Home FULL NOVEL BOOK (FREE)சொக்கி மயக்கினாள் மினுக்கி PART-1

சொக்கி மயக்கினாள் மினுக்கி PART-1

by Layas Tamil Novel
415 views

EPI 1

அருள் நம் நாயகன் சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வசதி இல்லை என்றாலும் பெயர் சொன்னால் தெரியும் அளவுக்கு சொந்தமாக  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் கிளினிக் ஒன்றை வைத்து நாடத்தி வருகிறான்..

அவன் அம்மா அமுதா அருளிற்க்கு திருமணம் செய்து வைக்க… பல பெண்களை அவனுக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவனுக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்பது அவர் ஆசை கடமை என்று கூட சொல்லலாம்.

இதுவரை நாற்பத்தி ஒன்பது பெண்களை இவனுக்காக பார்த்து இருக்கிறார் ஆனால் அவர்கள் எல்லாம் அருளின் தொழிலும் அவன் வசிதியையும் பார்த்துவிட்டு அவனை வேண்டாம் என்று நிராகரிந்து விட்டனர்.

ஒவ்வொரு பெண்ணின் வீட்டிற்கும் சென்று பெண் பார்த்திவிட்டு வந்த பிறகு வேண்டாம் என்று அவர்களோ இவனோ சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு….

பெண் பார்க்கும் படலத்தை குடும்பத்தோடு சென்று பார்ப்பதை தவிர்த்து விட்டு முதலில் அவன் அம்மா சொல்லும் பெண்ணை எங்காவது வெளியில் காபி ஷாப்பில் அல்லது பொதுவில் ஒரு இடத்தில் வைத்து அருள் மட்டும் சென்று பார்த்து பேசிவிட்டு ஓகே…. என்றாள் அடுத்த கட்டத்திற்கு போகலாம் இல்லை என்றாள் ஒரு காபி ஒரு சந்திப்போடு முடிந்துவிடும்.இதை தான் இப்போது பிலைண்ட் டேட் என்று சொல்கிறார்கள்.

இதுவரை அவன் பார்த்த பெண்களில் காபியுடன் முறித்துக் கொண்டவர்களே அதிகம்.

இன்றும் பிலைண்ட் டேட்டிற்கு தான் செல்கிறான் வழக்கம் போல் இல்லாமல் சற்று ஆடம்பரமான ஹோட்டலில் அவன் அம்மா பிலைண்ட் டேட்டிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

வாடகை காரில் வந்து அந்த ஹோட்டலின் எதிர் புறம் இறங்கிய அருள் வான் உயர்ந்த அந்த SN ஹோட்டலை பார்த்துவிட்டு அவன் அம்மாவை மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டான்

எதற்காக இவ்வளவு பெரிய ஹோட்டலில் தான் பார்க்கப் போகும் பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

தான் பார்க்கும் தொழிலுக்கு இது எல்லாம் ஆடம்பர செலவு என்ற எண்ணம் அவனுக்கு.

 சாலையைக் கடந்து அந்த ஹோட்டல் நோக்கி செல்லலாம் என்று வந்து கொண்டிருந்த அருளின் சற்று தூரத்தில் ஒரு பெரியவர் திடீரென கால் தவறி கீழே விழுவதை பார்த்தவன் .

 அவனுக்கு சற்று தள்ளி கீழே விழுந்த அந்த பெரியவரே தூக்கிவிட கூட சுற்றிலும் யாருமே வரவே இல்லை சாலையை கடந்து கொண்டிருந்தவன் அந்த பெரியவர் கீழே விழுந்ததை பார்த்ததும் நேராக அவர் இடம் வந்தவன் அவர் கையைப் பிடித்து தூக்கி நிறுத்திவிட்டு தாத்தா உங்களுக்கு ஒன்னும் ஆகலையே எங்கும் அடி எதுவும் பட்டு இருக்கா என்று கேட்டான் அவர் உடலில் உள்ள தூசியை எல்லாம் தட்டி விட்டுக் கொண்டேன்.

 அதெல்லாம் எதுவும் இல்லை தம்பி வயதாகி விட்டதல்லவா சாலையை கடக்கையில் சற்று பதற்றப்பட்டு கொண்டே கால் தவறி கீழே விழுந்து விட்டேன் வேறு ஒன்றும் இல்லை என்றார் அந்த பெரியவர்.

 அவனிடமும் கைகுலுக்கி விட்டு ரொம்ப நன்றி தம்பி இத்தனை பேர் என்ன பார்த்துட்டு கடந்து போகையில நீங்க மட்டும் தான் வந்து எனக்கு உதவி செஞ்சீங்க என்று சொல்லி அவனிடம் கை கொடுக்க.

 அப்போதுதான் அருள் அவரை சரியாக கவனித்தான் இதற்கு முன்பு இவரை எங்கேயோ பார்த்தது போல இருந்தாலும் அவரிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளாமல் தனக்கு நேரம் ஆகிவிட்டது அவர்களிடம் சொல்லிக் கொண்டு சரி தாத்தா பார்த்து பத்திரமா போங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தனக்கு எதிரில் இருந்து இந்த ஹோட்டல் நோக்கி செல்ல போக…

அவன் கையைப் பிடித்து நிறுத்திய அந்த தாத்தா இந்த ஹோட்டலுக்கா தம்பி போறீங்க எதுக்காக போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா…. என்று கேட்க.

 எனக்கு பெண் பார்ப்பதற்காக என்னோட அம்மா ஒரு பெண்ணை தேர்வு செய்து இந்த ஹோட்டலில்  இன்று சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவரை சந்திக்கத்தான் நான் செல்கிறேன் என்று சொல்ல….

ஓ சரி தம்பி நீங்க அந்த வழியா போறீங்க தம்பி அது தப்பான வழி இந்த பக்கம் இருக்கிற வழியில் போனா தான்  ஹோட்டல் குள்ள போக முடியும் என்று சொனார்.

இது உங்களுக்கு எப்படி தாத்தா தெரியும் என்று கேட்க நான் தினமும் இந்த பக்கம் தானே தம்பி வந்துட்டு இருக்கேன் அதனால எனக்கு அந்த ஹோட்டலோட வழி எங்க இருக்குன்னு நல்லா தெரியும் என்று சொல்லி அவனை அவன் போக இருந்த வழியை விட்டு வேறொரு வழியில் அனுப்பி வைத்தார் அந்த தாத்தா.

 சரி தாத்தா நான் போகிறேன் நீங்களும் பார்த்து பத்திரமா போங்க என்று அவரிடம் சொல்லிவிட்டு அவர் சொன்ன வழியில் ஹோட்டலுக்குள் உள்ளே  கதவை திறந்து கொண்டு உள்ளே வர…..

ஹோட்டலின் உள் அமைப்பை பார்த்தது ப்ரம்மித்தவன் இந்த இடத்திலா அம்மா என்னை அனுப்பி வைத்து இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டே அவனுக்காக புக் செய்யப்பட்ட டேபிள் என் பதினோன்றை தேடிக்கொண்டே உள்ளே சென்றான்.

அந்த ஹால் முழுவதும் இருந்த டேபிள்கள் காலியாக இருக்க… தூரத்தில் இருந்த டேபிளில் ஒரு ஒரு பெண் கம்பீரமாக கால் மேல் கால்  போட்டு அமர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டு காபி அருந்திக் கொண்டு இருந்தாள்.

தான் செய்து வரும் தொழிலில் தங்களை அழகு படுத்திக்கொள்ள எத்தனையோ பெண்கள் வந்து இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்தவனுக்கு பெண்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து இருந்தது.

ஆனால் இப்போது அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்ணாய் பார்க்கையில் ஏனோ தன்னையும் அறியாமல் அவளை பார்க்க தூண்டுகிற தன் மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். .

இருந்தும் அவன் மனம் அவளை அவனையும் அறியாமல் பார்க்க வைத்திவிட்டது.இவள் முகத்தில் எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் இடம் அளிக்காமல் அவள் முகம் அவ்வளவு அழகாக செதுக்கி வைத்தது போல இருந்தது.அவள் நிறம் பால் வண்ண நிலாவையும் தோற்கடிக்கும் படி பளிச்சென்று இருந்தது… அளவேடுத்தது செதுக்கிய மூக்கு.. தீர்க்கமான…தெளிவான…அதே சமயம் ஆளுமை நிறைந்த பார்வை. காபி பருகிக் கொண்டிருந்த அவள் உதட்டில் லேசான உதடுச் சாயம் அவள் அழகிய உதட்டை மேலும் அழகாக ஆகிக் காட்டியது.அவளை ரசித்துக்கொண்டே மீண்டும் அவள் கண்ணை பார்க்க….

 அவள் தன்னைத்தான் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் அவள் பார்வையை கண்டவன் அதில் இருந்த கூர்மையும் கம்பீரமும் கண்டு சற்று உள்ளுக்குள் பயந்து தான் போனான்.

அவன் பார்த்த பெண்களில் இதுவரை இவளை போல கம்பீரமாகவோ… அழகுடனோ எந்த பெண்ணையும் பார்த்தது இல்லை… அவன் தேடி வந்த பதினொன்றாம் நம்பர் டேபிளில் தான் அவளும் அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகில் வந்தவன் அவளை ஒருமுறை ஆராய்வது போல பார்த்தவன். அவள் அணிந்திருக்கும் ஆடையும் அவள் அமர்ந்து இருக்கும் விதமுமே அவனுக்கு அவள் அவனைப் போல சாதாரண இடத்துப் பெண் இல்லை என்று நன்கு புரிந்துவிட்டது.

இப்படி தங்களை விட வசதியாக இருக்கும் பெண்ணை அம்மா எதற்காக இப்போது பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நினைத்தவன் எதுவும் பேசமால் அவள் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தவன்

தன் எதிரில் இருந்த பெண்ணை பார்க்க… அவளோ இவன் அவள் எதிரில் வந்து அமர்ந்ததை விசித்திரமாக பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன்.

என்னதான் தான் பார்க்க நன்றாக இருந்தாலும் அவள் முன்பு பார்க்கும் போது…. தான் அவள் தகுதிக்கு பொறுத்தம் இல்லாதவன் போல   உணர்ந்தான்.

அவன் அம்மாவின் வற்புறுத்தலுக்காகத் தான் இங்கு வந்து இருக்கிறான் எப்படியும் இந்த பெண்ணும் தன் சம்பளம் வசதி எல்லாம் கேட்டுவிட்டு என்னை வேண்டாம் என்று தான் சொல்லப் போகிறது என்று நினைத்துக் கொண்டு.

ஹலோ… என் பெயர் அருள். நான் ஒரு பிளாஸ்டிக் சர்ஜியனாக உள்ளேன். சொந்தமாக ஒரு கிளினிக் வைத்து இருக்கிறேன். என்னுடைய வயது இருபத்தி ஒன்பது. என்னுடைய ஆண்டு வருமானம் ஆறில் இருந்து ஏழு லட்சம் வரை வருகிறது… நான் இந்த கிளினிக்கை வைத்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. எனக்கு சொந்தமாக வீடோ… காரோ கிடையாது என்று தன்னைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டான்.

எந்த ஒரு ஆணும் தான் பார்க்கும் பெண்ணிடம் தன்னுடைய சம்பளம், வீடு போன்ற விஷயங்கள் குறித்து இவ்வளவு வெளிப்படையாக பேச மாட்டான்.

ஆனால் ஆண்கள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் பொய் பேசி ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்று நினைத்து இருந்தவளின் கண் முன் அவள் எண்ணங்களை எல்லாம் போய் ஆக்கும் பொருட்டு  அமர்ந்து இருந்தவனை பார்த்தவள்.

ஒரு முறை தன்னையும் அறியாமல் அவள் கண்கள் அவளையும் அறியாமல் அவன் முகத்தை ரசிக்கத்தான் செய்தது. அவன் ஒளிவு மறைவு அற்ற பேச்சில் அவள் ஈற்கப்பட்டால் என்று சொல்லாதான் வேண்டும்.

அவனை ஏலனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திமிராக சிரிக்க…

அவளின் ஏளனப் பார்வையும், திமிரான சிரிப்பும் அருளிற்க்கு ஏனோ மனதை கலங்க செய்ய… அதை எதுவும் காட்டிக்க கொள்ளாமல் தன் எதிரில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.

தன் கையில் இருந்த காபி கப்பை டேபிளில் வைத்துவிட்டு

ஐயம் மயோ… என்னுடைய வயது இருபத்தியாறு …  நான் என்னுடைய பிசினஸ் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்சை ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் முடித்து உள்ளேன். என்னுடைய கடந்த வருடத்தின் சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 700 கோடிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நிமிடம் என்னுடைய வரவு எவ்வளவு என்று கணக்கு போட்டால் இன்னும் அதிகமாகதான் வரும் என்றவள் என்னிடம் கார் வீடு இரண்டுமே இருக்கிறது என்றாள் சேரில் சாய்ந்த படி..

அவள் சொன்ன விபரங்கள் அனைத்தையும் கேட்டவன்.

அப்படியே அதிர்ந்து போய்விட்டான்..இங்கு என்ன நடக்கிறது… என் அம்மா எப்படி இவ்வளவு வசதி உள்ள ஒரு பெண்ணை என்னை பார்ப்பதற்கு சம்மதம் வாங்கி இருப்பார்.

ராக்கெட் வைத்து சென்றால் கூட எண்ணுயரத்திற்கு நீ வரமாட்டாய் என்பது போல அவள் நேரடியாக உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று நொடிப்பொழுதில் உணர்த்தி விட்டாள்.

அருளுக்கு அவள் பற்றிய விபரங்கள் அனைத்தும் அவனுக்கு உணர்த்தியது… அவள் முன்பு தான் வசதியில் மிகவும் சிறியவன் என்று தன் மனதில் தோன்றினாலும் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல்.

அமைதியாக இருக்க… அந்த இடமே… அமைதியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல அவ்வளவு அமைதியாக இருக்க….

எப்படியும் என்னை பார்க்க வரும் பெண்கள் எல்லாம் என்னுடைய விபரங்கள் அனைத்தும் தெரிந்த பிறகு அவர்கள் பெயரைக் கூட சொல்லாமல் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.

இவள் தான் முதன் முதலில் தன்னை பற்றிய அனைத்து விபரங்களையும் சொல்லி இருக்கிறாள் என்று நினைக்கையில் ஆச்சரியமாக தான் அவனுக்கு இருந்தது.

நான் என்னுடைய அம்மாவிற்காக தான் இந்த பிலைண்ட் டேட்டிற்கு சரி என்று சொல்லி இங்கு வந்திருகிறேன். உங்களுக்கு என் உடன் டேட் செய்ய சம்மதம் என்றாள்.

உங்கள் அளவுக்கு நான் வசதியாக இல்லை என்றாலும் என்னால் உங்களை எந்த குறையும் இல்லாமல் என்னுடைய வசதிக்கு தகுந்தார் போல் உங்களை நான் ராணி போல் பார்த்துக் கொள்வேன்.

உங்களுடன் சேர்ந்து நான் எல்லா வேலையையும் பிரித்துக்கொண்டு செய்து உங்களுக்கு உதவியாக இருப்பேன். வீட்டு வேலைகளை எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்.உங்களுக்கு எந்த சிறமும் வராத படி நான் உங்களை பார்த்துக் கொள்வேன். உங்கள் வசதி அளவிற்கு இல்லை என்றாலும், என்னிடம் இருக்கும் வசதியிலும் உங்களை என்னால் மகாராணி போல பார்த்துக் கொள்ள முடியும் என்ற அருள்.என் அம்மாவின் முன் மட்டும் நீங்கள்  எனக்கும் என் வீட்டிற்க்கும் உதவுவது போல காட்டிக் கொண்டால் போதும்.

ஏனென்றால் அவருடைய வற்புறுத்தளுக்காக தான் நான் இன்று உங்களை பெண் பார்க்க வந்திருகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்று அவள் பதிளுக்காக அவளைப் பார்க்க.

அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவள் முதலில் மெல்லிய ஒரு புன்னகையை தவழ விட…. அதை பார்த்தவன் மனதிற்குள் சற்று சந்தோசம் வந்து எட்டிப் பார்த்தது.

அந்த சந்தோசம் முழுமையாக வளரவதற்குள்…. மெல்லியதாக சிரித்தவளின் உதடு சற்று அதிகமாக வளைந்து…  தன்னை ஒரு முறை பார்த்துவிட்டு நக்கல் சிரிப்பாக மாறி அந்த அறை முழுதும் பிரதிபலிக்கும் படி சத்தமாக சிரித்தாள்.

எதுவும் புரியாமல் அவளை பார்த்த அருள் எதற்காக சிரிக்குறிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? என்று அவன் கேட்க…

அவனை பார்த்து மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க…

அதை பார்த்து அருளிர்க்கு சற்று எரிச்சல் ஆனது. ஏற்கனவே தங்களை விட வசதியில் அதிகமான பெண்ணை பார்க்க அனுப்பி வைத்த அவன் அம்மாவின் மீது சற்று கோபமாக இருந்தவன். இப்போது தான் எதிரில் இருந்தவளின் ஏளனப் பார்வையும், நக்கலான சிரிப்பும் அவனை மேலும் கோபம் அடைய செய்தது.

இருந்தும் தன்னை சமாதானம் செய்துகொண்டவன் ஆழ்ந்த மூச்ச்சு ஒன்றை எடுத்து தன்னை நிழைப்படுத்திக் கொண்டு எதிரில் இருப்பவளிடம் பொறுமையாக….

மிஸ். மயோ… நீங்க இப்போ எதற்க்காக இப்படி சிரிக்குறிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க…

 இதுவரை எந்த ஆணும் இவனை போல தன்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்று நினைத்தவள்.

 இப்படி எதுவும் தெரியாமல் பேசும்  தன் முன்னே இருப்பவனை பார்த்து மறுபடியும் மயோ சிரிக்க…

அவள் சிரிப்பில் சற்று கடுப்பானவன்

மிஸ் மயோ… நீங்கள் இப்படி நடந்து கொள்வது உங்களுக்கே சற்று அதிகமாக தோன்றவில்லையா?

அவன் சொன்னதும் அவனை பார்த்து சிரித்துக்  கொண்டே…

மிஸ்டர் அருள்… நீங்கள் வந்திருப்பது தவறான இடத்திற்கு….என்றாள்.

என்ன சொல்றிங்க மிஸ் மயோ… எனக்கு புரியலை என்ற அருள்.

மயோவை சங்கடமாக பார்த்த அருளை பார்த்து லேசாக சிரித்த மயோ..நீங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறீர்கள் என்றவள் நான் இங்கு பிலைண்ட் டேட்டிற்கு வரவில்லை என்று மறுபடியும் மயோ சொன்னாள்.

அவள் சிரித்துக்கொண்டே நான் இங்கு பிலைண்ட் டேட்டிற்காக வரவில்லை என்றாள்.

என்ன… என்ன சொல்றிங்க மிஸ் மயோ… அப்போ…அப்போ….இந்த டேபிளில் அதுவும் இத்தனை டேபிள் காலியாக இருக்கும்போது ஏன் எனக்காக புக் செய்யப்படிருந்த டேபிளில் வந்து அமர்ந்து இருக்கிறீர்கள் என்றவன்.

அவன் சொன்னதை கேட்டு அமைதியாக சிரித்தவலை பார்த்து…

இது… இது… டேபிள் என் பதினோன்று தானே? என்றான் கேள்வியாக.

எஸ் மிஸ்டர் அருள் , பட் இது விஐபி க்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம். நீங்கள் உள்ளே வரும்போதே பாத்திருப்பீர்களே.. இந்த இடமே உங்களுக்கு உணர்த்தி இருக்கும் என்று…என்றாள்.

நீங்கள் புக் செய்திருக்கும் டேபிள் என் பதினோன்று அடுத்த ஹாலில் இருக்கிறது அஙகு தான் சாதாரணமாக வருபவர்களுக்கு என்று அமைக்கப்பட்ட காபி ஷாப் இருக்கிறது. நீங்கள் வழி மாறி வந்திருக்கிறீர்கள் என்ற மயோ.

 அதன் வழியாக சென்றால் நீங்கள் புக் செய்து இருக்கும் டேபிலிர்க்கு போகலாம் என்று தான் ஒன்றை விரலை நீட்டி அவனுக்கு வழி காட்டினால்.

அருளிற்க்கு மிகவும் அவமானமாக போய் விட்டது … நான் அப்போது செல்ல இருந்த வழி சரியாக தான் இருந்திருக்கிறது…. ஆனால் அந்த முதியவர் தானே இந்த பக்கம் வழி இருக்கிறது என்று சொல்லி என்னை இங்கே அனுப்பி வைத்தார் என்று நினைத்தவனுக்கு ஏதோ புரிந்தது போல தோன்றியது.

ஒரு தர்ம சங்கடமான நிலையில் தான் இருப்பதை உணர்ந்தவன் சாரி மிஸ் மயோ… நான்.. நான்… என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக அவனுக்காக புக் செய்யப்பட்டு இருந்த டேபிலிர்க்கு சென்றான்.

❤️

ஹலோ. ஃபிரெண்ட்ஸ் 🌹

என்னுடைய மூன்றாவது படைப்பு மயோ THE QUEEN.

என்னுடைய முந்தைய இரண்டு கதைகளுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவை போலவே இந்த கதைக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் ஃபிரெண்ட்ஸ்🌹.

கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்க ஃபிரெண்ட்ஸ்.

நிறை, குறை இருந்தாள் சுட்டிக்கட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் நன்றியுடன்

உங்கள் லயா 💞

❤️

EPI 2

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பிலைண்ட் டேட்டிற்காக SN ஹோட்டலிர்க்கு வந்த அருள் அவன் பார்க்க இருந்த இடத்திற்கு செல்லாமல் விஐபிக்கள் இருக்கும் கஃபேவிற்கு சென்றவன் அவன் பார்க்க வந்த பெண் தான் என்று தவறுதலாக மயோவை பார்த்து அவளிடம் தன்னை பற்றி அறிமுகம் செய்ய.

அவனை பார்த்து சிரித்தவள் நீங்க தவறான டேபிளிர்க்கு வந்து வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மயோ.

 அப்போ இது டேபிள் நம்பர் 11 இல்லையா என்று கேட்டால் அருள்

 அவள் சிரித்துக் கொண்டே இது டேபிள் நம்பர் 11 தான் ஆனால் விஐபிகள் மட்டுமே இருக்கக்கூடிய கஃபே இது என்று சொன்னவள் நீங்கள் புக் செய்து இருக்கும் டேபிள் அதோ அந்த கதவை தாண்டிச் சென்றால் அங்கே இருக்கிறது என்று சொல்லி அவனுக்கு தன் ஒற்றை விரல் நீட்டி வழியை காண்பித்தாள் மயோ .

 தான் தவறாக வேறு ஏதும் வந்ததை நினைத்து வருத்தப்பட்ட அருள் மயோவிடும் உண்மையாக மன்னிப்பு கேட்டவன் அவளை பார்க்க முடியாமல் அங்கிருந்து வேகமாக அவன் ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த டேபிளுக்கு சென்றான்.

தான் எவ்வளவு பெரிய தவறை செய்திவிட்டோம். அந்த பெண் அப்படி சிரித்ததில் தவறேதும் இல்லையே… எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டதே.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டு அங்கிருந்து சென்றான்.

 அருள் மயோவின் டேபிளை விட்டு சென்ற சிறிது நேரத்தில் அவள் அருகில் வந்த ஒரு முதியவர் அவள் எதிரில் வந்து அமர்ந்தார்.

அருள்  கீழே விழுந்த முதியவருக்கு உதவி செய்தானே அந்த பெரியவர் தான் மயோவின் டேபிளுக்கு எதிரில் வந்து அமர்ந்தார்.

அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தாத்தா…. இது உங்களுடைய வேலைதானா? என்றாள் மயோ.

அந்த ஹாலே அதிரும் படி சிரித்தவர்… கண்டு பிடிச்சுட்டியா என்றார் ஆச்சர்யமாக.

அவள் அருகில் வந்து அந்தப் பையனை பார்த்தாயா நீ சந்தித்த இத்தனை வருடத்தில் எந்த ஒரு ஆண்மகனாவது  உன்னை நேருக்கு நேராக சந்தித்து உன் அருகில் அமர்ந்து இவ்வளவு நேரம் பேசி இருக்க முடியுமா??

இதிலிருந்து தெரிய வேண்டாம் உன்னை கண்டதும் தெறித்து ஓடும் ஆண்களுக்கு இடையில் இவன் தைரியமாக உனக்கு எதிரில் அமர்ந்து இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தான்…

உன்னை நேருக்கு நேர் பார்த்த உடனே தெரிந்து இருக்கும் நீ வசதியானவள் என்று அப்படி இருந்தும் அவன் உன்னிடம் பேசிய விதத்திலேயே தெரிய வந்திருக்குமே அவன் எவ்வளவு நேர்மையாக இருக்கிறான் கவனித்தாயா என்ற மயோவின் தாத்தா.

ம்ம்ம்ம்…. என்று மட்டும் தலையை ஆட்டியவள். என்ன இன்று அவன் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிங்க தாத்தா.. காரணம் இல்லாம நீங்க யாரையும் இவ்வளவு உயர்வா பேச மாட்டீங்களே யார் அது என்று அவர்களை விட்டு தூரத்தில் சென்று கொண்டு இருந்த அருளைக்கு காட்டி கேட்டாள் மயோ.

அவர் சிரித்தவாறே…. என் பேத்திக்கு ஏற்றவனாக தேர்ந்து எடுத்து ஒரு நல்ல ஆண் மகனாக உனக்கு திருமணம் செய்து வைக்கவே, நன்றி இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்று சொன்னவர் சற்று முன்பு நான் வெளியில் தவறி கீழே விழுந்து இருக்க நடைபதியில் சென்ற யாருமே எனக்கு உதவ செய்யாத போது இவன் ஒருவன் மட்டுமே தானாக வந்து எனக்கு உதவி செய்து என்னை தூக்கி விட்டவன் என்னிடமிருந்து எந்த சன்மானமும் எதிர்பார்க்காமல் சென்று விட்டான் என்று சொல்லி அருளை பற்றி நல்ல அபிப்ராயத்தை மயோவிடம் கூறினார்.

 ஓஹோ அங்கே இருந்ததிலேயே உன் உருவம் தான் நல்லவனா உங்கள் கண்ணுக்கு இவன் மட்டும் தான் நல்லவனாக தெரிந்தன என்று மயோ கிண்டலாக கேட்க 

 அவர் சிரித்துக் கொண்டு நீ வேண்டும் என்றால் பார் அவன் நிச்சயமாக நான் எதிர்பார்ப்பவன் போல உனக்கு தகுந்தவன் ஆகத்தான் இருக்க வேண்டும் எனக்கு அந்த நம்பிக்கை அவனை சந்தித்த முதல் நிமிடத்திலேயே தெரிந்து விட்டது என்று சொன்னார் மயோவின் தாத்தா.

 நான் தேர்ந்தெடுத்தவனைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று எனக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்திருக்கிறாய் அதை மறந்து விடாதே என்றார் மயோவின் தாத்தா செழியன்.

 என்னதான் நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அவன் நான் வைக்கும் டெஸ்ட் அனைத்திலும் பாஸ் செய்தால் மட்டுமே நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கண்டிஷனும் சொல்லி இருக்கிறேன் அதையும் நீங்களும் மறந்து விடாதீர்கள் என்றால் சிரித்துக் கொண்டே.

 பலமாக சிரித்த செழியன் எனக்கு நல்ல ஞாபகம் இருக்குமா உன்னோட டெஸ்ட் எல்லாத்தையும் அவன் கண்டிப்பா பாஸ் செய்துவிடுவான் என்ற எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப கூட நீ பார்த்தியா அவனுக்கே தெரியாமல் உன்னுடைய முதல் கண்டிஷஜூலை  அவன் பாஸ் செய்து விட்டானா? இல்லையா? என்று மயோவாய்ப்பு பார்த்து கேட்டார்.

 நான் ஒன்றும் அவனுக்கு பரிட்சை வைக்கவில்லையே தாத்தா அவனாகத்தானே வந்து என்னிடம் அமர்ந்து எவ்வளவு நேரம் பேசி விட்டு சென்றான் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அவள் சொல்ல

 அப்படி எல்லாம் சொல்லி நழுவி விட  பார்க்கிறாயா நீ…. அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் உன்னிடம் தைரியமாக நேருக்கு நேராக அமர்ந்து பேசும் ஒரு ஆண் மகனை யாரோ அவன் தாண் உன்னுடைய முதல் டெஸ்டில் பாஸ் செய்வதற்கு தகுதியானவன் என்று சொன்னாயே…. இவன் இவ்வளவு நேரம் உன்னிடம் அமர்ந்து பேசிக் கொண்டு தானே இருந்தேன் என்று அவள் தாத்தா அருளுக்கு சாதகமாக பேச.

 அவன் இடம்  மாரி வந்து விட்டான் தாத்தா என்றால் மயோ.

 உன்னிடம் வந்து நேருக்கு நேராக அமர்ந்து அவனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஒன்று கூட விடாமல் மறைக்காமல் சொன்னானா? இல்லையா? என்று கேட்டார் அவன் தாத்தா

 மாயோவும் ஆம்…. என்று ஒப்புக் கொண்டால் 

 உன்னோட கண்டிஷனில் இதுவும் ஒன்று தானே என்றார் செழியன்.

ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

ம்ம்… பிறகு என்ன உன்னோட முதல் டெஸ்டில் பாஸ் பண்ணிட்டானா? இல்லையா? என்றார் செழியன்.

ம்ம்ம்… என்று மட்டும் தலையை ஆட்டிவிட்டு தான் அருகில் நின்று இருந்த அவள் மேனேஜரிடன் அன்றைய தனது அப்பாயின்மெண்ட் பற்றி கேட்டுக் கொண்டு இருந்தாள்.

❤️

மயோவை பார்த்துவிட்டு வந்த அருள் சங்கடத்துடனே அவனுக்காக புக் செய்ய பட்ட டேபிள் என் பதினோன்றை தேடி சரியா வர…

அவன் டேபிளில் அவனுக்காக பார்த்து இருந்த பெண் இன்னும் போகாமல் அங்கேயே இருப்பதை பார்த்து சற்று நிம்மதி அடைந்தவன் நேராக அவன் டேபிலிர்க்கு வந்தவன்.

ஹலோ ஐயம் அருள். சாரி கொஞ்சம் லேட் ஆகிருச்சு என்றான் மிகவும் வருத்தத்துடன்.

அந்த பெண்ணும் பரவாயில்லை என்றாள் அமைதியாக… தான் இவ்வளவு நேரம் லேட் ஆக வந்ததனால் தன்னிடம்  கோபப்படாமல் பொறுமையாக நடந்து கொண்டவளை பார்த்து உள்ளுக்குள் அவள் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் உருவானதை அருளால் உணர முடிந்தது.

என் பெயர் அருள். நான் ஒரு பிளாஸ்டிக் சர்ஜியனாக உள்ளேன். சொந்தமாக ஒரு கிளினிக் வைத்து இருக்கிறேன். என்னுடைய வயது இருபத்தி ஒன்பது. என்னுடைய ஆண்டு வருமானம் ஆறில் இருந்து ஏழு லட்சம் வரை வருகிறது… நான் இந்த கிளினிக்கை வைத்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. எனக்கு சொந்தமாக வீடோ… காரோ கிடையாது என்று தன்னைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மயோவிடம் கூறியதை அனைத்தையும் தன் எதிரே இருந்த பெண்ணிடம் சொல்லிவிட்டான்.

அவன் சொன்னதை கேட்டு சிரித்த அந்த பெண் உங்கள் பயோடேட்டா இம்ப்ரெசிவ் ஆக உள்ளது என்று சொல்லி சிரித்தாள்.

அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை தன்னை பற்றி விபரங்கள் கேட்டதும் எழுந்து செல்லலும் பெண்களுக்கு மத்தியில் இரண்டாவதாக இந்த பெண் மட்டும் தான் நான் சொன்ன விபரங்களை லேசாக எடுத்துக் கொண்டால்.

அப்போ எந்த முதல் பொண்ணு யாருன்னு கேக்குறீங்களா.. வேற யாருங்க கொஞ்ச நேரம் முன்ன நம்ம ஹீரோ டேபிள் மாற்றி உட்கார்ந்துந்து கொண்டு தன் விபரம் முழுதும் மயோவிடம் சொன்னானே அவள் தான் அருள் பற்றிய விபரம் கேட்ட பிறகும் எழுந்து செல்லாமல் இருந்த முதல் பெண்.

இரண்டாவதாக இப்பொது அருளின் முன் சிரித்த முகமாக இருந்த பெண் தான்.

அருள் யோசனையோடு அமர்ந்து இருந்ததை பார்த்து அவன் எதிரில் இருந்த பெண் அவன் முகத்தின் முன் தான் கையை ஆட்டி… ஹலோ… ஹலோ… மிஸ்டர் அருள்.. என்று அவனை அழைக்க.

அதில் சுயம் வந்தவன் சாரி என்று அவளிடம் சொல்லிவிட்டு.

என்னை பற்றி சொல்லிவிட்டேன் உங்களை பற்றி சொல்லுங்க…. என்றான் அருள்.

ஐயம் நிஷா… நான் நர்சிங் முடிச்சுட்டு இரண்டு வருடமாக  SN ஹாஸ்பிடலில் நர்ஸ் ஆக உள்ளேன். நான் என் அம்மா அப்பா அப்பறோம் என்னோட தம்பி இவ்ளோ தான் என்னோட குடும்பம்.

என் அப்பா ஒரு தனியார் கம்பெனியில் பியூன் ஆக வேலை செய்கிறார். என் அம்மா ஹவுஸ்வைப் ஆக உள்ளார். என் தம்பி இப்போது  காலேஜ் செல்கிறான் என்று தன்னை பற்றி சுருக்கமாக சொன்னாள்.

அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டவன். அளவான பேமிலி பைன் என் வீட்டில் நான் என் அம்மா, என் தங்கை மட்டும் இருக்கிறாள் என்றான் அருள்.

ஓகே மிஸ்டர் அருள் நம்ம பேமிலி பற்றி பேசியாச்சு இப்போ நம்மை பற்றி பேசலாமா என்றாள்.

அவன் நான் நேராக விஷயத்திற்கு வருகிறேன்.

மிஸ் நிஷா உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்றான்.

அவள் ஒரு சிறு புன்னகையுடன் ஆம என்று தலையை ஆட்டினால்.

அவள் சம்மதம் சொன்னதும் அருளின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.ரொம்ப சந்தோசம் மிஸ் நிஷா…

நான் என்னோட கண்டிஷன்ஸ் எல்லாம் சொல்லிடறேன் என்றவன். என்னோட மாத வருமானத்தில் இருந்து உங்களுக்கு நான் வீட்டு செலவுகளுக்காக ஒரு தொகையை கொடுத்துவிடுவேன். அதை வைத்தி தான் நீங்கள் குடும்ப செலவுகள் எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன அம்மாவும் தங்கையும் என்னுடன் தான் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவற்றை நான் செய்யும்போது நீங்கள் அதில் கூறுகிட்டு அவர்களுக்கு நான் செய்வதை தடுக்கக் கூடாது. மூன்றாவது உங்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தாள் அதுவும் நீங்க நர்ஸ் ஆக பணிபுரிவாதல் கேட்கிறேன்.

நம் திருமணத்திற்க்கு பிறகு என்னுடைய கிளினிக்கில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்கள் வேலைக்கான சம்பளம் உங்கள் அக்கௌன்ட்டில் வந்துவிடும். அந்த பணத்தை நீங்கள் எந்த செலவுக்கு உபயோகித்தாலும் நான் கணக்கு கேட்க மாட்டேன் என்று சிரித்தான்.

நிஷாவும் சிரித்துக்கொண்டு வீட்டு செலவு கணக்கும் என்னை கேட்கக்கூடாது என்றாள் சிரித்துக் கொண்டே.அவளுடன் சேர்ந்து அவனும் சிரித்தான்.

பிறகு இருவரும் பல கதைகள் பேசிவிட்டு அங்கிருந்த படியே தங்கள் பெற்றோருக்கு போன் செய்து இருவரின் சமாதத்தையும் சொல்ல அருளின் வீட்டில் இருந்த அவன் பெற்றோருக்கும், நிஷாவின் பெற்றோக்கும்  சந்தோசமே.

இருவரும் ஒன்றாகவே அருளின் வீட்டிற்க்கு செல்வதாக கிளம்பினர்.அவர்கள் இருவரும் அந்த  காபி ஷாப்பை விட்டு ஒன்றாக வெளியே கிளம்பிச் சென்றனர்.

❤️

இங்கு நடந்ததை அவர்கள் பேசியதை எல்லாம் தான் டேபிளில் அமர்ந்து கொண்டு பார்த்துக்கொண்டு அம்ர்ந்து இருந்தாள் மயோவும் அவள் தாத்தா செழியனும்.

அவர்கள் சென்றதும் செழியன் மயோவிடம் பார்த்தாயா… அங்கு நடந்ததை எல்லாம் கவனிதாயா மாயோள்… அவனுக்கு இன்னோரு பேன்னுடன் திருமணம் உறுதி ஆகிவிட்டது.

உனக்கு கிடைத்த ஒருவனும் இப்போது வேறு ஒருத்திக்கு சொந்தம் ஆகப்போகிறான்.

நீ இப்படியே இருந்தாள்…. நான் எப்போது தான் என் பேத்தியின் திருமணத்தை பார்க்க முடியும் சொல்.

கொஞ்சமாவது இந்த தாத்தாவிற்காக நீ இறங்கி வரக்கூடாதா என்றார்.

அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாதவள் தாத்தா…. இப்போது வந்திருந்தவன் தான் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய சம்மதம் சொல்லி போய் விட்டானே பிறகு என்ன என்றாள் மயோ.

நான் உன்னை அவனையே திருமணம் செய்து கொள்ள சொல்ல வில்லை அவனை போன்றே வேறு ஒருவனை நான் உனக்கு பார்க்கிறேன் நீ சரி என்று மட்டும் சொல் போதும் என்றார்.

அவரை வேண்டும் அளவு முறைத்துவிட்டு தாத்தா… சரி நான் சம்மதிக்குறேன் என்றாள் மயோ.

அவள் சம்மதம் சொன்னதும் தன் பேத்தி அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள் என்று மிகவும் சந்தோசப்பட்டார்.

ஆனால் அவனை போன்றே ஒருவன் வேண்டாம் என்றவள் இடை நிறுத்தி சற்று முன் அருள் அமர்ந்து இருந்த இடத்தை பார்த்துவிட்டு….அவனையே திருமணம் செய்ய எனக்கு சம்மதம் என்றாள் மயோ.

மயோ திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டால் என்ற சந்தோசத்தில் இருந்தவர். இப்போது வேறு ஒரு பெண்ணுடன் சற்று முன் தன் திருமணத்தை உறுதி செய்தவனையே திருமணம் செய்ய சம்மதம் சொல்லும் தன் பேத்தியை என்ன சொல்ல என்று தன்னையே நொந்து கொண்டார்.

மாயோள் நீ சொல்வது என்று புரிந்து கொண்டு தான் பேசுகிறாயா… அவனுக்கு உன் கண் முன்னே தான் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் உறுதியானது அதை பார்த்த பிறகும் அவனை தான் திருமணம் செய்வேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றார் செழியன்.

அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த பெண்ணை அவன் திருமணம் செய்ய மாட்டான் என்றாள் மயோ.

என்ன சொல்றே மாயோள் என்று புரியாமல் தன் பேத்தியை பார்க்க….

அந்த பெண் அவனிடம் நடிக்கிறாள் அவள் ஒன்றும் அவனை பிடித்து இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டாள் என்றவள் எழுந்து செல்லப் போனவள் திரும்பி தன் தாத்தாவை பார்த்து.

அவன் என்னுடைய டெஸ்டில் பாஸ் செய்தால் மட்டுமே அவனை திருமணம் செய்வேன் அப்படி இல்லை என்றாள் என்னை திருமணம் செய்ய வற்புறுத்தக்கூடாது என்று சொல்லி விட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டால்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செழியன் தன் கார்டஸ்களை அழைத்து அருளை பற்றிய  ஒவ்வொரு தகவலும் எனக்கு வந்து சேரவேண்டும் என்று கட்டளை இட்டவர் .

தன் பேத்தி சொன்னது போல அருளுடன் இருந்த பெண்ணை பற்றிய முழு விபரம் அவள். யார்? அவள் குடும்பம் என்ன எல்லா தகவல்களும் எனக்கு வேண்டும்.

நான் சொல்லும் வரை அவர்கள் இருவரையும் பற்றிய அனைத்து தங்கவல்களும் எனக்கு அவ்வப்போது அப்டேட் செய்ய சொல்லிவிட்டு அவரும் அங்கிருந்து கிளம்பினார்.

EPI 3

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நிஷாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு தங்கள் திருமணம் குறித்து பேச அருளின் வீட்டிற்கு வந்தான்.

அங்கே ஏற்கனவே நிஷாவின் குடும்பம் வந்து இருந்தது.

அருளின் அம்மா அமுதா அருளும் நிஷாவும் சிரித்த முகமாக அவர்கள் வீட்டிக்குள் வர… அதை கண்டு அமுதாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதனை வருடமாக அவர் மகனுக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று கவலையில் இருந்தார். ஆனால் இன்று அவர் கவலைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல… அவர் கண் முன்னே அருளும் நிஷாவும் அமர்ந்து இருந்தனர்.

நிஷா தன் அப்பா தங்கவேலு, அம்மா சாவித்ரி, அவள் தம்பி ராகுலையும் அறிமுகம் செய்து வைத்தால்.

அவர்களிடம் அருள் தன்னை அறிமுகேம் செய்து கொண்டவன் தன் அம்மா அமுதாவையும், தங்கை மீராவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நிஷாவின் அம்மா தன் அடுத்து பேச்சை ஆரம்பித்தார். அடுத்து கல்யாண விஷயம் பற்றி பேசலாமா என்று ஆரம்பித்தார்.

அவர் ஆரம்பித்ததும் அருள் அவரிடம் ஆன்ட்டி கல்யாணத்தை ரொம்ப சிம்பிள் ஆஹ் வெச்சுக்கலாம் ஆன்ட்டி நீங்க நிஷாவிற்காக எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு வரதட்சணை வாங்குவதில் உடன்பாடு கிடையாது என்று வெளிப்படையாக பேசினான் அருள்.

சரிங்க தம்பி, உங்களுக்கு வரதட்சணை வாங்க பிடிக்காது சரி ஆனா எங்க பெண்ணை கல்யாணம் பண்ணணும்னா நீங்க தான் எங்களுக்கு வரதட்சணை கொடுக்கணும் என்று அவர் பேச….

அவரை புரியாமல் பார்த்த அருளை பார்த்துவிட்டு என்ன அமுதா நீங்க உங்க பையன் கிட்டே எதுவும் சொல்லலையா? என்றவர் திரும்பி அருளிடம் பேசப்போக…

அதற்குள் அருளின் அம்மா சாவித்ரி… அது எல்லாம் பெரியவர்கள் பேச வேண்டியது…. நாம் இதை பார்த்துக் கொள்ளலாம். அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் நடக்கப் போற சந்தோஷதுல இருக்கட்டும் மத்ததை எல்லாம் நம்ம பார்த்துக்கலாம் என்று சொன்னார் அமுதா.

 அவர் சொன்னதை கேட்டு சாவித்திரியும் சரி அமுதா நீ சொல்றதும் சரிதான் சின்னஞ்சிறுசுங்களுக்கு இப்பவே அது எதுவும் சொல்லி அவங்க மனசு நம்ம சங்கடப்படுத்த வேண்டாம் நம்மளே எல்லாம் பேசிக்கலாம் என்று சொல்ல இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அருளுக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்ற….

ஆன்ட்டி நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க… எதையும் எங்களுக்கு தெரியாமல் பேச வேண்டாம். நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் தானே ஒன்னா சேர்ந்து வாழ போறோம். எங்களுக்கு தெரியாமல் நீங்கள் இருவரும் எதுவும் பேச வேண்டாம் எதுவும் செய்யவேண்டாம் என்ற அருள் திரும்பி நிஷாவிடம் நான் சொல்லவது சரிதானே நிஷா? என்றான்.

அருள் இப்படி தன்னிடம் கேட்டதும் சற்று தடுமாற்றதுடன் அ.. ஆமா… அருள் என்றாள்.

பிறகு என்ன ஆன்ட்டி எதுவா இருந்தாலும் வெளிப்படையா இப்பவே பேசிடுங்க என்றான்.

சரி தம்பி நீங்க இவ்வளவு சொன்ன பிறகு நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன்.

நீங்க வரதட்சணை எங்க கிட்டே இருந்து வாங்க விருப்பம் இல்லையினு சொல்லிட்டிங்க…. ஆனா என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறவங்க   எங்களுக்கு நாங்க கேக்குற வரதட்சணையை கொடுத்துட்டு அதுக்கு பிறகு என் பொண்ணை கல்யாணம் பணிக்கங்க என்றார் சாவித்ரி.

இதை சற்றும் எதிர் பார்க்காத கதிர் ஆன்ட்டி இது என்ன புதுசா இருக்கே… வழக்கமா பெண் வீட்டார் தானே வரதட்சணை கொடுப்பாங்க… அதையும் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா நீங்க என்ன புதுசா சொல்றிங்க என்றான் அருள்.

வரதட்சணை வேண்டாம் என்று நீங்கள் பெருந்தன்மையாக சொல்லலாம் தம்பி…. ஏன்னா நீங்க என் பெண்ணை கல்யாணம் பண்ணின  பிறகு உங்க அம்மா தங்கையோட அவங்க கூட தான் இருப்பிங்க….

ஆனா என் பொண்ணு உங்களை கல்யாணம் பன்னிட்டு உங்களுக்கு கூட உங்க வீட்டுக்கு வந்திடுவா….

அவ உங்க வீட்டுக்கு வந்த பிறகு நாங்க எங்க செலவுக்கு எல்லாம் என்ன செய்றது அதனால் தன் எங்களுக்கு வர மாப்பிள்ளை என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள நாங்க கேக்குற தொகையை திருமணத்திற்கு முன்பே கொடுக்கணும்னு சொல்லி தான் என் பெண்ணை உங்களை பார்க்கவே அனுப்பி வைத்தேன்.

உங்க அம்மாகிட்டே நாங்க எங்களுக்கு என்ன எல்லாம் வேணும்னு சொல்லித்தான் பெண் நாங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தோம்.

அதனால தான் என் பொண்ணு உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதமே சொன்னா… என்று சாவித்ரி சொல்ல.

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அருள் அப்போ நீ…. நீங்க ஏற்கனவே என் வீட்டில் பேசி தான் என்னுடன் பிலைண்ட் டேட்டிற்கு வர சம்மதம் சொன்னீர்களா!!! என்று அருள் கேட்க.

நிஷாவும் ஆமா அருள் நாங்க ஏற்கனவே எங்க கண்டிஷன்ஸ் எல்லாமே சொல்லிட்டோம் அதனால தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்.

இல்லையென்றான் நீங்கள் சொன்ன உங்கள் வருட வருமானத்தை வைத்துக்கொண்டு நான் எப்படி உங்களுடன் நான் நினைத்த வாழ்க்கையை வாழ முடியும் என்றாள் நிஷா.

அவள் இப்படி பேசுவாள் என்று அருள் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியோடு அவன் அம்மாவை திரும்பிப் பார்த்தவன். அம்மா… சொல்லுங்க இன்னும் எனக்கு தெரியாம என்ன எல்லாம் இவங்க கிட்டே பேசி இருக்கீங்க… எதுவும் மறைக்காம என்கிட்டே சொல்லுங்க என்றான் அருள்.

அருள்… அது.. அது.. வந்து நீ எதுவும் பெரிதாக நினைக்க வேண்டாம் அருள். இது எல்லாம் வழக்கமான ஒன்று தான் நாங்கள இதை பார்த்துக் கொள்கிறோம் நீ எதை பற்றியும் கவலை படாமல் அமைதியாக இரு என்று அவர் சொல்ல….

அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க… என்றவன் சாவித்ரியிடம் திரும்பி ஆன்ட்டி… நீங்க சொல்லுங்க எங்க அம்மா கிட்டே நீங்க வரதட்சணையாக எவ்ளோ கேட்டிருக்கீங்க… நீங்க என்ன கேட்டிருக்கீங்க என்று எனக்கு தெரிந்தால் தான் அதை எங்களால் கொடுக்க முடியுமா முடியாதா என்று நான் தெரிந்து கொள்ளலாம் என்றான் அருள்.

சரி தம்பி நான் நேரா விஷயத்துக்கு வரேன். என் பொண்ணை கல்யாணம் பன்னுறதுக்கு முன்னே… என் பொண்ணு பேரில் ஐந்து லட்சம் டெபாசிட் பண்ணிடனும்….உங்களுக்கு கிளினிக்கில் வருகிற வருமானத்தில் பாதி மாதா மாதம் என் பொண்ணு அக்கௌன்ட்டில் மாசம் ஒன்னு ஆனா வந்திடனும்….

கல்யாண செலவு முழுக்க நீங்களே ஏத்துக்கணும்… அப்பறோம் எங்க பொண்ணு உங்க வீட்டுக்கு வந்த பிறகு நாங்க அவளை அடிக்கடி வந்து பார்த்துட்டு போக வரதுக்கு எங்களுக்கு ஒரு கார் வாங்கி தரணும் அதுவும் என் பயனுக்கு பிடித்த கார் அவன் பேரில் ரெஜிஸ்டர் செஞ்சு தரணும் இவ்வளவு தான் நான் உங்க அம்மா கிட்டே கேட்டேன்.

உங்க அம்மாவும் இதுக்கு எல்லாம் சரின்னு சம்மதம் சொல்லிட்டாங்க என்றார்.

சாவித்திரி சொன்னதைக் கேட்டதும் அருள் அவன் அம்மாவை பார்த்து அம்மா இதற்கு எல்லாம் நீங்களும் சரி என்று சொல்லிவிட்டிர்களா!!?? என்றான் அதிர்ச்சியாக.

அமுதாவும் தயங்கிய வாறே…. நல்ல வரன் வந்தது அருள் அதனால் தான்…. என்று அவர் தயங்கி நிற்க…

ஏன் அம்மா அவங்க கேட்பதை எல்லாம் கொடுக்க சம்மதம் சொல்லி இருக்கீங்க…. அவங்க கேட்டதை எல்லாம் கொடுக்க உங்க கிட்டே அவ்வளவு பணம் இருக்கா… என்றான் அருள்.

அவன் அப்படிக் கேட்டதும் என்னோட பென்ஷன் பணம் வைத்து தான் இதை எல்லாம் செய்ய சம்மதம் சொன்னேன் அருள். நீ பணம் இல்லை என்று யோசிக்க வேண்டாம் என்றார்.

அவர் அப்படி சொன்னதும் எங்க பென்ஷன் பணம் எல்லாம் அவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க என்ன செய்ய போறீங்க… அப்பறோம் மீராவோட திருமணத்திற்கு என்ன செய்ய போகிறீர்கள்.

அந்த பணம் உங்கள் எதிர்காலத்திற்கும் மீராவின் திருமணத்திற்காகவும் அப்படியே வைத்திருக்க போவதாக சொல்லிவிட்டு இப்போது இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் பெண் எடுப்பதற்காக உங்களுடைய மொத்த உழைப்பையும் கொட்டி கொடுக்க உங்களுக்கு எப்படி அம்மா மனது வந்தது.

என்னிடம் இதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்க உங்களுக்கு தோன்ற வில்லையா… அப்படி இருக்குற எல்லாவற்றையும் அவங்க கிட்டே கொடுத்துட்டு எனக்கு நல்ல வாழ்க்கை அமைகிறேன் என்று சொல்லுவிட்டு நீங்கள் இருவரும் நடு ரோட்டிற்கு வர தயாராகி விட்டீர்களா என்றான் இயலாமையுடன்.

அருள்…. அப்படி எல்லாம் இல்லை பா… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா… உனக்கு இதுவரை எவ்வளவு பெண் பார்த்து இருப்போம் அவங்க எல்லாம் கேட்டதை விட இவங்க ஒன்னும் அதிகமா கேட்கலை அருள்.

இந்த வரணையும் விட்டுவிட்டால் பிறகு உன் கல்யாணம் இன்னும் தள்ளி போய்க் கொண்டே இருக்கும் அருள் என்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டாவது இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் சொல் என்றார் அமுதா.

அம்மா நீங்க என்ன சொன்னாலும் நான் இந்த மாதிரி ஒரு திருமணத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன் என்றவன் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் நிஷாவை பார்த்து சாரி மிஸ் நிஷா இந்த கல்யாணம் நடக்காது நீங்க கிளம்பலாம் என்று வாசல் நோக்கி கையை காட்ட…

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் இல்லை… இல்லை… அமைதியாக இருப்பது போல நடித்தவள் இப்போது அருள் தன்னை வேண்டாம் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே போக சொல்லவும் கோவம் வர சேரில் இருந்து எழுந்தவள்.

ஆன்ட்டி நீங்க எங்க வீடு தேடி வந்து உங்க மகனை திருமணம் செய்து கிள்ள. சொல்லி கெஞ்சியதால் தான் நான் இவ்வளவு வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று உங்கள் மகனை திருமணம் செய்ய சம்மதித்தேன்.

என்னை திருமணம் செய்து கொள்ள உங்களை எல்லாம் விட பெரிய பெரிய வசதி படைத்தவர்கள் எல்லாம் என்னை திருமணம் செய்துகொள்ள கேட்டார்கள்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டு வந்து உங்களுக்கு சம்மதம் சொன்னதற்கு எனக்கு நல்ல மரியாதை கிடைத்துவிட்டது இனிமேல் உங்கள் மகனே என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாலும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அவள் பெற்றோரை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டால்.

அவர்கள் செல்வதை தடுக்க முடியாமல் நின்று இருந்த அமுதா… தன் மொத்த ஆதங்கத்தையும் கோபத்தையும் அருளிடம் காட்டினார் அமுதா.

இப்படியே வருபவர்களை எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி துரத்தி விட்டால் உன்னை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள். கடைசி வரை நீ இப்படியே இருக்க வேண்டியது தான்.

உன் திருமணத்தை கடைசி வரை பார்க்காமலேயே நான் இறந்து போக வேண்டியது தான் என்று அவனிடம் கோபமாக பேச…

அம்மா… எப்போ பார் என்னை கல்யாணம் கல்யாணம் என்று ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் நான் கல்யாணம் பண்ணமால் உங்களையும், மீராவையும் பார்த்துக் கொண்டு உங்களுடனேயே நான் நிம்மதியாக இருந்து கொள்கிறேன் என்று அவர் அருகில் அமர்ந்து அவரை சமாதானம் செய்ய முயல….

அவனை விட்டு விலகி அமர்ந்த அமுதா… உன் அப்பாவிடம் உன்னை நன்றாக படிக்க வைத்து உனக்கு நல்ல பெண்ணாக திருமணம் செய்துவைக்கிறேன் என்றும், மீராவிற்கும் நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவேன் என்று நான் வாக்கு கொடுத்திருக்கிறேன் அருள்.

நீ நல்ல படியா திருமணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கை நல்ல படியாக அமைந்த நிம்மதியாவது எனக்கு இருக்கும். அதன் பின் நீ மீராவின் திருமணத்தை நடத்தி வைக்க மாட்டாயா என்றார்.

அவர் சொல்வாதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறத்து. இவ்வளவு வருடம் எங்கள் இருவருக்காக மட்டுமே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கும் தன் தாய்க்காக அவர் கேட்கும் இந்த சிறு விஷயத்தை கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்று தன்னை தானே நொந்து கொள்ள…

அம்மா நான் திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை இந்த மாதிரி பெண் வேண்டாம் என்று தான் சொல்கிறேன் நான் சொல்வதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என்றவன்.

நீங்கள் வேறு எந்த பெண்ணை வேண்டுமானாலும்  திருமணத்திற்கு செய்ய சம்மதிக்கிறேன்.  ஆனால் இந்த நிஷாவும் அவள் குடும்பமும் வேண்டாம் அம்மா என்றான்.

அவன் சொல்லவதில் உள்ள அர்த்தம் புரிந்த அமுதா தன் கண்களை துடைத்துக் கொண்டு அருளிடம் நான் அடுத்து பார்க்கும் பெண்ணை நீ எந்த மறுப்பும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எந்த சாக்கும் சொல்லக்கூடாது என்றார்.

அவனும் இப்போதைக்கு இந்த பிரச்னையை கடந்தால் போதும் என்று அவன் அம்மா சொன்னதற்கு சம்மதம் சொன்னவன்.

அடுத்து பார்க்கப் போகும் பெண்ணையாவது எனக்கு தகுந்தார் போல பாருங்கள் நான் எதுவும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்றவன் அவரிடம் சொல்லிவிட்டு தன் கிளினிகிற்கு சென்றான்.

❤️

செழியன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் தன் பேத்தியுடன் இருந்தார்.

ஒரு பெரிய டீலிங்கை முடிக்க வேண்டிய நிர்பந்தம் இவர்கள் SN நிறுவனத்தின் சார்பாக வேறு ஒரு கிளை நிறுவனத்தில் கொடுத்திருந்த ஆர்டர் நேரத்திற்கு முடிக்க முடியாமல் அவர்கள் தாமதம் செய்த காரணத்தால் அவர்கள் இந்த பிராஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வில்லை என்றாள் அந்த நிறுவனதிற்கு கிட்டத்தட்ட ஐம்பது கோடி பணம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டி வரும்.

இந்த பணம் ஒன்றும் அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை. இத்தனை ஆண்டுகளில் இவர்கள் நிறுவனத்தில் இந்த மாதிரி எந்த ஒரு பிராஜெக்ட்டும் பாதியில் முடிக்க முடியாமல் இப்படி நின்றதில்லை இது தான் இப்போது பேரும் விஷயமாக இருக்கிறது.

இத்தனை காலேபரத்திலும் தன் மொபைலை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த மயோவை புரியாமல் பார்த்த செழியன் அப்படி என்ன பார்க்கிறாள் என்று எட்டி அவள் மொபைலை பார்க்க…

அடுத்தவர் போனில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வமா தாத்தா என்று கேட்டுக் கொண்டே  தன் மொபைலை அவரிடம் கொடுத்தாள் மயோ.

அதை வாங்கி அதில் இருந்த போட்டோக்களை பார்த்தவர் முதலில் அதிரந்தாலும் பின் மயோவிடம் திரும்பி அடுத்தவர் வீட்டில் நடப்பவற்றை இங்கு இருந்த படியே பார்க்கிறாயே இது என்னவாம் என்றார் அவள் மொபைலை அவளிடம் நீட்டி.

நான் சொன்னது போலவே அவன் திருமணம் அறை நாள் கூட தாங்காமல் அதற்குள் நின்று விட்டது என்றவள் மீட்டிங்கில் இருந்து எழுந்து தன் மொபைலை பார்த்துக் கொண்டே வெளியே சென்றவள் நின்று இப்போதை நீங்கள் போய் அவனிடம் என்னோட கண்டிஷன் எல்லாம் சொல்லி சம்மதம் கேளுங்கள் சரி என்றுவிட்டு கிளம்பினால் 

தன் பேத்தி இத்தனை  வருடத்தில் எந்த மீட்டிங்கையும் இப்படி பாதியில் விட்டுப் போனது இல்லை… அதே போல மீட்டிங்கை கவனிக்காமல் வேறு விசயத்தில் தன் கவனத்தை செலுத்தியதில்லை.

இன்று மிகவும் முக்கியமான ப்ராஜெக்ட் பற்றி மீட்டிங் போய்க்கொண்டு இருக்க… தன் மொபைலில் இருந்து போட்டோக்களை பார்த்து சிரித்துக்கொண்டு செல்பவலை ஆச்சர்யம் போல செழியன் மட்டும் அல்ல அங்கு இருந்த அனைத்து ஊழியர்களும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் மயோ தன் மொபைலில் அருள் நிஷாவை வெளியே செல்ல சொல்லி அவளை வேண்டாம் என்று சொல்லி வெளியே அனுப்பிய போட்டோவும், அவன் அம்மா அருகில் அமர்ந்து எதையோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்த விடியோவும் அவள் தன் மொபைலில் ஓட விட்டு அதை ரசித்துக்கொண்டே சென்றால்.

செழியன் தன் கார்டஸ்களை அழைத்து நீங்கள் எல்லாம் என்ன வேளை செய்கிறீர்கள் நான் அந்த பையனை பற்றி விபரம் கேட்டு எவ்வளவு நேரம் ஆகிறது இன்னும் ஒரு தகவல் கூட உங்களிடம் இருந்து எனக்கு வரவில்லை.

ஆனால் என் பேத்தியின் கார்ட்ஸ்கள் எல்லாம் எப்படி ஸ்மார்ட்ஆக இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்களை பார்த்து ஆவது என்ன செய்ய வேண்டிம் கற்றுக் கொள்ளுங்கள் என்றவர்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு அங்கே என்ன நடந்தது என்று என் டேபிலிர்க்கு வந்து ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு மீட்டிங்கை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

EPI 4

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அருளின் திருமணம் நின்று விட்டதை தெரிந்து கொண்ட செழியன் தன் கார்ட்களை அழைத்து என்ன காரணத்தால் திருமணம் நின்று விட்டது என்ற தகவலை கொடுக்க சொல்லி இருந்தார்.

அவர் கேட்டது போலவே அவர் டேபிளில் அருள், நிஷா இருவர் பற்றியும் தகவல்களை கொண்டும் வந்து கொடுத்தார்கள்..

இந்த தகவல்களை கொடுப்பதற்கு உங்களுக்கு ஒரு நாள் ஆகிவிட்டதா… என்று அவர்களை கட்டிந்து கொண்டார்.

பின் டேபிளில் இருந்த போட்டோக்களையும், விபரங்களையும் பார்த்தவர் அருளை தன் பேத்தியை திருமணம் செய்ய எப்படி சம்மதிக்க வைப்பது என்று யோசித்தார்.

அதற்கு முன்பாக என் பேத்தியின் மற்ற இரண்டு டெஸ்டிலும் அவன் பாஸ் செய்யக் வேண்டுமே… என்று நினைத்தவர் முதலில் அதற்கான வேலைகளை பாப்போம் என்று நினைத்துக் கொண்டார்.

அப்போதுதான் தனது அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மயோ வந்தவள் நேராக தன் தாத்தாவின் கேபினிற்குள் சென்றவள் தாத்தா..

நீங்கள் சொல்லும் நேற்று மீட்டிங்கில் நாம் கொடுத்த ப்ராஜெக்ட்ட்டை சரியாக முடிக்காமல் இருந்த காரணத்தை நான் கண்டு பிடித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு நான் இப்போது அங்கு தான் செல்கிறேன் என்னுடன் வாருங்கள் என்று சொன்னவள் தன் கார்டுகளுடன் கிளம்பினாள்.

செழியனும் அவளுடன் கிளம்பினார். இருவரும் பேசிக்கொண்டு செல்ல… சென்று கொண்டு இருந்த கார் திடீர் என்று நிற்கவும் இருவரும் திரும்பி வெளியே பார்க்க…

இவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த கார் யாரையோ இடித்து ஆக்சிடென்ட் செய்துவிட்டது.

காரின் முன் சக்கரத்தில் ஒருவன் விழுந்து இருக்க அவனை நான்கு ஐந்து வாட்ட சாட்டமான ஆட்கள் வந்து  நேராக கார் ஓட்டிக்கொண்டு இருந்தவரின் கார் கதவை தட்டி வெளியே வார சொல்ல….

காரை திறந்து கொண்டு ஒரு பெண் வெளியே வந்தார்.வெளியே வந்தவுடன் அந்த பெண்ணிடம் இப்படித்தான் கண் மண் தெரியாமல் சாலையில் காரை ஓட்டிக்கொண்டு வருவாயா… உன்னால் பார் ஒருவன் எப்படி அடிபட்டு இருக்கிறான் என்று.

அவன் கை கால்கள் எல்லாம் காயம் ஆகி… ரத்தம் வழிகிறது பார்…. இதற்கு எல்லாம் நீ தான் காரணம் நீ சரியாக காரை ஒட்டாததினால் தான் இவ்வளவு பிரச்சனை என்றான்.

அந்த பெண் நான் அவரை இடிக்கவே இல்லை அவராகவே வந்து என் கார் முன் விழுந்துவிட்டார். என் கார் நிற்கும் நேரம் பார்த்து அவர் வேண்டும் என்றே என் கார் மீது விழுந்து விட்டார் என்று தன் மீது எந்த தவறும் இல்லை என்று அந்த பெண் சொல்ல…

அவளிடம் சண்டைக்கு வந்தவர்கள் தாங்கள் செய்த நாடகத்தை அவள் உண்மையை கண்டுபிடித்து விட்டாள் என்று தெரிந்ததும் அதை மறைக்கும் பொருட்டு…

என்ன பொண்ணே….. செய்றதையும் செஞ்சுட்டு பழியை தூக்கி அந்த அப்பாவி  மேல போட்டுட்டே…. அவன் மயக்கம் போட்டு விழுந்ததால அவனால இப்போ எதுவும் பேச முடியாதுன்னு போய் சொல்றியா என்று அவளை மிரட்ட…..

அந்த பெண் பயந்து கொண்டு சார் நான் நிஜமாக தான் சொல்கிறேன் அந்த ஆள் வேண்டும் என்றே வந்து என் காரின் மீது விழுந்தான் என்று அந்த பெண் தன் பக்கத்து நியாயத்தை எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்பதாக தெரியவில்லை..

கடைசியில் அவர்கள் அந்த பெண்ணிடம் பணம் வேண்டும் என்று டிமாண்ட் செய்ய அவளும் வேறு வழி இல்லாமல் நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் எவ்வளவு வேண்டும் என்று அந்த பெண் கேட்க….

அந்த பெண்ணை உயிரே இறங்க ஒரு பார்வை பார்த்தவன் அவள் வசதியான வீட்டை சேர்ந்து பெண் போல இருக்க அவளிடம் சற்று அதிகமாகவே கேட்கலாம் என்று யோசித்தவர்கள் அவளிடம் ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று கேட்க…

அவளும் எதுவும் பேசாமல் பணத்தை எடுத்து கொடுக்கப் போக…. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர். மேடம் பணத்தை கொடுக்காதீர்கள் என்று சொல்லி வேகமாக அவள் முன் வந்து நின்றான்.

அருள் அருள் தான் அந்தப் பெண்ணை பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி அவள் முன்னே வந்து நின்றவன் .

 அருள் வந்து பணத்தை கொடுப்பதை தடுத்ததும் அவரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்த அந்த நபர் யாருப்பா நீ?  அவங்களே பணம் கொடுக்கிறேன் ஒத்துக்கிட்டு கொடுக்க வரப்போ நீ எதுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லி வந்து தடுக்குற….. நீ யாரு முதல்ல?உனக்கு இதுக்கு என்ன சம்பந்தம் இருக்கா?அங்க கீழே விழுந்துருக்கிறவன் பார்த்ததானே அவனுக்கு அடிபட்டு எவ்வளவு ரத்தம் போயிருக்கு அவன் ஹாஸ்பிடல்ல சேர்த்து செலவு செய்வதற்கு எல்லாம் நீயா வந்து குடுப்ப…. என்று அவனிடம் சண்டைக்குச் செல்ல.

 ஓ அப்படியா….அந்த கீழே விழுந்தவருக்காக தான் நீங்க இந்த பொண்ணு கிட்ட பணம் கேட்கிறீங்க அப்படித்தானே…..என்று அருள் கேட்க அவனும் ஆம் என்று சொன்னான்.

ஒரு நிமிஷம் இருங்க…என்று சொன்னவன் கீழே படுத்து இருந்தவன் அருகில் சென்று அவனை ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்த அருள் வேகமாக அவன் வயிற்றில் இரண்டு உதை உதைக்க…..அவன் ஐயோ…. அம்மா…. என்று இவ்வளவு நேரம் மயக்கமம் போடவன் போல வயிற்றை பிடித்துக் கொண்டு படுத்து இருந்தவன் வேகமாக அங்கிருந்து எழுந்து நின்றான்..

 இவ்வளவு நேரம் காரின் முன் அடிபட்டு மயக்கம் வந்தது போல விழுந்துருந்தவன் அருள் இரண்டு  உதைக்கவும் எழுந்து நின்றவன் சுற்றிலும் முற்றிலும் பார்க்க…

அவன் எழுந்து நின்றதை பார்த்து காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண்ணிற்கு அதிர்ச்சியாகிவிட்டது… தன் எதிரில் நின்று இருந்தவனை பார்த்து நான் அப்பவே சொன்னேன் இல்லையா…. இவன் வேணும்னே தான் என் கார்ல வந்து விழுந்தான்னு சொல்லி…. ஆனா நீங்க நம்பாம அவனுக்காக பேசி என்கிட்ட பணம் பறிக்க வந்திருக்கீங்க அப்படித்தானே….

அப்போ நீங்க எல்லாரும் ஒரே குரூப்பா தான் வந்து பணம் பறிக்க இப்படி நாடகம் போட்டுட்டு இருக்கீங்களா… என்று அந்த பெண் தன் எதிரில் இருக்கும் நபரை பார்த்து சண்டையிட.

அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதும் காரின் முன் விழுந்தவன் யாரும் எதிர் பாராத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பி ஓட…

அவனை தொடர்ந்து கூட இருந்தவர்களும் ஆளுக்கு ஒரு புறம் ஓடி விட்டனர்.

அவர்கள் போடுவதை பார்த்த அந்த பெண் அருளிடம் வந்து ரொம்ப தேங்க்ஸ் சார்… நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வரலையின்னா இவங்க என்கிட்டே இருந்து பணத்தை பரிச்சிட்டு போயிருப்பாங்க என்று அவனுக்கு நன்றி சொன்னாள்.

அருளும் பரவாயில்லை மேடம் என்று அங்கிருந்து நகர போக…. அந்த பெண் அவன் கையை பிடித்து நிறுத்தியவள்.

தன் உடையை சரி செய்பவள் போல தன் முன்னாழகை அவனுக்கு காட்டும் விதமாக லேசாக ஆடையை இறக்கி விட்டு அவனிடம் வந்து இவ்வளவு பெரிய உதவியை எனக்கு நீங்கள் செய்து இருக்கீங்க…. என் கூட ஒரு கப் காபி குடிச்சுட்டு போகலாமே…. என்று அவனிடம் வழிந்து கொண்டு பேச….

அருள் அந்த பெண்ணின் நடவடிக்கையை பார்த்துவிட்டு அவள் கையை தன்னிடம் இருந்து பிரித்தவன் இட்ஸ் ஓகே மேடம் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது என்று சொல்லி அவளிடம் இருந்து நழுவப் பார்க்க…

அந்த பெண்ணும் விடாமல் மறுபடியும் அவன் முன் வந்து இழைந்து நின்று அப்படி சொல்லாதீங்க மிஸ்டர்…. நீங்க எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்க…… கண்டிப்பாக என்னுடன் காபி குடிக்க நீங்கள் வர வேண்டும் என்று அவனை வற்புறுத்த….

இல்லை மேடம் எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது நான் இப்போதை சென்றே ஆக வேண்டும் என்று அருள் அவளிடம் இருந்து தப்பிக்க சாக்கு சொல்ல….

அப்படி என்றாள் இன்னோரு நாள் நீங்கள் என்னுடன் காபி அருந்த வர வேண்டும் என்று தன் கார்டை கொடுத்து ஐயம் ரூபா…. என்றாள் ,அவனுடைய கார்டையும் வாங்கிவிட்டு அவன் பெயரை கேட்டுக்கோ கொண்ட  பின்தான் அவனை போக விட்டாள்.

அந்த பெண்ணும் காரை எடுத்துக் கொண்டு செல்ல….இங்கு நடந்ததை எல்லாம் காரில் அமர்ந்து கொண்டு மயோ தன் தாத்தாவிடம் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருக்க….

அவளிடம் திரும்பி இரண்டாவது டெஸ்டிலும் பாஸ் செய்து விட்டான் போல.. என்று அவளை பார்த்து சொல்ல…

அவளும் ம்ம்ம்ம்…. என்று தலையை ஆட்டினால்.

அவர்கள் டெஸ்ட் வைக்காமலேயே அவனிடம் ஒரு பெண் வழிய வந்து பேசியும் அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் அவள் எவ்வளவு முயன்றும் அவளிடம் சிக்காமல் சென்றவனை நினைத்து…

ஆண்கள் என்றாலே பெண்களுடன் ஒட்டி உறவாட வாய்ப்பு கிடைக்காதா என்று இருப்பவர்கள்…. அல்லது வாய்ப்பை அவர்களே உருவாங்கிக் கொள்வார்கள்… ஆனால் இவனோ தனக்கு கிடைத்த வாய்ப்பை புறக்கணித்து விட்டு செல்கிறானே என்று அவனை நினைத்து சற்று ஆச்சர்யம் கொள்ளத் தான் செய்தாள் மயோ.

❤️

தன் கிளினிகிற்கு வந்த அருள் அவன் கேபினில் சென்று அமர்ந்து இருக்க… அவனிடம் செக்அப்பிற்காக ஒரு பெண் வந்திருந்தாள்.

அவனிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கி விட்டு வந்திருந்தவள் அந்த பெண் உள்ளெ வர….

அவளை தனக்கு எதிரில் இருந்த சேரில் அமர சொன்னவன்.

சொல்லிங்க மிஸ் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான். அந்த பெண் நான் கல்லூரியில் படிக்கிறேன் சார். என்கூட படிக்கிறவங்க எல்லாரும் என் மூக்கு சப்பையாக இருக்கிறது என்று என்னை கிண்டல் செய்கிறார்கள்.

எனக்கு அவர்கள் முன் செல்லவே சங்கடமாக இருக்கிறது. எனது மூக்கில் அறுவை சிகிச்சை எதுவும் செய்து   அழகாக மற்ற முடியுமா? என்று கேட்டாள் அந்த பெண்.

அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட அருள். மேடம் நான் சொல்வதை கோபப்படாமல் பொறுமையாக கேளுங்கள் அதன் பிறகு உங்கள் முடிவை சொல்லுங்கள் என்றான்.

சரி டாக்டர் சொல்லுங்கள் என்று அவன் சொல்வதை கேட்க ஆர்வமானால்  அந்த பெண்.

பிறக்கும் போதே ஒருவரின் முக அழகு எதுவுமே நம்மால் தீர்மானிப்பது இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் அழகை நாம் போற்றி ஆராதிக்க வேண்டும். உங்கள் தாய் தந்தைக்கு நீங்கள் எப்படி இருந்தாலும் அழகு தான். உங்களை மிகவும் நேசிப்பவர்க்கு நீங்கள் அழகு தான். உங்களுடன் உரிமையாக பழகுபர்களும், நண்பர்களும் நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

போவோர் வருவோர் எல்லாம் ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். அதை எல்லாம் கேட்டு நீங்கள் உங்களிடம் இருக்கும் அழகை, உங்கள் குணத்தை நீங்கள் எதற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நீங்கள் நீங்களாகவே இருங்கள்…. யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள எந்த அவசியமும் இல்லை…                                                  நீங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் உறவு வரம்.

உங்களை நான் பிளாஸ்டிக் சார்ஜரி செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு முறை நான் சொன்னதை யோசித்துவிட்டு வாருங்கள் அதன் பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதற்கு உடன் படுகிறேன் என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக யோசித்த அந்த பெண் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துவிட்டு யோசித்தவள் பின் அருளிடம் டாக்டர் எனக்கு சர்ஜரி வேண்டாம். ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் என்று சொன்ன அந்த பெண் அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அந்த பெண் சென்றதும்  அருளின் நண்பன், அவனுடன் அருளின் கிளினிக்கில் வேலை செய்யும் கரண் உள்ளே வந்தவன். நீ… இப்படியே வர பேஷண்ட் எல்லாருக்கும் பிரீ அட்வைஸ் செய்து அவர்கள் மனதை மாற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இரு….பிறகு நீயும் நானும் யாரும் இல்லாமல் ஈ…. ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டியது தான் என்றான்.

கரண் சொல்வதைக் கேட்டு சிரித்த அருள் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்றான்.

பேசாம பிளாஸ்டிக் சர்ஜனா வேலை பார்க்கிறதை விட்டுவிட்டு நீ… மனோதத்துவ நிபுணராக மாறி விடு.உனக்கு அசிஸ்டன்டாக நான் வருகிறேன். நீ வரவங்களுக்கு எல்லாம் நல்லா கவுண்சிலிங் கொடுக்குறே….அதிலாவது நமக்கு கூட்டம் வருகிறதா என்று பார்க்கிறேன்.

வரும் நாலு பேசேண்டையும் நீ பேசியே டிரீட்மென்ட் எதுவும் பார்க்க வைக்காமல் அனுப்பி வைக்கிறாய் என்றான் சிரித்துக் கொண்டே சரி வா… ரெண்டு பேரும் வெளியே போய்ட்டு வரலாம். எவ்வளவு நேரம் தான் ஈ… ஓட்டுவது என்று அருளை கிண்டல் செய்திக்கொண்டே அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வெளியில் சென்றான்.

❤️

தன் ப்ராஜெக்ட் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் இழுபரி ஆகிக்கொண்டு இருந்த காரணத்தை கண்டு கொண்ட மயோ தன் தாத்தாவுடன் அவள் சைட்டிற்கு சென்றவள் அங்கு வேலை செய்யாமல் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்த வேலை ஆட்கள் மயோவை பார்த்ததும் பதட்டமாக எழுந்து நிற்க…

அவர்களை பார்த்து ஏன் யாரும் வேலை செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டாள். எங்களை வேலை செய்யக் கூடாது என்று நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் என்றான் அவர்களில் ஒருவன்.

தினமும் இதே போல தான் நாங்கள் வந்தாள் வேலை செய்ய விடமால் தடுத்து நிறுத்திவிட்டு. எங்களுக்கு சம்பளமும் சரியா கொடுக்குறது இல்லை மேடம் என்றான் ஒருவன்.

அதை எல்லாம் கேட்டுவிட்டு செழியன்  அந்த வேலையில் இன்ச்சார்ஜ் ஆக போட்டிருந்தவனை அழைக்க… அவன் மிகவும் திமிராக அவர் முன் வந்து நின்றவன் சொல்லு பெருசு… எதுக்கு என்னை இப்போ கூப்பிட்டே என்றான்.

அவன் இப்படி மரியாதை இல்லாமல் பேசுவது கடுப்பை கொடுத்தாலும் அமைதியாக திரும்பி தன் கார்ட்சை பார்த்து ஒரு கண் ஜாடை தன் செய்தார்.

உடனே அவர் கார்டசில் ஒருவன் வந்து அந்த இன்ச்சார்ஜை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கு இருந்த தூனில் தலைகீழாக கட்டிவைத்தான்.

அவன் அலறிக்கொண்டே…மயோவையும் அவள் தாத்தாவையும் பார்த்து…. என்னை கட்டிவைத்து என்ன செய்தாலும் பிரயோஜனம் இல்லை.

அங்கு ஒருவன் நீங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் கட்டிடம் அவனுடையது என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு. இருக்கிறான்.

அவனும் அவனுடைய ஆட்களும் வந்து எங்களை வேலை செய்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுக்கிறான். அவனை முதலில் சரிக் கட்ட வழியை பாருங்க அதன் பிறகு எங்களை வந்து அதிகாரம் செய்யும் வழியைப் பாருங்கள் என்று அவர்களிடம் சொன்னான்..

அவன் சொல்வதை கேட்டு புருவம் சுருங்க அவனை பார்த்த மயோ, தன் அருகில் நின்று கொண்டு இருந்த இந்த காண்ட்ராக்ட்டை சரியாக முடித்துத் தருகிறேன் என்று இன்று வரை வேலை செய்யாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கும் பாரடைஸ் நிறுவனத்தின் மேனேஜர் அவள் அருகில் பயந்து கொண்டு நின்று இருக்க… உங்களுக்கு இன்னும் முப்பது நாள் டைம் தரேன் அதற்கு உள்ளாக என்ன பிரச்சனை என்று கண்டு பிடித்து அதை சரி செய்து வேலையை சீக்கிரம் முடிக்கும் வழியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

EPI 5

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

தன் நண்பன் கிரணுடன் வெளியில் சென்றுவிட்டு திரும்பிய அருள் அவன் கிளினிகிற்கு வர…

ரிசப்ஷன்னில் அமர்ந்து இருந்த நர்ஸ் சார் உங்களை பார்க்க ஒரு பெண் வந்து இருக்கிறார். நீங்கள் வரும் வரை ரிசெப்சனில் வெயிட் பண்ண சொன்னாள் மருத்துவிட்டு உங்கள் கேபினில் அமர்ந்து இருக்கிறார் என்றார் அந்த நர்ஸ்.

யாராக இருக்கும் என்று யோசித்தவன் தா  கேபினுக்கு செல்ல போக… அவன் நண்பன் கிரண் யார் டா வந்து இருப்பது?  அதுவும் இல்லாமல் பர்சனளாக உன்னை பார்க்க ஒரு பெண் வந்து இருக்கு…. என்றவன் அருளை முந்திக்கொண்டு அவன் கேபின் கதவை திறந்து கொண்டு அவன் கேபினிற்குள் நுழைய….

உள்ளே ஒரு பெண் அவன் கேபினை சுற்றிபார்த்துக் கொண்டு இருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அருள் வருகிறான் என்று சிரித்த முகமாக திரும்பி பார்க்க….

கரண் கதவை திறந்து கொண்டு வரவும் அந்த பெண்ணின் முகம் சுருங்கி விட்டதை கவனித்த கரண்.

அந்த பெண்ணை பார்த்ததும் கரண் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து…..அளவுக்கு அதிகமாக முகத்தில் மேக்கப் போட்டு… ஈஈஈ…. என்று சிரித்துக் கொண்டு தன் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டிய வண்ணம் நின்று இருந்த பெண் தன்னை பார்த்ததும் முகம் சுருக்கி அவனை வேண்டா… வேறுபாக… பார்த்த கரண்.

அவளை பார்த்து சாரி மாம் நான் என்னோட பொருளை எடுக்க வந்தேன் என்று சொல்லிவிட்டு உள்ளே வந்ததிற்காக அருள் கேபினில் இருந்து கையில் கிடைத்த பொருளை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.

வெளியே வந்த கரண் அருளிடம் எனக்கு தெரியாம இப்படி ஒரு கேர்ள் ஃபிரெண்ட் உனக்கு இருக்கா… ப்பா….. இப்படி இருக்கா… என்று அவள் முகத்தில் அணிந்திருந்த மேக்கப்பை நினைத்து சொன்னவன்.

சரி.. சரி… உள்ளே… போ… டுமே வேஸ்ட் பண்ணாத என்று சிறிது விட்டு சென்றவனை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்த அந்த பெண் வாசல் கதவை பார்க்க…. கரண் வெளியே செல்ல அவனை பார்த்தவரே தன் அறைக்குள் வந்த அருள் திரும்பி பார்க்க….

அவன் எதிரில் காலை வரும்போது ஒரு கும்பளிடம் காரை இடித்து மாட்டிக் கொண்ட ரூபா… தான் நின்று இருந்தாள்.

அவளை பார்த்ததும் ஆச்சர்யம் ஆன அருள் நீ… நீங்க…. என்று புருவம் சுருக்கி கேட்க..

என்ன மிஸ்டர் அருள் காலையில் தானே என்னை பார்த்தீங்க அதற்குள் மறந்துட்டீங்களா? என்றாள் ரூபா.

இ.. இல்லை…. திடீர் என்று பார்த்ததும் சற்று குழம்பி விட்டேன் என்ற அருள். உக்காருங்க மிஸ் ரூபா என்றவன் தன் சேரில் அமர்ந்தவன் சொல்லுஙக மிஸ் ரூபா.. இவ்வளவு தூரம் என்னை பார்க்க வந்து இருக்கிறீர்கள் எதுவும் முக்கியமான விஷயமா என்றான் நேரடியாக.

என்ன மிஸ்டர் அருள் உங்களை தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். எனக்கு ஒரு காபி…டீ… கிடையாதா? வந்ததும் எதற்கு வந்து இருக்கேன்னு கேக்குறீங்க என்றாள்.

ஓ… சாரி மிஸ் ரூபா… என்ன சாப்பிடுறிங்க… என்றான் அவள் காபி என்று சொன்னதும் கால் செய்து அவன் ஸ்டாபிடம் இரண்டு காபி என்றவன். போனை வைத்துவிட்டு சொல்லுங்க மிஸ் ரூபா இப்பவாவது என்ன விஷயமா வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா… என்றான் அருள்.

அது ஒன்றும் இல்லை மிஸ்டர் அருள் நீங்கள் பிளாஸ்டிக் சார்ஜரி செய்வதில் திறமையானவர் என்று கேள்விப்பட்டேன்.

அதனால் தான் உங்களை பார்க்க வந்தேன். என் மார்பு மிகவும் சிறியதாக இருக்கிறது  நீங்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்து என்னது மார்பகங்கலை பெரிது பண்ண முடியுமா? என்று தன் மார்புகளை அவன் கண்களில் படும்படி சற்று தன் ஆடையை இறக்கி காட்ட போக…

அருள் அவசரமாக மிஸ் ரூபா… அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றவன் தயவு செய்து உங்கள் உடையை சரி செய்து கொள்ளுங்கள் என்றவன்.

உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் மார்பகங்களை பெரிது படுத்த வேண்டும் என்றாள்.சில டெஸ்டுகள் எல்லாம் எடுக்க வேண்டி இருக்கும் அதன் பிறகு தான் எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய முடியும் என்றவன்.

இன்டெற்காமில் கரணை உள்ளே அழைக்க… உள்ளே வந்த கரண் ரூபாவை பார்த்துவிட்டு பின் திரும்பி சொல்லுங்க டாக்டர்… என்றான் நக்கலாக.. அவனை முறைத்துவிட்டு இவங்க மிஸ் ரூபா… இவங்களுக்கு தன் மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று நம்மிடம் சிகிச்சைக்கு வந்து இருகாங்க… நீங்கள் இவரை அழைத்துக் கொண்டு போய் தேவையான டெஸ்டுகளை எடுத்துவிட்டு வாருங்கள் என்றான்.

ரூபா கரணை பார்த்துவிட்டு மிஸ்டர் அருள் நீங்கள் எனக்கு சிகிச்சை அளிக்க மாட்டீர்களா? இவர் தான் எனக்கு சிகிச்சை அளிப்பவறா என்று கரணை பார்த்து கேட்க….

ஆமாம் மிஸ் ரூபா இவர் தானே உங்களுக்கு சிகிச்சை அளிப்பவர் இனிமேல் நீங்கள் இவரையே பார்த்துக் கொள்ளலாம் என்று அருள் சொல்ல…

அருளிடம் சிகிச்சை எடுக்கும் சாக்கில் அவனிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கும். அதை வைத்து அவனிடம் நெருங்கி பழகலாம் என்று நினைத்து வந்த ரூபா….கரண் தான் தனக்கு சிகிச்சை அளிக்கப் போகிறான் என்றதுமே… மிஸ்டர் அருள் என்று தான் சேரில் இருந்து வேகமாக எழுந்தவள்.

நீங்கள் நல்லவர் என்று உங்களை நம்பி வந்தாள். நீங்கள் வேறு ஆளிடம் என் உடலை காட்ட சொல்கிறீர்கள் என்றாள் கடுப்பாக.

மிஸ் ரூபா… இது என்ன குற்றச்சாட்டு.. நாங்கள் இருவருமே மருத்துவர்கள் தான் என்னை போல தான் அவரும் உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் என்றான் புரியாமல்.

அவன் இப்படி கேட்டதும் நான் அருளிடம் தான் சிகிச்சை செய்வேன் என்று இப்போது சொன்னாள் தன்னை தவறாக நினைத்து விடுவான் என்று நினைத்தவள் வேண்டும் என்றே உங்கள் கிளினிக்கில் பெண் மருத்துவரே இல்லையா…. இப்படி பெண்கள் அதுகமாக வரும் ஒரு இடத்திற்கு ஆண்களையா மருத்துவராக பரிந்துரைப்பீர்கள்.

உங்களை நம்பி வந்ததற்கு என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து நிறுத்தி. இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் பெண்களின் உடலை பார்ப்பதற்காகவே இப்படி ஒரு வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அவனிடம் சண்டைக்கு வந்தால்.

மிஸ் ரூபா…. மருத்துவத் துறையில் ஆண்,பெண் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே பார்க்கப்படுவது இல்லை. நானும் சரி என் நண்பனும் சாறு நீங்கள் சொல்லும் நோக்கத்தோடு இங்கு கிளினிக் வைத்து நடத்தவில்லை.இந்த மாதிரி எண்ணத்தோடு இனிமேல் எங்கள் கிளினிகிற்கு வராதீர்கள். தயவு செய்து நீங்கள் கிளம்புங்கள் என்று வாசலை காட்ட….

நீங்கள் இவ்வளவு மோசமானவறாக இருப்பீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை என்று சொல்லிவிட்டு அவனையும், கரணையும் முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் யாரு டா அருள் இது…இவ்வளவு கேவலமாக பேசுவது உனக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம்.

அவள் உன்னை பார்த்து உன்னிடம் நெருங்கி பழக தான் இங்கு வந்து இருக்கிறாள். நீ இது கூட புறியாமல் நீ அந்த பெண்ணை இப்படி பேசி அனுப்பி விட்டாயே என்றான் கரண்.

எனக்கு தெரியாமல் எல்லாம் இல்லை கரண் அந்த பெண் இங்கு வந்ததன் நோக்கமே வேறு அதனால் தான் நான் உன்னிடம் சிகிச்சைக்கு அனுப்புகிறேன் என்று சொன்னேன்.

இல்லை என்றால் அந்த பெண் இன்னேரம் என்னை ஒரு வழி பண்ணி வீட்டிருப்பாள் என்றான்.

அப்போ உனக்கு தெரிஞ்சு தான் நீ.. அந்த பெண்ணிடம் அப்படி பேசினாயா என்றான் கரண் அருளும் ஆம் என்று தலையை ஆட்டினான்.

அருளை கிண்டல் செய்து பேசிக் கொண்டு கிரண் தான் கேபினிற்கு சென்றான்..

தன் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்த அருளின் போன் திடீர் என்று அடிக்கவும் போனை எடுத்து பார்க்க… அவன் தங்கை மீரா தான் அழைத்து இருந்தாள்.

போனை அட்டென்ட் செய்து சொல்லு மீரா…. என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அண்ணா… அம்மா.. அம்மா…. என்று அழுது கொண்டே பேச…

என்ன மீரா அம்மாவுக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமாக பேசுறே என்று கேட்க…

அம்மா.. அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் உடனே எஸ் என் ஹாஸ்பிடல் வா என்று அவசரமாக சொல்லிவிட்டு என் ஃபோனை கட் செய்தால் மீரா.

 திடீரென்று தன் அம்மாவிற்கு உடல் முடியவில்லை என்று கேட்டதும் அருளுக்கு பதட்டமாகியது . தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வேகமாக வெளியில் வந்தவன் கரணின் அறைக்கு வந்து அவனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு தன் ஸ்கூட்டரில் விரைந்தான்.

 டேய் அருள் ஏன்டா… என்ன ஆச்சு எதுக்கு இவ்வளவு வேகமா வண்டியை ஓட்டுற கொஞ்சம் பொறுமையா போ…..

ஏன் இப்ப திடீர்னு என்ன கிளினிக்கில் இருந்து கூட்டிட்டு வந்தே என்று அவன் பின்னே அமர்ந்து கொண்டு அருளிடம் கேட்க…

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்ன்னு மீரா போன் பண்ணி சொன்னாள் டா….அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கா….

 எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு டா… கரண் நீ கூட வந்தா எனக்கு கொஞ்சம் துணையாக இருக்கும்னு தான்  உன்னை கூட கூட்டிட்டு போறேன் என்று சொல்லிக் கொண்டே வண்டியை வேகமாக ஓட்டினான் அருள்.

சரி டா கொஞ்சம் மெதுவா போ… அம்மாவுக்கு எதுவும் ஆகாது சரியா   ….. என்றவன் அதன் பிறகு  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் கரண்.

ஹாஸ்பிடல் வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் அவன் அம்மா அட்மிட் செய்திருந்த வார்டு எங்கே என்று கேட்டுக் கொண்டு வேகமாக உள்ளே செல்ல….

அங்கே அருளின் அம்மா அமுதா எமெர்ஜெண்சி வார்டின் உள்ளே வைத்து இருக்க… வெளியே… மீரா அழுத வண்ணம் நின்று இருந்தவள் அருளை பார்த்ததும் அண்ணா…. என்று ஓடி வந்து கட்டிக் கொண்டால்.

அவளை அனைத்துக் கொண்டவன் அம்மாவிற்கு என்ன ஆச்சு எப்படி திடீர்னு இப்படி ஹாஸ்பிடல் வர அளவுக்கு நான் எதிர் பார்க்கவே இல்லை என்று அதிர்ச்சியாக அருள் கேட்க.

அண்ணா அம்மாவிற்கு ஏற்கனவே நெஞ்சு வழி இருந்திருக்கு அண்ணா அவங்க நம்ம கிட்ட இருந்து மறைச்சிருக்காங்க…. ஹாஸ்பிடல் வந்த பிறகு தான் இங்க இருந்த ஒரு நர்ஸ் சொன்னாங்க என்றாள்.

அமுதாவிற்கு டிரீட்மென்ட் கொடுத்துவிட்டு வெளியே வந்த டாக்டர் மீராவிடம் அவங்க உன்னோட அம்மா தானே மா… என்றார்.

மீறா ஆமா டாக்டர் என்று சொன்னதும் அவளிடம் ஏன்மா… உங்களுக்கு அவங்க இப்படி இருக்கிறது தெரியவே இல்லையா… அவர் இங்கு டிரீட்மென்ட்ற்காக வரும்போது எல்லாம் தனியாக தான் வருவார் கூட யாரையும் அழைத்து வந்து இருக்கலாமே என்று கேட்டாள் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டுவார்.

அவர் சொன்னதை கேட்டு என்ன  டாக்டர் சொல்றிங்க… அவங்க ரொம்ப நாளா இங்க டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காங்களா என்றான் அருள்.

அவன் பேசியதை கேட்டு… நீங்க…. என்று கேட்க… அவருடைய மகன் அருள் என்றவன் தன்னை ஒரு பிளாஸ்டிக் சர்ஜியன் என்று அறிமுகம் செய்து கொண்டான்.

 என்ன மிஸ்டர் அருள் நீங்களே ஒரு டாக்டரா இருந்துட்டு உங்க அம்மாவ இப்படி கவனிச்சுக்காம இவ்வளவு கேர்லெசா இருந்துட்டீங்களே…..

அவங்க கடந்த ஒரு வருஷமா எங்க ஹாஸ்பிடல்ல தான் வந்து ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காங்க.ரெகுலரா வந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்க சொன்னா இல்ல என் பையனுக்கு கல்யாணம் இருக்கு…. பொண்ணு படிக்கணும்… அது இதுன்னு சாக்கு சொல்லி ரெகுலரா ட்ரீட்மென்ட் எடுக்க அவங்க வரதே இல்ல…

இப்ப பாருங்க அவங்களோட கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு இந்த நிலையில அவங்கள கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணா நாங்க எப்படி அவங்கள காப்பாத்த முடியும் என்று அவர் உண்மையை சொல்ல.

 டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான அருளும் மீராவும் தங்கள் முகத்தை ஒருவர் ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு….

திரும்பவும் டாக்டரை பார்த்து டாக்டர் இப்ப என்ன சொல்ல வரீங்க… எங்க அம்மா ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு சொல்றீங்களா!!!! என்று கேட்டான் அருள் நேரடியாக.

 ஆமாம் மிஸ்டர் அருள் அவங்க இப்போ ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல தான் இருக்காங்க.உடனே நம்ம அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணலேன்னா அவங்க உயிர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டமாயிடும் என்று சொன்னார் டாக்டர்.

 டாக்டர்… அப்ப ஏன் நீங்க தாமதிச்சிட்டு இருக்கீங்க… உடனே எங்க அம்மாவுக்கு ஆபரேஷன ஸ்டார்ட் பண்ணிடுங்க என்று சொல்ல….

ஓகே மிஸ்டர் அருள் அப்போ நீங்க கவுன்டருக்குப் போய் பணம் கட்டிட்டு வந்து சொல்லுங்க நாங்க ஆபரேஷனுக்கு தேவையான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்றோம் என்று சொல்ல…

அவர் பணம் கட்ட சொல்லவும் தான் அருளுக்கு நடப்பு முறை நினைவிற்கு வர…

அருள் சற்று தயங்கிய வாரே டாக்டர் ஆபரேஷன்க்கு எவ்வளவு செல்லவு ஆகும் என்று தெரிந்து கொள்ளாலாமா என்று அருள் கேட்க.

பதினைந்து லட்சம் செலவு ஆகும் மிஸ்டர் அருள். சீக்கிரம் அந்த அமௌண்ட்டை கட்டிவிட்டு சொல்லுங்க ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம் என்றவர் அங்கிருந்து செல்ல..

அருள் உடனே அவன் அம்மாவின் அக்கௌன்ட்யில் ஐந்து லட்சம் இருக்கிறது மீதி பத்து லட்சத்தை எப்படியாவது புரட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் மீராவை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு.

கரணை தன்னுடன் அழைத்துக் கொண்டு பணம் ஏற்பாடு செய்ய சென்றான்.

❤️

மயோ தன் அலுவலகத்தில் வேலையில் இருக்க… அவள் தாத்தா செழியன் அவள் அறையை திறந்து கொண்டு உள்ளே வர…

அவரை நிமிர்ந்து பார்த்தவள் திரும்பவும் வேலையில் மூழ்கிவிட…

தன்னை கண்டும் என்ன என்று கேட்காமல் அமைதியாக இருந்தவளை பார்த்துவிட்டு அவள் அருகில் வந்து அவல முன் இருந்த பைலை மூடி வைத்தவர்.

மாயோள்…. நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்து சொல்லுங்க தாத்தா என்றாள்.

நான் சொன்னதை நீ யோசித்து பார்த்தாயா என்றார் செழியன்.

நீங்கள் என்ன சொன்னீர்கள்…எதை பற்றி யோசிக்க வேண்டும் என்று மாயோள் கேட்க…

அவளை கோபம் கொண்டு முறைத்தவர்.

நான் என்ன சொன்னேன் என்றே மறந்துட்டியா? என்றவர். உன்னுடைய கல்யாணம் பற்றி சொன்னேனே நீ என்ன முடிவு எடுத்து இருக்கிறாய் என்றார்.

தாத்தா… இப்போது இருக்கும் பிரச்சனையில் என் கல்யாணம் ரொம்ப முக்கியமா என்ன என்று அழுப்புடன் கேட்டாள் மாயோள்.

 பிசினஸில் எப்போதுமே பிரச்சனைகள் டென்ஷன் என்று ஆயிரம் வரும் போகும் அதற்காக திருமணமாக வேண்டிய வயதில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருக்க போகிறாயா என்ன….

நான் சொல்பவனையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய்… நீயாக யாரைவது ஒருவனை பார்த்து அவனை காதலித்து திருமணம் செய்து கொள் என்று சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய் …

உனக்கு நான் கொடுத்த கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. அதை நீ மறந்துவிட்டயா என்ன… நான் சொன்ன கெடு முடிவதற்குள்  நீ நான் சொல்பவனையோ….. அல்லது நீயாக  யாரோ ஒருவனையோ  திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இந்த சொத்து முழுவதையும் நான் உன் தங்கை  இளாவின் பெயரில் எழுதி வைத்துவிடுவேன்.

உனக்கு இதிலிருந்து ஒரு பைசா கூட சேராமல் என்னால் பார்த்துக் கொள்ள முடியும் என்றார் செழியன்.

 அவர் அப்படிச் சொன்னதும் தாத்தா இது என்ன சொந்த பேத்தியையே பிளாக்மெயில் செய்றீங்களா…. நீங்கள் சேர்த்து வச்ச சொத்தை விட நான் அதைவிட அதிக அளவு சொத்துக்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறேன்.

அப்படி உங்களுடைய சொத்துக்களை எல்லாம் என் தங்கையின் பெயரில் எழுதி வைப்பதாக இருந்தாள் எழுதி வையுங்கள்.. ஆனால் என்னுடைய சொத்துக்களை எல்லாம் உங்களை நம்பி பொறுப்பில் விட்டாள் அதை எல்லாம் என் பெயரில் சேர்க்கமல் உங்கள் பெயரில் வைத்துக்கொண்டு….

 இன்று நான் திருமணம் செய்து எனக்கு ஒரு குழந்தை பிறந்தாள் தான் அதை எல்லாம் என் பெயரில் மாற்றுவேன் என்று சொல்வது என்ன விதத்தில் நியாயம் என்றாள் மாயோள்.

உங்கள் சொத்துக்களை மட்டும் அல்ல…. என் சொத்துக்களையும் சேர்த்து இளாவின் பெயரில் எழுதி வைப்பதாக இருந்தால் எழுதி வையுங்கள் எனக்கு ஒன்றும் ஆச்சேபனை இல்லை.

அதற்காக என்னை பிளாக்மெயில் செய்யும் வேலை எல்லாம் வேண்டாம் என்றால் மாயோள்.

உன் அம்மா அப்பாவிற்கு பிறகு உன்னையும் உன் தங்கையையும் நான் தான் சிறு வயதில் இருந்து வளர்த்து வருகிறேன். நான் சாவதற்குள் உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டால் நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன் என்று அவர் அடுத்த அஸ்தரத்தை ஏவ…

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த மயோ… செழியன் இறந்து விடுவேன் என்று சொன்னதும் அவளால் தாங்க முடியாமல் தாத்தா… என்று கோபமாக தன் சேரில் இருந்து எழுந்தவள் இப்போ என்ன உங்களுக்கு நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லவா…

இந்த இரண்டு நாளில் நீங்கள் எந்த கழுதையைக் கொண்டு வந்து என் முன்னாள் நிறுத்தினாலும் நான் திருமணம் செய்து கொள்கிறேன்.

இந்த ஒரு விஷயத்திற்காக தயவு செய்து நீங்கள் உங்கள் சாவை பற்றி மட்டும் பேசாதீர்கள். எனக்கும், இளாவிற்கும் உங்களை தவிர வேறு யார் இருக்கிறார்கல.

நீங்கள் மட்டும் இல்லை என்றாள் எங்களுடைய அம்மா அப்பா… இறந்ததின் பிறகு அவருடன் பிறந்தவர்கள் எல்லாம் என்னையும், இளாவையும் இந்த நேரம் கொன்று இந்த சொத்துக்களை எல்லாம் என்றோ பறித்து இருப்பார்கள் என்றாள்.

அதனால் தான் நான் சொல்றேன் மா… எனக்கு பிறகு உன்னையும் இந்த சொத்துக்களையும் கட்டிக் காக்க ஒருவன் வேண்டுமால்லவா… என்றார்.

அப்போ என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா… நான் இவ்வளவு வருடமாக என் மொத்த உழைப்பையும் போட்டு எல்லோரையும் விட உங்களையும் நம் கெளரவத்தையும் யாரும் ஏணி வைத்தால் எட்டாத அளவிற்கு உயர்த்தி இருக்கிறேன்.

இதை எல்லாம் பார்த்தும் கூட உங்களுக்கி என் மீது நம்பிக்கை இல்லை அப்படிதானே என்றாள் மயோ.

அப்படி இல்லை மாயோள்… நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். உனக்கு இதில் இருக்கும் திறமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை.எனக்கு என் பேத்தி எல்லோரையும் போல அவளுக்கு என்று ஒரு காதல், திருமணம்,குடும்பம் குழந்தை என்று அவளுக்காக ஒரு அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த தாத்தா.. ஆசை படுவது நியாயம் தானே என்றார்.

தாத்தா…. எனக்கு நீங்கள் சொல்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை… ஆண்கள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் தான். என்னை திருமணம் செய்த பிறகு என்னுடைய சொத்திற்காக என்னை ஏமாற்றி எல்லாவற்றையும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டால் அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றாள் மயோ.

அதனால் தன் உன்னோட கண்டிஷனிற்கு தகுந்தும் என்னுடைய நம்பிக்கையை வென்றவனாகவும் இருக்கும் ஒருவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார்.

எவ்வளவு பேசியும் அவர் திரும்ப திரும்ப தன் திருமணத்திலேயே நிற்பது மயோவிற்கு எரிச்சளை மூட்டியது.

சரி தாத்தா.. நான் நீங்கள் சொல்லும் ஒருவனை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் எனக்கு எப்போதி அவன் மீது முழு நம்பிக்கை வருகிறதோ அன்று நான் என்னுடைய திருமணத்தை அறிவிப்பேன் அதுவரை என்னுடைய திருமணம் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு கண்டிஷன் போட்டால்.

எப்படியோ ஒரு வழியாக தன் பேத்தி திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் என்று சந்தோசத்தில் அவள் சொன்ன கண்டிஷனிற்கு ஒப்புக் கொண்டார் அவரும்.

முதலில் மாயோலிற்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதன் பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் சொல்வதற்கு இல்லனா தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்தார்.

அவர் அறைக்கு வர… அவருடைய பர்சனல் பாடி கார்ட் வந்து அவர் முன் அருளை பற்றிய அன்றைய தகவல்களை கொண்டு வந்து அவர் டேபிளில் வைக்க…

அதை எடுத்து பார்த்தவர் முகம் முதலில் யோசனையில் சுருங்கினாலும்… பின் மெல்ல சிரித்துக் கொண்டு… கார்ட்ஸ்களுடன் அருளின் அம்மா இருக்கும் அவர்களுடைய ஹாஸ்பிடளுக்கு சென்றார்.

❤️

EPI 6

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

தன் அம்மா ஆப்ரேஷனிற்க்காக தன் நண்பன் முகேஷிடம்  பணம் கேட்டு அவனிடம் பேசிக்கொண்டு இருந்த அருள் தன் மொபைல் அடிக்கவும் அதை எடுத்து கரண்னிடம் கொடுத்து யார் என்று பார்க்க சொன்னவன்.

தன் நண்பனிடம் முகேஷ் தயவு செய்து உன்னால் எவ்வளவு முடியுமோ இல்லை என்று சொல்லாமல் அவ்வளவு கொடு போதும்… என்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்து விடுகிறேன்.என் அம்மா மிகவும் சீரியஸ் ஆக ஹாஸ்பிடலில் இருக்கிறார் ப்ளீஸ் என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

அவன் நண்பனோ அருள் கெஞ்சுவதை கூட பொருட்படுத்தாமல் தன் மொபைலை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருக்க..இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்தும் அருளை ஒரு பொருட்டாகவே கருதாமல் அமர்ந்து இருந்தான்.

அருள் கெஞ்சிக்கொண்டு இருக்க அவனை மனிதனாக கூட நினைக்காமல் புறக்கணிப்பவனை பார்த்து கடுப்பான கரண்.

நேராக அருளிடம் வந்து அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல…

டேய்… கரண் என்ன டா பன்னிட்டு இருக்க.. கையை விடு என்று கரணிடம் கத்திக் கொண்டு அவனை தன் கையை விட சொல்லி கரணிடம் சண்டை இட…

டேய் அவன் உன்னை ஒரு மனுஷனாவே நினைக்காம நீ எவ்வளவு நேரம் கெஞ்சிக் கொண்டு இருந்தாலும் அவன் உனக்கு ஒரு பைசா கூட தர மாட்டான். அவன் கிட்டே போய் கெஞ்சிட்டு இருக்குற… என்று கத்தினான் கரண்

டேய் உனக்கே தெரியும் நம் நிலைமை இப்போ சரி இல்லை இப்படி யோசித்துக் கொண்டு இருந்தால் அம்மாவை எப்படி காப்பாற்றுவது என்றான்.

 இந்த மாதிரி ஆளிடம் எல்லாம் கெஞ்சி பணம் வாங்கி தான் நீ அம்மாவை காப்பாத்தணும்னு நினைச்சா…அதெல்லாம் நடக்குற காரியமே இல்லை இவங்க எல்லாம் உன்னை ஏன்னு கூட கேக்க மாட்டாங்க என்று கர்ணன் சொல்ல.

 டேய் இப்போ அம்மாவுக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க டா…..நீ நிலைமை  புரியாம பேசிட்டு இருக்க… என்று கர்ணனிடம் அருள் வாதிட.

அடேய் அததாண்டா சொல்றதுக்கு நான் உன்ன கூப்பிட்டேன் இனி நீ இவன் கிட்ட எல்லாம் போய் கெஞ்சிட்டு இருக்க…. அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

 மீரா தான் உனக்கு போன் பண்ணி இருக்கா… என்னன்னு தெரியல அம்மா திடீர்  என்று ட்ரீட்மென்ட் எடுத்துக்கறதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்லி ரொம்ப பிடிவாதம் பண்ணிட்டு இருக்காங்களாமா….

உன்ன உடனே பாக்கணும்னு டிரீட்மென்ட் எடுத்துக்காம ஹாஸ்பிடல்ல டாக்டர்கிட்ட பிடிவாதம் பண்ணிட்டு இருக்கிறதா மீரா சொல்லி உன்ன உடனே ஹாஸ்பிடலுக்கு வர சொன்னா என்றான் கரண்.

 என்னடா சொல்ற இவ்வளவு சீரியஸா இருக்கிற நேரத்தில் அம்மா ட்ரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்களா ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க என்று தன் அம்மாவின் மீது கோபப்பட்டவன்.

சரி கரண்  சீக்கிரம் வா நம்ம ஹாஸ்பிடல் போலாம்  இருவரும் கிளம்பி எஸ் என் ஹாஸ்பிடல்  கிளம்பினர்.

❤️

அதற்கு முன் ஹாஸ்பிடலில்…..

கார்ட்ஸ்கள் புடை சூழ… தன் ஹாஸ்பிடளுக்குள் நுழைந்த செழியனை பார்த்ததும் ஹாஸ்பிடல் மேற்பார்வையாளர் பணிவாக அவர் முன் வந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்த….

அங்கு இருந்த அனைவரும் செழியனை பார்த்து அவர் நடந்து வரும் தோரணையிலேயே தங்களாகவே எழுந்து நின்று மரியாதையுடன் அவரை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர் நடந்து வரும் தோரணையே அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்று பார்த்ததும் புரிந்து விடும்.

அவர் கூடவே பணிவாக நடந்து வந்த மேற்பார்வையாளர் நீங்கள் சொன்ன அனைத்து ஏற்படுங்களும் செய்துவிட்டோம் சார் என்று அவரை அருளின் அம்மா இருக்கும் அறையில்  அறைக்கு அழைத்து சென்றனர்.

திடீர் என்று தன் அம்மாவை விஐபிக்கள் கவனிக்கும் எமெர்ஜெண்சி வார்டிற்கு மாற்றியதும் என்ன செய்வது என்று தெரியாமல் தன் அம்மாவை அட்மிட் செய்திருந்த ரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த மீரா திடீரென்று அந்த தளத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள….அவள் அம்மா இருந்த அறைக்குள் நர்ஸ்கள் உள்ளே செல்வதும் வெளியே வருவதாகவும் இருக்க… அவள் எதுவும் புரியாமல் அங்கு வெளியே வந்த ஒரு நர்ஷின் கையை பிடித்து நிறுத்தியவள்.

சிஸ்டர் என்னாச்சு… ஏன் எல்லாரும் இப்படி பரபரப்பாக உள்ளே வெளியேயும் போயிட்டு வந்துட்டு இருக்கீங்க என் அம்மாவுக்கு எதுவும் சீரியசா … என்று  மீரா பயந்து கொண்டே கேட்டால்.

 எனக்கு இப்போது உங்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லையே மேடம் கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க….

இந்த ஹாஸ்பிடளை கட்டினவங்களோட தாத்தா வராரு அவர் வரத்துக்காகத்தான் நாங்க எல்லாம் இப்ப பரபரப்பா வேலை பார்த்துட்டு இருக்கோம்.

கொஞ்ச நேரம் என்ன டிஸ்டர்ப் பண்ணாம அங்க போய் உட்காருங்க என்று அந்த நர்ஸ் அவசர அவசரமாக மீராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

 ஹாஸ்பிடல் முதலாளியோட தாத்தா வரார் அப்படிங்கிறதுக்காக ஏன் என் அம்மா ரூமுக்கு இவ்வளவு பரபரப்பா எல்லாரும் போயிட்டு  வந்துட்டு இருக்காங்க.

என் அம்மாவை இங்க எதுக்கு மாற்றி இருகாங்க அப்படி என்னதான் நடக்குது என்று யோசித்துக் கொண்டு அங்க இருந்த பெஞ்சில் அமர்ந்து இருந்தால் மீரா..

 திடீர் என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நர்சுகள் அனைவரும் தன் அம்மாவின் ரூமிற்குள்  சென்றுவிட அந்த இடமே மிகவும் அமைதியாக காட்சி அளித்தது.

 அந்த அமைதி மீராவை பயமுறுத்த என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து  கொண்டு அவள் அம்மாவின் அறைக்குள் என்ன நடக்குறது என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும்  நடந்து கொண்டிருந்தால்.

 அவள் அம்மா இருந்த அறையின் முன்  தனியாக நின்று இருந்த மீராவின் மனதிற்குள் பலவித எண்ணங்கள் ஓட…குழப்பத்தில் நின்று இருந்த மீரா திடீர் என்று அமைதியாக இருந்த இடம் சலசல என பேசும் சத்தமும் காலடி ஓசையும் கேட்க….

திரும்பி பார்த்தவள் ஒரு வயதான மனிதரும் அவரைச் சுற்றி அந்த ஹாஸ்பிடலின் சீப் டாக்டர்களும் அவருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அந்த வயதானவரை பார்த்ததுமே சற்றுமுன் நர்ஸ் அவளிடம் சொன்னது போல இந்த ஹாஸ்பிடல் சிஇஓ உடைய தாத்தாவாகத்தான் இருக்க வேண்டும் என்று மீராவிற்கு தோன்றியது..

அவர்கள் அனைவரும் நேராக தன் அம்மா இருக்கும் அறைக்குள் செல்ல…. மீராவுக்கு அவர்கள் பின் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று தயக்கத்தோடு நின்று இருக்க அப்போது உள்ளிருந்த ஒரு நர்ஸ் வெளியே வந்து அவளை உள்ளே அழைத்தார்.

அவர் அழைத்ததும் உள்ளே வந்த மீரா எதுவும்  புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே தன் அம்மாவிடம் ஓடி வந்து அம்மா… கண் முழுச்சுட்டீங்களா…. ஏன் மா எங்க கிட்டே உங்களுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்குன்னு சொல்லவே இல்லை.உங்களுக்கு எதுவும்னா… நானும் அண்ணாவும் என்ன ஆவோம்னு யோசிச்சிங்களா நீங்க என்று அவர் கையை பிடித்துக்கொண்டு அழுதாள்.

அவள் அழுவதை பார்த்து செழியன் கவலை பாடாதே மா உன் அம்மாவிற்கு ஆபரேஷன் பண்ணிடலாம் ENDRAVAR

 மீராவை பார்த்து அருளோட தங்கச்சி நீதானா  என்று கேட்டார் செழியன்.  தன் அண்ணனை எப்படி இவ்வளவு பெரிய  வசதி படைத்தவருக்கு தெரியும். இவ்வளவு பெரிய ஆள் வந்து கேட்கும் அளவிற்கு அவன் பிரபலமாக இருக்கிறானா என்று யோசித்துக் கொண்ட மீரா ஆமாம் தாத்தா என்று சொன்னால்.

 அவள் தாத்தா என்று அழைத்ததும் மிகவும் சந்தோஷப்பட்ட செழியன். மீராவை பார்த்து நான் நேரடியா விஷயத்துக்கே வரேன்மா…. என்றவர் அதுவரை எதுவும் புரியாமல் இவர்களை பார்த்துக்கொண்டு படுத்திருந்து அமுதாவை பார்த்து வணக்கம் என் பேரு செழியன்.

 என்னடா இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில வந்து இவன் உங்க கிட்ட இப்படி பேசுறான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு இதை விட்டா வேற வழியும் இல்ல அதனால தான் நான் உங்ககிட்ட பேச வந்திருக்கேன் என்று அவர் சொல்ல

 நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல என்று அமுதா சரியாக பேச முடியாமல் தன் வார்த்தைகளை ஒவ்வொன்றாக பொறுமையாக சொல்ல….

அமுதா பேசும் வரை காத்திருந்தவர் நீங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க நான் சொல்றது முதல்ல முழுசா கேளுங்க அதுக்கப்புறம் உங்க முடிவு என்னன்னு எனக்கு சொல்லுங்க என்று சொன்னார் செழியன்.

 அவர் அப்படி சொன்னதும் அமுதாக எதுவும் பேசாமல் அமைதியாக தலையை ஆட்ட..

  என் பேத்திக்காக உங்கள் மகன் அருளை திருமணம் செய்து கொள்ள கேட்பதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

 என்னடா நீங்க ஹாஸ்பிடல்ல இவ்ளோ சீரியஸா படுத்திருக்கும் போது நான் வந்து உங்க பையன் திருமணத்திற்காக கேட்கிறேன் என்று நீங்க நினைக்க வேண்டாம்.

  நேர்மையாக இருக்கும் உங்கள் மகனிடம் நான் போய் நேரடியாக என் பேத்தியை கல்யாணம் செய்துகொள் என்று கேட்டால் அவர் எங்கள் வசதி வாய்ப்புகளையும் எங்கள் சுற்றத்தையும் காரணம் காட்டி கண்டிப்பாக திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளவே மாட்டார்.

அவரை மடக்குவதற்கு எனக்கும் வேறு வழியே தெரியவில்லை என் பேத்தியும் சம்மதிக்க வைக்கவும் வழி இல்லாமல் தான்  நீங்கள் இந்த மாதிரி இருக்கும் நேரத்தில் உங்களிடம் இதைப் பற்றி பேச வந்தேன் என்று சொன்னவர்.

இதற்கு முன்பு அருளை பார்த்ததும் அவனை பற்றியும், அவன் பிறரிடம் நடந்து கொள்வது, நியாயமாக இருப்பது என்ன உங்கள் மகனை பற்றி ஆயிரம் காரணங்கள் நல்ல விஷயங்களாக இருக்கா…அந்த காரணங்களுக்காக தான் நான் உங்கள் மகனையே என் பேத்திக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

என் பேத்தியையும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவர் போராடிக் கொண்டிருப்பதையும் ரத்தின சுருக்கமாக அமுதாவிடம் கூறினார் செழியன்.

 நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் எப்படியும் இப்போ உங்களுக்கு ஆபரேஷன் பண்றதுக்காக பணம் தேவைப்படுதுன்னு உங்க மகன் வெளியே பணம் கேட்க போயிருக்கிறார் என்று எனக்கு நல்லாவே தெரியும்.

அவர் எங்கே போய் கேட்டாலும் கண்டிப்பாக எந்த பணமும் யாரும் அவருக்கு கொடுக்க மாட்டார்கள் நான் கொடுக்கவும் விடமாட்டேன்.

எனக்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பமும் அமையாது அதனால்தான் சொல்கிறேன். உங்களுக்கு இப்போது ஆபரேஷன் பண்ணி உங்களை காப்பாற்ற வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மகனை என் பேத்திக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்க வேண்டும்.

அப்படி ஒத்துக்கொண்டால் மட்டுமே உங்களுக்கு ஆபரேஷன் நடக்க முடியும். உங்கள் மகன் எப்படியாவது முயற்சி பண்ணி பணமே கொண்டு வந்து இங்கே கட்டினாலும்…..நான் சொல்லாமல் உங்களுக்கு யாருமே ஆபரேஷன் செய்ய மாட்டார்கள் என்று அவர் சற்று மிரட்டுவது போல தோரணையில் பேச….

அமுதாவிற்கும் மீராவிற்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் பயத்தில் உறைந்து போய் அவர் பேசியதை கேட்டு அப்படியே நின்றனர்.

அப்படியே நீங்கள் இந்த ஹாஸ்பிடல் விட்டு வேற எந்த ஹாஸ்பிடல் போய் டிரீட்மென்ட் எடுத்தாலும் நான் சொல்லமல் யாரும் உங்களுக்கு ஆபரேஷன் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார் செழியன்.

 அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு அதுவரை பொறுமையாக இருந்த மீரா செழியினை பார்த்து என்ன தாத்தா இப்படி வந்து ஹாஸ்பிடல்ல என்னையும் என் அம்மாவையும் பிளாக் மெயில் பண்ற மாதிரி பேசுறீங்க….

உங்களை பார்த்தால் எவ்வளவு நல்லவர் மாதிரி தெரியுது…ஆனா நீங்க பேசுறதெல்லாம் பார்த்தா உங்களோட தோற்றத்துக்கும் உங்களோட பேச்சுக்கும் சம்பந்தமே இல்ல….

இப்படியா உயிருக்கு போராடிட்டு இருக்க என் அம்மா கிட்ட வந்து அவங்க உயிரை பனையமா வச்சு எங்க அண்ணனை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்பீங்க…. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை ஒரு பெரிய மனிதர் செய்யும் வேலையா இது என்று அவள் சற்று கடுமையாகவே செழியன் இடம் பேச.

 அவள் அப்படி பேசியதும் செழியனுடைய பாடி கார்ட்ஸ் தங்கள் கண் முன்னாலேயே ஒரு சிறு பெண் தங்கள் பாஸை எதிர்த்து பேசுவதை பார்த்த  அவளை மிரட்ட மீராவின் அருகில் வர….

செழியன் அவர்களை தடுத்து அமைதியாக இருக்க சொல்லிவிட்டு மீராவைப் பார்த்து சிரித்தவர் நீ சின்ன பொண்ணுமா உனக்கு இதெல்லாம் ஒன்னும் புரியாது. நீ பொறுமையா நின்னு நானும் உன் அம்மாவும் என்ன பேசறோம்னு மட்டும் கேளுங்க என்று சொன்ன செழியன்.

 நான் உங்கள பிளாக்மெயில் பண்ணனும் என்பதற்காக இப்படி சொல்லளை மா…

நீங்க என்ன தப்பா எடுத்துக்க வேண்டாம் என் பேத்திக்கு இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் ஆகியே தீரணும்.

அப்படி இல்லன்னா இத்தனை வருஷமா அவ சம்பாதித்து வைத்த அவளோட சொத்துக்களும் …  அவளுக்காக அவங்க அம்மா அப்பா விட்டுட்டு போன சொத்துக்களும்.என் பேத்தி மாயோள்  அழியனும்னு பாத்துட்டு இருக்குற என்னோட சொந்த பந்தங்களோட டிரஸ்டுக்கு போயிடும்.

அவள் இவ்வளவு வருஷமா கஷ்டப்பட்டது எல்லாமே வீணாயிடும். இந்த விஷயம் நான் இன்னவரைக்கும் என் பேத்தி கிட்ட சொல்லல.

அப்படி அவகிட்ட சொல்லி நான் இருந்தேன்னா அவளோட வாழ்க்கை இன்னுமே சந்தோஷம் இல்லாத ஒரு வாழ்க்கையா மாறிடும்.

இந்த வயசுல அவ அனுபவிக்க வேண்டிய எதுவுமே அனுபவிக்காம அவளுடைய அப்பாவோட சொத்துக்களை காப்பாற்றவும்  தன் சொந்தங்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழனும்னு நினைப்பு மட்டும்தான் வைராக்கியமா வச்சிட்டு தனக்காக எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமயே இந்தனை வருடமாக ஒரு மெஷின் போல உழைத்துக் கொண்டு இருக்கிறாள்.

என் பேத்தியும் நல்லா இருக்கணும்   உங்க பையன் வாழ்க்கையும் நல்லா அமையும் என்ற உத்தரவாதத்தோட தான் நான் உரிமையா வந்து உங்க கிட்ட கேட்கிறேன். தயவுசெய்து உங்க பையனை என் பேத்திய கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைங்க.

 நீங்க தான் எப்படியாவது   உங்க மகன் கிட்ட பேசி என் பேத்தியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கி தரணும் என்று செழியன் சொல்ல..

 அவர் பேசியதை முழுவதையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அமுதா இப்படியும் தன் மகனுக்கு கல்யாணம் ஆவதை நான் உயிரோடு இருக்கும்போதே பார்த்து ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தோன்ற….

ஆனாலும் அவர் மனதிற்குள்  அவர்களை விட இவர்கள் வசதியில் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத இடத்தில் இருக்கும் பொழுது எப்படி தன் மகனை இவர் பேத்திக்கு  திருமணம் செய்து வைப்பது என்று அமுதா யோசிக்க.

அவர் யோசித்ததை வைத்தே புரிந்து புரிந்து கொண்ட செழியன் என்னடா இவ்வளவு வசதியான ஆட்கள் அவங்கள  விட வசதி கம்மியா இருக்குறவங்க கிட்ட வந்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்

 உங்க மகனோட குணம் அவருடன் நேர்மை அதெல்லாம் பார்த்து புடிச்சு தான் நான் என் பேத்திக்காக இங்க வந்து கேட்டு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்டு இருக்கிறேன்.

நீங்க சொல்ற பதில் தான் என்னோட பேத்தியோட வாழ்க்கையே அடங்கி இருக்கு அவளுக்கான ஒரு நல்ல வாழ்க்கையும் நல்ல துணையாக அமைச்சு தந்த பிறகு தான் என்னோட உயிர் போகணும் என்று வைராக்கியத்தோடு இருக்கிறேன்.

உங்கள் மகனுக்காகத்தான் நீங்க இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கும் நல்லா தெரியும் நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க இந்த ஒரு கல்யாணத்துனால உங்க மகனோட வாழ்க்கையும் என் பேத்தியோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு யோசிங்க கண்டிப்பா உங்களுக்கு புரியும் என்று சொன்னார் செழியன்.

 அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது தன் மகனுக்கு இதைவிட ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று யோசித்த அமுதா…. சிறிதும் தாமதிக்காமல் சரி என்று தலையை ஆட்ட….

அமுதா அருளின் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்த மீரா அம்மா….. என்னம்மா அண்ணனை கேட்க்காம நீங்க பாட்டுக்கு இவர்கிட்ட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொல்லிட்டீங்க என்று சொல்ல

மீராவின் கையைப் பிடித்து தடுத்தவர் அமுதா தன் கண்களை மூடி திறந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல சைகை காட்டிவிட்டு.

 செழியனிடம் திரும்பி  மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டே நீங்கள் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் என் மகனிடம் நான் பேசி சம்மதம்  வாங்குகிறேன் என்று சொன்னவர்.

ஆனால் ஓரே ஒரு கண்டிஷன் என்றார் அமுதா….

அவர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதே பெரிய விஷயமாக இருக்க…அவர் இப்போ என்ன என்ன கேட்டாலும் அளித்தர தயாராக இருந்த செழியன் என்ன என்று கேட்க.

என் மகனுக்கு உங்கள் வீட்டில் எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் மரியாதையை குறைவாக நடத்தக் கூடாது.அதே போல அவன் வீட்டோட மாப்பிள்ளையாக வர மாட்டான் என்றார் அமுதா.

அவர் ஒரு கண்டிஷன் என்று சொன்னதும் பணம் பொருள் அந்த மாதிரி எதுவும் விலைமதிப்பு அதிகமாக எதுவும் அமுதா கேட்பார் என்று நினைத்த செழியன்.

தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவன் எங்கு இருந்தாலும் சுயமருயாதையோடும் கௌரவத்தோடும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்பதை பார்த்து.

அருளின் இந்த குணம் எங்கு இருந்து வந்தது என்று நினைத்த செழியன் என் பேத்திக்கு நல்ல கணவன் குடும்பம் அமைய போகிறது என்று நினைத்து மகிழ்ந்து போனார்.

நீங்கள் நினைகும்படியான ஆட்கள் நாங்கள் கிடையாது. என் பேத்தியை எப்படி கௌரவமாக நடத்துக்கிறேனோ அதே கௌரவம் உங்கள் மகனுக்கும் இருக்கும் எந்த விதத்திலும் அவர் மனம் நோகும்படி என்னை சேர்ந்தவர்கள் யாரும் நடந்து கொள்ள  மாட்டார்கள் என்று சொனார் செழியன்.

அதே போல… வீட்டோடு மாப்பிள்ளை என்று நான் உங்களிடம் சொல்லவே இல்லையே… என் பேத்தியும் அப்படி வீட்டோடு வரும் ஆண்மகனை கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டாள்.

உங்கள் வீட்டில் எப்படியும் என் பேத்தியால் வந்து இருக்க முடியாது.  நான் ஏற்கனவே என் பேத்தி திருமணம் ஆனா பிறகு அவளுக்கு பரிசளிக்க சிட்டியின் முக்கியமான இடத்தில் அவளுக்காக ஒரு பெரிய வில்லாவை விலைக்கு வாங்கி இருக்கிறேன். அவர்கள் இருவரும் அங்கேயே தனியாக இருக்கட்டும் என்றார் செழியன்.

அவர் சொல்வதை எல்லாம் கெட்டு திருப்தி அடைந்த அமுதா மீராவிடம் திரும்பி உன் அண்ணனை போன் பண்ணி உடனே இங்கு வரச் சொல்லு என்று சொன்னார்.

EPI 7

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அருள் அவன் அம்மா சிகிச்சை செய்ய மறுக்கிறார் என்று மீரா சொல்லி கேள்விப்பட்டதும் கரணுடன் ஹாஸ்பிடல் விரைந்தான்.

அவரை அறை மாற்றிய விஷயம் அருளுக்கு தெரியாமல் போகவே முதலில் அவரை வைத்து இருந்த பழைய அறைக்கு தான் சென்றான்.அங்கு அவர் இல்லாமல் போகவே அவர் அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்த பணியாளரிடம் சென்று இங்கே இருந்த என் அம்மா எங்கே? காலையில் நான் வெளியே கிளம்பும்போது அவங்க இங்கே தான் இருந்தாங்க…. அவங்க எங்க இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டான்.

அவங்க இங்கே இல்லை சார் அவங்க விஐபி ரூமில் இருக்காங்க என்று சொல்ல..

என்ன…. என்று அருளும் கரணும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தவர்கள். அருளின் அம்மா இருக்கும் தளம் கேட்டு அங்கு விரைந்தனர்.

அவன் அம்மாவை வைத்து இருக்கும் தள்ளத்திற்கு உள்ளே இருவரும் வர….அந்த இடம் பயங்கர அமைதியுடன் இருக்கவே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு உள்ளே செல்ல….

அவன் அம்மாவின் அறை எங்கே என்று தேடிக்கொண்டு போக… அங்கே ஒரு அறையின் முன்னே மட்டும் நிறைய கார்ட்ஸ்கள் நின்று இருக்க… அந்த பக்கம் செல்லாமல் வேறு அறை தேடி செல்ல…

நீண்ட நேரம் ஆகியும் அருள் இன்னும் வராமல் போகவே அவனுக்கு போன் பண்ணலாம் என்று அறையை விட்டு வெளியே வந்த மீரா அருளும் கரணும் அங்கு சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அண்ணா…. என்று அழைக்க…

அமைதியாக இருந்த அந்த இடம் அவள் சத்தத்தில் எதிரொலிக்க… மீராவை திரும்பி பார்த்த இருவரும் வேகமாக அவளிடம் ஓடி வர..

அண்ணா வந்துட்டியா நான் எனக்கு போன் பண்ணலாம்னு தான் வந்தேன் என்றாள் மீரா.

இப்போதான் வந்தோம் ஆமா இங்க எப்படி அம்மா… என்று கேள்வியுடன் அருள் கேட்க..

கரணும்  அதையே தான் மீராவிடம் கேட்டான்.

அருளை பார்த்து அண்ணா நீ முதல்ல உள்ளே போ… உனக்கு எல்லாம் புரியும் அம்மா ரொம்ப பிடிவாதமா டிரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு இருகாங்க என்று சொல்லி அவனை உள்ளே அனுப்பி வைத்தால்.

அறைக்கு வெளியே சென்று கொண்டிருந்த காட்சிகளை பார்த்துவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவன் கண்ணில் முதலில் பட்டது மயோவின் தாத்தா செழியன் தான்..

அவரைப் பார்த்ததில் அருள் சுருக்கியவன் அவர் அருகில் வந்து நீங்க…. நீங்க…. எப்படி இங்க என்று அவரை புரியாமல் பார்த்து கேட்டான்.

 செழியன் பேச வருவதற்குள் அருளின் அம்மா அமுதா படுத்து இருந்தவர் அருள் வந்துவிட்டதை பார்த்து….அருள் வந்துட்டியாப்பா… என்று அவனைப் பார்த்ததும் கட்டிலில் படுத்திருந்தவர் எழுந்திருக்க பார்க்க….

வேகமாக அவர் அருகில் வந்த அருள் அம்மா என்ன செய்றீங்க…நீங்க இப்படி எல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது… முதல்ல அமைதியா படுங்க நான் வரேன் என்று வேகமாக உன் அருகில் வந்து அவரை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தான் அருள்.

என்ன அம்மா ஆச்சு… ஏன் நீங்க டிரீட்மென்ட் எடுத்துக்க மருக்குறீங்க… எங்க கிட்ட உங்க உடல்நிலை இவ்வளவு மோசமா இருக்குன்னு ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்ல… உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் சொல்லித்தான் உங்க உடம்பு எவ்வளவு மோசமா இருக்குன்னு எங்களுக்கு தெரிய வந்திருக்கு.

இப்போ ஹாஸ்பிடல் வந்ததுக்கு பிறகும் நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு மறுத்தா என்னம்மா பண்றது….

உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சின்னா நானும் மீராவும் என்ன பண்ணுவோம்ன்னு கொஞ்சமாவது யோசிச்சிங்களா….ஏம்மா இப்படி பண்றீங்க… என்றான் மிகவும் வருத்தமுடன்.

 உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுக்க வேண்டாம்னு சொல்லித்தான் நான் உங்க யார்கிட்டயும் சொல்லல அருள்.

என்னால நீயும் மீராவும் கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்லித்தான் நான் இதையெல்லாம் சொல்லி உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு நினைச்ச்சு தான் நான் எதுவும் சொல்லல என்று சொன்னார் அமுதா.

 இது எல்லாம் சொல்லாமே நீங்க இப்படி இருந்து உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆனதுக்கு அப்புறம் நானும் மீராவும் எங்களுக்குன்னு யாரும் இல்லாம வருத்தப்படுவோமே அதை எல்லாம் நீங்க யோசிக்கலயா….

உங்கள பாத்துக்கிறதுல நாங்க என்னிக்காவது சிரமம்னு சொல்லி இருக்கோமா….நீங்களே எதையாவது ஒன்னு மனசுல நினைச்சுட்டு ஏன் இப்படி பண்றீங்க….என்றான் அருள்.

 அமுதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…. அவர் அமைதியை பார்த்து அருள் ஏன்மா எதுவுமே பேச மாட்டேங்கறீங்க….

இத்தனை நாள் தான் நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்க மறுத்துட்டீங்க…ஆனா இப்பவும் ஏன் டிரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேங்கறீங்க.

நாங்க எல்லாம் இல்லையா உங்கள பாத்துக்க… எங்க கூட இருக்கனும்னு உங்களுக்கு ஆசை இல்லையா ஏன் இப்படி ட்ரீட்மென்ட் எடுக்க மாட்டேன்னு வீம்பு பண்றீங்க.

  இப்போ நான் ட்ரீட்மென்ட் எடுத்து என்ன பண்ணப் போறேன் அருள் எப்படியும் நீ நான் சொன்ன பேச்சைக் கேட்கப் போறதில்ல.

நான் சாகறதுக்குள்ள உன் கல்யாணத்தை பார்த்திடணும்னு சொல்லித்தான் உனக்கு எவ்வளவு பொண்ணுங்கள பார்த்தேன்.

ஆனா… உன்ன பாக்குற பொண்ணுங்க எல்லாம் ஒன்னு அவங்க உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்றாங்க…. இல்லனா அவங்க எல்லாரும் பேசறதும் பண்றதும் பாத்துட்டு நீ வேண்டான்னு சொல்லிடுற.

நான் சாகுற காலத்துக்குள்ள உன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் சாகணும்னு இருந்தேன் இப்ப அதுக்கும் வழி இல்லாம போயிடுச்சு…. இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று அவர் விரக்தியாக பேச….

 நான் செத்தால் என்ன என்று அவர் அப்படி சொன்னதும் அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த  மீராவும் அதைக் கேட்டுவிட்டு அம்மா என்று அருளும் மீராவும் அவரை பார்த்து கத்தினார்கள்.

 அவர் அருகில் வேகமாக வந்த மீரா அப்போ அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா நீ நிம்மதியா செத்துப் போய்விடுவ  அப்படித்தானே…. அப்ப நான் என்ன பண்ணட்டும் நான் யாரு உனக்கு என்ன பத்தி உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்ல அப்படித்தானே…. எப்போ பாரு அண்ணா…அண்ணான்னு அவனை மட்டும் தான் பேசிட்டு இருக்கே நீ….என்று மீரா அவரிடம் கோபமாக பேச.

 உன்ன பத்தி நினைக்காம விட்டுடுவேனா நான்.  நான் இறந்த பிறகு உன்னை யாரு பார்த்துக்க போறா….. உன் அண்ணன் தான பாத்துக்க போறேன் அவனும் அவன் பொண்டாட்டியும் உன்ன பார்க்காம விட்டுட போறாங்களா என்ன….இப்படி எல்லாம் பேசி என்ன கஷ்டப்படுத்தாதே என்று அவர் சொல்ல…

நான் ஒன்னும் உங்களை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கலை அம்மா….நீங்க தான் என்னையும் அண்ணனையும் உங்களுக்கு டிரீட்மென்ட் எடுத்துக்காம எங்க ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்தறீங்க.இப்ப நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்க போறீங்களா இல்லையா என்று மீரா கேட்டாள்.

 அருளும் மீராவும் சிரமப்படுவதை பார்த்த கரண் அவன் அருளின் அம்மாவிடம் இருந்து அம்மா ஏம்மா இப்படி பண்றீங்க… பாருங்க உங்களால அருளும் மீராவும் எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு… நீங்க ட்ரீட்மென்ட் பண்ணி குணமாகி வந்தா அவங்களை விட இந்த உலகத்தில் யாரு சந்தோஷப்பட போறாங்க அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நினைக்கவே மாட்டீங்களா? ஏம்மா இப்படி பண்றீங்க என்று கரண் கேட்டான்.

 உடனே மீரா கரண் பேசுவதை கேட்டு அண்ணா நீங்க அம்மாகிட்ட என்னதான் சொன்னாலும் அவங்க நம்ம சொல்றது எல்லாம் எதுவுமே கேட்க மாட்டாங்க….

அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதைத்தான் நம்ம செய்யணும்னு நினைப்பாங்க… நீங்க அவங்க கிட்ட எதுவுமே கேட்காதீங்க அவங்க போனதுக்கப்புறம் நானும் அண்ணாவும் சந்தோஷமா இருப்போம்ன்னு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க….அவங்க விருப்பம் என்னவோ அப்படியே இருக்கட்டும்  என்று சொல்லிவிட்டு மீரா கோபமாக  தள்ளிப் போய் நின்று கொண்டால்..

 மீரா… கோபப்படாத டி…   நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு சொல்லித்தானே நான் இவ்வளவு வருஷமா எதையுமே விரும்பாம உங்களுக்காகத்தானே வாழ்ந்துட்டு இருந்தேன். நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் என்றார்.

 நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு சந்தோசம்னு நீங்க நினைச்சீங்கன்னா…. நீங்க முதல்ல ட்ரீட்மென்ட் வேண்டாம் என்று சொல்லிட்டு இருக்காதீங்க… உங்களுக்கு ட்ரீட்மென்ட் இப்பவே எடுத்துக்கணும் என்று சொன்னான் அருள்.

 அவனை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு நான் இப்போ ட்ரீட்மென்ட் கண்டிப்பா எடுத்துக்கணுமா என்று அமுதா கேட்க அம்மா மறுபடியும் முதல்ல இருந்து வராதீங்க கண்டிப்பா நீங்க ட்ரீட்மென்ட் எடுத்து தான் ஆகணும் இப்ப எதுக்கு வேண்டாம் என்று பிடிவாதம் பண்ணிட்டு இருக்கீங்க என்று அருள் அவரிடம் கோபித்துக் கொள்ள.

 சரி நான் இப்பவே எனக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்க சம்மதிக்கிறேன் என்றார் அமுதா….

 அமுதா தனக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ள சம்மதம் என்று சொன்னதும் அருளும் மீராவும் கரனும் கூட மிகவும் சந்தோஷப்பட்டு அவரை பார்க்க ஆனால் ஒரு கண்டிஷன் என்று அமுதா சொல்ல.

 என்ன கண்டிஷன் சொல்லுமா எதுவா இருந்தாலும் நாங்க செய்யறதுக்கு தயாராதான் இருக்கும் நீங்க குணமாகி வந்தாலே எங்களுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை என்று அருள் அவரிடம் சொல்ல.

  மீரா  எதுவும் செய்யணும்னு  அவசியமில்லை அவ சின்ன பொண்ணு…..நீ மட்டும் நான் சொல்றத கேட்டா போதுமா அருள் என்று சொன்னார் அமுதா.

 நான் என்ன செய்யணும் என்று புரியாமல் அருள் அவரிடம் கேட்க.

நான் டிரீட்மென்ட் எடுத்துக்கணும்னா நான் சொல்றத நீ செய்வேன்னு சொல்லி  என் மேல சத்தியம் பண்ணி கொடு அப்பதான் நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்குவேன் என்று அமுதா சொன்னார்.

 நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்மா இதுவரைக்கும் நான் அப்படித்தானே இருக்கேன் இப்போ என்ன புதுசா கேக்குறீங்க நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க உடனே நான் செய்கிறேன் இப்பவே என் உயிரை விட சொன்னாலும் நான் உயிரை விட தயாராத்தான் இருக்கேன் என்று சொன்னான் அருள்…

 இந்த அம்மா மேல நீ வச்சிருக்கற பாசம் எனக்கு புரியுதுப்பா அதுக்காக நீ உன் உயிரை விடனும்  அவசியம் இல்ல முதல்ல என் மேல நீ சத்தியம் பண்ணு அதன் பிறகு தான் நான் சொல்லுவேன் என்று அவர் சொல்ல.

 அமுதா மிகவும் எமோஷனலாக பேச  அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட ஆரம்பித்தது….. அவர் மிகவும் சிரமப்பட்டு அவன் முன் தன் கையை நீட்டி சத்தியம் பண்ணு என்று தன் கையை ஆட்டி சொல்ல….

அவர் நிலைமையை புரிந்து கொண்டு அருள் வேகமாக வந்து அவர் கையில் சத்தியம் பண்ணி விட்டு சொல்லுங்கம்மா நீங்க என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராத்தான் இருக்கேன் என்று சொன்னான்.

 அருள் சத்தியம் செய்ததில் சந்தோஷமானவர் நான் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்  நான் உன்னை திருமண கோலத்தில் பார்க்கணும் என்று அவர் சொல்ல….

 அம்மா என்ன இது இப்படி ஒரு விஷயத்தை சொல்றீங்க என்னை திடீர்னு கல்யாணம் பண்ணுன்னு சொன்னா நான் என்னம்மா பண்ணுவேன்.

எங்க போய் பொண்ணு தேடுவேன் அதுக்குள்ள நான் எப்படி பொண்ணு தேடி உங்களுக்கு ஆபரேஷன் பண்றதுக்குள்ள கல்யாணம் பண்ண முடியும் என்றான் புரியாமல்.

 நீ முதல்ல கல்யாணம் பண்றேன்னு மட்டும் சொல்லு போதும் உனக்கு   ஏற்கனவே நான் பொண்ணு பார்த்து வச்சிட்டேன் என்றார் அமுதா.

 அவர் சொன்னதை கேட்டதும் அம்மா அந்த நிஷாவை தான் நீங்க எனக்கு பார்த்து வச்சிருக்கீங்களா…   அவளையும் அவள் குடும்பத்தை பற்றியும் நீங்க  தானே பார்த்தீங்க இப்படி பணப்பேயா இருக்கிறவங்கள நான் கல்யாணம் பண்ணிட்டு எப்படி சந்தோசமா இருப்பேன்னு நினைக்கிறீங்க…. நீங்களும் என்ன கஷ்டப்படுறதை பார்த்து சந்தோஷமா இருக்க முடியுமா என்று அருள் கேட்க.

நான் நிஷாவை உனக்காக பார்த்து வைக்கவில்லை அருள் நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கு நான் வேறு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பி செழியனை பார்க்க.

 சரிம்மா நீங்க பார்த்திருக்கிற பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறதாவே இருக்கட்டும்.

ஆனா நான் கல்யாணம் பண்றதுனால உங்களுக்கு எப்படி ஆபரேஷன் பண்ண முடியும்.உங்களுக்காக பணம் கட்டின பிறகு தானே ஆப்ரேஷன் பண்ணனும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… முதல்ல நான் உங்க ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை புரட்டிடுறேன் அதுக்கப்புறம் நீங்க சொல்றத எதுவா இருந்தாலும் செய்றேன் என்று அருள் சொல்லவும்.

 எனக்கு ஆபரேஷன் பண்றது பத்தி எல்லாம் நீ கவலைப்படாத அருள் அதை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று செழியனை காட்டிச் சொன்னவர்.

நீ அவரோட பேத்தியை தான் கல்யாணம் பண்ணிக்கணும் நீ அவரோட பேத்திய கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தான் நான் ஆபரேஷனே பண்ணிக்குவேன் என்று அமுதா சொல்லிவிட்டு அருளின் பதிலுக்காக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க .

 அருளும் திரும்பி செழியனை  யோசனையுடன் பார்த்தவன் இனிமேல் தான் என்ன நினைத்தாலும் நடக்காது என்று புரிந்து கொண்டவன் அவன் அம்மாவை பார்த்து சரி நீங்க பார்த்து இருக்கிற பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போ நீங்க ட்ரீமென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க…. என்றான் அருள்.

 அருள் செலினின் பேத்தியையே திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டனர் அமுதாவும் செழியனும்.

 அதுவரை இவர்கள் பேசியதெல்லாம்  கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்த செழியன் அருள் திருமணத்திற்கு தன் பேத்தி திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டான் என்றதும் வேகமாக எழுந்து வந்தவர்….

அருளை எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி நாளை காலை உங்களுக்கும் என் பேத்திக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம். சிம்பிளா நம்ம குடும்பம் மட்டும் சேர்ந்து  ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம். கொஞ்ச நாள் கழிச்சு உங்க அம்மாவுக்கு நல்ல குணமான பிறகு எல்லாரையும் கூட்டி ரிசப்ஷன் வச்சிடலாம் என்று அவர் சொல்ல.

 தன் கை மீறி போன விஷயத்திற்காக இனி தான் கவலைப்பட்டு எதுவுமே ஆகப்போவதில்லை என்று புரிந்து கொண்ட அருள். செழியன் சொன்னதற்கு சரி என்று தலையாட்டி விட்டு அவன் அம்மாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறையை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

வெளியே வந்த அருளுடன் கரணும் வர…

அமைதியாக சென்று வெளியில் போடப்பட்டு இருந்த மேஜையில் அமர்ந்த அருளுக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

நிமிடத்தில் முடிவான தன் வாழ்க்கை எங்கே செல்லப் போகிறதோ…. என்ற கவலை ஒரு புறம்.

தன் தாய் விரைவில் குணமாகப் போகிறார் என்ற சந்தோசம் ஒரு புறம் என அவன் மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

அருள் அமைதியாக இருப்பதை பார்த்து கரண் டேய்…. அருள்… என்ன டா அமைதியா இருக்கே… ஏதாவது பேசு என்றான்.

என்ன கரண் என்னை பேச சொல்றே…. நீயும் பார்த்துட்டு தானே இருந்தே… என் அம்மா என்னை எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி இருக்கிறார் என்று.

நாளை காலை எனக்கு திருமணம்!!!!

பெண் யார்? தெரியாது…

அவள் பெயர் என்ன? தெரியாது…

அவள் அம்மா அப்பா? தெரியாது…

அவள் குடும்பம்? தெரியாது…

அவள் என்ன படித்து இருக்கிறாள்? தெரியாது… அது கூட தேவை இல்லை…

அவள் என்ன செய்கிறாள்? அவள் குணம் என்ன? அவள் எப்படிப்பட்டவள்… என்னுடன் வாழ அவளுக்கு விருப்பமா… என்னை பற்று அவளுக்கு எதுவும் தெரியுமா…

என்னை பிடித்து தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாளா?இல்லை அவளையும் என்னைப் போல தான் இந்த திருமணத்திற்க்கு வற்புறுத்தி இருக்கிறார்களா?

இப்படி எத்தனை எத்தனை கேள்விகள் என்னுள் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தெரியுமா டா…

இவர்கள் ஏன் என் அம்மாவின் ஆபரேஷனிற்கு உதவ வேண்டும்….  என்ன ஆதாயத்திற்காக இந்த திருமணம் இவ்வளவு அவசரமாக நடைபெற வேண்டும். எனக்கு எதுவுமே புரியவில்லை கரண்.

எவ்வளவோ குழப்பம் இருந்தாலும் எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல் என் அம்மாவிற்கு நாளை ஆபரேஷன் நடைபெறுவது தான் என்றான் அருள்.

அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் கரண் அருளுடன் அமைதியாக இருக்க…

அமுதாவிடம்  நீங்கள் எதைப் பற்றியும் கவலை பட வேண்டாம். நாளை எல்லாம் நல்லபடியாக நடக்கும். என் பேத்திக்கும் உங்கள் மகனுக்கும் திருமணம் முடிந்ததும். உங்களுக்கு ஆபரேஷன் பண்ணி விடலாம் என்று சொல்லிவிட்டு… மீராவின் அருகில் வந்த செழியன்.

இனி உங்கள் பெண்ணை பற்றிய கவலையும் உங்களுக்கு வேண்டாம். என் இரு பேத்திகளை போல தான் மீராவும் என்று சொன்னவர் அவள் தலையை ஆசையோடு வருடிவிட்டு போய்ட்டு வரேன் மீரா.. என்று சொல்ல…

மீரா அவர் கையை பிடித்துக்கொண்டு அவரை பார்க்க… என்ன மா… என்றார் பாசமாக…. என் அம்மாவிற்கு எந்த பிரச்னையும் இல்லாமல் ஆபரேஷன் நடந்துவிடும் தானே என்று கேட்டாள்.

அவளை புன்னகைத்து விட்டு திரும்பி தன் ஹாஸ்பிடளின் டீனை பிரபல இதய அறுவை சிகிச்சை வல்லுநர் பாஸ்கரை பார்த்து… நாளை இவர் உயிரோடு இருந்தாள் நீயும் இருக்கலாம் என்று சொல்லிவிட்டு திரும்பியவர் மீராவை பார்த்து கவலை படாதே மீராக்குட்டி…. உன் அம்மா நிச்சயம் சீக்கிரம் குணம் ஆகி வருவார் என்றார்.

அவர் அந்த டாக்டரிடம் பேசும்போது இருந்த முகமும்… தன்னிடம் பேசும்போது இருந்த முகமும் பார்த்து வாய்யடைத்து போய்விட்டாள் மீரா.

இருவரிடமும் விடை பெற்று வெளியே வந்த செழியன். சோக முகத்தோடு அமர்ந்து இருந்த அருளை பார்த்து அவன் அருகில் வந்தார்

தன் அருகில் வந்து நின்ற செழியனை பார்த்து… எழுந்து நின்றவன். எதற்காக இதை எல்லாம் செய்கிறீர்கள் என்றான் நேரடியாக.

அவர் சிரித்துக்கொண்டே என்னை அன்று அவ்வளவு கூட்டத்தில் வந்து கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட… என்னை வந்து காப்பாற்றினாயே அதற்காக என்றார்.

அதற்காகவா… உங்கள் பேத்தியை.. யார் என்று தெரியாத எனக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள் என்றான்.

ஆம் என்று தலையை ஆட்டினார்.

எப்படியும் நான் நாளை உங்கள் பேத்தியை நான் கண்டிப்பாக திருமணம் செய்தே ஆக வேண்டும்.

ஆனால் நான் உங்களிடம் ஒரே ஒரு கண்டிஷன் இல்லை இல்லை இனி கண்டிஷன் என்று சொல்வதில் நியாயம் இல்லை என்றவன்.

ஒரு வேண்டுகோள் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்றவன். நீங்கள் என் அம்மாவிற்காக செலவு செய்யும் பணத்தை நம் மாதா மாதம் உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவேன் அதற்கு மட்டும் நீங்கள் சரி என்று சொல்ல வேண்டும் என்றான் அருள்.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தன் தன்மானத்தை விட்டு தர மனம் இல்லாமல் இருக்கும் அருளை நினைத்து மிகவும் சந்தோசப்பட்டார் செழியன்.

தன் பேத்திக்கு ஏற்ற… துணை தான் இவன் என்று நினைத்தவர். அருளின் வேண்டுகோளுக்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.

சரி நாளை காலை பாக்கலாம் நீ எங்கே வர வேண்டும் என்று என் ஆட்கள் உன்னை தொடர்பு கொண்டு தகவல்களை சொல்லுவார்கள் என்றவர் கிளம்ப போனவர். அருளை பார்த்து நான் உன்னை நீ… வா…போ… என்று உரிமையாக பேசலாம் தானே..ஏனென்றால் நீயும் மீராவும் எனக்கு பேரன் பேத்தி தான் ஆக போகிறீர்கள் என்றார்.

அருளும் லேசாக சிரித்தவன் என்னையே சொந்தமாக்கிக் கொள்ள என்னிடம் சம்மதம் கேட்காமல் நீங்கள் முடிவு எடுத்துவிட்டிர்கள். நான் ஒன்றும் நினைக்க மாட்டேன் உங்களுக்கு என்னை எப்படி கூப்பிட தோன்றுகிறதோ அப்படியே கூப்பிடுங்கள் என்றான்.

ஒன்றை மட்டும் நான் தெரிந்து கொள்ளலாமா… என்ற அருள் செழியனை பார்க்க.

உங்கள் பேத்தியின் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா… என்றான்.

அவர் மெல்ல சிரித்து நாளை வரை பொறுத்துக்கொள் பிறகு அவள் உனக்குத் தானே…நாளை உன் திருமணம் முடிந்த பிறகு அவளை பற்றி நீயே நேரடியாக என் பேத்தியிடமே கெட்டு தெரிந்து கொள் என்றவர்.

 கரணை பார்த்து நீ…. என்று அவனை பார்த்து கேட்க… நான் அருளின் ஃபிரெண்ட் கரண் தாத்தா… அவனுடைய கிளினிக்கில் தான் நான் இருக்கிறேன் என்றான்..

சந்தோசம் கரண் உன் நண்பனை நாளை நன்கு தயார் பண்ணி கூட்டிக்கொண்டு நீயும் அவர்களுடன் வந்துவிடு என்று சொன்னவர்.

பின் எனக்கு நிறைய வேலை இருக்கிறது நான் போய் வருறேன் என்று இருவரிடமும் விடைபெற்று சென்றார்.

❤️

EPI 8

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மறுநாள் கரண் அருளிர்க்கு கிளம்ப உதவி செய்து கொண்டு இருந்தான்.

திமிறிய  தோள்களில் பட்டு சட்டை அணிந்து கபீரமாக நின்று இருந்தவனை பார்த்து கரணே ஆச்சரியமாக அருளைப் பார்த்து எப்படிடா!!! உன் உடம்பை இந்த மாதிரி ஃபார்ம் பண்ணி வச்சிருக்கே….

நானும் உன் கூடவே தானே இருக்கேன் ஆனா உன்னை இந்த அளவுக்கு நான் சரியா பார்க்காம விட்டுட்டேனா? என்று கேட்டவன்.

ம்ஹும்…. உன் பொண்டாட்டி கொடுத்து வெச்சவள் தான் என்று அவன் தோள்களில் தட்டி கொடுத்துவிட்டு.

ஆமா… எப்படி உனக்கு அளவெடுத்து தைச்ச மாதிரி பட்டு சட்டை அவ்ளோ அழகா பொருந்தி இருக்க….

அந்த தாத்தா நல்ல வசதியான குடும்பம் தான் போல  அவங்க கொடுத்துவிட்ட…..பட்டு வேஷ்டி பட்டு சட்டையை பார்த்தாலே அது காஸ்ட்லியா இருக்குன்னு நல்லா தெரியுது ….

 அது போதாது என்று உனக்காக நீ போட்டுக்கிறதுக்கு செயின், பிரேஸ்லெட், பிளாட்டினம் வாட்ச் எல்லாம் கொடுத்து விட்டு இருக்காங்க….நல்ல பெரிய இடம் தான் போல…

பொதுவா வசதியான வீட்டில் இருந்து வர்ற பொண்ணுங்கல்ல சில பேர்  வீட்டில் பொண்ணு ரொம்ப சுமாரா  இருக்கும்….இல்லன்னா அந்த பொண்ணு கிட்ட ஏதாவது குறை இருக்கும்…. சொல்லுவாங்க….

ஒருவேளை உன்னை கல்யாணம் பணிக்கப்போற பொண்ணும் அப்படி இருக்கிறதுனால தான் அவங்க இவ்ளோ அவசரமா உனக்கும் அவங்க பேத்திக்கும் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்காங்களோ……என்று ஏற்கனவே குழம்பி இருந்த அருளின் மனதில் மேலும் குழப்பதை கொடுத்துக் கொண்டு இருந்தான்.

 பொண்ணு எப்படி இருந்தால் இனி என்னடா செய்ய முடியும் என் அம்மாவின் பேச்சை மீறி நான் எதுவுமே செய்ய விரும்பவில்லை இப்போதைக்கு என் அம்மா நல்லபடியாக ஆபரேஷன் செய்து பிழைத்து வந்தால் போதும் என்ற நிலையில்தான் நான் இருக்கேன்.

பொண்ணு எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க நான் தயாராகத்தான் இருக்கேன்.என் மனச நான் அதற்கு தகுந்த மாதிரி தான் மாத்திக்கிட்டேன் என்று சொன்னான் அருள்.

 டேய் நான் சும்மா ஏதோ யோசனைல சொல்லிட்டண்டா….. நீ பாட்டுக்கு குழப்பிக்காத சரியா….யார் சொன்னா இந்த பொண்ணு நம்ம எல்லாம் எதிர்பார்க்கிறத விட இன்னும் அழகா இருக்குமோ? என்னமோ? என்று சொன்னவன்.

சரி இந்த நகை எல்லாம் போட்டுக்கோ என்று அவனிடம் கொடுக்க எனக்கு இதெல்லாம் வேணாம்டா…அது அவங்க கிட்டயே கொடுத்துடுவோம் என்று சொல்லிவிட்டு பட்டு வேஷ்டி பட்டு சட்டையை மட்டும் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில்  கம்பீரமாக இருந்தான் அருள்.

இருவரும் கிளம்பி நேராக ஹாஸ்பிடலுக்கு செல்ல… அங்கே அருளின் அம்மா இதுவரை தன் மகன் தன்னோட வற்புறுத்தலுக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதித்தான் என்றாலும்.

சொன்னது போல கல்யாணம் செய்து கொள்வானா…. இல்லையா… என்று யோசனையில்  இருந்தவர் அவனை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்ததும்  மிகவும் சந்தோஷப்பட்டார்.

 அமுதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அருளின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாமல் போனதை நினைத்து சற்று வருத்தப்பட்டாலும் தன் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்ற சந்தோசமே அவருக்கு நிம்மதியாக இருந்தது.

 தன் அம்மாவின் காலை தொட்டு வணங்கிய அருளின் கையைப் பிடித்து தன் அருகில் அழைத்தவர் அவனை தன் அருகில் அமர வைத்து விட்டு அருள் உனக்கு இந்த அம்மா மேல கோபமா? என்று கேட்டார்.

 அருள் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருக்க… எனக்கு தெரியும் பா நீ என் மேல கோவமா தான் இருப்பேன்னு.

எனக்கு  உடம்பு சரியில்லைன்னு உன்கிட்டயும் மீராகிட்டயும் மறைச்சது தப்பு தான். அதே போல உன்னை இப்படி அவசரப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள சொன்னதுக்கு  உனக்கு என் மீது அதிகமாத்தான் கோபம்  இருக்கும்.

இது எல்லாமே எனக்கு புரியுது அருள்….ஆனா எனக்கு இதை விட்டா வேற வழியே தெரியலையே… எங்கே உனக்கு கல்யாணம் பண்ணி பாக்க முடியாமல்  நான் செத்துப் போயிடுவேன்னு எனக்கு ரொம்ப பயமா இருந்தது அருள் அதனாலதான் வேற வழி இல்லாம உன்ன இந்த கல்யாணத்துக்கு வற்புறுத்த வேண்டியது தான் போயிடுச்சு.

 உனக்கு பார்த்திருக்க பொண்ணு கண்டிப்பா நல்ல பொண்ணா தான் இருப்பா என்று நான் நம்புறேன்.

ஏன்னா அவளுடைய தாத்தாவை இவ்வளவு நல்ல குணம் படைத்தவரா இருக்கும் போது கண்டிப்பா அவரோட  பேத்திக்கும் அவரோட குணத்துல கொஞ்சமாவது இருக்கும்.

 அம்மா உன்னை இப்படி அவசர படுத்திட்டு இந்த கல்யாணத்துக்கு உன்னை சம்மதிக்க வச்சிட்டேன்னு நினைச்சு அம்மா மேல கோவிச்சுக்காதப்பா….. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்லி அவர் தன் கைகளை எடுத்து கும்பிட போக …

 அம்மா என்ன செய்றீங்க நீங்க எதுக்கு இப்படி இல்ல என்கிட்ட நடந்துக்கிறீங்க நான் உங்க பிள்ளை மா…. என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

 உங்களுக்கு என் மேல எந்த உரிமையும் இருக்குது அம்மா. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகிட்டு என்ன ரொம்ப கஷ்டப் படுத்தாதீங்க என்று சொன்னவன் ஒரு கண்ணீரை துடைத்து விட்டு.

 சரிம்மா நீங்க அடம் பிடிக்காமல் அவங்க என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டு அதன்படி நடந்துக்கோங்க சரியா நான் போயிட்டு சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொல்ல.

 அவன் அருகில் இருந்த மீரா அண்ணா என்ன ஆபீஸ்க்கு போயிட்டு வரேங்குற மாதிரி சொல்லிட்டு போற….நீ உன்னோட கல்யாணத்துக்கு போற  சரியா…. உனக்கு அது ஞாபகம் இருக்க.?இல்லையா?என்று மீரா கேட்டாள்.

 ஆமாம் இரா உன் அண்ணனை இருக்கிற டென்ஷனை பார்த்தா அவனுக்கு  இன்னைக்கு கல்யாணம்கிறதையே மறந்திடுவான் நீ வேணா பாரு ….. இவன் கல்யாணத்துக்கு போறதுக்கு பதிலா நேரா கிளினிக்கு போனாலும் போயிடுவான் போல என்று கரண் அருளை கலாய்க்க.

 கரண் பேசியதை கேட்ட மீரா சிரித்துவிட்டு…. ஆமா கரண் அண்ணா…..நீங்க சொன்ன மாதிரி எங்க அண்ணன் மறந்துட்டு கிளினிக் போனாலும் போயிடுவார் என்று சொல்லி அவளும் சேர்த்து அருளை கிண்டல் செய்ய….

இவர்கள் இருவரும் அருளை கிண்டல் செய்வதை பார்த்து அதுவரை  சோகமாக இருந்த அமுதாவும் சிரித்துவிட… அவர் சிரிப்பதை பார்த்து அருளுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

 அவர் சந்தோஷமாக இருப்பதை பார்த்து அருளிருக்கும் லேசாக சிரிப்பு வர….அவன் சிரித்து முகத்தை பார்த்த அமுதா, டேய் அருள்…. சீக்கிரமா போய் கல்யாணம் பண்ணிட்டு என் மருமகளை கூட்டிட்டு வாடா…. எனக்கு அவளை இப்பவே பார்க்கணும் போல இருக்கு.

உங்க ரெண்டு பேரையும் கல்யாண கோலத்தில் பார்த்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்று அமுதா மூச்சு வாங்கிக்கொண்டு சொல்ல…

ஆமா அண்ணா…. சீக்கிரமா போய் கல்யாணம் பண்ணிட்டு அண்ணிய கூட கூட்டிட்டு வா அண்ணா  …எனக்கு அவங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு…..என்று மீரா ஆர்வமாக சொல்ல.

அருளும் இவ்வளவு நேரம் இறுகிய முகமாக இருந்தவன்.இவர்கள் இருவரும் சந்தோஷமாக பேசுவதை பார்த்துவிட்டு அந்த சந்தோஷம் தன்னையும் அறியாமல் அவனிடம் ஒட்டிக்கொள்ள …..சிரித்து முகமாக சரி என்று தலையாட்டி விட்டு மீராவிடமும் அவன் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தன் இல்லாள் பற்றிய கனவுகளோடு தன் திருமணத்திற்கு சென்றான்.

❤️

❤️

 அருள் கிளம்புகின்ற கார் நேராக ரெஜிஸ்டர் ஆபீசிற்க்கு வர…

 கார் நின்றதும் அவருடைய கார்ட்ஸ்கள் வேகமாக வந்து அருள் இருந்து கதவின் திறந்து அவனுக்கு வழி விட்டு வரவேற்க…

 அவர்களை எல்லாம் பார்த்து தயங்கிய படி பார்த்துக் கொண்டு இறங்கிய அருள் கரணையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீசிற்குள் செல்ல ….

 ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசலில் செழியன் அருளுக்காக காத்திருக்க…… பட்டு வேஷ்டி பட்டு சட்டை சகிதமாக காரில் இருந்து இறங்கி கம்பீரமான நடைபோட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசலுக்கு வந்து கொண்டு இருந்த அருளை பார்த்ததும் மகிழ்ந்து போன செழியன்.

வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி அருளிடம் வந்தவர். அவனை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்து சந்தோஸப்பட்டவர் வாப்பா…. நீ ரொம்ப அழகா கம்பீரமா இருக்க…. என் பேத்திக்கு ஏற்ற சரியான ஆள் நீ தான் என்று அவனைப் பார்த்து சந்தோஷத்தில் சொன்னவர்.

அவன் கையை பிடித்து அழைத்துக் கொண்டு படிகளில் ஏறி சென்றவர். அவன் கையைப் பார்க்க அவனுக்கு பரிசாக கொடுத்த நகைகளை அவன் அணியாமல்.

பட்டு வேஷ்டி சட்டை மட்டும் அணிந்து வந்திருப்பதை பார்த்ததும் எங்க தம்பி நான் கொடுத்துவிட்ட செயின் பிரேஸ்லெட்டெல்லாம் எதுவுமே போடாம வந்து இருக்கீங்க என்று அவர் கேட்டார்.

அதெல்லாம் எதுக்கு தாத்தா நம்ம தான் சிம்பிளா கல்யாணம் பண்ண போறோமே!!! இந்த நகை எல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் எனக்கு இதுதான் நல்ல இருக்கு என்று சொல்லி இதுவே போதும் தாத்தா என்றவன் கரணிடம் இருந்த அவர் கொடுத்து அனுப்பிய நகைகளை எல்லாம் வாங்கி செழியனிடம் கொடுக்க…

அவர் அதிர்ச்சியாக அருளை பார்த்து…. என்ன அருள் இது நான் இதை எல்லாம்  ஆசையாக நானே பார்த்து வாங்கி உன்னோட கல்யாணத்திற்காக பரிசாக கொடுத்தேன். ஆனா இதை எல்லாம் நீ கிட்டே திருப்பி கொடுக்குறியே… இதை எல்லாம் போட்டுக்கோ அருள் அப்போ தான் மாப்பிள்ளை கலை வரும் உனக்கு என்று சொல்ல.

 தாத்தா உங்க அன்பு ஒன்னே எனக்கு பரிசா போதும் தாத்தா… அதுக்காக இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம்  நீங்க எனக்கு கிப்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம் எனக்கு அதில் விருப்பமும் இல்லை என்று அருள் சொல்ல.

 என்னப்பா நீ எதை கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க என்றவர்.

சரி என்று சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த தன் பரம்பரை செயினை எடுத்து  அவனிடன் காட்டி…. என் பாட்டன் முப்பாட்டனோட காலத்தில் இருந்து செயின்  பரம்பரை பரம்பரையா போட்டுட்டு வறோம்…. இன்னைக்கு நான் என் பேரனுக்காக இதை போட்டு விடுறேன்.

இது என்னோட அன்பு பரிசு இது நீ எப்பவுமே உன் கழுத்தில் இருந்து கழட்டக்கூடாது  இதை நீ மறுக்காம வாங்கிதான் ஆகணும் என்று சொல்லிக் கொண்டு அவன் கழுத்தில் அதை மாட்டி விட்டார்.

 செழியன் சொல்வதற்கு எதிராக மறுப்பு  தெரிவிக்க முடியாமல் அருள் சரி என்று தலையாட்டிவிட்டு  அவர் மாட்டி விட அந்த செயினை வாங்கிக் கொண்டான்.

 இந்த செயலை அருள் போட்டது அவனுக்கு மிகவும் அழகாக இருக்க அதை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டவர் சரி உள்ளே போகலாமா? என்று அருளின் தோள் மீது கையை போட்டுக் கொண்டு அருளை அழைத்துச் சென்றார் .

 அருள் தன் தாத்தா அவனுக்காக அவர் கொடுத்த விளைவு உயர்ந்த நகைகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து வேண்டாம் என்று சொன்னதையும்.

அவள் இவ்வளவு வருடமாக அந்த செயினைக் கேட்டும் தர மறுத்தவர் இன்று அதை அருளுக்கு அன்போடு அவர் கழுத்தில் இருந்த பரம்பரை செயினை கழட்டி அவனுக்கு மாட்டி விடுவதையும் தூரத்திலிருந்து அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மயோவிற்கு 

 அருளின் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத குணமும்…. மகிழ்விற்கு அவ்வளவு இந்த குணம் பிடித்து போய்விட்டது.

 இருந்தும் தான் இத்தனை வருடமாக ஆசைப்பட்டு கேட்ட செயின் தனக்கு கிடைக்காமல் அந்த அருளுக்கு சென்றதை நினைத்து அவளுக்கு அவன் மீது கோபமும் வந்தது…. தன்னைவிட தாத்தாவிற்கு அவனை பார்த்த சில தினங்களில்  பிடித்து விட்டதா என்ன… என்று அவள் தாத்தா மீதும் அவளுக்கு கோபம் வந்தது.

 அவர்கள் உள்ள செல்வதை பார்த்ததும் மயோவும் வேறு வாசல் கதவு வழியாக  ரிஜிஸ்டர் ஆபீசிற்குள் தன் தங்கை இளாவுடனும், பியே பூஜா உடனும் வந்தால்.

 செழியன் அருளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர்கள் பின் கரணும் வந்தான்.இவர்கள் மூவரும் உள்ளே வந்து ரெஜிஸ்டர் அலுவலர் முன் நிற்க…

அருளிர்க்கு தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை இன்னும் தன் கண்களில் காட்டாமல்  இருக்கிறார்களே என்று தோன்றினாலும் அதை காட்டிகொள்ளாமல் அமைதியாக நின்று இருந்தான்.

 அருளின் அருகில் குனிந்த கரண் என்னடா இன்னும் உன் வருங்கால மனைவியை காட்டாமல் இருகாங்க….

 இப்படி பொத்தி பொத்தி வச்சு கொண்டு வந்து நம்ம நினைச்ச மாதிரியே ஏதோ ஒரு பொண்ண உன் தலையில் கட்டப் போறாங்க போ…. என்று கரண் அருளை நக்கல் அடிக்க….

டேய்….கொஞ்ச நேரம் சும்மா இரு…. தாத்தா காதில் விழுந்து விடப் போகிறது என்று அவனை  அருள் அதற்ற…

 அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த செழியன் சிரித்தவர் திரும்பி கரணிடம் இப்போ என் பேத்தி வந்துருவா தம்பி…..நீங்களே என் பேத்தியை பார்த்துட்டு உங்க பிரண்டுக்கு என் பேத்தி பொருத்தமா இருப்பாளா? இல்லையான்னு சொல்லுங்க என்று சொல்லவும்.

 தாங்கள் இருவரும் பேசியது தாத்தா காதில் விழுந்துவிட்டது என்று தெரிந்தவுடன் கரண் அதிர்ந்து போய் செழியனை பார்க்க……அருள் கரணை பார்த்து நான் அப்போவே சொன்னேன் கேட்டியா நீ….இப்ப பாரு அவரு நம்மள பத்தி என்ன நினைப்பாரு என்று அவனை திட்டினான்.

 இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க ரிஜிஸ்டர் அலுவலர் செழியணை பார்த்து கல்யாண மாப்பிள்ளை வந்தாச்சு பொண்ணு எங்க சார் அவங்க வந்துட்டாங்கன்னா நம்ம பார்மாலிட்டீஸ் முடிச்சிடலாம் என்று சொல்ல.

 இதுவும்  என் பேத்தி வந்துட்டா… என்று அவர் மயோ வரும் திசையை காட்ட… அவர் சொன்ன திசை ஆர்வமாக திரும்பி அருளும் கரணும் பார்க்க….

அங்கே  அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்த பெண்ணை பார்த்து ஸ்தம்பித்து அப்படியே சிலை போல நின்று இருந்தான் அருள்.

 அருளை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது கரண் தான். ஏனென்றால் அவனுக்கு மயோவை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பெண் மயோ தான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

 மயோவை பார்த்த ஆர்வத்தில் அருளிடம் டேய் அருள்…உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு….என்று சொல்ல என்னடா சொல்ற இந்த பொண்ண  உனக்கும் முன்னாடியே தெரியுமா என்று கேட்டான் அருள்.

 அருள் சொன்னதைக் கேட்டு கரன் இருக்கு அப்போ உனக்கு இவங்கள முன்னயே தெரியுமா? என்று கேட்டான் கரண்.

 அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து தான் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே வந்த மயோ….. தனக்கு தான் திருமணமாகப் போகிறது  என்று நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக வேக எட்டுக்களோடு நடந்து வந்தவள் தன் தாத்தாவின் அருகில் வந்து நின்றவள் கதிரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் அவன் கண்களை நேராக பார்க்க…

அவள் தன்னை பார்த்த பார்வையிலேயே அருளிர்க்கு ஏதோ போல ஆகிவிட்டது. அவள் கண்களை நேராக சந்திக்க முடியாமல் முதலில் தடுமாறியவன் பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை போலவே அவனும் அவள் கண்களை நேருக்கு நேராக பார்க்க….

இவனை தவிர தன்னை இவ்வளவு தைரியமாக யாராலும் நேருக்கு நேர் நிமிர்ந்து நின்று தன் கண்களை பார்க்க முடியாது என்று நினைத்தவள் அவனை பார்த்து லேசாக ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு திரும்பிக் கொண்டால்.

அவள் வேறு பக்கம் திரும்பியதும் தான் அருளிர்க்கு மூச்சே வந்தது…. இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த கரணிற்கு தன் கண்களை தன்னால் நம்பவே முடியவில்லை….

டேய் அருள் என்ன டா உன் வருங்கால பொண்டாட்டி அது என்ன வருங்காலம் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் உன்னோட பொண்டாட்டி ஆக போறாங்க என்று சொன்னவன்.

உன் பொண்டாட்டி உன்னை அப்படி பாக்குராங்க…. நீயும் சலைக்காமள் அவங்களை நேருக்கு நேரா பாத்துட்டு இருக்கே….

உன் பொண்டாட்டியை நேரா பார்க்குறதுக்கு எவ்வளவு பேர் பயத்துக்குவாங்கனு உனக்கு தெரியுமா…

அப்படி இருக்க… நீ கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காம இவ்ளோ தைரியமா பார்க்கிறே என்று கரண் கேட்க.

டேய்… எனக்கும் அவ கண்ணை பார்க்குற அப்போ உளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுக்க தான் செய்யுது….

ஆனா நான் மத்தவங்க மாதிரி aava கிட்டே ஒன்னும் வேலை பாக்கலையே.. நான் எம் அவளை பார்த்து பயப்படணும். அதனால தான் நானும் அவளை நேருக்கு நேரா பார்த்தேன்.

ஆனா ஒன்னு டா…. திமிரா நெஞ்சை நிமிர்த்தி அவளை பார்த்தாலும் உள்ளுக்குள்ள… கொஞ்சம் உதறல் எடுக்க தான் டா செய்யுது இன்னமும். நம்ம வீக்னெஸ் மட்டும் அவங்களுக்கு தெரியாத மாதிரி இருந்துக்கணும் இல்லையின்னா அவ்ளோதான் நம்ம தலை மேலே உக்காந்து மிளகாய் அறைச்சிருவாங்க.. என்றவன் மயோவை பார்க்க. 

அவள் தன்  பியே உடன் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

அருள் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த செழியன். பரவாயில்லையே… என் பேரன் என் பேத்தியை பார்த்ததுமே ஒரு அளவுக்கு புரிஞ்சுக்கிட்டான் போல என்று நினைத்தவர்.

சரி… சரி… நேரம் ஆகுது  நேரம் ஆகுது சீக்கிரம் ரெண்டு பெரும் கையெழுத்து போடுங்க… நாம கோவில்ல நம்ம முறைப்படி வேற கல்யாணம் நடத்தணும் என்று சொன்னவர் மணப் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாக நிற்க வைத்து இருவரையும் சைன் செய்ய சொல்ல…

பேனாவை கையில் வாங்கிய மயோ அருளை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு கை எழுத்து போட்டுவிட்டு அவன் கையில் பேனாவை கொடுத்து இந்த வாய்ப்பை விட்டாள் திரும்பவும் கிடைக்காது நன்றாக யோசிச்சு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் என்றாள் கையெழுத்து போடுங்கள்.

ஏனென்றால் நீங்கள் கையெழுத்து போட்டுவிட்டு நமக்கு திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால் என் வாழ்க்கைக்குள் வந்த உங்களை எந்த காரணத்திற்காகவும் திருப்பி அனுப்பும் எண்ணம் என்பதே எனக்கு கிடையாது அது நீங்களே விரும்பினாலும்  கனவிலும் நடக்காத ஒன்று.

அப்படி என் வாழ்க்கையை விட்டு போய்த்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் நினைத்த அடுத்த நொடி என் வாழ்க்கையை விட்டும்…. உங்கள் உடலை விட்டும் சென்று விடுவீர்கள் அது கூட என் விருப்பப்படி தான் நடக்கும் என்று அருளை எச்சரிப்பது போல மயோ சொல்ல.

அவள் பேசியதை கேட்டவன் அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் பின் பேனாவை வாங்கிக்கொண்டு…. ஒரு முறை முடிவு எடுத்த பிறகு என் வாழ்க்கையில் அதை மாற்றிக் கொள்ளும் பழக்கமே எனக்கு கிடையாது என்றவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு அவள் பெயர் அருகில் தன் கையெழுத்தை போட்டுவிட்டு சட்டப்படி மயோவை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

சரியான ஜோடிப் பொருத்தம் தான் இருவருக்கும் என்று இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுவிட்டு அங்கு இருந்தவர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டனர்.

சம்பிரதாயப் படி திருமணம் செய்ய…. இருவரையும் ஒரே காரில் தன்னுடன் கோவிலுக்கு அழைத்து செல்ல….

கரண் மற்றவர்களும் வேறு ஒரு காரில் அவர்களுடன் சென்றனர்.கோவில் வரும் வரை இருவரும் பேசிக கொள்ளாமல் வருவதை கவனித்துக் கொண்டு தான் வந்தார் செழியன்.

கோவில் வந்ததும் அருளையும் மயோவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் அவரிடம் நீண்ட நாள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் தங்கவேலுவிடம் எல்லாம் ரெடியா என்று கேட்க…

எல்லாம் தயாராக இருக்கிறது ஐயா…என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்து செல்ல…மிகவும் சிம்பிள் ஆக தான் திருமணம் என்று சொன்னாலும் இங்கே வந்து பார்த்த அருளிர்க்கு அவர்கள் திருமணத்திற்கு செய்திருக்கும் ஏற்பாட்டை பார்த்துவிட்டு மலைத்து தான் போய்விட்டான்.

வண்ண வண்ண பூக்களால் மணமேடை அமைத்து… அதில் பூ தோரணங்கள் சுற்றிலும் அமைத்து அதில் அழகாக ஒரு ஆண் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போல பூக்களாலேயே அழகாக வடிவமைத்து இருந்தனர்.

இருவரையும் அழைத்து சென்று மணமேடையில் அமர வைக்க…. அருளை விட்டு சற்று தள்ளி உம்மென்று மயோ அமர்ந்து இருந்தாள். அதை பார்த்த செழியன் மயோவிடம் குனிந்து கொஞ்சம்  சிரிச்ச மாதிரி முகத்தை  வெச்சுட்டு கொஞ்சம் அருள் பக்கத்துல போய் உக்காரு என்றார்.

அவரை நிமிர்ந்து முறைத்து விட்டு திரும்பிக் கொள்ள…. ம்ஹும்…. நீ இந்த கல்யாணத்தை தவிர வேற எந்த விசயத்துக்காக என் பேச்சை கேட்டு இருக்கே என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து கொண்டார்.

அவர்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்து இருக்க… அவர்களுக்கு எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த போட்டோக்ராபர் இருவரையும் அருகில் அமர சொல்ல பயந்து கொண்டு இருக்க…

அக்கா… என்ன மாமாவை விட்டு இவ்ளோ தள்ளி உக்கார்ந்து இருக்கே…. கொஞ்சம் பக்கத்தில் போய் உக்காரு என்று இளா அருளை பார்த்து சிரித்துக் கொண்டே சொல்ல…

அவளை முறைத்த மயோ அருள் அருகில் போகாமல் அப்படியே இருக்க…உன் அக்கா சற்று முன்பு தான் நீங்கள் நினைத்தாலும் என்னை விட்டு போக முடியாது என்று உன் அக்கா சொன்னார் . ஆனால் அப்படி சொன்னவர்களே இப்போது ரூல்ஸை மீறுகிறார் என்று அவள் ஈகோவை தூண்டி விட…

அவனை திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு தான் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து அருளின் பக்கம் அவனை இடிப்பது போல தள்ளி அமர்ந்தவள் போதுமா.. இல்லை உன் மடி மேல் வந்து உக்கார்ந்துக்கவா என்று அவனை முறைக்க…

உனக்கு ஓகே என்றாள் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை… சற்று நேரத்தில் மனைவி ஆகப்போகும் உன்னை காலம் முழுக்க சுமக்க போகிறேன். சிறிது நேரம் என் மடியில் தாங்க மாட்டேனா…

என் மடியில் அமர வைத்து உனக்கு தாலி கட்டவும் நான் ரெடி என்றான் அருள்.

அதை கேட்ட… மயோவிற்கு கடுப்பாக அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டால்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பேசிக்கொள்வதை பார்த்த செழியனுக்கு மிகவும் சந்தோஷமாக போய்விட்டது.

ஐயர் மந்திரங்கள் ஓத… வாத்தியங்கள் முழங்க.. மயோவின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் அருள். அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டு பின் அவள் நெற்றி சுற்றி அவள் வகுட்டில் பொட்டு வைத்தவன்.அவள் காதோரம் என்னிடம் இப்படி வந்து மாட்டிக் கொண்டாயே!!! என்றவன் எதுவும் தெரியாமல் திரும்பி அமர்ந்து கொண்டான்

அவன் சொன்னதை கேட்டு அவனையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்க…. என்னை சைட் அடிச்சது போதும் கொஞ்சம் திரும்பி போட்டோவிற்கு போஸ் கொடு என்ற அருள் மயோவை கிண்டல் செய்துவிட்டு சிரித்த முகமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்க… அவள் அதே அதிர்ச்சியோடு திரும்பிக் கொள்ள…

இவர்கள் இருவரின் இந்த அழகான தருணத்தை போட்டோக்ராபர் போட்டோக்களாக எடுத்து தள்ளினார்.

EPI 9

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோவின் கழுத்தில் பொன்தாலி கட்டி தன் பாதி ஆகிக்கொண்டவன்.

மயோவுடன் நேராக மருத்துவமனை சென்றான் அவன் அம்மாவின் அறையை திறந்து கொண்டு உள்ளே செல்ல….

அவர் அங்கு இல்லாதது கண்டு புருவம் சுருக்கியவன் திரும்பி செழியனை பார்க்க…

நீ இங்கு இருந்து கிளம்பியதும் அவருக்கு ஆபரேஷன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றார்.

உங்கள் பேத்தியின் கழுத்தில் தாலி ஏறினால் தன் என் அம்மாவிற்கு ஆபரேஷன் என்றால்லவா நீங்கள் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். அதற்குள் எப்படி என் அம்மாவிற்க்கு ஆபரேஷன் செய்ய அனுமதித்தீர்கள் என்று அருள் செழியனை பார்த்து கேட்டான் .

அவன் பேசுவதை கேட்டுத் தான் தன் தாத்தா எப்படி அருளை இவ்வளவு சீக்கிரம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் என்ற அவள் மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

அருள் கேள்வியாக செழியனை பார்த்துக் கொண்டு இருக்க….” நீ கொடுத்த வார்த்தை காப்பவன் என்ற நம்பிக்கையில்” என்றார் செழியன்.

உங்கள் நம்பிக்கையை நான் உடைத்து இருந்தாள்…. என்றான் அருள்.

உன் அம்மாவின் ஆபரேஷன் அந்தரத்தில் இருந்திருக்கும்…. என்றார் செழியனும் சலைக்காமல்.

அவரை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து இருக்க…

 எனக்கு நேரம் ஆகிறது நான் ஆபீஸ் கிளம்புறேன் தாத்தா… என்று அவரிடம் சென்று மயோ சொல்ல.

மாயோள் என்ன விளையாடுறியா? உனக்கு கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட ஆகலை அதற்குள் ஆபீஸ் போறேன் என்று சொல்லி வந்து நிற்கிறே… என்றார் அவளை அதட்டும் தோரணையில்.

தாத்தா…. நீங்கள் இப்படி திடீர்னு எனக்கு கல்யாணம் பண்ணுவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும். நான் ஏற்கனவே பிக்ஸ் பண்ணின மீட்டிங்கை எல்லாம் நான் கேன்சல் பண்ண முடியாது.

நான் இங்கே வந்ததும் சென்று விடலாம் என்று தானே வந்தேன். ஆனால் என்று அருளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆபரேஷன்க்கு எவ்ளோ நேரம் ஆகும் என்று தெரியாதே… என்றவள்.

நான் கிளம்புகிறேன் தாத்தா… என்றவளை பிடித்து நிறுத்தி வைத்தவர் இன்று ஒரு நாள் ஆவது நான் சொல்வதை கேட்டு இங்கேயே இரு…. திருமணம் ஆனதும் இப்படி வேலை வேலை என்று சென்று கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்…என்றார் அவரும் விடாமல்.

தாத்தா… என்று மயோ அவரை ஏதோ சொல்ல வர..

இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்த அருள் எழுந்து வந்து செழியனிடம் தாத்தா… எங்கள் இருவருக்கும் திருமணம் தானே நடந்துவிட்டதே… இனியும் ஏன் அவங்கள பிடிச்சு வெச்சிட்டு இருக்கீங்க…. அவங்க எங்க போக போறாங்க….ஆபீஸ் தானே போகட்டும் விடுங்கள் என்றவன்.

அவள் அருகில் நின்று இருந்த மயோவின் பியே பூஜாவிடம் திரும்பி நீங்கள் தானே அவங்க பியே என்றான்.

அவளும் ஆமாம் என்று தலையை ஆட்ட… இவங்களுக்கு எத்தனை மணிக்கு மீட்டிங் என்றான்.

அவள் தன் கையில் இருந்த ஐ – பேடில் மயோவின் செடியுள் என்ன என்று சொல்லிவிட்டு இன்னும் அறை மணி நேரத்தைல் மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகிறது என்றாள்.

எத்தனை மணி நேரம் மீட்டிங் என்றான் அருள்.

மயோ புருவம் சுருக்கி அவன் பேசுவதையே பார்த்தவள் அமைதியாக நிற்க…

பூஜா… இரண்டு மணி நேரம் சார் என்றாள்.

தன் வாட்சில் மணியை பார்த்தவன் இப்போது மணி பதினோன்று… என்றவன் கணக்கு போட்டுவிட்டு

மயோவை பார்த்தவன் சரியாக இங்கே இரண்டு மணிக்கு வந்துவிடு… என்றான் அருள்.

தான் நினைக்கும் நேரத்தில் எல்லாம் செய்து கொண்டு மற்றவர்களை அதிகாரம் பண்ணிக்கொண்டு இருந்தவளை இன்று வந்த ஒருவன் ஆர்டர் போடுவது போல பேசுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க…

என்னை எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது… நீ என்னை உன் சொல் பேச்சு கேட்கும் படி நடத்த வேண்டும் என்று நீ நினைக்கறியா… என்றாள் மயோ கோவமாக.

உங்களுக்கு தானே மீட்டுங் அவசரமாக போகணும்னு  உன் தாத்தாவிடம் p கேட்டுக்கொண்டு இருந்தாய்….

நான் உனக்கு சதாகமாக தானே பேசினேன் .. உனக்கு சதாகமா பேச வந்த என்னையே நீ  மிரட்டுறே… எனக்கு பயமா இருக்கு இப்படி முகத்தை வெச்சுட்டு  என்கிட்டே பேசாதே… என்றான் அருள் பயந்தது போல அவளிடம் முகத்தை வைத்துக்கொண்டு.

அவன் நடிக்கிறான் என்று நன்றாகவே மயோவிற்கு தெரிய…கடுப்பானவள் யூ… இரிடேட்டிங் பெல்லோ…. என்று பல்லை கடித்துக் கொண்டு அவனை பார்க்க…

தான் வாட்ச்சை பார்த்துவிட்டு இப்போதே பத்து நிமிஷம் டைம் வேஸ்ட் ஆகிடுச்சு … என்றான் அருள்.

பூஜாவும் மேடம்…. என்று அவளுக்கு  மயோவின் போனை அவளிடம் நீட்ட… அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனை வாங்கி காதில் வைத்துவிட்டு திரும்பி நடக்க போக…

அவள் முன் சொடக்கிட்டு அழைக்க …  நின்ற இடத்தில் இருந்து திரும்பியவளை பார்த்து  சொன்ன நேரத்திற்கு வர வேண்டும் என்று தன் வாட்ச்சை காட்டி…சைகையிலேயே சொல்ல…

மேடம் என்று பூஜா மயோவின் போனை அவள் கையில் கொடுக்க…

அதை  வாங்கி காதில் வைத்தவள் அவள் தாத்தாவிடம் திரும்பி போய்வருகிறேன் என்று அருள் மேல் இருந்த கடுப்பிலேயே சொல்ல…அவர் அவளை பார்த்த நல்லா மாட்டிக்கிட்டே என்பது போல தன் தலையை ஆட்டி சரி போய்ட்டு என் பேரன் சொன்ன டைம்க்கு வந்திடு மா…

நீ வந்த பிறகு தான் மற்ற சடங்கு எல்லாம் செய்ய முடியும் அதுவரை நீ இந்த மணக் கோலத்திலேயே இருக்க வேண்டும் வேறு உடை மாற்றிவிடாதே என்றார்.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு ம்ம்ம்ம்… என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

மயோ செல்லும் வரை அமைதியாக இருத்த கரண். டேய் அருள் என்ன டா… உன் வைப் எவ்ளோ பெரிய நிறுவனங்களுக்கு சிஇஓ வா இருகாங்க…  அவங்களை பார்க்க  அப்பாய்ன்மெண்ட் கிடைக்காமல் எவ்வளவு பேர் கியூவில் நிற்கிறாங்கங்க…. ஆன நீ… அவங்களுக்கே டைம் பிக்ஸ் பண்ணி வர சொல்றே… இது எல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா உனக்கு அவங்களையே வெறுப்பேத்தி பாக்குறியே என்று கேட்டே விட்டான்.

டேய் அவள் என் மனைவி… நான் அவளை வெறுப்பேற்றும் போதும் ஒவ்வொரு முறையும் என்னை பார்த்து அவள் முறைக்கும் போது அவள் கண்களில் தெரியும் கோபம் அவ்வளவு அழகாக இருக்கிறது என்றான் அவள் சென்ற வழியை பார்த்துக்கொண்டே.

அவன் சொன்னதை கேட்டு செழியனும் அவர்கள் அருகில் வந்தவர். கரணின் தோளில் கை போட்டு… ஆமா பேரா நீயும் என் பேத்திக்கு சலைத்தவன் இல்லைதான் போல் இருக்கிறது.

என் பேத்தியவே டென்ஷன் பண்ணி அனுப்பி இருக்கேன்னா… அவளுக்கு சரியான ஆள் நீ தான் என்று சிரித்தார்.

செழியனை பார்த்து அருள், தாத்தா நீங்கள் கூட போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பிறகு வாங்க… நானும் கரணும் இங்கே தானே இருக்கோம் நீங்க நேற்றில் இருந்து எங்கள் திருமணத்திற்காக அலைந்து இருப்பீர்கள் என்றான்.

அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர் நான் சொன்ன வேலையை அவர்கள் செய்தார்கள் எனக்கு ஒன்றும் பெரிதாக வேலை இல்லை என்றார்.

உன் அம்மா எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டார்.

அதே போல உன் அம்மா வந்த பிறகு என் பேத்தியையும் உன்னையும் அவரிடம் மணக் கோலத்தில் காட்டியா பிறகு தான் எனக்கு நிம்மதி. அப்போது தான் நான் அவருக்கு செய்து கொடுத்த வாக்கு நிறைவேற்றியதில் ஒரு திருப்தி ஏற்படும் எனக்கு என்றார்.

சரி தாத்தா என்று அவருடன் சேர்ந்து அருளும், கரணும் அமுதா ஆபரேஷன் முடிந்து வரட்டும் என்று காத்திருந்தனர்.

இளா அனைவரிடமும் சொல்லிவிட்டு இன்று தனக்கு ஒரு முக்கியமான கிளாஸ் இருப்பதாக சொல்லிவிட்டு அவளும் கிளம்பி விட்டால்.

❤️

அருள் அவளை கடுப்பேற்றி விட்டு அனுப்பி இருக்க… அதே கடுப்பில் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவள்.

அவனை நினைத்து அந்த ராஸ்களுக்கு எவ்ளோ திமிர்  இருந்தா என்கிட்டேயே ஆர்டர் போடுவான்.காலையிலும் என்கிட்டே வம்பு பேசின அப்போவே அவன் வாயை கிழிச்சிருக்கணும். அவன் பேசிய பேச்சிற்கு அப்போதே எதுவும் பேசாமல் விட்டது தவறாகி விட்டது என்று கடுப்பில் டிரைவர் சீட்டில் கோபத்தில் தன் முஸ்டியால் குத்த….

அதை எல்லாம். முன் சீட்டில் இருந்து அமர்ந்து கொண்டு அமைதியா கேட்டுக்கொண்டு வந்த பூஜா. ஏய் மயோ…அவர் என்ன சொன்னார் இப்போ… நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறே… என்றாள்.

பூஜா மயோவிற்கு இருக்கும் ஒரே ஒரு நம்பகமான நெருங்கிய தோழி. தனக்கு வேலைக்கு வர விருப்பம் இல்லை என்று சொல்லியும் அவளை வழுக் கட்டாயமாக அழைத்து வந்து அவளுடைய பியேவாக வைத்து இருக்கிறாள் மயோ.

ஏய் பூஜ்… நீ பேசாமல் இரு உனக்கு எதுவும் தெரியாது. என் தாத்தாவை எப்படியோ மயக்கி நம்ப வைத்து என்னை திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல் என் தாத்தாவின் பரம்பரை செயின் தெறியும் இல்லையா உனக்கு. எவ்வளவு வருசமா அவர்கிட்டே எனக்கு கொடுக்க சொல்லி நான் கேட்டு இருப்பேன்

ஆனா அந்த செயினை அந்த கிழவன்!! தூக்கி அவன் கழுத்திலே போட்டு விட்டு அழகு பார்க்குது. அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே என்னோட பணத்திற்காக தான். அது கூட புரிந்து கொள்ளாமல் அதையும் இதையும் சொல்லி அவனை என் தலையில் கட்டிவிட்டுட்டாரு .

அவன் எனக்கு தாலி கட்டும் போது என் காதில் வந்து என்ன சொன்னான் தெரியுமா என்றாள் மயோ தன் சீட்டில் இருந்து முன்னே வந்து.

பூஜா திரும்பி ஆவலாக என்ன டி சொன்னாரு உன் ஆளு!!!!என்று ஆவலாக கேட்க.

அவன் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டுட்டு என் காதில் இப்படி நீ…எங்கிட்டே வந்து வசமா மாட்டிகிட்டேய்ன்னு சொல்றான் டி…. எனக்கு எவ்வளவு கோபம் வரும். அங்க அப்டி பேசிட்டு… ஹாஸ்பிடலில் வந்து என் தாத்தா முன்னாடி நல்லவன் போல முகத்தை வெச்சுட்டு எவ்ளோ பேசுறான் நீயும் பார்த்துட்டு தானே இருந்தே… என்றாள் மயோ.

ம்ம்ம்… ம்ம்ம்… பாத்தேன் பாத்தேன் என்று சொல்லி பூஜா சிரிக்க.

ஏய் இப்போ எதுக்கு டி.. சிறிக்குறே…. என்றவள் ஆமா அவன் என்னோட மீட்டிங் ஸ்செடுல் என்னனு உன்னை கூப்பிட்டு கேக்குட்குறான் நீயும் அவன்கிட்டே அவன் கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கே…

நீ எனக்கு பியேவா அவனுக்கு பியேவா டி…. என்றால் பூஜாவை.

ஐயோ… இதை ஞாபகம் வெச்சிட்டு இருக்காளா… நான் கூட சரியா கவனிக்களையின்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன்…. இவ வேற இப்போ சரியா கேட்டுட்டாலே…. இப்போ என்ன சொல்லி இவளை சமாளிப்பது என்று பூஜா யோசித்துக் கொண்டு இருக்க.

சரியாக அந்த நேரம் கார் மயோவின் ஆபீஸ் முன்பு வந்து நிற்கவும் டிரைவரை பார்த்து தேங்க்ஸ் அண்ணா…. என்று சொல்லி தன்னை காப்பாற்றி விடுவிட்டார் என்று அவரை பார்த்து சிரித்து விட்டு  காரை விட்டு இறங்கி வெளியே செல்ல…

பூஜாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த டிரைவரை பார்த்து மயோ தன் தொண்டையை கணைத்து நான் இங்கே தான் இருக்கிறேன் என்று அவருக்கு உணர்த்த.

சாரி மேடம்….என்று வேகமாக கீழே இறங்கி வந்து அவள் கார் கதவை திறந்து விட… மணப் பெண் கோலத்திலேயே இறங்கியவள் தன் கூலர்சை எடுத்து மாட்டிக்கொண்டு கம்பீரம்மாக இறங்கி நடக்க…

அவளுக்கு எப்போதும் கதவு திறந்து விடுபவர் இன்று மயோவை கழுத்தில் புதுத்தாலி அணிந்து திருமண கோலத்தில் பார்த்தவர் ஆச்சர்யமாக மாயோவையே பார்க்க…

அவள் கதவின் அருகில் வந்து நின்று கதவை நீங்க திறக்குறீங்களா இல்லை நான் திறக்கட்டுமா என்று அதிகாரமாக சொல்ல….

சாரி மேடம் என்று சொல்லி அவசரமாக அவளுக்கு கதவை திறந்து விட்டார்.

அதே அதிகார தோரணையில் ஆஃபிஸினுள் வர… அனைவரும் எப்போதும் போல எழுந்து நின்று அவளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அப்படியே நின்றுவிட்டனர்.

அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நேராக மீட்டிங் ஹாலிற்குள் செல்ல….

மிடுக்கான நாகரீக உடையில் எப்போதுமே வளம் வரும் மயோ இன்று பாரம்பரிய முறைப்படி அழகாக பட்டு உடுத்தி மீட்டிங் வந்து இருக்க…. அவளை பார்த்த மீட்டிங்கில் இருந்தவர்களும் வெளியின் அவள் ஆபீஸ் ஸ்டாப் கொடுத்த அதே ரியாக்ஷனை கொடுக்க…எல்லாம் அந்த கிழவனால வந்தது என்று தன் தாத்தாவை மனதிற்குள் திட்டிக்கொண்டு 

எதையும் கண்டு கொள்ளாமல் வந்து அமர்ந்த மயோ தன் கூலர்ஸை கழட்டி டேபிளில் வைத்துவிட்டு  … பூஜாவை பார்த்து முறைத்துவள் உன்னை பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கண்களாலேயே அவளை மிரட்டியவள் எல்லாம் ரெடியா? என்ற எஸ் மேடம் என்றால் பூஜா.

மீட்டிங் ஹாளின் லைட்டை ஆப் செய்துவிட்டு அங்கிருந்த ப்ராஜெக்ட்ரை ஆன் செய்தால்.

அதில் புதிதாக கட்டப்போகும் மிகப்பெரிய ஷாப்பிங் மாளிற்காண ஐடியாக்கள் எல்லாம் ஒவ்வொன்றாக போட்டு காட்டி… யார் யாரெல்லாம் இந்த ப்ராஜெக்ட்ற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். யாருடைய டிசைன் எல்லாம் இன்று வந்து இருக்கிறது என்று மயோவிற்கு போட்டு காட்டிய பூஜா ப்ராஜெக்ட்ரை ஆப் செய்து விட்டு லைட்டை ஆன் செய்தவள் அவள் முன் சில பைல்களை வைத்துவிட்டு பின்னால் நகர .

அந்த பைல்களை எல்லாம் பார்த்து யார் யார் எவ்வளவு கோட் பன்னி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அதில் MR கான்ஸ்டரக்ஷன்சின் டைரக்டர் ராகுல் கம்பெனி  மிகவும் விலை குறைவாக கோட் செய்து இருந்தது.

அந்த பைலை எடுத்து தனியாக வைத்து இருந்தாள்.

அடுத்து BV கான்ஸ்டரக்ஷன்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் வருண் ராகுலின் கம்பெனியை விட விலை சற்று அதிகமாக கோட் செய்து இருக்க… அந்த கம்பெனியை தேர்ந்து எடுத்தால் மயோ.

 எந்த கம்பெனி இந்த மால் கட்டும் காண்ட்ராக்ட்டை எடுத்திருக்கிறது என்றும் அவர்கள் கோட் செய்து இருந்த விலையையும் அவள் பின்னால் இருந்த திரையில் போட்டு காண்பித்தவள்  மாற்றவர்களுக்கு எழுந்து நன்றி சொல்லிவிட்டு கிளம்ப போக…

அவன் செய்த கோட் வருண் கம்பெனியை விட விலை குறைவாக தானே இருந்தது என்று ராகுல் யோசித்தவன்.

ஆனால் மயோவின் SN நிறுவனம் வருணின் BV கம்பெனியை ஏன் தேர்ந்தெடுத்தது என்று புரியாமல் மயோவின் முன் நின்று அவள் முன் தன் கையை நீட்டி ஒரு நிமிஷம் மிஸ் மயோ…

என்னோட கம்பெனியை நீங்க ரிஜெக்ட் பண்ணின காரணம் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா என்றான்.

நீங்கள் செய்த கோட் விட… சில லட்சங்கள் அவர் அதிகமாக கோட் செய்து இருக்கிறார்.

அவருடைய ப்ரொபோஸல் உங்களுடை ப்ரோபோசல் விட தெளிவாக நியாயமாக இருந்தது என்றவள் திரும்பி சென்றுவிட…

தனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்ற ஆத்திரத்தில் அவர்கள் கம்பெனியை விட்டு கோபமாக வெளியே சென்றவன். தன் பியேவிடம் மயோவிற்கு இன்று தான் திருமணம் ஆகி இருக்கும் போல இருக்கிறது.

அவள் திருமணம் செய்து கொண்டவன் யார் என்று எனக்கு தெரியவேண்டும் என்று சொல்லிவிட்டு தன் காரில் ஏறி சென்று விட்டான்.

EPI 10

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோ சென்ற சிறிது நேரத்தில் அமுதாவிற்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து அவரை அவருடைய  அறைக்கு அழைத்து வந்தனர்.

அவருடனேயே வந்த ஹாஸ்பிடல் டீன் பாஸ்கரும் அமுதாவின்  அறையில் அவருக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை செக் செய்துவிட்டு.

அருளைப் பார்த்து ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் கண் விழித்து விடுவார் நீங்கள் அதுவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு நர்சிடம் அவருக்கு தேவையான விஷயங்களை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செழியனிடம் ஆபரேஷன் குறித்த விபரங்கள் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்.

அமுதாவுடன் ஆபரேஷன் தியேட்டரின் வெளியே இருந்த மீராவும் அவருடன் வந்தவள். டாக்டர் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்தவள் அவர் சென்றதும் அருளிடம் ஓடி வந்து அண்ணா…. காலையில் நீ சென்றதுமே அம்மாவை ஆபரேஷன் செய்ய அழைத்து சென்றுவிட்டார்கள் என்று விபரம் சொல்ல… நான் வரும்போது சொன்னார்கள் என்றான் அருள்.

சரி அண்ணா…. ஆமாம் நீ மட்டும் தான் இங்கே இருக்க அண்ணியை காணோம் என்று அறையை ஒரு முறை பார்த்துவிட்டு அருளிடம் கேட்க…

உன் அண்ணி இன்றும் மீட்டிங் இருக்கு என்று சொல்லி ஆபிஸ் போய் இருக்கிறாள் மீரா… சற்று நேரத்தில் வந்துவிடுவாள்  என்று சொன்ன செழியன்.

மீராவை தன் அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டவர் நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்க மீரா.. காலையில் இருந்து நீ ஒருத்தியே உன் அம்மாவை அருகில் இருந்து பார்த்து ரொம்ப டையார்டா ஆகியிருப்பாய் நீ கொஞ்ச நேரம் இந்த தாத்தா மடியில் படித்து தூங்கு டா. நாங்க உன் அம்மாவை பக்கத்தில் இருந்து பாத்துக் கொள்கிறோம் என்று சொல்லி அவளிடம் தன் மடியைக் காட்ட…

மீரா தயங்கியவாறே அருளை பார்க்க… அவன் நான் அம்மாவை பார்த்துக்கறேன் நீ தூங்கு என்றான்.

சரி என்று சொன்னவள் செழியனின் மடியில் படுத்துக்கொண்டே அவருடன் கதை பேசியவள் அப்படியே தூங்கிப் போனால்.

அவர் அவள் பேசிவதை எல்லாம் ரசித்துக்கொண்டே அவளுக்கு தட்டிக்கொடுத்து தூங்க வைத்தார்.

ஒரு மணி நேரம் தாண்டிய பிறகு தான் அமுதா கண் விழித்தார்.அவர் கண் விழித்த சிறிது நேரம் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

அவர் அருகில் சென்று அருள் அம்மா… இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு எதுவும் செய்கிறதா உடலில் என்று கேட்டான்.

அவர் இல்லை என்று தலையை ஆட்ட…அருள் இன்னும் காலையில் அணிந்த அதே பட்டுவேஷ்டி சட்டையுடன் இருப்பதை பார்த்தவர் என் மருமகள் எங்கே என்று தான் முதலில் கேட்டார்.

அவரும் மீராவும் இன்னும் மயோவை பார்க்கவில்லை.அவர் மயோவை கேட்டதும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள் அம்மா.. அவளுக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொல்லி ஆபீஸ் போய் இருக்கிறாள் என்றான் அருள்.

அவரும் எதுவும் சொல்லாமல் அமைதியா படுத்துக் கொண்டார்.கரண் சென்று அனைவருக்கும் டீ வாங்கி வந்து கொடுத்து அனைவரையும் குடிக்க வைத்தான்.

அருள் சொன்ன நேரத்தை கடந்து ஒரு மணி நேரம் ஆகியும் மயோ வராமல் போகவும் அருளிர்க்கு அவள் தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இல்லை என்றாலும் முடியாமல் இருக்கும் தன் அம்மாவை பார்க்கவாவது கொஞ்சம் வந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அமர்ந்து இருக்க….

அமைதியாக இருந்த அந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மயோ.

அவள் உள்ளே வந்ததும் அனைவரும் திரும்பி பார்க்க… உள்ளே வந்தவள் தான் லேட்டாக வந்துவிட்டோமே என்ற உணர்வு இல்லாமல் வந்தவள் செழியனைப்  பார்க்க… அவர் மடியில் ஒரு சிறு பெண் குழந்தை போல தூங்கிக் கொண்டு இருந்தாள்.

அவளை புருவம் சுருக்கி பார்த்த மயோ அவள் தாத்தாவை முறைக்க… அவர் எதையும் கண்டு கொள்ளாதவர் போல ஏன் இவ்ளோ லேட் என்றார்….

அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மயோ அருளை ஒரு ஓரப் பார்வை பார்த்துவிட்டு நேராக அருளின் அம்மாவிடம் சென்றாள்.

அவரும் அப்போது தான் கண் விழித்திருந்தார்.கண் விழுந்ததும் தன் முன்னே அழகு தேவதையாய்  நின்று இருந்த மயோவை பார்த்ததும். அதுவும் மணக் கோலத்தில் நின்று இருந்தவளை பார்த்து தன் மருமகளாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.

மயோவை பார்த்து இங்கே வா மா… என்று தன் கையை ஆட்டி சைகை செய்து மயோவை அழைக்க… மயோ அவர் அருகில் சென்று நிற்க தன் அருகில் அமர சொல்லி சைகை காட்டினார்.

மாயோவும் அவர் அருகில் அமர்ந்ததும் உன் பேர் என்னமா?  என்றார். மாயோள்.. ஆன்ட்டி எல்லோரும் என்னை மயோன்னு கூப்பிடுவாங்க நீங்களும் அப்படியே கூப்பிடுங்க என்றாள்.

 சரிமா…என்று அவள் முகத்தை தன் கைகளால் வருடி கொடுத்தவர் உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே என்று கேட்டார் அமுதா.

திடீர் என்று இருவருக்கும் ஒருவரை பற்றி ஒருவருக்கு எதுவுமே தெரியாமலேயே  திருமணம் நடந்துவிட்டதாள் இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே இந்த கேள்வியைக் கேட்டார்.

மயோ என்ன பதில் சொல்வாள் என்று செழியன், அருள்,கரண் மூவரும் ஆர்வமாக அவளையே பார்த்துக் கொண்டி….

மயோ திரும்பி அவர்களை எல்லாம் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமுதாவிடம் திரும்பி உங்களை மிரட்டி சம்மதிக்க வைத்த மாதிரி தான் என்னையும் என் தாத்தா என்னையும் ஏதேதோ சொல்லி மிரட்டி சம்மதிக்க வைத்தார் என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல…

அவள் உள்ளதை யார் மனதும் நோகாமல் கிண்டல் செய்வது புரிந்து அமுதாவும் சிரித்தார். அமுதன் அருளிடம் திரும்பி அவனை அருகில் அழைத்து மீராவின் பையை எடுக்க சொன்னார்.

அருள் அதை எடுத்து அவரிடம் கொடுக்க… அதை மயோவின் கையில் கொடுக்க சொன்னார்.

அருள் திரும்பி மயோவின் கையில் பேக்கை கொடுத்துவிட்டு நகர…. நீ எங்கே போற அருள் இங்கேயே நில் என்பது போல  அவன் கை பிடித்து நிறுத்தி வைத்தார் அமுதா.

மயோவிடம் பேக்கை கொடுத்ததும் அதை திறந்து அதில் ஒரு  பெட்டி இருக்கிறது அதை எடும்மா…. என்று சொன்னார்.

மயோவும் மீராவின் பேக்கை திறந்து அதில் இருந்த பெட்டியை எடுத்து இதுவா ஆன்ட்டி?  என்று கேட்டாள் 

ஆமா மா… என்றவர் அதை தன் கையில் வாங்கி அந்த பெட்டியை திறந்தவர் அதை அருளின் கையில் கொடுத்து…

அருள் இதில் இருக்கும் மோதிரத்தை எடுத்து என் மருமகளுக்கு போட்டு விடுப்பா.. என்று அருள் கையில் கொடுக்க…

அம்மா இது…. என்று அருள் இழுக்க… தெரியும்ப்பா…இது உன்னோட பாட்டியுடைய மோதிரம் தான் நம்ம பரம்பரையா வெச்சு இருக்க நகை இது ஒன்னு தான். எனக்கு வர போற மருமகளுக்கு கொடுக்கணும்னு தான் நான் இவ்வளவு கஷ்டத்திலும் இதை மட்டும் பத்திரமா பாதுகாத்து வெச்சிருந்தேன் என்றவர்.

நேத்து உனக்கு கல்யாணம் உறுதி ஆனதும் நான் மீராவை நம்ம வீட்டுக்கு அனுப்பி  இந்த மோதிரத்தை நேற்றே எடுத்துட்டு வர சொல்லிட்டேன் என்றவர் கேள்வி கேட்காம என் மருமகள் விரலில் போட்டு விடு டா…. என்றார்.

அவர் கையில் இருந்த மோதிரத்தை வாங்கிய அருள் திரும்பி மயோவை பார்க்க… அவள் அமுதாவின் அருகில் இருந்தவள் அவனை பார்க்காமல் அமர்ந்து தன் கையை மட்டும் அவனிடம்  உயர்த்தி  காட்ட….

அவள் செய்கையில் உள்ளுக்குள் சிரித்தவன். மயோவின் கையை பிடித்து அவள் விரலில் மோதிரம் மாட்டிவிட… அவன் மோதிரம் போட்டு விட்டதும் தன் கையை அவனிடம் இருந்து எடுக்க போக… அவள் கையை விடமால் பிடித்து இருந்தான்.

அவனை கேள்வியோடு திரும்பிப் பார்த்த மயோ இன்னமும் அவள் கையை அருள் பிடித்திருந்ததை பார்த்துவிட்டு அவனிடம் இருந்து கையை எடுக்க முயற்சி செய்ய…

அவள் கையை விடாமல் பிடித்து இருந்த அருள் மயோவை பார்த்து இருங்க மிஸ்ஸஸ் அருள் என்றவன்.தன் பாக்கெட்டில் இருந்து ஒரு வளையல் போன்ற பெண்கள் ஒற்றை கையில் அணியும்  வளையல் ஒன்றை எடுத்து அவளுக்கு மோதிரம் அணிவித்த கையில் அந்த வளையலை போட்டு விட்டான்.

அவன் வளையலை அணிவிக்க… அதை ஆச்சர்யமாக பார்த்த மயோவை ஒரேக்கண்ணால் பார்த்த அருள் எதுவும் சொல்லாமல் வளையலை மாட்டிவிட…

அதை பார்த்த அமுதா அருள் இது என்ன புதுசா இருக்கு என்று மயோவின் கையில் இருந்த வளையலை பார்த்து கேட்டார்.

என் மனைவிக்கு பரிசளிக்க நானும் கரணும் நேற்று சென்று  வாங்கினோம் என்றான் அருள்.

அவள் அப்படி சொன்னதும் மயோவிற்குள் அவன் மீது இருந்த எண்ணம் மாறியது போல தோன்றியது.

அவன் வளையல் அணிவித்து விட்டு அவள் கையில் அந்த வளையல் நன்றாக இருக்கிறதா என்று ஒரு முறை அவள் கையை உயர்த்தி பார்த்தவன் அவள் கையை விடுவது போல அப்படியே தடவிக்கொண்டே அவள் கையை விட…

அவன் செயலில் ஒரு நிமிடம் அவள் முதுகு  தண்டு சில்லிட தன் கையை அவனிடம் இருந்து வேகமாக உருவிக் கொண்டவள் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க  ….

அருள் எதுவும் தெரியாதவன் போல அமைதியாக நின்று இருந்தான். அவளால் அவனை எதுவும் சொல்ல முடியாத நிலையில் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருக்க….

இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த பூஜா…. ஆஹா மயோவுடை வீட்டுக்காரர் சரியான ஆள் போல தான் இருக்கார்… இவ கிட்டே இத்தனை பேர் முன்னாடி சில்மிஷம் பன்னிட்டு எதுவும் தெரியம எப்படி நிக்குறார்.

ஆனால் மயோவை பத்தி தெரியாம அவ கையை தடவிட்டு இருக்காரே…. இன்னிக்கு நைட் என்ன செய்ய காத்திருக்காளோ அவளுக்கு தான் தெரியும் என்று நினைத்துக் கொண்டவள் அமைதியாக நின்று கொண்டால்.

அப்போது தான் செழியனின் மடியில் தூங்கிக் கொண்டு இருந்த மீரா கண் விழிக்க..தன் எதிரே நின்று இருப்பவர்களை பார்த்துக்கொண்டே எழுந்தவள் கட்டிலில் அமுதாவிடம்   முதுகு காட்டி பேசிக்கொண்டு அமர்ந்து இருந்த மயோவை பார்த்தவுடன் வேகமாக எழுந்து அவள் முன் வந்தவள் அவளை பார்த்து அண்ணி…. என்று வாய் நிறைய கூப்பிட….

மீராவை பார்த்ததும் சற்று முன் தன் தாத்தாவின் மடியில் படுத்து இருந்தவள் தானே இவள். தன்னை அண்ணி என்று அளித்ததும் அருளின் தங்கையாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள். தன்னை சிரித்த முகமாக வாய் நிறைய அண்ணி என்று அழைப்பதை பார்த்த மயோவிற்கு தன் தங்கை இளாவையே பார்த்தது போல தோன்றியது.

 மீரா வந்து மயோவிடம் அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… செம்மையா இருக்கீங்க…. எங்க அண்ணன் தான் ரொம்ப லக்கி அண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதில் என்று சொன்னால் மீரா.

மீரா சொன்னதை கேட்டதும் மயோ சிரித்து   கொண்டே அருளை பார்த்து பார்த்தாயா….என்னை திருமணம் செய்து கொண்டதில் நீ தான் அதிர்ஷ்டசாலி  என்று சொல்லுவது போல அவனைப் பார்க்க…

 அவள் பார்க்கும் பார்வை புரிந்து அருள் மயோவையே பார்க்க…. அவன் பார்ப்பதை சட்டை செய்யாமல் திரும்பிய மயோ மீராவிடம் அவள் என்ன படிக்கிறாள்…என்ன செய்து கொண்டிருக்கிறாள்…என்று பொதுவான விஷயங்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாள்.

 அமுதா தன் மகனுக்கு சரியான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தோமா?இல்லையா? என்று ஒரு கேள்வி மனதிற்குள்ளேயே இருந்தது.

ஆனால் மயோ தன்னிடமும் மீராவிடமும் பேசுவதை பார்த்து அமுதாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது

 மயோ இவர்கள் இருவரிடமும் பழகுவதை பார்க்கும் போது தான் பயந்தது போல…. மயோ கிடையாது என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அமுதா.

 அமுதாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…. மாலை ஆனது கூட தெரியாமல் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர மயோ ஒரு வார்த்தை கூட அருளிடம் பேசவே இல்லை அவனும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

 அமுதா கண்விழித்தவர் தன் படுக்கையில் அமர்ந்து கொண்டு அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து மன மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 அமுதா கண் விழித்ததும் அவரிடம் இருந்து சென்ற மீரா அம்மா உனக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க… இல்லடா   எனக்கு எதுவும் வேண்டாம்… என்று சொன்ன அமுதா.

 மயோவையும் அருளையும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமே காலையிலிருந்து டிரஸ் மாத்திக்காம இங்கேயே இருக்கீங்க உங்களுக்கு கசகசன்னு இருக்கும் நீங்க வீட்டுக்கு போய் டிரஸ் மாத்திக்கலாமே என்று சொன்னார்.

 செழியன் எழுந்து வந்தவர் அமுதாவிடம் அம்மா சம்மந்தி நீங்க கண் முழிச்சதும் உங்க கிட்ட பேசிட்டு  நான் இவங்க  வீட்டு ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு தான் இருந்தேன்.

இன்னும் சடங்கு எல்லாம் செய்ய வேண்டி இருக்கு எதுவுமே செய்யாமல் கல்யாணம் முடிச்சதும் இங்க கூட்டிட்டு வந்தாச்சு நான் போய் தான் எல்லா வேலையும் சரியா இருக்கான்னு பார்க்கணும் என்று சொன்னார்.

அமுதா செழியினை பார்த்து நீங்க எனக்கு அப்பா மாதிரிதான் என்ன சம்பந்தி எல்லாம் கூப்பிட வேண்டாம் பேர் சொல்லியே கூப்பிடுங்க என்று சொன்னார் அமுதா.

 அவர் சிரித்துக் கொண்டு சரி அமுதா அப்ப நான் இவங்கள கூட்டிட்டு கிளம்பட்டுமா? நீ உடம்ப பாத்துக்க என்று சொல்லிவிட்டு மீராவிடம் திரும்பி மீரா நீயும் என் கூடவே வந்திரு டா போகலாம் என்று சொல்ல….

இல்ல தாத்தா நான் என் அம்மா கூட இருந்து அவங்கள பார்த்துக்கிறேன் என்று சொன்னாள்.

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல ஹாஸ்பிடல் இருக்கிறவங்க உங்க அம்மாவ ராணி மாதிரி பார்த்துக்குவாங்க அதுக்கு நான் பொறுப்பு.

நீயும் வா ரெண்டு நாளா ஹாஸ்பிடல் இருந்துட்டு உனக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லை நம்ம வீட்டுக்கு போகலாம் என்று  சொன்னார்.

அருளையும் மயோவையும் அமுதாவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள சொல்லி சொன்னவர்.

இன்று ஆரம்பிக்கப்போகும் உங்கள் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் செழியன்.

  அவர் அப்படி சொன்னதும் மயோவும் அருளும் சரி என்று சொல்லி அமுதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க.

சீக்கிரமே எனக்கு ஒரு பேரனையோ பேத்தியோ பெற்றுக் கொடுங்க என்று சொன்னவர் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோசமான வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்.

அமுதா பேரன் பேத்தி endruசொன்னதை கேட்ட பின் தான்  இன்று அவர்கள் இருவருக்குமே முதல் இரவு என்ற விஷயமே நினைவிற்கு வந்தது.

அமுதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள் இந்த விஷயம் கேள்விப்பட்டதும் பட்டென்று திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.

அவர்கள் செய்கை புரிந்து கொண்ட கரண் சத்தமில்லாமல் சிரித்தவன் சரி தாத்தா… நான் கிளம்புறேன் நானும் காலையில் இருந்து இங்கேயே இருந்துவிட்டேன் என்று சொல்ல… சரிப்பா… ஒரு நாள் நீ உன் வீட்டில் இருப்பவர்களை அழைத்துக்கொண்டு உன் நண்பனின் வீட்டுக்கு வா… என்றார்.

அருளிடமும் மாயோவிடமும் சொல்லிவிட்டு அருளின் காதில் ஹாப்பி பஸ்ட் நைட் என்று அருள் முதல் இரவுக்கு வாழ்த்து சொல்ல….டேய் என்று அவனை முறைக்க… அருளிடம் சிரித்துவிட்டு  அவன் தோளில் கை போட்டுக்கொண்டே வெளியில் செல்ல…

அவர்களை தொடர்ந்து செழியனும் அமுதாவிடம் சொல்லி  விட்டு அவரை பத்ரிமாக பார்த்துக்கொள்ள சொல்லி அங்கிருக்கும் நர்சிடம் சொல்லிவிட்டு தன்னோடு அனைவரும் அழைத்துக் கொண்டு  வீட்டிற்கு சென்றனர்.

❤️

 அருள் கரணை அழைத்துக் கொண்டு முன்னால் பேசிக்கொண்டு ஹாஸ்பிடல் வெளியே சென்று கொண்டிருக்க….

அவர்கள் பின் தொலைவில்   செழியனும் அவருடன் மீராவையும் மாயோவையும் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் SN ஹாஸ்பிடலில் தான்  வேலை பார்த்துக் கொண்டு இருந்த நிஷா அருள் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு மாப்பிள்ளை கோலத்தில் சென்று கொண்டு இருந்தவனை பார்த்து ஆச்சர்யமானால்.

இவன் இங்கே என்ன செய்கிறான் அதுவும் மாப்பிள்ளை கோலத்தில் என்று யோசித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அப்போது டாக்டர் அடுத்த பேசண்டை உள்ளே அனுப்ப சொல்லி மணி அடித்து அழைக்கவும். நிஷா  அடுத்த பேசண்டை அழைத்துக் கொண்டு அருள் சென்ற திசையை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

அருளை மட்டும் மாப்பிள்ளை கோலத்தில் பார்த்தவளுக்கு அவனுடைய மணப்பெண் யார் என்றே யோசித்துக் கொண்டே சென்றாலே ஒழிய….

அவன் பின்னால் சென்று கொண்டு இருந்த மயோவை பார்க்க தவறிவிட்டால்.

தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு யாரை திருமணம் செய்து கொண்டான் என்று யோசித்தவாறே உள்ளே செல்ல..

பேசண்டை அமர வைத்துவிட்டு யோசனையில் நின்று இருந்தவளை பாஸ்கர் கவனித்தவர், தன் பேசண்டை பரிசோதனை செய்துவிட்டு அவருக்கு சில மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு அவரை அனுப்பினார்.

அடுத்த பேசண்டை அனுப்ப வெளியே சென்றவளை நிஷா ஒரு நிமிடம் இங்கே வாருங்கள் என்று அழைக்க…

சார் பேசண்ட் என்றவளை அப்பறம் பாத்துக்கலாம் வா டார்லிங்… என்றான்.

அவர் அப்படி அழைத்ததும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தவள் டாக்டர் ஒரு முக்கியமான காலில் இருக்கிறார் சிறிது நேரம் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு கதவை சற்றிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்றதும் பாஸ்கரை ரெகுலராக பார்க்க வரும் அவனது பேசண்ட்கள் இவருக்கு இதே வேலையா போய்டுச்சு எப்போ வந்தாலும் இப்படி போன் வருது, மீட்டிங் இருக்கு அது இதுன்னு சொல்லி அப்படி யாரு கூட தான் போன் பேசுறாரோ தெரியலை என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.

உள்ளே சென்ற நிஷாவின் கையை பிடித்து இழுத்தவன் அவளை தன் மடியில் அமர்ந்திக் கொண்டு என்ன டார்லிங் ஏதோ யோசனையில் இருக்கே என்று அவள் உடலை தன் கைகளால் தடவிக் கொண்டே கேட்டான் பாஸ்கர்.

 அது ஒன்னும் இல்ல டார்லிங் அன்னைக்கு எங்க அம்மா சொன்னாங்கன்னு சொல்லிட்டு ஒரு பிளாஸ்டிக் சர்ஜி டாக்டறை எனக்கு கல்யாணம் பண்ண பார்க்க போனேனே ஞாபகம் இருக்கா என்று கேட்டால்.

 ஆமா நீ கூட போய் பார்த்துட்டு அவங்க அம்மா நீங்க கேட்ட வரதட்சணை எல்லாம் கொடுக்கிறேன்னு சொல்லி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி உன்னை அந்த பயணை பார்க்க அனுப்பினங்களே அந்த பையனா…அப்ப கூட அந்த பையன் இன்னும் வேண்டாம் என்று சொல்லி விட்டு அனுப்பிட்டான்னு சொன்னியே அவனா என்று கேட்டான் பாஸ்கர்.

 ஆமா டார்லிங் அவனேதான் அவனை இப்பதான் நம்ம ஹாஸ்பிடலில் வைத்து பார்த்தேன். அவன் கல்யாண மாப்பிள்ளை மாதிரி டிரஸ் பன்னிட்டு யாரையோ பாத்துட்டு இப்போதான் போறான். என்னையே வேண்டான்னு சொல்லுவ அப்படி யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க எனக்கு ஒரு யோசனை இருக்கு ஏன்னா அவனை பார்த்தா கல்யாணம் பண்ணின மாதிரி தான் இருந்துச்சு அவன் கையில காய்ந்த மாலையோட தான் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போனான் என்று சொன்னால் நிஷா.

 அவன்தான் உன்னை வேண்டாம் என்று சொல்லிட்டானே டார்லிங் இப்பவும் என்ன அவன பத்தி நெனச்சிட்டு இருக்க.. என்ற பாஸ்கர் அவள் கழுத்தில் முகம் புதைத்தபடியே கேட்க…

 அதனாலதான் டார்லிங் நானே யோசித்துக்கொண்டே இருக்க…. என்ன வேண்டான்னு சொல்லி ரெண்டு  நாள் கூட ஆகல அதுக்குள்ள எப்படி அவளுக்கு இன்னொரு பொண்ணு கிடைச்சதுன்னு ஒரு சந்தேகம் அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன் என்று சொன்னால் நிஷா.

 அதையெல்லாம் அப்புறம் யோசிச்சுக்க டார்லிங் முதல்ல என்ன கவனி என்று சொன்னவன் அவளை தன் மடியில் இருந்து அப்படியே தூக்கிக் கொண்டு அவனுடைய ஓய்வெடுக்கும்  அறைக்கு தூக்கிச் சென்றான் பாஸ்கர்.

 அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்த படி அவன் இதழில் முத்தமிட்டுக் கொண்டே நிஷாவும் அவனுக்கு இணங்கி கொண்டு அவனுடன் சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured