக்க சான்ஸ் இருக்கா சார்”

என்று கேட்டாரன்.

மேனேஜருக்கும் மிதுனின் நிலைமை புரிந்தது .   “எனக்கு தெரிஞ்சு  பாம்பேல  வேகன்ட் இருக்கிறதா கேள்விப்பட்டேன் …  நான்  பேசிட்டு  சொல்லவா” என்று கேட்க ,

உடனே ஷியாம் ,   “சார்  அப்படியே  எனக்கும் டிரான்ஸ்பர் வாங்கி கொடுங்க சார் ,     அதுவும்  ஃபேமிலியோட இங்க வரக்கூடாது…  சிங்கிளாத்தான் வந்து ஜாயின் பண்ணனும்னு    கண்டிஷனோட வாங்கி கொடுங்க சார் .    நான் உங்களுக்கு ரொம்ப தேங்க்  ஃபுல்லா இருப்பேன் சார்”  என்று சொல்ல ,

ஹரிஷ் உடனே,  “என்னடா மச்சி எஸ்கேப் பாக்குறியா மாயா கிட்ட இருந்து”

என்று கேட்க, 

“டேய் அவளுக்கு வெறும் ‘மாயா’ன்னு பேர் வச்சு இருக்க கூடாது டா…  மந்திரவாதி மாயானு பேரு வச்சிருக்கணும் டா ,   அவளை சமாளிக்கவே முடியல என்னால”  என்று பாவமாக சொன்னேன் .

ஹரிசுக்கு  ஷ்யாமின் நிலை புரிந்தாலும்  அவனை கிண்டல் செய்வது மட்டும் நிறுத்தவில்லை .

“அழகு வேண்டுமென்றால் ஆபத்தும் இருக்கும் அல்லவா நண்பா” ,  என்று கேட்க

“ஐயா சாமி!!   ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கேன் டா  என்ன விடுடா” என்று சொல்லிவிட்டு , மேனேஜரிடம்  “சார்  ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சார் ” என்று கேட்க ,

அவரும் சிரித்துக் கொண்டே  “ஓகே சியாம்…  ஐ வில் ட்ரை டில் மை லெவல் பெஸ்ட்” என்று சொல்லிக் கொண்டே  நகர்ந்தார் .

ஷ்யாம் ஹரிஷை  பார்த்து,  “டேய்  எனக்காவது மாயா வாய்ச்சா,  உனக்கு அந்த பேயே வந்து மாட்டும் பாரு”  என்று சொல்ல ,

“டேய் மச்சி…  நான் எல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் டா…  நீங்க ரெண்டு பேரும் படுறத பார்த்துட்டு இதுக்கு மேலயும் நான் கல்யாணம் பண்ணிக்கவேணா”

என்று சொல்லிவிட்டு  “ஓகே டா மச்சி  வேலையை பார்ப்போம்”  என்று சொல்லி நகர ஷ்யாமும் மிதுனும்   அவர்கள் இருக்கைக்கு சென்றார்கள் .

EPISODE 16.

இரண்டு மூன்று நாட்கள் ஆனது .   அன்று காலை  மிதுன்  எழுந்து குளித்து ரெடியாகி  ஆபிஸ் கிளம்ப தயாரானான் .   அம்மாவும் அப்பாவும் அவன் வாழ்க்கை நல்ல படியாக  அமைய வேண்டும்  என்று சிந்தனையுடன்  அவனை ஆபீசுக்கு அனுப்பி விட்டனர் .

20 நிமிடம் பயணத்திற்கு பிறகு  ஆபீஷை அடைத்தவன் ,   அங்கே  பார்க்கிங்கில்  ஹரிஷும் ஷ்யாமும்   காத்திருப்பதை கண்டான் .  

அவர்களும் இவனை பார்த்து சிரித்து விட்டு,  “வாடா மச்சி”  என்றனர் .

மனத்தின் வலி  வெளியே தெரியக்கூடாது  என்று…  புன்னகை முகமூடியை தன் முகத்தில்  அணிந்து கொள்ள  முயற்சி செய்து கொண்டிருந்தான் மிதுன்.   நண்பர்களுக்கு புரியாதா என்ன ,  இருந்தாலும்  அவர்களாக எதையும் கேட்கவில்லை  அதனிடம் சாதாரணமாகவே பேச வேண்டும் என்று பேசினர் .

‘அந்த ஆபீஸில்  சுருதியின்  நினைவுகள்  அவனை கண்டிப்பாக  டிஸ்டர்ப் பண்ணும்  ‘என்று உணர்ந்த  ஹரிசும்  ஷியாமும்  முடிந்த அளவிற்கு  அவனை அந்த நினைவுக்குள் செல்ல விடாதவாறு ஏதாவது பேசிக் கொண்டே வந்தனர் .   

உள்ளே நுழையும் போது என்ட்ரன்ஸ்லேயே  சுருதி இவனைப் பார்த்து  சிரிக்கும் காட்சி வந்து போனது .   செக் அவுட்டில்  என்ட்ரி செய்துவிட்டு  மூவரும்  லிப்ட்டுக்காக காத்திருந்து ,  அவர்களது தளத்திற்கு சென்றனர் .

வெகு நாள் கழித்து மிதுனை பார்த்த அவருடன் பணி செய்யும்  அனைவரும்  அவனிடம் வந்து  நலம் விசாரித்தனர் .    பின்பு  அவன் மேனேஜரை   பார்த்து விட்டு வருவதாக கூறி  அவரது அறைக்கு  சென்றான் .   

மிதுனை  பார்த்ததும்  எழுந்து நின்று கைகுலுக்கியவர் ,   “வா!  மிதுன் …  ஹாப்பி டு  சி யு  அகைன்  ஹியர் ”  என்று  சிரித்தார் .  அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு  தனது  இருக்கையை நோக்கி சென்றவன்  பார்வை தானாக   சுருதி  அமரும்  சீட்டுக்குச் செல்ல…  அங்கே வேறொரு பெண்  அந்த இருக்கையில்  அமர்ந்து இருந்தார் .   

மனது லேசாக உடைந்து கொண்டிருப்பது  அவனுக்கு புரிந்தது .  

 சுதாரித்துக் கொண்டவன்  ‘வேலையில்  கவனமாக இருக்க வேண்டும்’ என்று  நினைத்துக் கொண்டு  அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான் .

கொஞ்சம் கொஞ்சமாக  வேலையில்  கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் .  என்னதான்  செய்யும் வேலையில் கவனத்தை செலுத்தினாலும்,   அந்த வேலையை  முடிந்த அடுத்த நொடி…  சுருதி  அவன் கண்களை நிறைத்தாள். 

ஸ்ருதி  அவனை அழைப்பது ,   அவள் பேசுவது ,    ‘மிதுன்  கஃபே போலாமா…  லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு’  என்று அவள் சொல்வது… அவள் பேசிய வார்த்தைகளும் அவள் அந்த அலுவலகத்தில் உலாவின  இடங்களும் மிதுனின் மனதை  அமைதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது .

 ஹரிஷும் ஷ்யாமும் அவனை கவனித்துக் கொண்டே  இருந்தனர் .

மாலை 6:00 மணி ஆனது .  வேலை முடித்து  நண்பர்கள் மூவரும் வெளியே வந்தனர்.

மிதுன் கொஞ்சம்  அப்செட் ஆக இருப்பது  ஹரிசிக்கும் ஷியாமுக்கும் புரிந்தது .  இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்  அவனிடம் ,

“மச்சி நைட் டின்னர் வெளியே சாப்பிடலாமா டா இன்னைக்கு”  என்று கேட்க ,

“ஏதோ ஒரு மாதிரி இருக்குடா ,   இன்னைக்கு வேண்டாமே”  என்று சொன்னான்  மிதுன் .

நாம் என்னதான்  அவன் கவனத்தை இது திசை திருப்ப நினைத்தாலும் ,   சில விஷயங்களில்  அவனாகத்  தான் வெளியே வர  வேண்டும்  என்று புரிந்த ஹரிசும்  சியாமும் ,

“ஓகே டா மச்சி இன்னொரு நாள் போலாம் ,   பாய் டா  நாளைக்கு பாக்கலாம்”  என்று சொல்லிவிட்டு  கிளம்பினர் .

மிதுனும் வண்டியை எடுத்துக்கொண்டு  வீட்டிற்கு கிளம்பினான் . வீட்டை அடையும் போது  அவனது அம்மாவும் அப்பாவும்  வாசலிலே அவனுக்காக காத்திருந்தனர் …     அந்த கட்சியை கண்டதும்  அவனுக்கு மனதை ஏதோ செய்தது .  ‘தனக்காகவே  மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்  இரண்டு உயிர்கள் அவர்கள்’  என்பது மனதிற்குள்  அழுத்தமாக தைத்தது .  அவர்கள் முகத்தை பார்க்கும் போது  மிதுனின்   கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது …  

‘தன் கண்ணில் கண்ணீரை பார்த்தால்  அவர்களுக்கு வலிக்கும்’ என்று உணர்ந்தவன்  கண்கலாலேயே  அந்த கண்ணீரை  உறிஞ்சிக் கொண்டான் .  

‘அம்மா… அப்பா’   என்று அழைத்துக் கொண்டே   உள்ளே நுழைந்த மகனைப் பார்க்கையில் ,   அவர்களுக்கு சந்தோஷதுடன்   வலியும் சேர்ந்து வந்தது .

எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல்   “வாப்பா  மிதுன்”  ,  என்றழைத்துக் கொண்டு மூவரும்  வீட்டில் உள்ளே சென்றனர் .

“போப்பா  போய் ப்ரஷ் ஆகிவிட்டு வா ,   அம்மா உனக்கு காபி ஸ்னாக்ஸ் எடுத்து வைக்கிறேன்”  என்று சொன்னார் சித்ரா .

இந்த  காபி ஸ்னாக்ஸ் எடுத்து வைப்பதெல்லாம்  சாதாரண நிகழ்வு தான் …  ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால்  தனக்காக காத்திருக்கும்  உயிர்கள் ,   தனக்கு என்ன தேவை என்று  பார்த்து பார்த்து  செய்யும் உயிர்கள் ,   ஆமாம்  வாழ்க்கை  அற்புதமானது தான் .  அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும் ,    அப்போதுதான் மனதில் ஒரு நிறைவு இருக்கும் .  

உண்மையாவே வாழ்க்கையில் ஒரு பொருளை  இழந்து திரும்பப் பெற்றவர்களுக்கு தான்  அதன் அருமையும் ,   வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்  ஆண்டவனால் நமக்கு கொடுத்த பரிசு  என்றும் புரியும் .  

மிதுன்  டிரஸ் மாற்றிக்கொண்டு  காலில் வந்து அமர்ந்தான் .  அவனது அப்பா  அவனிடம் ” ஏப்பா  ஆஃபீஸ்லாம்  எப்படிப்பா போச்சு இன்னைக்கு ”  ? என்று கேட்டார் .

“நல்லாத்தான் பா போச்சு” ,   என்று சொன்னான் .    “பாலு!…  நீயும் சித்ராவும்  இன்னைக்கு எங்கயும் வெளியில போலையா…  வீட்டிலேயேவா  இருந்திங்க?” ,   என்று  பழையபடி பேச முயற்சித்து பேசினான் .  

“காலையில கோயிலுக்கு போயிட்டு வந்தோம் டா…  அப்புறம் அப்படியே மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு,  உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்”  என்று சொன்னார்  அவனது அப்பா .

அதற்குள்  அவனது அம்மா  ஸ்னாக்ஸும் காபியும் கொண்டுவர ,   மூவரும் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தனர் .    “சித்ரா  நீ  காபியில  என்ன போடுற ?   நீ போடுற காபி ருசி எங்கேயுமே வர மாட்டேங்குது”  என்றான் அம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே .

அவனது அப்பா,   “டேய்  நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு நேரா சொல்லுடா  …”என்று  அவனது அம்மாவை  வம்புக்கு இழுக்க ,

“ஏன் உங்களுக்கு பொறுக்கலையா…  அவன் இப்ப நல்லா இருக்குன்னு தானே சொன்னான் …  உங்களுக்கு புடிக்கலைன்னா  நீங்க குடிக்க வேண்டாம்”  என்று சொல்ல,

“நல்லா இல்லைன்னாலும்  நல்லா இருக்குன்னு நம்பிதாண்டி  இத்தனை வருஷமா குடிச்சிட்டு இருக்கேன்”  என்று கிண்டலாக சொன்னார்  பாலு .

கொஞ்சம் கொஞ்சமாக  அந்த குடும்பம்  மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தது .

ஸ்னாக்ஸை முடித்த  மிதுன் ,   “அம்மா  எனக்கு டயர்டா இருக்கு…  ஏதாவது சீக்கிரமா  டிபன் எதாவது செஞ்சு வை…  நான் சாப்பிட்டு தூங்குகிறேன்” என்று சொல்ல,

   “ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுடா,  டிபன் ரெடி பண்ணிடுவேன்” என்று சொல்லிவிட்டு  சமையலறைக்குச் சென்றார்  அவரது அம்மா .

அப்பாவும் மிதுனும் பேசிக் கொண்டிருக்க ,  சரியாக அரை மணி நேரத்தில்  அவரது அம்மா  நைட் டின்னர்  ரெடி பண்ணி இருந்தார் .

“மிதுன்  அப்பாவை கூட்டிட்டு வாடா சாப்பிடலாம்”  என்று அழைக்க ,   “வாப்பா  சாப்பிட போலாம்” ,    என்றான் மிதுன் .

சாப்பிட அமர்ந்ததும்,    “சித்ரா நீயும் உட்காரு…  மூணு பேரும் சாப்பிடலாம்”  என்று சொல்லி  அம்மாவை அருகில் அமர வைத்தான் மிதுன் .   அம்மாவின்  அருகாமை  அவனுக்கு தேவைப்பட்டது .   அது அம்மாவுக்கும்  புரிந்தது .  

மூவரும் அமர்ந்து  சாப்பிட்டனர் .    பின்  மிதுன்  “அப்பா நான் போய் படுக்கிறேன்”  என்று சொல்லிவிட்டு, 

“அம்மா காலைல என்னை   ஆறு மணிக்கு எழுப்பி விடுமா”  என்று சொல்லிவிட்டு  அவனது  ரூமுக்கு சென்று விட்டான் .

அவர்கள் மூவருக்குமான   இணைப்பு காந்தம் அவர்கள் மூவரின் சிந்தனையும் இன்னும் நெருக்கமாக  இணைத்துக் கொண்டிருந்தது .

ஒரு மாதம் சென்றது .   மிதுன் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான் .  ஆனால் அவன் மனம் அமைதி இல்லாமல் இருந்தது .   என்ன தான்  ஸ்ருதியை மறந்து விட்டு  வேலையில் கவனம் செலுத்தலாம்  என்று இருந்தாலும் ,  அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது .   அலுவலகத்தின் ஒவ்வொரு இடமும் அவர்களின் காதலைச் சொன்னது .   அதனால்  தான் செய்யும் வேலையில்  பிரச்சனைகள் வர க்கூடாது  என்று மிதுன்  நினைத்தான் .  நண்பர்கள் ஹரிஷ்  ஷ்யாமிடம்  இது பற்றி கேட்க ,

அவர்களும்  மீதுன் வேறு இடத்துக்கு  டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்வது ,  அவனுக்கு மன அமைதி  கொடுக்கும்  என்று நம்பினர் .  அவர்கள் பேசிக் கொண்டிருக்க ,

அப்போது  அங்கே வந்த  அவர்களை மேனேஜர் ,

“என்ன!!  ரொம்ப முக்கியமா என்னமோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல ” என்று கேட்டார் .

ஷியாம்  அவரிடம்,  “ஆமா சார்!..  மிதுனை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம் ,   அவனுக்கு  வேற பிரான்ச்சில் ஏதும் டிரான்ஸ்பர் கிடைக்க சான்ஸ் இருக்கா சார்”

என்று கேட்டார்.

மேனேஜருக்கும் மிதுனின் நிலைமை புரிந்தது .   “எனக்கு தெரிஞ்சு  பாம்பேல  வேகன்ட் இருக்கிறதா கேள்விப்பட்டேன் …  நான்  பேசிட்டு  சொல்லவா” என்று கேட்க ,

உடனே ஷியாம் ,   “சார்  அப்படியே  எனக்கும் டிரான்ஸ்பர் வாங்கி கொடுங்க சார் ,     அதுவும்  ஃபேமிலியோட இங்க வரக்கூடாது…  சிங்கிளாத்தான் வந்து ஜாயின் பண்ணனும்னு    கண்டிஷனோட வாங்கி கொடுங்க சார் .    நான் உங்களுக்கு ரொம்ப தேங்க்  ஃபுல்லா இருப்பேன் சார்”  என்று சொல்ல ,

ஹரிஷ் உடனே,  “என்னடா மச்சி எஸ்கேப் பாக்குறியா மாயா கிட்ட இருந்து”

என்று கேட்க, 

“டேய் அவளுக்கு வெறும் ‘மாயா’ன்னு பேர் வச்சு இருக்க கூடாது டா…  மந்திரவாதி மாயானு பேரு வச்சிருக்கணும் டா ,   அவளை சமாளிக்கவே முடியல என்னால”  என்று பாவமாக சொன்னேன் .

ஹரிசுக்கு  ஷ்யாமின் நிலை புரிந்தாலும்  அவனை கிண்டல் செய்வது மட்டும் நிறுத்தவில்லை .

“அழகு வேண்டுமென்றால் ஆபத்தும் இருக்கும் அல்லவா நண்பா” ,  என்று கேட்க

“ஐயா சாமி!!   ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கேன் டா  என்ன விடுடா” என்று சொல்லிவிட்டு , மேனேஜரிடம்  “சார்  ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சார் ” என்று கேட்க ,

அவரும் சிரித்துக் கொண்டே  “ஓகே சியாம்…  ஐ வில் ட்ரை டில் மை லெவல் பெஸ்ட்” என்று சொல்லிக் கொண்டே  நகர்ந்தார் .

ஷ்யாம் ஹரிஷை  பார்த்து,  “டேய்  எனக்காவது மாயா வாய்ச்சா,  உனக்கு அந்த பேயே வந்து மாட்டும் பாரு”  என்று சொல்ல ,

“டேய் மச்சி…  நான் எல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் டா…  நீங்க ரெண்டு பேரும் படுறத பார்த்துட்டு இதுக்கு மேலயும் நான் கல்யாணம் பண்ணிக்கவேணா”

என்று சொல்லிவிட்டு  “ஓகே டா மச்சி  வேலையை பார்ப்போம்”  என்று சொல்லி நகர ஷ்யாமும் மிதுனும்   அவர்கள் இருக்கைக்கு சென்றார்கள் .

அடுத்த இரண்டு நாட்களில்  மேனேஜர் மிதுனை  அழைத்து,   ‘பாம்பேல  ஒரு போஸ்டிங் காலியாக இருப்பதாக  கூறி  உனக்கு விருப்பம் என்றால் நீ நாளையே  கிளம்பலாம்’ என்று சொன்னார் .

 மிதுனும்  “தேங்க்ஸ் சார்  இன்னும் ரெண்டு நாள்ல  நான் கிளம்புற மாதிரி பாத்துக்கிறேன் சார்  என்று சொன்னார் .

ஹரிசுக்கும்  ஷியாமுக்கும் மிதுனை பிரிவது கஷ்டமாக இருந்தாலும் ,  அவனுக்கு ஒரு இடமாற்றம் தேவை  என்பதால் மிதுன் கிளம்புவதற்கு  வேண்டிய ஏற்பாடுகளை செய்வதற்காக அவர்கள் தயாரானார்கள் .

மிதுன்  வீட்டுக்கு சென்று  அவன் அம்மா அப்பாவிடம்   ட்ரான்ஸ்பர் விஷயத்தை கூற  , அவர்களும் மிதுனின் நிலைமையை புரிந்து கொண்டு, 

“சரிப்பா  நாங்களும் அங்கேயும் வந்து   நீ பாம்பேல  ஒர்க் பண்ற வரைக்கும் நம்ம எல்லாரும் அங்க ஒன்னாவே இருக்கலாம்  என்று சொல்ல ,

“சரிமா!..   நான் முதல்ல போய்  அங்க  எப்படி  நிலைமை என்ன பார்த்துட்டு … அப்பார்ட்மெண்ட் எதுவும் கிடைக்குமா அப்படின்னு பாத்துட்டு … அதுக்கப்புறம் உங்க  ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போறேன்”  என்றேன் . 

மிதுனோட  அப்பா அம்மாவிற்கு  இப்போதெல்லாம் அவனை  துளி கூட  பிரிய மனம் ஒத்து வருவதில்லை .  ஆனாலும்  இதெல்லாம் நடந்து தானே ஆக வேண்டும் .  எப்படி இருந்தாலும் அவர்களும் மிதுனுடன்   இருக்கப் போகிறார்கள் தானே .  என்ன அவன் போய் ஒரு மாதம் வரைக்கும்  தனியாக இருக்க வேண்டும்…  ‘ஓகே பார்த்துக் கொள்ளலாம்’  என்று  அவன் கிளம்புவதற்கு  தேவையான பொருட்களை  தயார் செய்ய தொடங்கினர் .   

EPISODE – 17

அங்கு அந்த சூழ்நிலை  செட்டாக  கொஞ்ச நேரம் ஆனது மிதுனுக்கு . நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்தது .  மதியம் லஞ்ச் டைம் வந்தது .

பிரத்யுமன் லஞ்சுக்கு  வீட்டிலிருந்து கொடுத்து விட்ட  உணவு எடுத்துக்கொண்டு கிளம்பினான்  அவனது நண்பர்களுடன்.

 அவன் மிதுனை பார்த்து ,

“மிதுன்  கமான்  வி வில் கோ ஃபார் லஞ்ச்”  என்று அழைக்க,  “ஓகே” என்று சொன்ன மிதுன்  கஃபே எங்க இருக்கு?  என்று கேட்டான்.

” வா மிதுன் …நாங்களும்  கஃபேக்கு தான்  போறோம்”,  என்று கூற  அவனும் அவர்களுடன் சென்றான் .    அப்போது  “என்னடா  பிரத்யு…   என்ன விட்டுட்டு கிளம்பிட்டே  லஞ்சுக்கு”  என்று  வேகமாக வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் சியாரா .

“உன்ன விட்டுட்டு போக முடியுமா ?   போனா  எங்களை நீ சாப்பிட விடுவியா?” என்று சிரித்து கொண்டே கேட்டவன் ,  மிதுனிடம்  திரும்பி,  “இவ என்னோட காலேஜ்  மேட்  மிதுன்”  என்றவன்… 

“அப்ப இருந்து  என் பின்னாடியே வந்து  என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கா?”  என்று சொன்னான் .

” ஆமா உனக்கு  பெரிய ஜீனியஸ்னு  நினைப்பு…  இவன் பின்னாடியே நான் வரேன்னு சொல்றான் பாரு”   என்று சொன்னவள்,  

” மிதுன் எத்தனை நாளைக்கு cafela  சாப்பிட போற” என்று கேட்டாள்.  

டக்கென்று formalities எதுவும் பார்க்காமல்… நீ போ வா என்று அவர்கள் பேசியது மிதுனுக்கும் அவர்களுக்கான இடைவெளியை குறைத்தது…  அவர்கள் மனதில் எதுவும் வைக்காமல் தன்னை நண்பனாக பார்த்தது அவனுக்கு பிடித்திருந்தது.

“தெரியல சியாரா…  எனக்கு சமைக்க தெரியாது ,    அம்மா அப்பாவ வீடு பார்த்ததுக்கு அப்புறம் தான் கூட்டிட்டு வரணும்…  அது வரைக்கும்  ஹோட்டல் சாப்பாடு  தான்”  என்று சொன்னான் மிதுன்.

“நீ வீடு பார்த்துட்டு இருக்கியா?..  ஏய் சியரா ,  உன்னோட அப்பார்ட்மெண்ட்ல  ஒரு  வீடு இருக்குன்னு சொன்னே இல்ல,    அதை பேசி பார்  மிதுனுக்கு”  என்று சொன்னான் பிரத்தியு .

“ஆமாடா  ஒரு வீடு காலியா தான் இருக்கு ,   நான் அப்பார்ட்மெண்ட் ஓனர்கிட்ட பேசிட்டு  நாளைக்கு சொல்லவா”  என்றாள்  .

அதற்குள்  கஃபே வந்துவிட   மிதுனிடம்,  “கமான் மிதுன் வி வில் ஷேர் தி லஞ்ச்”  என்றாள் . 

“ஓகே சியரா  நானும் ஏதோ ஒரு புட் வாங்கிட்டு வந்துடறேன்  நாம் எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்”  என்று கூறிவிட்டு   சென்றவன்,

  சற்று நேரத்தில் வெஜ்  ப்ரைட் ரைஸ்சோடு   அங்கு வந்தான் .  அனைவரும்  ஷேர் செய்து  அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டனர் . 

மிதுனுக்கு  அவர்கள்  ரொம்ப ஓப்பனாக பேசுவது  மிகவும் பிடித்திருந்தது .

புதிய இடங்களில்  நாம் பழகும்  வாய்ப்பு கிடைத்தால் நாம் நமது மனதை  ஓப்பனாக திறந்து வைத்தாலே நட்பு வட்டம்  தானாக வந்து சேர்வார்கள்  இல்லையா ….

மிதுனும்  வெகு விரைவில்  அவர்களின் நட்பு வட்டத்தில் இணைந்து விட்டான். ்

லஞ்ச் முடித்து ஆபீஸ்க்குள் சென்றவர்கள்  அவரவர் வேலையை தொடர்ந்தார்கள் .

மாலை  6 மணி ஆகவும்  மிதுன்  கிளம்பினான்.   மிதுன் பிரத்யூவை பார்த்து  “நீ வரலையா  ப்ரோ” என்று கேட்க ,   “கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் இருக்குடா… நான் முடிச்சிட்டு வந்துடறேன் நீ கெளம்பு”  என்று சொன்னான்.

மிதுன் அவன் தங்கி இருந்த அறைக்கு  வந்து சேர்ந்தான் .

மறுநாள் காலை  8 மணிக்கு  அவனது போன் ஒலித்தது …    புதிய நம்பராக இருக்க  எடுத்து காதில்  வைத்து “ஹலோ”  என்றான் . 

” ஹாய் மிதுன்…  குட் மார்னிங்”  என்றது  ஒரு பெண்ணின் குரல் ….   அவன் யார் என்று தெரியாமல் “ஹாய் குட்மார்னிங்”  என்று மட்டும் சொல்ல ,  “என்ன மிதுன்  யாருன்னு தெரியலையா…  சியாரா தாண்டா பேசுறேன்”  என்றாள் .  

” ஹாய் சியாரா வெரி குட் மார்னிங்,   சாரி எனக்கு யார்னு  தெரியல” என்றவன்

“எப்படி என்னோட நம்பர் உனக்கு கிடைச்சிச்சு”  என்று கேட்டான் .   உன்னோட நம்பர் என்கிட்டயும்  இல்ல,  பிரத்யு கிட்டயும்  இல்ல ,   நம்ம மேனேஜர் கிட்ட தான் வாங்கினேன்”  என்று சொன்னாள் .

“நேத்து உனக்கு   அப்பார்ட்மெண்ட் வீடு வேணும்னு கேட்டிருந்த இல்ல,   நான் ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிட்டேன்… ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும்  நம்ம போய் பார்க்கலாம் .  உனக்கு பிடிசிருந்தா  நீ அங்கேயே தங்கிக்க”  என்று சொன்னாள் .

” தேங்க்யூ சோ மச் சியாரா”  என்றான் மிதுன் .

” இட்ஸ் ஓகே!”  என்றவள்  “ஓகே மிதுன் வி  வில் மீட் இன் தி ஆபிஸ்”  என்று கூறி போனை கட் பண்ணினாள் . 

காலை உணவை ஹோட்டல் ரூமிலேயே முடித்தவன்… டாக்ஸி புக் பண்ணி ஆஃபீஸ் வந்து சேர்ந்தான்.  உள்ளே நுழைந்ததும் தன் இருக்கைக்கு வர அங்கே பிரத்யுவும் சியாராவும் சீரியஸாக ஏதோ ஒர்க் செய்து கொண்டிருந்தனர்.  

மிதுனைப் பார்த்ததும் “ஹாய் டா” என்றான் பிரத்யு…

பதிலுக்கு ‘ஹாய்’ என்றவன்… சியாராவை பார்த்து ‘ஹாய் சியாரா’ என்றான்.

“என்ன சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்க,  “இன்னும் 15 டேஸ்ல இந்த ப்ராஜெக்ட் முடிக்கனும்… நிறைய ஒர்க் இருக்குடா மிதுன்”.  

“நாம எல்லாரும் கொஞ்சம் டைம் பாக்காம வேலை பண்ணா தான் முடிக்க முடியும்.. ‌இன்னைல இருந்து ஈவ்னிங் கொஞ்சம் எக்ஸ்ரா டைம் ஒர்க் பண்ண வேண்டி இருக்கும் “ என்றாள் சியாரா.

“நோ ப்ராப்ளம் சியாரா..  எவ்வளவு நேரம் வேணாலும் நான் ஒர்க் பண்ண ரெடி… 

அப்புறம் இன்னைக்கு ஈவினிங் நீ சொன்ன அபார்ட்மெண்ட் 

பாத்திரலாமா” என்று கேட்க, 

” ஷ்யூர் கண்டிப்பா போலாம்.. “என்று சொன்னவள் 

அப்படியே அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி போனாள்.

 மாலை 6:00 மணி ஆனது. சியரா மிதுனிடம்,   “மிதுன் இன்னும் ஒன் ஹவர்ல நாம கிளம்பலாம்… நாம  போய் வீடு பார்த்துட்டு … உனக்கு ஓகேன்னா அட்வான்ஸ் pay பண்ணிட்டு வந்துடலாம்” என்று சொன்னாள்.

“பிரத்யு  நீ ஃப்ரீயா இருந்தா வாயேன்”  என்று மிதுன் அழைக்க,

“ஓகே போய் பார்க்கலாம்”  என்று சொன்னான்  ப்ரத்யூ. 

சரியாக ஏழு முப்பது மணிக்கு மூவரும்  கிளம்பினர்.  சியாரா  தங்கி இருந்த அபார்ட்மெண்டுக்கு வந்தனர்.

“மிதுன் நான் போய் ஹவுஸ் ஓனர் பார்த்து சாவி வாங்கிட்டு வந்துடறேன்,   நீங்க ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள். 

“வா மிதுன்,  போய் வீட்டை பார்க்கலாம்”  என்று அவர்கள் இருவரையும்  அழைத்துக் கொண்டு மூணாவது மாடியில் இருக்கும் வீட்டை பார்க்கச் சென்றார்கள். 

வீட்டை பார்த்ததும் மிதுனுக்கு பிடித்து விட்டது.

“ok  ஷியரா நம்ம பேசிட்டு அட்வான்ஸ் கொடுத்தரலாம் …  நான் நெக்ஸ்ட் மன்த் அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்துடறேன்” என்று  சொன்னவன் “உன்னோட வீடு எது?” என்று கேட்டான்.

“இதே floor  தான்டா வா போலாம்” என்று நான்கு வீடுகள் தள்ளி இருந்த வீட்டிற்கு  அழைத்துச் சென்றாள்  .  

சியாரா காலிங்  பெல் அடிக்க ,   அவளது அப்பா வந்து கதவை திறந்தார்.   மெலிந்த தேகம் … சற்று சோர்ந்த கண்களுடன்

அவர்களை   “வா பிரத்யு , உனக்கு நேரமே கிடக்கலையாப்பா எங்களை பாக்க” என்று

கேட்டு விட்டு மிதுனை பார்த்து  “வாப்பா”  என்று அழைத்தார் .

“அவனுக்கு இங்கெல்லாம் வர நேரம் கிடைக்காது ,   லீவு வந்துட்டா  ஊர் சுத்தவே நேரம் பத்தாது  அவனுக்கு”  என்று  சொன்ன சியரா ,   “இது மிதுன் …  சென்னையில் இருந்து  இங்கே ட்ரான்ஸ்பர் ஆகி வந்து இருக்கான்.   இவனுக்கு  தான்  வீடு”  என்று சொன்னாள் .

அப்படியே உள்ளே போய் ஹாலில் அமர்ந்தார்கள் .   

  “2 மினிட்ஸ்  வெயிட் பண்ணுங்க டா   இப்ப வந்துடறேன்”  என்று சொல்லி சென்றவள் சிறிது    நேரம் கழித்து  ஜூஸ் கொண்டு வந்தாள்.   

மிதுன் அப்படியே  அவர்கள் வீட்டை  நோட்டமிட ,    அவளுக்கு புரிந்தது  அவன் தனது அம்மாவை தான் தேடுகின்றான் என்று .

“மிதுன்  ஒரு நிமிடம்  கூடவா”  என்று அழைத்துச் சென்று  அங்கிருந்த இன்னொரு அறைக்குள்  அவனை அழைத்துச் சென்றாள் .    அங்கே கட்டிலில்  படுத்து  எதோ  ஒரு புக்கை படித்துக் கொண்டிருந்தார் சியாராவின் அம்மா .  

“அம்மா  இது மிதுன்மா”  என்று அறிமுகப்படுத்தினாள் சியாரா .

அவனது அம்மா  தலையை மெதுவாக ஆட்டி  ‘வாப்பா’ என்று செய்கை செய்தார்.

பார்த்தவுடன் மிதுனுக்கு  புரிந்து விட்டது…  அவர்களால்  எழுந்து நடக்க முடியாது என்று .   

அவர்களைப் பார்த்து  “அம்மா நானும் இங்கே தான்மா  வீடு பார்த்து இருக்கேன்…  இனி உங்க  கூடத்தான் இருக்க போறேன்”  என்று மெல்லிய புன்னகையுடன்  சொன்னவன்…

“ஒரு மாசம் கழிச்சு என்னோட அம்மா அப்பாவும் இங்க வந்துருவாங்க” என்று கூறினான் .

சியராவின் அம்மாவிற்கு மிதுனின் அன்பான பேச்சு பிடித்து விட்டது.

அதற்கு அவரும் சிரித்துக் கொண்டே  மெதுவாக தலையாட்டினார் .  சற்று நேரம் பேசிவிட்டு  பிறகு வெளியே வந்தான் .

அப்போது சியாரா,  “டேய்  ஆப் அன் ஹவர் வெயிட் பண்ணுங்கடா  ஏதாவது dinner ரெடி பண்றேன்”  என்று சொல்ல ,  

“நீ எப்ப சமைக்க  கத்துக்கிட்ட,  மிதுன் ரிஸ்க் எடுக்கணுமா?” என்றான்   பிரத்தியு சிரித்து கொண்டே.

“எப்படியோ கத்துக்கிட்டேன்…  இன்னைக்கு நீ மாட்டிகிட்ட இல்ல…  என் சாப்பாட்டை  சாப்பிட்டு அப்புறம் சொல்லு ..”   என்றவள்  மிதுன்  நீ கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் டின்னர்  ரெடி பண்ணிடுறேன்” என்று சொல்லிவிட்டு  சமையல் அறைக்கு சென்றவள் ,  அரை மணி நேரத்தில்  நூடுல்ஸ்  கூடவே veg ஆம்லேட்” போட்டு கொண்டு வந்தாள்.

“டேய் நெஜமாவே நீ சமைச்சியா”  என்று பிரத்தியு கேட்க  ,   “இந்த கரண்டியில் உன்னை அடிக்க போறேன் பாரு ” என்று  கரண்டியை ஓங்கினாள் சியாரா .

அனைவரும்  பேசிக்கொண்டு  உணவை சாப்பிட்டு முடித்தனர் .  

டின்னர் சாப்பிட்டுவிட்டு  வெளியே வந்தவன்… ” ஓகே சியாரா நான் கிளம்புறேன்…  நாளைக்கு  ஹோட்டல் ரூமை காலி பண்ணிட்டு நான் இங்க வந்துடறேன்”   என்று கூறிவிட்டு  பிரத்தியுவுடன் கிளம்பினான்.

பிரத்யுவும்  சியாராவின் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு   கிளம்பினான். .

மிதுனை ஹோட்டலில்  டிராப் செய்வதற்காக  பிரத்யூ வண்டியை கிளப்பினான்.

செல்லும் வழியில்  பிரத்யு அவனாக பேச்சை ஆரம்பித்தான் .  “சியாராவோட  அம்மா நாங்க  படிச்ச காலேஜ்ல  ப்ரொபஷரா இருந்தாங்க… அவங்க அப்பா  பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு “. 

“ ஒரே பொண்ணு சியாரா…பாக்குறவங்க பொறாமை படுற அளவுக்கு அவங்க மூணு பேரும்  அவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க .  அப்ப எல்லாம் சியாரா  ஒரு பட்டாம்பூச்சி மாதிரி  பரபரன்னு இருப்பா” .

“நாங்க காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறப்போ  ஒரு ஆக்சிடென்ட்…

 அதுல அவங்க அம்மாவுக்கு  தலையில் அடிபட்டுச்சு…  அதிலிருந்து  அவங்களுக்கு ஒரு பக்கம் கையும் காலும்  செயல்படாமல் போச்சு .   அந்த குடும்பத்தையே  தன் தலையில  கிரீடம் மாதிரி சுமந்துட்டு இருந்தவங்க அவங்க .  அதுக்கப்புறம் அவங்க  நிலைமை தலை கீழா ஆயிடுச்சு .   சியாராவோட அம்மா  மெடிக்கல் செலவுக்கு  நிறைய பணம் செலவு பண்ணிட்டாங்க” .  

“அம்மா இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது நாளிலேயே அவங்க அப்பாவால  பிசினஸ்ல கவனம் செலுத்த முடியாமல்  அதுலயும்  லாஸ் ஆயிடுச்சு .

கொஞ்ச நாளைக்கு அப்புறம்   சியாராவோட  அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி ஆச்சு.  அப்ப எல்லாம் அவங்க ஒரு அளவுக்கு நல்லா பேசுனாங்க .  அவங்க  திரும்பவும் காலேஜுக்கு  வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க .  அவங்களுக்கு ரொம்ப  தன்னம்பிக்கை ரொம்ப அதிகம் .

உடம்புக்கு முடியல அப்படிங்கறது மனசுல ஏத்தாம இருந்தாங்க.  பலம் மனசுக்கு தான வேணும் .  அவங்க அந்த சூழ்நிலையும்  தன்னோட குடும்பத்தை மீட்டெடுக்க  கொஞ்சம் கடுமையாக முயற்சி பண்ணுணாங்க .. சியார படிச்சு முடிக்கிற வரைக்கும்  கெடு கொடுத்த ஆண்டவன்… என்ன நினைச்சானோ தெரியல…  அதுக்கப்புறம்  அவங்களோட  பேசற திறனையும்   குறைச்சுட்டான்” என்றான் . 

EPISODE 18

எல்லோர் வாழ்க்கையிலும் காலம் அழுத்தமான தடம் பதிக்க தான் செய்கிறது …

சில இழப்புகளால்,  சில வரவுகளால் .

பேசிக்கொண்டே வந்தவர்கள்  மிதுனின் ஹோட்டல் வந்து சேர   மிதுனை இறக்கி விட்டு விட்டு   பிரத்தியோ கிளம்பினான் .   

மறுநாள்  காலை ஆஃபீஸ் சென்றவுடன் அவனைப் பார்த்த சியரா ,  

“ஹாய் மிதுன் …

நீ something special ஆயிட்ட டா எனக்கு” என்றவளை புரியாமல் பார்த்தான் மிதுன்,

“சியாரா சிரித்துக்கொண்டே என் அம்மாவுக்கு நீ பேசினது ரொம்ப பிடிச்சு போச்சு .. அவன் எப்ப இங்க வீட்டுக்கு வர போறான்னு நிறைய தடவை கேட்டுட்டாங்க …  அப்படி என்னடா பேசின?” என்று கேட்டாள் .

அடுத்தவர்களின் வலியை புரிந்து கொண்டு பேசுவதும் அழகு தான் . 

மிதுன் மெதுவாக சிரித்துக்கொண்டான் .

அன்று மாலை 6 மணிக்கு கிளம்பியவன், சியராவிடம் நான் போய்ட்டு ரூம் vacate பண்ணிட்டு things எல்லாம் எடுத்திட்டு வந்திர்றேன் என்று சொல்லி விட்டு கிளம்ப ,

பிரத்யு  “டேய் மிதுன் இருடா நானும் வரேன் , உனக்கு ஹெல்ப் தேவை படும்ல” என்றவனை பார்த்து  சியாரா “டேய் நீ போகாம இருக்கிறது தாண்டா அவனுக்கு பெரிய ஹெல்ப் . ..” என்று சொல்லி சிரிக்க ,

அதெல்லாம் இருக்கட்டும் … இன்னைக்கும் உங்க வீட்ல டின்னர் கிடைக்குமா என்று கேட்டான் .

என்னமோ என் சாப்பாட்ட கிண்டல் பண்ணின இப்ப வெக்கம் இல்லாம கேக்குற என்று சியாரா அவனை வம்புக்கு இழுக்க , 

சாப்பாடுன்னு வந்துட்டா இந்த பிரத்யு வெக்க படவே மாட்டான் என்று சொல்லி அவளை பார்த்து கண்ணாடிதான் .  

“சரி! சரி! வந்து தொலை என்று சிரித்தவள் , மிதுனை பார்த்து டேய் சீக்கிரம் வந்து சேருங்கடா ” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள் .

மணி இரவு 8-30  ஆனது .   மிதுனும் பிரத்யுவும் அபார்ட்மென்டுக்கு வந்து சேர்ந்தனர் .

சியாரா அவனது அறைக்கு வந்து பார்த்தவள் ,  “டேய் இது உங்களுக்கே ஓவரா தெரியல … இந்த ஒரு சூட்கேஸை எடுத்துட்டு நீங்க ரெண்டு பேரு … அதுக்கு இவ்வளவு நேரம்” என்று பொய் கோபம் காட்ட ,

“இதெல்லாம் ஒரு விளம்பரம் தான் ”  என்ற பிரத்யுவை  நறுக்கென்று கிள்ளி வைத்தாள் .

 “சரி வாங்க நம்ம வீட்டுக்கு சாப்பிட போலாம்” என்று அவர்களை அழைத்து கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் .

சியராவின் அம்மா வீல் சேரில் அமர்ந்து ஹாலில் இவர்களது வருகைக்காக காத்திருந்தார் .

மிதுன் உள்ளே நுழைந்ததும் அவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு .  “வாப்பா வா” என்று சற்று வாய் குளறியவாறே அழைத்தார் .

மிதுன் “அம்மா!  என்று தோளோடு அவர்களை அணைத்தவன்,  அவர்களது கண்களை பார்த்து சிரித்தான் .   பிரத்யுவுக்கும் சியாராவுக்குமே அவளது அம்மாவின் சந்தோஷம் வியப்பாக இருந்தது .  

சற்று நேரம் எதையோ பேசி கொண்டிருந்தார்கள் .

மிதுன் சியராவிடம்,  “சியாரா அம்மாவுக்கு கிரௌண்ட் floora ல வீடு இருந்தா வசதியா இருக்கும்ல” என்றான் .

பம்பாயில் ஆஃபீஸிற்கு அருகில் வீடு கிடைப்பதே பெரிய காரியம் என்பதால் சியாரா இந்த அபார்ட்மென்டுக்கு வரும் போது வீடு கிடைத்தால் போதும் என்ற மன நிலையோடு வந்து விட்டாள் .

இப்போது மிதுன் சொல்ல தான்  “ஆமாம் அதுவும் அம்மாவுக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும் ல” என்று தோன்றியது . 

“சரி ஓகே இப்ப என்ன பண்ண முடியும்” என்று நினைத்துக்கொண்டே  தலையை ஆட்டியவள் “சரி வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள் .

அனைவரும் சாப்பிட்டு முடிக்க மிதுனும் அவன் அறைக்கு கிளம்பினான் .  பிரத்யுவும் அன்று இரவு அவனுடனே தங்கி விட்டான் .

அடுத்த நாள் காலை ஆபீஸ் கிளம்புவதற்காக கீழே வர , அங்கே ஒரூ ஆச்சர்யம்.

கீழ் floor இன் லிப்ட் பக்கத்தில் இருக்கும் பேங்கில் வேலை செய்யும் நபர் தனக்கு transfer கிடைத்து விட்டதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் வேறு ஊருக்கு செல்லவிருப்பதாகவும் பேசி கொண்டிருப்பது இவர்கள் காதில் விழுந்தது .

சியாராவும் பிரத்யுவும் மிதுனை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தனர்.  ‘நேத்து தான் இவன் இதை பத்தி பேசினான் அதுக்குள்ள’  என்று யோசிக்க….  

மிதுன் சற்றும் யோசிக்காமல் உடனே அந்த நபரை அணுகி பேசினான் .   பேசிவிட்டு வந்தவன் “சியாரா இவர் vacate பண்ண உடனே அம்மா அப்பாவை கீழ கூட்டிட்டு வந்திறலாம் .  வா நாம போய் அபார்ட்மெண்ட் owner கிட்டேயும் பேசிட்டு வந்திறலாம் என்று அவளை அழைத்து கொண்டு சென்றான் .  அப்போது அவரே எதிரில் வர சியாராவை பார்த்து சிரித்தவர் “சொல்லும்மா” என்றார் ..  மிதுன் அவரிடம் விஷயத்தை கூற அவரும் சந்தோசத்துடன் ஓகே சொன்னார் .

மடமட வென நடந்த இந்த நிகழ்வை சியாராவும் பிரத்யுவும் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் .

“டேய் நீ எனக்கு ரொம்ப லக்கி டா”  என்ற சியாரா மிதுனை hug செய்து தேங்க்ஸ் என்றாள் .

பிரத்யு “ஹூம்”…  என்று பொய் கோபம் காட்டி முகத்தை திருப்பி கொண்டான் .

ஒரு வாரம் சென்றது .    

சியரா அம்மா அப்பாவுடன்  கீழ் floor வந்து விட்டாள்.

சியாராவின்  அம்மா  இத எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை .   மேஜிக் மாதிரி நடந்து விட்டது  அவருக்கு பெரிய சந்தோஷம் .  மிதுன் வந்ததிலிருந்து எதோ positive விஷயங்கள் நடப்பதாக உணர்ந்தார் . அவரால் இப்போது வீல் சேர் இன் உதவியுடன்  அவராக இப்போது  வெளியே வர முடியும்.  அருகில் இருப்பவர்களிடம் பழக முடியும் .

அதுவே அவருக்கு பெரிய மாற்றமாக இருந்தது .

மிதுனும்  ஆபீஸ்  டைம் போக  மீதி நேரத்தை   அவர்களுடன் செலவளித்தான் .   அது அவர்களுக்கும்  நிம்மதியாக இருந்தது .   மிதனுக்கும்  ஒரு ஆறுதலாக இருந்தது .

அன்று காலை  ஆஃபீஸ் செல்வதற்காக கீழ் floor  வந்தவன்,  சியாராவும்  தன்  ஸ்கூட்டியை  எடுத்து  ஆபிசுக்கு கிளம்பி கொண்டு இருப்பதை கண்டு  …  “ஹாய் சியரா  என்ன இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டு இருக்க?”  என்று கேட்டான்.

”  ஆமா மிதுன் ..   ஈவினிங்  கொஞ்சம் வெளியில போகணும்…  அதனால  காலையில கொஞ்சம் சீக்கிரம் போயிட்டு  வேலைய முடிச்சுட்டா  ஈவினிங் சீக்கிரம் கிளம்பிருவேன்”  என்று சொன்னாள்  .

பின் மிதுனிடம்  “ஆமா…  அம்மா அப்பா எல்லாம் எப்ப கூட்டிட்டு வர போற?” என்று கேட்டாள்   சியாரா .

டிக்கெட் புக் பண்ணிட்டேன் சியாரா …   அம்மா அப்பா  அப்புறம் என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க …  அம்மா அப்பாவ  கொண்டு வந்து இங்க விட்டுட்டு  அவங்க ரெண்டு பேரும் கிளம்பி விடுவாங்க”  என்று சொன்னான்  மிதுன் .

” ஓகே சியரா ஆபீஸ்ல மீட் பண்ணலாம்” என்று மிதுன் அங்கே புதிதாக எடுத்த  தனது பைக்கில்  கிளம்பி விட்டான் .

ஆபீஸில்  சியரா அதிகம் யாருடனும் பேசாமல்  அவள் வேலையில் கவனமாக இருந்தாள்   வேலையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று .

இதை கவனித்துக் கொண்டிருந்த மிதுன்  மதிய உணவு இடைவேளையில் ,   ” என்ன சியரா  திரும்பி கூட பாக்காம வேலை செஞ்சிட்டு இருக்க?” என்று கேட்டான் .

அப்போது பிரத்யுவும்   கேள்வியாக அவளைப் பார்க்க,   “ஒன்னும் இல்லடா  இன்னைக்கு சாயங்காலம்  என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் பார்க்க போறேன் … ”  என்று சொல்ல  பிரத்யு   கண்கள் விரிய   “எங்களையும் கூட்டிட்டு போடி  நானும் வந்து சைட் அடிச்சுக்கிறேன்”  என்று சொல்ல , 

“ஆமாடா  பிரத்!  நீதான் அடுத்தவங்கள பாத்து ஜொள்ளு  ஊத்தனும் .   உன்னைத்தான் யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க”   என்று சொல்ல…

“அப்படி இல்ல சியாரா   எங்கள மாதிரி பசங்கள  பார்த்த உடனே பிடிக்காது  பழகி பார்த்தால் தான் பிடிக்கும்”  என்று சொல்லி கண்ணடித்தான் பிரத்தியு .

“ரொம்ப வழியாத நீயும் கூட வரணும்னா  வா”  என்று சொல்ல ,   

 “என்னை  விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும்  எங்க போறீங்க நானும் வருவேன்”  என்று மிதுன்  உரிமையோடு சொல்ல…  “சரி வாடா எல்லாரும் போலாம்  ஈவினிங்”  என்று சொன்ன  சியாரா ,     

“ஓகேடா கொஞ்சம் வொர்க் இருக்கு… அதையும் சீக்கிரமா முடிச்சிட்டா  நம்ம கிளம்பிடலாம்”  என்று சொன்னாள்.

EPISODE 19

மாலை 4  மணிக்கு  மூவரும் அங்கிருந்து கிளம்பினார் .  மும்பையில்  சற்று ஒதுக்குப்புறமான  சிறு  தோட்டம் போலிருந்த  அந்த காம்பவுண்டுக்குள்  மூவர் வண்டியும் சென்றது .  

சியாராவை  பார்த்ததும்  “அக்கா”    என்று ஆறு வயதிற்குள் இருக்கும்  இரண்டு மூன்று குழந்தைகள்  ஓடிவந்து அவளது காலை கட்டி கொண்டன .   

ஆமாங்க  அது  ஒரு orphanage.  

சியாரா  சிரித்துக் கொண்டே  “டேய் புஜ்ஜி”  என்று  அதில்  குட்டியா இருந்த ஒரு குழந்தையை தூக்கி  தோளில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும்  கைகளால் அணைத்துக் கொண்டாள் .  

அவர்களில் இனியா  என்று பெயர் கொண்ட அந்த குழந்தை “ஏங் க்கா  நேத்து வரேன்னு சொன்னீங்க வரல” என்று கேட்க ,  

“சாரிடா அக்காக்கு  கொஞ்சம் அர்ஜெண்டா  ஆபீஸ் ஒர்க்…  அதனால நேத்து வர முடியல…  இன்னைக்கு வந்தேன்”  என்று சொன்னாள்.

மிதுனையும்  பிரத்யுவயும்    சியாரா  பார்த்து  “வாங்க உள்ள போலாம்”  என்று  அழைத்து கொண்டே அவளது  ஸ்கூட்டியில்  சீட்டை ஓப்பன் பண்ணி அதன் கீழே  சில மருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு  உள்ளே நுழைந்தாள் .

அவளைப் பார்த்ததும்  அங்கிருந்த முதியவர்கள்  சிரித்து கொண்டே  “வாம்மா  சியாரா”  என்று அவள் அருகில் வர ,    “தாத்தா பாட்டி எல்லாரும் என்ன பண்றீங்க?.. விளையாடிட்டு  இருக்கீங்களா?”   என்று கேட்டாள்.

    “ஆமாடா!  இதுதான் எங்களுக்கு விளையாடுற வயசு…  இப்ப கூட விளையாடுலேன்னா இனிமேல் எப்ப விளையாட முடியும்… அதான் ஜாலியா இருக்கோம்”   என்று  அதில் ஒரு பெரியவர்  சொன்னார் .

  “இந்தாங்க தாத்தா  போனவாரம் கால் வலிக்கு  மருந்து கேட்டீங்க இல்ல” என்று கூறி  அவரிடம்  மருந்தை கொடுத்தவள்…  மற்றவர்களுக்கும்  அவரவர்களுக்கு வாங்கி வந்த  பொருட்களை கொடுத்தாள் .

புதிய உலகத்திற்குள் நுழைந்தது போல் உணர்ந்தான்  மிதுன் .  

அப்போது அந்த இல்லத்தை நடத்தி கொண்டிருக்கும் பார்வதி சிரித்து கொண்டே வந்தார் ….   “வா சியாரா”  என்று அழைத்து கொண்டே , 

“அம்மா எப்படி இருக்கீங்க” என்று விசாரித்தவள் மிதுனையும் பிரத்யுவையும் அவர்களுக்கு அறிமுக படுத்தி வைத்தாள் .

“சியாரா நீ வந்தா இங்கிருக்கிற  பெரியவங்க எல்லாம் குழந்தையா மாறிடுறாங்க “என்றார் சிரித்து கொண்டே ..

அதற்குள் அவரை பார்ப்பதற்கு யாரோ வந்திருப்பதாக அழைக்க , “நீங்க பேசிட்டு இருங்க இப்ப வந்திடுறேன்” என்று அவர்களிடம் கூறி விட்டு சென்றார்  பார்வதி.

அங்கிருப்பவர்கள் எல்லோரும் வெளியே சிரித்து கொண்டிருப்பதை  போல் தோன்றினாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான வலி நிறைந்து இருக்கிறது .

சியாரா மிதுனிடம் திரும்பி …

அந்த பொண்ணு இனியா இருக்கால்ல … அவ  ஒருநாள் பீச் பக்கத்தில தனியா நின்னு அழுதிட்டு  இருந்தா ..  அப்போ போலீஸ் அவள அழைச்சிட்டு வந்து இங்க விட்டாங்க … அதுவும் ரெண்டு வருஷம் ஆச்சு … எவ்வளவோ விசாரிச்சு பாத்துட்டோம் . அவ அம்மா அப்பாவை கண்டு பிடிக்க முடியல” .

“ஆனா என்னைக்காவது ஒரு நாள் தன் அம்மா அப்பா வருவாங்கன்னு நம்பிக்கையோட காத்திருக்கா”  என்று சொல்லி கொண்டே திரும்பியவள் அங்கே வீல் சேரில் வந்த கண்ணனை பார்த்துதும் உற்சாகமானாள் . 

கண்ணனும் “சியாரா அக்கா” என்று அழைத்து கொண்டே அருகில் வர , “டேய் கண்ணா!  என்ன இப்ப தான் காலேஜ்ல  இருந்து வரியா” என்று கேட்க ,

“ஆமா அக்கா… நீ இப்ப தான் வந்தியா” என்று கேட்டவன்  மிதுனை பார்க்க ,

“கண்ணா இவங்க ரெண்டு பேரும் என் friends” என்று அறிமுகப்படுத்தினாள் .

பின் மிதுனிடம் “இவன் கண்ணன் காலேஜ் லெக்ச்சுரரா இருக்கான்” என்று அறிமுக படுத்தினாள் .

“ஹாய் ப்ரோ”  என்று கை குலுக்கியவன் “நான் இங்க தான் வளந்தேன் … எனக்கு என்னை பெத்தவங்க ஞாபகமே இதுவரை வந்ததில்லை,  எனக்கு இந்த இல்லம் தான் எல்லாமே… என்னை ஆளாக்கி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தவங்க அவங்க  தான்  என்று சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பார்வதியை பார்த்து கூறியவன் … பார்வதியை நன்றியுடன் பார்த்து விட்டு,

“ஆண்டவன் ரொம்ப கருணை மிக்கவன்… அதனால தான் இங்க நாங்க எல்லோரும் ஒண்ணா இருக்கோம் என்றான். பின் சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் …

“ஓகே ப்ரோ பசங்க எல்லாம் காத்திருப்பாங்க … கிளாஸ் எடுக்கணும்” என்று கிளம்பி விட்டான் .

சியாரா நண்பர்களை பார்த்து சிரித்து விட்டு “கண்ணன் ஈவினிங் வந்ததும் இங்கிருக்கும் பசங்களுக்கு பாடங்கள் சொல்லி கொடுப்பான்”  என்று கூறினாள் .

என்ன ஒரு positive ஆன பார்வை … மிதுனுக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது… 

இழப்பில்லாமல் யாரும் இல்லை … நாம் வந்த நோக்கமும் நமக்கு ஏற்பட்ட இழப்புடன் முடிந்து போவதில்லை … 

ஆனந்தம் நிம்மதி என்பது நமக்கு சாய தோள் கிடைப்பதில் மட்டும் இல்லை…  நமது தோளை பிறர் சாய கொடுப்பதிலும் தான் இருக்கிறது …

கண்ணன் தனது இழப்புகளை தடையாக கருதாமல் ,   பல மடங்கு பலமாக மாற்றி இருக்கிறான் தன்னம்பிக்கையோடு .

இழப்பும் வலியும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் , ஆனாலும் அதையும் கடந்து பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் மனிதர்கள் கண்டிப்பாக உயரமானவர்கள் தான் .

அங்கிருப்பவர்கள் அனைவருக்குமே மன வலிமை அதிகம் தான் . 

இப்போது மிதுனுக்கும்  கொஞ்சம் மனவலிமை அதிகமாகி இருப்பதை உணர்ந்தான் .

சியாராவை பார்த்து திரும்பியவன் அவளும் இவனை பார்க்க அந்த நட்பு இன்னும் பலமான புன்னகை ஒன்றை பரிமாறி கொண்டது .

அப்போது மிதுனின் போனுக்கு அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது .

அப்பா அவனிடம் “மிதுன் இன்னும் ரெண்டு மூணு நாள்ல நாங்க ரெண்டு பேரும் அங்க வந்திருவோம் …  உன்கூட இருக்கிறது தான் எனக்கும் அம்மாவுக்கும் சந்தோசமே ”  என்று சொன்னார் .

“வாங்கப்பா நானும் காத்திட்டு தான் இருக்கேன்…   இங்க வாங்க உங்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் காத்திட்டு இருக்கு ” என்று சொன்னான் .

மகன் சந்தோசமா இருந்தா போதும் என்று நினைத்து கொண்டே “என்னப்பா ஆச்சர்யம் போன்லேயே சொல்ல கூடாதா” என்று கேட்டார் . 

“அப்பா எனக்கு இங்க புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க.  உண்மையாவே கொஞ்சம் மன மாறுதல் கிடைச்சிருக்குப்பா ” என்று சொன்னான் . 

“ரொம்ப சந்தோசம் பா , சீக்கிரம் வந்து நாங்களும் உங்க கூட சேந்துக்கிறோம் “

என்று சொன்ன அப்பா,  “இருப்பா அம்மா கிட்ட கொடுக்கிறான் கொஞ்சம் பேசிடு , இல்லேன்னா நம்ம ரெண்டு பேரும் அவ்ளோ தான்” என்று சிரித்து கொண்டே போனை அவன் அம்மாவிடம் கொடுத்தார் .

அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை கட் செய்ய,   பிரத்யுவும் சியாராவும் அவனிடம் வந்து “என்ன மிதுன் கிளம்பலாமா” என்று கேட்க ,

சில புதிய உணர்வுகளை சுமந்து கொண்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர் .

தனது அறைக்கு வந்து சேர்ந்தவனுக்கு ஏனோ ஸ்ருதியின் நினைவுகள் வந்து கொண்டே இருந்தது.

கூடவே,  மிதுனுக்கு  ஸ்ருதியின் நினைவுகளின் அழுத்தம்  கொஞ்சம் கூட குறையவில்லை.   மனம் எப்படி அமைதியாக இருக்கும் .  தனிமையில் தானே மனம் முழுமையாக விழித்து கொள்ளும் .  ஸ்ருதியுடன் வாழ்ந்த காலம் …  அது ஒரு வாழ்வின் முழுமையான நினைவுகள் .   மிதுன் என்பவன் ஸ்ருதியையும் உள்ளடக்கியவனே… அதே போல தான் ஸ்ருதியும் .

ஒருவருடன் உடன் இருப்பது வேறு.  ஒருவருடன் வாழ்வது என்பது வேறு .   அவள் வேறு ஒருவருடன் இருக்கலாம்… ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கிறாளா ?   அவள் நிம்மதியாக இருக்கிறாளா என்ற நினைவுகள் மிதுனை ஆக்கிரமித்தது  இப்போது …

EPISODE 20

இரண்டு நாட்கள் கழித்து மிதுனின் அம்மா அப்பா மற்றும் ஷ்யாம் ஹரிஷ்யும் மும்பை வந்து சேர்ந்தனர்.

அவர்கள் மிதுனின் வீட்டை அடையும் போது… மிதுன் சியாரா மற்றும் சியாராவின் பெற்றோரும் காத்திருந்து வரவேற்றனர்.

மிதுன் சியராவின் குடும்பத்தை அறிமுக படுத்த ஆரம்பிக்க , சியாரா அவளாகவே “ஹாய் ஆண்ட்டி அங்கிள்… எப்படி இருக்கீங்க ?  நான் சியாரா , இவங்க என்னோட அம்மா அப்பா” … என்றவள் ஷ்யாமாயும், ஹரிஷயும்  பார்த்து “ஹாய்” என்று கை கொடுத்தாள்.  

அவர்களும் தங்களை அறிமுக படுத்தி கொண்டனர் .   “ சரி வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்” என்று அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள் .

“பரவால்ல ஆண்ட்டி மிதுன் சீக்கிரமா உங்களை கூப்பிட்டு என் சாப்பாட்டுல இருந்து தப்பிச்சிட்டான்” என்று சொல்லி சிரிக்க , 

“உன் சாப்பாடு அருமையா இருக்கும்னுல்ல மிதுன் சொல்லி இருக்கான்” என்று அவன் அம்மா சொன்னார் .

“ஆமா ஆண்ட்டி மிதுனுக்கு ரொம்ப பெரிய மனசு…” என்று அவனை கிண்டல் செய்தாள் .

“அப்புறம் ஆண்ட்டி ட்ரெயின் journey லாம் எப்படி இருந்தது… ஓகே வா? “  என்று கேட்க ,

“எப்படா இவனை வந்து பார்ப்போம்னு யோசிச்சிட்டே வந்ததில அதெல்லாம் எங்களுக்கு தெரியலம்மா” என்று மிதுனின் அம்மா சொன்னார் .

அப்படியே பேசி கொண்டிருந்தவர்கள்

சியாரா அவர்களிடம் “இருங்க நான் போய் டின்னர் ரெடி பண்றேன்” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் செல்ல , மிதுனின் அம்மா  “நானும் வரேண்டா இரு” என்று சொல்லி அவளுடன் சென்றார் .

“ஆண்ட்டி என்ன டின்னர் செய்யலாம் சொல்லுங்க” என்றாள் சியாரா .

சிம்பிளா இட்லி தோசை எதாவது செஞ்சுக்கலாம் மா …  போதும் என்று கூறி விட்டு நானே சட்னி செய்றேன் என்றவர் மளமள  வென டின்னர் செய்தார் .

“நீ கலகலன்னு பேசறது ரொம்ப சந்தோசமா இருக்குமா” என்றவர் 

“சியாரா… எப்படிம்மா மிதுன் ஒரு மாசம் கூட ஆகல டக்னு உங்க கூட ஒட்டிக்கிட்டான்” என்று கேட்க , 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆண்ட்டி casuala பேச ஆரம்பிச்சோம் .  போக போக மிதுனோட அக்கறையான எதார்த்தமனான பழக்கம் எனக்கும் பிடிச்சது . நல்ல friends ஆயிட்டோம்” என்று சொன்னாள் .

அப்புறம் ஆண்ட்டி நாங்களும் 3 வது floor ல தான் இருந்தோம் .  மிதுன் வந்த நேரம் எங்களுக்கு கீழ் floor லேயே கிடைச்சிடுச்சு .   

அது அம்மாவுக்கு கீழ இருந்தா கொஞ்சம் வசதியா இருக்கும். மிதுன் வந்ததுக்கப்புறம் இதெல்லாம் நடக்கிறதால… எங்க அம்மாவுக்கு அவனை ரொம்ப பிடிச்சு போச்சு” என்று சொன்னாள் .

“பரவல்லம்மா ரொம்ப சந்தோசம்… அவன்  மன கஷ்டத்தோட தான் இங்க வந்தான் .  இப்ப உங்களால அவன் ரிலாக்ஸா இருக்கிறதா பாத்தா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு” என்றார் மிதுனின் அம்மா .

“என்ன சொல்றீங்க ஆண்ட்டி .. மிதுன் எங்க கூடல்லாம் பிரீயா தான பழகுறான் … அவனுக்கு என்ன பிரச்னை” என்று கேட்டாள் சியாரா .

“உங்க கிட்ட சொல்லலையாம்மா” என்று கேட்டவர்  அதன் பிறகு தான் மிதுன் ஸ்ருதியை காதலித்தது ,   foreign வேலைக்கு சென்றது,  அங்கே விமான விபத்து ,  அதில் அவன் இறந்து விட்டததாக நாங்கள் நினைத்தது , அதிலிருந்து அவன் மீண்டு வந்தது ,  அதற்குள் ஏற்பட்ட குழப்பத்தில் ஸ்ருதிக்கு திருமணம் முடிந்து விட்டது ,  அந்த மன நிலையில் இருந்து சற்று மீள தான் இங்க transfer வாங்கி கொண்டு வந்தது” …  என மிதுனின் அம்மா சொல்ல சொல்ல, 

சியாரா வாயை திறந்து கொண்டு  ” என்ன சொல்றீங்க ஆண்ட்டி , மிதுன் life ல இவ்வளது tragedy இருக்கா …  இத்தனையும் உள்ள  வச்சுக்கிட்டா அவன் வெளியில சிரிச்சு பழகிட்டு இருக்கான் ” என்றாள் சற்று கண்கள் கலங்கியவாறு .

“ஆமாம்மா ,  நீங்களும் அவன் கிட்ட   க்ளோசா பழகிறதுனாலா அவன் உங்ககிட்ட இதெல்லாம் சொல்லி இருப்பான்னு நினைச்சேன் ”  என்றார் .

“இல்ல ஆண்ட்டி… மிதுன் என் கிட்ட இத பத்தி எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லல . அவன் கஷ்டத்தை எதுக்கு சொல்லி எங்கள சங்கட படுத்தணும்னு நினைச்சிட்டான் போல” என்ற சியாரா,  

நடந்ததெல்லாம் போகட்டும் … இனி எல்லாம் நல்லதா நடக்கணும்னு அந்த கடவுளை வேண்டுகிறேன் ஆண்ட்டி ” என்றாள் சியாரா .

அப்புறம் ஆண்ட்டி  “இந்த குணம் தான் எனக்கு மிதுன் கிட்ட ரொம்ப பிடிக்குது ஆண்ட்டி … யாரையும் கஷ்ட படுத்த நினைக்காத குணம் ”   என்று சொன்னவள் “மிதுனோட frindship எனக்கு கிடைச்சதுக்கு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ஆண்ட்டி”  என்றவள்…

“சரி வாங்க ஆண்ட்டி எல்லோரும் சாப்பிட ரெடியா இருப்பாங்க” என்று சொல்லி விட்டு

சமையல் அறையை விட்டு வெளியே வந்தவள் அனைவரையும் சாப்பிட அழைத்தாள் .

டின்னர் முடித்ததும் சியராவிடமும் அவளது பெற்றோரிடமும் காலையில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டு தங்களது  பிளாட்டுக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும் .

அவர்கள் சென்றதும் அவளது அறைக்கு சென்ற சியாரா…  மிதுனை பற்றி யோசித்து கொண்டிருந்தவள்… ஏனோ தனது மனம் கொஞ்சம் கனமாக இருப்பதாக உணர்ந்தாள் .

அங்கே மிதுனின் பிளாட்டில்…

 அனைவரும் களைப்பில் உறங்க சென்றனர் .  ஆனால் மிதுனின் அம்மாவுக்கு தூக்கம் வரவில்லை .   அவருக்கு சியராவின் நினைப்பாகவே இருந்தது .   சியாராவும் மிதுனும் எவ்வளவு புரிதலோட இருக்காங்க …  ஆண்டவா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எவ்வளவு நல்லா இருக்கும் …  

எனக்கும் என் பையன் கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு இருக்கிறத பாக்கணும்னு ஆசை இருக்காதா ?…  ஒரு வழி காட்டுப்பா ”   என்று நினைத்து கொண்டே இருந்தவர், அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் மிதுனிடம் கேட்டே விடலாம் என்று நினைத்து கொண்டே மற்ற அனைவரும் தூங்கி விட்டார்களா? என்று பார்த்தார்.

அனைவரும் தூங்கி விட்டார்கள் என்று கவனித்தவர் , மிதுனின் அருகில் வந்து அவனை மெதுவாக எழுப்பினார் .

அப்பொழுது தான் கண் அயர்ந்தவன் அம்மா எழுப்பவும் , “என்னம்மா என்னாச்சு” என்றவாறே எழுந்தான் .

“மிதுன் கொஞ்சம் வா…  உன்கிட்ட பேசணும்” என்று அவனை தனியாக அழைத்து வந்தார் .

மிதுனிடம் ” ஏன் மிதுன் நீ ஸ்ருதி பத்தி எதுவும் சியாராகிட்ட சொல்லலியா ?”  என்று கேட்டார் . 

“ஆமாம்மா சியாரா என்கிட்டே அன்பா சந்தோசமா பழகுறா ,   அவ கிட்ட எதையும் மறக்கணும்னு நினைச்சு சொல்லாம இருக்கல ,   அதற்கான சூழ்நிலை அமையல ,  மத்த படி அவளுக்கு தெரிய கூடாதுனு எதுவும் இல்ல” என்றான் .

“இன்னைக்கு சியாரா வீட்டில டின்னர் செய்யும் போது உன்னை பத்தி பேசிகிட்டு இருந்தோம் .  அப்போ ஸ்ருதியை பத்தி எதார்த்தமா நான் சொல்ல போக…  அப்புறம் சியாரா கிட்ட எதையும் மறைக்க மனமில்லாம எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்றார் சித்ரா .

“இதில என்னம்மா இருக்கு …  இதெல்லாம் எதார்த்தமான நிகழ்வுகள் தான…  இதுக்கு தான் என்ன எழுப்பினையா சித்ரா” என்று கேட்டான் .

அதுக்காக மட்டும் இல்ல … நான் இன்னொன்னும் உன்கிட்ட கேட்கிறேன்… என் மனசில உள்ளதா கேட்கிறேன் …” என்று சொல்லி விட்டு…

“எனக்கு இவ்வளவு நாள் இப்படி யோசிக்க தோணல … ஆனா இன்னைக்கு சியாராவ பாத்ததுக்கு அப்புறம் அவ உன்னோட வாழ்க்கையில வந்தா எப்படி இருக்கும் னு தோணுதுடா ”   என்று சொன்னவர் தொடர்ந்து…

“ஸ்ருதி உன் வாழ்க்கையில இல்லன்னு ஆச்சு..  நீ இன்னும் இப்படியே இருக்கணுமா ?  எனக்கும் அப்பாவுக்கும்  நீ கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கணும்னு ஆசை இருக்காதா ?”  என்று கேட்டார் .

மெதுவாக அம்மாவை பார்த்தவன்…  எந்த சலனமும் இல்லாமல் மெல்லிய சிரிப்புடன் அம்மாவை முகத்தை பிடித்து நிமிர்த்தி… அவர் கண்களை நேராக பார்த்து சொன்னான் .  

“அம்மா …  சியாராவுக்கும் எனக்கும் உள்ளது ஒரு அழகான நட்பு …  

இப்ப ரயில் பாதை அதாவது தணடவாளம் பாத்தீன்னா அருகருகே போய்கிட்டே தான் இருக்கும் அந்த பயணம் முடியும் வரை …  அது மாதிரி தான் எங்க நட்பு …   

இணை பிரியாமல் செல்வோம் கடைசி வரை அழகான இடைவெளியுடன்” என்றவன்,

“நானும் அவளும் நண்பர்கள் தான்… ஆனால் தனித்தனியான மனம் ,  வாழ்க்கை ,  தேவைகள்…  எல்லாமே வேற வேற”.

“நாங்க எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் அதே சமயம் இணை கோடுகளாய் மட்டுமே செல்வோம்” .

“ஆனால் ஸ்ருதி…. என்று நிறுத்தியவன்…   “எனக்குள்ள ஒண்ணா வாழ்ந்திட்டு இருக்காம்மா …  அவ வேற நான் வேற இல்ல ,  எங்களுக்கான மனம், வாழ்க்கை, தேவை எல்லாமே ஒன்னு தான்” .    

ஸ்ருதி இணை கோடு இல்லம்மா .  நானும் அவளும் ஒரே கோடு தான் … என்று அம்மாவின் முகம் பார்த்து சொன்னவன், புரியுதா சித்ரா என்றான்.

 இது ஒரே ஒரு life … இந்த ஒரே ஒரு life ல என்னவள் னு நான் சொல்ல நினைக்கிறது ஸ்ருதியை மட்டும் தான் .   அது தான் இந்த கட்டை வேகிற வரைக்கும் நேர்மையான நிம்மதியை கொடுக்கும் .   so அவ்ளோ தான்.. போய் தூங்கலாமா” என்றவனை அவனை பெற்றவள் என்ற பெருமையுடன் பார்த்தாள் .

EPISODE 21

அடுத்த நாள் விடிந்தது.  ஹரிஷும் ஷ்யாமும் அன்று இரவு  சென்னை திரும்ப ட்ரெயின் டிக்கெட் புக் செய்து இருந்தனர் .  அதனால் அன்று மும்பையை சுற்றி பார்க்கலாம் என்று அனைவரும் முடிவு செய்தனர் .  சியாராவும் மிதுனும் ஆஃபீஸிற்கு லீவ் சொல்லி விட்டு கிளம்பினர் . 

காலை உணவை முடித்து விட்டு மிதுனின் அம்மாவும் அப்பாவும் சியாராவின் வீட்டுக்கு வந்தனர் .   மிதுனின் அப்பா பாலு  சியராவின் அம்மாவிடம் ,  “நீங்களும் வாங்கம்மா எல்லோரும் வெளிய போய்ட்டு வரலாம்” என்று அழைத்தார் .

“என்னால freeya வெளியே வர முடியாதுங்க … அப்புறம் நான் வந்த உங்களுக்கு எல்லாம் என்னை பார்க்கவே சரியா இருக்கும் … அதனால நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க”  என்றார் சியாராவின் அம்மா .

“இதுல என்னங்க சிரமம் இருக்கு … வெளியில நான்கு இடத்துக்கு போய் நாலு மனுஷங்கள பார்த்தா நம்ம மனசுக்குள்ள இருக்கிற அழுத்தம் கொஞ்சம் குறையும்ல…

அதனால நீங்க வாங்க!.. இத்தனை பேர் இருக்கோம்ல…  நாங்க பாத்துக்கிறோம் ” என்று சொன்னார் மிதுனின் அம்மா .

அதற்குள் மிதுன் ஷியாம் ஹரிஷ் மூன்று பேரும் கிளம்பி சியாராவின் வீட்டுக்கு வந்தனர் .  மிதுன் சியராவின் அம்மாவிடம் வந்தவன், “அம்மா நீங்க உட்காந்து வசதியா வர்ற மாதிரி தான் வேன் arrange செய்திருக்கோம் , அதனால உங்களுக்கு சிரமம் இருக்காதும்மா ”  என்றவனை பார்த்து பெருமகிழ்ச்சியை உள்ளே வைத்து வரும் சிறு புன்னகையை கொடுத்தார் சியாராவின் அம்மா.

அடுத்த பத்து நிமிடத்தில் வேன் வந்து சேர,  ஷ்யாமும் ஹரிஷும் சியாராவின் அம்மாவை பத்திரமாக தூக்கி வேன் இருக்கையில் அமர வைத்தனர்.  அவரின் வீல் சேரை மிதுன் எடுத்து மடித்து வேனில் வைக்க … அனைவரும் கிளம்பினர் .

முதலில் கேட் வே ஆப் இந்தியா வந்தனர் . இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முதலில் இந்தியா வரும் போது  வந்து இறங்கிய இடம் தான் இது . 1924 இல் கட்டப்  பட்டது .  அதற்கு பிறகு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆங்கிலேய படை இங்கிருந்து தான் வெளியேறியது .  அதனாலும் இந்த இடம் இந்தியாவின் கேட் வே .

அப்புறம் இதுக்கு பக்கத்தில தான் தாஜ் ஹோட்டல் இருக்கு . தாஜ் ஹோட்டல் என்ன ஸ்பெஷல் னா இது தான் இந்தியாவின் முதல் பைவ்ஸ்டார் ஹோட்டல். இந்த ஹோட்டல்  2008 இல் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது . 

வேன் அங்கிருக்கும் பார்க்கிங்கில் நிறுத்த பட …

அனைவரும் கீழே இறங்கினர் .

வீல் சேரை கீழே இறக்கி சியாராவின் அம்மாவை அமர வைத்து அங்கே சுற்றி காட்ட…

அவர் ஏற்கனவே பல முறை வந்த இடம் தான் அது …  ஆனால் இன்று எல்லாமே புதிய உணர்வை தந்தது …  தன்னை சுற்றி இருந்த புதிய உறவுகளால் .   

இது போன்ற நிகழ்வுகள் தானே நினைவுகளை மனதில் பதிக்கின்றன .  

கொஞ்ச நேரம் அங்கே சுற்றி பார்த்தவர்கள் அங்கிருந்து கடலில் உள்ள தீவான எலிபாண்டா தீவுக்கு செல்ல விசை படகில் ஏறினர் .

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு எலிபாண்ட்டா தீவை அடைந்தனர்.

 அங்கே இறங்கியவர்கள் அங்கிருந்து 120 படிகள் மேல சென்றால் குகை கோவில் போல இருக்கும் இடத்தை சேரலாம் .  120 படி னு சொன்ன சின்ன சின்ன படிகள் இல்லங்க . 

ஒரு படி ஏறினா அடுத்த படி ஏற 25 அடி நடக்கணும் .  அப்புறம் அடுத்த படி ஏறணும் .

அப்படியே ஏறி மேல போனா அங்க குகை கோவில் இருக்கு .  பெரிய பெரிய தூண்கள் , பெரிய சிலைகள் என நம்ம ஊர் மஹாபலிபுரம் போன்றே இருக்கிறது .

அங்கே வயதானவர்களை தூக்கி செல்ல சேர் வைத்த பல்லக்கு போன்ற அமைப்புடன் தூக்கு தூக்கிகள் இருக்கிறார்கள் .

சியராவின் அம்மாவை அந்த பல்லக்கு சுமந்து வர  “அப்பா நீங்க எல்லோரும் இந்த பல்லக்குலேயே வந்திருங்க” என்று சியாரா சொல்ல …

“எங்களுக்கு வேணாம் மா அப்பாவை மட்டும் இதுல வர சொல்லலாம்” என்று மிதுனின் அப்பா சொன்னார் .

சியராவின் அப்பா ஏற்கனவே தளர்ந்து போய் காணப்பட்டதால் அவரை ஒரு பல்லக்கில் உட்காரவைத்து மேலே அழைத்து சென்றனர் .

அங்கே சுமார் ஒன்றரை மணி நேரம் சுற்றி பார்த்தனர் .   அனைவரையும் விட சியராவின் அம்மா ‘இனி எப்போது இங்கு வர போகிறோம்’ என்று நினைத்தாரோ என்னவோ ஒவ்வொரு இடத்தையும் நிதானமாக பார்த்து ரசித்து வந்தார் .  மிதுன் அவர் கூடவே இருந்து பார்த்து கொண்டான் .  

மிதுனது பரிவு ஏனோ அவருக்கு தேவையாயிருந்தது .

ஒரு வழியாக தீவை சுற்றி பார்த்து விட்டு பின் இந்தியா கேட் க்கு வந்தனர் . அதற்குள் மணி மதியம் 3 ஆகி இருந்தது.  மதிய உணவை அங்கிருந்த ஒரு ஹோட்டலில் முடித்தவர்கள் அடுத்து சென்ற இடம் ஜூஹி பீச் . 

அங்கே செல்லும் போது மணி  மாலை ஐந்தை தொட்டது .   அங்கே சூரியன் மறையும் காட்சி அற்புதமாக இருக்கும் . அதை பார்ப்பதற்காக கொஞ்சம் கூட்டம் இருந்தது .  

அங்கே சில சிறுவர்கள் உணவு பண்டங்களையும், விளையாட்டு பொருட்களையும் விற்று கொண்டிருந்தனர் .   அந்த வயதிலேயே வாழ்க்கைக்கான போராட்டம் .

அந்த சிறுவர்களுக்கு  கஷ்டம் இருந்தாலும் இன்னும் கள்ளம் தெரியவில்லை . 

சூரியன் மறையும் காட்சியை சிறுவர்களும் குழந்தைகளும் ஆச்சர்யமாக,  ஆரவாரம் செய்து பார்த்து கொண்டிருந்தனர் . 

சில நிமிடங்களில் சூரியன் மறைய மறைய… ரசித்து கொண்டிருந்தவர்களுக்கு எதோ ஒரு சோகம் .    ஒரு நிமிடம் சூரியன் அப்படியே மறைந்து விட்டால் இந்த பூமி என்னவாகும், நாமெல்லாம் என்னாவோம்  என்ற நினைப்பு வந்து போனது அங்கிருந்த பலருக்கு . 

 இயற்கை நிறைய சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறது . நாம் தான் புரிந்து கொள்வதில்லை .

சியாராவின் அம்மாவிற்கு இந்த காட்சிகளை பார்ப்பதில் கிடைத்த மகிழ்ச்சியை விட , அழகான உறவுகளோடு பார்ப்பது எதோ புத்துணர்ச்சியை தந்தது.

மிதுனின் அம்மாவும் அப்பாவும் மிதுனை கவனித்து கொண்டே இருந்தனர் அவன் சந்தோசமாக இருக்கிறானா என்று . அவனது சிறு மகிழ்ச்சியும் அவர்களுக்கு பேரின்பம் தானே . 

 மிதுன் பேசினான் , சிரித்தான் , ரசித்தான் எல்லாமே செய்தான் .  

ஆனால் எதிலுமே அவன் மனம் ஒட்டாமல் இருப்பது பெற்றவர்களுக்கு புரிந்தது .

உண்மையான கணவன் மனைவி , காதலன் காதலி  என்று இருப்பவர்களை பாருங்கள் .   அவர்களுக்கு அவர்களின் துணைக்கு அடுத்து தான் எல்லாமே…  அவர்களின் கண்களின் முன்னே பெரிய லேயராக அந்த காதலியோ, காதலனோ இருப்பார்கள் .  

அதை தாண்டி தான் அனைத்தும் தெரியும் .  நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா நண்பர்களே ?..

சூரியன் மறைவை பார்த்து விட்டு… சரி அங்கேயே ஒரு ஓட்டலில் டின்னர் முடித்து விட்டு செல்லலாம் என்று அனைவரும் அருகே இருந்த ஓட்டலுக்கு சென்றனர் .   

ஓட்டலின் உள்ளே நுழையும் போது சியராவின் செல் ஒலித்தது …

போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்றாள் சியாரா .

“சியாரா நான் பார்வதி பேசுறேன் orphanage ல இருந்து என்றார்” பார்வதி.

“ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க?.. ”  என்று கேட்க ,   நல்லா இருக்கேன் சியாரா என்றவர் ,  என்னம்மா ஒரே சத்தமா இருக்கு…வெளிய இருக்கீங்க போல ” என்று கேட்டார் .

“ஆமா மேடம் மிதுனோட அம்மா அப்பாலாம் வந்திருந்தாங்க … அதான் கொஞ்சம் வெளிய வந்தோம்” என்று சொன்னாள் சியாரா .

“ஓ அப்படியா!” என்றவர்…  “சியாரா உனக்கொரு surprise இருக்கு … நீ எப்ப இங்க வர முடியும்” என்று கேட்டார் பார்வதி . 

“என்ன மேடம் surprise” ,  என்று கேட்க ,  “நீ நேர்ல வா வந்து பாத்தின்னா தான் தெரியும்” என்று சொன்னார் பார்வதி .

“மேடம்… என்னால அங்க வர்ற வரைக்கும் தாங்க முடியாது… ப்ளீஸ் இப்பவே சொல்லுங்க” என்று கேட்க ,

  “அதெல்லாம் முடியாது நீ நேரா வா சொல்றேன், இப்ப போனை வைக்கிறேன்” என்று சொல்லி போனை cut பண்ணினார் .

EPISODE  – 22

போன் பேசிய பிறகு  சியாராவுக்கு  கையும் ஓடவில்லை காலம் ஓடவில்லை .  

 எப்போது  ஆர்பனேஜ்க்கு சென்று  பார்ப்போம்  என்று  பதட்டத்துடன் கூடிய உணர்வு தொற்றிக் கொண்டது .     

ஹோட்டலுக்கு சென்றவர்கள்  இரவு உணவை முடித்துவிட்டு  வெளியே வர , 

நேரம் சென்று கொண்டிருந்தது  ஹரிஷுக்கும் சியாமிற்கும்  ட்ரெயினுக்கு  நேரம் ஆகிக்கொண்டிருந்தது .  

 அதனால் அவர்கள் இருவரும் மிதுனின் வீட்டிற்கு சென்று லக்கேஜ் எடுத்துக்கொண்டு   ரயில்வே ஸ்டேஷன்  சென்றால்  நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்து  அனைவரும்  கிளம்பினர். 

“மச்சி  ட்ரெயின் எத்தனை மணிக்குடா”  என்று மிதுன் கேட்க  “பத்து மணிக்கு டா”  என்ற ஹரிஷ் .

“சரி!…  இப்ப வீட்டுக்கு போயிட்டு  லக்கேஜ் எடுத்துட்டு  போனா டைம்  சரியா இருக்கும் இல்ல”   என்று சொல்ல,   

“ஆமாடா…  கொஞ்சம் முன்னாடியே போயிடலாம்”  என்றான்  ஷியாம் .

ஓகே என்று  அனைவரும் வேனில் ஏற சரியாக 8 மணிக்கு   மிதுனின் வீட்டை அடைந்தனர் .

ஹரிஷும்  ஷியாமும்  

மிதுனின்  அம்மா அப்பாவிடம் வந்து “அம்மா  நாங்க கிளம்புறோம்  அப்பப்ப வந்து பாத்துக்குறோம் .     நீங்க ஃப்ரீயா இருங்க..  அவனையும் ப்ரியா வச்சுக்கோங்க” என்று சொன்னவர்கள்

சியாராவிடம்  வந்து  “இந்த ரெண்டு நாட்கள் நாங்க வந்து வேற ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வராம  பாத்துக்கிட்டீங்க” .  

 “நீங்க எல்லாரும் கண்டிப்பா  சென்னைக்கு வரணும்”  என்று சொல்லி ,  சியாராவின்  அம்மாவிடம் ஆசி வாங்கிவிட்டு ,  அவரது அப்பாவிடமும் சொல்லிவிட்டு  கிளம்பினர் .   

மிதுனின் அம்மாவும் அப்பாவும்  ‘நாங்களும் வரம்ப்பா ரயில்வே ஸ்டேஷனுக்கு’  என்று சொல்ல ,   

  ‘வேணாம்மா நைட் ரொம்ப நேரம் ஆச்சு  நீங்க ரெஸ்ட் எடுங்க  அதான்   மிதுன் வரான்ல  போதுமா… அவன் கூட வேண்டியது இல்லை நாங்களே போய்க்குவோம்”  என்று சொல்ல ,

“பரவால்ல டா  ரயில்வே ஸ்டேஷன் இங்க இருந்து பக்கம் தானே…  நான் வந்துட்டு வந்துடுறேன்…”   என்று மிதுன் சொல்ல  அனைவரும்  ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பினர் .

20 நிமிடத்தில்  ரயில்வே ஸ்டேஷனை அடைந்தனர் .   

நண்பர்களுக்குள்  திரும்பவும்  ஒரு பிரிவு .   மூவருக்குமே  மனம் கஷ்டமாகத்தான் இருந்தது .

   சியாம் மிதுனிடம்  “மச்சி…   நானும் உன்னை கவனிச்சிட்டு  தான் இருக்கிறேன், எதுலயும் பிடிப்பில்லாம இருக்க… அப்படி இருக்காதடா …  நீ சந்தோஷமா இருந்தா தான்  அம்மா அப்பாவும் நிம்மதியா இருப்பாங்க” ,  என்று சொல்ல …

“புரியுதுடா  என்னால முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணிக்கிறேன் டா” .  என்றான் மிதுன்.

“சரிடா மச்சி…  ரெண்டு வருஷம் தான்  டக்குனு போயிரும்…  நீ திரும்பி சென்னை வரும் போது புது மனுஷனா வருவேன்னு நம்புறேன்”  என்று சொன்னான் ஷ்யாம் .

கொஞ்ச நேரத்தில்  ட்ரெயின் வரும் அறிவிப்பு வந்தது .

நண்பர்கள் ஒருவரை ஒருவர்  தழுவி  விடை பெற்றுக் கொண்டனர் .  

 ட்ரெயின் வரவும்  மிதுனிடம் சொல்லிவிட்டு  இருவரும்  ட்ரெயின் ஏற ,  ஐந்து நிமிடத்தில் கிளம்பியது ட்ரெயின் .

அவர்கள் சென்றதும்  வீடு திரும்பினார்  மிதுன்.    நண்பர்கள் இல்லாதது  கொஞ்சம்  வெறுமையை கொடுத்தது .

வீடு திரும்பிய  மிதுன்  மணி  11:30  ஆகவே ,   படுக்கைக்கு சென்று விட்டான் .

இரவு சீக்கிரம் சென்று விட்டது போல்  ஒரு உணர்வு  கதவு தட்டப்பட  தடக்கென எழுந்தவன்  வெளியே சென்று கதவை திறந்து பார்க்க ,  “ஹாய் மிதுன்  சாரிடா…  சீக்கிரம் எழுப்பி விட்டேன்  உன்னை”  என்று சொல்லிவிட்டு ,  

“டேய் மிதுன்…  நேத்து ஆர்பனேஜலிருந்து  பார்வதி அம்மா  போன் பண்ணாங்க .  எதோ சர்ப்ரைஸ்ன்னு சொன்னாங்க” .  

 “ஒன்பது மணிக்கு ஆபீஸ் போகணும்…  அதுக்குள்ள  ஆர்பனேஜ்  போய் பாத்துட்டு வந்துடலாமா?”   என்று கேட்டாள் .

“சரி சியாரா போயிட்டு வந்திரலாம்”…  என்று சொன்னவன்  

அம்மாவிடம்  “அம்மா  காலைல எனக்கு டிபன் வேண்டாம்… நானும் சியாராவும்   ஆர்ப்பனேஜ்  போய்ட்டு அப்படியே ஆபீஸ் போறோம் .   ஈவினிங் சீக்கிரம் வந்துருவேன்” …

 “நீங்க ரெண்டு பேரும்  சாப்பிட்டுட்டு  நல்லா ரெஸ்ட் எடுங்க …   கீழ சியாரா வீட்டுக்கு போயிட்டு  கொஞ்ச நேரம் இருந்துட்டு வாங்க”  என்று சொல்லிவிட்டு

சியாராவிடம் திரும்பி  சியாரா “15 மினிட்ஸ்…  நான் வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு  சரியாக  15 நிமிடத்தில்  கிளம்பி வெளியே வந்து விட்டான் .   

“என்னோட பைக்லையே போலாமா” என்று கேட்க..  “ஆமாடா ஒரே வண்டியிலே போலாம்”  என்று சொல்லிவிட்டு  இருவரும் ஆர்பனேஜுக்கு கிளம்பினர் .

அரை மணி நேர  பயணத்திற்குப் பிறகு ஆர்பனேஜை அடைந்தனர் .   அங்கே காலை  இறை வணக்கம்  நடந்து கொண்டிருந்தது .  இவர்களும் போய்  அதில் கலந்து கொண்டனர் .  

முடிந்ததும்  பார்வதியிடம் செல்ல ,   பார்வதி  சியாராவை ஆச்சரியத்துடன்  பார்த்து “காலையிலேயே வந்தாச்சு”  என்று சொன்னார்.

“நீங்க தானே வர வச்சிட்டீங்க மேம்”  என்று சொன்னாள் சியாரா.  

“அது சரி மேடம்  எதோ surprise னு சொன்னீங்களே  என்ன” என்று கேட்க, 

“இங்கே வா”  என்று அழைத்துக் கொண்டு குழந்தைகள் தங்கி இருக்கும்  அந்த அறைக்கு அழைத்து சென்றார் பார்வதி.

அங்கே இவளை பார்த்த  இனியா  ஓடோடி வந்து காலை கட்டி கொண்டாள்  “அக்கா”  என்று .    

“என்னடா குட்டிமா… இவ்வளவு சந்தோசமா இருக்க இன்னைக்கு…”  என்று கேட்க,

  “இங்க வாங்க” அப்படின்னு  அவளை வேகமா இழுத்துட்டு போன இனியா …

  சியாராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு  “அக்கா இங்கேயே இருக்கா நான் வரேன்” என்று  சொல்லிவிட்டு உள்ளே சென்றவள்…  

ஐந்து நிமிடத்தில்  திரும்பி வந்தாள்.   

“அக்கா  இங்கு பாத்தீங்களா  யாருன்னு”  என்று கேட்க ,

கண்கள்   விரிய  அவர்களைப் பார்த்த சியாரா டக்கென்று புரிந்து கொண்டாள்.  

ஆனாலும் ஆச்சரியத்தை வெளி காட்டாமல்  “யாருடா இது”  என்று கேட்க  “எங்க அம்மா அப்பா  க்கா”   என்று  தன் மழலை கண்  விரிய ,  முகம் முழுவதும்  புன்னகையுடன்  சொன்னாள்.   

ஆனாலும்  அந்த பிஞ்சு குழந்தை  

‘தனக்கு தாய் தந்தை  கிடைத்ததை பற்றி பெரிதாக சந்தோசப்பட்டால்…

  மற்றவர்களுக்கு அந்த ஏக்கம்  வந்துவிடும்’  என்று புரிந்ததாலோ என்னவோ  உடனே  தன் முக பாவனைகளை டக்கென சாதாரணமாக மாற்றிக் கொண்டாள். 

அங்கு இருப்பவர்கள் அனைவரும்  மற்றவர்களின் சந்தோஷத்தை  புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ  அவர்களின்   கஷ்டத்தை நன்றாக அறிவார்கள் .

சியாரா  இனியாவின் அம்மா அப்பாவிடம்  விசாரிக்க ,  

“நாங்க டெல்லிக்கு  டூர் போயிருந்தோம்மா ,   அங்க தான்  இனியவை  கடத்திட்டாங்க.   அங்க கடத்தினவங்க…  எப்படியோ மும்பைல இங்க இருக்குற பீச் பக்கத்துல கொண்டு வந்து விட்டுட்டு  போய்ட்டாங்க” .  

“நாங்களும் எங்கெங்கோ தேடிப் பார்த்தோம் ,   எப்படியோ  இத்தனை வருஷம் கழிச்சு எங்க பொண்ணு எங்களுக்கு கிடைச்சுட்டா”.   

“ஆனா இந்த ரெண்டு வருஷம்  மனுஷனுடைய வாழ்க்கைன்னா என்னன்னு  எங்களுக்கு சொல்லிக் கொடுத்துடுச்சும்மா”…  

  “நாங்க உயிரோடு இருந்ததற்கு காரணமே…  என்னைக்காவது ஒரு நாள்  எங்க பொண்ணு எங்க கிட்ட  சேர்ந்து வா அப்படிங்கற நம்பிக்கையில் தான் மா”  என்று சொன்னார்  இனியாவின் அப்பா .

“இனி நாங்க இங்கதான் தங்க போறோம்…  எங்க பொண்ண  பத்திரமா பாத்துக்கிட்ட  இந்த ஆசிரமம் தான் இனிமே… எங்க வீடு ,  எங்க குடும்பம் எல்லாமே”  என்று சொன்னார்  இனியாவின் அம்மா .   

“ஆமாம்மா   நாலு பேரு  ஒன்றாக இருக்கிறது மட்டும்   குடும்பம்  இல்லம்மா…   

ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இங்கே எத்தனை பேர் இருக்கீங்க… இதுவும்  குடும்பம் தான்மா… 

ரத்த பந்தம் ஏதும் இல்லனாலும்  இது உணர்வால்  இணைஞ்சு வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிற  குடும்பம்மா”  என்று சொன்னார்  இனியாவின் அம்மா . 

 “ரொம்ப சந்தோஷம் க்கா ,   பார்வதி அம்மா செய்வது  சாதாரண விஷயம் அல்ல , அதுக்கு ஏதோ  எங்களால் என்ன முடியுதோ…  அந்த சப்போட்டா வெளியில் இருந்து நாங்க கொடுக்கிறோம்”  என்று  சொல்லிவிட்டு , 

“இனியா குட்டி…  அக்காவுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு…  நாங்க போயிட்டு  ஈவினிங் வறோம் ஓகேவா”  என்று சொல்ல… 

“கண்டிப்பா வரணும் கா”  என்று bye சொன்னாள்  இனியா .

அங்கிருந்து  பார்வதியுடன்  இருவரும்  வெளியே  வந்தனர் .  

அப்போது பார்வதி சொன்னார் …  “இனியவோட அப்பா  தன் ஊரில் இருக்கிற சொத்து எல்லாத்தையும் வித்து இந்த ஆசிரமத்துக்கு கொடுத்துட்டாரு மா …   என்று  சொன்னார்.

சிறிதாக புன்னகைத்தாள் சியாரா .  

“நான் அதுல கொஞ்சத்த இன்னொரு  முதியோர் இல்லத்துக்கு கொடுத்துட்டேன்”  என்று சொன்னார் பார்வதி .   

அது சியாராவுக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை.  ஆனாலும் அவரை பார்க்க ,

“ஆமா சியாரா ,  நமக்கு  வேண்டியது  வேண்டும் நேரத்தில்  ஆண்டவன் கொடுப்பான்”

என்று சொல்லி சிரித்தார் பார்வதி.

சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது மிதுனின் செல் ஒலித்தது.

EPISODE 23

 போன்  சென்னை ஆபீஸ்ல இருந்து வந்தது மிதனுக்கு . 

 “ஹலோ”  என்றான் போனை காதில் வைத்து,

“குட் மார்னிங் மிதுன்” என்றார் . 

“சார் குட் மார்னிங்  எப்படி இருக்கீங்க” என்று கேட்க,  “ஐ அம் குட், அண்ட் ஹௌ ஆர் யூ மிதுன்” என்று கேட்க “குட் சார்” என்றவன், 

 “சொல்லுங்க சார்”  என்று கேட்க ,

“மிதுன்  நீங்க  சென்னையில இருக்கும்போது  ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருந்தீங்க இல்லையா ,  அந்த ப்ராஜெக்ட்  இப்போ பைனல் ஸ்டேஜ் வந்துருச்சு” . 

“சோ வி ஹேவ் டு சப்மிட்  இன் எ  வீக்…  அதனால  நீங்க  இங்க வந்து  எங்களுக்கு ஒன் வீக்  சப்போர்ட் பண்ணி  கொடுக்கணும் .  அப்பத்தான்  ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ண முடியும்”  என்று சொன்னார் . 

“என்ன சார்  டூ மந்த்ஸ் தான்  ஆச்சு நான் இங்க வந்து ,  அதுக்குள்ள கூப்பிடுறிங்களே”  என்று கேட்டான் மிதுன் .

“ஆமாம் மிதுன், நீங்க அங்க இருந்து ஒர்க் பண்ணா கன்வெனியண்டா இருக்காதுன்னு நான் பீல் பண்றேன்…”

“நம்ம  இவ்வளவு நாள் இந்த ப்ராஜெக்ட் ல ஒன்னும் ஒர்க் பண்ணிட்டோம் ,  சோ அந்த லைன்  உங்களுக்கு தான் நல்லா தெரியும் ,  நீங்க இந்த ஒன் வீக் மட்டும்  அட்ஜஸ்ட் பண்ணி  இங்க வந்து முடிச்சு கொடுத்துடுங்க .  அதுக்கப்புறம்  உங்களை நாங்கள் டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்” என்று சிரிக்க ,

“ஓகே சார் இன்னும் 2 டேஸ் ல  நான்  அங்க வந்துடறேன் சார்”  என்று சொல்லி  போனை கட் பண்ணினான்.

இப்போது மிதுன் ஹரிஷிற்கு போன் பண்ணினான் .  போனை எடுத்த ஹரிஷ்,   “சொல்லுடா மச்சி  என்று சொல்ல ,  என்னடா இப்பதான் மேனேஜர் ஃபோன் பண்ணாரு ,  ஒன் வீக் அங்க  வந்து ஒர்க் பண்ண சொல்றாரு”  என்று சொல்ல ,

“ஆமாடா…  நேத்துதான்  அந்த கிளைன்ட் கொஞ்சம் அர்ஜெண்டா அந்த ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்க சொல்லி கேட்டு இருப்பார் போல”…  

“சோ,  நீயும் இங்க இருந்தா நல்லா இருக்கும்ன்னு நாங்க எல்லாருமே பேசிட்டு இருந்தோம்…  அதுக்கு தான் அவரு கால் பண்ணி இருப்பார் …  ஓகே டா நீ எப்போ கிளம்பி வர இங்க”  என்று கேட்டான் ஹரிஷ் .

“இன்னைக்கு நைட்  ட்ரெயின் புக் பண்ணிடுவேன்   நாளைக்கி நைட்  அங்க வந்துடறேன்” என்றான் மிதுன். .

“ஓகே டா மச்சி…  நீ வா நம்ம சென்னையில் மீட் பண்ணலாம்… பாய் டா”  என்று சொல்லி ஃபோனை கட் பண்ணினான்.

அருகில் இருந்த சியாரா,   “என்னடா  மிதுன்”  என்று கேட்க ,

“சென்னையில் அந்த ப்ராஜெக்ட்  பைனல் ஸ்டேஜ் வந்துருச்சா  சியாரா…  அதை கம்ப்ளீட் பண்ணி கொடுக்கணும் .  அதுல என்னோட பார்ட்  கொஞ்சம் ஹியூஜா இருக்கு .  சோ நானும்  அங்க போய் தங்கி இருந்து முடிச்சு கொடுத்துட்டு வரணும்”…  என்று சொன்னான் . 

“அப்படின்னா நீ எப்ப கிளம்புற டா”  என்று கேட்டாள் சியாரா .

“அர்ஜெண்ட் சியரா இன்னைக்கு நைட் கிளம்புனா  நாளைக்கு நைட் அங்க போயிடுவேன் .  அப்புறம் ஒன் வீக் அங்க இருந்து முடிச்சு கொடுத்துட்டு வந்துடறேன்”. 

“அதுவரைக்கும் அம்மா அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோ”  என்று சொன்னான் மிதுன் .

“ஓகே நீ ப்ரீயா போய்ட்டு வா  ஐ வில் டேக் கேர் ஆஃப்   தேம்”  என்றாள்  .

“சரி வா!..  இப்ப நம்ம ஆபீஸ் போலாம்”  என்று இருவரும் ஆபிசுக்கு கிளம்பினர் .

அன்று இரவு  சென்னைக்கு  ட்ரெயின் டிக்கெட்  புக் பண்ணினான்  மிதுன்.

அன்று மாலை  வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு  இருவரும்  அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தனர் .  பிரத்யுவும்  கூட வந்தான் .

மிதுன்  அவன் அப்பாவிடம்  சென்னையில் ஒரு வாரம் வேலை இருப்பதை கூறி  அன்னைக்கு நைட்டு  கிளம்புவதாகச் சொன்னான் .

ஒன்பது மணிக்கு  மிதுனை  ரயில்வே ஸ்டேஷனில்  விடுவதற்காக  பிரத்யு அங்கேயே இருந்தான் .

மணி எட்டரை  ஆகவே மிதுன் அப்பாவிடம் சொல்லிவிட்டு  சியாராவிடம்  சொல்லிவிட்டு  பிரத்யு கூட  ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பினான் .

9 மணிக்கு எல்லாம்  அவர்கள் ரயில்வே ஸ்டேஷனை அடைய  ட்ரெயின் வர  இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது .

மிதுனிடம் “நான் கிளம்புறேன்  மிதுன்…  போற வழியில கொஞ்சம் வொர்க் இருக்கு…  சோ நம்ம ஒன் வீக் கழிச்சு மீட் பண்ணலாம்  பாய்”  என்று சொல்லிவிட்டு  கிளம்பினான் பிரத்யூ .

 மிதுன்  காத்திருந்தான் .  சரியாக பத்து பத்துக்கு  ட்ரெயின் வந்தது .  ட்ரெயினில் ஏறியவன்  தனக்கு ஒதுக்கப்பட்ட  இருக்கையில் படுத்துக்கொண்டான் .

ஐந்து நிமிடத்தில் ‘தடக் தடக்’ என்ற ஓசையுடன்  டிரெயின் கிளம்பியது .  

படுத்துக் கொண்டே  கொஞ்ச நேரம்  போனை  நோண்டிக் கொண்டிருந்தவன் தூக்கம் வரவே  கண்ணயர்ந்தான் .

ட்ரெயினுக்குகள் காபி விற்பவர்கள், உணவு விற்பவர்கள் என யாரோ ஒருவர் சத்தமிட்டு கொண்டே இருந்தனர்.

அருகில் ஒரே குடும்பத்தை மூன்று பேர் அமர்ந்திருந்தனர் .  13 வயது மதிக்கத்தக்க  ஒரு பெண் குழந்தை  அம்மா அப்பா  என மூன்று பேரும் இருந்தனர் .   அவர்கள் எதோ பேசி சிரித்து கொண்டே வந்தனர் .

வீட்டில் தான்  ஏதாவது ஒரு சிறு சத்தம் கேட்டாலே தூக்கம்  வராது.    வெளியில் நமது மனசு அதற்கேற்ற மாதிரி மாறி விடுகிறது.  இந்த மாதிரி சூழ்நிலை இருந்தாலும் எப்படியோ  நாம்  தூங்கி விடுவோம் இல்லையா . 

மிதுனுக்கு எதாவது  சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தாலும் ,    மிதுன் அரை தூக்கத்திலேயே  இருந்தான் .

அதிகாலை  நேரத்தில் வண்டி ஓட்டத்தில்  எதோ வித்தியாசம் தெரிந்தது .   ட்ரெயினின் சத்தத்திலும்  மாற்றம் தெரிந்தது . 

ஐந்து நொடிகள் தான்…  தடார் என்று பெரிய சத்தம் கேட்டது .   மிதுன்  பயணித்துக் கொண்டிருந்த பெட்டி  பெரிய அதிர்வுடன் தண்டவாளத்தை விட்டு தடா தடாவென இறங்கி  அப்படியே சாய்ந்தது…   சாய  அதற்கு முன்னால் இருந்து நகர்ந்து வந்த பெட்டி கடும் சத்தத்துடன் இந்த பெட்டியில் மோதியது.   

குண்டு வெடித்தது போன்ற பெரிய சத்தத்துடன்  அன்று இடமே  ஒரே புகை மண்டலமாக ,    ஒரே அழுகுரல் ஓலமாக கேட்டது .   

மிதுன்  தான் படுத்திருந்த  இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு…  தலை கீழாக விழுந்த  ட்ரெயினின்  மேல் பக்கத்தில்   விழுந்து கிடந்தான் .    நல்ல வேளை  அவனுக்கு பெரிதாக அடி படவில்லை.

சுதாரித்துக்கொண்டு  எழுந்து தன்னைச் சுற்றிலும் பார்த்தவன்…  அங்கே அந்த  பெண் குழந்தையின் அப்பா  டிரெயின்  ஜன்னலில் வளைந்த கம்பிகளுக்கு நடுவில்  அவரது கால் மாட்டிக் கொண்டு அலறிக் கொண்டிருந்தார்.  அந்த பெண் குழந்தை  சீட்டுக்கு அடியில்  மாட்டிக் கொள்ள…  இன்னொரு இருக்கை   அவளை வெளியே வரமுடியாதவாறு நெருக்கி தடுத்து கொண்டிருந்தது. 

மிதுன் மெதுவாக  எழுந்து  அந்த இருக்கையை  நகர்த்தி  அந்த குழந்தையை  மெதுவாக வெளியே இழுத்தான்.   கை காலெல்லாம் சின்ன சின்ன காயங்கள்   இருக்க…    இப்போது அவன்  அந்த குழந்தையின் அப்பாவை மீட்கும்   முயற்சியில் இறங்கினான்.   அங்கே ஒடிந்து  கிடந்த  ஒரு கம்பியை எடுத்து  ஜன்னல்  கம்பியை    கொஞ்சம் கொஞ்சமாக வளைக்க அவர் மெதுவாக  காலை வெளிய எடுத்தார் .

அவர் கால் காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது .  அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு துணியை எடுத்து  அந்த காயத்தில் கட்டியவன் அவர்கள்  மூவரையும்  அப்படியே மெதுவாக  ட்ரெயினின் கதவு  அருகில் இழுத்துச் சென்று  மேற்புறமாக தூக்கி தரையில் இறக்கினான்.  அங்கே இருந்தவர்கள் ஓடி வந்து உதவினர் .

பெட்டிகள்  தண்டவாளத்தில் இருந்து  பத்து அடிகள் தள்ளி புரண்டு கிடக்க… அங்கங்கே   பெரும் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது .

யாரோ ஒருவர் சுதாரித்து கொண்டு விபத்து பற்றி போலீசுக்கு தெரிவித்தார்.   அந்த இடம்  பரபரப்பாக மாறியது .  அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலென்சுகள்  வரிசையாக வந்து சேர அடிபட்ட ஒவ்வொருவரையும் தூக்கி போட்டு கொண்டு   ஹாஸ்பிடலுக்கு  பறந்தது.

மிதுன்  அப்படியே தட்டு தடுமாறி நடந்து வந்தவன்…  அங்கே சிலர்  அடிபட்டவர்களிடமிருந்து  நகைகளையும் ,   பணத்தையும்  திருடிக் கொண்டு ஓடுவதை  பார்த்தான்.     இந்த நேரத்தில்  கூட சில மனிதர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வதை பார்த்து ஆத்திரமடைந்தவன்  அவர்களை  நோக்கி வேகமாக ஓட  அவர்கள்  சட்டெனெ ஓடி மறைந்து விட்டனர் .  

ஓடி வந்தவன் ஒரு இடத்தில் நின்று மூச்சு வாங்கியபடியே   அப்படியே திரும்பி பார்க்க…  அங்கே  தலையில் அடிபட்டு… ரத்தம் சொட்ட சொட்ட   கிடந்தவளை பார்த்து  அப்படியே அதிர்ச்சியில் அப்படியே மரமாகி நின்றான் .  

ஆம்  அது சுருதி…    தலையில் அடிபட்டு  ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள் . 

மிதனுக்கு  தலை கிறு கிறுவென்று சுத்த ஆரம்பித்தது ..   அப்படியே விழுந்து விட போனவன்   சுதாரித்துக்கொண்டு..  “சுருதி”   என்று கத்திக்கொண்டு  அவள் அருகில் சென்று  அவனைத் தூக்கினான் .   அவள்  அப்படியே  துவண்டு விழ  அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் நோக்கி ஓடினான் .

EPISODE 24

EPISODE 24

ஆம்புலன்ஸ் உள்ளே ஸ்ருதியை கொண்டு சென்றதும் மருத்துவ பணியாளர்கள் பரபரப்பாக ஸ்ருதியை பரிசோதிக்க,  “சார் அவ தலையில அடி பட்டு ரத்தம் கொட்டுது சார் ,  ப்ளீஸ் சீக்கிரம் என்னன்னு பாருங்க” என்று கதறினான்.

ஸ்ருதிக்கு முதலில்  ஆக்சிஜன் மாஸ்க்   பொருத்தப்பட்டது. அவளது pulse துடிப்பு குறைந்து கொண்டே வர…  “இவங்கள   இங்க வச்சு பார்க்கிறது டேஞ்சர்,   எவ்வளவு சீக்கிரம் முடியுமோ டக்கென்று இவர்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க”  என்று டாக்டர் சொல்ல…

 “சார் ப்ளீஸ்… ப்ளீஸ் சீக்கிரம் பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிடலுக்கு போங்க” என்று மிதுன் கண்களில் நீருடன் பரபரத்தான்.

ஹாஸ்பிடலை நோக்கி ஆம்புலன்ஸ்  பறக்க ஆரம்பித்தது. 

அதிர்ச்சியில் பைத்தியம் பிடித்தவன் போல் அமர்ந்திருந்த  மிதுன்   “உன்னை  இப்படித்தான் பார்க்க வேண்டுமா”  என்று ஓவென்று அழுது கதறியவன், ஏனோ   தன் மீது தனக்கே  ஆத்திரம் வர தலைதலையாக  அடித்துக் கொண்டான் . 

மிதுனது கை ஸ்ருதியின் கையை இறுக்க பற்றியிருந்தது.  

உறவில்லையென்றாலும்… அவள் அவனது உயிரில்லையென்று ஆகிவிடுமா.

25 நிமிடத்தில்  ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடல் வந்தது .  தயாராக வைத்திருந்த ஸ்ட்ரெச்சரில்  வைத்து  வேகமாக ஆபரேஷன் அறைக்கு கொண்டு சென்றனர் .

மிதுனுக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை.   ஓ வென்று வாய் விட்டு கதறி அழுதவன்,   அப்படியே  இடிந்து போய்  அங்கிருந்து இருக்கையில் சரிந்தான். 

அரை மணி நேரம் கழித்து ஆபரேஷன் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர்… தலையில பெரிய அடிபட்டு இருக்கு …   இம்மீடியட்டா  ஆப்ரேஷன் பண்ணியாகணும்”  என்று  சொன்னார்.

“சார் என்ன வேணாலும் பண்ணுங்க எனக்கு ஸ்ருதி உயிரோடு வேணும்”  என்று  கதறிக்கொண்டே டாக்டரின் காலில் விழுந்து,

“சார் ப்ளீஸ் சார் எப்படியாவது என் ஸ்ருதியை காப்பாத்துங்க”  என்று துடிக்க,   

“சார்  இருங்க…  இருங்க  என்ன பண்றீங்க” ,   என்று டாக்டர் சொல்ல  ,  

“சார் சார் ப்ளீஸ்  சார்   ப்ளீஸ்”  என்று அழுகையை அடக்க முடியாமல் கதறினான் மிதுன்.

“சார் நிலைமையை புரிஞ்சுக்கோங்க,  அவங்களுக்கு தலையில ஹெவியா அடி பட்டிருக்கு,  முடிஞ்ச அளவுக்கு நாங்க முயற்சி செய்றோம்,  என்று சொன்ன டாக்டர்…

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்க,

படீரென்று நெஞ்சே வெடித்தது போல் இருந்தது மிதுனுக்கு, 

அவ என் ஸ்ருதி சார் , அவ என் உயிர் என்று உரிமையுடன்  இப்போது சொல்ல வாய் துடித்தாலும்… 

அந்த இடத்தில் தான் இப்போது இல்லை என்று மனதுக்குள் நினைத்த மிது்னுக்கு இப்போது முகமெல்லாம் துடித்தது , 

வார்த்தைகள் வரவில்லை, 

 தொண்டை அடைக்க “எனக்கு தெரிஞ்சவங்க சார்” என்று சொன்னான்.

உடனே டாக்டர் “ரத்த சம்மந்தம் உள்ளவங்க யாராவது கையெழுத்து போடணும் மிதுன்,

உடனே யாரையாவது வர சொல்லுங்க”  என்று சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர்.

இது என்ன நிலைமை… எல்லாமே அவள் தான் என்று வாழ்ந்த உறவு… இப்போது எதுவுமே இல்லை என்ற நிலை…  கொடுமையான தருணம் .

அப்போது நர்ஸ்  சுருதியின்  ஹேண்ட் பேக்  கொண்டு வந்து மிதுனிடம்  கொடுத்தார் .  சரி முதலில்  ஸ்ருதியின் கணவருக்கு சொல்லலாம்  என்று  அவளது பேக்கை திறந்து  ஏதாவது நம்பர் இருக்குமா  என்று தேடினான் . 

அவளது அப்பா  சத்தியசீலனின்  விசிட்டிங் கார்டு  தான் உள்ளே கிடந்தது .  அதை எடுத்து அதிலிருந்து நம்பருக்கு  போன் பண்ணினான்… 

“சார்…  மும்பையில் இருந்து சென்னை வரும் பொழுது  ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு…  அதுல உங்க பொண்ணுக்கு தலையில் அடிபட்டு  ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்…  கொஞ்சம் சீக்கிரம் வாங்க ,  என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் மிதுன் தான் யார் என்று கூறாமல் …

அப்படியே ஹரிஷுக்கும் ஷ்யாமுக்கும் தகவல் சொன்னான் .

டாக்டரும் நர்சுகளும்  பரபரப்பாக இயங்கினர் .  

ஆபரேஷன் தியேட்டர்…   கார்டியாக்  மானிட்டர் பொருத்தப்பட  அது சுருதியின்  இதய துடிப்பை ஸ்கிரீனில் காட்டிக் கொண்டிருந்தது .

இதயத்துடிப்பு  நார்மலா இல்லை என்று சொல்லப்பட்டதால்,  இதயத்திற்கு  ஷாக் கொடுத்து அதன் துடிப்பை நார்மலாக வைத்திருக்கும்  எந்திரமும் கூடவே  பொருத்தப்பட்டது .  

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து  வெளியே வந்த டாக்டர் மிதுனிடம்,  “கொஞ்சம் கிரிட்டிகளா இருக்கு…  ஹார்ட் பீட்  நார்மலா இல்ல .   அது பூஸ்ட் பண்றதுக்கு   மெஷின் வச்சிருக்கோம்… பார்க்கலாம்” என்று சொல்ல மிதுனுக்கு கண்கள் இருண்டு வர அப்படியே  சரிந்தான் .

அவனை அப்படியே தாங்கி பிடித்த மருத்துவமனை ஊழியர்கள்…

 “சார் நீங்க இவ்வளவு வீக்கா இருந்தா  என்ன பண்ண முடியும் . முதல்ல நீங்க கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்  அப்பதான் இதெல்லாம் ஃபேஸ் பண்ண முடியும்”  என்று சொல்ல ,

அடுத்தடுத்து  ட்ரெயின் ஆக்சிடென்ட்  ஆனவர்களை ஆம்புலன்சுகள்   மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்க   மருத்துவமனை  மிகவும் பரபரப்பானது.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது .   மிதுன்   பிரம்மை பிடித்தவன் போல  அவர் இருந்தான்

‘டம்… டம்’  என்று துடித்துக் கொண்டிருந்த  அவனது  இதயத்தின் சத்தம் அவன்  காதில் விழுந்தது .

சில மணி நேரங்கள் கழித்து…

  ஸ்ருதியின் அப்பா அம்மாவும்  ஹாஸ்பிடல்லை  நெருங்கிக் கொண்டிருந்தனர் .  திடீரென்று காரில்  எதோ பிரச்னை  ஏற்பட  கார் பிரேக் டவுன் ஆனது .  ஏற்கனவே பதட்டத்துடன் பதறிக்கொண்டு இருந்த சத்தியசீலன்    ‘கடவுளே  இது என்ன சோதனை’ என்று காரை விட்டு இறங்கி  தலையில் கை வைத்து  அமர்ந்து விட்டார் .

அப்போது   அந்த வழியாக மற்றொரு  கார்  சீறிக்   கொண்டு வந்தது .  இவர்களை தாண்டி  சில அடி தூரம் சென்ற கார்  ‘கிரீச்’  என்ற சத்தத்துடன் நின்றது .

அதிலிருந்து  ஹரிஷும் ஷ்யாமும்  அவர்களை நோக்கி ஓடிவந்தனர் . 

இந்த இடத்தில அவர்களை  பார்த்த  சத்தியசீலன்  , ” என்னப்பா நீங்க  இங்க”  என்று அர்த்தத்துடன் அவர்களை பார்க்க ,  

“அங்கிள் முதல்ல கார்ல ஏறுங்க ,  போற வழியில பேசிக்கலாம்”  என்று சொன்னான்  ஷியாம் .

அனைவரும் காரில் ஏறிக் கொள்ள  ஹரிஷ் காரை விரட்டினான்.  சத்தியசீலன்   கேள்வியாக  ஷ்யாமைப்  பார்க்க ,  இப்போது ஷ்யாம்  மிதுனுக்கு நடந்தது  ஒன்று விடாமல்  அவரிடம் சொன்னான் .

மிதுன் உயிருடன் இருக்கிறான்  என்று   ஷியாம் சொன்னதை கேட்டதும் நெஞ்சை பிடித்துக் கொண்டு  அப்படியே அமர்ந்து விட்டார் . 

“என்னப்பா சொல்றீங்க,   மிதுன்  உயிரோடு இருக்கிறானா ? …  நீங்களாவது எங்களை தேடி வந்து இருக்கலாம்லப்பா”  என்று அவர் கேட்டார் .

“அங்கிள்   சுருதிக்கு  கல்யாணம்னு  கேள்விப்பட்டோம்.   அதுக்கப்புறம்  நாங்க  இடையில வந்து  குழப்பத்தை  விளைவிக்க விரும்பல .  அதை  மிதுனும்  வேணாம்னு  சொல்லிட்டான் ” என்று சொன்னான் ஷியாம் .

“என்னப்பா நீங்க இப்ப வந்து எல்லாத்தையும் சொல்றீங்களே…  ஸ்ருதியால  மிதுனை மறக்க முடியல அப்டீன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்… எங்க சுயநலத்துக்காக அவளை வேறு ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க எங்களுக்கு விருப்பம் இல்ல…”

“அந்த வாழ்க்கை அவளுக்கு காலம் பூராவும் மன உறுத்தலை தந்துக்கிட்டே இருக்கும்”.

“அதனால ஆண்டவன் விட்ட வழின்னு கல்யாணத்த நிறுத்திட்டு நாங்க எல்லோரும் பழைய ஆபீஸ்ல ஸ்ருதியை ரிசைன் பண்ண சொல்லிட்டு… மும்பையில இருக்கிற  ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஸ்ருதிக்கு  வேலை கிடைக்கவும்  நாங்க  எல்லோருமே  கொஞ்ச நாள் இங்கேயே  தங்கிடலாம்னு  மும்பைக்கே  வந்துட்டோம் ” என்றவர் …

கடைசிலே  மிதுனும்  அங்க தான் இருந்திருக்கான் .   விதி  இப்ப எப்படி இவங்க ரெண்டு பேரையும்  சந்திக்க  வச்சிருக்கு  பாத்தியா என்று கண்ணீர் விட்டார்  சத்தியசீலன்.

அதற்குள்  ஹாஸ்பிடல் வந்து விட , 

அனைவரும் பறந்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு உள்ளே ஓடினர் . 

அங்கே ஸ்ருதியின் ரத்தம் படிந்த சட்டையுடன் அமர்ந்திருந்தான் மிதுன்.

அனைவரும் மிதுனை நோக்கி அழுது கொண்டே ஓடி வந்தனர்.

ஸ்ருதியின் அப்பா ஓடி வந்தவர் அவனை கட்டி பிடித்து கதறி அழ தொடங்கினார். 

குழப்பத்துடன் தான் உயிரோடு இருப்பது அவருக்கு தெரியுமா என்று யோசித்தவன்… அவருக்கு பின்னால் வந்த ஹரிஷயும், ஷ்யாமயும் பார்த்ததும் புரிந்து கொண்டான்  …

அவரை தேற்றி  ஸ்ருதி இருந்த அறைக்கு அழைத்து சென்றான் .   nurse “ஒருத்தர் மட்டும் உள்ளே போங்க சார்” என்று சொல்ல ,  சத்தியசீலன் உள்ளே சென்றார் .

மிதுன் வெளியே காத்திருக்க அவன் அருகில் வந்த ஷியாம் மிதுனை பார்த்து ,

“டேய் மச்சி,  என்னடா ஆச்சு,  ஸ்ருதி எதாவது பேசினாளா” என்று கேட்க,

“இல்லடா தலையில ஹெவியா அடி பட்டிருக்கு ,  நான் பார்க்கும் போது அடி பட்டு மயங்கி கிடந்தா… இங்க நான் தான் கொண்டு வந்து சேர்த்தேன்னு கூட அவளுக்கு தெரியாதுடா…  இன்னும் சீரியஸா தாண்டா இருக்கா ”  என்று சொன்னான்.

“மச்சி” என்று அழைத்தான் ஷியாம் ,

என்னடா  என்பது போல அவனை பார்க்க …

“மச்சி ஸ்ருதி கல்யாணம் பண்ணிக்கலடா  ”  என்று ஷியாம்  சொல்ல ,

அதிர்ச்சியில் தூக்கி வாரி போட்டது மிதுனுக்கு.   “என்னடா சொல்ற ”  என்று கேட்க

காரில் வரும் போது ஸ்ருதியின் அப்பா சொன்னதையெல்லாம் சொன்னான் ஷியாம்.

ஒரு இதயத்திற்கு எத்தனை வலி .  

” என்னடா சொல்ற” என்றவன் ,

‘என் ஸ்ருதி எனக்காக கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டாளா’  என்று நினைத்தவனுக்கு அப்படியே இதயம்   கசக்கி பிழிந்தது .

அங்கே அறைக்குள் சென்ற ஸ்ருதியின் அப்பா சத்தியசீலன் ஸ்ருதி இருந்த நிலையை பார்த்து ஓவென கதறி அழுது கொண்டே ,  

ஐயோ என்னை பெத்தவளே, என் சாமி உன்னை இப்படி பாக்கவா இந்த பாவி இங்க வந்தேன்,  ஐயோ என்று தலையில் கை வைத்து அழுதார் .

“ஆண்டவா என் குழந்தைக்கு ஏன் இத்தனை கஷ்டத்த கொடுக்கற, உனக்கு வேண்ணா என் உயிரை  எடுத்துக்க… என் பொண்ண என்கிட்டே கொடுத்திரு” என்று கதறினார்.  அதை பார்க்க அங்கிருந்த நர்ஸ்களுக்கு கண் கலங்கியது .  

அப்போது கார்டியாக் ஸ்கிரீனில் எண்கள் கண்ட படி ஏறி இறங்க , pulse ரேட்டும் குறைய பதட்டமான நர்ஸ்கள் டாக்டரை அழைத்து வர ஓடினர் . ஸ்ருதிக்கு நெஞ்சு மேலும் கீழும் வேகமாக போய் வந்தது . 

அதை பார்க்க முடியாமல் சத்யசீலன் ஐயோ என்று அலற, அதை பார்த்த மிதுன் வேகமாக உள்ளே ஓடினான் .

அதற்குள் டாக்டர் வந்து பரிசோதனை செய்து கொண்டிருக்க…  ஸ்ருதியின் நெஞ்சுமூச்சை ஆழமாக இழுத்து விட்டது …

அதை பார்த்து…  “ஸ்ருதி என்னை விட்டுட்டு போயிடாதடி”  என்று அழுது கொண்டே அவள் அருகில் வந்த மிதுன்…

மெல்ல கட்டிலில் கை ஊன்றி…  அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்றவன்… தொண்டை கம்ம வார்த்தை வராமல் “ஸ்ருதி” என்று அழைத்துக் கொண்டே….  என்னை விட்டுட்டு போயிடாத டி”  என்றபடியே அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட…

முத்தமிட்டவனின் உடல் திடீரென்று ‘சிலீர்…” என்று அதிர்ந்தது.  

அதிர்ச்சியுடன் நிமிர… அவனது கை… இறுகப் பிடிக்கப் பட்டிருந்தது ஸ்ருதியின் கையால்….

அப்படியே நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க….  அந்த பூ போன்ற மெல்லிய கண்கள் மெல்ல திறக்க…

அந்த பொன் போன்ற உதடுகளை திறந்து “மிதுன்…”  என்று அழைத்தாள்.

அதை கேட்ட மிதுனுக்கு அப்படியே பூமிக்கும் வானத்துக்கும் குதிக்க வேண்டும் போல இருந்தது….

“ஸ்ருதி… ஸ்ருதி என்னடி இப்படி பண்ணிட்ட” என்று அவள் கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதவன்… 

“டேய்” என்று ஸ்ருதி அழைக்க… 

“என்னடி” என்று கலங்கிய கண்களுடன் அவளை பார்க்க…

அவனை உயிரோடு பார்த்த எந்த அதிர்ச்சியும் இல்லாமல்… 

“நீ வருவேன்னு எனக்கு தெரியும்டா…

நான் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்டா… நீயும் என்னை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது…”  என்று  சிரிக்க…

“அடி கழுதை போதும் டி உன் விளையாட்டு”  என்று மெலிதாக அவளை அணைத்து கொள்ள…

அங்கே வந்த டாக்டர்…  கண்களில் நிறைந்த நீரை துடைத்து கொண்டு… 

“மிதுன் இந்த டிரீட்மென்ட் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே செஞ்சிருக்கலாம்” என்று சிரிக்க…

அங்கே அனைவரும் சந்தோஷத்தில் சிரிக்க…

 “உன்னை பார்த்த பின்பு நான்….”  பாடல் எங்கேயோ ஒலித்துக் கொண்டிருந்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured