Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 1

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 1

by Layas Tamil Novel
1.1K views

FLING 1

ஷ் எதுக்கு டி சத்தம் போடற பக்கத்துல இருக்கவங்க முழிச்சுக்க போறாங்க மெதுவா பேசு டி என்று பார்வதியை சத்தமில்லாமல் வர சொல்லிவிட்டு அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டை தாண்டி பூனை நடை போட்டு சென்றாள் அகலிகா

ஏன் டி அவன் தான் ஆஃபீஸ்ல வேலை இருக்கு இன்னிக்கு மீட் பண்ண முடியாதுன்னு சொன்னானே அப்பறோம் எதுக்கு இப்போ வேலை மெனக்கெட்டு அவனுக்கு பர்த்டே செலிப்ரேட் பண்ண இங்க வந்திருக்க எப்படியும் அவனை சர்ப்ரெய்ஸ் பண்றதுன்னு ஆகிடுச்சு அவன் ஆஃபீஸ்க்கே போயிருக்கலாமே என்றாள் பார்வதி

ஏய் அவினாஷ் ஆபீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு தெரியும் இல்ல டி உனக்கு அங்க போய் அவனை சர்பிரைஸ் பண்றேன்னு அவன் வேளைக்கு எதுவும் பிரச்சனை வந்திரக்கூடாதில்ல அதான் இந்த ஏற்பாடு என்றவள் அவினாசை சர்ப்ரைஸ் செய்வதற்க்கான வாங்கி வந்திருந்த பர்த்டே கேக்கை சுமந்துகொண்டு அவன் வீட்டின் முன் வந்து நின்றாள்

ஹே பாரு இதை பிடி என்று பர்த்டே பார்ட்டிக்கு அரேன்ஜ்மெண்ட் செய்வதற்காக வாங்கி வந்திருந்த பொருட்களை அவள் கையில் திணித்துவிட்டு அவினாஷின் வீட்டை தன்னிடம் உள்ள மற்றொரு சாவியை கொண்டு மெல்ல திறந்தவள் பார்வதியை  அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்

ஹால் முழுவதும் இருட்டாக இருக்க விளக்கை போட நினைத்த அகல்யா அங்கே அவிநாசின் பெட் ரூமில் மட்டும் விளக்கு எரிவதை பார்த்தவள்

அங்க பாரு டி லைட்டை கூட ஆப் பண்ணாம போயிருக்கான் பொறுப்பே இல்ல அவனுக்கு என்று அருகில் வசிப்பவர்களுக்கு இடையூறு வராமல் இருக்க மெல்ல கேக்கை டேபிளில் வைத்துவிட்டு ஹால் லயிட்டை ஒளிர விட்டாள்

ஆமா அவனுக்கு பொறுப்பில்லை நீ தான் ரொம்ப பொறுப்பானவ ஆச்சே போ போய் அந்த லைட்டை ஆப் பண்ணிட்டு சீக்கிரம் வா அவன் வரதுக்குள்ள டெகரேஷன் பண்ணனும் இல்ல என்று ஹஸ்கி வாய்ஸில் கிண்டல் செய்த பார்வதி கொண்டு வந்த பலூனை எடுத்து ஊத ஆரம்பித்து இருந்தாள்

ஹேய் போடி எப்பவும் உனக்கு என்னை கிண்டல் பண்றதே வேலையாகிடுச்சு நீயும் லவ் பண்ணி பாரு அப்போ தான் இந்த பீலிங் எல்லாம் என்னனு உனக்கு புரியும் என்றாள்

ம்ம் ம்ம்ம் அது மட்டும் நடக்கவே நடக்காது நான் இப்படியே ஜாலியா இருந்துட்டு போறேன் எனக்கு இந்த லவ் எல்லாம் செட்டே ஆகாது அப்பறோம் உன்னை மாதிரி எல்லாம் என்னால இருக்கவே முடியாது . பார்ட்டி பண்ணினோமா நாலு பிரெண்ட்ஸ் கூட சேர்த்து பன் பண்ணினோமா அப்டியே ரெண்டு பேரை சைட் அடிச்சோமான்னு இருந்துக்கணும் என்றாள்

போடி இதுல என்ன இருக்கு எப்போ பாரு பார்ட்டி பிரெண்ட்ஸ்ன்னு அலுப்பா இருக்கும் என்றவள் சரி சார் வேலையை பாரு இந்த பலூனை என்கிட்டே கொடு நான் ஊதுறேன் நீ எப்போ ஊதி நான் எப்போ கட்டுறது என்றாள் அகலிகா

ஆமா எனக்கு பலூன் சின்னதா இருக்கு என்னால இவ்ளோ தான் காத்தடிக்க முடியும் நீ தான் பெருசா வெச்சிருக்கியே நீயே காத்தடி என்று தன் சிறிய மார்பகங்களை ஏக்கமாக பார்த்துவிட்டு அகலிகாவை பார்த்து பெருமூச்சு விட்டாள் பார்வதி

ஹேய் ச்சி லூசு என்று சிரித்துவிட்டு அவள் கையில் இருந்த பலூனை வாங்கி ஊதிக்கொண்டே அவிநாசின் பெட் ரூம் விளக்கை அனைக்க போனாள் அகலிகா

பார்வதியிடம் பேசி கிண்டல் செய்துகொண்டே சென்றாள்

ஹாப்பி பர்த்டே என்று எழுதி தோரணமாக இருந்ததை எடுத்து கையில் வைத்தவள் அகலிகா இதை எங்க டி கட்டுறது நீயே சொல்லு நீதான் எப்படி பண்ணலாம்னு பிளான் பண்ணி வெச்சிருப்பியே என்று கேட்டாள்

அகலிகாவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவளை பார்த்த பார்வதி அவிநாசின் பெட் ரூம் வாசலிலேலேயே நின்று இருந்த அகல்யாவை பார்த்தாள்

அப்படியே உறைந்த நிலையில் அவள் நின்று இருக்க என்ன அசையாம நிக்குறா எதையாவது பார்த்து பயந்துட்டாளா நம்ம வேற நடுராத்திரி வந்திருக்கோம் பேய் பிசாசுன்னு ஏதாவது பார்த்து பயந்துட்டாளா என்றபடி கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு அகல்யா அருகில் சென்றவள்

ஏய் அஹி என்ன டி ஆச்சு ஏன் இப்படி நிக்குற என்று அவள் பார்த்த திசையை திரும்பி பார்த்த பார்வதி அதிர்ந்து போனாள்

அங்கே அவினாஷ் கட்டிலில் படுத்திருக்க அவன் மேல் ஒரு பெண் முழு நிர்வாணமாக அமர்ந்து இருந்தாள் இருவரும் அதே நிலையில் அகலிகாவையும் பார்வதியையும் பார்த்து அதிர்ந்து இருந்தனர்

பார்வதி தான் தன்னிலைக்கு வந்தவள் ச்சீ ச்சி  ச்சீ இந்த கருமத்தை எல்லாம் என் கண்ணால பார்க்க வெச்சுட்டியே பெருமாளே அதுக்கு நீ பேய் பிசாசையே நேர்ல KAAட்டிருக்கலாம் என்று வேகமாக திரும்பிக்கொண்டவள் அஹி சர்பிரைஸ் இவனுக்கு இல்ல டி உனக்கு தான் என்று அவள் தோளில் ஆறுதலாக கை வைத்து தட்டி கொடுத்தாள்

கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தை நினைத்திருக்க அதை துடைக்கக்  கூடத்  தோன்றாமல் சிலை போல் நின்று இருந்த அகலிகா பார்வதியின் குரல் கேட்டு அவளை திரும்பி பார்த்தாள்

வா டி இங்க நின்னு இந்த ஷிட்டை எல்லாம் பார்க்கவா வந்தோம் போலாம் என்று அவள் கை பிடித்து தன்னோடு அழைத்து சென்றாள் பார்வதி 

அவர்கள் இருவரும் செல்வதை பார்த்தும் அகலிகாவை தடுக்கும் நோக்கம் அவினாஷுக்கு துளியும் தோன்றவில்லை  விட்ட வேலையை அவன் தொடர ஹால் வரை வந்த அகல்யாவுக்கு பெட் ரூமில் இருந்து முத்த சத்தம் கேட்கவும் அகலிகாவின் கையை உதறிவிட்டு நேராக பெட் ரூம் நோக்கி சென்றாள்

ஏய் அங்க எதுக்கு டி மறுபடியும் போற அவன் பிரீ ஷோ கட்டிட்டு இருக்கான் அதை வேற மறுபடி பார்க்கணுமா என்று பார்வதியும் அகலிகாவின் பின்னால் ஓட

நேராக பெட் ரூம் வந்த அகலிகா அவினாஷும் அவன் மீதிருந்த பெண்ணும் தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்தவளுக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது .

தப்பு பண்ணிட்டோம்னு கொஞ்சம் கூட கில்ட் பீல் இல்லாம என்கிட்டே ஒரு சாரி கூட கேக்காம எப்படி உன்னால மறுபடியும் இவ கூட என்று இருவரையும் அருவருப்பாக பார்த்தவள் ச்சி த்தூ உன்னை போய் உண்மையா காதலிச்சேன் பாரு என் புத்தியை நானே கர்ஸ் பண்ணிக்கணும் என்று இருவரையும் அருவருத்து பார்த்தவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்

*****

லண்டனில் உள்ள ஒரு 7  நட்சத்திர ஹோட்டலில் தன் ப்ராஜெக்ட் வெற்றி அடைந்ததற்கு பிசினஸ் பார்ட்னர்ஸ் ஸ்டேப்ஸ் என அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துக்கொண்டு இருந்தான் ஆதித்ய தீரன்

AD டெக் ஓட CEO ஆதித்யா தீரன் டேட்டிங் ஆப், பிரிஎண்ட்ஷிப் ஆப், பிரிஎண்ட்ஸ் வித் பெனிபிட் ஆப்  போல ரிலேசென்ஷிப்க்கு என்று புதிதாக ஒரு ஆப் ஒன்றை தன்னுடைய AD டெக்   நிறுவனத்தில் இது போன்ற பல ஆப்களை புழக்கத்தில் வெளியிட்டிருந்தவன் தன் டீமை கொண்டு FLING ஆப் ஒன்றை உருவாக்கினான்

அதை புழக்கத்தில் விட்டவன் FLING ஆப் மக்களிடம் குறிப்பாக இளவட்டங்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருந்தது .

வாவ் ஆதித்யா உன்னோட ஐடியால உருவாகிற  ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும் சக்சஸ்புல் தான் மற்ற எல்லா ப்ரோஜெட்டையும் விட இந்த FLING ஆப் உன்னை வேற இடத்துக்கு கொண்டு போய்டுச்சு என்று AD டெக் உடன் பிசினஸ் பார்ட்னர் ஷிப் வைத்திருக்கும் முகேஷ் AD டெக் நிறுவனத்தின் CEO வான ஆதித்ய தீரனை புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தான்

நோ டா இதுக்கு என்னோட ஐடியா மட்டும் காரணம் இல்லை அந்த ஐடியாவை இம்ப்ளிமென்ட் பண்ணி அதை சக்சஸ்புல்லா முடிச்சு குடுத்த என்னோட டீமுக்கு தான் இந்த பாராட்டு எல்லாம் போய் சேரனும் என்று தன் டீம் ஹெட் ரியாவையும் அவளுடன் சேர்ந்து வேலை செய்த மற்றவர்களையும் முகேஷிற்கு அறிமுகம் செய்து வைத்தான்

ஹே ஆதி ரியாவும் நீயும் காலேஜ் டேஸ்ல இருந்து பெஸ்ட் பிரெண்ட்ஸ் தானே இன்னமும் உங்க பிரெண்ட்ஷிப் கன்டினியூ ஆகுறதை பார்த்தா ஹாப்பியா இருக்கு டா என்றான்

ம்ம் ஆமா டா அதே பிரெண்ட்ஷிப்ல இருக்க நாள  தான் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வந்ததில்லை இவ்ளோ வருசமா AND “Riyaa has been my best friend, and now she’s my forever person.” என்றான்

அதை கேட்டதும் சந்தோசமான முகேஷ் வாவ் டா கங்கிராட்ஸ் டா எப்போ கல்யாணம் என்கிட்டே சொல்லவே இல்ல எப்போ இருந்து ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கீங்க என்றான்

லவ்வா எங்களுக்கான என்று ஆதித்ய தீரனும் , ரியாவும் ஒரு சேர சொல்லி சிரித்தனர்

அவர்களை புரியாமல் பார்த்தான் முகேஷ்

என்ன டா அப்படி பார்க்குற என்றான் ஆதி

நோ டா நீ சொன்னதை வெச்சு நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்திங்கன்னு நினைச்சுட்டேன் என்றான்

நோ டா இதுவரை அந்த மாதிரி எந்த பீலும் எங்களுக்குள்ள வரல என்று ரியாவை பார்த்து சிரித்தவன் உனக்கே தெரியும் என் அப்பாவும் ரியா அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்ஸ்ன்னு அவங்க பிஸிநெஸ்ல மட்டும் பார்ட்னரா இருந்தாங்க இப்போ எங்க மேரேஜ் மூலமா ரெண்டு பிசினெஸை ஒண்ணாக்கிட எங்க மேரேஜ் என்றான்

ஓகே ஆதி இருந்தாலும் வெறும் பிசினெஸ்க்காக  எப்படி இந்த மேரேஜ் ஒர்க் அவுட் ஆகும்னு நீ நினைக்குற அதுல கொஞ்சமாச்சும் லவ் வேணாமா டா என்றான் கேள்வியாக

ம்ம்ம் லவ் என்று யோசித்த ஆதி திரும்பி ரியாவை பார்த்தவன் இப்போ வரை இப்படி ஒரு பீல் வந்து மாதிரி எனக்கு தோணல ஒரு வேல இனி வரலாம் என்றவன் ரியாவைன் இடையில் கை கொடுத்து தன் பக்கம் இழுத்தவன் என்ன ரியா நான் சொன்னது கரெக்ட்டா என்றான்

ம்ம்ம் அப்படித்தான் நானும் நினைக்குறேன் ஆதி என்று ஆதியின் மீது தனக்கும் எந்த விதமான உணர்வுகளும் இதுவரை இல்லை என்று ஆமோதித்தாள்

பிஸினஸிற்காக நண்பர்கள் கணவன் மனைவி பந்தத்திற்குள் இணைவதை ஆச்சர்யமாக பார்த்தான் முகேஷ்

வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவே இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒருவித காதல் ஈர்ப்பு ஏதாவது ஒன்று வேண்டுமே அப்போது தான் அந்த உறவு வாழ்க்கை முழுக்க இணைத்திருக்கும் இவர்கள் உறவு எந்த நிலைக்கு செல்லும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இங்கே காதல் தோல்வியில் அகலிகா துவண்டு இருக்கிறாள்

அங்கே காதல் உணர்வுகளே இல்லாமல் ரியாவை திருமணம் செய்யப்போகும் ஆதி இருவரின் வாழ்க்கையும் இன்னும் சில நாட்களில் திசை மாறப்போகிறது

அடுத்தது என்ன காத்திருங்கள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured