Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 24

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 24

by Layas Tamil Novel
184 views

அயோக்கியன் 24

“ரதி! கதவை திற டி… ” என்று அவள் அறைக்கதவை தட்டினான் ராக்கி.

அவன் குரல் கேட்டதும் கதவை வந்து திறந்தவளுக்கு ராக்கியிடம் இருந்து வீசிய மதுவாடை முகம் சுளிக்க வைத்தது.

“டேய்! குடிச்சிருக்கியா?” என்று அவனுக்கு கதவை திறந்துவிட்டு விலகி நின்றாள்.

“ம்ம்ம்… ஆமாண்டி.. குடிச்சிருக்கேன் ” என்று தள்ளாடிக்கொண்டே உள்ளே வந்தவன் விலகி நின்றவள் இடையை பற்றி தன் பக்கம் இழுத்தான்.

வீட்டில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்று யோசித்தவள் அவசரமாக அறைக்கதவை சாற்றிவிட்டு அவனை விட்டு விலகி நின்றவள்.

“வந்ததே லேட்டு.. அதுவும் குடிச்சிட்டு என் அம்மா வீட்டுக்கு வந்திருக்க.. யாராவது உன்னை இப்படி குடிகாரனா பார்த்தா என்ன டா நினைப்பாங்க அதை பத்தி யோசிச்சியா நீ.. ” என்று புலம்பினாள் ரதி.

“அதனால தான் டி பீடா எல்லாரும் தூங்கின அப்பறோம் உன்னைப் பார்க்க லேட்டா வந்தேன்” என்று மீண்டும் அவள் இடையை பற்றி தன்னோடு இழுத்தவன் அவளை அணைத்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தான்.

“டேய்! விடு டா.. உன்கிட்டே ட்ரிங்க்ஸ் ஸ்மெல் ஹெவியா இருக்கு. எனக்கு ஒரு மாதிரி குமட்டிட்டு வருது ” என்று ரதி முகம் சுளித்தாள்.

“அயோ! சாரி டி… இனிமேல் குடிக்க மாட்டேன் சரியா” என்று அவள் கழுத்து வளைவில் தன் இதழ்களால் ஈரம் செய்தான்.

“இதை எத்தனை முறை நீ சொல்லிருப்ப” என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள்.

“நான் உன்கிட்டே பேசணும்னு நினைச்சிருந்தேன், எப்படியும் ஓவியா நான் இங்க வந்ததை உன்கிட்டே சொல்லி இருப்பா நீயும் வருவ , பேசுலாம்னு நினைச்சேன். ஆனா நீ இப்போ இருக்க நிலைமையில் நான் நினைச்சதை என்னால பேச முடியாது” என்றாள்.

“என்ன டி பேசணும் சொல்லு. நான் ஸ்டெடியா தான் இருக்கேன்” என்று அபப்டியே அவள் மடியில் சரிந்தான்.

அவனை முறைத்துவிட்டு எழுந்தவள் “நீ முதல்ல தூங்கு எதுனாலும் காலையில பேசிக்கலாம்” என்றாள்.

“சரி அப்போ காலையில பேசிக்கலாம். இப்போ நீ வா ” என்று ரதியின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

“எனக்கு தூக்கம் வரல நீ தூங்கு ” என்று அவனிடம் இருந்து கையை உறுவிக்கொண்டாள்.

“எனக்கு தூக்கம் வருது டி நீ இல்லாம… உன்ன கட்டிபிடிக்காம எனக்கு எப்படி தூக்கம் வரும்” என்றான்.

“இன்னிக்கு ஒரு நாள் தூங்குவ அப்பறோம் நாளைக்கு என்ன பண்ண போறே.. ” என்றாள்.

“நாளைக்கும் உன்கிட்டே தான் தூங்க போறேன் இது என்ன டி கேள்வி.. ” என்றவன் “பேசிக்கிட்டே இருக்காதா வா வந்து தூங்கு ” என்று எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்தான்.

“எனக்கு தான் தூக்கம் வரலையின்னு சொல்றேன் இல்ல.. விடு டா ” என்று அவனை விட்டு எழப் போனாள் ரதி.

“நீ சும்மா படுத்துக்க நான் தூங்குறேன்” என்று வம்படியாக அவளை கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான் ராக்கி.

அவனிடம் கோபம் இருந்தது ரதிக்கு ஆனால் அவன் அணைப்பில் சிறிது நேரத்தில் அவள் உறங்கியும் இருந்தாள். அவளிடம் இருந்து சீரான மூச்சு காற்று வரவும். அதுவரை தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்த ராக்கி.

“நீ என்கிட்டே என்ன பேசவேன்னு எனக்கு தெரியும் பீடா.. நீ என்ன கேட்டாலும், என்ன செய்தாலும், ஏன் என்ன நினைச்சாலும் நான் அதை செய்திருவேன். ஆனா இப்போ நீ என்கிட்டே கேக்க நினைக்குறதை நான் செத்தாலும் செய்ய மாட்டேன்” என்று நினைத்தவன் அவளை மெல்ல தன் கை வளைவிற்குள் இருந்து பிரித்து மெத்தையில் படுக்க வைத்தவன்

“என்கூட இருக்க முடியாதுனு தான் நீ இங்க வந்திருக்க.. ஆனா நாளைக்கு நீயாவே என்கூட இங்க வருவ.. ” என்று நினைத்துக்கொண்டவன் அதுவரை மது அருந்தியவன் போல நடித்தவன் தன் சட்டையைக் கழட்டி தூரம் எறிந்துவிட்டு அவளை மீண்டும் அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.

மறுநாள் காலை ரதி கண்விழித்தபோது ராக்கி அங்கு இல்லை கிளம்பி இருப்பான் போல என்று நினைத்தவள் “இன்னிக்கு அவன்கிட்டே சொல்லிடனும். நமக்குள்ள செட் ஆகாது, இப்படி கொலைகாரனுக்கு என் புள்ளையை பெத்து கொடுக்க முடியாதுன்னு தெளிவா அவன்கிட்டே சொல்லிடனும். இனி நான் உன்கூட வாழப்போறது இல்ல என் அம்மா வீட்லையே இருக்கபோறேன்னு தெளிவா சொல்லிடணும் அவன்கிட்டே  ” என்று முடிவெடுத்தவள் எழுந்து பிரெஷ் ஆகிவிட்ட அறையை விட்டு வெளியே வர..

அங்கே ஹாலில் ராக்கி அமர்ந்து இருந்தான். “இவன் இங்க தான் இருக்கானா?” என்று நினைத்துக்கொண்டே திரும்ப..

மாளவிகா சோபாவில் அமர்ந்து இருந்தாள் . அவள் அழுதுகொண்டிருக்க.. அவளுக்கு ஓவியாவும், சோபனாவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்.

அவர்களைப் புரியாமல் பார்த்தவள் “ஏய் மாலு ! எப்போ டி வந்த ? ஏன் டி அழற..”என்று அவள் அருகில் வந்து நின்றாள்.

“அக்கா! ” என்று அவளை பார்த்ததும் அணைத்துக்கொண்டு அழுதாள் மாளவிகா.

தன் வயிற்றைக் கட்டிக்கொண்டு அழுத்தவளை புரியாமல் பார்த்த ரதி அவள் தலையை வருடிக் கொண்டே சோபனாவை பார்த்து “என்ன ஆச்சும்மா?” என்றாள் ரதி,

“என்னனு தெரியல டி.. இனிமேல் ஜீவன்கூட சேர்ந்து என்னால வாழ முடியாது . இனிமேல் நான் இங்க தான் இருக்கபோறேன்னு சொல்லிட்டு வந்ததுல இருந்து விடாம அழறா டி.. என்னனு கேட்டா காரணமே சொல்ல மாட்டேங்குறா” என்றார் வருத்தமாக .

“ஜெயந்தி என்ன தான் ஆச்சு ? ஏன் என் பொண்ணு இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறா. மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் என்னம்மா பிரச்சனை ” என்று போனில் ஜீவனின் அம்மாவிடன் பேசிக்கொண்டிருந்தார் மூர்த்தி.

“அண்ணா! நாம தான் தப்பு பண்ணிட்டோம். மாளவிகாவுக்கு ஆரம்பத்துல இருந்தே என் புள்ளையைப் பிடிக்கல. இது தெரியாம அவங்களுக்கு கல்யாணம் செய்துவெச்சு தப்பு பண்ணிட்டோம் நாம.. அவ இங்க வந்து ஒரு நாள் கூட என் பையன் கூட சந்தோஷமா வாழவே இல்ல.. ” என்றான் வருத்தத்தோடு.

“என்னமா சொல்ற! அவகிட்டே கேட்டு தானே நாம இந்த கல்யாண ஏற்பாட்டையே செய்தோம் ” என்றார் அவர் .

“ஆமா அண்ணா , ரெண்டு பேரையும் கேட்டுத் தான் கல்யாணம் செய்து வெச்சோம் . ஆனா அவங்களுக்குள்ள என்ன பிரச்னையினே தெரியல. இவ அவன்கிட்டே முகம் கொடுத்ததும் பேச மாட்டேங்குறா. என் புல்லையும் எவ்ளோ நாள் தான் பொறுத்து பொறுத்து போவான்” என்று தேம்பி அழுதார்.

மூர்த்திக்கோ ஒன்றும் புரியவில்லை அவர் அழுதுகொண்டிருந்த தன் மகளை பார்த்தார். யாருக்கென்று பேசுவது என அவருக்கும் தெரியவில்லை.

ராகவ்வோ “அப்பா போனைக் கொடுங்க நான் அத்தைகிட்டே பேசுறேன்” என்று அவரிடம் இருந்து மொபைலை வாங்கியவன் “அத்தை நான் ராகவ் பேசுறேன்” என்றான்.

“ராகவா! நான் என்ன டா செய்யட்டும் . அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்னு தான் நான் நினைச்சு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன் . என் புள்ள முன்ன சேட்டை பண்ணினான் தான் ஆனா அவன் மொத்தமா மாறிட்டான். இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல டா… ” என்று அழுதார்,

அவருக்கு சமாதானம் செய்யமுடியாமல் ராகவ் அமைதியாக இருக்க.. அவனிடம் இருந்து போனை வாங்கி ராக்கி “அம்மா! நான் ராக்கி பேசுறேன் . ஜீவன் இப்போ எங்க?”என்றார்.

“அவன் மாளவிகா சொல்லாம கொள்ளாம கிளம்பினதுல கோபமா இருக்கான் தம்பி . நேத்துல இருந்து ரூமைவிட்டே வெளிய வரல… கோபமா இருக்கான் அவ மேல.. “என்றார்.

“சரிம்மா எல்லாம் சரியாகும் நீங்க கவலைப் படாதீங்க. நான் பாத்துக்கிறேன்” என்று போனை வைத்தவன் மாளவிகாவை பார்க்க .

அவளோ “மாமா என்னால அந்த ஜீவன்கூட வாழ முடியாது” என்று மீண்டும் அழுதாள்

அவளிடம் இப்பொது விபரம் கேட்டாள் சரியாக இருக்காது என்று நினைத்தவன் “ரதி இங்க வா.. ” என்று அழைத்தான்.

அவளும் அவனிடம் செல்ல,,

“நான் ஜீவன்கிட்டே என்ன விஷயம்னு கேக்குறேன் . நீ மாளவிகாவை சமாதானம் செய். அவகிட்டே என்ன தான் ஆச்சுன்னு கேளு. அவ வேணாம்னு வந்துட்டா அப்படியே விட முடியுமா? உன் அம்மா அப்பாவை பாரு . பொண்ணு புருஷன்கூட வாழமாட்டேன்னு கிளம்பி வந்ததும் எவ்ளோ கவலைல இருக்காங்கன்னு ” என்றவன் “நீ பேசிட்டு எனக்கு கால் பண்ணு நான் ஈவினிங் வரேன்” என்று எங்கிருந்து கிளம்பி இருந்தான்,

அவன் கிளம்பியதும் திரும்பி தன் பெற்றோரைப் பார்த்தாள் ரதி.

அவர்கள் இருவரும் உடைந்து போய் அமர்ந்து இருந்தனர். தானும் மாளவிகாவை போல இங்கே வந்தது தெரிந்தாள். ஒரே நேரத்தில் இரு மகள்களின் வாழ்க்கையும் வீணாகிவிட்டதை நினைத்து அவர்கள் உடைந்தே போய்விடுவார்கள் என்று நினைத்து கவலை கொண்டவள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றாள்.

மாளவிகாவை சமாதானம் செய்த ஓவியா அவளை அறையில் கொண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவள் “அண்ணி! நாம அவகிட்டே என்ன ஆச்சுன்னு கேட்டுப் பாக்கலாமா ?”என்றாள் கவலையாக.

“ம்ம்ம் பேசலாம் ஓவி, ஆனா இப்போ வேணாம் அவ கொஞ்சம் நோர்மல் ஆகட்டும் . சாயங்காலம் போல பேசலாம்” என்றாள் ரதி.

ஹாலில் சோகமாக அமர்ந்து இருந்தவர்களை பார்த்த ஓவியா வருத்தமானவள் “அண்ணி நீங்க அத்தை , மாமாகிட்டே பேசிட்டு இருங்க. நான் போய் சமைக்குறேன்”என்று கிச்சனுக்குள் நுழைய..

“நானும் வரேன் இரு ஓவி ” என்று கிச்சனுக்கு சென்ற ரதி . “ராகவ் நீ அம்மா, அப்பா கூட இரு.. ” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured