EPISODE 149
விக்கிக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து கொண்ட நிலானி சந்தோஷத்தில் அவனைக் கட்டிக் கொண்டவள், அவன் உடலில் எதுவும் காயம் இருக்கிறதா என்று அவனைச் சுற்றும் முற்றும் பார்க்க…
“என்னங்க அந்தச் சுறா மீன் உங்க காலைப் பிடித்து இழுத்துதுன்னு சொன்னீங்க. ஆனா உங்க கால்ல சின்ன காயம் கூட இல்லையே” என்று நிலானி கேட்க…
அவள் சொன்னதைக் கேட்ட விக்கி நெளிந்து கொண்டே அவளைப் பார்க்க, “என்ன ஒரு மாதிரியா நெளியுறீங்க? என்ன ஆச்சு?” என்று கேட்டால் நிலானி.
விக்கி எதுவும் பேசாமல் தன் பின்னால் நின்றிருந்த கதிரையும் சந்தோஷையும் பார்க்க…. நிலானி புரியாமல் அவர்களைப் பார்க்க… “என்னடா பாத்துட்டு இருக்க? சொல்லு. அதான் உன் வைஃப் கேக்குறாங்க இல்ல, பதில் சொல்லு” என்றான் கதிர்.
“நீ ஏன் வேற கம்முனு இரு” என்று விக்கி கதிரை எதுவும் பேசாதே என்று சைகை காட்ட…
“நீங்க எல்லாரும் சேர்ந்து என்னவோ என்கிட்ட மறைக்கிறீங்க. இப்ப சொல்லப் போறீங்களா? இல்லையா?” என்றவள், “இப்போ மட்டும் நீங்க என்ன நடந்ததுன்னு சொல்லலைன்னா நானே போய் அந்தச் சுறா மீன் இருக்கிற இடமா பார்த்து உள்ள குதித்து விடுவேன்” என்று நிலானி சொல்ல…
“சுறா மீன் இருக்குற இடத்துக்கு நீ போக வேண்டியது இல்லை. நீ இருக்கிற இடத்துக்கு அது வரும்” என்று சொன்ன விக்கி கதிரைப் பார்க்க…
உள்ளே அறைக்குச் சென்றவன் இனி வரும் பொழுது சுறா மீன் போல உடை அணிந்து வெளியே வந்தான்.
அவனைப் பார்த்ததும் நிலானி ஆச்சரியத்தில் ‘ஆ….’ என்று வாயைப் பிளந்து கொண்டு கதிரையும் விக்கியையும் பார்க்க…
“ஏன் பாத்து விக்கி, என்ன மன்னிச்சிடு நிலா குட்டி. உன்னை என் கூடப் பேச வைக்கணும்னு சொல்லித்தான் கதிர் கிட்ட ‘சுறா நான் வந்து தண்ணிக்குள்ள குதிக்கிறேன். நீ வந்து சுறா மீன் மாதிரி வந்து என் கால் பிடிச்சு உள்ள இழு. நான் நிஜமாவே சுறா மீன் பிடிச்சு என்ன சாப்பிடற மாதிரி நடிக்கிறேன். அப்பத்தான் நீ என்கூடப் பேசுவேன்னு’ அவன் கிட்ட சொன்னேன். ஆனா அதுக்கு முதல்ல அவன் ஒத்துக்கவே இல்ல. நான் கெஞ்சி தான் அவன்கிட்ட இதுக்குச் சம்மதம் வாங்கினேன்” என்றான் விக்கி.
விக்கி சொன்னதைக் கேட்டு ‘இது எல்லாம் நிஜமா?’ என்பது போல நிலானி கதிரைப் பார்க்க…
கதிர் நிலானியிடம் வந்தவன், “என்ன மன்னிச்சிடு நிலானி. இந்த இடியட் சொல்ற பேச்சைக் கேட்டு நான் அந்த மாதிரி நடந்துகிட்டு உன்ன ரொம்ப பயப்படுத்திட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று கதிர் உண்மையாகவே நிலானியிடம் மன்னிப்பு கேட்க…
“இல்ல சார் பரவாயில்ல. நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம். இதுக்கெல்லாம் காரணம் என் புருஷன் தான். நான் இவரை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று சொன்னால் நிலானி.
இனி விக்கி பாடு நிலானி பாடு என்று விட்டுவிட்டு மற்றவர்கள் அந்த அறையை விட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்றதும் நிலானி திரும்பி விக்கியை முறைக்க…
‘உண்மை தெரிந்து விட்டதே’ என்று ஒருவித தயக்கத்தோடு விக்கி நிலானியைப் பார்க்க… அவன் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்த நிலானி அவனைப் பார்த்து, “ஏங்க இப்படி பண்ணுனீங்க? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? உங்களுக்கு எதுவும் ஆயிடுமோன்னு நெனச்சு” என்று நிலானி கூற.
“சாரி நிலா குட்டி. இனிமேல் நீ பயப்படுற மாதிரி நான் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன். உன்னை என் கூடப் பேச வைக்கிறதுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதுதான் சரி, இப்படி கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம் என்று நானும் கதிரும் சேர்ந்து உன் கூட விளையாடினோம். ஆனா நீ இவ்வளவு பயந்து போவேன்னு சத்தியமா நான் நினைக்கவே இல்ல” என்று மிகவும் சங்கடமாக விக்கி கூற…
“சரி விடுங்க. ரொம்ப வருத்தப்படாதீங்க. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க” என்று சொன்னால் நிலானி.
“அப்போ நீயும் என் கூட இப்படி கோச்சிக்கிட்டு பேசாம இருக்கக் கூடாது சரியா?” என்றான் விக்கி.
“சரி” என்று நிலானி தலையாட்ட…. “அப்பாடா! என் பொண்டாட்டியைச் சமாதானப்படுத்த என் உயிரையே நான் பனையம் வைக்க வேண்டியதா இல்ல இருக்கு” என்று சொன்னவன் நிலானியின் அருகில் வேகமாக வந்து அவளைக் கட்டிக்கொள்ள…
அவனை வெட்கத்தோடு பார்த்த நிலானி, “என்னங்க இது பட்டப்பகல்ல? அவங்க யாரும் வந்துர போறாங்க விடுங்க” என்று விக்கியிடம் இருந்து விலகப் போக…
“உனக்கு எதுக்கு நிலா குட்டி பகல் ராத்திரின்னு பாத்துட்டு? பொண்டாட்டி கூடக் கொஞ்சணும்னு நினைச்சா எப்ப வேணா கொஞ்சலாம். அதுவும் இல்லாம நாம இப்போ வந்திருக்கிறது எதுக்காக…..?” என்றான்.
“ஹனிமூனுக்கு” என்றாள் நிலானி வெட்கப்பட்டுக் கொண்டே…
“அப்போ நம்ம ஹனிமூன்க்கு வந்தோமே அந்த வேலை பார்க்கணுமா? வேண்டாமா?” என்றான் விக்கி.
நிலானி வெட்கப்பட்டுக் கொண்டே ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினால்.
விக்கி நிலானியின் முகத்தைப் பிடித்து அவள் இதழில் முத்தம் வைத்தான். விக்கி முத்தம் வைக்கவும் கண்கள் மூடி அவனை வரவேற்ற நிலானி கூச்சத்தில் ஒன்றி அவனோடு நெருங்கி நிற்க… தன்னோடு சேர்த்து நின்றவளைத் தன் இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு படுக்கைக்குச் சென்றான் விக்கி.
துர்காவிற்கு ஹாஸ்பிடலில் செக்கப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாள் என்பதால் ஆதி இன்று ஆஃபீஸிற்கு செல்லவில்லை.
துர்காயையும் ஆதி கையும் பார்த்த டாக்டர், “வாங்க மிஸ்டர் ஆதி ” என்றவர், துர்காயைப் பார்த்து, “ஹலோ துர்கா எப்படி இருக்கீங்க?” என்றார்.
துர்கா, “நீங்க பேசும்போதெல்லாம் இப்படி நல்லா சிரிச்சு தான் பேசுறீங்க. ஆனா திடீர்னு ஊசி எடுத்து எனக்குப் போட்டு விடுறீங்க. எனக்கு ரொம்ப வலிக்குது. உங்களப் பார்த்தாலே நீங்க எனக்கு எதுவும் ஊசி போட்டு விட்ருவீங்களோன்னு பயமா இருக்கு” என்றால் துர்கா குழந்தைத்தனம் மாறாமல்.
டாக்டர், “ஊசி சும்மா சும்மா போட முடியாது இல்லையா? தேவைப்படும்போது ஊசி போட்டுக்கலாம். மற்ற நேரத்துல மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலே போதும் சீக்கிரமா உடம்பு குணமாயிடும்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டியவளைப் பார்த்துச் சிரித்த டாக்டர் துர்காயைப் பரிசோதித்து விட்டு ஸ்கேன்கள் மற்றும் எக்ஸ்ரேவும் எடுக்க அனுப்பி வைத்தார்.
ரிப்போட்டுகள் எல்லாம் வந்துவிட மீண்டும் ஆதி கையும் துர்காயும் உள்ளே அழைத்த டாக்டர், கார்த்திகைப் பார்த்து, “அவங்களோட கால் நம்ம நெனச்சதை விட வேகமாகவே குணமாகிட்டு வருது. நல்ல சத்தான உணவுகளை அவங்களுக்குக் கொடுங்க. அதேபோல துர்கா உடைய தலையில் அடிபட்டுப் பழசையெல்லாம் மறந்து இன்னும் ஞாபகம் வராமல் இருக்காங்க.”
“ஒரே இடத்துல வச்சுக்காம, இதுக்கு முன்னாடி அவங்க எங்க எல்லாம் போனாங்களோ அங்க எல்லாம் கூட்டிட்டுப் போங்க. அதெல்லாம் பார்த்து அவங்களுக்குப் பழைய நினைவுகள் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கு. இப்போ அவங்க மனநிலையும் நல்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாப் பழசு எல்லாம் ஞாபகம் படுத்தினா அவங்க சீக்கிரமே குணமாயிடுவாங்க” என்றார் டாக்டர்.
டாக்டர் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆதி , அவளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு டாக்டரிடம் விடைபெற்று துர்காயை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
துர்கா, “அப்போ நீ தினமும் ஆபீஸ்ல இருந்து லேட்டா வராம சீக்கிரமா வந்து என்ன வெளியே அடிக்கடி கூட்டிட்டு போகணும் சரியா?” என்றால்.
“வெளிய கூட்டிட்டு போகணுமா? ஏன்?” என்றான் ஆதி .
“ஏய் ஆதி , டாக்டர் என்ன சொன்னாங்க? என்ன அடிக்கடி வெளிய கூட்டிட்டுப் போனாதான் எனக்கு எல்லாமே ஞாபகம் வரும் என்று சொன்னாங்களா இல்லையா?” என்று கேட்டாள் துர்கா.
“ஆமா சொன்னாங்க” என்றவன், “அதற்குத்தான் நீ என்ன வெளியே கூட்டிட்டு போகச் சொல்றியா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்ம்ம்….. ஆமா ஆமா. அதுக்கு தான் சொன்னேன்” என்றால் சிறு பிள்ளை போல.
“சரி வா இப்போ நான் உனக்கு ரொம்பப் பிடிச்ச இடத்துக்கு உன்னை கூட்டிட்டு போகட்டுமா?” என்றான் ஆதி .
“அப்படியா!!! என்ன எங்க கூட்டிட்டுப் போகப் போற?” என்று கேட்டால் துர்கா.
“அதை அங்க போகும் போது நீயே தெரிஞ்சுக்குவ” என்று சொல்லி அவளைத் தூக்கிக் காரில் அமர வைத்துவிட்டுச் சென்றான்.
ஆபீஸில் இருந்த சங்கவிக்கு துர்காயை கண்காணிக்கச் சொன்ன ஆளிடம் இருந்து கால் வந்தது. போனை வைத்துவிட்டு அவன் அனுப்பியிருந்த வீடியோவை பிளேயாக ஆரம்பித்தாள்.
அதில் ஆதி துர்காயுடன் டாக்டர் அறைக்குள் நுழைந்ததிலிருந்து டாக்டர் அவரிடம் பேசிவிட்டு வெளியே வருவது வரை வீடியோவாக ரெக்கார்ட் ஆகி இருந்தது. டாக்டர் சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்ட சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் துர்காவிற்கு ப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது என்று அவளுக்கு இப்போது வரை தெரியாது.
துர்காவிற்கு ப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது என்பது இந்த சங்கவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் மற்றொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
‘ஆதி …. துர்காவிற்கு ப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்திடுச்சுன்னு என்கிட்ட இருந்து மறைக்கப் பார்க்கிறாயா?’ என்று நினைத்தவள், எதையோ யோசித்தவாறு யோசனையுடன் திமிராகச் சிரித்தாள் சங்கவி.
விக்கியையும் நிலானியையும் அவள் அறையில் விட்டுவிட்டு ராதாவும் சந்தோஷும் தங்கள் அறைக்கு வர… தங்கள் அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்ததும் ராதா சென்று சோகமாக சோபாவில் அமர்ந்தால். தான் இப்படித் தேவையில்லாமல் நிலானியிடம் விளையாட்டுத்தனமாகச் சொன்னது இன்று எவ்வளவு தூரம் அவர்கள் இருவரையும் கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை நினைத்து மிகவும் வருந்தினால் ராதா.
சந்தோஷ் ராதாவைப் பார்த்து, “உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை எல்லாம்? பாரு உன்னால இந்த நேரம் விக்கியும் நிலானிக்கும் எதுவும் பெருசா பிரச்சனை வந்திருக்கும். அவங்க ரெண்டு பேருமே நடந்தது எல்லாம் எதுவுமே பெருசா எடுத்துக்காம விட்டதால் பரவாயில்லை. இதுவே உன்னை மாதிரி தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுறவளா நிலானி இருந்திருந்தால் இந்த நேரம் விக்கியோட நிலைமையை நினைச்சுப் பாரு” என்றான் சந்தோஷ் கடுப்பாக.
அவன் அப்படிச் சொன்னதும் அதுவரை தலை குனிந்து சோபாவில் அமர்ந்திருந்த ராதா சட்டென்று நிமிர்ந்து சந்தோஷைப் பார்க்க… அப்போதுதான் என்ன பேசினோம் என்று சந்தோஷிற்குப் புரிந்தது.
அவள் தன்னை பார்த்த பார்வையே அவள் வலியை வெளிப்படுத்தியது. உடனே அவள் அருகில் சென்று அமர்ந்த சந்தோஷ், “சாரிடி. நான் வேணும்னு சொல்லல. ஏதோ அப்படியே பேசிட்டு இருக்கும் போதே வந்துருச்சு…” என்று சந்தோஷ் சொல்ல…
“நான் உன்கிட்ட எப்போ பாரு சண்டையை வித்துட்டு இருக்கேன் அப்படித்தானே நீ சொல்ல வர? இது நீ பேசிட்டு இருக்கும்போது வரல. உன் மனசுல இருக்கிறதா வெளியே வந்து இருக்கு. என் மேல தப்பு தான். நான் ஒத்துக்குறேன். இல்லன்னு சொல்லல. அதுக்கு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கும்போது நீ வந்து என்னை ஏதாவது சொல்லியாச்சு சமாதானப்படுத்தி இருக்கணுமா இல்லையா? அதை விட்டுட்டு நீ என்ன இப்படி குட்டிக் காமிச்சிட்டியே. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு யோசிச்சியா?” என்று ராதா வலியோடு சந்தோஷிடத்தில் பேச…
“இல்ல ராதா, நான் வேணும்னு சொல்லி காமிக்கனும்னு அப்படி எல்லாம் உன்கிட்டச் சொல்லல. என்ன மன்னிச்சிடு டி” என்று சந்தோஷ் மன்னிப்புக் கேட்டான்.
“நான்தான் எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வரவில்லை. நீ எதுக்குத் தேவையில்லாம என்கிட்ட மன்னிப்புக் கேட்குற? நான் அப்படித்தான் இருக்கேன்னு நீ நெனச்சுக்கோ. நான் எதையுமே வேணும்னு பண்ணல சரியா? ஏதோ விளையாட்டுத்தனமா செய்றோம்னு நினைச்சு தான் அப்படி நடந்து கொண்டேன்.”
“நமக்குக் கல்யாணம் ஆனதுக்கப்புறம் நான் வேணும்னு தான் உங்ககிட்ட இருந்து விலகி இருக்கிற மாதிரி நடிச்சேன். வேணும்னே உன்ன நான் வம்பு இழுக்கத்தான் அந்த மாதிரி உங்கிட்ட இருந்து விலகிப் போற மாதிரி நடிச்சேன். நீயும் நானும் ஹனிமூனுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்கிட்ட உண்மையெல்லாம் சொல்லி நம்ம வாழ்க்கையைச் சந்தோஷமா ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நீ அதுக்குள்ள என்ன இவ்வளவு பேசிட்ட… எனக்கு உன் மேல சத்தியமா எந்தக் கோபமும் கிடையாது” என்றவள், கண்களில் வலியும் கண்ணீருமாக அவனைப் பார்த்தவள்.
பின் சந்தோஷின் முன் எழுந்து நின்று தன் தலைக்கு மேல் கையைக் கூப்பி, “இத்தனை நாள் உன்கிட்டே அப்படி நடந்துங்கிட்டதுக்கும் நிலானி கிட்ட அப்படிப் பேசினதுக்கும் மொத்தமா சேர்த்து நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்ட ராதா அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விட்டாள்.
ராதா பேசியதெல்லாம் கேட்ட சந்தோஷிற்கு அவள் இவ்வளவு நாள் தன்னிடம் விளையாடி இருக்கிறாள் என்பது இப்போதுதான் புரிந்தது.
தான் அவசரப்பட்டு அவளிடம் பேசி விட்டோமோ இன்னும் கொஞ்சம் பொறுமையாகப் பேசி இருக்கலாம் என்று தோன்றிய சந்தோஷிற்கு.
‘ஓகே தன் மேல் கோபம் இல்லை’ என்று தெரிந்ததும் உள்ளுக்குள் இத்தனை நாள் இருந்த வருத்தம் மறைந்து சந்தோஷ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். இப்பொழுது அவளைக் கட்டிக்கொண்டு தலைக்கு மேல் அவளைத் தூக்கிச் சுற்ற வேண்டும் போல இருக்க, வெளியே சென்று ராதாவைத் தேடி சந்தோஷ் சென்றான்.
மதுவும் பவனும் ஒரு இரவு முழுவதும் ஒன்றாகக் கழித்ததற்குப் பிறகு, அடுத்த நாள் காலையிலேயே மது தெளிவாக அவனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். அவள் சொன்னதிலிருந்து அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
இன்று மாலை பவனும் மதுவும் ஊருக்கு கிளம்பி வரவேண்டும். இன்று ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு மதுவிடம் அனைத்தையும் தெளிவாகப் பேசி விட்டுத் தான் கிளம்ப வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.
பேக்கிங்கை முடித்துவிட்டு ரூமை விட்டு வெளியே வந்த பவன், மதுவும் அப்போதுதான் அவள் அறையிலிருந்து வெளியே வர… அவளைப் பார்த்துச் சிரித்தவள், “எல்லாமே பேக் பண்ணி வச்சுட்டியா பவன்?” என்று கேட்டால்.
“ம்ம்ம்… முடிஞ்சது மது. நீ எல்லாமே பேக் பண்ணிட்டியா?” என்று கேட்டான் பவன்.
“இப்பதான் எல்லாமே எடுத்து பேக் பண்ணினேன் பவன்” என்றால் மது.
“மது ஒரு நிமிஷம்” என்று பவன் மதுவை அழைக்க….
“என்ன? பவன்” என்று நின்ற இடத்திலேயே திரும்பி மது கேட்டால்.
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மது. இப்படி வரியா?” என்று சோபாவை காட்டி அவளை அழைக்க…
“ரொம்ப அவசரமா பவன்?” என்றால் மது.
“இல்லை மது. ஆனால் உன்கிட்ட நான் கண்டிப்பா பேசி ஆகணும்” என்று பவன் முடிவாகச் சொல்ல.
அவனுக்கு அவள் கேட்பதை மறுக்க முடியவில்லை. சரி என்று தலையாட்டி விட்டுச் சோபாவில் அமர….
சமையலறை சென்று சிறிது நேரத்தில் கையில் காப்பியுடன் வந்த மது ஒரு கப்பை அவனிடம் நீட்ட… அதை வாங்கிக் கொண்ட பவன் அவளை அமரச் சொல்லி சைகை செய்ய…. அவன் அருகில் அமர்ந்தால் மது.
“சரி சொல்லு பவன். ஏதோ பேசணும்னு சொன்னியே. என்ன?” என்று கேட்டால் மது.
முதலில் அவளிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று தயங்கிய பவன், இதை விட்டால் பேச வேறு நேரம் சரியாக அமையாது என்று யோசித்தவன், நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “நாம் இரண்டு பேரும் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் மது?” என்று கேட்டான்.
அவன் இந்தக் கேள்வியைக் கேட்டதும், அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காபியை குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு அவளைப் பார்க்க இப்போது வித்தியாசமாக இருந்தது.
“மது எதுவும் பேசாம அமைதியா இருக்கே. நான் உன்கிட்டப் பேசுறது உனக்குக் காதுல விழுதா? இல்லையா?” என்றால் சற்று கடுப்பாக.
“நான் சொல்ல என்ன இருக்கு பவன்? நான் தான் என்னோட முடிவை ஏற்கனவே சொல்லிட்டேனே…”
“ஏன்? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று திருப்பி அவனிடமே மது கேட்டாள்.
இதைக் கேட்டதும் பவன் அப்படியே உடைந்து போய் அமர்ந்து விட்டான்..
