Home Uncategorizedஉணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 1

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 1

by Sinamika Writes
5 views

மூர்க்கன் 1

“என்ன மாணிக்கம் பணத்தை எப்போ கொடுக்கிறதா இருக்க..”என்றபடி தன் முன்னே கை கட்டி நின்று இருந்த மாணிக்கத்திடம் கேட்டான் ராவண்.

 தன் ஒற்றை வீட்டை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை தன் குடும்பத்திற்குத் தெறியாமல் வாங்கி அதை தொழில் செய்கிறேன் என்று தெரியாத தொழில் முதலீடு செய்து ஏமாந்து போய் நின்றவர். அதை சமாளிக்கிறேன் என்று மீண்டும் 50 லட்சத்தை ராவணிடமே வாங்கி அதையும் தொழில் போட்டு சேராத சவகாசத்தில் சேர்ந்து குடி, சூதாட்டம் என்று அனைத்தையும் அதிலேயே தொலைத்துவிட்டு இவன் கண்களில் சிக்காமல் சுற்றிக்கொண்டிருந்த மாணிக்கத்தை ஆள் வைத்து அவனை  கொத்தாக பிடித்து தன் முன் நிறுத்தி இருந்தான் இந்த ராவண்.

“சார் அது வந்து நானே உங்களை வந்து பாக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள உங்க ஆளுங்க வந்து… ” என்று தலையை சொரிந்தார் மாணிக்கம்.

“அப்போ என்னை பார்த்து வாங்குன மொத பணத்தையும் செட்டில் பண்ணத்தான் என்னை பார்க்க வராதா இருந்தியா மாணிக்கம் ” என்று ராவண் அமர்ந்து இருந்த செரிற்கு அருகில் கம்பீரமாக அமர்ந்து இருந்த ஹஸ்கி வகை நாயை வருடிக்கொடுத்துக்கொண்டே கேட்டான்.

“ஐயோ ! அவ்ளோ பணம் என்கிட்டே இருந்திருந்தா நான் எப்பவோ என் காசை உங்ககிட்டே கொடுத்து கடனை அடைச்சிருப்பேனே…” என்றவர். “எனக்கு கொஞ்சம் பணம் தேவைப் பாடுது ” என்று தலையை சொரிந்து கொண்டே அவனைப் பார்த்தார்,

“அடிங்க.. மறுபடி பணம் வேணுமா உனக்கு வாங்கின பணத்துக்கே இப்போ வரை ஒரு பைசா கூட வட்டி கொடுக்காம டிமிக்கி கொடுத்துட்டு இருக்க நீ , இதுல இன்னும் வேற உனக்கு பணம் கேக்குதோ ” என்று மாணிக்கத்தின் கலரைப் பிடித்து இருந்தான் ராவணின் தம்பி ராஜ்.

அண்ணனுக்கு துணையாக இதே தொழில் அவனோடு சேர்ந்து ரியல் எஸ்டேட், பைனான்ஸ் செய்வது என்று அவனுக்கு துணையாக இருக்கிறான்.

“ராஜ், அவனை விடு” என்று எழுந்த ராவண் “மைலோவ ஹாஸ்பிடல் செக்கப்புக்கு இன்னிக்கு கூப்டு போகணும் இல்ல” என்றவாறு அருகில் இருந்தவனிடம் மைலோவை கொடுத்துவிட்டு நேராக மாணிக்கத்திடம் வந்தவன் “உன் வீட்டுக்கு நீ கடன் வாங்கின விஷயம் தெரியுமா?” என்றான்.

அவன் பார்வையில் இருந்த அழுத்தத்தை பார்த்த மாணிக்கம் பொய் சொல்ல வாய் எடுத்தவன் அதில் பயந்து கொண்டே. இல்லை என்று தலையை ஆட்டி வைத்திருந்தார்.

“அப்போ இன்னிக்கு சொல்லிடலாம் வா.. ” என்று அவர் தோள்  மீது கையை போட்டபடி மாணிக்கத்தின் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

 ராவண் அருகில் கையை பிசைந்து   கொண்டு காரில் அமர்ந்து இருந்தான் மாணிக்கம்.

 ஐயோ இப்ப வீட்டுக்கு மட்டும் போனா என்ன ஆகும் தெரியலையே விசாலாட்சி என்ன வெளியே போடுவா கடவுளே எப்படியாவது இவங்க ரெண்டு என்ன காப்பாற்று என் வீட்டில் இருந்த விஷயம் தெரியவே கூடாது என்று மறந்து போய் தாம்பரம் இடம் பிராசித்து கொண்டு இருந்தான்.

 அவர்கள் வீடு இருக்கும் தெருவும் வந்திருக்கு கார் மாணிக்கத்தின் வீட்டை நோக்கி திரும்பியது 

 தான் சொல்லாமலேயே வீட்டில் விலாசம் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று மாணிக்கம் ஆச்சரியமாக பார்க்க

 அதை கவனித்த ராவண் எப்படிடா இவங்களுக்கு உங்களோட வீட்டு அட்ரஸ் தெரியுமானு யோசிக்கிறியா என்றார் ஆமாம் என்று மாணிக்கம் அவனை பார்த்து தலையை ஆட்ட இத்தனை லட்சம் உனக்கு கடன் கொடுத்த நீ உன்ன பத்தி உன் குடும்பத்தை பத்தி விசாரிக்காமல் இருப்பேன்னு நீ நெனச்சியா என்றான் 

 அது சரி நான் தான் இதை பத்தி யோசிக்காம விட்டுட்டேன் லட்ச லட்சமா கேட்கும் போது எல்லாம் பணத்தை தூக்கி கொடுக்கும் போது இதெல்லாம் யோசிச்சி இருக்கணும் இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம் என்று பெருமூச்சு விட்டபடி அடுத்து என்ன ஆகப்போகிறதோ  என்ற பீதியில்  தன் வீட்டை பார்த்து கொண்டு இருக்க..

அப்போது ராஜின் போன் அலறியது. 

 போனை எடுத்தல் அட்டென்ட் செய்தவன் ஹலோ சொல்லுங்க பெரியம்மா என்றான்.

 மறுமுனையில் ஏதோ தீவிரமாக சொல்ல போனை வைத்தவன் திரும்பி இராவணை பார்த்தான்.

 அவன் பார்வையிலேயே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன் என்ன ராஜ் என்றான் ராஜ் பாட்டி ரொம்ப சீரியஸா ஹாஸ்பிடல் மிட் ஆயிருக்காங்க உன்ன உடனே பாக்கணும்னு சொல்றாங்க  சற்று பதற்றத்தோடு.

 அவன் சொன்னதும் யோசனையாக புருவம் சுருக்கிய ராவண் திரும்பி தன் அருகில் இருந்து மாணிக்கத்தை பார்த்தான்.

 அவருக்கோ ராஜ் சொன்ன செய்தியை கேட்டு உங்களுக்குள் சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பாவி போல முகத்தை  வைத்துக் கொண்டு ராவணைப் பார்க்க..

 மாணிக்கத்தை அழுத்தமாக பார்த்துக்கொண்டே ஸ்டாப் தி கார் என்றான் சற்று கர்ஜிக்கும் குரலில்.

 கார் சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்டு இருக்க.. ராவண் மாணிக்கத்தை பார்த்து “தப்பிச்சுட்டேன்னு சந்தோஷப்படாதே திரும்ப வருவேன் உன் வீட்டு ஆளுங்ககிட்ட  முன்னமே சொல்லி வை திடீர்னு வந்தா அவங்களும் ஷாக் ஆய்டுவாங்கல்ல என்றான் அவர் தோளைத் தட்டி.

அஹா அ.. சரிங்க தம்பி என்று அவசரமாக காரை விட்டு கீழிறங்கி நடக்கத் துவங்கியிருந்தார் 

அவர் செயலைக் கண்டு சிரித்தபடி போலாம் ராஜ் என்றால் ராவண் 

கார் மாணிக்கத்தின் வீட்டு சாலையிலிருந்து கிளம்பி இருக்க போகும் வழியில் அவர்கள் காருக்கு எதிரே வந்த ஒரு இளம் பெண்ணை ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராவண் 

இது அந்த மாணிக்கத்தோட பொண்ணு தானே என்றான்

ராஜ் சாலையில் பார்த்துவிட்டு  ஆமா இது மாணிக்கத்தோடு பொண்ணுதான் என்றான்

சரி அவள பத்தி விசாரிச்சு வை முழுசா எனக்கு தெரியனும் என்றான் அதிகார தோரணையில் 

அங்கிருந்து ராவண் கார் நேராக அவன் பாட்டியைக் காண அவரை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு சென்றது.

விஐபிக்கள் அட்மிட் செய்திருந்த வார்டுக்கு சென்றான் ராவண்.

 வேகமாகவும் நிதானமாகவும் கம்பீரத்தோடும் அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் விஐபி வார்டில் நடந்து வந்தவனை அங்கிருந்து நர்சுகளும், மற்றவர்களும் அவர்களையும் அறியாமல் அவனை மெய் மறந்து பார்த்தனர் அப்படி இருந்தது அவனுடைய கம்பீரம்.

 ராவண் முன்னே நடக்க அவன் வலது புறம் ராஜ் அவன் பின்னே அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தான் அவர்கள் இருவருக்கும் பின்னே  இவர்களிடம் வேலை பார்ப்பவர்கள் செல்ல பார்ப்பதற்கே ஒரு மாஃபியா கூட்டத் தலைவனும் அவனுடைய அடியாட்களும் செல்வது போல அந்த காட்சி இருந்தது.

வாசலில் நின்றிருந்த பரிமளா இங்கேயும் இவங்களை கூட்டிட்டு வரணுமாடா. நீங்க ரெண்டு பேரும் மட்டும் வந்தா போதாது ஒரு கூட்டத்தையே கூட்டி வந்து இருக்கீங்க என்றார் சற்று அதட்டலாக.

“பெரியம்மா ரிலாக்ஸ் அவனுக்கு நாங்க எங்க போனாலும் எங்க வால் மாதிரி பின்னாடி வந்துட்டே தான் இருப்பாங்க” என்ற ராஜ் “பாட்டி எப்படி இருக்காங்க” என்றான்.

அவன் அருகில் நின்றிருந்த தன் மகனை ஓரப்பார்வை பார்த்துவிட்டு “என்னன்னு தெரியல காலைல நல்லா தான்டா இருந்தாங்க. ஒரு 11 மணி இருக்கும் அவங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு  ரூமுக்கு போய் பார்க்கிறேன். நெஞ்ச பிடிச்சுட்டு சேரில் உட்கார்ந்து இருக்காங்க. ஹாஸ்பிடல் போலாம்னு கூப்பிட்டா அப்பவும் இவன தான் முதல்ல பாக்கணும்னு சொல்றாங்க. கெஞ்சி கூத்தாடி அவங்கள கொண்டுவந்து இங்க அட்மிட் பண்ணி இருக்கோம்  அவன்கிட்ட சொல்லி வை பாட்டிகிட்ட பார்த்து பேச சொல்லி” என்றார்.

 அவர் சொல்வதை கேட்டப்படியே அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவன் பின்னால் ராஜ்ஜும் சென்றான்.

ம்ஹும்… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு யார்கிட்டயும் பேசாமயே இருக்க போறான்னு தெரியல எத்தனை நாளைக்கு தான் இந்த கோபமோ என்று சலித்துக் கொண்டவர் 

 அங்கிருந்த சேரில் போய் அமர்ந்து கொண்டார்.

 இங்கே உள்ளே வந்தவன் வாயிலும் மூக்கிலும் டியூப்புகள் மாற்றப்பட்டு பார்க்கவே பாவமாக படுத்திருந்த தன் பாட்டி வேதாவை கண்டு அவன் கண்கள் லேசாக கலங்கியது.

அவரிடம் வந்தவன் அங்கே இருந்த சேரில் அமர்ந்து அவர் கையை பற்றிய படி இருந்தான்.

அவர் காலடியில் ராஜ்ஜும் அமர்ந்தவன். பாட்டி பாட்டிமா கண்ண திறந்து பாரு உன் பேர் என்ன ரெண்டு பேரும் உனக்கு ரொம்ப பிடிச்ச பேரன் வந்திருக்கான் என்று ராஜ் கூற அவனை திரும்பி ரவாண் முறைத்தான் 

 ஏன் முறைக்கிற உண்மையத்தான சொன்னேன் பாட்டிக்கு உன்ன தானே ரொம்ப பிடிக்கும் என்றான் அவன் சிரித்துக் கொண்டே 

 இப்ப அது ரொம்ப முக்கியமா என்றவன் திரும்பி வேதா! வேதா… எழுந்துரு என்றான்.

அவன் பரிசமும் குரலும் உணர்ந்தவர் மெல்ல கண் திறந்தார்.

 எப்படி இருக்கு வேதா என்றான் அவரிடம் குனிந்து 

அவரோ அவனிடமிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் பார்வையை திருப்பி கொண்டவர் ராஜ்ஜைப் பார்த்து தன்னிடம் வருமாறு தலையை அசைத்தார் 

 என்னடா அதிசயமா இருக்கு பாட்டி உன்கிட்ட பேசாம என்ன கூப்பிடுறாங்க என்றபடி எழுந்து அவர் அருகில் வந்தவன் சொல்லு பாட்டி என்றான் குனிந்து.

அவனை நான் சாகுறதுக்குள்ள கல்யாணம் செய்துக்க சொல்லு என்றார்.

ஏன் அதை நீயே சொல்ல வேண்டியது தானே.. என்றான் ராஜ் நக்கலாக.

அவன் கையை இருக்கிப் பிடித்து அந்த நிலையிலும் அவனை முறைக்க..

சரி பாட்டி நீ சொல்லு ஐரா கேட்டுட்டு தான் இருக்கான்.

அந்த கடவுள் எனக்கு இன்னும் எத்தனை நாள் கொடுத்திருக்கான்னு தெரியல.. நான் இருக்க இந்த நாளுல என் பேரன் கல்யாணத்தை பார்க்கணும் என்றார் மூச்சு வாங்க..

அப்போ நானும் உன் பேரன் தானே.. என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க சொல்லல.. என்றான் ராஜ் 

அவனை மீண்டும் முறைத்தவர் பெரியவன் இருக்கும்போது உனக்கு என்னை டா அவசரம் என்றவர்.

நான் அவன் கல்யாணத்தை பாக்குற வர அவன்கிட்டே பேசுறதா இல்ல.. என்றார்.

ராஜ் திரும்பி ராவணைப் பார்க்க.. 

அவனோ ஆழ்ந்து மூச்சேடுத்து கண்களை மூடித் திறந்தவன். நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து பேசுறேன்னு சொல்லு என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

அவன் சென்றதை உறுதி செய்து கொண்ட ராஜ். பாட்டி.. எப்படியோ உன் ட்ராமா சக்ஸஸ் ஆகிருச்சு என்று அவர் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு வெளியே ஓடினான்.

நான் நடிக்கிறேனா! என்று அவர் நினைத்தவர் லேசான தலை சுற்றலை காரணம் காட்டி உடல்நிலை மோசமாக இருப்பது போல நடித்து திருமணமே வேண்டாம் என்றவனை ஒரு வழியாக இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த நிம்மதி அவருக்கு.

ராவண் பின்னே வந்த ராஜ் “கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட அப்போ பெரியம்மா கிட்ட சொல்லி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாமா?” என்றான்.

தேவை இல்ல.. என்றவன்.

அந்த மாணிக்கத்தோட பொண்ணையும், மாணிக்கத்தையும் நான் பாக்கணும் உடனே ஏற்பாடு பண்ணு என்று அந்த ஹாஸ்பிடலை விட்டு வெளியேறி இருக்க..

அவன் பின்னே நடந்தவன் நின்றுவிட்டான்.

ராவண் நோக்கம் புரிந்தவனாக தன் மொபைலை எடுத்து மாணிக்கத்திற்கு அழைத்த படி ராவணுடன் காரில் ஏறி அவன் மாளிகைக்கு புறப்படிருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured