Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 5

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 5

by Layas Tamil Novel
610 views

Fling 5

அகலிகாவின் உறுதியான பேச்சைக் கேட்ட பார்வதி, அவளை முறைத்தாள். “சரிடி, நீ ரொம்பவே தெளிவா தான் இருக்க… உனக்குப் பிடிச்சிருந்தா பேசு. ஆனா, உன் உண்மையான அடையாளத்தைக் காட்டாதே. அவன் அவினாஷை விட பெரிய சிக்கலாக இருந்தா, நமக்குத்தான் பிரச்சினை,” என்று எச்சரித்தாள்.

“சரி டி பாத்துக்கிறேன். அண்ட் தேங்க்ஸ் டு யு டி என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு” என்றவள் “அவன் ‘மைக்ரோ ப்ரூவரி’ பத்தி கேட்டான். என்ன சொல்றது?”

“ஃபர்ஸ்ட் டேட்ல பப் வேணாம். பப்-ல நீ குடிச்சு உணர்ச்சிவசப்படுவ. ஆனா, அவன்கிட்டப் பேசுறப்போ தெரிஞ்சுது, அவன் ரொம்பவே ‘ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட்டா இருக்கான் . நீ ஏதாவது செக்யூர் பிளேஸ்ல  மீட் பண்ணு . நம்ம அப்பார்ட்மெண்ட் ஏரியா வேணாம்” என்றாள்

“சரிடி, நான் அவனுக்குச் சொல்றேன்.”என்றவள் “உன்னோட போனை கொடு” என்றாள்.

“ஹே! வெய்ட் நேத்து நைட்டே நீ ரொம்ப நேரம் அவன்கிட்ட சேட் பண்ணிருக்க. இப்போ உன் கையில் என் போனை கொடுத்தா எவ்ளோ நேரம் பேசுவீங்கன்னு தெரியாது” என்றவள் “உன்னோட மொபைல்ல FLING ஆப்பை டவுன்லோட் பண்ணு நான் என்னோட நம்பர்ல உனக்கு லொகின் பண்ணி ID லாகின் பண்ணி தரேன்” என்றாள்

“ம்ம்ம்.. விவரமா தான் டி இருக்க நீ” என்று தன் மொபைலை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றாள்

அவள் வந்ததும் “அஹி! ஆல் செட். நீ பேசிக்கோ ” என்று அவள் போனை கொடுத்தவள் “பட் கேர்புல் டி உன்னோட ஒரிஜினல் ID எதுவும் கட்டிக்காத ஓகே” என்றாள்

“சியூர் டி ” என்றவள் மொபைலை வாங்கி தீரனுக்கு மெசேஜ் அனுப்பினாள். டேட்டிங் அழைப்பிற்குச் சம்மதிப்பதாகவும், ஆனால் அவசரம் வேண்டாம் என்றும், ஒரு ஹோட்டல் லவுஞ்சில் சந்திக்கலாம் என்றும் முதலில் கூறினாள்.

அப்போது தான் வேலையை முடித்துவிட்டு தூங்க சென்ற தீரன் மொபைல் அதிரவும் அதை எடுத்து பார்த்தான் அகலிகா தான் அவனுக்கு மெசேஜ் செய்திருக்க அதை படித்தவன்  “எனக்கு லவுஞ்ச்ல உட்கார்ந்து பேசுறதை விட, இன்னும் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்டா’ இருக்கப் பிடிக்கும், பாரு . நான் சென்னையில ஒரு பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கேன். நீங்க ஓகேனா, என்னோட ரூம்க்கே வரலாமே? அங்கேயே கூலாப் பேசிட்டுப் போலாம். எதுவும் பயம் வேண்டாம்.”என்றான்

இந்த மெசேஜ் அகலிகாவைப் பதற வைத்தது. முதல் சந்திப்பே ரூமிலா?

“ரூம்க்கா? அது கொஞ்சம் ரிஸ்க் இல்லையா?” என்று பதில் அனுப்பினாள்

“இங்க எல்லாம் ரொம்பப் பாதுகாப்பானது. அதுமட்டும் இல்லாம, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, எந்தக் ‘கமிட்மென்ட்டும்’ வேண்டாம். ஜஸ்ட் குட் வைப்ஸ் மட்டும்தான். நான் உன்கிட்ட ரொம்ப நேர்மையா இருக்க நினைக்கிறேன். உனக்கு ஓகேன்னா வா. இல்லன்னா நான் லவுஞ்ச்க்கு வரேன். என்னோட நேரமும், உன்  நேரமும் வீணாகக் கூடாதுன்னு தான் கேட்டேன்.” என்று பதில் அனுப்பினான்

அகலிகாவுக்கு அவன் பேசிய நேர்மை பிடித்திருந்தது. அவினாஷ் கடைசி வரை ஏமாற்றினான். இவன் முதல் சந்திப்பிலேயே தன் விருப்பத்தைத் தெளிவாகக் கூறுகிறான்.

வேகமாக எழுந்தவள் பாத்ரூம் கதவை தட்டி “பாரு! அவன் ரூம்க்கே வரச் சொல்றான். என்ன டி  பண்ணட்டும்?” என்று குளித்துக் கொண்டிருந்த பார்வதியிடம் கேட்டாள்.

“போச்சு ஆரம்பிச்சுட்டா டா .. ” என்று நினைத்தவள் ஷவரை அனைத்துவிட்டு. “அவன் உண்மையைச் சொல்லிட்டான். நீதான் முடிவு பண்ணணும். உனக்கு எது வேணுமோ, அதை மட்டும் யோசி. உன் மனசு ‘ரெடி’யா இருந்தா போ. இல்லன்னா நோ சொல்லிடு சிம்பிள் ” என்றாள் முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே

அகலிகா ஒரு முடிவெடுத்தாள். ‘அவினாஷால் ஏற்பட்ட வலியிலிருந்து விடுபட ஒரு CHANGE  வேணும் எனக்கு. நான் ஜஸ்ட் பேசத்தான் போறேன். இதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறேன். பிடிச்சா அடுத்து போகலாம் . அவனும் ஜென்டிலா தான் பேசுறான்” என்று யோசித்தவள்

“ஓகே, நான் வரேன். ஆனா, சீக்கிரம் வரேன், சீக்கிரம் போயிடுவேன்.”என்றாள்

அந்த பதிலை பார்த்ததும் “YES” என்று படுக்கையில் குத்தியவன் “நோ ப்ராப்ளம்.” என்று  சந்தோஷமாகச் சிரிக்கிற இமோஜி அனுப்பிவிட்டு  “சீக்கிரமே டேட் அண்ட் அட்ரஸ் அனுப்பறேன்” என்று போனை வைத்தான்

மறுநாளே காலை லண்டனில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறிய ஆதித்ய தீரன், விமானத்தில் இருந்தபடியே தன் ஹோட்டல் ரூமை உறுதிசெய்து கொண்டான் . அங்கே தன் முழு பெயரை தராமல் தீரன் என்று மட்டும் கொடுத்தவன். AD TECH இல் புராஜெக்ட் மேனேஜராக இருப்பது போல அவனே ஒரு ID ஐ உருவாக்கி தகவல் கொடுத்திருந்தான் . அவன் ரூம் அட்ரஸை அகலிகாவுக்கு அனுப்பிய பிறகு, அருகில் இருந்த தன் பிஏ ராகேஷிடம் ,

“இந்தியாவில் யாருக்கும் நான் தான் AD TECH  CEO-ன்னு தெரியக் கூடாது. நம்ம ஆஃபீஸ்ல முக்கால்வாசி பேருக்குத் தெரியும், ஆனா வெளியாட்கள் யாரையும் என் உண்மையான பதவி தெரிஞ்சு நெருங்கக் கூடாது. நான் சும்மா ஒரு ‘ஆப் டெவலப்பர்’ அல்லது ‘புராஜெக்ட் மேனேஜர்’ என்ற பெயரில் மட்டுமே எல்லார் கிட்டயும் பேசணும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது,” என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினான்.

“ஓகே , சர். நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸ் தவிர உங்கள யாருக்கும் தெரியாது, அதே போல நம்ம பார்ட்னெர்ஷிப் கம்பெனி CEO ‘S தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பு ரொம்ப கம்மி தான் என்றான்.

“குட். இப்போ என் முக்கியமான வேலை, அந்த ‘Paru\_1’-ஐச் சந்தித்து, நம்ம ‘Fling’ ஆப் எவ்வளவு வெற்றிகரமா வேலை செய்துன்னு பார்க்கிறதுதான்.” என்றான்

“பெஸ்ட் ஆப் லக், சர்” என்றான் ராகேஷ்

இரண்டு நாட்கள் கழித்து, சென்னை நகரின் பிரபல நட்சத்திர ஹோட்டலின்  18வது மாடியில் உள்ள அறை எண் 1054-ன் அறைக்குள் சற்று பதற்றமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான் தீரன்.

“அவளை மீட் பண்ண வர சொல்லிட்டேன். பட் எனக்கு ஏன் இவ்ளோ நேர்வேஸ்ட்டா இருக்கு , ஜஸ்ட் அவ வந்தா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க போறேன் , அவ்ளோ தானே. பிரெண்ட்லியா பேசணும் அவ்ளோ தான் அதுக்கு மேல எதுவும் இல்ல . பிடிச்சிருந்தா பிரெண்ட்ஷிப்பை தொடரலாம்னு சொல்லணும், எனக்கும் ரியாவுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆனதை அவகிட்டே சொல்லணும்” என்று பார்வதி(அகலிகாவிடம்) இடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருந்தான்

“நீ பிரெண்டுன்னு நினைச்சு பேசப்போறியா? புல்ஷிட்!” என்று அவன் மனம் அவனை கேலி செய்தது

“ஜஸ்ட் சட் அப் ஓகே ” என்று தன்னையே திட்டிகொண்டவன் “ஒரு வேலை பாரு என்னை மீட் பண்ணி பேசினதும் டேட்டிங் போலாம்னு சொல்லிட்டா என்ன செய்றது” என்று மீண்டும் அவனுக்கு தோன்றியது

“எதுவா இருந்தாலும். ஜஸ்ட் பிரெண்ட்ஸ் தான், அதை அவகிட்டே தெளிவா சொல்லிடனும்” என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் கவனத்தை அந்த அறைக்கதவு தட்டும் சத்தம் திசை திருப்பி இருந்தது

சட்டென கதவை பார்த்தான் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

வேகமாக சென்று கதவை திறந்தவன் அங்கே நின்று இருந்த அகலிகாவை பார்த்தான் .

தன்னையே மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தின் முன் கையை ஆட்டி “மிஸ்டர் தீரன்?” என்றாள் தயக்கமாக

“எஸ்!” என்றவன். “பாரு?” என்றான் அவனும் அவளும் ஆம் என்று தலையாட்டி இருக்க அடுத்த நொடி

அவளை அறைக்குள் இழுத்து கதவை சாற்றி இருந்தவன். “பாரு! ஐ காண்ட்” என்றவன் அடுத்து பேசக்கூட இடம் தராமல் அவள் இதழில் இதழ் பொருத்தி இருந்தான் தீரன்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured