EPISODE 28
பூமிகா லட்சுமியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல அவர்கள் இருவரும் செல்வதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரு கண்கள் வேறு யாரும் இல்லை நம்ம கார்த்திக் தாங்க.
லட்சுமி மேல் அப்படி என்னதான் அவனுக்கு பொறாமையோ…. தெரியலை.லட்சுமி வெளிய வந்தா மட்டும் எல்லார்கிட்டயும் அவ்வளவு நல்லா பேசுற இவ கிட்டயும் எல்லாரும் நல்லா ஒட்டிக்கிறாங்க…
ஆனா என்கிட்ட மட்டும் எப்பவுமே சரியா அவ பேசுறது இல்ல எல்லார்கிட்டயும் எவ்வளவு கலகலன்னு பேசுற இப்ப பார்த்த இந்த பூமிகா கிட்ட கூட சட்டுனு ஒட்டிக்கிட்டா.
ஆனால் நான் பார்த்தா மட்டும் முகத்தை ஊர்ருனு வெச்சுகிரா… என் உருவம் ஒருவேளை அவளுக்கு அசிங்கமா தெரியுதோ அதனால் தான் என்கிட்ட அவ நெருங்கி பேச மாட்டேங்கிறாளோ கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட என்கிட்ட ஃப்ரெண்ட்லியா இவ்ளோ நல்லா பேசினா ஆனா கல்யாணம் ஆனதுக்கப்புறம் என்கிட்டே அவ சரியாவே முகம் கொடுத்து பேசுவதே இல்லை என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படிங்க அவ பேசாம இருப்பா நம்ம. ஹீரோ தானே அவளோட பாஸ்!! அவளோட லவ்வர்!! ஆனா இப்ப புருஷன் ஆயிட்டான் புருஷன் ஆனாலும் ஆனான் அந்த பொண்ணு போட்டு இவ்ளோ டார்ச்சர் பண்ணினா லட்சுமி எப்படி இவன்கிட்ட சந்தோஷமா பேசுவா.
முதல்ல கார்த்திக் லட்சுமி கிட்ட சந்தோசமா பேசினா தானே நம்ம லக்ஷ்மியும் நம்ம ஹீரோ கிட்ட பேசுவாங்க இதெல்லாம் நம்ம ஹீரோ சார்க்கு தெரியாது இவர் பண்ற தப்பு எல்லாம் அவருக்கு கண்ணுக்கு தெரிகிறதே இல்ல ஆனா நம்ம லக்ஷ்மி மட்டும் எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டு இருக்காரு இல்லையா ஃபிரண்ட்ஸ்.
பூமிகாவும் லட்சுமியும் உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்த அருணாச்சலம். முதல் இருவரும் உள்ளே செல்வதை உறுதி செய்து கொண்ட பின் வெங்கடாஜலத்தை பார்த்து ஏன் வெங்கடாச்சலம் நம்ம பிரண்டு வேத்தாசலம் பொண்ணு சங்கவியத்தானே உன் பையன் கார்த்திக் இருக்கு கல்யாணம் செய்து வைக்கிறதா இருந்துச்சு.
அப்புறம் எப்படி திடீர்னு கடைசி நேரத்துல கல்யாணம் பொண்ணு மாறிச்சு எதுவும் பிரச்சனையா அவனுக்கு நான் போன் பண்ணி கேட்டா அவனும் எதுவும் பேசுறதா இல்ல என்கிட்ட நேரில் வந்து எல்லாம் பேசுகிறேன் என்று சொல்லி போன வச்சுட்டான்டா எதுவும் பிரச்சனையே அந்த பொண்ணுனால இல்ல உங்களால எதுவும் பிரச்சனையா என்று கேட்க.
அதுவரை சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த அனைவரும் சங்கவியின் பெயரை கேட்டதும் அனைவரின் முகமும் மாறிவிட அதை கவனித்த அருணாச்சலம் ஏண்டா நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா ஏன் உங்க எல்லாரும் முகமும் சட்டுன்னு இப்படி மாறிடுச்சு அதுவும் சங்கவி பெயரை சொன்னதும் என்று கேட்க.
ஏன் கேக்குற அருணாச்சலம் நீ மட்டும் அங்க கல்யாணத்தன்று இருந்து இருந்தால் அந்த வேத்தாசலத்தை நீயே நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்ப.
அவன் என்னோட பிரண்டு என்று சொல்லி உரிமையாதானடா அவன் பொண்ணு என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு கேட்ட அப்போ அவன் சொன்னதும் நான் சரின்னு சொல்லி சம்மதம் சொன்னேன்.
ஆனா அவனோட நெனப்பே வேற மாதிரி இருந்திருக்கு என்று கூறி கல்யாணத்து அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் வெங்கடாசலம் கூற இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு வேதாச்சலத்தின் மீது கோபமே வந்துவிட்டது.
என்னடா சொல்ற வேதாச்சலம் இப்படிப்பட்டவனா இத நான் எதிர்பார்க்கவே இல்லையே அவனும் இப்படி எல்லாம் நடந்துக்குவான் என்று நான் நினைக்கவே இல்ல அந்த பொண்ணு அதுக்காக அவனை மாதிரியே இருக்கணும் என்னடா இதெல்லாம் நம்ம வேதாச்சலம் பொண்டாட்டி பார்க்கும்போது இவங்க ரெண்டு பேரும் இப்படித்தான் இப்படி இருக்காங்களோ தெரியல என்று ஆதங்கப்பட்டார் அருணாச்சலம்.
அண்ணா நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க அண்ணா அந்த சங்கவிய கல்யாணம் பண்ணி இருந்தா கூட இந்நேரம் அவ என்ன பண்ணி தினமும் ஏதாவது பிரச்சனையை எடுத்துட்டு வந்து இருப்பாளோ தெரியலை.
ஆனா என் லட்சுமி அப்படிப்பட்ட பெண்ணே கிடையாது ஏன்னா…..கார்த்திக்க பத்தி நல்லாவே அவளுக்கு தெரியும்.
மனசுல அவ ரொம்ப மகாராணி அண்ணா என் பையனை எப்படி பார்த்துக்கிறா தெரியுமா என்ற விசாலாட்சி. அத்தனை பேருக்கும் முன்னாடி நாங்க தல குனிஞ்சு நிக்கிறது பார்த்து தாங்கிக்க முடியாமல் நான் என் பையன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா என்று கேட்டதும் சரின்னு சொல்லி என் பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா என்று விசாலாட்க்ஷி கூறினார் .
ஆமா விசாலாட்சி நானும் அந்த பொண்ண பார்த்ததும் அப்படித்தான் நினைச்சேன் ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது.
ரொம்ப அமைதியா இருக்க அந்த பொண்ணு பார்க்கிறதுக்கு எல்லாருக்கும் நல்ல மரியாதை கொடுக்கிற எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருச்சு என்றவர் கார்த்திக்கிடம் திரும்பி பார்த்து ஒரு விஷயம் நம்மளுக்கு தட்டி போய் இன்னொரு விஷயம் கிடைக்குது அப்படின்னா அது கண்டிப்பா நம்மளுக்கு ஏற்றதாக தான் அந்த ஆண்டவன் கொடுப்பாங்க என்னோட நம்பிக்கை.
உனக்கு அந்த சங்கவி வேண்டாம் என ஆனதுக்கப்புறம் அப்பவே உனக்கு அந்த லட்சுமி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க அப்படின்னா அந்த லட்சுமி தான் உன் வாழ்க்கையில முக்கியமான இடத்தில இருக்க போறேன்னு அர்த்தம்.
அதனால எந்த காரணத்தை கொண்டு அந்த பெண்ணை நீ மிஸ் பண்ணிடாத என்ன தான் உனக்கு பிடிச்சோ பிடிக்காமலையோ நீ கல்யாணமே பண்ணி இருந்தாலும் இந்த லட்சுமி தான் வாழ்க்கை முழுக்க வரப்போறா அவளை நீ நல்லா பாத்துக்கணும் என்று கார்த்திக்கிடம் அருணாச்சலம் கூறினார்.
அவர் கூறியது எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கார்த்திக் சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேன் என்று மட்டும் சொன்elaarum
சரி பா… நீ சரின்னு சொன்ன வரைக்கும் சந்தோசமே சரி நீங்க எல்லாம் ரொம்ப களைப்பா இருப்பிங்க போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க மதியத்திற்கு பிறகு உங்களுக்குனு தனியா ரிசர்ட் ஏற்கனவே ரெடி போனோம் வெச்சிருக்கு நீங்க அங்க போய் தங்கிக்கலாம் என்று கூற.
கதிர் அங்கிள் நாங்க இப்பவே அங்க போறோம் அங்கிள் இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப கிளம்பி அங்க போறதுக்கு இப்பவே போன அங்கேயே ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா ரெடி ஆகி நாங்க நேர ரிசப்ஸ்ன் வந்திருவோம் என்று கூற.
சரி கதிர் நீ சொல்றதும் சரி தான் எதற்கு வேண்டாத அலைச்சல் என்றவர் நான் உங்க கூட பூமிகாவை அனுப்புறேன் அவளோட பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அதே ரிசார்ட்யில் தான் தங்கி இருகாங்க என்று கூற.
வெங்கடாச்சலம் கதிரிடம், டேய் கதிர் என்று அழைத்தார் என்ன அப்பா சொல்லுங்க.. என்றான்.
நாம போற ரிசார்ட் எங்க இருக்குனு தெரிஞ்சுட்டு லட்சுமியுடைய அம்மா அப்பா வை நேர அங்கேயே வர சொல்லிரு என்று கொரோ சரி அப்பா நான் சொல்லிறேன்னு என்று கூறி போனை எடுத்துக்கொண்டு வெளியே வர அவன் பின்னாலேயே வந்த விக்கி அப்பறோம் டா மாப்பிள்ளை யாருக்கு போன் பண்ண தனியா வந்திங்க என்று கேட்க.
அப்பா உன் முன்னாடி தானே சொன்னாரு லக்ஷு வோட அம்மா அப்பா வை நேர ரிசர்ட் வர சொல்லி எமது கால் பண்ண சொன்னாரே என்று கூற.
ஓஹோ… அப்போ நீங்க லக்ஷு அம்மா கு தான் கால் பண்ண வந்திருக்கீங்க அப்படித்தானே மச்சான் என்று நக்கல் அடிக்க.
விக்கியை முறைத்த கதிர் என்கிட்ட லக்ஷு அம்மா நம்பர் இல்லை என்றான். அதனால் என்ன டா உன் ஆளு அவங்க கூட தானே இருக்கா அவளுக்கு போன் பண்ணி கேட்கலாமே என்றான்…விக்கி..
எனக்கு தெரியும் நீ பேசாம போறியா முதல்ல இங்க இருந்து என்று விக்கியை தூரத்த. எல்லாம் என் நேரம் டா அங்க என்ன டான்னா ஒருத்தன் கல்யாணம் ஆகியும் பொண்டாட்டி நினைப்பே இல்லாம சுத்துறான்.
இங்க இவன் என்ன டான்னா அந்த பொண்ண நினைச்சுட்டே சுத்திட்டு இருக்கான் என்று புலம்பியவன். சரி டா மாப்பிளை நீங்க மெதுவா வாங்க நாங்க அப்டியே கிளம்பிறோம் என்று கூற.
விக்கியின் சட்டை காலறை பிடித்து இழுத்து தன் கை வளைவுக்குல் கொண்டு வந்து நிறுத்தியவன். நீ எங்கயும் போக வேணாம் அப்பறோம் நீ மூஞ்சிய தூக்கி வெச்சு இருப்ப ஒரு நிமிஷம் நில்லு என்ற கதிர் தன் போனை எடுத்து கீர்த்திகாவிற்கு கால் செய்தான் .
இங்கே கீர்த்திகா அவள் அம்மாவிடம் அப்பாவிடமும் வசவு வாங்கிக்கொண்டு முகத்தை உர்….. என்று வைத்துக்கொண்டு அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்தால்.
அந்த ராஸ்கல் என்ன வம்பு பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன் ஆனா இப்படி பேசினா நான் கேட்டுட்டு பேசாம இருக்கணுமா எங்க அம்மா சொல்றாங்க இதெல்லாம் எந்த ஊரு நியாயமா இருக்கு என்று மனதுக்குள்ளயே கதிரை வறுத்து எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்
அப்போது சரியாக அவள் போன் பண்ணி அடிக்கவும் யார் என்று எடுத்துப் பார்க்க கதிர் தான் அழைத்திருந்தான்.
போனை பார்த்தவுடன் திரும்பி அவளை அம்மாவை பார்க்க என்னடி என்னைய பார்த்துட்டு இருக்க யார் போன் பண்றது என்று கேட்க கதிர் தான் போன் பண்ணி இருக்கான் என்று கூற பாத்தியா உன்கிட்ட அந்த தம்பியை மரியாதையா பேசினா அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் என்கிட்டயே கதிர் தான்னு அந்த பயணம் மரியாதை இல்லாம சொல்றியா ஒழுங்கா மாமானு கூப்பிடு மாட்டியா இப்ப இருந்தே மரியாதை கொடுத்து பழகு அவங்க வீட்டு ஆளுக முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம கூப்பிட்டா அவங்க எல்லாம் உன்ன பத்தி என்ன நினைப்பாங்க என்று அவள் அம்மா மறுபடியும் திட்ட வேறு வழி இல்லாமல் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்துவள் ஹலோ என்று கூற கதிர் அந்த அமைதியாக இருந்தான்.
மறுபடியும் கதிர் எதுவும் பேசாமல் இருக்க கீர்த்திகா மறுபடியும் ஹலோ என்றால். அமைதியாகவே நின்று இருக்க வேறு வழியே இல்லாமல் அவள் அம்மா வேறு அருகில் இருப்பதால் இவனை திட்ட வேறு முடியாது என்று மனதில் நினைத்தவள் ஹலோ மாமா……சொல்லுங்க எதுக்கு போன் பண்ணிட்டு எதுவுமே பேசாம இருக்கீங்க என்று கீர்த்திகா கேட்டால்.
முதல்முறையாக கீர்த்திகா கதிரை மாமா என்று அழைத்ததும் அவள் மேல் கோபமாக இருந்த கதிருக்கு அவள் அழைத்து அந்த ஒற்றைச் சொல்லில் கோபம் இல்லம் காற்றோடு பறந்து போனது.
இதுவரை விக்கியிடமும் அனைவரிடமும் முகத்தை உர்…..என்று வைத்திருந்தவன் இவள் மாமா என்று அழைத்ததும் கதிரின் முகம் பிரகாசமாவதை பார்த்த விக்கி அவனை ஆச்சரியமாக பார்த்தான்.
கதிர் உடனே ஹலோ என்றான் இந்த பக்கம் கீர்த்திகாவிற்கு அவன் குரல் கேட்டதும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
கீர்த்திகா அமைதியாக இருக்க கதிர் ஏய்… கீ… என்றான் அவள் ம்ம்ம்… என்று மட்டும் கூற.
என்ன கீ…எதுவுமே பேச மாட்டேங்குற என்றான். நான் என்ன பேசுறது நீங்க தானே கூப்பிட்டீங்க என்னனு சொல்லுங்க என்றால்.
இப்போ கொஞ்சம் முன்னாடி எண்னை என்னா சொல்லி கூப்பிட்டே நீ… என்றான். அவன் கேட்டது புரிந்தது அவளுக்கு ஆனால் கீர்த்தியின் அம்மா அருகில் இருந்ததால் எதுவும் பேசாமல் ஒன்னும் இல்லையே நீங்க எதுக்கு கால் பண்ணுணிங்கனு சொல்லுங்க முதல்ல என்றால்.
ஏய் கீ… ஒரு லவர் கிட்ட பேசுற மாரியா நீ பேசுற என்னவோ பிடிக்காதவன் கிட்ட பேசுற மாறி பேசுற. நீ என்கிட்ட லவ் ஓகே சொன்ன அப்போ நான் எத்தனை தடவை என்னை மாமான்னு கூப்பிட சொன்ன அப்போ கூப்பிடாம இப்போ அத்தை சொன்னதும் கூப்பிடற பாத்தியா என்றான்.
அதற்கு கீர்த்திகா வேற வழி இல்லாமல் தான் சொன்னேன் என்றால் அவள் அப்படி சொன்னதும் கதிருக்கு புஸ்… என்று ஆனது.
இது எப்டியோ நீ என்னை இனிமேல் மாமான்னு சொல்லி தான் கூப்பிடனும் சரியா என்றான் கதிர்.
அதெல்லாம் முடியாது என்றால் கீர்த்தி என்ன முடியாதா சரி பாக்குறேன் நீ எப்படி கூப்புடாம இருக்கிறேன்னு என்று சொன்னவன் சரி நான் இப்போ எதுக்கு போன் பன்னினேனா என்று அவன் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல வர அதற்குள் கீர்த்திகா முதல்ல அதை சொல்லுங்க எதுக்கு போன் பண்ணுணிங்க என்றால் கடுப்பாக.
நீ இப்படி கடுப்பா பேசினா நான் எப்படி சொல்றது நீ என்கிட்ட மாமா எதுக்காக போன் பண்ணுணிங்கனு கேட்ட தான் நான் சொல்வேன் என்றான் கதிர்.
அவன் கூறியதை கேட்டு நீ சொன்ன சொல்லு சொல்லாட்டி போய்யா…. என்றவள் போனை கட் செய்தவள். இவனுக்கு லவ் ஓகே சொன்னது தப்பா போயிருச்சு கொஞ்ச நாள். இவனை சுதல்ல விட்டிருக்கணும் என்று முனுமுன்னுத்தால்.
அவள் அருகில் இருந்த வடிவு என்ன டி ஆச்சு அந்த தம்பி கூட எப்போ பாரு சண்டை போட்டுட்டே இருக்க என்று கேட்க அதெல்லாம் ஒன்னுமில்லய் நீ பேசாம இரு மா… என்றால்.
சரி அந்த தம்பி எதுக்கு போன் பன்னிச்சு என்று வடிவு கேட்க எனக்கு எப்படி தெரியும் அவன் தான் எதுவும் என்கிட்டே சொல்லலை என்று கீர்த்தி கூற.
ஏய் அவன் இவன்னு சொல்லாம மாமான்னு சொல்லு டி அறிவு கெட்டவளே என்று கீர்த்தியின் தலையிலேயே ஒரு அடி வைத்தார்.
ஷ்…. அம்மா இப்போ எதுக்கு அடிக்குற என்று தலையை தேய்த்து வீட்டுக்கொண்டே அவரை முறைக்க. என்னை முறைக்காத முதல்ல அந்த தம்பிக்கு போனை போடு எதுவும் முக்கியமா சொல்ல கூப்பிடிருக்க போகுது என்று கூற.
ம்ம்ம்… என்று கூறி கால் செய்ய போனை ஸ்பீக்கரில் போடு என்றார் வடிவு அவரை முறைத்துக்கொண்டே கீர்த்தி கதிருக்கு கால் செய்ய.
அந்த பக்கம் என்ன இவ சொல்ல முடியாது போய்யா… சொல்லி போனை வெச்சுட்டாலே என்று யோசித்துகொண்டிருக்க. அவன் அருகில் நின்றிருந்த விக்கி என்ன மாப்பிள்ளை என் தங்கச்சி ஏதோ கழுவி ஊத்திருக்கும் போலவே உன் முகம் கொஞ்சம் முன்னாடி இருந்த பிரகாசம் இப்போ காணாமல் போயிருச்சே… என்று கிண்டல் அடிக்க.
அவனை முறைத்த கதிர் உனக்கு என்ன டா நீ சிங்கள் ஆஹ்… சுத்திட்டு இருக்க என்னை மாறி கமிட் ஆகி பாரு இவளுங்க கிட்ட ஆசையா ஒரு வார்த்தை பேச சொல்லி கேட்குறதுக்குள்ள உயிரே.. போய்விடும் என்றான் கதிர்.
தன்னை சிங்கள் என்று கிண்டல் செய்த கதிரை பார்த்து டேய் யாரை பார்த்து சிங்கள்ன்னு சொன்னே என்று விக்கி பொங்கி எழ… அவனை ஆச்சர்யமாக பார்த்த கதிர் என்ன டா சொல்றே… எனக்கு தெரியாம நீ எப்போ கமிட் ஆனே என்று கேட்க.
ஐயோ…அவசரத்துல உளறி கொட்டிட்டேனே இப்போ எப்படி சமாளிக்கிறது என்று விக்கி யோசித்துக கொண்டிருக்க அப்போது கதிரின் போன் அடிக்க விக்கியிடம் பேசுவதை விட்டுவிட்டு போனை பார்க்க கீர்த்தி தான் கால் செய்திருந்தால்.
சிரித்த முகமாக போனை எடுத்தவன் ஹலோ… டார்லி…. என்று கூப்பிட வர கீர்த்தி அதற்குள் ஹலோ மாமா… நான் கீர்த்திகா பேசுறேன் அம்மா உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க போன் ஸ்பீக்கரில் தான் இருக்கு நீங்க பேசுங்க என்று அவசர அவசரமாக எங்கே இவன் எதுவும் உளறி வைத்து விடுவானோ என்று கீர்த்திகா பேச.
கீர்த்திகாவை டார்லிங் என்று சொல்ல வந்ததவன். ஹலோ அத்தை சொல்லுங்க அத்தை என்றான் கதிர் நல்லவன் போல.
அவன் அருகில் நின்றிருந்த விக்கி அட சாமி… கொஞ்ச நேரதுக்குள்ள எவ்ளோ எக்ஸ்பிரஷன் மாத்துறான் யா… இவன் என்று கதிரையே பார்த்தவன். எப்படியோ என் லவ் மேட்டரய் மறந்துட்டான் என்று சந்தோச பட்டாணி விக்கி.
போனில் வடிவு சொல்லுங்க தம்பி எதுக்கோ கூப்பிட்டிருந்திங்க அதுக்குள்ள என் பொண்ணு போனை வெச்சுட்டா அவளுக்கு பொறுமைங்கிறதே கிடையாது. இவளை கட்டிக்க போறவன் இவளை கட்டிக்கிட்டு என்ன செய்வானோ… என்று புலம்ப.
கதிர் சிரித்துக்கொண்டே விடுங்க அத்தை சின்ன பொண்ணு தானே போக போக சரி ஆகிரும் விடுங்க அத்தை என்று கதிர் கூற.
ஆமாமா தம்பி சரி ஆகிரும்னு தான் நினைக்குறேன் என்றவர் ஏன் தம்பி கூப்பிட்டீங்க என்று கேட்க. அத்தை நாங்க இப்போ ஒரு ரிசார்ட்ற்கு போறோம் அத்தை அங்கயே உங்களையும் வர சொல்லி அம்மா உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க அதுக்கு தான் கால் பன்னினேன் என்று கூற.
சரிங்க தம்பி எங்க வரணும்னு நீங்க கீர்த்திகாகிட்ட சொல்லிருங்க என்று கீர்த்திகாவை பார்க்க நீயே கேட்க வேண்டியது தானே அவன்கிட்ட எதுக்கு இப்போ என்னை கோர்த்து விடுறே மா.. நீ… என்று புலம்ப ஏய் ஒழுங்கா மரியாத கொடுத்து பேசு கொன்றுவேன் இல்லைன்னா என்று அவளை மிரட்ட.
வடிவை முறைத்துக் கொண்டே ஹலோ மாமா அட்ரஸ் சொல்லுங்க மாமா நான் நோட் பண்ணிக்கிறேன் என்றால் பணிவாக.
அப்படி வாடி… என் செல்ல குட்டி வழிக்கு…என்று நினைத்தவன். என்ன கீர்த்திகா நீ இப்போ இருக்குற காலத்துல இன்னும் அட்ரஸ் கேட்டுட்டு இருக்க என்னமா நீ படிக்கிற இது கூட தெரியாம என்று அவளை அவள் அம்மாவிடம் வேண்டுமென்றே மாட்டி விட.
வடிவு இவளை இடித்து என்ன டி தம்பி இப்படி சொல்ற அளவுக்கு அறிவில்லாம இருக்கியா நீ.. என்று அவளை கட்டிந்து கொண்டார் வடிவு.
அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டே ஹலோ மாமா… என்றால் பல்லை கடித்துக் கொண்டே..அவள் பேசியதிலேயே தன் மீது சரி கடுப்பில் இருப்பதை புரிந்து கொண்டவன் சிரித்துக்கொண்டே சரி மா நான் உனக்கு லொகேஷன் வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்றேன் நீங்க டிரைவர் கிட்ட சொல்லி நேர அங்க வந்திருங்க நாம அங்க மீட் பண்ணலாம் என்று கூற ஓகே மாமா என்று கடுப்புடன் போனை கட் செய்தால்.
போனை வைத்துவிட்டு கதிர் வாடா மாப்பிள்ளை உள்ள போலாம் என்று விக்கியின் தோல் மெல்ல கை போட்டு அவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் அனைவரும் கிளம்பவும் சரியாக இருக்க.
பூமிகாவும் இவர்களுடன் ஒன்றாக ரிசார்ட்ற்கு கிளம்பினால்.
