EPISODE 11
“தீரா நீ டிரைவ் பண்றியா? எனக்கு டையர்டா இருக்கு” என்று கார் சாவியை அவனிடம் நீட்டினான்.
“ஓகே டா ” என்று சாவியை வாங்கிக்கொண்டு காருக்கு செல்ல
மூவரும் கிளம்பி சென்றனர். செல்லும் வழியில் முகேஷ் தான் பேசிக்கொண்டு வந்தான்.
முகேஷ் இப்போ எங்க போகணும் உன் வீட்டுக்கா இல்ல என்று ரியர் மிரர் வழியே அகலிகாவை பார்த்து அவங்க வீட்டுக்கா?” என்றான்.
“எங்க ரெண்டு பேர் வீடும் பக்கம் பக்கம் தான் டா , நீ போ நான் சொல்றேன்” என்றவன் வழி சொல்ல.. முகேஷின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் அகலிகாவின் வீடு இருந்தது.
அவள் வீட்டின் முன் வந்து கார் நின்றதும் அதில் இருந்து அவள் இறங்கிக்கொள்ள… “அகலிகா ஒன்னு மின்னுட் நான் வாஷ்ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்” என்று அவசரமாக உள்ளே சென்றுவிட்டான்.
திறனும் , அகலிகாவும் தனித்து இருந்தனர். முதலில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்று இருந்தனர்.
அவன் சென்ற அடுத்த நொடி அகலிகாவை எரிக்கும் பார்வை பார்த்தவன் “இப்படி ஒரு ஏமாத்து காரியை நான் பார்த்ததில்லை” என்றான்.
அவன் சொன்ன வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து அவனை பார்த்தவள் பின் தன்னை சுதாரித்துக்கொண்டு “நீங்களும் தான் ஏற்கனவே ஒரு பெனோட நிச்சயம் ஆகியும் என்கூட வந்திங்க இல்ல அப்போ அது என்னவாம் ” என்றாள் .
“யூ ” என்று அவன் பேச வர.. முகேஷ் திரும்பி வருவதை பார்த்ததும் .
“இன்னிக்கு நைட் 11 மணிக்கு நான் உன்னை மீட் பண்ணனும். உன் வீட்டு கார்னேர்ல காரோட வெய்ட் பண்ணுவேன் நீ வந்திரு ” என்றான்.
அவனை கேள்வியாக பார்த்தவள் ” நான் எதுக்கு உங்களை மீட் பண்ணனும். அதுவும் நைட்” என்றாள்.
“இதுக்கு முன்ன என்னை நீ நைட்ல தானே சந்திச்ச , இப்போ என்ன ?” என்றான் கடுப்பாக.
“அது எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகுறதுக்கு முன்ன. இப்போ நான் முகேஷோட பியான்ஸே” என்றாள்.
“பியான்ஸே தானே பொண்டாட்டி இல்லையே” என்றவன் முகேஷ் அவர்கள் அருகில் வருவதை பார்த்ததும் “நீ வர..” என்று காரில் ஏறிக்கொள்ள.. முகேஷும் அகலிகாவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்
……
இரவு பதினொரு மணி. தீரன், தனது வாடகை காரில் இருந்து இறங்கி, அகலிகாவின் வீட்டின் அருகில் உள்ள இருண்ட தெருமுனையில் நிறுத்திவிட்டு காத்திருந்தான்.
‘Paru\_1’ என்ற பெயரில் பேசியவள் அவனைக் காத்திருக்க வைக்கவில்லை, ஆனால் இப்போது அகலிகா அவனை இரவு நேரத்தில், அதுவும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின் காத்திருக்க வைக்கிறாள்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது. தீரனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தது. அவன் கண்களில் கோபம் திரண்டது. ‘நான் யார்னு தெரியாமலையே என்னை யூஸ் பண்ணினா . இப்போதும் என்னைச் சட்டை செய்யாமல் இருக்கிறாள்.’ என்று நினைத்தவன் மணியை பார்க்க..
இரவு பதினொரு நாற்பத்தைந்து என்று காட்டியது. “இவ்ளோ நேரம் ஆகியும் அவ வரலைன்னா என்ன அர்த்தம் . தெளிவா அவ என்னை பார்க்க விரும்பலையின்னு தானே அர்த்தம்” என்று நினைக்கையில் மேலும் அவனுக்கு கோபம் எல்லையை கடந்தது.
கோபம் உச்சத்திற்குச் சென்ற தீரன், காரை லாக் செய்துவிட்டு . ‘நான் தேடியவளை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டேன்,’ என்று எண்ணியவன், யாரும் தன்னை அடையாளம் காணாதபடி இருட்டில் மறைந்து, அகலிகாவின் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டிக் குதித்தான்.
முதலில் அவள் அரை எங்கு இருக்கும் என்று யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தான்,மேல அங்கே இருந்த மரத்தின் மேல் ஏறி பால்கனி வழியே உள்ளே இறங்கியவன் அங்கிருந்த ஒரு அறை ஜன்னலை மெல்ல சத்தமின்றி திறந்தான்.
அந்த அறை காலியாக இருந்தது. ஜன்னலை சுற்றிவிட்டு கொஞ்சம் நடந்து இன்னோரு அறை இருந்தது. அகலிகாவின் அறை அதுவாக தான் இருக்கும் என்று நினைத்தவன் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தான் .
அங்கே, அகலிகா நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் இருந்த அமைதியைப் பார்த்ததும், தீரனுக்கு ஆத்திரம் அதிகமானது. “நான் வர சொல்லியும் வராம , இங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கியா நீ” என்று அந்த அறையின் பால்கனி வழியே உள்ளே சென்றவன் அங்கிருந்த கதவை திறக்க முயன்றான். அது உள் பக்கமாக தாளிட்டு இருந்தது, தனக்கு தெரிந்த வித்தையை வைத்து கதவை திறந்தவன் அதன் வழியாக மெதுவாகப் படுக்கையறைக்குள் நுழைந்தான் தீரன். அறையில் ஒரே ஒரு மெல்லிய இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
தீரன் மெதுவாக அவள் கட்டிலின் அருகில் வந்து, அவளது தோளைத் தொட்டு உலுக்கி , “ஏய்! எழுந்திரு.. ” என்று கோபத்துடன் அழைத்தான்.
திடீரென யாரோ அழைத்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் திடுக்கிட்டு எழுந்தாள் அகலிகா. எதிரில் நின்றிருந்த தீரனைப் பார்த்ததும், மிரண்டுபோய் தன் வாயைப் பொத்தினாள்.
“நான் உன்னை வரச் சொன்னேன். நான் அங்க இவ்ளோ நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீ இங்க ராணியாட்டமா தூங்கிக்கிட்டு இருக்கியா?” என்று சற்றுக் கரகரப்பான குரலில் கேட்டான் தீரன். அவனது கண்களில் முரட்டுத்தனமும், ஆத்திரமும் கலந்திருந்தன.
“நீ… நீங்க… இங்க என்ன பண்றீங்க? எப்படி உள்ள வந்தீங்க?” என்று அவள் பயத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்.
“அதெல்லாம் உனக்கெதுக்கு? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஏன் வரல? என்னை என்னன்னு நினைச்ச? உன் கையில இருக்கிற பொம்மையா? விளையாடிட்டுத் தூக்கிப் போடுறதுக்கு ?” என்று மிகவும் மூர்க்கத்தனமாகக் கேட்டான் தீரன்.
அகலிகா அவனைப் பார்த்தாள். அவனிடம் தான் எதிர்பார்த்திருந்த கனிவு கொஞ்சமும் இல்லை. அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாள்.
“நான் ஏன் உங்களைச் பார்க்க வரணும்? நான் இப்போ இன்னொருத்தருக்கு மனைவியாகப் போகிறேன். நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு. இந்த நிலையில் ஒரு ஆணைத் தனியாக, அதுவும் ராத்திரி நேரத்தில் சந்திக்கணும்னு நான் நினைக்கல. அதான் வரல,” என்று அழுத்தந்திருத்தமாகப் பேசினாள்.
அவள் பேசி முடிப்பதற்குள் தீரனின் கோபம் எல்லை மீறியது. “போதும்டி! இந்த நாடகமெல்லாம்! யார் சொன்னா நீ இன்னொருவனுக்கு மனைவியாகப் போறேன்னு? நீ நடிச்சு என்னை ஏமாத்தின. ஒரு நைட் கூட இருக்குறதுக்காக , நீ காதலிச்சவன் மேல பழிபோட்டு, என்னோடப் படுத்துட்டு, இப்போ நல்லவ மாதிரிப் பேசுகிறியா?” என்றவன். வேகமாக அவள் அருகே வந்தான்.
அவள் கூந்தலை இறுகப் பிடித்து உலுக்கினான். “நீ ஒரு ஏமாற்றுக்காரி! சுயநலவாதி! ஒரு பொய்யை வெச்சு, உன் தேவையை மட்டும் நிறைவேத்திக்கிட்ட பொய் நாடகக்காரி நீ!” என்று திட்டினான்.
அகலிகா வலி பொறுக்க முடியாமல் அலறினாள். அவள் கண்களில் நீர் திரண்டது. “விடுங்க! நான் உங்களை ஏமாத்தள! நான் காதலிச்சவன் துரோகம் செய்தது உண்மைதான்!” என்றாள்.
“அப்படியா? அப்பறோம் எப்படி நீயும் உன்னை முன்னாள் காதலிச்சவனும் ஒரே ஐடி கம்பெனியில வேலை செய்றீங்க. அவன் தானே , முகேஷ் மூலமா உனக்கு வேலையை வாங்கிக் கொடுத்திருக்கான். இதெல்லாமே பொய்தானே?” என்று கத்தினான்.
தீரன் தன் சர்வர் லாக்ஸில் இருந்து அகலிகா வேலை செய்யும் கம்பெனியைக் கண்டறிந்து, அது முகேஷின் கம்பெனி என்பதைத் தெரிந்து கொண்டதைச் சொல்லி அவளைத் தாக்கினான்.
“வேலை, கல்யாணம்னு எல்லாத்தையும் பொய் சொல்லி, ஒரு ராத்திரிக்காக என்னை வச்சிக்கிட்டு, இப்போ இங்க நிம்மதியா தூங்குறியா?” என்றான்.
அகலிகா இப்போது அவன் வாயில் இருந்த வந்த வார்த்தைகளின் ஆழம் தாங்காமல் வலியில் துடித்துப் போனாள். “நான் பொய் சொல்லல! நீங்க சொல்றதுல ஒரு வார்த்தைகூட உண்மை இல்லை. நான் யாரையும் ஏமாத்தல!” என்று அவள் தேம்பி அழுதாள்.
அவளது அழுகையைப் பார்த்தபோது, தீரனின் உள்ளத்தில் ஒரு கணம் வலித்தது. ஆனால், அவன் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவனது கோபம், அவளது கண்ணீரைக் கண்டு குறையவில்லை.
“இங்க பார்! நீ நாளைக்குக் காலையில எப்படியும் சென்னைக்கு வரப் போற. உன்னை அங்க வெச்சு நான் பார்த்துக்குறேன். இந்த ஏமாத்துற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத,” என்று மிரட்டினான்.
அகலிகா கோபத்துடன் பதிலடி கொடுத்தாள்: “நாளைக்கு நான் என்ன பண்ணணும்னு நீங்க சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை! என்னைத் தொல்லை பண்ணாம இங்க இருந்து கிளம்புங்க!” என்றாள் கோபமாக,
அவனிடம் பொறுமையை கையாள நினைத்த அகலிகா அவனது பேச்சில் தீரனின் மீதமிருந்த பொறுமையையும் முழுவதுமாக சிதைந்து போய் இருந்தது .
அது தீரனின் கோபத்தை மேலும் அதிகரித்திருக்க… அவன் முகம் சிவந்தது. ஒரு நொடி தாமதிக்காமல், அவளது முகத்தைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து, வலுக்கட்டாயமாக அவள் இதழில் முத்தமிட்டான்.
அகலிகா இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது முத்தம், அன்பின் முத்தமாக இல்லாமல், கோபத்தின் முரட்டுத்தனமான முத்தமாக இருந்தது. அவனது பிடியிலிருந்து விலக முடியாமல் அவள் திணறினாள்.
அகலிகா இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது திடீர் நெருக்கத்தில், அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவனது வலிமையான கரங்களின் பிடியில் இருந்து விலக அவள் திணறினாள். அவளது உதடுகள், அவனது மூர்க்கத்தனமான அழுத்தத்தில் நெளிந்தன. அவள் முகம் ஒரு பக்கம் திரும்ப முயன்றபோதும், தீரனின் பிடி வலிமையானதாக இருந்தது.
அவனது மூச்சு, அவளது முகத்தில் வெப்பமாகத் தெரிந்தது. அந்த முத்தம் கடந்த இரவின் நினைவுகளைத் தூண்டுவதாக இருந்தாலும், இப்போது அது வன்முறையாக மாறியதால், அகலிகா கண்ணீருடன் தனது எதிர்ப்பைக் கைகளால் வெளிப்படுத்தினாள்.
சில நொடிகள் கழித்து, தீரன் அவளை விட்டு விலகினான். அவனது உதடுகள் இன்னும் கோபத்தில் துடித்துக் கொண்டிருந்தன. அவளது கண்களில் அதிர்ச்சியும், பயமும், வலியும் நிறைந்திருந்தன.
அகலிகா தனது உதடுகளைத் தொட்டுப் பார்த்தாள். அவளது உடல் முழுவதும் நடுக்கம் எடுத்தது.
தீரன் அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். அவன் கண்களில் இருந்த கோபம் இன்னும் தணியவில்லை. எந்த வார்த்தையும் பேசாமல், அவள் மீதான தனது அதிகாரத்தை இந்த முத்தம் மூலம் நிறுவியதைப் போல, அவன் அறையின் சன்னலை நோக்கி நடந்தான்.
மீண்டும் ஒருமுறை திரும்பி, “நாளைக்குச் சென்னையில் பார்க்கலாம்,” என்று ஒரு மிரட்டலான குரலில் சொல்லிவிட்டு, வந்த வழியே சன்னல் வழியாக இரவின் இருளுக்குள் மறைந்தான்.
அகலிகா கட்டிலில் சரிந்து விழுந்து, மௌனமாக அழ ஆரம்பித்தாள். அவளது மனம், ‘நான் யார் பக்கம் நிற்கிறேன்? அவினாஷ் கொடுத்த வலியா? இல்லை தீரன் கொடுத்த அதிகார வலியா?’ என்று குழம்பியது
கமெண்டுகள் அதிகம் வந்தால் மட்டுமே அடுத்த எபிசொட் சீக்கிரம் வரும்

1 comment
Romba delayed episode nga. Konjam niraya eluthunga please