Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 31

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 31

by Layas Tamil Novel
141 views

FLING  31

லண்டனின் பனித்திரை விலகி, சென்னையின் உஷ்ணமான காற்று அகலிகாவின் முகத்தில் பட்டபோது, அவளுக்கு அது விடுதலையாகத் தெரியவில்லை,e மாறாக ஒரு பெரிய பாரமாகத் தெரிந்தது. வீட்டிற்குச் செல்வதற்கு முன், தன் மனபாரத்தை இறக்கி வைக்க அவள் தேடிய ஒரே இடம் பார்வதி தான் .

பார்வதியைக் கண்டதும் அகலிகாவின் தேக்கி வைத்த உணர்வுகளை கண்ணீர் வழியாக உடைந்து கொட்டியது. பார்வதி அவளை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“அஹி… என்னாச்சு? ஏன் இப்படி அழற? அந்த ராட்சசன் தீரன் உன்னை ஏதாவது பண்ணிட்டானா? நீ எப்படி அங்கிருந்து வந்தே? அவன் உன்னை விடுவிச்சதே பெரிய ஆச்சரியமா இருக்கே!” என்று பார்வதி பதட்டத்துடன் கேட்டாள்.

அகலிகா விம்மி விம்மி அழ பார்வதி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள். சிறிது நேரம் கழித்து அகலிகா பேசத் தொடங்கினாள்.

“பார்வதி… நான் அங்கிருந்து தப்பிச்சு வரல. அவனே தான் என்னை அனுப்பி வச்சான். இதுதான் என்னால ஜீரணிக்கவே முடியல,” என்றாள் அகலிகா.

பார்வதி குழப்பத்துடன், “என்ன சொல்ற அஹி? உன்னை மிரட்டி, உன் வாழ்க்கையையே தன் கைக்குள்ள வச்சிருந்தவன், திடீர்னு உன்னை விட்டுட்டானா? இதுல ஏதாவது சதி இருக்குமோ?” என்றாள்.

“இல்ல பார்வதி… இது சதி இல்ல. இது அவனோட தியாகம். லண்டன்ல ஆரம்பத்துல அவன் என்கிட்ட ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டான். என்னை ஒரு பொருளா தான் பார்த்தான். ஆனா… போகப்போக எனக்கே தெரியாம நான் அவனோட நெருக்கத்துக்கு அடிமையாகிட்டேன். என்னோட எதிர்ப்பு ஒரு கட்டத்துல சரணாகதியா மாறிடுச்சு,” என்று தலைகுனிந்தாள் அகலிகா.

“என்ன அஹி சொல்ற? நீ அவனை…”

“ஆமா பார்வதி… அவன் என்னை வற்புறுத்தினாலும், அந்த வற்புறுத்தலுக்குள்ள ஒரு காதல் இருந்தது. அவன் என்னை நேசிக்க ஆரம்பிச்சுட்டான். ஆனா நான் முகேஷை ஏமாத்த விரும்பல. என் மனசுக்குள்ள இருந்த அந்த குற்ற உணர்ச்சியை அவன் கண்டுபிடிச்சுட்டான். ‘உன் முகத்துல சிரிப்பை விட பயம் தான் அதிகமா இருக்கு அகலிகா, இது எனக்குத் தேவையில்லை. நீ முகேஷ் கூடவே சந்தோஷமா இரு’ன்னு சொல்லி, அந்த நிமிஷமே எல்லா ஆதாரங்களையும் அழிச்சுட்டு என்னை அனுப்பி வச்சான்,” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

“அவன் ஒரு கொடூரமானவன் தான் பார்வதி… தீரன் நினைச்சதை செய்து முடிக்குறவன். ஆனா அவன் கடைசியில ஒரு உண்மையான மனுசனா மாறிட்டான். என் மனசை புரிஞ்சுக்கிட்டு இத்தனை நாள் அவன் பண்ணினதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டான். இப்போ என் மனசு ரொம்பக் குழம்பிப் போயிருக்கு. முகேஷோட அன்பு ஒரு பக்கம், தீரனோட இந்தத் தியாகம் ஒரு பக்கம். நான் யாரை நினைக்கிறேன், யாரை நேசிக்கிறேன்னு எனக்கே தெரியல. லண்டன்ல அவனோட கழிச்ச ஒவ்வொரு நிமிஷமும் என் கண்ணு முன்னாடி வந்து போகுது,” என்றாள் அகலிகா.

“அஹி! என்ன டி இது இப்படி எல்லாம் பேசுற.. இப்போ என்ன தான் டி நீ செய்யப் போற..” என்றாள்.

” தெரியலடி” என்று அவளைப் பார்த்தாள் அகலிகா.

 “உண்மையாவே உன் மனசுல தீரன் இருந்தா, அவனை உன்னால மறக்க முடியலனா,உனக்கு அவன  புடிச்சிருக்குன்னா,அப்போ முகேஷ் கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடு டி” என்றாள் பார்வதி.

 “என்னால் அப்படி செய்ய முடியாது பாரு. நீயே நினைச்சு பாரு முகேஷ் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் அப்பா கஷ்டப்பட்ட நேரத்துல அவருக்கு உதவினான். அந்த நன்றிக் கடனுக்காக தான் அப்பா எனக்கு அவனுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க. நான் போய் இப்போ எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்ல தீரன தான் படிச்சிருக்குன்னு சொன்னா முகேஷ் ஓட மனநிலை என்ன ஆகும். அதுவும் இல்லாம அவனுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேண்டி இப்படி நான் செஞ்சா என்ன மாதிரி ஒரு கேடுகெட்டவ யாருமே இருக்க முடியாது” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

 அழும் அகலிகாவையே பார்த்துக்கொண்டிருந்தால் பார்வதி அவளால் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.

இங்கே அகலிகா துடித்துக்கொண்டிருக்க, அங்கே லண்டனில் தீரன் ஒரு உயிருள்ள பிணமாக உலவிக்கொண்டிருந்தான்.

 அகலிகா சென்ற பிறகு அந்த ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட் ஒரு மயானம் போல அவனுக்குத் தெரிந்தது.

தீரன் கையில் ஒரு மதுக் கோப்பையுடன் பால்கனியில் நின்றிருந்தான். லண்டனின் குளிர் காற்று அவன் உடலைத் துளைத்தது, ஆனால் அவன் இதயத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு முன்னால் அந்தக் குளிர் ஒன்றுமே இல்லை.

அவன் பின்னால் ரியா வந்து நின்றாள். “தீரன்… என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாவே இருக்கீங்க? ” என்றாள் ரியா கவலையுடன்.

தீரன் அவளைத் திரும்பிப் பார்க்காமல், ” எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் ரியா… எனக்குக் கொஞ்சம் தனிமை வேணும். நீ போய் தூங்கு,” என்றான்  தீரன் .

ரியா அங்கிருந்த ஸ்டடி ரூமுக்குள் சென்றுவிட , தீரன் மெதுவாகக் கிச்சனுக்குள் சென்றான். அங்கிருந்த பிளாட்பார்மைப் பார்த்ததும் அவனுக்கு அந்த ‘Kitchen Adventure’ நினைவுக்கு வந்தது. அகலிகா அங்கே நின்று காபி போட்டதும், அவன் அவளைப் பின்னால் இருந்து அணைத்ததும் நிழலாடின.

“அஹி!ஏன் இப்படி என்னை அனாதையா விட்டுட்டுப் போன?” என்று முணுமுணுத்தவன், அவளது அறைக்குள் சென்றான்.

அகலிகா படுத்திருந்த அந்தப் படுக்கையில் இன்னும் அவளது வாசனை மிச்சமிருந்தது. அவன் அந்தப் போர்வையை எடுத்துத் தன் முகத்தோடு அணைத்துக்கொண்டான்.

“நான் நினைச்சிருந்தா உன்னை இங்கேயே  வச்சிருக்கலாம் அகலிகா. ஆனா உன்னோட தவிப்பு, உன்னோட கஷ்டம் என் நெஞ்சை கல்லாகிருச்சு டி… உன்னை இந்தியா நடத்த  அனுப்பி வச்சிட்டு, இங்க நான் சாகுறேன் பாரு டி… இது நான் உனக்குக் கொடுக்கிற தண்டனையா? இல்ல எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனையா? எனக்கு எதுவுமே புரியல.. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை கம்பெல் பண்ணி இங்க கூப்டு வந்திருக்க கூடாது. நீ குற்ற உணர்வோட இருக்க நான் தான் காரணம். அதை என்ன செஞ்சு நான் சரி பண்ண முடியும்னு தெரியல.. என்னோட பிடுவாதத்தால உன்னை கஷ்டப்படுத்திட்டேன். இதுக்கு எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறது” என்று நினைத்தான்.

அவன் மொபைலை எடுத்து அகலிகாவின் புகைப்படத்தைப் பார்த்தான்.

“இன்னும் சில நாள்ல உன் கழுத்துல முகேஷ் தாலி கட்டுவான். அப்போ உனக்கு எந்த ஒரு சந்தோஷமும் இருக்காது இல்லை

 உன் சந்தோசத்தை நான் கெடுத்துட்டேன் இல்லை..” என்று நொந்து கொண்டவன்.

” நான் மட்டும் தான் உன்ன நெனச்சி இங்க தவிச்சிட்டு இருக்கேனா? என்னோட  நினைவுகள் உன்னைத் தூங்க விடாம பண்ணுமா? நான் ஒரு முட்டாள் அகலிகா… உன்னை அடையணும்னு நினைச்சேன், ஆனா உன்னை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். காதலிச்சவங்களை அடைய முடியாதுன்னு இப்போ தான் புரியுது,” என்று தனக்குள் பேசிக்கொண்டான்.

தீரன் அந்த அறை முழுவதையும் ஒரு பைத்தியக்காரனைப் போலச் சுற்றி வந்தான். அங்கிருந்த ஒரு கண்ணாடியைப் பலமாக ஓங்கி அடித்தான். கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது, அவனது கை விரல்களில் இருந்து ரத்தம் கசிந்தது.

“இந்த வலி ஒன்னுமே இல்ல அகலிகா… நீ இல்லாம ஒவ்வொரு நிமிஷமும் நான் அனுபவிக்கிற இந்தத் தவிப்பு இருக்கே… அது நரகத்தை விடக் கொடூரமானது,” என்று தரையில் அமர்ந்து  இருந்தான் இந்த இரும்பு மனிதன்.

அகலிகா பார்வதியிடம் சொன்னாள், “பார்வதி… எனக்கு முகேஷைப் பார்க்கவே பயமா இருக்கு. அவன் என்கிட்ட பாசமா பேசும்போதெல்லாம், தீரனோட அந்தத் தவிப்பான முகம் தான் எனக்கு ஞாபகம் வருது. நான் ஒரு துரோகியா மாறிட்டேன்.”

பார்வதி அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள். “அஹி… இது காலத்தோட கட்டாயம். நீ தீரனை மறக்க முயற்சி பண்ணு. முகேஷ் தான் உன்னோட நிஜம்.”

“முயற்சி பண்றேன் பார்வதி… ஆனா லண்டன்ல தீரன் கடைசியா சொன்ன அந்த வார்த்தை என் காதுல கேட்டுட்டே இருக்கு… ‘என்னை மறந்துடாதேன்னு அவன் சொன்னப்போ அவன் முகத்துல இருந்த அந்த ஏக்கம்… அது என்னைக் கொல்லுது டி ,” என்று அழுதாள் அகலிகா.

அங்கே லண்டனில், தீரன் சிதறிய கண்ணாடிகளுக்கு நடுவே அமர்ந்து, ரத்தம் சொட்டும் கைகளால் அகலிகாவுக்கு ஒரு மெசேஜ் டைப் செய்தான்.

“சந்தோஷமா இரு அகலிகா… ஆனா ஒருமுறை கூட என் ஞாபகம் உனக்கு வரலன்னா, இந்தத் தீரன் செத்துட்டான்னு அர்த்தம்.”

டைப் செய்தவன், அதை அனுப்பாமல் அழித்துவிட்டான். “வேண்டாம்… அவ நிம்மதியைக் கெடுக்க எனக்கு உரிமை இல்லை,” என்று போனைத் தூக்கி எறிந்தான்.

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அங்கே வந்து அறியா தரையில் இடிந்து போய் அமர்ந்திருந்த தீரனை பார்த்தாள் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

 அவன் கையில் ரத்தம் வழிந்தோட அதை பார்த்தவள் “ஐயோ  தீரன்! என்ன இது? எப்படி ஆச்சு?! என்று அவசரமாக வந்தவள் அங்கு இருந்த பஸ்ட் எய்ட் கிட்டை எடுத்து அவன் கைகளை மருந்திட ஆரம்பித்தாள்.

அவனோ அகலிகாவை எண்ணிய படி அமர்ந்து இருந்தான்.

இரு வேறு நாடுகளில், இரு வேறு சூழ்நிலைகளில், இரண்டு இதயங்கள் ஒரே நினைவிற்காகத் தவித்துக் கொண்டிருந்தன. தீரனின் காதல் மிரட்டலாகத் தொடங்கி, இன்று தியாகத்தில் வந்து நின்றிருந்தது. ஆனால், விதி இன்னும் தன் ஆட்டத்தை முடிக்கவில்லை.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured