FLING 2
“என்ன டி அங்க அவனை காரித் துப்பிட்டு வந்துட்டு இங்க இபப்டி சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க? உன்னை என்ன டி பண்றது?” என்று அகலிகா அழுவதைப் பார்க்க முடியாமல் கவலையில் கேட்டாள் பார்வதி.
“என்னை என்ன டி பண்ணச் சொல்ற? எனக்கு அழக்கூட உரிமை இல்லையா? அந்த B**CH பண்ணின வேளைக்கு அவனை அங்கையே வெட்டிப் போட்டிருக்கும். அவனைப் போய் இத்தனை வருஷம் லவ் பண்ணினேன் பாரு, என்னை சொல்லணும்,” என்று அழுதுகொண்டே பேசியவள் மீண்டும் அழத் துவங்கி இருந்தாள்.
“இப்போ சொன்னதை அவனை அந்தப் பொண்ணு கூட சேர்த்து வெச்சுப் பார்த்ததும் நீ செஞ்சிருக்கணும். இப்போ வந்து புலம்பி என்ன பண்றது?” என்றவள், இன்னமும் அழுதுகொண்டு இருந்தவளை ஏறிட்டுப் பார்த்து கவலை கொண்டாள் பார்வதி.
“ம்ஹும். இது சரியா வராது. உன்னை இப்படியே விட்டுட்டு நான் மட்டும் எங்க தனியா போறது? நீயும் என்கூட வா,” என்று அகலிகாவின் கையைப் பிடித்து, படுத்திருந்தவளை எழுப்பிவிட்டாள்.
“ஏய் என்ன டி பண்ற? விடு என்னை. நான் எங்கையும் வரல. எனக்கு இப்போ இருக்க மெண்டாலிட்டிக்கு எங்கையும் வரப் பிடிக்கல,” என்றாள்.
“ஏய் லூசு, அவன் தான் வேற ஒருத்தியை உன் முன்னாடியே F**K பண்ணிட்டு இருந்தானே? அதை எல்லாம் பார்த்துமா நீ இன்னமும் அவனை நினைச்சு அழுதுட்டு இருக்க?” என்றாள்.
“ஏய் அவனை நினைச்சு நான் அழல டி. அவன் செய்த காரியத்தை நினைச்சு தான் டி. அவன் என்கிட்டே என்ன சொன்னான் தெரியுமா?” என்று தேம்பி அழுதாள் அகலிகா.
“என்ன டி சொன்னான்?” என்று அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தாள்.
“அவன் எனக்கு ரெண்டு மூணு முறை முத்தம் கொடுக்க ட்ரை பண்ணினான். அப்போ நான் ‘வேணாம் அவினாஷ், நமக்கு கல்யாணம் ஆன பிறகு தான் எல்லாமே’ன்னு சொன்னேன். அதுக்கு… அதுக்கு அவன்…” என்று தேம்பியவள் கண்களைத் துடைத்துக்கொண்டு, பார்வதியைப் பார்த்து அவள் தோள்களைப் பிடித்துக்கொண்டு, “‘நீ சொல்றது சரி தான் அகலிகா, நமக்கு கல்யாணம் ஆகுற அவரை என் சுண்டு விரல் கூட உன்மேல படாதுன்னு. உன்னை தொடுற வரை இந்த கை வேற எந்தப் பொண்ணையும் தொடாது. அது என் தங்கச்சியா இருந்தா கூட’ன்னு sonnan டி. ஆனா நேத்து… நேத்து அவன்…” என்றவள் பார்வதியைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவள் சொன்னதைக் கேட்டு சத்தமாகச் சிரித்த பார்வதி, அகலிகாவைத் தன்னிடம் இருந்து விலக்கியவள், “அவன் சுண்டு விரல் இல்ல டி, 21-வது விரல் அவளைத் தொடக்கூடாத இடத்துல தொட்டிருச்சு,” என்று கண்ணடித்தாள்.
அழுதுகொண்டிருந்தவள் பார்வதி சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் அழுகையை நிறுத்திவிட்டு அவளை முறைத்தாள். பார்வதி சிரிப்பதைப் பார்த்து தனக்கும் சிரிப்பு வந்துவிட, அவளோடு சேர்த்து அகலிகாவும் சிரித்தாள்.
“அப்பாடி சிரிச்சுட்டியா!” என்றவள், “விடு டி. அவனுக்கு ரொம்ப அவசரம் போல. ரெண்டு வருஷமா அவனும் பொறுமையா தானே இருந்திருக்கான். இந்தப் பொண்ணை பார்த்ததும் சுண்டு விரல் வேலை செய்திருச்சு போல,” என்று நக்கலடித்தாள்.
“ஹேய், உனக்குக் குசும்பு டி,” என்று அவள் தோளில் அடித்தாள்.
“சரி சரி, என் குறும்பெல்லாம் இருக்கட்டும். இப்போ என்கூட நீ பார்ட்டிக்கு வரப்போறியா இல்லையா?” என்றாள்.
“ஹேய், எனக்கு மூட் இல்ல டி,” என்று அவளோடு செல்ல மறுத்தாள்.
“என்ன டி நீ? கிளம்பி வா முதல்ல. பார்ட்டிக்கு போனதும் மூட் தானா வந்திரும்,” என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள்.
“ஹலோ ஆதி, என்ன டா என்ன பண்ணிட்டு இருக்க? காலையில் இருந்து உனக்கு போன் போட்டுட்டு இருக்கேன். நீ ஏன் அட்டென்ட் பண்ணவே இல்லை?” என்றார் அவன் அம்மா கற்பகம்.
“ஸாரிம்மா. இன்னிக்கு ஒரு பார்ட்டி. என்னோட ப்ராஜெக்ட் ஒன்னு நல்லா ரீச் ஆகிருக்கு. அது எனக்கு நல்ல லாபத்தையும் கொடுக்க ஸ்டார்ட் பண்ணிருக்கு ம்மா. அதான் அந்தப் பார்ட்டி. அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன்,” என்றான்.
“சரிப்பா, என்னவோ சொல்ற. எனக்குத் தான் எப்பவும் எதுவும் புரியாது,” என்றார் கற்பகம் சலிப்பாக.
கற்பகம் பக்கா கிராமத்துப் பெண்மணி. ஆதித்திய தீரனின் அப்பா சிவாச்சலம், கற்பகத்தை அவர் அம்மா சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் திருமணம் செய்துகொண்டார். அவர் அப்போதே பெரிய படிப்பை படித்திருக்க, தனக்குப் படிப்பறிவே இல்லாத பெண்ணை திருமணம் செய்துவைத்து விட்டார்கள் என்ற கோபத்திலேயே, கற்பகத்தை நீண்ட நாள் ஒதுக்கி வைத்திருந்தார். போகப் போக கற்பகத்தின் பொறுமையும், பொறுப்பும், குணமும் கண்டு அவருக்குக் கற்பகத்தின் மீது காதல் வந்து அதில் பிறந்தவன் தான் ஆதித்யன்.
கற்பகத்திற்குத் தெரிந்தது எல்லாம் குடும்பம், கணவன், பிள்ளை, உறவு இது மட்டுமே.
“அம்மா, இது புரியாத விஷயம் இல்ல. இப்போ நீங்க அப்பா கூட எப்படி வாட்ஸாப்ப்ல பேசிக்கிறீங்க, அது போல புதுசா ரெண்டு பேர் நான் உருவாக்குன ஆப் மூலமா பேசி, பிடிச்சிருந்தா பழகுவாங்க இல்லையா? அடுத்து போய்ட்டே இருப்பாங்க,” என்றான்.
“சரிப்பா, எனக்கு எதுக்கு அதெல்லாம்? நான் இப்போ எதுக்கு உனக்கு போன பண்ணினேன் தெரியுமா?” என்றார்.
“தெரியும் ம்மா. நம்ம குலதெய்வம் கோவில்ல பூஜை. அதுல நானும் கலந்துக்கணும்னு என்னை சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வரச் சொல்றீங்க. அதுக்குத் தானே போன் பண்ணுனீங்க?” என்றான்.
“ஆமாப்பா. நியாபகம் இருக்கா உனக்கு? நான் கூட வேலை மும்முரத்துல அம்மா சொன்னதை மறந்திருவியோன்னு நினைச்சேன்,” என்றார்.
“அதை எப்படி ம்மா நான் மறப்பேன்? உங்களுக்குத் தான் நான் ப்ரோமிஸ் பண்ணிருக்கேனே? நான் உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், உங்களைப் பார்க்க கண்டிப்பா என்னோட பிறந்த நாள் அப்போவும், நம்ம குலதெய்வம் கோவில்ல வருசத்துக்கு ஒரு முறை நடக்குற இந்த பூஜைக்கும் வந்திருவேன்னு. இன்னும் 2 டேஸ்ல என் birthday வருது. அதுக்கு அடுத்த நாள் தான் கோவில் பூஜை. சோ எனக்கு இந்த முறை ரெண்டு தரம் வர வேண்டியதில்ல,” என்று சிரித்தான்.
“போப்பா, எப்பவும் உன் பிறந்தநாளுக்கு கோவில் பூஜைக்கும் ஒரு 20 நாள் ஆச்சும் இடைவெளி இருக்கும். உன்னை ரெண்டு தரம் பாத்திருவேன். ஆனா இந்த வருஷம் இப்படி ஒன்னா வந்திருச்சேன்னு எனக்கு வருத்தமா இருக்கு,” என்றார்.
“அதனால தான் நான் இந்தத் தடவை உங்க கூட 10 டேஸ் இருக்கப் போறேன். எப்பவும் வந்ததும் கிளம்புற அவசரம் இல்லாம, பொறுமையா உங்க கூட நேரம் செலவழிக்கணும்னே நான் இந்த பிளானை போட்டேன்,” என்றான்.
அவன் சொன்னது கேட்டு மிகவும் சந்தோசப்பட்ட கற்பகம், “உண்மையா தான் சொல்றியா ஆதி? அம்மா கூட நீ 10 நாள் தங்கப் போறியா?” என்றார்.
“ம்ம்ம், ஆமா. இப்போ உங்களுக்கு ஹாப்பியா?” என்றான்.
“அம்மா ரொம்ப ஹாப்பி ப்பா,” என்றவர், அவன் எப்போது வருவான்னு, வந்து இருக்கும் இந்த பத்து நாட்களும் அவனுக்கு என்ன எல்லாம் வேண்டும் என்று கேட்டுவைத்துக்கொண்டு தான் போனை வைத்தார்.
அவரிடம் பேசிவிட்டு போனை வைத்த ஆதி, அவன் அம்மாவின் கலப்படம் இல்லாத பாசத்தைக் கண்டு சந்தோசம் கொண்டான். தனக்கு இப்படி ஒரு அம்மா கிடைத்ததை நினைத்து பெருமையும் கொண்டான்.
பார்ட்டி முடித்து நேராகத் தன் ஆஃபீஸ் சென்றவன், வேலைகளில் மூழ்கி இருக்க…
“பாஸ்! பாஸ்!” என்று அவசரமாக அவன் PA ராகேஷ் உள்ளே வந்தான்.
“What, man?” என்றான், லேப்டாப்பில் இருந்த தன் பார்வையை மாற்றிக்கொள்ளாமல்.
“பாஸ், நம்ம நியூ ப்ராஜெக்ட் FLING ஆப்பில் ஒரு பிரச்சனை,” என்றான்.
“என்ன?” என்றான் ஆதித்யன்.
“அந்த ஆப் யூஸ் பண்றதுல சில டெக்நிக்கல் இஸ்ஸு,” என்றான்.
“என்ன? நம்ம ஆப் யூஸ் பண்ற யூசேர்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் அவங்க கன்செண்ட் இல்லாமலேயே அவங்க கூட பிளிங்ல இருக்கவங்களுக்குப் போகுதுன்னு சொல்றாங்களா?” என்றான்.
“Yes பாஸ். இது உங்களுக்கு எப்போ தெரியும்?” என்றான் ராகேஷ் ஆச்சர்யமாக.
அவனுக்கே சற்று முன்பு தான் இந்த விஷயம் பற்றி யூசேர்ஸ்களிடம் இருந்து கம்பளைண்ட் mail வந்திருந்தது. அதை பார்த்துவிட்டுத் தான் நேராக ஆதித்த்யனைப் பார்க்க வந்திருந்தான்.
“No worry ராகேஷ். I sorted out that problem,” என்றான்.
“How பாஸ்? How is this possible? அந்த ப்ரோப்லேம் பத்தி இப்போ தான் எனக்கு mail வந்துச்சு. அதைச் சொல்ல தான் நான் இங்க வந்தேன். ஆனா நீங்க ப்ரோப்லேம் solve பண்ணிட்டேன்னு சொல்றீங்க. இன்னும் நம்ம team-க்குக் கூட நான் இந்த விஷயத்தை inform பண்ணலையே?” என்றான்.
“ராகேஷ், உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சது அவ்ளோ தான்,” என்று எழுந்தவன், “எப்பவும் நான் develop பண்ற எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அதை முதல்ல நான் use பண்ணிப் பார்த்துட்டுத் தான் launch பண்ணுவேன். இந்த FLING ஆப்பும் அதே போலத் தானே? already என்னோட name-ல நான் ஒரு ID இதுல open பண்ணி வெச்சிருக்கேன். அப்போ நம்ம ஆப் எந்த ப்ரோப்லேம் create பண்ணினாலும், அதை நான் தானே முதல்ல கண்டு பிடிக்கணும்?” என்றான்.
“You are great பாஸ்,” என்றான் ராகேஷ் பெருமையாக.
“இனி எந்த ப்ரோப்ளேமும் வராது. நம்ம ஆப் use பண்றவங்க டீடெய்ல்ஸ் அவங்க விருப்பம் இல்லாம யாரும் பார்க்க முடியாது. ஏன் நம்ம team நினைச்சாலும் முடியாது. அந்த டீடெயில்ஸ் என்கிட்டே மட்டும் தான் இருக்கு. நானே நினைச்சாலும் சுலபமா பார்க்க முடியாது. அந்த அளவுக்கு செக்கியூரிட்டி tight பண்ணி வெச்சிருக்கேன்,” என்றான்.
“Okay பாஸ். நான் இதை நம்ம ஆஃப்ல update பண்ணி எல்லாருக்கும் notification send பண்ணிட்டு வரேன். இனிமேல் யாராலயும் அவங்க பெர்சனல் டீடெய்ல்சை திருட முடியாதுன்னு சொல்லிட்டு வரேன்,” என்று ஆதித்யனின் கேபினில் இருந்து கிளம்பி இருந்தான்.
அவன் சென்றதும் தன் mobile-ஐ எடுத்து, ஆப்பை திறந்து எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துவிட்டு அவன் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டிற்க்கு கிளம்பி இருந்தான்.
இன்று அவன் ஆஃபின் பாதுகாப்பிற்க்காகச் செய்த விஷயமே நாளை அவனை பைத்தியம் பிடிப்பது போல அலைய வைக்கப் போகிறது என்று அவனுக்குத் தெரியாது.
