- Joined
- Oct 6, 2024
- Messages
- 326
"முதல்ல புரிஞ்சுக்க முயற்சி பண்றோம் அப்பறோம் மத்ததை பத்தி யோசிச்சிக்கலாமே .. ஏன் அந்த அளவுக்கு யோசிக்கணும். எனக்கு ஏற்கனவே ரோஜாவை ஒரு அளவுக்கு தெரியும் . என்னை பத்தியும் ரோஜாவுக்கு ஓர் அளவுக்கு தெரியும்னு நினைக்கிறேன். கண்டிப்பா எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்னு நான் நம்புறேன்" என்றான் சித்து .
அவன் இவ்வளவு தெளிவாக பேசியதை கேட்டு ரோஜா பேச்சற்று நின்றாள் . ஒரு வார்த்தை கூட நெகடிவ் ஆகவோ.. அல்லது தன் மீதோ இந்த திருமணத்தின் மீதோ ஒரு வெறுப்பான பார்வை பேச்சு என்று எதுவும் இல்லாமல் பேசியவனை அதிசயமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
"ரோஜா சித்து சொன்னது எல்லாம் சரின்னு நீங்க நினைக்குறிங்களா " என்றாள் ஒரு பெண்.
ரோஜா பதில் ஏதும் பேசாமல் அமைதியாக சித்துவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் . அதை கவனித்த சித்து ரோஜாவின் குட்டி விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்து இருப்பதையும், ஆவென திறந்திருந்த உதடுகளையும் அவனையும் அறியாமல் ரசித்தபடி நின்று இருந்தான்.
அந்த நேரம் அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கிய ரித்திகா "போதும் இங்க என்ன இவங்களுக்கு இன்டர்வியூ நடக்குதா ?என்ன... ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.. இந்த குரூப்ல இருக்கவங்க யாருக்குமே அறிவுங்கிறதே இல்ல.. இவன் என்ன சொன்னாலும் நம்பிடறீங்க.. " என்றவள் முதல்ல இந்த குரூப்பை விட்டு வெளிய வரணும் என்று மில்லியன் கணக்கில் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களை திட்டிவிட்டு வீடியோ காலை கட் செய்தவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள் .
ரித்திகா கோபமாக வெளியே சென்றவள் கதவை அறைந்து சாத்திவிட்டு சென்றிருக்க.. அந்த சத்தத்தில் தன்னிலைக்கு வந்த ரோஜா அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தாள் .
"என்ன பாக்குற.. " என்று அவள் அருகில் நெருங்கி வந்தான் சித்து .
"இல்ல.. ரி..ரித்திகா.. " என்று ரோஜா கேட்க..
"அவ போய் ரொம்ப நேரம் ஆச்சு " என்றவன் "சரி சொல்லு நான் சொன்னது எல்லாம் சரி தானே... " என்று அவன் ரசிகைகள் விட்ட கேள்வியை அவளிடம் தொடர்ந்தான்.
"அது.. அது எனக்கு தெரியாது " என்றாள் .
"என்ன தெரியாதுன்னு சொல்ற.. நான் பேசினது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தரை பத்தி ஒருத்தர் ஒரு அளவுக்கு தெரிஞ்சு வெச்சிருக்கோம். நீயும் நானும் ஸ்ருதி வற்புறுத்தினதுனால தான் இந்த கல்யாணத்தையும் பண்ணிகிட்டோம்னு நமக்கு தெரியும். ஏன் நம்ம ரெண்டு பேரும் இந்த கல்யாணத்தை பிடிக்காத விஷயமா யோசிக்காம பிடிச்ச விஷயமா பார்க்க முயற்சிக்க கூடாது " என்றான்.
சித்து இப்படி தன்னிடம் நேரடியாக கேட்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் பேசியதற்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியவள் .
"அது.. ஆமா... ஆனா... எனக்கும் .. உங்களுக்கும் சரியா... " என்று குளறி உளறி பேசினாள்.
"ஏன் நமக்கு சரியா வராதுன்னு நினைக்கிற நீ... சரியா வராதுன்னு நினைக்குறது சரிபண்ண ரெண்டு பேரும் ஏன் முயற்சி செய்ய கூடாது " என்றான் ரோஜாவிடம் நெருங்கியபடி.
"இ...இல்ல சின்னையா.. எனக்கும் உங்களுக்கும் செட் ஆகுமான்னு தெரியல. நீங்க வேற.. நான் வேற.. நம்ம ரெண்டு பேரோட உலகமும் வேற.." என்றவள் அவன் மிக அருகில் நிற்பதை கண்டு மூச்சுவிட முடியாமல் திணறியவள் .
"எனக்கும் உங்களுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. உங்க வசதிக்கும் அந்தஸ்த்துக்கும் நான் கிட்டயே வர முடியாது. நான் உங்களுக்கு பொருத்தமானவளா இருப்பேன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை " என்று சித்துவை திருமணம் செய்திருந்த இந்த இரண்டு நாட்களில் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்த விஷயத்தை சித்துவிடம் நேரடியாகவே மனம் விட்டு கூறிவிட்டாள்.
ரோஜா இந்த அளவுக்கு யோசித்து பேசியது சித்துவால் நம்ப முடியவில்லை. அவளை சிறு பெண்ணாக இவ்வளவு நாள் நினைத்திருந்தவனுக்கு ஏற்கனவே வீட்டில் உடைத்த பொருட்களை அவனே சுத்தம் செய்ய வேண்டும் என்றும் . அடுத்தவர் வந்து அவன் வேலையை செய்ய வேண்டுமா என்று அவள் கேட்டிருந்ததையே இன்னும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருந்தவனுக்கு.
இப்பொது ரோஜா பேசியது அவள் மனதின் முதிர்ச்சியை எடுத்து அவனுக்கு காட்டி இருக்க... அவன் கண்களுக்கு ரோஜா இன்று மிகவும் வித்யாசமாக தோன்றி இருந்தாள் .
அதே பார்வையோடு அவளை பார்த்தவன் .
"நீ ஏன் இந்த மாதிரி எல்லாம் யோசிக்குற சின்னபொண்ணு... இந்த வசதி வைத்து அந்தஸ்து அது இதுனு யோசிக்குற ஆள் நான் கிடையாது. என்னோட பொறுப்புகள்ல இருந்து நான் தட்டி கழிக்குற ஆளும் கிடையாது. உனக்கும் எனக்கும் எப்படியோ கல்யாணம் ஆகிருச்சு. அதுக்காக நீ கண்டிப்பா என் கூட சேர்ந்து வாழ்ந்தே ஆகணும்னு நான் உன்னை கட்டாயப்படுத்தல .. இப்போ புதுசா கல்யாணம் ஆன ரெண்டு பேரும் எப்படி அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்குறாங்களோ நாமளும் அதே போல இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமேன்னு தான் கேக்குறேன்" என்றவன்.
"வாழணும்னு நான் சொன்னது உடலோடு இணைந்து வாழுற வாழ்க்கையை இல்ல.. அப்படி ஒரு வாழ்க்கையை நான் ரித்திகாகிட்டே வாழ்ந்து ஏமாந்துட்டேன். காதல்னு நம்பி ஏமாந்துட்டேன். எனக்கு அப்டி பட்ட ஒரு போலி வாழ்க்கை வேணாம்.. இப்போ இந்த குரூப் சேட்ல உன்னோட பிரென்ட் ஒருத்தி உனக்கு இந்த கல்யாணத்துல துளியும் இஷ்டம் இல்லேன்னு சொன்னா .. அவங்க சொன்னது உண்மையா தான் இருக்கும்னு எனக்கு புரியுது. அதுக்கு நானும் ஒரு காரணம் ."
" உன்கிட்டே நான் கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டது. கோபப்பட்டது உன்னை உதாசீனப்படுத்தினதுன்னு எல்லாமே உனக்கு என்னை பத்தின பார்வையை தப்பா காட்டி இருக்கு. அதனால தான் இந்த கல்யாணம் பிடிக்கலையினு நீ சொல்லிருக்கலாம். இப்போ சொல்றேன் சின்னபொண்ணு.. இந்த ரெண்டு நாளில் நீ பார்த்த சித்து வேறமாதிரி உனக்கு ப்ரொஜெக்ஷன் ஆகியிருக்கலாம். ஆனா இனிமேல் நீ பாக்க போற இந்த சித்துவை உனக்கு பிடிக்கும்" என்றவன் ரோஜாவின் முகத்தில் வழிந்த முடிக்கற்றைகளை அவள் காதோரம் ஒதுக்கிவிட்டவன் .
"உன் குட்டி கண்ணு கியூட்டா இருக்கு... " என்றுவிட்டு திரும்பி பெட் ரூம் நோக்கி செல்ல..
இவ்வளவு நேரம் இவ்வ்ளவு பொறுமையாக தன்னிடம் பேசியது சித்துதானா .. அவனா இது... எப்போதும் படபடவென பொரிந்து தள்ளுபவன் இன்று இவ்வளவு பொறுமையாக பேசிவிட்டு செல்கிறானே ... என்று நம்பமுடியாமல் அவனை பார்த்தவள் .
"ஒரு நிமிஷம் சின்னையா... " என்று அவனை நிறுத்தினாள் .
"என்ன கியூட்டி... " என்று அவன் திரும்பி ரோஜாவை பார்க்க...
சித்து சொன்ன கியூட்டியும் , அவன் முகமும் அவளை ஏதோ செய்ய,...
"அது.. அது.. நி .. நீங்க எப்படி இங்க வந்திங்க.. நான் தான் உங்களை வெளிய தள்ளி கதவை சாத்திட்டேனே.. " என்றாள் சங்கடமாக.
"இதுக்கு தான் என்னை நிறுத்தினியா. நான் பேசினதை எல்லாம் கேட்டு ஏதோ சொல்ல வரேன்னு நான் நினைச்சுட்டேன் " என்றவன்.
"பெட் ரூம் பால்கனி வழியா வந்தேன் " என்றான்.
"என்ன!" என்று ஆச்சர்யத்தில் விழி விரித்தவள் வேகமாக அவனை கடந்து பெட் ரூமிற்குள் ஓடி வந்தவள் பால்கனியில் நின்று அந்த 86வது மாடியில் இருந்து கீழே குனிந்து பார்த்தாள் . அங்கே பால்கனியின் பக்கவாட்டில் ஒரு பெட்ஷீட் நுனியில் கனமாக ஏதோ கட்டி இருக்க.. அது அந்த பால்கனி கம்பிகளுக்கு இடையில் இறுக்கமாக மாட்டி இருந்தது. அந்த பெட்சீட் கீழ் நோக்கி தொங்கிக்கொண்டு காற்றில் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டு இருந்தது . அதை பார்த்து அதிரிச்சியில் ரோஜா நின்று இருக்க..
அவள் பின்னால் வந்தவன் ரோஜாவின் பின் நெருங்கி நின்று இருபக்கமும் கையை வைத்து நின்றவன் . "இது வழியா எப்படி வந்தேன்னு பாக்குறியா " என்றான்.
"ஆமா சின்னையா இவ்ளோ உயரத்துல இருக்க ரூம்க்கு எப்படி மேல ஏறி வந்திங்க... " என்று ஆர்வமாக பேசிக்கொண்டே திரும்பி அவனை பார்த்தாள்.
அவன் கைகளுக்குள் தான் நின்று இருப்பதை அப்போதுதான் உணர்ந்தவள் படபடக்கும் விழிகளோடு நெருக்கமாக நின்று இருந்தவனை பார்த்தாள்.
"கீழ இருந்து நான் வரல.. அதோ அங்க இருந்து தான் வரேன் " என்று அவன் அறைக்கு அருகே இருந்த விஷ்ணுவின் அறை பால்கனியை சுட்டி காட்டினான்.
விஷ்ணு அறையில் இருந்து அவன் அறைக்கு கிட்டத்தட்ட 4 அடி இருக்கும் அங்கிருந்து எப்படி இங்கே வந்தான் என்று ரோஜா அதிர்ச்சியாக அவனை பார்க்க...
அவள் பார்வையில் இருந்த அதிர்ச்சியை புரிந்து கொண்டவன் சிரித்துக்கொண்டே...
"என்னோட மூவி எதுவும் நீ பார்த்தது இல்லையா... நான் என்னோட பைட் ஸீன் எல்லாம் டூப் இல்லாம செய்வேன்னு உனக்கு தெரியாதா " என்றவன் .
"அந்த பால்கனியில் இருந்து இந்த பால்கனிக்கு விஷ்ணு ரூமில் இருந்த பெட் ஷீட்டை எடுத்து அதுல ஒரு வெயிட்டை கட்டி அங்க இருந்து இங்க தூக்கி போட்டேன். நான் தூக்கி போட்டதும் சரியா வந்து இந்த கம்பிக்கு இடையில் மாட்டிக்கிச்சு. அது ஸ்ட்ரோங்கா இருக்கானு ஒரு வாட்டி செக் பண்ணி பார்த்துட்டு இந்த பெட் ஷீட்டை சும்மா ஒரு சப்போர்ட்க்கு பிடிச்சிட்டு அந்த பால்கனியில் இருந்து இந்த ரூம் பால்கனிக்கு ஜம்ப் பண்ணி உள்ள வந்தேன் " என்று மிக சாதாரணமாக சொல்லிவிட்டான்.
அவன் சொன்னதை கேட்ட ரோஜா இந்த கட்டடத்தில் இருந்து தவறி சித்து கீழே விழுந்திருந்தால் அவனுக்கு என்ன ஆகி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த ரோஜா பயத்தில் "ஐயோ! சின்னையா! " என்று அவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்து அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
இதை சிறிதும் எதிர்பார்த்திராத சித்து ரோஜாவின் இந்த அணைப்பை நம்பமுடியாமல் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தான்.

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 12.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.