Home UncategorizedMR.LOVER 10

MR.LOVER 10

by Layas Tamil Novel
190 views

கட்டாயம், இந்தக் கதையைச் சரிசெய்து, வீரா என்ற பெயரை சூர்யா என்றும், NAKSHATHRAA என்ற பெயரை நக்ஷத்ரா என்றும் மாற்றி, பிழைகளைச் சரிசெய்து தருகிறேன். நிறுத்தற்குறிகள், கமாக்கள், மேற்கோள் குறிகள் போன்ற அனைத்துப் பிழைகளையும் சரிசெய்து, வாசிக்க எளிதான வடிவில் வழங்கப்பட்டுள்ளது.


சூர்யா ஹாங்காங் செல்வதற்குக் ஃபிளைட் டிக்கெட்டைப் புக் செய்து, அதன் சாஃப்ட் காபியை சூர்யாவுக்கு ஷ்யாம் அனுப்பினான்.

தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ரசிகா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சூர்யாவின் ஃபோன் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் வந்ததும் தான் மொபைலை எடுத்துப் பார்த்தான்.

அதில் வந்திருந்த டிக்கெட் விவரங்களைப் படித்துவிட்டு, தன் அருகில் இருந்த விஷ்ணுவைப் பார்த்தவன், “காலைல மூணு மணிக்கு ஃபிளைட். பார்ட்டி முடிஞ்சு நம்ம வீட்டுக்குக் கிளம்ப எவ்வளவு நேரமாகும்னு தெரியாது. நீ அங்கிள்கிட்ட சொல்லி உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்குக் கொடுத்துவிடச் சொல்லிடு. பார்ட்டி முடிஞ்சதும் நீ என்கூடயே நேரா வீட்டுக்கு வந்திடு,” என்று விஷ்ணுவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொள்ள, விஷ்ணு காரை பார்ட்டி நடக்கும் இடத்திற்குக் கிளப்பினான்.

பார்ட்டி ஹாலில் அனைவருக்கும் முன்பாகவே வந்து, பார்ட்டி நடக்க ஏற்பாடுகளெல்லாம் சரியாக இருக்கிறதா என்று ரசிகா கவனித்துக்கொண்டிருந்தால். தனியாக ரசிகா சிரமப்படுவாள் என்று யாராவும், நக்ஷத்ராவும் நேரமே வந்துவிட்டனர். அவர்களைப் பார்த்ததும் குஷியாகி, அவர்களை நோக்கி ஓடியவள், “ஹேய் யாரா,” என்று சொல்லி அவளைக் கட்டிக்கொண்டு, “எவ்வளவு வருஷம் ஆச்சு என் புட்டுவைப் பார்த்து,” என்று சொல்லி யாராவைக் கட்டி அணைத்துக் கொஞ்சினாள்.

“ம்க்கும்… நாங்களும் இங்கேதான் இருக்கோம். என்னைப் பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு… எங்களையும் கொஞ்சலாம், கட்டியும் பிடிக்கலாம்,” என்றாள் நக்ஷத்ரா எங்கோ பார்த்தவாறு.

“உன்னையும் தான்டி என் நக்ஷத்ரா குட்டி,” என்று மற்றொரு கையால் நக்ஷத்ராவையும் இழுத்து அணைத்துக்கொண்டாள் ரசிகா.

யாராவும், நக்ஷத்ராவும் தான் விக்ரம் மீனு ஃப்ரெண்ட்ஸ் கேங்கில் கடைசியாகப் பிறந்த கடைக்குட்டிகள் என்பதால் இவர்கள் இருவருக்கும் எப்போதுமே அனைவரிடமும் செல்லம் அதிகம் தான். அதிலும் எல்லோரையும்விட மூத்தவள் என்பதால் ரசிகா அனைவரிடமும் காட்டும் அக்கறையைவிட, இவர்கள் இருவரிடமும் சற்று அக்கறையும், பாசமும் அதிகம் என்றே சொல்லலாம்.

“என்ன நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே வந்துட்டீங்க?” என்றாள் ரசிகா.

“நீ தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சீக்கிரமே வந்துட்டோம் ரசி,” என்றாள் நக்ஷத்ரா.

“அடடா! என் செல்லங்கள் ரெண்டு பேருக்கும் என் மேலதான் எவ்வளவு பாசம்!” என்றவள், இருவரையும் அழைத்துக்கொண்டு போய் ஒரு டேபிளில் அமரவைத்தாள். “நீங்க எனக்கு எந்த ஹெல்பையும் பண்ணாம இருந்தாலே இங்கே எல்லா வேலையும் ஒழுங்கா நடக்கும்,” என்று சொல்லி ரசிகா சிரித்தாள்.

“ரசி!” என்று சொல்லி அவள் தோளில் இருவரும் அடிக்க, “ஏய், நான் சும்மா கிண்டல் பண்ணினேன். எல்லா ஒர்க்கும் முடிஞ்சிருச்சு. எல்லாரும் வந்துட்டாலே பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணிடலாம்,” என்றாள் ரசிகா.

பின்பு இருவருக்கும் பேரரிடம் சொல்லி சாஃப்ட் ட்ரிங்க்ஸ் கொண்டுவரச் சொல்லிவிட்டு, அவர்களோடு அமர்ந்து யாரும் இன்னும் வராததால் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள் ரசிகா.

அப்போது வாசலில் ஜீப் சத்தம் கேட்டதும், இவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரசிகா ஆவலாக வாசல் பக்கம் பார்க்க… ஜீப்பிலிருந்து இறங்கி சத்யா மிருதியின் மகன் அர்ஜுன் ஹாலுக்குள் வந்துகொண்டிருந்தான். அவன் அருகில், அர்ஜுனின் கையைப் பிடித்து ஆட்டி ஆட்டி விளையாடிக்கொண்டே அவன் தங்கை ரோஜாவும் கூட வந்தாள். ரோஜாவைப் பார்த்ததும் ரசிகாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

ரசிகா தங்களை நோக்கி வருவதைப் பார்த்த ரோஜா, அர்ஜுனின் கையை விட்டுவிட்டு நேராக ரசிகாவிடம் வர… “ஹாய் ரசி அண்ணி, எப்படி இருக்கீங்க? எல்லாரும் வந்தாச்சா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே எட்டிப் பார்க்க… அங்கே தூரத்திலிருந்து வாசலைப் பார்த்த யாராவும், நக்ஷத்ராவும் ரோஜாவைப் பார்த்துக் கைகாட்ட… ரசிகாவிடம் சொல்லிக்கொண்டு நேராக அவர்களை நோக்கி ஓடினாள் ரோஜா.

ரோஜா உள்ளே செல்வதைப் பார்த்துச் சிரித்த ரசிகா, அர்ஜுனைப் பார்த்து, “உள்ளே வா அர்ஜுன்,” என்று அழைத்தாள்.

“இல்லை. நான் டியூட்டியில இருக்கேன். ரோஜா அடம் பண்ணி அவளை ட்ராப் பண்ண என்னைக் கூட்டிட்டு வந்துட்டா. எனக்கு இன்னும் ஒரு ஒன் ஹவர் வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்திடுறேன். நீங்க ரோஜாவைப் பார்த்துக்கோங்க,” என்றான் அர்ஜுன். அவனைவிட மூன்று வயது மூத்தவள் என்பதால் அவளுக்கு இந்த மரியாதை.

“சரி அர்ஜுன், நீ டியூட்டி முடிச்சுட்டு சீக்கிரம் வந்திடு,” என்றவள் திரும்பி உள்ளே செல்லப் போக, வெளியிலிருந்தவாறே யாராவையும், நக்ஷத்ராவையும் பார்த்துக் கையாட்டியவன், தன் வாட்சைக் காட்டி நேரம் ஆகிவிட்டது என்று அங்கிருந்து கிளம்பினான்.

யாராவும், நக்ஷத்ராவும் அர்ஜுனுக்குக் கைகாட்டிவிட்டு ரோஜாவிடம் திரும்பியவர்கள், “ஏன் ரோஜா, உன் அண்ணன் எப்பவும் இப்படியே பரபரப்பாத்தான் இருப்பானா? எங்கே பார்த்தாலும், எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு ஒர்க்குல ஷெட்யூலா இருக்கான்,” என்றாள் யாரா.

“ஆமா. அவன் எப்போ வீட்டுக்கு வர்றான், வெளியே போறான்னு யாருக்கும் தெரியாது. அப்படியே வீட்டுல இருந்தாலும் அவன் ரூமை விட்டே வெளிய வரது கிடையாது. அவன் ரூமை அவனேதான் கிளீன் பண்ணுவான். வேற யாரையும் உள்ளே விடமாட்டான். நானும் அம்மாவும் மாடியில இருக்க அவன் ரூம் பக்கம் போனாக்கூட, என்னவோ அங்கே இருந்து திருட வர்ற மாதிரியே என்னையும் என் அம்மாவையும் நிக்கவெச்சு கேள்வி கேட்டு, என்னங்க ரெண்டு பேரையும் கொல்லுவான்,” என்று சொல்லிச் சிரித்த ரோஜா, “என் அண்ணன் எப்பவுமே பிசியாவேதான் இருப்பான். அது, நான் இங்கே அவனை அழைத்து வருவதற்கு நான் அவன்கிட்ட, அம்மா அப்பாவுக்குச் சொல்லி ரெக்கமெண்ட் வாங்கி, கெஞ்சி கூத்தாடி தான் அழைச்சிட்டு வந்தேன்,” என்றாள்.

“சரி சரி விடு. அவன் வொர்க் அப்படி இருக்குமோ என்னவோ. அவன் தான் இப்போ ஐ.பி.எஸ் வேற ஆகிட்டானே. அதனால அவனுக்கு எப்பவும் ஏதாவது ஒரு வேலை இருந்திட்டேதான் இருக்கும்,” என்று சொல்லிக்கொண்டே ரசிகா அவர்களோடு வந்து அமர்ந்தாள்.

“ஆமா ஆமா அண்ணி, நீங்க சொல்றதும் சரிதான். ஆனா எவ்வளவு பிஸியா இருந்தாலும், அவன் ரூமை கிளீன் பண்றதுல இருந்து உள்ள எல்லா வேலையும் அவன் மட்டும்தான் செய்வான் தெரியுமா ரசிகா அண்ணி. என் அம்மா கூட இவன் பண்றதெல்லாம் பார்த்துட்டு, ‘நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு உன் பொண்டாட்டியையாவது ஒரு ரூமுக்குள்ள விடுவியா, இல்ல அவளையும் எங்கள மாதிரியே வெளியே விட்டு கதவு சாத்திடுவியா’ என்று சொல்லி கிண்டல் செய்வார்,” என்று மிருதி சொன்னதைச் சொல்லி ரோஜா சிரிக்க…

“சரி விடு, நாங்க எல்லாம் ஒரு நாள் உன் வீட்டுக்கு வந்து உன் அண்ணன் அப்படி அந்த ரூம்ல என்ன வெச்சிருக்கான்னு உள்ள போய் பார்த்துடுவோம்,” என்றாள் ரசிகா.

“அதுதான் முடியாதே. என் அண்ணன் தான் தினமும் ரூமைப் பூட்டி, சாவியை கையோட கொண்டு போய்விடுவானே,” என்றாள் ரோஜா.

“என்னடி ரோஜா சொல்ற? அப்படியே அந்த ரூம்ல என்னடி இருக்கு? நீ சொல்றதெல்லாம் கேட்டா அந்த ரூமுக்குள்ள என்ன இருக்குன்னு எங்க எல்லாருக்குமே பார்க்கணும் போல ஆசையா இருக்கே,” என்றாள் யாரா.

“எனக்கும் தெரியலையே. அப்படி அந்த ரூமுக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்க யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ,” என்று ரோஜா சொல்லிக்கொண்டு இருக்க…

அப்போது பார்ட்டிக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். முதலில் வாமினி குணாவின் மகள் ஜீயாவும், அவளுடன் கண்ணன், ஸ்ரேயாவின் மகள்கள் அன்வியும், திருதியும் சேர்ந்து வந்தனர். பெண்கள் கேங்கில் முக்கால்வாசி பேர் வந்திருக்க, ஆண்கள் இன்னும் யாருமே வரவில்லை. அர்ஜுனும் வந்தவன் வாசலிலேயே கிளம்பியிருக்க… அங்கே வெறும் பெண்கள் கூட்டம் மட்டும்தான் இருந்தது.

“எங்கடி நம்ம பசங்க யாரையுமே இன்னும் காணும்?” என்று ரசிகா வாசலைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்க…

“ஹாய் ரசி!” என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான் ரிஷி.

“இதோ சொல்லி முடியல, பார்த்தேன்,” என்று சொன்னதும், “நாக்கு தொங்க போட்டுட்டு என் அண்ணா வர்றான் பாரு,” என்று நக்ஷத்ரா ரிஷியைக் காட்டிச் சொல்ல…

“ஏய் என்னடி? என்னைப் பார்த்து ஏதோ இவங்ககிட்ட சொல்லிட்டு இருந்த?” என்று ரிஷி வந்து பெண்களுக்கு நடுவில் அமர்ந்துகொள்ள… “ஒன்னும் இல்லண்ணா. உன்னைப்பத்தி ரொம்ப பெருமையா இவங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்,” என்றாள் நக்ஷத்ரா.

ரிஷி சிரித்தபடியே, “எங்க பார்ட்டியில ஒரே பூக்கள் கூட்டம் மட்டும்தான் இருக்கு. அதை மொய்க்கிற வண்டுகளை இன்னும் யாரையுமே காணோமே. நான்தான் முதலாவதாக வந்திருப்பேன் போல,” என்றான். பெண்கள் அனைவரையும் ‘பூக்கள்’ என்றும், அவர்களின் பின்னால் அலையும் ஆண்கள் அனைவரையும் ‘வண்டுகள்’ என்றும் சொல்லி கிண்டல் செய்தான்.

அவன் பேசுவதைக் கேட்ட ரசிகா, “இப்படிப் பேசிப்பேசிதான் போற இடத்துல எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பண்ணி ஊர் சுத்திக்கிட்டு இருந்தியாடா?” என்று அவன் காதைப் பிடித்துத் திருக…

“ஏய் ரசி, நீயும் என்ன எல்லார் மாதிரியும் என்னைக் கேட்கிற? உனக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும் தானே? நான் அப்படியெல்லாம் எந்தப் பெண்ணையும் கரெக்ட் பண்ற நோக்கத்தோட பின்னாடி இதுவரைக்கும் சுத்துனது கிடையாது. என் பின்னாடி சுத்துறவங்க தான் அதிகம். என்கிட்ட வந்து ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருக்க அவங்களே விரும்புறபோது, நான் ஏன் வேண்டாம்னு சொல்லணும்? நான் ஊர் சுற்றி வர்றேன், அவங்க என்னைச் சுத்தி வர்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்,” என்று சொல்லி சிரித்தான் ரிஷி.

அப்போது பூமிகா விஷாலின் மகன் துருவும், அவனுடன் ராணா, வம்சிகாவின் மகனும், ரசிகாவின் தம்பியுமான கிருஷ்ணாவும் ஏதோ முக்கியமான விஷயமாகப் பேசிக்கொண்டே பார்ட்டிகளுக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்த பெண்கள் அனைவரும், “இவங்க ரெண்டு பேரும் எதுக்கு ரசி இந்தப் பார்ட்டிக்குக் கூப்பிட்டு இருக்க? அந்த துருவ் வந்தா, கட்சி மீட்டிங்ல பேசுற மாதிரியே இங்கேயும் பேசிக்கிட்டு இருப்பான்,” என்று அலுத்துக்கொண்ட அன்வி, “உன் தம்பி கிருஷ்ணா வேலைன்னு எங்க வந்தாலும் அதைப் பத்தித்தான் பேசிட்டு இருப்பான். ஒரு இடத்துக்கு வந்தோமா, அந்த இடத்துல என்ன நடக்குதோ, அதுகூட மிங்கிள் ஆகுறது எதுவுமே இவங்க ரெண்டு பேருக்கும் கிடையாது,” என்று அலுத்துக்கொண்டாள்.

“ஏய், நீதான்டி துருவ் பேசுறதை ரொம்ப அலுத்துக்கிற. ஆனா சென்டர்ல கவர்மெண்ட்ல ஒரு மினிஸ்டரா இருந்துட்டு, அவன் வாயைத் திறந்து எதைப் பேசினாலும் அது சென்சேஷனா ஆகுது. அவன் பேசுறதைக் கேட்குறதுக்காகவே இப்போ இருக்க இளசுகள் எல்லாம் எவ்வளவு ஆர்வமா இருக்காங்கன்னு தெரியுமா? ஆனா உனக்கு மட்டும் ஏன் அவனைக் கண்டாலே ஆக மாட்டேங்குது?” என்றாள் ரசிகா.

“அதுதான் ரசி, எனக்கும் தெரிய மாட்டேங்குது. இவனைக் கண்டால் மட்டும் உள்ளுக்குள்ள என்னவோ கடுப்பாவே இருக்கு,” என்றாள் அன்வி.

“சரி சரி, அவங்க ரெண்டு பேரும் நம்மகிட்டதான் வர்றாங்க. எதுவும் பேசாம அமைதியா இருங்க,” என்று சொன்ன ரசிகா, துருவையும், கிருஷ்ணாவையும் அழைத்தவள், ரிஷியைப் பார்க்க… ரிஷி அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு, ஆண்களுக்காக இருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றான்.

அவர்கள் இருவரையும் தொடர்ந்து நித்தியும், வினுவும் ஷூட்டிங் முடித்துவிட்டு உள்ளே வர… நித்தி நேராகச் சென்று தங்கள் கேங்குடன் ஐக்கியமாகிவிட… “இங்கே வர்ற வரைக்கும் என்னையே அட்ட மாதிரி ஒட்டிக்கிட்டு வந்தா, இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்ததும் என்னை அப்படியே அம்புன்னு விட்டுட்டுப் போற பாரு,” என்று வினு சொல்லிச் சிரிக்க… “விடு ‘V’. அவளைப் பற்றி தான் உனக்கு நல்லாவே தெரியுமே?” என்றவள், ரிஷி இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தாள்.

வினுவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்க, அவள் எதிரே, “ஈ…” என்று பல்லைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான் ஆர்யா. ரசிகாவின் முன்பு பல்லைக் காட்டிக்கொண்டு ஆர்யா நின்றிருந்தாலும், அவன் பார்வை எல்லாம் அவளைத் தாண்டி இருந்த பெண்கள் கூட்டத்தில் தான் இருந்தது. அதைக் கவனித்த ரசிகா, “உன்னைத் திருத்தவே முடியாதுடா. அவனுங்க எல்லாம் அங்கே இருக்கான்னு பாரு. அவங்க கூட போய் ஜாயின் பண்ணிக்க,” என்று சொல்ல…

“அங்கே போனா ஒரே போரா இருக்கும். நான் உங்க கூட வர்றேன்,” என்று சொல்லி அவளைத் தாண்டி பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லப் போக… அவன் நெஞ்சில் கை வைத்து அவனை இழுத்துத் தன் முன்னால் நிற்க வைத்த ரசிகா, “ஒழுங்கா அங்கே ஓடிடு, இல்லைன்னா ஷாமுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன், ஓகேவா?” என்று ஆர்யாவை மிரட்ட…

“என் அப்பாவுக்குத் தானே? கூப்பிடு கூப்பிட்டுக்கோ. இந்தா நானே ஃபோன் பண்ணி தர்றேன் பேசு,” தன் மொபைலை எடுத்து ரசிகாவின் கையில் திணித்துவிட்டு, பெண்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றான் ஆர்யா.

“இவனைத் திருத்தவே முடியாது,” என்று தலையில் அடித்துக்கொண்ட ரசிகா, அவனுடன் பின்னால் செல்ல… “ஹலோ கேர்ள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு,” என்று சொல்லிக்கொண்டே ஆர்யா அவர்களுடன் கலந்து கொள்ள…

“டேய் வாடா! எங்க அண்ணனுக்கு பி.ஏ. நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள் ஆச்சு. நீ என்னை பார்க்க ஒரு தடவை கூட வரவில்லை,” என்று யாரா ஆர்யாவைத் திட்ட…

“ஆமா ஆமா! உன் வீட்டுக்கு வந்து அப்படியே சாவகாசமா உட்கார்ந்து டீ, காபி குடிச்சிட்டு பேசுற மாதிரியா வேலைய நான் செஞ்சுட்டு இருக்கேன்? உன் அண்ணன் எந்த நேரத்துல எந்த மூடுல இருப்பான் என்று எனக்கு எப்படி தெரியும்? அவனைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல எங்கே நான் வந்து உன்னைப் பார்க்கிறது? மெதுவா வந்து பார்க்கலாம்னு நினைத்தேன். அதுதான் இங்கே இப்ப மீட் பண்ணிட்டேனே,” என்றான் ஆர்யா.

“சரி சரி, இன்னும் ரெண்டு மூணு பேர்தான் பார்ட்டிக்கு வர வேண்டி இருக்கு. அவங்க எல்லாம் எப்பவும் போல கடைசி நேரத்துல வருவாங்க. நம்ம பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றாள் யாரா.

“அஃப்கோர்ஸ் யாரா பேபி… அதுக்காகத்தானே எப்போ ரசிகா கூப்பிட்டு பார்ட்டி இருக்குன்னு சொன்னாங்களோ அப்போ இருந்தே என் பல்லுல பச்சைத் தண்ணி கூட படாம, இங்க கொடுக்கிற தண்ணீர் குடிக்கணும் என்பதற்காகத்தானே நான் வந்திருக்கேன்,” என்று ஆர்யா மது குடிப்பது பற்றிப் பேச…

ரசிகா அவனைப் பார்த்துச் சிரித்தவாறு, இந்தப் பார்ட்டிக்காக ஏற்பாடு செய்திருந்த டி.ஜே-வை திரும்பிப் பார்க்க… இவ்வளவு நேரம் மெல்லிய இசையை இந்த அறை முழுவதும் பரவவிட்டிருந்த டி.ஜே-க்கள், ரசிகா கண்ணைக் காட்டியதும், இளசுகளுக்குத் தகுந்ததுபோல இந்த ஹாலில் அதிரும்படியான பாடல்களை ஒலிக்க ஆரம்பித்தனர்.

பாட்டு ஒலிக்க ஆரம்பித்ததும், பேசிக்கொண்டிருந்த அவர்கள், “இனி சீரியஸாக பேசி பிரயோஜனம் இல்லை, பார்ட்டியை என்ஜாய் செய்யலாம்,” என்று முடிவெடுத்துவிட்டு எழுந்து ஆடத் தொடங்க, பெண்களும் எழுந்து அவர்களோடு சேர்ந்து பார்ட்டியை என்ஜாய் செய்ய ஆரம்பித்தனர்.

பெண்கள் எல்லாம் ஒருபுறமும், ஆண்கள் எல்லாம் மறுபுறமும் என்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், பின்பு அனைவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் போல மிகவும் நெருக்கமாகப் பழகிக்கொண்டு வருவதால், ஒருவருக்கொருவர் வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சேர்ந்து நடனம் ஆடுவதும், மது குடிப்பவர்கள் மது குடித்துவிட்டு என்ஜாய் செய்வதும், சிலர் அதெல்லாம் இல்லாமலேயே பார்ட்டியை அனுபவித்துக் கொண்டும் இருந்தனர்.

இவர்கள் எல்லாம் ஆடிக்கொண்டிருக்க, நக்ஷத்ரா மட்டும் அவர்களோடு சேர்ந்து ஆடாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தாள். அவளிடம் சென்று யாரா, “ஏண்டி, நீ மட்டும் பார்ட்டியில் கலந்துக்காம ஓரமா ஒதுங்கி நிக்கிற?” என்று கேட்டாள்.

“எனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா? நீங்க எல்லாரும் இங்கே வருவீங்க, உங்கள எல்லாரையும் பார்க்கிறதுக்காகத்தான் நான் இந்த பார்ட்டிக்கு வந்தேன். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. நான் இங்கிருந்தபடியே உங்களைப் பார்த்துட்டே நானும் என்ஜாய் பண்றேன்,” என்றாள் நக்ஷத்ரா.

“சரி, தனியா இருக்க போர் அடிச்சா என்னைக் கூப்பிடு, நான் வர்றேன்,” என்று சொல்லிவிட்டு யாரா சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள… நக்ஷத்ரா அவர்களையெல்லாம் பார்த்துக் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தி என்ஜாய் செய்துகொண்டிருந்தாள்.

பார்ட்டி ஆரம்பித்து வெகுநேரம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும்கூட உணவுகூட யாரும் சாப்பிட ஆரம்பித்திருக்கவில்லை. ஆளுக்கு ஒருபுறம் டான்ஸ் ஆடவும், மது அருந்தவும், உணவுகளை உண்ணவும் என அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

அந்த ஹால் கிட்டத்தட்ட ஒரு 30 பேர் மட்டுமே இருக்கும் அளவு அழகான ஹாலாகத்தான் ரசிகா ஏற்பாடு செய்திருந்தாள். நண்பர்கள் கூட்டமே அந்த ஹாலை நிறைந்து இருந்தது. அனைவரும் ஸ்டேஜுக்கு நடுவில் ஆடிக்கொண்டிருந்ததால், அந்த அறையில் இருந்த மொத்த விளக்கின் வெளிச்சமும் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீது பரவி இருந்தது. அந்த இடத்தைத்தவிர, அந்த ஹாலில் வேறு எங்குமே துளியும் வெளிச்சம் இல்லை. முழுவதும் இருட்டாகத்தான் இருந்தது.

நக்ஷத்ரா அமர்ந்திருந்த இடத்தில் லேசாகத்தான் வெளிச்சம் இருந்தது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு நக்ஷத்ரா அமர்ந்திருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் நக்ஷத்ரா இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், ஸ்டேஜில் ஆடிக்கொண்டிருக்கும் அனைவரையும் நன்றாக அவளுக்கு அந்த இருட்டிலும் தெரிந்தது.

நக்ஷத்ரா தன் கையில் இருந்த கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபடி, அந்த டேபிளின் உயரத்திற்குத் தகுந்தாற்போல் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவள், இவர்களெல்லாம் ஆடுவதைப் பார்த்து, இவளும் சந்தோஷமாகச் சேரில் இருந்தபடியே கை, கால்களை ஆட்டிக்கொண்டிருக்க… சேர் மிகவும் உயரமாக இருந்ததாலும், அவள் அதன் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்ததாலும், அந்தச் சேர் பேலன்ஸ் தாங்காமல் ஒருபுறமாகச் சாய… இதைச் சற்றும் எதிர்பாராத நக்ஷத்ரா அந்தச் சேருடன் கீழே விழப்போக… இப்போது ஒரு கட்டுமஸ்தான கரம் அவள் இடையை வளைத்துப் பிடித்து, நக்ஷத்ராவை கீழே விழாமல், அமர்ந்திருந்த சேரிலிருந்து தூக்கியது.

முதலில் தான் கீழே விழாமல் தப்பித்துவிட்டோம் என்று நிம்மதி அடைந்தவள், அதன் பிறகுதான் உணர்ந்தாள், தன் கால்கள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் இருப்பதை. அவளை யாரோ இடையோடு சேர்த்து அப்படியே காற்றில் தூக்கிப் பிடித்து இருக்க… அது யார் என்று அவன் கையில் இருந்து நிமிர்ந்து பார்க்க… அந்த அறை இருட்டிலும் அவளைத் தூக்கியவனின் கண்கள் மட்டும் தெரிய, “அந்தக் கண்ணை இதற்கு முன்னால் எங்கோ பார்த்தோமே,” என்று யோசனையோடு தன் பச்சைக் கண்ணை உருட்டியவாறு, நக்ஷத்ரா நன்றாக அந்தக் கண்ணை உற்றுப் பார்க்க… தன்னைத் தூக்கி உடலோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக்கொண்டு நின்றவனைப் பார்த்த நக்ஷத்ராவுக்கு அப்படியே அதிர்ச்சியாகிப் போனது.

தன் கண்களை அதிர்ச்சியில் அகல விரித்தபடி, தன்னைத் தூக்கியவனின் கண்களையே நக்ஷத்ரா பார்த்துக்கொண்டிருக்க… “என்ன நக்ஷத்ரா அப்படி பார்க்கிற? இதுக்கு முன்னாடி நீ என்னைப் பார்த்ததே இல்லையா?” என்று கேட்டு, ஒரு முகம் இருட்டிலிருந்து லேசாக அவள் முகத்திற்கு அருகில் பரவியிருந்த வெளிச்சத்திற்குத் தன் முகத்தைக் கொண்டுவர… அவ்வளவுதான், நக்ஷத்ரா அப்படியே தன் அருகில் முகத்தை நெருங்கிக்கொண்டு வந்திருந்தவனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள்.

You may also like

1 comment

Mehala August 25, 2025 - 4:30 pm

Super super super super super super super

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured