Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 120

உன் ரகசிய ரசிகை நான் 120

by Layas Tamil Novel
317 views

ஷிவுவிற்கு, “தன் சொந்த அக்காவையே தான் இத்தனை நாள் போட்டியாக நினைத்து பழிவாங்க நினைத்தோமே!” என்று உள்ளுக்குள் குற்ற உணர்வாகவே இருந்தது.

துர்காவுக்கு இப்போது பழைய நிலை இருந்திருந்தால், ஆவது சங்கவியுடன் சேர்ந்து தான் துர்காவுக்கு எதிராகச் செய்த வேலைகளை எல்லாம் சொல்லி, துர்காவிடம் மனதார மன்னிப்புக் கேட்கலாம்.

ஆனால், துர்கா இப்போது இருக்கும் நிலையில் அவளிடம் எதையும் சொல்லிப் புரியவைக்க முடியாத நிலையில் அவஸ்தைப்பட்டாள் ஷிவு.

தன் அறையிலிருந்து வெளியே வந்து, “ஷிவு, துர்காவைப் பார்க்கப் போகலாமா? வேண்டாமா?” என்று துர்காவின் அறை முன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் நிச்சயதார்த்தம் பேச அடுத்த நாள் செல்வதால், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ஆதி அப்போதுதான் தன் அறைக்கு வந்தான்.

லிஃப்ட்டில் இருந்து வெளியே வரும்போதே ஷிவுவைப் பார்த்துவிட்டான் ஆதி.

அவள் அருகில் வந்த ஆதி, “ஏன் ஷிவு இங்கேயே நின்னுட்டு இருக்க? துர்காவைப் பார்க்கத் தானே வந்திருக்கே? உள்ளே வா…” என்று சொல்லி கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல…

அவன் பின்னால் ஷிவுவும் தயங்கிக் கொண்டே சென்றவள், கட்டிலில் படுத்திருந்த துர்காவைப் பார்க்க, அவள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். துர்கா உறங்குவதைப் பார்த்த ஷிவு, ஆதியிடம், “மாமா, அக்கா நல்லா தூங்குறா. நான் போயிட்டு காலையில வரேன்,” என்று சொல்லி அங்கிருந்து செல்லப் போக… “ஒரு நிமிஷம் இரு ஷிவு, உன்னிடம் நான் கொஞ்சம் பேசணும்,” என்றான் ஆதி.

ஆதி தன்னை இருக்கச் சொன்னதும் ஷிவுவிற்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. “எங்கே தான் செய்த விஷயங்கள் எல்லாம் தெரிந்து விட்டதோ? அதைத் தெரிந்து தன்னிடம் எதுவும் கேட்டு சண்டை போடுவானோ?” என்று பயந்து கொண்டு இருந்தாள்.

துர்கா அருகில் சென்ற ஆதி, அவளுக்கு நன்றாகப் போர்த்தி இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்துவிட்டு, அருகில் இருந்த சேரில் அமர்ந்து மற்றொறு சேரைக் காட்டி ஷிவுவைப் “உட்காரு” என்று சொன்னான்.

“இல்லை, பரவாயில்லை மாமா. நான் அப்படியே நிற்கிறேன்,” என்று ஷிவு துர்காவுக்குப் பக்கத்தில் கட்டிலை ஒட்டி நின்று கொண்டாள்.

ஷிவு அமைதியாக நின்று கொண்டு இருக்க, ஆதி அவளையே பார்த்தான். ஆதி தன்னை ஏதோ யோசனையுடன் பார்ப்பதைப் பார்த்த ஷிவுவிற்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.

“நான் பேசாமல் ரூம்லேயே இருந்திருக்கலாம். தேவையில்லாமல் துர்காவைப் பார்க்க வரேன்னு இந்த நேரத்துல வந்துட்டு, இப்ப வசமாக ஆதி மாமாகிட்ட மாட்டிக்கிட்டேன். ஆதி மாமா ஆபீஸ் போனதுக்கப்புறம் கூட காலையில பொறுமையா வந்து அக்காவைப் பார்த்திருக்கலாம்,” என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் ஷிவு.

**”என்ன ஷிவு, எதுவும் பேசாம யோசிச்சுட்டு இருக்க? **’இந்த நேரத்துல ஏன்டா இங்க வந்தோம்’னு தோணுதா உனக்கு?” என்று கேட்டான் ஆதி.

“ஐயோ!!! இவரு என்ன, நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டாரு!” என்று அதிர்ச்சியான ஷிவு, “அது எல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. சும்மா அக்காவைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன், வேறொன்றும் இல்லை,” என்று சொன்னாள் ஷிவு.

“ரூபேஷ் யாரு ஷிவு?” என்று கேட்டான் ஆதி.

ஆதி ரூபேஷைப் பற்றிக் கேட்டதும் ஷிவு அப்படியே உறைந்து போய் ஆதியைப் பார்க்க…

**”என்ன ஷிவு அப்படிப் பார்க்கிற? **’எனக்கு எப்படி ரூபேஷைப் பற்றித் தெரியும்’னு தானே யோசிக்கிற?” என்றான் ஆதி.

அவள் தலையை மேலும் கீழும் ஆட்டி, “ஆமாம் மாமா,” என்றாள் ஷிவு.

“சரி சொல்லு, அந்த ரூபேஷ் யாரு? உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் ஆதி.

“மாமா… அது… அது வந்து… அவன் என் கூட ஆபீஸ்ல வொர்க் பண்றான் மாமா,” என்று சொன்னாள் ஷிவு.

“சரி, அவன் ஏன் நம்ம ஆபீஸ்க்கு வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கான்?” என்று கேட்டான் ஆதி.

ஆதி ரூபேஷ் பற்றிக் கேட்டதே அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்க… இப்போது ரூபேஷ், இவள் வேலை பார்க்கும் ஆதியின் ஆபீஸ்க்கு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான் என்று தெரிந்ததுமே ஷிவுவிற்கு மேலும் அதிர்ச்சியானது.

“என்ன மாமா சொல்றீங்க? அவன் நம்ம ஆபீஸ்ல வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கானா? எனக்கு இந்த விஷயம் தெரியாதே,” என்று சொன்னாள் ஷிவு.

“ஆமாம், ஆபீஸ்ல சாஃப்ட்வேர் டிபார்ட்மென்ட்டில் வேலைக்கு ஆள் எடுத்துட்டு இருக்கோம் இல்லையா? உன்னைக் கூட அப்பா இந்த மாதத்தில் இருந்து வரச் சொல்லி இருக்காரே. அதே பிரான்சுக்குத் தான் ரூபேஷ் ஜாபுக்கு அப்ளை பண்ணி இருக்கான்.”

“சரி மாமா, ஆனா அவனை எனக்குத் தெரியும்னு உங்களுக்கு எப்படி…?” என்று ஷிவு பாதியிலேயே நிறுத்த…

**”அவன் அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணும் போது, தேவையில்லாம ஒரு காலத்தை அவனே கிரியேட் பண்ணி, அதுல **’நீயும் அவனும் ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்ணினதாகவும், நீ எந்த டிபார்ட்மென்டில் வேலை பார்க்கிறாயோ, அதே டிபார்ட்மென்டில் அவனுக்கு வேலை வேணும்’னு சொல்லி மென்ஷன் பண்ணி இருக்கான்,” என்றான் ஆதி.

ஆதி மூலம் ரூபேஷ் செய்த விஷயத்தைக் கேட்டதும் ஷிவுவிற்குத் தூக்கி வாரிப்போட்டது. “அடப்பாவி! இப்படியாடா அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி என்னை டைரக்ட்டா என் மாமாகிட்ட கோர்த்து விடுவ? உன்னை என்ன பண்றேன்னு பாரு,” என்று தன் மனதிற்குள் ரூபேஷைத் திட்டிக் கொண்ட ஷிவு, எதுவும் காட்டிக் கொள்ளாமல் ஆதியைப் பார்க்க…

“என்ன ஷிவு அப்படிப் பார்க்கிற? அவன் உண்மையாகவே உன் கூட உன் ஆபீஸ்ல தான் வொர்க் பண்றானா?” என்று கேட்டான் ஆதி.

“அ… ஆமாம்… ஆமாம். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல, ஒரே டிபார்ட்மென்டில் தான் வொர்க் பண்றோம். அவனை எனக்கு நல்லா தெரியும்,” என்று சொன்னாள் ஷிவு.

“சரி, அவன் நல்லவன்னு நீயே சொல்லிட்ட. நாளைக்கு என்னோட ஆபீஸ்ல வந்து அவனைப் பார்க்கச் சொல்லு. நீ நாளையிலிருந்து வேலைக்கு நம்ம ஆபீஸ்லயே ஜாயின் பண்ணிடு,” என்று சொன்னான் ஆதி.

“சரி மாமா,” என்று சொல்லி தலையாட்டிய ஷிவு, “மாமா, ஒரு விஷயம் உங்க கிட்ட கேட்கலாமா?” என்று தயங்கியவாறே ஆதியைப் பார்க்க…

“என்ன கேட்கணும் சொல்லு ஷிவு,” என்றான் ஆதி.

“அது… அது வந்து… மாமா…” என்று சொன்னவள், பிறகு எதுவும் கேட்காமல், “ஒண்ணும் இல்ல மாமா. நான் வரேன்,” என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றாள்.

ஆதி ஷிவுவை அமைதியாகப் பார்த்தவன், அவள் சென்றதும் தன் அறைக் கதவைச் சாற்றிவிட்டு, துர்காவிடம் வந்தான்.

“லக்‌ஷு… உன்னைப் பற்றி ஷிவு இப்பதான் புரிஞ்சிருக்கா போல… இதே மனநிலையோடு உன் கிட்ட அவ நல்லபடியா பழகணும்னு நான் எதிர்பார்க்கிறேன் லக்‌ஷு,” என்றவன், குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.


தனக்கும் கதிருக்கும் திருமணம் நின்றுவிட்டது என்ற செய்தியே ராதாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எந்த முயற்சியும் எடுக்காமல் தன் கல்யாணம் அதுவாகவே நின்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் ராதா.

தன் மொபைலை எடுத்து சந்தோஷிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

வழக்கம்போல அவள் இந்த நேரத்திற்குத்தான் தனக்கு மெசேஜ் அனுப்புவாள் என்று அவள் மெசேஜுக்காகக் காத்திருந்த சந்தோஷ், ராதாவிடம் இருந்து மெசேஜ் வந்ததும் அதை ஓப்பன் செய்து பார்க்க…

“யோவ் வாத்தி, என்ன பண்ணிட்டு இருக்க…?” என்று அனுப்பி இருந்தாள்.

“வர வர இவளுக்கு என் மேல மரியாதை இல்லாமப் போயிடுச்சு… ‘யோவ், அவன், இவன்’ வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற,” என்று நினைத்துக் கொண்டவன்.

“சொல்லுடி குட்டச்சி…” என்று ரிப்ளை செய்திருந்தான்.

“ஒண்ணும் இல்லை. சும்மாதான் உனக்கு மெசேஜ் பண்ணுனேன். போர் அடிச்சிதா, அதான் சும்மா உன்கிட்ட பேசலாம்னு மெசேஜ் பண்ணினேன்,” என்றாள்.

“ஓஹோ! அப்போ மேடம்க்கு போர் அடிச்சா தான் எங்க ஞாபகம் வருமோ?” என்றான் சந்தோஷ்.

“ஆமாம் வாத்தி. என்னை என்ன உன்னை மாதிரி ஒரு வேலையும் இல்லாதவன் நினைச்சுக்கிட்டியா?” என்றாள்.

அவள் அப்படி மெசேஜ் அனுப்பவும், அவள் கழுத்தை நெரிப்பது போல ஒரு ஸ்டிக்கரை அனுப்பி வைத்தான் சந்தோஷ்.

அவன் அனுப்பிய ஸ்டிக்கரைப் பார்த்துச் சிரித்த ராதா.

“உனக்கு ஏதும் வேலை இருந்தா நீ போய்ப் வேலையைப் பாரு… எனக்கு இங்க தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு… இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு,” என்று அனுப்பினாள் ராதா.

“ஓஹோ!!! அப்போ நீ உன் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதாவே முடிவு பண்ணிட்டியா? நீயா இந்தக் கல்யாணத்தை நிறுத்த மாட்டே அப்படித்தானே?” என்று மெசேஜ் அனுப்பினான் சந்தோஷ்.

சந்தோஷ் அனுப்பிய மெசேஜைப் படித்தவள், “இவனுக்கு இன்னும் என் கல்யாணம் நின்ற விஷயம் தெரியாது தானே?” என்று நினைத்த ராதா, சற்று நேரம் யோசித்தவள்.

சந்தோஷிற்கு கால் செய்தாள். அவள் போன் செய்ததும் அட்டென்ட் செய்து காதில் வைத்த சந்தோஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “என்ன வாத்தி? எதுவுமே பேசாமல் அமைதியா இருக்கே?” என்று கேட்டாள் ராதா.

“உனக்குத்தான் தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்குமே… நீ போயி உன் கல்யாண வேலையைப் பாரு… இந்த நேரத்துல எனக்கு எதுக்கு தேவையில்லாம போன் பண்ணிப் பேசிட்டு இருக்க…”

“அதான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியே. உன் ஆசை கதிர் மாமா இருக்கானே, அவன் கிட்டே போய் போன் பண்ணிப் பேசு… இல்லை, கூடச் சேர்ந்து டூயட் பாடு. எனக்கு எதுக்கு போன் பண்ண? அதான் நீ உன் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன் என்று சொல்லிட்டியே,” என்றான் கோபமாக சந்தோஷ்.

சந்தோஷ் கோபமாகப் பேசியதைக் கேட்ட ராதாவிற்குச் சிரிப்புதான் வந்தது. அவனுக்குக் கல்யாணம் நின்ற விஷயம் தெரியாது என்பதால் அவள் வேண்டுமென்றே அவனைச் சீண்டிப் பார்ப்பதற்காகப் பேச… அது தெரியாத சந்தோஷ், ராதாவிடம் மிகவும் கோபமாகப் பேசினான்.

“நான் ஏன் வாத்தி கல்யாணத்தை நிறுத்தணும்? உனக்கு நான் வேணும்னு நினைச்சா, நீயே வந்து என் கல்யாணத்தை நிறுத்தி, என்னை நீ கல்யாணம் பண்ணி உன்கூடக் கூட்டிட்டுப் போ…”

**”அப்படி இல்ல, அதெல்லாம் முடியாது, **’நானே முயற்சி பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தணும்’னு நினைச்சேன்னா, அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி,” என்றாள்.

தன்னிடம் வேண்டுமென்றே மல்லுக்கட்டும் ராதாவை நினைத்து ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், “ஒரு பேச்சிற்காவது கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்கிறாளா பார்,” என்று நினைத்த சந்தோஷ்.

“ஏன் நீ உன் கல்யாணத்தை நிறுத்த வாய்ப்பே இல்லைன்னு சொல்ற? உனக்கு உண்மையாவே கல்யாணத்தை நிறுத்த விருப்பம் இல்லையா?” என்று கேட்டான் சந்தோஷ்.

“ஆமாம் வாத்தி. நான் என் கதிர் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும், என் அத்தை எனக்குத் தங்கத்திலும், வைரத்திலுமா அவ்வளவு நகைகளும், பட்டுப் புடவைகளுமா எனக்கு எடுத்து கொடுத்திருக்காங்க.”

“எதைக் கட்டிக்கிறது, எந்த நகையைப் போட்டிருக்கிறதுனு தெரியாம நானே முழிச்சிட்டு இருக்கேன். இதுல கல்யாணத்தை நிறுத்துவதற்கு நான் எங்க போயி யோசிக்கப் போறேன்? அதனால தான் சொன்னேன் அதுக்கு வாய்ப்பு கம்மின்னு,” என்று சொன்னாள் ராதா.

இந்த முறை ராதா சொன்னதைக் கேட்டு உண்மையாகவே கோபப்பட்ட சந்தோஷ், “உன் அத்தை கொடுக்கிற பட்டுப் புடவைக்கும், தங்க வைர நகைக்கும் தான் உன் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னா, நீ போய் அவனையே கல்யாணம் பண்ணிக்க… என்னை மறந்துடு. என்கிட்ட இனிமேல் பேசாத,” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் சந்தோஷ்.

“அச்சச்சோ!! வாத்தி உண்மையாவே கோவிச்சுகிட்டான் போல இருக்கே… பரவாயில்லை, கோவிச்சுக்கட்டும்… கோவிச்சுக்கட்டும்…”

“இன்னும் ஒரு வாரம் தானே? அதுக்கப்புறம் நேர்ல போய் அவனைச் சமாதானம் பண்ணிடுவோம். அவனே கல்யாணத்துக்கு வரும்போது பொண்ணு நான் இல்ல, கீர்த்திகா தானே தெரிஞ்சுக்கப் போறான்,” என்று நினைத்தவள்.

“கல்யாணத்தன்று வந்து மணமேடையில இருப்பது ‘நான் இல்லை, கீர்த்திகா’ என்று தெரியும்போது, வாத்தியோட முகம் எப்படிப் போகப் போகுதோ…”

“ஐயோ!!! அவன் கதிர் மாமா கீர்த்திகா கல்யாணத்தப்ப வந்து என்ன பண்ணப் போறானோ தெரியலையே. இப்பவே ரொம்ப ஆவலா இருக்கு அவன் என்ன பண்ணப் போறான்னு பார்க்கிறதுக்காக,” என்று நினைத்துச் சிரித்தவள், தன் மொபைலில் இருந்த சந்தோஷ் போட்டோவைப் பார்த்து…

“யோவ் வாத்தி, ஆனாலும் உனக்கு என் மேல இவ்வளவு ஆசை ஆகாதுயா… எனக்கே நீ என் மேல வெச்சிருக்க காதலை நினைச்சு பொறாமையா இருக்கு… நான் உன்னை லவ் பண்றதை விட, உன்னோட லவ் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு…”

“நான் என் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னதுக்கு உனக்கு எவ்வளவு கோபம் வருது… அப்பப்பா… நல்லவேளை நான் உன்கிட்டே இப்போ போன்ல பேசுனதெல்லாம், உன்னை நேரா பார்த்துப் பேசி இருந்தேன் வை…”

“இந்த நேரம் என் கன்னம் ரெண்டும் பழுத்துப் போய் இருக்கும். உனக்கு என் மேல அவ்வளவு கோபமா இருக்கு,” என்று நினைத்தவள்.

“நல்ல வேலை தப்பிச்சேண்டா கடவுளே!!!!” என்று கடவுளுக்கு ஒரு நன்றியைச் செலுத்திவிட்டுக் குப்புறப் படுத்து உறங்கினாள்.

ஆனால் “நான் விளையாட்டாக சந்தோஷிடம் பேசிய விஷயங்கள் தான் அவளுக்குப் பின்னாளில் பெரிய பிரச்சனையாக மாறப்போகிறது. நீ சொன்ன ஒரு பொய்யினால் தான் ராதாவிற்கும் சந்தோஷுக்கும் பெரிய பிரச்சனையே வரப்போகிறது,” என்று தெரியாமல் தூங்கிப் போனாள்.

ராதா பேசியதெல்லாம் கேட்டு உண்மையாகவே சந்தோஷிற்கு கோபம் வர… **”இந்தக் கல்யாணத்தை நீயா நிறுத்த மாட்டியா டி? என்கிட்ட, **’இந்தக் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்’னு சும்மாதான் சொன்னேன்னு நினைச்சேன்.”

“ஆனா நீ சொல்றதெல்லாம் பார்த்தால் நிஜமாகவே நீ அந்தக் கதிரை தான் கல்யாணம் பண்ணிக்கப் போற போல இருக்கே… இந்தக் கல்யாணத்தை நிறுத்தறதுக்காக நான் வேற ஒரு பிளான் பண்ணி வச்சிருந்தேன். ஆனா அதெல்லாம் உன்கிட்ட செல்லுபடியாகாது போல,” என்று யோசித்த சந்தோஷ்.

“இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்தணும்னு எனக்கு நல்லா தெரியும். நான் பண்ற வேலையைப் பார்த்துட்டு நீ எப்படி உன் கதிர் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நானும் பாத்துக்குறேன்.”

“எவ்வளவு சீரியஸா என்கிட்டேயே சொல்ற… ‘அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு…’ நான் பண்ற வேலையைப் பார்த்துட்டு, என்னைத் தவிர நீ வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது,” என்று நினைத்தவன், “கூடிய சீக்கிரம் தன் பிளானை நிறைவேற்ற வேண்டும்,” என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்.

கதிர் முதல் வேலையாகத் தன் ரூமிற்கு வந்ததும், கீர்த்திகாவுக்குக் கால் செய்து இங்கு நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லிச் சந்தோஷப்பட…

அவன் சொல்வதெல்லாம் கேட்டவள் நம்பாமல், “நிஜமாத்தான் சொல்றியா கதிர்? ராதா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லிட்டாளா? துரையப்பா எதுவும் சொல்லலையா? அங்கு யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லையே? கல்யாணம் அதனால அங்க யாரும் எந்தக் கஷ்டமும் படலையே?” என்று கேட்டாள் கீர்த்திகா மிகவும் அக்கறையாக.

“ஏய் கீர்த்து… ஏண்டி எல்லாமே நல்லபடியா வந்து அமைஞ்ச நேரத்துல இவ்வளவு டென்ஷன் ஆகிட்டு இருக்க?”

“உன்னோட பதட்டம் எல்லாம் எனக்கு நல்லாவே புரியுது. உண்மையாவே இங்கே யாருக்கும் எந்த வருத்தமோ, மனக் கஷ்டமோ கிடையாது.”

“எல்லாருமே ரொம்ப சந்தோஷத்தோட தான் நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருக்காங்க. நீ வேணும்னா நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வரும்போது நீயே எல்லாரையும் கவனிச்சுப் பாரு. எவ்வளவு சந்தோசமா இருப்பாங்கன்னு உனக்கே தெரியும்,” என்று சொன்னான் கதிர்.

“எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு கதிர்,” என்று சொன்ன கீர்த்திகா, “அக்காவை நீ போய்ப் பார்த்துட்டு வந்தியா? அவள் நல்லா இருக்காளா? சாப்பிட்டாளா?” என்று துர்காவை நினைத்துக் கவலைப்பட்டுக் கேட்டாள் கீர்த்திகா.

“நல்லா தான் இருக்கா. அவள் மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு ஜம்முன்னு படுத்துத் தூங்கிட்டு இருக்கா. நீ அவளை நினைச்சுக் கவலைப்படாத. அடுத்து இன்னும் ஒரு வாரத்தில் நமக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அதுக்கு எவ்வளவு சந்தோஷமா உன்னைத் தயார் படுத்திக்கணுமோ, அவ்வளவு சந்தோஷமாத் தயார் படுத்திக்க… சரியா?” என்றான் இரட்டை அர்த்தத்தில் கதிர்.

அவன் பேசியதும் இவ்வளவு நேரம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த கீர்த்திகா அப்படியே அமைதியாகிவிட்டாள்.

அவள் அமைதியைப் புரிந்து கொண்ட கதிர், “ஓய்… கீர்த்து, ஏண்டி எதுவும் பேச மாட்டேங்குற?” என்று கேட்டான்.

கீர்த்து அப்போதும் பதில் பேசாமல் அமைதியாக இருக்க…

“கீர்த்து, ஏதாவது பேசுடி. இப்படி அமைதியா இருந்தா நான் போன வச்சிருவேன். பரவாயில்லையா?” என்றான் கதிர்.

“என்ன பேசுறது டா?” என்றாள் கீர்த்து.

**”என்னது ‘டா’ வா? இங்க பாருடி… உனக்கும் எனக்கும் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகப் போகுது. ஒழுங்கா என்ன **’மாமா’**ன்னு கூப்பிடு. என்ன **’வாடா… போடா’ன்னு கூப்பிட்டு இருந்தேன்னா பாருடி…” என்றான் அதிகாரமாக.

அவன் அப்படிச் சொன்னதும், இவ்வளவு நேரம் வெட்கப்பட்டுக் கொண்டிருந்த கீர்த்திகா, அதையெல்லாம் மறந்து, **”இங்க பாருடா… நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்கறதுக்காக இந்த ‘புருஷன்’ சொல்லி அதிகாரம் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத… நான் உன்கிட்ட இப்போ எப்படிப் பேசுரேனோ, அதே மாதிரி தான் நமக்குக் கல்யாணம் ஆன பிறகும் பேசுவேன். சும்மா **’அப்படிப் பேசு, இப்படிப் பேசு’ன்னு சொல்லிட்டு இருந்தா, அப்புறம் நடக்கிறதே வேற பாத்துக்க,” என்று சொன்னாள் கீர்த்திகா.

**”ஓஹோ… அப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீ என்னை **’வாடா, போடா’**ன்னு தான் கூப்பிடுவ. **’மாமா’ன்னு சொல்லிக் கூப்பிட மாட்டே அப்படித்தானே?” என்று சொன்னான் கதிர்.

“மாமாவா? நான் உன்னை முதலிலேயே அப்படி கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டேன். கல்யாணமான பிறகு தான் வாய்ப்பே கிடையாது. அதெல்லாம் மறந்துடு,” என்று சொன்னாள் கீர்த்திகா.

**”ஓஹோ!! அவ்வளவு திமிர் ஆயிடுச்சோ… நானும் பார்க்கிறேன் டி உன்ன. உன் வாயால என்ன **’மாமா’ன்னு கூப்பிட வைக்கலைன்னா, என் பேரு கதிர் இல்லை,” என்று சொன்னான் கதிர்.

“நானும் சொல்றேன் டா. நீ என்ன பண்ணித் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், நான் உன்னை மாமான்னு கூப்பிட மாட்டேன்,” என்று கீர்த்திகாவும் அவனிடம் வீம்பாகப் பேசினாள்.

“பார்க்கிறேன்டி…” என்றான் கதிர்.

“பாருடா…” என்றாள் கீர்த்து.

**”நமக்குக் கல்யாணம் ஆகுறதுக்குள்ள உன்னை நான் **’மாமா’ன்னு கூப்பிட வைக்கலைன்னா, என் பேர் கதிர் இல்லை,” என்றான்.

“அப்போ நமக்குக் கல்யாணம் ஆகுற அந்த அன்னைக்கு இருந்து நீ உன் பேரை மாத்தி வைக்க ரெடியா இருந்துக்கோ,” என்றாள் கீர்த்து.

**”பார்க்கலாம், பார்க்கலாம். என் பேரை மாத்தி வைக்கிறேனா இல்லை உன்னை என்னை **’மாமா’ன்னு கூப்பிட வைக்கிறேனா இல்லையான்னு பாரு,” என்று சொன்னான் கதிர்.

“அதுதான் இல்லையான்னு அந்த அன்னைக்குப் பார்த்துக்கலாம். இப்போ போனை வை, எனக்குத் தூக்கம் வருது,” என்று சொல்லி போனை கட் செய்தாள் கீர்த்திகா.

“இருடி… உன்னை என்ன பண்றேன்னு பாரு…” என்று நினைத்தவன், தன் ஆசைப்பட்டது போலவே கீர்த்திகாவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சந்தோசமாகத் தன் படுக்கையில் படுத்து உருண்டான் கதிர்.

அதே சமயம், இங்கு தலையணையை கட்டிக்கொண்டு கதிரை நினைத்து அதற்கு முத்தமிட்ட கீர்த்து, **”பார்க்கலாம், நீ என்ன பண்ணினாலும் நான் உன்னை **’மாமா’**ன்னு கூப்பிட மாட்டேன். ‘மாமான்னு கூப்பிடு’ என்று சொல்லி நீ வந்து என்கிட்ட கெஞ்சணும். உன்னைக் கெஞ்ச வெச்சு தான் **’மாமா’ன்னு கூப்பிடுவேன்.”

**”இப்படி அதிகாரம் பண்ணி என்னை கூப்பிட வைக்கலாம்னு பாக்குறியா? அது தான் இந்தக் கீர்த்திகாகிட்ட நடக்காது. நீ என்கிட்ட, ‘கீர்த்தி, ப்ளீஸ் என்ன மாமான்னு ஒரு வாட்டி கூப்பிடுடி’ என்று கெஞ்சணும். அதுக்கு பிறகு தான் உன்னை **’மாமா’ன்னு கூப்பிடுவேன்,” என்று சொன்னாள்.

ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மக்களே! ஒருத்தர் கூட கமெண்ட் பண்ண மாட்டிங்குறீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யாருமே என் கதையை படிக்கறது இல்லையா ? என் கதை அவ்ளோ சுமாரா இருக்கா ஒரு கமெண்டுக்கு கூட எனக்கும் என் கதைக்கும் தகுதி இல்லையா?😒😒😒

You may also like

9 comments

Saranya Arivuselvan November 13, 2025 - 4:33 pm

Akka super🥰🥰🥰👌👌🫰🫰🫰❤️❤️❤️🫂🫂🫶🫶🫶🌹🌹🌹

Reply
Layas Tamil Novel November 13, 2025 - 4:35 pm

Thank u pppaaa 😍 🌹🙏

Reply
Layas Tamil Novel November 16, 2025 - 4:35 am

Thank u😄

Reply
Veni November 15, 2025 - 8:34 pm

Your story the best sister… very super..👌👌👌👌 i like it very much

Reply
Layas Tamil Novel November 16, 2025 - 4:34 am

Thank u 😄❤️ so much

Reply
Veni November 15, 2025 - 8:34 pm

Your story the best sister… very super..👌👌👌👌 i like it very much

Reply
Layas Tamil Novel November 16, 2025 - 4:34 am

Thank u😄

Reply
Veni November 15, 2025 - 8:34 pm

Your story the best sister… very super..👌👌👌👌 i like it very much

Reply
Layas Tamil Novel November 16, 2025 - 4:34 am

Thank you 😄

Reply

Leave a Reply to Veni Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured