Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 148

உன் ரகசிய ரசிகை நான் 148

by Layas Tamil Novel
235 views

EPISODE 148

HONEYMOON கிளம்பிய மூன்று ஜோடிகளும் அதிகாலை 3:00 மணி போலத்தான் ஆதி புக் செய்து இருந்த இடத்திற்கு வந்தனர். பயணக் களைப்பில் வந்ததுமே அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கிவிட… நண்பகல் 12 மணிக்கு மேல் தான் ஒவ்வொரு ஜோடியாக எழுந்து தங்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.

முதலில் அறையை விட்டு வெளியே வந்த ஜோடி விக்கியும் நிலானியும் தான். அவர்கள் வெளியே வந்து தங்கள் அறையைச் சுற்றிலும் பார்க்க… நிலானி தங்கள் அறையைச் சுற்றிலும் கடல் நீரும், அதற்கு நடுவே தங்கள் அறை அமைந்திருப்பதைப் பார்த்தவள். அருகில் நின்றிருந்த விக்கியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

விக்கியுடன் பேசக்கூடாது என்று நினைத்து அவன் கையைச் சட்டென விட்டு அவனிடம் இருந்து விலகி நின்றவள் விக்கியை முறைத்துவிட்டுத் தலையை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டு போனால்.

‘ஓஹோ… இதுதான் விஷயமா? இப்போ எப்படி உன்னை என்கூடப் பேச வெக்குறேன்னு பாரு’ என்று நினைத்தவன் அவர்கள் அறைக்குள் வர… விக்கி அறைக்குள் வந்ததும் நிலானி அவனைப் பார்க்காமல் கோபமாகத் திரும்பி அமர்ந்து கொள்ள…

அறையில் இருந்து வெளியே வந்த நிலானி வெளியே வரவும், விக்கி தண்ணீருக்குள் குதிக்கவும் சரியாக இருந்தது.

இப்படி விக்கி திடீரென்று தண்ணீருக்குள் குதிக்கவும் நிலானிக்குப் பதற்றம் ஆகிவிட்டது. வேகமாக ஓடி வந்தவள் விக்கியைப் பார்த்து, “என்ன காரியம் பண்றீங்க…. இப்ப எதுக்கு தண்ணில குளிச்சீங்க? மேலே வாங்க” என்று விக்கியிடம் பேச….

“முடியாது நான் வரமாட்டேன். நீ தான் என் கூடப் பேச மாட்டேங்கறியே… நான் மேல வந்து மட்டும் என்ன பண்ணப் போறேன். நான் வரல” என்று தண்ணீருக்குள்ளே இருந்துகொண்டே சொன்னான் விக்கி.

‘என்ன இவ கொஞ்சமாவது இறங்கி வருவாருன்னு பார்த்தா இப்படிப் பேசிட்டுப் போறாளே’ என்று விக்கி யோசித்தவன், நீச்சல் அடித்துக் கொண்டு வர…

அவனிடம் பேசிவிட்டுச் செல்லப் போன நிலானி, விக்கி என்ன செய்கிறான் என்று பார்க்கத் திரும்பியவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

அவள் தன்னைத் திரும்பிப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த விக்கி அப்படியே நின்றுவிட… நிலானி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பதட்டமாகத் தான் இருந்த இடத்திலிருந்து விக்கி இருக்கும் இடத்திற்கு வேகமாக ஓடி வந்தவள், “ஏங்க சீக்கிரமா மேல வாங்க… சீக்கிரம் வாங்க…” என்று அவனை அவசரப்படுத்த…

‘உடனே அவ கூப்பிட்ட உடனே நம்ம போனா நம்ம கெத்து குறைந்துவிடும். அதனால கொஞ்ச நேரம் கெத்தை மெயிண்டின் பண்ணிட்டு அதுக்கப்புறம் மேல போவோம்’ என்று நினைத்த விக்கி, “இல்ல நான் வரல. நான் இங்கேயே தண்ணிக்குள்ளே இருந்து ஜுரம் வந்து செத்துப் போறேன். நான் ஒன்னும் மேல வரல” என்று விக்கி வர மாட்டேன் என்று வீம்பு செய்ய.

“ஐயோ…. புரியாம பேசாதீங்க. முதல்ல கொஞ்சம் திரும்பிப் பாருங்க” என்று நிலானி கத்த…

‘எதுக்கு இவ்வளவு தேவையில்லாம கத்துற? அப்படின்னு பின்னாடி இருக்கு ஒருவேளை இவர் சொன்ன மாதிரி சுனாமி ஏதும் வந்துருச்சு’ என்று நினைத்தவன் திரும்பிப் பார்க்க…

விக்கி இருக்கும் இடத்தை நோக்கித் தூரத்தில் இருந்து சுறா மீன் இவனை நோக்கி நீந்தி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் விக்கிக்கு இதயமே வெளியே வந்து விடும் போல ஆகிவிட்டது.

வேகமாக நீச்சல் எடுத்துக் கொண்டே நிலானியிடம் திரும்பியவன், “ஏண்டி இது முதலிலேயே சொல்ல மாட்டியா? சீக்கிரம் வாங்க சீக்கிரம் வாங்கன்னு சொன்னியே பின்னாடி சுறா மீன் வருது, அது வந்து என்ன சாப்பிடப் போகுது சீக்கிரமா வாங்கன்னு முழுசா சொன்னியா?…” என்று கத்திக் கொண்டே அவர்கள் அறையை நோக்கி நீச்சல் அடித்துக் கொண்டு வர….

அவனை மட்டும் வேகமாக வந்த சுறா மீன் விக்கியின் அருகில் வந்து அவன் காலைப் பிடிக்க… விக்கியின் காலை சுறா மீன் பிடித்ததும், “ஐயோ!!! நிலானி… சுறா மீன் என் காலைப் பிடிச்சிருச்சு” என்று கத்தியவன், “ஆசை ஆசையா என் பொண்டாட்டி கூட ஹனிமூன் கொண்டாடலாம்னு இங்க வந்தேனே. இப்போ நான் நினைச்சதுல எதுவும் நடக்காம உன்னை விட்டுப் போகப் போறேன். நிலானி, இப்ப கூட நீ என்கூடப் பேச மாட்டியா?” என்று கத்திக் கொண்டிருக்க…

சுறா மீன் அவனைத் தண்ணீருக்குள் இழுக்கவும் தண்ணீருக்குள் விக்கி மூழ்கினான். அவன் தண்ணீருக்குள் மூழ்கியதும் நிலானி பதட்டமாக, “என்னங்க” என்று கத்த….

நிலானியின் அலறல் சத்தம் கேட்டு அறைக்கு அருகருகே அமைந்திருந்த அருகில் இருந்து கீர்த்திகாவும், ராதாவும் என்னமோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு வெளியே வர…

நிலானி பதறிக் கொண்டிருப்பதைப் பார்த்த கீர்த்திகாவும், ராதாவும் அவளிடம் ஓடி வர… தண்ணீருக்குள் மூழ்கிய விக்கி மீண்டும் மேலே வர…

“நிலாக்குட்டி… ஒரு முறை ஆசையா கடைசியாகப் பார்த்துகிறேன்” என்று கத்திக்கொண்டே விக்கி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க…

“என்னங்க என்ன மன்னிச்சிடுங்க…. இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு நான் உங்க கூடப் பேசாம இருந்ததுக்கு, இப்ப நான் வாழ்க்கை முழுக்க உங்க கூடப் பேச முடியாமப் போயிடும் போல இருக்கே” என்று கத்திய நிலானி, தன் அருகில் இருந்த ராதாவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே, விக்கி தண்ணீருக்குள் மூழ்கிய அதிர்ச்சி தாங்காமல் அப்படியே மயங்கி கீழே சரிந்தால்.


ஷிவு தன் ஆபீஸ் வேலைகளில் மும்முரமாக மூழ்கி இருக்க… அவள் அறை கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த நர்மதா மேடம், “உங்கள பாக்க நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ற ஸ்டாப் ஒருத்தர் வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று சொல்ல…

“என்ன பாக்கவா? யார் அவர்?” என்று கேட்டாள் ஷிவு.

“மேடம் அவரு பேரு மிஸ்டர் ரூபேஷ். உங்கள ஒரு 5 மினிட்ஸ் பாக்கணும்னு வெளிய நின்னுட்டு இருக்காரு” என்றால் நர்மதா.

ரூபேஷின் பெயரை கேட்டதும் சாதாரணமாக இருந்த ஷிவுவின் முகம் மாறிவிட… சிறிது யோசித்த ஷிவு, “இல்ல நீ போய் அவர உள்ள வர சொல்லு” என்று சொல்ல….

அவன் ஷிவுவின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவனை நிமிர்ந்து பார்த்த ஷிவு முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டிக்கொள்ளாமல், சாதாரணமாக அவனைப் பார்த்து, “வாங்க மிஸ்டர் ரூபேஷ் உட்காருங்க” என்று சொல்லித் தன் எதிரிலிருந்த சேரைக் காட்டி ஷிவு சொல்ல..

தன்னைப் பார்த்ததும் கத்துவாள் அல்லது கண்ணீர் விட்டுத் தன்னிடம் கெஞ்சி அழுவாள் என்று நினைத்த ரூபேஷிற்கு ஷிவுவின் பதட்டம் இல்லாத முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

“என்ன மிஸ்டர் ரூபேஷ்? என்கிட்ட ஏதோ பேசணும்னு வந்துட்டு இப்படி முகத்தையே பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கீங்க…. சீக்கிரம் நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ அதை சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று ஷிவு ரூபேஷை அவசரப்படுத்த…

“என்ன ஷிவு, என்னப் பாத்து யாரோ மாதிரி பேசுற…. என்ன வெளியே அனுப்புவதிலேயே குறியா இருக்கியே. நான் உன்னைப் பார்த்து உன் கூடப் பேச தானே வந்தேன். என்கிட்ட ஆசையா பேசாம இப்படி யாரோ மூன்றாவது மனுஷன் போலப் பேசுறியே” என்றான் ரூபேஷ்.

“மிஸ்டர் ரூபேஷ், இந்த பேர் சொல்லி உரிமையா கூப்பிடுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். உங்களுக்கு என்கிட்டப் பேச எதுவும் இல்லை என்றால் ப்ளீஸ்” என்று சொல்லித் தன் கையை நீட்டி வாசற்பக்கம் இருக்கும் கதவைக் காட்ட…

“ஓஹோ உனக்கு அந்த அளவுக்குத் திமிர் கூடிப்போயிடுச்சா… பார்க்கிறேன். நீயும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படித் திமிராவே சுத்தப் போறேன்னு. எப்படியும் ஒரு நாள் என்கிட்ட நீ வந்து கெஞ்சத்தான் போற. அது நானும் பார்க்க தான் போறேன்” என்றான் ரூபேஷ்.

“இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்துச்சுன்னா அந்த நொடியே நான் என் உயிரை விட்டுடுவேன். இனியும் நான் உன்கிட்ட இறங்கி வந்து கெஞ்சுவேன்னு நீ எதிர்பார்க்காத ரூபேஷ்” என்றால் ஷிவு கடுமையாக.

அவள் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த ரூபேஷ், “என்ன ஷிவு விளையாடுறியா? உன் வயித்துல வளர குழந்தைக்கு நான் தான் அப்பாங்குறத நீ மறந்துட்டியா? நாளைக்கே நீ கர்ப்பமா இருக்குற விஷயம் வெளியே தெரிஞ்சா, அதுக்கு யாரு காரணம்னு முதல்ல என்னைத்தான் எல்லாரும் கேட்பாங்க. அந்தக் குழந்தைக்கு இனிஷியல் வேண்டும் என்பதற்காகவே நீ என்னை தேடி வந்து தான் ஆகணும்” என்றான் ரூபேஷ் திமிராக.

“என் குழந்தைக்குத் தகப்பன் யாருன்னு யாராவது வந்து என்கிட்டக் கேட்டா, ‘என் குழந்தையோட அப்பா உயிரோட இல்ல. இறந்துட்டாருன்னு நான் சொல்லுவேனே தவிர, உன் கிட்ட வந்து என் குழந்தைக்கு அப்பாவா இருன்னு உன் கிட்டே கேட்டு நான் கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டேன்'” என்றாள் ஷிவு.

அவள் சொன்னதைக் கேட்டு கோபமாகத் தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தவன், அவன் முன்னால் இருந்த டேபிளில் தன் இரண்டு கையையும் அடித்து ஷிவுவைப் பார்த்து, “ஏய் என்னடி திமிரா உனக்கு? நான் உயிரோட இருக்கும்போதே செத்துட்டேன்னு சொல்ற?” என்று அவளிடம் கோபமாக ரூபேஷ் பேச..

அவனைச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் பார்த்த ஷிவு… “நீ எப்படி கோபமா பேசினாலும், கத்திப் பேசினாலும் இதுதான் நிஜம். நீ முதல்ல இந்த ரூம விட்டு வெளியே போறியா? இல்ல இந்த ஆபீஸை விட்டு வெளியே உன்னை அனுப்பட்டுமா?” என்று கேட்டாள்.

“இருடி. நீ எப்படியும் கண்டிப்பா என்கிட்ட ஒரு நாள் வந்து தான் ஆகணும். அப்போ உன்னைப் பார்த்தேன்” என்று சொல்லியவன் கோபமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

அவன் செல்லும் வரை மிகவும் தைரியமாக இருப்பது போல நடந்து கொண்ட ஷிவு, அறையை விட்டு வெளியே சென்று கதவைச் சாத்தியதும் அப்படியே உடைந்து போய் சேரில் விழுந்தாள்.

ரூபேஷ் ஷிவுவின் அறையில் இருந்து கோபமாக வெளியே வருவதைப் பார்த்த நர்மதா ஷிவுவின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர…

உள்ளே வந்த நர்மதா ஷிவு அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்துப் பதட்டமாக அவள் அருகில் வந்து, “மேடம் என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்க..

ஷிவு, “ஒன்னும் இல்ல நர்மதா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. குடிக்கக் கொண்டு வரியா?” என்று கேட்டால்.


விக்கி தண்ணீருக்குள் மூழ்கியதும் மயக்கம் போட்டு விழுந்த நிலானியை கீர்த்திகாவும், ராதாவும் அவள் அறைக்குள் தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்தவர்கள் அவள் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க…

மயக்கம் தெளிந்து எழுந்த நிலானி, ராதாவின் கையைப் பிடித்து, “ராதா.. நீ சொன்னதுனால தாண்டி நான் அவர்கிட்ட வேணும்னே சண்டை போட்டுப் பேசாமல் இருந்தேன். ஆனா இப்போ பாரு என் கண்ணு முன்னாடியே அந்த சுறா மீன் என் புருஷனைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள இழுத்துட்டுப் போயிடுச்சு. நீங்க எல்லாம் ஏன் இங்கே இருக்கீங்க? என் புருஷனைக் காப்பாத்த யாருமே முயற்சி பண்ணலையா? அவரு எங்க? அவரைக் காணோம்” என்று நிலானி பதறியபடி அழுது கொண்டே பேச….

அவளிடம் வந்த ராதா, “ஏய் நிலானி என்ன மன்னிச்சிடு டி… நான் ஏதோ விளையாட்டுத்தனமா அன்னைக்கே சொல்லிட்டேன். ஆனா அது இந்த அளவுக்குக் கொண்டு வந்து விடும் என்று நான் நினைக்கவே இல்ல. என்ன மன்னிச்சிடுடி” என்று சோகமாக ராதா பேச…

நிலானி மிகவும் பதட்டப்பட்டுக் கொண்டு விக்கியைத் தேடுவதைப் பார்த்த கதிர். பின்னால் திரும்பி, “பேபிக்கு போதும்டா. நிலானி பாவம் ரொம்பப் பதட்டப்படுறாங்க… நீ முதல்ல வெளியே வா” என்று அழைக்க…

கதிர் அழைத்ததும் வேறு ஒரு ரூமில் இருந்து விக்கி வெளியே வர… அவனைப் பார்த்ததும் வேகமாக விக்கியிடம் ஓடிய நிலானி விக்கியைக் கட்டிக்கொண்டாள்.

விக்கியைக் கட்டிக்கொண்டு அழும் நிலானியைப் பார்த்த அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured