logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
326
சித்து அவளை நோக்கி வருவதை பார்த்து அதிர்ந்தவள் "சின்னையா ! நீங்க வேணாம் அந்த பொண்ணையே வர சொல்லுங்க..." என்றாள் அவசரமாக.

"ஏன் நான் வேணாம் " என்று அவள் அருகில் சென்றான்.

"அது .. அது.. நீங்க ஆம்பள .. நான் எப்படி உங்களை போய் என் ட்ரெஸ்ஸை சரி செய்ய சொல்றது" என்று பார்வையை தாழ்த்தி அவனை நேராக பார்க்க முடியாமல் சொன்னாள்.

"ஓய் கியூட்டி... அது என்ன ஆம்பள... அப்படி இப்படி சொல்ற.. இது எல்லாம் நான் ஒதுக்க மாட்டேன். அப்படியே இருந்தாலும் நான் உனக்கு யாரு? " என்று அவள் பிடித்திருந்த திரையை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

அதில் அதிர்ந்து பின்னால் வேகமாக நகர்ந்தவள் "சின்னையா !.." என்று பேசிக்கொண்டே நகர்ந்தவள் இடித்துக்கொண்டு நிற்க...

அவள் அணிந்து அந்த அந்த ஆடை ரோஜாவின் நிறத்திற்கு ஒத்துப்போய் இருக்க.. அதை பார்த்து அதிசயித்தான். இப்படியும் ஒரு பெண் அழகாக , இவ்வளவு நிறத்தில் இருப்பாளா என்று இருந்தது அவனுக்கு. இத்தனை நாள் இது எப்படி எனக்கு தெரியாமல் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டவன்

"ம்ம்.. என்ன... " என்று அவளை நெருங்கினான்.

"வே... வேணாமே.. நானே போட்டுகிறேன் நீங்க வெளிய இருங்க ப்ளீஸ்.. " என்று ரோஜா கெஞ்சினாள்.

"நேத்து என்னோட பேன்ஸ் கூட நான் பேசினதை நீ கேட்டுட்டு தானே இருந்த... அவங்ககிட்டே நான் என்ன சொன்னேன் " என்று இடித்துக்கொண்டு நின்றவளை நகர விடாமல் இருபக்கமும் கையை வைத்து தடுத்து நிறுத்தி இருந்தான்.

அவன் கைகளை மாறி மாறி பார்த்தவாறே... "என்ன சொன்னீங்க... " என்றாள் படபடக்கும் விழிகளில் அவனை ஏறிட்டபடி.

"ம்ம்ம்... நாம ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காம கல்யாணம் செய்துக்கிட்டாலும். இனிமேல் ரெண்டு பேருமே நம்ம கல்யாண வாழ்க்கையை புரிஞ்சுகிட்டு வாழ்க்கை நடத்த முயற்சி பண்றோம்னு சொன்னேனா? இல்லையா?" என்றான் அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு வந்து .

"அ... ஆமா... தான் . அதுக்கும் நீங்க என் ட்ரெஸ்ஸை சரி பண்றதுக்கு என்ன சம்மந்தம் " என்றாள் .

"பரவால்லையே இந்த பட்டிக்காட்டுக்கு இதெல்லாம் விபரமா கேட்க தெரிஞ்சிருக்கு " என்று நினைத்தவன்.

"ஒய் பட்டிக்காடு.. நம்ம ரெண்டு பேரும் இப்போ யாரு " என்றான்.

"பட்டிக்காடா! " என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் சித்துவின் கண்களை நேருக்கு நேராக கண்டு சட்டென்று தலை கவிழ்ந்து கொண்டாள்.

அவள் தாடையை பிடித்து மேலே உயர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் " ஆமா பட்டிக்காடு.. சொல்லு நம்ம யாரு?" என்றான்.

"யாரு?" என்று அவனிடமே கேள்வியை திருப்பி கேட்டாள்.

"ம்ம்... நீ பொண்ணு நான் பையன் " என்றவன் .

"ஓய் மக்கு பட்டிக்காடு.. உனக்கு எதுவுமே தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா.." என்று அவள் நெற்றியில் சுண்டிவிட்டவன்.

"நீயும் நானும் husband and wife . நீ டிரஸ் பண்ற அப்போ நான் தானே உனக்கு ஹெல்ப் பண்ணனும் " என்றான்.

அவனை தயங்கிக்கொண்டே பார்த்த ரோஜா.. "சின்னையா ! இருந்தாலும் நீங்க என்கிட்டே இப்படி திடிர்னு வரது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு " என்றாள்.

"என்னவோ மாதிரி இருக்கா!.. எப்படி இருக்கு? " என்று அவளை melum நெருங்கினான்.

அதற்கு மேல் பின்னால் செல்ல முடியாமல் அவனை பாவமாக ரோஜா பார்த்தாள் .

"இங்க பாரு நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் . முதல்ல என்னை பார்த்து பயப்படுறதை நிறுத்து . நான் ஒன்னும் அரக்கன் இல்ல.. என்னை அந்த மாதிரி தான் நீ இப்போ பாத்துட்டு இருக்க... " என்றவன் அவளை விட்டு விலகி வழி விட்டு நிற்க...

விட்டால் போதும் என்பதைப் போல அவனிடம் இருந்து விலகி வேகமாக நடந்தாள் ரோஜா.

அவளை போகவிட்டவன் திரும்பி பார்க்காமலேயே ரோஜாவின் கையை பிடித்து நிறுத்தியவன் அவள் முன்பு வந்து .

"இங்க பாரு.. நமக்குள்ள எந்த தயக்கமும் இருக்க கூடாது. நான் என் மனசை மாத்திட்டு நமக்கான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிவு பண்ணிட்டேன் . அதனால நீயும் உன் மனசை மாத்திக்க பாரு " என்று ரோஜாவின் தோளில் கைவைத்து அழுத்தி பிடித்தவன் .அவள் முகத்தருகில் நெருங்கி வந்தான்.

அவன் நெருங்கி வரவும் தலையை பின்னால் இழுத்துக்கொண்டே கண்களை மூடி நின்றாள் ரோஜா .

அவளின் இந்த செயலை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு "இப்போ எதுக்கு நீ கண்ணை மூடின.. " என்று அவள் நெற்றிப்பொட்டில் சுண்டி விட்டான்.

அதில் வலிக்கவும் "ஷ்! சின்னையா ! வலிக்குது... " என்று நெற்றியை தேய்த்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

"நீங்க பக்கத்துல வந்தாலே ஒரு மாதிரி படபடப்பா இருக்கு அதான் கண்ணை மூடிக்கிட்டேன்" என்று சொல்லி சமாளித்தாள்.

"சரி.. சரி.. நம்பிட்டேன் . நீ திரும்பி நில்லு " என்றான்.

"ம்ஹும்... எனக்கு வெட்கமா இருக்கு.. " என்று திரும்ப மறுத்தாள் ரோஜா.

"நீ இப்படியே ஆடம் பிடிச்சிட்டு இருந்தா அப்பறோம் நம்ம ரெண்டு பெரும் ராபர்ட் வீட்டுக்கு லஞ்சுக்கு போகமுடியாது . டின்னருக்கு தான் போகணும் " என்று சலித்துக்கொண்டவன்.

"நான் தான் உனக்கு டிரஸ் சரி பண்ணி விடுவேன் . யாரையும் கூப்பிட முடியாது. நீ எவ்ளோ நேரம் இப்படியே நிப்ப .. " என்று அவளை பார்த்தான்.

இனி இவனிடம் பேசி எதுவும் ஆகப்போவது இல்லை என்று புரிந்து கொண்டவள் "அப்போ கண்ணை மூடுங்க நான் திரும்பி நிக்குறேன் . அதுக்கு அப்பறோம் ஜிப்பை போட்டு விடுங்க.. " என்றாள் தயக்கத்தோடு.

"ஏன் கண்ணை மூடனும் அதெல்லாம் என்னால முடியாது " என்று சித்துவும் விடாமல் வீம்பு பிடிக்க...

ரோஜாவின் முகம் அவன் அட்டூழியத்தை கண்டு பொறுக்க முடியாமல் அழுவது போல மாறியது. அதை பார்த்தவன் "நம்ம கொஞ்சம் ஓவரா தான் போறோமோ... " என்று நினைத்தவன் .

"சரி கண்ணை மூடிக்கிறேன் . நீ திரும்பு " என்றான்.

"ம்ஹும்.. நான் உங்களை நம்ப மாட்டேன் . முதல்ல நீங்க கண்ணை மூடுங்க " என்றாள் ரோஜா சிணுங்கிக்கொண்டே சொன்னவள் அழுதுவிடுவேன் என்று அவனை பார்த்தாள்.

"சரி.. சரி.. இரு கண்ணை மூடுறேன் " என்று தன் கண்களை இருக்க மூடினான்.

அவன் கண்களை மூடியதும் அருகில் இருந்த டேபிள் க்லோத்தை எடுத்து அவன் கண்களை கட்டினான்.

"ஓய் பட்டிக்காடு என்ன பண்ற.. " என்று அவன் கண்களில் இருந்த துணியை அவிழ்க்க போக..

"சின்னையா கையை எடுங்க.. இப்படியே எனக்கு ஜிப்பை மாட்டி விட்றதா இருந்தா மாட்டி விடுங்க.. இல்லேன்னா நான் இப்படியே வெளியே போய் அந்த பொண்ணை போட்டு விட சொல்றேன் " என்றாள் .

"இதுக்கு மேல வம்பு பண்ணினா கிடைக்குற சான்சை மிஸ் பண்ணிடுவ சித்து " என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்.

"சரி அதான் கண்ணை கட்டிட்டே இல்ல திரும்பி நில்லு நான் உனக்கு ஜிப்பை போட்டுவிடறேன்" என்றான்.

அவன் கண்ணுக்கு முன்னாடி தன் கையை ஆடிப்பார்த்து அவனுக்கு எதுவும் தெரிகிறதா என்று சோதித்தவள் திரும்பி நின்று "ம்ம்ம்... நின்னுட்டேன் போட்டு விடுங்க.. " என்றாள் .

அவள் தன் முகத்திற்கு நேராக கையை ஆடுவது சித்துவின் கண்களில் கட்டி இருந்த கட்டை தாண்டி அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அது லேசான டேபிள் க்ளாத் இரண்டாக மடித்து கட்டி இருந்தாலும் . தெளிவாக தெரியவில்லை என்றாலும் அவனால் எதிரில் நடப்பதை ஒரு அளவுக்கு பார்க்க முடிந்தது.

ரோஜா திரும்பி நிற்கவும் வேண்டுமென்றே கண் தெரியாதவன் போல அவள் முன் கையை நீட்டினான். அது சரியாக அவள் திறந்து இருந்த ஆடைக்குள் தொட்டுவிட...

"சின்னையா என்ன செயிரிங்க .. " என்று கூச்சத்தில் நெளிந்தவள் அவனை திரும்பி பார்த்தாள்.

"நான் என்ன செய்றது . என் கண்ணை வேற கட்டி விட்டுட . எனக்கு எதுவுமே தெரியல " என்றான் .

"இருங்க.. " என்று அவன் கையை பிடித்து ஜிப் இருக்கும் இடத்திற்கு அவன் கையை கொண்டு சென்றவள் "ஜிப் இங்க இருக்கு.. இப்போ போடுங்க.. ."என்றாள்.

அவள் இடையில் கைவைத்து தழுவிக்கொண்டு ஜிப்பை நெருங்கியவன் திறந்திருந்த ஆடைக்குள் தெரிந்த ரோஜாவின் பளிங்கு முதுகை பார்த்து உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்தியபடியே பளிங்கு முதுகை அணுவணுவாக ரசித்துக்கொண்டே ஜிப்பை போட்டு விட்டவன். அவன் கைகள் மேலே வந்ததும் ரோஜாவின் தோள்களை பிடித்து தன் பக்கம் இழுத்தான்,

அவன் மேல் சாய்ந்து நின்றவள் காதருகே சென்று "உன்னோட ஸ்கின் கலர் என்னை என்னவோ செய்யுது கியூட்டி.. " என்று கிரகமாக சொன்னவன் கண்களில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு எதிரில் இருந்த கண்ணாடியில் அதிர்ச்சியில் இருந்த அவள் முகத்தை பார்த்தவன் .

"என்னோட பேன்ஸ் குரூப்ல இருக்க உன்னோட பிரென்ட்கிட்டே மறக்காம சொல்லு.. உனக்கு என்னை பிடிக்கலையின்னாலும் நான் இனிமேல் உன்னை விடப்போறது இல்லேன்னு போய் சொல்லு. இனி எதுவா இருந்தாலும் என் வாழ்க்கை உன்னோடு தான். உன் வாழ்க்கையும் என்கூட தான் " என்றவன் அவள் கன்னத்தை தடவி லேசாக கிள்ளி "இவ்ளோ நாளா இந்த அழகு ஏன் எனக்கு தெரியாம போய்டுச்சு " என்று கிள்ளிய கன்னத்தில் லேசாக முத்தம் வைத்துவிட்டு வெளியே சென்றான்.

இங்கு நடப்பது எல்லாம் உண்மை தானா.. என்பது போல கண்ணாடியையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ரோஜா.

வெளியே வந்த சித்து அவன் உஉள்ளே சென்றதுமே அங்கு வந்த சேல்ஸ் கேர்ள் அவர்களுக்காக காத்திருக்க.. அவர்களை பார்த்தவன் தன் தலையை அழுந்த கோதி ரோஜாவை பற்றிய எண்ணங்களை தனக்குள் கட்டுப்படுத்தியவாறே அந்த பெண்ணிடம் வந்தவன் .

"சீக்கிரம் அவங்களை ரெடி பண்ணிடுங்க... "என்று சொல்லிவிட்டு தனக்கான ஆடையை தேர்ந்தெடுக்க சென்றுவிட்டான்.

ஒரு மணிநேரம் களைத்து சித்து தனக்காக ஆடையை தேடி தனக்கு பிடித்ததை போட்டுகொண்டு வந்தவன் அவனுக்கு முன்பாகவே அங்கு வந்து நின்ற தேவதையை சாரி அவன் ரோஜாவை பார்த்தான்.

அன்று மலர்ந்த தாமரை மொட்டை போல பிரெஷாக நின்று இருந்த ரோஜாவை பார்த்தவன் . அவள் அழகில் ஆடித்தான் போனான். அவன் இது வரை பார்த்திராத அழகு அவளுடையது, அவனுக்கே அவனுக்காக பிறந்து வந்தவள் இவள் தான் என்று தோன்றியது அவனுக்கு.

அவளை ரசித்தவாறே நெருங்கி வந்தவன் "போலாமா... " என்றான்.

ம்ம்.. என்றாள் அவன் முன்னே நடக்க அங்கே வந்து ஏற்கனவே விஷ்ணு காத்திருக்க வெளியே வந்த இருவரும் காரில் ஏறி ராபர்ட்டை சந்திக்க சென்றார்கள்


WHATSAPP CHANNEL

TELEGRAM LINK


FACEBOOK LINK

PRATILIPI LINK

YOUTUBE LINK
 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 16
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

mehala

New member
Joined
Mar 18, 2025
Messages
19
Super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top