EPISODE 147
போதியின் அத்தையும் மாமாவும் அவனுடைய மெடிக்கல் காலேஜில் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் மெடிக்கல் லேபை கட்ட விடாமல் அதன் வேலையை நிறுத்தி வைத்துத் தொல்லை கொடுக்க… மித்ரனிடம் போதி காரணம் கேட்டான். அவன், அத்தை பெண் ரதியைத் திருமணம் செய்து கொள்ளாதது தான் இதற்குக் காரணம் என்று கூறினான்.
போதி, “அத்தை, என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா? ஏன் இப்படி இங்கே வந்து வேலை செய்றதைத் தடுத்து நிறுத்தி வச்சிருக்கீங்க? இதனால் உங்களுக்கு என்ன லாபம் இருக்கு?” என்று சற்று கடுமையாகவே பேசினான்.
அவனைப் பார்த்து முறைத்த போதியின் அத்தை, “நீ மட்டும் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லு. நான் இதையெல்லாம் இப்பவே இங்கே நிறுத்திடுறேன். அடுத்த பிறகு என்னால உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது” என்றார்.
போதி, “அத்தை, நான் உங்ககிட்ட ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேன். நான் ரதியை அந்த மாதிரி நினைச்சுப் பழகல… அவ எனக்குக் கூடப் பிறக்காத தங்கச்சி மாதிரி தான். அப்படி இருக்கும்போது நான் எப்படி ரதியை கல்யாணம் பண்ணி அவ கூடக் குடும்பம் நடத்த முடியும். அப்படியே நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அவ கூட நான் சந்தோசமா வாழ்வேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்டான்.
“சரி போதி… நீ சொல்ற மாதிரியே நானும் இந்தக் காரணத்தை எடுத்துக்கிறேன். ஆனா சின்ன வயசுல இருந்து ரதி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற நினைப்புல தான் வளர்ந்துட்டு இருக்கா. அவ மனசு நான் எப்படி மாற்ற முடியும்? அது கொஞ்சம் யோசிச்சுப் பாரு. அவ எவ்வளவு கஷ்டப்படுவான்னு நீ நினைச்சுப் பாத்தியா?” என்று கேட்டார் போதியின் அத்தை.
“அவ மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணத்தை விதைச்சதுக்குக் காரணமே நீங்களும் என்னோட அம்மாவும் தானே அத்தை. நானும் ரதியும் ஒண்ணாப் பேசும் போதும் பழகும் போதும், எப்போ பாத்தாலும் அவகிட்ட ‘நீதான் உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கப் போற… மாமா தான் உனக்கு எல்லாமே’ அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு சொல்லி சொல்லி அவ மனசுல தேவையில்லாத ஆசையா வளர்த்து வச்சிருக்கீங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று கேட்டான் போதி.
போதியின் மாமா போதியிடம் வந்து, “சரி போதி, அப்போ நீயே அவகிட்ட உன் மனசுல இருக்குறதத் தெளிவா சொல்லிடு. நாங்க எவ்வளவு சொன்னாலும் ரதி ஏத்துக்கவே மாட்டேங்குறா… உன்னால அவ மனசு மாற்ற முடியும் தானே?” என்று கேட்க…
“சரி மாமா, அவ கிட்ட நானே பேசுறேன்” என்று சொன்னான்.
போதி ரதியைப் பார்க்க, அவள் போதியைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டு நின்றிருந்தார்.
போதி, “இங்க பாரு ரதி, உன்னோட அம்மாவும் அப்பாவும் உன்கிட்ட ஏதேதோ சொல்லி உன் மனசுல என்ன பத்தின ஆசையா வளர்த்து விட்டுட்டாங்க. என் மனசுல உன்னைப் பத்தி அந்த மாதிரி எண்ணங்கள் துளியும் கிடையாது. நீயும் நானும் இவங்க வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொண்டால், நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக நன்றாக இருக்காது. என் மனசுல இருக்குறத நான் தெளிவா சொல்லிட்டேன். உன்னை நான் எப்போதுமே என்னோட சகோதரியா தான் பார்த்திருக்கேன்” என்றான் போதி.
போதி தன்னைச் சகோதரியாகத் தான் பார்த்திருக்கிறான் என்பதைக் கேட்டதும் கண்களில் கண்ணீரோடு போதியை நிமிர்ந்து பார்க்க…
போதி, “ரதி, வீணா தேவையே இல்லாத ஒரு விஷயத்துக்காக உன்னோட கண்ணீரை வீணடிக்காதே. நீ சின்ன பொண்ணு. உனக்கு என்னை விட இன்னும் பெட்டரா நல்ல பையனாவே கிடைப்பான்” என்று ஆறுதல் கூற…
அவன் எதிரில் நின்றிருந்த ரதி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “சரி மாமா, நீ சொல்றது எனக்குப் புரியுது. உன்னை உன்னோட தங்கச்சி நீ பாக்குறப்போ, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறதுல அர்த்தமே இல்லை. அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீ சொன்னது போல நம்ம வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு எனக்கு இப்போ நல்லாவே புரியுது மாமா. நான் என் அம்மா அப்பா கிட்ட பேசி அவங்களுக்குப் புரிய வைக்கிறேன். நீ என் கவலைப்படாத மாமா” என்று சொன்னாள் ரதி சிரித்த முகமாக.
“ரொம்ப தேங்க்ஸ் பேபி. நீயாவது என்னைப் புரிஞ்சுகிட்டே. அத்தை மாமா கிட்டப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவங்களுக்குப் புரியவை” என்று சொன்னான் போதி.
அவர்கள் மூவரிடமும் வந்த போதி, “என்ன அத்தை, உன் பொண்ணு சமாதானம் ஆகிட்டா. இப்போ உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே” என்று கேட்டான்.
“ஒன்னு சேர்ந்துட்டீங்க. இனி சொல்றதுக்கு எங்களுக்கு என்ன இருக்கு. என் அண்ணன் பையனுக்குத் தான் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு இருந்தேன். அது மட்டும் நடக்காமல் போயிடுச்சு” என்றார் சற்று வருத்தமாக.
அவர் அருகில் வந்து அவர் தோளில் கை போட்ட போதி, “அத்தை, இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. என்னை விட ரதிக்கு இன்னும் நல்ல அழகான மாப்பிள்ளை கிடைப்பான்” என்று அவர்களைச் சமாதானம் செய்தான்.
போதி தன் அத்தை இடம் விடை பெற்றுக் கொண்டு ஆஃபீஸ் சென்றான்.
போதியின் அறை கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த மாதவியை நிமிர்ந்து பார்த்த போதி. தனக்கு முன்னால் பாவாடை தாவணி அணிந்து நிற்கும் பவ்யமாகக் கையில் ஒரு வெள்ளைக் கவருடன் நின்றிருந்த மாதவியைப் பார்த்த போது அப்படியே அவள் அழகில் உறைந்து போய் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவள் கையில் இருந்த கவரை வாங்கியவன், கவரின் மேலே போதியின் பெயர் எழுதி இருக்கத் திறந்து பார்த்தான் போதி. அதில் அவள் ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த கல்லூரியினுடைய பிரின்சிபல், போதிக்குப் பர்சனலாகச் சிபாரிசு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் மாதவியைப் பற்றி எழுதியிருந்ததை வாசிக்கத் தொடங்கினான். அவள் சிறு வயதிலிருந்தே ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும், ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டு தங்கள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றும், அவள் நன்றாகப் படிக்கும் மாணவி என்பதால் தங்கள் காலேஜில் அவளைச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்து இருந்தார்.
அதைப் முழுவதுமாகப் படித்தவன் நிமிர்ந்து மாதவியைப் பார்த்து, “உங்களுக்குக் காலேஜ்ல எல்லா வசதியும் செஞ்சு கொடுக்கச் சொல்லி நான் ஏற்கனவே சொல்லிட்டேன். எதுவும் வேண்டுமானால் நீங்க நேரடியா எனக்கே போன் பண்ணி கேட்டுக்கலாம்” என்று சொல்லி மித்ரனைப் பார்க்க…
மித்ரன் போதியினுடைய விசிட்டிங் கார்டை எடுத்து மாதவிடம் நீட்டி, “இது சாரோட பர்சனல் நம்பர். உங்களுக்கு என்ன வேணும்னாலும் சார் கிட்ட நீங்க நேரடியா கால் பண்ணி கேட்டுக்கலாம்” என்று சொல்லி அவள் கையில் விசிட்டிங் கார்டைத் திணித்தான்.
அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிய மாதவி, மித்ரனையும் போதியையும் தயக்கமாகப் பார்க்க… அவள் ஏதோ சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட போதி, “என்ன மிஸ் மாதவி, ஏதோ சொல்ல வரீங்க போல?” என்று ஆர்வமாகக் கேட்டான்.
“அது… என்கிட்ட போன் இல்ல. எனக்கு எதுவும் தேவைனா நான் உங்கள வந்து ஆபீஸ் ரூம்லயே பாக்குறேனே” என்றால் மாதவி.
“என்னது உன்கிட்ட போன் இல்லையா?” என்று ஆச்சரியமாக மித்ரன் கேட்க..
மாதவி, “ஆமா” என்றால்.
“என்னம்மா சொல்ற. என்னால நம்பவே முடியலையே. இந்தக் காலத்துல கையில போன் இல்லாமையும் ஒரு பொண்ணால இருக்க முடியுதா?” என்றவன், “நீ பாவாடை தாவணி போட்டுட்டு வந்தப்பவே இந்தக் காலத்துல என்னமோ பாவாடை தாவணி கட்டிட்டு பெண்கள் எல்லாம் இருக்காங்களான்னு யோசிச்சேன். அதைவிட நீ போன் இல்லன்னு சொல்றது தான் எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்குதுமா” என்றான் மித்ரன்.
அவன் பேசியதைக் கேட்டு லேசாக மாதவி சிரிக்க, அவள் சிரிக்கும் பொழுது அவள் உதட்டின் அருகில் சிறிதாக ஒரு சின்னக் குழி விழுவதைப் பார்த்த போதி, அதில் விழுந்து விட்டான்.
“எனக்குத்தான் யாருமே இல்லையே அண்ணா. நானே ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன். அங்கே பேசுற மாதிரி இருந்தாலும் நான் இப்போ வேலை செய்யுற வீட்ல போன் இருக்கு. அவங்க கிட்ட இருந்து நான் பேசிக்குவேன்” என்று மாதவி சொல்ல…
“என்னம்மா நீ காலேஜ்ல படிச்சுக்கிட்டே வேலைக்கு போயிட்டு இருக்கியா?” என்றான் மித்ரன்.
“ஆமா அண்ணா. காலேஜ் பீஸ் கட்ட வேண்டியது இல்லை என்றாலும் மற்ற செலவுக்கு எல்லாம் பணம் வேண்டும் இல்லையா? நான் சாதாரணமான டிகிரி எதுவும் படிக்கலையே. நான் படிக்கிறது மெடிசன் ஆச்சே. எப்படியும் ஏதாவது ஒரு செலவு வந்துட்டு இருக்கும் அண்ணா. அதுக்காகத் தான் நான் வேலைக்குப் போறேன்” என்றாள் மாதவி.
இவ்வளவு சின்ன வயதில் மாதவி தன்னுடைய வறுமையயுமே சிரித்த முகமாகச் சொல்லுவதைப் பார்த்த போதிக்கு மனம் ஏதோ பாரமாக இருந்தது.
போதி மாதவியைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “உங்களுக்கு என்ன உதவி எப்போ தேவைப்பட்டாலும் சொல்லுங்க… உங்க பழைய பிரின்சிபல் ஜீவானந்தம் உங்களுக்கு என்ன உதவி செய்தாரோ, அவரிடம் நீங்க எப்படி தயக்கம் இல்லாம கேக்குறீங்களோ, என்கிட்டயும் எந்த தயக்கமும் இல்லாம எப்ப வேணும்னாலும் நீங்க கேட்கலாம்” என்று போதி சொன்னான்.
அவனிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து செல்ல… செல்லும் மாதவியையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் போதி.
