FLING 26
லண்டனின் அந்தப் பரபரப்பான மாலைப் பொழுது, தீரன் மற்றும் அகலிகாவின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய புயலை வீசிவிட்டுச் சென்றிருந்தது.
அகலிகாவையும், முகேஷையும் தற்காலிகமாகப் பிரித்து வைக்க தீரன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அகலிகாவைத் தனது காரில் ஏற்றிச் சென்று வீட்டில் விட்ட தீரன்,மீண்டும் அலுவலகம் சென்றான்.,
ஆபீஸ் வந்ததும் இயந்திரத்தனமாக தன் வேலைகளை செய்து முடித்தான். அவனது கண்கள் லேப்டாப் திரையில் இருந்தாலும், மனம் மட்டும் அகலிகாவைச் சுற்றியே வந்தது.
‘ஏன் ரியா இப்போ வந்தா? அகலிகாவிடம் நான் காட்டிய அந்த அதிகாரம் இப்போது செல்லுபடியாகாதே! இன்னும் அவ கல்யாணத்துக்கு நாள் இருக்க அப்போ இந்த முகேஷ்க்கு இங்க என்ன வேலை? “என்று அவன் மனம் குமைந்தது.
” டேய் நீ தாண்டா லூசு மாதிரி யோசிச்சிட்டு இருக்க அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கூட. நேரம் செலவழிக்கனும்னு முகேஷ் நீங்க கிளம்பி வந்து இருப்பான். நீ என்னவோ அவ உனக்கு சொந்தமானவள் மாதிரி இவ்வளவு டென்ஷன் ஆகிற” என்று அவன் மனம் அவனை குட்டியது.
“அகலிகா எனக்கு சொந்தமானவ தான். அவளை நான் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்கப் போறதில்ல”
“ஓஹோ அப்படியா இன்னும் 20 நாள்ல அவளுக்கும் முகேஸ்க்கும் கல்யாணம். அது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? அந்த 20 நாள் முடிச்சதும் உனக்கும் அகலிகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீ தானே அவகிட்ட டீல் பேசின? இப்ப என்ன திடீர்னு இப்படி பேசுற?”
“ஆமா பேசினேன் தான். அப்போ அவளை என் வழிக்கு எப்படி கொண்டு வரதுன்னு எனக்கு தெரியல. அதனால அப்படி பேசினேன். ஆனா எங்க ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு நடந்து பிறகும் அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது”
“அதனால என்ன செய்யறதா உத்தேசம்?”
அவன் மனது மாறி மாறி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பார்த்தவனுக்கு கடைசியாக கேட்ட இந்த கேள்விக்கு அவனிடம் விடையில்லை. என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவனின் கவனம் சிதறி இருக்க…
லேப்டாப்பை மூடிவிட்டு தன் சாரில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்து விட்டான்.
மாலை நேரம் வந்ததும், முகேஷ் தீரனுக்கு போன் செய்தான். “டேய் தீரன்! நாங்க ஹோட்டல்ல ரெடி ஆகிட்டோம். அகலிகாவையும் ஒரு டாக்ஸி பிடிச்சு வரச் சொல்லிட்டேன். நீ சீக்கிரம் அந்தப் பழைய ரெஸ்டாரண்ட்டுக்கு வந்துடு!” என்றான்.
தீரனுக்கு எரிச்சலாக இருந்தது. அகலிகாவைத் தனியாக கிளிம்பி டாக்ஸியில் வரச் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை.
“இவன் பாட்டுக்கு டாக்ஸ் பிடிச்சு வான்னு சொல்லிட்டா அவ எப்படி வருவா? அவளுக்கு இந்த ஊரை பற்றி என்ன தெரியும்? இ
த்தனை நாளா அவ எங்கையும் போகல இவனுக்கு கொஞ்சமாவது அகலிகா மேல அக்கறை இருந்தா இப்படி செய்வானா?” என்று முகேஷ் சொன்னதை நினைத்து அவனை திட்டினான்
ஆனால், முகேஷிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாது.
அந்த உயர்தர உணவகத்தில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
மேசையைச் சுற்றி நால்வரும் அமர்ந்தனர். தீரனுக்கு நேர் எதிரே அகலிகா அமர்ந்திருந்தாள்.
அவளுக்குப் பக்கத்தில் முகேஷ்.
தீரனுக்குப் பக்கத்தில் ரியா.
ரியா, தீரனின் கையைப் பிணைத்துக்கொண்டு அவனது தோளில் சாய்ந்திருந்தாள். “தீரன், இந்த ரெஸ்டாரண்ட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம லண்டன்ல இருந்தப்போ அடிக்கடி இங்க வருவோம்ல?” என்று பழைய நினைவுகளைக் கிளறினாள்.
தீரன் ஒரு போலிச் சிரிப்பை உதிர்த்தபடி அகலிகாவைப் பார்த்தான். அகலிகா மிக அமைதியாக இருந்தாள். அவள் முகேஷுடன் திருமண ஏற்பாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.
அங்கு தீரன் அறியா இருவரும் இருப்பது போலவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.
“அகலிகா, இந்தியா போனதும் நம்ம கல்யாணத்துக்கு நான் தான் எல்லா டிரஸ்ஸும், ஜெவெல்சும் செலக்ட் பண்ணுவேன். தீரன் தான் ஸ்பான்சர், என்ன தீரன் ஓகேவா?” என்று முகேஷ் கிண்டலாகக் கேட்டாள்.
“நீ கவலைப்படாத முகேஷ் கல்யாணத்துக்கான மொத்த செலவையும் நானே ஏத்துக்கிறேன்” என்றவன் பார்வை அகலிகாவின் மீது அழுத்தமாக பதிந்தது
தீரனின் உள்ளுக்குள் பொறாமைத் தீ எரிந்தது. ‘என் முன்னாடியே என் அகலிகாவை திருமணம் செய்து கொள்வதை பற்றிப் பேசுவதா?’ இதை கேட்டு தீரனின் கண்கள் சிவந்தன.
அவன் அகலிகாவை உற்றுப் பார்த்தான். அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்ப்பது போலத் தோன்றியது. அவளது கவனம் முழுவதும் முகேஷ் மீதே இருந்தது.
‘இவள் என்னைத் தவிர்க்கிறாளா? அல்லது முகேஷின் பாசத்தில் மீண்டும் விழுந்துவிட்டாளா?’ – தீரனின் சந்தேகம் அவனை வதைத்தது.
அகலிகாவின் இந்த நிராகரிப்பு தீரனை மேலும் அவள் பக்கம் ஈர்த்தது. அவன் அருகில் அமர்ந்து ரியா பேசிக் கொண்டிருக்க… அவளுக்கு வெறுமனே தலையாட்டி இவன் கவனம் முழுவதும் அகிலிகாவின் மீதுதான் இருந்தது.
அவளை இப்போதே தனது ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு ஓடிக் கொண்டிருந்தது.
தீரன் தன் காலை நீட்டி அகலிகாவின் காலைத் தீண்ட முயன்றான். ஆனால் அகலிகா சட்டென்று தன் காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.
அவள் கண்கள் தீரனை எச்சரித்தன.
முகேஷும் ரியாவும் ஒரு மெனு கார்டைப் பார்த்து விவாதித்துக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட இடைவெளியில், தீரனும் அகலிகாவும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அகலிகா மெதுவாகத் தீரனைப் பார்த்தாள். அவனது பார்வையில் இருந்த அந்தத் தவிப்பு அவளை உருக்கியது. அவனது கைகளைப் பற்ற வேண்டும், “டென்ஷன் வேணாம் தீரன் பிலீஸீ ,
” என்று சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது..
அவளை அறியாமல் தன் விரலால் மேசைக்கு அடியில் தீரனின் கை விரலை வருடினாள்.
அந்தச் சிறு தீண்டல் தீரனுக்கு மின்னல் பாய்ந்தது போல இருந்தது. அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் சட்டென்று மேசையின் கீழே தன் காலால் அவளது முழங்காலை அழுத்தமாக வருடினான்.
அகலிகா அதிர்ந்து நிமிர்ந்தாள்.
தீரன் மேசையின் குறுக்கே சாய்ந்து, அவளது காதருகில் குனிந்து கிசுகிசுத்தான்
“நீ என்னோட தான் இருக்கணும் அகலிகா. இந்த இடைவெளி எனக்கு மூச்சு முட்டுது. முகேஷ் கூட நீ பேசுறது எனக்குப் பிடிக்கல!” என்று தன் பொறாமை தீயை அவள். மீது பற்ற வைத்தான்.
அகலிகா ஒரு கணம் உறைந்து போனாள். ‘நான் இவனைத் தூண்டிவிடுகிறேனோ? இவனது இந்த வேகம் ரியாவுக்குத் தெரிந்தால் என்னாகும்?’ என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
அவள் சட்டென்று தன் கையை விலக்கிக் கொண்டு, இருக்கையில் தள்ளி அமர்ந்தாள். “என்னை மன்னிச்சிடுங்க தீரன். இனிமேல் நான் உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன். இது தப்பு. நாம் பழையபடி இருக்கலாம்,” என்று மிகத் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளது இந்தத் திடீர் விலகல் தீரனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. ‘என்னால் உன்னை அடைய முடியும் என்று தெரிந்தும் ஏன் விலகிப் போகிறாய்?’ என்று அவனது மனசாட்சி கத்தியது.
அந்தப் இருக்கமான இரவு
உணவு முடிந்து நால்வரும் தீரனின் அபார்ட்மெண்டிற்குத் திரும்பினர்.
இட வசதிக்காகத் தீரன் தனது மாஸ்டர் பெட்ரூமில் முகேஷுடன் தங்க வேண்டியிருந்தது.
ரியா மற்றும் அகலிகா கெஸ்ட் ரூமில் தங்கினர்.
அகலிகா அறைக்குள் நுழைந்ததும் கதவைச் சாத்தினாள். அவளது இதயம் பலமாகத் துடித்தது. ரியா அவளிடம் வந்து அமர்ந்தாள்.
“அகலிகா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் ஆகிடலாம். இந்தியா போனதும் என் கல்யாணத்துக்கு நீ தான் முன்னாடி நிக்கணும். அப்புறம்… நீயும் முகேஷ்ம் எப்போ வேணா எங்க வீட்டுக்கு வரலாம்,” என்று ரியா பாசமாகப் பேசினாள்.
அகலிகாவிற்குத் தொண்டை அடைத்தது. ‘ரியா… உனக்குத் தெரியாது, நானும் தீரனும் உன்னை ஏமாத்திட்டு இருக்கோம். உன்னை மட்டும் இல்லை முகேஷயும் தான்” என்று நினைத்தாள்.
“தீரனும் என்னைச் சுற்றி என்ன விளையாட்டு விளையாடிட்டு இருக்கானு உனக்கு தெரியாது.. நான் உனக்குத் துரோகம் செய்றேன்?’ என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.
“நிச்சயமா ரியா… தூக்கம் வருது, படுக்கலாமா?” என்று சொல்லிவிட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டாள்.
ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
மறுபுறம், தீரனின் நிலைமை இன்னும் மோசம். முகேஷ் பக்கத்தில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.
தீரன் ஜன்னல் வழியாக வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அடுத்த அறையில் அகலிகா இருக்கிறாள். அவள் ரியாவுடன் படுத்திருக்கிறாள். அவளால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது? என்னை ஒரு கைதியாக இங்கே தவிக்க விட்டுவிட்டாளே!’ என்று நினைத்தவன் எழுந்து பால்கனிக்குச் சென்றான்.
அவனது மனம் முழுவதும் அகலிகாவின் அந்த ‘சரணாகதி’ தான் ஓடியது. நேற்று இரவு அவளை அணைத்த அந்த கதகதப்பு இன்னும் அவனது கைகளில் இருந்தது. காலையில் இருவரும் உரையாடிய kitchen adventure பற்றிய எண்ணம் அவனுக்கு ஓடியது.
அகலிகாவும் தூங்காமல் ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இந்த ஒரு இரவு எவ்வளவு நீளமானது? தீரன் பக்கத்து அறையில் இருக்கிறான் என்று தெரிந்தும் என்னால் அவனிடம் போக முடியவில்லையே. ரியாவிடம் பொய் சொல்லிவிட்டு இங்கே படுத்திருப்பது எவ்வளவு பெரிய சாபம்!’
இருவருமே அருகருகே இருந்தனர், ஆனால் அவர்களுக்கு இடையே ரியா மற்றும் முகேஷ் என்ற இரண்டு பெரிய சுவர்கள் இருந்தன.
அவர்களின் அந்தரங்க உறவுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது போல அந்த இரவு அமைந்தது.
தீரன் தனது மொபைலை எடுத்து “தூங்கிட்டியா? எனக்கு மூச்சு முட்டுது அகலிகா. நீ இல்லாம இந்த ரூம் எனக்கு நரகமா இருக்கு.” என்று அகலிகாவுக்கு மெசேஜ் செய்தான்
அகலிகா மெசேஜைப் பார்த்தாள். அவள் பதில் அனுப்பவில்லை.
ப்ளூ டிக் வந்தது. ஆனால் அவளிடம் இருந்து ரிப்ளை வராமல் இருந்தது. அவளது மௌனம் தீரனை இன்னும் அதிகமாகத் தூண்டியது.
அவன் நாளை என்ன செய்யப் போகிறான் என்பது அவனுக்கே தெரியாது, ஆனால் அகலிகாவைத் தன்னிடம் மீண்டும் வரவழைக்க அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
காலையில் அவளிடம் சொன்ன விஷயத்தை செய்யாமல் அவன் இருக்க போவதில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் சொன்னது போல அகலிகா காலையில் கேட்ட kitchen adventure ஐ விட ஒரு பெரிய adventure அவளுக்காக காத்திருந்தது.
