Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 39

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 39

by Layas Tamil Novel
12 views

FLING 39

“என்ன அஹி! பேசு எதாவது எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்”என்று தீன் மீண்டும் தூண்டிவிட..

அகலிகாவுக்கோ வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போல இருந்தது. தனக்காக பார்த்த முகேஷ், தீரனை திருமணம் செய்யப்போகும் ரியா இருவரும் இருக்கையில் இவன் ஏன் இப்படி விளையாடுகிறான் என்று அடித்துக்கொண்டது அவளுக்கு  .

“ஏன் அஹி! இப்படி பேய் அறைஞ்சா மாதிரி இருக்க?” என்ற முகேஷ் தன் கையில் இருந்த மொபைலை அவளிடம் நீட்டி “நீயே பாரு” என்றான் .

தீரனின் மொபைலை வேகமாக வாங்கியவள் அதில் இருந்த போட்டோவை பார்த்தாள் . அது லண்டனில் இருக்கும்போது ஸ்வேதாவும், அகலிகாவும் ஒரு பார்ட்டியில் இருந்த போட்டோ கொஞ்சம் கிளாமராக மினி ஸ்கர்ட்டும், ஒரு கிராப் டாப்பும் மட்டும் போட்டிருந்தாள். அவள் போட்டிருந்த உடையை பார்த்து தான் இவர்கள் இருவரும் ஆச்சர்யப்பட்டு போயினர்.

அகலிகா தீரனின் சட்டையை அணிந்து இருந்த போட்டோவை தான் அவர்களிடம் காட்டிவிட்டானோ என்று அவள் பயந்துவிட்டாள் .

வேறு போட்டோவை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியானது. திரும்பி தீரனை முறைத்தவள் அந்த மொபைலில் இருந்த அவள் மற்ற போட்டோக்களை பார்த்துவிட்டு அதில் அவள் தீரனுடன் எடுத்து, அவளை தீரன் எடுத்த போட்டோ என்று அனைத்தையும் டெலீட் செய்து அவனிடம் மொபைலை கொடுத்தாள்.

அதை அமைதியாக அவள் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தீரன் “இதோட ஒரிஜினல் போட்டோஸ் என் லப்டோப்ல இருக்கு தங்கம்”என்று மெல்ல சொன்னான்.

முகேஷ், ரியா இருவரும் இவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்தனர்.

அகலிகா திரும்பி ரியாவிடம் நான் லண்டன் போன புதுசுல என் ஆபீஸ் கொலிக் கூட  வெளியே போயிருந்தேன். இது அவ டிரஸ் தான் என்னை போடா சொல்லி இன்சிஸ்ட பண்ணினா , எனக்கு அங்க கம்போர்ட்டா இருந்ததுன்னு போட்டேன்” என்று தீரனைப் பார்த்தவள் “தீரன் இந்த போட்டோ உங்ககிட்டே எப்படி வந்துச்சு” என்றாள் .

“இது ஒரு விஷயமா? ” என்றவன். “முகேஷ் என் பொறுப்பில் அகலிகாவை விட்டிருக்கான். இவங்க என்கிட்டே சொல்லாம கொள்ளாம பிரென்ட் கூட சேர்ந்து பார்ட்டி பப்னு போயாச்சு. அதுவும் லண்டன் வந்த அந்த வாரத்துலேயே. நானும் போன் பண்ணி பண்ணி பேக்குறேன். பார்ட்டி என்ஜோய் பண்ணின குஷியில் அகலிகா போனை எடுக்கல.. எனக்கு பயங்கர டென்ஷன் ஆகிருச்சு” என்றவன் திரும்பி அகலிகாவை பார்த்தான்.

அவன் சொல்ல சொல்ல அகலிகாவின் நினைவுகள் லண்டனில் இருந்த அந்த நேரத்துக்கு பின்னோக்கி சென்றது.

“போறோம் என்ன ஆச்சு தீரன்” என்று கதை கேட்பது போல ரியா ஆர்வமாக அவனை பார்க்க..

“அப்பறோம் பார்ட்டி எல்லாம் முடிஞ்சு இவங்க திரும்ப வந்த அப்போ நான் இவங்களுக்கு பயங்கரமா ஒரு பனிஷ்மென்ட் கொடுத்துட்டேன்” என்றான்.

“அது என்ன பனிஷ்மென்ட், உன்கிட்டே சொல்லாம போனதுக்கு நீ அகலிகாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தியா” என்றான் முகேஷ்.

“ம்ம்ம் ஆமா கொடுத்தேன். என்கிட்டே ஒரு வார்தை கூட சொல்லாம போனாங்க இல்ல  அதுக்கு தான் அந்த பனிஷ்மென்ட்”என்றான்.

“என்ன பனிஷ்மென்ட் அஹி! தீரன் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தானா? எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. நாளைக்கு என்னையும் இதே போல தான் பினிஷ் பண்ணுவானோ” என்று ரியா கேட்டாள்.

“உன்னை அந்த அளவுக்கு எல்லாம் நான் பினிஷ் பண்ண மாட்டேன் நீ பணிக்கு ஆகாத” என்றவன். “அது எனக்கும் , அஹிக்கும் மட்டுமே தெரிஞ்ச பனிஷ்மென்ட் ரியா, வேணும்னா நீயே அவகிட்ட கேளேன்” என்றவன் திரும்பி அகலிகாவை பார்த்தான். 

“அஹி!” என்று ரியா ஆர்வமாக அவளை பார்த்தாள்.

“ரியா! அது அது வந்து நான் இந்த மாதிரி சொல்லாம வெளியே போய்ட்டு வந்தேன்னு தீரன் எனக்கு நைட் ஷிபிட் ஒர்க் கொடுத்து பினிஷ் பண்ணினார். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல கிட்டத்தட்ட அந்த பனிஷ்மென்ட் ரொம்ப நாள் இருந்துச்சு ” என்றாள் அவளும் தீரனுக்கு சளைத்தவள் இல்லை என்ற ரீதியில்.

“என்ன தீரன் இது, அஹியை நீ நல்லா பாத்துப்பேன்னு அனுப்பி வெச்சா இப்படி அவளுக்கு நைட் ஷிப்ட் கொடுத்து பினிஷ் பண்ணிருக்க.. ” என்று கோபித்துக்கொண்டான் முகேஷ்.

“நான் அஹிக்கு நைட் ஷிபிட் பனிஷ்மென்ட் கொடுத்தது உனக்காக தான் டா. என்ன கல்யாணத்துக்கு பிறகு உனக்கு எதுவும் தெரியாலையின்னா அகலிகாவே எல்லாமே உனக்கு சொல்லி கொடுப்பாளே.. உனக்கும் கல்யாணத்துக்கு பிறகு எந்த சிரமும் இருக்காதே” என்றான் தீரன்.

“என்ன டா என்ன கல்யாணத்துக்கு பிறகு , எனக்கு எதுவும் புரியல” என்றான் முகேஷ்.

“இல்ல டா எப்படியும் உன்னை கல்யாணம் பண்ணினத்துக்கு பிறகு அகலிகா உன்னோட கம்பெனியை எடுத்து நடத்த போறா.. அப்போ உன்னோட சேர்த்து உன் கம்பெனி நிர்வாகத்தையும் நடத்துற அளவுக்கு நான் அவளுக்கு ட்ரெயின் பண்ணி இருக்கேன். எந்த ஒர்க் கொடுத்தாலும் அகலிகா திறமையா செய்து முடிச்சிருவானு சொன்னேன். இது கூட இந்த சின்ன விஷயம் கூட உனக்கு லேட்டா தான் புரியுது “என்று சிரித்தவன் உணவை சாப்பிட ஆரம்பிக்க..

மற்றவர்களும் பேசிக்கொண்டே சாப்பிட துவங்கினர்.

அகலிகா பேருக்கு உணவை கொறித்தவள் ரியாவும், முகேஷும் கை கழுவ சென்ற இடைவெளியில் தன் அருகில் அமர்ந்து இருந்த தீரனைப் பார்த்தாள்.

அவன் எதை சொல்கிறான் என்று அகலிகாவுக்கு புரியாமளா போய்விடும். “ச்சே! தீரன் நீங்க இவ்ளோ கேவலமானவரா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என்னை மிரட்டி உங்க கூட ஒண்ணா இருக்க வெச்சாலும் என்மேலையும், நம்ம உறவு மேலையும் நீங்க மதிப்பு வெச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன், ஆனா நீங்க ரொம்ப சீப்னு ப்ரூப் பண்ணிட்டீங்க” என்றாள் ஆத்திரம் தாங்காமல்.

“நான் சரியா தானே சொல்லிருக்கேன் அஹி! கல்யாணத்துக்கு முன்னையே உனக்கு எல்லா விஷயத்துலையும் நான் ட்ரைனிங் கொடுத்தேன்” என்று சிரித்தான்.

“ச்சி! ” என்றவள் எழுந்து கை கழுவ சென்றாள்.

அவள் சென்றதும் எழுந்தவன் வெளியே சென்று புகைக்க ஆரம்பித்தான்.

தீரனின் மனம் குமுறியது. இப்படி அகலிகாவை புண்படுத்த வேண்டுமா என்று இருந்தது அவனுக்கு. ஆனால் அவனுக்கு வேறு வழியே இல்லை. தன்னை மறக்க வெறுக்க செய்ய வேண்டும் என்றாள் அகலிகாவை எவ்வளவு கேவலப்படுத்தி காயப்படுத்தி பேசமுடியுமா அவ்வளையும் செய்ய வேண்டும் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டான்.

ரியாவும், முகேஷும் பில் பே பண்ண மாற்றி மாற்றி கார்டை பேரரிடம் கொடுக்க சண்டையிட்டுக்கொண்டிருக்க …

வெளியே கொஞ்சம் ரிலாக்ஸிற்காக வந்த அகலிகா தீரன் புகைப்பதை பார்த்துவிட்டு உள்ளே திரும்பி செல்ல போனாள். பின் அவனை பார்த்தாள் . விறு விறுவென்று அவனிடம் வந்தவள் அவன் கையில் இருந்து சிகரெட்டை பிடுங்கி தரையில் போட்டவள் .

“இப்போ எதுக்கு இந்த பழக்கம் எல்லாம் புதுசா உங்களுக்கு தீரன் ” என்றாள்.

“நான் என் பழக்கத்தை எனக்கு பிடிச்ச மாதிரி அடிக்கடி மதிக்கிட்டே தான் இருப்பேன், நீ என்ன ரொம்ப அக்கறை படுற.. ” என்றவன் மற்றொரு சிகெரெட்டை எடுத்து மீண்டும் பற்றவைக்கப் போக..

அதையும் பிடுங்கி வீசியவள் “என்னை மறக்க முடியாம தானே இந்த பழக்கத்தை எல்லாம் புதுசா ஆரம்பிச்சிருக்கீங்க. உங்க கூட நான் லண்டன்ல இருந்த அந்த நாட்கள்ல ஒரு முறை கூட நீங்க சிகெரெட் குடிச்சு நான் பார்த்ததில்லை தீரன். எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க. இது மட்டும் இல்ல,, உங்க பேச்சு செயல் எதுவுமே சரி இல்ல. நான் பார்த்த தீரன் இல்ல நீங்க” என்றாள் .

“என்னவோ என்கூட பலவருஷமா இருந்து குடும்பம் நடத்தினவ மாதிரி என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசுற , நீயும் நானும் ஒண்ணா இருந்தது ஒரு ஒன்றரை மாசம் இருக்குமா? அதுக்குள்ள நான் இப்படி இருந்தேன் , இப்போ மாறிட்டேன்னு சொல்ற “என்று கேலியாக புன்னகைத்தவன். “அது ஒரு FLING ரிலேஷன்ஷிப் தான் சரியா? என் தேவை முடிஞ்சுது உனக்கும் கல்யாணம் பக்கத்துல வந்தது. ரெண்டு பெரும் அவங்க அவங்க வழியை பார்த்து போயிட்டே இருக்க வேண்டியது தான். இப்படி தேவை இல்லாம வந்து மூக்கை நுழைக்காத” என்றான்.

“கரெக்ட் , அதையே தான் நானும் சொல்றேன் , தேவை இல்லாம வந்து ரியா, முகேஷ் முன்னாடி என்னை பத்தி எக்ஸ்போஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க., இனி உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லையின்னு ஆகிருச்சு இல்ல அப்பறோம் எதுக்கு இந்த மாதிரி சீப்பா பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க தீரன் , இதெல்லாம் எதுக்காக என்ன காரணம்” என்றாள்.

“நான் எதையும் எக்ஸ்போஸ் பண்ணனும் நினைக்கல அஹி! அது தானாவே நடந்துருது, நான் எப்படி இருந்தா உனக்கு என்ன வந்துச்சு , நான் சிகெரெட் பிடிச்சா என்ன? தண்ணி அடிச்சா என்ன? பொண்ணுங்க கூட பார்ட்டி பப் போனா உனக்கு என்ன வந்துச்சு. என்னை ஏன் நீ நினைக்குற? என் மேல உனக்கு எதுக்கு அக்கறை . நான் எப்படி போனா உனக்கு என்ன பெரிய இவளாட்டம் வந்து என் சிகெரய் பிடுங்கி வீசுற” என்றான் .

அவன் பேசியதை எல்லாம் கேட்டும் பதில் பேச தோன்றாமல் நின்றாள். அவன் கேட்பதிலும் நியாயம் தானே.. எனக்கு எதற்கு தீரன் மீது அக்கறை வர வேண்டும் , அவன் என்ன செய்தால் என்ன.. யாருடன் போனால் எனக்கு என்ன என்று கடந்து விட வேண்டியது தானே.. என்று அவளுக்குள் கேள்வி எழுந்தது.

“என்ன ஒன்னும் பேச மாட்டேங்கற அஹி, உனக்கும் முகேஷுக்கும் இன்னும் 1 வீக்ல கல்யாணம். போய் உன் வாழ்க்கையை பாரு, என்னை பத்தி நினைச்சு , என் மேல அக்கரைபபட்டு நடிக்குறது எல்லாம் தேவை இல்லாத ட்ராமா “என்றான்.

அதை கேட்டதும் ஆத்திரம் வந்தது அவளுக்கு .

“நான் ட்ராமா பன்றேனா?” என்றவள் “அதே மிஸ்டர் நானும் உங்ககிட்டே சொல்றேன். என் வாழ்க்கையை பத்தின கவலை உங்களுக்கும் வேண்டாம். நான் முகேஷை கல்யாணம் பண்ணுவேன் இல்ல அது என்னோட விருப்பம். நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு. நீங்களும் தேவை இல்லாம பழசை தூக்கிகிட்டு எல்லார் முணாநிதியும் வந்து என்னை அவமானப்படுத்தணும்னு நினைக்குறதை இத்தோட நிறுத்திருங்க , உங்களை நம்பி ஒரு பொண்ணு இருக்கா அவளுக்காகவாது கொஞ்சம் நல்ல மனுசனா இருக்க பாருங்க , இனிமேல் என் வழியில வராதீங்க ” என்று கையெடுத்து கும்பிட்டவள்.

“நீங்க என்னை பிளாக் மெயில் பண்ணின பொது கூட எனக்கு உங்க மேல வெறுப்பு வரல .. பட் இப்போ இந்த நிமிஷம் நான் உங்களை வெறுக்குறேன் தீரன். இனி நான் உங்க மூஞ்சிலையே முழிக்க கூடாதுனு நினைக்குறேன். நீங்களும் என் முன்னே வந்துராதீங்க. குட் பை!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று முகேஷின் காரில் போய் அமர்ந்து கொண்டாள்.

செல்லும் அவளையே பார்த்தவன் சிகெரெட்டை எடுத்து பற்றவைத்து ஸ்டைலாக குடித்தான். காருக்குள் இருந்து அவன் மீண்டும் புகைப்பதை பார்த்தவள் எவன் எக்கேடு  ஏக்கத்தால் எனக்கு என்ன என்ற ரீதியில் திரும்பி அமர்ந்து கொண்டாள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured